Monday, February 09, 2026

WITH LOVE(2026)-வித் லவ் - தமிழ் - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் ட்ராமா)

               

          96,ஆட்டோகிராப்,அழகி பட வரிசையில் காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் ஒரு Feel Good மூவி ஆக இந்தப்படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது.    

 எம் சசிகுமார் நடித்த டூரிஸ்ட் பேமிலி என்ற தரமான படத்தை இயக்கிய  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் அறிமுக நாயகனாகக்களம் இறஙகி இருக்கிறார்


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் +2 படிக்கும்போது வகுப்புத்தோழியான  சக மாணவியை ஒரு தலையாகக்காதலிக்கிறான்.ஆனால் காதலை வெளிப்படுத்தவில்லை.பள்ளிப்படிப்பு முடிந்த பின் இருவரும் பிரிகிறார்கள்.


நாயகி நாயகன் படித்த அதே ஸ்கூலில் நாயகன் 12வது படிக்கும்போது 10 வது படிக்கிறார்.2 வருசம் நாயகனுக்கு ஜூனியர்.நாயகி லேடி ரவுடி.பள்ளியில் டாண் ஆகத்திகழ்பவர்.நாயகியின் வகுப்பில் முதல் ரேங்க் வாங்கும் மாணவனை ஒரு தலையாகக்காதலிக்கிறார்.ஆனால் இவரும் காதலை வெளிப்படுத்தவில்லை.பள்ளிப்படிப்பு முடிந்த பின் இவர்களும் பிரிகிறார்கள்.


சில வருடங்கள் கழித்து 


நாயகனின் அக்கா நாயகனுக்கு போன் பண்ணி உனக்கு ஒரு பொண்ணு பார்த்து வெச்சிருக்கோம்.நாளை இந்த இடத்தில் இன்ன டைமில் போய்ப்பார் என்கிறார்.


நாயகனும் வேண்டா வெறுப்பாகப்பெண் பார்க்கப்போகிறார்.இருவரும் சந்தித்துப்பேசும்போது இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பது தெரியவந்ததும் இருவரது முதல் காதல் முயற்சி பற்றிப்பேச்சு வருகிறது.


நாயகி ஒரு ஐடியா கொடுக்கிறார்.நாம் இருவரும் அவரவர் முன்னாள் பிரியமானவரை ஒரு முறை ஏன் நேரில் சந்திக்கக்கூடாது?இந்த மாதிரி அப்போ நான் லவ் பண்ணேன்,ஆனா வெளிப்படுத்தலை என இப்போது சொல்லலாம் என முடிவு எடுக்கிறார்கள்.


இதற்குப்பின் நிகழும் சுவராஸ்யமான சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை.


நாயகன் ஆக அபிஷன் ஜீவிந்த் பாஸ் மார்க் வாங்கி விட்டார் என்றே சொல்லலாம்.ஆனால் அவர் ஏன் பிரதீப் ரங்கநாதனைக்காப்பி அடிக்கிறார் என்று புரியவில்லை.அவரே தனுசைப்பார்த்துக்காப்பி அடித்தவர் தானே?( இது எப்படி இருக்குன்னா ஈரோடு மகேஷ மதுரை முத்து வைப்பார்த்துக்காப்பி அடித்தால் மதுரை முத்து ஆல்ரெடி பத்திரிக்கைகளில் வெளிவந்த ஜோக்சைக்காப்பி அடித்துத்தன் சொந்த வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் போல் தொகுத்து வழஙகுவதைப்போல்)


நாயகி ஆக அனஸ்வரா ராஜன் கலக்கி விட்டார்.படத்தின் ஜீவனே இவர் நடிப்புத்தான்.கேரளத்துப்பைஙகிளி ஆன இவர் படம் முழுக்க ராஜாங்கம் அல்ல அல்ல ராணியஙகம் நடத்தி இருக்கிறார்.சின்ன சின்ன சிணுங்கல்கள்,டக் டக் என மாறும் முக பாவனைகள் ,தியேட்டரில் இவர் வரும் ஒவ்வொரு சீனிலும் கை தட்டல் மழை தான்.

நாயகனின் பள்ளிப்பருவக்காதலி ஆக வரும் காவ்யா முதல் பாதியில் சும்மா வந்துவிட்டுச்சென்றாலும் பின் பாதியில் கலக்கி விட்டார்.நாயகனின் கிப்டைப்பார்த்து பிரமிப்பது ,அன்றே லவ்வை சொல்லி இருக்கலாமே என ஏங்குவது என முக பாவனைகளில் வாணவேடிக்கை நிகழ்த்தி இருக்கிறார்.

நாயகனின் அக்காவாக ஆர் ஜே ஆனந்தி ,பள்ளி ஆசிரியர் ஆக வரும் சரவணன் இருவரும் குணச்சித்திர நடிப்பை வழஙகி இருக்கிறார்கள்.


பள்ளி நண்பர்கள் ஆக நாயகனுடன் வரும் சச்சின் நாச்சியப்பன்,ஹரீஷ குமார் ஆகியோர் காமெடி ஒன் லைனர்களுக்கு கேரண்டி.


ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள்  மூன்று செம ஹிட் ஆகி இருக்கின்றன..பின்னணி இசையில் முத்திரை பதித்திருக்கிறார்.குறிப்பாக காதலை சொல்லும் தருணம் ,காதல் சோகம் ,கொண்டாட்டக்காதல் என பல தருணங்களில் பிஜி எம் செம.

எடிட்டிஙக் பக்கா.141 நிமிடஙகள்


கதை திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் அறிமுக இயக்குநர் மதன்



சபாஷ்  டைரக்டர்

1 நாயகன் தன் பள்ளிக்காதலி அனிசாவை சந்திக்கும் காட்சி கவிதை.அந்த சீனில் அனிசாவாக வரும் காவ்யாவின் முக பாவனைகள் அட்டகாசம்

2 படம் பார்க்கும் எல்லோரையும் தன் முதல் காதலனை/காதலியை ஒரு முறை சந்தித்தால் என்ன?என எண்ண வைப்பது போல திரைக்கதை அமைத்தது.

3  நாயகன் ஸ்கூல் மாஸ்டரை அடிப்பதும் பின் தன் தவறை உணர்ந்து பல வருடங்கள் கழித்து மன்னிப்புக்கேட்கும் சீன் டச்சிஙக்

4 மாஸ்டர் ஸ்கூலில் நல்லது செய்யப்போய் தவறாகபுரிந்துகொள்ளப்பட்டு அவமானப்படும் காட்சி  உள்ளத்தைத்தொடும் உயிருள்ள காட்சி

செம  ஹிட்  சாங்க்ஸ்

1 மறந்து போச்சு

2 எதுக்குத்தான் இந்தக்காதல்

3 ஐயோ காதலே


  ரசித்த  வசனங்கள் 


1 முன்னே பின்னே தெரியாத பெண்ணை எப்படி மீட் பண்றது?

டேட்டிங் ஆப் ல எல்லாம் எப்படி பார்த்துக்கறாங்க?


2 எனக்குத்தான் சுகர் ஆகாது.நீங்க எடுத்துக்குஙக


நோ நோ நான் சும்மா சுகரை ஸ்மெல் பண்ணித்தான் பார்த்தேன்

3 என்னைப்பிடிச்சிருக்கா?


வாட்?

என்ன பிடிச்சிருக்கு?

4 நமக்குத்தெரியாத ஒரு விஷயம் நாலு பேர் சொல்றாங்க என்பதற்காக தப்பா நம்பறது  தப்பு

5 ஒரு தப்பைப்பார்த்துக்கோபப்படுவது தப்பில்லை

6  சுத்தி இருக்கறவங்க என்ன நினைப்பாங்கன்னு  யோசிக்காம நமக்கு என்ன தோணுதோ அதை செய்யனும்

7. நாங்க பொண்ணுங்க .யாரு  எங்களை எப்படிப்பார்க்கறாஙகன்னு நல்லாத்தெரியும்

8 உனக்கு என்ன பிடிக்கும்?பிடிக்காது?எனக்குத்தெரியாது,ஆனா உனக்கு என்ன பிடிக்கும்னு உன் கிட்டேயே கேட்டு அதை நிறைவெறற முயற்சி செய்யறேன்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகி நாயகனிடம் தன் அப்பா புகைப்பழக்கத்தால் தான் குறைந்த வயதில் லங்க்ஸ் கேன்சரால் இறந்தார். என்கிறார்.ஆனால் நாயகன் தம் அடிக்கும்போது அவரைக்கண்டிக்கவே இல்லை.

2 நாயகி நாயகனை விட 2 வருடங்கள் ஜூனியர்.ஆனால் நாயகனை நாயகி ஒருமையில் அழைக்கிறார்,ஆனால்  சீனியர் ஆன நாயகன் நாயகியை மரியாதையாக வாங்க ,போங்க என அழைக்கிறார்.( என்னதான் பெண்கள் பொதுவாக யாரையும் மதிக்க மாட்டார்கக் ,ஆனால் ஆண்கள் அப்படி அல்ல ,பெண்களை மரியாதையுடன் நடத்துவார்கள் என்றாலும் லாஜிக் இடிக்குதே?)


3 நாயகி சரக்கடிக்கும் காட்சி தேவை இல்லாதது.மாடர்ன் பெண் எனக்காட்ட வேண்டும் எனில் தம் அடிப்பவராக,தண்ணி அடிப்பவராக நாயகியைக்காட்ட வேண்டும் என இயக்குநர்களுக்கு யார் கற்றுத்தந்தது?

4  நாயகன் ,நாயகி இருவரும் க்ளைமாக்சில் சேர்வார்களா?மாட்டார்களா?என்ற டெம்ப்போவைக்குறைப்பது நாயகன் ,நாயகி இருவரும் மப்பில் இருக்கும்போது உறவு கொண்டு விட்டனர் என்ற காட்சி.கதைக்குத்தேவை இல்லாத காட்சி அது.

5 நாயகனின் பள்ளிக்காதல் சீசனில் தனுஷ் நடித்த அட்டர் பிளாப் படமான 3 படக்காட்சிகள் பாதிப்பு அப்பட்டமாகத்தெரிகிறது.டான்ஸ் ஸ்டெப் உட்பட..

6 பள்ளிப்பருவத்தோழர்கள் கெட்டப் ஒட்டுத்தாடி அப்பட்டமாய்த்தெரிகிறது.

7 நாயகி தன் முதல் காதல் யாருடனோ அவனே ஏற்கத்தயாராக இருந்தும் நாயகன் மீது தான் காதல் என சொல்வதை நம்ப முடியவில்லை.அப்படி ஒன்றும் ஸ்பெஷலாக அவனிடம் எதுவும் இல்லை.தம் தான் அடிக்கிறான்


8 அவள் வருவாளா ரீமிக்ஸ் சாங்க் படத்துடன் ஒட்டவே இல்லை.படு செடைரக்டர்


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  காதலர்கள்,காதலித்தவர்கள் எல்லோருக்கும்ப்படம் பிடிக்கும்.விகடன் மார்க் யூகம் 45 குமுதம் ரேங்கிங்க் ஓக்கே.ரேட்டிங். 3.5 /5


With Love
Theatrical release poster
Directed byMadhan
Written byMadhan
Produced by
Starring
CinematographyShreyaas Krishna
Edited bySuresh Kumar
Music bySean Roldan
Production
companies
  • Zion Films
  • MRP Entertainment
Release dates
Running time
140 minutes[1]
CountryIndia
LanguageTamil

Sunday, February 08, 2026

சிறுகதை - உதவி ஆசிரியர் - சிபி செந்தில் குமார் @ கல்கி




பிரபல வார இதழ்  மகிழ்ச்சி  யின் ஆசிரியர்   ராஜா தன் உதவியாளர்களுடனான  மீட்டிங்கை முடித்து தன் டேபிளுக்கு திரும்பினார். அந்த வாரத்தின் ஃபைனல் எடிட்டிங் ஒர்க் பெண்டிங் இருக்கிறது. இன்று இரவுக்குள் அதை க்ளியர் செய்ய வேண்டும். ரிசப்ஷனுக்கு ஃபோன் அடித்து “ யாரையும் அனுமதிக்க  வேண்டாம்” என ஸ்ட்ரிக்டாக சொல்லி விட்டு தன் வேலைகளில் மூழ்கினார். பொதுவாக ஒரு கம்பெனியிலோ, ஆஃபீசிலோ ஒர்க் பண்றவங்களுக்கு ஒவ்வொரு மாசக்கடைசியும் மன்த் எண்ட் பிரஷர் இருக்கும், ஆனால் வாரம் இருமுறை இதழ் இரண்டு, வார இதழ் 2 , மாத இதழ் 3 , மாதம் இருமுறை இதழ் 2  ஆக மொத்தம் 9 இதழ்களுக்கு  சீஃப் எடிட்டர் பணி என்பது சாதாரண வேலை இல்லை. தினசரி 4 காட்சிகள் என தியேட்டரில் போஸ்டர் ஒட்டுவது போல்  தினமும் டென்சனும் , ஒர்க் பிரசரும் உள்ள ஒரு வேலை .


4 மணி நேரம் கழித்து தன் வேலை எல்லாம் முடித்து விட்டு  ராஜா மணி பார்த்தார். நைட் 7 ஆகி விட்டது. ரிசப்ஷனுக்கு ஃபோன் அடித்தார் “ நான் கிளம்பப்போறேன். யாராவது விசிட்டர்ஸ் வந்தாங்களா?எனி இம்ப்பார்ட்டெண்ட் நியூஸ்?

 இல்லை சார். ஒரு வாசகர் மட்டும் உங்களைப்பார்க்கனும்னு வெய்ட் பண்றார். 4 மணி நேரமா அடமா உட்கார்ந்திருக்கார்.

 வாசகரா? ஏம்மா? இதுக்கெல்லாமா என்னை டிஸ்டர்ப் பண்ணுவீங்க? நீங்களே பேசி அவரை அனுப்பி இருக்கலாமே?

 இல்லை சார் , அவர் உங்களைத்தான் பார்க்கனும்னு பிடிவாதமா இருக்கார் என்ன விஷயம்?னு கேட்டா அதுவும் சொல்ல மாட்டேங்கறார். திருப்பித்திருப்பி ஒரு முக்கிய விஷயம், ஆனா எடிட்டர் கிட்டே தான் சொல்ல முடியும் , இதையேதான் திருப்பி திருப்பி சொல்லிட்டு இருக்கார்

சரி , பேர் என்னம்மா?

 சதீஷ்


அயன் புரம் சத்தியநாராயணன்,  வேலாயுதம்பாளையம் எம் சம்பத் , வண்ணை கணேசன், பள்ளிபாளையம் கே ரஞ்சனிப்பிரியன், என பத்திரிக்கைகளில் ரெகுலராக வாசகர் கடிதம் எழுதும் பிரபல வாசகர்கள் 10 பேரின் பட்டியலை மனசுக்குள் பட்டியல் இட்ட ராஜா “ சதீஷ் , புதுப்பேரா இருக்கே?  என்று யோசித்த வாறு “ சரி , வரச்சொல்”  என்றார்


உள்ளே வந்தவருக்கு கிட்டத்தட்ட 50+ வயசு இருக்கும், இதற்கு முன் பார்த்த மாதிரி நினைவு இல்லை

 வாங்க, உட்காருங்க 

 வணக்கம் சார் , என் பேரு சதீஷ், சித்தோடு சொந்த ஊரு , உங்க  பத்திரிக்கை மட்டுமல்ல , எல்லா பத்திரிக்கைகளும் தொடர்ந்து வாசிப்பவன்


 ஓஹோ, குட் . என்ன விஷயமா என்னைப்பார்க்க வந்தீங்க?

சார் , உங்க பத்திரிக்கைல ஒரு விளம்பரம் கொடுத்திருந்தீங்க . 25 வயதுக்குள் இருக்கும் துடிப்பான , இளமையான உதவி ஆசிரியர்கள் தேவை  அப்டினு....


 ஆமா, ஆனா உங்களுக்கு  25க்கு மேல இருக்குமே? ஒரு வேளை உங்க பையனுக்கு சிபாரிசு செய்ய வந்திருக்கீங்களோ?

 சாரி சார், நான் வந்த விஷயமே வேற . என் வேலைக்காகவோ , வேற யாரோட வேலைக்கு சிபாரிசுக்காகவோ நான் வரலை


பின்னே?


சார், மார்க்கெட்டிங் லைன்ல இருக்கறவங்களுக்கு ஆள் எடுக்கையில் தான் இளமையான ஆள் வேணும், மேரேஜ் ஆகாத ஆள் வேணும்னு விளம்பரம் பண்ணுவாங்க , ஏன்னா அப்போதான் துடிப்பா டெய்லி 200 கிமீ பயணம் செய்வான், அடிக்கடி லீவ் போட மாட்டான் . ஆனா நீங்க புதுசா ஆரம்பிக்க இருக்கும் நகைச்சுவை வார இதழ் முழுக்க முழுக்க ஜோக்ஸ்கள் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு இதழ்.அதுக்கு இளமையான ஆள் வேணும்னு ஏன் விளம்பரம் கொடுத்திருக்கீங்க?

 இது எல்லா ஆஃபீஸ்லயும் நடக்கறதுதான். துடிப்பான இளைஞர்கள் தான் தேவை. அவங்க கூட வேலை செய்தா தான் நாமும் புத்துணர்ச்சியா ஃபீல் பண்ண முடியும்  இந்த கால கட்ட வாசகர்களின் டேஸ்ட் , பல்ஸ் தெரிஞ்சவங்களா இருப்பாங்க


 சார். நீங்க சொல்ற பாய்ண்ட் கரெக்ட். அவங்க ஏதாவது கட்டுரையோ, அல்லது நடிக நடிகையின் பேட்டியோ  இயக்குநருடன் ஒரு கலந்துரையாடலோ பண்ற மாதிரி இருந்தா அது சரி, ஆனா வாசகர்கள் அனுப்பற ஜோக்சை தேர்ந்தெடுக்கும் வேலைக்கு தான் ஆள் எடுக்கறீங்க . அதுக்கு ஏன் இளைஞர்கள்?

 நீங்க மறுபடி மறுபடி ஒரே பாய்ண்ட்டைதான் சொல்லிட்டு இருக்கீங்க, ஏன் இளைஞர்களை தேர்ந்த்டுக்கக்கூடாது?அதுக்கு காரணம் சொல்லுங்க


 சார், இப்போ பத்திரிக்கைகள்ல வர்ற ஜோக்ஸ்  பெரும்பாலும் ஏற்கனவே வந்த ஜோக்ஸின் உல்டாவாகவோ , சினிமாப்படங்களில் வந்த காமெடி சீன்கள்ல இருந்து உருவுனதாகவோ  இருக்கு. சிலர் தான் சொந்த,மா யோசிச்சு ஜோக்ஸ் எழுதறாங்க. இப்போ ஜோக்சை செலக்சன் பண்ற டீம்ல இருக்கறவங்க  பலதரப்பட்ட புத்தகங்களை படிச்சவராகவும்  , சினிமாக்களை , பார்த்தவராகவும் இருக்கவேணாமா?


சரிதான், ஏன் 25 வயசு இளைஞர்கள்  புத்தக வாசிப்பு இல்லாதவங்களாத்தான்  இருப்பாங்கனு என்ன நிச்சயம்?இண்ட்டர்வ்யூல  ஃபில்டர் பண்ணுவோம் இல்ல?


 ஆமா சார் , ஃபிலடர் பண்ணுவீங்க.  1995 ல பிறந்த ஒருவன்  2020 ல் 25   வயசு ஆனவனா இருப்பான். அவன் 25 வருச படைப்புகள் தான்  படிச்சிருப்பான்.ஆனா ஜோக்ஸ் செலக்சன்க்கு அந்த தகுதி பத்தாது சார். காதலிக்க நேரமில்லை படம் முதல் தமிழ் சினிமாவின் பிரபல ஹிட் படங்களை காமெடி ஜர்னர் களை பார்த்தவனா  இருக்கனும், எஸ் வி  சேகர் , கிரேசி மோகன் , சோ ,  மவுலி நாடகங்களை படிச்சவராவோ , பார்த்தவராவோ  இருக்கனும்


 அவன் என்ன நாடகமா எழுதப்போறான்?

 சார், வாசகர்கள் எழுதி அனுப்பற ஜோக்ஸ்  சொந்தமா யோசிச்சு எழுதற படைப்பா ,? இல்ல அட்லீ ஒர்க் பண்ணப்பட்ட படைப்பா?னு எப்படி தெரியும்?அவனது படிப்பு பரந்து இருக்க வேண்டாமா? 1970களில் வந்த  பிரபல வார இதழ்களில் வந்த அனைத்து ஜோக்ஸ்களையும் படிச்சவனாவும் இருக்கனும். மதன் ஜோக்ஸ் , கோபுலு ஜோக்ஸ், கோவி கோவன் ஜோக்ஸ்  உட்பட அனைத்து   முன்னணி ஜோக்ஸ் எழுத்தாளர்களையும் அவன் வாசிச்சவனா இருக்கனும்

 நீங்க சொல்ற பாய்ண்ட்டை ஏத்துக்கிட்டாலும் அதை விட ஈசியான வழி ஒண்னு நாங்க வெச்சிருக்கோம்

 என்ன சார்?

 டாபிக்கல் ஜோக்ஸ் . கரண்ட் மேட்டரை வெச்சு எழுதப்படும் ஜோக்ஸ் .அதுல நீங்க சொல்ற மாதிரி காபி அடிக்க முடியாதுல்ல?


இல்லை சார் , இதை நான் ஆட்சேபிக்கிறேன். ஒரு நல்ல திறமையான எழுத்தாளன் சாமார்த்தியமா  பழைய ஜோக்ஸை டாபிக்கல் மேட்டரில் கனெக்ட் பண்ணி எழுத முடியும் 


 எப்படி?

 இப்போ டிவி ல ஸ்டெண்ட் அப் காமெடி மதுரை  முத்து , ஈரோடு மகேஷ் எல்லாம் பாருங்க அவங்க  கிட்டே சொந்த சரக்கு கிடையாது . பத்திரிக்கைகளில் வந்த துணுக்குகளின் தோரணம் தான். ஆனா சாமார்த்தியமா  அதை தொகுத்து கோர்வையா ஜனங்க  ரசிக்கற மாதிரி சொல்ற திறமை இருக்கு , மெம்மரி பவரும் இருக்கு 2 மணி நேரம் தொடர்ந்து  ஜோக்ஸ் சொல்லச்சொன்னாலும் சொல்வாங்க

 ஆமா

 அதே திறமை அந்த ஜோக்சை நிஜமாவே எழுதுன ஜோக் எழுத்தாளர்களாலேயே முடியாது.அவங்க அதிக பட்சம் 10 ஜோக்ஸ் ஞாபகம் வெச்சு சொல்லலாம், ஒரு நிஜமான படைப்பாளிக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரமும் , புகழும் அவனுக்கு கிடைக்கறதில்லை , ஆனா சொந்த படைப்பு இல்லைன்னாலும் மெம்மரி பவரும், தொகுத்து வழங்கும் ஆற்றலும் உள்ளவங்க லைம் லைட்க்கு ஈசியா வந்துடறாங்க 


சரி , அதுக்கும் , இந்த இளைஞர்கள் மேட்டருக்கும் என்ன சம்பந்தம்?


சார், இப்போ இந்த ஸ்டேண்ட் அப் காமெடியன்கள் மாதிரி அடுத்தவங்க ஜோக்சை சாமார்த்தியமா  பட்டி டிங்கரிங் பண்ணி தன் சொந்த ஜோக்ஸ் மாதிரி எழுதி அனுப்பறவங்களை அடையாளம் தெரிஞ்சுக்கற தகுதியும் , திறமையும் வாய்ந்த ஒரு அனுபவசாலியை செல்க்சன் செக்சன் ல பணி அமர்த்தனும் சார். இதுதான் என் ஆசை


 சரி , நீங்க சொல்றதை ஒரு வாதத்துக்காக ஏத்துகிட்டாக்கூட அவ்ளோ வய்சான ஆளை  வெச்சு எப்படி வேலை வாங்கறது?

 என்ன சார்? இப்டி கேட்டுட்டீங்க? இந்தக்கால இளைஞர்கள் கிட்டே பொறுமையும் , ஒபீடியன்சும் சுத்தமா கிடையாது. டக் டக்னு 2 வருசங்களுக்கு ஒரு தடவை வேற கம்பெனிக்கு ஜம்ப் ஆகிடறாங்க , காரணம் ஒவ்வொரு ஜம்ப்க்கும் அவங்களுக்கு  30% செலரி ஹைக் கிடைக்குது .  ஹையர் ஆஃபீசர்ஸ் ஏதாவது சொல்லிட்டா டக்னு மூடு அவுட் ஆகி  ரிசைன் பண்றவங்க இளைஞர்கள் தான் 

ஆமா, அது ஒரு வேலீட் பாய்ண்ட்


 ஆனா வயசானவங்க அப்படி இல்லை சார். அவங்களுக்கு பொறுப்புணர்வு அதிகம், பொறுமையும் அதிகம் . கம்பெனியும் மாற மாட்டாங்க 

ஓக்கே, நீங்க சொன்ன மாதிரி அடுத்த வார இதழ்லயே விளம்பரம் தந்துடறேன். அனுபவம் மிக்க , பரந்த வாசிப்புத்திறன் மிக்க 60+ வயசு உள்ள உதவி ஆசிரியர் பணிக்கு ஆள் தேவைனு விளம்பரம் பண்றேன் சரியா? 

  ரொம்ப சந்தோஷம் சார்

 ஆனா ஒரு டவுட். இதை எல்லாம் நீங்க நேர்ல வந்து சொல்லறதால உங்களுக்கு என்ன லாபம்?

சார். நான் தீவிரமான வாசகன். பத்த்ரிக்கைல வர்ற பல படைப்புக்ள உல்டா ஜோக்சா இல்லாம புதுசா இருக்கனும்னு நினைக்கற சராசரி வாசகன். தான் நேசிக்கற காதலி தனக்கு இல்லைன்னாலும் நல்ல இடத்துல வாழ்க்கைப்பட்டு நல்லவிதமா வாழனும்னு ஒரு காதலன் ஆசைப்படற மாதிரி  நான் நேசிக்கும்   ஒரு பத்திரிக்கை அதுல வர்ற படைப்புகள் நல்ல விதமா வரனும், இதான் சார் என் ஆசை 

 வெரிகுட்/ தாங்க் யூ

 ஒகே சார் வர்றேன்



இந்த சம்பவம்  நடந்து  20 நாட்கள் கழித்து எடிட்டர் ராஜா  சொன்னபடி இண்ட்டர்வ்யூ கால் ஃபார் பண்ணி வந்த கேண்டிடேட்களில் 30 பேர்களை கேள்வி கேட்டு அனுபவமும், திறமையும் உள்ள ஒருவரை தேர்ந்தெடுத்தார்.
அவர் பெயர் பழனிச்சாமி. அவரை எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கே என ராஜா பல முறை முயன்றும், நினைவுபடுத்தவே முடியவில்லை. 

 ஆனால் கடைசி வரை அவரால் சேர்ந்திருப்பது  50 வயது சதீஷின் அப்பா 70 வயசு பழனிச்சாமி   என்பதை கண்டு பிடிக்காமலே போனது 


THANX  - KALKI 

Saturday, February 07, 2026

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி


 ஒரு கால கட்டத்தில் அதாவது 1980 களில் 1990 களில் தீபாவளி,பொங்கல் சமயங்களில் 10 படஙகள் ரிலீஸ் ஆகும்.முன்னணி நடிகர்கள் படஙகள் 4 ,லோ பட்ஜெட் படஙகள் 6 என்ற விகிதத்தில் இருக்கும்.ஆனால் இப்போதெல்லாம் ஒரு படம் அல்லது இரண்டு படஙகள் தான் ரிலீஸ் ஆகின்றன.நீண்ட இடைவெளிக்குப்பின் வருகின்ற 6/2/2026 வெள்ளி அன்று 13 படஙகள் ரிலீஸ் ஆகின்றன.



1. வித் லவ் (WITH LOVE)

2025ம் ஆண்டு வெளிவந்த பீல் குட் மூவி ஆன எம் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் பேமிலி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் முதல் படம் இது.நாயகி ஆக அனஸ்வரா ராஜன் நடிக்கிறார்.பருத்தி வீரன் புகழ் சித்தப்பு சரவணன் ஒரு குணச்சித்திர வேடத்தில் நடிக்கிறார்.

சவுந்தர்யா ரஜினிகாந்த்தின் சொந்தப்படம் இது.அறிமுக இயக்குநர் மதன் இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார்.

3/2/2026 அன்று சத்யம் சினிமாஸ் திரை அரங்கில்  பிரிவ்யூ ஷோ நடைபெறுகிறது.6/2/2026 அன்று தமிழகத்தில் அனைத்துத்திரை அரஙகுகளிலும் வெளியாகிறது.

காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் ரொமாண்டிக் ட்ராமா இது.

2. காதல் கதை சொல்லவா

விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் படம் போல போஸ்டர் டிசைன்கள் அமைந்திருந்தாலும் அது உண்மை அல்ல.அவர் ஒரு குணச்சிரக்கேரக்டரில் நடித்திருக்கிறார்.ஜெயராம் ,நகுல் இருவரும் நாயகர்களாக நடித்திருக்கும் படம் இது.

சனில் களம் இயக்கத்தில் தமிழ் ,மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவான படம் என்று சொல்லப்பட்டாலும் இது மலையாளத்தில் எடுக்கப்பட்ட படம் தான்.தமிழில் டப் செய்து இருக்கலாம்

நாயகிகளாக  ஆத்மிகா,ரித்திகா சென் ஆகிய இருவரும் நடித்திருக்கிறார்கள்.ரொமாண்டிக் காமெடி டிராமா இது.சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைபெற்றுள்ளது


3. அனோமி - த ஈக்குவேசன் ஆப் டெத்

இது ஒரு மலையாளப்படம்.தமிழ் டப்பிஙகில் வெளியாகிறது.பாவனாவின் 90வது படம்.இதில் ரகு(மான்) விசாரணை அதிகாரியாகவும் ,பாவனா  தடயவியல் நிபுணராகவும் நடித்திருக்கிறார்கள்.இது ஒரு க்ரைம் இன்வெஸ்டிகேசன் பிலிம்.
படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

4  ரெட் லேபிள்- இது ஒரு ரொமாண்டிக் ட்ராமா.கே ஆர் வினோத் இயக்கத்தில் பொன் பார்த்திபன் திரைக்கதையில் உருவான படம் இது.

லெனின்,இயக்குநர் ஆர் வி உதயகுமார்,முனீஸ்காந்த்,அஜ்மின் ஆகியோர் நடித்திருக்கும் படம்.கதாநாயகி புதுமுகம்.

5 யோகிடா - இது கதாநாயகியின் ஆக்சன் மூவி.நாயகி ஆக சாய் தன்சிகா நடித்திருக்கிறார்.கபாலி படத்தில் இவர் கேரக்டர் பெயர் யோகி.அதே மாதிரியான கேரக்டர் என்பதால் யோகிடா என்றே டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
ஷாயாஜி ஷிண்டே முக்கியமான ரோலில் நடிக்கிறார்.கவுதம் கிருஷ்ணா கதை,,திரைக்கதை ,இயக்கம்

6 HONEY - நவீன் சந்திரா நடிப்பில் உருவான தெலுங்குப்படத்தின் தமிழ்ப்பதிப்பு இது.ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்,லெவன்,பிரம்மன் ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்த நவீன் சந்திரா இதில் க்ரைம் ஆக்சன் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

இவருடன் திவ்யா பிள்ளை ,திவிவத்யா அகியோரும் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தின் ட்ரெய்லர் கட் ரசிகர்களிடையே வரவேற்புப்பெற்றுள்ளது

7. Euphoria (யுபோரியா)

இயக்குனர் குணசேகர்  இயக்கத்தில் உருவான இந்த க்ரைம் திரில்லர் படத்தில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன்  போலீஸ் ஆபீசர் ஆக வருகிறார்.நாசர்,சாரா அர்ஜூன்,பூமிகா சாவ்லா ,மேத்யூ வர்கீஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

8. சாத்தா பச்சா-த ரிங்க் ஆப் ரவுடீஸ்


இது ஒரு மலையாளப்படம்.22/1/2026 ல் கேரளாவில் ரிலீஸ் ஆகி 30 கோடி ரூபாய் வசூல் செய்த லோ பட்ஜெட் ஹிட் படம் .இப்போது தமிழ் டப்பிஙகில் ரிலீஸ் ஆகிறது.

அர்ஜூன் அசோகன்,ரோஷன் மேத்யூ, ஆகியோர் நடிக்க அத்வைத் நாயர் இயக்கிய படம்.

இது ஒரு காமெடி கலந்த ஆக்சன் படம்.டபிள்யூ டபிள்யூ எப் மேட்ச் பார்த்த அந்தக்கால ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்

9. கில்லி மாப்பிள்ளை

விஜய் நடித்த கில்லி ரஜினி நடித்த மாப்பிள்ளை ஆகிய இரு பட டைட்டில்களையும் இணைத்து டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
என் பத்மராஜா வின் இயக்கத்தில் உருவான இந்தப்படத்தில் திவ்யா தாமஸ் ,கிரேன் மனோகர் , ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.இது கிராமத்தில் நடக்கும் காதல் கதை

10.  பாடும் குயிலே .

முற்றிலும் புதுமுகஙகள் நடிக்க உருவாகும் இந்த காதல் க தையை எழுதி இயக்கி இருப்பவர்  எஸ் என் நந்த குமார்.இவர் தான் படத்தின் தயாரிப்பாளரும் கூட.

11 சிலம்பாட்டம்.

சிம்பு இரு வேடஙகளில் நடிக்க ,சனாகான்,சினேகா ஆகிய இருவரும் ஜோடிகளாக நடிக்க பிரபு,சந்தானம்,பொன் வண்ணன் மற்றும் பலர் நடித்த இந்தப்படம் 2008ல் வெளியான கமர்ஷியல் ஆக்சன் படம்.ரீ ரிலீஸ் ஆகிறது.வெளியான காலத்தில் பி ,சி செண்ட்டர்களில் வெற்றி பெற்ற படம்.பாடல்கள் செம ஹிட் ஆனது

12. 3 (மூன்று)

தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் உருவான இந்தப்படம் 2012ல் வெளியாகி சுமாரான வெற்றியைப்பெற்ற படம்.அனிரூத்தின் இசையில் பாடல்கள் மெகா ஹிட்.குறிப்பாக ஒய் திஸ் கொலை வெறி பட்டி தொட்டி எங்கும் பரவியது.சிவகார்த்திகேயன் இதில் காமெடியனாக வருவார்

இப்போது ரீ ரிலீஸ் ஆகிறது

நன்றி கல்கி வார இதழ் மின்னிதழ் 6/2/2026




Friday, February 06, 2026

BANK OF BHAGYALAKSHMI (2025)-கன்னடம்/தமிழ் - சினிமா விமர்சனம் (க்ரைம் காமெடி ட்ராமா)@அமேசான் பிரைம்

           

           28/11/2025 முதல் திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் இப்போது அமேசான் பிரைம் தளத்தில் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.      


கார்வண்ணனின் பாலம் (1990),கே பாக்யராஜ் நடித்த ருத்ரா(1991),செல்வா நடித்த கோல்மால் திரைப்படம். (1998) ஆகிய படங்களை நினைவுபடுத்தும் திரைக்கதை அம்சம் கொண்ட காமெடி டிராமா இது.


பாலம் சீரியசான படம் என்றாலும் கதை ஒரே பாலத்தில் நடக்கும்.அதே போல ஒரே வங்கியில் முழுக்கதையும் நடக்கிறது

ஸ்பாய்லர்  அலெர்ட்

கர்நாடகா மாநிலத்தில் சட்டசபைத்தேர்தல் இன்னமும் சில நாட்களில் நடை பெற இருக்கிறது.வாக்காளர்களுக்குப்பணப்பட்டுவாடா செய்ய ஒரு கட்சி திட்டம் தீட்டுகிறது.அரசியல்வாதிகளின் கறுப்புப்பணம் ஒரு கிராமத்தில் உள்ள வங்கியின் பாதாள அறையில் கோடிக்கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது


நாயகனும்,அவனது நண்பர்கள் நான்கு பேரும் சில்லறைத்திருடர்கள்.சின்ன சின்னத்திருட்டாக செய்து போர் அடித்து விட்டதால் ஒரு வங்கிக்கொள்ளை நிகழ்த்தத்திட்டம் போடுகிறார்கள்.கடை வீதியில் பொம்மைத்துப்பாக்கிகள் வாங்கிக்கொண்டு ஒரு கிராமத்தில் இருக்கும் வங்கியில் கொள்ளை அடிக்க உள்ளே நுழைகிறார்கள்.


ஆனால் வங்கியில் பணம் இல்லை.லாக்கரிலும் நகைகள் எதுவும் இல்லை. அனைவருக்கும் ஏமாற்றம்.உள்ளத்தை அள்ளித்தா படத்தில் வேன் வாடகைக்குக்கூட கட்டுபடி ஆகவில்லை என கவுண்டமணி புலம்புவது போல நாயகனின் நிலைமை.


வங்கியை சுற்றி போலீஸ் ரவுண்ட் கட்டி விட்டது.ஊர் மக்கள் வெளியே திரண்டு நிற்கிறார்கள்.இப்போது நாயகன் எதேச்சையாக வங்கியில் ஒரு சுரஙக அறை இருப்பதைக்கண்டு பிடிக்கிறான்.அங்கே கோடிக்கணக்கான பணக்குவியல் இருப்பதைக்கண்டு மலைக்கிறான்.


மணிரத்னம் இயக்கிய திருடா திருடா படத்தில் வருவது போல்  நாயகனும் ,நண்பர்களும் பணத்தைக்கண்டு குதூகலித்துக்கொண்டாடிக்கொண்டு இருக்க பேங்க் மேனேஜர் சாமார்த்தியமாக சுரஙக அறையை மூடி லாக் செய்து விடுகிறார்.


நாயகி அந்த பேங்க்கில் அக்கவுண்ட்டண்ட் ஆகப்பணி புரிபவர்.நாயகனை முதன் முதலாக அன்று தான் பார்க்கிறார்.நாயகனுக்கு நாயகியைக்கண்டதும் காதல்..ஆனால் நாயகிக்கு நாயகனை சுத்தமாகப்பிடிக்கவில்லை.


ஆனால்  யாரும் எதிர்பாராத வண்ணம் நாயகி நாயகனுக்கு உதவுகிறார்.எதற்கு? நாயகன் பணத்துடன் தப்பிக்க முடிந்ததா? அரசியல்வாதிகள் திட்டம் என்ன ஆனது?என்பதை எல்லாம் மீதித்திரைக்கதையில் விளக்கி இருக்கிறார்கள்.


நாயகன் ஆக தீட்சித் ஷெட்டி நடித்திருக்கிறார்.காமெடி செய்வது,காதலிப்பது ,போலீசுடன் பேச்சு வார்த்தை நடத்துவது என அவருக்குப்பல வேலைகள்.கச்சிதம்.


நாயகி ஆக பிருந்தா ஆச்சர்யா நடித்திருக்கிறார்.தோற்றத்தில் தில் பட லைலா +இது நம்ம ஆளு ஷோபனா சாயலில் இருக்கிறார்.நடிக்க அதிக வாய்ப்பில்லை.சில இடஙகளில் அவரது நடிப்பில் செயற்கைத்தனம் எட்டிப்பார்க்கிறது..

கன்னடத்தில் பிரபல காமெடியன் ஆன சாது கோகிலா ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஆக கொஞ்சம் சிரிப்புக்காட்டினாலும் அவருக்குக்காட்சிகள் அதிகம் இல்லை.

கொள்ளையர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தும் போலீஸ்  இன்ஸ்பெக்டர் ஆக வரும் விஸ்வநாத் மண்டாலிகாவிடம் போலீஸ் தோரணை,கெத்து ,உடல் மொழி எதுவுமே இல்லை.போதாக்குறைக்கு போலீஸ் கட்டிஙக் ஹேர் ஸ்டைலும் இல்லாமல் கடுப்படிக்கிறார்.

ஸ்ருதி ஹரிஹரன் கெஸ்ட் ரோலில் வருகிறார்


மற்ற அனைவரும் சராசரியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்

ஜூடா சாந்தி தான் இசை.2 பாடல்கள் சுமார் ரகம்.பின்னணி இசை ரொம்பவே சுமார்தான்.

ஒளிப்பதிவு அபிசேக் ஜி காசர்கோட்.பரவாயில்லை ரகம்


தேஜாசின் எடிட்டிஙகில்  படம் 142 நிமிடஙகள் ஓடுகிறது.

கதை ,திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் அபிசேக் மஞ்சு நாத்




சபாஷ்  டைரக்டர்

1 ஒரே வங்கி லொக்கேசனில்   10 பேரை வைத்து  முழுப்படத்தையும் முடித்த சாமார்த்தியம்

2   ராபரி திரில்லர் படத்தில் சாமார்த்தியமாக காதலை. நுழைத்த விதம்

3 முதல் பாதியில் ஒர்க் அவுட் ஆன காமெடி சீக்வன்ஸ்


  ரசித்த  வசனங்கள் 


1தீப்பெட்டி இருந்தாதான் பீடி ,சிகரெட்க்கு மதிப்பு.ரவுடி ,திருடன் இருந்தாதான் போலீஸ்க்கு மதிப்பு

2  அது ரப்பர்ஸ் இல்லை.ராபர்ஸ்

3 லாக்கரை ஓப்பன் பண்ணு

அது ஆல்ரெடி ஓப்பன் ல தான் இருக்கு


4 இந்தத்துப்பாக்கி ரேஷன் கடைல வாங்குனதா?

5. கொள்ளையர்கள் என்ன டிமாண்ட்  பண்ணி இருக்காஙக?


பிச்சைக்காரப்பசஙக.சாப்பாடு வேணுமாம்.

6  தூங்கிட்டு இருந்த சிங்கத்தைத்தட்டி எழுப்பினா என்ன ஆகும்?

ஒண்ணும் ஆகாது,சிங்கம் எந்திரிக்கும்


7  நான் சிங்கம் இல்லை,கரடி.என் காதலி சொல்வா

8  எனக்கு இன்ஸ் டா வில் 10 லட்சம் பாலோயர்ஸ் இருக்காஙக


அவ்ளோ பேரா வேலை வெட்டி இல்லாமல் இருக்காஙக ?

9  நான் கேஷியர்

இந்த பேங்க்ல கேஷே இல்லை.எதுக்கு கேசியர்?


10 என் பேரு கனகராஜ் தான் என்பது உனக்கு எப்படித்தெரியும்?


இந்தக்கனகராஜை சீண்டாதீங்கன்னு நீங்கதானே பஞ்ச் டயலாக் பேசுனீங்க?


11 இந்தத்துப்பாக்கி விலை ரூ 30,000 தானா? ரொம்ப சீப்பா இருக்கே?

ஒரு நாள் வாடகை


12 பேங்க் கொள்ளை ஏன் நியூஸ் ல வர்லை ?

இப்ப யாரு நியூஸ் பார்க்கறாங்க?எல்லாம் ரீல்ஸ் தான் பார்க்கறாங்க


13 ஒரு போலீசை விட ,லாயரை விட அதிகமா யோசிச்சாதான் பிரஸ் ரிப்போர்ட்டர் ஆக முடியும் 

14  மக்கள் பணம் சம்பாதிக்கக்கஷ்டப்படறாங்க.பணக்காரஙக பணத்தைப்பாதுகாக்கக்கஷ்டப்படறாங்க


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 கோடிக்கணக்கான பணத்தைப்பதுக்கி வைக்கும் அரசியல்வாதிகள் அதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளே செய்து வைக்கவில்லையே? பேங்க் மேனேஜரே அபேஸ் செய்தால் என்ன செய்வாங்க?

2  முதல்வர் லெவலில் அந்தக்கறுப்புப்பணத்தில் சம்பந்தம் இருக்கும்போது ஒரு சாதா இன்ஸ்பெக்டர் மட்டும் டீல் செய்வது நம்ப முடியவில்லை.


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -13+ குடும்பத்துடன் பார்க்கலாம்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  முதல் பாதி காமெடி ,கலாட்டா,பின் பாதி ராபரி திரில்லிங் என பரபரப்பாகப்போகிறது.பார்க்கலாம்.ரேட்டிங்க் 2.25 /5



Bank of Bhagyalakshmi
Theatrical release poster
Directed byAbhishek Manjunath
Written byAbhishek Manjunath
Screenplay byAbhishek Manjunath
Story byAbhishek Manjunath
Produced byH. K. Prakash
StarringDheekshith Shetty
Brinda Acharya
CinematographyAbhishek G. Kasaragod
Edited byTejas R
Music byJudah Sandhy
Production
company
Release date
  • 28 November 2025
Running time
142 minutes
CountryIndia
LanguageKannada

Thursday, February 05, 2026

THE BIG FAKE (2026)- ஆங்கிலம்-சினிமா விமர்சனம் (க்ரைம் ட்ராமா)@நெட்பிளிக்ஸ்

             

        2026ம் ஆண்டு நெட் பிளிக்ஸ் தயாரிப்பாக நேரடியாக நெட் பிளிக்சில் 23/1/2026 முதல்  வெளியான படம் இது  

1970 களில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் திரைக்கதை அமைக்கப்பட்ட படம் இது.      ஆண்ட்டோனியோ டோனி சிச்சியாரெல்லி  1948ல் இத்தாலியில் பிறந்தான்.1970ல் இவன் சின்ன சின்ன க்ரைம்களில் ஈடுபட்டான்.அவனது வாழ்க்கை சம்பவங்களிலிருந்து தொகுக்கப்பட்ட சம்பவங்கள் தான் இதன் திரைக்கதை.


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் மிகச்சிறந்த ஓவியன்.பென்சில் டிராயிங்க்,பெயிண்ட்டிங்க் உட்பட பல்வேறு ஓவியத்திறமை கொண்டவன்.இவன் வீடு முழுக்க ஓவியங்களாலும்,பெயிண்ட்டிங்க்ஸ் கலெக்சன்களாலும் நிரம்பி இருக்கும்.ஆனால் இவ்வளவு திறமை இருந்தும் இவனது திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வில்லையே என்ற மனக்குறை இவனுக்கு உண்டு.


நாயகி ஒரு ஆர்ட் கேலரி வைத்திருக்கிறாள்.ஒரு முறை நாயகன் வீட்டுக்கு  வருகிறாள்.அவனது அசாத்தியமான ஓவியத்திறமை கண்டு வியக்கிறாள்.

ஒரு புகழ் பெற்ற ஓவியத்தைக்காட்டி இதே போல் போலியாக ஒரு ஓவொயத்தை வரைந்து தர முடியுமா? எனக்கேட்கிறாள்.குரு சிஷ்யன் படத்தில் ரஜினி காமெடியாக சொல்வாரே?இதெல்லாம் ஒரு பூட்டா?ஜூ ஜூபி மேட்டர்  என்பாரே அதே போல் நாயகன் அசால்ட் ஆக அச்சு அசலாக அந்த ஓவியத்தை வரைந்து தருகிறான்.


நாயகி பிரமித்து விடுகிறாள்.லட்சக்கணக்கான ரூபாய் விலைக்கு அது சேல்ஸ் ஆகிறது.நாயகிக்கு அந்தப்பணத்தில் 30% கிடைக்கிறது.நாயகனுக்கு அவள் 10% தருகிறாள்.


பின் இதுவே வழக்கம் ஆகிறது.புகழ் பெற்ற ஓவியங்களின் மாதிரியை நாயகி தர நாயகன்  அதை வரைய இருவரும் செல்வத்தில் கொழிக்கிறார்கள்.

நாயகன் நாயகியிடம் நாம் திருமணம் செய்து கொள்வோமா?எனக்கேட்கிறான்.ஆனால் நாயகி எனக்குக்காதல் ,திருமணம் இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லை என நாயகனின் காதலை நிராகரிக்கிறாள்.


ஆனாலும் இருவரும் நெருக்கமாகப்பழகுகின்றனர்.நாயகி கர்ப்பம் ஆகிறார்.


இந்த மாதிரி வாழ்க்கை சுமூகமாகப்போய்க்கொண்டிருக்கும்போது ஒரு கேங்க்ஸ்டர் கும்பல்  நாயகனை அணுகுகிறது.போலியான டாகுமெண்ட்ஸ்,போலி பாஸ்போர்ட் போன்றவை தயாரிக்க நாயகனின் உதவியை நாடுகிறது.


நாயகனின் போக்கு நாயகிக்குப்பிடிக்கவில்லை.நாயகனை விட்டுப்பிரிகிறாள். 

புது கேங்க்ஸ்டர் குழுவின் சகவாசத்துக்குப்பின் நாயகனின் நெருங்கிய நண்பன் கொலை செய்யப்படுகிறான்.இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை.


நாயகன் ஆக பியட்ரோ காஸ்ட்டலிட்டோ பிரமாதமாக நடித்திருக்கிறார்.அவரது கெட்டப்பும் ,உடல் மொழியும் அருமை.

நாயகி ஆக ஜூலியா மைக்கேலினி  அழகுப்பதுமையாக வருகிறார்.பிரேக்கப் செய்து பிரியும் காட்சியில் சோக நடிப்பை வழஙகி இருக்கிறார்.

வில்லன்களாக ,நண்பர்களாக நடித்த அனைவருமே அவரவர் பாத்திரஙகளை சரியாக ஏற்று நடித்திருக்கிறார்கள்.

எமானுவேல் பாஸ்குட் தான் ஒளிப்பதிவு.அந்தக்கால கலர் டோனை சரியாக  செட் செய்து இருக்கிறார்.

பின்னணி இசை ,எடிட்டிஙக்,ஆர்ட் டைரக்சன்  போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் குட்

ஸ்டெபனோ  லோடோவிச்சி  தான் இயக்கம்



சபாஷ்  டைரக்டர்

1 உண்மைக்கதை என்பதால் காட்சிகளில் ஒரு நம்பகத்தன்மை

2 க்ரைம் ட்ராமாவாக இருந்தாலும் நட்பு,காதல் செண்ட்டிமெண்ட் சீன்கள்  நிறைத்து வைத்தது


  ரசித்த  வசனங்கள் 

1 அன்பு தான் வலிமையான ஆயுதம்

2 புரளி என்பது பேய் மாதிரி.தரைல நிக்காம சுத்திக்கிட்டே இருந்தாதான் நம்புவாஙக

3 மறுபடி எதுக்கு இங்கே வந்திருக்கே?

உன் கிட்டே மன்னிப்புக்கேட்க


உலகில் உள்ள எல்லா மன்னிப்புகளையும் கொண்டு வந்து கொட்டினாலும் பத்தாது

4 இந்த ஒரிஜினல் டிராயிங்க் மாதிரியே வரைய முடியுமா?

ஒரிஜினலை விட சிறப்பா வரைவேன்


5.  உன் கார் எங்கே?


காரா? என் கிட்டே சைக்கிள் தான் இருக்கு.

அப்போ திருட்டு பயம் இல்லை



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகியுடன் உண்மையான காதலில் இருப்பதாக சொல்லும் நாயகன் இன்னொரு பெண்ணுடனும் நெருக்கமாக இருப்பது எப்படி?

2 நாயகன் ,,நாயகி பிரிவுக்குப்பின் திரைக்கதை படுத்து விடுகிறது.நம்மைப்படுத்தி எடுக்கிறது

3 வில்லன் கும்பல் நாயகனைக்கொலை செய்ய வாய்ப்புக்கிடைத்தும் அவன் கைகளை மட்டும் தாக்கி ஓவியம் வரையாமல் செய்வது நம்ப முடியவில்லை.எதுக்கு இரக்கம் காட்டனும்?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  உண்மை சம்பவங்கள் கொண்ட க்ரைம் ட்ராமா ரசிகர்கள் பார்க்கலாம்.ஒரே ஒரு 18+ காட்சி இருக்கிறது.ரேட்டிங்க் 2.25 /5

Wednesday, February 04, 2026

VALATHU VASHATHE KALLAN (2026) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( க்ரைம் திரில்லர் )

                 


             திரிஷ்யம்  (பாபநாசம் ) படத்தின்  மெகா ஹிட்டுக்குப்பின் அதன் இயக்குனர் ஜீத்து   ஜோசப்க்கு ஒரு பிராண்ட் வேல்யூ உருவாகி விட்டது . அவர்  படத்தில்   வரும் க்ளைமாக்ஸ்  டிவிஸ்ட் க்காக  கை  தட்டும் ஒரு ஆடியன்ஸ்  க்ரூப் உருவாகி விட்டது . அப்படிப்பட்ட இயக்குனர்  இயக்கத்தில்  லேட்டஸ்ட்  ஆக  30/1/2026 முதல்  திரை அரங்குகளில்  வெளியாகி  இருக்கும் படம் தான் வலது  வசத்தே  கள்ளன் ( நம் அருகிலேயே   திருடன் ). கேரளாவில்  மட்டும் அல்லாமல்  தமிழகத்திலும்  ரிலீஸ் ஆகி இருக்கும்  இந்தப்படம் ஆங்கில  சப்  டைட்டிலுடன்  காணக்கிடைக்கிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன்  ஒரு போலீஸ்  சர்க்கிள்  இன்ஸ்பெக்ட்டர் . இவர்  ஊழல்  கறை  படிந் தவர் . பாதிக்கப்பட்ட   நபர்கள்  போலீஸ்  ஸ்டேசனில்  வந்து  புகார்  கொடுக்கும்போது  குற்றம்  செய்தவர்  செல்வாக்கு மிக்கவர் ஆக இருந்தால்  அவரிடம்  லஞ்சம்  பெற்று அவரைக்காப்பாற்றி விடுபவர் . வில்லனுக்கு  ஒரு மகன்  இருக்கிறான் . அவன்  அப்பா பேச்சைக்கேட்காமல் , அப்பாவை மதிக்காமல்  வளர்பவன். வில்லனின்  மனைவி  குழந் தையைப்பிரசவித்தவுடன் இறந்து விடுவதால்   ஒரு வித  வெறுப்புடன்  தான்   வில்லன் தன மகனை வளர்க்கிறான் 


 நாயகன்  தன மனைவி , மகள்   உடன் ஒரு சந்தோஷமான வாழ்க்கை நடத்தி வருகிறான் . நாயகனின்  மகள்   காணாமல்  போக  அது பற்றி  புகார்  தர  நாயகன்  போலீஸ்   ஸ்டேஷன்  வருகிறான் .அங்கே  வில்லனைப்பார்க்கிறான் . தன  மகள்   காணாமல்   போனதற்கு  வில்லன் எதோ ஒரு வகையில் காரணம்  என்பதை  நாயகன் கண்டு  பிடிக்கிறான் .


 வில்லனின்  மகனைக்கடத்தி  ஒரு இடத்தில் அடைத்து   விட்டு   வில்லனுக்கு  ஒரு வீடியோ  அனுப்புகிறான் . அதில்  நீ  இதுவரை செய்த  குற்றங்களை  ஒப்புக்கொண்டு  சரண்டர்  ஆகி விட் டால்  உன்  மகனை உயிருடன்  பார்க்க முடியும்  என   தகவல் அனுப்பி  விட்டு நாயகன்  விஷம்   குடித்து  தற்கொலை செய்து  கொள்கிறான்.


இதற்குப்பின்   வில்லன்  தன மகனை உயிருடன் மீட்டானா? என்பது மீதி திரைக்கதை  


வில்லன் ஆக பிஜூ மேனன்  படம்  முழுக்க பிரேம் பை  பிரேம்   தன வில்லத்தன நடிப்பால்  நம் மனதை ஆக்ரமிக்கிறார் .மகனிடம்  அவர் வைத்திருக்கும்   பாசம் , அவன் அடங்காமல்  இருப்பது   எல்லாம் கச்சிதமாக சொல்லப்பட்டிருக்கிறது 


 நாயகன் ஆக  ஜோ ஜூ ஜார்ஜ்   கெஸ்ட்   ரோலில்   வருகிறார் . சிறிது  நேரமே   வந்தாலும்  நம் மனதில் தங்கி விடுகிறார் . நாயகனின்   மனைவி ஆக   லீனா   கச்சிதம் மற்ற   அனைத்துக்கேரக் டர்களும்  கச்சிதமாக  நடித்து இருக்கிறார்கள் 

விஷ்ணு   ஷியாமின்  இசை  கனகச்சிதம் . குறிப்பாக பின்னணி இசையில்   டெம்ப்போ  ஏற்றுகிறார் .சதீஷ்  குருப்பின்  ஒளிப்பதிவு  அருமை . வி எஸ்   விநாயக்கின்  எடிட்டிங்கில்  படம் 135  நிமிடங்கள்  ஓடுகிறது . இடை  வேளை க்குப்பின்   வரும்  ஒரு மணி நேரம்  ஸீட் எட்ஜ்  திரில்லர் தான் . கதை , திரைக்கதை  அமைத்து   இயக்கி  இருப்பவர்   ஜீத்து ஜோசப்


சபாஷ்  டைரக்டர்

1  பிள்ளை  வளர்ப்பு  எப்படி  இருக்கணும்  என்ற  நல்ல  மெசேஜ்  சொல்லப்பட் ட விதம் 

2  ஓப்பனிங்க்  சீனில்  போலீஸ்   ஸ் டே சனில்  பாதிக்கப்பட் ட  மாணவி   தன அம்மாவுடன் வந்து புகார் கொடுக்க வர  வில்லன்  பழியை  அந்த மாணவி மீதே  சுமத்தி  கேஸை  பதிவு  செய்யாமல் திருப்பி அனுப்பும்  சீன பரபரப்பு 

3  பொதுவாக  பெண்  குழ ந்தைகளை  எப்படிப்பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்று  சொல்வார்கள். இதில் அந்த குழந்தையை   எப்படி வளர்க்க வேண்டும் என்று பேரண்ட்டிங்க்  பற்றி   சொன்ன விதம் அருமை 


4   படத்தின்   பெரும்பாலான காட் சிகள்  ஒரே  ஒரு போலீஸ்  ஸ் டேசனில்   நடப்பதாக   சொல்லப்பட்டு இருப்பதால்   லோ  பட்ஜெட் படம் இது 


5  கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்    அதிகாரிக்கு ஒரு பிரச்சனை என்றதும்   எப்படி  சக  போலீஸ்  ஆபீசர்ஸ்   ஒத்துழைப்பு தருகிறார்கள் எனக்காட்டிய விதம் 



  ரசித்த  வசனங்கள் 

 1  பெற்றவர்களிடம்  மரியாதையாக  நடந்து கொள்ளும் பிள்ளைகள் இப்போது அபூர்வம்,


2   பிள்ளை வளர்ப்பு ரொம்ப முக்கியம் , கண்டிக்க வேண்டிய வயதில் கண்டித்து நம் கட்டுப்பாட்டில் பிள்ளைகளை வளர்க்கணும் 


3  குற்றவாளிகளில்  இரு வகை , மூளை  பிசகுவதால்  பிறக்கும்போதே குற்றவாளிகளாகப்பிறப்பவர்கள் . சந்தர்ப்ப சூழ் நிலைகளால் குற்றவாளிகளாக  ஆக்கப்படுபவர்கள் 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகன்  விஷம்  குடித்து விட்டதாக  சொன்னதும்   வில்லன்  உடனே  அவனை ஆஸ்பிடலில்  அட்மிட்  செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . வில்லனின்  மகனை  நாயகன் அடைத்து  வைத்த  இடம் நாயகனுக்கு மட்டுமே தெரியும் . அப்படி இருக்க  நாயகனை  சாக விடலாமா?போலீஸ்  ஸ்டேசனில்  அத்தனை   போலீஸ்   இருந்தும்  யாரும் ஆம்புலன்சுக்கு போன் செய்ய முயற்சிக்க வில்லை ., இது ஏன் ?

2   வில்லனின்  மகன்  ஒரு பெட்டிக்குள் அடைக்கப்பட்டு  அவனிடம்  ஒரு பேசிக் மாடல்  செல் போன்  இருப்பது  எல்லாம் 2010ம் ஆண்டில்  வெளிவந்த  பரீடு(BURRIED)   ஹாலிவுட்  படத்தில்  இருந்து  எடுத்த்திருக்கிறார்கள் 


3   கதையில்  பாதிக்கப்பட்ட  நல்லவர்கள்  எல்லாரும்  கொலை செய்யப்படுகிறார்கள் , அல்லது   தற்கொலை செய்து கொள்கிறார்கள் . இது  நெகடிவ்  எனர்ஜி யைப்பரப்புவது போல் இருக்கிறது 


4   வில்லனின்  மகனின் உயிருக்கு ஆபத்து , அவனை  எப்படிக்காப்பாற்றப்போகிறார்கள் ?என்பது  தான்  பின் பாதி திரைக்கதையின்  விறுவிறுப்பு .ஆனால்   வில்லனும்  கெட்டவன் , வில்லனின்  மகனும்  கெட்டவன் என்பதால்  நமக்கு  அதில் ஆர்வம்  இல்லை 


5  க்ளைமாக்சில்  போன்  நெம்பர்ஸை  வைத்து  வில்லன்  கண்டு பிடிக்கும்  ஒரு விஷயம் 2001 ல்  வெளி வந்த எ  பியூட்டிபுல்  மைண்ட்( A BEAUTIFUL MIND )  படத்தில்  இருந்து  இன்ஸ்பயர்  ஆகி இருக்கிறார்கள் 



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+  குடும்பத்துடன்  பார்க்கலாம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - திரிஷ்யம்  லெவலுக்குப்பிரமாதமான  படம் எல்லாம் இல்லை என்றாலும்  டீசண்ட் ஆன ஒரு க்ரைம் திரில்லர் என்ற அளவில் பார்க்க வேண்டிய படம் தான்  இது ., ரேட்டிங்க்  3 / 5 


Theatrical release poster
Directed byJeethu Joseph
Written byDinu Thomas Eelan
Produced byShaji Nadesan
Starring
CinematographySatheesh Kurup
Edited byV. S. Vinayak
Music byVishnu Shyam
Production
companies
  • August Cinema
  • Bedtime Stories
  • Cineholis
Distributed byGoodwill Entertainments
Release date
  • 30 January 2026
Running time
135 minutes[1]
CountryIndia
LanguageMalayalam

Tuesday, February 03, 2026

THE RIP (2026)-அமெரிக்கன் மூவி-சினிமா விமர்சனம் (க்ரைம் ஆக்சன் திரில்லர் @நெட் பிளிக்ஸ்

                 

             16/1/2026 முதல் நெட் பிளிக்ஸ் ரிலீஸ் ஆக நேரடியாக ஓடிடி ரிலீஸ் ஆக வந்த படம் இது.உண்மை சம்பவத்தை ஒட்டி திரைக்கதை அமைக்கப்பட்ட இந்தப்படம் 100 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் ,தமிழ் டப்பிஙகில் கிடைக்கிறது


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்,நாயகி,நாயகியின் காதலன் ,நாயகனின் தம்பி ,வில்லன் இவர்கள் அனைவரும் அரசுப்பணியில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவில் பணி பிரிகிறார்கள்.நாயகி தான் அந்த டீமின் கேப்டன்.


ஒரு வீட்டில் 2 கோடி டாலர் மதிப்பிலான கறுப்புப்பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நாயகிக்கு தகவல் கிடைக்கிறது.நாயகி தனியாக அந்த இடத்துக்குப்போக முயல்கையில் அந்தப்பணத்தைக்களவாட திட்டம் போட்ட வில்லன் இன்னொரு ஆளின் உதவியோடு நாயகியைக்கொலை செய்து விடுகிறான்.


விசாரணை நடக்கிறது.நாயகன் ,நாயகியின் காதலன் இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சந்தேகிக்கின்றனர்.உடன் பணிபுரியும் நபர் தான் வில்லன் என்பதும் அந்த வில்லன் யார் என்பதும் இருவருக்கும் தெரியாது.


இறக்கும் முன் நாயகி நாயகனுக்கு பணம் இருக்கும் இடம் பற்றி செல்போனில் தகவல் அனுப்பு இருந்தாள்.அதன் அடிப்படையில் நாயகன் தலைமையில் ஒரு டீம் களம் இறஙகுகிறது.அந்த டீமில் வில்லனும் இருப்பது யாருக்கும் தெரியாது.

அந்த குறிப்பிட்ட வீட்டை முற்றுகை இட்ட அந்த டீம் அங்கே ஒரு பெண் மட்டும் தனிமையில் இருப்பதைப்பார்க்கிறார்கள்.அவளிடம் விசாரித்தால் அவளுக்கு விபரம் எதுவும் தெரியவில்லை.இது என் பாட்டி வீடு.அவர் இறந்து விட்டார் ,நான் தான் இப்போது தனியாக இருக்கிறேன் என்கிறாள்.


வீட்டை சோதனை இட்ட போது பண்டல் பண்டல் ஆக கறுப்புப்பணம் பிடிபடுகிறது.

இப்போது நாயகன் யார் வில்லன் என்பதைக்கண்டு பிடிக்க ஒரு ட்ரிக் செய்கிறான்.அந்த ட்ரிக் என்ன?அதில் நாயகன் வெற்றி பெற்றானா? என்பது மிச்சம் மீதித்திரைக்கதை.


நாயகி ஆக கெஸ்ட் ரோலில் வருகிறார் லினா எஸ்கோ.இவர் இயக்குநர் கம் தயாரிப்பாளரும் கூட (இந்தப்படத்துக்கு அல்ல).

நாயகன்,வில்லன் ,நாயகியின் காதலன் மூவர் நடிப்பும் கச்சிதம்.நாயகனுக்கும்,நாயகியின் காதலனுக்கும் நடக்கும் ஆக்சன் சீக்வன்ஸ் அருமை.மற்ற அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.


கறுப்புப்பணம் இருக்கும் வீட்டில் வசிக்கும் பெண்ணாக வருபவர் இந்தியப்பெண்ணின் சாயலில் இருப்பது வியப்பு. 

மைக்கேல் மெக்ரேல் + ஜோ காமன் இருவரும் இணைந்து கதை எழுத  ஜோ காமன் தனித்து திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார்.

ஒளிப்பதிவு ஜான் மைக்கேல்.பெரும்பாலான படக்காட்சிகள் இரவு நேரத்தில் வருவதால் கேமராமேனுக்கு சவாலான வேலைதான்.

க்ளிண்ட்டன் சார்ட்டர் தான் இசை.பின்னணி இசையில் தேவையான விறுவிறுப்பைக்கொடுத்து இருக்கிறார்.

கெவின்  ஹலெ வின் எடிட்டிஙகில்  படம் 113 நிமிடஙகள் ஓடுகிறது



சபாஷ்  டைரக்டர்

1 ஒரே வீட்டில் ஒரே இரவில் நடக்கும் கைதி  பட டைப் கதை என்பதால் சுவராஸ்யம் கூடுகிறது.அனேகமாக லோகேஷ் கனகராஜ் இதை பட்டி டிங்கரிங் செய்ய வாய்ப்புண்டு

2. வில்லன் யார் என்பதை அறிய நாயகன் பிடிபட்ட பணத்தின் மதிப்பை ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வேறான தொகையைக்கூற  வில்லன் மாட்டும் சீன் குட் ஐடியா

3  கிட்டத்தட்ட 2 மணி நேரப்படம் என்றாலும் எங்கும் போரடிக்கவில்லை


  ரசித்த  வசனங்கள் 

1அதிகாரிகளே திருடர்களாக இருப்பதுதான் பெரும்பாலும் நடக்குது.

2  குட்டையைக்குழப்பி தூண்டிலைப்போட்டால் மீன் சிக்கும்

3  இன்னும் ஒரு சூரிய உதயத்தைப்பார்ப்பதற்காக வாழ் ( இதே டைப் டயலாக்கை அமரர் சுஜாதா தில்சே (உயிரே) படத்தில் எழுதி இருப்பார்.நீ பார்க்கும் கடைசி சூர்யோதயம் இது தான்.


4 எல்லாப்போலீசாரோட மூளையும் ஒண்ணுதான்.நாங்க ஏதோ தப்புப்பண்ணிட்டோம்னு எங்களையே நம்ப   வைக்கற மாதிரி பண்றீஙக


5 பிரார்த்தனைகள் ,நல்ல எண்ணங்கள் இவற்றைப்பணமா மூத்த முடியுமா?


6 எங்க மேல நம்பிக்கை இல்லையா?

பணத்து மேல நம்பிக்கை இல்லை


7 ஒரு போலீசைக்கொல்ல பெரிய விலை கொடுக்கனும்

8 பொய் சொல்வது ஒரு கலை


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 ஓப்பனிங ஷாட்டில் நாயகியை இருவர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தும்போது நாயகி தப்ப வழி பார்க்காமல் செல் போனில் உயர் அதிகாரிக்கு மெசேஜ் அனுப்புகிறாரே?பாதுகாப்பான இடத்தில் ஒளிந்த பின் மெசேஜ் அனுப்பி இருக்கலாமே?


2 கறுப்புப்பணம் பிடிபட்டதும் நாயகன் சக ஊழியர்கள் அனைவரிடமும்  செல் போனை வாங்கிக்கொள்கிறான்.அப்போது வில்லன் ஒரு செல்போனைத்தந்து விட்டு ரகசிய போனை பதுக்கி வைக்கிறான்.நாயகன் எல்லோரையும் செக் செய்திருக்கலாமே?எக்ஸ்ட்ரா போன் யாரிடமாவது இருக்கிறதா?என? (வில்லனைப்பிடிக்க அது தான் டிராப் எனில்  ஹவுஸ் ஓனர் ஆன அந்த லேடியிடம் போன் வாங்கி இருக்கத்தேவை இல்லையே?அவள் தான் கட்டப்பட்டு இருக்கிறாளே?)


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+ அடல்ட் கண்டெண்ட் எதுவும் இல்லை.வார்த்தைப்பிரயோகஙகளில் மட்டும் எல்லை மீறல் உண்டு



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மெதுவாக நகரும்  க்ரைம் ஆக்சன் திரில்லர்.வீச்சு குறைவு,பேச்சு அதிகம்.ஆனால் போர் அடிக்கலை.பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம்.ரேட்டிங்க் 2.75 /5



The Rip
Release poster
Directed byJoe Carnahan
Screenplay byJoe Carnahan
Story by
  • Joe Carnahan[1]
  • Michael McGrale
Produced by
Starring
CinematographyJuan Miguel Azpiroz
Edited byKevin Hale
Music byClinton Shorter
Production
company
Distributed byNetflix
Release date
  • January 16, 2026
Running time
113 minutes[2]
CountryUnited States
LanguageEnglish
Budget$100 million[3]