Monday, May 27, 2024

எலெக்சன் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( பொலிடிக்கல் டிராமா )

       


         2022 ஆம்  ஆண்டு  வெளியான  சேத்து  மான்  என்ற  தரமான  படத்தை  இயக்கிய இயக்குநர்  தமிழ்  +  உறியடி  பாகம் 1  , பாகம்2, ஃபைட்  கிளப்  ஆகிய  படங்களின்  நாயகன்  விஜய்  குமார்  இவர்களது  காம்போவில்  வந்திருக்கும்  ,மாறுபட்ட  பொலிடிக்கல்  டிராமா  இது. தமிழ்  சினிமாவில்  முழுக்க  முழுக்க அரசியல்  அங்கத  படமாக  வந்த  அமைதிப்படை  போல  உள்ளூர்  பஞ்சாயத்துத்தேர்தலை  மிக  விபரமாக காட்டிய  முதல்  படம்  என்ற  பெருமையையும்  இது  பெறுகிறது  


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின்  அப்பா   60  வருடங்களாக  ஒரு  கட்சியில்  அடிமட்டத்தொண்டராக  வேலை  பார்த்தவர் . எந்த  விதமான  பதவிக்கும்  ஆசைப்படாதவர் . கடைசி  வரை  கட்சிப்பணியை  மட்டுமே  கவனித்து  வந்தவர் .நாயகனின்  அப்பாவுக்கு  ஒரு  நண்பர்  உண்டு. அவரும்  அரசியல்  கட்சியிலே  தொண்டர்  தான். அவருக்கு  தேர்தலில்  சீட்  கிடைக்காததால்  சுயேச்சையாக  தேர்தலில்  நின்று  தோற்கிறார். நாயகனின்  அப்பா  நண்பருக்கு  ஆதரவு  தெரிவிக்காமல்  கட்சி  அறிவித்த  வேட்பாளருக்கு  ஆதரவாக  பிரச்சாரம்  செய்ததால்  நண்பர்கள்  இருவருக்குள்ளும் பகை


  நாயகன்  தன்  அப்பாவின்  நண்பரின்  மகளைக்காதலிக்கிறார். ஏற்கனவே  இந்த  அரசியல்  பகையாலும் , ஜாதிப்பிரச்சனையாலும்  காதலுக்கு  பெண்ணின்  அப்பா  ஒத்துக்கொள்ளவில்லை. தன்  மகளுக்கு  வெளிநாட்டு  மாப்பிள்ளையைப்பார்த்து  மணம்  முடிக்கிறார். ஆனால்  அவர்  மகள் அங்கே  போய்  தற்கொலை  செய்து  கொள்கிறாள் ., இந்த  விஷயம்  நாயகனுக்குத்தெரியாது .


நாயகனுக்கு  வேறு  ஒரு  பெண்ணுடன்  திருமணம்  நடக்கிறது. நாயகன் - நாயகி  இருவருக்கும் ஒரு  குழந்தையும்  பிறக்கிறது . நாயகனின்  முன்னாள்  காதலியின்  அப்பா   அரசியல்  தோல்வி , மகள்  இறப்பு  இதனால்  பாதிக்கப்பட்டு உடல் நலம்  குன்றி  பக்கவாதத்தால்  பாதிக்கப்பாட்டு  படுத்த  படுக்கை  ஆகிறார்


 நாயகனின்  முன்னாள்  காதலியின்  அண்ணன்  நாயகனைப்பழி  வாங்கத்திட்டம்  போடுகிறார். நாயகனை  தேர்தலில்  நிற்க  வைத்துத்தோற்கடித்து  அவமானப்படுத்துவதும் ,  கடனாளி  ஆக்குவதும்  தான்  வில்லனின்  திட்டம் 


நாயகனுக்கு    முன்னாள்  காதலி  இறந்ததும்  தெரியாது .  முன்னாள்  காதலியின்  அண்ணன்  தான்  வில்லன் , கூட  இருந்தே  குழி  பறிப்பவன்  என்பதும்  தெரியாது . அரசியல்  ஆர்வமே  இல்லாத  நாயகன்  எப்படி  அரசியலுக்கு  வருகிறார்? பின்  என்ன  நடந்தது  என்பதே  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  விஜய்  குமார் . கோபமான  காட்சிகளில்  ஸ்கோர்  செய்கிறார்.காதல்  காட்சிகளில்   சுமார்  நடிப்பு  தான் . சோகக்காட்சிகளில்  ஓக்கே  ரகம் 


நாயகி  ஆக  , மனைவி  ஆக  அயோத்தி  நாயகி  ப்ரீத்தி  அஸ்ராணி  குடும்பப்பாங்கான  முகத்துடன் , கண்ணியமான  உடைகளுடன்  அக்மார்க்  தமிழகப்பெண்ணாக  நடித்து  மனம்  கவர்கிறார்.இவர்  சும்மா  ஒரு  புன்னகை  புரிந்தாலே  அழகாக  இருக்கிறது 


நாயகனின்  முன்னாள்  காதலி  ஆக   ரிச்சா  ஜோஷி , அதிக  வாய்ப்பில்லை ., ஒரு  டூயட்டும், சில  காட்சிகளும்  தான் . வந்தவரை  ஓக்கே 


நாயகனின்  அப்பாவாக  ஜார்ஜ்  மரியம்  சிறந்த  குணச்சித்திர  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்.ஆனால்  இவருக்கான  போர்சன்  குறைவு , இன்னும்  அதிக  காட்சி களில் வர  விட்டிருக்கலா,ம் 


வில்லன்  ஆக  , கூட  இருந்தே  குழி  பறிப்பவர்  அக  வத்திக்குச்சி  ( 2013)  படத்தின்  நாயகன்  திலீபன்  அருமையான  நடிப்பு , நயவஞ்சக  வில்லத்தனத்தை  நன்கு  வெளிப்படுத்துகிறார்


நாயகனின்  அம்மாவாக  நாச்சியாள்  சுகந்தி  கச்சிதமான  நடிப்பு. இவர்  ஃபேஸ்புக்கில்  நண்பர்  பட்டியலில் இருக்கிறார். 


மகேந்திரன்  ஜெயராஜூ  தான்  ஒளிப்பதிவு .லோ  பட்ஜெட்  படம்  என்பது  தெரியாத  வண்ணம்  சாமார்த்தியமாக  படம்  பிடித்த  விதம்  குட் 


கோவிந்த  வ்சந்தாவின்  இசையில்  இரு  பாடல்கள்  அருமை .ஆனால்  பொலிடிக்கல்  த்ரில்லர்  என்பதால்  மெலோடி  சாங் எடுபடவில்லை 


சி எஸ்  பிரேம்  குமாரின்  எடிட்டிங்கில்  படம்  ஷார்ப்  ஆக  2  மணி  நேரம்  ஓடுகிறது 


சபாஷ்  டைரக்டர்


1  ஒவ்வொரு  ரவுண்டிலும்  லீடிங்  எப்படி  சொல்கிறார்கள்  என்பதை , செல்லாத  ஓட்டு  எப்படி  கணக்கிடப்படுகிறது  என்பதை  இவ்வளவு  டீட்டெய்லிங்காக  எந்த  ஒரு  தமிழ்ப்படத்திலும்  இதுவரை  காட்டப்படவில்லை  என்ற  அளவில்  இது  முக்கியத்துவம்  வாய்ந்த  படமாக  அமைகிறது 


2   பதவி பலத்துக்கு  ஆசைப்பட்டால்  கை  வசம் இருக்கும்  காசெல்லாம்  கரையும் என்ற  நீதி  மனதில்  அழுத்தமாகப்பதியும்  அளவு  அமைந்த  திரைக்கதை 


3   நாயகன் , நாயகி ,நாயகனின்  அம்மா, அப்பா , வில்லன்  என  பெரும்பாலான  நடிகர்  நடிகைகளின்  நடிப்பு  கன  கச்சிதம் 



  ரசித்த  வசனங்கள்  ( அழகிய  பெரியவன் + இயக்குநர்  தமிழ் +  நாயகன்  விஜய்குமார்) 

1  ஒரு  காரியத்தைக்கையில்  எடுக்கும்  முன்பே  இது  ஆகாதுனு  சொல்றவன்  உருப்பட  மாட்டான் 


2  குட்டையைக்குழப்பி  மீன்  பிடிக்க  நினைக்காதே , குட்டைல  மீன்  மட்டுமில்லை , முதலையும்  இருக்கும் 

3   ஓட்டு  தான் நம்ம  ஆயுதம்


4  அரசியலில்  தோற்பதும் ,  ஜெயிப்பதும்  சகஜம்  தான் , ஒரு  தடவை  தோத்ததுக்கே  ஒதுங்கிட்டா  எப்படி ? 


5 வாழ்க்கைல  எல்லாருக்கும்  செகண்ட்  சான்ஸ்  கிடைக்காது , உனக்கு  அது  கிடைச்சிருக்கு . மிஸ்  பண்ணிடாத 


6   உண்மையான  கட்சிக்காரனை  பணத்தால  எடை போடாதீங்க 


7  இல்லாதவன்  கடைசி  வரை  உழைப்பான் , இருப்பவன்  அதை  அறுவடை  செய்வான் 


8  நான்  செய்யலை , நான்  செஞ்சா  பிசிறு  இல்லாம  செய்வேன் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   ஓட்டுக்கு  பணம்  தர  நாயகன்  கந்து  வட்டிக்கு  பணம்  கடன்  வாங்குவது  எல்லாம்  ஓவர் .எம் எல்  ஏ  எலெக்சன்  என்றால்  கூட  சம்பாதித்து  விடலாம் , கவுன்சிலர்  ஆகி  அவ்ளோ  சம்பாதிக்க  முடியுமா? 


2  கவுன்சிலர்  தேர்தலுக்கு  இரண்டாம்  முறையாக  நிற்கும்  நாயகனுக்கு  வேட்பு  மனு  தாக்கல்  செய்யும்போது  வீட்டு  வரி  ரசீது  இருக்க  வேண்டும்  என்பது  தெரியாதா? இன்னொருவர்  சொல்லி  மீண்டும்  வீட்டுக்குப்போய்  எடுத்து  வருகிறார்

3   நாயகனின்  முன்னாள்  காதலி  தற்கொலை  விஷயத்தை  சஸ்பென்சாக  க்ளைமாக்சில்  சொல்லி  இருப்பதற்குப்பதிலாக  கதை  ஓட்டத்திலேயே  சொல்லி  இருக்கலாம்


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  வன்முறை  அதிகம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  தேர்தல் ஸ்பெஷல்  படம்  என்பதால்  ஆண்களை  மட்டுமே  கவரும். ரேட்டிங் 2.75 / 5


தேர்தல்
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்தமிழ்
மூலம் திரைக்கதைதமிழ்
மூலம் கதைதமிழ்
மூலம் உரையாடல்கள்அழகிய பெரியவன்
விஜய் குமார்
தமிழ்
உற்பத்திஆதித்யா
நடித்துள்ளார்
ஒளிப்பதிவுமகேந்திரன் ஜெயராஜூ
திருத்தியவர்சிஎஸ் பிரேம் குமார்
இசைகோவிந்த் வசந்தா
தயாரிப்பு
நிறுவனம்
ரீல் நல்ல படங்கள்
மூலம் விநியோகிக்கப்பட்டதுசக்தி திரைப்பட தொழிற்சாலை
வெளிவரும் தேதி
  • 17 மே 2024
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Sunday, May 26, 2024

பாறை (2003)-தமிழ் -மாகாயானம் (1989)-மலையாளம் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா)

     

  மகாயானம்  படத்தில்  நாயகன்  ஆக  நடித்ததற்காக  மம்முட்டிக்கு  1989 ஆம்  ஆண்டின்   கேரள மாநில  அரசின்   சிறந்த  நடிகர்  விருது கிடைத்தது, கமர்ஷியல்  சக்சஸ் , மீடியாக்கள்  பாராட்டு  ஆகியவற்றை  ஒருங்கே  பெற்ற  இப்படத்தை  கே  எஸ்  ரவிக்குமார்  தமிழில்  ரீமேக்கினார். மம்முட்டி  ரோலில்  சரத்  குமார் , முகேஷ்  ரோலில்  ஜெயராம்  நடித்தார்கள் .  ஆனால்  எதிர்பார்த்த  வெற்றியை  ஏனோ  பெறவில்லை 


சரத் குமார்  கே  எஸ்  ரவிக்குமார்  காம்பினேஷன்  படங்கள் புரியாத  புதிர் (1990), சேரன்  பாண்டியன் (1991) ,ஊர்  மரியாதை (1992)  ,  பேண்டு  மாஸ்டர் (1993)  , நாட்டாமை (1994) ,நட்புக்காக  (1998)  பாட்டாளி (1999) , சமுத்திரம் (2001) , பாறை (2003) ,ஜக்குபாய் (2010)   என  மொத்தம்  10  படங்கள் , இவற்றில்  கடைசி  இரண்டு  படங்கள்  மட்டுமே  சுமாராகப்போன  படங்கள் , மற்றவை  வெற்றிப்படங்கள் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு  லாரி  டிரைவர் , கொஞ்சம்  முன்  கோபி. வாய்  பேசாது , கை  தான்  பேசும். எல்லோரிடமும்  கோபமாகவே  நடந்து  கொள்ளும்  இவர்  தன்  லாரி  கிளீனர்  ஆக  வேலை  செய்யும்  நபரிடம்  மட்டும்  பாசமாகப்பழகுகிறார். அவரும்  இவரை  அண்ணன்  என்றே  அழைத்து  அன்பாகப்பழகுகிறார்


 நாயகனுக்கு  சொந்த  பந்தம்  யாரும்  இல்லை ,  அவருக்கு  என  லட்சியம்  ஏதும்  இல்லை . ஆனால்  நாயகனின்  நண்பரும்  லாரி  க்ளீனரும்  ஆன  நபருக்கு  ஒரு  மனைவி , அம்மா, குழந்தை  உண்டு . எப்போதும்   தான்  ஒரு  சொந்த  வீடு  கட்ட  வேண்டும்  , லைஃபில்  செட்டில்  ஆக  வேண்டும்  என்ற  நினைப்போடும், சேமிப்பில்  முனைப்போடும்  இருப்பவர் 


ஒரு  நாள்  நாயகனின்  நண்பர்  விபத்தில்  இறக்கிறார்.  நாயகன்  அவரது  பிணத்தை  அவர்கள்  வீட்டில்  ஒப்படைக்க  செல்பவர்  அந்த  ஊரிலேயே  தங்குகிறார். நண்பரின்  குடும்பத்துக்கு  உதவி  செய்கிறார். நண்பரின்  லட்சியம்  ஆன  சொந்த  வீடு  கட்டுவதை  இவரே  கையில்  எடுத்து  வீடு  கட்டித்தரும்  முனைப்பில்  இருக்கிறார்


 ஊர்  மக்கள் , வில்லன்  என  எல்லோரும்  நாயகனை   நாயகனின்  நண்பனின்  மனைவியுடன்  இணைத்துத்தப்பாகப்பேசுகிறார்கள் . ஆனால்  கடைசி  வரை  நாயகன்  அண்ணன்  முறையில்  தான்  பழகுகிறார். இறுதியில் வில்லனின்  எண்ணம்  நிறைவேறியதா? நாயகன்  வீடு  கட்டி  முடித்தானா? என்பது  க்ளைமாக்ஸ் 


 நாயகன்  ஆக சரத்  குமார் , கச்சிதமான  நடிப்பு. இறுக்கமான  முகம், எப்போதும்  வாயில்  பீடியுடன்  சுற்றும்  கேரக்டர். அசால்ட்  ஆக  நடித்திருக்கிறார்


 நண்பர்  ஆக  ஜெயராம், காமெடியாக  வந்து  போகிறார். அதிக  காட்சிகள்  இல்லை .இவருக்கு  ஜோடி  ஆக  மீனா  கச்சிதம், மீனாவின்  மாமியார்  ஆக  வடிவுக்கரசி  பொருத்தமான  நடிப்பு  


  நாயகி  ஆக  ரம்யா  கிருஷ்ணண். அதிக  காட்சிகள் இல்லை 


 வில்லன்  ஆக  உதிரிப்பூக்கள்  விஜயன், எடுபுடி  ஆக  மன்சூர்  அலிகான்  வந்து  போகிறார்கள்  , அதிகம்  வாய்ப்பு   இல்லை 


லாரி  ஓனர்  ஆக    வரும்  வினுச்சக்கரவர்த்தி  நடிப்பும், அவரது  கேரக்டர்  டிசைனும்  குட் 

ரமேஷ்  கண்ணா , சிட்டி  பாபு  இருவரும்  காமெடிக்கு , ஆனால்  சிரிப்பு   வரவில்லை 


சபாஷ்  டைரக்டர்


1  திருமணம்  ஆன  பின் சாதித்த  நடிகர்கள்  பட்டியலை  வெளியிட்டு  ஜெயராம்  பேசும்போது  சரத்குமார்   திருமணம் ஆகாமல்  சாதித்த    வாஜ்பாய் , அப்துல்கலாம்  லிஸ்ட்  சொல்லி  விளக்கும்  காட்சி 


ஏரோப்ளான்  பறக்குது  பார்  மேலே   பாட்டுக்கு  ஆடும்  அசோக்  ராஜா  குட் 


சபேஷ்  முரளியின்   இசையில்  ஆறு  பாடல்கள்  . அவற்றில்  இரண்டு  செம  ஹிட்  


செம  ஹிட்  சாங்க்ஸ்


  1  ஏரோப்ளான்  பறக்குது  பார்  மேலே 


2  நான் ஒரு  கனாக்கண்டேன்


3 கண்ணுக்குள்  டிக் டிக் 


4 நண்பனே  நண்பனே


5  வினாயகா வினாயகா  


6  என்  தாய் 


  ரசித்த  வசனங்கள் 


1  நாமெல்லாம்  ஏழைகள் , நம்ம  கிட்டே  கொஞ்சமாப்பணம்  இருந்தாலும்  அதை  அடிக்கடி  எண்ணிப்பார்ப்பது  ஒரு  சுகம்  ( கவுண்ட்டிங்) 


2 வாயாடிப்பொண்ணுக்கே  வாய்ல  ரத்தம்  வர்ற  அளவு  முத்தம்  கொடுத்திருக்கான்


3  உன்  பேரு  பாவாடை , ஆனா  நீ  எப்பவும்  வேட்டி தான்  கட்றே, எப்பவாவது  பாவாடை  கட்டி  இருக்கியா? 


4  சைக்கிள்  கேப்ல  கிடா  வெட்டுவாங்கனு  கேள்விப்பட்டிருக்கேன், இங்கே  சைக்கிளையே  அடிச்சுட்டாங்களே  சின்ன  கேப்ல


5    யாரோ  கம்மலைத்திருடிட்டாங்க ‘


  அய்யய்யோ  நான்  சுடலை 


 நீ  சுடலை  என்பது  தெரியும், ( பேரு  சுடலை )  கம்மலை  சுட்டியா? இல்லையா? அதை  சொல்லு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஜெயராம், சரத்  குமார்  உயிரைக்காப்பாற்றுகிறார்  இதுதான்  சீன். இதைப்படமாக்கிய  விதம்  மிக  மோசம்,    ரோட்டிலேயே  சரத் குமார்  படுத்துத்தூங்குகிறார். லாரி  வருது . ஜெயராம்  வந்து  காப்பாத்தறார். நம்பற  மாதிரியே  இல்லை 


2  ஜெயராம்  விபத்தில்  இறங்கும்  காட்சியும்  மனதைத்தொடும்  அளவில்  படம் பிடிக்காமல்  ஏனோ தானோ  என  அசால்ட்  ஆகப்படம்  பிடிக்கப்பட்டிருந்தது


3  வில்லன்  விஜயன்  கேரக்டர்  டிசைன்  மகா  பலவீனம்.  வில்லனிடம்  வேலை செய்யும்  ஐடியாக்களை  எல்லாம்  கேட்கிறார். பத்துப்பைசாவுக்குப்பிரயோஜனம்  இல்லாத  ஐடியாக்கள் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   சுமாரான  படம்  தான், சரத்  குமார்  நடிப்புக்காகவும், ஏரோப்ளான்  பாட்டுக்காகவும்  பார்க்கலாம். ரேட்டிங் 2.25 / 5


Paarai
DVD cover
Directed byK. S. Ravikumar
Story byA. K. Lohithadas
Based onMahayanam (Malayalam)
Produced byS.S.Durairaj
StarringSarath Kumar
Meena
Jayaram
Ramya Krishnan
CinematographyS. Sriram
Edited byK. Thanikachalam
Music bySabesh–Murali
Production
company
Mass Movie Makers
Release date
  • 13 June 2003
Running time
170 minutes
CountryIndia
LanguageTamil

Saturday, May 25, 2024

கடைசி விவசாயி (2022) - தமிழ் - சினிமா விமர்சனம் ( உலக சினிமா ) @ சோனி லைவ்

     

    விஜய்  சேதுபதியின்  சொந்தப்படம்   என்ற முத்திரையோடும்  காக்கா  முட்டை (2014) , குற்றமே  தண்டனை (2016) , ஆண்டவன்  கட்டளை(2016)  போன்ற  தரமான  படங்களை  இயக்கிய இயக்குநர்  எம்  மணிகண்டனின் படைப்பு  என்ற அடையாளத்தோடும்  வெளிவந்திருக்கும்  சர்வதேச தரம்  மிக  ஒரு  உலக  சினிமா  தான்  இந்த  கடைசி  விவசாயி.


 சிறந்த  இயக்குநர் , சிறந்த  படம் , சிறந்த நடிகர்  என   3  தேசிய  விருதுகளை  வென்ற  படம்  இது         


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  80  வ்யதான  ஒரு  விவசாயி. சிறு  துண்டு  நிலத்தை  சொந்தமாக  வைத்திருப்பவர்.அதில் விவசாயம்  செய்து  வாழ்க்கை  நடத்தி  வருபவர். அந்த  கிராமத்தில்  உள்ள  அனைத்து  விளை  நிலங்களையும்  சில  ஆசாமிகள்    வலுக்கட்டாயமாக  வாங்கி  பட்டா  போட்டு  பிளாட்  ஆக்க  திட்டம்  போட்டு  இருக்கிறார்கள்  . கடைசியில்  மிஞ்சி  இருப்பது  நாயகனின்  நிலம்  மட்டும்  தான்.அதையும்  விலை  பேச  முயற்சித்தும்  நாயகன்  அந்த  நிலத்தை  விற்க  மறுக்கிறார்


நாயகனின்  கிராமத்தில்  மழை  இல்லை . இதற்குக்காரணம்  குல  தெய்வத்தின்  கோபம்  தான். சில  வருடங்களாக  குல  தெய்வ  பூஜையே  நிகழவில்லை ,அதன்  காரணமாகத்தான்  இப்படி  என  கிராம  மக்கள்  நினைக்கிறார்கள் . குல  தெய்வ  பூஜைக்கு  விளை  நெல்  தேவை. அதற்கு  நாயகனிடம்  உதவி  கேட்கிறார்கள் . நாயகனும்  சம்மதிக்கிறார்


நிலத்தை  வாங்க  நினைத்து  ஏமாந்த  வில்லன்  கூட்டம்  நாயகனை  ஒரு  பொய்க்கேசில்  சிக்க  வைத்து  கோர்ட்டுக்கு  இழுக்கிறார்கள் . இதற்குப்பின்  நிகழும்  சுவராஸ்யமான  சம்பவங்களே  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக   அமரர்  நல்லாண்டி  பிரமாதப்படுத்தி  இருக்கிறார். நிஜ  விவசாயி  ஆன  இவரை  விவசாயி  ஆகவே  வாழவிட்டு  படப்பிடிப்பு  நடத்தி  இருக்கிறார்கள் . ஒரு  காட்சி  கூட  ஓவர்  ஆக்டிங்  இல்லை . ஒரு  காட்சியில்  கூட  நடிப்பு போல  தோன்றவில்லை 

கிராமத்தில்  வாழும்  மற்ற  மனிதர்களாக  பெரும்பாலும்  புதுமுகங்களையே  நடிக்க  வைத்திருப்பது சிறப்பு 


 கோர்ட்டில்  ஜட்ஜ்  ஆக  வரும்   ரேய்ச்சல்  ரெபேக்கோ  கண்  கலங்க  வைக்கும்  நடிப்பு .. பொய்க்கேஸ்  போட்ட  போலீஸ்  மீது  காட்டும் கோபம்  ஆகட்டும், நாயகனுக்கு  நேர்ந்த  கதியைக்கண்டு  கலங்குவதாகட்டும்  அபாரமான  நடிப்பு . சமீப  கால  படங்களில்  ஜட்ஜ்  கேரக்டர்  டிசைன்  அதகளம்  செய்கிறார்கள், இன்னும்  சில  காட்சிகள்  ஜட்ஜ்  வரமாட்டாரா? என  ஏங்க  வைக்கும்  அளவு  அந்த  பாத்திரப்படைப்பும், அவரது  நடிப்பும்  மின்னுகிறது 


மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லை  என்றாலும்  ஓரளவு  சம்பந்தப்படுத்தி  விஜய்  சேதுபதி , யோகிபாபு  கேரக்டர்கள்  திணிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால்  வேறு  வழி  இல்லை . இந்த  மாதிரி  தரமான    படத்துக்கு  வணிக  ரீதியாக  ஏதாவது  அட்ராக்சன்  வேண்டும், ஸ்டார்  வேல்யூ    தேவை  என்பதால்  அதை  விட்டு  விடலாம்


 ஆனாலும்  அந்த  மனநலன்  பாதிக்கபப்ட்ட  கேரக்டரில்  கூட  விஜய்  சேதுபதி  முத்திரை  பதிக்கிறார். 


 வழக்கமாக  ஓவராக  சலம்பல்  செய்யும்  யோகிபாபு இதில்  அடக்கி  வாசித்து  இருக்கிறார்.


 போலீஸ்  கான்ஸ்டபிளாக  வரும்  அந்த  கண்ணாடிக்காரர்  நடிப்பு யதார்த்தம், அவரும்  இப்போது  இறந்து  விட்டார்  என  நினைக்கிறேன்


  பி  அஜித்  குமாரின்  எடிட்டிங்கில்  படம்  இரண்டரை  மணி  நேரம்  ஓடுகிறது . ஒரு  கலைப்படைப்பாக  இருந்தாலும்   கமர்ஷியல்  படம்  போல  சுவராஸ்யமாகக்காட்சிகள்  நகர்வது  படத்தின்  பெரிய  பலம் 


ஒளிப்பதிவும்  இயக்குநர்  மணி  கண்டன்  தான் .கிராமிய  அழகை  மிக    யதார்த்தமாகப்பதிவு  செய்து  இருக்கிறார். இசை  சந்தோஷ்  நாராயணன் ,  ரிச்சர்டு  ஹார்வே . பின்னணி  இசை  அருமை .இரண்டு  பாடலக்ள்  ரம்மியமாகப்படம்  ஆக்கப்பட்டுள்ளன


சபாஷ்  டைரக்டர்


1    கோர்ட்டில்  கேஸ்  நடந்து  கொண்டிருக்கும்போது  நாயகன்  அசால்ட்  ஆக  ஜட்ஜ்  அம்மாவிடம்   நீங்க  பாட்டுக்குப்பேசிட்டு  இருங்க , நான்  வயக்காட்டுக்குப்போய்  நெல்லுக்குத்தண்ணீர்  பாய்ச்சிட்டு  வந்துடறேன்  என  பேசுவது  குபீர்  சிரிப்பு . அவரது  வெள்ளந்தித்தனம் , மனிதாபிமானம் ,விவசாயக்கடமை  அனைத்தையும்  உணர்ந்து  ஜட்ஜ்  கொடுக்கும்  ரீ  ஆக்சன்  அட்டகாசம் 


2   மயில்களைக்கொன்னு  புதைச்சாரா?  புதைச்சாரா? என  அழுத்தம்  திருத்தமாக  ஜட்ஜ்  கேட்க  சாட்சி  தடுமாறி  போலீசைப்பார்த்தபடி  உண்மையை  உளறும்  காட்சி  அருமை 


3   ஜட்ஜ்  ஆக  வரும் ரேய்ச்சல்  ரெபோக்கோவின்  உடல்  மொழி  பிரமாதம். ஜட்ஜ்  ஆக  கண்டிப்புக்காட்டாமல்  ஒரு  மனுஷி  ஆக  நாயகன்  மேல்  அவர்  காட்டும்  பரிவு  வியக்க  வைக்கிறது . தொடர்ந்து  தெனாவெட்டான    நீதிபதிகளையே  சினிமாக்களில்  பார்த்த  நமக்கு  இது  புதுசு .  வித்தியாசமான  அனுபவம் 


4  கோர்ட்  காட்சிகளை  வடிவமைப்பதில்  இயக்குநர்  மணிகண்டன்  ஒரு  விற்பன்னர் . இதை  ஏற்கனவே  ஆண்டவன்  கட்டளை  யில்  நிரூபித்திருந்தார் . இதிலும்  மாறுபட்ட  யதார்த்தமான  கோர்ட்    காட்சிகள்  அப்ளாஸ்  அள்ளுகின்றன


5  கோர்ட்  வாசலில்  நாயகன்  பேச்சு  மூச்சில்லாமல்  படுத்துக்கிடக்க  ஜட்ஜ்  பதறி  ஆம்புலன்சை  கூப்பிடுங்க  என்று  ஆர்டர்  போடுவதும்  அதைத்தொடர்ந்து  வரும்  பரப்ரப்பான  காட்சிகளும்  கம்ர்ஷியல்  த்ரில்லர்  படங்களுக்கு  இணையானவை 


  ரசித்த  வசனங்கள் 


1  விதை  இல்லாம  பழங்கள்  கண்டு  பிடிச்சிருக்கானே  அமெரிக்காக்காரன் ( வெளிநாட்டுக்காரன் )  அவனுக்கு  ஆண்  குழந்தை  விதைக்கொட்டை  இல்லாம  பிறந்தா  அந்தக்கஷ்டம்  தெரியும்


2  மாட்டுக்குப்போடப்போகும்  புண்ணாக்கை  மனுசன்  நீ  ஏன்யா  சாப்பிட்டுப்பார்த்து  வாங்கறே?


 பின்னே?  நீங்க  பாட்டுக்குக்கண்டதையும் கொடுத்துட்டா?  மண்ணு  மாதிரி  இருக்கு 


3  குல  தெய்வத்துக்கு  உருவம்  கிடையாது 


4   நிலம்  தான்  எனக்கு  வேணும், நீங்க  தரும்  ஏழு  லட்சம்  பணம்  வேண்டாம் , அதை  தலைமாட்டுல  வெச்சுக்கிட்டா  படுக்க  முடியும் ?


5   அவரு  அந்தக்கால  ஆளா  இருக்காரு , எதைச்சொல்லியும்  ஏமாற்ற  முடியல 


6   தப்புப்பண்ணினவங்களைப்பிடிக்க  முடியலைன்னா  நல்லவங்களைப்பிடிச்சு  உள்ளே  வைப்பதா? 


7  நாட்டு  நடப்புத்தெரியுமா?  நம்ம  தமிழ்  நாட்டை  யார்  ஆட்சி  பண்றா?


 நம்ம  முருகன்  தானே?  அவன்  தானே  எப்பவும்  ஆண்டுக்கிட்டு  இருக்கான் ? 


8  நாங்க  பக்கத்து  ஊருல  இருந்து   வர்றோம், பெரியவங்களைப்பார்த்து  ஒரு  விஷய்ம்  பேசனும் 

 சரி  , பெரியவங்களைக்கூட்டிட்டு  வாங்க . பெரியவங்களும் ,பெரியவங்களும்   கூடிப்பேசிக்கிடட்டும் 


9  சார். நீங்க  கொடுத்த  உர  மருந்து  எக்ஸ்பயரி  ஆகிடுச்சே?

 அ தனால  என்ன? மருந்து  விஷம்  ஆகவா  மாறும் ?  பவர்  ஜாஸ்தியா  தான்  ஆகும் 



செம  ஹிட்  சாங்க்ஸ்


1 என்னைக்கோ  ஏர்  பிடிச்சானே   நம் முன்னோரு 

2  பம்பர  பூமி  பந்துக்குள்ளே 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ . இரண்டு  இடங்களில்  மட்டும்  கிராமப்பேச்சு  வழக்கில்  வரும்  கெட்ட  வார்த்தைப்பிரயோகம்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -    உலக  சினிமா  ரசிகர்கள் , மாறுபட்ட  கலைப்படைப்பை  ரசிக்கும்    மக்கள் , விவசாயிகள்  அவசியம்  காண  வேண்டிய  படம் , ரேட்டிங்  4 / 5 


கடைசி விவசாயி
திரையரங்கு வெளியீட்டு தேதி போஸ்டர்
இயக்கம்மு. மணிகண்டன்
எழுதியவர்மு. மணிகண்டன்
உற்பத்திமு. மணிகண்டன்
நடிக்கிறார்கள்நல்லாண்டி
ஒளிப்பதிவுமு. மணிகண்டன்
திருத்தியவர்பி.அஜித்குமார்
இசைசந்தோஷ் நாராயணன்
ரிச்சர்ட் ஹார்வி
தயாரிப்பு
நிறுவனம்
பழங்குடியினர் கலை தயாரிப்பு
மூலம் விநியோகிக்கப்பட்டதுவிஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்
7Cs என்டர்டெயின்மென்ட்
வெளிவரும் தேதி
  • 11 பிப்ரவரி 2022
நேரம் இயங்கும்
144 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Friday, May 24, 2024

இங்க நான் தான் கிங்கு (2024) -தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி த்ரில்லர் )

         

        2015 ஆம்  ஆண்டு  விஜய்  ஆண்ட்டனி  நடிப்பில்  வெளியான  இந்தியா பாகிஸ்தான்   காமெடிப்படத்தை  எடுத்த /இயக்கிய  இயக்குநர்  என்  ஆனந்த்தின்  அடுத்த  படம்  இது.  இரு  வேறு  கதைகளை  சாமார்த்தியமாக  ஒரே  படத்தில்  இணைத்து  கதை  சொல்லி  இருக்கிறார். 17/5/2024  முதல்  திரை  அரங்குகளில்  வெளியாகி  உள்ள  படம்  ரசிகர்களின்  வரவேற்பையும், மீடியாக்களின்  பாசிட்டிவ்  விமர்சனங்களையும்  பெற்றது 


ஸ்பாய்லர்  அலெர்ட்

முதல்  கதை -  நாயகன்  ஒரு  பிரம்மச்சாரி .தீவிரமாக பெண்  பார்த்துக்கொண்டு  இருப்பவர் .இவர்  ஒரு  அனாதை .ஒரு  கல்யாண  மாலை  மாதிரி  லேட்டஸ்ட்   திருமண  தகவல்  மையம்  ல  பணி  செய்கிறார் . எங்கே  பெண்  பார்க்கப்போனாலும்  மாப்பிள்ளைக்கு  சொந்த  வீடு இருக்கா?என  கேட்பதால்  லோன்  வாங்கி   ஒரு  வீடு  வாங்கி  இருக்கிறார்


கல்யாண  புரோக்கர்  ஒருவர்  நாயகனிடம்  ஒரு  பெரிய  ஜமீன்  குடும்பம்  இருக்கு , முடிச்சிடலாமா?என்கிறார்.அடிச்சுதடா  லக்கி  பிரைஸ்  என  நாயகனும்  பெண்  பார்க்கப்போக  ஓவர்  பில்டப்  ஒலகநாதன்  போல  அந்த  ஜமீன்  குடும்பம்  திருமணத்தையே  முடித்து  விடுகிறது . பிறகு  தான்  தெரிகிறது   அது  ஒரு  டுபாக்கூர்  குடும்பம் . நாயகியின்  அப்பா , தம்பி இருவரும்  நாயகனின்  வீட்டோடு  விருந்தாளியாக  தங்கி  விடுகிறார்கள் . இதனால்  செம  கடுப்பான  நாயகன்   தன்  மனைவியிடம்  சரிவர  பேசாமல்  இருக்கிறார்


இதை  வைத்து  காமெடியாக  முதல்  பாதியை  கலகலப்பாகக்கொண்டு  போகிறார்கள் 


 இரண்டாம்  கதை 


நகரில்  வெடிகுண்டு  வைக்க  வரும்  தீவிரவாதி  கும்பல்  ஒன்றில்  மெயின்  வில்லன்  எதேச்சையாக  நாயகன்  வீட்டுக்கு  வர  ஆக்சிடெண்ட்டல்  ஆக  அவர்  இறந்து  போகிறார். அந்த  டெட்பாடியை   டிஸ்போஸ்  பண்ண  படாத  பாடு  படுகிறார்  நாயகன்


 பிறகுதான்  டி வி யில்  நியூஸ்  வருகிறது . தீவிரவாதியை   உயிரோடோ  , பிணமாகவோ  பிடித்துக்கொடுத்தால்  ரூ  50  லட்சம்  பரிசு . உடனே  டிஸ்போஸ்  செய்த  டெட்  பாடியை  மீண்டும்  தன்  வசம்  ஆக்க நாயகன்  முனைகிறார். வில்லன்  க்ரூப்பும்  ஒரு  பக்கம்  துரத்துகிறது . பிறகு  என்ன  ஆனது  ?என்பது  மீதி  திரைக்கதை 


 நாயகன்  ஆக  சந்தானம் , வழக்கமான  காமெடி  ஒன்லைனர்கள் இதிலும்  அவருக்குக்கை  கொடுத்திருக்கின்றன  மாதவன்  ரேஞ்சுக்கு  டூயட்  எல்லாம்  போடுகிறார். ஆக்சன்  ஹீரோ  ஆக  அவதாரம்  எடுத்து  ஃபைட்டும்  போடுகிறார்.  காமெடி  ஹீரோவாக  மட்டும்  செய்தால்  தேவலை . ஃபைட்  போட  இங்கே  1000  பேர்  இருக்கிறார்களே? 

 நாயகி  ஆக  புது முகம்  ப்ரியாலயா .அழகான  முகம். மிதமான  நடிப்பு . கண்ணியமான  உடை   பாஸ்  மார்க்  வாங்குகிறார் . இவருக்கு  அதிக  வாய்ப்புகள்  இல்லை . இன்னமும்  இவரை  பயன்படுத்தி  இருக்கலாம் 


 தம்பி  ராமய்யா  தான்  நாயகனின்  மாமனார் . இவர் காமெடி  செய்யா  விட்டாலும்  பரவாயில்லை  ஓவர்  சவுண்ட்  விடுவதைக்குறைத்தாலே  போதும். ரொம்ப  டார்ச்சர்  செய்கிறார்.. நாயகனையும்  ஆடியன்சையும் 


நாயகனின்  மச்சினன்  ஆக    பால சரவணன்  ஓக்கே  ரகம். டெட்  பாடியாகப்படுத்திருக்கும்  காட்சியில்  சிரிக்க  வைக்கிறார்


 நாயகனின்  ஹையர்  ஆஃபீசர்  ஆக  , தீவிரவாதியாக  இரட்டை  வேடங்களில்  விவேக்  பிரசன்னா  . கச்சிதம் . மகளிர்  மட்டும்  நாகேஷ்  காமெடி  போல  இவரை  வைத்து  ஒரு  டெட்  பாடி  காமெடி  டிராக்  இருக்கிறது.  மிக  சிரமப்பட்டு  நடித்திருக்கிறார். ஆனால்  பெரிதாக  எடுபடவில்லை 


டெட்  பாடியை  வைத்து  பிஸ்னெஸ்  செய்யும்  பாடி  பல்ராமாக  முனீஷ்  காந்த்  பெரிய  அளவில்   இவருக்கு  காமெடி  ஒர்க்  அவுட்  ஆகவில்லை 


 அதே  போல  தான்  வரும் எந்த  ஒரு  காட்சியிலும்  தன் முத்திரை  பதிக்கும்  லொள்ளு சபா  மாறன்  இதில்  குறைவான  நேரம்  வ்ந்தாலும்  நிறைவான  பங்களிப்பு என  சொல்ல  முடியாதபடி  சொதப்பி இருக்கிறார். அவர்  மேல்  தவறில்லை , அவருக்கு  போர்சன்  பலமாக  இல்லை 


லொள்ளுசபா  சேஷூ  , சுவாமிநாதன் , மனோபாலா , கூல்  சுரேஷ்  அனைவரும்  உள்ளேன்  ஐயா  என  அட்டெண்டென்ஸ்  போடுகிறார்கள்  


 இசை  டி  இமான் .  மாயோனே  செம  ஹிட்டுப்பாட்டு .அதற்கான  டான்ஸ்  கொரியோகிராஃபர்  பிர,மாதப்படுத்தி  இருந்தார் . சந்தானமும்  நன்றாகவே  டான்ஸ்  ஆடி  இருந்தார் 


எழிச்சூர்  அர்விந்தன்  திரைக்கதை  எழுத  இயக்கி  இருப்பவர்  ஆனந்த்  நாராயணன் 




சபாஷ்  டைரக்டர்


1   டெட்  பாடியை  வைத்துக்கொண்டு  நாயகன்  அண்ட்  ஃபேமிலி    லிஃப்டில் படும்  பாடு  செம    காமெடி .  லிஃப்டில்  ஏறும்  ஒரு  ஆள்  எல்லோரும்  ஒரே  மாதிரி  சிரிப்பதைக்கண்டு   கடைசியில்  ஹேப்பி  ஸ்மைலி  டே  என  வாழ்த்து  சொல்வது  செம 


2   போலியாக  டெட்  பாடியாக  பால  சரவணன்  நடிக்கும்போது  டாக்டர்  செக்  பண்ணாமலேயே பேடு  ஸ்மெல்  வரும்போதே  தெரியல ? இது  டெட்  பாடி  தான்  செத்து  நாலு  நாள்  ஆகி இருக்கும்  என  சொல்லும்போது  பால  சரவணனின்  முகம்  போகும்  போக்கு  கலக்கல்  காமெடி 


3   நாயகன்  அண்ட்  பால  சரவணன்   க்ளைமாக்சில் வேனில்  போகும்போது  அவர்களை  ஃபாலோ  பண்ணும்  வில்லன்  க்ரூப்புக்கு  ரூட்  சொல்வதும்  கூகுள்  மேப்ல  குட  இவ்ளோ  டீட்டெய்ல்  ஆக  சொல்ல  மாட்டாங்க , வழி  காட்ட  மாட்டாங்க என  வில்லன்கள்  சிலாகிப்பதும்  செம 


4 ஒரு  எசகு பிசகான  நேரத்தில்  நாயகி  எல்லோரும்    கண்ணை  மூடிக்குங்க  என  சொல்லி  விட்டு  நாயகனுக்கு  கிஸ்  கொடுப்பது  ரணகளத்துலயும்  ஒரு  கிளு கிளுப்பு  மொமெண்ட்   


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  மாயோனே 




  ரசித்த  வசனங்கள் 


1 பொண்ணு  குனிஞ்ச  தலை  நிமிராம  இருக்கே?  ரொம்ப  அடக்கமோ?


 வீடியோ கேம்ஸ்  விளையாடிட்டு  இருக்கா  மாப்ள 


2   ரூ 50,000  கொடுத்தா  ஒரு  மில்லியன்  ஃபாலோயர்ஸ்  அரேஞ்ச்  பண்ணித்தர்றாங்க 


 ஓஹோ , இப்படித்தான்  பலருக்கும்  சோசியல்  மீடியாக்களில்  ஃபாலோயர்ஸ்  சேருதா?


3  ஸ்வீட்  கடைல  வேலை  செய்யறவன்  கடைல  இருந்து  ஸ்வீட்  எடுத்து  சாப்பிடறதில்லையா? சலூன்  கடைல வேலை  செய்யறவன்  ட்ரிம்மரை  எடுத்து  ட்ரிம்  பண்ணிக்கறதில்லையா?  அந்த  மாதிரி  தான்  நானும்.  திருமண  தகவல்  மையத்துல  வெலை  செய்யும்போது  வர்ற  ஆஃபர்ல  ஒண்ணு   ரெண்டு  டிரை  பண்றேன்


4   எனக்குத்தெரிஞ்ச  ஒரு  பொண்ணு  இருக்கு , ரெஃபர்  பண்ணட்டா?


  நீயே  இங்கே  ஆஃபருக்கு  அலையறே, நீ  எனக்கு  ரெஃபர்  பண்றியா?


5  நான்  உனக்குக்காட்டப்போகும்  பொண்ணு  ஃபிரெஷ், இன்னும்  கல்யாணமே  ஆகலை 

  யோவ், கல்யாணம்  ஆகலைன்னாத்தான்  அது  ஃபிரெஷ் . மேரேஜ்  புரோக்கர்  மாதிரி நடந்துக்க , பொம்பளை  புரோக்கர்  மாதிரி  நடந்துக்காத


6  ரத்னபுரி  கேள்விப்பட்டு  இருக்கீங்களா?


 நோ 

 ரத்னபுரி   ஜமீன்?


 யோவ்  ,  ரத்னபுரி யே  தெரியாதுன்னுட்டேன் ,  ரத்னபுரி   ஜமீன்  மட்டும்  எப்படித்த்ரியு ம்?


7   யோவ்   மீன்  முள்ளு  இங்கே  வாய்யா 


8   பந்தியோட  எண்ட்ல  இலை  வைக்க  வேண்டிய  ஆளு  எண்ட்ரில  பன்னீர்  தெளிச்சுட்டு  இருக்காரே?


பேங்க்  மேனேஜருங்க  அவரு 


9  இன்னைக்கு  பேங்க் , போலீஸ்  ஸ்டேஷன்  எல்லாம்  லீவ் 


 ஆனா  சாராயக்கடை  மட்டும்  லீவ்  விட  மாட்டாங்களே?


10 ஆமா , இது  ஒண்ணும்  காமெடியே  இல்லையே? எதுக்கு  இப்படி  சிரிக்கிறே? 


11   நீங்க  நிஜமாவே  பொண்ணுக்கு  அப்பாவா?  பூதமா? டக் டக்னு  ஏற்பாடுகள்  எல்லாம்  ரெடி  பண்றீங்க ?


12    ஜூனியர்  ஆர்ட்டிஸ்ட்னு  நினைச்சேன் , கேரக்டர்  ஆர்ட்டிஸ்ட்டா  நீ?


13   என்னடா  இது ? வயசான  கிழடு  கிட்டேப்போய்  கடன்  வாங்கி  இருக்கே?


 வாங்கும்போது  இளசாத்தான்  இருந்துச்சு , அப்புறமா  வயசாகிடுச்சு 


14   எனக்கு  பணத்தேவை  இருந்துச்சு , ஆனா  பணத்தாசை  கிடையாது 


15  கடன்லயே  அவன்  சாகலை , கரண்ட்  ஷாக்லயா  சாகப்போறான் ? 


16  நம்ம  மேட்ரிமோனியல்  சைட்ல ஒரு  லட்சம்  பேருக்கு  மேரேஜ்  பண்ணி  வெச்சிருக்கேன் 

 அத்தனை  பேர்  குடியைக்கெடுத்து  இருக்கே?


17   இனி  எங்கே  தங்கறது  >எதை  திங்கறது ? 


18  அய்யோ  ,அவனை  எழுப்புங்க 


  முடியாது , அவன்  செத்துட்டான் 


 நல்ல  வேளை  , அடிச்சது  நாம  தான்னு  தெரியாது 


 ஆனா  போலீசுக்கு தெரியுமே?


19  சூப்பர்  டீலக்ஸ் , ரமணா  , பஞ்ச  தந்திரம்  , ம்களிர்  மட்டும் -  டெட்  பாடியை  வெச்சு  எத்தனை  படம்  ?


 20   அவரு  ஏன்  ராத்திரி  நேரத்துல  கூலிங்க்  கிளாஸ்  போட்டு  இருக்காரு ?


 ஸ்டைலுக்கு 


 ஆனா  வரும்போது  அது  இல்லையே?


 அப்போ  நீ  அவரு  வரும்போதே  அவர்  கிட்டே  கேட்டிருக்கனும் 


21   சா வி  எங்கே? நு  தேடி  பதட்டப்படாதீங்க ., நான்  தான்  வீட்டைப்பூட்டவே  இல்லையே? 


22   பேய்க்குக்கால்  இருக்கே?


  அவனுக்கு  முதலில்  இருந்தே  கால்  இருந்த்து , சம்மணம்  போட்டு  உக்காந்து  இருந்தான்  


23    செத்தாலு ம்  என்னால டெட்  பாடியா  மட்டும்  நடிக்க  முடியாது 


 அப்போ  செத்துடு 


 இல்ல  இல்ல  நடிச்சுடறேன் 


24    என்ன  சரக்குடா  இது ?பிணத்தை  விட  பயங்கரமா  நாறுது 


25   ஒரு  நாளுக்கு  ஓருத்தி  வீட்டுல  படுத்து  இருப்பியே  இப்போ  மார்ச்வரில  வந்து  படுத்திருக்கியே  ராசா 


26    நானும்  உங்க  கூட  வர்றேன் ,  நானும்  உங்க  கூட  வர்றேன் 


  ஏன்  உன்  வண்டி  என்ன ஆச்சு/


 செல்ஃப்  எடுக்கலை 

  வண்டியுமா? 



27    இந்த  டபரா  மூஞ்சிக்கு  டபுள்  ஆக்சன்  கொடுத்ததாலதான்  இவ்ளோ  பிரச்சனை 


28    டெட்  பாடியை  எடுக்க  நாலு  பேர்  வேணும்,நாம  மூணு  பேர்  தானே  இருக்கோம் ?


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகி  சமையல்  செய்து  சாம்பாரை  இடது  உள்ளங்கையில்  ஊற்றி  டேஸ்ட்  பார்க்கிறார். வலது  கைல  தானே  அப்படிப்பார்ப்பாங்க ?  ஒரு  வேளை  நாயகி இடது  கைப்பழக்கம்  உள்ளவரா? எனப்பார்த்தால்  அதுவும்  இல்லை 

2   நாயகி  லஞ்ச்  பாக்ஸ்ல  எதுவும்  வைக்கலை , காலி , அதை  நாயகன்  ஆஃபீசுக்கு  எடுத்துட்டுப்போறான். தூக்கும்போதே  அது  காலினு  தெரியாதா? 


3  வில்லனான  டெட்  பாடியை  க்ளோசப்பில்  காட்டும்  ஒவ்வொரு  ஷாட்டிலும்  சிரித்த  முகமாக  இருக்கிறார்.லாங்க்  ஷாட்டில்  காட்டும்போது  சிரிப்பு  இல்லை 

4   வில்லனின்  கம்பெனில  ஒர்க்  பண்றவங்க  தன்  பாஸ்  முகம்  டி வி யில்  காட்டும்போது  பரபாப்பு  ஆகலையே? 


5   டெரரிஸ்ட்  முன்  வைக்கபப்ட்ட  டீ  கப்பில் நாயகன்  எதோ  கலக்கிறார். அதை  அவன் பார்க்கும்போதே  அளவு  கூடுதலா  இருக்கே  என  டவுட்  வராதா? 


6  சாதாரண  டேட்டிங்  சைட்டில்  ஒர்க்  பண்ணும்  நாயகனுக்கு 25  லட்சம்  எல்லாம்  கடன்  தருவாங்களா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   கலகலப்பான  முதல்  பாதி , சுமாரான  பின்  பாதி , சந்தானம்  ரசிகர்கள்  பார்க்கலாம் ., ரேட்டிங்  2.75 / 5 



Thursday, May 23, 2024

LINE MAN (2024) - கன்னடம் /தெலுங்கு - சினிமா விமர்சனம் ( காமெடிடிராமா ) @ அமேசான் பிரைம்

     

       தெலுங்கு ,கன்னடம்  ஆகிய  இரு  மொழிகளிலும்  ஒரே  சமயத்தில்  உருவான  இப்படம்  22/3/2024  முதல்  திரை  அரங்குகளில்  வெளியாகி  வெற்றி  பெற்றது . இப்போது  அமேசான்  பிரைம்  ஓடிடி  யில்  காணக்கிடைக்கிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி 100  வயதான  மருத்துவச்சி .இவர்  தான்  கிராமத்தில்  பலருக்கும்  பிரசவம்  பார்த்து  உயிர் கொடுத்த்வர். ராசியான  கை  என்ற  பெயர்  பெற்றவர் .இவர்  மேல் ஊரில்  இருக்கும்  பலருக்கும்  மரியாதை  உண்டு .,இவரது  100 வது   வயது  பிறந்த  நாளை  பிரம்மாண்டமாகக்கொண்டாட  ஊரே  திட்டம்  இடுகிறது 


நாயகன்  கிராமத்தில்  லைன் மேன்  ஆக  பணி  புரிகிறார். அந்த  கிராமத்தில் அவர்  வந்துதான்  எல்லா  வீட்டுக்கும்  கரண்ட்  சப்ளை  ஆகும். ஒரு முறை   மெயின்  ஸ்விட்ச்  போர்டு  அருகே  குருவி  கூடு  கட்டி  விடுகிறது , சில  முட்டைகளும்  போட்டு  அதை  அடை  காத்து  வருகிறது.இந்த  மாதிரி  நேரத்தில்  கரண்ட்  ஆன்  செய்தால்  அந்த  சூட்டிற்கு  முட்டை  எல்லாம்  உடைந்து  விடும், அதனால்;  அந்த  முட்டைகள்  குஞ்சாக  பொறிக்கப்படும்  வரை  காத்திருந்து  பின்  கரண்ட்டை  ஆன்  செய்ய  முடிவு  எடுக்கிறான்


 கிராமத்து  மக்களுக்கும்  அதைப்புரிய  வைத்து  சில  நாட்கள்  கிராமமே  இருளில்  மூழ்குகிறது . இதற்காக  மக்கள்  என்ன  எல்லாம்  கஷ்டப்பட்டார்கள்  என்பதை  காமெடியாக  சொல்லி  இருக்கிறார்கள் 


நாயகன்  ஆக   த்ரிகன்  நடித்திருக்கிறார்.இவரது  உடல்  மொழி , வசன  உச்சரிப்பு  இரண்டும்  குட் . 


நாயகி  ஆக  ஜெயஸ்ரீ  நடித்திருக்கிறார். அனுபவம்  மிக்க  நடிப்பு  மனதைத்தொடுகிறது 


 படத்தில்  வில்லன்  வில்லி  என  யாரும்  இல்லை , விக்ரமன் படங்களில்  வருவது  போல  எல்லோரும்  நல்லோரே  கான்செப்டில்  கேரக்டர்  டிசைன்  வடிவமைக்கபப்ட்டுள்ளன 


கத்ரி  மணி காந்த்  தான்  இசை . இரண்டு  பாடல்கள்   சுமார்  ரகம் . ஒளிபதிவு சாந்தி  சாகர்  பரவாயில்லை  ரகம் 


எடிட்டிங்க்  ரகுநாதா .இரண்டரை  மணி  நேரம்  படம்  ஓடுகிறது . ரொம்பவே  டெட்  ஸ்லோ  ஸ்க்ரீன்ப்ளே.பொறுமையை  சோதிக்கிறது  


சபாஷ்  டைரக்டர்


1  வித்தியாசமான , மாறுபட்ட  கதைக்கருவை  எடுத்த  விதத்தில்  பாராட்டுப்பெறுகிறார்


2  படத்தில்  நாயகனுக்கு  ஜோடி  இல்லை . தேவையற்ற்  ஹீரோ  பில்டப்  காட்சிகள்  இல்லை 


3  கிராமத்து  மனிதர்களின்  அன்றாட  வாழ்க்கையை  வைத்தே  திரைக்கதை  எழுதி  இருப்பது 


  சாங்க்ஸ்


1 ஹேப்பி பர்த்டே  =  லண்டன்  ஸ்பேரோ 


2  ஜல்தி  ரா ஜல்தி  ரா ஜல்தி  ரா  மன பல்லல்லோ


  ரசித்த  வசனங்கள் 


1   காதலி  கிட்டே  இருந்து  ஃபோன்  வந்தா  போதும், அவனவன்  பாலைத்தேடி  ஓடும்  பூனை  போல   இடத்தைக்காலிபண்ணிடறானுங்க 


2 எங்க கிராமத்துக்கே  நான்  ஒருத்தன்  தான்  லைன்  மேன், நான்  இல்லைன்னா  யார்  வீட்லயும் கரண்ட்  இருக்காது , அப்போ  என்னை  பவர்  ஸ்டார்னு  கூப்பிட்றதுல என்ன  தப்பு ? 


3  நகரம்  கண்களூக்கு  வேணா  விருந்து  வைக்கலாம், ஆனால்  ஆன்மா  வுக்கு  ஒண்ணும்  செய்யாது .கிராமம்  தான்  எனக்கு  கரெக்ட்


4 என்  கடைக்கு  வரும்  கஸ்டமர்ஸ்  லேடீஸ்  மட்டும்  தான்  அலோடு ., ஆம்பளைங்களுக்கு  இங்கே  என்ன  வேலை ? 


5   ரிப்பேர்  ஆன  இந்த  டிவி  யை  சரி  பண்ணலைன்னா  என்  மனைவி  வீட்டுக்குள்ளே  விட  மாட்டா


  ஒண்ணா  நீ  இந்த  டி  வி யை  எக்சேஞ்ச்    பண்ணு , இல்லைன்னா  சம்சாரத்தை எக்சேஞ்ச்    பண்ணு 


6  எனக்கு  ஒரே  ஒரு  அப்பாதான் , அந்த  ஃபோட்டோவை  ஒழுங்கா  எடுங்க 


  எண்டா , மத்தவங்களுக்கு  மட்டும்  10  அப்பாவா  இருக்காங்க ? 


7 பறவைகள் , விலங்குகள்  இவைகளுக்கெல்லாம்  லட்சியம்  என  எதுவும்  இல்லை .இயற்கையோடு  அவை  இணைந்து  வாழ்கின்றன .மனிதன்  மட்டும் தான்  கொள்ஐ  ,லட்சியம்  என  வாழ்விஅ  குழப்பிக்கொள்கிறான் 


8  ஏம்ப்பா    பவுர்ணமி ..

., சார் , என்    பேரு  அம்மாவாசை   சார் 


 முகத்தைப்பார்த்து  பேர்  வெச்சிருப்பாங்களோ? 


9  இந்த  உலகத்துல  ஒவ்வொரு  உயிரும்  இன்னொரு  உயிருக்காக  காத்திட்டு  இருக்கும்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    இது  எங்கோ  நடந்தஉண்மை  சம்பவம்  என  டைட்டில்  கார்டில்  போட்டாலும்  நம்ப  முடியாத  கதை  தான் 


2  நான்கு  முட்டைகளுக்காக  1000  பேர்  குடி  இருக்கும்  கிராமமே  இருளில் மூழ்குவது   அத்தனை  பேர்  கஷ்டப்படுவது  எந்த  விதத்தில்  நியாயம் ? 


3 மொபைல்  ஃபோன்கள்  தகவல் பரிமாற்றத்துக்கு  அவசியம்  ஆனது , சார்ஜ்  போட  வழி  இல்லாமல்  இருப்பதை  எப்படி  சகித்துக்கொள்கிறார்கள் ? 


4  இரு  மொழியில்  எடுத்ததாலோ  என்னவோ  லிப்  சிங்க்  சரியாக  ஒர்க்  அவுட்  ஆகவில்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   எடுத்துக்கொண்ட  கதைக்கரு  குட்  , ஆனால்  திரைக்கதை  அசாத்திய  பொறுமை  உள்ளவர்கள்  மட்டுமே  பார்க்கும்  விதத்தில்  எழுதபப்ட்டுள்ளது . ரேட்டிங்  2.25  / 5 


Lineman
Official theatrical poster
Directed byRaghu Shastry
Written byRaghu Shastry
Produced by
  • Yateesh Venkatesh
  • Ganesh Papanna
Starring
CinematographyShanthi Sagar H. G.
Edited byL. Raghunatha
Music byManikanth Kadri
Production
company
Purple Rock Entertainers
Release date
  • 22 March 2024 (india)
CountryIndia
LanguageKannada

Wednesday, May 22, 2024

FEMINIST (2023) - ஃபெமினிஸ்ட் - தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் ( ஆந்தாலஜி ரொமாண்டிக் டிராமா ) @ ஓடிடிபிளஸ்(WWW.OTTPLUS.IN)

 

