Saturday, April 11, 2026

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 10/4/2026. ஏப்ரல் 2 ம் வாரம் தமிழ்ப்புத்தாண்டு ரிலீஸ் படங்கள் ஒரு பார்வை

 இந்த வாரம் 3 நேரடித்தமிழ்ப்படங்கள்,ஒரு மலையாளப்படம் தமிழ் டப்பிங் கில். ஆக மொத்தம் 4 தமிழ்ப்படங்களும் ,2 ரீ ரிலீஸ் படங்களும் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு 10/4/2026 அன்று வெளியாக இருக்கிறது



1. LIK (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி)

இதற்கு முதலில் எல் ஐ சி என்று தான் டைட்டில் வைத்தார்கள்.லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்பது தான் டைட்டிலின் விரிவாக்கம்.ஆனால் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல் ஐ சி எதிர்க்கவே எல் ஐ கே ஆக்கி விட்டார்கள்.


விக்னேஷ் சிவன் + சிவகார்த்திகேயன் காம்போவில் இந்தப்படம் உருவாக இருந்தபோது அதன் கதை வேறு.எதிர் காலத்துக்குப்போய் தனக்கான மணப்பெண் யார் என்று பார்த்து வந்து நிகழ்காலத்துக்குத்திரும்பும் நாயகன் செய்யும் ரகளைகள் தான் ஒன் லைனாக இருந்தது.ஆனால் ஹீரோ மாறி விட்டார் என்றதும் கதையும் மாறி விட்டது.

இந்தப்படம் ரெடி ஆகி 18/9/2025 அன்றே ரிலீஸ் ஆக இருந்தது.பல்வேறு காரணங்களால் இதுவரை நான்கு முறை தள்ளிப்போனது.


பிரதீப் ரங்கநாதன் தொடர்ந்து  100 கோடி கிளப் படங்கள் 3 தந்த முதல் தமிழ் சினிமா ஹீரோ என்ற அந்தஸ்தைப்பெற்றவர்.அவர் திரையில் வந்து நின்றாலே கரகோஷம் ,ஆரவாரம் தான்.

அந்தக்காலத்தில் ரஜினி செய்த ஸ்டைல்கள் ,பிரபுதேவாவின் முக பாவனைகள் ,தனுசின் உடல் மொழி. இந்த மூன்றின் கலவை தான் இவர்.

படத்தின் ட்ரெய்லரைப்பார்த்தபோது யூகிக்க வைத்த கதை.

கதை நடக்கும் காலகட்டம் 2040 (சமீபத்தில் வந்த மலையாள சயின்ஸ் பிக்சன் திரில்லர் படமான மரண மாஸ் படத்திலும் கதை நடக்கும் கால கட்டம் 2040)

வில்லன்  காதலர்களுக்கான ஒரு ஆப் கண்டுபிடிக்கிறான்.அந்த ஆப்பில் ஜாதகப்பொருத்தம் பார்ப்பது போல ஜோடிப்பொருத்தம் பார்க்கலாம்.வில்லனின் ஆப்  அமோக வரவேற்பைப்பெறுகிறது.

நாயகி ஒரு சோசியல் மீடியாப்பைத்தியம்.பேஸ்புக் ,இன்ஸ்டா வில் லைக்ஸ் ,கமெண்ட்ஸ்  வாங்குவதற்காக அல்லும் ,பகலும் அயராது பாடுபடுபவர். வில்லனின் புதிய ஆப் அவரது கவனத்தைக்கவர்கிறது.

நாயகன் நாயகியைப்பார்த்ததுமே மனதைப்பறிகொடுக்கிறான்.அவனுக்கு இந்த ஆப்பில் நம்பிக்கை இல்லை.

நாயகி அந்த ஆப் மூலம் நாயகனுடன் தனக்கு ஜோடி சேர பொருத்தம் இருக்கிறதா?என்று பார்க்கும்போது  பொருத்தம் இல்லை என வருகிறது.வில்லனின் சதி வேலை தான் இது.

நாயகன் வில்லனை மீறி எப்படி நாயகியைக்கரம் பிடிக்கிறான்?என்பது தான் மீதித்திரைக்கதை.

 வில்லன் ஆக  எஸ் ஜே சூர்யா ,நாயகன் ஆக பிரதீப் ரங்கநாதன் ,நாயகி ஆக க்ரித்தி ஷெட்டி  நடிக்கிறார்கள் 

சீமான் இதில் ஒரு காமெடியன் ரோல் செய்திருக்கிறார்.யோகிபாபு,சுனில்,மிஸ்கின் என்று காமெடியன்ஸ் பட்டாளம் களை கட்டும் போல் தெரிகிறது.

மாடர்ன் உலகில் நவீன விஞ்ஞானக்கண்டுபிடிப்புகளால் மன உளைச்சல் அடைந்தவர்களைப்பேணி காக்கும் தன்னார்வல சிறைக்கைதிகள் காப்பகம் நடத்தி வருபவர் தான் சீமான்.இவரது கேரக்டர் டிசைன் நித்யானந்தாவை கிண்டல் செய்வது போல் இருக்கிறது.

ரசித்த வசனங்கள்

1 வில்லன் -யார் யார் கூட சேர்ந்தா நைஸ் ,யார் கூட சேர்ந்தா நாய்ஸ் என்பதை இந்த ஆப் கண்டுபிடிச்சு சொல்லும்

2 நாயகி - ஒரு லைக் ,ஒரு கமெண்ட் ,ஒரு ஷேர் வாங்கறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?

3 நாயகன் - முதல்ல எல்லாம் ஜாதில ஒத்துக்கலை ,ஜாதகத்தில் ஒத்துக்கலை ,வீட்ல ஒத்துக்கலை ,நாட்ல ஒத்துக்கலை,ஊர்ல ஒத்துக்கலை,அப்பன் ஒத்துக்கலை ,ஆத்தா ஒத்துக்கலைன்னு சொல்லிட்டு திரிஞ்சீங்க,இப்போ ஆப் ஒத்துக்கலைன்னு புதுசாக்கிளம்பி இருக்கீங்களா?டிசைன் டிசைனா யோசிப்பீங்களா?எப்படி பிரேக்கப் பண்ணலாம்னு?

4 ஒரு ஹார்ட்டோட வேலையை எந்த ஒரு ஆப்பாலயும் பண்ண முடியாது.இதை ப்ரூப் பண்ணிக்காட்றேன்

படத்தில் நாயகன் ,,வில்லன் இருவர் நடிப்பும் அருமையாகத்தான் இருக்கிறது.ஆனால் நாயகியின் கேரக்டர் டிசைன் கொஞ்சம் அரை லூஸ் போல் வடிவமைக்கப்பட்டிருப்பதால் அவரை ரசிக்க முடியவில்லை.

மற்றபடி இயக்குநர் விக்னேஷ் சிவன் டச் இருக்கிறது.ஒளிப்பதிவு ,செட்டிங்க்ஸ்,ஆர்ட் டைரக்சன் பிரமாதம்.

அனிரூத் தான் இசை என்பதால் பிஜி எம் தெறிக்கும் என எதிர் பார்க்கலாம்



2. TN 2026 (தங்க நட்சத்திரம்)

சமீபத்தில் ரிலீஸ். ஆகி ஹிட் ஆன தலைவர் தம்பி தலைமையில் பட இயக்குநர் உமாபதி ராமய்யா  + சதுரங்க வேட்டை புகழ் நட்டி என்கிற நடராஜ் காம்போவில் உருவான படம்.

இந்தப்படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தான் நடிகர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கும்  முதல். படத்தின் தயாரிப்பாளரும் கூட

தலைவா படத்தில் டைம் டூ லீடு என்று  கேப்சன் போட்டிருந்தது போலவே இந்தப்படத்துக்கும் கேப்சன் போட்டிருந்ததால் விஜய் ரசிகர்கள் இந்தப்படத்தைக்கொண்டாடினார்கள்.ஆனால் டீசர் பார்த்ததும் இது விஜய்க்கு எதிரான படம் என்பதை உணர்ந்தார்கள்.விஜயின் அரசியல் வருகையைக்கேலி செய்யும் படம் இது.

நடிகர் விஜயின் அரசியல் வாழ்க்கையை கிண்டல் செய்யும் கதை போல் தெரிகிறது.நாயகனின் கெட்டப்,உடல்மொழி அப்படியே விஜய் யை காப்பி அடித்து இருக்கிறது.

இதில் புஸ்சி ஆனந்த் ஆக தம்பி ராமய்யா (இயக்குநர்  உமாபதி ராமய்யாவின் அப்பா),செங்கோட்டையன் வேடத்தில் எம் எஸ் பாஸ்கர் ,சீமான் வேடத்தில் ரெடின் கிங்க்ஸ்லீ. ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.


ரசித்த வசனங்கள்

1 இதுவரை உங்களைத்தவிர்த்து விட்டால் சினிமா நியூஸ் கிடையாது.இனி உங்களைத்தவிர்த்து விட்டால் அரசியல் நியூசும் கிடையாது.

2 நாட்டில் வாழனும்னு நினை.தப்பில்லை. ,நாட்டை ஆளனும்னு நினைக்கறியே?தப்பில்லை?( சீமான் விஜயைப்பார்த்துக்கேட்பது போல் வசனம்)
3 கூத்தாடியா வந்தவனை எல்லாம் தலை மேல் தூக்கி வெச்சு தலைவன் ஆக்கிக்கொண்டாடறீங்க

4 எம் ஜி ஆர் எல்லாம் கட்சி ஆரம்பிச்சதும் எப்படி சி எம் ஆனாரு?எங்க. தங்கத்தலைவனும் அதே நினைப்புல  தானே இருக்காரு?

5 ஓம் சக்தி பராசக்தி

புரிஞ்சிடுச்சு.இதுக்கு மேல ஒண்ணும் சொல்ல வேணாம்

படத்தில் நாயகன் இரு வெவ்வேறு நடிகைகளுடன் ஜோடியாக இருப்பது போல் காட்டப்பட்டுள்ளது.

கரூர் சம்பவம் ட்ரெய்லரில் இல்லை.மெயின் படத்தில் இருக்கலாம்

மொத்தத்தில் இது பரபரப்பான படமாக இருக்கக்கூடும்



3. மனிதன் தெய்வம் ஆகலாம்

இயக்குநர் செல்வராகவன் நாயகன் ஆக நடிக்க இயக்குநர்  டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கி இருக்கும் படம் இது.இவர் ஏற்கனவே தூக்குதுரை,ட்ரிப்ஸ் ஆகிய படங்கள் இயக்கியவர்.

நாயகி ஆக குஷி ரவி ,கவுசல்யா,மைம் கோபி,ஒய் ஜி மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.


இதன் ட்ரெய்லரைப்பார்த்தபோது நாயகன் ,நாயகி இருவரும் எந்த வித அடிப்படை வசதியும் இல்லாத கிராமத்தில் வாழ்கிறார்கள்.

அழகாக இருக்கும் நாயகி அழகில்லை என்றாலும் ,மாறுகண் என்றாலும் பரவாயில்லை என நாயகனை மணக்க சம்மதிக்கிறாள்.
அரசியல் புள்ளி ஆன வில்லனுடன் சாமான்யன் ஆன நாயகனுக்கு ஒரு மோதல் ஏற்படுகிறது.வில்லனை மீறி தன் ஊருக்கு நல்லது நடக்க வைப்பது தான் கதை போலத்தெரிகிறது

ரசித்த வசனங்கள்

1 முக அழகில் என்ன இருக்கு?அனுசரித்துப்போகும் வாழ்க்கையில் தான் எல்லாம் இருக்கு

2 நீ நடந்த நடைக்கு நாலு சட்டி மண் அள்ளிப்போட்டிருந்தாக்கூட ரோடு ரெடி ஆகி இருக்கும்

3 இந்த ஊரில் மருத்தவ வசதி இல்லை ,கல்வி வசதி இல்லை,லைட் வசதி இல்லை ,ரோடு வசதி இல்லை.எதுவுமே இல்லை

4 உன்னோட உண்மையை வெளிச்சத்துக்குக்கொண்டு வா.அப்போ தான் அநீதி என்னும் இருட்டு நீங்கும்

இது ஒரு லோ பட்ஜெட் படம்.கிராமத்துக்கதை.



4. பள்ளிச்சட்டம்பி  

இது ஒரு மலையாளப்படம்.தமிழ் டப்பிங் கில் வெளியாகிறது.இந்தப்படம் மட்டும் ஒரு நாள் முன்னதாக 9/4 /2026 முதல்  வெளியாகிறது.

டோவினோ தாமஸ் +கயாடு லோஹர் ஜோடியாக நடிக்க உருவாகி இருக்கும் ஆக்சன் திரில்லர் படம் இது.டிஜோ ஜோஸ் ஆண்ட்டணி தான் இயக்குநர்.

வழக்கமாக மாடர்ன் டிரசில் மாடர்ன் கேர்ள் ஆகவே வலம் வந்த கயாடு லோகர் இதில் முதல் முறையாக தாவணி அணிந்து கிராமத்துப்பெண் ஆக வருகிறார்.

முரளி நடித்த வாட்டாகுடி இரணியன் படம் போல புரட்சி வீரனின் கதை போலத்தெரிகிறது.


நாயகன் சண்டைபயிற்சி தருபவனாக வருவதால் படத்தில் ஆக்சன் சீக்வன்ஸ் அதகளம் ஆக இருக்கும் போல் தெரிகிறது.


ரசித்த வசனங்கள்

1 மனுசனால் செய்ய முடியாத காரியத்தை தெய்வத்தால் செய்ய முடியும் என்று நம்புவதும் மூட நம்பிக்கை தான்
2. அந்த மண் நீரை வெந்நீர் ஆக்க அவன் வருவான்.



5. அமைதிப்படை (1994)

இயக்குநர் மணிவண்ணன் + சத்யராஜ் காம்போவில் சத்தமே இல்லாமல்  ரிலீஸ் ஆகி சக்கை போடு போட்ட படம் இது.

அரசியல் நையாண்டிப்படங்களின் மைல் கல் என்று சொல்லலாம்.

இதில் நாயகன் அமாவாசை ஆக வந்து தேங்காய் பொறுக்கிக்கொண்டு இருப்பவன் ஒரு அரசியல்வாதியிடம் அல்லக்கையாக சேர்ந்து  எம் எல் ஏ ஆகி  அரசியலில் புகழ் பெறும் கதை.

இதில் சத்யராஜ் நாயகன் ,வில்லன் என இரு வேடங்களில் கலக்கி இருப்பார்.நாயகனை விட வில்லனுக்குத்தான் அதிகக்காட்சிகள் இருக்கும்

இதில் கஸ்தூரி க்கு அல்வா கொடுத்து ஏமாற்றும் சீன் உலகப்புகழ் பெற்று அல்வா தருவது என்றாலே ஏமாற்றுவது என்று ஆனது.

அரசியல்வாதி ஆக வரும் மணிவண்ணன் பிறகு சத்யராஜிடமே எடுபுடி ஆக வருவது காமெடிக்கலக்கல்.


நாயகனுக்கு ஜோடி ரஞ்சிதா ,வில்லனுக்கு ஜோடி சுஜாதா.

இந்தப்படத்தின் ஆடியோ வசனக்கேசட் அந்தக்காலத்தில் ஏராளம் விற்றது.பட்டி தொட்டி எல்லாம் ஹிட் ஆன படம் இது

பிரபல வசனங்கள்

1. அமாவாசை

அதானே உன் பேரு?

அமாவாசை நல்ல நாள் என்பதால் வந்தேன்.பட் நம்ம பேரு நாராஜ சோழன் எம் ஏ 

2 அண்ணே அப்போ தாயம்மா?

அது யாரு?

தாய் என்றாலும் ,அம்மா என்றாலும் ஒண்ணு தான்னு சொல்றான் வேற ஒண்ணுமில்ல.

3  என்னப்பா?டெபாசிட் வாங்கிடுவியா?

வாங்கினாலும் சந்தோசம் தானுங்.வாங்கலைனாலும் சந்தோசம்தானுங

பின்னே?டெபாசிட் காசு என்னுதில்ல?

4. நம்ம வார்டுல கவுண்ட்டிங்க் நடக்கட்டும்,அப்போ  தெரியும்

கள்ள ஓட்டுப்போட்டதே அங்கே தான்


இளையராஜாவின் இசையில் பாடல்களும் ஹிட் தான்.

1. சொல்லி விடு வெள்ளி நிலவே 
2. எனக்கு உன்னை நினைச்சா மஜா மஜா 

3 முத்துமணித்தேர் இருக்கு
4 வெற்றி வருது
5 அட நானாச்சு
6 அம்மா தாயே

ஒரு சுவராஸ்யத்தகவல்.நடிகர் விஜய் அமைதிப்படை மாதிரி ஒரு படம் பண்ண ஆசைப்பட்டாராம்.இந்தத்தகவலை சத்யராஜே மேடையில் பகிர்ந்தார்.



6 தாம் தூம் (2008)

12பி இயக்குநர் ஜீவா இயக்கிய படம் இது.அவர் மறைந்து விட்டார்.

முழுக்க முழுக்க ரஷ்யாவில் படமாக்கப்பட்ட படம் இது.

ஜெயம் ரவி,கங்கனாரன்வத்,லட்சுமிராய் ,ஜெயராம் நடித்த படம் இது.

நாயகன் ஒரு டாக்டர்.ஒரு மருத்துவ மாநாட்டுக்காக  ரஷ்யா போகிறார்.அங்கே ஒரு பெண்ணைக்கொலை செய்ததாக ஒரு குற்றச்சாட்டு.மொழி தெரியாத நாட்டில் போலீசிடம் சிக்கிய நாயகன் கொலையாகியைக்கண்டு பிடிப்பது தான் கதை.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் ஹிட்.ஆனால் படம் ஹிட் ஆகவில்லை.ஆனந்த விகடன் 39/100 மார்க் கொடுத்திருந்தது.

பொதுவாக மெகா ஹிட் ஆன படத்தைத்தான் ரீ ரிலீஸ் செய்வார்கள்.முதல் ரிலீசில் தோல்வியைத்தழுவிய படத்தை ஏன் ரீ ரிலீஸ் செய்கிறார்கள்?என்பது தெரியவில்லை.


ஹிட் சாங்க்ஸ்

1 திக்கு திக்கு
2 அன்பே என் அன்பே
3 உய்யலாலோ உய்யலாலோ
4 சகியே
5 புதுப்புது
6 ஆழியிலே

Thursday, April 09, 2026

CHIRAIYA (2026) -ஹிந்தி /தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் (மெலோ டிராமா )@ஜியோ ஹாட் ஸ்டார்



சிரையா என்ற சொல்லுக்கு பறவை என்று அர்த்தம்.பெண்கள் அடிமையாக இருக்கக்கூடாது.தன் சிறகுகளை விரித்து சுதந்திரமாகப்பறக்க வேண்டும் என்று கருத்து சொல்லி இருக்கிறார்கள்.


இது மொத்தம் 6 எபிசோடுகள் கொண்டது.ஒவ்வொரு எபிசோடும்  30 நிமிடங்கள் ரன்னிங் டைம்.ஆக மொத்தம் 3  மணி நேரம் ஒதுக்கினால் ஒரே அமர்வில் பார்த்து விடலாம்.

ஹிந்தி வெப் சீரிசான இது தமிழ் டப்பிங்கில் ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் காணக்கிடைக்கிறது.

நாயகி ஒரு குடும்பத்தில் மாமியார் மெச்சிய மருமகளாய் இருக்கிறார்.கல்வி அறிவு குறைவு.கணவர் மிக அன்பானவர்.மாமியாரும் அனுசரணையாய் நடந்து கொள்பவர்.


நாயகியின் கணவருக்கு ஒரு தம்பி இருக்கிறான்.அவன் சின்னப்பையனாக இருந்த போதே நாயகி தான் அண்ணியாக இல்லாமல் அம்மா ஸ்தானத்தில் இருந்து வளர்த்து வருகிறாள்.

இப்போது அவனுக்குப்பெண் பார்க்கும் படலம் நடக்கிறது.நாயகிக்குப்பெண்ணைப்பார்த்ததும் ஒரு பயம் வருகிறது.ஏனெனில் அவள் மெத்தப்படித்தவள்.அவள் இந்த வீட்டுக்கு மருமகளாய் வந்தால் தனக்கு மதிப்பு இருக்காது என நினைக்கிறாள்.இதனால் பெண் அழகாக ,லட்சணமாக இருந்தாலும் மிகவும் கிளாமராக உடை அணிந்திருக்கிறாள் என்று சாக்கு சொல்லி பெண்ணை நிராகரிக்க முயற்சிக்கிறாள்.

ஆனால் நாயகியின் கணவனின் தம்பி கெஞ்சுகிறான்.அதெல்லாம் சரி பண்ணிக்கலாம்.நீங்க ஓக்கே சொன்னால் போதும் என்று நாயகியின் மனதை மாற்றி அந்தப்பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறான்.

திருமணம் நடக்கும் நாளில் மணப்பெண்ணுக்கு உடல் நிலை சரி இல்லை.அன்று இரவு மணப்பெண் தன் கணவனிடம் இன்று தாம்பத்யம் வேண்டாம் என்கிறாள்.ஆனால் கணவன் கேட்கவில்லை.வலுக்கட்டாயமாக உறவு கொள்கிறான்.இது மணப்பெண்ணுக்குப்பிடிக்கவில்லை.

இது தொடர்கிறது.கணவன் ஆக இருந்தாலும் நோ மீன்ஸ் நோ தான்.பெண்ணின் சம்மதம் இன்றி ஆண் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்பது மணப்பெண்ணின்  நிலைப்பாடு.

நாயகியிடம் தன் நிலையைக்கூறுகிறார்.இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் என்ன?குடும்பம் எப்படி மணப்பெண்ணை எதிர் கொண்டது?மணப்பெண்  தன் கணவனை சரிப்படுத்தினாரா?என்பது மீதி திரைக்கதை.

நாயகி ஆக குடும்பத்தலைவி ஆக திவ்யா தத்தா சிறப்பான நடிப்பு.குடும்பப்பாங்கான தோற்றம்.ஆரம்பத்தில் வில்லி மாதிரி தோன்றினாலும் பின் நாயகி ஆகவே தொடர்கிறார்.

மணப்பெண் பூஜாவாக வருபவர் அழகு ,இளமை ,நடிப்பு மூன்றிலும் மனம் கவர்கிறார்.

புது மாப்பிள்ளை ஆக வருபவருக்குக்கிட்டத்தட்ட வில்லன் ரோல்.கச்சிதமாக செய்திருக்கிறார்.

                            


சபாஷ்  டைரக்டர்


1 Marital Rape என்ற கான்செப்ட்டை துணிச்சலாக எடுத்துக்காட்சிப்படுத்திய விதம்.

2. பெண் என்பவள் ஒரு பிராப்பர்ட்டி கிடையாது என்பதை உணர்த்தும் அழுத்தமான சம்பவங்கள் ,,வசனஙகள்


3 கணவன் மீது வரதட்சணைக்கொடுமை வழக்கு பொய்யாகப்பதியலாம் என யோசனை சொல்லும்போது பூஜா கேரக்டர் கேட்கும் கேள்வி அருமை. சட்டப்படி இந்த மாதிரி ஆண்களை தண்டிக்க சட்டம் ஏன் இல்லை ?


4 நாயகியின் கணவர் கூட தன்னை முற்போக்குவாதியாகக்காட்டிக்கொண்டாலும் ரியல் லைபில் இன்னொரு முகம் வைத்திருக்கிறான் என்று காட்டிய விதம்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 பின் பாதியில் டி வி சீரியல் போல நகர்வதைத்தவிர்த்திருக்கலாம்.அசாத்திய பொறுமை தேவை

2 புது மணப்பெண்ணின் அப்பா கூட அவளுக்கு ஆதரவில்லை எனக்காட்டி இருப்பது ஓவர்.எந்த அப்பாவாவது தன் மகளுக்கு எதிராக நடப்பாரா?


3 ஒட்டு மொத்த ஆண் வர்க்கமே வில்லன் தான் என்பது போலக்கேரக்டர்களை வடிவமைத்திருக்கிறார்கள்.

4 உடல் நிலை சரி இல்லாதபோது மணப்பெண் தாம்பத்யத்திற்கு மறுப்பது சரி.எப்போதுமே விருப்பமே இல்லை என்பது போல் காட்சிப்படுத்தியது ஏனோ?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் 18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ஆண்களுக்குப்படிப்பினை ஊட்டும் கதை தான்.ஆனால் பெண்களால் மட்டும் தான் பொறுமையாகப்பார்க்க முடியும்.ரேட்டிங்க் 3/5

Wednesday, April 08, 2026

USTAAD BHAGAT SINGH (2026)-தெலுங்கு/தமிழ் -சினிமா விமர்சனம் (ஆக்சன் மாஸ் மசாலா)

                 

          தபு+ஜோதிகா நடித்த மேரா இன்சாப் (ஷாக்) SHOCK(2006) என்ற படத்தை ராம் கோபால் வர்மா தயாரிக்க ,அதில் இயக்குநர் ஆகப்பணியாற்றியவர் தான் ஹரீஷ் சங்கர். 

They call him OG (2025) என்ற மாஸ் மசாலா ஆக்சன் படத்தில் நடித்து 300 கோடி ரூபாய் வசூலை  அள்ளியவர் தான் பவன் கல்யாண்

.

கப்பார் சிங்க் (2012) இதே இயக்குநர்+ஹீரோ காம்போபில் 30 கோடி பட்ஜெட்டில் உருவாகி 5 மடங்கு லாபம் (150 கோடி வசூல்) சம்பாதித்துக்கொடுத்த படம்

14 வருடங்களுக்குப்பின் இவர்கள் இருவரும் இணைந்திருக்கும் இந்தப்படம் எப்படி இருக்கிறது?எனப்பார்ப்போம்.

ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன் ஒரு மோசமான அரசியல்வாதி.முதல்வர் பதவியை எப்படியாவது அடைய வேண்டும் என்பதே அவன் லட்சியம்.நேர்மையான முதல்வரை கொலை செய்ய முயற்சிக்கிறான்.ஆனால் அவர் தப்பி விடுகிறார்.ஆனாலும் சீரியஸ் ஆக இருக்கிறார்.இதனால் கட்சி யில் இருக்கும் அடுத்த தலைவரை இடைக்கால முதல்வர் ஆக்குகிறார்கள்.அவரையும் வில்லன் கொலை செய்து விடுகிறான்.


வில்லனுக்கு இரு மகன்கள்.கஞ்சா விற்பவன் ,பெண்களை வன் கொடுமை செய்பவன் என இருவருமே அக்கிரமக்காரர்கள்.

வில்லனின் மகனை நாயகன் கடத்தி அவன் கஸ்டடியில் வைத்திருக்கிறான்.

நாயகன் முன்னாள் காவல் துறை அதிகாரி.இப்போது ஒரு வனப்பிரதேசத்தில் சத்ரியன்  படத்தில் வரும் ஏ சி பன்னீர் செல்வம் போல் வசித்து வருகிறார்.

நாயகன் எதற்காக வில்லனின் மகனைக்கடத்தினார்?தன் மகனை மீட்க ஒரு குழுவை அனுப்பிய வில்லன் மீட்டானா?நாயகன்  ஹைதராபாத்தில் போலீஸ் ஆபீசர் ஆக இருந்தபோது வில்லனுடன் ஏற்பட்ட பிரச்சனை என்ன?போன்ற கேள்விகளுக்கு வரும் விடைகள் தான் மீதி திரைக்கதை.

நாயகன் ஆக பவன் கல்யாண்.ஒரு மாஸ் மசாலா ஹீரோ என்னென்னெ செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்திருக்கிறார்.

வில்லன் ஆக ஆர் பார்த்திபன் பெரிதாக எடுபடவில்லை.சத்ரியன் படத்தில்  திலகன் பேசும் வசனம் மிக பிரபலம்.நீ மறுபடியும் ஏ சி பன்னீர் செல்வமா வரனும்.என் மேல கை வைக்கனும்.அப்போ உன்னை நான் ஒழிக்கனும் என்ற பவர் புல் டயலாக் பேசி அதகளம் பண்ணிய கேரக்டர் டிசைன் அது.ஆனால் இதில் வில்லனுக்கு அந்த அளவுக்கு வெயிட் ஆன  ரோல் இல்லை.


நாயகிகள் ஆக ஸ்ரீ லீலா +ராஷி கண்ணா.இதில் ராசி கண்ணாவுக்கு அதிக வேலை இல்லை.சத்ரியன் படத்தில் ரேவதி மாதிரி கெஸ்ட் ரோல்.ஸ்ரீலீலா வுக்கு நல்ல வாய்ப்பு. சத்ரியன் பானுப்ரியா மாதிரி படம் முழுக்க வருகிறார்.


இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் முதல்வர் ஆக வருகிறார்.நாயகனின் அம்மாவாக கவுதமி கச்சிதம்.நாயகியின் அப்பாவாக ஜெயபிரகாஷ் ஓக்கே ரகம்

எஸ் தமனின் இசையில் 3 பாடல்கள் சுமார் ரகம்.தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை யில் நம் காதுகள் வலிக்கின்றன.டொம் டொம் என்று படம் முழுக்க படுத்துகிறார்.

கார்த்திகா சீனிவாசின் எடிட்டிங் கில் படம் 154 நிமிடங்கள் ஓடுகிறது.ஆனால் நமக்கு 3 மணி நேரம் ஓடியது போல் ஒரு உணர்வு.

அயனங்கா போஸ் சின்  ஒளிப்பதிவில் காட்சிகள் பிரம்மாண்டம்.

டைட்டிலில் கதை ஹரீஷ் சங்கர்

திரைக்கதை தசரத் +ரமேஷ் ரெட்டி என போடுகிறார்கள்.ஆனால் உண்மையில் சத் ரியன் + தெறி  தான் 

ஹரீஷ் சங்கர் இயக்கி இருக்கிறார்

சபாஷ்  டைரக்டர்

1 சத்ரியன்  பட இயக்குநர் கே சுபாஷ் + தெறி இயக்குநர் அட்லீ ஆகிய இருவருக்கும் டைட்டில் கார்டில் நன்றி போடாமல் தைரியமாக கதை தன்னுடையது எனப்போட்டுக்கொண்ட தைரியம் அருமை.


2 மாஸ் மசாலா ஆக்சன் படத்துக்குத்தேவையான அனைத்து ஹீரோபில்டப் காட்சிகள் + ஆக்சன் சீக்வன்ஸ் அனைத்தும் அருமை


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான தெறி படத்தில் இருந்து 17 காட்சிகள்  இதில் அப்படியே வருகின்றன.தெறி படமே விஜய்காந்த் நடித்த சத்ரியன் படத்தின் உல்டா வெர்சன் தான்.ஆனால் அதையும் உல்டா செய்திருக்கிறார்கள்.

2 நாயகனையே பல கதாப்பாத்திரங்கள் நையாண்டி செய்வது போல் பல காட்சிக்ள் அவரது இமேஜையே டேமேஜ் செய்கிறது

3  வலிமையான வில்லன் பாத்திரமே இல்லை.வில்லனே ஸ்ட்ராங்க் இல்லை எனில் ஹீரோ என்ன  செய்ய முடியும்? ஆடியன்ஸ் தான் என்ன செய்ய முடியும்?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+ வன்முறைக்காட்சிகள் அதிகம்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  

சத்ரியன் (1990)+ தெறி (2016)  ஆகிய இரு படங்களைப்பார்க்காதவர்கள் மட்டும் காதில் பஞ்சு வைத்துக்கொண்டு படம் பார்க்கலாம்.ரேட்டிங்க் 2 / 5


பி.கு 


இந்தப்படம் நெட் பிளிக்சில் தமிழ் டப்பிங் கில் அடுத்த மாதம் 10 ம் தேதி வர இருக்கிறது


Ustaad Bhagat Singh
Theatrical release poster
Directed byHarish Shankar
Screenplay byDasaradh
Ramesh Reddy
Story byHarish Shankar
Produced by
  • Naveen Yerneni
  • Yalamanchili Ravi Shankar
Starring
CinematographyAyananka Bose
Edited byKarthika Srinivas
Music by
Production
company
Distributed byAGS Entertainment
Prathyangira Cinemas
DreamZ Entertainment
Release date
  • 19 March 2026
Running time
154 minutes[1]
CountryIndia
LanguageTelugu
Budget120 crore[2]

Tuesday, April 07, 2026

PRAKAMBANAM (2026) -மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( ஹாரர் திரில்லர் )@ZEE5

           


         ரூ  4 கோடியில்  எடுக்கப்பட்ட  லோ பட்ஜெட்  படமான  இது 21 கோடி  ரூபாய்  பாக்ஸ் ஆபீசில்  வசூல்  செய்து  சாதனை படைத்துள்ளது .30/1/2026  அன்று  திரை அரங்குகளில்  வெளியான   இந்தப்படம்  இப்போது  தமிழ்  டப்பிங்கில்  ஜீ  5 ஓடிடி  தளத்தில் காணக்கிடைக்கிறது இந்தப்படத்தின்  ஷூட்டிங்க்  எர்ணாகுளத்தில்  ஒரு ஹாஸ்டலில்  50% , கண்ணூர்  ல  50%  நடந்தது .பிரகம்பனம்  என்ற   சொல்லுக்கு  அதிர்வு  என்று  பொருள்            


ஸ்பாய்லர்  அலெர்ட்



நாயகன் 18 வயது  இளைஞன் .காலேஜ்  ஹாஸ்ட்டலில்  தங்கிப்படிக்கிறான் . நாயகனின்  பாட்டி  பூஜை புனஸ்காரங்களில்  மிகுந்த  நம்பிக்கை  கொண்டவர் .இறந்த சொந்தங்களுக்குப்படையல்  போட்டு  விட்டுத்தான்  நாம் சாப்பிட வேண்டும்  என்ற கொள்கை கொண்டவர் . ஆனால்  பாட்டியின்  மகன்களுக்கு , அதாவது  நாயகனின்  அப்பா, சித்தப்பா இவர்களுக்கெல்லாம்  இது பிடிக்காது . காரணம்  அவர்கள்  கம்யூனிச  சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் , பகுத்தறிவுவாதிகள் , பாட்டிக்கும் , இவர்களுக்கும் எப்பவும் ஆகாது ..


 ஒரு தருணத்தில்   பாட்டி   திடீர்   என இறந்து  விட   நாயகன்  அங்கே   வருகிறான் . காரியங்கள் எல்லாம் 

முடிந்த பின்  நாயகனின்  தாத்தா  நாயகனிடம்  ஒரு பானையைக்கொடுத்து  இதில்  பாட்டியின் அஸ்தி  இருக்கிறது , இதை உனக்கு நேரம் இருக்கும்போது காசியில் போய்க்கரைத்து விடு என்று கூறுகிறார் . நாயகன்  இவ்ளோ பெரிய  பானை  எல்லாம் கொண்டு போக  முடியாது , எல்லோரும்   கிண்டல் செய்வார்கள்  என சொல்ல தாத்தா  அவரது   மூக்குப்பொடி  டப்பாவில்  கொஞ்ச்ம அஸ்தியைப்போட்டுத்தருகிறார் . இதை   நாயகன்  காலேஜ்  ஹாஸ்டலுக்கு   எடுத்து  வருகிறான் .



நாயகனின்   நண்பன்  நாயகனுக்குத்தெரியாமல்  நாயகனின்  பெட்டியை   செக் பண்ண  இந்தப்பொடி  டப்பாவைப்பார்த்து எதோ போதைப்பொருள்  என நினைத்து  அதை  உபயோகிக்க  பாட்டியின் ஆவி அந்த இளைஞனின்   உடம்பில்   புகுந்து விடுகிறது . இதற்குப்பின்  நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதித்திரைக்கதை 



நாயகன்     ஆக கணபதி   கச்சிதமாக    நடித்த்திருக்கிறார் . இவருக்குக்காமெடி  இயல்பாகவே வருகிறது .இவரது டயலாக் டெலிவரி , உடல் மொழி  அனைத்தும்  அருமை .



நாயகனின்   நண்பன்  ஆக சாகர்   சூர்யா  பிரமாதப்படுத்தி  இருக்கிறார் . நாயகனுக்கு நிகரான கேரக்ட்டர் , ஆவி  புகுந்தபின் இவர் செய்யும் அலப்பறைகள் ஆஹா ஓஹோ  பேஷ் பேஷ் ரகம். 


நாயகனின்  பாட்டி  ஆக மல்லிகா   சுகுமாரன்   கச்சிதம் ,நாயகனின்  தாத்தா  ஆக  பி பி   குன்ஹி கிருஷ்ணன்  சிறப்பான நடிப்பு 

படத்தில்   நடித்த   மற்ற   அனைத்துக்கேரக் ட்டர்களும்   சிறப்பான   பங்களிப்பை   வழங்கி  இருக்கிறார்கள் 

 பாடல்களுக்கான  இசையை பிபின்  அசோக்கும்  பின்னணி இசையை சங்கர்  சர்மாவும்  கவனித்து இருக்கிறார்கள் .காமெடி  , திகில் கலந்த   பின்னணி இசை அருமை ஆல்பி ஆஸ்டனியின்   ஒளிப்பதிவில்  இரவுக் காட்சிகள் கவனம் பெறுகிறது , இ எஸ்   சூரஜின்   எடிட்டிங்கில்  படம் 126 நிமிடங்கள்  ஓடுகிறது 


ஸ்ரீ ஹரி  வடக்கன்  கதை , திரைக்கதை  எழுத விஜேஸ்  பானத்தூர்  இயக்கி இருக்கிறார் 



சபாஷ்  டைரக்டர்

1 படம் போட்ட  32 வது     நிமிடத்தில்  நாயகனின்   நண்பன்  உடலில்  பாட்டியின்  ஆவி  புகுந்த பின்  அவரது  ட்ரான்ஸ்பர்மேசன் உடல் மொழி , நடிப்பு , காமெடி  எல்லாம் கலக்கல் ரகம் , நாயகனை  விட  இவரது   நடிப்பு டாப் கிளாஸ் 


2   பாடல்கள்  எல்லாம் அருமை . மெலோடி  சாங்க் ஆக ஆரம்பித்து   ராப்  பாட் டாக  மாறுவது   எல்லாம் செம 


3  பாட்டியின்  மரணம்  இயற்கை ஆனது   அல்ல , கொலை   என்பது   ஒரு டிவிஸ்ட்   , கொலைகாரன்    யார் என்பது   இன்னொரு டிவிஸ்ட்  , இரண்டுமே  பிளேஸ்   செய்யப்பட் ட   இடங்கள்   கச்சிதம் 


4   முதல்   பாதியில்  கதை , கேரக் டர்   அறிமுகங்கள்   எல்லாம் முடிந்த   பின்  கொஞ்சம்  காமெடி , பின் பாதி  முழுக்கக்காமெடி   என   படம்  எஙகேஜிங்க்   ஆகக்கொண்டு போன   விதம் 


5  பெரிய   ஹீ ரோக்கள்   இல்லாமல்  இரண்டே  லொக்கேஷன்களில்  லோ பட்ஜெட்டில்  ஒரு தரமான படத்தைக்கொடுத்த லாவகம் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

 1  நாயகனின்  பாட்டியுடைய ஆவி    நாயகனின்  நண்பன்  மீது புகுந்து கொள்ள  காரணமே  சரியாக சொல்லப்படவில்லை . நமக்கு   எழும்   இந்த சந்தேகத்தை நாயகனின்  நண்பன்  நாயகனிடம்  கேட்பது  போல  சீன இருக்கு , ஆனால் காரணம்   தான்  சொல்லப்படவில்லை 


2  பாட்டி   தன்னைக்கொலை  செய்த  கொலைகாரனைக்கொலை   செய்ய   காலேஜ்   ஹாஸ்ட்டல் வந்து என்ன பயன் ? கொலைகாரன்   இருப்பது  பாட்டி   வசித்த  லொக்கேஷனில் 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - 16+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   கலகலப்பான  காமெடி   ஹாரர்   டிராமா  பார்க்க நினைப்பவர்கள் , பேய்ப்பட ரசிகர்கள்  பார்க்கலாம் . ரேட்டிங்க் 3 / 5 

Monday, April 06, 2026

யூத் (2026) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா )

   

       யூத் (2026) - தமிழ் - சினிமா  விமர்சனம்  ( ரொமாண்டிக்  டிராமா ) 


              இந்தப்படம் வெளிவருவதற்கு முன்பே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்த  நான்கு முக்கியக்காரணங்கள்

1 தனுஷ் நடித்த அசுரன்,வாத்தி ஆகிய படங்களில் நல்ல கேரக்டர் ரோல் பண்ணி இருந்த கென் கருணாஸ் நாயகன் ஆக நடிக்கும் முதல் படம்

2 கென் கருணாஸ் இயக்குநர் ஆக,பாடல் ஆசிரியர் ஆக,பாடகர் ஆகக்களம் இறங்கி இருக்கும் படம்

3 இசை அமைப்பாளர்  ஜி வி பிரகாஷ் சம்பளம் வாங்காமல் இசை அமைத்த முதல் படம்

4 முட்டை கலக்கி என்ற மெகா  ஹிட் பாடல் உட்பட படத்தின் எல்லாப்பாடல்களும் படம் ரிலீஸ் ஆகும் முன்பே ஹிட்


ஸ்பாய்லர்  அலெர்ட்


எதிர்பார்த்து  வருவது காதல் இல்லை , எதிர்பார்க்காமல்  வருவதுதான் உண்மையான காதல்  என்பதுதான் படத்தின் ஒன லைன் .


நாயகன்  ஒரு நடுத்தரக்குடும்பத்தில்   பிறந்து  வளர்ந்தவன் .  அப்பா  ஒரு பேக்கரிக்கடை வைத்து இருக்க்கிறார் , அம்மா  ஹவுஸ் ஒயிப் . நாயகனுக்குப்படிப்பில்   பெரிய அளவில் ஆர்வம் இல்லை .  பத்தாவது  படிக்கும்போதே சராசரிக்கும் குறைவான மார்க்கே வாங்கி ஜஸ்ட் பாஸ் தான் ஆகி இருக்கிறான்.


  இருந்தாலும்  தன மகனை ஒரு பெரிய பிரைவேட் ஸ்கூலில்  சேர்க்கிறார்கள் .நாயகனின் அம்மாவுக்கு தன் மகன் படித்து கலெக்டர் ஆக வேண்டும் என்று ஆசை.

ஆனால் நாயகனுக்குப்படிப்பில் ஆர்வம் இல்லை.காதலில் தான் ஆர்வம்.

 தான் அழகு  இல்லையோ ? தன்னை யாரும் கவனிக்க மாட்டார்களோ ? என்ற   தாழ்வு  மனப்பான்மையில் நாயகன் இருக்கிறார் . பள்ளியில்  படிக்கும் பெண்ணைக்காதலித்த்து  காலேஜில் அதே காதலைத்தொடர்ந்து  அவளையே திருமணம் செய்து கொள்ள வேண்டும்  என்பதுதான்  நாயகனின் லடசியம்  ( ஆஹா, இதுவல்லவோ லடசியம் ? ) 


 பள்ளியில் நாயகனை எந்தப்பெண்ணுமே கண்டு கொள்ளவில்லை . . இதனால் கடுப்பில் இருக்கும் நாயகனை  ஒரு பெண் காதலிக்கிறார் . அவருக்கும் , பள்ளியில் படிக்கும் மாணவிக்கும் காதல்  வருகிறது ,, இருவரும்  காதலிக்கிறார்கள் . திடீர்   என  அந்தப்பெண்ணின்  பாட்டிக்கு உடல் நிலை சரி இல்லை என்று தகவல் வர அந்தப்பெண்  பாட்டியைப் பார்க்க ஊருக்குப்போகிறாள் 


 இந்த  சமயத்தில்  நாயகனிடம்  இன்னொரு பெண்  தன காதலை வெளிப்படுத்துகிறார் . இதற்கும்  நாயகன் ஓகே  சொல்லி விடுகிறார் . இவர்கள்  இருவரும் நெருக்கமாப்பழகுவதைக்கண்ட  நாயகனின்   முதல் காதலி பிரேக்கப் செய்து விடுகிறாள் 


நாயகன்   மனம்  உடைந்து  இருக்கும்   தருணத்தில்     மூன்றாவதாக ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்படுகிறது, அவளிடம்  நாயகன்  காதலை சொல்லும்போது  அவள்  நாயகனிடம்  இது காதல் இல்லை , வெறும் நட்பு தான் என்று சொல்லி விடுகிறாள்  .


நாயகன்  உடைந்து போகிறான் . இதற்குப்பின்  இவரது காதல்  கனவு என்ன ஆச்சு ?  பள்ளியில்  படித்து  பாஸ் ஆனானா?  என்பது  மீதித்திரைக்கதை  


நாயகன் ஆக கென் கருணாஸ் கச்சிதமாக நடித்திருக்கிறார்.வைகாசி பொறந்தாச்சு பிரசாந்த் போல இளம் உள்ளங்களைக்கொள்ளை கொள்கிறார்.முக பாவனை ,நடன அசைவுகள் ,குரல் அனைத்தும் அருமை.


நாயகிகள்  ஆக மீனாட்சி தினேஷ்,அனிஷ்மா அனில் குமார் , பிரியன்சி யாதவ் மூவரும் நடித்திருக்கிறார்கள்.அழகு,இளமைத்துள்ளல்  ,நடிப்பு அனைத்தும் ஓக்கே ரகம்.

முதல் பாதி கலகலப்பாக ,ஜாலியாகப்போகிறது.பின் பாதி எமோஷனல் டிராமா.

சபாஷ்  டைரக்டர்

1 கலகலப்பான ,ஜாலியான முதல் பாதி சம்பவங்கள்

2 நடுத்தர மக்களின் மனதைத்தொடும் வகையில் அமைக்கப்பட்ட சில செண்டிமெண்ட் காட்சிகள் ,சில வசனங்கள் அருமை.

3 கலர்புல்லான ஒளிப்பதிவு.மொத்தப்படத்தையும் தன் ஒத்த இசையால் தாங்கிப்பிடித்த ஜிவிபி யின் இசை ,பின்னணி இசை. போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் பிரமாதம்

4  மெகா ஹிட் பாட்டான முட்டை கலக்கி ,மெலோடி சாங்

5 படிப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்திய விதம்

6   படிக்காம போனதால் இந்த சமூகம் என்னை எப்படி மோசமாக நடத்தியது?என்பதை நாயகனின் அப்பா நாயகனிடம் விளக்கும் அந்தக்காட்சி உருக்கம்.


7   சிம்பு நடித்த மன்மதன். படத்தில் வரும் மன்மதனே நீ பாட்டு பிளேஸ் செய்யப்பட்ட இடம்,பிளேஸ் செய்த விதம் அதகளம்.தியேட்டரே அதிர்ந்தது கை தட்டலில்.


8  இண்ட்டர்வெல் பிளாக் சீன்,க்ளைமாக்ஸ் சீன் இரண்டுமே ஆடியன்சின் மனதில் நிற்கும் அளவு கச்சிதமாய் அமைந்தது

9   நாயகன் ஒரு பாடலில் சிங்கிள் ஷாட்டில் பிரமாதமாக ஆடும் லெங்க்தி ஷாட் அபாரம்

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகனுடைய கேரக்டர் டிசைன் முதல் பாதியில் ஒரு மாதிரியாகவும் (ஜாலி டைப்),பின் பாதியில் வேறு மாதிரியாகவும் (சீரியஸ் டைப்)ஆவது எப்படி?

2 ஜி வி பி யின் பிஜி எம் பல இடங்களில் அனிரூத் பி ஜி எம் போலவே இருக்கிறது

,3 பல படங்களில் பார்த்து சலித்த டெம்ப்ளேட்  காட்சிகள்.திரைக்கதையில் ஆஹா என சிலாகிக்க வைக்கும் புதுமை இல்லை

4 பின் பாதி திரைக்கதை சோர்வடைய வைக்கிறது

5    சமீபத்தில் வந்த டான் படத்தின் காட்சிகள் பலவற்றை நினைவுபடுத்தியது.


6   அவன் லவ் பெயிலியர் ஆனால் தான் என் லவ் சக்சசே ஆகும் என நாயகனின் லவ்வைக்கெடுத்து விட்ட  பெண்ணின் காதல் என்ன ஆச்சு?என்பதைக்காட்டவே இல்லை.அந்தக்கேரக்டருக்கு ஒரு பினிஷிங் கிடைக்கவில்லை.

- 7  இது கமிங் ஆப் ஏஜ் டிராமா என்பதால் அந்தக்கால ஆட்களுக்குக்க்டுப்பைக்கிளப்பலாம்.அதேபோல் பெற்றோர்களுக்கு க்ளைமாக்ஸ் தவிர மற்றவை பிடிக்காது


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஜென் இஜட் சந்ததியினர் ரசித்துப்பார்க்கும் ஒரு படமாக இருக்கும். ரேட்டிங் 2.5 /5


DISKI -நாயகன் கென் கருணாஸ் நடிகர் தனுஷ் இடம் உதவி இயக்குநர் ஆகப்பணி ஆற்றியவர். படத்தின் பல காட்சிகளில் தனுஷ் பாணி இயக்கம் தெரிகிறது.



நாயகன் அடிப்படையில் சிம்பு வின் தீவிர ரசிகர்.படத்திலும் சிம்பு ரசிகர் ஆகவே வருகிறார்.

Sunday, April 05, 2026

Funky (2026)-தெலுங்கு/தமிழ் -சினிமா விமர்சனம். (ரொமாண்டிக் காமெடி டிராமா)@நெட் பிளிக்ஸ்





 படத்தோட விமர்சனத்துக்குப்போகும் முன் இந்தப்படம் போலவே சினிமா விகடன்ஷூட்டிங் சம்பந்தமான கதை அம்சம் உள்ள தமிழ்ப்படங்கள் பட்டியலைப்பார்ப்போம்.


சினிமாவுக்குள் சினிமா  என்ற   கான்செப்ட்டில்  தமிழ்  சினிமாவில்  உருவான  சில படங்களின்  வெற்றி தோல்வியைப்பார்ப்போம் .

திரைக்கதை மன்னன்  கே பாக்யராஜின்  அஸிஸ்டெண்ட்  டைரக்டர்   ஆன  வி  சேகர்  இயக்கிய  முதல் படமான  நிழல்கள்  ரவி நடித்த நீங்களும்   ஹீரோ  தான் (1980)  மீடியாக்களால் பெரிதும்  பாராட்டப்பட்டாலும் , கமர்ஷியல் ஹிட் ஆகவில்லை .  இயக்குனர்  இமயம்  பாரதிராஜா  நாயகன் ஆக  நடித்த   கல்லுக்குள்  ஈரம் (1980)  மிகப்பெரும் தோல்விப்படம் .முந்தானை  முடிச்சு  மெகா ஹிட்டுக்குப்பின்  பெரிய எதிர்பார்ப்புடன் வந்த  தாவணிக்கனவுகள் (1984) தோல்வி  அடைந்தது . சிவாஜி +பிரபு  நடித்த சாதனை (1984) தோல்வி . ஆர் சி சக்தி இயக்கத்தில் விஜயகாந்த் ,கமல் நடித்த  மனக்கணக்கு (1986) சுமார் ஹிட்

  பிரகாஷ் ராஜ் , பிருத்விராஜ்   நடித்த வெள்ளித் திரை  (2008)  ஹிட் . சாவித்திரியின் கதை சொன்ன நடிகையர் திலகம் (2018) ஹிட்.துல்கர் சல்மான்,சமுத்திரக்கனி நடித்த காந்தா (2025) மீடியம் ஹிட்.

ஸ்பாய்லர் அலெர்ட்



நாயகி ஒரு சினிமாத்தயாரிப்பாளரின் மகள்.நாயகன் அவர்கள் எடுக்கும் சினிமாப்படத்தின் இயக்குநர்.4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் முடித்துத்தருகிறேன் என்று வாக்குக்கொடுத்தவர் இன்னமும் முடிக்கவில்லை.

இதனால் மன அழுத்தத்துக்கு ஆளான நாயகியின் அப்பா பி பி ஏறி ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகிறார்.

நாயகி நாயகன் மீது கடும் கோபம் கொண்டு அவனை வர வைத்து லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறாள்.

ஆரம்பத்தில் உதார் காட்டிய நாயகன் பின்பு நாயகியிடம் பம்மி எனக்கு வாய்ப்புக்கொடுங்கள்.இன்னமும் ஒரே ஒரு கோடி ரூபாயில் மொத்தப்படத்தையும் முடித்து விடுகிறேன் என்று வாக்குக்கொடுக்கிறான்.

நாயகியின் மேற்பார்வையில். நாயகன் இயக்க ஷூட்டிங்க் தொடர்கிறது.

நாயகன் ,நாயகி இருவரும் ஒருவருக்கு ஒருவர் காதல் வசப்படுகிறார்கள்.ஆனால் இதயம் முரளி மாதிரி மனதுக்குள்ளேயே வைத்திருக்கிறார்கள் வெளியே சொல்லவில்லை.

ஒரு கட்டத்தில் நாயகியின் அப்பாவுக்கு விஷயம் தெரிந்து விடுகிறது.

நாயகன் ,நாயகி இருவரும் காதலை க்ளைமேக்ஸ் வரை சொல்லிக்கொள்ளவே இல்லை.இதற்குப்பின் நிகழ்ந்தது என்ன? என்பது தான் சுவராஸ்யமான திரைக்கதை.

நாயகி ஆக கயாடு லோஹர்.இவரது இளமை,அழகு,நடிப்பு இந்த மூன்றும் தான் படத்தின் பெரிய பலம்.பிரமாதமான  நடிப்பு.

உயிரே உனக்காக படத்தில் நதியா அணிந்தது போல படம் முழுக்க வெரைட்டியான காஸ்ட்யூம்கள் கலக்கல் ரகம்.வசந்த் இயக்கிய நீ பாதி நான் பாதி படத்தில் நிவேதா என்ற பாடல் காட்சியில் 138 கட் ஷாட்கள் வரும்.ஒரு நாயகி அதிகப்படியான எண்ணிக்கையில் வித விதமான ஆடை அணிந்தது அந்தப்படத்தில் தான்.அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்தப்படத்திலும் நாயகிக்கு சேலை,சுடி ,என ஏகப்பட்ட உடைகள்.எல்லாவற்றிலும் அலங்கார தேவதை ஆக வலம் வருகிறார்.

நாயகன் ஆக விஸ்வக் சென் அப்பாவி ஆன கதாப்பாத்திரத்தில் காமெடிக்கலக்கல் ஆன கேரக்டர் டிசைனில் வந்து நம் மனதைக்கொள்ளை அடிக்கிறார்.

நாயகியின் அப்பாவாக வரும் நரேஷ் குணச்சித்திர நடிப்பிலும் சரி.காமெடியிலும் சரி ஸ்கோர் செய்கிறார்.


காமெடி வில்லன் ஆக வரும் சம்பத் ராஜ் சிரிக்க வைக்கிறார்.கொடூரமான வில்லன் ஆகவே பார்த்த அவரை இப்படிக்காமெடிக்கேரக்டரில் பார்க்க வித்தியாசமாக இருக்கிறது.


நாயகனின் அம்மாவாக வரும் ஈஸ்வரி ராவ் கவனிக்க வைக்கிறார்.

இவர்கள் போக படத்தில் நடித்த மற்ற அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

பீம்ஸ் செசிரோலியோ வின் இசையில் நான்கு பாடல்களும் ஹிட்.குறிப்பாக க்ளைமாக்சுக்கு முன்பு வரும்  அடியே நான் உனையும் நான் விடுவேனா செம கலக்கல் சாங்க்.கில்லி படத்தில் வரும் அப்படிப்போடு பாட்டுக்கு நிகரான   செம ஸ்பீடு பாட்டு.

பின்னணி இசை கச்சிதம்.

நவீன் நூலியின் எடிட்டிங்கில் படம் 128 நிமிடங்கள் ஓடுகிறது.

ஒளிப்பதிவு சுரேஷ் சாரங்கம் ஜால வித்தை காட்டி இருக்கிறார்.ஒவ்வொரு பிரேமையும் செதுக்கி இருக்கிறார்.

நாயகியின் க்ளோசப் ஷாட்கள் கொள்ளை அழகு.

மோகன் சாட்டோ என்பவருடன் இணைந்து திரைக்கதை எழுதி தனியாக இயக்கி இருக்கிறார்  கே வி அனுதீப்

சபாஷ் டைரக்டர்



1 வில்லனாக வரும் சம்பத் தன் கெத்தைக்காட்ட ஒரு சேரைத்தூக்கிக்கோபமாக விசிற கூடவே வரும் அல்லக்கை அதை சரி செய்து உக்காருங்க  பாஸ் என சொல்லும்போது முறைக்கும் சீன் செம காமெடி.படம் முழுக்கவே வில்லன் செய்யும் காமெடிகள் நன்கு ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

2 நாயகியின் காஸ்ட்யூம் டிசைன், நாயகியின் அழகு ,நடிப்பு.

3.  நாயகியின் க்ளோசப் ஷாட்ஸ்க்கு ஒளிப்பதிவாளர் மெனக்கெட்ட விதம்,லைட்டிங்க் எல்லாம் அட்டகாசம்.

4 முதல் பாதியில் சில காட்சிகளும்,பின் பாதியில் பல காட்சிகளும் காமெடிக்கலக்கல் தான்.

5 ஒரு தயாரிப்பாளருக்கு இயக்குநரால் ஏற்படும் மன உளைச்சல்களைக்காமெடியாக சொன்ன விதம்,குறிப்பாக இயக்குநர்  ஷங்கரைக்கலாய்த்த விதம் 

6 கிரேசி மோகன் டைப் காமெடி வசனங்கள், வார்த்தை ஜால ஜோக்குகள்,எஸ் வி சேகர் டைப் கவுண்ட் டவுன் டயலாக்ஸ் செம


லாஜிக் மிஸ்டேக்ஸ்

1 முழுப்படமும் காமெடி என்று முடிவெடுத்த பின் க்ளைமாக்சில் பெண்கள் மனம் கவர வைக்கப்பட்ட அந்த அம்மா-மகன் செண்ட்டிமெண்ட் காட்சி படத்தோடு ஒட்டாமல் தனியாகத்தெரிகிறது

2 மொத்தப்படத்திலும் இளவரசி மாதிரி ஆளுமையாக வந்து போன நாயகி க்ளைமாக்சில் ஐ லவ் யூ சொல்லும் முக்கியமான தருணத்தில் செயற்கையான நடிப்பு எடுபடவில்லை.

3 நாயகியின் மனதைக்கவரும் விதமாக நாயகனிடம் எந்த பிளஸ் பாயிண்ட்டும் இல்லை.எதைப்பார்த்துக்காதலில் விழுந்தார் என்பதில் தெளிவில்லை


அடல்ட்ஸ் கண்ட்டெண்ட் வார்னிங் - யு


சி பி எஸ் பைனல் கமெண்ட் - நம்ம ஊர் யாரடி நீ மோகினி மாதிரி தெலுங்கில் செம ஹிட் ஆன படம்.ஜாலி காமெடி பட்டாசு.ரேட்டிங்க் 3/5


Funky
Theatrical release poster
Directed byK. V. Anudeep
Written by
  • K. V. Anudeep
  • Mohan Sato
Produced by
  • Naga Vamsi S
  • Sai Soujanya
Starring
CinematographySuresh Sarangam
Edited byNaveen Nooli
Music byBheems Ceciroleo
Production
companies
  • Sithara Entertainments
  • Fortune Four Cinemas
  • Srikara Studios
Release date
  • 13 February 2026
Running time
128 minutes[1]
CountryIndia
LanguageTelugu

Saturday, April 04, 2026

யார்றா அந்தப்பையன் நான் தான் அந்தப்பையன் (2026)-தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி டிராமா)

                 

        யார்றா அந்தப்பையன் நான் தான் அந்தப்பையன் (2026)-தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி டிராமா)


     முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க  அறிமுக இயக்குநர் பால்ராஜ் கதை,திரைக்கதை எழுதி இயக்கி தயாரித்து இருக்கும் படம் இது.இவர் யாரிடமும் உதவி இயக்குனர் ஆகப்பணி ஆற்றாமல் ஷூட்டிங்க் வேடிக்கை பார்த்தே தொழில் கற்றுக்கொண்டவர்.

புகழ் பெற்ற பாடல் வரியை டைட்டிலாகக்கொண்ட இந்தப்படம் திரைக்கதை அம்சத்திலும் வித்தியாசமாக இருக்கிறதா?என்பதைப்பார்ப்போம்.


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு மெக்கானிக்.சொந்தமாக ஒரு மெக்கானிக் ஷாப் வைத்திருக்கிறார்.இவருக்கு ஆறு குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை.ஆனால் எந்தப்பெண்ணும் அதற்கு சம்மதிக்கவில்லை.கடைசியில் ஒரு பெண் அவரது கண்டிஷனுக்கு. ஓக்கே சொல்ல திருமணம் நடக்கிறது.ஒரு குழந்தையும் பிறக்கிறது


இதற்குப்பின் தான் பிரச்சனை வெடிக்கிறது.ஒரு குழந்தையை வைத்தே என்னால் சமாளிக்க முடியவில்லை.இன்னமும் ஐந்து பேரா?என்னால் முடியாது என நாயகனின் மனைவி ஸ்ட்ரிக்ட் ஆக மறுத்து விடுகிறார்.இருவருக்குள் மோதல் ஏற்படுகிறது.ஒரே வீட்டில் இருந்தும் இருவரும் தனித்தனியே இருக்கிறார்கள்.


நாயகி திருமணம் ஆனவர்.கணவன் மாமா மகன் தான். ஆனால் குடிகாரன்.தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதால் சண்டை.இவர்களுக்குக்குழந்தை இல்லை.ஆனால் நாயகிக்குக்குழந்தை என்றால் கொள்ளை ஆசை.இப்படிப்பட்ட தருணத்தில் நாயகியின் கணவன் ஒரு விபத்தில் இறந்து விடுகிறான்.


நாயகன்,நாயகி சந்திப்பு நடக்கிறது.ஆரம்பத்தில் நட்பாகப்பழகியவர்கள் பின் காதலர்களாக மாறி விடுகிறார்கள்.


நாயகனின் மனைவி ஒரு சந்தர்ப்பத்தில்  நாயகனை நாயகியுடன் ஜோடி யாகப்பார்த்து விடுகிறாள்.சண்டை வெடிக்கிறது.

நாயகன் ,நாயகி இருவரும் பிரிகிறார்கள்.இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.


நாயகன் ஆக பால்ராஜ் நடித்திருக்கிறார்.இவர் பெரிய அளவில் ஸ்கோர் செய்யவில்லை.முடிந்தவரை சமாளித்து இருக்கிறார்.அவ்வளவுதான்.

நாயகனின் மனைவி ஆக காயத்ரி ரேமா குடும்பப்பாங்கான நடிப்பைத்தந்திருக்கிறார்.

நாயகி ஆக ஸ்வேதா ஸ்ரீ நடித்திருக்கிறார்.இவரது முக பாவனைகள் அருமை.

வில்லன் ஆக ரவி மரியா நடித்திருக்கிறார்.அதிக வாய்ப்பில்லை.வந்த வரை ஓக்கே ரகம்.


படத்தில் நடித்த மற்ற துணை நடிகர்கள் ஆன அம்பானி சங்கர் ,பசஙக பட புகழ் சிவக்குமார் போன்றோர் நடிக்க அதிக வாய்ப்பில்லை,ஸ்க்ரீன் ஸ்பேஸ் தரப்படவில்லை என்றாலும் கொடுத்த கேரக்டரை நன்றாக செய்திருக்கிறார்கள்.

இசை விஜய் பிரபு.பாடல்கள் சுமார் ரகம் தான்.பின்னணி இசை பரவாயில்லை ரகம்.


ஒளிப்பதிவு உதயன்.இரு நாயகிகளை அழகாகவே காட்டி இருக்கிறார்.

கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கி தயாரித்து இருக்கிறார் நாயகனாக நடித்து இருக்கும் பால்ராஜ்.


சபாஷ்  டைரக்டர்

1 போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக வரும் ரவி மரியா வரும் காட்சிகள் எல்லாம் சுவராஸ்யமாகவே இருக்கிறது.

2 நாயகி ஆக வரும்  ஸ்வேதா ஸ்ரீ யின் அழகும் நடிப்பும் தான் படத்துக்குப்பக்க பலம்

3 பேமிலி டிராமாவாகக்கொண்டு போகலாம் என்ற இயக்குனரின் முயற்சி குட்.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகிக்குத்திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகியும் கணவருடன் தாம்பத்ய வாழ்க்கை வாழவே இல்லை என்பதை நம்ப முடியவில்லை.என்ன தான் குடிகாரன் என்றாலும் ஒரு நாள் கூடவா கணவர் ஆக நடந்து கொள்ளாமல் இருப்பார்?

2  தன்னை நம்பி வந்தவர்களைக்கை விட மாட்டேன் இது தான் என் கொள்கை என்று கூறும் நாயகன் மனைவிக்கு துரோகம் செய்வது ஏற்புடையதாக இல்லை

3 நாயகி மேல் ஆசைப்படும் போலீஸ் ஆபீசர் திடீர் எனக்கொலை செய்யப்படுவது அதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் எல்லாம் மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாதவை


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சுமாரான ,பழக்கப்பட்ட கதை தான் ,போர் அடிக்காமல் கதை சொல்ல முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றி பெற்று இருக்கிறார் இயக்குநர்.ரேட்டிங்க் 2.5 /5