Thursday, May 23, 2013

வீதிக்கு வந்த வீரபாண்டியார் வீட்டுச் சண்டை - மினி தொடர்: பாகம் 1,2

வீதிக்கு வந்த வீரபாண்டியார் வீட்டுச் சண்டை - மினி தொடர்: பாகம் 1

-வீ.கே.ரமேஷ்

படங்கள்:
க. தனசேகரன்

வீரபாண்டியாரை 'சேலத்து சிங்கம்' என்று சிலாகிப்பார் கருணாநிதி. அவரும் கடைசி நிமிடங்கள் வரை கருணாநிதிக்கே சிம்ம சொப்பனமாகத்தான் இருந்தார். அந்தச் சிங்கத்தின் குகையிலேயே இப்போது சிறு நரி புகுந்தது போல், சலசலப்பு கிளம்பி இருக்கிறது. விளைவு, பலபேருக்கு பஞ்சாயத்து பண்ணிய வீரபாண்டியாரின் குடும்பத்திற்கே இப்போது நாட்டாமை தேடவேண்டிய நிலை. உண்மையில் அந்தக் குடும்பத்தில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?

கோலோச்சிய வீரபாண்டிய ஆறுமுகம் 
 
தொடர்ந்து 38 வருடங்களாக திமுக மாவட்ட செயலாளராகவும், ஐந்து முறை எம்.எல்.ஏவாகவும், வேளாண்மை, உள்ளாட்சி உள்ளிட்ட துறைகள் என மூன்று முறை அமைச்சராகவும் இருந்த மூத்த முன்னோடி வீரபாண்டி ஆறுமுகம்.

கடந்த திமுக ஆட்சியில் வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்தபோது, சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள அங்கம்மாள் காலனி நிலத்திற்கு அண்ணன் ஆசைப்பட்டதால், அங்கிருந்த மக்களை இரவோடு இரவாக அடித்து விரட்டினர் அன்புத் தம்பிகள். திமுக ஆட்சி முடியும் வரை அந்த மக்கள் தங்கள் வீடுகளுக்கு போக முடியாத சூழ்நிலை இருந்தது.


சூளுரைத்த ஜெயலலிதா


விஷயம் தெரிந்து, தேர்தல் பிரச்சாரத்திற்கு சேலம் வந்த ஜெயலலிதா, 'அங்கம்மாள் காலனி நிலத்தை மீட்டு தருவேன். அந்த நிலத்தை அபகரிக்க நினைக்கும் வீரபாண்டி ஆறுமுகத்தை சிறைக்குள் தள்ளுவேன்' என்று சூளுரைத்துச் சென்றார். இதனால், கொதித்தெழுந்த வீரபாண்டி ஆறுமுகமும் அடுத்தடுத்த மேடைகளில் ஜெயலலிதாவை ஒருமையில் திட்ட ஆரம்பித்தார்.


ஆட்சி தன் கைக்கு வந்ததும். வீரபாண்டி ஆறுமுகத்தை மையமாக வைத்தே ஜெயலலிதா நில அபகரிப்பு புகார்களை கவனிக்க ஒரு தனி பிரிவை ஏற்படுத்தியதாக சொல்வார்கள். அம்மா சொன்னது போலவே, அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்ட வீரபாண்டி ஆறுமுகத்தை, பின்பு பழைய வழக்குகளுக்காக குண்டர் தடுப்புக் காவலும் சூழ்ந்தது.


சிங்கத்தை சீட்டிங் கேஸில் தள்ளினால் எப்படி இருக்கும்? ஆதரவாளர்கள் கொதித்தார்கள்; எதிர்ப்பாளர்கள் திளைத்தார்கள். சிறைவாசம் வீரபாண்டியாரை ரொம்பவே முடக்கிப் போட்டது. குண்டாஸை உடைத்து வெளியில் வந்தாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மரணத்தை தழுவினார்.


வெடித்துக் கிளம்பிய சொத்து பிரச்னை


குடும்பத் தலைவன் இறந்தால் சராசரி குடும்பங்களில் சொத்துப் பிரச்னை தலை தூக்கும். வீரபாண்டியார் குடும்பத்திலும் அப்படியொரு பிராது வெடிக்கும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். குடும்ப உறுப்பினர்களுக்குள் இலைமறை காயாக இருந்த சொத்துப் பிரச்னை, வீரபாண்டியாரின் மூத்த மருமகள் பிருந்தா மூலமாக விஸ்வரூபம் எடுத்து கோர்ட் கதவுகளை தட்டியது.



சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பிருந்தாவும், வீரபாண்டியாரின் மூத்த மனைவி ரெங்கநாயகியும் கூட்டாக தாக்கல் செய்திருக்கும் அந்த மனுவில் '(வீரபாண்டி)எஸ்.ஆறுமுகம் 2007 செப் 6 ஆம் தேதி செவ்வாய்ப்பேட்டை ஜனார்த்தனராவிடம் இருந்து 97.5 சென்ட் நிலத்தையும், அவரது சகோதரர் கங்காராமிடம் இருந்து 50.5 சென்ட் நிலத்தையும் வாங்கி எஸ்.ஆறுமுகம், ரெங்கநாயகி மற்றும் பிருந்தா செழியன் என மூன்று பெயரிலும் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தார்
. பிறகு, கடந்த 2011 டிசம்பர் 23 ஆம் தேதி ரெங்கநாயகி, பிருந்தா செழியன் ஆகிய எங்கள் இருவரையும் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு இரவில் கடத்திச் சென்ற ஆறுமுகம், அங்கு வைத்து மிரட்டி இந்த இரண்டு சொத்துக்களின் பங்குகள் மேலும் எட்டு சொத்துக்களையும் தன் பெயருக்கு மாற்றிக் கொள்வதாக கையெழுத்து வாங்கிக் கொண்டார்.

ரெங்கநாயகி தன் கணவருக்கு தானமாக கொடுப்பதாகவும், மருமகள் பிருந்தாசெழியன் அந்த நிலத்தை 37.66 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளதாகவும், நான்கு காசோலைகளில் தலா 9 லட்சமும், ஐந்தாவது காசோலையில் 1.66 லட்சமும், வழங்குவதாக அவர் தெரிவித்த போதிலும், அந்த தொகை வழங்கவில்லை. எனவே, அந்த சொத்து பதிவை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். 
முதல் மனைவி ரெங்கநாயகியின் இளைய மகன் ராஜேந்திரனுக்கு பங்கை கொடுக்காமல், இரண்டாவது மனைவி லீலா, அவரது மகன் பிரபு, முதல் மனைவியின் மகள்கள் மகேஸ்வரி, நிர்மலா, மூத்த மகன் செழியனின் மகள்கள் சூர்யா, சிந்து, ராஜேந்திரனின் மகள்களான கிருத்திகா, மலர்விழி ஆகியோருக்கு அந்தச் சொத்து தானமாக வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தான சொத்து பரிமாற்ற பதிவு செல்லாது என அறிவிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
வீபாண்டியார் குடும்பத்திலிருந்தே இப்படி ஒரு வழக்கு புறப்பட்டு வர என்ன காரணம்? அந்தக் குடும்பத்தில் இப்போது என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?
வீதிக்கு வந்த வீரபாண்டியார் வீட்டுச் சண்டை - மினி தொடர்: பாகம் 2

-வீ.கே.ரமேஷ்
 

படங்கள்: 
க. தனசேகரன்

வீரபாண்டி ஆறுமுகத்திற்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி ரெங்கநாயகி, இரண்டாவது மனைவி லீலாவதி. முதல் மனைவி ரெங்கநாயகிக்கு மகேஸ்வரி, நெடுஞ்செழியன் (எ) செழியன், நிர்மலா, ராஜேந்திரன் (எ) ராஜா என நான்கு பேர். மகேஸ்வரியின் கணவர் காசி, செழியனின் மனைவி பிருந்தா (இவர் தான் தற்போது கோர்ட்டுக்கு சென்றிருப்பவர்).

இவர்களுக்கு சூர்யா, சிந்து இரண்டு மகள்கள். நிர்மலா கணவர் மதிவாணன். இவர்களுக்கு கயல்விழி, பாரிவேல் என இரண்டு பிள்ளைகள். ராஜா மனைவி சாந்தி. இவர்களுக்கு மலர்விழி, கிருத்திகா என இரண்டு பிள்ளைகள். வீரபாண்டி ஆறுமுகத்தின் இரண்டாவது மனைவி லீலாவதிக்கு ஒரே மகன் பிரபு. அவரது மனைவி கௌதமி. இவர்களுக்கு சித்தார்த் என்ற ஒரு மகனும் இருக்கிறார்.

வீரபாண்டியாரின் சொத்துகள்

வீரபாண்டி ஆறுமுகத்திற்கு, அவரது அப்பா சோழயப்ப கவுண்டர் பூலாவரி அக்ரஹாரத்தில் பூர்வீக பூமியில் இருந்து பிரித்து கொடுத்த சொத்தின் மதிப்பு 2 ஏக்கர் 10 சென்ட் நிலமும், சில பொருட்களும்தான். ஆனால் வீரபாண்டியார் அரசியலில் இருந்து சம்பாதித்த சொத்துக்கள் கணக்கில் உள்ளவைகளையும், இல்லாதவைகளையும் சேர்த்தால் வரும் கோடிகள் கண்ணைக் கட்டும் என்கிறார்கள். வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்ததால் பல மாவட்டங்களிலும் புறம்போக்கு நிலம் எவ்வளவு, விவசாயம் நிலம் எவ்வளவு என்பதெல்லாம் வீரபாண்டியாருக்கு அத்துப்படி.

அதனால், மாவட்டம் கடந்தும் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார். சொந்த ஊரான பூலாவரியில் மட்டும் 150 ஏக்கருக்கு மேல் விளை நிலங்களும், 2 ஏக்கரில் பங்களாவும், சேலம் டூ கோவை மெயின் ரோட்டில் வி.எஸ்.ஏ., இன்ஜினியரிங் கல்லூரி, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே வி.எஸ்.ஏ வணிக வளாகம், சென்னை தி.நகரில் பிரபு அப்பார்ட்மென்ட்ஸ், சென்னை வீடு இவை அனைத்தும் வீரபாண்டியாரின் ஒயிட் கணக்கு.



இதில்லாமல், பினாமி கணக்குகளை தோண்டினால் விழுப்புரம், கடலூரில் முந்திரி தோப்புகள், கேரளாவில் ரப்பர் தோட்டங்களும், ஊட்டி, கொடைக்கானலில் டீ, காஃபி எஸ்டேட்களும், சென்னையில் பெட்ரோல் பங்க் என நீண்டுக் கொண்டே போகும்! தற்போது இந்த சொத்துக்களை பிரித்துக் கொள்வதில் தான் குடும்ப உறவுகளுக்கிடைய முட்டல் ஏற்பட்டுள்ளது.


பிருந்தாவனத்தில் இருந்த பிருந்தா

தற்போது வழக்கு தொடுத்துள்ள பிருந்தா, சீரங்கபாளையத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரான வீரப்பத்திரனின் மகள். படிப்பும் உயர்ந்த பண்பும் உடையவர். வீட்டிற்கு மூத்த மருமகள் என்பதால் பிருந்தாவுக்கு வீரபாண்டியார் வீட்டில் ராஜமரியாதை. தன் கணவர் செழியன், திமுகவில் உயர்ந்த நிலையில் இருந்ததால் பிருந்தா அதிகார மையத்தின் உச்சத்தில் இருந்தார். 



ஆனாலும்,  கட்டபஞ்சாயத்தோ, அடாவடி தனங்களோ செய்யாமல் குடும்ப தலைவியாக தன் கணவனுக்கும், குழந்தைகளுக்கு ஏற்ற சராசரி பெண்ணாகவே திகழ்ந்தார். ஆனால் கணவரின் திடீர் இறப்புக்கு பின்னால் பிருந்தாவின் நிலை தலைகீழாக மாறியது. சொத்துகளுக்கு பங்குபோட வந்து விடுவார் என்று வீரபாண்டியாரின் குடும்பத்தாரால் கணவன் இறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் பிருந்தா. அவரது குழந்தைகளைக் கூட தாத்தாவிடம் அண்ட விடாமல் பார்த்துக் கொண்டார்கள். ஒவ்வொரு வருடமும் தன் கணவனின் நினைவு தினத்திற்கு அஞ்சலி செலுத்த வரும்போது கூட தன் கணவரின் வீட்டுக்கு செல்லாமல், தன் கணவரின் சமாதிக்கு நேராக சென்று சற்று நேரம் மனம் விட்டு அழுதுவிட்டு திரும்பி வந்து விடுவார் பிருந்தா.

இதுபற்றி ராஜாவிடம் யார் கேட்டாலும் 'எங்க அண்ணன் செழியன். திருமணம் ஆனதும் சேலத்தில் வீடு வாங்கி தனியாக போய்விட்டார். நானும், அப்பாவும்தான் கிராமத்தில் இங்கு இருந்தோம். அண்ணனுக்கு சிட்டி லைஃப் தான் பிடிக்கும். பிருந்தாவும் டவுன்லையே வாழ்ந்த பொண்ணு..அதனால் சேலத்தில் அண்ணன் இருந்த வீட்டிற்கே போய் விட்டார். 'குழந்தைகள் படிப்புக்கு வசதியாக சேலத்தில் இருந்தால்தான் நன்றாக இருக்கும் என்று பிருந்தாவும் சொல்லிவிட்டது. அதற்காக பிருந்தா மீது எங்களுக்கும், எங்கள் மீது அவருக்கும் உள்ள பாசமும் அன்பும் சற்றும் குறையவில்லை' என்று நா கூசாமல் சொல்வார்


மறுக்கப்பட்ட சொத்துக்கள்

ஒரு சராசரி தந்தையை போலவே வீரபாண்டியாரும் தனது மூத்த மகள் மகேஸ்வரி மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அதற்கு இன்னும் கூடுதலான காரணம் மகேஸ்வரி பிறந்த பிறகு தான் அரசியலில் அவர் பிரகாசிக்க ஆரம்பித்தார். முக்கிய பதவிகளும் தேடி வந்தது. மகேஸ்வரியும் தன் அப்பாவின் மீது அதிக அன்பு வைத்திருந்ததால் திருமணம் ஆகியும் தன் மாமனார் வீட்டிற்கு போகாமல் அப்பா வீட்டிலேயே இருந்து விட்டார். இவரது பேச்சுக்கு அப்பா, அம்மா, தம்பி, தம்பி மனைவி யாரும் மறுத்துப் பேச மாட்டார்கள். இதனால், வீட்டில் அதிகார மையமாக திகழ்ந்தார் மகேஸ்வரி. ஒரு கட்டத்தில் சேலம் மாவட்ட தி.மு.க. அரசியல் புள்ளிகளை தீர்மானிக்கும் சக்தியாகவும் திகழ்ந்தார். சேலம் திமுக வட்டத்தில் தனக்கான ஒரு ஆதரவு கோஷ்டியையும் உருவாக்கிக் கொண்டார். மகேஸ்வரிக்கு 'அக்கா புகழ்' பாடியே பதவிகளை பிடித்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.

மகேஸ்வரியும், ராஜாவின் மனைவி சாந்தியும் குடும்ப உறவுமுறைகளை தாண்டி அன்பு தோழிகளாக வலம் வந்தார்கள். வீரபாண்டியார் வீட்டை விட்டு கிளம்பிவிட்டால் இவர்கள் பஞ்சாயத்து பேசி பலர் சொத்து பிரச்னைகளை தீர்த்து வைத்தார்கள். தம்பி மீது இருந்த பாசத்தால் பூர்வீக சொத்துக்கள் அனைத்தையும் ராஜாவின் குடும்பத்திற்கே சேரும்படி பார்த்துக் கொண்டார் மகேஸ்வரி. வீரபாண்டியாரும் மகள் மீதிருந்த பாசத்தால் மகேஸ்வரி சொன்ன மாதிரியே பூர்வீக சொத்துக்கள் அனைத்தையும் ராஜாவிடமே ஒப்படைத்தார்.



மூத்த மகன் செழியனின் மனைவி பிருந்தாவுக்கோ, இளைய தாரத்து மகன் பிரபுவுக்கோ சொந்த ஊரில் உள்ள பூர்வீக சொத்துக்கள் எதையும் எழுதி வைக்கவில்லை. அதேநேரம் தனது சுயசம்பாத்தியத்தில் வந்த பெரும்பாலான சொத்துக்களை தன் மனைவி ரங்கநாயகி மீதும் தன்னுடைய மூத்த மருமகள் பிருந்தாவின் மீதும் எழுதி வைத்திருந்த வீரபாண்டியார், அதை மட்டும் அனைவருக்கும் சமமாக எழுதி வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.


பகடைக்காய் பிருந்தா

''இந்த பாகப்பிரிவினையில் முதல் மனைவி ரங்கநாயகியின் வாரிசுகளுக்கு மன வருத்தம். தங்களுடைய சொத்துக்களுக்கு வாரிசு தாரராக இன்னொருவர் வந்து விட்டாரே என்று  எண்ணியதால்தான் ராஜா தரப்பால், பிருந்தாவின் மூலமாக இந்த பாகப்பிரிவினை செல்லாதது என்று வழக்கு தொடுக்க வைக்கப்பட்டுள்ளது.


ஒருவேளை, 'பாகப்பிரிவினை செல்லாது' என்று கோர்ட் சொல்லிவிட்டால், பிரபுவிற்கு தராமலேயே அனைத்து சொத்துக்களையும் நாமே வளைத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்கள். இதில் பிருந்தா பகடைக்காய் தான்'' என்கிறார்கள் பிரபுவின் ஆதரவாளர்கள்.


ராஜாவின் முதல் மகள் மலர்விழியின் திருமணம் நிகழ்வுகள் தடபுடலாக நடைப்பெற்று வருவதால், இப்போது வீரபாண்டியார் குடிம்பத்தினர் அனைவரது கவனமும் அதில்தான் இருக்கிறது. இந்த திருமணத்தின் மூலம் மீண்டும் வீரபாண்டியார் குடும்பத்தை திமுக தலைமை திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என்று சேலமே வியக்கும் வண்ணம் வீரபாண்டியாரின் கல்லூரியான வி.எஸ்.ஏ., இன்ஜினியரிங் கல்லூரியில் வரவேற்பு நிகழ்ச்சி படு ஜோராக இருக்க வேண்டும் என்பதற்காக தடபுடலான வேலைகள் நடைப்பெற்று வருகிறது.
குடும்பத்திற்குள் நடக்கும் குஸ்திகள் போதாதென்று வீரபாண்டியாரின் எதிர்க் கோஷ்டியும் இப்போது குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.''2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி செவ்வாய்ப்பேட்டை ஜனார்த்தனராவின் சகோதரர் கங்காராமிடம் இருந்து 50.5 சென்ட் நிலத்தை திமுக கட்சி அலுவலகம் கட்டுவதற்காக வாங்கிய வீரபாண்டியார், அந்த நிலத்தை தன் குடும்பத்தாரின் பெயரில் எழுதி, தங்கள் குடும்ப சொத்தாக மாற்றியிருக்கிறார்கள். இதுப்பற்றி தலைமைக்கு தெரியப்படுத்துவோம்" என்று அபாயச் சங்கு ஊதுகிறது அந்தக் கோஷ்டி.



அப்படியானால் வீரபாண்டியர் குடும்பத்திற்கு இனி அரசியல் எதிர்காலம்?  - நாளை பார்க்கலாம்....

நன்றி - விகடன்

வாய் க்காத்தோப்பு வனிதையே!

Photo
1.மனசுக்கு நெருக்கமான பெண் உற்சாகப்படுத்தும்போது ஒரு படைப்பாளியின் படைப்புகள் உத்வேகம் பெறும்

-----------------------




2.ராம்தாஸ் - எதுக்கு என் மேல இத்தனை கேஸ் ?



ஜெ - நேத்துத்தான் டிவிடி ல டாட்டா பிர்லா கவுண்டமணி காமெடி க்ளிப்பிங்ஸ் பார்த்தேன்

-----------------------




3.வழக்கமா வாய் வலிக்க அளவளாவும் தோழி வெறும் புன்னகை மட்டும் போகிற போக்கில் கொடுத்துச்சென்றால் ஏதோ பூகம்பம் வரும் என சகுனம்

-----------------------




4.டியர்.என் கையெழுத்து அழகா இருக்கா ?




 அதை எவன் பார்த்தான்?உன் கழுத்து வேனா மயில் கழுத்து மாதிரி இருக்கு

-----------------------




5.திருச்சி ரைட்டர்ட்ட கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு.அப்பப்ப சென்ட்டிமென்ட்ஸ் ட்வீடஸ் போட்டு பேலன்ஸ் பண்ணிக்கனும் போல

-----------------------



Photo




6.தட்கல் ,ஏர்டெல் ஏமாற்றத்துக்கே இத்தனை திட்டு திட்டறவர் அவ்ரை ஏமாத்துன பொண்ணுங்களை எப்டி திட்டி இருப்பாரோ

-----------------------




7.காலேஜ் ஸ்டூடண்ட் நீ.எதுக்கு லேடி லெக்சரருக்கு லவ் லெட்டர் குடுத்தே? 




கற்றாரை கற்றாரே காமுறுவர்.ஹி ஹி

-----------------------





8.மே மாசம் மேரேஜ் பண்ணிக்கிட்டா 2 யூஸ்.1 ஊட்டி போய் ஜில்லுனு இருக்கலாம் 2 காதலர் தினத்துக்குள்ள குழந்தை பெத்துக்கலாம்

-----------------------




9.கண்ணே! கச்சத்தீவை மிட்கும் வரை நாம் காதலிப்போம்.மீட்ட பின் கல்யாணம்.எப்ப்டி நம்ம ஐடியா ?

-----------------------





10.ராஜபாளையத்துல பொண்ணு கட்னா புருசனுக்கு அடி பயம் இல்ல.கடி பயம் தான் # லொள் லொள்

-----------------------

அழியும் நிலையில் 13 தலைமுறைக்கு முந்தய சிவன் கோவில் ..! செய்தியை பகிர்ந்து கொண்டு தடுக்க முயற்சிப்போம் வாருங்கள் நண்பர்களே ...!

ENLIGHTENED MASTER WROTE :-

தேசிய நெடுஞ்சாலை துறையில் நான்கு வழி பாதை திட்டத்தினால், 1300 வருட சிவன் கோவில் அபாயத்தில் உள்ளதாக முகப்புத்தக நண்பர் எனக்கு எழுதியுள்ளார். அவர் கொடுத்த சுட்டியை படித்த போது, இது நடந்து விடுமோ என்ற கவலை என்னையும் தொற்றிக் கொண்டுள்ளது.

திருப்புரவர் பணங்காட்டீஸ்வரர் கோவில், பனையபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது. திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட இத்திருக்கோவில், விக்கிரவாண்டி - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைய பெற்றுள்ளது. இந்த கோவிலை "பறவைபுறம்" என்று அழைக்கிறார்கள்.

நெடுஞ்சாலை துறையினரின், சாலை விரிவாக்கத் திட்டத்தின் படி, கோவிலின் சுற்று சுவர் மற்றும் அதன் உட்புறத்தை பாதிக்கும் வண்ணம் குறியீடுகள் இருப்பதாக சொல்கிறார்கள்.

இந்த விரிவாக்க திட்டம் நடந்தேறினால், கோவிலில் உள்ள சத்யாம்பிகை தேவி மற்றும் கோவில் பிரகாரங்கள் இடிக்கப்படும் அபாயம் உள்ளதாக குறிப்பிடுகிறார்கள். இதனை அடுத்து பன்னையபுரம் மற்றும் சுற்றுப்புற‌த்தை சேர்ந்த 4000 மக்கள் ஒன்று சேர்ந்து கலெக்டரிடம் மணு கொடுத்துள்ளனர்.

நாமும் இதை குறித்து விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்துவோம்.

கோவிலின் சிறப்பை குறித்தும், நெடுஞ்சாலை துறையின் திட்டம் குறித்தும் கீழே உள்ள சுட்டியை படித்து தெரிந்துக் கொள்ளலாம்.
http://www.skyscrapercity.com/showthread.php?t=624281&page=67

முடிந்தால் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அவர்களிடம் இந்த செய்தியையும், நம் கவலையையும் தெரியப்படுத்துங்கள்.

Thiru V Sampath IAS
District Collector Collectorate, Villupuram - 605 602
Phone: 04146-222470 (O)
04146-222480 (R)
Fax: 04146-222470
E-Mail: collrvpm@nic.in

அனைவருக்கும் இதை முடிந்தவரை பகிருங்கள். இச்செய்தி சில தின‌ங்களுக்கு முன் தினமலரிலும் வெளிவந்துள்ளதாம்.

எத்தனையோ பாடுபட்டு கட்டிய நம் கோவில்களை காப்பாற்ற, இந்த சிறு கடமையை (பகிர்தல்) செய்தல் அவசியம் அல்லவா ? இதை பகிரும் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அழியும் நிலையில் 13 தலைமுறைக்கு முந்தய சிவன் கோவில் ..! செய்தியை பகிர்ந்து கொண்டு தடுக்க முயற்சிப்போம் வாருங்கள் நண்பர்களே ...!

ENLIGHTENED MASTER WROTE :-

தேசிய நெடுஞ்சாலை துறையில் நான்கு வழி பாதை திட்டத்தினால், 1300 வருட சிவன் கோவில் அபாயத்தில் உள்ளதாக முகப்புத்தக நண்பர் எனக்கு எழுதியுள்ளார். அவர் கொடுத்த சுட்டியை படித்த போது, இது நடந்து விடுமோ என்ற கவலை என்னையும் தொற்றிக் கொண்டுள்ளது.

திருப்புரவர் பணங்காட்டீஸ்வரர் கோவில், பனையபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது. திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட இத்திருக்கோவில், விக்கிரவாண்டி - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைய பெற்றுள்ளது. இந்த கோவிலை "பறவைபுறம்" என்று அழைக்கிறார்கள்.

நெடுஞ்சாலை துறையினரின், சாலை விரிவாக்கத் திட்டத்தின் படி, கோவிலின் சுற்று சுவர் மற்றும் அதன் உட்புறத்தை பாதிக்கும் வண்ணம் குறியீடுகள் இருப்பதாக சொல்கிறார்கள்.

இந்த விரிவாக்க திட்டம் நடந்தேறினால், கோவிலில் உள்ள சத்யாம்பிகை தேவி மற்றும் கோவில் பிரகாரங்கள் இடிக்கப்படும் அபாயம் உள்ளதாக குறிப்பிடுகிறார்கள். இதனை அடுத்து பன்னையபுரம் மற்றும் சுற்றுப்புற‌த்தை சேர்ந்த 4000 மக்கள் ஒன்று சேர்ந்து கலெக்டரிடம் மணு கொடுத்துள்ளனர்.

நாமும் இதை குறித்து விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்துவோம்.

கோவிலின் சிறப்பை குறித்தும், நெடுஞ்சாலை துறையின் திட்டம் குறித்தும் கீழே உள்ள சுட்டியை படித்து தெரிந்துக் கொள்ளலாம்.
http://www.skyscrapercity.com/showthread.php?t=624281&page=67

முடிந்தால் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அவர்களிடம் இந்த செய்தியையும், நம் கவலையையும் தெரியப்படுத்துங்கள்.

Thiru V Sampath IAS
District Collector Collectorate, Villupuram - 605 602
Phone: 04146-222470 (O)
04146-222480 (R)
Fax: 04146-222470
E-Mail: [email protected]

அனைவருக்கும் இதை முடிந்தவரை பகிருங்கள். இச்செய்தி சில தின‌ங்களுக்கு முன் தினமலரிலும் வெளிவந்துள்ளதாம்.

எத்தனையோ பாடுபட்டு கட்டிய நம் கோவில்களை காப்பாற்ற, இந்த சிறு கடமையை (பகிர்தல்) செய்தல் அவசியம் அல்லவா ? இதை பகிரும் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.




11.உன் குரல் போல் எந்த மெலோடியும் இல்ல டி

-----------------------




12.முன்னால் போவது லாரியா இருந்தாலும் ,மேரியா இருந்தாலும் 10 மீ இடை வெளி விட்டு தொடரவும் # பாலோ ரூல்

-----------------------




13.அன்பே! நாம் இருவரும் தண்டவாளம் மாதிரி.அருகருகே இருந்தும் 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை.தொட விட மாட்டேங்குறியே

-----------------------




14.நீ தேன்.உன் தங்கை தேன் மிட் TOY

-----------------------




15.ஊர் ல இருக்கற அம்புட்டு பசங்களையும் வசியம் பண்ணிய பிகர் தான் ஊர் வசி ?

-----------------------





16.உள்ளூர்ப்பொண்ணு உன்னைக்கண்டுக்கலையேனு வருத்தப்படேல்.வெளியூர்ப்பொண்ணு உனக்கு சொந்தமாகும் # இன்றைய ராசி பலன்

-----------------------\





17.அன்பே வந்தனா! உன் கனவில் நான் வந்தேனா ?

-----------------------




18.டியர்.என்னோட முதல் உலகம் நீ தான். 




யோவ்.அப்போ அனுஷ்கா ,ஆண்ட்ரியா மாதிரி இரண்டாம் உலகம் வேற இருக்கா?

-----------------------





19.உன் வாய் பூ என்பதை என் உதட்டால் உணர தரு வாயா ஒரு வாய் ப்பு? # வாய் க்காத்தோப்பு வனிதைக்கு

-----------------------




20.இந்தக்காலத்துப்பசங்க திவ்யமா சமைக்கறாங்க.பவ்யமா பரிமாறுகிறாங்க.இதை விட ஒரு புருசன் கிட்டே பொண்டாட்டி என்ன எதிர்பார்க்க முடியும்? 



--------------------------

Wednesday, May 22, 2013

ஐ பி எல் மோசடி - குற்றம் நடந்தது என்ன? ஜூ வி கட்டுரை

சூது கவ்வும்' ஐ.பி.எல்.!
சிக்கலில் நடிகைகள்..
 
 
குதிரை ரேஸ், லாட்டரி, ரம்மி என்ப​தெல்லாம் பழங்கதைகள். இன்றைக்கு சூதாடிகளின் சொர்க்கம்... ஐ.பி.எல். கிரிக்கெட்தான். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், அஜித் சண்டிலா ஆகியோரை ஸ்பாட் ஃபிக்ஸிங் செய்ததற்காக டெல்லி போலீஸார் கைதுசெய்துள்ளதன் மூலம், ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்னொரு முகம் வெளிவந்தி​ருக்கிறது.


 என்ன நடக்கிறது? எப்படி நடக்கிறது?
யார் காரணகர்த்தா? 


காவல் துறை அதிகாரி ஒருவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டது இது...  
''ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சூதாட்டம்... ஸ்பாட் ஃபிக்ஸிங்... மூன்று வீரர்கள் கைது என்று வரும் செய்திகளைப் பார்க்கும்போதும் படிக்கும்போதும் அபத்தமாக இருக்கிறது. உலகில் எங்கு எப்போது கிரிக்கெட் மேட்ச் நடந்தாலும் அதில் சூதாட்டம் நிச்சயம் இருக்கும். இந்த விளையாட்டுக்கு இந்தியாவில் மூளையாகச் செயல்பட்ட லலித் மோடி முதல், இப்போது உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளைப் பின்னால் இருந்து இயக்கும் சில பிரமுகர்கள் வரை பட்டியல் போட்டுப் பாருங்கள். அவர்கள் எல்லோருமே சூதாடிகள்தான்.


அணியின் முக்கியப் பிரமுகர்கள் சிலருக்கு பெட்டிங் கம்பெனி உள்ளது. அவை அந்த முக்கியப் பிரமுகர்களின் பினாமிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும். அந்த கம்பெனி சொல்கிறபடிதான் வீரர்கள் விளையாடுவர். குறிப்பாக, தென் மாநிலத்துப் பிரமுகர் ஒருவரைச் சொல்கிறார்கள். அவர்தான் வீரர்களுக்கும் சினிமா நடிகைகளுக்கும் இணைப்புப் பாலம். நீங்கள் நன்றாகக் கவனித்துப் பார்த்தால் தெரியும்... மேட்ச் நடக்கும்போது சில நடிகைகள், மாடல்கள் வி.ஐ.பி. வரிசையில் உட்கார்ந்திருப்பார்கள். அந்த வகையில் சமீபத்தில் பிரபலமான ஒரு நடிகை, ரெய்னாவுடன் நட்பு பாராட்டுவதாக பேச்சு கிளம்பியிருக்கிறது. இதெல்லாம் தென் மாநிலத்துப் பிரமுகரின் கைங்கர்யம்தான். அந்த நடிகைகளுக்கும் அடுத்து சிக்கல் காத்திருக்கிறது.



இவரைப்போலவே ஒவ்வோர் அணியிலும் பினாமி​களின் சித்து விளையாட்டுக்கள் உண்டு. அவர்கள்தான் ஆட்டத்தின் தலைவிதியை தீர்மானிப்பார்கள். அதற்காக வீரர்களுக்கு என்ன வேண்டுமானாலும் சப்ளை செய்யப்படும். அவர்கள் சொல்கிறபடியே வீரர்களும் விளையாடுவார்கள். இப்படித்தான் கிரிக்கெட் சூதாட்டம் ஜெகஜோதியாய் நடக்கிறது. புக்கிகள், ஏஜென்ட்கள் எல்லாம் இந்த பினாமிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பெட்டிங் கம்பெனிக்கு வேலை பார்க்கும் ஊழியர்கள்தான். அவர்கள் போய் வீரர்களை வளைப்பது, அவர்களுக்குப் பணம் கொடுப்பது எல்லாம் சாத்தியம் இல்லாதது. அதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. அணியின் கோச், களத்தில் நிற்கும் அம்பயர், மூன்றாவது அம்பயர் எனப் பலரும் அணியின் பெட்டிங் கம்பெனிக்குக் கட்டுப்பட்டவர்கள்தான். இப்போது சொல்லுங்கள். சூதாட்டத்துக்குக் காரணம், வீரர்களும் புக்கிகளும் மட்டும்தானா?'' என்று கேட்டு நம்மைக் கிடுகிடுக்கவைத்தார்.


''அப்படியென்றால், ஸ்ரீசாந்த் மாட்டியது எப்படி?'' 


''அணியின் கட்டுப்பாட்டில் உள்ள பெட்டிங் கம்பெனியின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, ஸ்ரீசாந்த் தன்னுடைய நண்பர் ஜுஜுவுடன் சேர்ந்து தனியாக பெட்டிங்கில் ஈடுபட்டார். அப்படி அவரை வளைத்தது தமிழகத்திலும் கேரளாவிலும் லாட்டரித் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் முக்கியப் புள்ளி ஒருவர்தான். அவருடைய பேச்சைக் கேட்டு ஆடிய ஸ்ரீசாந்த்தால், அணியின் கட்டுப்பாட்டில் உள்ள பெட்டிங் கம்பெனிக்கு ஏகப்பட்ட நஷ்டம். இதைத் தெரிந்துகொண்டு அவர்களாகவே போலீஸுக்கு போட்டுக் கொடுத்ததுதான் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று பேரின் கைதுக்குக் காரணம். அதனால்தான் போலீஸ்காரர்களால் அவ்வளவு துல்லியமாக ஸ்ரீசாந்த்தைச் சுற்றி வளைக்க முடிந்தது. ''


''தமிழகத்தில் பெட்டிங் எப்படி நடக்கிறது?'' 


''சென்னையில் மட்டும் ஏஜென்ட்களையும் புக்கி​களையும் சேர்த்து 50 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அப்படியானால் சூதாடிகள் எத்தனை லட்சம் பேர் இருப்பார்கள் என்று நீங்களே கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள். மீடியேட்டர்  பிசினஸுக்கு இரண்டரை சதவிகிதம் கமிஷன் தொகை. அவ்வளவுதான். தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், பெட்டிங் கம்பெனி, அதற்குக் கீழ் புக்கிகள், அவர்களுக்குக் கீழ் ஏஜென்ட்கள் என்று செயல்படுகிறார்கள்.


 பொதுவாக ஒருமுறை சூதாடியவர்களால், மீண்டும் சூதாடாமல் இருக்க முடியாது. அவர்களுக்கு எதிலாவது பெட் கட்டியே தீர வேண்டும். அப்படிப்பட்டவர்கள் ஏஜென்ட்களை அணுகுவார்கள். ஏஜென்ட்களை ஒருங்கிணைக்கும் புக்கி, அவர்களிடம்  ஒரு பட்டியல் கொடுப்பார். அதில் வரிசையாக எந்த அணி வெற்றிபெறும் அல்லது தோற்றுப்போகும், 10-வது ஓவரில் 60 ரன்களைத் தாண்டுமா? தாண்டாதா? என்பதில் ஆரம்பித்து பெட்டிங் விவரங்களும், அவை ஒவ்வொன்றுக்குமான தொகையும் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். 


அதை  சூதாடிகளிடம் காண்பித்து, அவர்கள் விருப்பப்பட்டதை தேர்வுசெய்யச் சொல்வார்கள். அதற்கான பணம் வசூல் செய்யப்படும். அப்படிக் கிடைத்த மொத்தத் தொகையும் புக்கி மூலமாக கம்பெனிக்குப் போகும். அதேபோல், மேட்ச் முடிந்ததும், கம்பெனி புக்கியிடம் பணம் தரும். புக்கி ஏஜென்ட்கள் வழியே பெட் கட்டியவர்களுக்குப் போய்விடும். 10 லட்சம் பெட்டிங் தொகை வசூலித்துக் கொடுத்தால், ஒரு மணி நேரத்தில் 25 ஆயிரம் ரூபாய் கமிஷன் தொகை ஏஜன்டுக்கு கிடைக்கும். கடைசி ஏஜென்ட்டுக்கே இவ்வளவு தொகை என்றால், பல ஏஜென்ட்களிடம் வசூல் செய்து கொடுக்கும் புக்கிக்கு எவ்வளவு கிடைக்கும் என்று கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள்.''


''சென்னையில் சி.பி.சி.ஐ.டி ரெய்டுக்குக் காரணம் என்ன?'' 


''சென்னையின் மையப் பகுதியில் இயங்கும் ஒரு கிளப்தான் கிரிக்கெட் சூதாட்ட 'ஹப்'. கடந்த சில நாட்களில் 12 லட்ச ரூபாயை சுருட்டிய பிரமுகருக்கு சக நண்பர்கள் பார்ட்டி வைத்து அசத்தினார்களாம். ஐ.பி.எல். கிரிக்கெட் மேட்ச் தொடங்கியதும், சூதாடிப் பணத்தை இழந்த மூன்று பேர் சௌகார்பேட்டையில் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டனர். அப்போது இருந்தே போலீஸின் பார்வை திரும்பியது.''


அடப்பாவிகளா... இது ஆட்டமா... சூதாட்டமா?


- ஜோ.ஸ்டாலின் 


படம்: சொ.பாலசுப்பிரமணியன்


பத்ரீஷ் தத்தின் மர்ம மரணம்!


சூதாட்டத்தில் ஈடுபடும் முன்னணி நபர்களின் தலைமையகம்... இந்தியாவுக்கு வெளியே செயல்படுகிறது. பாகிஸ்தான், துபாய் ஆகிய நாடுகளில் உள்ள நிகழ் உலக தாதாக்கள் இப்ராஹீம் தாவுத், அவரது தம்பி அனீஸ் தாவுத் மற்றும் சோட்டா ஷகீல் போன்றவர்கள் அங்கிருந்தபடியே ரிமோட் மூலம் தங்கள் புரோக்கர்ளை இயக்கிவந்தனர். கொல்கத்தாவைச் சேர்ந்த மிட்டல், மும்பையைச் சேர்ந்த சுனில், சென்னையைச் சேர்ந்த பிரசாந்த், டெல்லியைச் சேர்ந்த அமரேஷ் போன்றோர்தான் முக்கியமானவர்கள். இவர்களின் தொடர்பில் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான புக்கிகள் இருக்கிறார்கள். இவர்களிடையே சமூகப் பணி செய்வது போன்ற பெயரில் ரகசிய சங்கமே உண்டு. கொடுக்கல் வாங்கலில் ஏதாவது பிரச்னை என்றால், இவர்களுக்குள் பேசித் தீர்த்துக்கொள்வார்கள். பணம் கட்டுகிறவர்கள் ஏமாற்ற முயன்றால், இந்த சங்கத்தினரின் இரும்புப் பிடியில் இருந்து தப்பிக்கவே முடியாது. இப்படியெல்லாம் பயங்கர லாபம் தரும் பிசினஸாக நடந்துவந்த கிரிக்கெட் சூதாட்டம் பற்றி முதல் க்ளுவை டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் பத்ரீஷ் தத் கண்டுபிடித்தார்.


டெலிபோன் தொடர்புகளை வைத்து மோப்பம் பிடித்தார் பத்ரீஷ். இவர் தந்த விவரங்களை வைத்து டெல்லி போலீஸின் உயர் அதிகாரிகள் அடுத்தக்கட்ட விசாரணையில் இறங்கியபோது, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடும் சில வீரர்களின் தொடர்பு பற்றி தெரியவந்தது. இந்த விவரத்தை படுரகசியமாக வைத்து புரோக்கர்கள், கிரிக்கெட் வீரர்களின் சந்திப்புகள், லஞ்சப் பரிமாற்றம் எங்கெங்கே என்றெல்லாம் துப்பறிவதில் இறங்கினர். ஒவ்வோர் ஆட்டத்தின்போதும் 40 லட்ச ரூபாய் முதல் 60 லட்ச ரூபாய் வரை வீரர்களின் சீனியாரிட்டிக்குத் தகுந்த மாதிரி ரேட் நிர்ணயிக்கப்பட்டது. 



இந்த விசாரணையில், சுமார் 100 மணி நேர டெலிபோன் உரையாடல்களைப் பதிவுசெய்து அதில் இருந்து துப்புகளை எடுத்துக்கொடுத்தவர் பத்ரீஷ். இதேபோல், இந்தியன் முஜாகிதீன் உள்ளிட்ட சில தீவிரவாத இயக்கங்களின் ஆட்களின் டெலிபோன் உரையாடல்களைக் கேட்டு, அவர்களைப் பிடிக்க உதவினார். இந்த வகையில், இரண்டு முறை மிகப் பெரிய சதி வேலைகளை முறியடித்தார் என்பதற்காக, மெடல்களைப் பரிசாகப் பெற்றார் பத்ரீஷ். ஆனால், மே 11-ம் தேதி குர்கானில் உள்ள அபார்ட்மென்டில் பத்ரீஷ§ம் அவரது பெண் நண்பர் கீதா சர்மாவும் பிணமாகக் கிடந்தனர். துப்பாக்கி குண்டுக் காயங்களுடன் அவர்கள் மர்மமான முறையில இறந்துகிடந்தது பற்றி பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியிருக்கின்றன.


கிரிக்கெட் வீரர்கள், சூதாட்ட புரோக்கர்கள், புக்கிகள் இடையேயான நெட்-வொர்க் பற்றி நன்றாகவே தெரிந்துவைத்திருந்தவர் பத்ரீஷ். அவரின் திடீர் மரணத்தால், சரியான ரூட்டில் டெல்லி போலீஸ் பயணிக்க முடியாமல் தவிக்கிறது. இருந்தாலும், அதுவரை கிடைத்த ஆதாரங்களை வைத்து மே 15-ம் தேதியன்று டெல்லி போலீஸ் அதிரடியாகக் களத்தில் இறங்கியது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 66 மேட்ச்கள் நடந்து முடிந்திருந்த நிலையில், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், அஜித் சண்டிலா ஆகியோரை முதல் கட்டமாக டெல்லி போலீஸார் கைதுசெய்தனர். 



சூதாட்டத் தரகராக செயல்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் அமித் சிங்கும் பிடிபட்டார். அவர்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட தரகர்கள் 20 பேருக்கு மேல் கைதாகினர். மேலும் பலர் தலைமறைவாகினர். இந்தத் தரகர்களின் சொகுசு பங்களா, வங்கி லாக்கரில் உள்ள பணம் அனைத்தையும் போலீஸார் முடக்கியுள்ளனர். கைதுகள் மேலும் தொடரும் என தெரிகிறது.


டெல்லியில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ''எங்களுக்கு ரகசியத் தகவல் வந்ததுமே, ஆதாரங்களை சேகரிக்க ஆரம்பித்தோம். ஸ்ரீசாந்த் மும்பையில் தங்கிருந்த ஹோட்டலை முற்றுகையிட்டோம். அந்த ஹோட்டலின் கேமரா பதிவுகளை வாங்கிப் பார்த்தபோது, புக்கிகள் யார் யார்? எப்போது வந்து ஸ்ரீசாந்தை சந்தித்தனர்? எந்தெந்த நடிகைகள் அவரது அறைக்கு வந்து சென்றனர் என்கிற விவரங்கள் கிடைத்தன. இன்னொரு கிரிக்கெட் வீரர் சண்டிலாவுக்கு புக்கி ஒருவர் பல லட்சம் ரூபாய்க்கு வாங்கித் தந்த ஷாப்பிங் பொருட்கள் சிக்கின. கிரிக்கெட் வீரர்களுக்கும் சூதாட்ட புக்கிகளுக்கும் இடையே மீடியேட்டர்களாக செயல்பட்டுவந்த சில முன்னாள் வீரர்களை விரைவில் விசாரணைக்கு அழைக்க இருக்கிறோம்.


எங்களிடம் உள்ள ஆதாரங்களை மேற்கோள் காட்டி அவர்களிடம் கேள்வி - பதில் முறையில் விசாரிப்போம். ஐ.பி.எல். மேட்ச்கள் நடந்த ஊர்களில் எந்தெந்த ஹோட்டல்களில் வீரர்கள் தங்கியிருந்தார்களோ அந்த ஹோட்டல்களில் இருக்கும் ரகசிய கேமரா பதிவுகளை சேகரித்து... புக்கிகள், அழகிகள் எந்த கிரிக்கெட் வீரர்களை எப்போது சந்தித்தனர் என்பதை சேகரித்து வருகிறோம்'' என்றார்.


''சென்னையில்கூட சூதாட்ட புக்கிகளை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்களே?'' என்று அவரிடம் கேட்டபோது, ''ஐ.பி.எல். தொடர் இதுவரை ஐந்து முறை நடந்துள்ளன. இப்போது நடந்துவருவது ஆறாவது தொடர். அனைத்து தொடர்களிலும் சூதாட்டம் நடந்திருக்கிறது. எங்களிடம் இதுவரை கிடைத்துள்ள புக்கிகளின் செல்போன், மெயில் தொடர்புகளை வைத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய லிஸ்ட் எடுத்துள்ளோம். சென்னையில் மட்டும் சுமார் 30 நபர்கள் இந்த லிஸ்ட்டில் இருக்கிறார்கள்'' என்றார்.


அகில இந்திய அளவில் நடக்கும் கிரிக்கெட் சூதாட்டங்களைப் பற்றி உளவு பார்ப்பது, விசாரிப்பது என்பதற்காகவே டெல்லியில் ஊழல் தடுப்புப் பிரிவு செயல்படுகிறது. சர்வதேச கிரிக்கெட் சபை மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் இந்தப் பிரிவு செயல்படுகிறது. இப்போது இதன் இயக்குனராக இருப்பவர் சவாணி ஐ.பி.எஸ். (ரிட்டயர்டு). இவர் தமிழக கேடர் அதிகாரி. கூடுதல் டி.ஜி.பி. பதவியில் இருந்தவர். ரிட்டயர்டு ஆவதற்கு ஒரு வருடம் முன்பே பதவி விலகி சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஊழல் தடுப்புப் பிரிவின் இயக்குனராகப் பணியில் சேர்ந்தார்.


 துபாயில் செயல்படும் அந்த அலுவலகத்தில் ஐந்து வருடங்கள் பணியில் இருந்துவிட்டு, இப்போது டெல்லிக்கு வந்திருக்கிறார். இவர்தான் இப்போது கிரிக்கெட் சூதாட்டத்தைப் பற்றி துப்பறிகிறார். அவர் தரப்போகும் ரிப்போர்ட்டில்தான் முக்கியமான கிரிக்கெட் வீரர்களின் எதிர்காலமே இருக்கிறது.


- ஆர்.பி.

''எங்களால் கட்டுப்படுத்த முடியாது''


சூதாட்டப் புகார் குறித்து பி.சி.சி.ஐ. தலைவர் என்.சீனிவாசனிடம் பேசினோம். ''ஒரு அணியில் உள்ள மூன்று வீரர்கள் தவறு செய்திருப்பதாக போலீஸ் கூறியிருக்கிறது. மூன்று வீரர்கள் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த ஐ.பி.எல்-லையும் தடைசெய்ய வேண்டும் என்று சொல்வதில் நியாயம் இல்லை. டெல்லி போலீசாரின் விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம். போலீஸ் விசாரணைக்குப் பிறகு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.


 வீரர்களைப் பொறுத்தவரை அவர்களை ஓரளவுக்குத்தான் வாரியத்தால் கட்டுப்படுத்த முடியும். போலீஸைப் போல எங்களால் ஒவ்வொரு வீரரையும் கண்காணிக்க முடியாது. அதற்கான ஆள் பலமும் எங்களிடம் இல்லை. அடுத்த ஐ.பி.எல். முதல் ஒவ்வொரு அணிக்கும் ஊழல் தடுப்புக் குழு அமைக்கப்படும். வீரர்களின் ஏஜென்ட்கள் இனி முறையாகப் பதிவு செய்யப்படுவர். ஏஜென்ட்கள் தவறு செய்தால் அதற்கு வீரர்களே பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற விதிமுறையையும் கொண்டு வந்திருக்கிறோம். சூதாட்டத்தைப் பொறுத்தவரை எங்களால் அதைக் கட்டுப்படுத்த முடியாது. போலீஸும் சட்டமும்தான் அதைத் தடுக்க வேண்டும்'' என்றார்.

நன்றி - ஜூ வி 


வாசகர் கருத்து 


1. இப்பொழுது நாம் கிரிக்கெட் எவ்வாறு நமது தேசத்தில் இன்று அது இருக்கும் உயரத்தினை அடைந்தது என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது...
ஆரம்ப காலத்தில் கிரிக்கெட் விளையாட்டிற்கு இன்று இருக்கும் இதே அளவு செல்வாக்கு இருந்ததா என்றுத் தெரியவில்லை. நான் அறிந்த வரையில் பள்ளியில் உள்ள விளையாட்டு ஆசிரியர்கள் எவரும் கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் தந்தது கிடையாது. அவர்களைப் பொறுத்த வரை அது சோம்பேறிகளின் விளையாட்டு.


 மேலும் அக்காலத்தில் இந்தியாவில் ஹாக்கி விளையாட்டு தான் மிகவும் சிறப்பான ஒன்றாக விளங்கிக் கொண்டு இருந்தது. 1928 ஆம் ஆண்டில் தொடங்கி 1956 ஆம் ஆண்டு வரை தான் கலந்துக் கொண்ட அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும் தங்கத்தினை வாங்கிக் குவித்தது இந்திய ஹாக்கி அணி. உலகைப் பொறுத்தவரை ஹாக்கி என்றால் இந்தியா... இந்தியா என்றால் ஹாக்கி. தொடர்ச்சியாக மொத்தம் 6 ஒலிம்பிக் தங்கங்கள். ஹாக்கி இந்தியாவின் தேச விளையாட்டானது. 



இன்றுவரை ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு அதிகமான பதக்கங்களை வாங்கித் தந்துள்ள விளையாட்டும் அது தான். ஹாக்கி மூலமாக நமக்கு கிட்டிய கடைசி தங்கப் பதக்கம் 1980 ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கிட்டியது. அதற்கு பின்னர் ஹாக்கி விளையாட்டிற்கு இந்தியாவில் இறங்கு முகம் தான். காரணம் எது வேண்டும் என்றாலும் இருக்கலாம்... அரசாங்கத்தின் கவனக்குறைவு, அரசியல் காரணங்கள்... எதுவேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் என்னுடைய கவனம் ஏனோ 1983 ஆம் ஆண்டில் கிரிக்கெட் அணி பெற்ற உலகக் கோப்பை வெற்றியின் மீதே செல்கின்றது. அது சரியானதாகவும் இருக்கலாம் அல்லது தவறான ஒன்றாகவும் இருக்கலாம்.... இருந்தாலும் என்னுடைய எண்ணங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளவே எண்ணுகின்றேன்.

பிசிசிஐ இன் சார்பாக விளையாடி வந்த கிரிக்கெட் அணிக்கு 1983 ஆம் ஆண்டிற்கு முன்னர் வரை எந்த ஒரு மாபெரும் வெற்றியும் கிட்டியதில்லை என்பதே வரலாறு. ஆனால் 1983 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரு மாபெரும் மாற்றம் கிரிக்கெட் விளையாட்டிற்கு நேர்ந்து தான் இருக்கின்றது. காரணம் உலக கோப்பையை அந்த அணி வென்று விட்டது. போதாதா? பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள நாட்டில் பார்ப்பன‌ர்களின் ஆதிக்கம் இல்லாத விளையாட்டான ஹாக்கியே அனைத்து வெற்றிகளையும் பெற்றுக் கொண்டு இருந்த பொழுது முதல் முறையாக பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு விளையாட்டு மாபெரும் வெற்றியினைப் பெற்று இருக்கின்றது.



 இது ஒன்று போதாதா கொண்டாடுவதற்கு. பார்ப்பன‌ர்கள் அதிகம் உள்ள அணியான பிசிசிஐ-யின் கிரிக்கெட் அணியை தலையில் தூக்கிக் கொண்டு ஆட ஆரம்பித்தன பார்ப்பன‌ர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள்... அவை பத்திரிக்கை ஊடகங்களாக இருக்கட்டும் அல்லது காட்சி ஊடகங்களாக இருக்கட்டும்... பிரச்சனை இல்லை... "இந்திய அணி வென்று விட்டது... உலகை இந்தியா வென்று விட்டது... நாம் உலகில் சிறந்தவர்கள்... கொண்டாடுங்கள்" என்றே அவை கிரிக்கெட்டின் வெற்றியை கொண்டாட ஆரம்பித்தன.



அதாவது பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு விளையாட்டு பெற்ற வெற்றியினை பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஊடகங்கள் பெரிதுபடுத்த ஆரம்பிக்கின்றன... இன்றும் பெரிதுப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. காலங்களில் நாம் தெளிவாகக் கண்டோம் என்றால் இந்தியாவில் உள்ள ஊடகங்கள் அனைத்தும் பார்ப்பன‌ர்களாலோ அல்லது பார்ப்பன‌ர்களைச் சார்ந்தவர்களாலோ கைப்பற்றப்பட்டே இருக்கின்றன என்பது நமக்குப் புலனாகும். அந்த ஊடகங்களின் வலிமையை வைத்தே இன்றும் அவர்கள் பல காரியங்களைச் செய்துக் கொண்டே இருக்கின்றனர். சரி இருக்கட்டும்.

1983 ஆம் ஆண்டு பிசிசிஐ-யின் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்கின்றது. பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு அணி வென்றதால் பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஊடகங்கள் அதனைப் பெரிதுபடுத்தி மக்களின் மத்தியில் கொண்டு செல்கின்றனர். அங்கே ஆரம்பிக்கின்றது வேலை. கிரிக்கெட் அனைத்து ஊடகங்களிலும் முன்னிலைப்படுத்தப்படுகின்றது. மற்ற விளையாட்டுக்கள் பின்னால் தள்ளப்படுகின்றன. விளையாட்டு என்றால் கிரிக்கெட் தான் என்ற அளவுக்கு கிரிக்கெட்டும் சரி கிரிக்கெட் வீரர்களும் சரி மக்களுக்கு ஊடகங்களால் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.

உதாரணமாக, பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 1983 ஆம் ஆண்டு கிரிக்கெட் அணி உலகக் கோப்பையில் பெற்ற வெற்றியை பாடமாகவே வைத்து இருக்கின்றனர் என்பதனை நாம் அறிவோம். அதாவது தொடர்ந்து ஆறு முறை ஒலிம்பிக் போட்டிகளில் தங்கத்தினை வென்ற ஹாக்கி அணியைப் பற்றியோ அல்லது அந்த வரலாற்றினைப் பற்றியோ ஒருவன் அறிந்து கொள்ளவில்லை என்றால் யாதொரும் பிழையும் இல்லை. ஆனால் தனியார் நிறுவனமான பிசிசிஐ வென்ற கிரிக்கெட் போட்டியினைப் பற்றி அவன் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கிரிக்கெட் ஒன்று தான் விளையாட்டு என்று அவன் அறிந்து கொள்ள வேண்டும். அவ்வளவே...!!!
இது தான் அரசியல். இக்காலத்தில் தான் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு என்பதைத் தாண்டி ஒரு தேச அடையாளமாக மக்களின் மத்தியில் புகுத்தப்பட்டது.



 எந்த ஊடகத்தினை எடுத்தாலும் கிரிக்கெட்... கிரிக்கெட் ...மேலும் கிரிக்கெட்...!!! ஊடகங்கள் என்பன ஒரு மாபெரும் சக்தியினை உடையவை... மக்களின் மத்தியில் ஒரு கருத்தினை பரப்பவும் அவர்களால் முடியும்; ஒரு கருத்தினை அழிக்கவும் அவர்களால் முடியும். அவற்றின் வலு அப்பேர்ப்பட்டது. அத்தகைய ஊடகங்களின் துணை இன்றி மற்ற விளையாட்டுகள் மக்களின் மத்தியில் இருந்து சிறிது சிறிதாக விடைபெற கிரிக்கெட் தனது இருப்பை வலு பெற செய்து கொண்டது. வேறு விளையாட்டுக்கள் இந்தியாவில் இருக்கலாம்... பிழையில்லை... ஆனால் அவை கிரிக்கெட் அளவிற்கு வளரக் கூடாது. அவ்வளவே. இதில் ஊடகங்கள் தெளிவாக இருந்தன... இருக்கின்றன. நிற்க.

இவ்வாறே மற்ற விளையாட்டுகளைப் பின் தள்ளி ஊடகங்களின் துணையோடு பார்ப்பன‌ர்களின் கையில் உள்ள விளையாட்டான கிரிக்கெட் தனியாரின் வசம் இருந்தும் தேச விளையாட்டாக கருதப் பெறும் அளவிற்கு புகழ் பெறுகின்றது. பார்ப்பன‌ர்களைத் தாங்கிப் பிடிக்கும் அரசும் மற்ற விளையாட்டினை வளர்க்காமல் கிரிக்கெட்டுக்கே பல்லவி பாடிக் கொண்டு இருக்கின்றது.

இந்நிலையில் இன்றைக்கு இந்தியாவின் விளையாட்டு என்றால் கிரிக்கெட் என்றே வழங்கப்பெறும் காலக்கட்டத்தில், இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரையும் குறிக்கும் ஒரு அணியாக இந்த கிரிக்கெட் அணி திகழ வேண்டுமானால் அதில் இன்று இருக்கும் இட ஒதுக்கீட்டு நிலை (70% இடங்களை பார்ப்பன‌ர்களே பிடித்து இருக்கும்) மாறி மக்கள் அனைவரையும் சமமாக திறமையின் அடிப்படையில் தேர்ந்து எடுக்கும் இட ஒதுக்கீட்டு முறை கொண்டு வரப்பட வேண்டும் தானே. அவ்வாறு கொண்டு வரப்படாவிடில் பிசிசிஐ என்பதன் அர்த்தத்தை பார்ப்பன‌ர்களின் கட்டுப்பாட்டில் இந்திய கிரிக்கெட் (Brahmins Control Cricket in India) என்றே நாம் வைத்துக் கொள்ளலாம் தானே.


2. முதல் பிரச்சனை,

இந்திய கிரிக்கெட் அணி என்ற ஒரு அணி உண்மையிலேயே நம் நாட்டில் கிடையாது. பிசிசிஐ (BCCI) என்ற தனியார் நிறுவனத்தின் அணி தான் இன்று இந்திய அணி என்ற பெயரில் விளையாடிக் கொண்டு இருக்கின்றது. மற்றபடி இந்திய அரசுக்கும் அந்த அணிக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது.

இரண்டாவது பிரச்சனை,

அரசு நிறுவனங்களில் மட்டுமே இட ஒதுக்கீட்டினை அரசு அமல்படுத்த முடியும். தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டினை கொண்டு வரும் சட்டத்தினை அரசாங்கம் இன்னும் இயற்றவில்லை. ஆகையினால் பிசிசிஐ தேர்ந்து எடுக்கும் கிரிக்கெட் அணியில் இட ஒதுக்கீட்டினை இந்திய அரசால் கொண்டு வர முடியாது. நிற்க.

இப்பொழுது சில... இல்லை இல்லை பல கேள்விகளும் மாற்றுக் கருத்துக்களும் உங்களின் மனதில் நிச்சயம் தோன்றி இருக்கும். அவற்றிக்கு நான் விடையினைக் கூற வேண்டும் என்றால் நாம் சில விடயங்களைத் தெளிவாகப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

௧) இந்திய அணி என்றால் என்ன?

இந்திய தேசத்து அணி என்றால் இந்திய அரசாங்கத்தின் ஒரு பகுதியான விளையாட்டுத் துறையின் கீழ் அவை வர வேண்டும். அரசாங்கமே விளையாட்டு வீரர்களையும் அணிகளையும் தேர்வு செய்யும். அவர்களுக்கு உரிய ஊதியங்கள் மற்றும் இன்ன பிற சலுகைகள் ஆகிய அனைத்தையும் அரசே கவனித்துக் கொள்ளும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இன்றைய அரசாங்கக் கல்லூரிகளை எடுத்துக் கொள்ளுங்கள்... அவற்றின் அனைத்து செயல்பாடுகளும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.



.. அத்தகைய கல்லூரிகளையே நாம் அரசுக் கல்லூரிகள் என்று ஏற்றுக் கொள்வோம். மாறாக தனியார் கல்லூரிகளை நாம் அரசாங்க கல்லூரிகள் என்று அழைக்க முடியாது. அவ்வாறே இந்திய விளையாட்டு அணிகளிலும் எந்த விளையாட்டுகளில் அனைத்து பொறுப்புகளும் அரசின் வசம் இருக்கின்றனவோ அந்த விளையாட்டு அணிகளே இந்திய அணிகள் ஆகும். மாறாக எந்த ஒரு தனியார் நிறுவனமோ தனது அணியினை இந்திய அணியாக கூறுவது இயலாது... அது சரியான ஒன்றாகவும் இருக்காது.

௨) அப்படி என்றால் பிசிசிஐ என்பது தனியார் நிறுவனமா?

ஆம். பிசிசிஐ என்பது தனியார் நிறுவனமே. அதனை அந்த நிறுவனமே கூறியும் இருக்கின்றது. சமீப காலமாக இந்திய அரசு கிரிக்கெட் விளையாட்டை தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துக் கொண்டு இருக்கின்றது. ஆனால் பிசிசிஐ தனது பண பலத்தையும் மற்ற அரசியல் செல்வாக்கினையும் வைத்துக் கொண்டு அரசுக்கு பிடி கொடுக்காமல் ஆடிக் கொண்டி இருக்கின்றது. அதாவது அரசின் சலுகைகளை அந்த தனியார் நிறுவனம் பெற்றுக் கொள்ளுமாம் ஆனால் அரசின் கீழ் அது வராதாம். இதுவே பிசிசிஐ இன் நிலை.

௩) அப்படி என்றால் பிசிசிஐ இன் சார்பாக விளையாடும் வீரர்கள் இந்திய விளையாட்டு வீரர்கள் இல்லையா?

நீங்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகின்றீர் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நிறுவனம் உங்களுடன் ஒரு ஒப்பந்தம் போட்டு இருக்கும். நீங்கள் இன்ன பணியினைச் செய்ய வேண்டும் அதற்கேற்றார்ப் போல் அந்நிறுவனம் சம்பளம் வழங்கும். அந்நிலையில் நீங்கள் அந்த நிறுவனத்தின் பணியாளர்கள் ஆகின்றீர்களே தவிர்த்து அரசாங்க ஊழியர்களாக கருதப்படமாட்டீர். அதனைப் போன்றே தான் பிசிசிஐ இன் கிரிக்கெட் வீரர்களும். அவர்களுக்கு பிசிசிஐ நிறுவனத்துடன் ஒப்பந்தம் இருக்கின்றது. அவர்கள் பிசிசிஐயிடம் இருந்து சம்பளம் பெற்றுக் கொண்டு அதற்காக விளையாடுகின்றனர். அவர்களைத் தேர்வு செய்வதும் அவர்களுக்கு சலுகைகள் மற்றும் சம்பளம் போன்றவற்றை முடிவு செய்வதும் முழுக்க முழுக்க பிசிசிஐ நிர்வாகத்தின் கையிலேயே இருக்கின்றது. 



 இந்திய அரசு அந்த விடயங்களில் தலையிட முடியாது. பிசிசிஐ அதன் விருப்பத்திற்கேற்ப அணியினைத் தேர்வு செய்துக் கொள்ளும்...விளையாடும்... பணம் பார்க்கும்... அரசாங்கம் வேடிக்கை மட்டுமே பார்க்கலாம்!!! இந்நிலையில் அந்த வீரர்கள் பிசிசிஐயின் வீரர்கள் ஆகின்றனரே தவிர்த்து இந்திய வீரர்கள் ஆக மாட்டார்கள். நிற்க.

இப்பொழுது இரு கேள்விகள் எழலாம்...!!!



ஒன்று - அட என்னங்க, அரசாங்கத்தின் கையில் இருக்கும் மற்ற விளையாட்டுத் துறைகள் எல்லாம் எந்த நிலையில் இருக்கின்றன என்று காணுகின்றீர்கள் தானே? ஒரு துறையிலும் பெரிய சாதனைகள் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. அந்த விளையாட்டின் வீரர்கள் எங்கோ ஒரு மூலையில் பெயரும் இல்லாது பிழைக்க வழியும் இல்லாது இருக்கின்றனர். இந்நிலையில் நன்றாக இருக்கும் கிரிக்கெட் விளையாட்டையும் அரசின் வசம் தந்து விட்டு அதையும் நாசமாக்கச் சொல்லுகின்றீர்களா?



 ஒரு விளையாட்டாவது நன்றாக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா? அரசாங்கம் தேர்வு செய்தால் தான் அவன் இந்திய வீரனாக ஆகின்றானோ...அப்படி என்றால் அரசாங்கம் திறமை இல்லாதவர்களை எல்லாம் சேர்த்து ஒரு அணியை உருவாக்கும்... அதனை இந்திய அணி என்று ஏற்றுக் கொள்வீர்... ஆனால் திறமையான வீரர்களை கொண்டு ஒருவன் தனியாக அணியினை அமைத்தால் அதனை இந்திய அணி என்று நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்? அப்படித் தானே...!!!

பதில்: அரசாங்கம் என்பது மக்கள் தேர்ந்தெடுத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அமைப்பு. அந்த அமைப்பினை மக்கள் கேள்வி கேட்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஆனால் தனியார் நிறுவனங்கள் என்பன அவ்வாறு இல்லை. அவர்களை மக்கள் கேள்விக் கேட்க முடியாது. இன்றைய நிலையில் பிசிசிஐ முழுக்க முழுக்க தமிழர்களை மட்டுமே கொண்டு ஒரு அணியினை அமைத்தாலும் அதனை எதிர்த்து எவரும் கேள்வி கேட்க முடியாது. அவர்கள் திறமையின் அடிப்படையில் அணியினைத் தேர்வு செய்யலாம், மொழியின் அடிப்படையில் தேர்வு செய்யலாம், சாதியின் அடிப்படையிலும் தேர்வு செய்யலாம்...அது அவர்களின் விருப்பம்.




 அவற்றை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அந்நிலையில் ஒரு தனியார் நிறுவனம் அதன் விருப்பதிற்கேற்ப தேர்வு செய்யும் ஒரு அணியினை இந்திய நாட்டின் மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு அணியாக நாம் கருத முடியாது. ஏனெனில் அந்த அமைப்பினை குறித்து நாம் கேள்விகளோ அல்லது அவற்றின் செயல்பாடுகள் குறித்து விளக்கங்களோ நாம் எழுப்பவும் கோரவும் முடியாது. எனவே மக்களின் பங்கு சிறிதும் இல்லாத தனியார் அமைப்புகள் தேர்வு செய்யும் அணியினை நாம் எக்காரணம் கொண்டும் மக்கள் அனைவரையும் குறிக்கும் இந்திய நாட்டு அணியாக ஏற்றுக் கொள்ள முடியாது. திறமை இல்லாதவர்களை அரசாங்கம் தேர்ந்து எடுத்தால் அதனை சுட்டிக் காட்டி கேள்விகளை கேட்கும் உரிமை மக்களுக்கு இருக்கின்றது. ஆனால் அதே உரிமை தனியார்களிடத்து செல்லுபடியாகாது.




இரண்டு - பிசிசிஐ இன் அணி இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்றால் அதனை ஏன் ஊடகங்கள் இந்திய அணி என்று கூறுகின்றன... இந்திய அரசும் ஏன் அதனை மெளனமாக வேடிக்கைக் கண்டுக் கொண்டு இருக்கின்றது?

இந்த கேள்விக்கும் சரி முதல் கேள்வியில் நான் பதில் கூறாது விட்ட பகுதியான 'அரசாங்கத்தின் கையில் இருக்கும் மற்ற விளையாட்டுத் துறைகள் எல்லாம் எந்த நிலையில் இருக்கின்றன என்று காணுகின்றீர்கள் தானே? ஒரு துறையிலும் பெரிய சாதனைகள் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. அந்த விளையாட்டின் வீரர்கள் எங்கோ ஒரு மூலையில் பெயரும் இல்லாது பிழைக்க வழியும் இல்லாது இருக்கின்றனர்' என்பதற்கும் ஒரே விடை.


இந்த கிரிக்கட் என்பது ..ஒரு தனியார் நிறுவனங்கள் நடதுதும் ரெக்கார்ட் டான்ஸ் மாதிரி ......

கூடங்குளம் அணு உலை -இலங்கையுடன் கூட்டா? -சுப.உதயகுமாரன் பேட்டி

விகடன் மேடை - சுப.உதயகுமாரன் பதில்கள்
வாசகர் கேள்விகள்... படம்: எல்.ராஜேந்திரன்
அணுசக்தியின் முக்கியத்துவம்பற்றி நாடாளுமன்றத்தில் பேசிய கனிமொழிகூட கூடங்குளம் அணுஉலைகுறித்து வாய் திறக்க மறுக்கிறாரே?'' 

 
'' 'இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்தான் இந்தியாவின் மீட்சிக்கு ஒரே வழி’ என்று 2007-ம் ஆண்டு தனது நாடாளுமன்றக் கன்னிப்பேச்சில் காரசாரமாக ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கினார் திருமதி கனிமொழி. 'காலச்சுவடு’ மொழிபெயர்த்து வெளியிட்ட அந்தப் பேச்சுக்கு நான் எதிர்வினை எழுதினேன். அதன் காரணமாகவும் அந்த இதழின் நூலக சந்தா அப்போதைய கலைஞர் அரசால் உடனடியாக நிறுத்தப்பட்டது.


 இந்தியாவின் எரிசக்திக் கொள்கை, அணுசக்தித் திட்டம்பற்றி எல்லாம் ஆழமான புரிதலும், அரசியல் தெளிவும், கொள்கை நிலைப்பாடும் உள்ளவர்களுடன் அதைப் பற்றி விவாதிக்கலாம். ஆனால், சுயநலவாதிகளான, பிழைப்புவாதிகளான, சந்தர்ப்பவாதிகளான நமது அரசியல்வாதிகள் பெரும்பாலானோருக்குப் பணம், பதவி, பட்டம் கிடைக்கும் என்றால் வாய் திறப்பார்கள். எதுவும் கிடைக்காது என்றால், வாய் திறக்க மறுப்பார்கள்!''


பிடல் சேகுவேரா, ராசிபுரம்.


''நடுநிசியில் வீதியில் நடந்து வந்ததற்காகவே ஓர் இளைஞனைக் கைதுசெய்யும் நம் தமிழகக் காவல் துறை. ஆனால், எண்ணற்ற வழக்குகள் பதியப்பெற்ற உங்களை மட்டும் இத்தனை மாதங்களாகச் சுதந்திரமாக நடமாடவிட்டிருப்பதன் மர்மம் என்ன?'' 


''எங்கே சுதந்திரமாக நடமாடவிட்டிருக்கிறார்கள்? நாங்கள் இடிந்தகரையில் திறந்தவெளிச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருக்கிறோம். குடும்பக் காரணங்களால் இங்கிருந்து வெளியே சென்ற எங்கள் போராட்டக் குழு உறுப்பினர் திரு எம்.டி.கணேசன் மார்ச் 22, 2013 அன்று காவல் துறையால் கைதுசெய்யப்பட்டு, பாளைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். நூற்றுக்கணக்கானோர் மருத்துவச் சிகிச்சைக்காகக்கூட ஊருக்கு வெளியே போக முடியாமல் இருக்கிறார்கள்.


மண்ணைக் காக்க, மக்களைக் காக்க... அறவழியில், வன்முறையின்றி, யாரையும் எந்த விதத்திலும் துன்புறுத்தாமல் போராடும் 2,27,000 பேர் மீது 350-க்கும் அதிகமான வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. முன்னணியினர் மீது தேசத் துரோக வழக்குகள் 20, தேசத்தின் மீது போர் தொடுத்த வழக்குகள் 20  என சுமத்தப்பட்டுள்ளன. மாவோயிஸ்ட்டுகள் மீதுகூட இவ்வளவு வழக்குகள் கிடையாது. இத்தனை பெரிய, ஆபத்தான, பயங்கரமான குற்றவாளிகளைப் பிடிக்கக் காவல் துறை தயங்குவது நியாயம்தானே?



உண்மை என்ன தெரியுமா? ஒண்ட வந்த பிடாரி, ஊர்ப் பிடாரிகளைப் பகைத்துக்கொண்டு நீண்ட நாள் கதையை ஓட்ட முடியாது என்ற அச்சமே காரணம்!''


மு.அழகரசன், முத்துநாயக்கன்பட்டி.


''தமிழகத்தில் சென்னை தவிர்த்த பிற பகுதிகளில் நிலவும் 16 மணி நேர மின்வெட்டுபற்றி தங்களுக்குக் கவலை இல்லையா?'' 


''நிச்சயமாகக் கவலை இருக்கிறது. எனவேதான் தமிழக முதல்வரின் பல்வேறு மாற்று மின் திட்டங்களை, மத்திய அரசிடம் அவர் வைத்த கோரிக்கைகளை ஆதரித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினோம். கூட்டப்புளி, பெருமணல், கூடங்குளம், வைராவிக்கிணறு, இடிந்தகரை, கூத்தங்குழி போன்ற எங்கள் கிராமங்களில் குமிழ் விளக்குகளை மாற்றிவிட்டு, மின்சாரம் சேமிக்கும் குச்சி விளக்குகளைப் பொருத்தினோம். சூரிய சக்தியை எங்கள் பகுதியில் அதிகம் பயன்படுத்த முயற்சிகள் எடுக்கிறோம். கூடங்குளம் திட்டத்தைக் காற்றாலைகள், கடல் அலை ஆலைகள், சூரிய ஒளி ஆலைகள்கொண்ட மாதிரி எரிசக்திப் பூங்காவாக மாற்றக் கோருகிறோம்!''


த.சூரியதாஸ், சிலட்டூர்.


''கூடங்குளம் மக்களின் மனநிலையைத் தமிழகப் பொதுமக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்களா?'' 


''நிச்சயமாக! கூலிக்கு மாரடிக்கிற ஒரு சிறு கூட்டத்தைத் தவிர, எங்காவது தமிழ் மக்கள் 'கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திற’ என்று போராடுகிறார்களா? இல்லையே! கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் உள்ள சிறு, குறு தொழிலதிபர்களும் தொழிலாளர்களும் ஆரம்பக் கட்டத்தில் 'கூடங்குளம் மின்சாரம் வேண்டும்’ என்று குரல் கொடுத்தார்கள்.


 எங்கள் போராட்டப் பெண்கள் அவர்களை நேரில் சந்தித்து, 'உங்கள் வாழ்வாதாரத் துக்காகப் போராடும் நீங்கள், எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டுவது முறையாகுமா?’ என்று ஓர் அறவழிக் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டார்கள். அந்த மனிதநேய மேஜிக் அற்புத மாக வேலை செய்தது. அன்றைய தினம் முதல் அந்தக் கொங்குநாட்டுப் பெருமக்கள் 'மின்சாரம் வேண்டும்’ என்றுதான் போராடினார்கள்.



தமிழகத்தின் மின் பற்றாக்குறை சுமார் 4,000 மெகாவாட். இறந்து பிறந்த குழந்தையான கூடங்குளம் அணுமின் நிலையம் ஒருவேளை எழுந்து நடக்கிறது என்றே வைத்துக்கொள்வோம்... மற்ற அணுமின் நிலையங்கள்போல 40 முதல் 50 சதவிகிதம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். அணுமின் நிலையத்தை ஓட்டுவதற்கு வேண்டிய மின்சாரத்தை எடுத்த பிறகு; கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியத் தொகுப்பு அனைவருக்கும் அவரவர் பங்கைக் கொடுத்த பிறகு; மின் கடத்தலின்போது ஏற்படும் இழப்பு போக, தமிழகத்துக்கு 300 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதே அரிது. நமது மின்சாரப் பிரச்னைக்கு கூடங்குளம் ஒரு தீர்வே அல்ல. இதெல்லாம் தெரியாத, புரியாத முட்டாள்கள் அல்ல தமிழர்கள்!''


சதீஷ் குமார், ஃபேஸ்புக்.


''அப்துல் கலாம்..?'' 


''மனிதநேயத்தோடு சிந்திக்கலாம்!''


வே.சித்திரவேலு, கருப்பம்புலம்.


''கார் கொடுத்தால் போய்விடுகிறார்கள், கரன்சி கொடுத்தால் போய்விடுகிறார்கள், பதவி கொடுத்தால் போய்விடுகிறார்கள். ஆனால், நீங்கள் மட்டும் சொன்ன தையே சொல்லிக்கொண்டு பிடிவாதமாகப் போராடிவருகிறீர்களே... இதனால் உங்களுக்கு என்னதான் லாபம்?'' 



''என் குழந்தைகள், நம் குழந்தைகள் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வத்தோடும் வாழ்வார்களே... அதுதான் லாபம்! சாகும்போது இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் நம்மால் முடிந்ததை உண்மையாகச் செய்தோம் என்ற பேரானந்தத்தைப் பெறலாமே... அந்தத் திருப்தி தரும் நிறைவுதான் லாபம்!''


நாசரேத் விஜய், கோவை.


''நீங்கள் ஒரு ஆசிரியர். நீங்கள் சொல்லுங்கள்... நம்முடைய கல்விமுறை சரிதானா? ஏன் தாய்மொழி வழிக் கல்வியை மறுக்கிறார்கள்? என்ன மாற்றம் நிகழ வேண்டும் நம் கல்வித் துறையில்?'' 


''சாராய வியாபாரம் செய்யும் கல்வித்தந்தை, வழிப்பறி நடத்தும் கல்வி நிறுவனம், வட்டிக்குக் கடன் கொடுக்கும் ஆசிரியர்கள்... இவர்கள் எல்லாம் சேர்ந்து நடத்தும் கல்விமுறை எப்படி வெற்றி பெறும்? முழுமையாகத் தோல்வி அடைந்திருக்கிறது. தாய்மொழி வழிக் கல்வி மட்டுமே அதைத் தூக்கி நிறுத்திவிடும் என்று நினைப்பது தவறு. குறைந்தது ஐந்து மொழிகள் மீது பற்றையும், புத்தகங்கள் மீது காதலையும், அறிவின் மீது தேடலையும் உருவாக்கும் பள்ளிகள், கல்லூரிகள், கல்வியாளர்களே இன்றைய உடனடித் தேவை!''


மு.அழகரசன், முத்துநாயக்கன்பட்டி.


''கூடங்குளம் அணு உலை விஷயத்தில் இலங்கையும் எதிர்ப்புத் தெரிவிக்கிறது. அப்படி எனில், சந்தர்ப்பம் அமைந்தால் அந்த நாட்டு அரசோடு இணைந்து போராடுவீர்களா?'' 


''தமிழர்களை இனப்படுகொலை செய்த,  இஸ்லாமியர்களைக் கொடுமைப்படுத்துகிற இலங்கை அரசோடு நிச்சயமாக இணைந்து போராட மாட்டோம். சிங்களப் பேரினவாதத்துக்கு அடிமையாகாத, ஈழத் தமிழர்களை, ஈழ இஸ்லாமியர்களை மனிதர்களாக நடத்தும், மனிதநேயம் கொண்ட சிங்கள மக்களோடு கைகோப்பதில் எந்தச் சுணக்கமும் இல்லை!''


தமிழ்வேல் திருப்பதி, ஃபேஸ்புக்.


''நீங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் பங்கு பெற்று உங்கள் குரலை அங்கும் ஒலிக்கச் செய்யலாமே... என்ன தயக்கம்?'' 


''நாடாளுமன்றத்தில் குரல்கள் ஒலிக்கும் அழகை, ஒலிப்பதற்காக வாங்கும் கிம்பளத்தை, ஒலித்தவுடன் பீறிட்டுக் கிளம்பும் சமூகப் புரட்சிகளை எல்லாம்தான் கண் குளிரப் பார்த்துக் கொண்டிருக்கிறோமே! 'ஆளும்’ மன்றங்களை நான் நம்பவில்லை; ஆட்கள் மன்றத்தைத்தான் நம்புகிறேன்!'

'
நித்யா ஜெயச்சந்திரன், ஃபேஸ்புக்.


''நீங்கள் பல நாடுகளில் வசித்திருக்கிறீர்கள். அந்த அனுபவத்தில் சொல்லுங்கள்... இந்தியா குறித்த எந்த விஷயம் உங்களை மிகவும் அச்சுறுத்துகிறது? எந்த விஷயம் பெருமிதம்கொள்ளச் செய்கிறது? 


''இந்திய அரசியல்வாதிகள். அரசியல்வாத இந்தியர்கள்!'

'இதுவரை அணு உலை விபத்தால் மொத்தம் 50 பேர் மட்டுமே இறந்திருப்பதாகச் சொல்கிறது உலக அணு அமைப்பு. சமீபகால உதாரணமாக நீங்கள் சுட்டிக்காட்டும் ஜப்பா னின் ஃபுகுஷிமா விபத்தில் ஓர் உயிரிழப்புகூட இல்லை என்கிறார்கள். அணுஉலை விபத்தி னால் பல லட்சம் மக்கள் உயிர் இழந்திருக்கிறார்கள் என்று பிரசாரம் செய்கிறீர்களே... அதற்கான ஆதாரங்களை அடுக்க முடியுமா?''


''உங்கள் போராட்டங்களில் ஏன் கம்யூனிஸ்ட் இயக்கங்களை அனுமதிக்க மறுக்கிறீர் கள்?''


''சமீபத்தில் 'நீயா... நானா?’ நிகழ்ச்சியில் கூடங்குளம் பற்றிய விவாதத்தில் அந்தப் பிரச்னைகுறித்த தெளிவின்மையோடு பேசினார்கள் பல இளைஞர்கள். அதோடு உங்களைப் பற்றியும் எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்தனர். அப்படியான கண்ணோட்டத்துடன் இருக்கும் இளைஞர்களுக்குத் தாங்கள் கூறும் விளக்கம்?''


- போராடுவோம்.

நன்றி - விகடன்



பொண்டாட்டி தோசை சுடும்போது .......

வாக்கிங் எவிடென்ஸ்
1. அடேங்கப்பா.டீக்கடைல 2 பிகருங்க ( அவங்கவங்க ) கால் மேல கால் போட்டு பன்னாட்டா டீ குடிச்சுட்டு இருக்காங்க



------------------



2. உனக்கு மட்டும்தான் சொந்த வீடு இருக்கிறது என்ற எள்ளல் வேணாம்.வீட்டை எப்போதும் முதுகில் சுமக்கும் ஆமை புகுந்த் வீடு உருப்படாது என அறிக




-------------------------


3. இங்கிருந்தே பளிச் என தெரிகிறது மொட்டை மாடியில் ஒரு பிகர் செய்யும் எக்ஸ சைஸ்



---------------------


4. இன்னைக்கு அமாவாசை.உன் மீது பைத்தியமா இருக்கேன் என காதலியிடம் அள்ளி விட உகந்த நாள்



---------------------


5. காலை வணக்கம் சொன்னேன் முறைப்படி.நான் பரிசளித்த உன் கால் கொலுசுகள் சிரித்தன.எல்லாம் என் மண்டகப்படி


-----------------------


6. பொண்டாட்டி தோசை சுடும்போது நோட் பண்ணுங்க.அவங்களுக்கு சுடறதை மெல்லிசாவும் ,நமக்கு மொத்தமாவும் ஊத்தி கடனைக்கட்டுவாங்க


------------------------


7. ஆண்களுக்கு சீரியல் பிடிக்காததுக்கு காரணம் நைட் 11 மணி வரை பொண்டாட்டிங்க டி வி யை (யும்) அணைக்க விடுவதில்லை என்பதால்தான்


---------------------


8. நான் எப்போது முத்தம் கேட்டாலும் அப்புறம் என தட்டிக்கழிக்கிறாயே! நீ என்ன நாராயணசாமியின் வழித்தோன்றலா ?



--------------------


9. என் எல்லாக்கேள்விகளுக்கும் உன் பதிலை தருகிறாய்.என்னை ஏன் பிடிச்சிருக்கு எவ்ளவ் பிடிச்சிருக்கு க்கு மட்டும் புன்னகையை மட்டும் பதிலாய்



---------------------


10. எத்தனையோ பேர் என்னைத்திட்டி இருந்தாலும் நீ என்னைத்திட்டும்போது அருண் ஐஸ்க்ரீம் சாப்பிட்டது போல் இருக்கு




----------------------


11. கர்நாடகா வெற்றிக்கு ராகுலின் கடின உழைப்பே காரணம்-பிரதமர்# ஜிங் சக் கே சரணம்


------------------------


12. தீயா வேலை செய்யனும் குமாரு.யாரும் சொல்லாம நீயா செய்யனும்



----------------------


13. நான் உன்னை கடக்கும்போது அரசு ஊழியரின் அலட்சியமாய் உன் முக பாவனைகள்.நீ என்னை கேள்விகளால் மடக்கும்போது தனியார் ஊழியர் போல் என் பம்மல்கள்்



-----------------------


14. தொட்டுப்பார்க்க மட்டுமே சொந்தம்.பேங்க் கேஷியர் எண்ணும் பணம்



---------------------


15. இச் ? கேட்டேன். ஆரம்பத்தில் ச்சே! என்றாய் ! பின் ச்சீய்! என்றாய்! வாய் ப்புக்கு நன்றி என்றேன்



---------------------


16. நம் பார்வைப்பரிமாறல் நடக்கும்போதெல்லாம் பால்காரன் கணக்கு போல் சுவரில் கோடு போட்டேன்.இப்போது சுவரெல்லாம் கோட்டோவியங்கள்



---------------------


17. மழை வருதா என வானத்தை அண்ணாந்து பார்க்கத்தேவை இல்லை.உனக்கு என் மீது காதல் இருக்கா என உன் கண்களைப்பார்க்கத்தேவை இல்லை




--------------------

18. என்ன பேசனும் எப்போ பேசனும் என்ற வரையறைகள் , வரைமுறைகள் , விதிமுறைகள் எதுவும் காதலுக்கு இல்லை.இருக்கவும் கூடாது



------------------


19. எல்லை மீறியதாய் என்னை நீ உதா சீனப் படுத்தினாய்!



-----------------------


20. காலையில் என்னை 6 மணிக்கு எழுப்பி விடவும்னு சீட்டு குடுத்துட்டு போவுது சம்சாரம், நைசா 7 வரை தூங்கிடனும்



-------------------------------

Tuesday, May 21, 2013

ஈரோடு சூரம்பட்டியில் ஓர் இரவு - சிறுகதை - வா மு கோமு

பெண் தன் துப்பட்டாவைச் சரியாக இழுத்துவிட்டுக்கொண்டது. திரும்ப என் வீட்டை ஒருமுறை பயக் கண் களோடு பார்த்துவிட்டு, எதுவும் பேசாமல் என் டூவீலரின் பின் இருக்கையில் அமர்ந்துகொண்டதும் நான் வண்டியைக் கிளப்பினேன். சூரம்பட்டி நான்கு வழிப் பாதையில் வடக்கு நோக்கிச் செலுத்தினேன்.


ஈரோடு அக்ரஹாரம் வரை கல்லூரிப் பெண் ஒருத்தியை என் பஜாஜ் டிஸ்கவரில் சூரம்பட்டியில் இருந்து இரவு இரண்டு மணிக்கு பின் இருக்கையில் அமர்த்திக்கொண்டு, காலியான சாலையில் பயணிப்பேன் என்று நினைத்துக்கூடப் பார்த்தது இல்லை. நான்கு சக்கர வாகனங்கள்தான் கண்ணில்படவில்லையே ஒழிய, இரண்டு சக்கர வாகனங்கள் சாலையோர விளக்குகளின் பிரகாசத்தில் ஊர்ந்துகொண்டுதான் இருந்தன.


அரசாங்க மருத்துவமனை ஓரமாக இரண்டு லாரிகள் தூங்கிக்கொண்டு சாலை ஓரத்தில் நின்றிருந்தன. செவன் டாங்கி வயதாகிவிட்ட நான், ஒரு நாள்கூட இந்த நகரத்தை இவ்வளவு அமைதியாகக் கண்டதே இல்லை.


இரவில் இந்த நேரத்தில் எல்லாம் விழித்திருந்து எனக்குப் பழக்கம் இல்லை. இரவு ஒன்பதைத் தாண்டியதும் படுக்கையில் விழுந்தேன் என்றால், சூரம்பட்டியில் பெரிய பெரிய வெடிகுண்டுகள் வெடித்தால் கூட எழ மாட்டேன். காலையில் ஏழு மணியைப் போல அம்மா காபி டம்ளரோடு வந்து, ''எழுந்திரு கணேசா...'' என்று எழுப்பினால்தான் உண்டு. நகரில் பிரபலமான துணிக் கடை ஒன்றில் நான் மேனேஜராக, கடந்த மூன்று வருடங்களாகப் பணியில் இருக்கிறேன். சம்பளம் என்று பார்த்தால் எனக்கும் அம்மாவுக்கும் போதும். இதனால், வேலையில் இருக்கும் பெண்ணைக் கட்டிக்கொள்ளலாம் என்ற திட்டத்தில் இருக்கிறேன். 


வேலையில் இருக்கும் பெண்களெல்லாம் முதலாளிமார்களைக் கட்டிக் கொள்ளும் திட்டத்தில் இருப்பார்கள்போல் இருக்கிறது. இதனால் என் திருமணம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.


எங்கள் துணிக் கடையில் இருக்கும் அழகுப் பதுமைகள் எல்லாம் இருபது வயதுக்கும் குறைந்தவர்கள். அவர்கள் யாரும் இருபத்தேழு வயதுக்காரனான என்னைச் சட்டைசெய்வது இல்லை.


''என்ன சார்... தும்பிக்கையைக் காணோம்?'' என்று கணேசன் என்கிற பெயரை, சார் போட்டுக் கிண்டல் செய்கிறார்கள். ஈரோட்டில் எத்தனை கணேசன்கள் என்னைப் போலவே வருத்தத்தோடு வாழ்க்கையை ஓட்டுகிறார்களோ?


இரவு நேரத்தில் சாலையில் வாகனங்கள் அதிகம் இல்லாவிட்டாலும் சிக்னல்களில் பச்சை, சிவப்பு விளக்குகள் எரிந்துகொண்டுதான் இருந்தன. பேருந்து நிலையத்துக்கு அருகில் வந்தபோது, அந்த நேரத்திலும் காவலர்கள் கையில் தடியோடு நின்றிருந்தார்கள். கடவுள் புண்ணியத்தில் குச்சியைக் காட்டி என் டிஸ்கவரை அவர்கள் தடுக்கவில்லை. அது தவிர, இந்தப் பெண்ணை அந்த மாதிரிப் பெண் என்று நினைத்துக்கொண்டு அவர்கள் விசாரித்தால்?


ஐயோடா சாமி! பெரிய கண்டத்தில் இருந்து தும்பிக்கை இல்லாத நான் தப்பிவிட்டேன். சமீபத்தில் 'ராட்டினம்’ திரைப்படம் பார்த்தேன். அதில் பள்ளியில் படிக்கும் காதலியின் விருப்பத் தின் பேரில் காதலன் தன் டூவீலரில் திருச்செந்தூர் வரை, ''ஏலே ஏ புள்ளே... நெஞ்சுக்குள்ள நெருஞ்சி முள்ளெ வெச்சாக்கூட உற்சாகமா ஆடுறேனே!'' என்று பாடிக்கொண்டே சுற்றிப் பார்த்து காதலைப் பலப்படுத்திக்கொண்டு திரும்பும்போது, வாகனப் பரிசோதனையில் மாட்டிக்கொள் கிறார்கள். 


படத்தை நான் பார்த்த நாளில் இருந்து அந்தப் பெண்ணை நான் மனதாரக் காதலித்துக்கொண்டு இருக்கிறேன் என்பது வேறு விஷயம். இதற்கும் முன்பாக அமலா பாலையும் அஞ்சலியையும் சேர்த்துக் காதலித்துக்கொண்டிருந்தேன். என் காதல் மாபெரும் தோல்வியைத் தழுவிவிடும் என்பது உறுதியாகிவிட்டதால், 'ராட்டினம்’ நாயகிக்குத் தாவிவிட்டேன்.


சுவேதா! என் பின்னால் அமர்ந்திருக்கும் பெண்ணின் பெயர். அவள் பிடிமானத்துக்காக என் தோள் மீது கை போட்டிருந்தால், நான் டிஸ்கவரை நாற்பது, நாற்பத்தைந்தில் ஒட்டியபடி இருக்க மாட்டேன். சுவேதா உலகத்தில் உள்ள அத்தனை ஒழுக்கங்களையும் ஒருசேரப் பெற்றவள் போல் இருக்கிறது. ஒரு சாயலில் 'ராட்டினம்’ பட நாயகியை அடிக்கடி ஞாபகப்படுத்தியதால், என் ஹார்மோன்கள் என்றும் இல்லாத இயக்கத்தில் இருந்தன. அதே உப்பிய கன்னங்கள். கொடுத்துவைத்த மகராசன் யார் எனத் தெரியவில்லை.


எல்லாம் இந்த சுரேந்திரன் பயலால் வந்த தீவினை. சுரேந்திரன் என் கல்லூரி நண்பன். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே அவனுக்குப் பதிமூன்று காதலிகள் இருந்தார்கள். அதில் ஒருவர், கல்லூரி கணிதப் பேராசிரியை. அவனுடைய அப்பா, நகரில் காசு பார்ட்டி. வீட்டில் ஒரே பையன் என்பதால், செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டவன். துணிமணிகள் எல்லாம் உயர்ரகத்தில் அணியும் அவனுக்குப் பதிமூன்று காதல்கள் ஒரே நேரத்தில் வந்தது, எண்ணிக்கை குறைவோ என்று தான் யோசித்தேன்.


நல்லவேளை... அவன் காதலிகள் யாரையும் வாழ்க்கைத் துணைவியாக அமைத்துக்கொள்ளவில்லை. நல்ல பையன்களோடு மட்டுமே சாவ காசம் வைத்துக்கொள்ளும் நான், அந்தப் பழக்க வழக்கத்தை இன்று வரை தொடர்கிறேன். சுரேந்திரனை நல்ல பையன் என்றுதான் இன்று வரை நம்பிவந்தேன். ஒரு ஆத்திரஅவசரத்துக்குப் பணம் வேண்டும் என்றால், என் முதலாளியிடம் நான் மண்டை முடியைச் சொறிந்தபடி நின்றுதான் பணம் வாங்க வேண்டும். அப்படிச் சொறிவதைத் தடுத்துக்கொள்ள, ஈரோடு நகரில் ஆறு செல்போன் கடைகளுக்கு முதலாளியான சுரேந்திரனைப் பயன்படுத்திக்கொள்வேன்.


சுரேந்திரன் பெண்களைக் காதலிப்பதோடு சரி... வேறு தப்புத்தண்டாவில் எல்லாம் இறங்க மாட் டான். ஒருவேளை தனக்கான ஒரு நல்ல பெண் ணைக் கண்டறியத் தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறானோ என்றுதான் எனக்குத் தோன்றும். கல்லூரியைவிட்டு வெளிவந்ததும் அவன் தேடலில் எத்தனை பெண்கள் வந்து போனார்கள் என்ற லிஸ்ட் என்னிடம் இல்லை. நான்தான் பொறுப்பாக வேலை யில் அமர்ந்துவிட்டேனே!


அவனது தேடுதல் வேட்டையில் கிடைத்த சூரியப்பந்து சுவேதா என்றுதான் போதையில் சுரேந்திரன் என்னிடம் சொன்னான். ஈரோடு ஆர்ட்ஸ் கல்லூரி யில் வேதியியல் முதல் வருடம் படித்துக்கொண்டிருந்த சுவேதாவைக் கல்யாணம் செய்து, மகாராணிபோல வாழவைப்பதாகக் கூறிக்கொண்டு, தினமும் லோலோலோலோ என்று சுற்றியிருக்கிறான் சுரேந்திரன். அந்தப் பெண்ணுக்குக் காதல் என்ற வார்த்தையே தமிழில் பிடிக்காதுபோல. மாரியம் மன் கோயிலில் தேங்காய்ப் பழம் கொடுத்து சாமி கும்பிடும் பெண் போல் இருக்கிறது.


ஆறு மாத காலம் சுற்றிச் சலித்தவன், விஷம் சாப்பிடப்போகிறேன் என்று விஷ பாட்டிலைக் கையில் எடுத்துவிட்டானாம் நேற்று. அந்தப் பெண் மிரண்டுவிட்டது. விஷ பாட்டிலைக் காட்டி, மிரட்டித் தன் பைக்கில் ஏற்றிக்கொண்டு நேராக என் வீடு வந்துவிட்டான். காதலைக் கட்டாயப்படுத்தி மிரட்டிப் பெற முடியுமா? புரியாத முட்டாளாகிவிட்டான் என் நண்பன். நல்ல பையனுக்கு ஏன் இப்படிப் புத்தி பிசகிவிட்டது?


தோளில் பெரிய புத்தகப் பையைச் சுமந்தபடி அந்தப் பெண் அழுதுகொண்டே என் வீட்டு வாசலில் நிற்க, அம்மாதான் அவளை அணைத்து ஆறுதல் சொல்லி வீட்டுக்குக் கூட்டிப்போயிற்று. சுரேந்திரன் என் முகம் பார்த்தான். ''ஒரு வழியும் தோணலை கணேசா... கடைசியா இப்படிப் பண்ணிட்டேன்'' என்றான்.


மருந்துக் கடை சென்று அவன் காயத்துக்கான மருந்துகளை வாங்கி வந்து அவனுக்கு முதலுதவி செய்தேன். வண்டியின் டேங்க் கவரில் சரக்கு பாட்டில் இருப்பதாகவும், அதை எடுத்துவரும்படியும் சொன்னான்.


''என் வலி இப்போ போயிடும் பாரு'' என்றவன் இரண்டு டம்ளர்களில் ஊற்றி சியர்ஸ் போட்டுக் குடித்தான்.


எனக்குப் பயமாக இருந்தது. உண்மையிலேயே இவன் என் நண்பன் சுரேந்திரன்தானா? எப்போதும் விளையாட்டு, கேலி என்றுதான் இருப்பான். 'நல்ல விஸ்கில ஒரு பிராந்தி குடுங்க சார்’ என்றுதான் டாஸ்மாக்கில் கேட்பான். நிஜமாகவே இந்தப் பெண்ணை இவன் விரும்பியிருக்கிறான் போலிருக்கிறதே. காதலினால் எல்லோ ருடைய முகமும் பூரிப்பில் சிவந்து காணப்படும் என்றுதான் கேள்விப்பட்டும் படித்தும் இருக்கிறேன். 


இங்கே அச்சுஅசல் திரைப் படத்தில் பெண்ணைக் கடத்திவந்த வில்லன் மாதிரியே இருந்தான். இவனையும் இவனுக்கு உடந்தையாக இருந்த என்னையும் பறந்து பறந்து உதைத்துவிட்டு, அவளை இழுத்துப்போகும் நாயகன் ஒருவேளை ஒன்பது மணிக்கு மேல்தான் பைக்கில் வருவானோ?


போதை ஏறிப்போன சுரேந்திரன் தடுமாறி எழுந்து என் அறையில் இருந்து வெளியேறினான். என் அம்மா இருக்கும்போது அந்தப் பெண்ணிடம் ஏடாகூடமாக நடந்துகொண்டான் என்றால்? மிரண்டு அவன் பின்னால் ஓடினேன். ''சுவேதா... சுவேதா...'' என்று சத்தமிட்டபடி என் அம்மாவின் அறைக்குள் நுழைந்துவிட்டான். கெடுத்தான் கதையை!


நான் அம்மாவின் அறைக்குள் நுழைந்தபோது, சுரேந்திரன் சுவேதாவின் காலைப் பிடித்துக்கொண்டு தரையில் நெடுகக் கிடந்தான். ''என்னை மன்னிச்சுடு சுவேதா. நீ எனக்கு வேணும் சுவேதா... பாட்டில் எல்லாம் காட்டி உன்னை மிரட்டிட்டேன்... ஸாரி சுவேதா. காலையில உன்னை ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிறேன் சுவேதா!''


அந்தப் பெண் மீண்டும் நடுங்கிக்கொண்டே அழத் தொடங்கிற்று.


இதில் அம்மாவும் செய்வது அறியாமல் மிரண்டு விட்டது. இத்தனைக்கும் சுரேந்திரனும் 'அம்மா... அம்மா...’ என்றுதான் பழகுவான். எத்தனை வருடங்களாக வீட்டுக்கு வந்துபோய்க்கொண்டிருக்கிறான். படாதபாடு பட்டு, பாப்பா உனக்குத்தான் என்று சொல்லித் தூக்க முயற்சித்து, முடியாமல்போய் இழுத்துக்கொண்டே என் அறைக்கு வந்தேன். அறைக்குள் வந்ததும் இன்னொரு டம்ளர் ஊற்றிக்கொண்டவனுக்கு நிதானம் இல்லாமல் போயிற்று. என் படுக்கையில் சாய்ந்தவன், 'சுவேதா எனக்கு வேணும்டா கணேசா!’ என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே அமைதியானான். நான் மீதம் இருந்த சரக்கைக் காதலுடன் பார்த்தேன்.


அம்மா எந்த நேரமும் அறைக்குள் வந்துவிடுவார் என்பதால் டம்ளரையும், பாட்டிலையும், தண்ணீர்க் கேனையும் தாவிக்கொண்டு மொட்டைமாடிக்குத் திருட்டுப் பூனைபோல் வந்துவிட்டேன். முதல் ரவுண்டை ஆரம்பிக்க டம்ளரில் சரக்கை ஊற்றித் தண்ணீர் கலந்தேன். (மது அருந்துவது உடல் நலனுக்குத் தீங்கானது!) டம்ளரைக் கையில் எடுத்து, ''நண்பன் இழுத்து வந்த கல்லூரிப் பெண்ணின் நலனுக்காக'' என்று வானம் பார்த்து வாய்விட்டுச் சொல்லிவிட்டு அருந்தினேன்.



சும்மா கிடைக்கிறது என்றால், பினாயிலைக்கூடக் குடிக்கத் தயாராக இருப்பவனான நான், ஒரு நல்ல குடிகாரன் அல்ல. சரக்கு பாட்டிலை ஓரளவு தம்கட்டி முகர்ந்து இழுத்தாலே போதை ஏறிவிடும் எனக்கு. நண்பர்களுடன் மது அருந்தும்போது போதை இல்லாதவன்போலவும், விட்டால் முழு பாட்டிலையும் காலி செய்துவிட்டு வீடு போய்விடுபவன்போலவும் நடிக்க முடியும் என்னால். மூன்றாவது ரவுண்டு சரக்கை அவர்கள் அறியாமல் நான் கீழே ஊற்றிவிடுவேன். குடிகாரர்கள் அனை வரும் தங்கள் கெபாசிட்டியை உணர்ந்து குடிக்கப் பழக வேண்டும். ஆனால், அப்படி நடப்பதே இல்லை. நான் மாடியிலேயே சாய்ந்துவிடுவதற்கு அரை மணி நேரம்தான் ஆயிற்று.


அம்மா நடுச்சாமம்போல மாடி ஏறி வந்து என் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பிவிட்டது. 'மழை பெய்கிறதோ?’ என்று தலையை உதறிக்கொண்டு எழுந்து அமர்ந்து கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தேன். அம்மாவின் பின்னால் அந்தப் பெண்ணும் நின்றுகொண்டிருந்தது. ''அக்ரஹாரத்துலதான் இந்தப் பொண் ணோட வீடு இருக்குதாம் கணேசா... அந்த எடுபட்ட பயல் நல்லாத் தூங் கிட்டு இருக்கான். வீட்டுல கொண்டு போய் விடச் சொல்லுது இந்தப் பொண்ணு. நீ என்ன பண்றே... இந்தப் பொண்ணை உன் பைக்குல பத்திரமா கூட்டிட்டுப் போய் விட்டுட்டு வந்துடு கணேசா'' என்றது. அது ஒரு நல்ல யோசனையாகத்தான் எனக்கும் பட்டது.



இதோ அக்ரஹாரத்தினுள் நுழைந்துவிட்டேன். சோம்பேறி நாய்கள் எல்லாம் வீட்டு வாயிற்படிகளில் தூக்கத்தில் கிடந்தன. அவள் வீட்டுக்குச் சந்துபொந்து என்று சுற்றவேண்டி இருந்தது. 'லெஃப்ட், ரைட் கட் பண்ணுங்க’ என்று ஐந்தாறு முறை சொன்னாள் சுவேதா. ''அதோ அதுதான்... கம்பி கேட் போட்ட வீடு'' என்று அவள் சொன் னதும் மெதுவாக டிச்சு குழி ஓரமாக வண்டியை நிறுத்தி, சைடு ஸ்டேண்டு போட்டு நிறுத்தினேன். இறங்கி நின்ற சுவேதா, ''தேங்க்ஸ், இனி நீங்க புறப்படுங்க'' என்றாள் என்னிடம். அது எனக்கு நல்லதாகப்படவில்லை என்பதால் மறுத்து தலையை ஆட்டினேன். சுவேதா திரும்ப என்னி டம் எதுவும் பேசாமல், அவள் வீட்டு டிங்டாங்... டிங்டாங்கை அழுத்தினாள்.


சுவேதாவின் வீட்டில் யாருமே தூங்கவில்லைபோல் இருக்கிறது. எப்படித் தூங்குவார்கள்? கல்லூரி சென்ற பிள்ளையைக் காணோம் என்றால், பெரிய அமளிதுமளியாக அல்லவா இருந்திருக்கும். பெண்களைப் படிப்புக்கோ, வேலைக்கோ அனுப்பிவிட்டுப் பெற்றோர்கள் தங்கள் வயிற்றில் ஃபயரைக் கட்டிக்கொண்டுஅல்லவா காத்திருக்க வேண்டி இருக்கிறது. பெரிய சைஸ் நாய் ஒன்று படபடவென வாலை ஆட்டிக்கொண்டு ஓடிவந்தது. இவள் அண்ணன் போலும்... ஒருவன் முகப்பு கேட்டை நீக்க வந்தான். அம்மாவும் அப்பாவும் பின்னால் வந்தார்கள்.


நான் எதிர்பார்க்கவே இல்லை. கேட்டைத் திறந்தவன் தன் சக்தி அனைத்தையும் திரட்டி ஓடிவந்து என் கன்னத்தில் ரைய்ய்... என்று வீசி, சாலையில் என்னைத் தள்ளி ணங்ணங்கென மிதித்தான். ஒரு மிதி என் வயிற்றில் சரியாக விழவே சாலையில் நான் வாந்தி எடுத்தேன். ஜீரணசக்தி எனக்குக் குறைவு தான் போலும்.


''அண்ணா, அவரை மிதிக்காதே... அவரை மிதிச்சுக் கொன்னுடாதே! அவரு என்னை வீட்டுல விட்டுட்டுப் போக வந்தவரு'' என்று சுவேதா கத்திக்கொண்டே, அண்ணனின் கையைப் பிடித்து இழுத்தாள். அவன் அந்தக் கத்தலுக்காக என்னை மிதிப்பதை நிறுத்தவில்லை. மேலே போய்ச் சேர்ந்துவிடுவேனோ என்ற பயத்தில்தான் நிறுத்தினான்.


தீனிக்காரன்... நல்ல சாப்பாடு சாப்பிடுபவன்போல் உள்ளது. மிதி ஒவ்வொன்றும் என்னை மரண வாயிலுக்கு இழுத்துப்போய் இழுத்துப்போய் வந்தது. எழுந்து நேராக நின்று, தனுஷ்போல ஒற்றை விரலை நீட்டி என் பக்கத்துவீட்டு எல்.கே.ஜி. பாப்பா சொல்வதுபோல, 'கொன்டேபுடுவேன்’ என்று வசனம் பேசலாம் என்றால், எழவே முடியாமல் முனகிக்கிடந்தேன்.


சுவேதாவின் அப்பாவோ திடகாத்திரமான ஆள். மகளின் கன்னத்தைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டவர்போல சரமாரியாக வீசிக்கொண்டிருந்தார். அவருக்குச் சரியாக ஒரு கெட்டவார்த்தைகூட உச்சரிக்கத் தெரியவில்லை. ஓடுகாலி, கழுதை என்று திட்டுவதை விட்டுவிட்டு, 'ஓடறியாடி பெண்ணே’ என்று உளறிக்கொண்டிருந்தார். நல்லவேளை அவரிடம் நான் மிதிபடவில்லை.


 சட்னியாகி இருப்பேன். நான் கும்பிடும் திண்டல் முருகன் என்னைக் கைவிடவில்லை. சுவேதா நடந்த விஷயங்களை எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் அவர்கள் கேட்பார்கள் இல்லை.


சுவேதாவின் புஷ்டியான அம்மா தன் மகள் சோரம் போய்விட்டதால், சுவரில் தலையை முட்டிக்கொண்டு அழுதது. இவளின் அண்ணன்காரன் ஓடிப்போய் அம்மாவை இழுத்துக் கட்டிக்கொண்டு அழுதான். எனக்குத் தண்ணீர் தருவார் யாரும் இல்லை. டி.வி-யில் தினமும் என் அம்மா பார்க்கும் நாடகக் காட்சிபோல் ஆகிவிட்டது.


 ''நீங்க வளர்த்த பொண்ணு, நான் சொல்றதை நம்பவே மாட்டீங்களாப்பா!'' என்றெல்லாம் அழுதபடி சுவேதா கெஞ்சிக் கேட்டுக்கொண்டிருந்தாள். பக்கத்து வீட்டு விளக்குகள் எல்லாம் எரியத் தொடங்கின. அவர்கள் சுவேதாவை ஒதுக்கிவிட்டு கேட்டைப் படீர் எனச் சாத்திவிட்டு வீட்டினுள் போய்விட்டார்கள்.



சுவேதா செய்வதறியாது கீழே கிடந்த என்னிடம் நெருங்கி கை நீட்டினாள். அவள் கையைப் பிடித்துக்கொண்டு எழுந்து நின்றேன். என் உதடு கிழிந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. சுவேதா துப்பட்டாவால் அதைத் துடைத்தபடி, ''ஸாரிங்க!'' என்றாள்.


புறப்பட்ட இடமான என் வீட்டுக்கே நாங்கள் வந்து விட்டோம். வீட்டினுள் விளக்கொளி தெரிந்தது. சுரேந்திரனின் சத்தம் கேட்டபடி இருந்தது. என் வண்டி வந்து வாசலில் ஓய்ந்த சத்தம் கேட்டு வெளியே வந்தவன் எங்கள் இருவரையும் பார்த்து வெறி வந்தவன்போல அங்கும் இங்கும் எதையோ தேடி ஓடினான். கண்ணுக்குத் தென்பட்ட பெரிய கல் ஒன்றை இரு கைகளாலும் தூக்கிக்கொண்டு எங்களைப் பார்த்து வந்தான். எனக்கு நாளிதழ் தலைப்புச் செய்தி கண்களுக்கே தெரிந்தது... 'இருபத்தேழு வயது வாலிபனை நண்பனே கல்லால் தாக்கிக் கொடூரம். இருவரும் ஒரே பெண்ணைக் காதலித்ததால் நிகழ்ந்த கொலை!’


சுரேந்திரன் வெறிபிடித்த மிருகம்போல் வரவே, சுவேதா என்னைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, எனக்கு அரணாக முன்னால் நின்றாள். சுரேந்திரன் கையில் இருந்த கல்லைக் கீழே நழுவவிட்டான். அந்த நொடியில் இருந்து சுவேதா எனக்கானவள் என்று முடிவுசெய்துவிட்டேன். பின்னாளில்  சுவேதா என்னிடம் சொன்னாள். அவள் வீட்டு வாச லில் என் உதட்டில் இருந்த ரத்தத்தைத் துடைத்தபோதே, எனக்கானவன் என்று முடிவுசெய்துவிட்டாளாம். எப்பவுமே நான் கொஞ்சம் லேட் பிக்அப்தான்!


நன்றி - விகடன்