Showing posts with label உடல் எடையை குறைக்க போராடுபவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள். Show all posts
Showing posts with label உடல் எடையை குறைக்க போராடுபவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள். Show all posts

Thursday, February 22, 2024

உடல் எடையை குறைக்க போராடுபவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்


உடல்  எடை  கூடுதல்  ஆவதுதான்   இப்போது  பலரும்  சந்திக்கும், முக்கியமான  பிரச்சனை உங்கள்  உடல்  எடை  உங்கள்  உயரத்துக்கு  ஏற்ற  அளவில்  உள்ளதா? என்பதை  எளிதில்  அறியலாம், முதலில்  உங்கள்  உயரத்தை  செமீ  அளவில்  எழுதவும்,  உதாரணமாக  உங்கள்  உயரம்  6  அடி  எனில் 6 அடி * 30 செமீ = 180  செமீ  தான்  உங்கள்  உயரம், அதில்  இருந்து 105 ஐ கழிக்க  வேண்டும் இப்போது 180 =-105 = 75. இப்போது  வந்த  விடை  75 தான்  நீங்கள்  இருக்க  வேண்டிய  உடல்  எடை  75 கிலோ. கூடுதலாகவோ  , குறைவாகவோ 5  கிலோ  இருக்கலாம், அதாவது 80  கிலோ  அல்லது  70  கிலோ  இருக்கலாம் .75 கிலோ  இருந்தால்  பர்ஃபெக்ட்  வெயிட் 


இந்த  விகிதம்  மாறும்போதுதான்  பிரச்சனை . உதாரணமாக  180  செமீ  உயரம் உள்ள  ஒருவர் 75  கிலோ விற்குப்பதிலாக 95  கிலோ  இருந்தால்  அவர்  20  கிலோ  எடை  குறைக்க  வேண்டும். இல்லை  எனில்  அவரது  முழங்கால்  மூட்டு  அவர்  உடல்  எடையைத்தாங்காமல்  பலவீனம்  ஆகி  விடும், மூட்டு  தேய்மானம்  ஆகும், வயதான  பிறகு  பல  பிரச்சனைகள்  ஏற்படும், இதைத்தவிர்க்கவே  பலரும்  உடை  எடை  குறைப்பில்  ஈடுபடுகிறார்கள் 


 இப்படி  வெயிட்  லாஸ்  பிராசஸ்- ல்   ஈடுபடுபவர்கள்  சந்திக்கும்  முக்கியப்பிரச்சனை  பசி. பசியைக்கட்டுப்படுத்துவது  எப்படி ? பசியில்  இரு  வகைகள்  உள்ளன .1  ஹோமியோ ஸ்டேட்டிக்  ஹங்கர் ( HOMEO STATIC HUNGER)  2  ஹிடோனிக்  ஹங்கர்  (HEDOONIC  HUNGER )


இன்று  இரவு  நாம்  எட்டு  மணிக்கு  சாப்பிடுகிறோம், அடுத்த  நாள்  காலை  8  மணிக்கு  பசி  எடுக்கிறது ., இதுதான்  இயற்கையான  பசி , அதாவது  ஹோமியோ ஸ்டேட்டிக்  ஹங்கர் . இதனால்  ஆபத்தில்லை .   உணவு  வயிறு  நிறைய  சாப்பிட்ட  பின்    ஐஸ்க்ரீம்  அல்லது  வேறு  நொறுக்குத்தீனி  ஏதாவது  சாப்பிடலாம் எனும்  உணர்வு  வருகிறதே  அதுதான்  ஆபத்து ,இது தான்  ஹிடோனிக்  ஹங்கர்   எனப்படுகிறது . உடல்  எடை  அதிகரிக்க  இதுதான்  காரணம் 


1    நல்ல  தூக்கம்  மிக  முக்கியம் . 7  மணி  நேரம்  அல்லது  எ3ட்டு  மணி  நேரம்   உறங்க  வேண்டும் . ஆழ்ந்த  உறக்கம்  என்பது  நடு  இரவு  12 - 3  கால கட்டத்தில்  நிகழ்வது . அந்த  ஆழ்ந்த  உறக்கம்  பெற  இரவு 9 அலல்து  10 மணிக்கு  தூங்கி  விட  வெண்டும் 

2   உடற்பயிற்சி    செய்தல் . தொடர்ந்து  ஒரு  மணி  நேரம்  வாக்கிங்  அல்லது  ஜாகிங்  போவதை  விட  வேகமாக  2  நிமிடம்  ஓடி  பின்  ஓய்வு  மீண்டும்  ஓட்டம் 

3  மன  அழுத்தம் , டென்ஷன் , டிப்ரஷன் , மன  பதட்டம்  இல்லாமல்  இருத்தல் 

4   உணவில்  புரத  சத்துக்கள் இருப்பதாக  பார்த்து  சாப்பிடுதல்   சுண்டல்  பயிறு  வகைகள்  சாப்பிடுதல் 

5  ஆரோக்கியமான  கொழுப்பு  கிடைக்க  பால் , முந்திரிப்பருப்பு   ஆகியவற்றை சாப்பிடுதல் 

6  வயிறை  நிரப்பும்  உணவாக  சாப்பிடுதல்;. அதில்    கார்போ ஹைட்ரேட் இருக்கக்கூடாது . உதாரணமாக  பழங்கள்  காய்கறிகள்  அதிகம்  சாப்பிட்டு  சோறு  குறைவாக  சாப்பிடுதல் 

7   பிராசஸ்டு  ஃபுட்  தவிர்த்தல்  . அதாவது  பாட்டில்டு  கூல்டிரிங்க்ஸ்   பேக்கரி  அயிட்டங்கள்  தவிர்த்து  பழங்களை  காய்களை  நேரடியாக  சாப்பிடுதல் . கேரட்  ஜூசை ஒரு  லிட்டர்  குடித்தாலும்  வயிறு  நிரம்பாது ஆனால்  கேரட்டை  கேரட்டாகவே  சாப்பிட்டால்  கால்  கிலோ  தான்  சாப்பிட  முடியும். வயிறும்  நிரம்பும் 


8  ஒரு  நாளுக்கு 4  லிட்டர்   தண்ணீர்  குடிக்க  வேண்டும் , இது  பசியை  கட்டுப்படுத்தும் . இது  கழிவுகளை  வெளியேற்ற  உதவும் 

9  லெமன்  ஜூஸ்   உப்பு  போட்டு  குடிக்கலாம் 

10  சாப்பிடும்  முறை  மெதுவாக  இருக்க வேண்டும் . வேக  வேக மாக  சாப்பிடுவதை  விட   மெதுவாக  மென்று  சாப்பிட்டால்  நல்லது. உணவை  உண்ணும்  நேரம்  20  நிமிடங்கள்  எடுத்துக்கொள்ள  வேண்டும்