Friday, April 12, 2024

HOW TO DATE BILLY WALSH (2024) -ஆங்கிலம் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா ) @ அமேசான் பிரைம்

    

   தமிழ்  சினிமா வில்  வருவது  போலவே  ஹாலிவுட்டிலும்  இப்போது  ் காதல்  கதைகள்  வர  ஆரம்பித்து  விட்டன . நாயகியின்  அழகுக்காகவும் , நாயகன் - நாயகி  கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆனதற்காகவும் , போர்  அடிக்காத  திரைக்கதைக்காகவும்  தாராளமாக  இப்படத்தைப்பார்க்கலாம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்

  எஸ்  ஜே  சூர்யாவின்  குஷி  படத்தில்  வருவது போல  நாயகன் , நாயகி  இருவரும்  ஒரே  ஹாஸ்பிடலில்  பிறந்தவர்கள் . அழகி  படத்தில்  வருவது  போல சின்ன  வயசில்  இருந்தே  இருவரும்  கிளாஸ்  மேட்ஸ் , ஸ்கூல்  மேட்ஸ் . ஆனால்  96  படத்தில்  வருவது  போல  இருவரும்  ஒருவரை  ஒருவர்  காதலிக்க  வில்லை 


 நாயகன்  இதயம்  பட  முரளி  போல  ஒரு  தலையாக  நாயகியைக்காதலிக்கிறார். ஆனால்  தன்  காதலை  வெளிப்படுத்தவில்லை . தக்க  சமயம்  பார்த்துக்கொண்டிருக்கிறார்


  நாயகனுக்கு  ஏழரையாய்  வந்து  சேர்கிறான்  நாலரையும், நாலரையும்  சேர்த்தாற்போல  இருக்கும்  ஒரு  வில்லன் . அவனைப்பார்த்ததுமே  அந்த  ஸ்கூல்  மாணவிகளில்  பலர்  அவனை  விரும்புகிறார்கள் . நாயகியும்  தான். வில்லனிடம்  தன்  காதலை  சொல்ல  தக்க  தருணம்  பார்த்துக்கொண்டிருக்கிறார்.


 இப்போது  நாயகன்  ஒரு  ஐடியா  செய்கிறார். ஒரு  ஆப்  மூலம்  தன்  முகத்தை  வயதானவனாக  மாற்றி  ஒரு  ஃபேக்  ஐடி  உருவாக்கி  நாயகியிடம்  நட்பு  வளர்க்கிறார்.  நாயகி  வில்லனுடன்  டேட்டிங்  போக  நாயகனிடமே  ஐடியா  கேட்கிறார். நாயகன்  சொதப்பல்  ஆகுமாறு  மட்டமான  ஐடியாக்கள்  கொடுத்து  அந்தக்காதலைக்கலைக்கிறார்


 ஒரு  கட்டத்தில்  நாயகிக்கு  நாயகன்  மீது  தான்  உண்மையான  காதல்  என்பதை  உணரும்போது  நாயகனின்  ஃபேக் ஐடி  விஷய்ம்  தெரிய  வர  செம  கடுப்பாகிறார்


 இப்போது  நாயகி  வில்லன்  கூட  ஜோடி  சேர்ந்தாரா?  நாயகன்  கூட   ஜோடி  சேர்ந்தாரா?  என்பது  மீதி  திரைக்கதை  + க்ளைமாக்ஸ் 


  நாயகன்  ஆர்ச்சி  ஆக   செபாஸ்டியன்  கிராஃப்ட்  அழகாக  நடித்திருக்கிறார். தமிழ்  சினிமாவில்  ஷாம் ,  அப்பாஸ் , மாதவன்  போல்  மீசை  இல்லாத  முகம் . . இளவயது  பெண்களை  வசீகரிக்கும்  முகம், இண்ஸ்டாவில்  ஏகப்பட்ட  ரசிகைகள்  ஃபாலோயர்ஸ்  இவருக்கு \


நாயகி  ஆக  சரித்ர  சூர்ய  சந்திரன்  அமெரிக்க  நடிகையா க  இருந்தாலும்  இந்திய  வமசாவளி  போன்ற  முகம். நந்திதா  தாஸ்  முக  சாயலில்  இருக்கிறார். அட்டகாசமான  முக  பாவனைகள்.  க்யூட்  எக்ஸ்பிரஷன்ஸ் 


வில்லன்  ஆக   டன்னீர்  பச்சனன். நடிப்பு  குட்  , ஸ்டைலும்  ஓக்கே , ஆனால்  தனிப்பட்ட  முறையில்  எனக்குப்பிடிக்கவில்லை 


இந்த  மூன்று  முக்கியக்கேரக்டர்களை  சுற்றியே  மொத்தத்திரைக்கதையும்  அமைந்தாலும்   மற்ற  சின்ன  சின்ன  கேரக்டர்களீல்  நடித்தவர்களும்  கச்சிதமாக  நடித்திருக்கிறார்கள் 

ஒளீப்பதிவு , இசை ம் ஆர்ட்  டைரக்சன்  போன்ற  டெக்னிக்கள்  அம்சங்கள்  ஓக்கே  ரகம் 



சபாஷ்  டைரக்டர்


1    நாயகன்  , நாயகி  கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆன விதம் 


2    வில்லன்  நாயகியை  நெருங்கும்போதெல்லாம்  நாயகன்  நந்தி  மாதிரி  குறுக்கே  வந்து  அணையைக்கட்டுவது   ரசிக்க  வைத்தது 


3  ஸ்கூல்,/ காலேஜில்  இளவயது  மாணவ  மாணவிகள்   கலாட்டாக்கள்  அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1  வெற்றியின்  முதல்  எதிரி  குழப்பம்  தான் 


2  நான்   சொர்க்கத்துக்குப்பக்கத்துலயே  இருந்துட்டு  எங்கே  சொர்க்கம்னு   தேடிட்டே  இருந்திருக்கேன் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   எநாயகியின்  மனக்குழ்ப்பம்  நம்ப  முடியவில்லை . இவனா? அவனா?  என  அவர்  குழம்புவது  சரியாகக்காட்சிப்படுத்க்தப்படவில்லை


2  நாயகியே  ஓப்பனாக  ஒரு  முறை  நாயகனிடம்  நீ  என்னை  லவ்  பண்றியா? என  கேட்டும்  நாயகன்  பம்முவது   ஏனோ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூ . ஆனால்  வசனங்களில்  சில  பச்சை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   வழக்கமான  ரொமாண்டிக்  காமெடி  மெலோ  டிராமா. பார்க்கலாம் , ரேட்டிங்  2 / 5 

0 comments: