Tuesday, August 13, 2013

சிம்மாசன சீக்ரெட் -வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்.(லீடர்ஷிப் உத்திகள்)



லீடர்ஷிப் உத்திகள்

புத்தம் புதுசு!

சிம்மாசன சீக்ரெட்!

வெ. இறையன்பு ..எஸ்.

1. வந்தான் தலைவன்


மனிதன் காடுகளில் வேட்டையாடித் திரிந்தபோது குழுவாக இயங்கினான். கூட்டமாக வாழ்ந்தான். அப்போது அவர்களுக்கு தலைவன் யாருமில்லை. தலைவியே இருந்தாள். தாய் வழிச் சமூகமே. பனியுகம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முடிந்தபோது ஒரு மகத்தான மாற்றம் மனித இனத்துக்கு ஏற்பட்டது.


ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்கள் சங்கமிக்கும் ஓர் இடத்தில் மனிதன் உண்ணும் முறையில் மாற்றம் தோன்றியது. இரண்டு கால்களில் நின்ற அவன் நான்கு கால் பாய்ச்சலில் முன்னேற்றத்தை முடுக்கிவிட்டான். காட்டு கோதுமையும், காட்டு பார்லியும் இயல்பாய் வளரும் இடத்தில் அவனுடைய தேர்ந்தெடுக்கும் முயற்சியால் செரிக்கும் கோதுமையும், பார்லியும் உண்டானது. காட்டு மிருகங்கள் வீட்டு மிருகங்கள் ஆயின.


இப்போது முழுநேரமும் உணவின் மீதே அவன் கவனம் இருக்கவில்லை. சேமித்துக் கொள்ளும் வசதி கிடைத்தது. எனவே பல்கிப் பெருகினான். ஒரு கூட்டத்தில் இருக்கின்ற அனைவருக்கும் பரஸ்பரம் தெரியும் என்கிற நிலைமை மாறியது. தெரியாத சமூகம் மக்கள் தொகைப் பெருக்கத்தால் உண்டாகத் தொடங்கியது. நகரங்கள் ஏற்பட்டன.



மனிதர்கள் தங்களுக்குள் வேறுபடுத்தத் தொடங்கினர். திருமண முறைகளில் ஈமச்சடங்குகள், கொண்டாட்டங்கள், ஊர்வலங்களில், பண்டிகைகளில் அவர்கள் கடைபிடிக்கும் நெறிமுறைகளைப் பொறுத்து உணவும், உடையும், அலங்காரமும், ஆடம்பரமும் அவர்களைப் பாகுபடுத்தியது.


மொழி பிணைப்பதாக உருவானது. அதுவே பிணக்கு ஏற்படுத்துவதாகவும் மாறியது. ஒரே மொழி பேசுபவர்கள் ஒன்று சேர்ந்தார்கள், ஒரே உருவத்தை வழிபடுபவர்கள் பாதுகாப்பாக உணர்ந்தார்கள். அவர்களின் பயத்தை உருவாக்க அவர்களிலிருந்து ஒருவனுக்கு, கட்டுப்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டது. தன் இனத்தைச் சார்ந்தவனைக் காப்பாற்றுவதே அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் வழியாக அந்தக் குறுநிலத் தலைவனுக்குத் தெரிந்தது.


இப்போது அளவுக்கதிகமாக வளர்ந்த நகரங்களில் ஆதிக்க மனப்பான்மை தோன்ற ஆரம்பித்தது. சிலர் தங்களைக் கூடுதல் தகுதியுடையவர்களாகக் கருதிக் கொண்டனர். உடலின் வலிமையால் மற்றவர்கள் செய்கைகளைக் கட்டுப்படுத்தினார்கள். அடுத்த குடிகளையும், குடியிருப்புகளையும் கட்டுப்படுத்த முனைந்தனர்.


விலங்குகளை வேட்டையாடியவன் அதை வேறு விதத்தில் தொடர்ந்தான். அதுவே மோதலாக, சண்டையாக, போராக உருவானது. போரின் மாறுபட்ட வடிவமே தேர்தல். மனித இனம் இனி உலகம் முழுவதும் ஒரே குடைக்குள் வருவதற்கு வாய்ப்புகளே இல்லை. எங்கேனும் வேறு கிரகத்திலிருந்து படையெடுப்பு நடந்தால்தான் அது சாத்தியமாகும்.



ஒவ்வொரு தனி மனிதனும் ஆளுகை செலுத்த அவன் மனைவியும் மக்களும் அகப்பட்டனர். அடிமையாக இருப்பவனும் அடிமைகளை வைத்துக் கொள்ள ஆசைப்பட்டான். அவனுக்கான சொத்தைப் பாதுகாக்க அமைப்பு தேவைப்பட்டது. அதுவே அரசாங்கமாக ஆனது. பலவீனமானவர்களை பலம் வாய்ந்தவர்கள் பாதுகாப்பது போன்ற பாசாங்கே அரச பதவிகளை ஆயத்தம் செய்தது


வெளியிலிருந்து வருபவர்கள் ஏதேனும் ஒரு காரணத்தைக் காட்டி அடுத்தவர்களை விலங்குகளைப்போல நடத்துவது சரித்திரத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அடிமைகள் என்பது அங்கீகரிக்கப்பட்ட சமூகங்களில் இருந்தனர்.


சூப்பர் குடியினர் உருவாயினர். சூப்பர் அடிமைகளும் உருவாகத் தொடங்கினர். அப்போது மிகப்பெரிய கட்டடங்கள் கட்டப்பட்டன.அரண்மனைகள் சிலரின் ஆளுகைக்காக உருவாயின. செத்த பிறகும் பிரமிடுகள் 4,993,000 டன்கள் கல்களை நகர்த்தி உருவாயின.


அப்போதும், இப்போதும் வெளியிலிருந்து ஓர் எதிரியை உருவாக்கினால்தான் தலைமையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்கிற உத்தி மட்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. குழுவைச் சார்ந்தவர்களை எப்போதும் பயத்தின் பிடியில் வைத்திருப்பது தான் அவர்களைப் பணிவுள்ளவர்களாக ஆக்கும் பாணி. எதிரி எப்போது வேண்டுமானால் படை எடுக்கலாம் என்ற எண்ணத்தை உருவாக்கினால்தான் தலைமை தக்க வைக்கப்படும்.
 

மனிதன் நகர்ப்புறங்களில் நெருக்கமாக வாழ்ந்த போது, உயிரையும், வாழ்வையும் கக்கத்தில் கெட்டியாகத் தக்க வைத்துக் கொள்வதற்காக, புதிய புதிய கண்டுபிடிப்புகளும் அவனிடம் உதயமாயின. எவனிடம் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் இருக்கின்றனவோ அவனே மற்றவர்களை வீழ்த்த முடியும், குழுவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்க முடியும்.


காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி உடலில் மட்டும் நடக்காமல் உள்ளங்களிலும் நடந்தது. உடலின் வலிமையைக் காட்டிலும் மக்களின் சக்தி முக்கியத்துவம் வாய்ந்தது என்று தங்களுக்கான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை யாரிடம் வழங்குவது என்று மக்களே தேர்ந்தெடுத்தார்கள். அவர்களைத் தேவைப்பட்டால் தூக்கியடிக்கும் கடிவாளத்தைக் கைகளில் வைத்துக் கொண்டார்கள். இன்று இந்த அமைப்புதான் பல்வேறு வடிவங்களில் வளர்ந்தும், தேய்ந்தும் வாழ்ந்து வருகிறது.


பிறப்பினால் மட்டுமே தலைமைப் பண்பு என்ற நிலை, கடந்த நான்கு நூற்றாண்டுகளாக மாற ஆரம்பித்தது.

எல்லா நிலைகளிலிருந்தும் அயராத உழைப்பும், தன்னலமற்ற தன்மையும், துணிவும், முயற்சியும், அர்ப்பணிப்பும் இருப்பவர்கள் வைராக்கியத்துடன் போராடினால் தலைமைப் பதவியை அடைய முடியும் என்பது இன்று அறிவியல்ரீதியாக உணரப்பட்டு விட்டது.


அலெக்சாண்டரின் தளபதி செல்யூகஸ் நிகேடர் தலைமையிலான கிரேக்கப் படையை துவம்சம் செய்தவர் வேளாண் குடியில் பிறந்து அரசனாக ஆகிய, சந்திரகுப்த மௌரியர். அவருடைய பேரன் அசோகரே இன்றும் உலக மக்களால் ஒப்பற்ற மன்னராகக் கருதப்படும் ஒருங்கிணைந்த இந்தியாவின் சக்கரவர்த்தி.
பராக்கிரமம் மிக்க பாபரது மகன் ஹுமாயுனோ தடுக்கி விழுந்து மரணத்தைத் தழுவியவர்.
வெறும் சிப்பாயாகச் சுடரும் கண்களுடன் இருந்த ஆஃப்கான் வீரர் ஷெர்கான், முகலாய சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்த்தவர். அவரே ஷெர்ஷா என்ற பெயரில் கொடி கட்டிப் பறந்தவர்.

ஔரங்கசீப்பின் விழிகளுக்குள் விரல்களை விட்டு ஆட்டிய வீர சிவாஜி அரசக்குடியில் பிறந்தவர் அல்ல.

ஃபிரான்ஸின் குடிமகன் கூட அல்ல, ஆனால் அதன் சக்கரவர்த்தியாக தன் கையாலேயே முடி சூட்டிக் கொண்டு உலக நாடுகளையெல்லாம் ஒரு கை பார்க்க முனைந்தவர் நெப்போலியன். ஹிட்லர் ராஜவம்சத்தில் பிறந்தவரல்லர். சாமானியக் குடும்பத்தில் அறிவுச்சுடராய் அவதரித்தவர் லெனின். கடைநிலைத் தொழில் செய்யும் சமூகத்திலிருந்து கடைந்தெடுத்த வெண்ணெய்யாக வந்து காலத்தின் கன்னத்தில் களங்கமில்லா அழகை அலங்கரித்தவர் ஆபிரகாம் லிங்கன்.


சொந்த நாட்டை மட்டுமல்ல, சுதந்திர வேட்கை உள்ள எத்தனையோ பேருக்கு ஆதர்ச புருஷரா இன்றும் இருக்கும் மகாத்மா காந்தி, சத்திரிய வம்சத்தில் பிறக்கவில்லை. மூன்று டாக்டர் பட்டம் பெற்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்து, தொடர்ந்த உரையாடலின் மூலம் காந்தியடிகளின் மனத்திலும் சாதி ஒழிய வேண்டும் என்கின்ற பாதிப்பை ஏற்படுத்திய அண்ணல் அம்பேத்கர் மேட்டுக்குடியில் பிறந்தவரல்லர்.
1954 முதல் 1963 வரை ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து முதலமைச்சராகப் பணியாற்றிய பெருந்தலைவர் காமராஜர் தலைவர்கள் பிறந்த பரம்பரையில் பிறக்கவில்லை.
காஞ்சிபுரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து அங்கேயே பச்சையப்பன் பள்ளியில் படித்து, பின்னாளில் ஆங்கிலத்திலும், தமிழிலும் அசைக்க முடியாத உரைகளையாற்றி, தமிழக மக்களால் அன்புடன்அண்ணாஎன்று அழைக்கப்பட்ட சி.என். அண்ணா துரை தலைமைப் பண்பு, தகுதியால் வருவதே என்பதற்கு ஓர் அடையாளம்.


ஒரு காலத்தில் உலகமெங்கும் இளைஞர்களின் இதயத்தில் அணையாத அக்னி சுடர் விட்டுக் கொண்டிருந்தது. அநியாயங்களைக் கண்டு கொதிப்பதும், அன்னிய சக்திகளை எதிர்ப்பதும் அடையாளங்களை இழக்காமல் தக்க வைத்துக் கொள்வதும் அவர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவதைப் போல இனிப்பாக இருந்தது. சுயநலம் கலக்காமல் வாழ்வதே இளமைப்பருவம் என்று எல்லோரும் பாராட்டும்படியாக இந்திய இளைஞர்கள் இருந்தார்கள்.



இன்று இளைஞர்கள் முப்பது வயதுக்குள் அத்தனை வசதிகளையும் மொத்தமாகப் பெறவேண்டும், நாற்பது வயதுக்குள் பிரச்னையில்லாத எதிர் காலத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்று பலர் எண்ணுகிறார்கள்.


இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு பேசும் படம் என்கின்ற பேசாத படம் ஒன்று வெளியானது. அந்தப் படத்தின் நாயகன் வீதியில் செல்லுகிறபோது சச்சரவு ஒன்று நடந்து கொண்டிருக்கும், அந்தக் கலவரத்தின் சின்னத்துகள்கூட தன் புலன்களில் எங்கேயும் படிந்து விடக்கூடாது என்று அவற்றிலிருந்து தீவிரமாக ஒதுங்கிச் செல்லும் மாநகரப்போக்கு ஒரு காட்சியில் வரும். இன்று பல இளைஞர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள் என்பது வேதனையான வெளிப்பாடு.
 
எதற்குப் பிரச்னை என்று நினைப்பவர்கள் மத்தியில் தலைமைப் பண்பைப் பற்றிய விழிப்புணர்வையும், அதன் அம்சங்களைப் பற்றிய தெளிவையும் ஏற்படுத்தவே இத்தொடரின் நோக்கம்.


Thanks-Kalki

சிம்புவோட லேட்டஸ்ட் லவ்வர் ஹன்சிகாவுக்கு உதயநிதி பிறந்த நாள் வாழ்த்து சொன்னா அது தப்பா?

1. சமக விலை போகக்கூடிய கட்சியல்ல -சரத்குமார் # ஆமா.அது நமீதா மாதிரி.மார்க்கெட் போன சரக்கு



-----------------------


2. அன்னிய நேரடி முதலீடு ஆபத்தின் ஆரம்ப கட்டம்: கருணாநிதி# சோனியா ஜி உங்களைத்தான் மறைமுகமாத்தாக்கறார் போல



-------------------------


3. மக்கள் தன்னம்பிக்கையை கொண்டிருந்தாலே வறுமையை ஒழி்க்கமுடியும் : ராகுல் # காங்கிரசை ஒழிக்க ஐடியா ப்ளீஸ்



---------------------------


4. காதலர்களுக்கான 10 புதிய மொபைல் அப்ளிகேஷன்ஸ்!!! # 9 மாசத்தில் பலன் தெரியும்?



-------------------------


5. பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா அடிபணியாது என சோனியா காந்தி ஆவேசம்! # ஆடி யில் பணியாதது ஆவணியில் பணியும்



-------------------------


6. ஆல்கஹால் இல்லாத பர்ப்யூம்தான் பயன்படுத்துகிறேன் - விஜயகாந்த். # ஓஹோ.வயித்துக்குள்ளேயும் வாசம் வீசும்?



-----------------------------


7. இந்தாங்க 100 ரூபா.தலைவா வுக்கு டிக்கெட் 1 குடுங்க.



10 ரூபா டிக்கெட்க்கு 100 ரூபா தர்றியே.சேஞ்ச்சா குடுப்பா


------------------------


8. நான் நண்பேன்டா, லவ்வர்டா இல்லை: ஆர்யா # காரியம் முடியும் வரை காத்திரு



----------------------


9. 8மொழி தெரிந்த ஜெ ஏன் பிரதமராக கூடாது?--நாஞ்சில் சம்பத்.# மொழி தெரிஞ்சவங்க பி எம் ஆகலாம்னா துபாஷ் க்கு தான் செம சான்ஸ்



--------------------------


10. விஜய்யை மீண்டும் இயக்க விரும்புகிறேன்! - பிரபு தேவா # லேட்டஸ்டா மகேஷ்பாபு படம் எது பார்த்தீங்க?





----------------------


11. 10 க.நா.சு.க்கள் செய்ததை நான் ஒரே ஆள் செய்தேன் - சாரு # அதை விடுங்க.நாசூக்கா பிச்சை எடுப்பதில் உங்களை அடிச்சுக்க ஆளே இல்லையாமே?



---------------------



12. நகர்ப்புற டாக்டர்களில் பெரும்பாலானோர் MBBS படித்தவர்கள் அல்ல: அதிர வைக்கும் ஆய்வு! # அட்லீஸ்ட் பிளஸ் 2வாவது படிச்சாங்களா?



------------------------


13. ஹன்சிகா மைன்ட் வாய்ஸ் - இந்தாளை மேரேஜ் பண்ணிக்கிட்டா என்னென்னெத்துக்கு எல்லாம் ரசிகர்கள் கிட்டே ஐடியா கேப்பாரோ? அய்யய்யோ # சிம்பு




-----------------------------


14. ஹன்சிகா வுக்கு உதயநிதி ஸ்டாலின் மிட் நைட் ல அலாரம் வெச்சிருந்து பர்த்டே விஷ் பண்றாரு.சிம்பு யுவர் அட்டென்சன் ப்ளீச் ;-))



------------------------------


15. ஹன்சிகாவுக்கு என்ன குடுக்கலாம் ரசிகர்களிடம் கேட்கும் சிம்பு # நயன் தாரா வுக்கு என்ன குடுத்தீங்க்ளோ அதை விட காஸ்ட்லி கிப்ட்




-----------------------


16.  ஆக்‌ஷன் காட்சிகளுக்குப் பொருத்தமான நடிகை அனுஷ்கா தான்: ஆர்யா புகழாரம் # ஆரத்தோட நிறுத்துங்க.ஒட்டியாணம் வரை போய்டப்போறீங்க



---------------------------


17. ஜெவின் கடிதத்திற்கு மன்மோகன் பதில் கடிதம்# பெண்மணி அன்போட மவுனகுரு எழுதும் லெட்டர்.ச்சே கடுதாசி வெச்சுக்கலாமா?



-----------------------


18. அதிக தூரம் ஓடினால் தான் அதிக தூரம் தாண்ட முடியும் - கலைஞர் # அதிகமா ஊழல் பண்ணாத்தான் ஏகப்பட்ட சொத்து சேத்த முடியும்னு ு அர்த்தமா தலைவா



-----------------------------


19. மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவதோடு நின்று விடக்கூடாது - கருணாநிதி. # நாமளே டோர் டெலிவரி பண்ணி கால்ல விழனுமா?தலைவரே?



---------------------------


20. ஹாலிவுட் போகும் ரஜினியின் கோச்சடையான் # உள்ளூர்லயே அது ஓடாது.வெளிநாடு போய் பேரை கெடுத்துக்கப்போகுது




-----------------------



21. ஃபிளாஸ் நியூஸ் -  நடு ராத்திரியில் ஹன்சிகாவுக்கு சிம்புவை முந்திக்கொண்டு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன உதயநிதி ஸ்டாலின், கலைஞர் அதிர்ச்சி










Monday, August 12, 2013

தலைவா -சந்தானம் காமெடி டயலாக்ஸ் & விஜய் பஞ்ச் டயலாக்ஸ்

http://www.vijayfansclub.com/wp-content/uploads/2013/03/thalaiva-movie-photos-02.jpg


1.  நான்  செய்யற  எந்தக்காரியமும்  என் பையனோட  வாழ்க்கைல  இடைஞ்சலா  இருந்துடக்கூடாது


2. நாம   ஒரு விஷயத்துல  இறங்கிட்டா   விளைவு  வெற்றியாத்தான்  இருக்கனும்


3.  இப்போ  உடனே   எனக்கு   தண்ணி  வரனும்



உடனே   தண்ணி  வரனும்னா   ஒரு  கிலோ வெங்காயம் வாங்கி உரி



4.  உனக்கு ஏண்டா  டான்ஸ்னாலே  பிடிக்காது ?

 ஏன்னா  எனக்கு  டான்ஸ்  வராது



5. உனக்கு ஏண்டா  காதலியே இல்லை?

 எங்கடா? இப்பவெல்லாம்   10 வயசுலயே  ரிசர்வ் பண்ணி வெச்சுக்கரானுங்க, அதுக்கு கீழே இறங்கி வர மனசு இடம்  கொடுக்க மாட்டேங்குது



6.  புருஷன்  குடிச்சுட்டு வந்தாலும் கதவைத்திறக்கறவங்க  தமிழ்ப்பொண்டாட்டிங்க , பொண்டாட்டியே   குடிச்சுட்டு வந்து கதவை தட்டுனா   ஃபாரீன் பொண்டாட்டிங்க . அதான்  ஐ லைக் தமிழ் சம்சாரம்ஸ்




7.  இந்த  யூ  ட்யூப்பும்  , ஊர்க்கிழவியும்  ஒண்ணுதான் .ஒரு விஷயம்  கிடைச்சா போதும் , ஊர் பூரா பரப்பிடுவாங்க 



8.  பிளாக் காபி  சூப்பர்


 டேய், அது  ரசம்



9.  அமலாபால்  - ஐ லவ் யூ  கேள்விப்பட்டிருக்கேன்  , வீ லவ் யூ - இப்போதான்  கேள்விப்படறேன்



10. யாருப்பா   இவன் ? பவர் ஸ்டார்  தம்பி புவர் ஸ்டார் மாதிரி  இருக்கான் ?



11.  படுத்துட்டு ஆடறது  , உக்காந்துட்டு ஆடறது  , உடம்பை  வளைச்சுட்டு ஆடறது  இப்டி ஏண்டா  இம்சை பண்றே?



12. அடுத்தவன்  பட்டா போட்ட இடத்துல  நீ  ஏண்டா கொட்டாய் போடப்பார்க்கறே?


13. அடுத்தவன்  ஃபோன்ல ஐ எஸ் டி கால் பண்றது தப்பு டா செல்லம்


14.  என் கூடவே வந்துடுங்க


 இது  ஒரு வழிப்பாதை , திரும்புனா  உயிர் தான் வரும் 



15. நம்மால மத்தவங்க  வாழ்ந்ததாத்தான்  இருக்கனும் , செத்ததா  இருக்கக்கூடாது



16. தலைவன்கறது நாமா  தேடிப்போகும்  விஷயம்  இல்லை , நம்மைத்தேடி வரும் விஷயம்



17.  ஏதோ  மீட்டிங்க்னு சொன்னே? பீடா கடைக்காரனுங்க  கூட எல்லாம் பேசிட்டு  இருக்கான் ?



18 . ஒரு தடவை  கைல கத்தி வந்துட்டா  1 காக்கும்   2 அழிக்கும்  ஆனா  கத்தியை விட முடியாது



 19.  தலைவன் தலைவன்னு சொல்லி  ஒரு கூட்டமே அவனை தலைல தூக்கி வெச்சுக்கிட்டு  கொண்டாடுது


20. இவங்களுக்கு என்னால என்ன  கொடுக்கமுடியும்னுதோணல  , ஆனா  இருப்பதை  கொடுப்பேன்



 21.  எப்படி  தப்பிச்சேன் பார்த்தியா?



 இதுக்கு மாட்டியே இருக்கலாம் 


22.  போல்  போல்  எதுவா  இருந்தாலும் என் கிட்டேயே போல் . நான் விஷ்வாவை  விட  மேல்  ( ஹிந்தில போல் = சொல்லு )



23.  இந்த டிரஸ் ல நீ வைஜயந்தி ஐ பி எஸ் ல வர்ற டிஸ்கோ சாந்தி மாதிரி சாரி  விஜய சாந்தி மாதிரி  இருக்கே


24.  அரசியல்ல  எல்லாமே நமக்கு சாதகமா நடக்காது  , நடப்பதை நமக்குசாதகமா  ஆக்கிக்கனும்



 25. அவ டிஎஸ்பின்னு என் ஈ எஸ் பி சொல்லுது




26.  எல்லாத்தொழிலுக்கும் தலைவன்னு  ஒருத்தன்  இருப்பான்

http://movierunning.com/wp-content/uploads/2013/03/Thalaiva-Movie-Latest-Shooting-Location-Stills-12.jpg






இளைய தளபதி VS புரட்சித்தலைவி - காமெடி கலாட்டா

1. லேடீஸ் பேங்க் ஆரம்பிச்சிருக்காங்களாம், நம்மாளுங்க தப்பா புரிஞ்சுக்கிட்டு போய்டப்போறாங்க ;-))



----------------------------


2. இன்றைய நமது தேவை – நல்ல லட்டு பிகர்கள். ஆனால் நமக்கு கிடைப்பதோ ஐ மீன் கண்ணுக்கு தட்டுப்படுவதோ டொக்கு பிகர்கள் தான் !!!




-----------------------------


3. ரூ.ஆயிரம் கோடி முதலீட்டில் அனைத்து பெண்கள் வங்கி அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது # லாக்கர்ல நகை வெச்சா இருக்குமா?






=-----------------------------------






4. விஜய் -அமலாபால் கெமிஸ்ட்ரியை விட சந்தானம் - அமலாபால் செம ஒர்க் அவுட் ஆகி இருக்காம் # அய்யய்யோ , சந்  தானம்








---------------------------




5. எதேச்சையாவோ , திட்டமிட்டோ தலைவா ரிலீஸ்தேதி  மகேஷ் பாபு பிறந்த நாள் அன்னைக்கு ;-)




--------------------------------




6. ஹன்சிகா சிம்பு லவ்வை நான் நம்பலை.ஏதாவது ஆதாரம் இருக்கா? அட்லீஸ்ட் சிம்பு ஹன்சிகா உதட்டையாவது கடிச்சாரா? வீ வான்ட் எவிடென்ஸ்



-----------------------------


7. என்னய்யா அநியாயமா இருக்கு?அவனவன் ஒரு பிகருக்கே அல்லாடிட்டு இருக்கான்.இங்கே அவனவன்.2 பிகருங்களோட சுத்திட்டிருக்காங்க? # ஈரோடுVSP




----------------------------


8.'பாக் நடிகை படத்தை திரையிடுவதா?' - கடும் எதிர்ப்பால் வீணா மாலிக் நடித்த சில்க் படத்துக்கு தடை!! # அட வீணா போனவனுங்க்ளா!




---------------------------


9. தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை -கலைஞர் # ஆரம்பம் பார்த்தா தெரியும் தலை வா.




-------------------------


10.  நான்தான் படிக்கல நீங்களாச்சும் படிங்கப்பா -Ajith # படிச்சா வேலைக்குப்போகனும்.படிக்காம தொழில் அதிபர் ஆகிட்டா சவுகர்யம். ஏதோ ஒரு நடிகையை கரெக்ட் பண்ணிடலாம்



-------------------------


11. செல்வராகவன் ன் இரண்டாம் உலகம் ஜெ வின் இரண்டாம் உலகம் கொடநாட்டை கிண்டல் பண்ணுதாமேன்னு யாரும் கொளுத்திப்போடலையா?




-------------------------



12. SOFT ஹீரோக்களை (கமல் ,விஜய்) கட்டம் கட்டும் மேடம்! எங்க சூப்பர் ஸ்டார் படம் கோச்சடையான் ( சப்போஸ் ரிலீஸ் ஆனா) தடை செய்ய முடியுமா?



---------------------------


13. புரட்சித்தலைவிக்கு ! எங்க இளைய தளபதி படத்தை தடை பண்ணினதுக்கே இத்தனை பேர் பொங்கறாங்க்ளே! அவரை கைது செஞ்சா என்ன ஆகும்னு யோசிச்சு பாருங்க



------------------------


14. தமிழ் இனத்தலைவர் ஏன் ராஜதந்திரின்னு பேர் எடுத்தார்னு இளைய தலைமுறையினர் இப்போ புரிஞ்சிருப்பாங்க.பழைய பகையை மனசுல வெச்சு அடிச்சாரே சிக்சர்



----------------------------


15. தமிழ்நாட்டில் ப்ளூ ஜீன்ஸ் ,ஒயிட் சர்ட் அணிந்து யார் ரோட்டில் நடந்தாலும் கைது செய்யவும் - ஜெ உத்தரவு # சும்மா



----------------------------


16. விஜய் டூ தமிழ் இனத்தலைவர் - நான் கேட்டேனா முருகேஷா? இனி தலைவா அடுத்த ஜென்மத்துல கூட வராது





---------------------


17. உயிரினும் மேலான உடன் பிறப்பே! தம்பி விஜய் க்கு ஒரு பிரச்சனைன்னா நான் சும்மா இருக்க மாட்டேன்.பிரதமருக்கு கடிதம் எழுதுவேன்.




-------------------------


18. உடன்பிறப்பே! கழகத்தால் காவலன் ஒரு நாள் மட்டுமே தாமதம்.அம்மையார் ஆட்சியில் ஒரு வாரம் தாமதம்.சிந்திப்பீர் !



-------------------------


19. சித்ரகுப்தா! இவன் பாவம் செஞ்சிருக்கானா? புண்ணியம் செஞ்சிருக்கானா?



 குழப்பமா இருக்கு பிரபோ.ஏதோ படம் பாக்க முடியலைனு இங்கே வந்துட்டான்.







-----------------

20. படம் ரிலீஸ் ஆகலைன்னா தற்கொலை பண்ணிக்குவோம்னு ரசிகர்கள் மிரட்றாங்க. ஜெ - ரிலீஸ் பண்ணா தற்கொலை பண்ணிக்குவோம்னு கட்சித்தொண்டர்கள் சொல்றாங்க



-----------------------------


21. பாண்டிச்சேரியை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் - விஜயகாந்த்.# பாண்டி நாட்டு சிங்கம் சொல்லிடுச்சு்



---------------------------


22. சில அரசியல் நெருக்கடிகளால் இளைய தளபதி யின் ஜில்லா டைட்டில் குல்லா என மாற்றப்பட்டது .அரே அல்லா # சும்மா



------------------------


23. பொண்ணுங்க பொதுவா ஒரு வணக்கம் வெச்சாக்கூட தனக்குத்தான் அது ன்னு நினைச்சு வான்ட்டடா வண்டில ஏறிக்கறவன் தான் மரத்தமிழன் சாரி மறத்தமிழன்



------------------------



24. தலைவா படப்பெட்டி திருப்பூர் கார்மென்ட்சில் ட்ரிம்மிங் செக்சன்ல இருக்காம்.எடிட்டிங் ட்ரிம்மிங்



------------------------


25. அடிக்கடி பொண்ணுங்க OMG சொல்றாங்க.அதுக்கு அர்த்தம் ஓ மை காட் # அடக்கடவுளே கடவுளே.மியாவ்



-----------------------------



26. ஜெயா செய்திகள் - இனி தமிழகத்தில் யாரும் விஜய தசமி விழாக்கூட கொண்டாடக்கூடாது.காரணம் பின்னர் யோசித்து சொல்லப்படும்




----------------------



27. ஜெயா செய்திகள் - இனி தமிழகத்தில் யாரும் விஜய தசமி விழாக்கூட கொண்டாடக்கூடாது.காரணம் பின்னர் யோசித்து சொல்லப்படும்



-----------------------------


28. ஜெ - படத்துல இங்க்லீஷ் வார்த்தை அதிகமா இருக்கு.சாரி.



விஜய் - அப்போ கவுதம் மேனன் படம் எப்டி ரிலீஸ் ஆச்சு?


---------------------


29.மேடம்.விஜய் படத்தை நீங்க தடை பண்ணீங்களா?



ஜெ - அவர் யார்னே தெரியாது.



-------------------------


30. தமிழகமுதல்வர் அம்மா இந்த பிரச்சினையை தீர்த்து வைப்பார்-தனுஷ்# ம் ம் தீர்த்துடுவார்னு தோணுது



---------------------------------



31. தலைவா படத்தை வெளியிடாமல் தடுப்பது நாங்கள் அல்ல-தமிழக டிஜிபி# அப்டினு சொல்லச்சொல்லி மேலிட மேடம் உத்தரவு?


-------------------------



32. ஹவுஸ் ஓனர் சம்சாரம் கிட்டே தலைவா பாலக்காடு போய் பார்த்தாச்சுன்னு அள்ளி விட்டாச்.இனி நாமளா ஒரு திரைக்கதை ரெடி பண்ணி சொல்லனும்



---------------------------


33. தியேட்டர் ஆபரேட்டருக்கும் எனக்கும் ஒரே மன நிலை - தலைவா படத்தை ஓட்ட முடியலையே?





---------------------------


34. தலைவா' ரிலீஸாகும் வரை வேறு எந்தப்படத்தையும் பார்க்க மாட்டேன்-சிவகார்த்திகேயன். # வேணாம்ணா.சிவ கார்த்தி கேனயன் னு நினைச்சுக்கப்போறாங்க




------------------------------


35. டாடி டாடி ஓ மை டாடி .உன்னைக்கண்டாலே கடுப்பாகுதே # விஜய் மைன்ட் வாய்ஸ்



-----------------------------


36. பாவமன்னிப்பு கேட்கும் அபிலாஷா - நான் என்ன பாவம் செய்தேன்? பாதிரியார் @ சர்ச் - முதல் பாவம் உன்னுதுதாம்மா



------------------------


37. ரொம்ப நாளா சிங்கிளாவே இருக்கோமேனு எனக்கே ஃபீலிங்ஸா இருக்கு.- டாப்ஸி # நட்சத்திர பங்களா.நிக்காதே நீ சிங்கிளா சாங் டெடிகேட்டட் பை சிம்பு




---------------------------


38. நான் என்ன பாவம் செய்தேன்? என் மகனுக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்குது! - எஸ்ஏசி. # நடப்பதெல்லாம் நன்மைக்கே -,அஜித்



-------------------------


39. விஸ்வரூபம் 2 வை எப்படி பர பரப்பாக்குவது?ன்னு 25 பேர் கொண்ட குழுவுடன் கமல் இந்நேரம் டிஸ்கஷன்ல இருப்பார்



--------------------------


40. தில் இருந்தா கேப்டன் மாதிரி எதிர்த்து நிக்கனும்.இல்ல அஜித் மாதிரி சுமூகமா போய்க்கனும்




-------------------------


41  ரஜினி மைன்ட் வாய்ஸ் - நாமும் கமல் விஜய் மாதிரி பர பரப்பைக்கிளப்பி கோச்சடையானை போணி பண்ணிடனும்



-------------------------



42. தலைவா-வைபிளாக் டிக்கெட் ல பார்ப்பதும் ஆல்ரெடி 2,3 பேர் லவ் பண்ணினபொண்ணை மேரேஜ் பண்ணிக்கறதும் ஒண்ணுதான் # பாட்சா,நாயகன்,லீடர்



--------------------------


43.தலைவா ரிலீஸ் ஆகும்வரை நான் யாரையும் காதலிக்க மாட்டேன் - நயன் தாரா அதிரடி அறிவிப்பு



-----------------------


44. உன்னை மாதிரி நேர்மையா இருக்கறவங்க தான் அரசியலுக்கு வரனும்.இலவசம் இலவசம்னு நாட்டை குட்டிச்சுவர் ஆக்கிட்டாங்க # தலைவா பஞ்ச் 2 ,விஜய் ராக்ஸ்



----------------------------


45. உன்னை மாதிரி ஆடிட்டு இருந்தவங்க தான் இப்போ அரசியல் ல ஜெயிச்சிருக்காங்க # தலைவா பஞ்ச் # ஏன் தடைனு இப்போ புரியுது



-----------------------------


46. கொடநாட்ல இருந்தாலும் அரசு பணிகளை சிறப்பாக செய்தேன்-ஜெ. # சினிமாப்படத்தை தடை பண்றதுதான் அரசுப்பணியா மேடம்?



-----------------------------


Sunday, August 11, 2013

அஜீத் குமாரின் அடுத்த பட தலைப்பு 'வீரம்'.

அஜீத் குமாரின் 54ஆவது படமாக விஜயா productions சார்பில் திருமதி பாரதி ரெட்டி தயாரிக்க  , சிவாவின் இயக்கத்தில் தயாராகும் படத்துக்கு ' வீரம் ' என பெயர் சூட பட்டு உள்ளது . வ , வி , ஆகிய எழுத்துக்களில்  ஆரம்பித்த அஜீத்  குமாரின் முந்தைய படங்களான வாலி, வில்லன் , வரலாறு, ஆகிய படங்களை தொடர்ந்து வரும் படம்தான் 'வீரம் '.இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரும் 'வி' என்ற எழுத்தில் துவங்குவது நல்ல துவக்கமே . படத்தின் ஒரு  முக்கிய கட்டமான ஓடும் ரயிலில் நடக்கும் ஒரு  சண்டை காட்சிக்காக ஓடிஷாவில் உள்ள ராயகடா  என்னும் ஊரில் ஏராளமான பொருட்செலவில் தயாராகி வரும் ' வீரம் ' பொங்கல் அன்று திரைக்கு வருவது உறுதி என தயாரிப்பு நிறுவனத்தின் செய்தி குறிப்பு கூறுகிறது .வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இப்படத்தின் 'First look'  வெளியடபடுகிறது என்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும்.  - See more at: http://www.ajithnet.in/headline/?Official-:-Ajith-54th-Movie-Titled-as-Veeram-&read=209#sthash.d6ycZtpq.dpuf
அஜீத் குமாரின் 54ஆவது படமாக விஜயா productions சார்பில் திருமதி பாரதி ரெட்டி தயாரிக்க  , சிவாவின் இயக்கத்தில் தயாராகும் படத்துக்கு ' வீரம் ' என பெயர் சூட பட்டு உள்ளது . வ , வி , ஆகிய எழுத்துக்களில்  ஆரம்பித்த அஜீத்  குமாரின் முந்தைய படங்களான வாலி, வில்லன் , வரலாறு, ஆகிய படங்களை தொடர்ந்து வரும் படம்தான் 'வீரம் '.இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரும் 'வி' என்ற எழுத்தில் துவங்குவது நல்ல துவக்கமே . படத்தின் ஒரு  முக்கிய கட்டமான ஓடும் ரயிலில் நடக்கும் ஒரு  சண்டை காட்சிக்காக ஓடிஷாவில் உள்ள ராயகடா  என்னும் ஊரில் ஏராளமான பொருட்செலவில் தயாராகி வரும் ' வீரம் ' பொங்கல் அன்று திரைக்கு வருவது உறுதி என தயாரிப்பு நிறுவனத்தின் செய்தி குறிப்பு கூறுகிறது .வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இப்படத்தின் 'First look'  வெளியடபடுகிறது என்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும்.  - See more at: http://www.ajithnet.in/headline/?Official-:-Ajith-54th-Movie-Titled-as-Veeram-&read=209#sthash.d6ycZtpq.dpuf
 
 
அஜீத் குமாரின் அடுத்த பட தலைப்பு 'வீரம்'.

அஜீத் குமாரின் 54ஆவது படமாக விஜயா productions சார்பில் திருமதி பாரதி ரெட்டி தயாரிக்க  , சிவாவின் இயக்கத்தில் தயாராகும் படத்துக்கு ' வீரம் ' என பெயர் சூட பட்டு உள்ளது . வ , வி , ஆகிய எழுத்துக்களில்  ஆரம்பித்த அஜீத்  குமாரின் முந்தைய படங்களான வாலி, வில்லன் , வரலாறு, ஆகிய படங்களை தொடர்ந்து வரும் படம்தான் 'வீரம் 
 
 
 
 
'.இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரும் 'வி' என்ற எழுத்தில் துவங்குவது நல்ல துவக்கமே . படத்தின் ஒரு  முக்கிய கட்டமான ஓடும் ரயிலில் நடக்கும் ஒரு  சண்டை காட்சிக்காக ஓடிஷாவில் உள்ள ராயகடா  என்னும் ஊரில் ஏராளமான பொருட்செலவில் தயாராகி வரும் ' வீரம் ' பொங்கல் அன்று திரைக்கு வருவது உறுதி என தயாரிப்பு நிறுவனத்தின் செய்தி குறிப்பு கூறுகிறது 
 
 
 
.வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இப்படத்தின் 'First look'  வெளியடபடுகிறது என்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும்.
 
நன்றி -http://www.ajithnet.in/headline/?Official-:-Ajith-54th-Movie-Titled-as-Veeram-&read=209
 
 
 
 
1. இதே  விஜய் யா  இருந்தா வீரப்பிரதாபன்-னு டைட்டில் வெச்சு மம்மியை உசுப்பி விட்டு மாட்டி இருப்பாரு, அஜித் பொதுவா வெச்சுட்டாரு




------------------------


2. அஜித்-ன் அடுத்த பட டைட்டில் - வீரம் # சப்போஸ் மம்மி தடை பண்ணினாக்கூட அது ஒரு வகை ரம் -னு சொல்லி சமாளிச்சுக்கலாம்



-----------------------


3. ரஜினி மைண்ட் வாய்ஸ்  -  ஆளுங்கட்சிக்கு  எதிரா   அறிக்கை  விட நம்ம கிட்டே  வீரம் இல்லைன்னு குத்திக்காட்றாரோ? 



------------------------------


4. எப்போ பாரு நடக்கறாருன்னு இனி கிண்டல் பண்ண  முடியாது , இதுல ரன்னிங்க்  வீரரா வர்றாராம் # வீ  ரன் 



-------------------------


5. ஜெ - அஜித்துக்கும் ஆப்பு வெச்சுடுவோமா? 



 ஓ பி எஸ் - ம்க்கும், அவர் உங்களுக்கே வெச்சுடுவாரு  # வீரம்



-------------------------


6. ஆயுதக்கலாச்சாரத்தை ஊக்குவிக்கும்  வகையில் உள்ளதால் ஆ”ரம்பம்” படத்துக்கு தடை - ஜெ அவசர அறிவிப்பு # கற்பனை



-------------------------


7. வீரா, வீரபாண்டியகட்டபொம்மன் ,வீடு மனைவி மக்கள் , வீ ஆர் நாட் டாட்டா பிர்லா வரிசையில்   வீரம்  




-------------------------


8.

Saturday, August 10, 2013

ஐந்து ஐந்து ஐந்து - 555 -சினிமா விமர்சனம்

 

ஒரு விபத்தில்   படு காயம் அடைந்த  ஹீரோ  தன் கூடவே  காரில் பயணம் செஞ்ச  தன் காதலியை காணாம தவிக்கறார்.  தன் காதலியை   அவரால மறக்கவே முடியலை . காதலியின்  வீடு  , காதலி கூட சேர்ந்து  சுத்துன  இடம் எல்லாம் போய்ப்பார்க்கறார். அவரோட காதலி  விபத்தில்  இறந்துட்டாரு.(ன்னு நினைக்கறார்) அவரோட  சமாதியில்  ஹீரோ பழியாக்கிடக்காரு.ஹீரோவோட  அண்ணன்,  சைக்யாட்ரிஸ்ட்  டாக்டர்  2 பேரும்  ஹீரோ கிட்டே சொல்லும் மேட்டர்   அதிர்ச்சியானது .


 குடைக்குள் மழை பார்த்திபன் மாதிரி  ஹீரோவுக்கு  பேரா நாமீசியா அப்டினு ஏதோ ஒரு வியாதி  இருக்காம் . அதாவது இல்லாத ஒண்ணை கற்பனை பண்ணிக்கறது , அந்த  கேரக்டர்  கூடவே வாழ்வது . குணா கமல்  அபிராமியை நினைச்ச மாதிரி. ஹீரோ  தன் காதலியின் அத்தையை சந்திக்கறார். அவரும்  ஹீரோவை யார்னே  தெரியாது , அப்டிங்கறார். ஹீரோவுக்கு ஒரு குழப்பம் .இவங்க நடிக்கறாங்களா?  நிஜமாவே  தெரியலையா? அப்டினு 


 இருக்கற  குழப்பங்கள் , பிரச்சனைகள் பத்தாதுன்னு இன்னொரு பொண்ணு  ஹீரோவை லவ் பண்றேன்னு  பின்னாலயே சுத்திட்டு இருக்கு . சமர் படத்துல  வர்ற மாதிரி எல்லாமே ஒரு டிராமாவோ அப்டினு  நினைக்கறப்போ  இல்லை , இது  வேற மாதிரி   கதை அப்டினு  பின் பாதி திரைக்கதைல  இயக்குநர்  அழகா முடிச்சை அவிழ்க்கிறார்.



சொல்லாமலே,ரோஜாக்கூட்டம் ,பூ போன்ற  மாறுபட்ட  காதல் கதைகளைத்தந்த  சசிதான் இந்தப்பட இயக்குநர் . திரைக்கதை  தான் படத்துக்கு  பக்க பலம் , ஹீரோ  எல்லாம் . தமிழ் சினிமாவின்  முக்கியமான படமான  பெண்ணின் பார்வையில்  சொல்லப்படும்  முதல் காதல் கதையை  எடுத்தவர் ( பூ ) அது எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால்  கஜினி டைப் ஆக்சன் பேஸ்டு  லவ் சஸ்பென்ஸ் த்ரில்லர் எடுத்திருக்கார். சபாஷ் சசி


 ஹீரோ பரத் . பழநி , திருத்தணி மாதிரி  லோ கிளாஸ் ஆடியன்ஸ் படங்களாக நடித்தவர்   ரொமாண்டிக்  யூத்  , எய்ட்பேக்  பாடி பில்டர்  என  இரு மாறுபட்டதோற்றத்தில் சிரத்தையாக நடிச்சிருக்கார் .  படத்தில் பெரிய  ஆறுதல்  இவர்  பஞ்ச் டயலாக் எதுவும் பேசாமல்  இயக்குநர் சொன்னபடி  கேட்டு அடக்கி வாசித்திருப்பதுதான் . க்ளைமாக்ஸில்   தன்  ஜிம் பாடியை இவர்  காட்டும்போது  பிரமிப்பு . இது வரை எந்தஒரு தமிழ் சினிமா  ஹீரோவும்  இந்த அளவு எய்ட்பேக் பாடி காட்டியதில்லை ( வாரணம்  1000  சூர்யா சிக்ஸ்பேக் )  அதற்கும் ஒரு சபாஷ்


ஹீரோயின்   புதுமுகம்  மிர்திகா அழகு  முகம், வந்து  பழகு பழகு என்று கொஞ்ச வைக்கும்  கவிதை  பேசும்  கண்கள் . சாத்துக்குடி  ஆரஞ்சுப்பழ  சுளை  சைசில்  இருக்கும்  கொடை ஆரஞ்சுப்பழ சுளை க்கு மருதாணி வெச்சா எப்படி இருக்கும்  அப்படி ஒரு இயற்கையான ஆரஞ்சு சிவப்பழகுகொண்ட  உதடுகள் ,  ஒரு சின்ன பரு கூட இல்லாத   மொசைக் ரசகு;ல்லா மாதிரி கன்னங்கள்  அழகு அழகு . ஹீரோ  ஒரு யோகா  ஆள் , பவர் உள்ள ஆள் என இவர் நம்புவது  லைலாத்தனமாக இருந்தாலும் ( லூஸ் )  தன் அப்பாவித்தன நடிப்பில் அப்ளாஸ்  வாங்குகிறார்.  இவரை  மணிரத்னம் , ஷங்கர் மாதிரி இயக்குநர்கள்  ஹீரோயினாக  (படத்தில் ) யூஸ் பண்ணிக்கிட்டா நல்ல எதிர்காலம்  இவருக்கு  உண்டு

 இன்னொரு  ஹீரோயின் எரிக்கா .முதல் ஹீரோயின் ”அளவுக்கு “  இவர் இல்லைன்னாலும்   ஆள் அழகாத்தான்  இருக்கார் . இவருக்கு வாய்ப்பு  கம்மின்னாலும்  வந்தவரை   ஓக்கே 


 ஹீரோயின் அத்தையாக நடிச்சஃபிகர் கூட   கவனிக்க வைக்கும் அழகுதான் .உயிர் பட சங்கீதாசாயல். கொழுக் மொழுக்   வில்லின்னா  இனி அவரைக்கூப்பிடலாம் போல  


வில்லனாக வருபவர்   கடைசி சில காட்சிகள் என்றாலும் நல்ல நடிப்பு. 


 சந்தானம் ஹீரோவின் அண்ணனாக  வந்தாலும்  காமெடிக்கு ஸ்கோப் கம்மி .





 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்  


1. கஜினி பட  ரொமான்ஸ் காட்சிகள்  போல்  சாயல் இருந்தாலும்    ரசிக்கும்படி  அதை எடுத்தது. கேபிள் கனெக்ட் பண்ண ஹீரோயின்   வீட்டுக்கு வந்து  அவர் பெட்ரூம்  சூழலை  நோட் பண்ணி விட்டு  பின் ஃபோனில்  தனக்கு ஒரு பவர்  யோகாவால்  கிடைத்ததாகவும் , இப்போ  உன் பக்கத்தில் என்னென்னெஇருக்கு? என்பதை சொல்லமுடியும் என   ஹீரோ அள்ளி விடும் காட்சிகள்   சுவராஸ்யம்


2. சன் கிளாஸ்  பொருத்தப்பட்ட   காரில்  ஹீரோயின்  காத்திருக்க அங்கே வரும்  ஹீரோ எதேச்சையாய் கண்ணாடியில்  தலை  சீவ குனிய   அவர் தன் பவர் மூலம் தான்  இருக்கும் இடம் அறிந்து தான் தன்னைப்பார்த்து  சிரிப்பதாக  ஹீரோயின்  புளாகாங்கிதப்படும் சீன்  கைதட்டல்  ரகம்



3. முதல் முறை  காதல்  பாடல் காட்சி படமாக்கிய   விதம்  ,  ஓப்பனிங்க் சாங்க்   லொக்கேஷன்   இரண்டும்  அழகு 





4. சந்தானத்துடன் ஹீரோ பைக்கில் போகும்போது  பெட்ரோல் ட்ரை (DRY)ஆகி  விட , பெட்ரோல் பேங்க்கில் பாட்டிலில்  ஹீரோ பிடிச்சுட்டு வரும்போது   அந்த வழியில்  ஹீரோயின்  ஸ்கூட்டியை தள்ளிக்கிட்டு வரும்போது  ஹீரோவைப்பார்த்து  “ அட, உன்  பவர்  மூலம்  எனக்கு இப்போ பெட்ரோல் வேணும்னு   கண்டு பிடிச்சுட்டியா? என கேட்பது ஆஹா!


5. திரைக்கதையில்  வரும் டர்னிங்க் பாயிண்ட்டை   கடைசி 20வது  நிமிடத்தில் தான் சொல்வது , அதுவரை  சுவராஸ்யமாக  திரைக்கதையை நகர்த்தியது




6 . விஷால்நடிச்ச சமர் படத்தின்  கதையை  கொஞ்சம்  மாத்தி எடுத்துட்டு   கடைசி டைம்ல  அந்த கதை வேற என நம்மை நம்பவைக்க   சிரமப்பட்டு  ஒரு  ட்விஸ்ட்டைஇடைச்செருகலாய்  சொருகியது


7 . படத்தோடபிரமோஷனுக்காக பரத்தை  எய்ட் பேக் ஜிம் பாடி பில்டர் ஆக்கியது 



8 . படத்தில் வரும்  3  முக்கிய பெண் கேரக்டர்களை அழகாக தேர்வு செய்தது, அவர்களை கண்ணியமாக  , அழகாக உடை அணிய  வைத்து ரசிக்கவைத்தது


9. படத்தின் டைட்டிலை மையப்படுத்தும் பார்சல் க்குள் என்ன இருக்கு என்பதை ஹீரோ யூகிக்கும் காட்சி கலக்கல்  . அப்ளாஸ் அள்ளியது



 இயக்குநரிடம்  சில  கேள்விகள்


1. ஹீரோ  லிஃப்ட்ல  வரும்போது  முதன் முதலாக ஹீரோயினை பார்க்கற  டைம்ல   ஹீரோயின் ஹேண்ட் பேக்  ஜிப்  ஓப்பன் என்பதைசுட்டிக்காட்ட   “ ஜிப்”என வெறுமனே சொல்றார் ,  உடனே  ஹீரோயின்  தன்  பேண்ட்   ஜிப்பை   அட்ஜஸ் செய்ய பார்க்கிறார்.  பொதுவா   நாம ஜிப்பை  குறிப்பிட்டா  பேண்ட்   ஜிப் தான். பேக் ஜிப்னாவாயில் முதல் வார்த்தையே  பேக் அல்லது  ஹேண்ட் பேக் என்றுதான் வரும்  


2. ஹீரோ   ஹீரோயினின் சமாதியில்  அவர் பெயரை கிறுக்கும்போது   அந்த சமாதியில் ஒரே  ஒரு பெயர் தான் இருக்கு , அடுத்த காட்சியில் சந்தானம் , டாக்டர்  எல்லாரும்  வந்து பார்க்கும்போது ஏகப்பட்ட  “ லவ் , டயானா : பேரு இருக்கே , எப்படி? 



3.  ஹீரோவும் , ஹீரோயினும்  மோதும்போது  2 பேர் செல் ஃபோனும்  விழுது. ஹீரோயின் ஹீரோவோட  செல் ஃபோன்ல  இருந்து சிம்மை கழட்டி தர்றார். ஆனா ஹீரோயின் செல்ஃபோனை மாத்தி எடுத்துக்கும்  ஹீரோ அவர்  சிம்மை கழட்டித்  தரவே இல்லையே?  ஹீரோ எதுக்கு ஹீரோயின்  ஃபோன்  நெம்பர் கேட்கறார்? அவர்  கிட்டேதான் ஹீரோயின்  சிம் இருக்கே?



4. ஜிம்மில் எக்சசைஸ் பண்றவங்க ஜீன்ஸ் பேண்ட் போட்டுட்டு பண்ணுவாங்களா?  ( ரெகுலரா   ஜிம் போறவங்க  லூஸ் பேண்ட் , திருப்பூர் ஐட்டம்  பனியன்கிளாத் பேண்ட் தான் போட்டுட்டு எக்சசைஸ் பண்ணுவாங்க ,ஜீன்ஸ் போட்டா  எல்லாம் வெந்துடும் ) 


5. வில்லனின் ஆள்  ஹீரோ கிட்டே , ஹீரோவின்  அண்ணன் சந்தானம்  பணயக்கைதி  வில்லன் கிட்டே . அப்படி  இருக்கும்போது  ஹீரோ ஏன் அவசரப்பட்டு  தன் கையில்   இருக்கும்  அடியாளை போட்டுத் தள்றார்? பதிலுக்கு  சந்தானத்தை வில்லன்கொல்வார் என தெரியாதா?வேட்டையாடு விளையாடு  படத்தில் கமல் ( கவுதம் மேனன் ) செய்த அதே தப்பை  பரத்தும் செய்வது  ஏன்? 




6. ஹீரோ பெயரை   அர்விந்த் -னு ஸ்டோர் பண்ணி இருக்கும்  ஹீரோயின்  ஒவ்வொரு  முறையும்   நெம்பரை  டைப் பண்ணுவது ஏன்?   காண்டாக்ட்ஸ் ல போய் ஏ  லைனில் எடுக்கலாமே?அதானே ஈசி ?


7.  ஹீரோயினின் ஆண்ட்டி  ஹீரோ &ஹீரோயின் என்ன பேசிக்கறாங்க என்பதைதெரிஞ்சுக்க   தன் செல்  ஃபோனில் இருந்து  ஹீரோயின்  செல்லுக்கு கால் பண்ணி  ஹீரோயின்  செல் ஃபோனைஅட்டெண்ட் செய்யவெச்சு அந்த செல்லை  ஹீரோயினிடம்  கொடுத்து  விடுகிறார்.  இப்போ 2 பேரும் பேசுவது அத்தைக்கு கேட்கும் . ஓக்கே . ஆனா ஹீரோ ஹீரோயினின்  செல் ஃபோன் மானிட்டரை பார்த்து உண்மையை கண்டு பிடிக்கறார்,. அந்த டைம்ல  ஆண்ட்டி அப்டினு மட்டும்  செல் ஃபோன் ஸ்க்ரீன் ல தெரியுது. அதுஎப்படி? கால்  ஓடிட்டு இருக்கு . டைம்  டியூரேஷன் காட்டிட்டு இருக்கவேணாமா?



8.  ஹீரோயினின் அத்தை  ஹீரோயினிடம்  நான்  இந்த லவ்வர்ஸ் சிலையை பேக் பண்ணித்தர்றேன் . பார்சலை பிரிக்காமல்   ஹீரோ உள்ளே என்ன இருக்கு?ன்னு கண்டுபிடிச்சா  லவ்வுக்கு ஓக்கே  என சொல்லி   சதி  வேலைசெய்பவள்   அதே  ரூமில் இருக்கும் வேறு சிலையை( பொம்மை) வெச்சா மேட்டர் ஓவர். எதுக்கு தன் கழுத்தில்  இருக்கும் தங்கச்செயினை  பார்சலில்  வைக்கறார்?  ரிஸ்க் தானே? 


9. தன் அண்ணனைக்கொன்றவனை  ஹீரோ  தாக்கி கொன்னுடறார், அல்லது மயக்கப்படுத்திடறார். மீண்டும்சுடும்போது  அவர் எப்படி  ஜெர்க் ஆக முடியும்? உடம்பு எப்படி துடிக்கும் ? 


10. பணக்காரரான வில்லன் அவ்வளவு   டிராமா பண்றவர்  சுபா, பிகேபி நாவலில்  வருவது  போல் சவப்பெட்டியில் ஏதோ  ஒரு அநாதை லேடி டெட் பாடியை வெச்சா மேட்டர்  ஓவர். காலி பெட்டியை எந்தமுட்டாள்  வில்லனாவது  வைப்பானா? ஹீரோயின் செத்துட்டா என நம்ப வைப்பவன்  அந்த  சின்ன  லாஜிக் கூடவா   யோசிக்க மாட்டான் ? 




11.  க்ளைமாக்ஸில் ஹீரோயினிடம்  வில்லன்  ஹீரோ  கோமாவில்   இருக்கார் என்கிறார். ஹீரோயின் ஏன் ஹீரோவை இப்போ பக்கத்தில் பார்த்தே ஆகனும்னு அடம்  பிடிக்கலை? வில்லன் தான்  ஹீரோயின் மேல் மயக்கமாஇருக்காரே? ஹீரோயின் என்ன  சொன்னாலும் கேட்கறாரே?



12. க்ளைமாக்ஸ் ல   ஹீரோவுக்கு  கைல அடி பட்டுடுது . அந்தகாயத்துக்கு கட்டு போட அருகில் உள்ள  திரைச்சீலையை கிழிச்சோ , அல்லது அத்தனை  அடியாட்கள்  உடையை  கிழிச்சோ  கட்டி இருக்கலாம். அதை எல்லாம் விட்டுட்டு தன் பனியனையே ஹீரோ ஏன் கிழிச்சுக்கறார்? ஜிம் பாடியை காட்டவா? 


13.  ஹீரோயினை   ராகிங்க்  செய்யும்  ஆள்  ரொம்ப டீசண்ட்டா  உங்க கையை பசங்க சீனியர்ஸ் தொட்டுட்டுவரச்சொன்னாங்க  என சொல்லி ஹீரோயின் உள்ளங்கையை சும்மானாச்சுக்கி தொட்டுட்டுப்போறார். அதுக்கு ஏன்ஹீரோயின் கற்பே போன மாதிரி கூச்சல் போடறார்? டவுன் பஸ்ல போனதே இல்லையா? திருவீழாக்கூட்டத்தில் சிக்கினதே இல்லையா?  கையை தொட்டதுக்கே  இப்படின்னா ...... அதே மாதிரிஅந்த  சீனில் பரத் காட்டும் ஜாக்கிசான் -ன் ரிவன்ஞ்ச் க்ளைமாக்ஸ் ரக  ஆக்ரோசம்  ஓவர்  டோஸ். அட்லீஸ்ட் ஹுரோயின்  இடுப்பில் கிள்ளுவது போல் காட்டி இருக்கலாம் 
 

மனம் கவர்ந்த வசனங்கள்


1. உங்களுக்குள்ள  உருவான    ஒரு கற்பனையை   வேற ஒருத்தரால  பார்க்க முடியாது , உணர முடியாது



2. நேரங்கெட்டநேரத்துல  ஃபிகருக்கு ஃபோன் பண்றான் . ஃபோனுக்குமயக்க  ஊசி தான் போடனும் 


3. கரண்ட் கட் ஆவதை விட கேபிள் கட் ஆகற டைம்தான் அதிகமா இருக்கு 



4.  அய்யயோ, கதவுல  பூட்டு  இருக்கே? 


பின்னே? கதவுல  பூட்டு இல்லாம   ரேமாண்ட்ஸ் கோட்டா இருக்கும் ?


5. அடேய் , நான் கேபிள்காரன் டா , என்னமோ  சிவாஜிகணேசன் கே ஆர் விஜயாவை உருட்டற மாதிரி என்னை உருட்டறே? 


6. உங்க கிட்டே இந்த பச்சை மண்ணை ஒப்படைக்கிறேன் , இதைவெச்சு நீங்க  பானை செய்வீங்களோ , பன்னாடைசெய்வீங்களோ


7. காக்கா வலிப்பு போல , அவர் கைல ஒரு சாவி குடுங்க 

 டேய், சாவி குடுக்க அவர் என்ன பொம்மையா? 


8  அதெப்பிடிடா   வெகுளீயா பார்த்து லவ் பண்றீங்க ? 



9. டேய், நான்  இன்னும் 4 நாள்ல கனடா  போகப்போறேன்,எப்படிடாஅவகிட்டே லவ்வை சொல்றது?


 நீ கனடா போறேன்னு சொன்னாலே  போதும் ,  தானா லவ் பண்ண்ணுவா  பாரு



10.ஹீரோயின் -ஐ, நகத்தைக்கூட உன் கிட்டே மறைக்க  முடியலை ( கற்பனையை வளர்த்த வேணாம் , இது ஒரு கவித்துவமான காட்சி ) 





11.  உனக்கு சிக்கி இருக்கறவ ஜெனிலியா டைப்னு நினைச்சேன், அஞ்சலி  பாப்பா டைப் போல


12.  என்னமோ பிளஸ் டூ ல அட்டெம்ப்ட்டே வைக்காத  மாதிரி பேசறே?


13.  எனக்குவரப்போற   புருஷன்  யார்?னு உன் கிட்டே  இருக்கும் பவரை  யூஸ் பண்ணி கண்டு பிடி பார்ப்போம் 



14, டேய், என் கிட்டே எவ்வளவு நம்பிக்கை  இருந்தா  அவளுக்கு வரப்போற மாப்ளை யாரா இருக்கும்னு என் கிட்டே கேட்பா? 


 டேய், மேட்ரிமோனியல்  போனா 5000  ரூபாசெலவாகும் . அதான் காரணம் 


15. வில்லன் -அவன் என்னயோசிக்கனும்னு நான் தான்  முடிவு பண்ணனும்.  அவனை எப்படி அலையனும்   எங்கேஅலையனும் அப்டிங்கறதையும் நாந்தான்   முடிவு பண்ணுவேன்  ( சமர்  டயலாக் ) 




16.  எல்லாரும்  வாழ்க்கைல எடுக்கும் முக்கியமானமுடிவே   தன்  வாழ்க்கைத்துணை யார்  அப்டிங்கறதுதான் 


  17. அவ கேள்விக்கு என்ன  பதில் சொல்றதுன்னே தெரியலைடா , செத்துப்போயிடலாம் போல இருக்கு 


கேள்விக்குப்பதில்  தெரியாதவன்  எல்லாம் சாகனும்னா நாம எல்லாம் ஒண்னாங்கிளாஸ்லயே செத்திருக்கனும் 



ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  43



 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் -ஓக்கே
ரேட்டிங் =   3.25  / 5


சி பி கமெண்ட்- காதலர்கள் , சஸ்பென்ஸ் பட விரும்பிகள் , ரொமாண்டிக்  ஃபிலிம் பார்க்க விரும்புவர்கள் பார்க்கலாம் , பரத், சசிக்கு ஒரு முக்கியமான படம் . ஈரோடு ஆனூர் ல் படம் பார்த்தேன்


a