Monday, May 27, 2013

கல்லா கட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் - ஒரு மினி தொடர்: பாகம் 3

கல்லா கட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் - ஒரு மினி தொடர்: பாகம் 3


-எஸ்.முத்துகிருஷ்ணன்

மிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகள் எப்படி புற்றீசல்கள் போல ஆங்காங்கு முளைத்துள்ளனவோ அதற்கு போட்டியாக பிஎட் கல்லூரிகளும் ஆசிரியர் பட்டயப்படிப்பு பள்ளிகளும் ஆங்காங்கு கடை விரித்து வைத்துள்ளன.

 1980களில் பிஎட், ஆசிரியர் பட்டயபடிப்பு கல்விகளுக்கு சீட் கிடைப்பதே மிகப்பெரிய காரியம். படித்து முடித்தவுடன் வேலை என்ற நிலை இருந்தது. இந்த நிலை, முதல் முதலில் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றிருந்த 5 ஆண்டு காலத்தில் அதிமுக ஆட்சியில் தலைகீழ் ஆனது.




தனியார் பயிற்சி நிறுவனங்கள் ஆங்காங்கு முளைத்தன.தேவைக்கு அதிகமாக, அதிகமாக ஆண்டுதோறும் பல ஆயிரம் ஆசிரியர்கள் படித்து விட்டு வேலைக்காக காத்திருக்கும் சூழ்நிலை உருவானது. இருப்பினும், இந்த கல்வி நிறுவனங்களுக்கு அதிமுக, திமுக ஆட்சியில் போட்டி போட்டுக் கொண்டு அனுமதி கொடுத்தனர். அந்தந்த கட்சியை சேர்ந்த முக்கிய விஐபிக்கள் இந்த கல்வி நிறுவனங்களை தொடங்கி நடத்தினர். கடந்த சில ஆண்டுகளாக, இந்த கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை பார்த்து மத்திய மனித வள அமைச்சகமே எரிச்சலடைந்தது.

இனிமேல், புதிய பிஎட் மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு அனுமதி கொடுக்கும் விதிகளை கடுமையாக்க வேண்டும் என்று எச்சரித்தன. அதன் விளைவாக புதிய கல்வி நிலையங்கள் வருவது ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. அதே நேரத்தில் புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிக்காததால் இந்த கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை டல் அடிக்க ஆரம்பித்தது. இந்நிலையில் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு சில கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.

இதையடுத்து, பண வசதி உள்ள கல்வித்தந்தைகள் இந்த கல்வி நிறுவனங்களை வாங்கினர். பள்ளி மற்றும் கல்லூரிகளை வெற்றிகரமாக நடத்தி வசூலில் ருசி கண்ட கல்வி முதலைகள், இந்த பிஎட் மற்றும் ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்கள் பக்கம் தங்கள் தலையை காட்ட தொடங்கினர். இந்த கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு ஒரு தொகையை பேசி முன்பணமாக கொடுத்து விட்டு ஆண்டு அடிப்படையில் லீசுக்கு எடுத்து நடத்த ஆரம்பித்துள்ளனர்.

இதுபற்றி மெட்ரிக் பள்ளி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளை, பிசியோதெரபி, நர்சிங் கல்லூரிகளை நடத்திக் கொண்டிருக்கும் தாளாளர் ஒருவர் கூறுகையில், ''நாங்கள் ஆரம்பத்தில் ஒரு சிறிய ஷெட்டில் இங்கிலீஸ் மீடியத்தில் பிரைமரி பள்ளியைத்தான் தொடங்கினோம். அந்த பள்ளியை சிறிது சிறிதாக டெவலப் செய்து மெட்ரிக்குலேஷன் பள்ளியாக மாற்றினோம். 

எங்களது நிர்வாகத்திறமை, கடும் உழைப்பால் வளர்ந்தோம். பின்னர், கல்லூரி... என்று படிப்படியாக எல்லா கல்வி நிலையங்களையும் தொடங்கினோம். ஒரு ஏரியாவில் வசூல் டல் அடித்தால் வேறு ஏரியாவில் இருந்து வரும் பணத்தின் மூலம் நிதிநிலையை சரி செய்து ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுத்து எல்லா கல்வி நிறுவனங்களையும் நடத்தும் கலையை கற்றுக் கொண்டு விட்டோம்.

சிலர், பிஎட் கல்லூரியை மட்டுமோ, ஆசிரியர் பயிற்சி பள்ளியை மட்டுமோ நடத்தும் போது ஒரு வருஷம் மாணவர் சேர்க்கையில் டல் அடித்தால் அவர்களால் முறையாக நிர்வாகம் பண்ண முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. வருமானம் குறைந்து விடுவதால் அந்த கல்லூரிகளை லீசுக்கு விடும் புது டிரெண்ட் இப்போது உருவாகி உள்ளது. அப்படிப்பட்ட கல்லூரிகளை, ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை வாங்கி நாங்கள் நடத்தி வருகிறோம்.

உதாரணமாக, பிஎட் கல்லுரியில் 100 சீட் இருக்கும். ஒரு சீட்டுக்கு சராசரியாக 60 ஆயிரம் ரூபாய் வசூலாகும். மொத்த வசூல் ரூ.60 லட்சம் வசூல் ஆகும். ரூ.30 லட்சத்தை கல்வி நிலைய ஓனருக்கு கொடுத்து விடுவோம். மீதி ரூ.30 லட்சத்தில் ஆசிரியர் சம்பளம் போக எங்களுக்கு ஆண்டுக்கு ரூ.20 லட்சம் லாபம் கிடைக்கும்.

 டிமாண்டை பொறுத்து இந்த வருமானம் சிறிது கூடலாம் அல்லது குறையலாம். ஆனால், எங்களுடைய டார்க்கெட்டான ரூ.20 லட்சத்தை எப்படியும் எடுக்கும் வகையில் பீஸ்களை மாற்றி வசூல் செய்து விடுவோம். அதே நேரத்தில் கல்வி தரத்தில் சமரசம் செய்து கொள்ளமாட்டோம்.

அதேப்போல ஆசிரியர் பயிற்சி பள்ளி படிப்பு இரண்டு ஆண்டு காலம். இங்கேயும் ஆண்டுக்கு ஒரு மாணவருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை வாங்குகிறோம். இந்த கல்வி நிலையத்தை இரண்டு ஆண்டுக்கு லீசுக்கு எடுக்கிறோம். ஆண்டுக்கு இங்கேயும் ரூ.20 லட்சத்தை பார்த்து விடுவோம். மாணவர் சேர்க்கையில் சில டெக்னிக்குகளை பயன்படுத்தினால், ஒவ்வொரு ஆண்டும் 100 மாணவர்களை எளிதாக சேர்த்து விடலாம். வசூலிலும் கவலை இல்லை'' என்றார் உறுதியுடன்.

கல்வி கொள்ளையை தடுக்கும் ஆலோசனைகளை நாளை பார்க்கலாம்....

நன்றி - விகடன்

மனசே சரி இல்லை என காதலி சொன்னா இன்னா பண்ணனும்? ஹி ஹி மியாவ்!

1. நீ ஊடல் கொள்ளும் தருணங்கள் எனக்கு வரம்.பிரசாதமாய்க்கிடைக்கும் உன்னைக்கொஞ்சும் நிமிடங்கள்



-------------------------


2. தினமும் காலையில் ஆறரைக்கு எழுந்து விடும் ஏழரையே!எந்த வீட்டு வேலையும் செய்யாம தூங்கறியே!



----------------------------


3. மரை கழண்ட உன்னைப்பார்க்கும்போதும் மடை திறந்த வெள்ளமாய் கவிதை வந்து கொட்டுதே அடடே!




-------------------------


4. ஒன் சைடு லவ் னா லெப்ட் ஆர் ரைட் ஏதோ ஒரு சைடு மட்டும் பிகர் பக்கம் நின்னு லவ் வுவதா?



--------------------------


5. முதல்வரை "பசிப்பிணி மருத்துவர்" எனவும் கூறலாம் - சரத்குமார். # மின்சாரம் தராமல் வருத்துபவர் எனவும் சொல்லலாம்


--------------------------


6. சிம்ம ராசியில் பிறந்த பெண்ணாக இருந்தாலும் ,அதீத அதிகாரம் கொண்ட பதவியில் இருந்தாலும் காதலனிடம் பேசும்போது குரல் குழைகிறது.கண் சிரிக்கிறது



-------------------------


7. டியர்.உன் நெக்லசை கழட்ட முடியலையே.ஏன்?



 சாரி.பூட்டு போட்டிருக்கேன்.ஹி ஹி 




---------------------------


8 மனசே சரி இல்லை என்றாய் ! பார்த் தேன். நல்லாத்தானே இருக்கு ? ஹி ஹி சும்மா




------------------------


9.  அன்பே மேரி ப்யாரி ! நீ ஒரு நம்பா மாரி ;-)


-----------------------


10. நான் எந்த வேலை செய்தாலும் நுனை நாட்டியம் பேசுகிறாயே? நான் பரத நாட்டியம் ஆடினால் என்ன சொல்வாய்? 



------------------------


11. பரிபூரண நம்பிக்கை ,மாறாத அன்பு ,எந்த விஷயத்தையும் பகிர்ந்து கொள்ளலாம் எனும் சுதந்திரம் 3ம் காதலின் சொத்து



---------------------


12. இன்னைக்கு ஆபீஸ் ல மீட்டிங்காம்.கால் கிலோ மிக்சரையாவது காலி பண்ணிடனும் # அவனவன் கவலை அவனவனுக்கு


நாசூக்கா இருக்கனும்னு லேடி ஸ்டாf எல்லாம் பிளேட் ல முக்காவாசி மிக்சரை ,பிஸ்கெட்டை வெச்சுடுவாங்க.


-----------------------


13. அத்தான்.தங்கம் பவுனுக்கு ₹672ரூபா குறைஞ்சிடுச்சாம்.



ம் ம் உங்கப்பாக்கு போன் போட்டு சொல்லு # யார் கிட்டே ஹே ஹே ஹே 



-----------------------



14. (அவங்கவங்க சொந்த) சம்சாரத்தை அடிக்க தில் இல்லாதவங்க தூங்கிட்டிருக்கும்போது கிள்ளி வைக்கலாம்.தூக்கக்கலக்கத்துல எறும்புனு நினைச்சுக்கும்



---------------------


15. தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க தொடர்ந்து பாடுபடுவேன்: ஜெ# நெல்லை போல் நாடு பூரா இருட்டுக்கடை ஆக்குவதில்?


----------------------


16. உன் கிட்டே அதிர்ஷ்ட மச்சமே இல்லியேனு காதலிட்ட சொன்னா அதை நம்பி "இல்லியே .இருக்கே"னு காட்டிடும் # ஐடியா கில்மா சாமி



-----------------------


17. நாம வாக்கிங் போறப்ப சம்சாரம் மட்டும் நிம்மதியா தூங்குவதா?னு நினைச்சா நைசா பாப்பாவை எழுப்பி விட்டு அம்மா கூட விளையாடிட்டிருனுடனும்.



-------------------


18. வாயாடிக்காதலியை ரசிக்காத காதலன் இல்லை.வாயாடிப்பொண்டாட்டியை ரசிச்ச புருசனும் இல்லை



-----------------------


19. தன்னை விட உயரம் குறைவான ஆணை பெண்ணுக்கும் அழகு குறைவான பெண்ணை ஆணுக்கும் அறவே பிடிக்காது!



---------------------


20. ஆர்க்கெஸ்ட்ராவில் பாட்டை ரசிப்பவர்கள் மேடைக்கு முன் புறமும் ,பாடகியை ரசிப்பவர்கள் பாடகிக்கு இடது புற மேடை அருகேவும் நிற்பார்கள்


-----------------------

Sunday, May 26, 2013

கல்லா கட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் - ஒரு மினி தொடர்: பாகம் 2

கல்லா கட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் - ஒரு மினி தொடர்: பாகம் 2

-எஸ்.முத்துகிருஷ்ணன்

மிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பிரபலமான மூன்றெழுத்து கல்வி நிறுவனத்தின் கல்வித்தொண்டையும், கல்வித் தொண்டு மூலம் கிடைத்த பணத்தில் அந்த நிறுவனம் கண்ட மாபெரும் வளர்ச்சியையும் வரிசைப்படுத்தினால் ஆச்சரியம் மட்டுமல்ல...அதிர்ச்சியும் ஏற்படும். 1968 ஆம் ஆண்டு சென்னையில் ஆரம்ப பள்ளியை தொடங்கினார் அந்நிறுவனத்தின் நிறுவனர். இந்த பள்ளிதான் அவருக்கு மூலதனம். 

பள்ளியின் வளர்ச்சி அவரை மேலும், மேலும் பணத்தோடு வளர வைத்தது. தொழில் நுட்ப கல்வி நிறுவனங்கள், மருத்துவ கல்வி நிறுவனங்கள், ஓட்டல் தொழில் நிறுவனங்கள் என்று அவரின் கல்வித்தொழில் விரிந்து கொண்டே சென்றது. தவறுகளை சரிக்கட்ட அவ்வப்போது ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் கவனிக்க வேண்டியது இருந்தது.


மாணவர்களுக்கு சைடு பிசினஸ்

இதற்கு முடிவுகட்ட யோசனை செய்தார். கல்வி நிறுவனங்கள், மாநில அரசு கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் தான் ஆட்சியாளர்களால், தனது கல்வி நிறுவனங்களுக்கு இடையூறு ஏற்படும் என்று அவரே நிகர்நிலை பல்கலைக் கழகத்தை தொடங்கி விட்டார். அவரின் கல்வி நிறுவனங்களின் படிப்புகளை, அந்த பல்கலைக் கழகம்தான் கட்டுப்படுத்தி சான்றழித்து வருகிறது. 

மெடிக்கல், பொறியியல் என்று முக்கியமான, இந்த இரண்டு துறைகளிலும் பரந்து விரிந்து இந்தியா முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அதன் சிறகை விரித்துக் கொண்டிருக்கிறது. இங்கு எம்.பி.பி.எஸ்., சீட் வாங்கி விட்டால் டாக்டர் பட்டம் எப்படியும் கிடைத்து விடும் என்பதால் கோடீஸ்வரர்களின் பிள்ளைகளைத்தான் கோடி கோடியாக கொட்டி படிக்க வைக்கிறார்கள்.

எம்.பி.பி.எஸ்.க்கு, ஒரு சீட் நன்கொடை ரூ.60 லட்சம். ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் ரூபாய் கல்வி கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த பல்கலைக் கழகத்தில் பொறியியல் மாணவர்கள் சேர்க்கை மிகவும் பிரபலமானது. நன்கொடை செலுத்தி பொறியியல் வகுப்பில் சேரும் மாணவர், முதல் ஆண்டு கட்டணத்தை மட்டும் கட்டினால் போதும்; இரண்டாவது ஆண்டு அந்த மாணவன் சார்பில் 4 மாணவர்களை சேர்த்து விட்டால் அவர் கல்வி கட்டணத்தை அடுத்த ஆண்டுகளுக்கு கட்டவே வேண்டாம். விடுதி கட்டணத்தையும், உணவு கட்டணத்தையும் கட்டினால் போதும். இந்த சைடு பிசினசையும் படிக்கும் போதே மாணவர்களுக்கு இந்த பல்கலைக் கழகம் சொல்லி கொடுத்து விடுகிறது.

தொடக்கப்பள்ளி தொடங்கி கல்விப் பணியை தொடங்கிய இந்த பல்கலை வேந்தர், இன்று, உயர்கல்வி, தொழில் நுட்பக்கல்வி, மருத்துவ உயர்கல்வி ஆராய்ச்சி, இஸ்ரோவுடன் இணைந்து ராக்கெட் விடுவது என்ற அளவுக்கு கோலோச்சி வருகிறார்.

இமேஜை ஏற்படுத்தி வசூல்

இந்த கல்வி நிறுவனத்தைப் போலவே, இன்னொரு பிரபலமான கல்வி நிறுவனம் சென்னையின் புறநகர் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. முன்னாள் போலீஸ் ஏட்டுதான் இதன் நிறுவனர். சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் முக்கிய நிர்வாகியும் கூட. இவர் ஒரு பல்கலைக்கழகம் மற்றும் 5 பொறியியல் கல்லூரிகளை நடத்துகிறார். டாப்டென் கல்லூரிகள் வரிசையில் இவரது கல்லூரிகள் இருக்கிறது. ஆயிரத்துக்கு நூறுக்கு மேல் மதிப்பெண் வாங்கும் மாணவர்களிடம் நன்கொடை எதுவும் வாங்காமல் இவரது கல்லூரியில் சீட் கொடுத்துவிடுவார். 
இந்த பிரைட் மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழக ரேங்கில் ஏதாவது ஒரு பிரிவில் முதல் 10 இடத்தை பிடித்து விடுவார்கள். அதன் மூலம் கல்லூரியின் படிப்பு பற்றி வெளியில் நல்ல இமேஜ் உருவாகும். அந்த இமேஜ் மூலம் மற்ற மாணவர்களிடம் கட்டணம் என்ற பெயரில் வசூலை அள்ளி விடுவார். இது கல்வி கொள்ளையின் இன்னொரு டெக்னிக்.   

பெரும்பாலான இன்ஜினியரிங் கல்லூரி வைத்திருப்பவர்களின் வரலாற்றை புரட்டிப்பார்த்தால் அவர்கள் பள்ளிக்கூடம் தொடங்கிய லாபத்தில் இருந்துதான் கல்லூரிகள் கட்டி தொழிலை படிப்படியாக விஸ்தரித்து இருப்பார்கள். ஆனால், இந்த அரசியல் கல்வித் தந்தை, பல்கலைக் கழகம் ஆரம்பித்த பிறகுதான் ஸ்கூல் தொடங்கினார். தொடர்ச்சியாக பால், ஸ்டீல், சிமெண்ட், ஸ்வீட், குடிநீர், டிராவல்ஸ், மாட்டுபண்ணை, கல்யாண மண்டபம் என்று அவர் கண்ணில் என்னவெல்லாம் தென்படுகிறதோ அனைத்துக்கும் ஆசைப்பட்டு எல்லா தொழிலையும் தொடங்கி விட்டார்.
 எல்லாவற்றுக்கும் பொறியியல் கல்லூரி வசூல்தான் மூலதனம். காண்டிராக்டர்களை வைத்து கல்லூரி கட்டட வேலைகளை செய்ய வேண்டாம் என்று அவரே கட்டுமான நிறுவனத்தையும் தொடங்கினார். விளைவு, கடந்த ஆண்டு 10 தொழிலாளர்கள் பலியானதோடு, கட்டுமான நிறுவன ஆசையை நிறுத்திக் கொண்டார்.

பணத்தில் வீசினால் அனுமதி

சென்னை அருகே முருகன் கோயிலுக்கு பெயர் போன குன்றுக்கு அருகே ஒரு பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் துறையில் மாணவர்கள் படிப்புக்கு போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று அந்த துறைக்கான அனுமதியையே அண்ணா பல்கலைக் கழகம் ரத்து செய்து விட்டது. 
அத்தகைய கல்லூரி நிர்வாகம், புதிய மருத்துவக் கல்லூரியை தொடங்கி நடத்தி வருகிறது. பொறியியல் கல்லூரியை முறையாக நடத்த இயலாக நிர்வாகம், அதிக செலவு பிடிக்கும் மருத்துவ கல்லூரியை எப்படி நடத்தும் என்பதை சொல்லித் தெரியவேண்டியது இல்லை. கையில் இருக்கும் பணத்தை வீச வேண்டியவர் முகத்தில் வீசினால் எந்த படிப்புக்கும் அனுமதி பெற்றுவிடலாம்; அதன் மூலம் மீண்டும் மாணவர்களையும் பெற்றோர்களையும் கசக்கி பிழிந்து வசூலித்து விடலாம் என்ற தைரியமே இதற்கெல்லாம் காரணம். அவருடைய தொழிலும் ஓகோவென்றுதான் நடந்து கொண்டிருக்கிறது.

கடவுளின் அவதாரமாக வணங்கப்படும் பெயரை கொண்ட பொறியியல் கல்வி நிறுவனத்தின் கதை சற்று அலாதியானது. இவர், நடத்துவது பொறியியல் கல்லூரி என்றாலும் இவருக்கு ரியல் எஸ்டேட் மீது அபார ஆர்வம் உண்டு. ரியல் எஸ்டேட் தொழில் மூலம் கிடைத்த பணத்தை வைத்துதான் பள்ளி, பொறியியல் கல்லூரியை தொடங்கினார். தமிழகத்தில் மட்டுமல்ல, கர்நாடகாவிலும் பொறியியல் கல்லூரிகளை தொடங்கியதோடு மட்டுமல்லாமல், மாற்று மருத்துவ கல்லூரிகளையும் (சித்தா, ஓமியோபதி மருத்துவக்கல்லூரிகள்) நடத்தி வருகிறார். 
ஆனாலும் பழக்கதோஷத்தில் இப்போதும் சொந்தமாக பல ஏக்கர் நிலங்களை வாங்கி லே அவுட் போட்டு பெரிய அளவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கல்வி சேவையில் பணம் கொட்டுவது போல ரியல் எஸ்டேட் தொழிலும் அவருக்கு ஓகோ வென்று பணத்தை அள்ளிக் கொடுக்கிறது.

கட்டணக் கொள்ளையில் சினிமா படம் தயாரிப்பு

எல்லோரையும் போலவே, பொறியியல் கல்லூரி தொடங்கினால், பணத்தை வாரி சுருட்டலாம் என்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொறியியல் கல்லூரியை தொடங்கினார் முன்னாள் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் ஒருவர். 
பல ஏக்கர் பரப்பளவில் தடபுடலாக தொடங்கிய பொறியியல் கல்லூரி வியாபாரம் எதிர்பார்த்தபடி போகவில்லை. எனவே, அவர் பொறியியல் கல்லூரி வளாகத்தை அப்படியே பொழுது போக்கு பூங்கவாக மாற்றி விட்டார். இப்போது அவரது தொழில் சிறப்பாக ஓடுகிறது.

ஓசூரில் பிரபல கல்வி நிறுவனம் ஒன்று உள்ளது. கடந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் முதல் மூன்று இடத்துக்குள் இந்த பள்ளிக்கூடம் வந்தது. இந்த பள்ளிக்கூடத்தின் பார்ட்னர், தனியார் மெட்ரிக் பள்ளி சங்கத்தின் முக்கிய நிர்வாகி என்பதால் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிக்கூட முதலாளிகளையும் தெரியும். இவரின் கூட்டாளிகள் எல்லோரும் சேர்ந்து கடந்த ஆண்டு திரைப்படம் எடுத்தனர். 
பள்ளிக்கூடத்தில் கொள்ளை லாபம் அடிக்கத்தெரிந்த அவர்களால் சினிமாவை லாபம் ஈட்டும் வகையில் எடுக்க முடியவில்லை. கையை சுட்டுக் கொண்டதோடு கோடப்பாக்கம் தொழிலுக்கு டாடா காட்டி விட்டனர். அவர்கள் இப்போது, டீச்சர் டிரெயினிங் பள்ளிகள், பி.எட் கல்லூரிகளை லீசுக்கு வாங்கி நடத்தும் தொழிலுக்கு மாறிவிட்டனர். அதிலும் பணம் கொட்டுகிறது.

அது எப்படி? நாளை பார்ப்போம்...      

Thanks - Vikatan

கல்லா கட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் - ஒரு மினி தொடர்: பாகம் 1

கல்லா கட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் - ஒரு மினி தொடர்: பாகம் 1


-எஸ்.முத்துகிருஷ்ணன்

தமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டடங்கள் வீதிக்கு வீதி ஜொலிக்கின்றன. அரசு கல்விக் நிலையங்களின் கட்டடங்களோ 'எப்போது இடிந்து விழுமோ' என பதற வைக்கின்றன. தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க தவம் கிடக்கும் பெற்றோர்கள், அரசுப் பள்ளிகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. ஒரு பக்கம் அரசுப் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுக்கொண்டிருக்க... இன்னொரு பக்கம் தனியார் பள்ளிகள் பெருகியபடியே இருக்கின்றன. ஆனால் பள்ளிகள் மட்டும் அதிகரிக்கவில்லை... அவர்களின் வசூல் வேட்டையும் அதிகரித்துக்கொண்டே போகிறது.

காற்றுவாங்கும் அரசு பள்ளிகள்

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் அனைத்தும் ஜூன் 3 ஆம் தேதி திறக்க இருக்கின்றன. தாங்கள் விரும்பிய பள்ளியில், தங்கள் வீட்டு அருகே உள்ள பள்ளியில் எல்.கே.ஜி. சீட் வாங்க பட்டபாடு பெற்றோர்களுக்குத்தான் தெரியும். விண்ணப்பம் வாங்குவதற்கே இரவு எல்லாம் வீதியில் படுத்துறங்கும் அளவுக்கு தனியார் பள்ளிகள் மீதான மோகம் மக்களை ஆட்டிப்படைக்கிறது. எவ்வளவோ சலுகைகளை அறிவித்தாலும், கூவி கூவி அழைத்தாலும் அரசு பள்ளிகள் காற்று வாங்குகிறது. தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள புள்ளி விபரம் இந்த உண்மைகளை உரக்கச் சொல்கிறது. 
தொடக்க கல்வியை பொறுத்த வரையில் 2008-09ம் ஆண்டு மாணவர் சேர்க்கையானது அரசு பள்ளிகளில் 43.67 சதவீதம்; அரசு உதவி பெறும் பள்ளிகளில் 21.83 சதவீதம்; தனியார் பள்ளிகளில் 34.5 சதவீதம் என்று இருந்த நிலையில்,  2012-13ல் அரசு பள்ளியில் 36.58 சதவீதம்; அரசு உதவி பெறும் பள்ளிகளில் 17.99 சதவீதம்; தனியார் பள்ளிகளில் 45.4 சதவீதம் என்று தலைகீழாக மாறி இருக்கிறது. இதே நிலையைத்தான் நடுநிலைபள்ளி, உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல் நிலைப்பள்ளிகளின் புள்ளி விபரங்களும் காட்டுகின்றன. நாளுக்கு நாள் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளை, தனியார் பள்ளிகள் கபளீகரம் செய்து வருகின்றன.

இத்தனைக்கும் தனியார் பள்ளிகளில் பல்லாயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். ‘டொனேஷன்’ என்ற பெயரில் கொள்ளை அடிக்கிறார்கள். அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கல்விக் கட்டணமே இல்லை. இலவச நோட்டு புத்தகம், சத்துணவு, இலவச பஸ் பாஸ் எல்லாம் உண்டு. ஆனாலும் கூலித் தொழிலாளி கூட தன் பிள்ளையை தனியார் பள்ளியில்தான் சேர்க்க துடிக்கிறார். ஏன்? கட்டண கொள்ளை நடக்கிறது என்பது தெரிந்தும், அங்கே போவது ஏன்? இது விடை தெரிந்த கேள்விதான்.
ஏனெனில் அரசுப் பள்ளிகளின் அவலநிலை மக்களை அந்தப் பக்கம் போகவிடாமல் துரத்தி அடிக்கிறது. இரண்டாவது, தனியார் பள்ளிகளின் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மக்களை ஈர்க்கின்றன. ‘தனியார் பள்ளியில் படித்தால்தான் தரமான கல்வி கிடைக்கும். தன் பிள்ளை கான்வென்டில் படித்தால்தான் கவுரவம்’ என்று நினைக்கிறார்கள்.

சீண்டப்படாத சிங்காரவேலு கமிட்டி பரிந்துரை

ஆசிரியர்களை கசக்கி பிழிந்து, மாணவர்களை மனப்பாடம் செய்ய வைத்து தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்க வைத்துவிடுவதால், தனியார் பள்ளிகள் இந்த மோகத்தை தக்க வைத்துக்கொள்கின்றன. கூடுதல் பணம் பறிக்க இந்த தேர்வு முடிவுகள் அவர்களுக்கு உதவுகின்றன.  உதாரணமாக சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் எல்.கே.ஜி. அட்மிஷன் சமயத்திலேயே குறைந்த பட்சம் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை நன்கொடை வாங்கப்படுகிறது. எந்த சட்டமும் இதை தடுக்க முடியவில்லை. “அரசாங்கம் அப்படித்தான் சார் ரூல்ஸ் போடும். அதை எல்லாம் ஃபாலோ பண்ணா ஸ்கூல் நடத்த முடியுமா? டொனேஷன் கொடுத்தா சீட். இல்லேன்னா இல்ல” என்று எந்த அச்சமும் இல்லாமல், பச்சையாக பேசுகிறார்கள்.

இந்த நன்கொடைகளை பதிவு செய்வதற்கு என்றே பள்ளியின் பெயரில் ஒரு டிரஸ்ட்டை ஏற்படுத்திக்கொள்கின்றனர். அல்லது கட்டடம் கட்ட, பள்ளிக்கு வாகனம் வாங்க, மேஜை நாற்காலி வாங்க... என ஏதோ ஒரு பெயரில் இந்த வசூல் நடக்கிறது. சீட் வேண்டும் என்பதற்காக கூடுதல் நன்கொடை கொடுக்கவும் பணக்கார பெற்றோர்கள் போட்டி போடுவதால்,
இந்த விஷயம் ஒரு பிரச்னையாக  வெளியில் வருவதில்லை. தமிழக அரசின் சிங்காரவேலு கமிட்டி தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் குறித்து வரையறை செய்திருக்கிறது. அதை எல்லாம் எந்தப் பள்ளியும் ஒரு பொருட்டாகக் கூட மதிப்பதில்லை. சொல்லப்போனால் இப்படி ஒரு கமிட்டி இருப்பதே பல தனியார் பள்ளிகளுக்குத் தெரியாது. “கட்டடம் கட்டுனது நானு, முதல் போட்டது நானு, இதுக்கு விலை வைக்க வேண்டியதுதான் நான்தான்” என கல்வியை ஒரு முதலீடாக நினைத்து லாபத்தை நிர்ணயிக்கிறார்கள்.

கட்டணக் கொள்ளை

தமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்சி பள்ளிகளின் கட்டண விபரம் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு வகுப்புக்கும் சுமார் 18 ஆயிரம் ரூபாய் என்பது பொதுவான விதியாக உள்ளது. இந்த தொகையை சில பள்ளிகள் மொத்தமாக வசூல் செய்கின்றன. வேன், பஸ் கட்டணங்கள் தனி கணக்கு. சில பள்ளிகள் முதலில் ரூ.10 ஆயிரமும், பின்னர் 3 மாதத்துக்கு ஒருமுறை ரூ.3 ஆயிரம் என்று மொத்தம் ரூ.12 ஆயிரமுமாக... மொத்தம் ரூ.22 ஆயிரம் ரூபாய் வசூலித்து விடுகிறார்கள்.
இதுத் தவிர யூனிபார்ம், நோட் புக், ஸ்மார்ட் கிளாஸ், கம்யூட்டர் லேப், மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை ஸ்பெஷல் பீஸ் என்று தனித் தனியாக மொய் எழுத வேண்டும். ஸ்போர்ட்ஸ், டிராயிங் கிளாஸ் என்றும் தனித்தனி பீஸ் வைத்துள்ளனர். இப்படி ஒரு பிள்ளையிடம் இருந்து குறைந்தபட்சம் வருடம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வசூல் செய்து விடுவார்கள். ஒரு வகுப்பில் குறைந்தபட்சம் 40 மாணவர்கள் என்றால் ஆண்டுக்கு ஒரு வகுப்பில் மட்டுமே ரூ. 12 லட்சம் வசூல் ஆகி விடுகிறது. எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரை பெரும்பாலான பள்ளிகளில் இந்த கொள்ளைதான் நடக்கிறது.
ஆனால், இப்படி அடிக்கும் கொள்ளையில் தனியார் பள்ளி நிர்வாகங்கள் ஆசிரியர்களுக்கு கவுரவமான சம்பளம் கொடுக்கிறார்களா என்றால் இல்லை. அந்த ஆசிரியர்கள் வாங்குவது மிக மிக குறைந்த சம்பளம். உதாரணமாக, அரசு பள்ளியில் பி.ஏ., அல்லது பி.எஸ்.சி., பி.எட்., முடித்த ஆசிரியருக்கு குறைந்த பட்ச சம்பளம் மாதம் ரூ.26,000. இதே தகுதியுள்ள ஆசிரியருக்கு தனியார் பள்ளிகளில் 15 ஆயிரம் என்பதே அதிகபட்ச சம்பளம். இந்த ஆசிரியர்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும். இப்படி ஆசிரியர்களின் உழைப்பை உறிஞ்சி, பெற்றோர்களை கசக்கி பிழிந்து இவர்கள் பிடுங்கும் பணம் எங்கெல்லாம் முதலீடு செய்யப்படுகிறது தெரியுமா?

நாளை பார்க்கலாம்....

ஆல் இன் ஆல் அழகுராஜா -சந்தானத்தின் மாஸ்டர் பீஸ்? - எம் ராஜேஷ் பேட்டி

எனக்கு இருக்கிற அறிவுக்கும் திறமைக்கும் இந்த 'ஆல் இன் ஆல் அழகுராஜா’ அமெரிக்காவுல இருக்க வேண்டியவன்டா. ஏதோ என் கஷ்டகாலம், இந்தப் பட்டிக்காட்டுல உக்காந்து பழனியப்பன் சைக்கிளுக்கு பெண்ட் எடுத்துட்டு இருக்கேன்’னு கவுண்டமணி அடிச்ச பஞ்ச், நம்ம எல்லார் வாழ்க்கைலயும் ஏதோ ஒரு சமயம் பொருந்திப்போகும். 



அதுவும் போக நான், கார்த்தி, சந்தானம் மூணு பேரும் கவுண்டமணி சாருக்குத் தீவிர ரசிகர்கள். இந்தப் பட டைட்டிலுக்கு இதுக்கு மேல காரண காரியம் வேணுமா என்ன?''-கலகலவெனச் சிரிக்கிறார் ராஜேஷ்.எம். 'எஸ்.எம்.எஸ்’, 'பாஸ்’, 'ஓ.கே ஓ.கே’ என்று சிரிப்பு சிக்ஸர் மட்டுமே சாத்துபவர், கார்த்தியுடன் கை கோத்திருக்கிறார். 


 
''உங்க படத்துல கதை என்னன்னு கேட்க முடியாது. அதனால, இந்தப் படத்துல என்னவெல்லாம் காமெடி பிளான் பண்ணியிருக்கீங்கனு சொல்லுங்களேன்?''



''ஹலோ... என்ன பாஸ் இப்படிச் சொல்லிட்டீங்க! என் படங்களோட ஒன் லைன் எப்பவும் சிம்பிளா இருக்கும். ஈகோ காதலன், திமிர் காதலி சேர்ந்தாங்களா இல்லையாங்கிறது... 'சிவா மனசுல சக்தி’.



 பொறுப்பே இல்லாதவன் அண்ணி வந்த பிறகு என்ன ஆகிறான் என்பது... 'பாஸ் என்கிற பாஸ்கரன்’.



 பாண்டிச்சேரியில் நடக்கப்போற காதலியின் கல்யாணத்தைக் காதலனும் நண்பனும் நிறுத்துறாங்களா, இல்லையா... 'ஒரு கல் ஒரு கண்ணாடி’. இந்த ஒன் லைன்ல காமெடி லேயர்கள் மட்டும் அதிகமா வைக்கிறேன்... அவ்வளவுதான். இப்போ 'ஆல் இன் ஆல் அழகுராஜா’ ஒன் லைன் கேட்டீங்கன்னா, டவுன்ல வளர்ற இளைஞனுக்கும் அவன் அப்பா, அம்மாவுக்கும் இடையிலான பாசம்தான் கதை.



 காமெடி, காதல், சென்டிமென்ட்னு படம் பார்க்கிறவங்களுக்குத் திருவிழா போயிட்டு வந்த ஃபீல் கொடுக்கும். சிம்பிளா இருந்தாலும் சிரிக்கவைக்கிற படங்களைத்தான் இப்போ ரசிகர்கள் ரசிக்கிறாங்க... கொண்டாடுறாங்க. அவங்க கொண்டாட்டத்துக்கு நான் என் ஸ்டைல்ல படம் பண்றேன்!''
''சந்தானம், சரக்கு, சலம்பல்... இதுதானே உங்க ஸ்க்ரிப்ட் ஸ்டைல்..?''



''காமெடி மட்டும்தாங்க என் ஸ்க்ரிப்ட் ஸ்டைல். இந்தப் படத்துலயும் அப்படித்தான். ஆனா, மத்த படங்கள்ல இல்லாத பாசம், சென்டிமென்ட்னு சில விஷயங்களைக் கொஞ்சம் புதுசா சேர்த்திருக்கேன். இதுக்கு முன்னாடி மூணு படங்கள்லயும் சந்தானம் பண்ணதை அப்படியே பண்ணா, போரடிக்கும்னு எனக்கும் தெரியும். அதனால இந்தப் படத்துல சந்தானத்துக்கு பஞ்ச் எல்லாம் கிடையாது. பாடி லாங்குவேஜ்லயே காமெடி பண்ணச் சொல்லிட்டேன். 



அவரும் முதல் படத்தில் நடிக்க வந்த மாதிரி, ஏகப்பட்ட ஹோம்வொர்க் பண்ணிட்டு வந்து, 'சிங்கிள் ஷாட்ல எடுத்துடலாம். அப்போதான் டைமிங் மிஸ் ஆகாது’னு பரபரனு நடிச்சுட்டுருக்கார். ஹிட் ரேட் ஏற ஏற... சந்தானத்தின் எனர்ஜி லெவல் அதிகமாயிட்டே இருக்கு. படத்தின் கதையை நாம எல்லாரும் நிச்சயம் க்ராஸ் பண்ணி வந்திருப்போம். அதனால, 'ராஜேஷ் இன்னொரு காமெடிப் படம் பண்றாருப்பா!’னு ஜஸ்ட் லைக் தட் சொல்லிட முடியாது. படத்தில் இன்னொரு சுவாரஸ்ய ட்விஸ்ட் இருக்கு. நாங்க எதிர்பார்த்ததைவிட, அது ரொம்ப நல்லாவே வொர்க்அவுட் ஆகியிருக்கு. அது என்னங்கிறது... சஸ்பென்ஸ்!''



''கார்த்திக்கு இப்போ ஒரு ஹிட் அதிஅவசியம் ஆச்சே?''



''தியேட்டர் ஹிட்டை விடுங்க... தென்காசிப் பக்கத்துல ஷூட்டிங். அங்கே வேடிக்கை பார்க்க வர்ற குழந்தைங்க கார்த்திகூட ஒரு போட்டோ எடுத்துக்கிட்டாதான் இடத்தைவிட்டு நகர்வோம்னு அடம்பிடிக்குதுங்க. பல பெற்றோர்கள், ஷூட்டிங் ஸ்பாட்ல, 'கோச்சுக்காதீங்க சார்... குழந்தைக்காகத்தான்... அவ்வளவு அடம் பண்ணுதுங்க... ஒரு போட்டோ மட்டும்’னு தயங்கித் தயங்கிக் கேட்கிறாங்க. ஒருத்தரைக் குழந்தைகளுக்குப் பிடிச்சாலே, பெரியவங்களுக்கும் அவரை ஈஸியாப் பிடிச்சுப்போகும். இந்த விஷயங்களை எல்லாம் மைண்ட்ல வெச்சுக்கிட்டு கார்த்தி கேரக்டரை ரொம்பக் கவனமா டிசைன் பண்ணியிருக்கோம். 


'கலகலனு இப்படி ஒரு படம் பண்றதே மனசுக்குச் சந்தோஷமா இருக்கு. அப்பா-அம்மா, வொய்ஃப், ஃப்ரெண்ட்ஸ்லாம் படம் பார்த்துட்டு என்ன சொல்லுவாங்கனு இப்பவே மனசு எதிர்பார்க்க ஆரம்பிச்சுருச்சு’ன்னார் கார்த்தி. படம் பார்க்கிறவங்களுக்கு கார்த்தியை ரொம்பப் பிடிச்சுப்போகும். கார்த்தியைப் பிடிக்கிறவங்களுக்குப் படம் ரொம்பப் பிடிச்சுப்போகும்!''


''தமிழ்ல பெரிய பெரிய ஹீரோக்களையே டபாய்ச்சுடுற நயன்தாரா, ஹன்சிகா, காஜல்னு 'தெலுங்கு ஹிட்’ ஹீரோயின்கள் உங்க படத்தில் மட்டும் நடிச்சுடுறாங்களே... அது என்ன மேஜிக்?''



''ஒருவேளை அவங்க எல்லாருக்கும் சந்தானத்தைப் பிடிக்குமோ என்னவோ..?! பின்ன என்னங்க... இப்படி எல்லாம் சிக்கவைக்கிற மாதிரி கேள்வி கேட்டா, நான் என்ன சொல்றது!''  



''ஒன் அண்ட் ஒன்லி காதல்’னு இருந்த டிரெண்டை, 'ஒன் அண்ட் ஒன்லி காமெடி’னு மாத்துச்சு உங்க படங்கள். இப்போ கிட்டத்தட்ட எல்லாப் படங்களும் ஃபுல் லெங்த் காமெடியாத்தான் வருது... கவனிக்கிறீங்களா?''



''அப்படி நிறைய நல்ல படங்கள் வர்றது சந்தோஷமா இருக்கு. 'சூது கவ்வும்’ல ஸ்டைல், ட்ரீட்மென்ட், காமெடி வசனங்கள்னு எல்லாமே பிடிச்சது. 'எதிர்நீச்சல்’, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படங்களை சீனுக்கு சீன் ரசிச்சுப் பார்த்தேன். அனுபவ இயக்குநர்களோ, குறும்பட இயக்குநர் களோ... 10 மணி நேர கரன்ட் கட் கவலை மறந்து ரசிகர்கள் சிரிக்கிற மாதிரி படம் கொடுக்கிறது சாதாரண விஷயம் இல்லை. அதைச் சரியா பண்ற எல்லாருக்கும்... வாழ்த்துகள் பாஸ்!''



''சரி... இப்போ ஒரு கேள்வி... உங்க படங்கள்ல காமெடிக்குச் சிரிக்கிறோம், ரசிக்குறோம், கை தட்டுறோம். ஆனா, தியேட்டரைவிட்டு வந்ததும் மறந்துபோயிடுறோமே. 'கிளாஸிக் வரிசை’யில் இடம் பிடிக்கிற மாதிரி படம் பண்ணணும்னு ஆசை இல்லையா?''



''நான் ரொம்ப ரொம்ப ரசிச்சுப் பார்த்த 'காதலிக்க நேரமில்லை’, 'அன்பே வா’, 'தென்றலே என்னைத் தொடு’, 'திருடா திருடி’, 'குஷி’... அப்புறம் பாக்யராஜ் சார், பாண்டியராஜன் சார் படங்கள். அப்படி எல்லாம் படம் பண்ண எனக்கும் ஆசைதான். ஆனா, ராஜேஷ் படங்களுக்குனு ஒரு ஸ்டாம்ப் விழுந்திருச்சு. இப்போதைக்கு அதுலதான் டிராவல் பண்ண வேண்டியிருக்கு. ஆனா, அதுக்காக என் படங்களை நானே குறைச்சு மதிப்பிடக்கூடாது. என் மூணு படங்களையும் எப்பப் பார்த்தாலும் விழுந்து விழுந்து சிரிக்கலாம். ஃபேஸ்புக், ட்விட்டர்லலாம் என் பட பஞ்ச்கள் பயங்கர ஷேரிங்ல போயிட்டு இருக்கு. இருந்தாலும் நாகேஷ், சந்திரபாபு படங்கள் மாதிரியான கிளாஸிக் காமெடிப் படங்கள் பண்ண ஆசைதான். அதுவும் சீக்கிரமே நடக்கும்!''

 நன்றி - விகடன்

நான் ஒரு ராசி இல்லா ராஜா - டி எம் எஸ் நினைவுகள்

பழம்பெரும் பாடகரான, டி.எம்.சவுந்தர்ராஜன், உடல் நிலை சரியில்லாமல், சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது, 91. அவரது இறுதிச்சடங்கு, சென்னையில் இன்று நடக்கிறது. டி.எம்.சவுந்தர்ராஜன், 1923, மார்ச், 23ல், மதுரையில் பிறந்தார்.சிறுவயதில் இருந்தே, இசை மீது அதிக நாட்டம் கொண்ட இவர், பிரபல வித்துவான் பூச்சி சீனிவாச அ#யங்காரின் மருமகன், காரைக்குடி ராஜாமணி அய்யங்காரிடம், முறையாக இசை பயின்றார். இசைப் பயிற்சிக்கு பின், பல்வேறு கச்சேரிகளில் பாடினார்.

கடந்த, 1946 ஆண்டு வெளிவந்த, "கிருஷ்ண விஜயம்' என்ற படத்தில், "ராதே என்னை விட்டு ஓடாதே...' என்பதே, திரையுலகில் அவர் பாடிய, முதல் பாடல். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில், 10 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர், சிவகுமார் போன்ற மூத்த தலைமுறை நடிகர்களுக்கும், ரஜினி, கமல், போன்ற இளைய தலைமுறை நடிகர்களுக்கும் பாடல் பாடியுள்ளார்.


கதாநாயகர்களுக்கு தகுந்தாற் போல் பாடியதால், நடிகர்களே நேரடியாக பாடுவது போல், உணர வைப்பார் என, போற்றப்பட்டார். "இசை சக்கரவர்த்தி' "ஏழிசை மன்னர்' "ஞானகலா பாரதி' போன்ற விருதுகளை பெற்றுள்ளார். கடந்த, 2003ம் ஆண்டு, இவருடைய கலை சேவையை பாராட்டி, மத்திய அரசு, "பத்மஸ்ரீ' விருது வழங்கி சிறப்பித்தது. தமிழக அரசு, கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது.

கடந்த, 10 நாட்களுக்கு முன், உடல் நலம் சரியில்லாமல், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டி.எம்.எஸ்., கடந்த, 19ம் தேதி, வீட்டிற்கு திரும்பினார். பின், வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று உடல்நிலை மோசமானதால், காலமானார். இவருக்கு, சுமித்ரா என்ற மனைவியும், மல்லிகா என்ற மகளும், பால்ராஜ், செல்வகுமார் ஆகிய மகன்களும் உள்ளனர். இவருடைய இறுதிச்சடங்கு சென்னை, மயிலாப்பூரில், இன்று நடக்கிறது.

தமிழக மக்களை சிம்மக் குரலால் கவர்ந்தவர் டி.எம்.எஸ்., *முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

""தமிழக மக்களை தனது, சிம்மக் குரலால் கவர்ந்தவர் டி.எம்.எஸ்.,'' என, முதல்வர் ஜெயலலிதா, டி.எம்.சவுந்திரராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் விடுத்துள்ள அறிக்கை: "ராதே என்னை விட்டு போகதடி' என்ற பாடலின் மூலம், தமிழ் திரையுலகில், அடியெடுத்து வைத்த டி.எம்.சவுந்திரராஜன், ரசிகர்களை வசிய வைக்கும் குரலுக்கு சொந்தக்காரர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை தமிழ் திரைப்படங்களில் பாடியுள்ள சவுந்திரராஜன், தெலுங்கு, மலையாள மொழி படங்களிலும் சில பாடல்களை பாடியுள்ளார்.

முருக பெருமான் மீதான, "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும், உள்ளம் உருகுதய்யா முருகா, சொல்லாத நாளில்லை, சுடர்மிகு வடிவேலா' போன்ற பல பாடல்களுக்கு, தானே இசையமைத்து, உள்ளம் உருக பாடி, முருக பக்தர்களின் மனங்களில், நீங்கா இடம் பிடித்தர்.

"அன்பை தேடி' என்ற திரைப்படத்தில், "சத்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்' என்றும் துவங்கும் பாடலிலும், "சூரிய காந்தி' என்ற படத்தில், "ஓ... மேரி தில் ரூபா' என்று துவங்கும் பாடலிலும், டி.எம்.எஸ்., உடன் இணைந்து, நான் பின்னணி பாடியது என் நினைவை விட்டு நீங்கா நிகழ்வாகும். தமிழக மக்களை தனது, சிம்மக் குரலால் கவர்ந்த டி.எம்.எஸ்., உடல் நலக் குறைவால், சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து, ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். டி.எம்.எஸ்., மறைவு தமிழ் திரைப்பட துறைக்கும், இசை ரசிகர்களுக்கும் மிகப் பெரிய இழப்பாகும். 



 இவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. சவுந்திரராஜனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன், ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.எம்.எஸ், மறைவு : கருணாநிதி - வைகோ -விஜயகாந்த் இரங்கல்

பிரபல பின்னணிப் பாடகர், டி.எம்.சவுந்தரராஜன் மறைவுக்கு, பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தி.மு.க., தலைவர் கருணாநிதி:

தமிழ் சினிமாவில், இரு துருவங்களாக விளங்கிய, எம்.ஜி.ஆர்., - சிவாஜி ஆகியோருக்கு, டி.எம்.எஸ்., குரல் பொருந்தியதைப் போல், வேறு எந்தப் பாடகரின் குரலும் பொருந்தியதில்லை. இனிய குரல், சிறந்த தமிழ் உச்சரிப்பு, நடிகருக்கு ஏற்றாற்போல் குரலை மாற்றிப் பாடும் தன்மை ஆகியவை, அவருக்கு புகழை பெற்றுத் தந்தன.

அவர் பாடிய, "சிந்தனை செய் மனமே, நான் பெற்ற செல்வம்' முதலிய பாடல்கள், மறக்க முடியாதவை. டி.எம்.சவுந்தரராஜன் மறைந்த செய்தி கேட்டு, மிகவும் வருந்துகிறேன். அவரது குடும்பத்தாருக்கு, என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்:

எம்.ஜி.ஆர்., - சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன், எஸ்.எஸ். ஆர்., ரஜினி, கமல் என, அனைத்து பிரபலங்களுக்கும் பாடி, சரித்திரம் படைத்தவர் டி.எம்.எஸ்., நான் நடித்த பல படங்களில், எனக்காகவும் அவர் பாடியுள்ளார்.

தான் எந்த நடிகருக்காக பாடினாலும், அந்த நடிகரின் முகத்தை, தன் குரலால், ரசிகர்களின் மனத்திரையில் நிற்கவைக்கும் ஆற்றல் பெற்றவர். டி.எம்.சவுந்தரராஜனை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு, தே.மு.தி.க., சார்பில், ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ :

டி.எம்.சவுந்தரராஜன் பாடிய, பக்திப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், காதல் பாடல்கள், மான உணர்ச்சி பாடல்கள் என, அனைத்துப் பாடல்களும், காலத்தை வென்றவை. அவரை இழந்து வாடும், குடும்பத்தினர், உற்றார், உறவினர்களுக்கு, ம.தி.மு.க., சார்பில், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

கவர்னர் ரோசையா:

டி.எம்.சவுந்தரராஜனின் உணர்ச்சிபூர்வமான பக்தி பாடல்கள், நம்மை இறைநிலைக்கு கொண்டு செல்பவை. அவரது மறைவு, தமிழ் திரை துறை மற்றும் தமிழ் இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.

என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம் ; என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்

தலைப்பில் உள்ள இந்த இரண்டு வரிகளே, டி.எம்.எஸ்., என தமிழ் இசை ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட டி.எம்.சவுந்தரராஜனின் திறமையை பறைசாற்றும். தமிழ் திரை இசை உலகில் இவர் ஏற்படுத்திய தாக்கம்; அவரது ஆண்மை குரலின் வலிமை; அது தந்த சுகந்தம்; அது ஏற்படுத்திய ஆனந்தம்... தனி சகாப்தம் என்றே சொல்ல வேண்டும்.

இவரது குரலில் காதல் கசிந்தது; சோகம் இழைந்தது; கோபம் குமுறியது; விரக்தி வெளிப்பட்டது; அன்பு குழைந்தது. ஆக, அனைத்து நவசரசங்களையும் வெளிப்படுத்திய பாடகர், இவர் ஒருவர் தான்.

வாழ்க்கை வரலாறு ;

டி.எம்.சவுந்திரராஜன், 1922, மார்ச் 24ம் தேதி, மதுரையில் பிறந்தார். திரையுலக பின்னணி பாடலில் சிகரம் தொட்ட இவர், பக்திப் பாடலிலும் முத்திரை பதித்தார். 1946ம் ஆண்டு முதல், திரையுலகில், 60 ஆண்டு காலம் பணியாற்றினார். வயது முதிர்வின் காரணமாக ஓய்வெடுத்து வந்தார்.
சிறு வயதில் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறைப்படி இசைப்பயிற்சி பெற்றார். பல ஆண்டுகள் கச்சேரியில் பாடியவருக்கு, 1950ம் ஆண்டு திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு தேடி வந்தது. சுந்தரராவ் நட்கர்னியின் "கிருஷ்ண விஜயம்' படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகதேடி' என்ற பாடலை பாடினார். "தேவகி' என்ற படத்தில் பாடி, நடிக்கவும் செய்தார். 



எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசனுக்கு இவர் பாடிய பாடல்கள், அழியாப் புகழ் பெற்றவை. 1950-90 வரை நடித்த முன்னணி தமிழ் நடிகர்கள் அனைவருக்கும் குரல் கொடுத்தார். தமிழ்த் திரையுலகின் அனைத்து இசைப்பாளர்களிடமும் பாடினார். இறுதியாக 2010ம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் "தமிழ் செம்மொழி மாநாட்டு' பாடலை பாடினார். இந்தியாவின் முன்னணி மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான திரைப்படப் பாடல்களையும், 2,500க்கும் அதிகமான பக்திப் பாடல்களையும் பாடினார். மத்திய அரசு இவருக்கு 2003ம் ஆண்டு "பத்ம ஸ்ரீ' விருதளித்து கவுரவித்தது. தமிழக அரசின் "கலைமாமணி' உட்பட பல விருதுகளை பெற்றார்.

பட்டங்கள் ; இவரது திறமையை பாராட்டி, பல்வேறு அமைப்புகள் இவருக்கு ஏராளமான பட்டங்களை வழங்கின. பாடகர் திலகம், சிம்மக் குரலோன், இசை சக்கரவர்த்தி, இசைக்கடல், எழிலிசை மன்னர், குரல் அரசர் போன்றவை இவருக்கு அளிக்கப்பட்ட பட்டங்கள்.

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே...நீங்கிடாத துன்பம் பெருகுதே!

* ஏழிசை அரசருக்கு ரசிகர்கள் இசையாஞ்சலி

மதுரை : "இசைக்கேட்டால் புவி அசைந்தாடும்... அது இறைவன் அருளாகும்...!,' என்ற வைரவரிகளுக்கு வர்ணம் பூசியவர். பாடல்களில், வார்த்தைகளுக்கு உயிர்வார்த்தவர். வசீகரக் குரலால் இசைப்பிரியர்களின் உள்ளங்களை வளைத்து, மனதில் குடிகொண்டவர். தேனருவி போல் செவிகளுக்கு விருந்தளித்து, இசையுலகில் கோலோச்சியவர்... அவர் ,"ஏழிசை அரசர்' டி.எம்.சவுந்திரராஜன். அவர் உயிர், இவ்வுலகை விட்டுப்பிரிந்திருக்கலாம். ஆனால், அவரது குரலோசை வானம் உள்ளவரை வாழ்ந்து கொண்டிருக்கும். காற்றோடு கலந்து, நம் காதுகளில் ரீங்காரமிடும். அவர் பாடிய பாடலை, பொழுதெல்லாம் முணுமுணுத்து கொண்டிருக்கும் ரசிகர்களிடம், அவர் பாடல்களில் பிடித்த பாடல் என்ன என்று கேட்டோம்.

ரசிகர்கள் தங்களின் கண்ணீர் அஞ்சலியை... இசையாஞ்சலியாக... பொழிந்தனர்.

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே

வந்ததே... நண்பனே

நா.மம்மது (இசை ஆராய்ச்சியாளர், மதுரை): கவிஞர்கள் எந்த உணர்வில் பாடல்கள் எழுதினரோ, அதே உணர்வில், பொருளை புரிந்து கொண்டு பாடக்கூடிய திறமையாளர். மிகச்சிறந்த உச்சரிப்பு, குரலிசை, குரல் அழுத்தம் இருக்கும். பாடும்போது சுரத்தை அவரே எழுதி பாடுவார். இதனால், ராகங்களை துல்லியமாக வெளிக்கொணர முடிந்தது.

"மருதநாட்டு இளவரசி'யில் "பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா...' (மோகனராகம்), "அம்பிகாபதி'யில் "சிந்தனை செய் மனமே...'(கல்யாணிராகம்), "தாரங்கதாரா'வில் "வசந்தமுல்லை போலே வந்து அசைந்து ஆடும்...' (சாருகேசி ராகம்) பாடல்களை சிறந்த பண்களுக்கு (ராகம்) உதாரணமாக இன்றும் இசை விமர்சகர்கள், இசையமைப்பாளர்கள் குறிப்பிடுவதுண்டு.

பாடல்களை மட்டுமல்ல வசனத்தையும் பாடக்கூடியவர். "உயர்ந்த மனிதன்' படத்தில் "அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே... நண்பனே', "செல்வம்' படத்தில் "அவளா சொன்னாள்... இருக்காது, அப்படி எதுவும் நடக்காது...நம்ப முடியவில்லை...' என வசனத்தில் அமைந்த சிரமமான பாடல்களை, ரசிக்கும்படி எளிதாக பாடியவர்.

இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே...

எம்.பி.சக்தி(குடும்பத்தலைவி, மதுரை): ""அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே. நண்பனே... நண்பனே... நண்பனே... இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே... அது ஏன்... ஏன்... நண்பனே, சட்டி சுட்டதடா... கை விட்டதடா, கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா... கிருஷ்ணா... கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... என்ற பாடல்களை ஆயிரக்கணக்கான முறை கேட்டுள்ளேன். என் மூச்சு உள்ளவரை பாடிக்கொண்டிருப்பேன்.

உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை

எல்.என்.சுப்பிரமணியன்(75 வயது ரசிகர், மதுரை): "உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை. எனக்காக்க உனையன்றி யாரும் இல்லை. முருகா... முருகா... முருகா...' என்ற டி.எம்.எஸ்.பாடலில் உயிரோட்டம் இருக்கும். இப்பாடலை எப்போது கேட்டாலும் அழுது விடுவேன். அற்புதமான குரலுக்கு சொந்தக்காரர். அவர் இறக்கவில்லை. வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஒருபக்கம் பாக்குறா... ஒரு கண்ண சாய்க்குறா

டி.கே.சரவணன்(வர்த்தகர், மதுரை): "ஓடும் மேகங்களே... ஒரு சொல் கேளீரோ...' மற்றும் "ஒருபக்கம் பாக்குறா... ஒரு கண்ண சாய்க்குறா... அவ உதட்டக்கடிச்சுக்கிட்டு அங்கே மெதுவா சிரிக்கிறா... சிரிக்கிறா...' என்ற பாடல்கள் தேன் வண்டு ரீங்காரம் இடுவதுபோல் செவிகளில் இன்றளவும் ரீங்காரமிடுகிறது. தேனினும் இனிய குரலோசை மன்னர் டி.எம்.எஸ்., குரல் சாகாது.

ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

சாந்தி(குடும்பத்தலைவி, மதுரை): "ஆறுமனமே ஆறு. அந்த ஆண்டவன் கட்டளை ஆறு. இனும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே', என்ற பாடல் டி.எம்.எஸ்., இளைமை பருவத்தில் பாடியது. அந்தக்குரல் வேறொருவருக்கு இல்லை.

அச்சம் என்பது மடமையடா...

ரா.சொக்கலிங்கம் (கண்ணதாசன் நற்பணி மன்ற தலைவர்):

மக்களிடம் உணர்வுகளை ஊட்டிய பாடல், "மன்னாதி மன்னன்' படத்திலுள்ள "அச்சம் என்பது மடமையடா'. "ஊட்டி வரை உறவு' படத்தில் தமிழ், ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்பை எந்த வித கலப்புகளும் இல்லாமல் "ஹேப்பி இன்று முதல் ஹேப்பி' என்ற வரிகளால் வெளிநாட்டினரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு பாடி மகிழவைத்தார்.

எம்.ஜி.ஆருக்கு பெருமை சேர்த்த முதல்தர பாடல்களில் "நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு', என்ற தத்துவ பாடல், அவரின் புகழை பன்மடங்கு மக்களிடம் எடுத்துச் சென்றது. "பொன்னூஞ்சல்' படத்தில் உள்ள "ஆகாய பந்தலிலே' பாடல் அந்த காலத்தில் ஒலி நாடா விற்பனையில் முதலிடம் பிடித்தது சாதனையாக பேசப்பட்டது.

மதுரையும் - டி.எம்.எஸ்ஸூம்




மதுரை : மதுரையில் பிறந்தவர் டி.எம்.சவுந்திரராஜன். அவரையும், மதுரையையும் பிரிக்க முடியாது. பின்னணி பாடகருக்கு, முதல்முறையாக ரசிகர் நற்பணி மன்றம் அமைத்து மதுரையில் தான். அதுவும் டி.எம்.எஸ்.,சிற்கு தான்! மதுரை தெற்குமாசிவீதி தெற்குகிருஷ்ணன் கோவிலை சேர்ந்த மீனாட்சி அய்யங்கார் - வெங்கிட அம்மாள் தம்பதிக்கு டி.எம்.சவுந்திரராஜன், பிறந்தார்



 சிறுவயதிலேயே பக்தி பாடல்களை பாடும் திறன் பெற்றார். மகனின் இசை ஞானத்தை கண்டு ஆச்சரியம் அடைந்த மீனாட்சி அய்யங்கார், இசை ஆர்வத்திற்கு அச்சாரம் போட்டார். சிறு வயதில் கோயில்கள், விழாக்களில் குரல் கொடுத்து வந்த டி.எம்.எஸ்., முதல் முறையாக 1946ல் வெளியான "கிருஷ்ண விஜயம்' என்ற சினிமாவில், ""ராதை என்னை விட்டு ஓடாதடி,'' என்ற பாடலை பாடி ரசிகர்களின் உள்ளங்களை பரவசப்படுத்தினார். முதல் பாடலே சர்வதேச அளவில் பேச வைத்தது. அடுத்தடுத்து டி.எம்.எஸ்., பாடிய 15 ஆயிரம் பாடல்கள், இசை எனும் இமயமலைக்கு அதிபதியாக்கியது.



சென்னையில் வசித்து வந்தாலும். அவர், அடிக்கடி மதுரைக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டார். மதுரை நரசிம்மபுரத்தில் முதல்முறையாக 1980ல் "அகில இந்திய டி.எம்.எஸ்., தலைமை நற்பணி மன்றம்' ஏற்படுத்தப்பட்டது. பின், இதே பகுதியில் 1986ல் "மதுரை நரசிம்மபுரம் பத்மஸ்ரீ டாக்டர் டி.எம்.எஸ். ரசிகர் மன்றம்' உதயமானது. இச்சங்களின் தலைவர் எம்.பி.பாலன் கூறுகையில், ""பின்னணி பாடருக்கு முதல்முதலில் ரசிகர் நற்பணி மன்றம் வைத்தது நாங்கள் தான். இம்மன்றங்கள் மூலம் ஆண்டு தோறும் ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவி வருகிறோம். டி.எம்.எஸ்ஸின் 91வது பிறந்த நாள் விழாவை மதுரையில் நடத்த இருந்தோம். அவர், உடல் நிலை சரியில்லாததால் முடியாமல் போனது,'' என்றார்.

சவுராஷ்டிரா பள்ளியில் "வாக்கிங்' : தனலட்சுமி, சீனிவாசனை அடுத்து டி.எம்.எஸ்., பிறந்தார். இவரது இளைய சகோதரர் கிருஷ்ணமூர்த்தி, உடல் நலம் சரியில்லாமல் உள்ளார். மதுரையில் டி.எம்.எஸ்., இருக்கும்போது சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நண்பர்களுடன் தினமும் வாக்கிங் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அவருக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி ஏற்பாட்டில், கருணாநிதி தலைமையில், 2008ல் மதுரையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

சீனிவாசனின் பேரன் டி.எஸ்.ஆர்.மணிகண்டன், ""கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் என்ற தாத்தாவின் பாடலுக்கு ஈடு இணை எதுவும் இல்லை என தான் சொல்வேன். எங்கள் பரம்பரையில் மூத்த அவர் இறந்து விட்ட செய்தியை கேட்டதும் துவண்டு விட்டோம். எனினும், அவரது குரல் வாழ்ந்து கொண்டிருக்கிறது,'' என்றார்.

டி.எம்.எஸ்ஸின் கடைசி நிகழ்ச்சி ; டி.எம்.சவுந்திரராஜன் - சுமித்ரா தம்பதிக்கு டி.எம்.எஸ்.பால்ராஜ், டி.எம்.எஸ். செல்வக்குமார் என்ற மகன்களும், மல்லிகா என்ற மகளும் உள்ளனர். தந்தை உயிருடன் இருக்கும்போதே மகன் செந்தூரனுக்கு திருமணம் செய்ய வேண்டும், என பால்ராஜ் தீர்மானித்தார். இந்நிலையில் டி.எம்.எஸ்ஸூக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. அவரை, மருத்துவமனையில் அனுமதித்தனர். சற்று உடல் நலம் தேறிய அவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். சென்னையில் செந்தூரான், விஜயலட்சுமி திருமணம் மே 22ல் நடந்தது. அதை டி.எம்.எஸ்., முன்நின்று நடத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.

டி.எம்.எஸ் - சங்கீத மும்மூர்த்திகள் ; "சங்கீத மும்மூர்த்திகள்' என தியாகராஜ சுவாமிகள், முத்துச்சாமி தீட்ஷிதர், ஷியாம சாஸ்திரிகள் ஆகியோர் அழைக்கப்படுவர். இவர்களின் பெயரின் ஆங்கில முதல்எழுத்து "டி' "எம்' "எஸ்' என வரும். ""சங்கீத மும்மூர்த்திகளின் பெயர்களை எனது இன்ஷியலில் பெற்றிருப்பது நான் செய்த பாக்கியம்,'' என டி.எம்.எஸ்., அடிக்கடி பெருமையாக கூறுவார்.

சவுராஷ்டிரா மொழியில் கடைசி பாடல் ; "வாலிபர்கள் சுற்றிய உலகம்' என்ற சினிமா 2005ல் வெளியானது. இப்படத்தில் டி.எம்.சவுந்திரராஜனும், பி.சுசிலாவும் இணைந்து பாடினர். அதன் பின் சினிமாவில் டி.எம்.எஸ்., பாடவில்லை. எனினும், சவுராஷ்டிரா மொழியில் "கெட்டி விடோ' (நிச்சயதார்த்தம்) எனும் தலைப்பில் ரசிகர் மன்றத் தலைவர் எம்.பி.பாலன் முயற்சியில் எடுக்கப்பட்ட படத்தில் டி.எம்.எஸ்., சவுராஷ்டிரா மொழியில் பாடினார். இதுவே, அவர் பாடிய கடைசிப்பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

 நன்றி - தினமலர்


டி.எம்.எஸ். என்று அனைவராலும் அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் (91) உடல்நலக் குறைவால் சென்னையில் சனிக்கிழமை (மே 25) காலமானார்.


சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் கால் தவறி விழுந்ததில், டி.எம்.எஸ்-க்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த மாதம் வீடு திரும்பினார்.


சில நாள்களுக்கு முன்பு மீண்டும் டி.எம்.செளந்தரராஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்ற அவர், கடந்த 19-ஆம் தேதி வீடு திரும்பினார்.


பேரன் திருமணம்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சில நாள்களில் அவரது பேரனுக்கு திருமணம் நடைபெற்றது. கடந்த 22-ஆம் தேதி நடைபெற்ற திருமணத்தில் டி.எம்.எஸ். கலந்து கொண்டார்.


சென்னை மந்தைவெளியில் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்த அவருக்கு, உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால் சில நாள்களாக டாக்டர்கள் அவரது வீட்டிற்கே வந்து சிகிச்சையளித்தனர். இந்த நிலையில் சனிக்கிழமை பிற்பகலில் டி.எம்.எஸ்-க்கு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பிற்பகல் 3.50 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.


அவருக்கு மனைவி சுமித்ரா, மகன்கள் பால்ராஜ், செல்வகுமார், மகள் மல்லிகா ஆகியோர் உள்ளனர்.


60 ஆண்டுகால சகாப்தம்: தனது வெண்கலக் குரலால் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மக்களை கட்டிப் போட்ட டி.எம்.செüந்தரராஜன், 1922-ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார்; இவர் செüராஷ்டிர சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
1946-ஆம் ஆண்டில் "கிருஷ்ணவிஜயம்' என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்து தனது முதல் பாடலைப் பாடினார் டி.எம்.எஸ். அதன் பிறகு சில பாடல்களைப் பாடிய டி.எம்.எஸ்., 1954-ல் "தூக்கு தூக்கி' படத்தில் சிவாஜி கணேசனுக்காக பாடினார். சிவாஜி கணேசனே சொந்தமாக பாடியதைப் போன்ற பிரமிப்பை மக்களுக்கு ஏற்படுத்தியது டி.எம்.எஸ்-ன் குரல்.



10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்கள்: மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினிகணேசன், ஜெய்சங்கர், என்.டி.ராமாராவ், ராஜ்குமார், நாகேஸ்வரராவ், ரவிசந்திரன், நாகேஷ், ரஞ்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல முன்னணி கதாநாயகர்களின் உதட்டசைவுக்கு உயிர் கொடுத்தவர் டி.எம்.செüந்தரராஜன்.



52 இசையமைப்பாளர்களின் இசையில் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.


சூர்யகாந்தி என்ற திரைப்படத்தில் "ஓ மேரி தில்ரூபா' என்ற பாடலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைந்து பாடியுள்ளார். அருணகிரிநாதர், பட்டினத்தார் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து நடிப்புத் துறையில் பிரவேசித்தார்.


காலத்தால் அழியா பாடல்கள்: ஆண்டுகள் பல கடந்தாலும், மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற பாடல்களைப் பாடிய பெருமையைப் பெற்றவர் டி.எம்.எஸ்.
"நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்...', "அச்சம் என்பது மடமையடா', "நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா', "எங்கே நிம்மதி' போன்ற காலத்தால் அழியாப் பாடல்களை பாடியுள்ளார்.


2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தி பாடல்களையும் பாடியுள்ளார். "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்...', "அழகென்ற சொல்லுக்கு முருகா...', போன்ற பாடல்கள் ரசிகர்கள் மனதில் பக்தியை வளர்த்தன.


வயோதிகம் காரணமாக நீண்ட நாள்கள் பாடாமல் இருந்த டி.எம்.எஸ். 2010-ஆம் ஆண்டு செம்மொழிப் பாடலான, செம்மொழியான தமிழ்மொழியாம் என்ற பாடலில் முதல் இரு வரிகளைப் பாடினார்.


பத்மஸ்ரீ விருது: 5 மொழிகளில் 60 ஆண்டுகளுக்கு மேலாக திரை இசைப் பாடல்களை பாடிய டி.எம்.எஸ்-க்கு 2003-ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கெüரவித்தது.


இதை தவிர கலைமாமணி விருது, மாநில அரசின் சிறந்த பின்னணி பாடகருக்கான விருதுகள், திரைத்துறை விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளையும், பட்டங்களையும் பெற்றுள்ளார்.


அமைச்சர்கள் இரங்கல்: மந்தைவெளியில் உள்ள டி.எம்.எஸ்-ன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.


இசையமைப்பாளர் எம்.எஸ்.வி., பின்னணி பாடகி ஜானகி, கவிஞர் வாலி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் திரைத் துறையைச் சேர்ந்த பலர் டி.எம்.எஸ்.ஸின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.


டி.எம்.எஸ்-ன் இறுதிச் சடங்குகள் சாந்தோம் அகில இந்திய வானொலி நிலையத்தின் அருகில் உள்ள மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 26) மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
 நன்றி - தினமணி

Saturday, May 25, 2013

இளையராஜா - ஜி ஆர் சுரேந்தர்நாத் - சிறுகதை

நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... 
ளையராஜாவின் இசை என்பது, வெறும் திரையிசைப் பாடல்கள் மட்டும் அல்ல; அது தமிழர்களுடைய வாழ்க்கையின் ஒரு மகத்தான பகுதி!
 
குரல் தழுதழுக்க, என் முன்னாள் காதலியின் கடிதத்தைப் படித்து முடித்த என் மனைவி நந்தினி, ''யாரு இந்த ஜெஸ்ஸி?' என்றாள். அப்போது அவளின் விழியோரம் எட்டிப்பார்த்த கண்ணீர், அடுத்து நான் சொல்லப்போகும் வார்த்தைகளைக் கேட்டு, கன்னத்தில் வழிவதற் காகக் காத்திருந்தது. நான் குரலில் எவ்வித உணர்ச்சியும் இன்றி, ''இந்த லெட்டர் உனக்கு எப்படிக் கிடைச்சது?' என்றேன்.

'உங்களோட ஒரு பழைய புத்தகத்துல இருந்துச்சு' என்ற நந்தினி, படுக்கை அறையில் இருந்து குழந்தையின் சிணுங்கல் சத்தம் கேட்க... வேகமாக உள்ளே சென்றாள். நான் பால்கனிக்குச் சென்று ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு வெளியே பார்த்தேன். டெல்லியின் ஜனவரி இரவுக் குளிருக்கும் மனதில் பரவியிருந்த மெல்லிய சோகத்துக்கும் சிகரெட் புகை இதமாக இருந்தது. புகையை இழுத்து வெளியே விட்டபடி தூரத்தில் தெரிந்த துக்ளகாபாத் கோட்டையைப் பார்த்தேன்.   மெயின் ரோட்டில் விளக்குகள் மின்னியபடி வாகனங்கள் ஊர்ந்துகொண்டிருந்தன. ஜெஸ்ஸி யின் கண்களும் இப்படித்தான்... கண்ணுக்குள் யாரோ நட்சத்திரங்களை ஒளித்துவைத்தது போல் மின்னிக்கொண்டே இருக்கும்


. சென்னையில் நான் புராஜெக்ட் இன்ஜினீயராகப் பணியாற்றிய கம்பெனியின் ஹெச்.ஆர்-ல் பணிபுரிந்தவள். இளையராஜாவில் ஆரம்பித்து, இளையராஜாவில் முடிந்த காதல் அது.


''ரொம்ப ரேர் இளையராஜா பாட்டெல்லாம் வெச்சிருக்கீங்க. ப்ளுடூத்ல அனுப்புறீங்களா வினோத்?'



''இளையராஜா புரொகிராமுக்கு ரெண்டு டிக்கெட் வாங்கியிருக்கேன்... வர்றீங்களா வினோத்?'


'' 'மயங்கினேன்... சொல்லத் தயங்கினேன்...' பாட்டைக் கேக்குறப்ப எல்லாம் உங்களைத்தான் நினைச்சுக்கிறேன் ஜெஸ்ஸி.'


''நமக்குப் பையன் பிறந்தா இளையராஜான்னு பேர் வைக்கணும் வினோ.'


''இளையராஜாவின் உன்னதமான சங்கீதத்தில் நம் காதல் ரகசியமாக வாழும்.'
காலம் நம்மிடம் இருந்து எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு, இளையராஜாவை மட்டும் பிரிக்க முடியாமல் தோற்றுக்கொண்டேயிருக்கிறது.


குழந்தையைத் தூங்கவைத்துவிட்டு வந்த நந்தினி, ''சொல்லுங்க... யாரு அந்த ஜெஸ்ஸி?' என்றாள்.


எனக்கு எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. நந்தினி, அதிகம் வெளியுலகு தெரியாமல் வளர்ந்த ஒரு கிராமத்து வாத்தியார் வீட்டுப் பெண். என்னைத் திருமணம் செய்து கொண்ட பிறகுதான் செய்தித்தாளே படிக்க ஆரம்பித்தாள். என் மீது மிகவும் பொசஸிவ்வாக இருப்பாள். அபார்ட்மென்ட்டில் பனியனுடன் வெளியே சென்று நின்றால், ஓடிவந்து என் தோளில் துண்டைப் போர்த்திவிட்டு, ''ஏன் உடம்பைக் காமிச்சுக்கிட்டு நிக்கிறீங்க?' என்பாள்.



''ஆமாம்... பெரிய சரத்குமார் பாடி...'

என்பேன் நான். அப்படிப்பட்டவளிடம் பேச்சும், சிரிப்பும், கனவுகளும், கவிதைகளுமாக என் வாழ்வில் ஒரு பெண் இருந்தாள் என்பதை எப்படிச் சொல்ல?
''சொல்றேன். பதட்டப்படாமக் கேளு.ஜெஸ்ஸி... சென்னைல என்கூட வேலை பார்த்த பொண்ணு. அவ கிறிஸ்டியன். ரெண்டு பேர் வீட்லயும் ஒப்புக்கலைனு பிரிஞ்சுட்டோம்.'


''ரெண்டு பேரும் எத்தனை வருஷம் லவ் பண்ணீங்க?'

''மூணு வருஷம்.'

''மூணு வருஷம் ஒருத்திய லவ் பண்ணி யிருக்கீங்க. அவளைக் கல்யாணம் பண்ணிக் காம, என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?'


'ஒருவரைக் காதலித்துவிட்டு, இன்னொருவரைத் திருமணம் செய்துகொள்ள சாபம் விதிக்கப்பட்ட தேசம் இது நந்தினி’ என்று மனசுக்குள் நான் சொல்லிக்கொண்டிருந்தபோது, ''இப்பவும் அவளை நினைச்சுப்பீங்களா?' என்றாள் நந்தினி.


''எங்க ஊரு அரச மரத்தடில, எங்கூட உக்காந்து ராட்டினம் சுத்தின குமரேசனையே நான் இன்னும் மறக்கல நந்தினி. மனுஷன்னா, அவன் வாழ்க்கைல கடந்துவந்த எல்லோருடைய நினைவும் இருக்கத்தானே செய்யும்' என்று நான் கூறியபோது என் மொபைல் சிணுங்கியது.


'மெட்டி ஒலி காற்றோடு...’ என்று ரிங்டோன் ஒலிக்க... நான் மொபைலைக் கட் செய்தேன்.


''இது இளையராஜா பாட்டுதானே?' என்றாள் நந்தினி.


''ஆமாம்.'

''என் நினைவில்லாம இளையராஜாவோட ஒரு பாட்டைக் கூட உங்களால கேக்க முடியாதுன்னு எழுதியிருந்தாளே... ஒவ்வொரு தடவை இளையராஜா பாட்டு கேக்குறப்பவும் அவள நினைச்சுப்பீங்களா?' என்று நந்தினி கேட்டபோது, அவள் குரல் தழுதழுத்தது.


நான் நந்தினியின் கேள்விக்குப் பதில் சொல்லாமல், ''நந்தினி... உனக்குக் கஷ்டமாத்தான் இருக்கும். எனக்குப் புரியுது. என்ன பண்றது? நான் ஜெஸ்ஸியைக் காதலிச்சது, உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது... எதையும் இப்ப மாத்த முடியாது. ஆனா, என்னோட காதல் தோல்வி நம்ம வாழ்க்கையை எந்த விதத்துலயும் பாதிக்கலை. உன்கூட நல்லபடியா சந்தோஷமாத் தானே இருக்கேன்.'


''அதெல்லாம் சரி... ஆனா, எனக்கு முன்னாடி ஒரு பொண்ணு, முழுசா மூணு வருஷம் உங்க வாழ்க்கைல இருந்திருக்காளே. அதை எப்படிங்க தாங்கிக்கிறது?' என்ற நந்தினி அழ ஆரம்பித்தாள். நான் மேற்கொண்டு ஒன்றும் பேசாமல், அழுது மனம் ஆறட்டும் என்று விட்டுவிட்டேன்.


றுநாள் இரவு. அருகில் நந்தினி அசந்து தூங்கிக்கொண்டிருந்தாள். குனிந்து அவள் நெற் றியில் அன்புடன் முத்தமிட்டேன். நந்தினியின் அருகில் படுத்திருந்த குழந்தையின் கையில் நந்தினியின் புடைவை நுனி. நான் புடைவையின் நுனியை எடுக்க முயற்சித்தேன். குழந்தை சிணுங்க... விட்டுவிட்டேன். தன் புடைவை நுனியைப் பிடித்துக்கொண்டு தூங்க நந்தினி குழந்தைக்குப் பழக்கப்படுத்தியிருந்தாள்.


எனக்குப் பாட்டு கேட்க வேண்டும்போலத் தோன்றியது. எழுந்து பால்கனிக்குச் சென்றேன். மொபைலில் ''வானுயர்ந்த சோலையிலே...' பாடலை ஒலிக்கவிட்டு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டேன். பாடலில் மெள்ள மெள்ளக் கரைய ஆரம்பித்தேன்.


'தேனாகப் பேசியதும்
சிரித்து விளையாடியதும்...
வீணாகப் போகுமென்று
யாரேனும் நினைக்கவில்லை...’


என்ற வரிகளைக் கேட்டவுடன் ஜெஸ்ஸியின் நினைவில் இருந்த எனக்குக் கண்கள் கலங்கின. அப்போது ''என்ன... அவ நினைப்பா?' என்று பின்னால் இருந்து நந்தினியின் குரல் கேட்க... அவசரமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டு திரும்பினேன்.


நந்தினியின் கண்களில் கோபம் மின்ன, ''நான் வந்து நின்னதுகூடத் தெரியாம பாட்டு கேட்டுட்டு இருக்கீங்க. அவ நினைப்புல தான் தினம் வீட்டுக்கு வந்தவுடனே இளைய ராஜா பாட்டு கேக்குறீங்களா?'


''இல்லம்மா... சாதாரணமாதான் கேக்குறேன்.'


''சும்மா சொல்லாதீங்க. இப்ப இந்தப் பாட்டுல, 'தேனாகப் பேசியதும், சிரித்து விளையாடி யதும், வீணாகப் போகுமென்று’னு கேட்டப்ப அவ நினைப்பு வரலைனு சொல்லுங்க பாப்போம்?'


மற்ற விஷயங்களில் சற்று விவரம் இல்லாத பெண்கள்கூட, கணவனின் பெண் நட்பு சார்ந்த விவகாரங்களில் மட்டும் மிகவும் நுணுக்கமான புத்திசாலிகளாகிவிடுகிறார்கள். உண்மையைச் சொன்னால் மேலும் பிரச்னை என்பதால், ''அதெல்லாம் இல்ல நந்தினி... நீயாவே நினைச்சுக்கிற?' என்றதும், வேகமாக உள்ளே சென்ற நந்தினி, தூங்கிக் கொண்டிருந்த கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்தாள். நான் சற்றும் எதிர்பாராதவிதமாக என் முன் குழந்தையை நீட்டி, ''நம்ம பொண்ணு மேல சத்தியம் பண்ணிச் சொல்லுங்க. அந்தப் பாட்டக் கேக்குறப்ப, அவ நினைப்பு வரலைனு சொல்லுங்க பாப்போம்' என்று கூற... நான் அதிர்ச்சியுடன் நந்தினியை நோக்கினேன். 



எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்றாலும், பெற்ற குழந்தை மீது பொய் சத்தியம் பண்ணச் சங்கடமாக இருந்தது. குழந்தை தூக்கம் கலைந்து அழ ஆரம் பித்தது. நான் வேகமாகக் குழந்தையை வாங்கி என் தோளில் சாய்த்து இறுக்கமாக அணைத்தபடி, ''ஆமாம் நந்தினி... அந்தப் பாட்டக் கேட்டப்ப ஜெஸ்ஸியத்தான் நினைச்சுட்டிருந்தேன்' என்றேன்.



சட்டென்று கண் கலங்கிய நந்தினி, ''அவள நினைச்சுட்டு இருக்கிறதுக்கு என்னை ஏங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? பொண்டாட்டி, பிள்ளையத் தூங்கவெச்சிட்டு எவளையோ நினைச்சுட்டு பாட்டு கேக்குறேன்னு சொல்றீங்களே... என் மனசு என்ன பாடுபடும்னு யோசிச்சீங்களா?' என்றாள்.


''எனக்குப் புரியுது நந்தினி... என்னை இப்ப என்ன செய்யச் சொல்ற?'

''நீங்க இனிமே அவள நினைக்கக் கூடாது.'

''சரி...'

''ஆனா, இளையராஜா பாட்டு கேக்குறப்பல்லாம் உங்களுக்கு அவ நினைப்பு வரும்ல?' என்று நந்தினி கேட்க... நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை.

''சொல்லுங்க... வரும்ல?'

''வரலாம்.'

''அப்படின்னா, இனிமே இளையராஜா பாட்டக் கேக்காதீங்க' என்றவுடன் எனக்கு யாரோ என் கழுத்தைப் பிடித்து நெரிப்பதுபோல் இருந்தது. நான் பிறந்ததிலிருந்து என்னைத் தொடரும் பாடல்கள் அவை. நான் குழந்தையாக இருந்தபோது, 'கண்ணே... கலைமானே...’ பாடலைப் பாடித்தான் என்னைத் தூங்கவைத்ததாக அம்மா சொல்லியிருக்கிறாள். பள்ளியில், 'ஆடி மாசம் காத்தடிக்க...’ பாடலுக்கு நடனம் ஆடி முதல் பரிசு வாங்கியிருக்கிறேன். ஒரு மழைக்கால மாலையில் 'புத்தம் புது பூ பூத்ததோ...’ பாடல் கேட்டு முடித்த பிறகுதான் ஜெஸ்ஸி என் தோளில் சாய்ந்து தன் காதலைச் சொன்னாள். என்னிடம் இளையராஜாவின் பாடல்களைக் கேட்காதே என்று சொல்வது, என் இறந்த காலத்தை அழிக்கச் சொல்வதுபோல். ஒரு மனிதனின் இறந்த காலத்தை எப்படி நந்தினி அழிக்க முடியும்?



ஆனாலும், நந்தினியின் துயரத்தைப் புரிந்து கொண்டு, கொஞ்சம் நாள் சென்றால் சரியாகி விடும் என்ற நம்பிக்கையுடன், ''சரி... இனிமே கேட்கல!'' என்றேன்.


தன் பிறகு ஒரு வாரம் வரையிலும் நான் இளையராஜாவின் பாடல்களைக் கேட்கவே இல்லை. அதற்கு மேல் என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஒரு புதன் கிழமை இரவு, நந்தினியும் குழந்தையும் தூங்கிய பிறகு கட்டில் ஆடாமல், நந்தினி மேல் என் கை கால் படாமல் கவனமாக இறங்கினேன். அன்றைக்கு பால்கனி யில் பாடல் கேட்டுத்தான் மாட்டிக்கொண் டோமே என்று ஃப்ளாட் கதவைத் திறந்து கொண்டு மொபைலுடன் மொட்டைமாடிக்கு வந்தேன். 'கடவுளே... ஒரு பாடல் கேட்க இவ் வளவு திருட்டுத்தனமா?’ என்று மனம் துக்கத்தில் கசிந்தது.


இருட்டில் மொபைலில் ஆவலுடன் பாடல் களைத் தேடி, 'என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்... ஏன் கேட்கிறது?’ பாடலைக் கேட்க ஆரம்பித்தேன். பாடல் ஆரம்பித்து பல்லவியைக் கூடத் தாண்டவில்லை. 'ணங்’கென்று யாரோ முதுகில் குத்த... பயந்து திரும்பினேன். நந்தினி என்னை ஆவேசத்துடன் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். நான் கலக்கத் துடன், ''நந்தினி...' என்று ஆரம்பிக்க... நந்தினி என்னைப் பேச விடாமல், ''அன்னைக்கி எங்கிட்ட இனிமே இளையராஜா பாட்டக் கேக்க மாட்டேன்னு சொன்னீங்கள்ல?' என்று சத்தமாகக் கேட்டபடி என் நெஞ்சில் கைவைத்துத் தள்ளினாள்.


லேசாகத் தடுமாறிய நான் சமாளித்து நின்றுகொண்டு, ''ஏன் நந்தினி சின்னப் புள்ள மாதிரி பிடிவாதம் பண்ற? வெறும் பாட்டுதானே நந்தினி...' என்றேன்.


''உண்மையச் சொல்லுங்க... உங்களுக்கு அது வெறும் பாட்டுதானா? இளையராஜா பாட்டக் கேக்குறப்பல்லாம் அவ நினைப்பு உங்களுக்கு வர்றதில்ல?'


''சும்மா பாட்டு கேக்குறதால எதுவும் நடந்து டாது நந்தினி. அவ சென்னைல இருக்கா. நான் டெல்லில இருக்கேன். தேவையில்லாம நீ பயப் படற. பாட்டு கேக்குறது வேற. அவள நினைச்சுக் கிறது வேற.'


''உங்களுக்கு ரெண்டும் ஒண்ணுதாங்க' என்று என் அருகில் வந்த நந்தினி கண்களில் உக்கிரத் துடன், ''இனிமே இளையராஜா பாட்டு கேக்க மாட்டேன்னு சொல்லுங்க' என்றாள். நான் மௌனமாக நிற்க... ''கேக்க மாட்டேன்னு சொல்லுங்க... சொல்லுங்க... சொல்லுங்க' என்று மீண்டும் மீண்டும் ஆவேசத்துடன் கத்திய நந்தினி, என் சட்டைக் காலரைப் பிடித்து வெறி பிடித்தவள்போல் உலுக்கினாள்.



ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த நான், ''பைத்தியக்கார நாயே... ஏண்டி இப்படி என் உயிர எடுக்குற?' என்றபடி ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்தேன். சட்டென்று அமைதியாகி, அதிர்ச்சியுடன் என்னை நோக்கிய நந்தினியின் கண்களில் இருந்து நீர் வழிந்தது. சில விநாடிகள் என் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த நந்தினி மேற்கொண்டு ஒன்றும் பேசாமல், இறங்கிச் சென்றாள். நான் வீட்டுக்குச் செல்லப் பிடிக்காமல் மொட்டை மாடியிலேயே படுத்துக்கொண்டேன்.


எப்போது கண் அசந்தேன் என்று தெரியவில்லை. சட்டென்று விழித்தபோது விடிந்திருந்தது. கீழே இறங்கினேன். வீட்டினுள் நுழைந்தபோது வீடு அமைதியாக இருந்தது.


''நந்தினி...' என்றபடி படுக்கை அறையில் பார்த்தேன். நந்தினி அங்கு இல்லை. குழந்தையையும் காணவில்லை. சமையல் அறையிலும் நந்தினியைக் காணாமல், ஃப்ளாட் வாசலை நெருங்கியபோதுதான் கவனித்தேன்.


 செருப்பு ஸ்டாண்டில் அவளுடைய செருப்பு இல்லை. சற்றே திகிலுடன் அவளுடைய பர்ஸையும் மொபைலையும் தேட... இரண்டும் கிடைக்கவில்லை. பதற்றத்துடன் என் மொபைலை எடுத்து அவள் மொபைலுக்கு அடிக்க சுவிட்ச் ஆஃப். வேகமாக பேன்ட், சட்டையை மாட்டிக்கொண்டு பைக் சாவியுடன் படி இறங்கினேன்.


வாட்ச்மேனிடம் விசாரித்தேன். ''சுப பாஞ்ச் பஜே, பச்சி கி சாத் மதுரா ரோட் கி தரஃப் ஜா ரஹி தி' என்றான். கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தேன். ஆறரை. ஐந்து மணிக்கே குழந்தையோடு மதுரா ரோடு பக்கம் சென்றிருக்கிறாள். ஒருவேளை கோபித்துக்கொண்டு தமிழ்நாட்டுக்குக் கிளம்பியிருப்பாளோ? ஊருக்குப் போக வேண்டும் என்றாலும், மதியம் மூன்றரைக்குத்தான் ரயில். எனவே, அருகில்தான் எங்காவது சென்றிருக்க வேண்டும் என்ற முடிவோடு மதுரா மெயின் ரோடு, ஆனந்த்மாய் ரோடு, அர்பிந்தோ மார்க் ரோடு என்று அனைத்து வீதிகளையும் சுற்றிச் சுற்றி வந்தேன். 


அடுத்து எங்கு சென்று பார்ப்பது என்று புரியாமல் ஸாகர் ரத்னா ஹோட்டல் வாசலில் தவிப்புடன் நின்றுகொண்டிருந்தேன். என் துணை இல்லாமல் துக்ளகாபாத்துக்கு வெளியே நந்தினி சென்றது கிடையாது. இந்தியும் அவளுக்குத் தெரியாது. கையில் ஆறு மாதக் குழந்தையுடன், மொழி புரியா ஊரில் எங்கு சென்றிருப்பாள்?


நேரம் ஆக ஆக... எனக்குப் பயம் அதிகரித்தது. வாட்ச்சைப் பார்த்தேன். மணி எட்டு. வாட்ச்மேனை மொபைலில் அழைத்து விசாரித்தேன். அவன் 'நந்தினி இன்னும் வரவில்லை’ என்றான். சட்டென்று ஒருவேளை நந்தினி ஏதேனும் செய்துகொண்டிருப்பாளா என்று தோன்றியவுடனேயே வயிறு கலங்கியது. மேலும் யோசிக்கவும் நடக்கவும் சக்தியற்று தெருவையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்.


'கடவுளே... எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வாழ்க்கை?’ என்று மனதுக்குள் புலம்பியபோது என்னை அறியாமலேயே என் கண்களிலிருந்து நீர் வழிந்தது. கண்களைத் துடைத்துக்கொண்டு, மொபைலை எடுத்து மீண்டும் ஒரு முறை நந்தினியின் போனுக்கு அடித்துப் பார்த்தேன். சுவிட்ச் ஆஃப். ஊரில் இருக்கும் நந்தினியின் பெற்றோரிடம் ஏதாவது சொன்னாளா என்று தெரிந்துகொள்ள, நந்தினியின் அப்பாவை மொபைலில் அழைத்தேன். போனை எடுத்த என் மாமனாரிடம், ''மாமா... நந்தினி ஏதும் போன் பண்ணியிருந்தாளா?'' என்றேன்.


''ஒண்ணும் பண்ணலையே. என்ன விஷயம் மாப்ள?'


''நேத்து ராத்திரி ஒரு சின்ன சண்டை. மொட்டைமாடிலயே படுத்துத் தூங்கிட்டேன். காலைல எந்திரிச்சுப் பாத்தா ஆளக் காணோம்.'

''என்ன மாப்ள சொல்றீங்க?' என்ற மாமனாரின் குரலில் அதிர்ச்சி.

''நானும் மூணு மணி நேரமாத் தேடிப் பாத்துட்டேன். ஆளக் காணோம்...' என்ற என் குரல் உடைந்து அழுகை வரப் பார்த்தது.


''பயப்படாதீங்க மாப்ள. கோபத்துல பக்கத்துல எங்கயாச்சும் போயிருப்பா. நீங்க எல்லா இடத்துலயும் நல்லாத் தேடிப் பாத்தீங்களா?'

''பாத்தாச்சுங்க.'

''பக்கத்து கோயில்ல ஏதும் பாத்தீங்களா?'

''இல்லையே.'

''பக்கத்துல இருக்கிற கோயில்ல எல்லாம் பாருங்க. இங்க எங்ககூட ஏதாவது சண்டை வந்துச்சுன்னா, கோயில்ல தான் போய் உக்காந்திருப்பா' என்று மாமனார் கூற... எனக்கு மூச்சு வந்தது.


''சரி மாமா...' என்ற நான் வேகமாக பைக்கை உதைத்துக் கிளம்பினேன். அந்தப் பிரதேசத்தில் காணப்படும் ஷிவா மந்திர், லோட்டஸ் டெம்பிள், கல்காஜி காளி மந்திர், சாய் மந்திர் என்று அத்தனை கோயில்களிலும் தேடினேன். எங்கும் நந்தினியைப் பார்க்க முடியவில்லை. இன்னும் ஆர்.கே.புரம் மலைமந்திர் மட்டும்தான் பாக்கி. அது வீட்டிலிருந்து தூரம். இருப்பினும், அது தமிழர்களால் நடத்தப்படும் முருகன் கோயில் என்பதால், அங்கு வந்து செல்பவர்கள், அர்ச்சகர்கள் என்று எல்லோரும் தமிழர்களாகத்தான் இருப்பார்கள். எனவே, நந்தினி அங்கு சென்றிருக்கக்கூடும் என்று நம்பிக்கையுடன் பைக்கில் வேகமாகப் பறந்தேன். மலைமந்திர் வாசலில் பைக்கை நிறுத்தியபோது நான் மிகவும் களைத்திருந்தேன்.


மெதுவாக நடந்து கீழே விநாயகர் சந்நிதி, மீனாட்சி சந்நிதியில் பார்த்தேன். நந்தினி இல்லை. படியேறி மேலே சென்றேன். முருகன் சந்நிதியிலும் அவளைக் காணாமல் ஏமாற்றத்துடன் சுற்றிலும் பார்த்தேன். துர்கையம்மன் சந்நிதி அருகே ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்க... நான் வேகமாகச் சென்றேன். அங்கு நந்தினி புல்தரையில் அமர்ந்தபடி ரிங் ரோட்டையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.


வீட்டுக்கு வந்தும் இருவரும் ஒன்றும் பேசவில்லை. அழுத குழந்தைக்குப் பால் கொடுத்துத் தூங்கவைத்த பிறகு நிதானமாக நந்தினியிடம் பேச ஆரம்பித்தேன்.


''நான் உங்கிட்ட ஏன் போனேன்னு கேக்கப்போறதில்ல. இனிமே நான் என்ன பண்ணணும்னு மட்டும் சொல்லு' என்றேன்.


''இனிமே நீங்க இளையராஜா பாட்ட கேக்கக் கூடாது' என்றாள் வேகமாக.

நான் ஒரு விநாடியும் யோசிக்காமல், ''சரி... இனிமே கேக்க மாட்டேன்' என்றபோது லேசாகத் தொண்டை அடைத்தது.


''கேக்க மாட்டேன்னு சொல்லிட்டு, வெளிய போறப்ப கேட்டீங்கன்னா என்ன பண்றது? உங்க மொபைல்ல இருக்கிற இளையராஜா பாட்டையெல்லாம் அழிங்க' என்றாள். நான் மௌனமாக மொபைலில் இருந்த பாடல்களை அழித்துவிட்டு ''போதுமா?' என்றேன்.


''கம்ப்யூட்டர்ல இருக்கிற இளையராஜா பாட்டு?' என்று நந்தினி கூற... கணினியை இயக்கி இளையராஜா பாடல்களைஅழித்துவிட்டு அவள் முகத்தை நோக்கினேன். அவள், ''சி.டி-ல் லாம்...' என்றாள். நான் அலமாரியைத் திறந்து, இளையராஜாவின் பாடல்களைப் பதிவுசெய்து வைத்திருந்த சி.டி-க்கள், டி.வி.டி-க்கள் என்று எல்லாவற்றையும் ஒரு இயந்திரம்போல் எடுத்துக் கீழே போட்டேன்.    


நந்தினி, ''இவரு இளையராஜா பாட்டு கேட்டு அவள நினைச்சுக்கிட்டே இருப்பாராம். நான் வேடிக்கை பாத்துட்டு இருக்கணுமாம்' என்றபடி வெறி பிடித்தாற்போல் சரக்... சரக்... என்று சி.டி-க்களைத் தரையில் தேய்த்தாள்.


டுத்து வந்த மூன்று மாத காலமும் ஒரு பிரச்னையும் இல்லை. உள்ளுக்குள் ஒரு வெறுமை இருந்தாலும், வெளியில் என்னால் இயன்றளவு சகஜமாக இருக்க முயன்றேன். ஆனால், இளையராஜா பாடல்கள் கேட்காமல் இருப்பது, நெஞ்சில் முள்ளாக உறுத்திக்கொண்டேயிருந்தது. 


 ஒரு நாள் தமிழர்கள் அதிகம் வசிக்கும் முனீர்கா பகுதியில் சென்றபோது ஒரு வீட்டிலிருந்து 'உன் குத்தமா... என் குத்தமா?’ பாடல் கேட்க, அப்படியே பைக்கை நிறுத்திக் கேட்டுக்கொண்டிருந்தேன். இரவுகளில் படுத்தபடி மனதுக்குள்ளேயே இளையராஜாவின் பாடல்களை ஆரம்பத்தில் இருந்து ஃப்ரீலூட், இன்டர்லூடுடன் கேட்க... மனம் சற்று நிம்மதியடைந்தது. என் செவியில் ஒலிக்காத இளையராஜாவின் பாடல்கள், என் மனதில் ஒலித்துக்கொண்டேயிருந்தன. அப்படியே தூங்கிவிட... கனவிலும் இளையராஜா பாடல்களைக் கேட்டுக்கொண்டேயிருந்தேன்.


ஒரு விடியற்காலை கனவில், 'நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி...’ பாடலைக் கேட்கக் கேட்க மிகவும் இன்பமாக இருந்தது. சட்டென்று விழிப்பு வர... அப்போதும் பாடல் தொடர்ந்து ஒலித்தது. விழித்த பிறகும் எப்படிப் பாடல் ஒலிக்கிறது என்று நான் திகைக்க... கட்டிலில் புன்னகையுடன் நந்தினி அமர்ந்திருந்தாள். அவள் கையில் இருந்த பாக்கெட் சி.டி. ப்ளேயரில் இருந்துதான் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. நடப்பதை நம்ப முடியாமல் ஆச்சர்யத்துடன் எழுந்து அமர்ந்தேன்.


சட்டென்று என் நெஞ்சில் சாய்ந்த நந்தினி, ''ஸாரிங்க?' என்றாள்.


''ஏய்... என்னாச்சு உனக்கு?' என்றேன்.


''நீங்க இளையராஜா பாட்ட கேக்குறத நிறுத்தின பிறகு, பழைய மாதிரியே இல்ல. நீங்க என்னதான் எங்கிட்ட சிரிச்சுப் பேசினாலும், அதெல்லாம் நடிப்புனு நல்லாத் தெரிஞ்சுபோச்சு. பழைய கலகலப்பு, மனசுவிட்டுச் சிரிக்கிறது, துறு துறுனு எங்கிட்ட வம்பிழுக்கிறதுனு எல்லாம் போயிடுச்சு. எனக்கு நீங்க பழைய வினோத்தா வேணுங்க. அதுவும் இல்லாம உங்ககூட சேர்ந்து இளையராஜா பாட்டக் கேட்டுக் கேட்டு, அது இல்லாம எனக்கே ஒரு மாதிரியா இருக்கு. அதான் இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்போம்னு நேத்து அலைஞ்சு திரிஞ்சு பத்து இளையராஜா பாட்டு டி.வி.டி. வாங்கிட்டு வந்தேன்' என்று கூறியவளை உற்றுப் பார்த்தேன்.


அப்போது என் மனதில் நந்தினியின் மீது ஏற்பட்ட அபாரமான காதலை இந்த சாதாரண எழுத்துக்களைப் பயன்படுத்திச் சொல்ல முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஜெஸ்ஸியோடு எனக்கு இருந்த காதலைவிடப் பல மடங்கு பெரிய காதல் இது. ''நந்தினி...' என்று நான் ஆவேசத்துடன் அவளை இறுக அணைத் துக்கொண்டேன்.


''ஆனா, ஒரு கண்டிஷன்... பாட்டு கேக்குறப்ப நீங்க அவள நினைக்கக் கூடாது.'


''நினைச்சுப்பேன்... ஆனா, அவள இல்ல. இனிமே எங்கே இளையராஜா பாட்டக் கேட்டாலும், உன் நினைப்புதான் வரும்' என்று நான் கூற... நந்தினி என்னை இறுகத் தழுவிக்கொண்டாள். சி.டி-யில் அடுத்த பாடல் ஒலித்தது.



'என்னோடு வா வா... என்று சொல்ல மாட்டேன்...
உன்னைவிட்டு வேறு எங்கும் போக மாட்டேன்’!  



readers view



1.
வாழ்த்துக்கள் சுரேந்தர்நாத்.
இது இளையராஜா என்ற மேதைக்கு ஒரு அழகான ஒரு பூங்கொத்து...
அனைவர் வாழ்க்கை இலும் இளையராஜா நிறைந்துள்ளார் ....

லட்ச்சகனக்கான விகடன் வாசகர்களை இந்த ஒரு கதை மூலம் வசப்படுத்திவிட்டீர்கள்.

அபு முகம்மது ... தலைஞாயிறு ...



2. வாழ்த்துக்கள் சுரேந்தர்நாத். லட்ச்சகனக்கான விகடன் வாசகர்களை இந்த ஒரு கதை மூலம் வசப்படுத்திவிட்டீர்கள். நிஜத்தில் இளையராஜா சார் இந்த கதையை இந்நேரம் படித்திருப்பார். எங்களை போலவே அவரும் சந்தோஷ பட்டிருப்பார். நீங்கள் யார் என்று யாரிடமாவது விசாரித்திருக்க கூடும். மறுபடியும் வாழ்த்துக்கள். நானும் கூட இளையராஜா சாரின் வெறி பிடித்த வினோத்துகளில் ஒருவன். என் வாழ்க்கையில் ஜெசி இல்லை, ஆனால் டெல்லி உண்டு. நந்தினி உண்டு. ராஜா சாரால் என்னற்ற உறங்கா மற்றும் உறங்கிய நாட்கள் உண்டு. ராஜா சாருக்காக திருட்டு ரயில் ஏறி படம் பார்த்ததுண்டு. சுவர் ஏறி குதித்தும் படம் பார்த்ததுண்டு. அழுததுண்டு, ஆனந்த கூத்தாடியதுண்டு. இன்று கூட கண் கலங்கினேன் - சித்திரையில் நிலா சோறு படத்தின் "கல்லாலே செஞ்சு வெச்ச" பாடலை கேட்டு.

நாட்கள் ஓடிவிட்டன. வெற்றி,தோல்வி, சுக துக்கங்கள் நிறைய பார்த்துவிட்டேன். இன்று தூரதேசத்தில் இருக்கிறேன். என் உள்ளமெல்லாம், உயிரெல்லாம் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் ராஜா சார் தான் நிரம்பி இருக்கிறார். அவரை அள்ள அள்ள சந்தோஷம் குறையவில்லை. நான் கூட இளையராஜா சாரின் வினோத் தான். என்னை இங்கு கதாநாயகனாக்கி அழகு பார்த்த சுரேந்தர்நாத் அவர்களுக்கு நன்றி. 

கடந்த ஐம்பது வருடங்களில் "மிக அதிகமான" தமிழர்கள் மிக அதிகமான நேரம் மகிழ்ச்சியாக இருக்க வைத்தவர் இளையராஜாதான். 

THANX - VIKATAN