Tuesday, April 16, 2013

ஏ சி ரூம்ல வேலை செய்யறீங்களா? கண்டிப்பா படிங்க



எலும்புத் தேய்மானம் தடுப்பது எப்படி?


பெண்களுக்கு மாதவிடாய் நிறைவுபெறும் காலத்தில் எலும்புத் தேய்மானம் ஏற்படுவது இயற்கையான நிகழ்வு. ஆனால், இப்பொழுது இருபது முதல் முப்பது வயதுடைய இளம்பெண்களிடையே கூட எலும்புத் தேய்மான பாதிப்பு உள்ளது. பல இளம்பெண்கள் கழுத்து வலி, முதுகுவலி, மூட்டுவலியால் துன்பப்படுகிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் எலும்புத் தாதுவில் அடர்த்தி குறைந்து, எலும்பின் வலிமை குன்றுவதுதான்.

எலும்புத் தேய்மானத்திற்கான காரணங்கள்:

இரவு வெகு நேரம் கண்விழிப்பது, காலையில் தாமதமாக எழுவது, இரவுப் பணி செய்வது, குளிரூட்டப்பட்ட இடங்களில் வேலை செய்வது, .சி. வாகனங்களில் பயணிப்பது என சூரியஒளி நம் உடலிலேயே படாமல் இருப்பவர்கள் இப்பொழுது அதிகம் பேர் உள்ளனர். சூரிய ஒளியினால் கிடைக்கக்கூடிய வைட்டமின் டி குறைவால் எலும்பின் அடர்த்தி குறையும்.


உடலுக்கு ஒரு வடிவத்தைக் கொடுப்பது எலும்பு.கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களால் எலும்பு உருவாகின்றது. கால்சியத்தை எலும்பு ஏற்றுக் கொள்ள வைட்டமின்டிதேவைப்படுகிறது. இளவயதில் எலும்புகள் நீளமாகவும், அகலமாகவும் வளரும். பதினெட்டு வயதுக்குப் பின் நீண்டு வளராது. அகலத்தில்தான் வளரும். 30 வயதுக்குப் பின் எலும்பின் வளர்ச்சி நின்றுவிடும். அதற்குள் நாம் எலும்பின் உறுதியையும், திண்மையையும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். 30 வயதுக்குப் பின் எலும்பின் அடர்த்தி சிறிது சிறிதாகக் குறைய ஆரம்பிக்கும்.


உணவில் தேவை அக்கறை:

அதிக புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலில் அமிலத்தன்மையை அதிகரிக்கும். அதனால் எலும்புகள் வலுவை இழக்கும். உணவில் சேரும் அதிகப்படியான உப்பும் எலும்பின் வலிமைக்கு எதிராக அமையும். உடலில் உப்பு அதிகமாகும்பொழுது அதிகப்படியான உப்பு சிறுநீருடன் வெளியேறும். அப்பொழுது அதனுடன் கால்சியமும், தாதுவும் வெளியேறிவிடும். அதனால் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சாஸ், அப்பளம், ஊறுகாய், வறுவல் மற்றும் நொறுக்குத் தீனியைக் குறைத்துச் சாப்பிட வேண்டும்.

பாஸ்போரிக் அமிலம் உள்ள குளிர்பானங்கள் கால்சியம் தாதுவை அழிக்கும் தன்மையுள்ளவை. காபி, டீ போன்ற பானங்கள் அதிகம் பருகுவதும் கால்சியம் குறையக் காரணமாகின்றது.


கால்சியம் நிறைந்த உணவுகள்:

பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. குழந்தைகள் ஒரு நாளைக்குக் குறைந்தது 400 மி.லி.. பால் அருந்த வேண்டும்.

வயதானவர்களுக்குப் பால் அதிகம் ஜீரணமாவதில்லை. அவர்கள் கால்சியம் சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள் மற்றும் சிறு தானியங்களை உண்ணலாம். காய்கறிகளில் பீட்ரூட், வெண்டைக்காய், முருங்கைக்காய், சுண்டைக்காய், தாமரைத்தண்டு போன்றவற்றில் கால்சியம் அபரிமிதமாக உள்ளது.


அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை, கறிவேப்பிலை, தண்டுக்கீரை, குப்பைமேனி மற்றும் வெற்றிலையில் அதிகம் கால்சியம் உள்ளது.

எள், கால்சியம் சத்து நிறைந்த ஒரு எண்ணெய் வித்து, எள்ளை வெல்லம் சேர்த்து உருண்டைகளாகச் செய்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இரண்டு எள்ளு உருண்டையில் 1400 மி.கி. கால்சியம் உள்ளது. எள்ளை பொடியாகச் செய்து உணவுடன் சாப்பிடலாம்.

தினமும் 5 பாதாம் பருப்புகளை ஊறவைத்து அரைத்து பாலுடன் கலந்து குழந்தைகளுக்குப் பருகக் கொடுக்கலாம்.


கேழ்வரகில் பாலை விட அதிக கால்சியம் உள்ளது. குழந்தைகளுக்குக் கேழ்வரகு மாவில் முருங்கைக்கீரை கலந்து அடையாக செய்து கொடுக்கலாம். இது ஒரு கால்சியம் சத்துள்ள முழுமையான சிற்றுண்டி, பெரியவர்கள் கஞ்சி, கூழாகச் செய்து சாப்பிட நல்ல பலனிருக்கும்.


எலும்புத் தேய்மானத்துக்கு மிக அருமையான உணவு மருந்து பிரண்டை என்னும் கொடி. பிரண்டை எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுவதோடு, இணைப்பு திசுக்களை விரைவில் வளரவும் உதவுகின்றது. சிறந்த வலி நிவாரணியாகவும், வலி, வீக்கத்தைக் குறைக்கும் தன்மையுடையதாகவும் உள்ளது. உடைந்த எலும்புகளை எளிதில் சேர்க்கும் தன்மையும் இதற்கு உண்டு. பிரண்டையைத் துவையலாகச் செய்து தினம் இரண்டு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வரலாம்.

உடற்பயிற்சியின் அவசியம்: எலும்புகள் உறுதியாக உடற்பயிற்சி மிகவும் அவசியம். உடற்பயிற்சி செய்யும்பொழுது எலும்புகள் வலிமை பெறும்.

இன்று குழந்தைகள் ஓடி விளையாடுவதே குறைந்துவிட்டது. பள்ளி, கல்லூரியில் படிக்கும் இளம் பெண்கள் உடற்பயிற்சிக்கான நேரம் ஒதுக்குவதே இல்லை.

சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுதே பெற்றோர்கள் குழந்தைகளை ஏதாவது ஒரு விளையாட்டில் பழக்கி விட வேண்டும். பெற்றோர்களும் நேரம் ஒதுக்கிக் குழந்தைகளுடன் யோகாசனம், நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிளிங், தோட்ட வேலைகள் என்று செய்ய, குடும்ப ஆரோக்கியம் மேம்படும். உடற்பயிற்சி தசைகளை வலுவாக்கும். வலுவான தசைகள் எலும்புகளைப் பாதுகாக்கும்.

ஒல்லியாக இருப்பதுதான் அழகு, ஆரோக்கியம் என இளம்பெண்கள் கருதுகிறார்கள். ஆனால், அது தவறான கருத்து. பலமாக, உறுதியாக இருப்பதுதான் அழகு, ஆரோக்கியம்.

பிற்காலத்திற்கான பணத்தைச் சேமிப்பதற்கு அக்கறையுடன் செயல்படுவது போன்று, நம் உணவுக்கும், உடற்பயிற்சிக்கும் அக்கறை அளிக்க வேண்டும். இள வயதிலேயே எலும்பை உறுதியாக, வலுவாக ஆக்கிக் கொண்டால் போனஸாக நோயற்ற வாழ்வு கிட்டுமே!

- டாக்டர் இரா.பத்மப்ரியா, சித்த மருத்துவர்

நன்றி - கல்கி

அன்னக் கொடியும் கொடி வீரனும் ஹீரோ பேட்டி


சினிமா

பாரதிராஜாவை காப்பி அடித்தேன்!

மகிமைராஜன்

பாரதிராஜாவின், ‘அன்னக் கொடியும் கொடி வீரனும்படத்தில் கொடிவீரனாக ஆடு மேய்க்கும் ஹீரோ லக்ஷ்மண், எஸ்.ஆர்.எம். யுனிவர்சிடியின் எம்.பி.. ஸ்டூடண்ட். கூடவே தமிழக அளவில் கிரிக்கெட் ஆடிய பேட்ஸ்மேன். கொடி வீரனாக கோவணம் கட்டிக் கொண்டு நடித்த அனுபவம் எப்படி இருந்தது?" - கேட்டால், வேர்ல்ட் கப் மேட்ச்ல பாகிஸ்தானுக்கு எதிரா சச்சின் அடிச்ச செஞ்சுரி போல அத்தனை த்ரில்" என்று சிலிர்க்கிறார் லக்ஷ்மண்.



எப்படி வந்தது சினிமா வாய்ப்பு?

பாரதிராஜாவுக்கும் எங்க அப்பாவுக்கும் முப்பது வருட ஃப்ரெண்ட்ஷிப். பாரதிராஜா எங்க ஊர்ல நாடகம் போடும்போதெல்லாம் எங்க அப்பா தான் முதல் பார்வையாளர். அப்புறம் பிஸினஸ்ல தீவிரமாகிட்டார். எங்க தாத்தா நிலக்கோட்டையில தியேட்டர் வெச்சுருந்தார்.


 அங்ககூட பாரதிராஜா நாடகம் நடத்திருக்கிறார். ஆனா, இதுபோல எந்த அனுபவமும் இல்லாமல் இருந்த என்னைப் பார்த்தவுடன் நடிகனாக்கிட்டார். நான் தியேட்டருக்குப் போய் சினிமா பாக்கறதே கம்மி. அப்படி இருந்த என்னை நடிக்க வர்றீயான்னு கேட்டு லீட் ரோல் கொடுத்ததுல ஆரம்பத்துல திணறித் தான் போயிட்டேன்."

முதல் நாள் ஷூட்டிங்?

ஆர்ட்டிஸ்ட் செலக்ஷனுக்கு ஸ்கீரின் டெஸ்ட் பண்ணும்போது எல்லாரும் டச்சப் பண்ணிட்டு வந்தாங்க நான் கேஷுவலாதான் போனேன். என்ன நினச்சார்னு தெரியலை என்னைப் பார்த்து யூ ஆர் செலக்டட்னு சொல்லிட்டார். அப்புறம் கேமரா முன்னாடி நடிக்கறதுலையும் திணறினேன். பாரதிராஜா எப்படி நடிச்சுக் காண்பிக்கிறாரோ அப்படியே அவரைப் பார்த்து காப்பி அடிச்சேன். சீன் ஓகே ஆயிடுச்சு.


 அவர் என்னை செட்ல பார்க்கும்போதெல்லாம் நம்பிக்கையா சிரிப்பார். நடிகனா என்னை அங்கீகரிச்சுட்டார் என்பதற்கு அடையாளம் தான் அந்தச் சிரிப்பு. பதினாறு வயதினிலே கமலுக்குப் பிறகு எனக்குத்தான் பாரதிராஜா கோவணம் கட்டிவிட்டார்."

கிரிக்கெட் கனவு?

கிரிக்கெட் கிரிக்கெட்னு ஒரு காலத்துல பதறித் திரிஞ்சேன். பாலாஜி, அஸ்வின் எல்லோரும் எனக்கு க்ளோஸ். நடிகர் விஷ்ணுகூட கிரிக்கெட்லேயும் சினிமாவுலேயும் எனக்கு சீனியர். தமிழக அளவுல எல்லா மேட்ச்லையும் ஆடிட்டேன். ஆனா, நடிக்கணும் வந்துட்டேன். கிரிக்கெட்ல டெடிகேஷன் முக்கியம். நடிச்சுட்டே விளையாட முடியாது. அதனால கிரிக்கெட் கனவுக்கு எண்ட் கார்ட் போட்டாச்சு. கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கு. சினிமாவுல ஆல்ரவுண்டரா வர உழைக்க ஆரம்பிச்சுட்டேன்."



ஹீரோயின் கார்த்திகா?

இவங்களை நினைச்சுத்தான் ரொம்ப பயந்தேன். மும்பைப் பொண்ணு. பெரிய ஹிட் படத்துல நடிச்ச ஹீரோயின். தமிழகத்தை மயக்கி வைத்திருந்த நடிகை ராதாவின் பொண்ணு... இதெல்லாம் என்னைப் பயமுறுத்துச்சு. ஆனா, பழகறதுல கார்த்திகா பக்கத்துவீட்டுப் பொண்ணு போல அத்தனை பாந்தம். என் ஆரம்பக் கட்டக் கூச்சங்களை அசால்டா சமாளிச்சாங்க. கார்த்திகாவுக்கும் எனக்கும்தான் அதிக சீன். பல சமயங்கள்ல நான் சொதப்பியிருக்கேன் அப்போ கார்த்திகா காண்பிச்ச பொறுமை அபாரமானது."


அடுத்து?

பாண்டிராஜ், சமுத்திரக் கனி... என்று பிரபல இயக்குனர்கள் கதை சொல்லியிருக்காங்க. எதுவும் முடிவு பண்ணலை. பட் இவங்க ரெண்டு பேரையும் மிஸ் பண்ணக்கூடாது. ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்வரட்டும். பிறகு அதிகாரபூர்வமாய்ச் சொல்றேன்" - சிக்கிக்காமல் சிரிக்கிறார் லக்ஷ்மண்.


நன்றி - கல்கி 

புருஷனா இருந்தாலும் பிரசன்னாவை சினேகாவால................

1.கலி போர் நீ யா கமல் ரசிகரின் செல் போன் ரிங்க் டோன் - என்ன சமையலோ? # உன்னால் முடியும் தம்பி

 ----------------------------------

2.தியேட்டரிலிருந்து தன் படம் எடுக்கப்பட்டால் பாலா பாட வேண்டிய பாட்டு - பர்தேசி பர்தேசி ஜானா நஹி.கிசி ஏக் ஆத்மி ஆயேகா.

------------------------------

3.அம்லாபால் ன் முதல் இரவில் - டியர்.உனக்கு பால் வடியும் முகம். ம்.உங்களுக்கு ஜொள் வடியும் முகம்.

---------------------------------------

4.துணி காயும் நேரம் சரணம்.எடுத்து வைக்க நீயும் வரணும்.துவைத்ததும் வெளுத்ததும் நான் அல்லவா? காயவைத்ததை எடுப்பது உன் முறை அல்லவா?

------------------------------------

5.தேசியப்பறவை மயிலாக இருந்தாலும் ,ஜோசியப்பறவை கிளியாக இருந்தாலும் என் நேசத்துக்குரிய பரவை நீ தான் # H/O பரவை முனியம்மா

 ---------------------------------------

6.உன் அண்மை ,சேய்மை இரண்டிலும் நான் உணர்வது உன் தாய்மை

 -------------------------------------

7.பெண் ட்வீட்டர்கள் எல்லாம் ரொம்ப விபரம்.டி பி ல குழந்தை போட்டோ வெச்சுக்கறாங்க .ஒரு கிளு கிளுப்பே வர மாட்டேங்குது # சும்மா

 ---------------------------------------

8.ஒரு பூனை தன் லவ்வரைப்பார்க்க வெளில கிளம்பறப்ப எதிரே இன்னொரு பெண் பூனை வந்தா சகுனம் சரி இல்லைனு திரும்பிடுமா? அதைவே பிக்கப் பண்ணிக்குமா்

 -----------------------------------------

9.வலுவான நீதித்துறை அவசியம்'' - பிரதமர் # அய்யய்யோ.நமீதாவை சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் ஆக்கப்போறீங்ளா ?

-----------------------------------------

10.டியர்.நீ தான் என் ஆருயிர்த்தோழி, நிஜமாவா ? 6 குழந்தைங்க.நமக்கு.இன்னுமா நம்பலை ?

 ---------------------------------------

11.யமுனாவை ஸ்ரீ பாராட்டிட்டாரு.இப்போ பாருங்க.ஸ்ரீ யை யமுனா பாராட்டுவாங்க # ட்ரேட்மார்க்

 ----------------------------------------

12.இயற்கையாகவே பெண்களுக்கு எச்சரிக்கை உணர்வும் , ’உள்ளுணர்வும் இருக்குமாம் # அதில் இடி விழ -))” # சும்மா எ கீ

 -----------------------------------------

13.பேட்டி எடுக்க வந்த லேடி நிருபர் தோளை எதுக்கு அமுக்குனீங்க? ஹீரோ ஜொள் ஜக்கு - PRESS னு பேட்ஜ் குத்தி இருந்தாரு ஹி ஹி

 ----------------------------------------
14. புருஷனா இருந்தாலும் பிரசன்னாவை செல்லமா பெயர் சுருக்கி சினேகாவால கூப்பிடவே முடியாது.பின்னால சுருக்கினா அண்ணா.முன்னால சுருக்கினா பிரா

  ----------------------------------------

15.திருவெம்பாவை இயற்றியவர் விஜய் ரசிகரோ = முதல் பாட்டில் முதல் வரியிலேயே அவர் பட டைட்டில் - "ஆதி" யும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி

  ----------------------------------------

16. நல்ல புருசன் என நிரூபிக்க புருஷன் ருசியா சமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கு. பெண்களுக்கு அப்படி ஒரு நிர்ப்பந்தம் இல்லை

  ----------------------------------------

17.ராமரை விட ,தர்மரை விட நாம் கொடுத்து வைத்தவர்கள்.அவர்களுக்கு ஒரு மச்சினி கூட இல்லை

  ----------------------------------------

18.மங்கையராய்ப்பிறந்திடவே மாதவம் செய்திருக்க வேண்டும்.நல்ல கணவராய் சிறக்க ஏகப்பட்ட எடுபுடி வேலைகள் செய்திட வேண்டும்

  ----------------------------------------

19.இன்று உலக சுகாதர தினமாம். இதுதான் சாக்குன்னு பக்கத்து வீட்டு பிகர் குளிக்குதா?னு பாத்ரூம் ல எல்லாம் எட்டிப்பார்த்துட்டு இருக்காதீங்க

  ----------------------------------------

20.டாக்டர்.கடந்த ஒரு வாரத்தில் 3 ு கிலோ வெயிட் கூடிடுச்சு...:'(:'(:'( 7 நாட்களில் ஏழரையைக்கூட்டுவது எப்டி?னு புக் எழுதுங்க

  ----------------------------------------

21.லேடீஸ் வாலிபால் மேட்ச் ல ஆட்டத்தை மட்டும் உன்னிப்பா பார்க்கறவன் தான் உலகமகா உத்தமன் # யாராவது இருக்கீங்ளா?

  ----------------------------------------

22.மிஸ்.உங்க பக்கத்து சீட் காலியா இருக்கு.மே ஐ சிட்? மேலே கை படக்கூடாது.ஓக்கே? பேச்சு மாறிட மாட்டீங்க்ளே? ஐ ஜாலி

  ----------------------------------------

23.தமிழசெல்வன் - ஹலோ மிஸ்.நான் தான் தமிழ் பேசறேன். ஹலோ மிஸ்டர்.நானும் தான் தமிழ் பேசறேன்

  ----------------------------------------

24.அதிமுகவின் கேசிஆணி முத்து நீக்கப்பட்டு செயலாளராக ஜிமுனுசாமி நியமிக்கப்படுகிறார்# மிஸ்டர் ஆணி.நீங்க இனி ஆணியே புடுங்க வேணாம்

  ----------------------------------------

25.பெங்களூர் ட்வீட்டப் முடிவில் தூய தமிழில் ட்வீட்டுவது எப்படி? இலவச ட்யூசன் உண்டாம்

Monday, April 15, 2013

மு களஞ்சியத்துக்கு எதிராக கொந்தளித்த அஞ்சலி ரசிகர்கள் - ஜூ வி கட்டுரை

ரசிகனுக்காக கிளிசரின் அழுகை... நிஜத்தில் உறவுக்காக ரத்தக் கண்ணீர்... இது​தான் நடிகைகளின் மேக்கப் இல்லாத வாழ்க்கை. 


தாத்தாக்களின் கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரி, தன் சகோதரர்களுக்காக சம்பாதித்துக் கொடுத்​தார். கல்யாணம் செய்துகொள்ளாமலேயே காலமானார். மனநிலை தவறிய தனது கணவரை பச்சிளங்குழந்தையாகப் பராமரித்தார்


, கவர்ச்சி நடிகை அனுராதா. குடும்பத்தை நிர்க்கதியாய் தவிக்கவிட்டுத் தன் தந்தை மறைந்தபோது, திரையில் நடித்த பணத்தில் தங்கை, தம்பிகளைக் கரையேற்றி... அனாதையாக்கிய அப்பா ஆனந்தனுக்குக் கடற்கரைச் சாலையில் நினைவு மண்டபம் அமைத்தார், டிஸ்கோ சாந்தி.


இப்போது அஞ்சலியின் வாழ்க்கை...


சினிமா, சென்டிமென்ட் பூமி. அஞ்சலி முதலில் தெலுங்கில் நடித்த இரண்டு படங்களும் தோல்வி. அதனால், அஞ்சலியை பேக்-​அப் செய்துகொண்டு சென்னை வந்தார், பாரதிதேவி. அப்போது அவரை அம்மா என்று சொன்னார்கள். இப்போது சித்தி. இங்கேதான் இயக்குநர் மு.களஞ்சியத்தை சந்தித்தார்.



'சத்தமின்றி முத்தமிடு’ படத்தில் ஒப்பந்தம் ஆனார். தெலுங்கு படங்களாவது வெளிவந்து தோற்றன. 'சத்தமின்றி முத்தமிடு’ ரிலீஸே ஆகவில்லை. 'ராசியில்லாத நடிகை...’ என்ற முத்திரையோடு வலம்வந்த அஞ்சலியை 'கற்றது தமிழ்’ மூலம் திரும்பிப் பார்க்கவைத்தார் இயக்குநர் ராம். 


 'அங்காடித் தெரு’வில் பிரமாதமான கதாபாத்திரத்தைக் கொடுத்து உச்சத்தில் உட்காரவைத்தார் இயக்குநர் வசந்தபாலன். சக நடிகைகளுக்கு நடிப்புத்திறன் காட்டி மிரட்சிகொடுத்தார், அஞ்சலி.  எந்த தெலுங்கு சினிமாவில் தோல்வி அடைந்தாரோ, அதே சினிமாவில் அஞ்சலி நடித்து வெளியான படம் சூப்பர் ஹிட்டானது. தமிழிலும் தெலுங்கிலும் மார்க்கெட் ப்ளஸ் சம்பளம் உயர்ந்தது. அப்புறம் என்ன? ஓடுகிற குதிரை கைவசம். எந்த லாயத்தில் கட்டுவது என்று ஒரிஜினல் அம்மாவுக்கும் ஒண்ணுவிட்ட அம்மாவுக்கும் ஈகோ போர் ஆரம்பமானது.



ஏப்ரல்-8: ஹைதராபாதில் இருந்த அஞ்சலியிடம் இருந்து போன். அழுகையுடன், 'இதுவரை நான் அம்மான்னு அறிமுகப்படுத்தினது என் அம்மாவே இல்லை, அவங்க என் சித்தி பாரதிதேவி. சித்தியும் களஞ்சியமும் சேர்ந்து என்னோட பணத்தை எல்லாம் பறிச்சுக்கிட்டு, என்னை டார்ச்சர் பண்றாங்க. என்னால தாங்க முடியல...’ என்று பொரிந்து தள்ளினார்.
ஏப்ரல்-9: அஞ்சலியின் புகார் குறித்து விளக்கம் கேட்க பாரதிதேவியின் செல்போனுக்கு அழைத்தால் அது, ஸ்விட்ச் ஆஃப். விஷயத்தைக் கேள்விப்பட்டு நம் லைனுக்கு வந்த களஞ்சியம் 'நான் ஒட்டுமொத்த உலகத் தமிழருக்காகப் போராடுறவன். 



புதுக்கோட்டை, விழுப்புரத்தில் நடக்கும் மாணவர் போராட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு வர்றேன். என்னோட புகழையும் பிம்பத்தையும் உடைக்கிறதுக்கு யாரோ திட்டமிடுறாங்க. அந்த வலையில் அஞ்சலி சிக்கியாச்சு. ஆந்திராவில் இருந்து சினிமா சான்ஸ் கேட்டு வர்றது... இப்போ வளர்ந்த பிறகு இங்கே இருக்கிறவன் மேல புகார் சொல்றதா?’ என்று சீறினார்.



ஏப்ரல்-10: எப்போதும் அஞ்சலியின் அருகில் பற்பசை விளம்பரம் மாதிரி புன்னகை போஸ் கொடுத்துவந்த பாரதிதேவி போலீஸில் புகார் கொடுத்துவிட்டு, கொந்தளிக்க ஆரம்பித்தார். 'பள்ளிக்கூடத்தில் ப்ளஸ் டூ படிக்கும்போதே ஒருத்தனோட அஞ்சலி ஓடிப்போயிட்டா. முன்னாடி ஜெய்யைக் காதலிச்சா... யாரோ அவளுக்குப் பின்னாடி இருந்து செயல்படுறாங்க. அவளுக்கு ஒரு ரகசிய நோய் இருக்கு. அதை இப்போ சொல்ல மாட்டேன். அப்புறமா சொல்றேன்...’ என்று பகீர் செய்தியைப் பகர்ந்துவிட்டுப் பறந்தார்.  



ஏப்ரல்-11: தெலுங்கு டி.வி-9 சேனலைச் சேர்ந்த சென்னைப் பகுதிப் பொறுப்பாளர்கள் அஞ்சலியின் சித்தி பாரதிதேவியைப் பார்க்கச் சென்று இருக்கிறார்கள். அஞ்சலி விஷயத்தில் தெலுங்கு சினிமா உலகம் உங்களை வில்லியாகப் பார்க்கிறது. அதனால், உங்களுக்கு ஆதரவாக எங்கள் சேனலில் பேட்டி எடுக்க வந்திருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். சந்தோஷமாகத் தலையாட்டியபடி பேட்டிக்குத் தயாரான பாரதி, எதேச்சையாக தனது வீட்டில் இருக்கும் டி.வி-9 சேனலை போட்டு இருக்கிறார். 'சித்தி கொடுமையால் நடுத்தெருவுக்கு வந்த நடிகை’ என்று அஞ்சலியைப் பற்றி செய்தி வரவே, அதிர்ந்துபோன பாரதி, 'தூள்’ சொர்ணக்கா ரேஞ்சுக்கு சத்தம்போட்டாராம்.    



ஏப்ரல்-12: இதற்கிடையில், அஞ்சலியின் சித்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். அதில், என் கணவருடன் ஹைதராபாத் ஹோட்டலில் ஒன்றாகத் தங்கியிருந்த அஞ்சலி திடீரென்று காணாமல் போனார். இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால், அவரது உறவினர் சிலரிடம் செல்போனில் பேசுவதாக அறிகிறேன். என் மகள் அஞ்சலியை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். நாளைக்கே 'சித்தீ’ என்று சொல்லி அஞ்சலியும் பாரதிதேவியும் சேர்ந்து பேட்டி கொடுக்கலாம். ஆனால், நடிகைகள் பலரின் வாழ்க்கை திரையில் மட்டுமல்ல... சொந்த வாழ்க்கையிலும் நடித்துத்தான் வாழ வேண்டி இருக்கிறது!



- எம்.குணா


 வாசகர் கருத்து 


1. களஞ்சியம் அல்ல சாக்கடை..


2. நீ களஞ்சியம் இல்ல..களங்கசியம். ...



3. நான் ஒட்டுமொத்த உலகத் தமிழருக்காகப் போராடுறவன் - இன்னும் எவ்வளவு பேருங்க இப்படி சொல்லி ஆலயவீங்க?
ஆந்திராவில் இருந்து சினிமா சான்ஸ் கேட்டு வர்றது... இப்போ வளர்ந்த பிறகு இங்கே இருக்கிறவன் மேல புகார் சொல்றதா? - களஞ்சியம் நு பேரு வெச்சிக்கிட்டு மாநில வேறுபாடுகளெல்லாம் பார்க்கிறதா?
சும்மா உங்களுக்கு ஒரு விளம்பரம்நு நினைச்சுக்கிட்டு வேலைய பாருங்க களஞ்சியம் சார்.



4. உலகத் தமிழருக்கு போராடுபவர் ஏன் ஆந்த்ராவில் இருந்து வந்த பெண்ணுக்கு வாய்ப்பு தந்தாராம்? உள்ளூர் தமிழ் பெண் கிடைக்கலியா? கிடைக்க மாட்டாள். ஏன்னா இவங்க யோக்கியதைதான் தெரியுமே. 



5. அவளுக்கு ஒரு ரகசிய நோய் இருக்கு. அதை இப்போ சொல்ல மாட்டேன். அப்புறமா சொல்றேன்." .. ...... ச்ச்சீய்ய்ய் ..... இதான் பெத்தவங்களுக்கும் வளர்த்தவங்க்களுக்கும் உள்ள வித்தியாசம் .....

சாலமன் தீர்ப்புக் கதை நினைவுக்கு வருகிறது (பைபிளில் வரும் என்று நினைக்கிறேன் ) ..... ஒரு குழந்தைக்கு நாந்தான் அம்மா என்று இரண்டு பெண்கள் வந்து முறையிடுவார்கள் .... அப்போது அரசர் சொல்லுவார் ... உண்மை எதுவென்று தெரியவில்லை .... அதனால் குழந்தையை இரண்டாக வெட்டி ஆளுக்கு ஒரு பாகம் தருகிறேன் என்று .... ஒரு பெண் ஓக்கே சரி என்பார் .... இன்னொரு பெண் அய்யோ ... வெட்டுவீர்களா ... வேண்டாம்.... குழந்தை அந்தப் பெண்ணிடமே இருந்துவிட்டுப்போகட்டும் என்பார் .... உடனே தாய்மையின் பிரதிபலிப்பை உணர்ந்த அரசர் அந்த இரண்டாம் பெண்ணிடம் குழந்தையைத் தந்து வெட்டுவதற்கு ஓக்கே சொன்ன பெண்ணை சிறைக்கு அனுப்புவார் !!!!


6. நான் ஒட்டுமொத்த உலகத் தமிழருக்காகப் போராடுறவன்' - ஏன்டா அடுத்த வேளை சோத்துக்கு லோட்டேரி இது உலகத் தமிழருக்காகப் போராடுறவன் எதிர் வீட்டு பாட்டிக்க போராடுறவன் ஒரு பில்டுப் வேற. அந்த பொண்ணை வச்சு எல்லாம் நல்ல தின்னிக இப்போ மாட்டிகிட பிறகு "தமிழ்காக போரடுறேன்னு ஒரு டயலாக்". பாவம் அந்த பொண்ணு, ஒழுங்கா அவல வாழவிடு இல்லானே அந்த கடவுள் உன்னை சும்மா விடமாட்டார்.


7. ஒரு சிறு வயது பெண்ணை "வாங்கி" எப்படியாவது ஒரு சினிமாக்காரன் தயவை பெற்று பிறகு அந்த பெண்ணை வைத்து எப்படியெல்லாம் சம்பாதிக்க முடியுமோ அப்படியெல்லாம் சம்பாதித்து அவளையும் நாசமாக்கி தானும் நாசமாகும் எத்தனையோ பேர் சினிமாத்துறையில் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள்.

வெளிவராத படம் ஒன்றில் நடிக்க வைத்ததற்காக அவர்கள் குடும்பம் தன்னிடம் அடிமைப்பட்டு கிடந்ததாக ஒருத்தன் சொல்வதும் தான் வளர்த்த பெண்ணுக்கு ரகசிய நோய் இருப்பதாக நேற்றைய தாய் சொல்வதும் தெளிவாக்குவது ஒன்றுதான் .... இந்த இரண்டு அயோக்கியர்களிடமும் இருந்து அந்த பெண் தப்பித்தாள்.


8. அந்த குருவிக் கூடு தலையன் மீது பெருத்த சந்தேகம்.
பாவம் அந்த பொண்ணு. 


9. களஞ்சியம் சொல்வது காமெடி. இந்த கொடுமையை செய்த இவர் ஒரு இயக்குனர் என்பது யாருக்கும் தெரியாது.உலகத்தமிழருக்கு இவரால் ஒன்றும் கிழிக்க முடியாது.

நன்றி - ஜூ வி