Wednesday, June 12, 2013

கூட்டுக் குடும்பங்களைக் குலைத்தது பெண்களா? - பாரதி பாஸ்கர்

சில பாதைகள்... சில பயணங்கள்...


- பாரதி பாஸ்கர்

பள்ளியின் கோடை விடுமுறை ஆரம்பிக்கும் முன்னரே, என் மகள் ஆரம்பித்து விட்டாள். லீவுல போர் அடிக்கும்... நான் என்ன செய்யுறது?"... போன விடுமுறைகளில் காலை 8 மணிக்கு எழுந்து 8.05க்கேரொம்ப போர் அடிக்குதுஎன்று அவள் புலம்பிய ஞாபகங்கள் என் வயிற்றில் புளியைக் கரைத்தன.


போன தலைமுறைப் பிள்ளைகளின் அகராதியில்போர்என்ற சொல் இருந்ததேயில்லை. பரீட்சை முடிந்த நாளே அத்தனைப் பசங்களும் கிளம்பி பாட்டி வீட்டுக்கு ஓடிவிடும். எல்லாடிக்கட்டுகளையும்உட்கார வைத்து, கல்சட்டியில் சுண்ட வைத்த குழம்பில் சோற்றைப் பிசைந்து, உருட்டி, குட்டிக் குட்டியாய் மலர்ந்திருக்கும் உள்ளங்கைகளில் பாட்டி வைக்க, சோற்று உருண்டைகளை விழுங்கும் குழந்தைகளைப் பார்த்தால், புத்துணர்வு முகாமுக்குப் போன யானைகள் கூட வெட்கப்படும்.


வீட்டின் சிறிய கூடத்தில் கிடைத்த தலையணைகளையும் பாய்களையும் பற்றிக் கொண்டு, லீவுக்கு வந்த அத்தனை குழந்தைகளும் நெருக்கி நெருக்கிப் படுத்திருக்கும். பாய், தலையணை கிடைக்காத குழந்தைகளுக்குப் பாட்டி மற்றும் அம்மாக்களின் பழைய புடைவைகளே பஞ்சுமெத்தை.


சளப்... சளப்என்று அடுப்படியில் நீர்தெளிக்கும் ஒலியும்வரட் வரட்என்று துடைப்பத்தால் பெருக்கும் ஓசையும் கேட்டால்பாட்டி வரப் போறான்னு அர்த்தம். பாட்டி வந்ததுமே கதை செஷன் ஆரம்பம்.

சண்டையில ஜெயிச்சப்புறம், அனுமார் வந்து சீதையைப் பாத்தாராம். இவ்வளவு நாள் கஷ்டப்படுத்தின அரக்கிகளுக்கு ஓங்கி ரெண்டு அடி வைக்கட்டுமா?’ன்னு கேட்டாராம்... பாட்டி சொல்லிக் கொண்டிருக்கும்போதேநான்தான் அனுமார்... இவதான் அரக்கி!’ன்னு பக்கத்திலிருக்கும் தங்கையை ஒருபஞ்ச்விட முயற்சித்த வாண்டை செல்லமாக மிரட்டி, ‘நீ அரக்கி இல்லடி... அழகின்னு சமாதானம் சொல்லும் பாட்டியின் மடியில் தலை வைத்து ஏற்கெனவே ரெண்டு பொடிசு உறங்கியிருக்கும். வெயில் பாழாகாமல் விளையாடி, வயிறு வாடாமல் எதையும் தின்று, கதை கேட்டுக் கண்ணயர்ந்த காலங்களில் போராவது... ஒன்றாவது!

மனிதர்கள் நிறைந்து கிடந்த அன்றைய வீடுகளில் வாழ்ந்த குழந்தைகள், உறவுகளின் வீரியத்தை, வெம்மையை, அடித்துக் கொண்டாலும் அடுத்த நொடியில் பிணைத்துக் கொள்ளும் அழகான அபத்தங்களை நேரில் கண்டு வளர்ந்தார்கள். முதிர்ந்த மரத்தின் வேர்களைப் போலவும் பருத்த பறவையின் சிறகுகள் போலவும் உறவுகளைக் கட்டிக்காத்த பெருசுகள் அந்த வீடுகளில் இருந்தார்கள்.


இன்றைய பிள்ளைகள்... பாவம்... ஆட்களே இல்லாத கான்கிரீட் காடுகளான அபார்ட்மென்ட் வீடுகளில், டீ.வி... கம்ப்யூட்டர்... செல்போன்... ப்ளே ஸ்டேஷன்... என்று சாதனங்களை வாங்க, சந்தோஷங்களை விற்றவர்கள். மாமாவின் கல்யாணத்தைவிடமன்த்லி எக்ஸாம்முக்கியம் இவர்களுக்கு. சித்தப்பா, மாமா, பெரியப்பா, பக்கத்து வீட்டுக்காரர், பால்காரர்... எல்லாருமே இவர்களுக்குஅங்கிள்தான்.


வீடுகளுக்குள் உள்ள உறவுகளோ இன்னும் வேடிக்கை... அப்பா, அம்மா, பையன்... மூன்று பேரும் வீட்டிற்குள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவரோடு ஒருவர் அல்ல... ஆளுக்கொரு அலைபேசியில் முகம் தெரியாத யார்யாருடனோ... 750 சதுர அடி வீட்டுக்குள் ஒவ்வொருவரும் ஓராயிரம் மைல் தள்ளி வாழ்கிறார்கள்.

உறவுகளின் அருமையை உணராமல் பிள்ளைகள் வளர்வதற்கு அவர்களது அம்மாக்கள்தான் காரணம்என்கிறார் ஒரு நண்பர்.

கூட்டுக் குடும்பங்களைக் குலைத்ததே பெண்கள்தான்’, எனக் குமுறுகிறார் இன்னொருவர்.

தனிக்குடித்தனம் போகக் கணவன் சம்மதிக்காத காரணத்தால்தான் பல பெண்கள் விவாகரத்து வழக்குப் போடுகிறார்கள்என்கிறது விஷயமறிந்த நீதிமன்ற வட்டாரம்.
இது மருமகள்களின் தவறா? மாமியார்களின் தவறு!’ என்று சூடாகிறார் ஒரு மனநல மருத்துவர். ‘ஆண்பிள்ளையைப் பெற்ற தாய்மாரின் சுயநலம் மிருகங்களைவிட மோசமானதுஎன்று கழுத்து நரம்பு புடைக்கப் பேசுகிறார் அவர்.


பண்பாடு, கலாசாரம், குடும்ப உறவுகள் எல்லாமே பொம்பளைங்க கையிலதாம்மா இருக்கு’, என்று இயம்புகிறார் ஒரு பண்பாட்டுக்காவலர்.


எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே... அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலேஎன்று பேசுகிறது பட்டிமன்ற மேடை.


ஆக, எல்லாரும் கூடிப் பொறுப்புகளைப் பெண்களின் தலையில் வைத்தாயிற்று. பிள்ளை வளர்ப்போ, உறவுகளின் பராமரிப்போ எதில் சிக்கல் வந்தாலும் விமர்சிக்கப்படுவது பெண்கள் மட்டுமே. ஆண்கள் ஒண்ணும் தெரியாத பாப்பாக்களாம்.


அம்மாவுக்கும் மனைவிக்கும் சண்டை வரும்போது, ‘எக்கேடோ கெட்டுப் போங்கன்னு சட்டையை மாட்டிக்கிட்டு பெட்டிக்கடைக்குப் போற ஆண்... காரணமே கிடையாது.


அண்ணன் தம்பிக்குள்ள வர்ற வரப்புத் தகராறுல, ‘வயலையே விற்று வக்கீல் ஃபீஸ் கொடுப்பேனே தவிர வழக்கை வாபஸ் வாங்க மாட்டேன்னு உறுமுகிற ஆண் சிங்கங்கள் நிஜமாகவே அப்பாவிங்க... இல்லை?


யாரு வச்ச தீயோ... வீடு வெந்து போச்சு!’ங்கிற சொலவடை போல, யார் காரணமோ தெரியவில்லை... இன்றைய தலைமுறைப் பிள்ளைகள் சொந்த பந்தங்களின் சுகம் அறியாமல் வளர்கிறார்கள். ‘விட்டுக் கொடுத்தல்’, ‘அனுசரித்துப் போதல்’, என்பதெல்லாம் தோற்றுப் போகிறவர்களின் வார்த்தைகள் என அவர்கள் நம்புகின்றனர்.


இந்தியப் பள்ளிப் பிள்ளைகளைப் பற்றி ஓர் ஆய்வை ஐரோப்பியக் குழு ஒன்று சமீபத்தில் நடத்தியது. அபாரமான புத்திசாலிகள்... கடும் உழைப்பாளிகள்... ஆனால் குழுவாக இயங்குவதை விரும்பாதவர்கள் தொடர்ந்து அவர்களை அவதானித்தோம். ‘ ஆம் ஸாரி’, என்கிற வார்த்தையே வரவில்லை. ஒருவேளை யாராவதுஸாரி’, என்று சொன்னாலும், ‘இட்ஸ் ஓகே’, என்ற பதில் இல்லவே இல்லை’... இப்படிப் போகிறது அந்த ஆய்வறிக்கை. கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது!


குழந்தைகளின் இந்தச் சுபாவத்துக்கு மாறிவிட்ட நம் குடும்பச் சூழ்நிலைகளும் ஒரு காரணமாயிருக்குமோ?


உறவுகள் ஒரு சமயம் இனிக்கும்... மறு சமயம் புளிக்கும்... சில வேளை கசக்கும்... ஆனாலும் உறவுகளை விட்டுவிடக் கூடாது என்கிற பெருந்தன்மை முன்பெல்லாம் நம் வீட்டுப் பெண்களிடம் இயல்பாய் குடியிருந்தது.

உறவுகளின் உரசல்கள் தரும் வெம்மையைப் பெரும்பாலும் பெண்களே உணர்ந்தார்கள். அந்த வெம்மையை, ‘போனால் போறது... விட்டுத் தள்ளுஎன்ற விவேகத்தால் குளிர வைத்தார்கள். என்னையும் என் சகோதரிகளையும் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த என் அத்தை ஐந்தாண்டுகளுக்கு முன் இறந்தபோது தியாகமும் விவேகமுமான மானுட தர்மத்தின் ஒரு பாகம் முடிந்து போனதாகவே நான் உணர்ந்தேன்.


மிக இளம் வயதில் சிறு மகனையும், பின் கணவரையும் அடுத்தடுத்து லக்ஷ்மி அத்தை இழந்து நின்ற நேரம் அது. கணவரின் பத்தாம் நாள் காரியத்திற்கு வந்த சில நெருங்கிய உறவினர் கூட, துக்க வீட்டின் சம்பிரதாயப்படி அவளிடம்சொல்லாமலேபுறப்பட்டுப் போனபோது அவள் அதிர்ந்து விட்டாள்.


படிப்பு இல்லை... வேலை கிடையாது. கூட அழைத்துப் போய் ஆதரவு தரவேண்டிய உறவினர்கள் போன இடம் தெரியாது. இனி யாரை அண்டி வாழ்வது? முடிவே இல்லாத ஆழ் பள்ளத்தில் விழுந்துவிட்ட அந்த வாழ்க்கையை என் அப்பாவும் அம்மாவும் மீட்டெடுத்தனர்.


என் அக்காவைப் பிரசவித்தபின், விடுமுறை முடிந்து, அலுவலகம் செல்ல ஆயத்தமான என் அம்மா, கைக்குழந்தையைப் பார்த்துக் கொள்ள நம்பிக்கையான ஆளைத் தேடிக் கொண்டிருந்த நேரம் அது. அப்போது எங்கள் வீட்டிற்கு லக்ஷ்மி வந்தாள். என் அக்கா அவளைஅத்தைஎன்று உறவு சொல்லி அழைத்தாள். அடுத்துப் பிறந்த நாங்களும்அத்தைமடி மெத்தையடிஎன வளர்ந்தோம்.


எங்கள் வீட்டில் அத்தை கால் ஊன்றிய பிறகு, முன்பு நிராகரித்துப் போன அவளது உறவுக்காரர்கள் மெள்ள மெள்ள வர ஆரம்பித்தார்கள்.


அப்போதெல்லாம், ‘அத்தை! நீ அவங்களை சேர்க்கவே கூடாதுஎன்று நாங்கள் போர்க்கொடி தூக்குவோம்.

போனாப் போறது. அன்னைக்கு அவங்க நிலைமை அப்படி. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை" என்று சொல்லியபடியே, அவர்களுக்காக வீட்டின் கதவுகளை விரியத் திறந்த லக்ஷ்மி அத்தையின் ஐந்தரை அடி உயரம், இப்போதும் என் கண் முன்னே விஸ்வரூபமாய் விரிந்து நிற்கிறது.


என் அத்தை பள்ளிப் படிப்பில் மூன்றாம் வகுப்புக் கூடத் தாண்டவில்லையாம். ஆனால் அவளது பக்குவத்தையும் பரந்த மனசையும் பார்க்கும் போதெல்லாம் என் பட்டங்களையும் பதவிகளையும் அவள் பாதத்தில் போட்டுவிட்டுப் பல நாட்கள் நான் கண்ணீரில் கரைந்திருக்கிறேன்.


பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய விஷத்தைத் தான் உண்டு, அமுதத்தைத் தேவர்களுக்கு அளித்தாராம் சிவபெருமான்.

குடும்பம் எனும் பாற்கடலில் உறவுகளின் உரசல்களால் ஊறும் விஷத்தை எல்லாம் தன் நெஞ்சுள் தேக்கி, மன்னிப்பு என்ற அமுதத்தால் குடும்ப உறவுகளை நிரந்தரமாக்கிய நூறு நூறு லக்ஷ்மிகளின் வாழ்க்கை, தடுமாறும் நம் பயணத்தில் வழி




நன்றி - கல்கி 

மீள் முத்தம்

1. விஜய் -ன் பிறந்த நாளான ஜூன் 22 இல் தலைவா ரிலீஸ் # கூட்டுத்தொகை 4 வருது.4 பேர் 4 விதமா பேசுவாங்களோ?




-----------------------


2.  டியர், இப்போத்தானே கிஸ் அடிச்சீங்க, மறுபடி எதுக்கு ?



 ஹி ஹி இது மீள் முத்தம்



----------------------------


3. டியர் , எனக்கு லூஸ் ஹேர் நல்லாருக்கா? ஜடை ஓக்கேவா?



லூஸ் ஹேரே ஓக்கே தான் , ஜடை நல்லாருக்குன்னா பின்னி விடச்சொல்வே



---------------------------------


4. டிரைவ் சேஃப்லி = எந்த ஃபிகரை ஓட்டறதா இருந்தாலும் அருகே அப்பா இருக்காரா?னு பார்த்து பின் கமெண்ட் அடி # சபாஷ் துபாஷ்



---------------------------


5. இது வரை எந்தத்தப்புமே செய்யாத நான் உன்னைப்பார்த்ததும் மனம் மாறி விட்டேன் # டெய்லி உப்புமா செஞ்சா தப்புமா



---------------------------


6. நயாகரா அருவி போல பிரம்மாண்டமாய் என்னுள் நீ இறங்குகிறாய் என்றால் அது ஃபால்ஸ் இன்ஃபர்மேஷன் ஆகி விடாது



----------------------


7. பெண்கள் கருப்பு நிற உடைகள் அணிவதில் 2 மைனஸ் இருக்காம். 1, வெய்யில் சூடு உள்ளே இழுத்துக்க்கும் .2. தெரியாது ( அதாவது 2 வது மைனஸ் )



----------------------


8. ஒரே சீட்ல உட்கார்ந்து வந்த தம்பதி ல பொண்ணு எந்திரிச்சு முன் சீட் ல உட்காந்துக்கிச்சு.ஊடலாம்.மாப்ளை பம்மிக்கிட்டு இருக்காரு


---------------------


9. தீராத பிரச்சினைகளை தீர்த்து வைப்பவர் அம்மா -அமைச்சர் தங்கமணி # சென்னைல இருந்து சேலத்துக்கு மாறிட்டாங்ளா ?



-------------------------


10. ட்விட்டரில் இருப்பவர்கள் சொன்னால் மட்டும் புது வேறு அர்த்தம் தரும் வரி - நோ mention ப்ளீஸ்



=====================


11. ஆண்டவனும் அம்மாவும் ஒன்று-ஓ.பி.எஸ் # ஆல்ரெடி தமிழ்நாட்டை ஆண்டவரும் ,இப்போ ஆள்பவரும் கரன்ட் விஷயத்தில் ஒண்ணு?




--------------------------


12.  நான் செயின் ஸ்மோக்கர் இல்ல - பூஜா காந்தி #  நெக்லஸ் ஸ்மோக்கரா?



-----------------------


13. கைக்கு எட்டியது வாய்க்கு  எட்டவில்லையே -  அனுஷ்கா. # இது என் டயலாக் ஆச்சே? - சூர்யா



--------------------------


14. தி.மு.க., கோட்டைக்குள் குள்ள நரிகள்புகுந்து விடக் கூடாது:- கலைஞர் #  உயரமான நரி புகுந்தா ஓக்கேவா தலைவா?



------------------------


15. தேர்தல் பணியில் சிறுவர்களுக்கு தடை: தேர்தல் கமிஷன் உத்தரவு # அப்போ சிறுமிகள் ?



-----------------


16. கலைஞர் என்றால் வியப்பு, கலைஞர் என்றால் உழைப்பு -திருமா # திருமா என்றால் குருமா.நீங்க சொன்னா சரிமா



---------------------------


17. முதல்வர்களை ரப்பர் ஸ்டாம்பு போல பயன்படுத்தும் மத்திய அரசு-ஜெ# அமைச்சர்களை ரப்பர் செருப்பு மாதிரி பயன்படுத்தற நீங்க அதை சொல்லக்கூடாது



--------------------------------


18. ஸ்கூட்டியில் செல்லும் பெண்களிடம் லிப்ட் கேட்டு கிடைச்சா எவ்ளவ் நல்லா இருக்கும் ?;-))))



--------------------------------


19. புல்லட்டையே ஸ்டார்ட் பண்ணும் தெம்பு உள்ளவள் நீ ! ஸ்கூட்டியை க்கிளிக் ஸ்டார்ட் பண்ணக்கூட பலம் இல்லாதவன் நான் ;-))



---------------------------------



20. ஊழல் என்ற வார்த்தை காங்கிரஸ் அகராதியில் இல்லை-சோனியா#அகராதில கூட நம்ம காங்கிரஸ்காரங்க டீபால்ட் டிக்சனரிதானா?


------------------------------------

Tuesday, June 11, 2013

‘பெப்சி’ உமா வின் காதல் அனுபவம் , கடுப்பான விவேக்


பெப்சிஉமா

உமான்னு சொல்றதை விட, ‘பெப்சி உமா!’ன்னு சொன்னால் இன்னும் தெளிவா புரியும்!

ஒரே டீ.வி. சேனலில், ஒரே நிகழ்ச்சியில், ஒரே ஸ்பான்ஸர் கொண்டு பதினேழு வருடங்கள் நடத்தப்பட்ட ஒரே டயலிங் ஷோவின் ஒரே ஆங்கர் என்ற பெருமைக்குரிய ஒரே பெண் உமாதான்!

உமாவுக்கு ரசிகர்கள் குமுளியில் கோயில் கட்ட முயற்சித்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க முன்வந்தது. எல்லாமே க்ரேஸி - ரேஸியாகப் போய் கொண்டிருந்தபோது, மீடியாவிலிருந்து காணாமலே போனவர், இப்போது 3 வருட இடைவெளிக்குப் பிறகுஜெயாடீ.வி.யின்ஆல்பம்நிகழ்ச்சியில் தலைகாட்டத் துவங்கியுள்ளார்.


என்னாச்சு உமா? நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்?"


பிரமாதமா ஒண்ணுமில்லை! என்ன நடக்கணும்னு விதி இருந்ததோ, அதுபடி நடந்தது. யாம் ஃபேடலிஸ்ட்! ஊழ்வினை, கர்மபலன், விதி எல்லாவற்றையும் நூறு சதவிகிதம் நம்புபவள் நான்.


சன் டீ.வி.யை விட்டுட்டு, கலைஞர் டீ.வி.க்குப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்புறம் அங்கிருந்தும் விலக வேண்டிய சூழ்நிலை உருவானது. வேறு வழியில்லாமல் வருத்தத்துடன் விலகிட்டேன்.

இந்த இடைப்பட்ட மூன்று வருஷத்துல எங்க போனீங்க? என்ன செஞ்சீங்க?


When problems come, they don't come in single, they come in battallions என்பது ஷேக்ஸ்பியரின் வார்த்தை. எங்களுக்கும் அதுதான் நேர்ந்தது!


பொலிடிக்கலா ப்ரஷர், பிஸினெஸ்ல நிறைய பிரச்னை, ஆறு மாசம் படுத்த படுக்கையா ஆகிற மாதிரி படுத்தி எடுத்த நோய்... ரொம்பவே பட்டுட்டோம்.
லெப்டோ ஸ்பைரோஸிஸங்கிற எலிக் காய்ச்சலும், சிக்குன்குனியாவும் சேர்ந்து தாக்கியதில், நான் பிழைச்சதே பெரிய விஷயமாயிடுச்சு. என்னால நடக்கக் கூட முடியலை!


ஆனா ஒருவழியா அதுல இருந்தெல்லாம் மீண்டு வந்து, இப்ப முன்ன இருந்ததை விட தெளிவா, பல மடங்கு செல்வத்தோட வளமா இருக்கோம். அதுக்கு கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும்!


மீடியாங்கிறது வசீகர புகழ் வட்டம். அதுல இருந்து மறைஞ்ச போது உங்களுக்கு வருத்தமாக இருந்ததா?


மீடியாவை விட்டு விலகியது வருத்தமே இல்லை! ஆனால், என் கூட இருந்த பெரிய ப்ரெண்ட்ஸ் கும்பல் அப்படியே காணாமல் போய் விட்டதுதான் வேதனையாக இருந்தது.


நான் செழிப்பா சிரிச்சுக்கிட்டு இருக்கும்போது, எத்தனை பேர் என்னைச் சுற்றியிருந்தாங்க. அதுவே கஷ்டப்படறோம்னு தெரிஞ்சதும் ஓடியே போய்ட்டாங்க! அப்பத்தான் எனக்கு உண்மையான ஞானமே வந்தது.


ஐயா, கண்ணதாசா! நீ பெரிய தீர்க்கதரிசி!"ன்னு அவரைப் போற்றாத நாளே இல்லை. குளத்துல நீருமில்ல; கொக்குமில்ல, மீனுமில்ல" என்ற வார்த்தைகள் எவ்வளவு உண்மை!


அந்தக் கஷ்டமான காலத்தில் எங்களோடு துணை நின்று, எங்களைப் பெரிய பள்ளத்திலிருந்து மீட்க கைகொடுத்து உதவிய இரண்டே ஜீவன்கள் எங்க அப்பா- அம்மாதான்.


இப்ப, நாங்க மறுபடி ஜோரா வலம்வர ஆரம்பிச்சதும், அதே கூட்டம் சுற்றிச் சுற்றி வருது. ஆனால் இப்பவும் நான் அவங்களை விரட்டலை. சுடுசொல் பேசலை. மனசுக்குள்ளேயே சிரிச்சுக்கிறேன். எதுக்குமே வேதனைப்படாம வேடிக்கை பார்க்கிற ஞானத்தை 37 வயசுலேயே கொடுத்துவிட்ட கடவுளுக்கு நன்றி பல!


சரி, கொஞ்சம் பழைய கதை பேசுவோம்...
வெறும் உமா, பெப்ஸி உமா ஆனது எப்படி?


91-92 நான் ஸ்கூல் ஃபைனல்ல இருந்தேன். அப்ப, என் தோழியோட அண்ணா ஒருத்தர், தூர்தர்ஷன்ல இருந்தார். அவரு, ‘வாருங்கள் வாழ்த்துவோம்!’னு ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்துத் தர முடியுமான்னு கூப்பிட்டார். வீட்டுல யாருக்கும் இஷ்டமில்லை. எனக்கும் கேமரா முன்னால நின்னு பேச கூச்சமாதான் இருந்தது. ஆனாலும், ரொம்ப வற்புறுத்தி அழைச்சதால, சும்மா ட்ரை பண்ணிப் பார்ப்போமேன்னு போனேன். அதைப் பார்த்த சன் டீ.விக்காரர்கள்டயலிங் ஷோவுக்கு அழைச்சாங்க! சும்மா ஜாலியா பேச ஆரம்பிச்சேன். நானே எதிர்பார்க்கலை. பெரிய ஃபேன் கிளப்பே உருவாயிடுச்சு. அது தானா வந்த கூட்டம். எதையும் எதிர்பார்க்காம, அன்பால் திரண்ட கூட்டம்!
கமல், ரஜினி கூட எல்லாம் சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்துச்சு இல்லையா?


ஆமாங்க! பாரதிராஜா, மணிரத்னம், சுபாஷ் கய் போன்ற முன்னணி இயக்குநர்கள் கிட்ட இருந்தெல்லாம் அழைப்பு வந்தது. ஆனால் பேஸிக்கலா நான் கொஞ்சம் சோம்பேறி. நடிக்கிறதுக்கு ரொம்பப் பொறுமை வேணும். பாவம்... தமிழ் சினிமா... பிழைச்சுப் போகட்டும்னு விட்டுட்டேன்!



ஏகப்பட்ட காதல் கணைகள் உங்க மீது வீசப்பட்டிருக்கும். ஆனால் சுகேஷை காதல் கல்யாணம் செய்து கொண்டது எப்படி?


ட்ரூ... ட்ரூ! எனக்குக் கல்யாணம் நிச்சயம் ஆன செய்தி கேட்டதும் பல பேர், யாருப்பா அந்த லக்கி மேன்?" என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டனர். நடிகர் விவேக் கூட கலாய்த்தார். யாருங்க அது சுகேஷ்? எனக்கு அவரைக் கொஞ்சம் கூட பிடிக்கலைங்க! அகில இந்திய பெப்ஸி உமா ரசிகர் மன்றத் தலைவரா நான் இருக்கும் போது ரொம்ப அநியாயங்க!" என்று செல்லமாய் சண்டையே போட்டார்.


நானும், சுகேஷும் சேர்ந்து ஒரு விளம்பரப் படத்தில் நடிச்சோம். எட்டு மாதங்கள் குடும்ப நண்பர்களாகப் பழகிய பிறகு, அவர் ப்ரபோஸ் செய்தார். எனக்கும் அவரைப் பிடிச்சுருந்தது. ஆனா எங்க வீட்டுல பலத்த எதிர்ப்பு. ஆர்ப்பாட்டம் பண்ணலை; சீன் போடலை. பக்குவமா ஹேண்டில் பண்ணி, பெரியவங்களை கன்வின்ஸ் செய்து, கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.


அவர் பஞ்சாபி என்றாலும், தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்ங்கிறதால, எந்தப் பிரச்னையும் இல்ல. சுகேஷ் நல்ல பக்திமான். அனந்த பத்மநாப சுவாமி கோயில், ஷீரடி பாபா கோயிலுக்கு தினசரி போய் கும்பிடும் பழக்கமுள்ளவர். நல்லவர், என்னைப் புரிந்தவர். எங்கள் மகன் விஷாலுக்கு ஒன்பது வயதாகிறது.

ஜெயா டீ.வி.யில் நடத்தி வரும்ஆல்பம்நிகழ்ச்சி பற்றி...

நடிகர் சிவக்குமார், கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், பிரபு, டைரக்டர் மகேந்திரன், முன்னாள் போலிஸ் கமிஷனர் நட்ராஜ் போன்ற வி..பி.கள் சில புகைப்படங்களைப் பார்த்து, தங்கள் அனுபவங்களை நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளும் சுவாரசியமான நிகழ்ச்சி அது. ‘லைஃப் ஜர்னி த்ரூ ஃபோட்டோஸ்னு வெச்சுக்குங்களேன்!

ஆல்பம்நிகழ்ச்சியில் நீங்க சந்திச்சுப் பேச விரும்பும் ஆண் வி..பி. யார்? பெண் வி..பி. யார்?


சோ, ஜெயலலிதாம்மா!"

ஓகே. வாழ்க்கையே ஒரு நம்பிக்கைதாங்க!

கீப் கோயிங்... கீப் ஆன் கோயிங் உமா!


நன்றி - கல்கி

உலக சுற்றுச் சூழல் தினம் VS ஃபிகர்

1.உன் உதட்டில் ரகசியம் தான் தங்குவதில்லை, என் உதடுகளையாவது தங்க விடேன்



--------------------


2. எந்தப்பிரச்சனை வந்தாலும் ஆறுதல் தேடி உன் மடி  சாய்வேன். பிரச்சனையே நீ தான் என்றால் நான் என் செய்வேன் ? # சும்மா


------------------------


3. கே பாலச்சந்தர் ட்விட்டர் ல இருக்கும் பெண்ணை ஹீரோயினாக்கி ஒரு படம் எடுக்கிறாராம்.டைட்டில் சந்து பை ரவி :-)



-------------------------------


4. எல்லா இந்தியப்பெண்களும் என் மனைவியின் சகோதரிகள் ( ALL INDIAN GIRLS R MY WIFE'S SISTERS)



-----------------------


5. புத்திசாலிப்பெண்கள் ஜிம்மில் கருப்புக்கலர் உடைகளை அணிகிறார்கள் :-(



-----------------------


6. போட்டுக்குடுப்பவர்கள் ,அடுத்துக்கெடுப்பவர்கள்,நல்லவன் போல் நடிப்பவர்களையே இத்தேசம் கொண்டாடுகிறது



------------------------


7. எந்த ஊர் பொண்டாட்டியா இருந்தாலும் தன் புருசன் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையா இருப்பதையே விரும்புகிறாள்



--------------------------


8. அழகிய பெண்களுக்கு அறிவான ஆண்கள்தான் பிடிக்குமா?


ம்ஹூம்.மாங்கா மடையர்களைத்தான் மங்கைகள் விரும்புகிறார்கள்


---------------------------


9. அன்பே! மாடி மெத்தையை விட உன் மடி மெத்தை SAWலச்சிறந்தது


---------------------


10. இன்று உலக சுற்றுச் சூழல் தினம். நம்ம ஏரியாவில் இருக்கும் பிகர்களை அடுத்த ஏரியா ஆளுங்க கரெக்ட் பண்ண விடாம பாதுகாப்போம்



-------------------------


11. சம்சாரம் எது சொன்னாலும் சரி சரி என்று தலையாட்டுபவனே சரா சரி தமிழ்ப்புருஷன்



---------------------


12. உங்க 2 பேருக்கும் தகராறு வந்தா உன் சம்சாரம்தான் அடி குடுப்பாளாமே?



அவ என்ன குடுக்கற்து? நானே வாங்கிக்குவேன் ;-)


---------------------


13. ஜட்ஜ் - நாளை காலை 6 மணிக்கு தூக்குதண்டனைனு தீர்ப்பு சொல்றேன்.பயப்படாம சிரிக்கறே?


கைதி - நான் எந்திரிக்கறதே தினமும் 8 மணிக்குத்தானே?



----------------------


14. சாதித்தவர்கள் அனைவரும் நம்மை விடத்தாழ்ந்த நிலையில் இருந்து துவங்கியவர்களே்



----------------------

15. நான் பதவிக்கு வர பாடுபட்ட தொண்டர்கள் என் வீட்டுக்கு வெளியே.தனக்குப்பதவி வேண்டும் என கேட்க வந்தவர்கள் என் வீட்டுக்குள்-MGR@1977்


-----------------------


16. மாங்கா சாப்பிடறதுல கில்லாடியா இருக்கறவங்களை மா மேதைன்னு கூப்புட்ர முடியாது



------------------------

17. அத்தான்.மேரேஜ் ஆகி 10 வருசம் ஆச்சு.எனக்காக என்ன செஞ்சிருக்கீங்க?


11 குழந்தைங்க குடுத்திருக்கேனே?பத்தலைன்னா சொல்லு.மேலும ரெடி பண்ணுவோம்


------------------------


18. என்னை ஏன் காதலிக்கிறய்? எதற்கு என் மேல் அன்பு வைக்கிறாய்? எப்படி உன்னை நம்புவது? என கேள்விமேல் கேள்விகேட்டால் ஓடிடுவேன் என எச்சரிக்கிறேன்



--------------------------

19. திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றால் அபராதம் – அதிரடியாக அறிவித்துள்ள சீனா # டெலிவரிக்கு 1 மணி நேரம் முன்னே தாலி கட்டிட்டா ஓக்கேவா?



----------------------


20. மண் தரையில் ஒவ்வொரு முறை குழந்தை விழும்போதும் சலிக்காமல் நீரில் கழுவி விடும் அம்மா போல் உன் மீது ஒவ்வொரு முறை காதலில் விழும்போதும் நீ அலட்சியம் என்னும் நீரால் கழுவி விடுகிறாய்



------------------------



----------------------


15.