Sunday, March 29, 2015

வாரமலர் வாசகியின் டி சர்ட் வாசகம். -அய்யய்யோ!படிக்காமயே இருந்திருக்கலாம்

1  எந்தப்பொண்ணு கிட்டே கடலை போடறதுக்கும் முன் நீங்க யாரோட ரசிகை?னு முன் ஜாக்கிரதையா கேட்டு வெச்சுக்குவான் நெட் தமிழன்



============




2 தாலி கட்டின பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணக்கூடாது எனும் உயர்ந்த கொள்கைக்காகத்தான் இப்பவெல்லாம் தாலியே கட்டாம லிவ்விங் டுகெதர் வாழ்க்கை?




==============



3 கெட்டு போகாத ஒரே உணவு பொருள் தேன்.னு தெரிஞ்சும் சும்மா ஆடம்பரத்துக்காக பிரிட்ஜில் தேன் பாட்டிலை வெச்சிருப்பான் ஹை க்ளாஸ் தமிழன்




================



4 ரஞ்சிதா வுக்குப்பதிலா ரம்பா நித்தியின் சீடர் ஆகி இருந்தா அவரை ஆசிரமத்தின் பிராண்ட் ரம்பாசீடர்னு சொல்லலாம்




=============




5 என்னதான் நாசூக்கா நளினமா சாப்பிடும் பிகர்னாலும் பாயாசத்தை,பஞ்சாமிர்தத்தை ,தேனை நக்கி தான் சாப்பிடனும் - நக்கலானந்தா ,நாலந்தா பல்கலைகழகம்



===============



6 ஜெ = தீர்ப்புத்தேதி ஏன் சொல்லலை?




ஜட்ஜ் = ஜெயிலுக்குப்போகும் நாள் தெரிஞ்சுட்டா போயசில் இருக்கும் நாள் நரகம் ஆகிடும்



=============


7 ஒரு பொண்ணு டி சர்ட் ல இது உங்கள் இடம் னு வாசகம் போட்டிருக்கு.வாரமலர் ரசிகையா இருக்குமோ?


=============

8 எப்பேர்ப்பட்ட வித்தைக்காரனுக்கும் ஒரு சறுக்கிங் பாயிண்ட் உண்டு # பெண்


==============

9 இன்னைக்கு 4 பொண்ணுங்களை சைட் அடிச்சேன்னு சொல்ற மாதிரி சிலர் சர்வ சாதாரணமா இந்த வாரம் 4,பேரை லவ் பண்ணேன் கறாங்க


=============

10 சீறும் பாம்பை நம்பு

சிரிக்கும் பெண்ணை நம்பு
உலகம் சுற்றும் மோடியை நம்பாதே!



=============

11தமிழ் நாட்டில் தேன்வாழை ,கற்பூர வாழை ,பூம்பழம் மிக மலிவாகக்கிடைப்பது 1,திருவையாறு (25 பைசா) 2 குளித்தலை (30 பைசா) 3 மகாதானபுரம் (35 பைசா)



==========


12 உலகின் பெரிய நீர் வீழ்ச்சியைப்பார்க்கனும்னா நயாகரா!
வாழ்வில் வீழ்ச்சியைப்பார்க்கக்கூடாதுன்னா வயாகரா (பின் விளைவுகள் உண்டு)

===============

13 ஊர்ல இருக்கற பசங்க /பொண்ணுங்க எதுனா ஒரு மொக்கை ஜோக் போட்டுட்டு அவங்க தப்பிக்க ட்வீட் லைக் சிபி னு போட்ராங்க.;-)))

===========

14 அன்பே!நீ ....நட்சத்திரங்களை எண்ணச்சொன்னாய்!  உன் கன்னத்தில்  இருக்கும் 19  பருக்களை  எண்ணவே  7 நாள்  ஆச்சு. கணக்கில் நான்  வீக்!


================

15 சுருள்  கேக்  சுஸ்மிதா , நெய் பிஸ்கெட் நிகிலா , வாடா வரிக்கி  வனஜா  இப்டி  எல்லாம்  அக்கவுன்ட்ஸ். எல்லாம்  பன் பேபிக்கு  போட்டி போல 


======================


16 நான் சின்னப்பையனா இருக்கும்போது குட்மார்னிங் சொல்லவே டி எம் ல பயந்து பயந்து சொல்வேன்.இப்ப வர பசங்க டிஎல்லயே அசால்ட்டா கடலை போடறாங்க

============


17 பஸ் ல பாட்டு ஓடுது.ஒரு அதி புத்திசாலி நெருப்புக்கோழி மாதிரி தலையை சீட்டுக்கு அடில வெச்சி போன் பேசறான்.அங்கே ஒலி அலை வராதா?


===============


18 அன்பு கொண்ட பெண்ணின் மனம் கவர ,கவன ஈர்ப்புக்காக,அன்பை நிரூபிக்க என எந்த ஒரு காரணத்துக்காகவும் தற்கொலை முயற்சி /மிரட்டல் செய்யாதீர்கள்


=============

19 காதலனிடம் பரிசுகளை மட்டும் பெற்று விட்டு பின் தன் சுயநலத்துக்காக காதலனைக்கழட்டி விடும் பெண்கள் நெற்றியில் சூடு போடனும்

============

20 திருமண மண்டபத்தில் பிகர்கள்
முற்பகல் செ்யின் பிற்பகல் நெக்லஸ் இரவில் ஆரம்


====================

Saturday, March 28, 2015

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி-டைட்டில் பீரங்கி !!!

1   தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. -குஷ்பு # ஆண்களுக்கும் தான் பாதுகாப்பில்லை.நாங்க அட்ஜஸ் பண்ணிக்கலை?



===============



2

இந்தியில் இணைகிறார்கள் மணிரத்னம் - தனுஷ் # டைட்டில் சைக்கோ கண்மணி?



===============


3   நரேந்தர் மோடி இலங்கை பயணம், மீனவர் பிரச்சனையை பற்றி பேச மாட்டார் # டூர் போகும்போது பிரச்சனை இல்லாம இருக்கனும்னு நினைப்பார் போல


==============

4 முதல் முறையாக புலியில் தற்காப்புக் கலை வீரராக விஜய் # அப்போ டைட்டிலை கராத்தே புலி ,குங்க்பூ புலி இப்டி வெச்சிருக்கலாம்.சப்டைட்டிலா ஆ ஊ ஊ


================

5 நமீதாவை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி # குஜராத்தின் வளர்ச்சியை விட நமீதா வின் வளர்ச்சி அதி வேகமாம்


===============

6 மணிரத்னம் இதுவரை 3 நிமிடங்களுக்கு மேல் என்னிடம் கதை சொன்னதில்லை: வைரமுத்து #குமுதத்தில் வரும் 1,நிமிடக்கதை 3,சொல்லிட்டாரோ?


=================

7 சுப்பிரமணிசாமியிடம் இன்ஷியல் என்னஎன்று கேட்ட வாலிபருக்கு பாஜகவினர் அடி உதை.# ஓஹோ.இதான் இனிஷீயல் பேமண்ட்டா? சபாஷ்!


=============

8 மூன்று நாள் பயணமாக வெளிநாடுகளுக்கு செல்கிறார் மோடி -செய்தி!
# எப்பவும் டூர் தான்.உள்நாட்டில் இருந்தா மட்டும் சொல்லுங்க.போதும்

=============

9 கலைஞரை ராஜராஜ சோழனாகவும்
ஸ்டாலினை ராஜேந்திர சோழனாகவும் பார்க்கிறேன் - சுப.வீ  #  தஞ்சாவூர்  தலையாட்டி  பொம்மையாய் உங்களை நாங்க பார்க்கறோம்


=================

10 மோடியை போல் அனைவரும் வாழ வேண்டும் - தமிழிசை #  எனக்கும் கவர்மெண்ட் காசுல  ஊர் உலகம்  சுத்தனும்னு ஆசை  இருக்காதா? ஆனா  கொடுப்பினை இல்ல



====================



11 கலைஞரை ராஜராஜ சோழனாகவும்
ஸ்டாலினை ராஜேந்திர சோழனாகவும்
பார்க்கிறேன்- சுப வீ # அப்போ  அழகிரியை  அமைதிப்படை நாகராஜசோழனாப்பார்க்கறீங்களா?


====================


12 கலைஞரை ராஜராஜ சோழனாகவும்
ஸ்டாலினை ராஜேந்திர சோழனாகவும்
பார்க்கிறேன்- சுப வீ # ஓஹோ, அப்போ ராஜராஜசோழன்  தன்  மகனுக்கு பட்டாபிஷேகம் பண்ணலை?


==================


13  கலைஞரை ராஜராஜசோழனாக
ஸ்டாலினை ராஜேந்திரசோழனாக
பார்க்கிறேன்- சுப வீ # ஓஹோ! அப்பா  மகனுக்கு பட்டாபிஷேகம் பண்ணிவைக்கலைன்னு குத்திகாட்டிங்?


====================
14  120 கோடி மக்கள் வாழும் இந்தியாவை 2 கோடி பேர் வாழும் இலங்கை மிரட்டுவதா?-EVKS.# எதிர்க்கட்சியா இருக்கும்போது மட்டும் வீரமா பேசுவது ஏனோ?


==============

15 காதலியை கொன்று மூட்டை கட்டி கடத்த முயன்ற காதலன் கைது # உப்பு மூட்டை தூக்கி விளையாடியவன் உப்புக்கண்டம் பண்ணிட்டானே


=============

16 பிரிட்டிஷாரின் ஏஜெண்ட்தான் காந்தி: முன்னாள் நீதியரசர் கட்ஜு.
# நீங்க கடவுளோட ஏஜென்ட்டா?


===============


17 ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி? பரபரக்கும் மீடியா! # டைட்டில் பீரங்கி ?


===============


18 சத்தமாய் “இச்” கொடுக்க சாரகாத்து நாயகிக்கு 1 லட்சம் எக்ஸ்ட்ரா “சார்ஜ்”!# ஓஹோ.சத்தம் போடாம கமுக்கமா குடுத்தா கன்செசனா? நல்ல குடும்பப்பொண்ணு

==============

19 நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் உண்மை வெல்லும்--மன்மோகன்சிங்#25 வருசத்துக்குள் வென்றுவிட்டா தேவலை.குற்றவாளிகள் செத்தே போய்டுவாங்க


==============

20 தமிழகத்தில் லஞ்ச ஊழல் தலைவிரித்தாடுகிறது - கேப்டன் # பொண்ணோட ஆட்சி இல்லையா?அதான் அப்டி.கலைஞர் ஆட்சின்னா கமுக்கமா ஆடி இருக்கும்


==================

கமலுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது ஏன்? - சைக்கோ ஸ்பெஷலிஸ்ட் செல்வராகவன் பேட்டி

  • சிம்பு, யுவனுடன்
    சிம்பு, யுவனுடன்
  • படம். எல்.சீனிவாசன்
    படம். எல்.சீனிவாசன்
  • மனைவி கீதாஞ்சலியுடன்..
    மனைவி கீதாஞ்சலியுடன்..
‘‘உண்மை இதுதான். தற்போதைய சினிமாவில் சுதந்திரம் அறவே இல்லை. நான் படம் எடுக்கத் தொடங்கிய 2000-ல் ஒரு ஆரோக்கியமான சூழல் இருந்தது. 100 படங்களில் 99 படங்கள் காமெடிப் படங்கள்தான் விற்கும் என்ற நிலை அப்போது இருந்ததில்லை ’’
ஒவ்வொரு முறையும் வெப்பம் தெறிக்கக் கோபத்தோடு பேட்டிக்குத் தயாராவதுதான் இயக்குநர் செல்வராகவன் ஸ்பெஷல். சிம்புவை வைத்து அடுத்து எடுக்கவிருக்கும் புதிய படத்தின் ஆரம்ப கட்ட வேலைகளில் மூழ்கியிருந்தவர், ‘தி இந்து’வுக்காக அளித்த பேட்டியிலிருந்து...
‘இரண்டாம் உலகம்’ படத்துக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் இடைவெளியை எப்படி உணர்கிறீர்கள்?
தொடர்ந்து படம் பண்ணிக்கொண்டே இருக்க வேண்டுமா என்ன? ஓடிக்கொண்டே இருக்கும்போது நின்று மூச்சு வாங்கிக்கொள்வோம் இல்லையா.. அப்படித்தான் இந்த இடைவெளியை எடுத்துக்கொள்கிறேன்.
‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’ படங்களின் வழியே ஏற்படுத்திய தாக்கத்தை, நீங்கள் புதிய களங்களில் உருவாக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘இரண்டாம் உலகம்’ படங்களில் ஏற்படுத்தவில்லையே?
தொடர்ந்து காதல் படங்களையே கொடுக்க முடியாது. நான் இங்கே காதல் படங்கள் மட்டும் எடுப்பதற்காக வரவில்லை. அப்போது எனக்கு 22, 23 வயது இருக்கும். அதனால் சில படங்கள் அந்த வயது அனுபவத்தில் இருந்திருக்கலாம். அதையே தொடர்ந்தால் பணத்துக்காக மட்டுமே இயங்கும் ஆளாக மாறிவிடுவோம். அதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு ஃபிலிம்மேக்கர் பல வகைப்படங்களைக் கொடுத்தே ஆக வேண்டும்.
உங்கள் படங்களைப் படமாக்கும்போது திரைக்கதையின் முதல் காட்சியில் தொடங்கி வரிசையான முறையில் படமாக்குவீர்கள் என்பது உண்மைதானா?
சில படங்களை அப்படித் தொட்டுத் தொடர்ந்திருக்கிறேன். அதுமாதிரி செய்யும்போது நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றன. படக்குழுவினர் எல்லோருடைய ஒத்துழைப்பும் அதற்கு முக்கியம். எல்லா தருணங்களிலும் அப்படிச் செய்ய முடியாத சூழலும் உருவாகும். தொடக்கத்தில் 15 முதல் 20 காட்சிகள் வரைக்குமாவது வரிசையாக எடுக்கும்போது கதையோடு நம்மை இணைத்துக்கொள்வது இலகுவாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.
படைப்பாளியின் சுதந்திரத்திற்குள் தணிக்கைக் குழு அதிகம் தலையிடுவதாகவும், படத்தை ஆராய்ந்து தேர்ந்த விமர்சனம் வைப்பவர்கள் அங்கே குறைவு என்றும் கூறப்படுவதை எப்படிப் பார்க்கிறீகள்?
என் படங்களுக்கு சென்சாரில் இதுவரை எந்தப் பிரச்சினையும் எழுந்ததில்லை. அவர்கள் முன் வைக்கும் பல கருத்துகள் ஏற்றுக்கொள்ளும்படியாகத்தான் இருக்கும்.
உங்கள் படங்களை மணிரத்னம் தொடர்ந்து பாராட்டிவந்திருக்கிறார். தற்போது அவரும் காதல் கதைக்குத் திரும்பியிருக்கிறார் என்று தெரிகிறதே?
அப்படியெல்லாம் இல்லை. வேறுவேறு மனநிலைகளில் கிரியேட்டர்கள் யோசிக்கத்தான் செய்கிறார்கள். காதல் கதைகளைக் கொடுக்க இது சரியான நேரம்தான். தற்போதைய சூழலில் காதல் படங்கள் எதுவும் இல்லை. காமெடிப் படங்களைத்தான் இழுத்துப்போட்டு இயக்குகிறார்கள். இப்போது காதலைத் தொட்டால் புதிதாகத்தான் இருக்கும்.
கமலின் ‘விஸ்வரூபம்’ படத்தில் பணியாற்ற முடிவெடுத்து படத்தின் ஆரம்ப வேலைகளில் இணைந்திருந்தீர்கள். திடீரென ஒரு கட்டத்தில் விலகியும் விட்டீர்கள். அந்தப் படத்தில் பணியாற்றியிருக்கலாமே என்று எப்போதாவது நினைத்ததுண்டா?
நடக்காததைப் பற்றி நான் எப்போதுமே கவலைப்பட்டதில்லை. சினிமா எல்லோரும் சேர்ந்து பயணிக்கக்கூடிய விஷயம். சரியாக இல்லை என்றால் அதன் உறுதி கம்மியாக இருக்கும். ஒரு விஷயம் நடக்கவில்லை என்றால் அடுத்ததை நோக்கி நகர்வதுதானே சரி.
இனி திரைப்படமே எடுக்க வேண்டாம் என்ற மனநிலையோடு பேட்டி கொடுத்தவர், நீங்கள். அந்த கோபம் எல்லாம் குறைந்துவிட்டதா?
எப்போதுமே என் கோபங்களுக்குச் சரியான காரணம் இருக்கும். இங்கே இருக்கும் சூழ்நிலை மீதுதான் என் கோபம். மும்பையில் சினிமா வேலை செய்யும்போது மரியாதை இருக்கிறது. இங்கே இல்லை. இது பணத்துக்கான தொழில் என்று 90 சதவீதம் ஆட்கள் பார்க்கிறார்கள். பணம் மட்டும்தான் சினிமாவா? பணம் அவசியம்தான். அதுவே முழுக்க அவசியமாகிவிடக் கூடாதே. என் கோபம் இதுதான்.
தனுஷின் வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பும் இருந்திருக்கிறது. ஒரு அண்ணனாகத் தற்போது அவருடைய ஓட்டத்தை எப்படி கவனிக்கிறீர்கள்?
சின்ன வயதில் இப்படி இருந்தோம், அப்படிச் சுட்டித்தனம் செய்தோம் என்ற ஏக்கங்கள் இருக்கலாம். அதை எல்லாம் கடந்து எல்லோருக்கும் தனித் தனிக் குடும்பம், திசைகள் வந்துவிட்டன. அதைவிட ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் ஒரு எல்லைக்கோடும் உருவாகியுள்ளது. அண்ணன், தம்பி என்பதை எல்லாம் கடந்து தனித் தனி இடம் இரண்டு பேருக்கும் இருக்க வேண்டும்.
சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளைத் தவிர்த்துவிடுகிறீர்களே?
கூட்டமாக இருக்கும் இடத்தில் என்னால் இருக்க முடியாது. சின்ன வயதில் இருந்தே நான் இப்படித்தான். நாலு பேர் சுற்றி நின்றாலே எனக்குப் பிரச்சினை. நான் எனக்கு ஏற்ற மாதிரி வாழ்கிறேன்.
ட்விட்டரில் குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுவது தொடர்பான பதிவுகளையே நிரப்புகிறீர்களே?
அது ஒரு வரம்தான். எவ்வளவு பேர் குழந்தையின் அருமையைப் புரிந்துகொள்கிறோம். பிள்ளைகளின் பொழுதுபோக்கிற்காக நேரத்தை வீணாக்குவது விசேஷமானது. அதை விட்டுவிடக் கூடாது.
அவ்வளவு எளிதாகப் படப்பிடிப்புக்கு அழைத்து வர முடியாதவர் என்று கூறப்படும் சிம்புவை நீங்கள் இயக்க இருப்பதுதான் தற்போது கோடம்பாக்கத்தில் பேச்சாக இருக்கிறது..
‘காதல் கொண்டேன்’ படம் இயக்கிய நாட்களில் இருந்தே சிம்புவைத் தெரியும். என்னையும்கூட, ‘இவன் அப்படி, இப்படி’ என்று கூறுகிறார்கள். சிம்புவையும் அதுமாதிரி ஏதாவது சொல்லிக்கொண்டிருப்பார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. நெருக்கமான இரண்டு நண்பர்கள் சேர்ந்து இந்தப் படத்தில் பயணிக்கப்போகிறோம். அவ்வளவுதான்.
‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தினை உங்கள் மனைவி கீதாஞ்சலி இயக்குகிறார். படப்பிடிப்பில் உங்களையும் பார்க்க முடிகிறதே?
நான் ஒரு கதையைத் தயார் செய்து வைத்திருந்தேன். திடீரென ஒரு நாள், ‘நான் படம் இயக்கப்போகிறேன்’ என்று ஒரு டீமோடு வந்து கேட்டாங்க. ‘ஓ தாராளமாக’ என்று கதையைக் கொடுத்துவிட்டேன். திரைக்கதை என்னோடது என்பதால் படப்பிடிப்பில் கதையில் ஏதாவது மாற்றம் வரும்போது நான் அங்கே இருந்துதானே ஆக வேண்டும்?
சிம்புவை வைத்துத் தொடங்கும் படத்தின் கதைதான் என்ன?
ஒவ்வொரு முறை ஒரு படம் செய்யும்போதும் நிறைய யோசிப்பேன். இதைத் தொடுவோம் எனும்போது எனக்கு முதலில் ஆர்வம் ஏற்பட வேண்டும். மீண்டும் ஒரு சோகமான காதல் கதையோ, பாதிக்கப்பட்ட மனதின் கதையோ எடுக்க முடியாது. இந்தப் படத்தில் என்னவெல்லாம் ஈர்க்க முடியும் என்று பார்க்கும்போது என்னோட தேடலும் அதை நோக்கியதாக இருக்கிறது. அப்படி ஒரு படமாகத்தான் இதுவும் வரும்.
விக்ரமை இயக்கப் புறப்பட்டு ‘லடாக்’ வரை படப்பிடிப்புக்கு போய் படத்தைத் தொடர முடியாமல் போனதற்குக் காரணம் என்ன?
கதையை மாற்றிக்கொண்டே போகச் சொன்னார்கள். அது முடியாது என்று சொல்லிவிட்டேன். சிம்பிள். அவ்வளவுதான்.


நன்றி  - த  இந்து

நண்பேன்டா - நயன் தாராவுடன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது எப்படி - உதயநிதி பேட்டி

“ஆறு மாதத்துக்கு முன் 'நண்பேன்டா' படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற போது நயன்தாராவைப் பார்த்தது. ஆனால் இப்பவும் கிசுகிசு எழுதிகிட்டே இருக்காங்க. கிசுகிசுக்கள் என்னோட படத்திற்கு விளம்பரம்தானே. அதனால் நான் எதையும் கண்டுகொள்வதில்லை. அவர்கள் எனக்குக் கொடுக்கும் விளம்பரம், கோடி ரூபாய் செலவழித்தாலும் கிடைக்காது" எனச் சண்டை காட்சி படப்பிடிப்பு இடையே கெத்தாகப் பேசத் தொடங்கினார் உதயநிதி ஸ்டாலின்.
மறுபடியும் ஒரு வெற்றி தேவை என்பதை மனதில் வைத்து உருவான படம் மாதிரித் தெரிகிறதே?
என்னோட கடந்த இரண்டு படங்கள் மாதிரிக் குடும்பம், சென்டிமெண்ட் எதுவும் எல்லாம் இல்லாமல் முழுக்கக் காமெடியைப் பின்னணியாகக் கொண்டு தொடக்கப்பட்ட படம்தான் ‘நண்பேன்டா'.
'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் சந்தானம் என்னோடு முழுக்க இருப்பார். இந்தப் படத்தில் நான், சந்தானம், நயன் எல்லாருக்குமே சரிசமமா இருக்கோம். சந்தானத்துடன் நான் செய்திருக்கும் காமெடி கலாட்டா மக்களுக்குப் பிடிக்கும்னு நம்புறேன். தமன்னா ஒரு சின்னக் கதாபாத்திரம் பண்ணியிருக்காங்க.
தொடர்ச்சியாகச் சந்தானத்தோடு கூட்டணி அமைக்க என்னக் காரணம்?
எனக்கு யாரோடு படப்பிடிப்புக்குப் போனால் ஜாலியாக இருக்குமோ அவர்களோடு பயணிக்கிறேன். அவ்வளவுதான். இப்போது 'கெத்து' படத்தில் கருணாகரனோடு நடிக்கிறேன். இந்தப் படத்தில் சந்தானம் கிடையாது. கதாபாத்திரத்திற்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என்பதை இயக்குநரின் பார்வைக்கு விட்டு விடுகிறேன். ‘நண்பேன்டா' படத்தில் சந்தானம் பண்ணியிருக்கும் பாத்திரத்தை வேறு யார் பண்ணினாலும் சரியாக வராது.
‘நண்பேன்டா' படத்தில் நடனம், சண்டை என அடுத்த கட்டத்திற்குப் போயிருக்கிறீர்களாமே?
அதற்குக் காரணம் சந்தானம்தான். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் சந்தானத்துக்கு நடனம் சொல்லிக் கொடுத்தால், "அய்யோ.. நடனமா இதெல்லாம் வேண்டாம்பா" என்று சொல்லிவிடுவார். ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' படம் பார்த்தேன்.
நாயகன் என்றவுடன் நடனத்திற்கு நிறைய பயிற்சிகள் செய்து அவ்வளவு சூப்பராக நடனமாடிவிட்டார். அப்படி என்றால் நான் சும்மா இருக்க முடியுமா? நானும் நடனப் பயிற்சி எல்லாம் எடுத்து, இந்தப் படத்தில் சந்தானத்துக்குச் சரிசமமாக நடனமாடி இருக்கிறேன்.
நான் நடித்துச் சண்டைக் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் முதல் படம் இதுதான். ‘இது கதிர்வேலன் காதல்' படத்தில் சண்டை இருந்தது. வேண்டாம் என்று தூக்கிவிட்டோம். எனக்கு ஒவர் பில்ட்அப் பண்ணினால் பிடிக்காது. ஆனால், இயக்குநர் ஜெகதீஷ் இந்தப் படத்தில் ஒரு சண்டைக் காட்சி வைத்திருக்கிறார். சண்டைக்காட்சியிலும் காமெடியைக் கலந்திருக்கிறார். அதுதான் ஜெகதீஷ் ஸ்டைல்.
நான் நடித்துச் சண்டைக் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் முதல் படம் இதுதான். ‘இது கதிர்வேலன் காதல்' படத்தில் சண்டை இருந்தது. வேண்டாம் என்று தூக்கிவிட்டோம். எனக்கு ஒவர் பில்ட்அப் பண்ணினால் பிடிக்காது. ஆனால், இயக்குநர் ஜெகதீஷ் இந்தப் படத்தில் ஒரு சண்டைக் காட்சி வைத்திருக்கிறார். சண்டைக்காட்சியிலும் காமெடியைக் கலந்திருக்கிறார். அதுதான் ஜெகதீஷ் ஸ்டைல்.
உங்களது வீட்டில் உங்களது படங்களை விமர்சனம் செய்பவர் யார்?
என் மனைவிதான். நான் நடிக்கும் எல்லாப் படங்களின் கதையும் அவங்களுக்குத் தெரியும். படம் முடிந்தவுடனே போட்டுக் காண்பிப்பேன். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி' பார்த்துவிட்டுச் சூப்பர் என்றார், ‘இது கதிர்வேலன் காதல்' பார்த்துவிட்டு முந்தைய படம் மாதிரி காமெடி இல்ல என்றார்.
அவங்கதான் எனது முதல் விமர்சகர். அதற்குப் பிறகு என்னோட பசங்க, என்னோட தங்கை பசங்க. இப்பவும், சந்தானம் என்று பேச்சை எடுத்தால், அவர் பெயர் பார்த்தா, சந்தானம் கிடையாது என்கிறார்கள். அந்தக் கதாபாத்திரம் அந்தளவிற்குப் பதிந்துவிட்டது.
கெத்து' படத்தில் ஆக் ஷன் அவதாரம் எடுத்துவிட்டீர்கள் போல?
கண்டிப்பாகக் கிடையாது. ‘நண்பேன்டா' படத்தில் சண்டை காமெடியாக இருக்கும். இந்தப் படத்தில் ரோப் எல்லாம் கட்டி சண்டை போட்டிருக்கிறேன். இரண்டு சண்டைக் காட்சிகள். என் முந்தைய படங்களை விட கெட்அப்பிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறேன். கதாநாயகி ஏமி ஜாக் ஸன், காமெடிக்கு கருணாகரன், இயக்குநர் திருக்குமரன், ஒளிப்பதிவாளர் சுகுமாரன் எனப் புதிய கூட்டணி, புதிய களம்.
ஒரே மாதிரியான படங்கள் பண்ணுவதைவிட, அடுத்தடுத்த படங்களில் கொஞ்சம் வித்தியாசம் காட்ட வேண்டும் என்று முடிவு பண்ணியிருக்கிறேன். ‘கெத்து' ஒரு ஆக் ஷன் த்ரில்லர் வகையில் இருக்கும். இப்படத்தை முடித்துவிட்டு, இயக்குநர் அஹமத்துடன் ‘இதயம் முரளி' பண்றேன். அப்படம் ரொம்ப கலர்ஃபுல்லாக இருக்கும். அமெரிக்காவில் நடப்பது போன்ற கதை.


நன்றி - த இந்து


குற்றம் கடிதல் - சினிமா விமர்சனம் ( தேசிய விருது பெற்ற உலகத்தரமான படம்)

‘குற்றம் கடிதல்' படத்தில்
‘குற்றம் கடிதல்' படத்தில்

முதல் பார்வை: குற்றம் கடிதல் - இழக்கக் கூடாத திரை அனுபவம்!


தீர்வை நோக்கி நகர வேண்டிய ஒரு பிரச்சினையின் தீவிரத்தைப் பேசுகிறது ‘குற்றம் கடிதல்'. இதற்காகப் பல்வேறு வாழ்வியல் பின்புலங்கள் காட்டப்படுகின்றன. பல்வேறு கலாச்சார நெருக்கடிகள் முன்வைக்கப்படுகின்றன. 'பாலியல் கல்வி' எனும் மையப் புள்ளியை நோக்கிப் பல்வேறு கோணங்களில் சமூக மனநிலையைக் குவிமையப் படுத்துகிறது இத்திரைப்படம்.
ஓர் ஆசிரியை எதிர்பாராத விபரீதத்தில் சிக்கியுள்ள பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் இத்திரைக்கதையில் எவ்விதச் சமரசமுமில்லை. அதே நேரத்தில் 'ஓர் இரவு ஒரு பகல்' என்ற கால அளவுக்குள், சக ஆசிரியைகள், மாணவர்களின் உலகம், சக உறவுகள், சுற்றியுள்ள சமூக ஏற்றத் தாழ்வுகள் எனப் படு வேகமாகப் பெரிய வட்டமடித்துப் பார்வையாளரைக் கட்டிப்போடுகிறது.
புதியதாகத் திருமணம் ஆகியுள்ள பெண் தன் கணவனோடு நள்ளிரவில், நெடுஞ்சாலையில், அதுவும் லாரியொன்றில் பதற்றத்தோடு பயணிக்கும் முதல் காட்சியே நம்முள் அதிர்ச்சியை விதைக்கிறது. இவர்கள் இவ்வளவு பதற்றத்தோடு எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள்? நள்ளிரவில் அந்த அதிர்ச்சி விதை பெரிய விருட்சமாவதுதான் பின்தொடரும் படம்.
அவர்களை லாரியில் ஏற்றிச் செல்லும் டிரைவரைப் போலவே நாமும் அவர்களைப் பற்றிய ஏதேதோ கேள்விகளை உருவாக்கிக்கொள்கிறோம். ஆனால் அதற்கான விடைகள் அவ்வளவு எளிதானவையல்ல. டிரைவரிடம் கணவன் ஏதோ சொல்லி மறைக்க, மனைவியோ ''நான் என்ன நடந்ததுன்னு சொல்றண்ணே'' என்று காலையில் பள்ளியில் தொடங்கி நடந்த நிகழ்விலிருந்து எல்லாவற்றையும் சொல்லத் தொடங்குகிறாள்...
சென்னை நகரத்தின் புத்துணர்ச்சியான அதிகாலை. நகரத்தையொட்டிய கீழ் மத்தியதர வர்க்கக் குடும்பங்கள் நிறைந்த ஒரு வகையில் குப்பம் போன்ற சூழல். ஒரு ஏழை மாணவன் பள்ளிக்குப் புறப்படுவதற்குள் அங்கு நிகழும் பல்வேறு நிகழ்வுகள். சாலையில் நடந்துசெல்லும் ஒருவரை கார் அடித்துவிட்டுத் தப்பித்துச்செல்ல முற்படுவதைத் தடுக்கும் மக்கள். அந்தக் காருக்குச் சொந்தமானவரைக் கண்டிக்கிறார் ஒரு ஆட்டோக்கார 'தோழர்'.
அது மட்டுமின்றி அடிபட்டவரை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று சிகிச்சையளித்து மீண்டும் இங்கேயே கொண்டுவந்து விடவேண்டுமெனக் கட்டளையிட்டு உடன் ஒருவரை அனுப்பிவைக்கவும் செய்கிறார். பள்ளி மாணவன் அவரின் ஆட்டோவைச் சுறுசுறுப்பாக ஓட்டிச்செல்ல அவனது தாய் அவனைச் சீக்கிரம் பள்ளிக்கு அனுப்பிவைப்பதற்காக அவனைத் தேடித் துரத்திவந்து பிடித்துவிடுகிறாள்.
இத்தகைய சூழலிலிருந்து வருகிற அச்சிறுவன் எப்போதும் உற்சாகமானவனாக இருக்கிறான். இந்த உலகை அவன் எதிர்கொள்ளும் விதமே அலாதியானது. பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் வருவதற்குமுன் தன்னைச் சுற்றியுள்ள சக மாணவர்களை
உற்சாகமாக வைத்துக்கொள்பவன் அவன். அந்த மாணவனின் ஒரு செய்கை, அதற்கு அனிச்சையாக எதிர்வினையாற்றும் ஆசிரியை.. அரங்கேறுகிறது விபரீதம்!
திருமணம் முடித்துப் பள்ளி திரும்பிய ஆசிரியைக்கு அந்த விபரீதம் பேரிடியாக மாறுகிறது. பள்ளியெங்கும் செய்தி பரவிய இச்செய்தி காட்சி ஊடகங்களின் நிகழ்நேர விவாதப் பொருளாக மாறிக் காட்டுத் தீயாய் திசையெங்கும் பரவுகிறது.
பிரச்சினையின் தீவிரத்தில் இருந்து தப்பித்தல், அதற்கான வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொள்ளுதல், திட்டமிடாத இரவுநேரப் பயணம், காவல் துறையின் விசாரணை, பாதிக்கப்பட்டோர் தரப்பின் தவிப்பும் கோபமும், சம்பந்தப்பட்டவர்களின் குற்ற உணர்வு... இப்படிப் பரபரப்பான சூழ்நிலைகளைத் தெளிந்த நீரோடை போன்ற திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பிரம்மா. அவரும் அவரது குழுவினரும் கடுமையாக உழைத்துச் சிறந்த ஒரு படத்தைத் தமிழுக்குப் படைத்துள்ளார்கள்.
கதை வேகமாக நகருகிறது. படத்தின் பேசுபொருளோடு சம்பந்தப்பட்ட பல விஷயங்களையும், கதாபாத்திரங்களையும் கையாண்டிருக்கும் விதம் அசாதாரணமானது. மாணவனின் அம்மாவின் அண்ணனாக வரும் ஆட்டோக்காரத் தோழரின் ஆளுமையான பாத்திரத்தை வார்த்த விதம். அவர் மருத்துவமனையில் டாக்டர்களை எதிர்கொள்ளும் விதமும், அந்த ஆசிரியையை இறுதியில் அணுகும் விதமும் கம்யூனிஸக் கொள்கைகள் அடிமட்ட அளவில் நீர்த்துப் போகாமல் இருப்பதைப் பதிவு செய்கிறது.
இப்படத்தில் பாரதியின் 'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா' என்ற பாடல் அமைந்தவிதமும், அதைக் காட்சிப்படுத்திய முறையும் பிரமிக்க வைப்பவை. படத்தின் கதையையும், சூழலையும் இயக்குநர் சொல்லக் கேட்டு, அதையொட்டி பாரதி பாடலைப் படைத்திருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றும். அவ்வளவு கச்சிதம். வித்தியாசமான பாடல்களுக்காக அறைபோட்டு யோசிக்கும் நம் இயக்குநர் வித்தகர்கள் அவசியம் கவனிக்க வேண்டிய அம்சம் இது.
பொறுப்புமிக்க தலைமையாசிரியர், அவரது பாசமிகு மனைவி, ஆசிரியை பிரிந்து தனித்து வாழும் அம்மா, கணிக்க முடியாத குணாதிசயம் கொண்ட லாரி டிரைவர், போராடும் மாணவனின் மாமா, பேசாமல் பேசிடும் மாணவனின் தாய்... இந்தக் கதாபாத்திரங்கள் வெறுமனே திரைக்கதைக்காக வசனம் பேச வலம் வராமல், ஒவ்வொருவரின் பின்புலமும் ஆழமாகக் காட்சியினூடே பதிவாகியிருப்பது, சினிமா எனும் ஊடகத்தின் மீதான படைப்பாளியின் ஆளுமையைக் காட்டக்கூடியவை.
விறுவிறுப்பான 'ரோடு மூவி'க்குரிய அம்சம் உள்ள இந்தப் படத்தில் உள்ள லாட்ஜ் வாழ்வியல் தொடங்கித் தெருக்கூத்து காட்சிகள் வரை இடம்சார்ந்த பண்பாட்டு விழுமியங்களையும் உள்ளடக்கிய பல்வேறு அம்சங்கள் தமிழ் சினிமாவின் மீது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்ச முயன்றுள்ளதைப் பாராட்டத்தான் வேண்டும்.
கல்வித்துறைச் சீர்திருத்தங்களுக்கு மாணவனே தயாராகிவிட்டாலும் சுற்றியுள்ள சமூகமும் ஆசிரியர்களும்கூட இன்னும் தயாராகவில்லை என்பதுதான் உண்மை. பிரச்சினையே நம் சமூகம்தான் என்று காட்சி ஊடகத்திற்கே உண்டான நியாயத்தோடு ஒரு அழகான குறுங்கதையாடலை நிகழ்த்தியுள்ள இப்படத்தின் மீது தேசிய வெளிச்சம் பாய்ந்துள்ளது ஒரு நல்ல சகுனமே.
பிரம்மா
நம் சமூகத்தில் கல்வி முறைச் சீர்திருத்தம் தொடர்பான விவாதத்தைத் தூண்டும் படைப்பு, சமகாலப் பள்ளிகளின் இயல்பு வாழ்க்கையைப் பதிவு செய்யும் திரைப்படம், முழுக்க முழுக்க சீரியஸான விஷயங்களை மட்டுமே பேசும் படம்... இப்படிக் கற்பனை செய்துகொண்டு 'நல்ல பிரின்ட் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம்' என்று என்று நீங்கள் முடிவு செய்துவிட்டால், 'த்ரில்லர்' போன்ற விறுவிறு சினிமாவைத் திரையரங்கின் சீட் நுனியில் அமர்ந்து ரசிக்கும் பரவச அனுபவத்தை இழந்துவிடுவீர்கள்!


  • Vijay  
    விமர்சனம் மிக அருமை ... தமிழில் இப்படியொரு படம் பார்த்து ரொம்ப நாளாச்சு .... வாழ்த்துகள் ...
    Points
    555
    about 14 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       
    • கேசவன். செ  
      உங்களின் குற்றம் கடிதல் திரைப்படத்தை திரையரங்கில் காண ஆவலோடு உள்ளேன்.....
      about 15 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • Nagarajan  
        படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்.

      நன்றி 

      த இந்து