Thursday, April 18, 2013

பூவே பூச்சூடவா நதியா எக்ஸ்க்ளூசிவ் பேட்டி! @ கல்கி

 

நம்பிக்கைப் பூவே நதியா!

எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!

பூவே பூச்சூடவாவில் பார்த்த அதேசுந்தரிசற்றும் மெருகு குறையாமல் சுற்றளவும் ஏறாமல் அதே அழகுடன் இருப்பது படு ஆச்சரியம்! மும்பையில் தம் கணவர் ஷிரீஷ் கோட்போலே, தம் மகள்கள் சனம் மற்றும் ஜனாவோடு ஒரு மாலை பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த நதியாவை அவரது செல்()பேசியில் தொடர்பு கொண்டோம். அப்போது கிடைத்தமின்னல் பதில்கள்...
.கே! எல்லோருமே உங்கக்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படற ஒரு கேள்வி தான் இது. அது எப்படி அதே ட்ரிம் அன்ட் ஸ்லிம்மை மெயின்டேன் பண்ணிக்கிட்டு இருக்கீங்க?
(ஜோரான சிரிப்பைத் தொடர்ந்து வருகிறது பதில்) அதுக்குக் காரணம் என்னோட ஜீன்ஸ் தாங்க. Jeans இல்ல genes. எங்க அம்மா இந்த வயசுலகூட பார்க்க ரொம்ப இளமையா தெரிவாங்க."
உங்க ஜீன்ஸுக்கு ஒருஜே ஜே’. தினமும் ஜிம்முக்குப் போய்மாங்கு மாங்குன்னு உடற்பயிற்சி செய்யறது. நோ சர்க்கரை, நோ நெய், நோ சாதம்னு ஏதாவது...?
சொன்னா நம்ப மாட்டீங்க. தினமும் லஞ்ச் சாப்பிட்டு முடிச்ச உடனேயே டார்க் சாக்லெட் சாப்பிடுவேன். டின்னர் முடிச்சப்பறமும் டார்க் சாக்லெட் கட்டாயம் சாப்பிடுவேன். என்னோட வீக்னஸே சாக்லெட்தான். ஜூஸ் சாப்பிடுவது மட்டுமேதான் டயட்டிங் அப்படீன்னு கிடையாது. எதைச் சாப்பிட்டாலும் கொஞ்சம் குறைவா சாப்பிடணும். அவ்வளவுதான். தினம் 30 நிமிஷங்களாவது என் வீட்டிலேயே உடற்பயிற்சி கட்டாயம் செய்வேன். வாக்கிங் போவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஜிம்முக்கு போனாதான் ஜம்முன்னு இருப்போம், அப்படின்னு எல்லாம் கிடையாது. நம்ம உடம்பை நாமே புரிஞ்சு ஓரளவு பராமரிச்சாலே போதும். எல்லாருமே என்னிக்குமே ஜம் ஜம்ன்னு இருக்கலாம்."

நீங்க சமைப்பீங்களா? உங்க ஃபேவரைட் உணவு எது?
நான் நல்லகுக்குங்க! வீட்டுல இருந்தா, முக்கால்வாசி நான்தான் சமைப்பேன். நாங்க நிறைய வெளிநாடுகள்ல இருந்தவங்க. அதனால, மெக்சிகன், சைனீஸ் உணவு வகைகளில் எனக்கு நாட்டம் உண்டு. என் கணவர் சுத்த சைவம். மஹராஷ்ட்ரிய உணவுகளைப் பார்த்துப் பார்த்து சமைப்பேன். கேரள பாணியில் அசைவ உணவுகளையும் சமைப்பேன்."
சூப்பரா தமிழ் பேசறீங்களே. நீங்க நடிக்கிற படங்கள்ல உங்கச் சொந்தக் குரலிலேயே பேசலாமே?
எனக்கும் சொந்தக் குரலில் தமிழ்ல பேசி நடிக்கணும்னு ஆசைதான். ஆனா, இன்னி வரைக்கும், ஒரு பத்து பேர் முன்னாடி என்னைத் தமிழ்ல பேசுங்கன்னு சொன்னா நான் ரொம்ப நெர்வஸ் ஆயிடுவேன். தமிழ்நாட்ல இருக்கும் பொழுது தமிழ் வரும். திரும்ப இங்க மும்பை வந்தாச்சுன்னா தமிழ் ஸ்விட்ச் ஆஃப் ஆயிடும். இங்க மராத்தி, ஹிந்தின்னுதானே காதுல விழுது?"
நாட்டியப் பேரொளி நடிகை பத்மினிகூட முதல் படம் நடிச்சது பற்றி...?

நான் மும்பையில் பிறந்து வளர்ந்த பொண்ணு. எங்க வீட்ல என்னோட பெற்றோர்கள் மலையாளத்துலதான் பேசுவாங்க. தமிழ், எனக்கு அப்போ தெரியாது. அப்போல்லாம் ஹிந்திப்படம்தான் பார்ப்பேன். எப்பவாவது தியேட்டரில் மலையாள படம் போட்டா, அப்போ போய் பார்ப்பேன். அவ்வளவுதான். தமிழ்ப்படத்தை அவ்வளவா நான் பார்த்தது கிடையாது.
பத்மினி அம்மா நடிச்ச ஹிந்திப் படம்தான் பார்த்திருக்கேன். பத்மினி அம்மா ரொம்ப ரொம்ப பொறுமைசாலி! தான் ஒரு பெரிய ஆர்டிஸ்ட்ங்கற பந்தாவே இல்லாம பழகினாங்க. நான் எவ்வளவோ டேக் எடுத்திருக்கேன். ஆனா கொஞ்சம்கூட சலிச்சுக்கலை. அந்தப் படத்துக்காக எனக்குத் தமிழ் டீச்சர் ஒருத்தங்க தமிழ் கத்துக் கொடுத்தாங்க."
நடிகர் திலகத்தோடஅன்புள்ள அப்பாவில் நடிச்சீங்களே அது?

அவர் ஒரு பர்ஃபெக்ஷனிஸ்ட்! எது செஞ்சாலும் அதை சரியா செய்யணும்னு நினைப்பார். அவரோட நான் நடிக்கும்போது எனக்கு 19, 20 வயதுதான் இருக்கும். எனக்கு அவரைப் பார்த்தாலே ஒரே உதறலா இருக்கும். ஆனா, ஃபர்ஸ்ட் டேக்லியே சரியா நான் பண்ணினதைப் பார்த்து ரொம்பவே பாராட்டி எனக்கு ஆசி கூறினார். நான் பேசிய தமிழைக் கேட்டு கிண்டல் பண்ணுவார். சினிமாவை சீரியஸாக நான் எடுத்து கொள்ள ஆரம்பிச்சதே சிவாஜி அப்பாவுடன் நடிச்ச பிறகுதான்."
நீங்க ஏன் தமிழ் டீ.வி சீரியல்களில் நடிப்பதில்லை? தமிழ் சினிமாவும் ரொம்ப செலக்டிவ்வாதான் பண்றீங்க? என்ன காரணம்?
தமிழ் சீரியல்கள் செய்ய எனக்கு முதல்ல நேரம் இல்லீங்க. நான் இருப்பது மும்பைல. என்னோட முதல் ப்ரையாரிட்டி என்னோட அழகான குடும்பம்தான். பாருங்க, என் பெரிய பொண்ணு பத்தாவது படிக்கறா. அவளோட படிப்பை நான் பார்க்கணும். சீரியல்களில் திரும்பத் திரும்ப பழைய கதைகளையே சொல்லிக்கிட்டு இருக்காங்க. சினிமாவில் எனக்குப் பிடிச்ச மாதிரி, வித்தியாசமான கேரக்டர் வந்தா நான் நடிப்பேன். நடிக்கணும்னு சும்மாவே ஏகப்பட்ட படங்கள் ஒத்துக்கிட்டு பண்ற பழக்கம் எனக்கு இல்ல"

மும்பைல இருக்குற ஹிந்தி மக்கள் உங்களை அடையாளம் கண்டுபிடிப்பாங்களா?
இல்லை! இங்க இருக்குற தமிழர்கள் மற்றும் மலையாளிகள் தான் என்னை அடையாளம் கண்டு குதூகலிப்பாங்க!
சினிமா பெயர்தான் நதியா. இங்க இருக்கறவங்களுக்கு நான் ஜரீனா இல்லன்னா, மிஸஸ் கோட்போலே. என்னை இங்க யாருமே சினிமா நடிகையா பார்ப்பது கிடையாது. ஒரு முழு நேர அம்மாவாகவும், ஹவுஸ் வொய்ஃபாகவும்தான் நான் மும்பையில் இருக்கேன். அப்பப்போ என் மன நிறைவுக்காகவும், என் ரசிக - ரசிகைகளின் சந்தோஷத்துக்காகவும், சினிமா, விளம்பரப்படங்கள்ல நடிச்சுக்கிட்டு இருக்கேன்..."
மகளிர் தின மெஸேஜ் ஒண்ணு...?
எப்பவும் டல்லடிக்காதீங்க. உங்களை நீங்களே நம்புங்க! எதிலும் நம்பிக்கை வெச்சா ஜெயிக்கலாம்!" என்கிறார் இனிமை, இளமை மாறாத நைஸ் நதியா!


 
 நன்றி - கல்கி

பாஸ்வேர்டு - நீயா நானா கோபிநாத்

பாஸ்வேர்டு
புதிய தொடர் - 1
கோபிநாத், படம்: கே.ராஜசேகரன்
ஏழு கடல் தாண்டிப் போனா ஒரு பாட்டியம்மா இருக்கும். அதுகிட்ட கேட்டா புதையல் எங்க இருக்கும்னு சொல்லிரும் - இப்படி பாஸ்வேர்டுக்கான பாரம்பரியம் ரொம்பப் பழையதுதான். இப்போதைய காலகட்டத்தில் பாஸ்வேர்டுகளுக்குப் பஞ்சம் இல்லை. இ மெயில், ஃபேஸ்புக் துவங்கி வங்கிக் கணக்கு வரை சகல தளங்களிலும் பாஸ்வேர்டு இல்லாமல் எதுவும் நடக்காது. எல்லா பாஸ்வேர்டுகளையும் ஒரு கம்ப்யூட்டர்ல சேவ் பண்ணிட்டு, அதைத் திறக்க ஒரு பாஸ்வேர்டு வெச்சுக்கிட்டு அதையும் மறக்காம இருக்க மனசுக்குள்ள ஒரு பாஸ்வேர்டு ஒளிச்சுவைக்க வேண்டியிருக்கு. 


 
சக மனிதனின் சங்கடத்தை அவன் மொழியில் புரிந்துகொள்ள, இயலாத மனிதனின் தோல்விகளைப் புரிந்துகொள்ள, யாரோ ஒருவருக்கு வரும் அறச் சீற்றத்தின் நியாயத்தை நம்ப... நம் எல்லாருக்கும் ஒரு பாஸ்வேர்டு தேவைப்படுது. ஆனா, அதுல ஒரு நல்ல விஷயம், இந்த பாஸ்வேர்டை ஒளிச்சுவைக்கத் தேவையில்லை. அதை எல்லாருக்கும் தாராளமாச் சொல்லலாம். இப்ப நான் சொல்லப்போற மாதிரி... 


ரண்டு வருஷம் இருக்கும்... 'அய்யோ அங்க சீட் கிடைக்கவே கிடைக்காதுனு சென்னையில் பெருமையா சொல்லப்படும் ஒரு பள்ளிக்கூடம் அது. என் நண்பனின் மகளுக்கு அங்கே யு.கே.ஜி. அட்மிஷன் வாங்க நானும் போயிருந்தேன். அந்த அட்மிஷனுக்காக என் நண்பனின் மகளைவிட நண்பன் நிறையப் படித்திருந்தான்.


'நம்மளை எதுக்கு இங்கே கூட்டிட்டு வந்திருக்கானுங்க?’ங்கிற தோரணையிலேயே இருந்தாள் நண்பனின் மகள். பள்ளிக்கூடத்தின் பிரின்சிபால் 'கடலோரக் கவிதைகள்’ ஜெனிஃபர் டீச்சர்போலவே இருந்தார். அந்தப் பரவசத்தில் அவரைப் பார்த்து நான் புன்னகைக்க... அந்த ஜெனிஃபர் டீச்சர் முகத்தைப் படக்கெனத் திருப்பிக்கொண்டார். 'இவனைக் கூட்டி வந்ததுல ஒரு புண்ணியமும் இல்லை!’ என்று என் நண்பனுக்கு அப்போதே தெளிவாகப் புரிந்தது.  


நாங்கள் எல்லாரும் நின்றுகொண்டிருக்க நண்பனின் மகளிடம் பிரின்சிபால் பேசினார். எல்லாமே இங்கிலீஷ்தான். நான் என் வாழ்க்கை யில் பார்த்த அட்டகாசமான இன்டர்வியூ அதுதான்.


''ம்... உங்க பேரு என்ன?''

''சரித்ரா...''

''குட்... உனக்குத் தெரிஞ்சது ஏதாவது சொல்லு பார்க்கலாம்!''

''எனக்கு நிறையத் தெரியும். உங்களுக்கு என்ன வேணும்..?''

சுத்தம்... அட்மிஷன் கிடைக்காமல் இருக்க இதைவிடச் சிறந்த பதில் இருக்க முடியாது. சரித்ராவின் அம்மா லேசாக எடுத்துக் கொடுக்கப் பார்த்தார். ஆனால், ஜெனிஃபர் தடுத்துவிட்டார்.


''நீ சொல்லு... ஏதாவது ரைம்ஸ், ஸ்டோரி உனக்குத் தெரிஞ்சத சொல்லு!''

சரித்ரா சளைக்கவில்லை.

''ரைம்ஸா, ஸ்டோரியா... என்ன சொல்லணும்?''

ரெண்டாவது விக்கெட்டும் அவுட். ஜெனிஃபர் டீச்சர் முகத்தில் கொஞ்சம் கோபம் தெரிந்தது.

''சரி... ஏதாவது ஸ்டோரி சொல்லு!''

''நான் படிச்ச ஸ்டோரிய சொல்லவா? இல்ல, நான் எழுதுன ஸ்டோரிய சொல்லவா..?''


''ஓ... நீ ஸ்டோரிலாம்கூட எழுதுவியா?''

''ஏன் எழுதக் கூடாதா?''

இப்போது எனக்கும் தூக்கிவாரிப்போட்டது. நண்பனிடம் அடிக் குரலில், 'நம்ம தலைமுறைக்கே இந்த ஸ்கூல்ல சீட் குடுக்க மாட்டானுக’ என்றேன். ஆனால், ஜெனிஃபர் டீச்சருக்கு ஏதோ ஓர் ஆர்வம் வந்துவிட்டது. அவர் தன் வாழ்நாளில் அப்படி ஒரு கதையைக் கேட்டிருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். நானும்தான்!


சரித்ரா கதை சொல்லத் தொடங்கினாள்... ''ராவணன், சீதையை ஸ்ரீலங்காவுக்குக் கடத்திட்டுப் போயிட்டாரு!''


ஓப்பனிங்கைக் கேட்டவுடன் ஜெனிஃபர் டீச்சருக்கு ஆர்வம் குறைந்துவிட்டது. இருந்தாலும், ''ம் சொல்லு!'' என்றார்.


''சீதையைக் காப்பாத்துறதுக்காக ராமன், ஹனுமன்கிட்ட ஹெல்ப் கேட்டாரு. சரின்னு ஹனுமனும் சீதையைக் காப்பாத்துறேன்னு சொல்லிட்டாரு...''


''அப்புறம்...''

''இப்போ ஹனுமன் அவரோட ஃப்ரெண்ட் ஸ்பைடர்மேனுக்கு போன் போட்டாரு...'' - இந்த ட்விஸ்ட்டை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.


''எதுக்கு?''

''ஏன்னா... இந்தியாவுக்கும் ஸ்ரீலங்காவுக்கும் இடையில நிறைய மலைகள் இருக்கு. ஸ்பைடர் மேன் இருந்தா டக்டக்னு கயிறு கட்டி வேகமாப் போலாம்ல!''


''ஹனுமன்தான் பறப்பாரே?''- ஆர்வ மிகுதியில் கதையோடு ஒன்றி ஜெனிஃபர் டீச்சர் கேள்விகள் கேட்கத் துவங்கினார்.


''பறப்பாரு... ஆனா, அவரு கையில சஞ்சீவி மலை இருக்கிறதால அவரால வேகமாப் பறக்க முடியாது!'' நான் சின்ன வயதில் ஏ.பி.டி. பார்சல் சர்வீஸ் லாரியில் பார்த்த ஹனுமன் படத்தை ஞாபகப்படுத்திப் பார்த்துக்கொண்டேன்.


இப்போது ஜெனிஃபர் டீச்சர் அமைதியாக இருந்தார். சின்ன மௌனத்துக்குப் பிறகு, 'சொல்லட்டா... வேணாமா?’ என்று கேட்டாள் சரித்ரா.


''சொல்லு... சொல்லு!''-டீச்சருக்கு ஆர்வம் அதிகமானது.

''ஹனுமனும் ஸ்பைடர்மேனும் வேகமா ஸ்ரீலங்கா போயி ராவணன்கூட சண்டை போட்டு, சீதாவைக் காப்பாத்திட்டாங்க. சீதை அவங்க ரெண்டு பேருக்கும் தேங்க்ஸ் சொன்னாங்க!''


''ஏன்?''


''ஹெல்ப் பண்ணவங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்தானே?''

''ஓ.கே... ஓ.கே... அப்புறம்...''

''அப்புறம்... ஹனுமன் போன் பண்ணி ஹல்க்கைக் கூப்பிட்டாரு!''

எல்லாரும் அவளை ஒரு கேள்வியோடு பார்த்தோம். எங்கள் கேள்வியை அவளும் உணர்ந்திருக்க வேண்டும்.


''வரும்போது ரெண்டு பேரும் ஈஸியா வந்துட்டாங்க. இப்போ சீதையைத் தூக்கிட்டுப் போக ஆள் வேணும்ல!''


அப்படிப் போடு... என்ன லாஜிக்! ஆனால், ஜெனிஃபர் டீச்சர் விடவில்லை.


''ஹனுமனே சீதையைத் தூக்கிட்டு வரலாமே?''- சரித்ராவை மடக்கிவிட்ட திருப்தி டீச்சரிடம் தெரிந்தது.

''எப்படி முடியும்? அவரோட ஒரு கையில மலை இருக்கு. இன்னொரு கையில ஸ்பைடர்மேன் கயிறைப் பிடிக்கணும்ல...'' - டீச்சர் சிரித்துவிட்டார். ''மூணு பேரும் இந்தியா கிளம்புறப்போ, என் ஃப்ரெண்ட் அக்ஷயை மீட் பண்றாங்க. சீதா அவன்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தாங்க!''  


''உன் ஃப்ரெண்ட் அக்ஷய் அங்க எப்படி வந்தான்?''

''இது நான் எழுதுன கதை. யார் வேணாலும் வருவாங்க!'' ஜெனிஃபர் கோபப்படவில்லை.


 அவர் அடுத்த ட்விஸ்ட்டுக்காகக் காத்திருந்தார்.

''அப்புறம் எல்லாரும் இந்தியா வந்துட்டாங்க. சென்னைக்கு வந்து வேளச்சேரி பஸ் ஸ்டாண்டு கிட்ட நின்னாங்க!''

ஜெனிஃபர் டீச்சர் ஏதோ கேட்க வந்து, சட்டென அமைதியாகிவிட்டார். நானும் ஏதாவது கேட்கணுமே என்பதற்காக இப்போது நான் கேள்வி கேட்டேன்...


''ஏம்மா பஸ் ஸ்டாண்டுகிட்ட நின்னுட்டாங்க?''


''வழி மறந்துபோச்சு. அதான் நின்னுட்டாங்க. உடனே ஹல்க்குக்கு ஒரு ஐடியா வந்துச்சு. அவர் டோராவுக்கு போன் பண்ணார்!''


டோரா என்பது வழிகாட்டும் ஒரு கதாபாத்திரம் என்று அன்றைக்குத்தான் எனக்குத் தெரியும்.


''டோரா வந்ததும் எல்லாரும் சேர்ந்து சீதாவைக் கொண்டுபோய் வேளச்சேரி வீனஸ் காலனில விட்டுட்டாங்க. அவ்ளோதான்..!'' - சின்னச் சிரிப்புடன் சரித்ரா கதையை முடித்தாள்.


மிகவும் அமைதியாக ஜெனிஃபர் டீச்சர் கேட்டார். ''ஏம்மா சீதையை வீனஸ் காலனில கொண்டுபோய் விட்டீங்க?''


''ஏன்னா... அங்கேதான் என் வீடு இருக்கு. நான்தான் சீதா!'' என்றாள். எனக்கு மெய்சிலிர்த் துப்போனது. ஜெனிஃபர் டீச்சர் எழுந்து வந்து அவளைக் கட்டி அணைத்துக்கொண்டார். அவளுக்கு யு.கே.ஜி. அட்மிஷன் கொடுத்தவர், கூடவே சரித்ராவுக்கு ஒரு டோரா பொம்மையும் கொடுத்தார்.


சரித்ராவை என் பைக்கில் வைத்துக்கொண்டு நிறைய முறை நான் ரவுண்டு போயிருக்கிறேன். அவள் எனக்கும் நிறையக் கதைகள் சொல்லியிருக்கிறாள். நான்தான் கவனித்துக் கேட்டதே இல்லை.


தான் கேட்ட, பார்த்த, கவனித்த, கடந்துபோன, மங்கலாகப் புரிந்துகொண்ட ஏதேதோ விஷயங்களைக் கோத்து ஒரு நவீன ராமாயணத்தை அவள் எப்போது எழுதினாள் என்பது யாருக்கும் தெரியாது. அவள் எழுதியதாகச் சொல்வதும் அவள் யோசித்துவைத்திருந்த அந்தக் கற்பனையைத்தான்.


குழந்தைகள் அற்புதமான கற்பனை சக்திகொண்டவர்கள். அதிலிருந்து பல்வேறு கதைகளும், ஆச்சர்யங்களும், நம்ப முடியாத உவமை களும், சிலிர்க்கவைக்கிற கவித்துவமும் அருவிபோலக் கொட்டுகிறது.ஆனால், நம்முடைய பரீட்சை அமைப்புகள் ராமாயணத்தை எழுதியது யார் என்ற கேள்விக்குப் பதில் சொன்னால், மார்க் போடுகிற அநியாயத்தைச் செய்கின்றன.


பொறாமை, கோபம், வஞ்சம், துரோகம், குரோதம் என்ற பெரிய மனிதர்களின் குணங்கள் எதுவும் இல்லாமல்... அவர்கள் மனமும் மூளையும் பரிசுத்தமான கற்பனை களைக் கொட்டி விளையாடுகின்றன. ஆனால், வட்டம் எது? சதுரம் எது என்று சரியாகச் சொல்லத் தெரிந்த பிள்ளைக்கே, இந்தச் சமுதாயம் 'சபாஷ்’ போடுகிறது.


ஒரு வடிவமைக்கப்பட்ட மோல்டுக்குள் அவர் களைக் கொண்டுவருவதற்கு நாம் எடுக்கும் பகீரத முயற்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்குள் இருக்கும் கற்பனை சக்தியைக் களவாடித் தின்கின்றன.


என் இரண்டு வயது மகள் வானத்தைக் காட்டி, 'அப்பா... சாமி பாருப்பா!’ என்கிறாள். மேகக் கூட்டங்கள் கூடிக் கலைந்து ஏதேதோ உருவங்களை உருவாக்கிக்கொண்டு இருக்கின்றன. அதற்குள் எங்கோ ஒரு சாமி உருவம் அவள் கண்ணுக்குத் தென்பட்டிருக்கிறது.


அவள் கையைப் பிடித்து இழுத்து வந்து 350 ரூபாய்க்கு வாங்கின சாமி போட்டாவைக் காட்டி, 'இதுதான் சாமி!’ என்று சொல்லுகிற அப்பனுக்கு, வானத்தில் இருக்கும் மேகம் மட்டுமே தெரிகிறது. பச்சை, மஞ்சள், சிவப்பு க்ரேயான்களில் எதை எதையோ கிறுக்கிவிட்டு, 'அப்பா... வா கும்கி யானை பாரு!’ என்று தன் ஓவியத்தை என்னிடம் காட்டுகிறாள். அதற்குள் எங்கோ அந்த கும்கி யானை இருக்கிறது, மேகக் கூட்டத்துக்குள் சாமி இருப்பதைப் போல!


குழந்தைகள் பொம்மைகளோடு பேசுகிறார்கள். தனது இட்லி விள்ளலைத் தன் அன்புக்குரிய 'பிங்கி’ பொம்மைக்குச் சாப்பிடக் கொடுத்து, அது எப்படியும் சாப்பிடும் என்ற நம்பிக்கையோடு அதனைக் கொஞ்சுகிறார்கள். குழந்தைகளின் மொழியும் அவர்களின் பரிசுத்தமான கற்பனை களும், இயற்கைக்கும் விலங்குகளுக்கும் அற்புத மாகப் புரிகின்றன.


எனக்கு செக்யூரிட்டியாகத் தெரிகிறவர், என் மகளுக்கு ஃப்ரெண்டாகத் தெரிகிறார். அவர் இடத்தைக் கடக்கும் போது எல்லாம் மூன்று மாதங்களுக்கு முன்பு விழுந்த தில் அடிபட்டுப்போன முட்டிக் காயத்தை அவரிடம் காட்டி ஆறுதல் கேட்கிறாள்.


லாரிக்குப் பின் வரைந்திருக்கும் திருஷ்டி பொம்மையை 'பிக் ஸ்மைலி’ என்கிறாள். அது 'பேய்’ என்று சொன்னால் 'டூப்பு’ என்கிறாள். 'ஜன்னலோர மரக்கிளையில் என்ன சத்தம்?’ என்று கேட்டால், யாரும் பதில் சொல்லாதபோது, ஒரு முறை குருவி என்றும் இன்னொரு நாளில் மயில் என்றும் விளக்கம் கொடுக்கிறாள். சாக்குப் பூச்சாண்டி ஜன்னலுக்குப் பின் நிற்பதாகவும் அவன் அப்பாவைப் பிடித்துக்கொண்டு செல்லப்போவதாகவும் எல்லாரையும் எச்சரிக்கிறாள்.


எனக்கு திருஷ்டி பொம்மை, பிங்கி பொம்மை இரண்டும் பொம்மையாகவே தெரிகிறது. அது அறிதல் உண்டாக்கும் கண்கட்டு. அவளுக்கு அது பலவிதமாகத் தெரிகிறது. அது கற்பனையின் அழகு. அதைக் காயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை.
பிரஸ்தாபம் செய்துகொள்ள ஏதுவான குழந்தைகளின் செயல்பாடுகளே நம்மை அதிகம் ஈர்க்கின்றன. அந்த மனநிலை குழந்தைகளின் கட்டற்ற கற்பனைகளுக்கு லாஜிக்கல் விளக்கம் கொடுக்க முயற்சிக்கின்றன. 'இது இதுதான்’ என்று அவர்களுக்கு விளங்கவைக்க நிறைய முயற்சிகள் செய்கிறோம். வேண்டியதில்லை!



கொஞ்ச காலமேனும் அவர்கள், அவர்களின் கற்பனை உலகில் விழட்டும், லயிக்கட்டும். நிலாவை ஆம்ஸ்ட்ராங்கோடு தொடர்புபடுத்துகிற அறிவு மூன்று வயதுப் பிள்ளைக்கு முக்கியம் இல்லை. நம்மால் சிந்திக்கவே முடியாத 300 கற்பனைகள் நிலாவைப் பற்றி அவர்களுக்கு உண்டு. அவர்களிடம் கதை கேட்கிற மனசு நமக்கு வாய்த்திருந்தால், அவர்களின் கற்பனை உலகமும் அதன் ஃபேண்டஸிகளும் நமக்கும்கூடக் கொஞ்சம் கிடைக்கும்.


எல்லாருக்கும் குழந்தையாகவே இருந்திருக்கக் கூடாதா என்று ஆசை இருக்கிறது. ஆனால், குழந்தைகளை ஏன் ரொம்ப சீக்கிரம் பெரியவர் கள் ஆக்கப் பார்க்கிறோம் என்று தெரிய வில்லை.


சரித்ரா சொன்னதுபோல, 'இது என் கதை... இதில் யார் வேண்டுமானாலும் வருவார்கள்’.


அது அவர்கள் உலகம். அங்கு அவர்கள் அவர்களாக வாழட்டும்!


- ஸ்டாண்ட் பை

வாசகர் கருத்து 

1. பாஸ் வோர்டு பெரும்பாலும் நம் குழந்தைத்தனத்தை ஒட்டியதே.

இங்கு கோபி நாத் விவரித்திருக்கும் குழந்தையின் கதை அவர் கற்பனை என்பதை லாஜிக் இடிக்கும் பெரும்பான்மை உரையாடல்கள் சொல்லுகின்றன.

ஒரு குழந்தையின் கதையில், நாடக விளக்கத்தில் ஒரு சிறிதும் லாஜிக் உதைக்காது என்பதுடன் நம் அனுபவத்திற்கு , அறிவிற்கு புலப்படாத லாஜிக்குகள் இயல்பாய், தெள்ளிய நீரோடையாய் வந்து விழும் என்பது யாவரும் அறிந்தது.

அந்த வகையில் குழந்தைகள் அல்ல, பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.

குழந்தைத்தனம் பாதுகாக்கப்பட வேண்டியது.

முதிர்வு குழந்தைதனத்தில் இயல்பு.

பெருங்குணம் குழந்தைத்தனத்தின் இயல்பு.எனவே அறிவுதவி, பிரில்லியன்ஸ் குழந்தைத்தனத்தின் இயல்பு.

அப்படியெனில் ஒரு தனி மனிதரின் ஒரிஜினாலிடி வெளிப்படுத்தும் உள்ளது, உள்ளபடி, வெள்ளந்தித்தனம் அப்பாவித்தனமா, இல்லை, இன்னோவேஷன்.

அறிவு வேண்டாம்.அறிவுதவி வேண்டும்.

இந்த கதையில் கோபினாத்தின் அறிவு வெளிப்படுத்தும் குழந்தையின் இயல்பு ஏட்டிக்கு போட்டி.

இயல்பு நிலையில் குழந்தைகள் உட்படுத்தும் திறன் கொண்டவை.குழந்தைகளை எல்லோரும் விரும்பும் காரணமும் அதுவே.

இறக்கும் வரை ஒரு தனி மனிதன் தன குழந்தைத்தனத்தை பேணும் நிலையில் இலகு செயல்நிலையில் அவனால் சிகரம் தொடமுடியும்.தனக்கு பிடித்த நிறம் , மணம், குணம், சூழல், பண்பு, பகிரும் முறை, இலகு உணர்வு இவையெல்லாம் தன் வட்டத்தில் இயல்பாய் பகிர்ந்து விடும் வெளிப்படைதன்மை, தக்க தருணத்தில் நம் நினைவை ஏற்படுத்தி நமக்காக அவற்றை செய்ய சொல்லும். நட்பும், உறவும் தானே அமையும்.

ஆளுமை என ஒரு எல்லை ஏற்படுத்தி கோபம், சிடு சிடுப்பு , எரிச்சல், முறைப்பு என கடுமையான பகிர்வு ஏற்படுத்துபவர் கடைசியில் உணருவது வெற்றிடமே.அவையல்ல பெர்சனாலிடி.

செயலின் நோக்கம் என்னவோ அதை உள்ளது உள்ளபடி வெளிப்படுத்தும் இயல்பு நிச்சய வெற்றி தரும்.முகமூடி எங்கும் அவசியமில்லை.சாக்குகளும் எங்கும் அவசியமில்லை .

மழையில் நனைவது ஆசையெனில், வேண்டிய மட்டும் நனையலாம்.சுற்றுபுறம் குறித்த கவனம் அவசியமில்லை.

நேரம் , காலம், பொருள், ஏவல், தகவலறிவு போன்ற மாயைகளில் சிக்காமல் அந்தந்த நொடியில் வாழும் சுகமே தனி.நம்புங்கள்.இழப்பு என்பது அந்நிலையில் நிச்சயமில்லை.மிகு வேகம் இயல்பாகும்.

அறிவுதவி தளமாகி விட்டால் சேமிப்பு, பாதுகாப்பு, எச்சரிக்கை உணர்வு என்ற அறிவு குணங்கள் அவசியமில்லை.வேண்டியது, வேண்டும் போது தானே கிடைக்கும்.தேங்காது செல்லும் தென்றல் தாங்கும் சிறகாய் வாழ்க்கை மாறும்.

ஒரு சூழல் ஒரு பதவி, ஒரு சாதனம் தனக்கு வேண்டுமென்று திட்டம் தீட்டி ஆதரவு திரட்டி, தந்திரம் செய்வதில் தோல்வியும் வரலாம்.ஆனால் தான் ஏன் விரும்புகிறோம், தன்னால் சிறப்பு எவ்வாறு செய்ய முடியும், தன் நிலைப்பாட்டில் இந்த மாற்றம் என்ன உயர்வு தரும் என தெளிவாய் சம்பந்தப்பட்டவரிடம் பகிர்நது விடும் பாங்கு நிச்சய வெற்றி.திருநெல்வேலிக்கே அல்வாவா என கேட்பதுண்டு.திருநெல்வேலியில்தான் அல்வா எடுபடும் என்பதும் உண்மைதானே.நேருக்கு நேர் பகிர்வதே நேர்மை .
குழந்தைத்தனம் பேணுவோம் .பெரியவர் என்னும் பொறுப்பு சுமை.குழந்தையின் பொறுப்பு இயல்பு.குழந்தை தனத்தோடு அணுகப்படும் எந்தவொரு மாமலையும் ஓர் கடுகே,

அவரவருக்கு பிடித்த சூழலை அமைத்துக் கொடுத்து விட்டால், பணி பகிர்வு சிறப்பாகும்.நீயா நானா நானும் தொடர்ந்து பார்ப்பதுண்டு.பல சமயங்களில் நிகழ்ச்சிக்கு இருக்கும் ஆதரவின் ஆதிக்கத்தில் பகிர்பவரை தன் கருத்தால் அடித்து நிறுத்தும் கோபி நாத்தின் அறிவு எனக்கு ஒப்புதலில்லாதது .இந்த தளத்தில் அறிவுதவி என்னும் களம் கண்டிருக்கிறார்.அவரது பிம்பம் , எழுத்து நடை ஒரு சிறிதும் இல்லாத இந்த களம் அவருக்கு சவால்.

வாழ்க.வளர்க.


2. ஒரு நாள் ஒருநாள்நான் க‌ணினியில் க‌வ‌ன‌ம் சித‌றிக்கிட‌ந்த‌ ச‌ம‌ய‌ம் என‌து நால‌ரை வ‌ய‌து ம‌க‌ன் மெல்ல‌ அருகில் வ‌ந்து நின்றான். அப்பொழுது ந‌ட‌ந்த‌ உரையாட‌லின் த‌மிழாக்க‌த்தை அப்ப‌டியே த‌ருகின்றேன்.

அப்பா...

என்ன‌? சொல்லு..

இந்த‌ உல‌க‌த்த‌ ப‌டைத்த‌து யார்?

விஞ்ஞ‌ன‌‌‌ப்பூர்வ‌மான‌ விள‌க்க‌ங்க‌ளைப்புரிய‌ அவ‌னுக்கு வ‌ய‌துபோதாதென்ற‌ எண்ண‌த்தில் நான் இறைவ‌னின் உத‌வியை நாடினேன்.

ப‌டைத்த‌து சாமிடா...

என‌து விள‌க்க‌த்தில் திருப்தியில்லாம‌ல் அறையின் க‌த‌வுவ‌ரை சென்ற‌வ‌ன் திரும்பிவ‌ந்து கேட்டான்

அப்ப‌டினா சாமிய‌ யாரு ப‌டைச்சா...?

பெரும்பாலான‌ இந்திய‌வ‌ம்சாவ‌ளி ஆசிறிய‌ர்க‌ளுக்கு வ‌டஅமெரிக்க‌ப்ப‌ள்ளிக‌ளில் குறிப்பாக‌இந்திய‌ப்பெற்றோர்க‌ளிட‌ம் ந‌ல்ல‌ வ‌ர‌வேற்புண்டு.கார‌ண‌ம் வீட்டுப்பாட‌ம் முத‌ல் அணைத்து விச‌ய‌ங்க‌ளிலும் இவ‌ர்க‌ளிட‌ம்கொஞ்ச‌ம் இந்திய‌ப்ப‌ள்ளிக‌ளின் வாச‌ணையிருக்கும்.அப்ப‌டியொருவ‌ர் என‌து ம‌க‌னின் வ‌குப்பாசிறியை. உட‌னே வ‌ந்து ச‌ந்திக்கும்ப‌டி ஒருநாள்ஒரு குறிப்பு அனுப்பியிருந்தார்.வ‌குப்பு நேர‌ங்க‌ளில் இவ‌ன் அதிக‌ம் பேசுவ‌தாக‌வும் கேள்வி, துணைக்கேள்வியென‌ தொட‌ர்ந்து எதாகிலும் கேட்டுக்கொண்டேயிருப்ப‌தாக‌வும் ஒரு நாள் கோப‌த்தில் த‌ண்ட‌னை த‌ரும் எண்ண‌த்தில் இவ‌னை மூலையில் போய் நிற்க‌ச்சொன்ன‌போது அசையாம‌ல் நின்ற‌தாக‌வும் ஏன் என‌க்கேட்ட‌போது "எந்த‌மூலையென்று நீங்க‌ள் சொல்ல‌வில்லையே" என்று கேட்கிறான் என்றார்.இவ‌னிட‌த்தில் எதை ஆத‌ரிப்ப‌து எதை வேண்டாமென‌ வில‌க்குவ‌து என‌ சுத்த‌மாக‌ப்புரிய‌வில்லையென்றார்.

புதிய‌ப‌ரிணாம‌வ‌ள‌ர்ச்சியில் சிறுவ‌ர்க‌ளின் ம‌ன‌நிலையிலிருந்து ஒரு புரித‌லுட‌ன் அவ‌ர்க‌ளை வ‌ள‌ர்ப்ப‌‌தென்ப‌து ஆசிறிய‌ர் பெற்றோர் இருவ‌ருக்குமே ச‌வாலான‌ விச‌ய‌ம்தான்

ரம்பா , ரம்பையின் காதல் - ஜட்ஜ் சந்துரு - என்ன சம்பந்தம்? விகடன் பேட்டி

விகடன் மேடை - சந்துரு பதில்கள்!
வாசகர் கேள்விகள்
படம்: கே.ராஜசேகரன்
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்படும் எந்தக் கமிஷனும், இதுவரைக்கும் பிரயோஜனமாக இந்தியாவில் எதுவுமே செய்தது இல்லையே... என்ன காரணம்?'' 

 
''கமிஷன் அறிக்கை என்பது காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கை (FIR) போன்றது என்று ஒரு சந்தர்ப்பத்தில் சஞ்சய்காந்தி குறிப்பிட்டார். கமிஷன் விசாரணை என்பது ஒரு கண் துடைப்பு நாடகம். ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு ஒரு பதவி நீட்டிப்பு. லிபரான் கமிஷன் 18 வருடங்கள் நடைபெற்றது நினைவில் இருக் கும். எல்லாப் பிரச்னைகளையும் அரசு கிடப்பில் போடுவது போன்றது, கமிஷன் விசாரணைக்கு அனுப்புவது. சுருக்கமாகச் சொல் வது என்றால், மக்கள் வரிப்பணம் பாழ்!''


கு.மணிமாலா, மயிலாடுதுறை. 


''நீதிபதியாகப் பணியாற்றிய காலகட்டத்தில் அதிகாரவர்க்கத்திடம் இருந்து அழுத்தங்களையும் மிரட்டல்களையும் எதிர்கொண்ட சந்தர்ப்பம் அமைந்திருக்கிறதா? அப்படிஇருந் தால், அதை எப்படிச் சமாளித்தீர்கள்?'' 


 ''காலஞ்சென்ற நீதிபதி எம்.சீனிவாசன் ஒரு அரசியல்வாதியின் வியாபார சொத்து வழக்கில் அவருக்கு எதிராகத் தீர்ப்பு அளித்த போது, நீதிபதியின் சொந்த வீட்டுக்கு மின் சாரத் தடை ஏற்பட்டது. குடிநீர்வழங்குதல் நிறுத்தப்பட்டது. இரண்டு பலமான அரசியல்வாதிகளின் வழக்கில் அவர் தீர்ப்பு அளிக்கும்போது அவருடைய தீர்ப்பில் இவ்வாறுகுறிப்பிட்டார். 'மலர் செண்டுகளையும் மலைப் பிஞ்சுகளையும் ஒரே மனநிலையில் எதிர்கொள்ளும் மனப் பக்குவம் எமக்குள்ளது!’


அரசியல்வாதிகளுக்குத் தீர்ப்பு சாதகமானால் அதைக் கொண்டாடுவதும், பாதகமானால் வார்த்தைகளில் நஞ்சை உமிழ்வதும் சகஜம். தீர்ப்பினால் பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் அடிப்பொடிகள், அல்லக்கைகளிடம் இருந்து மிரட்டல், உருட்டல், கடுமையான வார்த்தைகளில் வசைபாடுதல் தபால் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் வருவது இயல்பே. அதை எல்லாம் பார்த்து அசந்துவிட்டேன் என்றால், நான் பதவியை ஏற்றுக்கொள்ளும்போது எடுத்துக்கொண்ட உறுதிமொழி என்னாவது? அம்மாவா னாலும்... அய்யாவானாலும் நமது செயல்பாடு என்றைக்கும் மாறாது என்று இருந்துவிட்டால் எந்தக் கொம்பனும் நம்மை அசைக்க முடியாது!''


ம.ஞானம், செய்யாறு. 


''தமிழ் சினிமா பார்ப்பது உண்டா? அப்படி எனில் மனம் கவர்ந்த இயக்குநர், நடிகை, நடிகையர் யார்?'' 


''தமிழனாக இருந்து தமிழ்ப் படம் பார்க்காவிட்டால் எப்படி? எனது தீர்ப்புகளிலேயே நான் சினிமா பாடல் ஒன்றை மேற்கோள் காட்டியிருக்கிறேன். சாதி அடிப்படையில் சுடுகாடு/இடுகாடு இருக்கக் கூடாது என்று எழுதிய தீர்ப்பில், 'ரம்பையின் காதல்’ படத்தில் வரும் 'சமரசம் காணா உலகிலே...’ என்ற பாட்டு முழுவதையும் குறிப்பிட்டு, 'சினிமா பாடல்களும் இன்று மக்கள் இலக்கியமாக மாறிவிட்டது. அதைக் குறிப்பிடுவதில் தவறில்லை’ என்று கூறினேன். புளூடூத்/செல்போன் வைத்து மாணவிகள் காப்பி அடித்த வழக்கில், 'வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படக் காட்சியை ஒப்பிட்டு, 'சினிமாவுக்கான கரு சமூகத்தில் இருக்கிறதா? அல்லது சமூகமே சினிமாவைக் காப்பியடிக்கிறதா?’ என்ற கேள்வியை எழுப்பினேன்.


எனது மனதை மிகவும் உலுக்கிய படம் 'தவமாய் தவமிருந்து’. அதில் அப்பாவாக வரும் ராஜ்கிரணைப் போல எனது தந்தையும் இருந்ததே காரணம். இளம் வயதிலேயே தாயை இழந்துவிட்ட எனக்கு, தாயுமானவராக இருந்தவர் என் தந்தை. மறு கல்யாணம் செய்துகொள்ளாமல் என்னுடைய மூன்று சகோதரர்களையும் ஒரு சகோதரியையும்... ஒற்றை ஆளாக வேலை செய்து சுமந்த சுமைதாங்கி. நான் பள்ளியிறுதி வகுப்பை முடித்தவுடன் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார். வறுமையில் அவருக்குச் சரியான மருத்துவச்  சிகிச்சைகூட அளிக்க முடியாத வேதனை இன்றும் என்னை வாட்டுகிறது.


 அந்தப் படம் பார்த்தவுடன் தியேட்டரிலேயே அழுகை வந்தது. எனக்குப் பிடித்த படத்தைச் சொல்லிவிட்டேன். அடுத்தது, எனக்குப் பிடித்த இயக்குநர் தங்கர் பச்சான். எனக்குப் பிடித்த நடிகர் ரா.பார்த்திபன். எனக்குப் பிடித்த நடிகைகள் சுகன்யா, ரம்பா.


ஏன்..? அவர்கள் எல்லாம் நான் வழக்கறிஞராக இருந்தபோது, என்னுடைய கட்சிக்காரர்களாக இருந்தவர்கள்!''


வி.மருதையன், பழநி. 

''வழக்கறிஞர்கள் வேத வாக்காகக் கொள்ள வேண்டியது எதனை?'' 


''இந்திய அரசியல் நிர்ணய சட்டசபை 26.11.1949 அன்று அரசியல் சட்டத்தின் இறுதி நகலை ஆமோதித்துத் தீர்மானம் இயற்றியது. அந்த நாள் இந்திய அரசியல் சட்டம் தோன்றிய பொன்னாள். அந்தச் சட்டம் (Constitution of India) பின்னர் 26.1.1950 முதல் அமலுக்கு வந்தது. அந்தத் தீர்மானம் நிறைவேறிய நாளைச் சட்ட தினமாக (Law day)  கொண்டாட அகில இந்திய பார் கவுன்சில் முடிவெடுத்தது.


 அந்தத் தினத்தில் இந்தியா எங்கும் உள்ள வழக் கறிஞர்கள் கூட்டமாக சட்ட தின சாசனத்தைப் படித்து உறுதிமொழி எடுத்துக்கொள்வது கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகிறது. அந்த உறுதிமொழியில் வழக்கறிஞர்களுக்கு உண்டான பல கடமைகள் கூறப்பட்டு உள்ளன. அவற்றை எல்லாம் ஆண்டுச் சடங்காக மட்டும் கருதாமல், ஆண்டு முழுமைக்குமே கடைபிடிக்க வேண்டும். அந்த உறுதிமொழியின் ஒரு பகுதி:


‘We acknowledge the Social responsibilities and the Professional obligation of law in public interest and public service!’


'எங்களுடைய சமூகப் பொறுப்புகளையும் சட்டத்தின்பால் உள்ள எங்களுடைய தொழில்ரீதி யான கடமைகளையும், பொதுநலன்களையும், பொதுச் சேவைகளையும் நினைவுகூர்கிறோம்’- இதுவே ஒவ்வொரு வழக்கறிஞரின் வேதவாக் காக இருக்க வேண்டும்!''


கே.சிந்து பாஸ்கரன், திருநெல்வேலி. 


''ஒரு சாதாரண சிவில் வழக்கில் தீர்ப்பு வருவதற்குப் பல ஆண்டுகள் பிடிக்கின்றன? நம்முடைய சொத்தை நம்முடையதுதான் என்று நிரூபிக்கப் பல ஆண்டுகள் பிடிப்பது ஆரோக்கியமான ஒன்றா? இதனால்தானே குண்டர்கள், ரவுடிகள் துணிச்சலாக சொத்தை ஆக்ரமிக்கிறார்கள்? தாமதிக்கப்பட்ட நீதியைத் தடுக்கப்பட்ட நீதியாகத்தானே கொள்ளவேண்டும். இதற்குத் தீர்வே இல்லையா?'' 


 ''ஒரு நாள் மெரினா கடற்கரை பக்கம் நடந்துகொண்டிருந்தேன். அப்போது சாலைப் பாதுகாப்பு வாரத்தையட்டி அங்கு ஒரு விழா நடைபெற்றது. மேடையில் பேசிய ஒருவர் குறிப்பிட்டார், 'இந்த காமராசர் சாலையில் காலை நேரத்தில் சிவப்பு விளக்கு கள் சுழல, வெள்ளை நிற கார்களில் விரைவா கப் பயணிக்கிறார்கள் நீதித் துறைப் பிரபலங் கள். நீதிதேவன்கள் பயணிக்கும் அந்த வாகனங் கள் அந்த விரைவுப் பயணத்தில் மஞ்சள் கோட்டைத் தாண்டியும், சிக்னல் விளக்குகளை மீறியும் செல்வதைப் பார்க்கிறேன்.


 அப்படி நீதியரசர்கள் விரைந்து பயணித்தாலும், நமது வழக்குகளை விசாரித்து முடிக்க ஆண்டுகள் பல ஆகின்றனவே... அந்த விந்தைதான் எனக்குப் புரிபடவில்லை!’


அந்தப் பேச்சாளருக்கு ஒரு பாராட்டுக் குறிப்பு அனுப்பியதைத் தவிர, என்னால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. தாமதிக்கப்பட்ட நீதியைத் தடுக்கப்பட்ட நீதியாகவே கருதவேண்டும். வழக்கு விசாரிப்பதில் ஏற்படும் தாமதங்களுக்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றை விவரித்தால் இங்கு இடம் போதாது. ஆனாலும், ஒரு குறிப்பிட்ட பிரச்னையை இங்கு சொல்லியாக வேண்டும். இந்தியாவில் மட்டும்தான் தீர்ப்பு வருவதை தாமதப்படுத்து வதில் சிலர் வெற்றி காண்கிறார்கள்.


 விரைந்து நீதிகிடைக்க விரைவு நீதிமன்றங்கள் அமைத்தாலும் அதற்குத் தடை வாங்கி தாம தத்தில் வெற்றியடைகிறார்கள். மற்ற நாடு களில் வேண்டும் என்றே இழுத்தடிக்கும் கட்சிக்காரர் மிகப் பெரிய அபராதத் தொகையை இறுதியில் கட்ட நேரிடும் என்பதால் அங்கு தாமதமும் இல்லை... வல்லடி வழக்காடுவதும் இல்லை!''


எஸ்.ஆதிகுமணன், தஞ்சாவூர். 


''ஓய்வுக் காலத்தை எப்படிக் கழிக்கப்போகிறீர்கள்?'' 


''பிராணிகளுக்கும் பறவைகளுக்கும் ஓய்வு ஏதும் இல்லை. மனிதர்களுக்கும் வகிக் கும் பதவிகளில் இருந்து வேண்டுமென்றால் ஓய்வு தருவார்களேயன்றி, அவர் ஆற்ற வேண்டிய கடமைகளில் இருந்து ஓய்வு எடுக்க முடியாது. என் கடன் பணிசெய்து கிடப்பதே. மக்கள் சேவையே மகேசன் சேவை!''



தெ.செல்வராஜ், திருத்துறைப்பூண்டி. 


''உங்களுடைய பெரும்பாலான தீர்ப்புகள் சட்டப்படி வழங்கப்பட்டனவா? அல்லது கருணையின், மனிதாபிமானத்தின் அடிப்படை யில் வழங்கப்பட்டவையா?'' 


''என்னுடைய தீர்ப்புகள் அனைத்தும் சட்டப்படியே வழங்கப்பட்டன. சட்டத்தின் ஆட்சியில் (Rule of Law) சட்டத்தின்படியே  நீதி அளிக்க முடியும். சட்டத்தின்படி நீதி (Justice according to law) என்பதே சரி. சட்டத்தின்படி தீர்ப்பளித்தாலே நீதி கிட்டியதாகத்தான் அர்த்தம். சட்டம் சரியில்லை என்றால் அதை மாற்ற வேண்டியது சட்டமன்றத்தின் கடமைதானே ஒழிய, நீதிமன்றத்தின் வரையறைக் குள் அவ்விதமான அதிகாரம் இல்லை. ஆனால், அதே சமயம் சட்ட வரையறைக்குள் கருணைக்கும் மனிதாபிமானத்துக்கும் இடம் உண்டு!'


'
பி.ராஜன், சென்னை-88. 


''இந்திய நீதித்துறை வரலாற்றில் தங்கள் மனம் கவர்ந்த நீதியரசர்கள் யார்? ஏன்?'' 


''நீதியரசர் தா.சத்தியதேவ்...


கடமை வீரர், கர்மயோகி, காலந்தவறாதவர். கடிகாரத்தைப் பார்த்து அவர் வேலை செய்ய வில்லை. அவர் வேலை செய்ய ஆரம்பித்த வுடன் கடிகாரம் தனது முள்ளைத் திருத்திக் கொள்ளும். ஓய்வுபெற்ற அன்றே தனது காரைத் திருப்பி அனுப்பிவிட்டு, வீட்டையும் காலி செய்து ஒப்படைத்துவிட்டு, இரவு ஒரு விடுதியில் தங்கிவிட்டு, மறுநாள் பெங்களூரு சென்ற மாமனிதர். என் தந்தை இறந்தபோது நான் சிறுவன். அழ முயற்சித்தேன். ஆனால், நீதிபதி சத்தியதேவ் அவர்கள் இறந்த தினத்தில்தான் உண்மையாக அழுதேன்.


நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர்...


வாழும் சரித்திரம். நடமாடும் சட்ட அகராதி. 98 வயது முதுமையிலும் எங்களுக்குத் தவறாது ஆலோசனை கூறும் மனிதநேயப் பண்பாளர். நீதிமன்றத்தில் பணியாற்றுதலும் தேசத்தின் சேவையே என்று என்னை நீதிபதி பணியேற்க வற்புறுத்தியவர். தொடர்ந்து அவருடைய அன்பும் ஆதரவும் என்னுடைய பணி சிறக்க உதவிவருகிறது!''


 அடுத்த வாரம்...


'நீதிபதிகளைக் கிண்டல் செய்து வெளிவரும் ஜோக்குகளைப் படிக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றும்?'' 

''66 ஏ சட்டப் பிரிவு பற்றி விளக்கம் தருக?'' 


''கோடிக்கணக்கான வழக்குகள் தேங்கியுள்ள தற்காலத்தில் நீதிபதிகளுக்கும் நீதிமன்றங்களுக்கும் மே மாதம் முதல் முழுவதும் விடுமுறை தேவைதானா

''
- இன்னும் பேசுவோம்.


நன்றி - விகடன்

Wednesday, April 17, 2013

பிரபாகரனை ப.சிதம்பரம் சந்தித்தாரா? - லாயர் அதிரடி பேட்டி

லங்கைத் தமிழர்கள் பிரச்னையில் தங்களுக்கும் ஈடுபாடு உண்டு என்பதைக் காட்டிக் கொள்ள படாதபாடுபடுகிறது காங்கிரஸ். 'கோடம்பாக்கத்தில் இருந்த பிரபா​கரனை நானே கார் ஓட்டிச் சென்று சந்தித்தேன்’ என்று, ப.சிதம்பரம் ஒரு கூட்டத்தில் பேசினார். அந்த நாளில் இருந்து இன்றுவரை இலங்கைப் பிரச்னைகளில் தீவிரமாகச் செயல்பட்டுவரும் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அது​குறித்து விரிவாகப் பதில் அளிக்கிறார். 

''1984-ம் ஆண்டு, கோடம்பாக்கத்தில் தங்கி இருந்த பிரபாகரன், பாலசிங்கத்தை சந்தித்து இலங்கை பிரச்னையில் தீர்வு ஏற்படுத்த முயன்றதாக நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியுள்ளாரே?''

''பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு சம்ப​வத்தை முன்னிட்டு விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், ராகவன், பிளாட் தலைவர் முகுந்தன் ஆகியோர் 1983-ல் கைது​செய்யப்பட்டு சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். பிரபாகரனுக்காக மூத்த வழக்கறிஞர் என்.டி.வானமாமலையும் நானும் ஆஜராகி பெயில் வாங்கிக் கொடுத்தோம். 

முகுந்தன் சென்னையிலும், பிரபாகரன் மதுரையிலும் தங்கி இருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அதன்பிறகு, திருவான்மியூர் காமராஜர் நகரில் சிறிது காலம் பிரபாகரன் தங்கியிருந்தார். பின்னர், அடையாறு இந்திரா நகருக்குக் குடிபெயர்ந்தார்.

1983 இறுதியில் பாலசிங்கம் சென்னை வந்தார். நானும் பேபி சுப்பிரமணியன் என்ற இளங்குமரனும் அவரை இரண்டு வாரங்கள் நியூ உட்லண்ட்ஸ் ஓட்ட​லில் தங்கவைத்தோம். அதன்பிறகு, பெசன்ட்நகர் வேளாங்கன்னி மாதா கோயில் அருகிலுள்ள வீட்டில் பாலசிங்கம் தங்கி இருந்தார். பின் அவர் அடையாறு இந்திரா நகரில் தங்கினார். ஆக, 83-க்குப் பிறகு அவர்கள் கோடம்பாக்கத்தில் தங்கவே இல்லை. 

பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோர் கோடம்பாக்கத்தில் தங்கி இருந்தபோது 1984-ல் சந்தித்து, இலங்கை பிரச்னை குறித்து பேசியதாக நிதி அமைச்சர் சிதம்பரம் கூறுவது வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. 80 தொடக்கத்தில் இருந்து பாண்டி பஜார் சம்பவம் வரை மயிலாப்பூர் சாலைத் தெருவில் நெடுமாறனின் பழைய வீட்டில் என்னுடன் பிரபாகரன் தங்கியிருந்தார்.''


''தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்து வீணாகப் பிரச்னையை உருவாக்குவதாக இலங்கைத் தமிழ் மீனவர்கள் புகார் தெரிவிப்பதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி பேசிவருகிறாரே?''

''தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய மத்திய அமைச்சர் நாராயணசாமி, இலங்​கைக்கு வக்காலத்து வாங்குவது தமிழக மீனவர்கள் நெஞ்சில் வேல் பாய்ச்சுவது போன்றது. அவர், இந்திய அமைச்சரா? இலங்கை அமைச்சரா?

1974-ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்த போது, தலைவர் கலைஞர் அதைக் கடுமையாக எதிர்த்தார். கலைஞர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் கலந்துகொண்ட அரங்கநாயகம் அரசுத் தீர்மானத்துக்கு ஆதரவாக இல்லை. பிரதமர் இந்திரா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரண் சிங்கிடம், கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்கக் கூடாது என்றார் கலைஞர். நாடாளுமன்றத்திலும் தி.மு.க. கடுமையாக எதிர்த்தது. அதே கோரிக்கையை வலியுறுத்தி, தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டன. 

ஆனாலும் கச்சத்தீவை மத்திய காங்கிரஸ் அரசு கொடுத்தது. மீன் வலைகளை உலர்த்தவும் அந்தோணியார் கோயிலுக்குச் செல்ல​வும் மீனவர்கள் ஓய்வு எடுக்கவுமான உரிமை, கலைஞரின் போராட்டத்தால் அந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. 

ஆனால், 1976-ம் ஆண்டு நெருக்கடி நிலையில் அந்த மூன்று ஷரத்துக்களையும் காங்கிரஸ் அரசு விட்டுக் கொடுத்து விட்டது. அப்போது, தி.மு.க. ஆட்சியில் இல்லை. கச்சத்தீவை இழந்ததால்​தான் தமிழக மீனவர்கள் இப்போது இத்தனை கொடுமைகளை அனுபவிக்கின்றனர். இதையெல்லாம் தெரிந்துகொண்டு அமைச்சர் நாராயணசாமி பேச வேண்டும்.''

''இலங்கை பிரச்னையில் இந்திய ஆட்சியாளர்கள் பொறுப்புடன் செயல்படவில்லை என்று, இலங்கை பாதுகாப்புத் துறை செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே குற்றம்சாட்டியுள்ளாரே?''

''இந்தியா இல்லை என்றால் இலங்கை இல்லை. சேதுக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற பிரதமர் நேரு அமைச்சரவை 1963-ல் ஒப்புதல் அளித்தது. 'சேதுத்திட்டம் நிறைவேறினால் இலங்கையின் பொருளாதாரமே சீர்குலைந்துவிடும்’ என்று, இலங்கை ஆட்சியாளர்கள் மன்றாடினர். 

அண்டை நாடு என்ற ரீதியில் அந்தத் திட்டத்தை நேரு கைவிட்டார். சாஸ்திரி- ஸ்ரீமாவோ ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய வம்சாவழி தோட்டத் தொழிலாளர்கள் திரும்ப அழைக்கப்பட்டனர். அந்த நடவடிக்கையே தவறு என்று கண்டித்தோம். 

ஆனாலும், இலங்கையின் பொருளாதார சிக்கலைத் தவிர்க்க அந்த முடிவை இந்தியா ஏற்றுக்கொண்டது. இந்திரா காந்தி காலத்தில் இருந்து தொடர்ந்து இன்றளவும் உதவுகிறோம்.
இந்தியாவின் செயல்பாட்டைக் குறை சொல்ல சிங்கள ஆட்சியாளர்களுக்கு அருகதையே கிடையாது.''
- எஸ்.முத்துகிருஷ்ணன்

 நன்றி - ஜூ.வி.