Monday, June 12, 2023

GOOD LUCK TO YOU LEO GRANDE (2022) - ஆங்கிலம் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி மெலோ டிராமா ) @ அமேசான் பிரைம்

 


    ஏ  கப்பட்ட  திரைப்பட  விழாக்களில்  கலந்து  கொண்டு சிறந்த  நடிகைக்கான  விருதை  நாயகி  எம்மா  தாம்சனுக்குப்பெற்றுத்தந்த  படம்  இது. ஒன்றரை  மணி நேரப்படத்தில் இரண்டே  இரண்டு  முக்கியக்கேரக்டர்கள்  நான்கு  முறை  சந்திக்கிறார்கள் . முதல்  சந்திப்பு  30  நிமிடங்கள் , அடுத்த  இரண்டாவது  சந்திப்பு 30  நிமிடங்கள் , மூன்றாவது  சந்திப்பு 15  நிமிடங்கள் , நான்காவது  சந்திப்பு 15  நிமிடங்கள் , ஆக  மொத்தம் 90   நிமிடங்கள்  படம்  முழுக்க  பேசிக்கொண்டே  இருப்பதுதான்  சிறப்பு . பொறுமைசாலிகள்  பார்க்கலாம்  

 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  41  வயதான  விதவை , இவருக்கு ஒரு  மகன் , ஒரு  மகள் . வாரிசுகள்  இருவரும்  வெவ்வேறு  இடங்களில்  இருக்கிறார்கள்  கணவன்  இறந்து  இரு  வருடங்கள்  ஆகின்றன. நாயகி  ஒரு  டீச்ச்சர். தன்  வாழ்நாளில்  தன்  கணவனைத்தவிர  யாருடனும் நெருக்கமாக  இருந்ததில்லை 


நாயகி  டீச்சராக  இருந்த தருணங்களில்  மாணவிகளிடம்  ரொம்ப  ஸ்ட்ரிக்டாக  நடந்து  கொள்பவர் , அவர்கள்  உடுத்தும்  உடை  கண்ணியமாக  இருக்க  வேண்டும்  என்பதில்  கவனமாக  இருப்பவர். யாராவது  கிளாமராக  உடை  உடுத்தி  வகுப்புக்கு  வந்தால் அவர்களை  கடுமையாக  திட்டுபவர் .


நாயகி  தன்  உடல்  தேவைக்காக  ஒரு  ஆண்  பாலியல்  தொழிலாளீயை  ஆன்  லைன்  மூலம்  புக்  செய்கிறார். அவன் தான்  நாயகன் .   நாயகன்  நாயகி  இருக்கும்  இடத்துக்கு  முதல்  முறை  வரும்போது  அவனுக்கு  நாயகியின்  மகன்  வயதுதான்  என்பதை  உணர்கிறார். இருவரும்  அவரவர்  வாழ்க்கை  பற்றிப்பேசிக்கொண்டே 30  நிமிடங்கள்  கழித்து  விடுகிறார்கள் 


இரண்டாவது  சந்திப்பில்  அவர்களுக்குள்  ஒரு  புரிதல்  ஏற்படுகிறது . இப்போதும்  30  நிமிடங்கள்  பேசிக்கொண்டு  இருக்கிறார்கள் 


 மூன்றாவது  சந்திப்பில்  இருவருக்கும்  சண்டை  வந்து  விடுகிறது . காரணம்  நாயகன்  தன்  தொழில்  நிமித்தம்  தன் பெயர்  மற்றும்  விபரங்களைப்போலியாக  சொல்லி  இருந்தான், அதை  கண்டுபிடித்து  அவன்  உண்மையான  பெயரை  நாயகி  அறிந்து  வைத்திருந்தாள் . இது  பற்றிய  உரையாடலின்  முடிவில்  நாயகன்  கோபித்துக்கொண்டு  சென்று  விடுகிறான்


  நான்காவது  சந்திப்பு  தான்  க்ளைமாக்ஸ் . ஒரு  ஹோட்டலில்  சந்திக்க  முடிவு  எடுக்கிறார்கள் . அங்கே  வெய்ட்டராக  நாயகியின்  முன்னாள்  மாணவி  இருக்கிறார். முதலில்  நாயகி  நாயகனை  தன்  காரை  வாங்க  வந்தவர்  என  பொய்  சொல்லி  அறிமுகம்  செய்கிறார். பிறகு  மனம்  மாறி  நாயகன்  யார்  என்பதையும் , அவர்கள்  இருவருக்கும்  என்ன  உறவு  என்பதையும்  கூறி  அந்த  மாணவியை  ஒரு  காலத்தில்  திட்டியதற்கு  மன்னிப்பும்  கேட்கிறார். போதாததற்கு  நாயகன்  நல்லவன் , வல்லவன் ., கெட்டிக்காரன்  பெண்டு  ஏடுககறதுல  என  சர்ட்டிஃபிகேட்  வேற  கொடுத்து  நீ வேணும்னாக்கூட  அவனை  புக்  பண்ணிக்கலாம்  என்கிறார்


அவ்வளவுதான் , படம்  முடிஞ்சுது , எல்லாரும்  எழுந்து  செல்லலாம்


சபாஷ்  டைரக்டர்


1  இரண்டே  இரண்டு  கேரக்டர்களை  வைத்து  படம்  எடுக்க  துணிந்தது 


2  போர்  அடிக்காமல் 90  நிமிடங்கள்  வசனம்  பேச  வைத்தது 


  ரசித்த  வசனங்கள் 


1  இதுவரைக்கும்  நீங்க  எத்தனை  பேரை  காதலிச்சிருக்கீங்க >


பொதுவா  ஜெண்ட்டில்மென்  அந்த  கணக்கை  சொல்ல  மாட்டாங்க 


2   எனக்கு  41  வயசாகுது , இதுவரை  நீங்க  சந்தித்ததில்  மிக  அதிக  வயதான  பெண்ணின்  வயது  என்ன?


 இந்தக்கேள்வி  எதற்கு ?


 சும்மா  தெரிஞ்சுக்கத்தான் 


82


3   நான்  ஒரு  டீச்சரா  இருக்கறதால  ஒருவர்  பேசும்  வார்த்தைகளை  வைத்தே  அவங்க  என்னவா  எதிர்காலத்துல  ஆவாங்கனு  கணிக்க  முடியும், ஒருவர்  அடிக்கடி  யூஸ்  பண்ற  வார்த்தைகளை  வைத்து  சொல்ல  முடியும்


4    உங்க  குழந்தைகள்  எப்பவாவது  உங்களை  தர்மசங்கடமான  நிலைமைக்கு  உங்களை  தள்ளி  விட்டிருக்காங்களா?


இல்லை, அது  அவங்களால  முடியாது . உங்க  அம்மா சங்கடமான  சூழலில்  இருப்பதை  உன்னால  எப்பவாவது  உணர  முடிஞ்சிக்ருக்கா? அப்போ  நீ என்ன  செஞ்சே? 


5   என்  வாழ்க்கை  முழுவதும்  நான்  சந்தித்த  ஒரே  அட்வென்ச்சர்  நீ தான் லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


படத்தில்  லாஜிக்  மிஸ்டேக்ஸ்  எதுவும்  இல்லை . ஆனால்  இந்தப்படத்தை  எல்லாம்  வெட்டியா  உக்காந்து  பார்த்தேனே  அதுதான்  நான்  செய்த  மிஸ்டேக், இந்த  லட்சணத்துல  சிறந்த  நடிகைக்கான  அவார்டு  வேற 
அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - கடைசி  5  நிமிடங்களில்  ஒரு  நிமிடம்  மட்டும்  அடல்ட்  கண்ட்டெண்ட்  இருக்கிறது, வசனங்களில்  லைட்டா  பச்சை சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இந்த  டப்பாப்படத்தை  சிபாரிசு  செய்த  அந்த  நபரைத்தான்  வலை  வீசித்தேடிட்டு  இருக்கேன். ரேட்டிங் 1 / 5 


Good Luck to You, Leo Grande
Good Luck to You, Leo Grande poster.jpeg
Release poster
Directed bySophie Hyde
Written byKaty Brand
Produced by
Starring
CinematographyBryan Mason
Edited byBryan Mason
Music byStephen Rennicks
Production
companies
  • Align
  • Genesius Pictures
Distributed by
Release dates
  • 22 January 2022 (Sundance)
  • 17 June 2022
Running time
97 minutes
Countries
  • United Kingdom
  • United States
LanguageEnglish
Box office$9.7 million[1]

0 comments: