Monday, April 01, 2013

பதினாறு வயதினிலே. - ஓ பக்கங்கள் ஞாநி

பக்கங்கள்

பதினாறு வயதினிலே...

ஞாநி

தில்லிப் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்முறையில் கொல்லப்பட்ட நிகழ்ச்சிக்குக் கொதித்தெழுந்து, இனி பாலியல் வல்லுறவுக்கு மரணதண்டனைதான் கொடுக்கவேண்டுமென்று ஆவேசப்பட்டவர்கள் முதல், தொடர்ந்து ஒரு மாத காலம் தில்லி நிகழ்ச்சியைப் பற்றியே இடைவிடாத விவாதம் நடத்திய தொலைக்காட்சிகள் வரை, இந்த வாரம் அரசு நிறைவேற்றி இருக்கும் சட்டத்தை அதே துடிப்புடன் கண்டுகொள்ளவே இல்லை.
மக்களவையில் சோனியா, ராகுல் காந்தி உட்பட வோட்டெடுப்பின்போது இருக்கக்கூட இல்லை. மொத்தமிருந்தவர்கள் 196 பேர்தான். அதிலும் சிலர் கருத்து சொன்ன போது பிரச்னையின் தீவிரத்தை விட்டுவிட்டு மோசமான நகைச்சுவைகளை வேறு உதிர்த்திருக்கிறார்கள். பெண்களைத் தொடர்ந்து பின்பற்றி வந்து தன்னைக் கவனிக்கச் செய்யும் விதத்தில் தொல்லை கொடுக்கும் ஸ்டாக்கிங்கில் ஈடுபடுவதைக் குற்றமாக இந்தச் சட்டம் சொல்வதை ஷரத் யாதவ் கிண்டலடிக்கிறார். அப்படி செய்யாமல் எப்படி காதலிப்பது? நாம் எல்லாரும் சின்ன வயதில் அப்படி செய்தவர்கள்தானே," என்கிறார்.
கட்டாய உடலுறவு குற்றம் செய்வோருக்கு 20 வருடங்களும் அல்லது வாழ்நாள் முழுவதும் கூட சிறைத் தண்டனை விதிக்க சட்டம் வகை செய்திருக்கிறது. இதே குற்றத்தைத் திரும்பத் திரும்பச் செய்தால் மரணதண்டனையும் வழங்கலாம் என்று சொல்கிறது. முதல் குற்றம் செய்து 20 வருடம் தண்டிக்கப்பட்ட ஒருவர் அதன்பின் வெளியே வந்து திரும்ப இதே குற்றம் செய்து பிடிபட்டு மரண தண்டனைக்குரியவராகும் வாய்ப்பு குறைவு என்பதால், பலரும் ஆவேசமாகக் கோரியது போல வல்லுறவு குற்றத்துக்கு ஒரேயடியாக மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்றே ஆறுதல் அடையலாம். வல்லுறவு பெண்ணின் மரணத்தில் முடிந்தாலோ, வாழ்நாள் முழுவதும் இனி அந்தப் பெண் முழுக்க செயலற்ற நிலையில் இருக்கும் நிலை ஏற்பட்டாலோ அதையும் மரணத்துக்குச் சமமாகக் கருதி கொலைக் குற்றமாகக் கொண்டு மரணதண்டனை வரை வழங்க வகை செய்யப்பட்டிருக்கிறது.
கட்டாய உடலுறவு என்பது என்ன என்று இதற்கு முன் இருந்த வரையறை முதல்முறையாக விரிவு படுத்தப்பட்டுள்ளது. பெண்ணுறுப்பில் பலவந்தமாக ஆணுறுப்பு நுழைக்கப்படுவது மட்டுமே இதுவரை ரேப் என்று கருதப்பட்டது. உடலின் எந்தப் பகுதியில் அவ்வாறு செய்தாலும் செய்ய வைக்கப்பட்டாலும் ரேப் என்று இப்போது விரிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது.

முதல்முறையாக பெண் மீது ஆசிட்வீச்சு முதலிய தாக்குதல் நடத்தி அவரைச் சிதைப்போருக்கு, குறைந்தது பத்து வருட சிறைத் தண்டனை என்று ஆக்கப்பட்டிருக்கிறது. வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டோ, ஆசிட் தாக்குதலுக்கு ஆளாகியோ சிகிச்சைக்கு வருவோருக்கு சிகிச்சை தர மறுத்தால் ஓராண்டு சிறைவாசம். பொது இடத்திலோ தனி இடத்திலோ பெண்ணின் உடைகளைக் களைந்து அவமதிக்கும் குற்றத்துக்கு மூன்றிலிருந்து ஏழாண்டு சிறைத் தண்டனை. பெண்ணின் சம்மதத்துடனே அவளுடன் எடுத்துக் கொண்ட அந்தரங்கப் படங்களைக் கூட அவள் சம்மதம் இல்லாமல் இன்னொருவருக்குக் காட்டுவதும் குற்றமாக்கப்பட்டிருக்கிறது.
இவையெல்லாம் பொதுவாக எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்கள்தான். ஆனால் தில்லி நிகழ்ச்சி எழுப்பிய ஒரு கேள்விக்கு சட்டப்பூர்வமான தீர்வு இந்தச் சட்டத்திலும் இல்லை. பாலியல் வன்முறையில் ஈடுபட்ட ஒரு குற்றவாளி 18 வயது நிரம்பாத மைனராக இருந்தால், அவரை இதர குற்றவாளிகள் போல தண்டிக்க முடியாது. இளங்குற்றவாளிகளுக்கான சீர்திருத்த விடுதிக்கே அனுப்ப முடியும். குற்றவாளியின் வயது 15 என்றால் அவர் அங்கே மூன்று வருடங்கள் இருந்தபின் விடுதலையாகி விடுவார். அதே குற்றத்தில் ஈடுபட்ட அவருடன் இருந்த சக குற்றவாளிகள் 18 வயதைக் கடந்த மேஜர்களாக இருந்தால் அவர்களெல்லாரும் 20 வருடச் சிறையை அனுபவிப்பார்கள். இந்த முரண்பாட்டை எப்படித் தீர்ப்பது என்ற விவாதம் தில்லி சம்பவத்தில் ஒரு குற்றவாளியின் வயது மைனர் வயது என்பதால் எழுப்பப்பட்டது. இதற்கு இன்னும் தீர்வு வரவில்லை.
நம் உடனடி விவாதத்துக்கும் தொடர்ந்து மேலும் பல சட்டப்பூர்வமான மாற்றங்கள் தேவை என்று குரலெழுப்பவும் வேண்டிய வேறொரு முக்கியமான சட்டத்திருத்தம் இப்போது வந்திருக்கிறது.
ஆண்-பெண் இருவரும் தாமே விரும்பி உடலுறவு கொள்வதற்குக் குறைந்தபட்ச வயது எது என்ற வரையறைதான் அது. பல வருடங்களாக இந்தியாவில் இது 16 வயது என்றே இருந்து வருகிறது என்பதே பலரும் அறியாத ஆச்சர்யமான செய்தியாக இருக்கலாம். திருமணம் செய்வதற்கான வயது பெண்ணுக்கு 18 என்றும் ஆணுக்கு 21 என்றும் இருக்கிறது. ஆனால் உடலுறவுக்கான பரஸ்பர சம்மத வயது 16 ஆகவே இருக்கிறது. இதுதான் உலகத்தின் பெரும்பாலான நாடுகளிலும் இருக்கும் வயது விதியாகும்.
ஆனால் கடந்த பிப்ரவரியில் இந்திய அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்தில் இது 18 என்று மாற்றப்பட்டது. இப்போதைய சட்டத்தில் மறுபடியும் இதை 16 என்று ஆக்க அரசு விரும்பியது. ஆனால் பல கட்சிகள், அமைப்புகள் எதிர்த்தன. எனவே இந்த உடலுறவுக்கான பரஸ்பர சம்மத வயது 18 ஆகவே புதிய சட்டத்திலும் வைக்கப்பட்டுவிட்டது.
இது தொடர்பான சில விசித்திர நிலைமைகளைப் பார்க்கலாம். இந்த வயது விதி 16 என்று இருந்தவரை ஆண், பெண் இருவருமே திருமணமாகாமலே உறவு கொள்ளலாம் என்பதே நிலைமை. இப்போது பெண்ணின் திருமண வயதும் உடலுறவு விருப்ப வயதும் ஒன்றாகிவிட்டன. ஆனால் ஆண் மட்டும் திருமணத்துக்கான தகுதி வயது 21 என்பதால் திருமணம் செய்யாமலே மூன்றாண்டுகள் முன்பிலிருந்தே 18 லேயே விருப்ப உடலுறவு வைத்துக் கொள்ளலாம்! ஆனால் 18ல் திருமணம் செய்ய முடியாது.
உண்மையில் சமூக யதார்த்தம் என்பது என்ன? இதைப் பற்றி விவாதிக்க சில நண்பர்கள் இந்த வாரம் கூடிப் பேசினோம். இதில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பெண்கள் - இளைஞர்கள் சார்ந்த உடல், மன நலத்துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உடையவர்கள், கல்வியாளர்கள் என்று பலதரப்பட்டவர்கள் இருந்தனர். எல்லாரும் சுட்டிக் காட்டிய முக்கியமான செய்தி என்பது, சட்டம் என்னவாக இருந்தாலும், பரஸ்பர சம்மதத்துடன் இளைஞர்கள் உடலுறவில் ஈடுபடுவது 15 வயதிலிருந்தே பரவலாக நடைபெறுகிறது என்பதுதான். சிறுமிகள் பூப்பெதும் வயது சராசரியாக 11 என்றாகிவிட்ட நிலையிலும், மீடியா, சினிமா ஆகியவற்றின் காமம் சார்ந்த தாக்கம் இளம் மனங்கள் மீது மிகக் கடுமையாக உள்ள நிலையிலும், உடலுறவுக்கான வேட்கையும் வாய்ப்பும் சாத்தியமும் 13,14 வயதிலேயே தொடங்கிவிடுகின்றன.

இப்போது பரஸ்பர சம்மத வயதை 18 என்று வைத்திருப்பதால், கணிசமான இளைஞர்கள் சட்டப்படி குற்றவாளிகளாகிவிடுவார்கள். இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் எடுக்கப்பட்ட வெவ்வேறு ஆய்வுகளில், முதல் செக்ஸ் அனுபவம் என்பது 14 வயதிலேயே ஏற்பட்டுவிட்டதாக சுமார் 20 சத விகிதம் இளைஞர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 16,17 வயது என்பது ப்ளஸ் டூ முடிக்கும் பருவம். இந்த வயதில் பரஸ்பர செக்ஸ் அனுபவம் உடையவர்கள் சதவிகிதம் இன்னும் சற்றே அதிகமாக இருக்கலாம். சதவிகித அளவில் இதெல்லாம் குறைவென்றே தோன்றினாலும், மொத்த இளைஞர்களின் எண்ணிக்கையில் இந்த சதவிகிதமே லட்சோப லட்சங்களாகும்.
அவர்களை எல்லாம் 18 என்ற வயது விதி குற்றவாளிகளாக ஆக்குகிறது. பல காலமாக 16 என்றே இருந்த சட்ட சம்மத வயதை இப்போது அரசு 18 என்று மாற்றியது ஏன்? இது 18 ஆகத்தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துபவர்கள் பெரும்பாலும், திருமணத்தையும் செக்ஸையும் பிரிக்கக்கூடாது என்று கருதும் அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளுமேயாகும். அதாவது திருமணம் செய்யாமல் செக்சில் ஈடுபடுவது தவறு என்ற பார்வைதான் காரணம். அந்தத்தவறைக் கூட ஆண்கள் செய்யலாம். பெண்கள் செய்யக்கூடாது என்பதே இப்போதைய சட்ட விதி காட்டும் பார்வையாக இருக்கிறது.
ஆனால் நடைமுறையில் இந்த 18 வயது என்ற சட்டவிதி கணிசமானவர்களால் மீறப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். இந்தியாவில் எப்படி திருமணத்துக்கான தகுதி வயது விதி கணிசமான மக்களால் எப்போதுமே மீறப்பட்டு வருகிறதோ அதே நிலைதான் இதிலும்.
திருமணம் செய்து குடும்பம் நடத்த மன முதிர்ச்சியும் பொறுப்புணர்ச்சியும் தேவைப்படுவதாக எல்லாருமே கருதுகிறார்கள். பெண்ணுக்கு 18 வயதிலும் ஆணுக்கு 21வயதிலும் அது வந்துவிடுவதாக சட்டம் நம்புகிறது. உண்மையில் இருவருக்கும் அது முப்பது வயதுக்கு முன்னால் வருவதாக யதார்த்தத்தில் இல்லை. விதிவிலக்காக ஒரு சிலரே 25 வயதில் அப்படி இருக்கிறார்கள்.

மன முதிர்ச்சியும் பொறுப்புணர்ச்சியும் இருந்தால்தான் செக்சில் ஈடுபட வேண்டும் என்றே நான் கருதுகிறேன். ஆனால் அதற்கான உடல் தேவையை 30 வயது வரை தள்ளிப் போடச் சொல்வது சாத்தியமானதோ யதார்த்தமானதோ அல்ல. இந்த விஷயத்தின் அடிப்படையான சிக்கல் என்னவென்றால், இதில் எல்லாருக்கும் பொதுவான தீர்வு என்று ஒன்றைச் சட்டத்தால் ஏற்படுத்திவிட முடியாது. அவரவருக்கான தீர்வை அவரவர்கள்தான் உருவாக்கிக் கொள்ள முடியும்.
அதற்குத் தேவைப்படும் கல்வி எல்லோருக்கும் தரப்படுவதை மட்டுமே அரசும் அமைப்பும் சமூகமும் செய்ய முடியும். 11,12 வயதிலிருந்து உடலிலும் மனத்திலும் மாற்றங்கள் வரத் தொடங்கும் போது அதைப் புரிந்து கொள்ள முறையான வழிகள் இன்று எதுவும் நம் சிறுவர்களுக்கும் சிறுமியர்களுக்கும் இல்லை. மீடியாவும் நண்பர்களும் தரும் அரைகுறை ஆலோசனைகளே உள்ளன. எனவே ஆறாம் வகுப்பிலிருந்து கட்டாயமான நலக் கல்வி தனிப்பாடமாக வருடம் முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் நண்பர்கள் விவாதத்தின் ஒருமித்த ஒற்றைக் கருத்தாக இருந்தது. நலக்கல்வி என்றால் தன் உடலைப் புரிந்து கொள்வது, உள்ளத்தைப் புரிந்து கொள்வது இரண்டுமாகும். ஒவ்வொரு வகுப்பிலும் அந்தந்த வயதுக்கேற்ப இந்தக் கல்வி படிப்படியாகச் செய்யப்பட வேண்டும்.
ஏனென்றால், இத்தனை வருட காலமாக அரசு உடலுறவுக்கான பரஸ்பர சம்மத வயதை 16 என்று வைத்திருந்ததை இப்போது செயற்கையாக 18 என்று நிச்சயம் சட்டமீறல் செய்யப்படக்கூடிய ஒரு விதியாக மாற்றியிருக்கிறது. ஆனால் உடலைப் பற்றியோ உறவைப் பற்றியோ எந்தக் கல்வியும் தன் குழந்தைகளுக்குத் தராமல் விட்டுவிட்ட அவலம்தான் இருந்து வந்திருக்கிறது. இனி அது உதவாது. விழித்துக் கொண்டு மாற்றங்களுக்கான கல்வியை நாம் செய்யத் தொடங்காவிட்டால், வரும் நூற்றாண்டுகளில் இளைஞர்களின் தேசம் என்ற பெயர் தாங்கப் போகும் இந்தியா பலவீனமான இளைஞர்களின் விடுதியாகி விடும்.


நன்றி - கல்கி

முதல் இரவில் சோம்பேறித்தம்பதி - ( ஜோக்ஸ்)

1. டியர்.ஏதாவது பேசுங்க.


சேட்டு - எதுக்கு பேசி டைம் வேஸ்ட் பண்ணனும் ? காலம் பொன் போன்றது.கடமை கண் போன்றது


-------------------------


2. வீணாப்போனவனே ன்னு யாரையும் திட்டிடாதீங்க.நான் எப்போ வீணா கிட்டே போனேன் னு கேட்டுட்டா ?




--------------------------


3. உங்களுக்குத்தெரிஞ்ச பிகரு பேரு ஐஸ்வர்யா னு இருந்தா அவங்க பேரை நிதானமா கூப்பிட்ராதீங்க .அடி விழும் # ஐஸ் வர்யா?



------------------------

4. மாப்ளை.என் பொண்ணை பூ மாதிரி பார்த்துக்கனும்னு ஒரு பேச்சுக்கு சொன்னேன்.அடிக்கடி அவமுகத்துல தண்ணீர்தெளிச்சு தூங்கவேவிடமாட்டீங்கறீங்களாம்

-----------------------



5. பேசன்ட்கனவு ஏன் கலர் ல வர்றதில்ல?


DR - மிடில் கிளாஸ் பேமிலி.லோ பட்ஜெட் ட்ரீமா இருக்கும்




------------------------------


6. டாக்டர்.தூங்கும்போது கண் தெரிய மாட்டேங்குது.

டேய் கபோதி.என்ன உளர்றே ? 


ஐ மீன் கனவு தெரிய மாட்டேங்குது.


-----------------------------------


7. டியர்.உங்க காதல் நிஜமா பொய்யா னு உங்க கண்ணைப்பார்த்தே கண்டுபிடிச்சுடுவேன்.



கிழிச்சே.நான் தான் கூலிங் கிளாசைக்கழட்றதே இல்லையே



----------------------------------------


8. ஒரு காலத்தில் மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது.


ஸ்ரீ தேவிக்கு ஆப்பு வெச்ச ஊர்னு நினைச்சேன்


------------------------------


9. டாக்டர் . அடிக்கடி கனவு வருது.இதுக்கு என்ன அர்த்தம்? 


நீ சரியான தூங்குமூஞ்சின்னு அர்த்தம்.எந்திரி முதல்ல



-------------------------


10. மிஸ்.நீங்க சீமப்பசு ரவளி மாதிரி இருக்கீங்க. 


எவ அவ ?


ஓல்டு ஆக்ட்ரஸ். 


ஓ.அப்போ என்னை கிழடுன்னு சொல்றியா?



-------------------------


11. 'வாட் ஆர் யூ டுயிங் நவ் டியர்.? 



மல்டி சேட்டிங் வித் 5 கேர்ள்ஸ் வித்தவுட் எனி கில்டி பீலிங்க்ஸ்




-------------------------------


12. பிஎஸ்சி அக்ரி படிம்மா. 



சாரி.ஐ டிஸ் அக்ரி



------------------------------


13. டியர்.என்னதான் செல்லம்னாலும் பொறுக்கினு கூப்பிடலாமா? 


கண்டவனெல்லாம் கூப்பிடறான்.கட்டிக்கப்போறவ நான் கூப்பிடக்கூடாதா?




---------------



14. டாக்டர், டெயிலி உணவுல ரசம் சேர்த்துக்கிட்டா நல்லதுன்னு சொன்னீங்க, ஆனா சுகர் வந்துடுச்சே? 


அதிரசம் சாப்பிட்டிருப்பே



------------------------------


15. இன்ஸ்பெக்டர்.என்னை ஒரு பொண்ணு ரேப் பண்ணிடுச்சு .



நெட் அடிக்டட் எஸ் ஐ - லிங்க் இருக்கா?




-----------------------


16. முதல் இரவில் சோம்பேறித்தம்பதி # 



அத்தான் முதல்ல விளக்கை ,பின் என்னை அணைங்க.



ஹூம்.அதுக்கு எந்திரிக்கனும்.அது பாட்டுக்குஎரிஞ்சுட்டுப்போகுது 




--------------------------


17. டியர்.உன்னை டைவர்ஸ் பண்ணலை. உனக்குக்குடுத்த ஆதரவை விலக்கிக்கறேன்.ஆனா வீட்டுக்கு டெயிலி வருவேன்.ஹி ஹி



----------------------------------


18. டாக்டர்.எதையும் 3 டைம் சொன்னாதான் எனக்கு புரியுது. 



சொன்னது புரியல.என்ன சொன்னீங்க? 



----------------------------


19.  டியர்.இன்னைக்கு இயற்பியல் அறிஞரான ஆல்பர்ட ஐன்ஸ்டீன் பிறந்த தினம். அதைக்கொண்டாட பிஸிக்கலா ஒரு டச் வெச்சுக்கலாமா?





------------------------


20.  லேடி டேமேஜர் -  யூ ஆர் டிஸப்பாய்ண்டட் மீ . 




மேடம், நீங்க தான் என்னை அப்பாய்ண்ட் பண்ணீங்க, நான் உங்களை எதுவுமே செய்யலையே?




--------------------------------


21. மிஸ்.ஐ லவ் யூ.பாசிட்டிவ்வா ஏதாவது சொல்லுங்க.



 ம் எனக்கு ஹெச் ஐ வி பாசிட்டிவ் # அய்யய்யோ 



-----------------------


22. கவர்மென்ட் ஆபீசர்ஸ் ஏன் வேலை நிறுத்தத்துல கலந்துக்கலை?



 வேலை செஞ்சாத்தானே வேலை நிறுத்தம் பண்ண முடியும்? 



------------------------------------



23. டியர்.இத்தனை நாளா உனக்கு சமைக்கத்தெரியும்னு நான்  தப்பா புரிஞ்சுட்டேன்..



சரியாவோ தப்பாவோ எப்டியோ என்னை புரிஞ்சுக்கிட்டா சரி 



---------------------


24. மிஸ்.நாம 2 பேருமே பி எஸ் சி பிசிக்ஸ்.நம்ம லவ் க்கு நீங்க ஏன் எஸ் சொல்லலை? 



சாரி.நமக்குள்ளே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகல 



-----------------------



25. எனக்கு பதிலா யாராவது பரீட்சை எழுதுவாங்களா.? எழுத சோம்பேறித்தனமா இருக்கு



 நல்ல வேளை .உங்களுக்கு மேரேஜ் ஆகலை. 



---------------------------------
 டி வி டு டே டைம் டேபிள் 


டி வி டு டே டைம் டேபிள்

Sunday, March 31, 2013

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை - திடீர்த்திருப்பம்

3. ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி பணியாளர்கள் போராட்டம் ! ( படங்கள் ) 
 
 
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில்,‘ஆலையை தொடர்ந்து இயக்கவேண்டும்’ என்கிற கோரிக்கையை வலியுறுத்தி ஸ்டெர்லைட் ஆலையின் பணியாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

‘ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும்’ என்கிற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு தரப்பிலிருந்து போராட்டங்கள் நடத்தப்பட்டதை தொடர்ந்து, ஆலையை மூடிவிடுவதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியம் உத்தரவிட்டது.

இப்போது ‘ஆலையை தொடர்ந்து இயக்கவேண்டும்’ என்கிற கோரிக்கையை வலியுறுத்தி ஸ்டெர்லைட் ஆலையின் பணியாளர்கள் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.

தூத்துக்குடியில் கடந்த 1994 ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதிலிருந்தே அந்த ஆலைக்கு எதிரான போராட்டங்களும் துவங்கின. அத்தனை எதிர்ப்புகளையும் சமாளித்த அந்த ஆலை நிர்வாகம், கடந்த 23 ஆம் தேதி, சல்பர்டை ஆக்ஸைடு அதிகமாக வெளியேறியதை கட்டுப்படுத்த தவறியது.

அதனைத்தொடந்து ஆலைக்கு எதிரான போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்தது.வரும் நாடாளுமன்ற தேர்தலில் இதன் பாதிப்பு தெரியும் என்கிற உளவுத்துறையின் தகவல் அரசு கவனத்துக்கு சென்றது.

அதனைத்தொடர்ந்து எப்பொழுதுமே கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பிலிருந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தவறவிட்டு விழித்துக் கொண்டதுபோல் ‘ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதனிடையே  ஸ்டெர்லைட் ஆலையில் வேலைபார்த்து வரும் பணியாளர்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாசுக்கட்டுபாட்டு வாரிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.

இந்நிலையில், இன்று பணியாளர்கள் குடும்பத்தார் உட்பட இரண்டாயிரம் பணியாளர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில்,"ஆலையின் மூலம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றால் அந்த பாதிப்பை அகற்றுவது எப்படி என்று பார்க்க வேண்டும்? அதற்கென்று உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை முடுக்கிவிட்டு கண்காணிக்க செய்ய வேண்டும். அதைவிட்டுவிட்டு ஒட்டுமொத்தமாக மூடிவிடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?.

ஸ்டெர்லைட் ஆலையை நம்பியிருக்கும் சுமார் இருபதாயிரம் குடும்பத்தினர் வாழ்வாதாரம் என்னாகும்? எனவே ஆலையை மூடாமல் தொடர்ந்து இயங்க செய்யவேண்டும். சட்டவிதிமுறைப்படி இயக்க கடுமையாக கண்கானிக்க வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

ஆலைக்கு எதிராகவும் ஆலைக்கு ஆதரவாகவும் நடந்துவரும் போராட்டங்களை பார்த்து சிரிக்கவா அழுகவா என விழித்துக் கொண்டிருக்கிறார்கள் தூத்துக்குடி பொதுமக்கள்.

- எஸ்.சரவணப்பெருமாள்

படங்கள்: ஏ.சிதம்பரம்  
 
நன்றி - விகடன்
 

 
 
. தூத்துக்குடி: ரசாயனவாயு கசிந்து, பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கப்பட்ட பிரச்னையில், தொடர் போராட்டங்கள் நடந்ததையடுத்து, காற்று மற்றும் நீரை மாசுபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை, நேற்று மூடப்பட்டது.

தூத்துக்குடியிலிருந்து, 15 கி.மீ., தூரத்தில், மதுரை பை-பாஸ் ரோட்டில், "வேதாந்தா' என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான, ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை உள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து, தாமிர தாதுவை இறக்குமதி செய்து, அதை உருக்கி, தாமிர பிளேட்டுகள், அதைச்சார்ந்த பொருட்களாக மாற்றி, இங்கிருந்து, வெளியிடங்களுக்கு அனுப்பப்படுகிறது.
 
 
 கடந்த, 1993ல், இந்த ஆலைக்கு, முதல்வராக இருந்த ஜெ., அடிக்கல் நாட்டினார். 1996ல், இங்கு, உற்பத்தி துவங்கப்பட்டது. இந்த ஆலை, 5,000 பேருக்கு நேரடியாகவும், 10 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்கிறது. இங்கு, கந்தக அமிலம் உற்பத்தி உள்ளிட்ட பல பிளான்ட்டுகள் உள்ளன. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இந்த ஆலையை மூடவேண்டும் என, ம.தி.மு.க., பொது செயலர் வைகோ மற்றும் போராட்டக் குழுவினர், 17 ஆண்டாக, தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
 
 
 வைகோ, சமூக அமைப்புகள் தொடர்ந்த வழக்கில், சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாகக்கூறி, இந்த ஆலை இயங்க, 2010 செப்., 28ல், சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. அதை எதிர்த்து ஆலை நிர்வாகம், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அதையேற்று, 2010 அக்., 18ல், ஐகோர்ட் உத்தரவிற்கு, இடைக்கால தடைவிதித்த சுப்ரீம் கோர்ட், ஆலை இயங்க அனுமதியளித்தது. 2012 நவ., 6ல், ஆலை தொடர்ந்து இயங்குவதற்கான அனுமதியை, சுப்ரீம் கோர்ட் நீடித்தது. இந்த ஆலையை மூடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில், வைகோ தொடர்ந்த வழக்கில், விசாரணை முடிந்த நிலையில், ஏப்., 2ல், தீர்ப்பு கூறப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

திடீர் வாயு கசிவு: இதனிடையே, மார்ச் 23ம் தேதி அதிகாலை, இந்த ஆலையின், கந்தக அமில முதல் பிளான்ட், பழுது சரி செய்யப்பட்டு இயக்கப்பட்டபோது, அதிலிருந்து, கந்தக-டை-ஆக்சைடு வாயு கசிந்து காற்றில் கலந்தது. அந்த காற்றை சுவாசித்த, தூத்துக்குடி நகர், புறநகர் பொதுமக்கள் பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல், இருமல் போன்ற உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இந்த ஆலையை மூட வேண்டுமென, பொதுமக்கள், கலெக்டர் ஆஷிஷ்குமாருக்கு மனு அனுப்பினர். கந்தக-டை-ஆக்சைடு வாயு கசிந்த, பிளான்டை ஏன் மூடக்கூடாது என, ஆர்.டி.ஓ., லதா, ஆலை நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். ஆலையை ஆய்வு செய்த, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், உறுப்பினர் செயலர், விளக்கம்கேட்டு, தனியாக நோட்டீஸ் அனுப்பினர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, வைகோ தலைமையில், போராட்டக் குழுவினர், மார்ச் 25ல், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடவும், மார்ச் 28ல், ஆலையை முற்றுகையிடவும் முயன்றனர். கடைகள் அடைக்கப்பட்டன. பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் போராடின. இதனிடையே, ஆலை தரப்பினர் தந்த விளக்கம் திருப்தி இல்லாததாலும், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, கந்தக-டை-ஆக்சைடு அதிகளவு கசிந்து, பொதுமக்களின் உடல்நலம் பாதித்து, காற்று, நீரை மாசுபடுத்தியதாக குற்றம் சாட்டிய, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் கார்த்திகேயன், பொதுமக்களின் புகார், கலெக்டர் அறிக்கை அடிப்படையில், காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் சட்ட படி, ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட, நேற்று முன்தினம் இரவு, ஆலை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

அதன் நகல், கலெக்டர், மின் வாரியம், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பப்பட்டது. அதை ஏற்று, ஆலைக்கான மின் இணைப்பை, மின் வாரியத்தினர் துண்டித்தனர். கலெக்டர் உத்தரவுப்படி, நேற்று காலை, ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்ற ஆர்.டி.ஓ., லதா, தாசில்தார் ஆழ்வாரம்மாள், மாசு கட்டுப்பாடு வாரியத்தினர், ஆலையை மூட எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர். அதன்படி, ஆலையிலுள்ள அனைத்து பிளான்ட்டுகளிலும், உற்பத்தி நிறுத்தப்பட்டு, அவை படிப்படியாக மூடப்பட்டன. தொழில்நுட்ப காரணங்களால், ஆலையை முற்றிலும் மூட, 30 மணி நேரத்திற்கும் மேலாகுமென, அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொண்டாட்டம்: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு, வரவேற்பு தெரிவித்து, பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், பொதுமக்கள், வியாபாரிகள், போராட்டக் குழுவினர், தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது, மக்களின், 17 ஆண்டு கால தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என, அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர். இதனிடையே, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின், இந்த உத்தரவை எதிர்த்து, ஆலை தரப்பில், ஐகோர்ட்டில், ஓரிரு நாளில், மேல்முறையீடு செய்யப்படுமென, எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வருக்கு வைகோ பாராட்டு: "ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுத்துள்ளதற்கு, தமிழக முதல்வருக்கு பாராட்டுகள்' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கூறினார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள, தாமிர உருக்கு ஆலையான, ஸ்டெர்லைட் ஆலையால், நிலம், நிலத்தடி நீர், காற்று மண்டலம் ஆகியன நஞ்சாக மாறி வருகிறது. கடல்வாழ் உயிரினங்களும், விவசாய நிலமும் வெகுவாக பாதித்துள்ளது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என, 17 ஆண்டுகளாக மக்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், மார்ச் 23ம் தேதி, ஆலையிலிருந்து வெளியேறிய நச்சுப் புகையால், தூத்துக்குடி பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
 
 
 
 பல இடங்களில், மரம், செடி, கொடிகள் நிறம் மாறி கருகிப் போயின. இதையடுத்து, ஆலையை மூடக் கோரி, கடந்த மூன்று நாட்களாக, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் கோரிக்கையை ஏற்று, ஸ்டெர்லைட் ஆலையை மூடும் சரியான நடவடிக்கையை, முதல்வர் ஜெயலலிதா எடுத்துள்ளதற்கு, பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஆலை மூடப்பட்டதால், தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரவும், அரசைக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
 

ஆலையை திறக்கக்கோரி மனு: மூடப்பட்ட, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை, மீண்டும் திறக்க வேண்டுமென வலியுறுத்தி, அதன் பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரிய கோட்டப் பொறியாளர் கோகுல் தாசிடம், மனு கொடுத்தனர். ஆலை மூடப்பட்டதால், தாங்கள் வேலையிழந்து, தங்களின் குடும்ப வாழ்வாதாரம், கடுமையாக பாதிக்கப்படுமென, அதில் குறிப்பிட்டுள்ளனர். அது போல, தொழிலதிபர்களின் கூட்டமைப்பும், இந்த ஆலையை திறக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
 
நன்றி - தினமலர்


கண்பேசும் வார்த்தைகள் -- சினிமா விமர்சனம் ( தினமலர் )

தினமலர் விமர்சனம்



விஜய் டி.வியின், "மதுரை, "சரவணன் மீனாட்சி மெகா தொடர்களின் நாயகர் மிர்ச்சி செந்தில் கதாநாயகராக அதுவும், வாகைசூட வா இனியா ஜோடியாக தமிழ் சினிமா நாயகராக அடியெடுத்து வைத்திருக்கும் படம் தான் "கண்பேசும் வார்த்தைகள்".

திருவாரூரில் இருந்து சொந்த ஊர் வெறுத்துபோய் சிங்கப்பூர் சிட்டிசன் ஆகும் முடிவில், சிங்கப்பூரில் வேலை பார்க்கும் நண்பனைத் தேடி, நாடி போகிறார். அங்கு நண்பர் முருகதாஸின் உதவியால் தன் படிப்புக்கு ஏற்ற வேலையை தேடிக் கொள்ளும் செந்தில், சிங்கப்பூர் சிட்டிசன்னாகும் முயற்சியில் தீவிரமாக இறங்குகிறார். வெளிநாட்டினர் சிங்கப்பூர் குடியுரிமை பெறுவது அவ்வளவு எளிதல்ல... அதற்கு ஈஸியான ஒரே வழி சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற பெண்ணை காதலித்து கரம்பிடிப்பது தான் என்பதை ஆரம்பத்திலேயே உணரவும் செய்கிறார். அதன் விளைவு சிங்கப்பூரில் ஒரு ஆடை அலங்கார கடையில் வாழ்க்கை வாழும் இனியாவை, சிங்கப்பூர் சிட்டிசன் என கருதி காதலிக்க தொடங்குகிறார். கிட்டத்தட்ட ஹீரோ செந்திலின் எண்ணத்திலேயே தன் முரட்டு அக்கா புருஷனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கை படாமல் தப்பிக்க, சிங்கப்பூரில் வேலை பார்க்கும் இனியாவும் ஒன்றிரண்டு சந்திப்புகளில் செந்திலுடன் காதல் வயப்படுகிறார். இவர்களது காதலுக்கு ஆடுகளம் காமெடியன் முருகதாஸும், ஒரு கல் ஒரு கண்ணாடி ஜாங்கிரி மதுமிதாவும் உதவுகின்றனர். செந்திலுக்கு சிங்கப்பூர் சிட்டிசன் கிடைத்ததா.? இனியா முரட்டு மாமனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கை படாமல் தப்பித்தாரா...?! என்பது "கண்பேசும் வார்த்தைகள்" படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!






திருவாரூரில் இருந்து சிங்கப்பூர் செல்லும் இளைஞனாகவே யதார்த்தமாக பாத்திரத்தோடு ஒன்றி நடித்திருக்கிறார் மிர்ச்சி செந்தில்! இவரும், முருகதாஸும் சிங்கப்பூர் எம்பஸியில், சிங்கப்பூர் சிட்டிசனாக வாழ விரும்புவதற்காக... "எங்க ஊரில் கோயிலுக்கு போனா செருப்பு கா‌ணோம், ஹாஸ்பிட்டலுக்கு போனா உறுப்பு காணோம், ஆசிரமத்திற்கு போனா கற்பு காணோம்..." என்று பேசும் காமெடி பன்ச்சுகள் கலக்கல்!

மார்டன் கெட்டப்பில் வாகைசூட வா இனியா கொஞ்சம் செயற்கையாக தெரிகிறார். ஒரு பாடல் காட்சியில் கிளாமர் தூக்கலாக மிர்ச்சி செந்திலுடன் ஒட்டி உரசுவது கவர்ச்சி பிரியர்களுக்கு செம விருந்து. இனியா - செந்தில் காதலும், இனியாவின் மார்டன் கெட்-அப் மாதிரியே செயற்கையாக தெரிவது "கண்பேசும் வார்த்தைகள்" படத்தின் பலவீனங்களில் ஒன்று!

ஜாங்கிரி மதுமிதா, முருகதாஸ், லிவிங்ஸ்டன், நான் கடவுள் ராஜேந்திரன், கதிரவன், கந்தவேலு உள்ளிட்டவர்கள் படத்திற்கும் தங்கள் பாத்திரத்திற்கும் பலம் சேர்த்திருக்கின்றனர்.

புதியவர் ஷாமன்த்தின் இசை, நாககிருஷ்ணனின் ஒளிப்பதிவு, ஆர்.சரவணக்குமாரின் கதை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் இருந்தும், ஆர்.பாலாஜியின் எழுத்து - இயக்கத்தில் ஏதோ ஒன்று இல்லாத குறை!

ஆக மொத்தத்தில், "கண்பேசும் வார்த்தைகள்" - "பேசுவதும், பேசாததும்" ரசிகர்களின் கையில் இருக்கிறது!


கலைஞரைப்போல் ஜெ வும் ஈழ விஷயத்தில் நாடகமாடுகிறாரா?

ஜெயலலிதாவின் நாடகம் ஆரம்பம்!
கொதிக்கும் மாணவர்கள்
மக்களுக்கான மாணவர்களின் போராட்டத்தைத் தேர்வும் விடுமுறையும் மட்டுப்படுத்திவிடும் என்று சிலர் எதிர்பார்க்கிறார்கள். அது தவறு என்று உறுதிப்படுத்துகிறது மாணவர்களின் எழுச்சி. 


சென்னை மெரினா தபால் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் பங்குகொண்டு இருந்த மாணவர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திவ்யா, ''எக்ஸாம், இன்டர்னல் மார்க், எதிர்காலம் என எங்களை மறைமுகமாக மிரட்டி, போராட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடலாம் என, சில அரசியல் கட்சிகள் நினைக்கின்றன. அவர்கள் கனவு ஒருபோதும் பலிக்காது. நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம்.


 எங்கள் போராட்டம் தொடரும். இது, முழுக்க முழுக்கத் தமிழக மாணவர்களின் உணர்ச்சிப் போராட்டம். 'இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும். ராஜபக்ஷேவை சர்வதேசக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றித் தண்டனை பெற்றுத் தர வேண்டும். வரும் ஜூன் மாதம் ஐ.நா-வில் நடக்கும் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியாவே தீர்மானம் கொண்டுவந்து அங்கு நடந்தது இனப்படுகொலை என அறிவிக்க வேண்டும். இலங்கையில் தனி ஈழம் அமைக்க, பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ - இதுதான் எங்கள் கோரிக்கை.


அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவது ஓட்டு வங்கியை நிரப்புவதற்காக. இவர்கள் நாடகங்களாலும் வார்த்தை ஜாலங்களாலும் ஒரு தலைமுறையே அழிந்துவிட்டது.  தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார் ஜெயலலிதா. தேர்தல் நேரத்தில் கூடங்குளத்துக்குச் சென்று, 'எங்களுக்கு வாக்களித்தால் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் நான் உங்களில் ஒருத்தியாக இருப்பேன்’ என்றார்.


 தேர்தலில் வென்றதும் அந்த மக்களின் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தினார். இது, பச்சைத்துரோகம் இல்லையா? இதே துரோகத்தைத்தான் இலங்கைத் தமிழர் பிரச்னையிலும் செய்கிறார். கருணாநிதியின் கபட நாடகம் முடிந்து இப்போது ஜெயலலிதாவின் நாடகம் ஆரம்பமாகிவிட்டது. இதற்கு முன்னர்தான் இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க வேண்டும் என இதே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். அந்தத் தீர்மானம் என்ன ஆனது?


இலங்கையில் வாழும் நம் மக்கள் மீது ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், 'சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்காவிட்டால், தமிழகத்தில் இருந்து எந்த வரியும் செலுத்த மாட்டோம். மத்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவோம்’ என, மத்திய அரசுக்கு கெடு விதிக்கட்டும்.


 இரண்டு கேரள மீனவர்களைக் கொன்றதற்காகக் கொதிக்கும் பிரதமர் மன்மோகன், தமிழகத்தில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொன்று குவிக்கும் இலங்கையை நட்பு நாடு என்கிறார். தமிழ் மக்களைக் கோமாளிகள் என அரசியல் சக்திகள் நினைக்கின்றன. இலங்கையில் இனப்படுகொலை செய்யப்​பட்டதற்கும் தமிழ்ப் பெண்களின் கற்பு சூறை​யாடப்​பட்டதற்​கும்காரணம், தமிழகத்தில் மாறி மாறி ஆட்சிசெய்த கட்சிகளின் துரோகம்தான். தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் செய்தது பச்சை இனத் துரோகம்.


எங்கள் போராட்டம் தொடரும். இதில் எந்த மாற்றமும் இல்லை. இனி, போராட்டத்தின் வடிவை மாற்றிக்கொள்வோம். ரயில் நிலையம், பேருந்து நிலையம் என மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் துண்டுப் பிரசுரம் கொடுப்போம். சென்னையில் இருந்து கன்னியாகுமரியில் இருக்கும் கடைக்கோடி தமிழன் வரை சென்று ஈழத் தமிழரின் அவலத்தைச் சொல்வோம். '' என்றார் உறுதியான குரலில்.


முதன் முதலில் போராட்டத்தைத் தொடங்கிய சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள், மேலும் எழுச்சியோடு தொடர்ந்து போராடிவருகிறார்கள். அண்ணா நகர் ரவுண்டானாவை முற்றுகையிட்ட அனைத்துக் கல்லூரி மாணவிகளுடன் சேர்ந்து குரல்கொடுக்க ஆரம்பித்த லயோலா மாணவர்களைக் கைதுசெய்து செனாய் நகரில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்துவைத்தது காவல் துறை. மாலையில் விடுதலையாகி வெளியே வந்த செம்பியன், ''மாணவர்கள் தொடங்கிய இந்தப் போ​ராட்டம், இப்போது மக்கள் போராட்டமாக மாறிவருகிறது. எங்கள் போராட்டம் எப்போதும் அற வழியைப் பின்பற்றும். இலங்கையில் விடியல் பிறக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்'' என்றார்.



தொடர்ந்து பேசிய ஜோ.பிரிட்டோ, ''எங்​களுக்குக் கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றோ, எங்கள் சொந்த நலனுக்காக​வோ போராடவில்லை. நம் இன மக்களுக்காகப் போராடுகிறோம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி, மாணவர்களின் போராட்டத்தில் வன்முறையைக் கலக்க நினைக்கிறது. திருச்சியில் அத்தனை மீடியாவுக்கும் முன்னால் அரிவாள், கம்பு கட்டை​களுடன் வந்த காங்கிரஸ்காரர்கள் மாணவர்களைக் காட்டுமிராண்டித்தனமாக அடித்தனர். கைகட்டி வேடிக்கை பார்த்தது காவல் துறை. அற வழியில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது வன்​முறையை அவிழ்த்துவிடுவது நியாயமா?'' என்றார் ஆவேசமாக.



மாணவர்களின் தன்னலமற்றப் போராட்​டத்துக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்.


- நா.சிபிச்சக்கரவர்த்தி 

படங்கள்: வி.விஷ்ணு

 readers view"

1. இவர்கள் சொல்வதெல்லாம் உண்மை. ஆனால் மத்திய அரசில் ஆட்சியில் இல்லாத கட்சி, மற்றும் இந்த பிரச்சனையில் எப்போதும் ஒரே கொள்கை உள்ள கட்சிகள், அமைப்புகள் இவற்றின் ஆதரவு தேவை. அவர்கள் ஆதரவின்றி மத்திய அரசுக்கு "அழுத்தம்" தர இயலாது. மொத்த போராட்டமும் இந்த விஷயத்தில் செயலாற்றக் கூடிய மத்திய அரசை நோக்கி மட்டுமே இருக்க வேண்டுமே தவிர அனைத்து தரப்பினரையும் எதிர்த்து தனிமையில் போராடும் நிலை ஏற்பட கூடாது. மாணவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம். 



2.  தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் செய்தது பச்சை இனத் துரோகம்."

இது 100% உண்மை. மாணவர்கள் ரொம்ப தெளிவாகத்தான் இருக்கிறார்கள். இவர்கள் போராட்டத்தால்தான் மத்திய அரசில் இருந்து தி.மு.க வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது. அதேபோல மம்மியையும் சட்ட மன்றத்தில் தீர்மானம் போட வேண்டிய காட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். தாத்தா செய்த துரோகம் வெளிப்படையாக தெரிந்தது. இனிமேல் மம்மி போடும் வேஷமும் ஒன்னு ஒண்ணா தெரியவரும். 



3.  ஜெயலலிதாவின் நாடகம் ஆரம்பமாகிவிட்டது..... நடுநிலை என்று காமிக்கரதுக்க்காக மாணவர்கள் ஜே. பேரையும் இதுல சேர்க்க வேண்டியதா போச்சு. தனி ஈழம் வேண்டும் என்பதை 2009 தேர்தல் அறிக்கைல ஜே. வாக்குருதி குடுத்திருக்காங்க - இது வரைக்கும் எந்த தலைவரும் குடுக்காத வாக்குறுதி. ஆனால் மக்கள் 2009ல துரோக கும்பலுக்கில்ல ஓட்டு போட்டு டெல்லிக்கு அமைச்சு வைச்சாங்க 



4. அனைத்து கல்லூரி மாணவர்களும் ஒரு அமைப்பின் கீழ் வர வேண்டும், அபோதுதான் இந்த போராட்டம் வெற்றி பெரும்....இல்லை என்றால் சிங்கம் 5 மாடு கதைதான் !!1

Saturday, March 30, 2013

அடுத்த பிரதமர் யார் ?நரேந்திர மோடியா? ஜெ வா? - ஜூ வி சர்வே - கலைஞர் பதட்டம்

ஜூ.வி. நிருபர் பட்டாளம் நடத்திய, 'மக்கள் மனசு’ என்ற தலைப்பிலான சர்வேயின் முதல் பகுதி கடந்த இதழில் வெளியானது. வாசகர்களிடம் இருந்து சர்வேவுக்கு ஏகோபித்த வரவேற்பு. அரசியல் வட்டாரத்தில் இந்த சர்வே அதிர்வலைகளை உண்டாக்கியது. 5,369 நபர்கள் பங்கேற்ற அந்த சர்வேயின் தொடர்ச்சி இது. 


காதலை எதிர்க்கும் ராமதாஸின் நடவடிக்கை சாதி அரசியலே என்பது பலரும் டிக் அடித்திருக்கும் பதில். கலப்புத் திருமணங்களை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஆரோக்கியமானது.  நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு சரிசமமான போட்டியிருக்கும் என 49 சதவிகிதம் பேரும் மகத்தான வெற்றி பெறும் என 30 சதவிகிதம் பேரும் கருத்து சொன்னார்கள்.


அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு நரேந்திர மோடியை 58 சதவிகிதம் பேர் ஆதரித்தனர். அவருக்கு அடுத்தபடியாக, ஜெயலலிதா இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது அதிகப்படியானவர்களின் கருத்து. எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த்தின் செயல்பாட்டுக்கு மக்களிடையே பெரிய வரவேற்பு இல்லை.


சர்வே முடிவுகளைப் பாருங்கள் உங்களுக்கே தெரியும்...


 
மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகல், ஜெயலலிதாவைத் தவிர அ.தி.மு.க-வில் தலைமை ஏற்கும் பொறுப்பு யாருக்கு இருக்கிறது? மதுவிலக்கு சாத்தியமா? தமிழக அமைச்சர்களின் செயல்பாடு என விறுவிறுப்பான கேள்விகளின் முடிவுகள், அடுத்த இதழில்...


thanx - vikatan 


readers views 


1.
அடுத்த பிரதமராக நரேந்திர மோடி வரவேண்டும். அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கூட்டணி ஏற்படலாம் - ஆனால் அதில் பா.ம.க. இருக்காது. தேமுதிக நீர்த்துப்போவது - பாதி ஆளுங்கட்சியின் சதிச்செயலால்; மீதி செயல்படாத, குடும்ப ஆதிக்கத்தைத் திணிக்கும், கட்சியினரை மதிக்காத விஜயகாந்தால்! அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில், தேமுதிக தனித்து போட்டியிட்டாலும், மற்றவர்களுடன் கூட்டணி சேர்ந்தாலும் கரையேற வாய்ப்பில்லை.



2. பாமக ராமதாஸ் ,இப்போ திடீர் என்று ஈழ பிரச்சினை முன்னிறுத்தி உள்ளார். வரும் தேர்தலில் ஈழ பிரச்சினையைத்தான் இவை கையில் எடுப்பாராம். மக்கள் டிவியில் ஈழ பிரச்சினை பற்றி தினமும் தொடர் செய்தி வருகிறது.இந்த ஆள் என்ன செய்தாலும் , மக்கள் இவரை மறந்து விட்டார்கள் என்று தெறியாது போல் இருக்கிறது.இவர் குண்டு சட்டியில் குதிரை விட்டுக்கொண்டிருக்கிறார். முகவை விட இவர் குடும்ப பாசம் உள்ளவர். சுயனலத்திளிவர் முகவை மஞ்சி விட்டார். ஏழை வன்னியர்களை இவர் ஏமாற்றலாம் தமிழர்களை ஏமாற்ற முடியுமா?.



3. மோடி ....மோடி ............இப்படி எழுதி எழுதி .....எதோ மோடியை இந்தியாவை காக்க வந்த ரட்சகன் மாதிரி ஆக்கியதில் இந்த தரம் கேட்ட மீடியாக்கள் முக்கிய பங்கு.....................



4. ஜூவியின் சர்வேக்களை ஜூவி தான் பாரட்டிக்கொள்ளவேண்டும் . இதற்க்கு முந்தய தேர்தல் நேர சர்வேக்கள் பிசுபிசுத்து போனது ஞபகம் இருக்கிறது . அதிலும் ஜூவியின் சர்வேக்களை ஜுவியே பாராட்டிக்கொல்வதேல்லாம் ரொம்ப ஓவர்