Sunday, September 15, 2013

எம் சசிகுமார் மேல் பொறாமைப்பட்டாரா? அமீர்?

யாசகன் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குனர் அமீர் சில விஷயங்களை மனம்விட்டு பேசினார். அவர் பேசியதாவது: நான், பாலா, சசிகுமார்னு ஒரு செட்டு. மதுரை அலங்கார் தியேட்டர்ல படம் பார்த்துட்டு நாமும் படம் எடுப்போம்னு கிளம்பி வந்தோம். பாலா, பாலுமகேந்திரா சார்கிட்ட தொழில் கத்துக்கிட்டார். நான் பாலாகிட்ட கத்துக்கிட்டேன். என்கிட்டேருந்து சசி கத்துக்கிட்டார். இப்போ அவர்கிட்டேருந்து எஸ்.ஆர்.பிரபாகரன் வந்து சுந்தரபாண்டியன் பண்ணினார். இப்போ துரைவாணன் யாசகன் பண்ணியிருக்கார். இது தவிர சமுத்திரகனி, சீனு ராமசாமின்னு எங்க குடும்பம் பெருசா ஆகிக்கிட்டிருக்கு.

மதுரையிலேருந்து நாங்க ஒண்ணா வந்தாலும் வெளியில நினைக்கிற மாதிரி ஒண்ணா இல்லை. பங்ஷன்ல, நேர்ல பார்த்தா ஒரு ஹலோ சொல்லிக்குவோம். மற்றபடி அவுங்கவுங்க வேலைய பார்க்க கிளம்பிருவோம். ஒண்ணாவே திரிஞ்சா உருப்படாம போயிருப்போம். சசிகுமார் நடிக்க வந்தப்போ சினிமாவுக்கு ஒரு டி.ராஜேந்தர் போதும் நீயுமாடான்னு கிண்டல் பண்ணியிருக்கேன். இன்னிக்கு அவன் நடிக்குறதுக்கு வாங்குற சம்பளத்தை கேட்டா மயக்கம் வருது. பாலா படத்துல நடிக்கிற அளவுக்கு வளர்ந்திருக்கான். நான் கால்ஷீட் கேட்டாகூட தருவானோ மாட்டானோ தெரியல. இப்படி ஒருத்தரை ஒருத்தர் தூரத்துல இருந்துதான் பார்த்துக்கிறோமே தவிர மற்றவங்க நினைக்கிறமாதிரி தினமும் சந்திக்கிறதில்லை. போன்கூட பண்ணிக்கிறதில்லைங்றதுதான் உண்மை. ஆளாளுக்கு தனி ரூட்டுல போறோம், ஜெயிக்கணும்னு வேண்டிக்கிறோம்.

இவ்வாறு அமீர் பேசினார்.


எம்ஜிஆர்தான் எனக்கு தலைவர் என்று டைரக்டர் அமீர் கூறினார். சமீபத்தில் நடந்த ஆடியோ விழா ஒன்றில் பங்கேற்ற அமீர் பேசுகையில், இது இசை வெளியீட்டு விழா மாதிரி தெரியவில்லை. ஒரு மாநாடு மாதிரி இருக்கிறது. ஒரு பாடல் வெளியீட்டு விழா, மாநாடு மாதிரி நடப்பதை பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. தொழிலாளர்களே இந்த படத்தின் பாடல்களை வெளியிடப் போகிறார்கள் என்று தகவல் அறிந்ததும் நானும், ஜனநாதனும் விழாவில் கலந்து கொண்டோம். தொழிலாளர்களை நேசிக்க வேண்டும் என்ற சிந்தனை, மக்களை நேசிப்பவர்களுக்கு மட்டுமே வரும். எனக்கு தலைவர் என்றால் அது எம்.ஜி.ஆர்.தான். அவர், தலைவன் என்ற படத்தில் நடித்தார். இப்போது விஜய், தலைவா என்று ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மூன்றாவது தலைவனாக இப்போது பாஸ் வந்திருக்கிறார். அவர் எதை நினைத்து சினிமாவுக்கு வந்திருக்கிறாரோ, அது நிறைவேற வாழ்த்துகிறேன், என்றார்.


பேரன்பு கொண்டவர்களுக்காக தாடி எடுத்த அமீர்

Ameer takes beard for peranbu konda periyorgale
 ‘‘யோகி’’ படத்தில் ஹீரோவாக நடித்த அமீர் அதன்பிறகு கன்னித்தீவு பொண்ணா கட்டழகு கண்ணா பாட்டுக்கு ஆடினார். இப்போது மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். ‘‘கொள்ளைக்காரன்’’ படத்தை இயக்கிய சந்திரன் அடுத்து இயக்கும் ‘‘பேரன்பு கொண்ட பெரியோர்களே’’ படத்தில் அமீர் ஹீரோ. அவருக்கு ஜோடியாக நடிப்பவர் தற்போது 555 படத்தில் பரத்க்கு ஜோடியாக நடிக்கும் மிருத்திகா. ‘ஆடுகளம்’ நரேன் வில்லன். எப்போதும் தாடியுடன் காட்சி தரும் அமீர், ‘‘பேரன்பு கொண்ட பெரியவர்களுக்காக’’ தாடியை எடுத்துவிட்டார். "நடுத்தர வயது அமீருக்கும் இளம் பெண் மிருத்திகாவுக்கும் வரும் காதலும் அந்த காதலால் வரும் குழப்பமும், அந்த குழப்பத்தை தீர்க்க உதவும் காட்சிகளும் காமெடியாக இருக்கும். அமீர் அண்ணனுக்கு இந்தப் படம் பெரிய டர்னிங்பாயிண்டா இருக்கும்" என்கிறார் இயக்குனர் சந்திரன்.


அமீர் ஹீரோவாக நடிக்கும் பேரன்பு கொண்ட பெரியோர்களே...!
3

Director Ameers next hero subject
யோகி படத்திற்கு பிறகு டைரக்டர் அமீர், மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அப்படத்திற்கு "பேரன்பு கொண்ட பெரியோர்களே" என்று பெயர் வைத்துள்ளனர். "மெளனம் பேசியதே"-வில் தொடங்கி "ஆதிபகவன்" படம் வரை தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் டைரக்டர் அமீர். இயக்குனராக மட்டுமல்லாமல் "யோகி" படத்தில் ஹீரோவாகவும், மிஸ்கினின், "யுத்தம் செய்" படத்தில் கன்னித்தீவு பொண்ணா... என்று பாட்டுக்கு நடனம் ஆடியும் அசத்தினார். டைரக்டர், பெப்சி சங்க தலைவர் என்று பிஸியாக இருக்கும் அமீர், சமீபத்தில் நடந்த இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக சினிமாவில் கவனம் செலுத்த உள்ளார்.

உதவி இயக்குனராக இருக்கும் ஆதம்பாவா என்பவரது தயாரிப்பில், சந்திரன் என்பவர் இயக்கும் "பேரன்பு கொண்ட பெரியோர்களே" படத்தில், அமீர் ஹீரோவாக நடிக்க போகிறார். இப்படம் அரசியல் கலந்த காமெடி படமாக உருவாக இருக்கிறது. படத்தில் அமீருக்கு ஜோடியாக "555"-ல் நடித்துள்ள மிருத்திகா நடிக்க இருக்கிறார். விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் மதுரையில் ஆரம்பமாக இருக்கிறது


நன்றி - தினமலர்

2014 ஆம் ஆண்டின் இந்தியப்பிரதமர் மோடியின் அரியானா - ரிவாரி உரை



ரிவாரி: அரியானா மாநிலம் ரிவாரியில் நடந்த பொதுக் கூட்டத்தில் மோடி முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்வதாக மேடையில் விழுந்து வணங்கி மரியாதை செலுத்தினார். இந்த இந்நேரத்தில் பலத்த கரகோஷமும், வாழ்த்துக்களும் தொண்டர்கள் எழுப்பினர். இந்த காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது. 


தொடர்ந்து பா.ஜ., பிரதம வேட்பாளர் மோடி பேசுகையில்: இந்திய ராணுவ வீரர்கள் இந்த நாட்டை காத்து வருகின்றனர். அவர்களின் வீர, தீரம் போற்றுதலுக்குரியது. நீண்ட நாட்களுக்கு பின்னர் நான் ராணுவ வீரர்களுடன் இருப்பது பெருமையாக கருதுகிறேன். இவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்க கடமை பட்டுள்ளோம். அக்னி 5 இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. மகிழச்சியான செய்தியை தந்த விஞ்ஞானிகளை பாராட்டுகிறேன். 2 நாட்களுக்கு முன்னர் என்னை பிரதம வேட்பாளராக அறிவித்துள்ளது எனது வாழ்நாளில் கிடைத்த பெரும் பாக்கியம். இந்த அறிவிப்பு வந்த பின்னர் உங்கள் மத்தியில் பேசுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.


‘ நான் ஏழை குடும்பத்தில் பிறந்தவன் ’-




நான் மிக ஏழை குடும்பத்தில் பிறந்து வந்தவன். நான் பணம் சேமித்து வைத்து சைனிக் பள்ளி புத்தகங்கள் வாங்கியவன். எனது தந்தையிடம் பணம் கேட்ட போது அவர் தர மறுத்து விட்டார். நான் சிறுவனாக இருந்தபோது ராணுவ பள்ளியில் சேர்வதற்கான விளம்பரம் பார்த்தேன். இங்கு குறிப்பேடு வாங்குவதற்கு என்னிடம் பணம் இல்லை. 2 ரூபாய் கூட என்னிம் இல்லாமல் இருந்தது. நான் பணம் சேமித்து வைத்து வாங்கினேன். நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். ராணுவ வீரர்களுக்கு உணவு பரிமாறுவேன்.நான் சிறுவனாக இருந்தபோது எனது தந்தைக்கு தெரியாமல் எல்லைப்பகுதிக்கு சென்று ராணுவ வீரர்களுடன் இருந்துள்ளேன். இவர்களுக்கு நான் டீ மற்றும் உணவு பரிமாறுவேன். இது போன்று பல நாட்கள் இவ்வாறு செய்துள்ளேன்.



ராணுவ வீரர்களுடன் தீபாவளி :




குஜராத்தில் நில நடுக்கம் ஏற்பட்ட போது ராணுவ வீரர்கள் சேவை பெரும் பங்கு வகித்தது. இவர்கள் உயிருக்கு போராடியவர்களை இடிபாடுகளில் இருந்து காப்பாற்றினர். இந்திய - பாக்., எல்லையில் தாக்குதல் நடந்த போது நமது வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் நமது பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி , இது பாக்., படையினர் அல்ல. பாக்., ராணுவ சீருடையில்தான் பயங்கரவாதிகள் வந்தனர் என்கிறார். பீகாரை சேர்ந்த அமைச்சர் ஒருவர் சாவதற்குத்தான் நாம் ராணுவத்தில் சேருகிறோம் என்கிறார். நக்சல் மற்றும் பயங்கரவாதிகளால் நமது ராணுவ வீரர்களை இழந்து விட்டோம். ராணுவ வீரர்கள் அருமை நமது தலைவர்களுக்கு தெரியாமல் போய் விட்டது. நான் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போது எல்லைக்கு போய் தீபாவளியை கொண்டாடுவேன் , வரும் தீபாவளியையும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவேன். 



வாஜ்பாய், அத்வானிக்கு பாராட்டு :




சீனா நமது எல்லையை பிடித்து ஆக்கிரமித்துள்ளது . அருணாசல பிரதேசத்தை பிடிக்க சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஊடுருவல் தொடர்ந்து நடக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் திறமையற்ற காரணத்தினால் தொடர்ந்து சீனாவும், பாகிஸ்தானும் நம்மிடம் வாலாட்டி வருகிறது. சீனா, பாகிஸ்தான் எல்லையில் பிரச்னை வருவது மத்திய அரசின் கையாலாகாத்தனமே . கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவை ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசு எல்லா வகையிலும் அழிவு பாதைக்கு கொண்டு சென்றுள்ளது. வாஜ்பாயும், அத்வானியும் வெளிநாட்டு விவகாரங்களில் திறம்பட தெளிவான முடிவு எடுத்தனர். பயங்கரவாதம் அழிப்பதிலும், வளர்ச்சி பணிகள் காண்பதிலும், உலக அமைதிக்கும், நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.



பாகிஸ்தானுக்கு அறிவுரை :




பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க கூடாது. இந்த போக்கை கைவிட வேண்டும் . இந்தியாவிற்கு எதிரான செயல்களில் ஈடுபட வேண்டாம். இது ஏழை மக்களுக்கு பயன் தராது. கல்வி அறிவை வளர்க்க, வறுமையை ஒழிக்க பாகிஸ்தான் பாடுபடட்டும். 



ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி:




வளமான இந்தியா, பலமான ராணுவம் உருவாக வேண்டும் என நாங்கள் கனவு காண்கிறோம். நமது ராணுவமே மதச்சார்பற்ற தன்மையின் அடையாளம். நமது பட்ஜெட்டில் அதிக பணம் ராணுவத்திற்கு செலவிடப்படுகிறது. இது குறிப்பாக சிறிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அதிகம் செலவழிக்கிறோம். அயல்நாடுகளுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர வேண்டும். குஜராத்தில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை துவக்கியிருக்கிறோம். ராணுவத்தினருக்கான பென்சன் கொள்கை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 


இந்த நாட்டிற்கு அரும்பாடுபட்ட சர்தார் வல்லபாய் பட்டேலை அரசு மறந்து விட்டது. சர்தாருக்கு ஒவ்வொரு கிராமம் தோறும் சிலைகள் நிறுவப்பட வேண்டும். இங்கே கூடியிருக்கும் கூட்டம் போல் இதுவரை நான் பார்த்ததில்லை. எதிர்காலத்தில் நல்ல மாற்றம் நிகழப்போவது உறுதி. பாரத் மாதாக்கி ஜெ., பாரத் மாதாக்கி ஜெ., வந்தே, வந்தே என உரத்த குரலில் பேசி தனது உரையை மோடி நிறைவு செய்தார். 

50 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினர்: பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதன் முதலாக பங்கேற்கும் பொதுக்ககூட்டம் என்பதால் மோடி இன்று என்ன பேசப்போகிறார் என்ற பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் இந்திய ராணுவ தளபதி வி.கே. சிங் மற்றும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்றனர். வி.கே.,சிங் பங்கேற்றது வரும் காலத்தில் பாஜ.,வுக்கு நாடு முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது.

பா.ஜ., தேர்தல் பிரசார குழு தலைவராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் மோடி இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் நடக்கும் பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசி வருகிறார். இதுவரை ஜெய்ப்பூர், ஐதராபாத், ராய்ப்பூர், உள்ளிட்ட நகரங்களில் தொண்டர்கள் கூட்டம் அதிகம் இருந்தது.




மென் போக்கு எடுபடாது: வி.கே., சிங்:




இன்றைய கூட்டத் துவக்கத்தில் பேசிய முன்னாள் ராணுவ தளபதி வி.கே., சிங் கூறியதாவது: நமது இந்திய ராணுவம் பலமாக இருக்க வேண்டும். ராணுவத்தினர் இருப்பதால் தான் நமது நாட்டு மக்கள் நிம்மதியாக தூங்க முடிகிறது. நமது ராணுவத்தினர் பலர் இந்த நாட்டிற்கு உயிர்த்தியாகம் செய்துள்ளனர். இவர்களை நாம் இப்போது நினைந்து பார்த்து அவர்களுக்கு சில நிமிடங்கள் மரியாதை செலுத்துவோம். சீன படையினரை விரட்டியடித்த பெருமை இந்த அரியானா மாநில ராணுவத்தினருக்கு உண்டு.


 நமது ராணுவம் இன்னும் பலப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். தற்போதைய சூழலில் முன்னாள் ராணுவ வீரர்களும் பயன்படுத்தப்பட வேண்டிய நேரத்தில் இருக்கிறோம். நமது படை பலவீனமானது அல்ல. ஆனால் நம்மை பலவீனப்படுத்த காரணமாக இருந்தவர்களை தூக்கி எறிய வேண்டும். அயல் நாட்டு விவகாரத்தில் நாம் இன்னும் மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறோம் . இதன் காரணமாக எல்லை பகுதியில் ஊடுருல், மீறல்கள் அதிகரித்து வருகிறது.


thanx - dinamalar

Saturday, September 14, 2013

SUPER - சினிமா விமர்சனம் ( அனுஷ்கா வின் தெலுங்குப்படம் )

ஹீரோ ஒரு  கார் மெக்கனிக், ஹீரோயின்  ஜின்ஸ் பேண்ட் டி சர்ட் ( ஸ்லீவ்லெஸ்) போட்ட நவீன டாக்டர்.அண்ணனோட மெக்கானிக் ஷாப்க்கு அண்ணி ஒரு டைம் வர்றாங்க. ஹீரோக்கு அவரை  கண்டதும் காதல்.அவர் ஹாஸ்பிடலில் இருக்கும் அனைவர் காருக்கும் இலவச சர்வீஸ்ங்கறார். ஹீரோயின்  உடனே  போட்டிக்கு  எங்க ஹாஸ்பிடலில் உங்க பணியாளர்கள் அனைவருக்கும்  இலவச சிகிச்சைங்கறார். ஆஹா ! லவ் பண்ணினா  ஒரு டாக்டரைத்தான் லவ்வனும் போல்.  இவங்க காதல் வளரும்போது ஹீரோயினின் வளர்ப்பு அண்ணன் (!!) மூலம் சிக்கல் . 


அவருக்கும்  ஹீரோக்கும் ஆரம்பத்துலயே சண்டை . அக்னிநட்சத்திரம் கார்த்திக் - பிரபு மாதிரி  , அழகிரி -ஸ்டாலின் மாதிரி  முறைச்சுக்கறாங்க . அது ஏன்? அதுக்கு  ஒரு ஃபிளாஸ் பேக்

 ஹீரோயினோட வளர்ப்பு அண்ணனுக்கு நிஜமாவே  ஒரு தங்கச்சி . அது  ஹீரோவை லவ்வுது . திருப்பதி லட்டு மாதிரி  இருக்கும் அனுஷ்காவை ஹீரோவுக்கு  பிடிக்கலை . அவர் எம் ஜி ஆர் கணக்கா  ஹீரோயினை தோழியா மட்டும் ஏத்துக்கிட்டு கட்டிப்பிடித்தல்  , தடவுதல் , இடையை கிள்ளுதல் முதற்கொண்டு என்ன என்ன  மொள்ள மாரித்தனம் எல்லாம் பண்ண முடியுமோ அதை எல்லாம் பண்ணிட்டு காதல் , கல்யாணம் மட்டும் வேணாம்னு சொல்றார்.நல்லவேளை   தங்கச்சின்னு சொல்லலை . 




 ஒரு கட்டத்துல விழாமேடைல   ஓப்பனா  ஒரு ஸ்டேட்மெண்ட் விடறார். இன்னைக்கு  நைட்க்குள்ளே என்னை லவ்வலைன்னா நான் தற்கொலை பண்ணிக்குவேன் அப்டினு. அதை  ஹீரோ  சீரியசா எடுத்துக்கலை .


ஆனா   அனுஷ்கா சொல்பேச்சு மாறாம செத்துக்கிடக்கார் . அவர் சாவுக்கு ஹீரோதான் காரணம்னு  இவர் நினைக்கறார். அதான் பிரச்சனை . 

படத்துல பயங்கரமான  ட்விஸ்ட் 1 . அனுஷ்கா கொலை செய்யப்பட்டிருக்கார் , யார் எதுக்காக செஞ்சார் என்பது வெண் திரையில்  காண்க 


அமலாவோட ஆத்மார்த்த நாயகன் நாகார்ஜூன்  தான்  ஹீரோ .ஃபங்க்  தலை  , ஷேவ் செய்யாத  தாடி அப்டினு  கேவலமா வர்றார்.அவரை  ப்போய் 2  ஹீரோயின்களும்  விழுந்து  விழுந்து லவ்வுதேன்னு ஆடியன்சுக்கு செம வயித்தெரிச்சல் ( இங்கே ஆடியன்ஸ் = சி பி எஸ்) 


இவர்  கூட 2 டூயட்  , அவர்  கூட ஒரு டூயட்  , 2  ஃபைட் அவ்வ்ளவுதான்  ஹீரோ வேலை 


ஆயிஷா டாக்கியா தான்   ஹீரோயின் . டாக்டரா வர்றவர் டிரஸ்ஸிங்க் சென்ஸ் எப்படி இருக்கனும்னு கத்துக்கிட்டு நடிச்சிருக்கலாம் . அட்லீஸ்ட்   இயக்குநராவது  கவனம் செலுத்தி  இருக்கலாம் . ஒரே தாராள மயம் தான் . சி செண்ட்டர் ரசிகர்களுக்கு  கொண்டாட்டம் தான் 


அனுஷ்கா தான்  2 வது நாயகி . ஒரு டூயட்  , அது போக  17 நிமிஷம் வர்றார் . அவ்வளவுதான். மத்தபடி  இவர்  கிட்டே பெருசா எதிர்பார்க்க  முடியாது 


பூரி ஜெகன்னாத்தின் ஃபேவரைட் காமெடியன் பிரம்மானந்தம்  20 நிமிடங்கள் வந்தாலும்   சிரிக்க வைக்கிறார். 


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. படத்துக்கு  டைட்டில் செலக்‌ஷன் ஆஹா. எல்லா மொழியிலும் ஒரே டைட்டிலே வெச்சுக்கலாம் . படம்  சூப்பர்னு டைட்டிலைச்சொன்னாக்கூட ரிசல்ட்டைத்தான் சொல்றாங்கன்னு  நினைச்சுக்குவாங்க 



2. சும்மா கெஸ்ட் ரோலில் வரும் அஸ்கா அனுஷ்கா வை மெயின் ஹீரோயின்  மாதிரி பில்டப் கொடுத்து  போஸ்டர்களில் , ஸ்டில்களில்   பயன் படுத்தி படத்துக்கு மார்க்கெட் வால்யூ கொடுத்தது 


3. படத்துல என்ன கதைன்னு  ரசிகர்களை  யோசிக்கவே விடாம பட படன்னு காட்சிகளை நகர்த்தியது 


4. இன்னொரு  ஹீரோவாக வரும் சோனு வை நாகார்ஜூனை விட  இளமையாக , அழகாக காட்டிய  தைரியம் ( நம்மூர்ல இப்படி காட்ட விட மாட்டாங்க ) 


5. பேங்க் ஏடி எம்  திருடனை பார்த்த வன் ஓவியன்   அதை  வரைய வைப்பவர் பிரம்மான்ந்தம் என்ற காமெடி டிராக் நல்லா  ஒர்க் அவுட் ஆகி இருப்பது . சாயாஜி ஷிண்டே  இமேஜ் பார்க்காமல் காம்டியில் கலக்கியது 



இயக்குநரிடம்  சில  கேள்விகள் 


1.  இரண்டு  ஹீரோக்களும் ஏன்  கொள்ளைக்காரர்கள் ஆகறாங்க என்பதற்கு சொன்ன  காரணம்  ரொம்ப  கற்பனை வறட்சி . ஒரு  டைம் அனுஷ்காவுக்கு வயித்து வலி வருது . சும்மா வெந்தயத்தை கரைச்சுக்குடுத்தா சரி ஆகி இருக்கும் . அதுக்குப்போய்   ஹாஸ்பிடல் செலவுக்கு காசு இல்லைன்னு யாராவது  கொள்ளை அடிப்பாங்களா? ஆளாளுக்கு இப்படி  கொள்ளை அடிக்க ஆரம்பிச்சுட்டா  கலைஞர், ஆ ராசா மாதிரி பெரிய மனுஷங்க என்னதான் செய்வாங்க  ? தொழில் போட்டி வந்துடாது? 


2.  ஏ டி எம்  மிஷினை கொள்ளை அடிக்கும் ஆரம்பக்காட்சியில் அத்தனை களேபரங்கள் , பல போலீஸ் ஆஃபீசரை சுடுதல்  , தாக்குதல்க்குப்பின் அவ்ர்கள் கொள்ளை அடிப்பது பிசாத்து   2 லட்சம் ரூபாய்  தானா? ஏ டி எம்  மிஷின்ல அவ்வளவுதான்  இருக்குமா? உள்ளத்தை அள்ளித்தா வேன் எல்லாம் வெச்சுக்கடத்தி  இருக்கோம் காமெடி தான் நினைவுக்கு வருது 


3. பேங்க்கில் கொள்ளையர்கள் வந்ததும் ஒரு லேடி ஸ்டாஃப் போலீஸ்க்கு ஃபோன் பண்ணி மாட்டிக்கறா. அவ சாதாரணமா எஸ் எம் எஸ் அனுப்பி  இருக்கலாமே? 


4. பேங்க் ல கொள்ளை அடிக்க  ஹீரோக்கள் 2 பேர் , ஹீரோயின் 1 ஆக  மொத்தம் 3 பேர்  3 வெ்வ்வேற  பைக்ல போறாங்க . ட்ரிபில்ஸ் போய் இருக்கலாம் , அல்லது  2 பைக் போதுமே?  நாட்டுல பெட்ரோல் விலை என்ன ரேட்டுக்கு  விக்குது ? 


5. ஹீரோ & கோ  வை போலீஸ்கள்  13 பேர் பார்க்கறாங்க ., எல்லார் கைலயும் கன்  இருக்கு , ஆனா  சுடாம  வரிசைல வந்து  ஒவ்வொரு ஆளா  ஃபைட்  போட்டுட்டு இருக்காங்க ? 



6.  அனுஷ்கா  ஹீரோவுக்கு ஒரு டைம்  கால் பண்றார் . அப்போ  ஹீரோ அட்டெண்ட்  பண்ணாம ஃபோனை கட் பண்றார் . உடனே   ஹீரோயின்   டயல்டு கால் ல போய்  ரி டயல் பண்ணா போதாதா?  எதுக்கு பேக்கு மாதிரி இன்னொரு டைம்,  10 டிஜிட்டையும் டைப் பண்ணுது ( இந்த   தப்பை நல்லா   நோட் பண்ணுங்க   , எல்லா  சினிமாலயும்  வருது ) 


7. அனுஷ்கா தற்கொலை செஞ்சார் , போஸ்ட் மார்ட்டம்  ரிப்போர்ட் ல  பலரோட   கை ரேகை பதிஞ்சிருக்கு  தகவல் வந்திருக்குமே?  ஏன் அதை யாரும்    நோட் பண்ணலை ? 


8. அனுஷ்கா   ஹீரோ  கிட்டே தன் லவ்வை சொல்றார் . அவர் ஏத்துக்கலை . ஒண்ணா   அவர் விலகிப்போகனும் . அல்லது  கொஞ்சனும் , அதை விட்டுட்டு என்னமோ லவ்வர்ஸ் விளையாடற மாதிரி  இப்போ நான்  என் டிரஸ் எல்லாம்  ரிமூவ் பண்றேன் , நீ உன்  டிரஸ் எல்லாம் கழட்டுங்கறார். இதுனால காதல்  வந்துடுமா?  ஏதோ   காட்சி  கிளுகிளுப்பா வரனும்க்றதுக்காக காதலை  கொச்சைப்படுத்தலாமா?  ( எங்களுக்கு சீனும்  வேணும் , அது  கண்ணியமா காதலை  கொச்சைப்படுத்தாம  இருக்கனும் ) 


9. வெள்ளி நிலா பாட்டு   ரட்சகன் ல வரும் சந்திரனை தொப்ட்டது யார் பாட்டின்  இசை ,  மெட்டு எல்லாத்தையும் அப்பட்டமா  சுட்டு இருக்கு 


10 . காமெடியன்  டிராயிங்க் பண்ணும்போது கைல  பிரஷ் வெச்சிருக்கார் , ஆனா ஓவியம்   ஃபினிஷ் ஆனதும்  காட்டுவது பென்சில்  ஓவியம் தான் 




மனம் கவர்ந்த வசனங்கள்


1. பொண்ணுங்க   விஷயத்துல பசங்க எப்பவும்  வீக் தான் 


2. ஹீரோயின் - எனக்கு  ஃபோர்ட்டபிள்  டி வியே போதும்,  பெருசு வேணாம் 


ஹீரோ - என்னங்க  இப்படிச்சொல்லீட்டீங்க ? சின்னதை வெச்சு என்ன செய்யப்போறீங்க? ( டபுள்  மீனிங்க் ) 


3. அண்னனுக்கு பேக் பெயின் 


ஹீரோயின் - என்ன செஞ்சாரு ?


 எதுவுமே செய்யலை . அதான் பிராப்ளம் . காலா காலத்துல செய்ய வேண்டியதை செஞ்சிருக்கனும் 


4.  டேய் , கஷ்டப்பட்டு சம்பாதிச்சவன்  கூட இப்படி எண்ணிட்டு இருக்க மாட்டான் , கொள்ளை  அடிச்ச பணத்தை எதுக்கு இப்படி  மண்டி போட்டு உக்காந்து எண்ணிட்டு  இருக்கிங்க ? 




ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  39 ( டப்பிங்க் படத்துக்கு விக்டன்ல விமர்சனம் போட மாட்டாங்க ) 



 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்  ஓக்கே

ரேட்டிங் =   2.75 / 5


சி பி கமெண்ட்  - படம்  ஜாலியா போகுது . கண்ணுக்கு  விருந்து  இருக்கு , காமெடி  இருக்கு . ஆனா டி வி ல பார்க்கற அளவு தான் ஒர்த் . நாகார்ஜூன் ,, அனுஷ்கா ரசிகர்கள் மட்டும்  தியேட்டரில் பார்க்கலாம் .இது ஆந்திராவுல  2005 லயே  ரிலீஸ் ஆகி இருக்கு , இங்கே இப்போதான் வருது  போல 



Friday, September 13, 2013

மூடர் கூடம் - சினிமா விமர்சனம்



படிப்பறிவே இல்லாத  3 இளைஞர்கள், படிச்ச  ஒரு ஆள் 4 பேரும்  சந்தர்ப்ப சூழ்நிலையால் திமுக காங்கிரஸ் மாதிரி கூட்டுக்களவாணி ஆகறாங்க , அவங்க கூட இருக்கும்  ஒருத்தனோட சொந்த  மாமா  வீட்லயே கன்னம் வைக்க பிளான் . ஹவுஸ் அரெஸ்ட் மாதிரி  வீட்ல  இருக்கறவங்களை எல்லாம் ஹால் ல உட்கார வெச்சு பணம் எங்கேன்னு தேடறாங்க , கிடைக்கலை .எல்லா சொத்து பத்துக்களையும் வேய்க்கானமா பதுக்கிட்டு வழக்கை சந்திக்க தயார் , ரெய்டுக்கு ரெடின்னு அறிக்கை விடும் அரசியல்வாதி போல் ஆட்டம் காட்டும் மாமா & குரூப் , அவங்களைத்தேடி வரும்  வெளி ஆட்கள் இதை வெச்சு ரெண்டரை மணி நேரம் சிச்சுவேஷன் காமெடி திரைக்கதை அமைச்சிருக்காங்க . பாராட்டத்தக்க  முயற்சி 


டாக்டர் ராஜசேகர் தம்பி செல்வா நடிச்சு சில வருடங்களுக்கு  முன் வந்த  கோல்மால் படக்கதையை பட்டி டிங்கரிங்க் பண்ணி கொஞ்சம் ஆங்காங்கே செண்ட்டிமெண்ட் டச் வெச்சு  காமெடி மெலோ  டிராமா ஆக்கி இருக்காங்க அந்தப்படமே  ஒரு ஹிந்திப்படத்தோட  ரீமேக் தான் .. கமல் -கிரேசி மோகன் காம்பினேஷன்ல வந்திருந்தா செம கலக்கு கலக்கி இருக்கலாம் 


நவீன் தான்  ஹீரோ , இயக்கம் , தயாரிப்பு  எல்லாம் . படிச்ச கம்ப்யூட்டர் இளைஞன் மாதிரி கன கச்சிதமான தோற்றம் . முக பாவனைகள் கை கொடுக்காட்டியும்  திரைக்கதை காப்பாத்திடுது




சென்றாயன் தான் 4 பேரில் கவனம் கவர்பவர் . மனுஷன் கலக்கிட்டார் . நல்ல வாய்ப்பு  கிடைச்சா  இவர் முன்னணி காமெடி  கம் குணச்சித்திர நடிகர் ஆவது  உறுதி 


நாயகி  ஓவியா. ஷாக் சர்ப்பரைஸ் . அதிக டிரஸ் சேஞ்ச் பண்ணவெல்லாம் வாய்ப்பில்லை . திரைக்கதைப்படி ஒரே  ஹாலில்  கதை பயணிப்பதால் படம் பூரா  ஒரே மாடர்ன் டிரசில் வர வேண்டிய சூழல். தன் பங்குக்கு  சிரசாசனம் செய்து  ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி  செய்கிறார் 


ஜெயப்ரகாஷ் உட்பட படத்தில்  வரும் அனைத்து கேரக்டர்களும்  கதையின் சிச்சுவேஷன்  காமெடித்தன்மையை உணர்ந்து கலக்கி இருக்கிறார்கள் .  வெல்டன் 


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 
 
 
 
1. படத்தோட  ஓப்பனிங்க்லயே கதைக்கு நேரடியா வந்தது . படத்தில் வரும் 4 இளைஞர்களுக்கும் டக் டக்னு ஒரு ஃபிளாஷ் பேக்  கொடுத்து   அதை அதிமுக அமைச்சர் பதவி காலகட்டம்  மாதிரி டக்னு சின்ன போர்ஷன்ல முடிச்சது . யாரும்  மொக்கை காமெடி என அசால்டா சொல்லிட  முடியாத படி ஆங்காங்கே செண்ட்டிமெண்ட் டச் பண்ணியது 
 
 
 
2. அந்த பொடிப்பையன் , வாண்டு தங்கச்சி சோ க்யூட் . முட்டாள்ப்பையன்னு அடிக்கடி  திட்டும் அப்பாவை சான்ஸ் கிடைச்சதும்  மிரட்டும்  இடத்தில் பையன் தூள் 
 
 

3.  பின்னணி  இசை எனப்படும் பி ஜி எம் மில்  இசை அமைப்பாளர்  தனி கவனம் செலுத்தி இருக்கிறார். படத்தின்  முதுகெலும்பே   பி ஜி எம் தான் , ஆனால் ஆங்காங்கே  நாடகத்தன இசை



4. கட்டிங்க்  , ஒட்டிங்க் எடிட்டிங்க்  ஒர்க் மிக சிரத்தை எடுத்து பண்ணி இருக்காங்க. சாதாரண பெஞ்ச்  ரசிகனுக்கும்  புரியும் வகையில்  குழப்பம்  இல்லாத  திரைக்கதை , கூடவே அந்த  4 பேருக்குமான ஃபிளாஷ் பேக்


5. ஜெயப்ரகாஷ் ஆபத்தான சூழலில்   ஹவுஸ் அரெஸ்ட் ஆனதும்   மத்தவங்க  ஏமாந்த தருணத்தில்  தன் நண்பனுக்கு  ஃபோன்  செய்வதும் அப்போ அந்தக்குழந்தை ஃபோனை எடுத்து அம்மா , அப்பா 2 பேரும் பாத்ரூம்ல குளிச்சுட்டு  இருக்காங்க , தொந்தரவு பண்ண வேணாம்னு சொல்லி இருக்காங்க என்பது  வெடிச்சிரிப்பு


6.  வில்லன்   ஒரு ஆளை சின்ன பேட்டை கையில்  கொடுத்து பால் அடிச்சுட்டே  இரு , பால் மிஸ் ஆச்சுன்னா உன்னை கொன்னுடுவாங்க என்று  மிரட்டுவதும் அவன்   2 நாட்களா  அப்படியே செய்வதும் , அதை  காட்டியே வந்தவர்களை  மிரட்டி வைப்பதும்  செம காமெடி


7. க்ளைமாக்ஸில்  கூட   ஒரு வெடிச்சிரிப்பு   காமெடி இருக்கு  ,  அருமை



இயக்குநரிடம்  சில  கேள்விகள் 




1,  ஜெயப்ரகாஷ்  கிட்டே செல்  ஃபோன்  கிடைக்குது , அவர் ஃபிரண்டுக்கு ஃபோன் பண்றார்.  அவர் எடுக்கலை , அவர்  ஒருவர் தான் நண்பரா? வேறு யாரையும்  ஏன் அவர்  ட்ரை பண்ணலை? ஃபோன் நெம்பர்  நினைவில்லைனு ஒரு சமாளிஃபிகேஷன் வசனம் வெச்சிருக்காங்க , டைரி , காலண்டர்னு எத்தனை இடத்துல  குறிச்சிருப்போம்? அதுல இருந்து  ட்ரை பண்ணக்கூடாதா? 



2. சரி  , ஃபோன் தான் பண்ண்லை, அட்லீஸ்ட்  நடந்தது என்ன?  என எஸ் எம் எஸ்  கூட வா பண்ண  முடியாது ? 



3. ஜெயப்ரகாஷின்  ஆள் 2 லட்சம்  ரூபாயை என்னமோ  கோடி ரூபா மாதிரி சூட்கேஸ்ல போட்டு கொண்டு வர்றாரு? 1000 ரூபா நோட்டுல 2 கட்டு எடுத்தா பேண்ட் பாக்கெட்லயே போட்டுக்கொண்டு வரலாமே? எதுக்கு  ரிஸ்க்? 



4. என்ன தான் காமெடிக்கு என்றாலும் அந்த காமெடி வில்லனுக்கு இங்க்லீஷ் சுத்தமாய்த்தெரியாது என்பது நம்ப முடியாத பூச்சுற்றல் . மொழிதான்  தெரியாது . அந்த வார்த்தை தலைகீழ் என்பது கூடவா தெரியாது ? பேப்பரில்  எழுதித்தரப்பட்ட ஆங்கில வார்த்தை  தலைகீழாக  இருக்கு என்பது கூடவா தெரியாது ?  




மனம் கவர்ந்த வசனங்கள்


1.தமிழ் தெரியாத இங்க்லீஷ்காரன் கிட்டே தமிழ் பேசுவியா? மாட்டே இல்ல.இங்க்லீஷ் தெரியாத தமிழன் கிட்டே மட்டும் ஏன் பீட்டர் இங்க்லீஷல பேசறே?



2. கோடி ரூபாய்க்கு ஒருத்தன் கடன் வாங்கறான்னா அவனுக்கு கோடிக்கு மேல வருமானம் வரப்போகுதுன்னு தான் அர்த்தம்


3. சீட்டுக்கம்பெனியால யாரும் வாழ்ந்ததா சரித்திரம் இல்ல.சீட்டுக்கம்பெனிதான் வாழ்ந்திருக்கு.மக்கள் இல்ல 



4. எவனோ ஒருத்தன் எழுதி வெச்ச வாழ்க்கையை அப்படியே வாழ்ந்துட்டுப்போக நாம ஒண்ணும் கம்ப்யூட்டர் புரோகிராம் இல்லை


5. ஒருத்தன் எந்த அளவு அதிகமா கடன் வாங்கறானோ அந்த அளவு அதிக பணக்காரனா இருப்பான்.கோடில கடன் வாங்கறவன் கோடீஸ் வரனாதான் இருப்பான்


6. முதல் இரவுல பொண்டாட்டி கிட்டே சொல்லாத ரகசியத்தைக்கூட முத முத தன் கூட தண்ணி அடிக்கிற அறிமுகம் இல்லாத ஆள் கிட்டே சொல்லிடுவான்



7. இலக்கை அடைவதை விட  பயணம் சிறப்பா அமைவதே முக்கியம் - புத்தர்



8. பொழப்பு கெட்டவன் பொண்டாட்டி தலையை சிரைச்சானாம் 


9. மனுஷன் கண்டு பிடிச்சதுலயே சிறந்தது இந்த போதை வஸ்து தான் 


10  எனக்குன்னு  ஒரு ஜாப் எதிக்ஸ்  இருக்கு , இந்த பொம்மை எல்லாம்  திருட முடியாது




11. காரணங்கள் உணர்வுப்பூர்வமா  இருந்தா எவ்ளவ் சின்ன வேலையா  இருந்தாலும்  செய்வேன் 


12., எடுக்கறவன் தான்  திருடன்னு இல்லை , எடுக்க விடாம தடுக்கறவனும் திருடன் தான் 



13. திறமை இருக்கறவன் ஜெயிக்கறான் , இல்லாதவன் தோக்கறான், இதுசர்வைவல்



14. இங்க்லீஷ்ல  நீங்க  திட்டுனா மணக்கும் , தமிழ் ல நாங்க  திட்டுனா கசக்குமா? 



15. தயவு செஞ்சு  போலீசுக்கு மட்டும்  யாரும் போயிடாதீங்க 


 மிரட்டறான், ஆனா அதை நாசூக்கா செய்ய்றான்


16. நான்  எதையும்   திருடலை 

 ஏதாவது  இங்கே  இருந்தாத்தானே  திருடுவே? 



17. நான்  திருடன் தான் , ஆனா சக தொழிலாளி கிட்டே பொய் சொல்ல மாட்டேன் , ஜாப் எதிக்ஸ் 


18.  சாரி , செல் டெட் 

 என்னமோ   ரிலேஷன் டெட்ங்கற மாதிரி அசால்ட்டா சொல்றே? 



19  கற்பகவல்லி எங்கே?

 அவ  அவங்கக்கா மேரேஜ்க்கு போய்ட்டா

 அவளுக்கு அக்காவே  கிடையாதே? 


20 சாரி பாஸ், என் செல்ஃபோன்ல ஒன்லி இன் கமிங்க் , நோ அவுட் கோயிங்க் , ஜாப் எதிக்ஸ் 



21. ஒரு பொட்டலம் கஞ்சா 400 ரூபாயா? உங்கள கேக்க ஆளே இல்லையா?'


 'ரெண்டா ரூவா வித்த டீ இப்ப ஆறு ரூவா. அத கேக்கவே ஆள் இல்ல. இத 

யாரு கேப்பா?


22. இந்த நேரம் பாத்து எல்லைக்கு அப்பால தொடர்புல இருக்கானே


23  'ஒண்ணுக்கைக்கூட கன்ட்ரோல் பண்ணத் தெரியாதவன், ஒரு 

ஏரியாவையே எப்படிடா கன்ட்ரோல் பண்ணுவான்?’,


24.  'சுடுறதுக்குத்தான்டா துப்பாக்கி வேணும். சுட மாட்டேன்னு 

 சொல்றதுக்குக்கூடவா துப்பாக்கி வேணும்?’,


 25. 'இப்போ உங்களை யாரும் ஹீரோன்னு சொன்னாங்களா பாஸ்?



26. , 'வழி நம்ம முன்னாடிதான் இருக்கு... நாமதான் நடக்கணும்!’ 


27 நூறு மாம்பழம் இருக்கிற ஒரு மாமரத்துக்கு கீழ நூறு பேர் பசியோட நின்னா..அங்க ஆளுக்கு ஒரு பழம்கிறது இயற்கையோட நியதி..ஆனா அந்த நூறு பேர்ல உங்கள மாதிரி திறமையும்,பலமும் இருக்கிற அஞ்சு பேர் ஆளுக்கு அஞ்சு பேர் அஞ்சு பழம் எடுத்துட்டாங்கன்னா..இருபது பேர்க்கு பழம் இல்லாம பசியில வாடி..பிச்ச கேட்டு நிப்பாங்க..இப்ப அதிகமா பழம் வச்சிருக்கவன் அஞ்சு பழத்தை விதைச்சி,அஞ்சு மரத்தை வளர்க்க சொல்லி கட்டளை இட்டு ,அது ஒன்னொன்னும் நூறு மாங்கா காய்க்கும் பொழுது ,பசியோட இருக்கறவனுக்கு கூலியா ஒரு மாம்பழத்தை எடுத்துக் கொடுப்பான்..
இதான் இங்க நடக்குறது...ஒருத்தன்கிட்ட இருந்து எடுக்குறது மட்டுமில்ல திருட்டுத்தனம்..இன்னொருத்தன எடுக்க விடாம பன்றதும் திருட்டுத்தனம் தான்








  


ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  42



 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்  ஓக்கே

ரேட்டிங் =   3.25 / 5


சி பி கமெண்ட் 

மூடர் கூடம் - வித்தியாசமான சிச்சுவேஷன் காமெடி பிலிம். பெண்கள் , மாணவ மாணவிகள் , குழந்தைகள் உட்பட அனைவரும் பார்க்கலாம் , வருத்தப்படாத வாலிபர் சங்கம் , தேசிங்கு ராஜா போன்ற மொக்கை காமெடி பட இயக்குநர்கள் இந்தப்படத்தைப்பார்த்து எப்படி  சீனில் காமெடி கொண்டுவருவது என்பதை கத்துக்கலாம் 


டில்லி-மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கு-மரணதண்டனை


மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கு 13-ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. "டில்லியில், ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட, நான்கு பேர் மீதான குற்றங்களும், ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் குற்றவாளிகள்' என, டில்லி விரைவு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய, மக்கள் மத்தியில் ஆவேசத்தை உருவாக்கிய இந்த வழக்கில், ஒன்பது மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை, பலரும் வரவேற்றுள்ளனர். இந்நிலையில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரும் 13-ம்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ‌ தேதி ஒத்திவைக்கப்பட்டது. அனேகமாக, மரண தண்டனை வழங்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்தாண்டு டிசம்பர், 16ல், டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவியும், அவரது ஆண் நண்பரும், இரவு நேரத்தில், ஒரு பஸ்சில் ஏறினர். அந்த பஸ்சில் இருந்த, ஆறு பேர் கும்பல், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவரையும், அவரின் ஆண் நண்பரையும் கடுமையாக தாக்கியது. பின், பஸ்சிலிருந்து இருவரையும் தூக்கி வீசியது.டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவி, மேல் சிகிச்சைக்காக, சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி இறந்தார். நாட்டையே உலுக்கிய இந்த கொடூர நிகழ்வு, டில்லியில் பெரும், கொந்தளிப்பை ஏற்படுத்தியது.பெண்கள், மாணவர்கள் என, ஏராளமானோர் திரண்டு வந்து, டில்லி நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்தனர். "குற்றவாளிகளுக்கு, கடும் தண்டனை அளிக்க வேண்டும்' என, போராட்டங்கள் நடத்தினர்.இந்த கொடூர பலாத்கார சம்பவம் தொடர்பாக, பஸ் டிரைவர், ராம்சிங், அவனின் நண்பர்கள், வினய் சர்மா,பவன் குப்தா, அக்ஷய் சிங், முகேஷ் மற்றும் மைனர் சிறுவன் ஒருவன் என, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், மைனர் சிறுவன் மீதான வழக்கு, டில்லி சிறார் நீதி வாரியத்தில் நடந்து, அவனுக்கு, சமீபத்தில், மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற ஐந்து பேரும், திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில், பஸ் டிரைவர் ராம்சிங், கடந்த மார்ச்சில், சிறையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.அதனால், மற்ற நான்கு பேர் மீதான வழக்கு விசாரணை, டில்லி விரைவு கோர்ட்டில் நடந்தது. அரசு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலான வாதம் முடிவடைந்ததை அடுத்து, கடந்த, 3ம் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.



இந்நிலையில், இந்த வழக்கில், விரைவு கோர்ட்டின், கூடுதல் செசன்ஸ் நீதிபதி யோகேஷ் கன்னா, 237 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை, நேற்று வெளியிட்டார். 

அப்போது, அவர் கூறியதாவது:மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட, வினய் சர்மா,, பவன் குப்தா, அக்ஷய் சிங் மற்றும் முகேஷ் மீது, கொலை செய்தல், கூட்டமாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தல் மற்றும் தடயங்களை அழித்தல் போன்ற 



பிரிவுகளின் கீழ், சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும், சந்தேகத்திற்கு இடமின்றி, ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், நான்கு பேரும் குற்றவாளிகள் என்பது உறுதி செய்யப்படுகிறது. மருத்துவ உதவி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் சிகிச்சையின் போது, நோய் தொற்று ஏற்பட்டது போன்றவையே, பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான, மருத்துவ மாணவியின் மரணத்திற்கு காரணம் என, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், முன்வைக்கப்பட்டவாதத்தை ஏற்க முடியாது; அதை தள்ளுபடி செய்கிறேன். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும். இவ்வாறு, நீதிபதி தெரிவித்தார்.


இந்த வழக்கின் விசாரணை, ஒன்பது மாதங்களாக நடைபெற்றது. விசாரணையின் போது, 100 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், 18 பேர் சாட்சியம் அளித்தனர். இருப்பினும், பலாத்காரத்தில் பலியான, மருத்துவ மாணவியோடு, பஸ்சில் சென்றவரும், ஆறு பேர் கும்பலால் பலமாக தாக்கப்பட்டவருமான, மாணவியின் ஆண் நண்பர், சம்பவத்தை நேரில் பார்த்தவர் என்பதால், அவரது சாட்சியம், வழக்கில் முக்கியமானதாக கருதப்பட்டது. அது மட்டுமின்றி, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற போது, உயிருக்கு போராடும் நிலையில், மாணவி அளித்த மரண வாக்குமூலமும், போலீசாருக்கு வழக்கை விரைவாக முடிக்க, பெரும் உதவியாக இருந்தது.நாடு முழுவதும் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும், பரபரப்பாக பேசப்பட்ட, இந்த பாலியல் பலாத்கார வழக்கின் விசாரணை, ஒன்பது மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



நேற்று தீர்ப்பு வெளியாக இருந்ததால், டில்லி சாகேத் கோர்ட்டில், தேசிய ஊடகங்கள் மட்டுமல்லாது, சர்வதேச ஊடகங்களும், அணிவகுத்து நின்றன. கோர்ட் முழுவதும், பெரிய அளவில், கூட்டம் காணப்பட்டது. நேற்றே தண்டனை அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று இரு தரப்பு வாதங்கள்நடந்தன. இதையடுத்து மதியம் 2.15மணியளவில், தண்டனை விவரம், வரும் வெள்ளிக்கிழமை பிற்‌பகல் 2.30 மணிக்கு அறிவிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. தீ்ரப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது





நான்கு பேருக்கும் மரண தண்டனை-மாணவியின் பெற்றோர் கோரிக்கை: "எங்கள் மகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், குற்றவாளிகள் என, அறிவிக்கப்பட்டுள்ள, நான்கு பேருக்கும், மரண தண்டனை விதிக்க வேண்டும். அவர்கள் தூக்கிலிடப்படவில்லை எனில், அது சரியானநீதியாகாது' என, மாணவியின் பெற்றோர் கூறியுள்ளனர்.


அவர்கள் மேலும் கூறியதாவது:எங்கள் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஒன்பது மாதங்களாக, நாங்கள் காத்திருக்கிறோம். எங்கள் மகளிடம் கொடூரமான முறையில் நடந்து கொண்ட, நான்கு பேரும் தூக்கிலிடப்பட வேண்டும்.இந்த வழக்கைப் பற்றியே, கடந்த சில மாதங்களாக, நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். என்ன நிகழுமோ என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறோம். சிறார் நீதி வாரியத்தில், மைனர் சிறுவனுக்கு, மூன்றாண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது, எங்களை நிலை குலையச் செய்தது.தற்போது குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள, நான்கு பேருக்கும், மரண தண்டனையை விட, குறைவான தண்டனை வழங்குவதை, நாங்கள் விரும்பவில்லை. இந்த வழக்கில், வழங்கப்படும் தீர்ப்பு, மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும். இதுபோன்ற கொடூர செயல்களில், இனி யாரும் ஈடுபடக்கூடாது.இவ்வாறு, மாணவியின் பெற்றோர் கூறினர்.



இந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்தால் தான், இதைப் பார்த்து, இது போன்று குற்றம் செய்ய நினைப்பவர்களும் அஞ்சுவர். நாட்டிற்கே இந்த தண்டனை முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.
-சுஷ்மா சுவராஜ்பா.ஜ., மூத்த எம்.பி., லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர்
-நமது டில்லி நிருபர்-


thanx - dinamalar
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்காவிட்டால் நாட்டுக்கே வெட்கக்கேடு: மாணவியின் பெற்றோர்


புதுடெல்லி: குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனை கொடுக்கப்படாவிட்டால், அது நாட்டுக்கே வெட்கக்கேடு என்று டெல்லி மருத்துவ மாணவியின் பெற்றோர் கூறியுள்ளனர்.

டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மருத்துவ மாணவி வழக்கில் 4 பேரும் குற்றவாளிகள் என்று விரைவு நீதிமன்றம் கூறியுள்ளது. அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுகிறது.

இது குறித்து மாணவியின் தாயார் கூறுகையில், "கடந்த 9 மாதங்களாக எங்கள் மகளுக்கு நீதி கிடைப்பதற்காக காத்திருந்தோம். இந்த வழக்கை பற்றியே சிந்தித்து வந்தோம். 4 பேரும் எங்கள் மகளிடம் கொடூரமாக நடந்து கொண்டனர். அவர்கள் கடுமையாக தாக்கியதாக, அவள் மரண படுக்கையில் என்னிடம் கூறினாள். அவள் அழுதுகொண்டே சொன்னதை என்னால் மறக்க முடியாது. எனவே, அவர்கள் 4 பேரையும் சாகும்வரை தூக்கிலிட வேண்டும். அவர்களுக்கு இந்த சமூகத்தில் வாழ தகுதி இல்லை. மரண தண்டனை கொடுத்தால்தான், எங்கள் மகளுக்கு நீதி கிடைத்ததாக அர்த்தம். அவர்கள் எங்கள் மகளிடம் நடந்து கொண்ட விதத்தை என்னால் சொல்ல முடியாது. அதை உலகமே அறியும். இந்த போராட்டத்தில் இந்த நாடே எங்கள் பின்னால் நிற்கிறது" என்றார்.

மாணவியின் தந்தை கூறுகையில், "இந்த வழக்கில் இளம் குற்றவாளிக்கு தண்டனை அறிவிக்கப்பட்டபோது நாங்கள் நொறுங்கிப்போனோம். அவன் மீதான எல்லா குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டன. ஆனாலும், அவனுக்கு வெறும் 3 ஆண்டு சிறைத் தண்டனைதான் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் மரண தண்டனைக்கு குறைவான எதுவும் போதுமானது அல்ல. இனிமேல் யாரும் இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தை செய்யாத வகையில் முன் உதாரணமாக இந்த தண்டனை அமைய வேண்டும். அப்படி மரண தண்டனை கொடுக்கப்படாவிட்டால், அது நாட்டுக்கே 





வெட்கக்கேடு ஆகும். தண்டனையை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்த வழக்கு, எங்களுக்கு மட்டுமின்றி, நாடு முழுவதற்கும் முக்கியமானதாகும்" என்றார்.