Showing posts with label எம்.எஸ்.ஜி 2 - தி மெசேஞ்சர் (2015)-சினிமாவிமர்சனம். Show all posts
Showing posts with label எம்.எஸ்.ஜி 2 - தி மெசேஞ்சர் (2015)-சினிமாவிமர்சனம். Show all posts

Saturday, October 10, 2015

எம்.எஸ்.ஜி 2 - தி மெசேஞ்சர் (2015)-சினிமாவிமர்சனம்

நடிகர் : குர்மீத் ராம் ரஹீம் சிங்
நடிகை :தகவல் இல்லை
இயக்குனர் :குர்மீத் ராம் ரஹீம் சிங்
இசை :குர்மீத் ராம் ரஹீம் சிங்
ஓளிப்பதிவு :அரவிந்த் குமார்
வட இந்தியாவில் பிரபல சாமியாரான குர்மித் ராம் ரஹீம் சிங் என்பவர் எழுதி, இயக்கி, நடித்திருக்கும் ஆக்ஷன் திரைப்படம் எம் எஸ் ஜி 2 - தி மெசேஞ்சர். குர்மித் ராம் ரஹீம் சிங் மற்றும் அர்பித் ரங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படம் பார்வையாளர்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. 

இப்படம் இதே ஆண்டு வெளியான எம்.எஸ்.ஜி. - தி மெசேஞ்சர் என்னும் படத்தின் இரண்டாம் பாகமாகும். எம்.எஸ்.ஜி. படத்தின் முதல் பாகமே எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இப்போது இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகியுள்ளது ஆச்சர்யத்துக்குரியது. 

குர்மித் ராம் ரஹீம் சிங் சமூகத்தில் நடைபெறும் அநீதிகளை எதிர்த்து போராடுகிறார். ஒரு கட்டத்தில் கொடூரமான காட்டு வாசிகளின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றி அவர்களை சக மனிதர்களை போல மாற்ற முற்படுகிறார். இந்த முயற்சியின்போது குர்மித் ராம் சந்தித்த சிக்கல்கள் என்னென்ன? இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா? என்பதை அசட்டுத்தனமாக படமாக்கியிருக்கிறார்கள்.   

இந்த படத்தின் நோக்கமே குர்மித் ராம் ரஹீம் சிங் எனும் தனி மனிதனின் புகழை பரப்புவதுதான். ஆன்மீக குருவான அவரின் நடிப்பு, வசன உச்சரிப்பு மற்றும் நடனம் பார்வையாளர்களுக்கு கோபத்தை உண்டாக்கும் வகையில் உள்ளது. 

நடிகர், பாடகர், எழுத்தாளர், இயக்குனர், நடன இயக்குனர், இசையமைப்பாளர், ஸ்டண்ட் மாஸ்டர், கலை இயக்குனர் என பன்முக அவதாரம் எடுத்திருக்கும் குர்மித் ராம் ரஹீம் சிங் ஒரு வேலையைகூட சரியாக செய்யவில்லை என்பது தான் உண்மை. 

படத்தில் ரசிக்கும்படியாக இருப்பது ஒரு சில கிராபிக்ஸ் காட்சிகள் மட்டுமே, அதுவும் குர்மித் ராம் ரஹீம் சிங் யானையை தூக்கி வீசுவது, காற்றில் வெகுதூரம் பறப்பது, சிங்கங்களோடு நடப்பது போன்ற காட்சிகளுக்கு பயன்பட்டிருப்பது வருத்தமே. 

இதுதவிர படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு பற்றி குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு ஒன்றுமில்லை. 

மொத்தத்தில் எம்.எஸ்.ஜி. 2 - தி மெசேஞ்சர் - அபாயம்.


ன் றி-மாலைமலர்