2010  ஆம் ஆண்டு  முதன்  முதலாக  நான் ஆன்  லைன்  வந்தபோது  சினிமா  விமர்சனங்களில்  கோலோச்சிக்கொண்டிருந்தவர்கள்  மூவர்   1  ஏ  செண்ட்டர்  ரசிகர்களை, பெண்களைக்கவர்ந்த  கேபிள்  சங்கர்  என்னும்  சங்கர  நாராயணன். 2  பி  செண்ட்டர்  ரசிகர்களைக்கவர்ந்த டீட்டெய்லிங் கிங் உண்மைத்தமிழன்  3  பி  அன்ட்  சி  செண்ட்டர்  ரசிகர்களைக்கவர்ந்த  தரை லோக்கல்  கிங்   ஜாக்கி  சேகர்   . இதில்  கேபிள்  சங்கர்  கொத்து  பரோட்டா  மூலம்  மிகவும்  புகழ்  பெற்றவர் . தொட்டால்  தொடரும்  என்ற படத்தை  இயக்கி  இருக்கிறார். இவரது  முதல்  வெப்  சீரிஸ்  இது . லாக்  டவுன்  கதைகள்  என்ற  வரிசையில்  முதல்  எபிசோடு  கதை  இது. இது  ஒரு  ஆந்தாலஜி  ரொமாண்டிக்  டிராமா


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  ஒரு  கவிதாயினி . ஒரு  விழா  மேடையில்  தனது  புத்தக  வெளியீட்டில்  தனது  கவிதைகளை  வாசிக்கிறார். நாயகன்  நாயகியின் கவிதைகளை , நாயகியை  விமர்சனம்  செய்கிறான் . இருவருக்கும்  பழக்கம்  உண்டாகிறது .


நாயகி  ஒரு  முறை  சென்னை  வர  வேண்டி  இருப்பதால்  நாயகனுக்கு  ஃபோன்  செய்து  ஒரு  லேடீஸ்  ஹாஸ்டல்  மாதிரி  தங்க  ரெடி  பண்ணச்சொல்கிறாள் . நாயகன்  தன்  வீட்டிலேயே  தங்கிக்கொள்ளலாம்  என்கிறான். நாயகியும்  அதை  எதிர்பார்த்துத்தான்  கேட்டிருக்கிறாள் 

 நாயகன் , நாயகி  இருவரும்  ஒரே  வீட்டில்  தங்குகிறார்கள் . இருவரும்  ஒன்றாக  சரக்கு  அடிக்கிறார்கள் . இணைகிறார்கள் .லிவ் இன்  ரிலேஷன் ஷிப்பில்  தொடர  முடிவு  செய்கிறார்கள் 

  நாயகன்  ஃபேஸ்புக்கில் , இன்ஸ்டாவில்  வேறு  ஒரு  பெண்ணின்  பதிவுகளுக்கு  அடிக்கடி  லைக்ஸ்  , க,மெண்ட்ஸ்  போடுவது  பிடிக்கவில்லை . அதைப்பற்றிக்கேள்வி  கேட்கிறாள் . ஆனால்  நாயகன்  நாயகியின்  பர்சனல்  விஷயங்களில்  தலையிடுவது  இல்லை 

 ஆனால்  நாயகிக்கு  அடிக்கடி  அவளது  முன்னாள்  பாய்  ஃபிரண்ட்  அல்லது  பாய்  பெஸ்டியிடம்  இருந்து  மெசேஜ்  வருகிறது 

  இது  சம்பந்தமாக  இருவரும்  அடிக்கடி  வாக்குவாதம்  செய்து  கொள்கிறார்கள் . ஒரு  கட்டத்தில்  பிரேக்கப்  ஆகிறது 

 இதற்குப்பின்  இருவரும்  சேர்ந்தார்களா? பிரிந்தார்களா? என்பது  க்ளைமாக்ஸ்   

   நாயகன்  ஆக  நடிகர்  முத்தழகன் கச்சிதமான  தேர்வு . இவரது  கேரக்டருக்கு  இயக்குநர்  தனது   ட்விட்டர்  நண்பரும், இஸ்பேட்  ராஜாவும் , இதய ராணி யும்  படத்தின்  வசனகர்த்தாவும்  ஆன  அவினாசி  ராஜன்  பெயரை  சூட்டி  இருக்கிறார். நாயகனின்  முகச்சாயலும்  ராஜன்  போலவே  தான்  இருக்கிறது . நடிப்பு  குட் 

 நாயகி  ஆக நடிகை  ஏஞ்சலின். பேருக்கு  ஏற்றபடி  தேவதை  போல்  இல்லாவிட்டாலும்  மனம்  கவரும்படி  எளிமையான  அழகுடன்  இருக்கிறார். நடிப்பும்  நன்றாக  இருக்கிறது . கோபப்படும்  காட்சியில் ,  ஊடல்  கொள்ளும்  காட்சியில்   கொஞ்சம்  செயற்கை  தட்டுகிறது. ஆனால்  ரொமாண்டிக் காட்சிகளில் , சிரித்த  முகத்துடன்  இருக்கும்போதெல்லாம்  யதார்த்த  நடிப்பு 

 படத்தில்  இரண்டே  கேரக்டர்கள்  தான்  

ஒளிப்பதிவு , எடிட்டிங் , பின்னணி  இசை    போன்ற  டெக்னிக்கல்  அம்சங்கள்  பாராட்டும்படி  உள்ளன  


சபாஷ்  டைரக்டர்


1   நாயகன்  -  நாயகி  இருவருக்கும்  காதல்  மலருவதை  இயற்கையாகக்காட்டியது . ரொம்ப ஜவ்வாக  இழுக்காமல்  நேரடியாகக்கதைக்குள்  நுழைந்த  விதம் 


2  லோ  பட்ஜெட்  படம்  என்பதால்  தேவை  இல்லாமல்  பல  ஆர்ட்டிஸ்ட்கள்  இல்லாமல்  இரண்டே  கதாபாத்திரங்கள்  வருவது  போல  திரைக்கதை  அமைத்த  விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1   நமக்குப்பிடிச்ச  வரியை  ஆண்  எழுதி  இருந்தா  என்ன?  பெண் எழுதி  இருந்தா  என்ன? 


2 ரெண்டு  நாள்  தங்கற  எனக்கு  உன் கவனிப்பு  ஓவரா  தெரியுதே?


  என்  கூட  தங்கறவங்களை  கம்ஃபர்ட்டபிளா  வெச்சுக்க வேண்டியது  என்  பொறுப்பு , அது  ரெண்டு நாளோ  லைஃப்  லாங்கோ


3   ஃபேஸ்புக்  பக்கம்  இப்பவெல்லாம்  உன்னைப்பார்க்கவே  முடியறதில்லை ?


 ஃபேஸ்புக்   எல்லாம்  பூமர் அங்க்கிள்  பிளேஸ். நமக்கு , நம்மை  மாதிரி  யூத்துக்கு  இன்ஸ்டா  தான் பெஸ்ட் 



4   யூ  நோ  மீ  வெரிவெல் , அதனால  தான்  என்னை  விட்டு  ஈசியா  விலக  முடியுது 


5   என்னதான்  புரட்சிகரமாப்பேசினாலும்   ரிலேஷன்ஷிப்னு  வந்துட்டா  பொசசிவ்னெஸ்  வரத்தானே  செய்யும் ? 


6   யாரு  யாரை  வெச்சிருகாங்க  என்பது  முக்கியம்  இல்லை , வெச்சிருக்கறவங்களை  சந்தோஷமா  வெச்சிருக்கறதுதான்  முக்கியம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  என்னதான்  நாயகி  மாடர்ன்  கேர்ள்  என்றாலும்  ஒரு  அந்நிய  ஆள்  வீட்டில்  தங்கும்போது  அவன்  நீட்டாக  ஃபுல்லாக  கவர்  பண்ணிய  ஆடைகளை  அணிந்திருக்கும்போது  இவள் மட்டும்  வெறும்  டிராயர்  , டி  சர்ட் பனியனுடன்  இருப்பது   ஏற்றுக்கொள்ள  முடியவில்லை . அட்லீஸ்ட்  முதல்  நாளாவது  ஃபுல்லாக  கவர்  பண்ணும்  ஆடைகளை  அணிந்திருக்கலாம் 


2  பொதுவாக  பெண்கள்  இமேஜ்  மெயிண்ட்டெயின்  செய்வார்கள் . ஒரு  ஆண்  தன்னிடம்  சரக்கு  அடிக்கும்  பழக்கம்  இருக்கா? எனக்கேட்கும்போது  அப்படி  இருந்தாலும்  இல்லை  என்று  தான்  சொல்வாள் . நாயகன்  கூப்பிட்டதுமே  சரக்கு  அடிக்க  கூட  உட்காருவதும்  உறுத்துகிறது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  18+  லிப்  லாக்  சீன்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   30  நிமிடமே  ஓடக்கூடிய  குறும்படம். டைம்  பாஸ்  கேட்டகிரி .பார்க்கலாம் . ரேட்டிங்  2.5 / 5