Monday, June 26, 2023

EXTRACTION 2 (ஆங்கிலம்) - 2023 - சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்


2020 ல் இதன்  முதல் பாகம்  வெளியாகி  செம  ஹிட்  ஆனது. ஆனால் இரண்டாம்  பாகம்  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆகவில்லை , நேரடியாக  நெட்  ஃபிளிக்ஸ்  ஓடி டி  யில்  ஜூன் 16  முதல்  காணக்கிடைக்கிறது . இது  ஆண்டி  பார்க்ஸ்  எ4ழுதிய  நாவலின்  தழுவல் . ஒரே  ஷாட்டில்  எடுக்கப்பட்ட21  நிமிட  ஆக்சன்  சீக்வன்ஸ்  இதன்  ஹை  லைட்டாக  பேசப்பட்டது 

  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ரிட்டயர்  ஆன ராணுவ  வீரன். பணம்  கொடுத்தால்  அவர்களுக்காக  எதையும்  செய்து  முடிக்கும்  ஆள் . அவரிடம்  ஒரு  புது ஆள்  வந்து ஒரு  பிராஜெக்ட்  டை  ஒப்படைக்கிறான். நாயகனின்  முன்னாள்  மனைவி  அனுப்பிய  ஆள். எக்ஸ்  மனைவியின்  தங்கயை அவளது  கணவன் வீட்டிலேயே   ஜெயில்  போல்  அடைத்து  வைத்திருக்கிறான். அவள்  கூட  ஒரு  மகனும், மகளூம்  உண்டு .இப்போது  நாயகனுக்கு  அளிக்கப்பட்டிருக்கும்  பணி அவர்கள்  மூவரையும்  மீட்க  வேண்டும்


 வில்லன்  சாதாரண  ஆள்  இல்லை . அவனும்  பெரிய  படையே  வைத்திருக்கிறான். வில்லனுக்கு  ஒரு  அண்ணன்  உண்டு . நாயகன்  தன்  ஆட்கள்  இருவருடன்  சென்று  அவர்கள்  மூவரையும்  மீட்டு  வந்த  பின்  மீண்டும்  ஒரு  சிக்கல் . நாயகனின்  மச்சினியின்  மகன் அப்பா  பக்கம். அவன்  இருக்கும்  இருப்பிடத்தை  தன்  பெரியப்பாவுக்குக்காட்டிக்கொடுத்து  விடுகிறான். இப்போது  வில்லன்  நாயகனின்  இடத்துக்கு  வந்து  விடுகிறான், இதற்குப்பின்  நிகழும்  ஆக்சன்  அதகளங்கள்தான்  படமே . 


நாயகன்  ஆக க்ரிஷ் ஹேம்ஸ் ஒர்த்.  ஒன்  மேன்  ஆர்மி  ஆக  முழுக்கதையையும், ஆக்சன்  சீக்வன்சையும்  தாங்கி  நிற்பவர்  . ஆக்சன்  காட்சிகளில்  இவரது  சாகசம்  அபாரம்  என்றால்  தன்  முன்னாள்  மனைவியிடம்  மன்னிப்புக்கேட்கும்  காட்சிகளில்  கண்  கலங்க  வைக்கிறார்


நாயகனின்  ஒர்க்கிங்  பார்ட்னர்  ஆக   கோல்சிட்டா ஃபரானி, மற்றும்  அவர்  தம்பியாக   ஆதம்  பெசா . நாயகனின்  ஆக்சன்  அவதாரத்துக்கு  துணையாக  இருப்பவர்கள்  இவர்கள்  இருவரும்தான். இருவரில்   ஒருவர்  உயிர்த்தியாகம் செய்யும்  காட்சி  உருக்கம் 


நாயகனின்  முன்னாள்  மனைவியாக  ஒல்கா குரியலங்கோ  அதிக  வாய்ப்பில்லை . வந்தவரை  சிறப்பு . நாயகனின்  மச்சினி  ஆக  டினாட்டின்  படம்  முழுக்க  நாயகன்  பின்னால்  குழந்தையுடன்  ஓடி  வருவதுதான்  வேலை . கச்சிதமாக  தன்  கேரக்டரை  உணர்ந்து   நடித்திருக்கிறார்


கிரேக்  பல்டி யின் ஒளிப்பதிவில்  கண்ணாடி  மாளீகையில்  ஏரியல்  வியூவில்  சண்டைக்காட்சிகள்  அற்புதமாகப்படம்  ஆக்கப்பட்டுள்ளது   2  மணி  நேரம்  ஓடும்  அளவு  எடிட்டிங்  பணி  கனகச்சிதம் , அதில்  ஒன்றரை  மணி  நேரம்  ஆக்சன்  ஆக்சன்  தான் 


ஜென்றி  ஜாக்மேனின்  பின்னணி  இசையில்  பரபரப்பு  தொற்றிக்கொள்கிறது. ஜோ ரிஷோ வின்  திரைக்கதையை  சாம் ஹாக்ரவே  இயக்கி  இருக்கிறார். ஒர்ஃபு  பர பரப்பான  விறு விறுப்பான  ஆக்சன்  த்ரில்லரை  வெற்றிகரமாகத்தந்திருக்கிறார்  என  சொல்லலாம்


., குடும்பத்துடன்  காணத்தக்க  இப்படம்  நெட்  ஃபிளிக்சில்  காணக்கிடைக்கிறது சபாஷ்  டைரக்டர்


1  நாயகனுக்கும் , மனைவிக்கும்  இடையிலான  உறவு  முறிந்ததற்கான  காரணம்  சொல்லப்பட்ட விதம் 


2  நாயகனின்  மச்சினியின்  மகனுடன்  நாயகன், மச்சினி , பெரியப்பா  மூவரின்  தனித்தனி  உரையாடல்கள் 


3  மயிர்க்கூச்செரிய  வைக்கும்  ஆக்சன் கொரியோகிராஃபி 


  ரசித்த  வசனங்கள் 


1   நாம  அக்கறை காட்றவங்களை அவ்வளவு  சீக்கிரம்  சாகவே விட  முடியாது 


2  பெத்தவங்க  கண்  முன்னாலயே  அவங்க  குழந்தைகள்  இறந்து  போவதை  யாராலும்  தாங்கிக்கவே  முடியாது 


3  எல்லாருக்குமே  எல்லாத்துக்குமே  ரெண்டாவது  வாய்ப்புனு  ஒண்ணு  கிடைக்கனும்


4  மோசமான  ஆட்களுக்கு நடுவே  குழந்தைகளை  இந்த  அளவு  நல்லபடியா  வளர்த்த  எவ்ளோ  சிரமப்ப்ட்டிருப்பேனு  தெரியும்


5    உடைந்து  போன  இதயங்களுக்காகத்தான்  கடவுள்  இருக்கிறார்


6  எனக்காக  ஒரு  துப்பாக்கிக்குண்டு  காத்திருக்குனு  எனக்குத்தெரியும், ஆனா  அந்த  புல்லட்  உன்  துப்பாக்கில  இருந்து  கிளம்பும்னு  நான்  எதிர்பார்க்கலை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  அந்தப்பையன்  ஆரம்பத்தில்  இருந்தே  அம்மாவுக்கு  எதிராகவும்,, அப்பாவுக்கு  ஆதரவாகவும்  பேசி  வருகிறான், அவன்  இருக்கும்  லொக்கேஷனைக்காட்டிக்கொடுப்பான்  என்பதை  ஏன்  நாயகனாலோ , அந்தப்பையனின்  அம்மாவாலோ  யூகிக்கமுடியவில்லை ? 


2  தன்  உயிரைப்பணயம்  வைத்து  மச்சினியைக்கப்பாற்றிய  நாயகனுக்கு  முன்னாள்  மனைவி  ஒரு  நன்றி  கூட மனதார  சொல்லவில்லை . நாயகனின்  டீமில்  ஒருவர்  இறந்ததற்கும்  வருத்தம்  தெரிவிக்கவில்லை அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - படத்துக்கு  ஏ  சர்ட்டிஃபிகேட்  கொடுக்கப்பட்டிருந்தாலும்  அது  வன்முறைக்காக  மட்டும் தான் . வேறு  விரசமான  காட்சிகள்  ஏதும்  இல்லை சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஆக்சன்  பிரியர்கள்  அவசியம்  காணவேண்டிய  படம். ரேட்டிங்   2.75 / 5 Extraction 2
Extraction 2 poster.jpg
Official release poster
Directed bySam Hargrave
Written byJoe Russo[1]
Based onCiudad
by Ande Parks
Joe Russo
Anthony Russo
Fernando León González
Eric Skillman
Produced by
Starring
CinematographyGreg Baldi
Edited by
Music by
Production
companies
  • AGBO
  • Wild State
  • T.G.I.M. Films
Distributed byNetflix
Release date
  • June 16, 2023
Running time
122 minutes
CountryUnited States
LanguageEnglish

0 comments: