Sunday, August 18, 2013

ஆம்புலன்ஸ்க்கு பெண் டிரைவர் ஓக்கேவா? -ஜெனோ வா புஷ்பம்

யாதுமாகி நிற்பாள்

ஓரம்போ... ஓரம்போ...

ஜெனோவா புஷ்பம்

உச்சிவெயில் மண்டையைப் பிளக்க, அன்று ஆலங்குளம் பஸ் நிலையம் எதிரே கூலாக நின்று கூல்ட்ரிங்ஸ் குடித்துக் கொண்டிருந்த என்னை சர்ரென்று கடந்து சென்றது அந்த ஆம்புலன்ஸ். ஒரு கணம் திகைத்துப் போனேன். அரசின் நடமாடும் மருத்துவக் குழு ஆம்புலன்ஸை லாகவமாக ஓட்டிச் சென்றார் ஒரு பெண்.
கண் பொய் பேசாது என்றபோதும் மனதில் எழுந்த சந்தேகத்தைக் கடைக்காரரிடம் கேட்க, ‘அந்த வண்டியை ஓட்டுவது பெண் டிரைவர் தான்என்றவர், ‘விவரம் தெரியணும்னா ஆலங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குப் போங்கஎன்றார்.
மருத்துவமனைக்குள் புகுந்து எதிர்ப்பட்ட ஆய்வகத்திற்குள் நுழைந்தேன். அங்கிருந்தவர் வழிக்காட்ட, திருநெல்வேலி-தென்காசி மெயின் ரோட்டில் இருந்து நாச்சியார்புரம் என்று திசைக்காட்டிய கிராமத்துச் சாலையில் வண்டியை திருப்பினேன். அங்கே நாம் தேடிய வண்டி, அப்பாவியா மரத்தடி நிழலில் குட்டித் தூக்கம் போட்டுக் கொண்டிருந்தது.
வண்டியின் அருகில் கிராம மக்களுக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த பெண் டாக்டர் நம்மை மேலும் கீழும் பார்த்து விழிக்க வந்த விவரம் சொன்னதும் சந்தோஷத்தில் நாம் தேடிய நபரை உற்சாகமாய் அழைத்தார். அந்தப் பெண்மணி கண்ணில் மகிழ்ச்சி மின்னல் வெட்டியது. இருந்தாலும் அவர் டாக்டரை கேட்க வேண்டும் என்று தயங்கினார் நாங்க க்ரீன் சிக்னல் வாங்கிட்டு தான் வந்துருக்கோம் என்று சொன்னதும் பெண் டிரைவர் ஜெனோவா புஷ்பம் ஆம்புலன்ஸ் வேகத்தில் பதில் அளித்தார்.

ஆம்புலன்ஸ் ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது?
13வயசிலே பைக் ஓட்ட கத்துக்கிட்டேன். 18வயசிலே கார் ஓட்ட கத்துகிட்டேன். இந்த நேரத்திலே எனக்கு, அத்தை மகன் ஜான்சனுடன் திருமணம் ஆனது. என் கணவர் முறைப்படி கார் ஓட்டுவதற்கு லைசென்ஸ் வாங்கிக் கொடுத்தார். கார் ஓட்டுன எனக்கு பஸ் ஓட்டுறதுக்கு ஆசை வந்துச்சு. அவருகிட்டே சொன்னா கோவப்படுவாறோன்னு நினைச்சேன், இருந்தாலும் பயந்து பயந்து சொன்னேன். உடனே அவர் உன்னோட ஆசைதான் என்னோட ஆசைன்னு திருநெல்வேலி அரசு போக்கு வரத்துகழகத்தின் .ஆர்.டியிலே டிரைவிங் படிக்க வைத்தார். டிரைவிங் முடித்ததும் உடனே வேலை வாய்ப்பு அலுவலகத்திலே பதிவு செய்து வைத்தேன். 2008ம் வருஷம் சீனியாரிட்டி அடிப்படையிலே இந்த ஆம்புலன்ஸ் வேலைக்கான உத்தரவு வந்துச்சு.



 பஸ் ஓட்டுறதுக்கு தான் ஆசைப்பட்டேன். இருந்தாலும் தேடி வரும் வாய்ப்பை விடக்கூடாதுனு இதுல ஜாயின் பண்ணினேன். குடும்ப உறவினர்கள் நிகழ்ச்சிக்குப் போகும்போது, என்னோட பணியை எல்லாரும் பாராட்டுவாங்க; இதை இறைவன் கொடுத்த பரிசா நினைக்கிறேன்."
முதல் அனுபவம் எப்படி இருந்தது?
முதல் நாள் டியூட்டிக்கு வந்த என்னை எல்லோரும் ரொம்ப ஆர்வமா பாத்தாங்க, எனக்கு ஒரு மாதிரியாத்தான் இருந்துச்சு. இருந்தாலும் நான் போன கிராமங்களிலே எல்லாம் எனக்கு நல்ல வரவேற்பு கிடைச்சுது. இன்னைக்கும் வழியிலே சின்னப்புள்ளைக என்னப் பாத்தா , அங்க பாரு பொம்பள டிரைவரு"ன்னு சொல்றது சந்தோஷமா இருக்கு."
ஆம்புலன்ஸ் டிரைவர்ங்கறதால, முதலுதவி எல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

படிக்கும்போதே கிராமங்களிலே சமூகப்பணி செய்திருக்கேன். இந்த வண்டிக்கு வேலைக்கு வந்தப் பிறகு நர்ஸ் கல்யாணியிடமிருந்து மருத்துவம் தொடர்பான சில முதலுதவிகள் செய்யக் கத்துக்கிட்டேன்.
உங்களை நெகிழ வைத்த சம்பவம் ஏதேனும்...
ஒருநாள் வழக்கம்போல கிராமப்பணிக்கு சென்றுவிட்டு, வண்டியில் திரும்பி வந்து கொண்டிருந்தோம். அப்ப குறிப்பன்குளத்து கிராமமக்கள் என்னோட வண்டியைப் பார்த்ததும் கூட்டமாக ஓடி வந்து மறிச்சுக்கிட்டாங்க. எனக்கு ரொம்ப பயமாயிட்டு. அந்த ஊருலே ஒரு பெரியவருக்கு ஹார்ட் அட்டாக் உடனடியா ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டு போகணும் அதான் வண்டியை மறிச்சோம்னு சொன்னாங்க. நாங்க அந்தப் பெரியவர் வீட்டிற்குப் பறந்தோம். எங்க டாக்டர் அவரை பரிசோதித்துப் பார்த்த போது அவர் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. கிராமமக்கள் திரண்டு வந்து வண்டியை திடீரென்று மறித்தது மறக்கமுடியாத சம்பவம் என்றாலும் அந்தப் பெரியவரைக் காப்பாற்ற முடியாமல் போனது மனதை நெகிழவைத்தது.
ஒரு எமர்ஜென்ஸி கேஸை திடீரென நீங்கள் எடுத்து செல்லும் சூழல் வந்தால் ஒரு பெண்ணாக உங்கள் மனம் எப்படி இருக்கும்?
ஒரு பெண் என்ற நினைப்பைத் தாண்டி, அந்த பேஷன்டை எவ்வளவு சீக்கிரமாகவும் பாதுகாப்பாகவும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியும் என்பதில்தான் என் கவனம் இருக்கும்."
எதிர்கால ஆசை...
மிகப்பெரிய கனரக வாகனங்களை ஓட்டிப் பார்க்கணும். என்னை மாதிரி நிறைய பெண்கள் இதுபோன்ற பணிக்கு வரணும். ரொம்பப் பெரிய ஆசைன்னா நாலரை வருஷமா டெம்பரவரியாக பார்த்துவரும் என்னோட இந்த வேலை நிரந்தரமாகணும்" என்றார் புன்னகையுடன்.
என்ன ஜெனோ சிஸ்டர் அடுத்த ஊருக்குக் கிளம்பலாமா?" என்று கேட்டபடி டாக்டர் வரவே, மரத்தடி நிழலில் உறங்கிக் கொண்டிருந்த ஆம்புலன்ஸ் உறுமிக் கொண்டு புறப்பட்டது.

Thanks - mankayar malar

மிஸ்! 144 2 143 னு மெசேஜ் அனுப்பி இருக்கீங்களே.என்ன அர்த்தம்?

1. டியர்.உன் உதடு தேன் மாதிரி இனிக்குதே எப்டி ?



 டேய் மாங்கா மடையா.லிப்ஸ்டிக்ல தேன் கலந்திருக்கேன்


-------------------------


2. மிஸ்.யோகா டீச்சரான நீங்களே இவ்ளவ் குண்டா இருக்கீங்ளே?



 அனுஷ்கா - எல்லாருக்கும் சொல்லித்தர்றதால நான் யோகா செய்ய டைமே இல்ல



----------------------------


3. டியர்.நேத்து நைட் என் கனவுல நீ வந்தே! 



அப்டியா? என்ன கலர் புடவை கட்டி இருந்தேன்? 


------------------------


4.  மிஸ்.ஆபீஸ் ல எந்த டைம் வந்தா உங்களைப்பார்க்கலாம்? 


சாயங்காலம் 6 -டூ 8 கண்டிப்பா இருப்பேன் :-))" 



ஓஹோ.எந்த டைம் அன்பா இருப்பீங்க? 


-------------------------


5. எந்தப்பெண்ணிலும் இல்லாத ஏதோ 1 உன்னிடம் இருக்கிறது



 .இடக்கு மடக்கு இம்சை அரசி - அப்போ ஆல்ரெடி பல பொண்ணுங்க சக வாசம் இருக்கு? 


------------------------

6. டியர்.எனக்கு ஒரே ஒரு ஆசைதான்.இதுவரை நான் தான் உனக்கு தண்டச்செலவு பண்ணியிருக்கேன்.ஒரே ஒரு 50 பைசா ஆசை சாக்லெட்டாவது நீ வாங்கித்தரனும்



------------------------------


7. டியர். ஐ லவ் யூ' சொன்னால் கோபப்படறியே ஏன்?



 நான் தமிழ் டீச்சர்.நீங்க பாட்டுக்கு இங்க்லீஷ்ல பேசுனா எனக்குப்புரிய வேணாமா? 


----------------------------


8. டாக்டர்.பலாப்பழம் சாப்ட்டா தப்பா?



 யோவ்.பலாச்சுளை மட்டும் தான் சாப்பிடனும்.பழத்தை சாப்ட்டா முள் குத்தாது? 


------------------------

9. ஹரி குழந்தைகளுக்கான புத்தகம் வெளியிட்டா என்ன பேர் வைப்பாரு? 




- லயன் 2 கா மிக்ஸ் 


-----------------------


10. . டியர். ஐ லவ் யூ' சொன்னால் கோபப்படறியே ஏன்?



 நான் தமிழ் டீச்சர்.நீங்க பாட்டுக்கு இங்க்லீஷ்ல பேசுனா எனக்குப்புரிய வேணாமா?


--------------------


11. ஏம்மா உங்களைப்பார்த்து சிரிச்சா முறைக்கறீங்க ஓக்கே.அப்போ நாங்க முறைச்சா முறைப்படி நீங்க சிரிக்கனும் தானே? ஒய் முறைச்சிங் எகெய்ன்?


---------------------------


12. லைசன்ஸ் எடு. சார்.நான் ந்டந்து தானே போறேன்.பைக் ஓட்டலையே? ஆனா முன்னால போற பிகரை ஓட்டிட்டுப்போனியே?



-----------------------


13. டியர்.உனக்கு பாலகுமாரன் புக் வேணுமா? சுஜாதா புக் வேணுமா?



 உங்க செக் புக் ல சைன் பண்ணிக்குடுங்க்.வேணும்ங்கற புக்கை வாங்கிக்கறேன்



---------------------


14. டியர்.உன் விழிகளில் ஒரு வானவில். தெரியுது.



தாங்க்ஸ் , அவ்ளோ அழகா?



 ம்க்கும்.இமைக்கு 7 கலர்ல பெயிண்ட் அடிச்சு வெச்சிருக்கே


-------------------------------


15. உன் சம்சாரம் உனக்கு பணி விடை செய்யறாங்க்ளா?



ம்க்கும்.பனியாரம் , வடை கூட செய்யாது


------------------------


16. டியர்.உனக்கு கால் கை எல்லாம் அமுத்தறேன் .ஆனா ஒரு கண்டிஷன்.ட்விட்டர் ,பேஸ்புக்ல நீ எனக்கு பணி விடை செய்யறதா ஸ்டேட்டஸ் போட்டுக்குவேன்


---------------------------


17. ஜோதிகா - சிங்கம் 2 க்கு எப்போ தான் கூட்டிட்டு போவீங்க?



 சூர்யா = சாரிடா செல்லம்.25 நாள் ஆகும்.ஆல் ஷோ புல் ஆகிடுச்சு


------------------------

18. டியர்.நெத்தில மத்தில ஏன் குங்குமம் வைக்கலை?



ஏன்? பொட்டு வைக்கலைன்னா பொட்டுனு போய்டுவீங்க்ளோ? # அவ்வ்வ்


----------------------

19. மிஸ்! 144 2 143 னு மெசேஜ் அனுப்பி இருக்கீங்களே.என்ன அர்த்தம்?



143 னு நீங்க அனுப்பினதுக்கு ரிப்ளை.காதலுக்கு தடை


-------------------------


20 சாரி சார்.எங்க் லாட்ஜ்ல் அட்டாச்டு பாத்ரூம் இல்லை.காமன் பாத்ரூம் தான்.



ஐ ஜாலி.பொண்ணுங்களோட சேர்ந்து குளிக்கலாமா?


------------------------


Saturday, August 17, 2013

எகனை மொகனை ஜோக்ஸ்

1.நமக்கு தரப்படும் வலிகளை நாம் எப்படி ஏற்கிறோம்?எதிர்கொள்கிறோம் என்பதில்தான் நமது வலிமை கணக்கிடப்படுகிறது.

--------------------------------------
2. .என் மனைவி பாட்டு கேட்டுட்டேதான் வேலை எல்லாம் செய்வாங்க.


.ஹூம், என் மனைவி கிட்டே  பாட்டு வாங்கிட்டே எல்லா வேலையும்  நான் செய்யறேன்..


----------------------------------

3. என் மீது தொடர்ந்து முட்களை வீசுகிறாய்! இயற்கையின் நியதிப்படி முட்களுக்குப்பிறகு பூக்கள் வரும் என்பதால் கனவுகளுடன் காத்திருகிறேன்

-----------------------------

4. தலைவர் அநியாயத்துக்கு நல்லவரா இருக்காரே? 

ஏன்?

லேடீஸ் ஃபிங்கர் என்பதால் வெண்டைக்காயை சமையல்ல சேர்த்துக்கறதே இல்லையாம்

------------------------------

5. தீப்பந்தங்களுடன் எதிரிகள் என் மீது பாய்கிறார்கள்,எனக்குத்தேவையான வெளிச்சத்தை, வெப்பத்தை அவர்களிடம் இருந்து எடுத்துக்கொண்டேன்

-----------------------------

6. எதிர்ப்பட்டவர்கள் எல்லாம் என்னை புண் படுத்தியபோது நீ மட்டும் தான் என்னை பண் படுத்தினாய் என் அன்பே!

----------------------------

7. காதலிக்கும்போது காதலியை சந்தேகப்படாதவர்கள் கூட மனைவி ஆன பின் சந்தேகப்படத்தொடங்குவது தாம்பத்யத்தின் சாபம்

---------------------------

8. மழை வரும்போது உன் ஞாபகங்களை அழைத்து வருகிறது, ஆனால் மழை நிற்கும்போது அது மீண்டும் உன் நினைவுகளை எடுத்துச்செல்வதில்லை,விட்டு செல்கிறது

------------------------

9.  என்மீது வெறுப்புத்தான் வருது என்றாய்! உன்னிடம் வெறுப்பையாவது சம்பாதிக்க முடிந்ததே என்ற சந்தோஷத்துடன் நான்

----------------------------

10. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே... 

மன்னா.... அப்போ தராசு, ஜூனியர் விகடன் திறந்தா குற்றம் இல்லையா?

------------------------

11. தலைவரை ஏன் மாதர் சங்கங்கள் கும்முது? 

பர்மா பஜார்ல குடி இருக்கற பொண்ணை பஜாரின்னு கூப்பிட்டாராம்

----------------------------

12. MONEY கண்டனாக இரு என அவள் விஷம் கக்கினாள், நான் நீல கண்டன் ஆகிவிட்டேன்

----------------------------

13. காதல் என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம்தான், ஆனால் அதனால் ஏற்படும் கஷ்ட நஷ்டங்கள் பொதுவான விஷயம்

---------------------

14. மரண பயம் வரும்போதும், வயோதிகத்தின் கடைசி அத்தியாயம் துவங்கும்போதும் மனிதர்களிடம் நாத்திக உணர்வு மறைந்து ஆன்மீக உணர்வு தலை தூக்குகிறது

--------------------------------

15. இனிமே என்னை யாரும் அணில்னு கூப்பிட வேணாம்..

ஏனுங்க்ணா? 

அனில்கபூர், அனில்கும்ப்ளே 2 பேரும் என் மேல மான நஷ்ட வழக்கு போட்டிருக்காங்க..

----------------------------------

16. இப்போது நடப்பது சர்வாதிகார ஆட்சி, வாயைத்திறந்து ஒரு வார்த்தை கூட பேச முடியல .

. இப்போக்கூட 10 வார்த்தை பேசிட்டீங்களே தலைவரே?

---------------------------

17. தமிழகத்தில் இனி எந்த தீயசக்தியாலும் கொள்ளையடிக்க முடியாது-ஜெ # இனி அடிக்க என்ன மிச்சம் இருக்கு? - கலைஞர்

--------------------------

18. நமது இலக்கை நோக்கி மிதமான வேகத்தில் நாம் முன்னேறும்போது எதிரிகள் நம்மை துரத்தி வேகத்தை அதிகமாக்கி நம் இலக்கை முன்பே அடைய உதவுகிறார்கள்

------------------------------

19. காதல்தோல்வியை விட மனிதர்களை அதிகம் பாதிப்பது காதலில் சந்தேகம்

------------------------

20.  உன்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டனே,இனி என் கிட்டே பேச என்ன இருக்கு? 

அட லூசே, பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டா ஏன் பேசி டைம் வேஸ்ட் பண்ணனும்?

----------------------

சினிமா பிரபலங்கள் பெயரில் ஃபேக் ஐ.டி. அக்குறும்புகள் -ஃபேஸ்புக்


பிரபலங்கள் பெயரில் ஃபேஸ்புக்கில் சில பக்கிகள் இருந்துகொண்டு கொடுக்கும் அட்ராசிட்டிகளுக்கு அளவே இல்லை பாஸ். இதோ சில அக்குறும்புகள்...
'அசின் தொட்டும்கல்’ என்ற பெயரில் ஒரு ஃபேஸ்புக் அக்கவுன்ட் செம பிஸி. 'இன்னிக்கு நான் 'கஜினி’ ஷூட்டிங்கில் அமீர்கானுடன் நடித்தேன். அருமையான மனிதர் அவர்!’ என ஆரம்பித்து, அடுத்தடுத்த நாட்களில் 'ஓப்பனிங் ஸாங் ஷூட்டிங்கில் காலில் சுளுக்கு’, 'இன்று ஜலதோஷத்தால் தும்மிக்கொண்டே நடித்தேன். பாவம் யூனிட்’ என்றெல்லாம் ஸ்டேட்டஸ்கள். 'ஐயோ, என்ன நடந்தாலும் ஸ்டேட்டஸ் மெசேஜ் போடற அளவுக்கு நம்ம அசின் இம்புட்டு வெள்ளந்திப் புள்ளையா இருக்கே’ என ஆச்சர்யத்தில் திளைத்தார்கள்,


 நட்புக் கோரிக்கை ஏற்கப்பட்ட குஷியில் இருந்த ரசிகர்கள். 'கெட்வெல் சூன் அசின்’ 'டேக் டேப்லெட் அண்ட் டேக் ரெஸ்ட்’, 'ஐயோ அசின். ஒன் வீக் லீவு எடுத்துக்குங்க. நீங்க எங்க பொக்கிஷம்’ என்றெல்லாம் உருகி மருகி உணர்ச்சிவசப்பட்டார்கள். இந்த அசின் அனைத்துக்கும் லைக் கொடுக்க, லேசாக டவுட் வந்து விட்டது. கொஞ்ச நாள் ஸ்டேட்டஸ் அப்டேட்டுகள் இல்லாமல் கிடந்த இடம் மீண்டும் புரொஃபைல் அப்டேட்டுகளோடு களைகட்ட ஆரம்பிக்க மீண்டும் 'ரெடி’ படத்தில் சல்மானுடன் சாப்பிட்டேன், 'ஹவுஸ்ஃபுல்’ அக்ஷய் ரொம்ப கூல்’ என்று ஸ்டேட்டஸ் போட, மறுபடியும் கூட்டம் கூட்டமாய் லைக்கும் கமென்ட்டும் போட்டார்கள் நம்மவர்கள். ஒரு கட்டத்துக்கு மேல் அசினே, 'அது நான் இல்லை... தயவு செஞ்சு நம்பி ஏமாந்துடாதீங்க’ என பிரஸ் மீட் வைக்கும் அளவுக்குப் போய்விட்டது.


த்ரிஷாதான் ஃபேக் ஐ.டி-யில் செம ஹாட். நம்பும்படி புரொஃபைலை த்ரிஷா கிருஷ்ணன் என மெயின்டெய்ன் பண்ணுவதும் ஸ்டேட்டஸ் போடுவதும், நம்ம 'ஃபேக் ஐ.டி. த்ரிஷா’வுக்கு வாடிக்கை. இணையதளங்களில் வந்த த்ரிஷா படங்களை டவுண்லோடு செய்து அந்தப் படங்களை சத்தமே இல்லாமல் ரொம்ப நாட்களாக 'த்ரிஷா கிருஷ்ணன்’ ஷேர் செய்து வந்தார்.



 இதனாலேயே கடுப்பான ஒரிஜினல் த்ரிஷா, தற்போது த்ரிஷ் ட்ராஷர்ஸ் (ட்ராஷ் என்பது த்ரிஷாவுக்கு ஃப்ரெண்ட்ஸ் கேங் வைத்த செல்லப்பெயர்) என மாற்றி வைத்துக்கொண்டார். விடுவாய்ங்களா ப்ளடி ஃபேக் ஐ.டி. கேடீஸ்?! அதேபோல த்ரிஷ் ட்ராஷர்ஸ் என கமகமவென இன்னொரு அக்கவுன்ட்டை ஆரம்பித்து வைத்தான் அந்தப் புண்ணியாத்மா. நாயோடு இருப்பது, சர்ச் பார்க்கில் குட்டைப் பாவாடையோடு சிரிப்பது என கூகுளாண்டவரின் துணையோடு படங்களையும், ப்ளூ கிராஸ், பீட்டா வாசகங்களை ஃபார்வர்டு செய்வதுமாய் ஃபினிஷிங் டச் கொடுக்க, ஒரிஜினல் த்ரிஷாவுக்கு வந்த ஃப்ரெண்ட்ஷிப் ரெக்வெஸ்ட்டைவிட அதிகமாக ஹிட்ஸ் அள்ளியது ஃபேக் ஐ.டி.  




ஆர்யா இன்னும் ஐயோ பாவம். ஃபேக் ஐ.டி-க்கள் மட்டுமே மூன்று உலாவுகிறதாம். இன்னொரு ஆர்யாவின் ஃபேக் ஐ.டி-யில் இருந்து ஸ்ரேயா, ஆண்ட்ரியா, தமன்னா மற்றும் ஹன்சிகாவுடன் தினமும் பீட்டர் இங்கிலீஷில் கடலை மெசேஜ்கள் போனதாம். அப்படியே நம்பும்படி, ' 'கண்டேன் காதலை’ படத்தில் உன் நடிப்பு சுமார்ப்பா’ என தமன்னாவுக்கும் -'ஹே பேபி யூ ஆர் ஸோ செக்ஸி’ என ஹன்சிகாவுக்கும் அனுப்பி வைப்பாராம். ஒரு கட்டத்தில் லவ் புரொபோஸ் வரை, போக நேரில் பார்த்து கேட்கும்போதுதான் டரியல் ஆகி விட்டாராம் ஆர்யா. 


வழக்கம்போல ஜாலியாய், ''என்னைவிட என் ஃபேக் ஐ.டி-க்கள் அழகா புரொஃபைலை மெயின்டெய்ன் பண்ணுறாங்க. அதனால ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்க்கலாம்’னுதான் ஆரம்பத்துல நினைச்சேன். ஒரு கட்டத்துல என் பேரை யூஸ் பண்ணி காலேஜ் பொண்ணுங்ககிட்ட தப்புத்தப்பா பேசுறதா கேள்விப்பட்டு, அப்புறம் 'நான் அவன் இல்லைங்க’னு சொல்ல வேண்டியதாப் போச்சு. எவ்வளவோ சொல்லியாச்சு பாஸ். ஒரிஜினல் ஜம்ஷத் ஆர்யா பேர்லயே இப்ப இன்னொரு ஃபேக் ஐ.டி. உலாவுது. நல்லா இருங்கய்யா'' என்கிறார்.


தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், சூர்யா, கார்த்தி, ஜீவா, ஆர்யா, சிம்பு என்று ஃபேக் ஐ.டி-களின் எண்ணிக்கை ஏகத்துக்கும் நீள்கிறது. அட, அவ்வளவு ஏங்க, பவர் ஸ்டாருக்குக்கூட ஃபேக் ஐ.டி. இருக்குன்னா பார்த்துக்குங்களேன்!


-ஆர்.சரண்

இணையதளத்தில் வெளியான 'பிரியாணி' பாடல்கள்!


வெங்கட்பிரபு இயக்கியுள்ள 'பிரியாணி' படத்தின் பாடல்களை யாரோ ஒருவர் இணையதளத்தில் வெளியிட, பயங்கர அப்செட்டில் இருக்கிறது படக்குழு.


கார்த்தி - ஹன்சிகா இருவரும் ஜோடியாக நடித்துள்ள படம் 'பிரியாணி.' ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.



த்ரில் கலந்த காமெடியுடன் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இது யுவனுக்கு 100-வது படம்.



இந்தப் படத்தில் கவிஞர் வாலி எழுதிய பாடலை கார்த்தியும், பிரேம்ஜியும் பாடியுள்ளனர். கூடுதலாக இயக்குநர் வெங்கட்பிரபுவும் அந்தப் பாடலுக்கு ஜதி சொல்லியிருக்கிறார்.



மேலும், ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி, டி.இமான், எஸ்.எஸ்.தமன் ஆகிய 4 இசையமைப்பாளர்களும் இணைந்து யுவனின் இசையில் ஒரு பாடலைப் பாடியுள்ளனர்.



பிற இசையமைப்பாளர்களின் இசையில் மற்றவர்கள் பாடுவது சகஜம்தான் என்றாலும், ஒரே நேரத்தில் 4 பேரும் பாடியதால் மகிழ்ச்சியாக இருந்தது 'பிரியாணி' படக்குழு.






தன்னுடைய நூறாவது படம் என்பதால், இதுபோல் பல்வேறு அதிரடி ஆச்சரியங்கள் தரக் காத்திருந்தார் யுவன். உச்சகட்டமாக ஏ.ஆர்.ரஹ்மானை வைத்து 'பிரியாணி'யின் ஆடியோவை வெளியிடத் திட்டமிட்டிருந்தார்.



ஆனால், அதற்குள் பாடல்கள் இணையதளத்தில் ரிலீஸாகிவிட்டன. இதுகுறித்து வெங்கட்பிரபு, "பாடல்கள் இணையதளத்தில் வெளியானது வருத்தமாக இருக்கிறது. நாங்கள் அதைத் தடைசெய்ய முயற்சித்தோம். ஆனால், மக்கள் இந்தத் திருட்டை விரும்புகிறார்கள்" என தன்னுடைய டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.



யுவன்சங்கர் ராஜா, "இப்படி திருடுவது தவறானது. இதனால் எனக்கு கவலையாக இருக்கிறது. ஆகஸ்ட் 31--ம் தேதி பாடல்களை வெளியிட முடிவு செய்திருந்தோம். என் பிறந்தநாளின்போது ரசிகர்களுக்கு இந்தப் பாடல்கள் விருந்தாக இருக்கும் என நினைத்தேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.


thanx - vikatan


தனுஷ் - 25 -வேலையில்லா பட்டதாரி!


தனுஷின் 25வது படம் வேலையில்லா பட்டதாரி!

மரியான் படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் அவரது 25வது படத்திற்கு வேலையில்லா பட்டதாரி என்று பெயர் வைத்துள்ளனர். கேமராமேன் வேல்ராஜ் இயக்கும் இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக அமலாபால் நடிப்பது உறுதியாகி விட்டது. மேலும், ஏற்கனவே ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியிருந்த அமலாபால், அப்போது ஏற்பட்ட கால்சீட் பிரச்னையினால் அந்த படத்திலிருந்து விலகினார். 




அதனால் இந்த முறை அப்படி ஏதேனும் தடங்கல்கள் ஏற்பட்டு வெளியேறிவிடக்கூடாது என்று தனுஷ் பட நிறுவனம் கேட்ட தேதியை ஒதுக்கி கொடுத்திருக்கும் அமலாபால், இந்த படத்தில் சென்னை பெண்ணாக நடிக்கிறாராம். அதிலும் இதுவரை அவர் எந்த படங்களிலும் நடிக்காத ஆர்ப்பாட்டமான வேடமாம். அதனால், தோழிகளுடன் ஜாலியாக ஊர் சுற்றுவது, தியேட்டர்களில் படம் பார்க்கும்போது விசில் அடித்து ரகளை செய்வது என்றெல்லாம் கலகலக்கப்போகிறாராம் அமலாபால்.

அதுமட்டுமின்றி, தலைவாவை விட பல மடங்கு கவர்ச்சி களத்திலும் குதிக்கிறாராம். இதுவரை தெலுங்கு படங்களில் மட்டுமே கூடுதல் கவர்ச்சி சேவை புரிந்து வந்த அமலா, இனி தமிழிலும் அதே அளவு கவர்ச்சி கதாநாயகியாக உருவெடுக்கிறாராம். அதற்கு இந்த வேலையில்லா பட்டதாரிதான் அடித்தளம் போடுகிறதாம்.

தனுஷ் : 25 - ஸ்பெஷல் ஸ்டோரி!!

பல படங்களின் தொடர்தோல்விகளால் துவண்டிருந்தார் கஸ்தூரி ராஜா. அப்போது அவர் துள்ளுவதோ இளமை என்ற ஒரு படத்தை தயாரித்து, இயக்க ஆரம்பித்தார். அந்தப் படம் வெற்றிபெற்றால் சென்னையில் வாழ்வது இல்லையேல் மனைவி குழந்தையுடன் சொந்த ஊருக்குச் சென்று விடுவது என்கிற முடிவில் இருந்தார். படத்துக்கு ஹீரோ என்று தனியாக ஆள் போட்டால் அவருக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமே என்று தயங்கி தன் மகன் வெங்கடேஷ் பிரபுவுக்கு தனுஷ் என்று பெயர் சூட்டி நடிக்க வைத்தார்.


துள்ளுவதோ இளமை அவரது வழக்கமான பாணியிலான கிளாமர் கதைதான். படத்தை அப்பா இயக்குவது சரியில்லை என்று கருதிய அவரது மூத்த மகன் செல்வராகவன், "அப்பா நீங்க கொஞ்சம் தள்ளி நில்லுங்க இந்தப் படத்தை நான் டைரக்ட் பண்றேன்"னு சொல்லி அவரை தயாரிப்பாளராக்கிவிட்டு இவர் டைரக்ட் செய்தார். ஆனால் படத்தின் பெயரில் கஸ்தூரி ராஜா தான் டைரக்டர் என்று வந்தது.

படம் வெளிவந்த பிறகு கடுமையான விமர்சனத்தை சந்தித்தாலும் வசூலைக் கொட்டிக் கொடுத்தது. கஸ்தூரிராஜா குடும்பம் சென்னையிலேயே செட்டிலானது. அப்போதும்கூட செல்வராகவன் நல்ல இயக்குனராக அறியப்பட்டாரே தவிர தனுஷ் நல்ல நடிகராக அறியப்படவில்லை. தம்பிக்காக அண்ணன் அடுத்து இயக்கிய படம் காதல் கொண்டேன். தனுஷின் நடிப்பு திறமையை முழுமையாக வெளிக் கொண்டு வந்தார். அனைவராலும் தனுஷ் பாராட்டப்பட்டார்.





தனுஷின் அபாரமான நடிப்பு திறமை, பக்கத்துவீட்டு பையன் போன்ற தோற்றம். அவரை அடுத்தடுத்து ஜெயிக்க வைத்தது. படு சுமாரான இளைஞர்களுக்கு தனுஷ் ரோல் மாடல் ஆனார். "எங்களையெல்லாம் பார்த்தா பிடிக்காது பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்" என்ற வசனம் தமிழ்நாட்டில் பெருவாரியான இளைஞர்களுக்கு டானிக்காக அமைந்தது. "நாங்கல்லாம் -சுனாமியிலேயே சும்மிங்க போடுறவங்க" என்ற டயலாக் அவர்களுக்கு துணிச்சலைக் கொடுத்தது.

திருடா திருடியின் மன்மதராசா ஒரு வருடம் தமிழ்நாட்டையே ஆடவைத்தது. புதுக்கோட்டையிலிருந்து சரவணன் அவரின் நடிப்புக்கு அடுத்த அத்தாட்சியாக அமைந்தது.

தனுஷின் வேகமான வளர்ச்சி சுள்ளான் படத்தில் அவரை ஆக்ஷன் ஹீரோவாக்கியது. ஆனால் அதனை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. படம் தோல்வி அடைந்தது. மீண்டும் தன் பழைய பாணிக்கே இறங்கி வந்து நடித்த தேவதையை கண்டேன் ஹிட்டானது. அன்று முதல் அடுத்த வீட்டு பையன் இமேஜ்தான் தனக்கு செட் ஆகும் என்று முடிவெடுத்தார். இன்று வரை அதே பாணியைத்தான் கடைபிடித்து வருகிறார். இடையில் புதுப்பேட்டையில் ஆக்ஷன் அவதாரம் எடுத்து அதிலும் தோல்வியை சந்தித்தார்.




பொல்லாதவன் படம் அவரை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றது. தன் இயல்பு மீறாத ஆக்ஷனை முயற்சி செய்தார். அது செட்டானது. யாரடி நீ மோகினி, படிக்காதவன், திருவிளையாடல் ஆரம்பம் போன்றவை அவருக்கு வெற்றிப்படிக்கட்டுகளாக அமைந்தது.

வெற்றிமாறன் கூட்டணியில் இரண்டாவதாக நடித்த ஆடுகளம் அவரை தேசிய விருது வரை அழைத்துச் சென்று அகில இந்தியாவுக்கும் அறிமுகப்படுத்தியது. மேலும் கொலவெறி அவரை உலக புகழ் ஆக்கியது. அதன் தொடர்ச்சியா இந்திப் படத்தின் வாய்ப்பு வந்தது. ராஞ்சனா மூலம் பாலிவுட் நடிகரானார்.

தனுஷ் கேரியரில் சீடன், வேங்கை, குட்டி, பரட்டை என்கிற அழகு சுந்தரம் போன்ற தோல்விகளும் உண்டு. அவற்றில் இருந்து தனுஷ் பாடம் படித்து தன்னை மெருகேற்றிக் கொண்டார். மரியான் படம் அவரது நடிப்புக்கு இன்னுமொரு மகுடமாக அமைந்தது. இந்த ஆண்டின் தேசிய விருது பட்டியலுக்குள் தனுசை மரியான் அழைத்துச் சென்றுள்ளது.





சூப்பர் ஸ்டாரின் மருமகன் ஆனார். இரண்டு குழந்தைக்கு தந்தையானார். எதிர்நீச்சல் மூலம் தயாரிப்பாளர் ஆனார். மலையாளப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் அளவிற்கு அந்த மநில மக்களையும் கவர்ந்தார். பத்துக்கும் மேற்பட்ட படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தில் நடிப்பின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டினார்.

2002-ம் ஆண்டு தன் சினிமா பயணத்தை துவங்கிய தனுஷ், பத்து ஆண்டுகளை கடந்தும் தன் வெற்றிப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
நன்றி - தினமலர்