இந்த வாரம் 5 படங்கள் வெளியாகின்றன.அவற்றில் நான்கு தமிழ்ப்படங்கள்,ஒரு தெலுங்குப்படம் தமிழ் டப்பிங்கில் வெளியாகிறது.
Friday, April 03, 2026
Thursday, April 02, 2026
MADE IN KOREA (2026) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா ) @ நெட் பிளிக்ஸ்
நித்தம் ஒரு வானம் (2022) என்ற தரமான படத்தைக்கொடுத்த இயக்குனர் ர கார்த்திக் அவரது பாணியில் இருந்து கொஞ்சம் மாறி தந்திருக்கும் ஒரு வித்தியாசமான படம் தான் இது .சமூக வலைத்தளங்களில் வெறித்தனமான ரசிகர்களை வைத்திருக்கும் பிரியங்கா மோகன் பூவே பூச்சூடவா நதியா மாதிரி ஒரு கேரத்டரில் நடித்திருக்கும் படம் தான் இது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகிக்கு சின்ன வயதில் இருந்தே கொரியா போக வேண்டும் என்ற மிகப்பெரிய ஆசை இருக்கிறது.இதனால் இவர் பார்க்கும் சினிமாக்கள் கூட கொரியன் படஙகள் தான்.
நாயகியின் அப்பா ஒரு மெஸ் வைத்து நடத்தி வருகிறார்.நாயகிக்கு சின்ன வயதில் இருந்தே தன்னுடன் படித்த மாணவனுடன் காதல் உண்டு .இது நாயகியின் பெற்றோருக்குத்தெரியாது.
நாயகியின் காதலனுக்கு வேலை ,வெட்டி எதுவும் இல்லாததால் கல்யாணத்தைத்தள்ளிப்போட்டுக்கொ
ஒரு கட்டத்தில் நாயகியின் பெற்றோருக்கு நாயகியின் காதல் விஷயம் தெரிய வர வீட்டில் கடும் எதிர்ப்பு.இதனால் ஊரை விட்டுப்போக திட்டம் போடுகிறார் நாயகி.
நாயகி தன் காதலனுடன் சென்னை வருகிறார்.அங்கே இருந்து இருவரும் கொரியா போகத்திட்டம்.
ஆனால் இங்கே தான் ஒரு ட்விஸ்ட்.நாயகியின் காதலன் நாயகியின் அப்பா தந்த பணத்துடன். எஸ்கேப் ஆகி விடுகிறான்.
அறிமுகம் இல்லாத இடம் ,மொழி தெரியாத இடம் என்று நாயகி கொரியா போய் என்ன செய்தார்?என்பது மீதித்திரைக்கதை.
நாயகி செண்பாவாக பிரியஙகா மோகன் நடிப்பு அருமை.அவரது உடைகள் ,அலங்காரங்கள் எல்லாம் கலர்புல் கலக்கல்.
நாயகியின் இளம் வயது தோற்றத்தில் ரியா மனோஜ் நடிப்பும் குட்.
நாயகியின் காதலன் ஆக வரும் ரிஷி காந்த் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மற்ற அனைவரின் நடிப்பும் ஓக்கே ரகம்.
அந்தோணியின் எடிட்டிங் கில் படம் 113 நிமிடங்கள் ஓடுகிறது.
பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு படத்தின் முதுகெலும்பு.
தரண் குமார் பின்னணி இசையில் முத்திரை பதித்து இருக்கிறார்.
கதை,திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் ரா கார்த்திக்.
சபாஷ் டைரக்டர்
1 நாயகி கொரியா போன பின் கதை நன்கு செட் ஆகி விடுகிறது . பிரமாதமான ஒளிப்பதிவு , அருமையான லொக்கேஷன்கள் கண்களுக்குக்குளிர்ச்சி
2 நாயகியின் முக பாவனைகள் , உடல் மொழி , டயலாக் டெலிவரி என்று அனைத்தும் அசத்தல் . ஒன விமன் ஆர்மியாக படத்தில் கோலோச்சுகிறார்
3 கொரியன் பாட்டி , அவளது பையன் , காதலன் நடிப்பு அருமை .
4 நாயகி கொரியா வில் அழும் சீனில் கிதாரில் பூங்காற்றினிலே உன் சுவாசத்தை ( உயிரே) பாடலை வாசிக்கும் சீன டச்சிங்க்
5 பாட்டி + நாயகி காம்போ சீன்கள் பூவே பூச்சூடவா பத்மினி-நதியா காம்போ சீன்களை நினைவுபடுத்தும் அளவு எமோஷனல் கனெக்ட் கொடுத்த விதம்.
6. நான் எவ்வளவு பெரிய வலியில் இருக்கிறேன் என்பதை சொல்லக்கூட அருகில் ஆள் இல்லை என்பதே ஒரு பெரிய வலி என நாயகி சொல்லும் உணர்ச்சிப்பூர்வமான காட்சி கிளாசிக்.
7 பெண்களுக்குக்கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் காட்சிகள்,உறவுகள் நம் வாழ்வின் வசந்தம் என்பதை சொல்லும் காட்சிகள் அருமை.
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 கங்கனா ரனாவத் நடித்த க்யூன் (2013) , ஸ்ரீ தேவி நடித்த இங்க்லீஷ் விங்க்லீஷ் (2012) ஆகிய இரு படங்களில் வரும் பல காட்சிகள் இந்தப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பது இயக்குனர் அட்லி ரசிகரோ ? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது
2 நாயகி வெளிநாட்டில் வந்து கஷ்டப்படுவது போல் காட்சிகளே இல்லை . அவர் சந்திப்பவர்கள் எல்லோரும் நல்லவர்களாகவே இருப்பது எப்படி ? இயக்குனர் விக்ரமன் படத்தில் தான் எல்லோரும் நல்லோர் என்று பாசிட்டிவாக காட்டுவார்
3 பாட்டி,நாயகி தவிர படத்தில் வரும் வேறு எந்தக்கேரக்டரோடும் எமோஷனல் கனெக்ட் கொடுக்கவில்லை
4 நாயகியின் அப்பா தான் கொண்டு வந்த பணத்தை நாயகியின் காதலனிடம் தந்து ஏமாறுவது நம்பும்படி இல்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பெண்களுக்கு இந்தப்படம் மிகவும் பிடிக்கும்..ரேட்டிங்க் 3/5
| Made in Korea | |
|---|---|
Release poster | |
| Directed by | Ra. Karthik |
| Written by | Ra. Karthik |
| Produced by | Sreenidhi Sagar |
| Starring |
|
| Cinematography | Prasanna Kumar |
| Edited by | Anthony |
| Music by | Songs: Hesham Abdul Wahab Simon K. King Dharan Kumar Score: Dharan Kumar |
Production company | Rise East Entertainment |
| Distributed by | Netflix |
Release date |
|
Running time | 113 minutes[1][2] |
| Countries | India South Korea |
| Languages | Tamil Korean |
Wednesday, April 01, 2026
நீ For Ever (2026)- தமிழ் - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் ட்ராமா)
நீ For Ever (2026)- தமிழ் - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் ட்ராமா)
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி ஒரு சினிமாப்பட இயக்குநர்.ஒரு நிறுவனத்திடம் கதை சொல்லப்போகிறார்.காதல் கதையாக இருந்தால் தேவலை என்கிறார்.நாயகியிடம் காதல் கதை இல்லை.ஒரு அனுபவத்துக்காக காதலிப்பது போல் நடித்து அந்த அனுபவத்தைப்படம் ஆக்கலாம் என நினைக்கிறார்.
நாயகன் ஒரு டேட்டிங்க் ஆப் உருவாக்கும் முயற்சியில் இருக்கிறான்.அதற்கு முதலீடு செய்ய ஆள் தேவை.அவரோ உனக்குக்காதலில் அனுபவம் இருக்கா?எனக்கேட்கிறார்.அந்த அனுபவத்தைப்பெற காதலித்துப்பார்ப்போம் என நாயகன் முடிவு செய்கிறான்.
நாயகன் ,நாயகி இருவரும் ஒரு டேட்டிங்க் ஆப் மூலம் அறிமுகம் ஆகி நண்பர்கள் ஆகிறார்கள்.பிறகு காதலிக்கிறார்கள்.இருவருமே உண்மையாகக்காதலிக்கவில்லை.இது பரஸ்பரம் இருவருக்கும் தெரியாது.ஒரு கட்டத்தில் நடிப்புக்காதல் மறைந்து நிஜமாகவே ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள்.
நாயகிக்கு பெற்றோர் இல்லை.ஆனால் நாயகனுக்கு அம்மா உண்டு.அம்மாவும் லவ் மேரேஜ் தான்.ஆனால் அப்பா விட்டு விட்டுப்போய் விட்டார்.லவ் மேரேஜை எதிர்த்த நாயகனின் தாத்தாதான் நாயகனின் அம்மாவுக்கு அடைக்கலம் தந்தவர்.அவருக்கு லவ் என்றாலே பிடிக்காது.
இதற்குப்பின் நாயகன் நாயகி காதல் என்ன ஆனது ?என்பது தான் மீதித்திரைக்கதை.
நாயகி ஆக அர்ச்சனா ரவி அழகாக ,குடும்பப்பாங்காக இருக்கிறார்.நல்ல நடிப்பு.
நாயகன் ஆக சுதர்சன் கோவிந்த் ஆள் நல்ல உயரமாக அருண் பாண்டியன மாதிரி இருக்கிறார்.ஆனால் அவரைப்போலவே இவருக்கும் நடிப்பு வரவில்லை.
நாயகனின் அம்மாவாக வித்யா ,அப்பாவாக நிழல்கள் ரவி இருவரது குணச்சித்திர நடிப்பும் அருமை.
தாத்தாவாக ஒய் ஜி மகேந்திரன்.அனுபவம் மிக்க நடிப்பு,ஆரம்ப காலத்தில் இவர் காமெடியனாக மொக்கை போடுவார்.ஆனால் இது போன்ற கேரக்டர் ரோலில் கச்சிதமான நடிப்பு.
நாயகியின் தோழி ஆக வரும் சினேகா சக்தி நல்ல நடிப்பு.துடுக்குத்தனம் ரசிக்க வைக்கிறது.அதே போல் நாயகனின் நண்பன் ஆக வரும் விஜே பப்புவின் கலாட்டாக்கள் ரசிக்க வைக்கின்றன.
அறிமுக இயக்குநர் அசோக் குமார் கலைவாணி கதை ,வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்.
ஒளிப்பதிவு,இசை,பின்னணி இசை ,எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் கச்சிதம்.படத்தின் ரன்னிங் டைம் 133 நிமிடங்கள்.
சபாஷ் டைரக்டர்
1 இருவருமே சுயநலத்துக்காகக்காதலிப்பது போல் நடிப்பது,பின் நிஜமாகவே காதலிப்பது இந்த கான்செப்ட் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது
2 நாயகியின் ஆடை வடிவமைப்பு ,கண்ணியமான தோற்றம் அழகு.
3 காதல் கதையில் குடும்ப செண்ட்டிமெண்ட்டை இணைத்த விதமும் அருமை
4 காதல் பற்றிய தத்துவ வசனங்கள் அனைத்தும் இயக்குனர் அனுபவப்பூர்வமாக உணர்ந்து எழுதி இருக்கிறார்.
ஹிட் சாங்க்ஸ்
1. நீ தானா ? மாஸ் தானா?
2 அடி ஏண்டி ஏண்டி
ரசித்த வசனங்கள்
1_ ஹீரோ மாதிரி இருக்கும் பசங்க 10% தான்.சுமாரா இருக்கும் பசங்க தான் 90%
2 வாய் எவ்ளோ வேணா பொய் சொல்லும் ,ஆனா கண் காட்டிக்குடுத்துடும்.
3 பெத்த பையனைப்பிரிஞசிருப்பதை விட ஒரு அம்மாவுக்கு வேற என்ன கஷ்டம் இருக்க முடியும்?
4 டேட்டிங்க் கல்ச்சர்ல ரெண்டே வகை 1 ஏமாத்தறவங்க 2 ஏமாறுகிறவங்க
5 நாம எல்லோரும் சோகத்தையும் ,வலியையும் உள்ளே வெச்சுக்கிட்டு சந்தோஷத்தையும் ,காதலையும் வெளியே தேடறோம்
6. ஒரு சில விஷயத்தை தூரத்தில் இருந்து பார்த்தாதான் நல்லாருக்கும்.
7 கடந்த காலத்தில் யாரை வேணா நாம் இழந்திருக்கலாம்,அது நம் கையில் இல்லை.ஆனா நிகழ் காலத்தில் நாம் யாரையும் இழக்கக்கூடாது.
லாஜிக் மிஸ்டேக்ஸ்
, திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகன் படம் முழுக்க உம்மணாம்மூஞ்சியாக வருவது எரிச்சல்.தாடி வேற. நடிப்பு வர்லை
2. நாயகனின் தாத்தா. ஒய் ஜி. காதலை எதிர்த்து தூக்குப்போட்டு சாக முயற்சிக்கும் காட்சி படு செயற்கை.ஒட்டவே இல்லை.
3 நாயகன் ,நாயகி இருவருமே பரஸ்பரம் சுயநலத்துக்காகத்தான் காதலிப்பது போல் நடிக்கிறார்கள்.ஆனால் நாயகி மட்டும் மன்னிப்புக்கேட்பது எதற்கு?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 13+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - காதலர்கள் மட்டுமல்ல ,அனைவருமே பார்க்கலாம்.குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் தான் இருக்கிறது.ஒரே ஒரு இடத்தில் டபுள் மீனிங் ஜோக் வருகிதது.ரேட்டிங்க் 3/5
Thanks அனிச்சம் மின் இதழ். 1/4/2026
Tuesday, March 31, 2026
YOUNG SHERLOCK (2026) -ஆங்கிலம்/தமிழ்-வெப் சீரிஸ் விமர்சனம் (க்ரைம் இன்வெஸ்டிகேசன் திரில்லர் @அமேசான் பிரைம்
YOUNG SHERLOCK (2026) -ஆங்கிலம்/தமிழ்-வெப் சீரிஸ் விமர்சனம் (க்ரைம் இன்வெஸ்டிகேசன் திரில்லர் @அமேசான் பிரைம்
இது ஒரு பிரிட்டிஸ் வெப் சீரிஸ். மொத்தம் 8 எபிசோடுகள்,ஒவ்வொரு எபிசோடும் 43 நிமிடங்கள் டூ 55 நிமிடங்கள். ஆக மொத்தம் ஆறே கால் மணி நேரம் இருந்தால் ஒரே சிட்டிங்கில் பார்த்து விடலாம்.தமிழ் டப்பிங் கில் கிடைக்கிறது.மர்டர் மிஸ்ட்ரி க்ரைம் இன்வெஸ்டிகேசன் திரில்லர் ஆக வந்திருக்கிறது.
ஆர்தர் கனான் டோலே எழுதிய யங்க் ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற நாவலைத்தழுவி திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த வெப் சீரிஸ்க்கு நாவலின் டைட்டிலே வைக்கப்பட்டது.
ஸ்பாய்லர் அலெர்ட்
1870 ஆம் ஆண்டு நடக்கும் கதை.
நாயகன் 19 வயது நிரம்பிய இளைஞன்.பணத்தேவைக்காக இல்லாமல் ஒரு சாகசத்துக்காக,சவாலுக்காக ,திரில்லிங்க் அனுபவத்துக்காக பிக் பாக்கெட் அடித்து மாட்டிக்கொள்கிறார்.கோர்ட்டில் ஜட்ஜையே எதிர்த்துப்பேசுகிறார்.இதனால் கோபம் ஆன ஜட்ஜ் பிக் பாக்கெட் குற்றத்துக்காக 2 மாதங்கள் ,எதிர்த்துப்பேசியதற்கு தண்டனையாய் 4 மாதங்கள் ஆக மொத்தம் 6 மாதங்கள் சிறை தண்டனை என தீர்ப்புக்கொடுக்கிறார்.
சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த நாயகனை நாயகனின் அண்ணன் அழைத்து வந்து ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டியில் புரொபசர்களுக்கு உதவியாளராக சேர்த்து விடுகிறார்.
அங்கே நிகழும் ஒரு வெடி குண்டு விபத்து சம்பவம்,ஒரு புரொபசர் கொலை,ஒரு திருட்டு சம்பவம் ஆகிய 3 வழக்குகளில் நாயகன் கைது செய்யப்படுகிறார்.
சிறையில் இருந்து தப்பி வந்த நாயகன் தான் நிரபராதி என்பதை நிரூபித்து உலகிற்குக்குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதுதான் மொத்தக்கதை.
நாயகன் ஆக ஹீரோ பியன்னெஸ் டிபின் பிரமாதமாக,இளமைத்துள்ளலுடன் நடித்திருக்கிறார்.இவர் ஒவ்வொரு முறை துப்பு கண்டு பிடிக்கும் லாவகம் அருமை.
நாயகனின் நண்பன் ஆக டோனல் பின் நையாண்டித்தனமான காமெடி செய்வதில் கை தட்டல் பெறுகிறார்.மேஜிக் ரைட்டர் அமரர் சுஜாதாவின் நாவல்களில் வரும் வசந்த் கேரக்டரை நினைவுபடுத்துகிறார்.
நாயகனின் அண்ணன் ஆக மேக்ஸ் அயன்ஸ் பொறுப்பாக நடித்திருக்கிறார்.ஒவ்வொரு முறை நாயகன் சிக்கலில் மாட்டும்போதெல்லாம் அவருக்குப்பக்க பலமாக இருந்து உயர் அதிகாரிகளிடம் வாதிடுவது அருமை.
நாயகனின் அம்மாவாக நடாசா மெக்கலின் தரமான நடிப்பு.
சைனீஷ் இளவரசியாக வில்லித்தனம் காட்டும் ஜின் செங்க் ஆக்சன் சீக்வன்சில் தூள் பரத்துகிறார்.மார்ஷியல் ஆர்ட்ஸ் நிஜமாகக்கற்ற ஒருவரால் தான் இப்படிப்பட்ட சாகசங்களை செய்ய முடியும்.
மற்ற அனைத்து நடிக,நடிகையரின் பங்களிப்பும் கன கச்சிதம்.
ஒளிப்பதிவு,எடிட்டிங்,பின்னணி இசை போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் தரம்.
இயக்கி இருப்பவர் கை ரிக்சி.
சபாஷ் டைரக்டர்
1 நாயகனின் தங்கை சிறுவயதில் இறந்ததாகவும்,அதற்கு நாயகன் தான் காரணம் என்று குற்றம் சுமத்தப்படுவதும் அந்த மர்மங்கள் விலகுவதும் ஒரு மர்ம நாவல் படித்த திருப்தி
2 சைனீஷ் இளவரசி ஏன் வில்லியாக செயல்படுகிறார்?நாயகனை எதனால் மாட்டி விடுகிறார் என்பதற்கான காரணங்கள் சுவாரஸ்யமானவை.
3 ஆரம்பத்தில் 3 கேஸ்கள் என்று காட்டிவிட்டு மொத்தத்தில் ஒவ்வொன்றாகப்பல கேஸ்களை டீல் செய்வது அருமை.
4 நாயகன்,நாயகனின் நண்பன்,நாயகனின் அண்ணன் இந்த மூன்று கேரக்டர்களின் கேரக்டர் டிசைன்,நடிப்பு அனைத்தும் அருமை.
5 இது ஒரு பீரியாடிக் ஹிஸ்டாரிக்கல் ஸ்டோரி என்பதால் ஆர்ட் டைரக்சன்,ஆடை வடிவமைப்பு,புரொடக்சன் டிசைன் எல்லாம் பிரம்மாண்டம்
6 ஷெர்லாக் ஹோம்சின் இளமைப்பருவம் எப்படி இருந்தது என்பது நாம் இதுவரை கேள்விப்படாதது.அதனால் காட்சிகளில் ரொம்பவே சுவராஸ்யம்.
7:இன்வெஸ்டிகேசன் போர்சன்ஸ்,ட்விஸ்ட்,காமெடி என ஜனரஞசக அம்சங்களைக்கலந்து கட்டித்தந்த விதம் பிரமாதம்.
ரசித்த வசனங்கள்
1 மனுசன் செய்யும் பெரிய தப்பே எதிரி வெளில இருக்கான்,உள்ளே இல்லை என்று நம்புவதே.
2 உன் எதிரியைப்பற்றித்தெரிய வேண்டும் எனில் நீயே உன் எதிரி ஆக மாறு
3. எதிரியைக்குழப்புவதில் தான் நம் திறமை இருக்கிறது.
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 மெயின் கதை என்ன?என்பதை நாம் ஒரு டைரியில் எழுதி வைத்துக்கொள்ள வேண்டுமோ?என்று நினைக்கும் அளவு திரைக்கதையில் ஏகப்பட்ட லேயர்கள்,மானாவாரியான சம்பவங்கள் குழப்பி அடிக்கின்றன.
2 பரபரப்பு , வேகம்,விறுவிறுப்பு குறைவு.கொஞ்சம் மெதுவாகத்தான் காட்சிகள் நகர்கின்றன.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+ ஒரு இதழ் முத்தக்காட்சி உண்டு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - க்ரைம் இன்வெஸ்டிகேசன் திரில்லர். விரும்பிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.ஆனால் பொறுமை தேவை.முதல் 2 எபிசோடுகள் மெதுவாகத்தான் நகரும்.கடைசி எபிசோடில் பல திருப்பங்கள் உண்டு.ரேட்டிங்க் 3/5
| Young Sherlock | |
|---|---|
| Genre | Mystery |
| Created by | Matthew Parkhill |
| Inspired by | Young Sherlock Holmes by Andrew Lane Sherlock Holmes canon by Arthur Conan Doyle |
| Developed by | |
| Starring | |
| Opening theme | "Days Are Forgotten" by Kasabian |
| Country of origin | United Kingdom |
| Original language | English |
| No. of series | 1 |
| No. of episodes | 8 |
| Production | |
| Executive producers |
|
| Producer | Max Keene |
| Running time | 43–55 minutes |
| Production companies |
|
| Original release | |
| Network | Amazon Prime Video |
| Release | 4 March 2026 |
Sunday, March 29, 2026
VLADIMIR (2026) - ஆங்கிலம்/தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் (ரொமாண்டிக் காமெடி டிராமா)@நெட் பிளிக்ஸ்
5/3/2026 முதல் நெட் பிளிக்சில் தமிழ் டப்பிங்கில் வெளியாகி இருக்கும் ரொமாண்டிக் காமெடி டிராமா இது.மொத்தம் எட்டு எபிசோடுகள்.ஒவ்வொரு எபிசோடும் 30 நிமிடங்கள், ஆக மொத்தம் 4 மணி நேரம் ஒதுக்கினால் ஒரே சிட்டிங்கில் பார்த்து விடலாம்.
பெண் எழுத்தாளர் ஜூலியா மே ஜோனாஸ் எழுதிய வ்ளாடிமிர் என்ற நாவலைத்தழுவி திரைக்கதை அமைக்கப்பட்டு அதே டைட்டிலில் வெளியாகி இருக்கும் அமெரிக்கன் வெப் சீரிஸ் இது.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி ஒரு எழுத்தாளர்.சில நாவல்களை எழுதி இருக்கிறார்.40 வயது ஆகிறது.இவர் ஒரு காலேஜில் புரொபசராகப்பணி ஆற்றுகிறார்.இவரது கணவர் இதே காலேஜில் புரொபசராகப்பணியாற்றுகிறார்.இந்தத்தம்பதிக்கு 24 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.இவளுக்கும் திருமணம் ஆகி விட்டது.
நாயகியின் கணவர் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.காலேஜ் மாணவிகளைத்தவறாக உபயோகித்துக்கொண்டார் என சில மாணவிகள் புகார் தொடுக்கிறார்கள்.அந்தக்கேஸ் விசாரணைக்கு வருகிறது.
நாயகி தன் கணவரைக்கண்டிக்காமல் ,அவருக்கு ஆதரவாக செயல்பட்டதால் நாயகியைப்பணி நீக்கம் செய்யுமாறும் கோரிக்கை. விடப்படுகிறது.
நாயகியின் கணவர் இன்னமும் சில மாதங்களில் ரிட்டயர்ட் ஆக இருக்கிறார்.இந்த வழக்கில் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்குப்பென்சன் கிடைக்காது.
இதனால் நாயகியிடம் கணவர் தன் கேசுக்கு எதிரான ஆதாரங்களை அழிக்குமாறும் ,தனக்கு ஆதரவாகப்பேசுமாறும் வேண்டுகோள் விடுக்கிறார்.
இந்த சமயத்தில் நாயகியின் காலேஜில் புதிய இளம் வயது புரொபசர் பணியில் சேர்கிறார்..அவர் தான் கதையின் நாயகன்.நாயகிக்கு அவர் மீது ஒரு வித ஈர்ப்பு ஏற்படுகிறது.
நாயகனுக்குத் திருமணம் ஆகி மனைவி,ஒரு கைக்குழந்தை என இனிமையான குடும்பம் தான்.
நாயகியின் கணவர் மீது இருக்கும் வழக்கு என்ன ஆனது? நாயகியின் மகளது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பஙகளுக்குத்தீர்வு கிடைத்ததா?நாயகி நாயகன் மீது கொண்ட ஈர்ப்பு என்ன ஆனது?
இந்த மூன்று கேள்விகளுக்குமான விடை தான் இந்த வெப் சீரிசின் மொத்தக்கதையுமே!
ரொம்ப சீரியசாகத்தோன்றும் இந்தக்கதையைக்காமெடி டிராமாவாகப்படைத்திருப்பதில் இருக்கிறது இயக்குநரின் வெற்றி.
நாயகி ஆக ரேச்சல் ஹென்னா கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.இவர் 5 விருதுகளை வென்றவர்.நம்ம ஊர் ஆண்ட் ரியா போல் முகத்தோற்றம் கொண்டு இருப்பதால் நம்மால் எளிதில் கனெக்ட் ஆகிக்கொள்ள முடிகிறது.
நாயகன் ஆக டைட்டில் ரோல் ஆன வ்ளாடிமிர் ஆக வரும் லியோ வூட்டால் டைட்டானிக் நாயகன் லியோ டி காப்ரியோவை நினைவுபடுத்துகிறார்.ஆனால் இவருக்கு நாயகியை விடக்காட்சிகள் குறைவுதான்.
நாயகனின் மனைவி ஆக ஜெசிக்கா ஹென்விக் சிறிது நேரமே வந்தாலும் கவனிக்க வைக்கிறார்.
நாயகியின் மகள் ஆக எல்லன் ராபர்ட்சன் பாய்ஸ் கட்டிஙகில் ஆண் பிள்ளை போல் வருகிறார்.
நாயகியின். கணவர் ஆக ஜான் ஸ்லாட்டரி கெத்தாக வருகிறார்.ஏகப்பட்ட தப்புக்கள் செய்தும் குற்ற உணர்வே இல்லாத கல்லுளி மங்கனாக இவர் நடிப்பு அருமை.தசாவதாரம் படத்தில் கமல் நடித்த பாரீன் வில்லன் கெட்டப் இவருக்கு.
இந்த முக்கியமான 5 கேரக்டர்கள் தவிர மற்ற அனைத்து சின்ன சின்ன கேரக்டர்களும் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
டிம் பிலிப்சின் பின்னணி இசை படத்தின் ஜீவநாடியாக அமைந்திருக்கிறது.
டிம் ஆன்,பிராங்காயிஸ் ஆகிய இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்கள்.நாயகிக்கான க்ளோசப் ஷாட்கள் கவிதை.
நான்கு பேர் இணைந்து எடிட்டிங் செய்து இருக்கிறார்கள்.ரன்னிங் டைம் 4 மணி நேரம்
சபாஷ் டைரக்டர்
1 ஒவ்வொரு சீன் முடியும்போதும் நாயகி ஆடியன்சைப்பார்த்து ஒரு கமெண்ட் அடிப்பது புதுமையான பாணி.அந்த ஐடியா,தாட் பிராசஸ் அருமை.
2 கதையின் முக்கியமான கேரக்டர்கள் 5 பேர்தான் என்பதால் கதையைக்குழப்பம் இல்லாமல் காட்ட முடிகிறது
3 கதையில் வரும் முக்கியமான கேரக்டர்கள் எல்லோருமே எழுத்தாளர்கள் என்பதால் பிரபல ரைட்டர்சின் கோட்பாடுகள்,கொள்கைகளை மேற்கோள் காட்டும் விதம் அருமை.
4 ஏற்கனவே தமிழில் வெளிவந்த உயிர்,கலாபக்காதலன்,வாலி ஆகிய படங்களில் வரும் சம்பவங்கள் இதிலும் வருவதால் நம்மால் ஈசியாகப்படத்துடன் கனெக்ட் ஆக முடிகிறது
ரசித்த வசனங்கள்
1 சின்ன வயசிலேயே பெரிய வெற்றி கிடைத்து விட்டால் வாழ்க்கையில் திரில் இருக்காது.
2 ஒரு புத்தகத்தை எழுதி முடிக்கனும்னா இந்த உலகத்திலேயே நீ தான் பெரிய புத்திசாலி என உன்னை நீயே நம்ப வைக்கனும்
3. மனிதர்கள் பொதுவா பயந்தாங்கொள்ளிகள்.
4 கல்யாணம்,டைவர்ஸ் இந்த இரண்டுமே ஒரு முள் தான்.உங்களுக்கான முள்ளைத்தேர்ந்தெடுங்க.
5. எத்தனை எழுத்தாளர்களுக்கு அவர்களின் ஹாபிஸ்க்கு நேரம் இருந்திருக்கு?
6 எப்பவும் அதிகமா ஆசை வெச்சாப்பிரச்சனை தான்
7 நிரந்தரப்பிரிவு என்பதை 30 வயது ஆட்கள் தான் நம்புவார்கள்.
8 தன் மீது ஒரு அட்டென்சன் விழுவதை உலகில் உள்ள எல்லோரும் விரும்புவார்கள்.
9 நம் கைப்பட உருவாக்கிய பரிசை நமக்குப்பிடித்தவருக்குத்தருவதில் ஒரு ஆத்ம திருப்தி இருக்கு.
10 ஆண்கள் தன் பின்னந்தலையில் இரு கைகளைக்கோர்த்து நிற்பது ஆண் மயில் தோகை விரித்து ஆடும் அழகுக்கு நிகரானது.
11 ட்ராஜடி என்பதன் அடிப்படையே கஷ்டமான ஒண்ணை எடுத்துக்கறதுதான்.
12 இளமைல அழகோட மதிப்பு நமக்குத்தெரியாது.
13 தடை செய்யப்பட்ட பொருள் கையில் சிக்கினா ஒன்றையாவது. எடுத்து வெச்சுக்கனும்.
14 அவன் கிட்டே எனக்குப்பிடித்ததே ஒண்டர்புல் ஐ காண்டாக்ட் தான்.
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகிக்குத்தன் கணவன் மேல் நல்ல அபிப்ராயம் இல்லை.இருவரும் பிரிய இருக்கிறார்கள்.ஆனால் கணவன் செய்த குற்றத்துக்கு ஆதரவு தெரிவிப்பது ஏன் என்பதற்கு வலுவான காரணஙகள் இல்லை.
2 குற்றம் செய்தது கணவன்.ஆனால் மனைவியான நாயகியைப்பணி நீக்கம் செய்வது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.
3 க்ளைமாக்சில் நாயகியின் கணவன் மகளிடம் நீ பிரமாதமாக வாதிட்டாய்! எனப்பாராட்டுகிறான்.ஆனால் அந்த ஆர்க்யூமண்ட்டை விஷூவலாகக்காட்டவில்லை.முக்கியமான போர்சன் அது.
4. என் வாதம் முடிந்தது.தீர்ப்பு வரும்போது நான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என மகள் கூறுவதும் ஏற்புடையதாய் இல்லை.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்- 18+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பிரமாதமான கதை என்று சொல்லி விட முடியாது.நமக்குப்பழக்கமான கதை தான்.ஆனால் ட்ரீட்மெண்ட் நன்றாக உள்ளது. ரேட்டிங்க் 2.5 / 5
| Vladimir | |
|---|---|
| Genre | Comedy drama |
| Created by | Julia May Jonas |
| Based on | Vladimir by Julia May Jonas |
| Starring | |
| Music by | Tim Phillips |
| Country of origin | United States |
| Original language | English |
| No. of episodes | 8 |
| Production | |
| Executive producers |
|
| Producer | Chris Pavoni |
| Cinematography |
|
| Editors |
|
| Running time | 27–32 minutes |
| Production companies |
|
| Original release | |
| Network | Netflix |
| Release | March 5, 2026 |
Friday, March 27, 2026
ஹேப்பி ராஜ் -2026) ғதமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி டிராமா )
தொடர்ந்து 3 வெற்றிப் படங்களை இயக்கி நாயகனாக நடித்து மூன்றையும் 100 கோடி வசூல் கிளப்பில் சேர்த்த இயக்குநர் பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநர் ஆகப்பணியாற்றிய மரிய ராஜா இளஞ்செழியன் இயக்கிய முதல் படம் இது.
சபாஷ் டைரக்டர்
1 கைதி படத்தில் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்திய ஜார்ஜ் மரியான் இந்தப்படத்தில் நாயகனின் அப்பாவாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மனதுக்கு நெருக்குமாய் எமோஷனல் கனெக்ட்டைக்கொடுக்கிறது.சிறந்த கதாப்பாத்திர வடிவமைப்பு.அதற்கு உயிர் கொடுத்த விதம் அருமை.
2 முதல் பாதியில் ஜாலி ,கலாட்டா என செல்லும் திரைக்கதை பின் பாதியில் எமோஷனல் டிராமா ஆகிறது.நன்றாக பேலன்ஸ் செய்திருக்கிறார்கள்.
3 அப்பா-மகன் பாண்டிங் நன்கு ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.
4 ஆடின்னே இருப்பேன் பாடல் நல்ல ஹிட்.அதற்கான கொரியோகிராபியும் அருமை.
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஒவ்வொருவருக்கும் அவரவர் அப்பா தான் முதல் ஹீரோ.ஆனால் இதில் நாயகன் அப்பாவை அவரது உருவத்தை வைத்து மதிப்பிடுவது ஏற்புடையதாய் இல்லை
2. எந்தப்பெண்ணும் ஆளைப்பார்த்துத்தான் எடை போடுவாள்.ஆளின் அப்பாவை வைத்து கிண்டல் செய்வது நடைமுறையில் இல்லை.மிக செயற்கையான காட்சி அது.
3 முதல் பாதி திரைக்கதை தடுமாறுகிறது.பின் பாதி திரைக்கதை போல் சுவராஸ்யம் இல்லைம்
4 டபுள் மீனிங் டயலாக்ஸ் தவிர்த்திருக்கலாம்
5 மாடர்ன் பெண் என்றால் தம் அடிக்க வேண்டுமா?எதற்கு பெண் தம் அடிக்கும் காட்சி?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 18+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - முதல் பாதி சுமார் ,பின் பாதி அருமை .சராசரி காதல் கதை.ரேட்டிங்க் 2.5 /5
.jpg)

.jpg)



.jpg)