Tuesday, November 03, 2020

அதே கண்கள் (2017) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்)


தமிழ்  சினிமா  உலகில்  ஒரு  செண்ட்டிமெண்ட்  உண்டு . விழி ஒளி இழந்தவர்  ஹீரோ எனில்  அந்தப்படம்  கமர்ஷியலா  இதுவரை  ஜெயிச்சதில்லை . உதா  கமலின் 100 வது  படம்  ராஜபார்வை , விக்ரம்  நடித்த  காசி   பாரதிராஜாவின் காதல்  ஓவியம், முரளி  நடிச்ச  இரவு சூரியன் , இதை  பட்டி  டிங்கரிங்  பண்ணின   தாண்டவம் , மூன்றாம்  கலைஞர்  நடித்த  சைக்கோ   என  சொல்லிக்கிட்டே  போலாம்,  இரா  பார்த்திபன்  நடிச்ச  சபாஷ்  ஓரளவு  ஹிட் ஆன   க்ரைம்  த்ரில்லர். இதே  செண்ட்டிமெண்ட்  நாயகி  அப்படி நடிச்சிருந்தா  ஹிட்  ஆகி இருக்கு , உதா  ரேவதி  நடிச்ச  கை  கொடுக்கும்  கை , ஸ்லிம்ரன்  நடிச்ச  துள்ளாத மனமும்  துள்ளும்.  ஹிந்தில  மெகா  ஹிட் ஆன  அந்தாதூன் ல ஹீரோ  இப்படிப்பட்டவர் தான். அதை  தமிழ்ல  பிரசாந்த்  நடிக்க  ரீமேக்  பண்ண  இருந்தாங்க , இப்ப  கொரோனா  வால்  தள்ளிப்போடப்பட்டிருக்கு 


 இந்தப்படம் தமிழ்  சினிமா  செண்ட்டிமெண்ட்டை  உடைச்சு  ஹிட்  ஆன  முதல்  தமிழ்ப்படம்  என்ற  அளவில்  கவனம்  பெறுது பெரிய  ஹீரோக்கள்  இல்லாம, பில்டப் எதும் கொடுக்காம சத்தம் இல்லாம ரிலீஸ் ஆகி ஹிட் கொடுத்த  படங்கள்  வரிசைல இதுவும் சேருது 


 ஹீரோ  ஒரு ரெஸ்டாரண்ட்  ஓனர் . விழி ஒளி  இழந்தவர்..இவரை 2  பொண்ணுங்க காதலிக்கறாங்க . ஒருவர் வெளில  சொல்லாம மனசுக்குள்ளேயே  காதலிக்கிறார். இன்னொருவர்   ஹீரோ  ப்ரப்போஸ்  பண்ணதும்  ஓக்கே  சொல்றார். இருவரது  காதல்  ப்ரப்போசல்  சீன், லவ் டூயட்  என  ஜாலியா  கலர்ஃபுல்லா 20 நிமிசம் படம் போகுது 


இப்போ  காதலிக்கு  ஒரு பிரச்சனை . அவரோட  அப்பா வாங்குன  கடனுக்காக   ஒரு கும்பல்  மிரட்டுது. பணத்தைக்கட்டு , இல்ல  பொண்ணை  அனுப்பு... இதை ஹீரோ கிட்டே  சொன்னதும்  கவலைப்படாதே , நான்  ஹெல்ப் பண்றேன்னு  சொல்லி  அடுத்த  நாள்  பணத்தை  ரெடி பண்ண  போறப்ப  ஒரு விபத்தில்  மாட்டிக்கிறார்.


கொஞ்ச  நாட்கள்  கழிச்சு  அவர்  சரி ஆனதும்  பெற்றோர்களிடம்  அந்தப்பொண்ணைப்பற்றி விசாரிச்சா  எதுவும்  தெரியல . இதுக்குள்ளே  ஹீரோவுக்கு ஒரு ஆபரேசன்  மூலம் இழந்த  கண்  பார்வை  வந்துடுது . இப்போ  ஹீரோ ஹீரோயினை  பார்த்ததில்லை , ஆனா  ஹீரோயினுக்கு  ஹீரோவை  அடையாளம்  தெரியும் 


இப்படி  இருக்கும்போது  ஒரு நாள் ஹீரோயினோட  அப்பா  ஹீரோ கிட்டே  வந்து  என் மகளைக்காப்பாத்து, அந்த  கும்பல்  கிட்டேமாட்டிக்கிட்டா , பணம்  கொடுத்தாதான்  அவளை  மீட்க முடியும்கறார்.


ஹீரோவை  மனசுக்குள்ளேயே  காதலிச்சார்னு  ஒருத்தரை  சொன்னேனே  அந்தப்பொண்ணுக்கும்  , ஹீரோக்கும் மேரேஜ்  ஃபிக்ஸ்  ஆகி இருக்கு , இந்த  மாதிரி  டைம்ல இப்படி ஒரு சிக்கல் .சரினு ஹீரோ  அவர்  கூட நகைகளோட்   ஹீரோயினை  மீட்கப்போனா  ஒரு ஆள்  மாறாட்டம்,  அது  ஹீரோயின் இல்ல, வேற  பொண்ணு


இதுக்குப்பின்  ஹீரோ  என்ன  செஞ்சார்?  ஹீரோயினை  கண்டு  பிடிச்சாரா?     என்பதை  திருப்பங் களுடன்  சொல்லி  இருக்காங்க , மேலோட்டமா  பார்த்தா  இது டூ வே  லவ் ஸ்டோரி   மாதிரி    தெரியும், ஆனா  இது  ஒரு க்ரைம்  த்ரில்லர்  கதை 


  ஹீரோவா  கபாலி  புகழ் கலையரசன். ஓப்பனிங்ல  பார்வை  தெரியாதவரா  அவர் நடிப்பு  பாந்தம். பிறகு  ஹீரோயினை  தேடி  செல்லும்  இன்வெஸ்டிகேஷன்  காட்சிகள்  யதார்த்தம்.


 ஹீரோயினா   ஷிபாகா  அழகிய  முகம். நெடுஞ்சாலை , ஜீரோ  டிகிரி  போன்ற  படங்களில்  நடித்த  நாயகி.  இதில்  இவருக்கு  பின் பாதியில்  மாறுபட்ட  நடிப்பு . பச்சைக்கிளி  முத்துச்சரம்  ஜோதிகா  கேரக்டர்  மாதிரி  ஒரு ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  சீன் எல்லாம் உண்டு . பட்டாசைக்கிளப்பலை  என்றாலும்  ஓக்கே ரகம்


 இன்னொரு  நாயகியா  ஜனனி அய்யர் .அவரை  விட இவர்  அழகா? இவரை  விட அவர்  அழகா? என ஒரு குழப்பம்  அப்பப்ப  வருது . அப்றம்  மனசை  சமாதானப்படுத்தி  அவரைக்காட்டும்போது அவரையும், இவரைக்காட்டும்போத்கு இவரையும் ரசிச்சிடுவோம்னு  முடிவு  பண்ணிட்டேன்.  நல்ல  வேளை, 2 பேருக்கும்  காம்பா  சீன்கள்  இல்லை , தப்பிச்சேன்,  இல்லைன்னா குழப்பம்  அதிகம்  ஆகி இருக்கும் 


 பால சரவணன்  போலீஸ்  கான்ஸ்டபிளா  படம்  பூரா  ஹீரோ கூட வர்றார். காமெடி நல்லா  வருது . யதார்த்தமா  இருக்கு ,  சூரி  மாதிரி  மொக்கை  போடறதில்லை , ஈரோடு மகேஷ்  மாதிரி  அடுத்தவங்க  ஜோக்கை  காபி அடிச்சு   ஒப்பிக்கறதில்லை . ய்தார்த்தமான  கதையுடன்  ஒட்டிய  காமெடி 


பாடல்கள்  எழுதியது  பெண்கள் .  உமாதேவி , பார்வதி,  அவங்களையும்  ஒரு கெஸ்ட்  ரோல்ல நடிக்க  வெச்சிருக்கலாம் 


 இசை  ஜிப்ரான்.  பின்னணி  இசை  கனகச்சிதம். பல  இடங்களில்  பரபரப்பு விறு விறுப்பு 


 ஒளிப்பதிவு  செம,  லோ பட்ஜெட்  படம்னாலும்  காட்சிகளில்  ஃப்ரேம் பை  ஃப்ரேம்  ஒரு ரிச்னெஸ்  தெரியுதுசபாஷ்  டைரக்டர் 


1    இது  ஏதோ  இரு நாயகி  - ஒரு நாயகன்  - முக்கோணக்காதல்  கதை  மாதிரி  போஸ்டர்   டிசைன் , ப்ரமோ  எல்லாம்  கொடுத்துட்டு  மாறுபட்ட  க்ரைம்  த்ரில்லர்  ஆக்கியது 


2  தன்னை விட  வயதில்  சீனியரான  இரு ஆண்களை  வில்லி  லாவகமாக  கையாள்வது , குறிப்பாக  ஹீரோவுடனான  ஃபைட்  சீன், சக  கூட்டாளியுடனான   ஃபைட்  சீன்  ஆக்சன்  காட்சிகளில்  கச்சிதமான  பங்களிப்பு  


3    தன்னை   சீட்டிங்  செய்த  சொந்த  மாமாவை  வில்லி  போட்டுத்தள்ளிட்டா  என்பதை  ஜஸ்ட்  ஒரு சீனில்  வசனமே  இல்லாமல்  கூட்டாளிக்கு  புரிய  வைக்கும்  காட்சி  செம 


4   காரில்  கூட்டாளியுடன்  பயணிக்கும்  வில்லி  பின்னால என் ஹேண்ட்  பேக் இருக்கும் எடு  என சொல்லி  அவன்  தந்ததும்  அதில்  இருந்து  பேனாவை எடுத்து  கூட்டாளியை  காரை  ஓட்டிக்கொண்டே  தாக்குவது  அதிர்ச்சி   லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில  நெருடல்கள் 


1  ஹீரோ  பல  வருடங்களாக  கண்  தெரியாமல்  இருந்தவர்  ஆபரேஷன்  மூலம்  கண்  தெரிந்ததும்   ஒரு ஆச்சரியம், ஒரு சந்தோஷம்  என  சரஸ்வதி  சபதம்  சிவாஜி  மாதிரி  எக்சைட்மெண்ட்  காட்டி  இருக்க வேணாமா?  ரொம்ப  சாதாரணமா  டீல்  பண்றார்

2   ஹீரோயினை  ஹீரோ  பார்த்ததே  இல்லை. யாரைக்கொண்டு வந்தாலும்  நம்பி இருக்கப்போறார். எதுக்காக வில்லன்  ஆள்  மாறாட்டம் பண்ணி  ஒரு லேடியைக்கூட்டிட்டு  வரும்போது  அவர்  முகத்தை  துணியால்  கவர்  பண்ணி  மறைக்கிறார்? ஆடியன்சுக்கு  சஸ்பென்ஸ்  வைக்கவா? 


3  போலீஸ்  கான்ஸ்டபிள்  ஹீரோவிடம்  மீடியாவா? நீ? ஐ டி கார்டு காட்டு  என கேட்காமல்  அவரை  நம்புவது  எப்படி?\


4  தன்  காதல் , கல்யாணம்  கை விட்டுப்போன  கடுப்பில்  இருக்கும் ஜனனி அய்யர்  திடீர் என ஹீரோவுக்கு  ஹெல்ப்  பண்ண  ஒத்துக்கொள்வது  எப்படி? 


5  வில்லி  அனு அகர்வால்  மாதிரி  ஹைட்டோ  ஆண்ட்ரியா  மாதிரி  வாட்ட்சாட்டமான  பாடியோ  கிடையாது. ஆனா    ஹீரோ  கூட , கூட்டாளி  கூட   பிரமாதமா ஃபைட்  எல்லாம்  போடறார். இருவரையும்  ஜெயிக்கிறார்  அசால்ட்டா  , நம்பற  மாதிரியே இல்லை 


6  ஒரு சாதாரண  போலீஸ்  கான்ஸ்டபிள்  மேலதிகாரிக்கு டிமிக்கி கொடுத்துட்டு  படம்  பூரா  ஹீரோ கூட  சுத்திட்டு இருப்பது  எப்படி?


7   ரெஸ்டாரண்ட்  ஓனரா  விழி  ஒளி  இழந்தவரா  இருக்கும் ஹீரோ  பல  க்ரைம்  படங்களை  எல்லாம்  பார்த்தவர்  போல  இன்வெஸ்டிகேட்  பண்ணுவது  எப்படி ?


சி.பி  ஃபைனல்  கமெண்ட்  -  க்ரைம்  த்ரில்லர்  விரும்பிகள்  பார்க்கலாம். ஒளிப்பதிவும் 2  ஹீரோயின்கள்  அழகும்  கண்ணில்  நிக்குது .  ஓவர்  பில்டப்  ஹீரோயிசம் இல்லாத  திரைக்கதை  ஒரு ஆறுதல்  , ரேட்டிங்  2.5  / 5 .  இது   நெட்  ஃபிளிக்சில்  கிடைக்குது 0 comments: