Friday, June 23, 2023

கழுவேத்தி மூர்க்கன் (2023 ) - தமிழ் - சினிமா விமர்சனம் ( பொலிடிக்கல் ஆக்சன் மசாலா டிராமா) @ அமேசான் பிரைம்

   


வித்தியாசமான  க்ரைம்  த்ரில்லர்  படங்களை  தொடர்ச்சியாக  தந்து  கொண்டிருந்த  அருள்நிதி  கடைசியாக  வந்த  இரண்டு  க்ரைம்  த்ரில்லர்  படங்கள்  சரியாகப்போகாததாலோ  என்னவோ மாமூல் மசாலா  படத்தில் நடிக்க  முடிவெடுத்து  விட்டார்  போல   2019ஆம்  ஆண்டு  ஜோதிகா  நடிப்பில்  வெளியான  ராட்சசி  படத்தை  இயக்கிய சையத்  கவுதம்  ராஜ்   நான்கு  வருட  இடைவெளிக்குப்பின்  இப்படத்தை  இயக்கி  இருக்கிறார். 2023 மே  26  அன்று  திரை  அரங்குகளில்  ரிலீஸ்  ஆகி  சுமாரான  வசூலையும், கலவையான  விமர்சனங்களையும்  பெற்ற  இப்படம்  இப்போது   ஜூன் 23  முதல்  அமேசான்  பிரைம்  ஓடி  டி  தளத்தில்  ரிலீஸ்  ஆகி  உள்ளது 


   ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  உயர்  ஜாதிக்கார்ர்.அவரை  விட  உயர்வில்  குறைந்த  ஜாதிக்காரர்  ஒருவருடன்  சிறு  வயதில்  இருந்தே  நெருங்கிய  நட்பில்  இருக்கிறார். நண்பனுக்கு ஏதாவது  பிரச்சனை என்றால்  உடனே  ஓடி  வருபவர் 


அந்த  கிராமத்தில்  அரசியல்வாதி  வில்லன்  ஊர்  மக்கள்  ரெண்டு  பட்டால்தான்  நமக்கு  கொண்டாட்டம்  என  முடிவெடுத்து நாயகன், நண்பன்   இருவரையும்  பிரிக்க  சதித்திட்டம்  தீட்டுகிறான்


நாயகனின்  அம்மாவுக்கு  தேர்தலில்  சீட்  கொடுத்து  நாயகனின்  அம்மாவை அடியாள்  மூலம்  தாக்கி  அந்த  தாக்குதலை  செய்தது  நாயகனின்  நண்பன்  தான்  என  பொய்யாக  பரப்புகிறான்


பிறகு  நாயகனின்  நண்பனையே  கொலை  செய்து  விட்டு  அந்தபப்ழியை  நாயகன்  மீது  போடுகிறான்.  நாயகன்  வில்லனைப்பழி  வாங்குவதுதான்  மீதிக்கதை . இதில்  க்ளைமாக்சில்  ஒரு  ட்விஸ்ட்டும்  இருக்கிறது 


நாயகன்  ஆக  அருள்  நிதி ., அவரது  மீசையைப்பார்த்தாலே  பயமாக  இருக்கிறது.  டைட்டிலும்  , நாயகனின்  கெட்டப்புமே  படத்துக்கு  எதிரி . பெண்கள்  எப்படி  தியேட்டருக்கு  வருவார்கள் ? ஆனால்    அருள்  நிதி  நடிப்பில்  குறை  வைக்கவில்லை . நாயகியுடனான  காதல்  காட்சிகளில்  பம்மும்பாதும்  சரி ,   ந்ண்பனுடன்  பாசமாகபப்ழகும்போதும் சரி   கச்சிதமான  நடிப்பு 


 நாயகியாக  துஷாரா  விஜயன். அழகிய  கண்கள் , வசீகரமான  முகம்  என  பல  பிளஸ்கள்  இவரிடம் . முதல்  பாதியில்  மட்டும் தான்  இவருக்கு  அதிக  வாய்ப்பு . காதல்  காட்சிகளில்  கெமிஸ்ட்ரி பிரமாதமாக  ஒர்க்  அவுட்  ஆகி  இருக்கிறது


வில்லனாக  ராஜ சிம்மன்  கவனிக்க  வைக்கிறார். நாயகனின்  அப்பாவாக  யார்  கண்ணன்.கச்சித,ம் நண்பனாக  சந்தோஷ்  பிரதாப்  பாராட்டுப்பெறும்  நடிப்பு  அவரது  காதலியாக  சாயாதேவி  மின்னுகிறார், காமெடியன்  முனீஸ்காந்த்  இதில்  குணச்சிதர  நடிப்பு. தரம் .  


இசை  டி இமான். நான்கு  பாடல்களில்  2  பாட்டு  செம  ஹிட்டு  , பிஜிஎம்மில்  நாயகன் வரும்போதெல்லாம்  பின்  பாதி  தெறிக்கிறது 


ஸ்ரீதரின்  ஒளிப்பதிவில்  நாயகிக்கான  க்ளோசப்  காட்சிகள்  அழகு   நாகூரானின்  எடிட்டிங்கில்  இர்ண்டரை  மணி  நேரம்  ஓடும்படி  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்கள் 


சபாஷ்  டைரக்டர்


1  அரசியல்வாதியின்  போஸ்டர்  கிழிந்திருக்க  அந்த  கேப்  வழியே  அம்பேத்கார்  சிலை  தெரிவது டைரக்சன்  டச்


2  சாவு  வீட்டில் ,மரியாதை  செய்ய  வரும்  அனைவரும்  தனித்தனியாக  அவர்கள்  வாழ்வில்  நிகழ்ந்த  சம்பவஙளை  நினைத்துப்பார்க்கும்  காட்சியும், இழவுக்கு  வந்த  பெண்  தாரை  அடிக்கும்  காட்சியும்  டச்சிங் 


3  நாயகனின் நண்பனைக்கொன்றது  மெயின்  வில்லன்  அல்ல  என்பது  நல்ல  ட்விஸ்ட் 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1   அவ கண்ணைப்பார்த்தா  அய்யோ  யம்மா  கருநாகப்பாம்பா கொத்துதம்மா


2  செந்தாமரை  அடி )  செந்தாமரை   சிலு  சிலு  பார்வையில் 


3   எங்கே  போனே  ராசா? 


4 நிக்கற  பொழுதுதான்  போகப்போகுதே


  ரசித்த  வசனங்கள் 


1 வெள்ளைக்காரன்  காஃபிகடைல  உக்காந்தா  எதோ  பண்ண  பிளான்  பண்றான்னு அர்த்தம், நம்ம  ஊர்க்காரன்  டீக்க்டைல  உக்காந்தா  அவன்  பண்றதுக்கு  எதுவும்  இல்லைனு  அர்த்தம் 


2   எவ்ளோ  தைரியம்  இருந்தா  உன்  க்டைல  என்னை  டீ  குடிக்கச்சொல்வே? என்ன? வெளியூர்க்காரங்க  உன்  க்டைல  டீக்குடிக்கறாங்கனு  இளக்காரமா? 


3   ஒரு  இடத்துக்கு  வர்றதுக்கு  உழைப்பதை  விட  கிடைச்ச  இடத்தை  தக்க  வைக்க  அதை  விட  அதிகமா  உழைக்கனும் 


4 ஜெயிப்பதற்கான  சூத்திரம்  மேலே  போகப்போக  கீழே  இறங்கி  வேலை  செய்யனும்


5  லோனை  வாங்கிக்கிட்டு  திருப்பிக்கட்டாத  ஆட்களுக்கு  மட்டும்தான்  லோன்  தருவாங்கனு  படிச்சு  படிச்சு  சொன்னேன், இந்தாளு  கேட்கலை 


6  சாதி  நமக்கு  சாமி  மாதிரி , உக்கார  வெச்சு  சோறு  போடுதில்ல? 


7  இந்த  மாதிரி மீசை  வைக்கறதுக்குக்கூட  குறிப்பிட்ட  ஜாதில  பிறந்திருக்கனும்


8   எங்களை  அடுத்த  கட்டத்துக்குக்கூட்டிட்டுப்போகாட்டிப்பரவால்ல, ஆனா  50  வருசம்  பின்னாடி  கூட்டிட்டுப்போய்  விட்றாதீங்க 


9 நீங்க  ஒரு  ஆள் நல்லாருக்கனும்கறதுக்காக  இந்த  மொத்த  ஜனங்களையும்  வித்துடாதீங்க 


10  லவ்  பண்றவங்க  உக்காந்து  பேச  ஊருக்குள்ளே  ஒரு  இடம்  இல்லையே? 


 ஏன்? நீ வேணா  ஊருக்கு  ஒரு  பார்க் கட்டேன்


11  ஜெயிலுக்குப்போனவங்க  எல்லாம்  திரும்ப  வந்து  சி எம்  ஆகலையா? 


 முதல்ல உன்னைக்கட்றேன்


12  போடற  சட்டைக்குத்தெரியுமா? போடற்து  யாரு?ன்னு ?  சரியான  சட்டை  போட்டா  எல்லாரும்  அழகு  தான் 


13  எதிர்ல  வர்றவங்க  நம்மைப்பார்க்கும்போதே  மரியாதையுடன்  பார்க்கனும், 20  வயசுக்குள்ளே  குறைந்தது   ஐந்து  புத்தகமாவது  படிச்சிருக்கனும்., பதில்  சொல்ல  மட்டும்  இல்ல , கேள்வி  கேட்கவும்  அறிவு  வேணும், அதுக்கு  படிச்சிருக்கனும். பதில்  சொல்ல  முடியாத  அளவுக்கு  நம்ம  கேள்விகள்  இருக்கனும் 


14  எல்லா   ஜாதிப்பிரச்சனைகளிலும்  யாரோ  ஒருவரின்  பர்சனல்  பிரச்சனைதான்  காரணமா  இருக்கும் 


15 எந்த  கலர்ல  கண்ணாடி போட்டிருக்கியோ  பார்க்கறதும்  அதே  கலர்ல  தான்  தெரியும். போட்டிருக்கும்  க்ண்ணாடியைக்கழட்டிட்டுப்பார், நிஜமான  கலர்  தெரியும் 


16  அரசியலில்  முன்னுக்கு  வரனும்னா  நமக்கு  முன்னால  போறவனை  ஏறி  மிதிச்சுப்போய்க்கிட்டே  இருக்கனும்


17  நாம  நினைச்சது  நினைச்சபடி  நடக்கும்போதுத்கான்  நாம  ஜெயிக்கறோம்னு  தெம்பே  வருது 


18  எஸ்  பி  ஆஃபீஸ்லயா  உனக்கு  டியூட்டி  போட்டிருக்காங்க ? வருமானமே  வராதே? 


19   இங்கே  ஓட்டுப்போடறதுக்கு  நல்லவனா?கெட்டவனா?ன்னு  யாரும்  பார்க்கறது  இல்லை , நம்ம  சாதிக்காரனா?ன்னுதான்  பார்க்கறாங்க 


20  பதவி  ஒரு  தடவை  கை  விட்டுப்போச்சுன்னா  மீண்டும்  வராது 


21  நல்லவன்னு  சொன்னாலும்  கெட்டவன்னு சொன்னாலும்    ஊர்  நம்மைப்பற்றித்தான்  பேசனும் 


22   அடி  வாங்கறவன்  பக்கம்தான்  நாம  நிக்கனும், அவங்க  அடிவாங்காம  பார்த்துக்கனும்


23   நல்ல  விஷயங்களை  விட  கெட்ட   விஷயங்கள்தான்  நமக்கு  அடிக்கடி  நடக்குது 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகனைத்தேடி  வ்ரும்  போலீஸ்  நாயகியிடம்  நீ  அவனுக்கு  கால்  பண்ணுனியா? மறைக்காத , கம்பெனி  காரன்  கிட்டே  கேட்டா  கால்  லிஸ்ட்  கொடுத்திருவான், மாட்டிக்குவே  என  மிரட்டுகிறார். போலீஸ்  சைபர்  கிரைம்  போலீஸ்  கிட்டே  தானே  அதைக்கேட்கனும்? 


2 போலீஸ் ஆஃபீசர்   நாயகனை  சுட  யத்தனிக்கையில்  ஒரு  கான்ஸ்டபிள்  எஸ்  பி  உத்தரவு  , சுடக்கூடாதுனு  சொல்லி  இருக்கார்  என்கிறார்., சரி . ஆளைத்தானே  சுடக்கூடாத்   கண்  முன்  ஜீப்பில்  தப்பிப்போகிற  ஆளின்  கார்  டயரை  சுடலாமே? 


3  முனீஸ்காந்த்  எஸ்  பி  ஆஃபிஸ்ல  அவருக்கு  முன்னால்  கெத்து  காட்டும்  காட்சி  தியேட்டரில்  கை  தட்டலை  வேணா  வாங்கி  இருக்கலாம், ஆனால்  கொஞ்சம்  கூட  யதார்த்தம்  இல்லை . நிஜத்தில்  லாடம்  கட்டி  இருப்பாங்க 

4  நாயகன்  ஒரு  கொலைக்குற்றவாளி, போலிஸ்  வலை  வீசித்தேடிக்கொண்டிருக்கிறது , அவர்  என்னடான்னா  அம்மா  கையால்  சாப்பாடு  வாங்கி  சாப்பிட்டுட்டு  இருக்கார் . கொலை  செய்யப்பட்ட  நபரின்  அம்மா வீட்டில்  வந்து  போய்க்கிட்டு  இருக்கார்.. 


5  என்கவுண்ட்டர்  லிஸ்ட்டில் இருக்கும்  நாயகன்  தலைமறைவாககாட்டுக்குள்  வாழ்கிறார். போலீஸ்  அவர்  உடைமைகளை  சீஸ்  பண்ணி  இருக்கும் ( இருக்கனும் ) ஆனால்  க்ளைமாக்ஸில்  நாயகன்  தன்  பைக்கில்  பந்தாவாக  வில்லன்  வீட்டுக்கு  வருவது  எப்படி ? 


6 க்ளைமாக்ஸ்  ஃபைட்ல  அடியாட்கள்  கூட்டம்  கூட்டமா  வர்றாங்க . மூணு  பேரு  ஒரே  சமயத்தில்  நாயகனை  அடிக்க  வரும்போது  நாயகன்  நடுவில்  இருப்பவனை  மட்டும்  உதைக்கிறார். ஸ்லோ மோஷன்ல  நல்லா  தெரியுது , அனா  மூணு  பேரும்  கீழே  விழறாங்க 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - வன்முறை  தெறிக்கிறது , கிளாமர்  காட்சிகள்  ஏதும்  இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ரெண்டரை  மணி  நேரபப்டத்தில்  முதல் ஒன்றே  முக்கால் மணி  நேரம்  பார்க்கலாம், இதற்குப்பின்  இழுவை . ரேட்டிங்  2.5 / 5 


Kazhuvethi Moorkkan
Kazhuvethi Moorkkan.jpg
Theatrical release poster
Directed bySy Gowtham Raj
Written bySy Gowtham Raj
Produced byS. Ambeth Kumar
Starring
CinematographySridhar
Edited byNagooran
Music byD. Imman
Production
company
Olympia Movies
Distributed byRed Giant Movies
Release date
  • 26 May 2023
Running time
150 minutes
CountryIndia
LanguageTamil

0 comments: