Saturday, April 06, 2024

ராமாயி வயசுக்கு வந்துட்டா (1980) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா) @ யூ ட்யூப் 18+

    


 நடிகை  கீர்த்தி  சுரேஷின் அம்மா  மேனகா  புதுமுகமாக  அறிமுகம்  ஆன  படம்  இது . இவரது  இயற்பெயர்  பத்மாவதி.இவர்  ஒரு  கால கட்டத்தில் இந்தியாவில்  அதிக  சம்பளம்  வாங்கும்  நடிகைகளில்  ஒருவராக  இருந்தாராம். அட்டென்சன்  சீக்கிங்கிறாக  வைக்கப்பட்ட  டைட்டில்  மற்றும்  கீர்த்தி  சுரேஷின்  அம்மா  தான்  நாயகி  என்பதால்  பார்ப்போம்  என  முடிவு  செய்தேன்.அந்தக்காலத்தில்  எடுக்கப்பட்ட  ஒரு  விழிப்புணர்வுப்படமாகவே  இயக்குநர்  முயன்றிருக்கிறார். இது  கமர்ஷியலாக  வெற்றிப்படமா?இல்லையா? என்ற  தகவல்  கிடைக்கவில்லை 


மேனகா  வின்  இரண்டாவது  படம்  சாவித்திரி.ஆனால் அது  சரியாகப்போகவில்லை .ரஜினியுடன்  இவர்  நடித்த  நெற்றிக்கண்  செம  ஹிட்.மலையாளப்படங்களில் அ திகம்  நடித்த  இவர்   தெலுங்கு , தமிழ்  உட்பட  மொத்தம்  116  படங்களில் நடித்தார். சமீபத்தில்  வந்த  அண்ணாத்த  படத்திலும்  நடித்திருக்கிறார்


 இப்படத்தின்  ஷூட்டிங்  வத்தலக்குண்டு  என்ற  கிராமத்தில்  நடைபெற்றது . அந்த  ஊர்  மக்கள்  நாயகி  ஆன  மேனகா  கிராமியப்பெண்ணாகவே  மாறியதை  ஆச்சரியமாகப்பார்த்தார்களாம் . நியூஸ்  பேப்பரில்  புதுமுகம்  தேவை  என்று  விளம்பரம்  கொடுத்து  அதில்  தேர்வானவர்  இவர் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி , நாயகன்  இருவருமே  சிறு  வயதில்  இருந்தே   க்ளாஸ்மேட்ஸ் , ஸ்கூல்  மேட்ஸ் , முறை  மேட்ஸ். அதாவது  இருவரும்  முறைப்பெண் , முறைப்பையன்  உறவு  முறை. இருவரது  பெற்றோர்களுமே  அருகருகே  வீட்டில்  வசிப்பதால்  சின்ன  வயதில்  இருந்தே  இவனுக்குத்தான்  இவள்  என  வாய்  வழி நிச்சயம்  செய்து  விட்டார்கள் 


நாயகன் , நாயகி  இருவரும்  பருவ  வயதை  அடைந்த  பின்னும் இருவரும்  உடல் அளவில்  வளர்ந்த  அளவு  மனதளவில்  மெச்சூர்  ஆகவில்லை.  ரொம்ப  அப்பாவிகள் . ஊர்  முழுக்க  இவர்கள்  இருவரும்  வருங்கால  தம்பதி  என்பது  தெரியும் 


 ஒரு  நாள் அந்த  ஊரில்  இருக்கும்  பாட்டி  சும்மா  கிண்டலுக்கு நாயகியிடம்  திருமணத்தன்று  இரவு  என்ன  நடக்கும்? தெரியுமா? அது  தெரிந்தால்  தான்  திருமணம்  செய்து  வைப்பார்கள்  என   விளையாட்டாகக்கூற  நாயகி , நாயகன்  இருவரும்  தனித்தனியே  கிளம்பி  ஊராரிடம்  விளக்கம்  கேட்கிறார்கள் 


 நாயகனுக்கு  ஒரு  பெண்  வாய்  வழி  வசனமாக  தியரி  பாடம்  நடத்துகிறாள் .  வில்லன்  நாயகிக்கு  இதுதான்  சாக்கு  என  பிராக்ட்டிகல்  கிளாஸ்  எடுத்து  விடுகிறான்


 நாயகி  கற்பு  பறி  போன  விஷயம்  ஊர்  முழுக்கப்பரவி  விடுகிறது .பஞ்சாயத்து  கூடுகிறது . கெட்டுப்போன  பெண்ணை  எங்கள்  வீட்டு  மருமகளாக  ஏற்றுக்கொள்ள  மாட்டோம்  என  நாயகனின்  பெற்றோர்  கூற  பஞ்சாயத்து  முடிவுப்படி  கெடுத்த  வில்லனுக்கே  நாயகியை  தாரை  வார்க்க  ஏற்பாடு  நடக்கிறது 


 இவ்வளவு  நடந்தும்  நாயகிக்கு, நாயகனுக்கு  அந்த  விபரம்  எதுவும்  புரியவில்லை . சிலர்  யோசனைப்படி  அவர்கள் இருவரும்  ஊரை  விட்டு  ஓடி  விடுகிறார்கள் 


 பட்டணம்  வந்ததும்   ஒரு  ஆதரவற்ற  அனாதை  இல்லம்  நடத்தும்  தம்பதியிடம்  அடைக்கலம்  புகுகிறார்கள் .அங்கே  இன்னொரு  வீணாப்போன  வில்லன்  இருக்கிறான் . 


 முதலில்    அவன்  நாயகியை  இல்லீகலாக  அடைய  முயற்சி  செய்கிறான்.

அது  பலிக்க  வில்லை , அடுத்ததாக  லீகலாக  அதாவது  நாயகியை  மேரேஜ்  பண்ண  முயற்சி  செய்கிறான்


இதற்குள்  கிராமத்தில்  இருந்து  நாயகனின்  அப்பா  அவனைத்தேடி  வந்து  அவனை  ஊருக்கு  அழைத்துச்சென்று  விடுகிறார்


 இப்போது  நாயகி  தன்னைக்கெடுத்த  வில்லனை  திருமணம்  செய்து  கொண்டாரா?கெடுக்க  நினைக்கும் புது  வில்லனைத்திருமணம்  செய்து  கொண்டாரா?அல்லது  நாயகனைக்கரம்  பிடித்தாரா? என்பது  தான்  க்ளைமாக்ஸ் 


நாயகி  ஆக  புதுமுகம்  என்ற  சுவடே  தெரியா  வண்ணம்  மேனகா  பிரமாதமாக  நடித்திருக்கிறார்.இவரது  அழகும், அப்பாவித்தனமும், இளமையு   தான்  படத்தின்  மூல  தனம், உணர்ந்து  செய்திருக்கிறார்


 நாயகன்  ஆக  உதய சங்கர்  சுமாராக  இருக்கிறார்.  வெகு சுமாராக  நடிக்கிறார்

கங்கை  அமரன் இசையில்  பாடல்களெல்லாம்   நன்றாக  இருக்கின்றன  . பிஜிஎம்  சுமார்  ரகம்  தான் 


இயக்கம்  வி  அழகப்பன்சபாஷ்  டைரக்டர்


1   பெரும்பாலும்  புதுமுகங்களை  வைத்தே  மொத்தப்படத்தையும்  எடுத்து  முடித்ததால்  கால்ஷிட்  பிரச்சனை, சம்ப்ளப்பிரச்சனை  இருந்திருக்காது 


2   திரைக்கதை  சுமாராக  இருந்தாலும்  கிளாமராக  டைட்டில் வைத்த  லாவகம் 


3  நாயகியை  அறிமுகப்படுத்தியது 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  சந்தைக்குப்போன  மச்சான் , ஜாடையில கண் அடிச்சான் ( டைட்டில்  சாங்) 

2  நான்  தான்  உங்கப்பண்டா , நல்ல  முத்துப்பேரன்  டா ( ஹீரோ  ஓப்பனிங்  சாங் ) 


3  அடி  ராமாயி  என்  ராசாத்தி  புது  ரோசாப்பூ   (  தோழிகள்  கிண்டல்  சாங் ) 


4  நாலு  வகைப்பூவில்  (  டூயட்) 


  ரசித்த  வசனங்கள் 


1 நம்ம  ஊர்  ஜனம் இருக்கே? யாராவது  கறுப்பா  வாந்தி  எடுத்தாக்கூட  காக்கா  காக்காவா  வாந்தி எடுத்தாங்கனு  சொல்வாங்க 


2  உன்  பொண்ணுக்கு  மூக்கு  சிவந்திடுச்சு , சீக்கிரமாவே  மூலைல  உக்காந்துடுவா 

3  அரச  மரத்தை  சுத்திட்டு  அடி  வயித்தை  தொட்டுப்பார்த்தா   நடக்குமா? என்  கிட்டே  வா , பூரா  விபரமும்  சொல்றேன் 

4 குழந்தைக்கு  நோய்  வந்த  பின்   மருந்து  தருபவர்  டாக்டர் , நோய்  வராம  பார்த்துக்கறவ  தாய் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  சிறுமியாக  இருக்கும்போது  நாயகி  ஒரு  முயலைத்துரத்துவதாக ஒரு  காட்சி. முயல்  நடைபாதையில்  ஓடுது. பொதுவாக  காட்டு  முயல்  செடி கொடிகள்  இருக்கும்  காட்டுக்குள்  தான்  ஓடும் . அருகிலேயே  அவ்ளோ  தாவரங்கள்  இருக்க  அங்கே  ஓடாமல்  நடை  பாதையில்  ஓடுவது  ட்ரெய்னிங்  கொடுத்த  சர்க்கஸ்  முயல்  ஆகத்தான்  இருக்கும் 


2  நாயகி  சிறுமியாக  இருக்கும்போது  அதாவது 13  வயதில்  அவளது  முறை  மாமன்  கூடவே  ஒன்றாக  அருகருகே  படுத்துத்தூங்க  பெற்றோர்  அனுமதிப்பது  எப்படி ? என்ன  தான்  நிச்சயிக்கப்பட்டவர்கள்  என்றாலும்  திருமணத்துக்கு முன்  ஒரு  கிராமத்தில்  இப்படி  படுக்க  1980களில் அனுமதித்தார்களா? 


3  என்னதான் அப்பாவியாக  இருந்தாலும்  கிராமத்தில்  இருந்து பட்டணம்  வந்த  நாயகன் - நாயகி  இருவரும்  பொதுப்போக்குவரத்தான  பஸ்சில்  போகாமல் ஆட்டோவில்  போய் சார்ஜ்  தர  கையில்காசில்லாமல்  தவிப்பது  நம்பும்படி இல்லை


4 வில்லனின்  பங்களாவில் தங்கும்  இருவரும்  தனி  அறையில்  தூங்கும்போது  ரூம்  கதவை  உள் பக்கமாகத்தாழ்  இட்டுக்கொள்ள  மாட்டார்களா? சின்னத்தம்பி பிரபுவை  விட  அப்பாவி போல 


5  நாயகன், நாயகி  இருவருமே  சின்ன  வயதில்  இருந்தே  கிளாஸ்மேட்.. இருவரும்  ஒரே  அளவு  தான்  படித்திருக்கிறார்கள் , அப்படி  இருக்கும்போது மளிகை  சாமான்  லிஸ்ட்  என  சொல்லி   வில்லன் ஒரு  வெள்ளை  சீட்டில்  லவ்லெட்டர்  எழுதி  நாயகியிடம்  கொடுக்கச்சொல்லும்போது  அதை  வாங்கிப்பார்த்துப்படிக்க  மாட்டாரா? 


6  வில்லன்  வீட்டில்  தான்  நாயகி  தங்கி  இருக்கிறார். தடை  சொல்ல  யாரும்  இல்லை. அந்த  பேக்கு  வில்லன் லவ்  லெட்டரை  நாயகியிடம்  நேரடியாகத்தராமல்  நாயகனிடம்  தந்து  தூது  விடுவது  ஏன் ? 


7 நாயகி  நாயகனை  நீ  வா  போ  என  ஒருமையில்  தான்  அழைக்கிறார். திடீர்  என  வாங்க , போங்க  என  மரியாதையாக  அழைப்பது  ஏன் ? திருமணமும்  ஆகவில்லை , அவருக்கு  மன  வலர்ச்சியும்  இல்லை . எப்படி  திடீர்  மெச்சூரிட்டி  வந்தது ? 


8 நாயகன்  நாயகியிடம்  என்ன  திடீர்னு  என்னை  வாங்க  , போங்க  என  மூன்றாவது  மனுசன்  கிட்டே  பேசுவது போல்  வித்தியாசமா  நடந்துக்கறே  என  கேட்கும்போது  நாயகி  அப்படி  அவனைக்கூப்பிடுவது  ஆறாவது  முறை . அஞ்சு தடவை  காது  கேட்கலை  போல 


9  நாயகி  அடிக்கடி  ஹேண்ட்  பேக்கை  எடுத்துக்கிட்டு  போற  மாதிரி காட்றாங்க. நான்  கூட  வேலைக்குப்போறதா  நினைச்சேன். ஒரு  டைம்  நாயகியே  சொல்லுது . கடை  வீதிக்குப்போறேன்  அப்டிங்குது. காசு  ஏது ?


10 க்ளைமாக்ஸ்  ல  நாயகி  நான்  சரத்  சந்திரர்  நாவலை அதிகம் படித்தவள்  என  ஒரு  டயலாக்  வருது ,ஆனா  2  மணி  நேரப்படத்துல  ஒரு  சீன்ல  கூட  பாப்பா  புக்  படிக்கிற  மாதிரி  காட்சியே  வர்லை 


11  படம்  முழுக்க  நாயகி  சின்னத்தம்பி  பிரபு  மாதிரியே  அப்பாவியா  வருது . திடீர்னு க்ளைமாக்ஸ்ல  கே  பாலச்சந்தர்  நாயகி  மாதிரி  மெச்சூரிட்டியாப்பேசுது


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - காட்சி  ரீதியாக  18+  இல்லை , ஆனால்  வசனம்  ஆங்காங்கே  லைட் க்ரீன்சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கீர்த்தி  சுரேஷ்  ரசிகர்கள் பார்க்கலாம். ரேட்டிங்  2/ 5 


ராமாயி வயசுக்கு வந்துட்டா
இயக்கம்வேந்தன்பட்டி அழகப்பன்
தயாரிப்புடி. பி. எஸ். எல். ஞானமணி
ஸ்ரீ துர்கா கம்பைன்ஸ்
எல். மனோகரன்
இசைகங்கை அமரன்
நடிப்புஉதயசங்கர்
மேனகா
வெளியீடுசனவரி 121980
நீளம்3230 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

0 comments: