Monday, November 02, 2020

ரயில் பயணங்களில் (1981)– சினிமா விமர்சனம் ( தொடாத காதல்)


படத்தோட  விமர்சனத்துக்குள்ளே  போகும்  முன் தமிழ்  சினிமாவில்  காதல்  காட்சிகள்  எப்படிப்படமாக்கப்பட்டன  என்பதை  ஒரு கிளான்ஸ்  பார்த்துடுவோம். பொதுவாவே  டூயட்  சீன்கள் , பாடல்  காட்சிகளை  ஹீரோக்கள்  ஹீரோயின்களை  தடவுவதற்காகவே  உபயோகப்படுத்திக்கொண்டனர். இதில்  எம் ஜி ஆர் எல்லோருக்கும்  முன்னோடி , கமல் , கார்த்திக் , அர்ஜூன்  வகையறாக்கள் அவரது வழித்தோன்றல்கள். சிம்பு , தனுஷ்  யாரும்  இதில் விதிவிலக்கில்லை . ஆனால்  தமிழ்  சினிமா  வரலாற்றிலேயே கதாநாயகியை  தொடாமல்  நடித்த  ஒரே  ஆள்  என்ற  பெருமை  டி  ராஜேந்தருக்கு  உண்டு

 

தனது  கதையின்  நாயகன்  நாயகியை  தொடாமல் கண்ணியம் காப்பவன்  என்பதை  அவர்  காட்டிய  விதம்  ஆச்சரியப்படுத்தியது. புதுசாவும்  இருந்தது , விக்ரமனின்  புது வசந்தம்  , அகத்தியனின்  காதல்  கோட்டை  போன்ற  படங்களுக்கெல்லாம்  காட்  ஃபாதர்  ஒரு தலைராகம் , ரயில்  பயணங்களில்  போன்ற  படங்கள்

 

ஹீரோயின் ஒரு எழுத்தாளினி . ஹீரோ  ஒரு பாடகர் .அவரது  பாட்டுக்கச்சேரிக்கெல்லாம்  தவறாமல் நாயகி  அட்டெண்டென்ஸ்  போட்டுடுவார். நாயகனுடன்  அறிமுகம் ஆன  பின்பும் இருவரும்  பரஸ்பரம் ஒருவரை  ஒருவர்  விரும்பிணாலும்  சொல்லாத  காதல் , வெளிப்படுத்திக்கொள்ளாத  காதல். சொல்லப்போனால் இதயம்  முரளிக்கு  முன்னோடி இந்தப்படம்

 

சந்தர்ப்ப சூழ்நிலைகளால்  நாயகிக்கு  வீட்டில்  பார்த்த  மாப்பிள்ளையுடன்  திருமணம்  நடக்குது. நாயகன்  காதல்  தோல்வியில்  தேவதாஸ்  ஆகிறார்

 

நாயகியின்  கணவன்  புரியாத  புதிர்  ரகுவரனுக்கும் , கல்கி  பிரகாஷ் ராஜ்க்கும் அண்ணன், சந்தேகப்பிராணி. மனைவியின்  முன்னாள்   மானசீகக்காதல்  விஷயம்  தெரிய வருது. சொல்லால்  தினம்  தினம்   அவளைக்காயப்படுத்தறான்

 

 இப்படி  நிலைமை  இருக்கும்போது  நாயகனுக்கு  நாயகியின்  சிரமங்கள்  தெரிய  வருது . இறுதியில்  என்ன  முடிவெடுத்தான்  என்பது  க்ளைமாக்ஸ்

 

வில்லனா  ராஜீவ்  பிரமாதமா  பண்ணி இருப்பார் . வார்த்தை  விளையாட்டு  வசனங்கள்  அவருக்கு  கைகொடுக்குது

 

ஹீரோவா ஸ்ரீநாத் . ரொம்ப  பாவமான  கேரக்டர், ஹீரோயினா  ஜோதி. குடும்பப்பாங்கான  முகம் . நல்ல  நடிப்பு 


திலீப்  ஒரு முக்கிய  கேரக்டரில்  வர்றார்


கதை  , திரைக்கதை , வசனம் , பாடல்கள், இசை , ஒளிப்பதிவு , இயக்கம்   ஆல் இன் ஆல் டி ஆர் தான்

 

 செம  ஹிட் பாடல்கள்


1   வசந்தம்  பாடி வர 


2  அட  யாரோ  பின் பாட்டு பாட 


3   நூலும்  இல்லை   வாலும்  இல்லை   வானில் பட்டம் விடுவேனா


4  வசந்த  காலங்கள்  இசைந்து  பாடுங்கள்


5   அமைதிக்குப்பெயர்  தான்   சாந்தி , அந்த  அலைதனில்  ஏதடி சாந்தி 

 நச்  வசனங்கள்

 


1        ஏன்? உங்க  தோழி  இறங்கி  வர  மாட்டாங்காளா?

 அவ ரிசர்வ் டைப் . ஆனா  இரங்கி  வருவா

======

 

2        ஒரு ஆம்பளை  பின்னால  இத்தனை  பொண்ணுங்க அலையராங்களா?

 ஆமா, நாட்டுல பத்தினிங்க பர்சண்ட்டேஜ் குறைஞ்சிட்டே வருது  போல

==============

 

3        தன்னால  சொல்ல  முடியாத  ஒரு விஷயத்தை பொண்ணு கண்ணால  சொல்லிடுவா

4        ஏன்  மாத்தனும்?

 ஏமாத்தனும்

=================

 

5        தனக்கு  வரப்போற பொண்டாட்டி கிளியோபாட்ரா மாதிரி  இருக்கனும்னு ஆசைப்படறதை  விட கண்ணகியா இருக்கனும்னுதான் ஒரு ஆண் ஆசைப்படுவான்

================

6        ஹாய்,  சாந்தி  முகூர்த்தம்  முடிஞ்சதா?

 வாட்?

 

 சாரி ,  ஹாய் சாந்தி , முகூர்த்தம்  முடிஞ்சுதா?

===================

 

7        கைல  விலங்கு  மாட்டிட்டாங்களேனு கவலைப்படறியா? ஒரு விலங்கு கிட்டே இப்படி மாட்டிக்கிட்டமேனு கவலைப்படறியா?

=============

8        கீழே  வர  பயமா இருக்கு

 முத  டைம் கஷ்டமா இருக்கும்,, பழகப்பழக  சரி ஆகிடும்

================


மாப்ளை  உன்னை சந்தோஷமா  வெச்சிருக்காரா?  அடிக்கடி  ஃபோன் பண்ணும்மா


 அடிக்கு அடி தான்மா  ஃபோன் பண்றேன்


===============


என்னடி   தடுமாறுறே?


 தடுமாறுகிறேன், ஆனா தடம்  மாறலை 


=============


இனிமே  என் பேரை  பாடலில்  யூஸ்  பண்ண வேணாம். வழி  தான் சொல்ல  தெரியும், வலியை  சொல்ல  தெரியல


=================

உனக்கு ஒரு நல்ல  வழி  சொல்லத்தான்  வந்திருக்கேன்


 எந்த  வழியும் சொல்ல வேணாம், வந்த வழியே சென்றா போதும்


================= 


சி.பி ஃபைனல்  கமெண்ட் - சென்சார்  சர்ட்டிஃபிகேட்  ஏ  கொடுத்திருக்காங்களே, ஆனா  தொடாத  காதல்  என்கிறானேனு நினைக்காதீங்க, இது  வில்லனின்  டார்ச்சர்  வசனங்களுக்காக, காட்சி ரீதியாக  கண்ணியம் காத்த  படம். அந்தக்கால  காதலர்களால்  கொண்டாடப்பட்ட படம் , க்ளைமாக்ஸ்  மட்டும்  ரத்தக்கண்ணீர்  மாதிரி  அமையும்னு நினைச்சேன், ஏமாந்தேன், ஆனா ட்விஸ்ட் குட்   ரேட்டிங்  2.75 / 5 

0 comments: