இந்த வாரம் 3 நேரடித்தமிழ்ப்படங்கள்,ஒரு மலையாளப்படம் தமிழ் டப்பிங் கில். ஆக மொத்தம் 4 தமிழ்ப்படங்களும் ,2 ரீ ரிலீஸ் படங்களும் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு 10/4/2026 அன்று வெளியாக இருக்கிறது
Saturday, April 11, 2026
Thursday, April 09, 2026
CHIRAIYA (2026) -ஹிந்தி /தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் (மெலோ டிராமா )@ஜியோ ஹாட் ஸ்டார்
சபாஷ் டைரக்டர்
1 Marital Rape என்ற கான்செப்ட்டை துணிச்சலாக எடுத்துக்காட்சிப்படுத்திய விதம்.
2. பெண் என்பவள் ஒரு பிராப்பர்ட்டி கிடையாது என்பதை உணர்த்தும் அழுத்தமான சம்பவங்கள் ,,வசனஙகள்
3 கணவன் மீது வரதட்சணைக்கொடுமை வழக்கு பொய்யாகப்பதியலாம் என யோசனை சொல்லும்போது பூஜா கேரக்டர் கேட்கும் கேள்வி அருமை. சட்டப்படி இந்த மாதிரி ஆண்களை தண்டிக்க சட்டம் ஏன் இல்லை ?
4 நாயகியின் கணவர் கூட தன்னை முற்போக்குவாதியாகக்காட்டிக்கொ
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 பின் பாதியில் டி வி சீரியல் போல நகர்வதைத்தவிர்த்திருக்கலாம்.
2 புது மணப்பெண்ணின் அப்பா கூட அவளுக்கு ஆதரவில்லை எனக்காட்டி இருப்பது ஓவர்.எந்த அப்பாவாவது தன் மகளுக்கு எதிராக நடப்பாரா?
3 ஒட்டு மொத்த ஆண் வர்க்கமே வில்லன் தான் என்பது போலக்கேரக்டர்களை வடிவமைத்திருக்கிறார்கள்.
4 உடல் நிலை சரி இல்லாதபோது மணப்பெண் தாம்பத்யத்திற்கு மறுப்பது சரி.எப்போதுமே விருப்பமே இல்லை என்பது போல் காட்சிப்படுத்தியது ஏனோ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் 18+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஆண்களுக்குப்படிப்பினை ஊட்டும் கதை தான்.ஆனால் பெண்களால் மட்டும் தான் பொறுமையாகப்பார்க்க முடியும்.ரேட்டிங்க் 3/5
Wednesday, April 08, 2026
USTAAD BHAGAT SINGH (2026)-தெலுங்கு/தமிழ் -சினிமா விமர்சனம் (ஆக்சன் மாஸ் மசாலா)
They call him OG (2025) என்ற மாஸ் மசாலா ஆக்சன் படத்தில் நடித்து 300 கோடி ரூபாய் வசூலை அள்ளியவர் தான் பவன் கல்யாண்
.
கப்பார் சிங்க் (2012) இதே இயக்குநர்+ஹீரோ காம்போபில் 30 கோடி பட்ஜெட்டில் உருவாகி 5 மடங்கு லாபம் (150 கோடி வசூல்) சம்பாதித்துக்கொடுத்த படம்
14 வருடங்களுக்குப்பின் இவர்கள் இருவரும் இணைந்திருக்கும் இந்தப்படம் எப்படி இருக்கிறது?எனப்பார்ப்போம்.
ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லன் ஒரு மோசமான அரசியல்வாதி.முதல்வர் பதவியை எப்படியாவது அடைய வேண்டும் என்பதே அவன் லட்சியம்.நேர்மையான முதல்வரை கொலை செய்ய முயற்சிக்கிறான்.ஆனால் அவர் தப்பி விடுகிறார்.ஆனாலும் சீரியஸ் ஆக இருக்கிறார்.இதனால் கட்சி யில் இருக்கும் அடுத்த தலைவரை இடைக்கால முதல்வர் ஆக்குகிறார்கள்.அவரையும் வில்லன் கொலை செய்து விடுகிறான்.
வில்லனுக்கு இரு மகன்கள்.கஞ்சா விற்பவன் ,பெண்களை வன் கொடுமை செய்பவன் என இருவருமே அக்கிரமக்காரர்கள்.
வில்லனின் மகனை நாயகன் கடத்தி அவன் கஸ்டடியில் வைத்திருக்கிறான்.
நாயகன் முன்னாள் காவல் துறை அதிகாரி.இப்போது ஒரு வனப்பிரதேசத்தில் சத்ரியன் படத்தில் வரும் ஏ சி பன்னீர் செல்வம் போல் வசித்து வருகிறார்.
நாயகன் எதற்காக வில்லனின் மகனைக்கடத்தினார்?தன் மகனை மீட்க ஒரு குழுவை அனுப்பிய வில்லன் மீட்டானா?நாயகன் ஹைதராபாத்தில் போலீஸ் ஆபீசர் ஆக இருந்தபோது வில்லனுடன் ஏற்பட்ட பிரச்சனை என்ன?போன்ற கேள்விகளுக்கு வரும் விடைகள் தான் மீதி திரைக்கதை.
நாயகன் ஆக பவன் கல்யாண்.ஒரு மாஸ் மசாலா ஹீரோ என்னென்னெ செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்திருக்கிறார்.
வில்லன் ஆக ஆர் பார்த்திபன் பெரிதாக எடுபடவில்லை.சத்ரியன் படத்தில் திலகன் பேசும் வசனம் மிக பிரபலம்.நீ மறுபடியும் ஏ சி பன்னீர் செல்வமா வரனும்.என் மேல கை வைக்கனும்.அப்போ உன்னை நான் ஒழிக்கனும் என்ற பவர் புல் டயலாக் பேசி அதகளம் பண்ணிய கேரக்டர் டிசைன் அது.ஆனால் இதில் வில்லனுக்கு அந்த அளவுக்கு வெயிட் ஆன ரோல் இல்லை.
நாயகிகள் ஆக ஸ்ரீ லீலா +ராஷி கண்ணா.இதில் ராசி கண்ணாவுக்கு அதிக வேலை இல்லை.சத்ரியன் படத்தில் ரேவதி மாதிரி கெஸ்ட் ரோல்.ஸ்ரீலீலா வுக்கு நல்ல வாய்ப்பு. சத்ரியன் பானுப்ரியா மாதிரி படம் முழுக்க வருகிறார்.
இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் முதல்வர் ஆக வருகிறார்.நாயகனின் அம்மாவாக கவுதமி கச்சிதம்.நாயகியின் அப்பாவாக ஜெயபிரகாஷ் ஓக்கே ரகம்
எஸ் தமனின் இசையில் 3 பாடல்கள் சுமார் ரகம்.தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை யில் நம் காதுகள் வலிக்கின்றன.டொம் டொம் என்று படம் முழுக்க படுத்துகிறார்.
கார்த்திகா சீனிவாசின் எடிட்டிங் கில் படம் 154 நிமிடங்கள் ஓடுகிறது.ஆனால் நமக்கு 3 மணி நேரம் ஓடியது போல் ஒரு உணர்வு.
அயனங்கா போஸ் சின் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரம்மாண்டம்.
டைட்டிலில் கதை ஹரீஷ் சங்கர்
திரைக்கதை தசரத் +ரமேஷ் ரெட்டி என போடுகிறார்கள்.ஆனால் உண்மையில் சத் ரியன் + தெறி தான்
ஹரீஷ் சங்கர் இயக்கி இருக்கிறார்
சபாஷ் டைரக்டர்
1 சத்ரியன் பட இயக்குநர் கே சுபாஷ் + தெறி இயக்குநர் அட்லீ ஆகிய இருவருக்கும் டைட்டில் கார்டில் நன்றி போடாமல் தைரியமாக கதை தன்னுடையது எனப்போட்டுக்கொண்ட தைரியம் அருமை.
2 மாஸ் மசாலா ஆக்சன் படத்துக்குத்தேவையான அனைத்து ஹீரோபில்டப் காட்சிகள் + ஆக்சன் சீக்வன்ஸ் அனைத்தும் அருமை
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான தெறி படத்தில் இருந்து 17 காட்சிகள் இதில் அப்படியே வருகின்றன.தெறி படமே விஜய்காந்த் நடித்த சத்ரியன் படத்தின் உல்டா வெர்சன் தான்.ஆனால் அதையும் உல்டா செய்திருக்கிறார்கள்.
2 நாயகனையே பல கதாப்பாத்திரங்கள் நையாண்டி செய்வது போல் பல காட்சிக்ள் அவரது இமேஜையே டேமேஜ் செய்கிறது
3 வலிமையான வில்லன் பாத்திரமே இல்லை.வில்லனே ஸ்ட்ராங்க் இல்லை எனில் ஹீரோ என்ன செய்ய முடியும்? ஆடியன்ஸ் தான் என்ன செய்ய முடியும்?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 18+ வன்முறைக்காட்சிகள் அதிகம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் -
சத்ரியன் (1990)+ தெறி (2016) ஆகிய இரு படங்களைப்பார்க்காதவர்கள் மட்டும் காதில் பஞ்சு வைத்துக்கொண்டு படம் பார்க்கலாம்.ரேட்டிங்க் 2 / 5
பி.கு
இந்தப்படம் நெட் பிளிக்சில் தமிழ் டப்பிங் கில் அடுத்த மாதம் 10 ம் தேதி வர இருக்கிறது
| Ustaad Bhagat Singh | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Harish Shankar |
| Screenplay by | Dasaradh Ramesh Reddy |
| Story by | Harish Shankar |
| Produced by |
|
| Starring | |
| Cinematography | Ayananka Bose |
| Edited by | Karthika Srinivas |
| Music by |
|
Production company | |
| Distributed by | AGS Entertainment Prathyangira Cinemas DreamZ Entertainment |
Release date |
|
Running time | 154 minutes[1] |
| Country | India |
| Language | Telugu |
| Budget | ₹120 crore[2] |
Tuesday, April 07, 2026
PRAKAMBANAM (2026) -மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( ஹாரர் திரில்லர் )@ZEE5
ரூ 4 கோடியில் எடுக்கப்பட்ட லோ பட்ஜெட் படமான இது 21 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபீசில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது .30/1/2026 அன்று திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் இப்போது தமிழ் டப்பிங்கில் ஜீ 5 ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது இந்தப்படத்தின் ஷூட்டிங்க் எர்ணாகுளத்தில் ஒரு ஹாஸ்டலில் 50% , கண்ணூர் ல 50% நடந்தது .பிரகம்பனம் என்ற சொல்லுக்கு அதிர்வு என்று பொருள்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் 18 வயது இளைஞன் .காலேஜ் ஹாஸ்ட்டலில் தங்கிப்படிக்கிறான் . நாயகனின் பாட்டி பூஜை புனஸ்காரங்களில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் .இறந்த சொந்தங்களுக்குப்படையல் போட்டு விட்டுத்தான் நாம் சாப்பிட வேண்டும் என்ற கொள்கை கொண்டவர் . ஆனால் பாட்டியின் மகன்களுக்கு , அதாவது நாயகனின் அப்பா, சித்தப்பா இவர்களுக்கெல்லாம் இது பிடிக்காது . காரணம் அவர்கள் கம்யூனிச சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் , பகுத்தறிவுவாதிகள் , பாட்டிக்கும் , இவர்களுக்கும் எப்பவும் ஆகாது ..
ஒரு தருணத்தில் பாட்டி திடீர் என இறந்து விட நாயகன் அங்கே வருகிறான் . காரியங்கள் எல்லாம்
முடிந்த பின் நாயகனின் தாத்தா நாயகனிடம் ஒரு பானையைக்கொடுத்து இதில் பாட்டியின் அஸ்தி இருக்கிறது , இதை உனக்கு நேரம் இருக்கும்போது காசியில் போய்க்கரைத்து விடு என்று கூறுகிறார் . நாயகன் இவ்ளோ பெரிய பானை எல்லாம் கொண்டு போக முடியாது , எல்லோரும் கிண்டல் செய்வார்கள் என சொல்ல தாத்தா அவரது மூக்குப்பொடி டப்பாவில் கொஞ்ச்ம அஸ்தியைப்போட்டுத்தருகிறார் . இதை நாயகன் காலேஜ் ஹாஸ்டலுக்கு எடுத்து வருகிறான் .
நாயகனின் நண்பன் நாயகனுக்குத்தெரியாமல் நாயகனின் பெட்டியை செக் பண்ண இந்தப்பொடி டப்பாவைப்பார்த்து எதோ போதைப்பொருள் என நினைத்து அதை உபயோகிக்க பாட்டியின் ஆவி அந்த இளைஞனின் உடம்பில் புகுந்து விடுகிறது . இதற்குப்பின் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதித்திரைக்கதை
நாயகன் ஆக கணபதி கச்சிதமாக நடித்த்திருக்கிறார் . இவருக்குக்காமெடி இயல்பாகவே வருகிறது .இவரது டயலாக் டெலிவரி , உடல் மொழி அனைத்தும் அருமை .
நாயகனின் நண்பன் ஆக சாகர் சூர்யா பிரமாதப்படுத்தி இருக்கிறார் . நாயகனுக்கு நிகரான கேரக்ட்டர் , ஆவி புகுந்தபின் இவர் செய்யும் அலப்பறைகள் ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் ரகம்.
நாயகனின் பாட்டி ஆக மல்லிகா சுகுமாரன் கச்சிதம் ,நாயகனின் தாத்தா ஆக பி பி குன்ஹி கிருஷ்ணன் சிறப்பான நடிப்பு
படத்தில் நடித்த மற்ற அனைத்துக்கேரக் ட்டர்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்
பாடல்களுக்கான இசையை பிபின் அசோக்கும் பின்னணி இசையை சங்கர் சர்மாவும் கவனித்து இருக்கிறார்கள் .காமெடி , திகில் கலந்த பின்னணி இசை அருமை ஆல்பி ஆஸ்டனியின் ஒளிப்பதிவில் இரவுக் காட்சிகள் கவனம் பெறுகிறது , இ எஸ் சூரஜின் எடிட்டிங்கில் படம் 126 நிமிடங்கள் ஓடுகிறது
ஸ்ரீ ஹரி வடக்கன் கதை , திரைக்கதை எழுத விஜேஸ் பானத்தூர் இயக்கி இருக்கிறார்
சபாஷ் டைரக்டர்
1 படம் போட்ட 32 வது நிமிடத்தில் நாயகனின் நண்பன் உடலில் பாட்டியின் ஆவி புகுந்த பின் அவரது ட்ரான்ஸ்பர்மேசன் உடல் மொழி , நடிப்பு , காமெடி எல்லாம் கலக்கல் ரகம் , நாயகனை விட இவரது நடிப்பு டாப் கிளாஸ்
2 பாடல்கள் எல்லாம் அருமை . மெலோடி சாங்க் ஆக ஆரம்பித்து ராப் பாட் டாக மாறுவது எல்லாம் செம
3 பாட்டியின் மரணம் இயற்கை ஆனது அல்ல , கொலை என்பது ஒரு டிவிஸ்ட் , கொலைகாரன் யார் என்பது இன்னொரு டிவிஸ்ட் , இரண்டுமே பிளேஸ் செய்யப்பட் ட இடங்கள் கச்சிதம்
4 முதல் பாதியில் கதை , கேரக் டர் அறிமுகங்கள் எல்லாம் முடிந்த பின் கொஞ்சம் காமெடி , பின் பாதி முழுக்கக்காமெடி என படம் எஙகேஜிங்க் ஆகக்கொண்டு போன விதம்
5 பெரிய ஹீ ரோக்கள் இல்லாமல் இரண்டே லொக்கேஷன்களில் லோ பட்ஜெட்டில் ஒரு தரமான படத்தைக்கொடுத்த லாவகம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகனின் பாட்டியுடைய ஆவி நாயகனின் நண்பன் மீது புகுந்து கொள்ள காரணமே சரியாக சொல்லப்படவில்லை . நமக்கு எழும் இந்த சந்தேகத்தை நாயகனின் நண்பன் நாயகனிடம் கேட்பது போல சீன இருக்கு , ஆனால் காரணம் தான் சொல்லப்படவில்லை
2 பாட்டி தன்னைக்கொலை செய்த கொலைகாரனைக்கொலை செய்ய காலேஜ் ஹாஸ்ட்டல் வந்து என்ன பயன் ? கொலைகாரன் இருப்பது பாட்டி வசித்த லொக்கேஷனில்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - கலகலப்பான காமெடி ஹாரர் டிராமா பார்க்க நினைப்பவர்கள் , பேய்ப்பட ரசிகர்கள் பார்க்கலாம் . ரேட்டிங்க் 3 / 5
Monday, April 06, 2026
யூத் (2026) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா )
இந்தப்படம் வெளிவருவதற்கு முன்பே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்த நான்கு முக்கியக்காரணங்கள்
1 தனுஷ் நடித்த அசுரன்,வாத்தி ஆகிய படங்களில் நல்ல கேரக்டர் ரோல் பண்ணி இருந்த கென் கருணாஸ் நாயகன் ஆக நடிக்கும் முதல் படம்
2 கென் கருணாஸ் இயக்குநர் ஆக,பாடல் ஆசிரியர் ஆக,பாடகர் ஆகக்களம் இறங்கி இருக்கும் படம்
3 இசை அமைப்பாளர் ஜி வி பிரகாஷ் சம்பளம் வாங்காமல் இசை அமைத்த முதல் படம்
4 முட்டை கலக்கி என்ற மெகா ஹிட் பாடல் உட்பட படத்தின் எல்லாப்பாடல்களும் படம் ரிலீஸ் ஆகும் முன்பே ஹிட்
ஸ்பாய்லர் அலெர்ட்
எதிர்பார்த்து வருவது காதல் இல்லை , எதிர்பார்க்காமல் வருவதுதான் உண்மையான காதல் என்பதுதான் படத்தின் ஒன லைன் .
நாயகன் ஒரு நடுத்தரக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் . அப்பா ஒரு பேக்கரிக்கடை வைத்து இருக்க்கிறார் , அம்மா ஹவுஸ் ஒயிப் . நாயகனுக்குப்படிப்பில் பெரிய அளவில் ஆர்வம் இல்லை . பத்தாவது படிக்கும்போதே சராசரிக்கும் குறைவான மார்க்கே வாங்கி ஜஸ்ட் பாஸ் தான் ஆகி இருக்கிறான்.
இருந்தாலும் தன மகனை ஒரு பெரிய பிரைவேட் ஸ்கூலில் சேர்க்கிறார்கள் .நாயகனின் அம்மாவுக்கு தன் மகன் படித்து கலெக்டர் ஆக வேண்டும் என்று ஆசை.
ஆனால் நாயகனுக்குப்படிப்பில் ஆர்வம் இல்லை.காதலில் தான் ஆர்வம்.
தான் அழகு இல்லையோ ? தன்னை யாரும் கவனிக்க மாட்டார்களோ ? என்ற தாழ்வு மனப்பான்மையில் நாயகன் இருக்கிறார் . பள்ளியில் படிக்கும் பெண்ணைக்காதலித்த்து காலேஜில் அதே காதலைத்தொடர்ந்து அவளையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் நாயகனின் லடசியம் ( ஆஹா, இதுவல்லவோ லடசியம் ? )
பள்ளியில் நாயகனை எந்தப்பெண்ணுமே கண்டு கொள்ளவில்லை . . இதனால் கடுப்பில் இருக்கும் நாயகனை ஒரு பெண் காதலிக்கிறார் . அவருக்கும் , பள்ளியில் படிக்கும் மாணவிக்கும் காதல் வருகிறது ,, இருவரும் காதலிக்கிறார்கள் . திடீர் என அந்தப்பெண்ணின் பாட்டிக்கு உடல் நிலை சரி இல்லை என்று தகவல் வர அந்தப்பெண் பாட்டியைப் பார்க்க ஊருக்குப்போகிறாள்
இந்த சமயத்தில் நாயகனிடம் இன்னொரு பெண் தன காதலை வெளிப்படுத்துகிறார் . இதற்கும் நாயகன் ஓகே சொல்லி விடுகிறார் . இவர்கள் இருவரும் நெருக்கமாப்பழகுவதைக்கண்ட நாயகனின் முதல் காதலி பிரேக்கப் செய்து விடுகிறாள்
நாயகன் மனம் உடைந்து இருக்கும் தருணத்தில் மூன்றாவதாக ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்படுகிறது, அவளிடம் நாயகன் காதலை சொல்லும்போது அவள் நாயகனிடம் இது காதல் இல்லை , வெறும் நட்பு தான் என்று சொல்லி விடுகிறாள் .
நாயகன் உடைந்து போகிறான் . இதற்குப்பின் இவரது காதல் கனவு என்ன ஆச்சு ? பள்ளியில் படித்து பாஸ் ஆனானா? என்பது மீதித்திரைக்கதை
நாயகன் ஆக கென் கருணாஸ் கச்சிதமாக நடித்திருக்கிறார்.வைகாசி பொறந்தாச்சு பிரசாந்த் போல இளம் உள்ளங்களைக்கொள்ளை கொள்கிறார்.முக பாவனை ,நடன அசைவுகள் ,குரல் அனைத்தும் அருமை.
நாயகிகள் ஆக மீனாட்சி தினேஷ்,அனிஷ்மா அனில் குமார் , பிரியன்சி யாதவ் மூவரும் நடித்திருக்கிறார்கள்.அழகு,இளமைத்துள்ளல் ,நடிப்பு அனைத்தும் ஓக்கே ரகம்.
முதல் பாதி கலகலப்பாக ,ஜாலியாகப்போகிறது.பின் பாதி எமோஷனல் டிராமா.
சபாஷ் டைரக்டர்
1 கலகலப்பான ,ஜாலியான முதல் பாதி சம்பவங்கள்
2 நடுத்தர மக்களின் மனதைத்தொடும் வகையில் அமைக்கப்பட்ட சில செண்டிமெண்ட் காட்சிகள் ,சில வசனங்கள் அருமை.
3 கலர்புல்லான ஒளிப்பதிவு.மொத்தப்படத்தையும் தன் ஒத்த இசையால் தாங்கிப்பிடித்த ஜிவிபி யின் இசை ,பின்னணி இசை. போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் பிரமாதம்
4 மெகா ஹிட் பாட்டான முட்டை கலக்கி ,மெலோடி சாங்
5 படிப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்திய விதம்
6 படிக்காம போனதால் இந்த சமூகம் என்னை எப்படி மோசமாக நடத்தியது?என்பதை நாயகனின் அப்பா நாயகனிடம் விளக்கும் அந்தக்காட்சி உருக்கம்.
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகனுடைய கேரக்டர் டிசைன் முதல் பாதியில் ஒரு மாதிரியாகவும் (ஜாலி டைப்),பின் பாதியில் வேறு மாதிரியாகவும் (சீரியஸ் டைப்)ஆவது எப்படி?
2 ஜி வி பி யின் பிஜி எம் பல இடங்களில் அனிரூத் பி ஜி எம் போலவே இருக்கிறது
,3 பல படங்களில் பார்த்து சலித்த டெம்ப்ளேட் காட்சிகள்.திரைக்கதையில் ஆஹா என சிலாகிக்க வைக்கும் புதுமை இல்லை
4 பின் பாதி திரைக்கதை சோர்வடைய வைக்கிறது
5 சமீபத்தில் வந்த டான் படத்தின் காட்சிகள் பலவற்றை நினைவுபடுத்தியது.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஜென் இஜட் சந்ததியினர் ரசித்துப்பார்க்கும் ஒரு படமாக இருக்கும். ரேட்டிங் 2.5 /5
DISKI -நாயகன் கென் கருணாஸ் நடிகர் தனுஷ் இடம் உதவி இயக்குநர் ஆகப்பணி ஆற்றியவர். படத்தின் பல காட்சிகளில் தனுஷ் பாணி இயக்கம் தெரிகிறது.
Sunday, April 05, 2026
Funky (2026)-தெலுங்கு/தமிழ் -சினிமா விமர்சனம். (ரொமாண்டிக் காமெடி டிராமா)@நெட் பிளிக்ஸ்
படத்தோட விமர்சனத்துக்குப்போகும் முன் இந்தப்படம் போலவே சினிமா விகடன்ஷூட்டிங் சம்பந்தமான கதை அம்சம் உள்ள தமிழ்ப்படங்கள் பட்டியலைப்பார்ப்போம்.
| Funky | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | K. V. Anudeep |
| Written by |
|
| Produced by |
|
| Starring | |
| Cinematography | Suresh Sarangam |
| Edited by | Naveen Nooli |
| Music by | Bheems Ceciroleo |
Production companies |
|
Release date |
|
Running time | 128 minutes[1] |
| Country | India |
| Language | Telugu |
Saturday, April 04, 2026
யார்றா அந்தப்பையன் நான் தான் அந்தப்பையன் (2026)-தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி டிராமா)
முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க அறிமுக இயக்குநர் பால்ராஜ் கதை,திரைக்கதை எழுதி இயக்கி தயாரித்து இருக்கும் படம் இது.இவர் யாரிடமும் உதவி இயக்குனர் ஆகப்பணி ஆற்றாமல் ஷூட்டிங்க் வேடிக்கை பார்த்தே தொழில் கற்றுக்கொண்டவர்.
புகழ் பெற்ற பாடல் வரியை டைட்டிலாகக்கொண்ட இந்தப்படம் திரைக்கதை அம்சத்திலும் வித்தியாசமாக இருக்கிறதா?என்பதைப்பார்ப்போம்.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு மெக்கானிக்.சொந்தமாக ஒரு மெக்கானிக் ஷாப் வைத்திருக்கிறார்.இவருக்கு ஆறு குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை.ஆனால் எந்தப்பெண்ணும் அதற்கு சம்மதிக்கவில்லை.கடைசியில் ஒரு பெண் அவரது கண்டிஷனுக்கு. ஓக்கே சொல்ல திருமணம் நடக்கிறது.ஒரு குழந்தையும் பிறக்கிறது
இதற்குப்பின் தான் பிரச்சனை வெடிக்கிறது.ஒரு குழந்தையை வைத்தே என்னால் சமாளிக்க முடியவில்லை.இன்னமும் ஐந்து பேரா?என்னால் முடியாது என நாயகனின் மனைவி ஸ்ட்ரிக்ட் ஆக மறுத்து விடுகிறார்.இருவருக்குள் மோதல் ஏற்படுகிறது.ஒரே வீட்டில் இருந்தும் இருவரும் தனித்தனியே இருக்கிறார்கள்.
நாயகி திருமணம் ஆனவர்.கணவன் மாமா மகன் தான். ஆனால் குடிகாரன்.தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதால் சண்டை.இவர்களுக்குக்குழந்தை இல்லை.ஆனால் நாயகிக்குக்குழந்தை என்றால் கொள்ளை ஆசை.இப்படிப்பட்ட தருணத்தில் நாயகியின் கணவன் ஒரு விபத்தில் இறந்து விடுகிறான்.
நாயகன்,நாயகி சந்திப்பு நடக்கிறது.ஆரம்பத்தில் நட்பாகப்பழகியவர்கள் பின் காதலர்களாக மாறி விடுகிறார்கள்.
நாயகனின் மனைவி ஒரு சந்தர்ப்பத்தில் நாயகனை நாயகியுடன் ஜோடி யாகப்பார்த்து விடுகிறாள்.சண்டை வெடிக்கிறது.
நாயகன் ,நாயகி இருவரும் பிரிகிறார்கள்.இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.
நாயகன் ஆக பால்ராஜ் நடித்திருக்கிறார்.இவர் பெரிய அளவில் ஸ்கோர் செய்யவில்லை.முடிந்தவரை சமாளித்து இருக்கிறார்.அவ்வளவுதான்.
நாயகனின் மனைவி ஆக காயத்ரி ரேமா குடும்பப்பாங்கான நடிப்பைத்தந்திருக்கிறார்.
நாயகி ஆக ஸ்வேதா ஸ்ரீ நடித்திருக்கிறார்.இவரது முக பாவனைகள் அருமை.
வில்லன் ஆக ரவி மரியா நடித்திருக்கிறார்.அதிக வாய்ப்பில்லை.வந்த வரை ஓக்கே ரகம்.
படத்தில் நடித்த மற்ற துணை நடிகர்கள் ஆன அம்பானி சங்கர் ,பசஙக பட புகழ் சிவக்குமார் போன்றோர் நடிக்க அதிக வாய்ப்பில்லை,ஸ்க்ரீன் ஸ்பேஸ் தரப்படவில்லை என்றாலும் கொடுத்த கேரக்டரை நன்றாக செய்திருக்கிறார்கள்.
இசை விஜய் பிரபு.பாடல்கள் சுமார் ரகம் தான்.பின்னணி இசை பரவாயில்லை ரகம்.
ஒளிப்பதிவு உதயன்.இரு நாயகிகளை அழகாகவே காட்டி இருக்கிறார்.
கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கி தயாரித்து இருக்கிறார் நாயகனாக நடித்து இருக்கும் பால்ராஜ்.
சபாஷ் டைரக்டர்
1 போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக வரும் ரவி மரியா வரும் காட்சிகள் எல்லாம் சுவராஸ்யமாகவே இருக்கிறது.
2 நாயகி ஆக வரும் ஸ்வேதா ஸ்ரீ யின் அழகும் நடிப்பும் தான் படத்துக்குப்பக்க பலம்
3 பேமிலி டிராமாவாகக்கொண்டு போகலாம் என்ற இயக்குனரின் முயற்சி குட்.
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகிக்குத்திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகியும் கணவருடன் தாம்பத்ய வாழ்க்கை வாழவே இல்லை என்பதை நம்ப முடியவில்லை.என்ன தான் குடிகாரன் என்றாலும் ஒரு நாள் கூடவா கணவர் ஆக நடந்து கொள்ளாமல் இருப்பார்?
2 தன்னை நம்பி வந்தவர்களைக்கை விட மாட்டேன் இது தான் என் கொள்கை என்று கூறும் நாயகன் மனைவிக்கு துரோகம் செய்வது ஏற்புடையதாக இல்லை
3 நாயகி மேல் ஆசைப்படும் போலீஸ் ஆபீசர் திடீர் எனக்கொலை செய்யப்படுவது அதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் எல்லாம் மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாதவை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சுமாரான ,பழக்கப்பட்ட கதை தான் ,போர் அடிக்காமல் கதை சொல்ல முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றி பெற்று இருக்கிறார் இயக்குநர்.ரேட்டிங்க் 2.5 /5



.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)