Sunday, November 01, 2020

சாவி ( 1985)– சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்)

 வில்லனா நடிச்ச சத்யராஜ் முதன்முதலாக ஹீரோவாக ( ஆண்ட்டி ஹீரோ) நடித்த படம் இது , இந்தப்படத்தை ரிலீஸ் டைம்லயே விபரம் தெரியாத வயசுலயே பார்த்துட்டேன், ஆனா சமீபத்தில் தான் அது ஆல்ஃபர்ட் ஹிட்சாக்கின் டயல் எம் ஃபார் மர்டர் (1954)  படத்தின் உல்டா ரீமேக் என தெரிய வந்தது , சரி இன்னொரு வாட்டி பார்ப்போம்னு யூ ட்யூப்ல பார்த்தேன் ஹீரோ புகழ் பெற்ற டென்னிஸ் பிளேயர், ஆனா இப்போ ஃபார்ம்ல இல்லை , விளையாடறதும் இல்லை , இவரு ஒரு பணக்காரப்பொண்ணை லவ் மேரேஜ் பண்ணிக்கறார். இவருக்கு நிஜமா அந்தப்பொண்ணு மேல லவ் எல்லாம் இல்லை, சொத்துக்கு ஆசைப்பட்டுதான் மேரேஜ் பண்ணிக்கறார், ஆனா அந்த விஷயம் மனைவிக்கு அப்போ தெரியாது . கணவன் மேல நிஜமான அன்பு வெச்சிருக்கார்


 மனைவி காலேஜ் படிச்ச டைம்ல ஒருத்தர் லவ் ப்ரபோஸ் பண்ணி இருக்கார் அவர் ஒரு பிரபல பாடகர் . ஆனா நட்பா பழகிய நாயகி நாசூக்கா அதை மறுத்திருக்கார் . பாடகரும் ஜெண்ட்டில்மேன் தனமா சரி , இனி நாம நண்பர்களா இருப்போம்னு சொல்லி விலகிடறார்  இப்போ நாயகன் தன் மனைவியிடம் ஒரு விவாதத்தில் நீ செத்தா தான் எனக்கு நிம்மதி என்கிறார். இதனால் மனம் உடைந்த நாயகி தற்கொலை பண்ண கடலை நோக்கி போறார். அப்போ அங்கே தன் முன்னாள் காதல் ப்ரபோசல் பாடகரை சந்திக்கிறார் 


 பாடகர் நாயகிக்கு எழுதிய ஒரு கடிதம் கணவன் கைல சிக்குது. இதை வெச்சு நாயகன் ஒரு பிளான் போடறார். தானே நேரடியா மனைவியை கொலை செஞ்சா போலீஸ் ல மாட்டிக்குவோம், நாம இல்லாத நேரம் வேற ஒரு ஆள் நம்ம  வீட்டுலயே மனைவியைக்கொலை செஞ்சா சந்தேகம் நம்ம பேர்ல வராது என திட்டம் போடும் நாயகன் அதுக்கு ஒரு ஆளை ஏற்பாடு பண்றார்


 நாயகனின் திட்டப்படி நாயகன் வீட்ல இல்லாத சமயம் கொலையாளி நாயகனின் வீட்டு சாவி மூலம் ஏற்கனவே உள்ளே புகுந்து மறைந்திருந்து மனைவியை கொலை செய்ய முற்படும்போது எதிர்பாராத விதமா நாயகி கொலையாளியை தற்காப்புக்காக தக்கும்போது கொலையாளி மர் கயா. உடனே நாயகி தன் கணவனுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொல்றா மனைவியை கொலை செய்ய தான் போட்ட திட்டம் தோற்றாலும் இதே கொலைக்கேசில் மனைவியை மாட்டி வைக்க நாயகன் திட்டம் போடறான் அதுக்குப்பின் என்ன நடந்தது ? என்ற சுவராஸ்யமான திரைக்கதையை யூ ட்யூப்பில் காண்க ஹீரோவா சத்யராஜ் . அசால்ட்டான வில்லத்தனம், அவரது உயரம் அவருக்கு பெரிய பிளஸ். அவர் மனசாட்சியுடன் பேசும் சீன் குங்குமப்பொட்டுக்கவுண்டர் கேரக்டருக்கான முன்னோட்டம் போல 


 நாயகியாக சரிதா . பொருத்தமான தேர்வு , அப்பாவித்தனமான நடிப்பு பாடக்ராக மைக் மோகனுக்குப்பதிலா நிழல்கள் ரவி, ஒட்டு மீசையுடன் வருவது உறுத்தல் . கேசை விசாரிக்கும் போலீஸ் ஆஃபீசராக ஜெய்சங்கர் வித்தியாசமான நடிப்பு , அவர் அடிக்கடி லொக் லொக் என இறுமுவது காமெடிக்கா? ஏதாவது குறியீடா தெரியல 


 கொலையாளி கேரக்டருக்கு பிரபலமான ஹீரோவை போட்டிருக்கலாம்., இசை கங்கை அமரன். பரவால்ல ரகம், இது வசூல் ரீதியாவும் ஹிட் ஆச்சு , சத்யராஜை ஹீரோவாப்போட்டா முதலீட்டை எடுத்தறலாம் என்ற நம்பிக்கையையும் கொடுத்துச்சு . ஆனா மீடியாக்கள் எதுவும் இப்பட விமர்சனத்தில் இது ஒரு அட்லீ ஃபார்முலா சினிமா என குறிப்பிட்டதாக தெரியல 
சபாஷ் டைரக்டர் 

1    திரைக்கதையில் சாவிக்கு  முக்கியத்துவம்  இருப்பதாலும் கேசின்  போக்கையே மாற்றுவது  சாவி என்பதாலும்  டைட்டிலே  சாவி என  வைத்தது  அருமை . ஒரிஜினல்  பட  டைட்டிலை விட  இதன் டைட்டில்  அருமை .

 (  நிஜமா  சொந்தமா  யோசிச்சு  ஜோக்  எழுதறவங்களுக்கு  கிடைக்கும்  புகழை  விட  அதை  காப்பி பண்ணி  மனப்பாடம்  பண்ணி  தானே  சொந்தமா  யோசிச்ச மாதிரி  அல்லது  தன் வாழ்வில் நடந்த  சம்பவம்  மாதிரி தொகுத்து  வழங்கும்  மதுரை  முத்து , ஈரோடு  மகேஷ்  உட்பட்ட  பல ஸ்டேண்ட்  அப் காமெடியன்கள்  பெற்ற  புகழ் போல  ) 

2     நடிக  நடிகையர்  தேர்வு கனகச்சிதம், குறிப்பா  ஹீரோ  , ஹீரோயின்  பங்களிப்பு  அருமை  லாஜிக் மிஸ்டேக்ஸ்


 1 ஹீரோ தன் மனைவியிடமே ஓபனாக உன்னை எனக்குப்பிடிக்கல, உன் சொத்துக்காகதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் என உடைப்பது அதிர்ச்சி ., அப்படி யாராவது சொல்வாங்களா? 


 2 மனைவியைக்கொலை செய்யனும்னா அதுக்கான காரணம் நம்பற மாதிரி இல்லை . இவர் பண்றதை எல்லாம் பொறுத்துக்கறார் , கேட்கும்போதெல்லாம் பணம் தர்றார். பின் எதுக்கு கொலை? ஹீரோவுக்கு வேற ஒரு இல்லீகல் காண்டாக்ட இருந்தாலோ அல்லது அதுக்கு மனைவி இடைஞ்சலா இருந்தாலோ கொலை பண்ணுவதில் அர்த்தம் இருக்கு  3 கொலையாளி ஹீரோயினைக்கொலை செய்யும் முன் கர்ச்சீப்பில் மயக்கமருந்தை வைத்து அழுத்தி மயங்கிய பின் கொலை செய்வதுதான் சேஃப்டி . எதுக்கு ரிஸ்க் ஆன அந்த முடிவு ., நாயகி ஒல்லியா இருந்தாக்கூட தேவலை  சரீர பலம் உள்ள ஆளைக்கொலை செய்வது ரிஸ்க் ஆச்சே? 


 4 கொலையாளி + ஹீரோ பிளான்படி செய்யாமல் சாவியை எடுத்த இடத்துலயே ஏன் வைத்தான்? என்பதற்கு பதில் இல்லை


 5 திருமணம் ஆன பெண்ணுக்கு கடிதம் எழுதும் காதலன் வீட்டு அட்ரசுக்கே அனுப்புவது ஏன்? புருஷன் கைல சிக்கிடுமே என்ற பயம் இல்லையா? சிங்கப்பூரில் இருந்து கடிதம் அனுப்புபவர் தன் நண்பனுக்கு / தோழிக்கு அனுப்பி நாயகியிடம் சேர்ப்பிக்குமாறு சொல்வதுதானே சேஃப்டி ?

6 காதலன் லெட்டரை நாயகி படிக்கும்போது கணவன் அது என்ன என கேட்பது, நாயகி அதுக்கு ஒண்ணுமில்ல என சமாளிப்பது, அடுத்த நிமிசமே குளிக்கப்போவது, கடிதம் உள்ள ஹேண்ட்பேக்கை பாத்ரூம் எடுத்துப்போக முயல்வது , அதுக்கு கணவன் பாத்ரூம்க்கு ஏன் ஹேண்ட் பேக் என கேட்ட்தும் அங்கேயே விட்டுப்போவது , அதை கணவன் படித்துப்பார்ப்பது எல்லாமே நாடகத்தனம். நம்பற மாதிரியே இல்லை 


 7 மனைவிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதும் கணவன் கொஞ்ச நாட்கள் சோகமாக இருப்பது போல் நடிக்க மாட்டானா? போலீஸ் கண்காணிக்கும் என்பது தெரியாமல் மடத்தனமாக பெண்ணுடன் சுற்றுவது , ஃபாரீன் டூர் போக டிக்கெட் புக் பண்ணுவது இதெல்லாம் தனக்குத்தானே வைக்கும் ஆப்பு என தெரியாதா?


 8 ஹீரோ தான் எல்லாத்துக்கும் காரணம் என போலீஸ் ஆஃபீசர் கண்டுபிடித்த பின் ஹீரோ அந்த சாவியை எடுக்கும்போது அதை ஃபோட்டோ எடுத்துக்கொண்டு ஆதாரமாக வைப்பது நகைக்க வைக்கிறது


 9 பொதுவா வீட்டு சாவியை கீ செயின்ல மாட்டிதான் வைத்திருப்பாங்க. ஹீரோ , ஹீரோயின் இருவருமே கீ செயின் இல்லாத வெறும் ஒற்றை சாவியை வைத்திருப்பது நம்ப முடியலைன்னா கொலையாளியின் வீட்டு சாவியும் , இந்த சாவியும் ஒரே மாதிரி இருப்பதும் , அதுவும் கீ செயின் இல்லாமல் மாறுவது,ம் நம்ப முடியல


 10 விடிந்தால் தூக்கு என்ற நிலையில் இருக்கும் நாயகி அதுக்கு முந்தின நாள் வீட்டுக்கு வருவது எப்படி? பரோல்ல விட மாட்டாங்களே?

 சி.பி கமெண்ட் - சில பல லாஜிக் சொதப்பல்கள் இருந்தாலும் கவனிக்க வைக்கும் ஒரு க்ரைம் த்ரில்லர் தான் . 2 மணி நேரம் 20 நிமிடம் ஓடும் இந்தப்படத்தை 3 மொக்கைப்பாட்டு , கல்லாப்பெட்டி சிங்காரம் – காந்திமதி காமெடி டிராக், 2 ஃபைட் இவற்றை வேகமா ஓட விட்டுட்டுப்பார்த்தா ஒன்றரை மணி நேரம் தான் படம், ஒரிஜினல் படமும் அவ்ளோ நேரம் தான் போல . ரேட்டிங் 2.75 / 5


Saavi
Saavi 1985.jpg
Title card
Directed byKarthik Raghunath
Produced byJ. Ravi
Written byKarthik Raghunath
Screenplay byKarthik Raghunath
Based onDial M for Murder
by Alfred Hitchcock
StarringSathyaraj
Saritha
Nizhalgal Ravi
Jaishankar
Music byGangai Amaran
CinematographyAshok Choudhary
Edited byS. A. Murugesan
Production
company
AVM Studios
Prasad – Venus Studios
Distributed byMaruthi Movie Arts
Release date
8 October 1985
Running time
125 Mins
CountryIndia
LanguageTamil
Box office2 crore

0 comments: