Thursday, June 15, 2023

மேற்குத்தொடர்ச்சி மலை (2018)- தமிழ் - சினிமா விமர்சனம் ( யதார்த்த சினிமா ) @ நெட் ஃபிளிக்ஸ்

   


 விஜய் சேதுபதி  தயாரிப்பில்  ஒரு  உலக  சினிமா. அறிமுக  இயக்குநர்  லெனின்  பாரதியின்  முதல்  படமான  இது  பஞ்சாப்பில்  நிகழ்ந்த  பயாஸ்கோப்  உலக  திரைப்பட  விழாவில்  சிறந்த  ஒளிப்பதிவுக்கான  விருது  பெற்றது . கேரளா  மாநிலம், திருச்சூரில்  நடைபெற்ற  சர்வதேச  திரைப்பட  விழாவில் சிறந்த  அறிமுக  இயக்குநர்  விருதைப்பெற்றது . நியூயார்க்  இந்திய  திரைப்பட  விழாவில்  சிறந்த  திரைக்கதைக்கான  விருது  போட்டியில்  பங்கேற்றது. இது போக  இன்னும்  ஏராளமான  திரைப்பட  விழாக்களில்  பங்கு  பெற்ற  இந்தியத்திரைப்படம்

மலையாளப்படங்கள் , ஈரானியப்படங்கள்  பார்த்துப்பழக்கப்பட்டவர்கள்  மட்டுமே  இந்தத்தரமான  படத்தை  ரசிக்க  முடியும்,  மாமூல்  ஆக்சன்  மசாலாப்படங்கள்  பார்ப்பவர்கள் , விறுவிறுப்பாக , பரபரப்பான  திரைக்கதைகளை   மட்டுமே    ரசிப்பேன்  என்பவர்கள் , இயக்குநர்  ஹரி  படங்கள்  மாதிரி  வேகமான  படங்களை  ரசிப்பவர்கள்  இப்படத்தைத்தவிர்க்கவும் .. பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன்  சினிமாக்களை  விரும்புவர்கள்  அவசியம்  காணவேண்டிய  படம் 


  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  சுமை  தூக்கும்  தொழிலாளி. ஏலக்காய்  மலையில்  முதலாளியின்  வயலில்   விளையும்  ஏலக்காய்களை  மூட்டையாகக்கட்டி  மலையில்  இருந்து  கீழே  ஊருக்குக்கொண்டு  வரும்  சுமை  தூக்கும்  தொழிலாளி 


 கால்  காசு உத்தியோகம்னாலும்  கவர்மெண்ட்  உத்தோயோகம்தான்  வேண்டும்  என இருக்கும்  பழமொழி  போல  எந்த  ஊர்  என்றாலும்  சொந்த  நிலம்  கொஞ்சமாவது  வேண்டும்  என்ற  சொலவடையும்  உண்டு . அதன்படி  நாயகன்  எப்படியாவது  ஒரு  நிலம்  சொந்தமாக  வாங்கி  அதில்  விவசாயம்  செய்து  பிழைக்க  வேண்டும்  என  நினைக்கிறான்


அவன்  வாழ்க்கையில்  நிகழும்  மாற்றங்கள் , படிப்பினைகள்  எல்லாமும்  அந்த  ஊர்  மக்களின்  வாழ்வியலோடு  கவிதையாக சொல்லும்  ;படம்  தான்  இது 


  நாயகனாக ஆண்ட்டனி. இவர்  சின்ன  சின்ன  வேடங்களில்  சில  படங்களில்  நடித்திருந்தாலும்   முழுக்கதையின்  நாயகனாக  இதுவே  முதல்  படம் ., அந்த கேரக்டராகவே  வாழ்ந்திருக்கிறார். அவரது  சிகை  அலங்காரம் , உடல்  மொழி , ஆடை வடிவமைப்பு அனைத்தும்  யதார்த்தத்தின்  உச்சம் 


 நாயகியாக  புதுமுகம்  காயத்ரி  கிருஷ்ணா. ஒப்பனை  இல்லாத  கிராமத்துக்கவிதை . முறைப்பையனான  நாயகன்  தன்  வீட்டுக்கு  வந்த  போது  அப்பா முன்னிலையிலேயே  லந்து  செய்வதும், பின்  திருமணத்துக்குப்பின்  அடக்க  ஒடுக்கமான  கிராமத்துப்பெண்ணாக  வளைய  வருவதும்  அருமை (இவர்  தான்  ஜோக்கர்  படத்தின்  நாயகி ) 


இது  போக  மனதில்  தங்கி  விடும்  ஏராளமான  பாத்திரங்கள்  உண்டு , குறிப்பாக  மனநலன்  பாதித்த  பாட்டி ,  ரத்த  வாந்தி  வந்தாலும்  உயிர்  உள்ளவரை  மூட்டை  சுமப்பேன்  என  வைராக்கியமாக  வாழும்  பெரியவ்ர் , கம்யூனிசம்  பேசும்  தோழர்  சாக்கோ , கங்காணி  கணக்குப்பிள்ளை ,நாயகனுக்கு  நிலம்  தானம்  அளிப்பவர் , வஞ்சகமாகப்பண  உதவி  செய்து  பின்  வட்டியும்  முதலையும்  அடை  இல்லை  நிலத்தை  என்  பேரில்  எழுதி  வை  என  வஞ்சகம்  பேசும்  வில்லன்   என  பட்டியல்  நீள்கிறது


 இளையாராஜாவின்  இசை  மிகப்பெரிய  பலம்  . ஒரே  ஒரு  பாட்டு , தேன்  சொட்டு , அது  போகப்பின்னணி  இசையிலும்  முத்திரை 

 தேனி  ஈஸ்வரின்  ஒளிப்பதிவு  காணக்கண்  கோடி  வேண்டும் காசி  விஸ்வநாதனின்  எடிட்டிங்  கச்சிதமாக  இரண்டு  மணி  நேரப்படமாகத்தந்திருக்கிறார் 


சபாஷ்  டைரக்டர்


1  படம்  முழுக்க  அனைவரும்  புது  முகங்களே!  அவர்களை  வேலை  வாங்கிய  விதம்   அருமை 


2  நெஞ்சிலேயே  தங்கி  விடும் கிளைமாக்ஸ்  காட்சி 


3  கிராமத்து  மக்களின்  வெள்ளந்தியான  உரையாடல்கள் , நக்கல்  , நையாண்டி  , உதவும்  குணம் அனைத்தையும்  கச்சிதமாக  வெளிப்படுத்திய  பாங்கு 

செம  ஹிட்  சாங்க்ஸ்


1 கேக்காத  வாத்தியம்  கேக்குது  ஊரான  ஊருக்குள்ளே


  ரசித்த  வசனங்கள் 


1 மனுசன் வேணா  பாதை  மாறலாம், யானைகள்  எப்பவும்  பாதை  மாறாது 


2  நாங்க  இதுவரை  சுமந்து  வந்த  சுமைகளை  கொட்டுனா  ஏலமலை  அளவு  உயரம்  இருக்கும்


3 இவ  ஒருத்தி  வடை  திங்கறதுக்குன்னே  வேலைக்கு  வாரா


 ஆமா, இவரு  என்னவோ  வடையே  திங்காத  மாதிரி


4  காசு  மட்டும்  இருந்தா  இந்த  உலகத்துல  எதை  வேணா , யாரை  வேணா விலைக்கு  வாங்கிடலாம். 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  புது  ஆள் , அனுபவம்  இல்லாத  ஆள்  அப்படி  செஞ்சா  ஓக்கே, ஆனா  அந்த  மலைல  அத்தனை  வருட  சுமை  தூக்கிய  அனுபவம்  உள்ள  நாயகன் கீழே  விழக்கூடிய  அபாயகரமான  உச்சியில்  ஏலக்காய்  மூட்டையை  அசால்ட்டாக  வைத்து  அதை  இழப்பதை  நம்ப  முடியவில்லை 


2 வானிலை  அறிக்கையில்  மழை  வரப்போவதை  முன்  கூட்டியே  சொல்வார்கள், அது  போக  ஒரு  விவசாயிக்கு  அல்லது  காட்டிலெயே  பல  வருடங்கள்  வாழ்ந்த  நாயகனுக்கு  மழை  வரப்போவது  முன்  கூட்டியே  தெரியும் , இரவில் கடும்  மழை  பெய்யும்போது  தக்காளி  நாளை  அறுவடை , வீணாகி  விடும், இப்பவே  போய்  அறுவடை  செய்கிறேன்  என  சொல்பவர்  பகலிலேயே  முன்  கூட்டியே  அதை  செய்திருக்கலாமே? 


3   கிராமத்து  ஆட்களைப்பகைத்த  அந்த  வில்லன்கள்  இருவரும் எந்த  பாதுகாப்பும்  இல்லாமல் தனியாகவா  இருப்பார்கள் ? வேலையாட்கள் , அடியாட்கள்  யாரும்  இருக்க  மாட்டார்களா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  ஓ டி  டி  என்பதால்  சென்சார்  செய்யப்படாத  கெட்ட  வார்த்தைகள்  ஆங்காங்கே  வருகின்றன . காட்சி  ரீதியாக  கண்ணியம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   உலக  சினிமா  பார்த்துப்பழக்கப்பட்டவர்கள்  உள்ளூர்  சினிமாவிலேயே  உலக  சினிமாவைப்பார்க்க  ஆசைப்பட்டால்  பார்க்கலாம்,  ரேட்டிங்  3.5 / 5 


மேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats)
இசைஇளையராஜா
நடிப்புஆண்டனி
காயத்ரி கிருஷ்ணா
அபு வளையங்குளம்
ஒளிப்பதிவுதேனி ஈஸ்வர்
படத்தொகுப்புமு. காசி விஸ்வநாதன்
வெளியீடு2018 (US)
24 ஆகத்து 2018 (இந்தியா)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

0 comments: