Friday, May 03, 2024

INCONCEIVABLE (2017)- ஆங்கிலம் - சினிமா விமர்சனம் ( த்ரிலல்ர் டிராமா ) @ அமேசான் பிரைம்


வெறும் 13   மில்லியன்  டாலர்  செலவில்  எடுக்கப்பட்டு  260  மில்லியன்  டாலர்  வசூல்  செய்த  சூப்பர்  ஹிட்  மூவி  இது    இன் கன்சீவபிள்  என்ற  சொல்லுக்கு  கர்ப்பம்  ஆக  முடியாத  என்ற  பொருளும்  உண்டு , நம்ப  முடியாத, நினைத்துப்பார்க்க  முடியாத , புத்திக்கு  எட்டாத  என்ற  பொருளும்  உண்டு. 


இது  த்ரில்லர்  மூவியாக  இருந்தாலும்  பெண்களுக்குப்பிடிக்கும்  விதத்தில்  அமையக்காரணம்  கதைக்கரு  வாடகைத்தாய்  பற்றிய  அம்சம்  என்பதால்  தான்    


ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன் , நாயகி  இருவரும்  தம்பதிகள். இருவருமே  டாக்டர்கள் . நாயகிக்கு  கர்ப்பம்  ஆக  முடியாத  குறைபாடு  உண்டு. அதனால்    வாடகைத்தாய்  மூலம்  ஒரு  குழந்தை  பெற்றுக்கொள்கிறார்கள் . அதாவது   நாயகனின்  விந்து  அணு  வை  வாடகைத்தாயின்  கருமுட்டையுடன்  சேர  வைத்து  பிறந்த  குழந்தையை  வளர்க்கிறார்கள் அவர்களுக்கு  மீண்டும்  ஒரு  குழந்தை  பெற்றுக்கொள்ள  ஆசை .ஆனால்  இரண்டு  முறை  நாயகி  கர்ப்பம்  ஆகியும்  பின்  கரு  தங்காமல்  கலைந்து  போகிறது 


 நாயகியின்  தோழி  ஒருத்தி  நாயகிக்கு  வில்லியை  அறிமுகப்படுத்துகிறாள். வில்லி  கணவனைப்பிரிந்து  வாழும்  சிங்கிள்  மதர் . ஒரு  பெண்  குழந்தையுடன்  வாழ்ந்து  வருகிறாள் 


 இப்போது  வில்லி  நாயகியின்  வீட்டில்  நாயகியின்  குழந்தையைப்பார்த்துக்கொள்ளும்  பணிப்பெண்ணாக  சேர்கிறாள் .நாயகியின்  குழந்தை , வில்லியின்  குழந்தை  இருவரையும்  வில்லி  நன்கு  கவனித்துக்கொள்கிறாள்


நாயகனுக்கோ , நாயகிக்கோ  தெரியாத  ஒரு  ரகசியம்  ஆடியன்சான  நமக்கு  மட்டும்  சொல்லப்படுகிறது 


 அதாவது  நாயகியின்  குழந்தைக்கு  பயலாஜிக்கல் மதர்  வில்லி  தான். வில்லி திட்டமிட்டு  தான்  நாயகி  வீட்டில்  பணியில்  சேர்கிறாள் 


 நாயகி  இன்னொரு  குழந்தை  பெற்றுக்கொள்ள  ஆசைப்பட்டு  தன்  தோழியின்  கரு  முட்டையை  தானமாகப்பெற  இருக்கிறாள் . இந்த  விஷயம்  நாயகியின்  தோழி  மூலம்  வில்லிக்குத்தெரிய  வருகிறது 


 வில்லி  அது  பிடிக்காமல்  நாயகியின்  தோழியைக்கொலை  செய்து  விடுகிறாள் . இந்த  விஷயம்  வேறு  யாருக்கும்  தெரியாது 


இப்போது  வில்லி  கர்ப்பம்  ஆக  இருக்கிறாள் .  நாயகனின்  விந்து  அணுவை  நாயகி யின்   உடம்பில்  செலுத்தி  செயற்கை  முறையில்  கரு  உருவாகி  வளர்கிறது 


 ஒரு  கட்டத்தில்  நாயகிக்கு  வில்லி  மீது  சந்தேகம்  வருகிறது . தன்  மீது  நாயகி  சந்தேகப்படுவதை  அறிந்த  வில்லி  நாயகியைக்கொலை  செய்ய  முயற்சிக்கிறாள் 


 இதற்குப்பின்  நிகழும்  திருப்பங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


நிக்கோலஸ்  கேஜ்  தான்  நாயகன்  ஆக  நடித்திருக்கிறார்.  அமெரிக்காவில்  வாழும்  கலியுக  ராமன்  ஆக  வருகிறார். அருமையான  நடிப்பு . இந்தக்காலத்தில்  இந்த  நாட்டில்  இப்படி  ஒரு  ஆண் மகனா?என  வியக்க  வைக்கிறார்


 நாயகி  ஆக   ஜினா  ஜெர்சன்  கலக்கி  இருக்கிறார் .அவரது  அனாயசமான    ஹேர்  ஸ்டைல் , அப்பாவித்தனமான  சிரிப்பு   இரண்டும்  பிளஸ்  பாயிண்ட்ஸ் . நாயகி  வில்லி  இருவருக்குமான  மோதலில்  இவரது  நடிப்பு  டாப் 


 வில்லி  ஆக   நிக்கி  வேலன்  பிரமாதப்படுத்தி  இருக்கிறார். ஓப்பனிங்  ஷாட்டிலேயே  தன்  கணவனைக்கொலை  செய்யும்  காட்சி  நாயகியின்  தோழியை  பின்  பாதியில்  கொலை ,செய்யும்  காட்சிகளில் அதிர  வைக்கும்  நடிப்பு 


ரிச்சர்டு பியர்டு  தான்  எடிட்டர் /106  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது .ஷார்ப்  ஆன  ட்ரிம்மிங் 


பிராண்டன்  காட்ஜ்  தான்  ஒளிப்பதிவு . நேர்த்தியான  படப்பிடிப்பு . நாயகி , நாயகியின்  தோழி  இருவரையும்  அழகாகக்காட்டிய  விதம்  அருமை 

கெவின்  கினர்  தான்  இசை . பிஜிஎம்  மில்  த்ரில்லர்  படங்களுக்கே    உரித்தான்   வேகம்  குட்  ஒன் 

க்ளோ  கிங்  தான்  திரைக்கதை ஜோனாதான்  பேக்கர்  தான்  இயக்கம் 


சபாஷ்  டைரக்டர்


1   இந்த  மாதிரி  கதைகளில்  வில்லியுடன்  நாயகன்  உறவு  கொள்வது  போலக்காட்சிகள்  அவசியம்  வைப்பார்கள் , ஆனால்  நாயகனை  ராமர்  போல  சித்தரித்து  திரைக்கதையில்  கண்ணியம்  காத்த  விதம்  குட்


2    வில்லி  செய்யும்  இரண்டு  கொலைகளையும்  பரபரப்பாகப்படம்  ஆக்கிய  விதம் 


3   நாயகி - வில்லி  இருவருக்குமான  மோதல்  காட்சி 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    வில்லிக்கும்  அவள்  கணவனுக்கும்  என்ன  பிரச்சனை  ? என்பது  சொல்லப்படவே  இல்லை . வில்லி   அவள்  கணவனைத்தாக்கி  காயப்படுத்திக்கொலை  செய்கிறாள் . ஆனால்  போலீசால்  அது  ஒரு  விபத்து  என  கேசை  க்ளோஸ்  செய்வது  எப்படி ? 


2  க்ளைமாக்சில்  நாயகன்  வில்லியிடம்  நாயகி  இறந்து  விட்டாள்  என  ஏன்  பொய்  சொல்கிறார்?   அடுத்த  நிமிடத்திலேயே  நாயகி  உயிருடன்  வில்லி  முன்  வந்து  விடுகிறார். பின்  ஏன்  அந்தக்காட்சி ? 

3   வில்லி  நாயகனை  வீழ்த்த  பல  டெக்னிக்குகளை  உபயோகப்படுத்தியும்  நாயகன்  ராமன்  ஆக  இருப்பது  ஆச்சரியமான  கேரக்டர்  டிசைன் 


ரசித்த  வசனங்கள் 


1    டியர் , எங்க  அம்மாவுக்கு  புதுசா  சேர்ந்திருக்கும்  நம்ம  வீட்டு  வேலைக்காரியைப்பிடிக்கலை 


 உங்கம்மாவுக்கு  உங்களைத்தவிர  யாரையுமே  பிடிக்காதே?


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+  காட்சி  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பெண்களைக்கவரக்கூடிய  ஃபேமிலி  க்ரைம்  ட்ராமா  இது .பார்க்கலாம்  . ரேட்டிங்  3 / 5 


Inconceivable
Theatrical release poster
Directed byJonathan Baker
Written byChloe King
Produced by
Starring
CinematographyBrandon Cox
Edited byRichard Byard
Music byKevin Kiner
Production
companies
Distributed byLionsgate Premiere
Release date
  • June 30, 2017
Running time
106 minutes
CountryUnited States
LanguageEnglish
Budget$12.8 million[2]
Box office$259,635[3]

Thursday, May 02, 2024

THE FAMILY STAR (2024) - தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா) @ அமேசான் பிரைம்

     

  சின்னத்தம்பி (1992)   தமிழ்  சினிமாவில்  மகத்தான  வெற்றி  பெற்ற  படம் . ஒரு  ஊருல  ஒரு  ராஜகுமாரி ( 1995)   சுமாரான  வெற்றிப்படம் .இரண்டு  படங்களிலுமே  நாயகி   வசதியான  குடும்பத்தில்  பிறந்தவர்.நாயகன்   ஏழை. இருவருக்குமான  காதல்  தான்  ஒன்  லைன்  ஸ்டோரி.. தமிழ்  சினிமாவில்  மட்டுமல்ல. இந்திய . உலக  சினிமாக்களிலுமே  இந்த  ஏழை - பணக்காரன்  ஃபார்முலா  நன்றாகவே  ஒர்க்  அவுட்  ஆகி  வருவதுதான்


2018 ல்  ரிலீஸ்  ஆகி  செம  ஹிட்  ஆன  கீத  கோவிந்தம்  படத்தின்  வெற்றிக்கூட்டணி  ஆன  இயக்குநர்  பரசுராம் +  விஜய்தேவரகொண்டா  கூட்டணி  தான்  மீண்டும்  இணைந்திருக்கிறது . 50  கோடி  ரூபாய்  பட்ஜெட்டில்  உருவான  இப்படம்  பாக்ஸ்  ஆஃபீசில்  35  கோடி  மட்டுமே  வசூல்  செய்து  தோல்வி  அடைந்த  படம். 5/4/2024  முதல்  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆன  இப்படம்  இப்போது  தமிழ்  டப்பிங்க்லயே  அமேசான்  பிரைம்  ல  26/4/24 முதல்  காணக்கிடைக்கிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  மிடில்  கிளாஸ்  ஃபேமிலி .அம்மா, அப்பா  இல்லை .இரண்டு  அண்ணண்கள் , இரண்டு  அண்ணிகள் .அவர்களது  குழந்தைகள் , பாட்டி  என  கூட்டுக்குடித்தனமாக  வாழ்கிறான். அண்ணன்களில்  ஒருவன்  குடிகாரன், இன்னொருவன்  வருமானம்  இல்லாதவன், மொத்தக்குடும்பத்தையும்  நாயகன்  தான்  பார்த்துக்கொள்கிறான்


நாயகன்  பணி  புரியும்  இடத்தில்  சக  பணியாளினி  கடந்த  3  வருடங்களாக  நாயகனைக்காதலிக்கிறாள். ஆனால்  நாயகனின்  கூட்டுக்குடும்ப  வாழ்க்கை  அவளுக்குப்பிடிக்கவில்லை . ஆஃபீசில்  பணியாற்றும்  மற்ற  பெண்களுக்கும்  நாயகன்  மீது  ஒரு  கண். ஆனால்  நாயகனைக்கல்யாணம்  செய்து  கொண்டால்  அவ்ளோ  பெரிய  குடும்பத்துக்கு  சமைத்துக்கொட்ட  வேண்டும்  என  எல்லோரும்  அவனை  விட்டு  விலகியே  இருக்கிறார்கள் 


  நாயகனின்  வீட்டுக்கு  மாடி  போர்சனில்  வாடகைக்கு  நாயகி  குடி  வருகிறாள். மற்ற    பெண்களைப்போல  அல்லாமல்  நாயகி  நாயகனின்  குடும்பத்தாருடன்  நன்கு  பழகி  அனைவர்  மனதையும்  கவர்கிறாள் .  நாயகனுக்கும்  நாயகி  மீது  காதல்  வருகிறது


அப்போதுதான் நாயகனுக்கு  ஒரு  உண்மை  தெரியவருகிறது .  நாயகன்  பற்றி  ஒரு  ஆராய்ச்சிக்கட்டுரை  எழுதுவதற்காகத்தான்  நாயகி  அவனுடன்  நெருங்கிப்பழகி  இருக்கிறாள் .. தன்  சுயநலத்துக்காக  தன்னை  கருவேப்பிலை  மாதிரி  யூஸ்  பண்ணி  இருக்கிறாள்  என்பது  தெரிய  வந்ததும்  நாயகன்  கடும்  கோபம்  கொண்டு  பிரேக்கப்  செய்து  விடுகிறான் 


ஒரு மிகப்பெரிய  கார்ப்பரேட் கம்பெனியில் நாயகன்  சேர்கிறான், அப்போதுதான்  ஒரு  உண்மை  அவனுக்கு  தெரிய  வருகிறது . அந்த  கம்பெனியின்  எம்  டி  யே  நாயகி  தான்.அவ்ளோ  மல்ட்டி  மில்லியனர்  ஆன  நாயகி  ஏன்  நாயகன்  வீட்டுக்குக்குடி  வந்தாள் ? அதற்குப்பின்  இருக்கும்  மர்மம்  என்ன ?  பிரேக்கப்  ஆன  காதல்  என்ன  ஆனது  என்பது  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  விஜய்  தேவரகொண்டா  ஸ்மார்ட்டான  பர்சனாலிட்டி .  சுறுசுறுப்பான  உடல்  மொழி  என  கலக்குகிறார். இவர்  மீது  எல்லாப்பெண்களும்  மேலே  மேலே  வந்து  விழுகிறார்கள்  என்பதெல்லாம்  கமல் காலப்படங்களில்  காட்டப்பட்ட  பழைய  டெக்னிக் 


நாயகி  ஆக மிருணாளி  தாக்கூர் . பணக்காரத்தனமான  பின்  பாதிக்காட்சிகளில்  கம்பீரம் . குடும்பப்பாங்கான  முதல்  பாதி  படத்தில்  எளிமையான  அழகு  கவர்கிறது .  படம்  முழுக்கவே  அவரது  ஆடை  வடிவமைப்புகள்  கண்ணியமான அ ழகு 


 இருவருக்குமான  கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆகவில்லை . 

நாயகனின்  பாட்டியாக  வரும்  ரோகினி  ஹட்டாங்காரி  அருமையான  நடிப்பு . 

வெண்ணிலா  கிஷோர்  , விடிவி  கணேஷ் இருவரும்  காமெடிக்கு. கச்சிதம் 


மார்த்தாண்ட்  கே  வெங்கடேஷ்வராதான்  எடிட்டிங். 162  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது . ரொம்பவே  நீளம். 


கே  யூ  மோகனன்  ஒளிப்பதிவில்  ஃபாரீன்  காட்சிகள்  பிரம்மாண்டம் 


கோபி  சுந்தர்  இசையில்  5  பாடல்கள் .,அவற்றில்  3  ஹிட் .பிஜிஎம்  ஓக்கே  ரகம் 


சபாஷ்  டைரக்டர்


1  மாந்தோப்புக்கிளியே சுருளிராஜன்  மாதிரி  நாயகன்   அண்ணன்  குழந்தைகளுக்கு  மிக  மிக  லேசாக பேப்பர் போல  தோசை  சுட  அண்ணி  அதை  வாயால்  ஊத  காற்றுக்குப்பறந்து  போய்  குழந்தை  தட்டில்  விழும்  காட்சி  கலகலப்பு 


2  முதல்  பாதி  பெண்களைக்கவர்வது  போல  ஃபேமிலி  செண்ட்டிமெண்ட்ஸ்  காட்சிகளை  கலகலப்பாக  சொன்ன  விதம். பின்  பாதியைக்காதலர்களுக்குப்பிடித்தபடி   சொன்னவிதம்  கச்சிதம் 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1   என்னை  சுத்திப்பாரு , சொந்த  பந்தம்  நூறு


2  கோடை  மழை  ஒரு  நொடிக்குள்ளே 


3  அச்சுப்புன்னகை  உதிர்க்கும்  இதழே


  ரசித்த  வசனங்கள் 


1   எல்லாருக்காகவும்  வாழும்  ஆண்களை  பெண்கள்  பாராட்டுவாங்க , ஆனா  தனக்காக  வாழும்  ஆணை  மட்டும்  தான்  பெண்கள்  விரும்புவாங்க 


2 கஷ்டத்துல  வளர்ந்தவன்  நான் கஷ்டத்துல  இருக்கற  உன்னை  நிர்க்கதியா  விட்டுட  மாட்டேன்


3   என்  அண்ணனின்  குழந்தைகளுக்கு  நான்  செஞ்சா  அது  கடன், அதுவே  அண்ணனே  செஞ்சா  அது  பாசம் 


4  அவங்க  எல்லாரையும்  பாத்துக்க   நீ  இருக்கே . உன்னைப்பார்த்துக்க  ஒருத்தி  இருக்கனுமில்ல?


5   நான்   ரொம்ப  பிடிவாதக்காரன்

 ஆம்பளைன்னா பிடிவாதக்காரனாதான்  இருக்கனும்


6   அவளுமா  என்  கூட  ஃபாரீன்  வர்றா?


 யாரு?ஓனர்  பொண்ணா?அவங்க  கூட  தான்  நீங்க  போறீங்க 


7  தம்பி , உனக்கு  கல்யாணம்  ஆகிடுச்சா?


 இல்லை ஆண்ட்டி. உங்களுக்கு  மேரேஜ்  வயசுல  பொண்ணு  இருக்கா? என்னை  அப்ரோச் பண்றீங்களா?


 ச்சே  ச்சே  .பார்க்க  அப்பாவியா  இருக்கீங்க . மேரேஜ்  பண்ணும்போதாவது  விவரமான  பொண்ணா  பண்ணிக்குங்க. அப்பதான்  குப்பை  கொட்ட  முடியும் 


8  கார்  அவங்களை  இறக்கி  விட்டுட்டு  வருமா?


 நோநோ  வராது . அது  ஓனர்  போகும்  கார். எம்ப்ளாயிஸ்க்கு  வேற  கார் 


9  புளியோதரையைப்பார்த்தா  நான்  புலி  ஆகிடுவேன்


10  நாம  இருக்கும்  இடம்  சரியா  இருந்தா  நம்ம  பிள்ளைகளை  அந்த  இடமே  வளர்த்துடும்


11  கிழிஞ்சு  போன  புக்குக்கு  அட்டை  போட்ட  கிறுக்கன்  மாதிரி  இருக்கான். அவனைப்பத்தியா  புக்  எழுதுனீங்க ?


12  ஐ  லவ்  யூ-ன்னா  ஐ  லவ்  யுவர்  ஃபேமிலினு  அர்த்தம் 


13   ஒரு  குடிகாரனைக்கூட  கூட  வெச்சுக்கலாம், ஆனா  நம்மை  யூஸ்  பண்ணிக்கிட்டு  தூக்கிப்போடறவங்களை  கிட்டேயே  விடக்கூடாது 


  லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  கஞ்சப்பிரபுவான  நாயகன்  தன்  அண்ணனின்  குழந்தைகளுக்கு  தோசை  சுடுவதில் எல்லாம்  கணக்குப்பார்த்து  லேசான  தோசையாக   சுட்டு  மாவை  மிச்சம்  செய்பவர்  தன்    அண்ணன்  சரக்கு  அடிக்க  மட்டும்  தாராளம் காட்டுவது  ஏனோ?  தண்ணி  அடிப்பதே  தண்டச்செலவு  தான்.அதிலும்  தன்  அண்ணன்  தண்ணி  அடிக்க  இவர்  ஏன்  அவ்ளோ  செலவு  பண்றார் ? 


2  நாயகன்  குடிகாரனான  தன்  அண்ணனுக்கு  அட்வைஸ்  செய்வதை  தனிமையில்  செய்து  இருக்கலாம். வாடகைக்கு  குடி  இருக்கும் பெண்  எதிரில்  குடும்பத்தினர்  அனைவர்  முன்னிலையில்  தான்  அப்படி  செய்வாரா?


3   வறுமையில்  கஷ்டப்படும்  குடும்பம்  என  அடிக்கடி  நாயகன்  தன்  ஃபேமிலி  பற்றி  சொல்கிறார். ஆனால்  ஹையர் மிடில்  கிளாஸ்  போல  பங்களா  வாழ்க்கை  தான்  வாழ்கிறார்


4  நாயகன்  நாயகியை  லைப்ரரியில்  அனைவர்  கண்  முன்  பளார்  என  அறைய  காரணம்  பலமாக  இல்லை 


5 நாயகியின்  ஆராய்ச்சிகட்டுரை  பைண்டிங்  புக்  தர  வரும்  ஆள்  தரும்  புக்  1000  பக்கங்கள்  உள்ளது  போல  மொத்தமாக  இருக்கு , ஆனா  அதே  புக்கை  நாயகன்  லைப்ரரில  நாயகியிடம்  தூக்கி  எறியும்போது  20  பக்க  அளவு  தான்  இருக்கு 


5   நாயகியை  நோஸ்கட்  பண்ண  நாயகன்   டாம்  டூம்  என  செலவு  செய்வது  ஓவர்  எனில்  அந்த  செலவுக்காக  தான்  பணி  புரியப்போகும்  புதுக்கம்பெனியில்  2  வருச  சம்பளத்தை  அட்வான்ஸாகக்கேட்டு  வாங்குவது  காதில்  பூ. இப்ப  எல்லாம்  ஒரு  மாச  சம்பளம் அட்வான்சாக்கேட்டாலே  யாரும்  தர்றது  இல்லை . 2  கோடி  ரூபாய்  அட்வான்ஸ்  கிடைப்பது  எல்லாம் .....ஓவர்


6  நாயகன்  ஆல்ரெடி  2  வருச  சம்பளத்தை  அட்வான்சா  கடன்  வாங்கிட்டார் . ஆனால்  முதல்  மாசமே  அவர்   ஃபோனில்  சேலரி  கிரெடிட்டட்  என  மெஜேஜ்  வந்ததைக்கண்டு  கமெண்ட்  அடிக்கிறார். எப்படி  மீண்டும்  சம்பளம்  வரும் ? 


7   சின்னத்தம்பி , ஒரு  ஊருல  ஒரு  ராஜகுமாரி ஆகிய  படங்களில்  நாயகன்  அப்பாவியாக  இருப்பதாகக்காட்டி  இருந்தது  ரசிக்கும்படி  இருந்தது . ஆனால்  இதில் நாயகனின்  கேரக்டர்  டிசைன்  சரி  இல்லை .நாயகியை  பளார்  என  ஓங்கி  அறைவது  ஏற்றுக்கொள்ளும்படி  இல்லை 


8  நாயகன் -  நாயகி  இருவ்ரின்  காதலில்  உயிர்ப்பு  இல்லை .காதல்  கதையில்  இது  பெரிய  பின்னடைவு 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ  படம்  தான்  ஒரு  லிப்  லாக்  சீன்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  விஜய்தெவரகொண்டா  ரசிகைகள் .மிருணாளி  ரசிகர்கள்  மட்டும்  பார்க்கலாம். சராசரி  தரம்  உள்ள  சுமாரான  படம்  . ரேட்டிங்  2 / 5 


The Family Star
Directed byParasuram
Written byParasuram
Produced by
Starring
CinematographyK. U. Mohanan
Edited byMarthand K. Venkatesh
Music byGopi Sundar
Production
company
Release date
  • 5 April 2024[1]
Running time
163 minutes[2]
CountryIndia
LanguageTelugu
Budget₹50 crores[3]
Box officeest.₹35 crores[4]

Wednesday, May 01, 2024

ரோமியோ (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா )

          


அறிமுக  இயக்குநர்  வினாயக்  வைத்திய  நாதன்   திரைக்கதை  வசனத்தில்  தயாரிப்பாளர்  விஜய்  ஆண்ட்டனி  எடுத்த  சொந்தப்படம்  இது .கே  பாக்யராஜ்  அல்லது லிவிங்க்ஸ்டன்  நாயகனாக  நடித்தால்  பொருத்தமாக  இருக்கும்  இந்தத்திரைக்கதைக்கு  நாயகனே  தயாரிப்பாளர்  என்பதால்;  வேறு  வழி  இல்லாமல்   அதை  ஏற்றுக்கொள்ள  வேண்டி  இருக்கிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகியின்  லட்சியம்  சினிமா  நடிகை  ஆக  வேண்டும்  என்பதே. இந்த  உயர்ந்த  லட்சியத்துக்காக   ஐ டி  கம்பெனியில் வேலை  செய்வதாக நாயகி  வீட்டில்  பொய்  சொல்லி  விட்டு  நகரத்தில்  சினிமா  வாய்ப்பு  தேடிக்கொண்டிருக்கிறார். சினிமாக்கனவில்  இருக்கும்  வேறு  மூன்று  நண்பர்கள்  வேற  எக்ஸ்ட்ரா  லக்கேஜ்  


நாயகன்  ஒரு இழவு  வீட்டில்  நாயகியைக்கண்டதும்  காதலில்  விழுகிறார்.. பெற்றோர்  அதே  பெண்ணை  தங்கள்  மகனுக்கு  திருமணம்  செய்து  வைக்கின்றனர்


 திருமணம்  செய்யும்  ஐடியாவே  இல்லாத  நாயகி  வேறு  வழி  இல்லாமல்  அதை  ஏற்கிறார்.. திருமணம்  முடிந்ததும்  நாயகனிடம்  தன்  லட்சியத்தைக்கூறி  நாம்  டைவர்ஸ்  பண்ணிக்கலாம்  என்கிறார்


அதிர்ச்சி  ஆன  நாயகன் உன்னை  நான்  நடிகை  ஆக்குகிறேன்  என சொந்தப்படம்  எடுக்கத்துணிகிறார். அவர் தான்  நாயகன்,  அவர்  மனைவி  தான்  நாயகி 


ஷூட்டிங்  ஒரு  பக்கம்  போய்க்கொண்டிருக்க  இன்னொரு  பக்கம்  நாயகன்  ஃபேக்  ஐ  டி  ஓப்பன்  பண்ணி  வேறு  ஒரு  பெயரில்  தன்  மனைவியுடன்   நட்புக்கொள்கிறார்


 நாயகியின்  லட்சியம்  நிறைவேறியதா?   தாலி  கட்டிய  சொந்த  சம்சாரத்தையே  லவ்  பண்ண  துடிக்கும்  நாயகனின்  விருப்பம்  நடந்ததா? என்பது  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  விஜய்  ஆண்ட்டனி . இவர்  முகத்துக்கு  சைக்கோ  த்ரில்லர் மூவி  அல்லது  போலீஸ்  கேரக்டர்  தான்  சரியாக  இருக்கும். இவர்  ஏன்  காமெடி  கேரக்டர்  செலக்ட்  செய்தார்  என்பது  தெரியவில்லை  இவருக்கு  நல்ல  நாள்லயே நடிப்பு  வராது . காமெடி  கேரக்டர்  வேற . சமாளிக்கிறார்


 நாயகி  ஆக  மிருணாளினி. சுமாரான  அழகு ,   வெகு  சுமாரான  நடிப்பு .


விடிவி  கணேஷ்  கொஞ்சம்  சிரிக்க  வைக்கிறார்.  யோகி  பாபு  கேரக்டர்   வலுக்கட்டாயமாக  திணிக்கப்பட்ட  கேரக்டர். ஒட்டவில்லை .  அவர்  பேசுவதில்  காமெடி   என்பது  இல்லை 


இளவரசு , தலை  வாசல்  விஜய்  பொன்ற  நல்ல  கலைஞர்கள்  வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள் 


146  நிமிடங்கள்  ஓடும்படி  எடிட்  செய்து  இருக்கிறார்  எடிட்டர்  விஜய்  ஆண்ட்டனி.

 பரத்  தனசேகர்  , ரவி ரோய்ஸ்டார்  ஆகிய  இருவரும்  தான்  இசை  எட்டு  பாடல்கள் . இரண்டு  பாடல்கள்  ஹிட்  ஆகி  இருக்கின்றன 


 ஃபரூக்  ஜெ  பாஷா  தான்  ஒளிப்பதிவு , நாயகியை  ஒரு  ஷாட்டில்  கூட  க்ளோசப்பில்  அழகாகக்காட்ட  அவர்  மெனக்கெடவில்லை .மாறாக  தயாரிப்பாளர்  கம்  எடிட்டர்  கம்  ஹீரோ  விஜய்  ஆண்ட்டனிக்கு  ஏகபப்ட்ட  க்ளோசப்  ஷாட்கள் . ஷப்பா  முடியல 


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார் வினாயக்  வைத்திய  நாதன் 


சபாஷ்  டைரக்டர்


1   ரோமியோ” (2024) பட்டி டிங்கரிங் அட்லீ வெர்சன் ஆஃப் நெஞ்சத்தை கிள்ளாதே(1980) மவுன ராகம் (1986) + ராஜா ராணி (2013) என்பதை உணர விடாமல் சாமார்த்தியமாக திரைக்கதை அமைத்தது


2 நாயகியின் கேரக்டர் டிசைனை அவரது காட்சிகளை தாவணிக்கனவுகள் கே பாக்யராஜ் போல அமைத்தது


3 தயாரிப்பாளர் மனம் குளிரும்படி அவருக்கு மட்டும் 768 க்ளோசப் ஷாட்ஸ் வைத்தது


4 போஸ்டர் டிசைனில் நாயகி சரக்கு அடிப்பது போல சென்சேஷனல் மேட்டர் டச் செய்தது


5 மெயின் கதைக்கு சம்பந்தமே இல்லை என்றாலும் நாயகனை டி ஆர் மாதிரி தங்கை செண்ட்டிமெண்ட் ஃபிளாஸ்பேக் வைத்து தாய்க்குலங்களின் ஆதரவைப்பெற நினைத்தது


  ரசித்த  வசனங்கள் 


1  வாழ்க்கைல  நாம  யார்?னே  நமக்குத்தெரியாதப்ப  நம்மை  அடையாளம்  காட்ட  ஒருவர்  நம்  வாழ்க்கையில்  வருவார்


2   எந்த  மாதிரி  ஆணை  பெண்ணுக்குப்பிடிக்கும்? என்பதை  விட  பெண்ணுக்கு  என்ன  எல்லாம்  பிடிக்கும்  என்பதைத்தெரிந்து  வைத்திருக்கும்  ஆண்  அப்பெண்ணின்  மனம் கவருவான் 


3  நீ  எல்லாம்  ஒரு  ஆம்பளையா?னு  கேட்டிருக்கா,. ஓங்கி  அறையலாமில்ல? \

ஓங்கி  அறைஞ்சுட்டா  அவன்  ஆம்பளை  ஆகிடுவானா? 


4  நீ  ஏன்  இவ்ளோ  நல்லவனா  இருக்கே?  பெண்களுக்கு  இவ்ளோ  நல்லவனைப்பிடிக்காது 


5  ஒரு  விஷயம்  வேணும்னா  அதை நாம்  200%  நம்பனும், அப்படி  நம்பினா  இந்த  உலகம்  நமக்கு  அதை  முடிச்சுக்கொடுக்கும் 


6  கனவுன்னு  ஒண்ணு  வரக்கூடாது , அப்படி  வந்தா  அது  சீக்கிரம்  நடக்கனும்


7   சந்தோஷம் இருக்கும்போது  வாழ  நல்லாருக்கும், ஆனா  கஷ்டம்  வரும்போதுதான்  நமக்கு  வாழக்கத்துத்தரும் 


8  பெண்கள்  தாலி  கட்டும்  வைபவம்  நடக்கும்போது  அழுவாங்க , ஆனா  அதுக்குப்பின்  ஆண்கள்  தான்  காலம்  பூரா  அழனும்

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1     ஐ டி  கம்பெனியில் வேலை  செய்வதாக நாயகி  வீட்டில்  பொய்  சொல்லி  விட்டு  நகரத்தில்  சினிமா  வாய்ப்பு  தேடிக்கொண்டிருக்கிறார்.. நான்கு  வருடங்களாக  அவர்  சம்பளம்  என்ன  ஆனது ?  எங்கே  வேலை  செய்கிறார்?  எங்கு  தங்குகிறார்  என்றெல்லாம்  கவலைப்படாத  பெற்றோர் இருப்பார்களா? 


2 பெண்  பார்க்கும்  படலம், வழித்தடம்  பார்த்தல் , நிச்சயதார்த்தம்,  என  எல்லா  சம்பிரதாயங்களும்  முடிந்து  திருமனம்  நடக்க 8  மாதங்கள்  முதல்  ஒரு  வருடம்,  வரை  ஆகும். ஆனால்  சினிமாக்களில்  மட்டும்  ஒரு  வாரத்திலேயே  நடக்கிறது


3  திருமண  மண்டபம்  புக்  பண்ணனும்னா  மினிமம்  5  மாதங்களுக்கு  முன்பே  அட்வான்ஸ்  கட்டி  புக்  பண்ணனும் .  ஒரே  வாரத்தில்  மணடபம்  எப்படிக்கிடைக்கும் ?


4  இந்து  திருமண  சட்டப்படி  திருமணம்  முடிந்து  ஒரு  வருடம்  ஆன  பின்  தான் டைவர்ஸ்  அப்ளை  பண்ண  முடியும். ஒரே  வாரத்தில்  எப்படி  அப்ளை  பண்றாங்க ?


5   சினிமா  நடிகை  ஆக விரும்பும்  அனைத்துப்பெண்களும்  சந்திக்க  இருக்கும்  பிரச்சனை  பாலியல்  ரீதியான  முறைகேடுகள்  தான். ஒரு  தயாரிப்பாளர்  நாயகியை  படுக்கைக்கு  அழைக்கிறார்  என்றதும்  நாயகன்  வீரம் கொண்டு  அடித்து  வீழ்த்துவது  பெரிய  இம்ப்பேக்ட்டைத்தரவில்லை .


6    இந்தக்கதைக்கும்  தங்கை  செண்ட்டிமெண்ட்  ஃபிளாஸ்பேக்  கதைக்கும்  சம்பந்தமே  இல்லை . வீண்  திணிப்பு 


7  7  நாயகிக்குத்தெரியாமல்  ஃபேக்  ஐடி  ஆரம்பிக்கும்  நாயகன்  அந்த  ஃபேக் ஐடி  ஃபோன்  நெம்பரை  எப்போதும்  ஆன்  ல   வைப்பாரா?  திடீர்  என  மனைவி  கால்  பண்ணினா  காட்டிக்கொடுக்கும்  என  தெரியாதா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பெண்களுக்கு  ஒருவேளை  பிடிக்கலாம்,  ஆண்கள்  கடுப்பாக  வாய்ப்பு  உண்டு . ரேட்டிங் 2.25 / 5


Romeo
Theatrical release poster
Directed byVinayak Vaithianathan
Written byVinayak Vaithianathan
Produced byMeera Vijay Antony
StarringVijay Antony
Mirnalini Ravi
CinematographyFarook J. Basha
Edited byVijay Antony
Music byBarath Dhanasekar
Ravi Royster
Production
company
Vijay Antony Film Corporation
Distributed byRed Giant Movies
Ayngaran International
A & P Groups
Release date
  • 11 April 2024
Running time
146 minutes
CountryIndia
LanguageTamil

Friday, April 19, 2024

பொன் ஒன்று கண்டேன் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா ) @ ஜியோ சினிமாஸ்

   

இயக்குநர்  மணி ரத்னமிடம் அச்ஸ்டெண்ட்  டைரக்டராக  ஒர்க்  பண்ணீய  வி  பிரியா சுஹாசினி  மணி  ரத்னம்  கூடவும்  பணி  ஆற்றி  இருக்கிறார். 2005  ஆம்  ஆண்டு  இவர்  இயக்கத்தில் வந்த  கண்ட  நாள்  முதல்  என்ற  ரொமாண்டிக் டிராமா  ஹிட்  ஆனாலும்  2007  ஆம்  ஆண்டு  இவர்  இயக்கிய கண்ணாமூச்சி  ஏனடா   சுமாராகத்தான்  போனது  என்பதால்  பெரிய  வாய்ப்பு  இல்லை . நீண்ட  இடைவெளிக்குப்பின்  இப்படம்   14/4/2024  முதல்  கலர்ஸ்  டிவியிலும் ஜியோ  சினிமாஸ்  லயும்  நேரடியாகத்திரைக்கு  வருகிறது .   திரை  அரங்குகளில்  ரிலீஸ்  ஆகவில்லை 


ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன் , வில்லன் , நாயகி  மூவரும்  சின்ன  வயதில் ஒன்றாகப்படித்தவர்கள் . அப்போதே  நாயகியின்  காதலைப்பெற  இருவரும்  அடித்துக்கொண்டவர்கள்  தான்.  நீண்ட  இடைவெளிக்குப்பிறகு  ஸ்கூல்  ரீயுனியன்  நடக்கும்போது   நாயகனும் , வில்லனும்  ஆரம்பத்தில்  விரோதமாகப்பார்த்துக்கொண்டாலும்  ஒரு  கட்டத்தில்  இருவரும்  நண்பர்கள்  ஆகி  விடுகிறார்கள் 


 வில்லன்   பர்சனாலிட்டியாக  இருக்க ,   பர்சனாலிட்டியாகதெரிய  நாயகன்  உதவுகிறான். வில்லன்  நாயகியை  எதேச்சையாக சந்திக்கிறான். நாயகியிடம் எப்படி  காதலை  வெளிப்படுத்துவது ? எப்படி  டெவலப்  செய்வது   என  நாயகனிடம்  ஐடியா கேட்கிறான். 


 ஒரு  சமயம்  நாயகன் , நாயகி , வில்லன்  மூவரும்  சந்திக்கிறார்கள் ,. அப்போதுதான்  ஒரு  ட்விஸ்ட்  ஓப்பன்  ஆகிறது. நாயகி  நாயகனின்  முன்னாள்  மனைவி . 


இதற்குப்பின்  நிகழும்  திருப்பங்கள்  தான்  மீதி  திரைக்கதை .  நாயகி  யாரை    தேர்வு  செய்கிறார்  என்பது  க்ளைமாக்ஸ் 


நாயகன்  ஆக  அசோக்  செல்வன்  நாயகன்  கமல்  கெட்டப்பில்  மீசை  இல்லாமல்  பிரமாதமாக  இருக்கிறார்.  அவரது  நடிப்பில்  அனுபவம்  பளிச்சிடுகிறது . ஸ்மார்ட்  ஆக  நடித்து  ரசிகைகளின்  மனம்  கவர்கிறார்


 ஐஸ்வர்யா  லட்சுமி  கண்ணியமான  உடை , கவுரவமான  தோற்றம், இயல்பான  நடிப்பு  , மயங்க  வைக்கும்  சிரிப்புடன்  களம்  இறங்கி  இருக்கிறார் 


  வில்லன்  ஆக   வசந்த்  ரவி  ஜோதிகாவுக்கு  அண்ணன்  போல  ஓவர்  ஆக்டிங்  செய்கிறார் , அவரது  உடல்  மொழி , வசன  உச்சரிப்பு  , சிரிப்பு  எல்லாவற்றிலும்  ஓவர்  செயற்கை 


நடிகை  சச்சு  கேரக்டர்  ஆர்ட்டிஸ்ட்  ஆக  வருகிறார். கச்சிதம் 


 நாயகனின்  அக்கா ,  தங்கைகளாக  வருபவர்கள்  கூட  ஓவர்  ஆக்டிங்  தான். தேவை  இல்லாத  கதாபாத்திரங்கள் 



சதீஷின்  எடிட்டிங்கில்  படம்  இரண்டு  மணி  நேரம்  தான்  ஓடுகிறது , ஆனால்  3  மணி  நேரம்  ஓட்ஃபுவது  போல  பிரமை 


யுவன்  சஙகர்  ராஜா  இசையில்  பாடல்கள்  சுமார்  ரகம்  தான்  பிஜிஎம் கூட  சராசரி  தரம்  தான் 


பகத்தின்  ஒளிப்பதிவு  குட் 


ரீமா  ரவி  உடன் இணைந்து  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார்  வி  ப்ரியா 

சபாஷ்  டைரக்டர்


1   1996 ல்  ரிலீஸ்  ஆன  காதல்  தேசம்  கதையைத்தான்  பட்டி  டிங்கரிங்  பண்ணி  இருக்கிறார்  என்பது  தெரியாத  வண்ணம்  அட்லீ  ஒர்க்  செய்த  சாமார்த்தியம்  அருமை 


2  நாயகன்  -  நாயகி  கெமிஸ்ட்ரி  ஒர்க்  ஆவுட்  ஆன  விதம் 


3  அசோக்  செல்வனின்  அனுபவம்  மிக்க  நடிப்பு ,  ஐஸ்வர்யா  லட்சுமியின்  இளமை 



  ரசித்த  வசனங்கள் 


 லொட  லொட  என  எல்லாரும்  படம்  பூரா    பேசிட்டே  இருக்காங்க . ஆனா  ஒரு  டயலாக்  கூட  உருப்படி  இல்லை , அடுத்த  படத்திலாவது  இயக்குநர்  ப்ரியா -  பிகேபி , சுபா  மாதிரி  சரக்கு  உள்ள  ரைட்டரை  டயலாக்  ரைட்டர்  ஆக  நியமிப்பது  நல்லது


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகிக்கு  பெற்றோர்  வைத்த  பெயர்  சுந்தரி. அந்த  அழகான  பெயர்  பலர்  வாயில் நுழையவே  இல்லை , உச்சரிக்க  சிரமப்படுகிறார்கள்  என  நாயகியே  தன்  பெயரை  சாண்டி என  மாற்றிக்கொள்கிறார். இந்த  டாப்பிக்  படம்  முழுக்க  ஆங்காங்கே  அலசப்படுகிறது .எதற்கு ? என  தெரியவில்லை . நாயகி  அதைப்பற்றிப்பேசும்போதெல்லாம்  எரிச்சல்  வருகிறது 


2  நாயகன்  வில்லனின்  ஹேர் ஸ்டைல் , அப்பியரன்ஸ்  எல்லாவற்றையும்  மாற்றிய  பின்  அனைவரும்  வில்லனின் தோற்றத்தை  சிலாகிக்கிறார்கள் . ஆனால்  எனக்கு  எந்த  மாற்றமும்  தெரியவில்லை . அப்போதும்  தாடி , பரட்டைத்தலை  என   கேவலமாக  இருக்கும்  வில்லன்  கெட்டப்  சேஞ்ச்  நடந்த  பின்னும்  அதே  கேவலமான  தாடியுடன்  தான் , பரட்டையாகத்தான்  இருக்கிறான் 


3  படத்தில்  எல்லோரும்  லொட  லொட  என  பேசிக்கொண்டே  இருக்கிஒரார்கள் . இயக்குநர்  ஒரு  பெண்  என்பதால்  அபப்டி  இருக்கலாம். அட்லீஸ்ட்  பிஜிஎம்  மையாவது  சைலண்ட்  மோடில்  வைத்திருக்கலாம். ஒரே  இரைச்சல் . கொஞ்சம்  அமைதியாத்தான்  இரேன்பா  என  கத்த  வைக்கிறது 



4  பொதுவாக  இந்த  மாதிரி  படங்களில்  தம்பதி  ஆக  இருந்தவர்கள்  ஏன்  பிரிந்தார்கள்  என்று  காரணம்  சொல்வதில்  அழுத்தம்  இருக்காது . ஆனால்  இதில்  விஷூவலாக  என்ன  காரணத்தால்  பிரிந்தார்கள்  என  சொல்லவே  இல்லை .  நாயகிக்கு  சமைக்கத்தெரியாது  என்பதுதான்  நாயகன்  வைக்கும்  ஒரே  குற்றச்சாட்டு . இப்போ  இருக்கும்  பெண்களில்  யாருக்குமே  திருமணமே  ஆகாது, இதெல்லாம்  ஒரு  காரணமா? இந்தக்காலத்தில்    ஆண்களே  சமைக்கிறார்கள் . பொண்ணு  கிடைச்சா  போதும்னு  அவனவன்  அலையறான்


6  நாயகனின்  கற்பனையில்  வில்லனும்  நாயகியும்  டீயட்  பாடுவது , வில்லனின்  கற்பனையில்  நாயகனும்  நாயகியும்  டூயட்     பாடுவது  அபத்தம் 


7  நாயகியின்  கேரக்டர்  டிசைனில்  தெ:ளிவில்லை . செம  பர்சனாலிட்டியாக  இருக்கும்  நாயகனைப்பிரிகிறார். பஞ்சப்பரதேசி  மாதிரி  கஞ்சா  கேஸ்  மாதிரி  இருக்கும்  தாடிக்காரன்  ஆன  வில்லனை  விரும்புகிறார்



8  வில்லனின்  கேரக்டர்  ஸ்கெட்ச்  சரி இல்லை . நாயகன்  டாக்டர்   ஆக  இருக்கிறார் , சரி , வில்லன்  என்ன  செய்கிறார்? எப்போப்பாடு  நாயகி  பின்னால்  சுத்திட்டு  தான்  இருக்கார் . வேலை  வெட்டிக்கே  போவதில்லை


9  ஐந்து  வருட  மணவாழ்க்கைக்குப்பின்  பிரியும்  நாயகனும்  நாயகியும்  மீண்டும் சந்திக்கும்போது  பரஸ்பரம்  ஃபோன்  நெம்பர்  என்ன  எனகேட்டு  ஷேர்  பண்ணிக்கறாங்க. ஒரு  டாக்டராக  இருப்பவர்  அடிக்கடி  ஃபோன்  நெம்பரை  மாற்றிக்கொண்டா  இருப்பார் ? ஒரு  மெடிக்கல்  ஸ்டூடண்ட்  ஆன  நாயகி  ஏன்  ஃபோன்  நெம்பர்  மாற்றுகிறார் ? 


10  நாயகன் , நாயகி  இருவருக்கும்  டைவர்ஸ்  ஆச்சா? இல்லையா? என்பதில்  ஒரு  தெளிவு  இல்லை 


11  லெஜெண்ட்  டைரக்டர்  ஆக  மணிரத்னம்  திருடா  திருடா  பட  க்ளைமாக்ஸில்  ஒரு  முட்டாள்  தனம்  செய்திருப்பார்.  ராசாத்தி  என்னுசுரு  என்னுது இல்லை  என  பாட்டுப்பாடிய  பிரசாந்த்தும், ஆனந்தும்  க்ளைமாக்சில்  ராசாத்தி    உனக்கு  புதையல்  எனக்கு  என  மாறி  மாறி  கோபம்  வர்ற  மாதிரி  காமெடி  பண்ணும்  காட்சி  வரும்,  சீரியசான  காதலை  காமெடி   மாதிரி  ஆக்கினால்  கடுப்புதான்  வரும் , இந்தப்பட  க்ளைமாக்சும்  அதுவே 


12  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  என  நாயகன், வில்லன்  இருவருக்குமான  க்ரஸ்  க்ளாஸ்மேட்  நாயகி  அல்ல  இன்னொரு  பெண்  என  காட்டுவது  பயங்கர  சொதப்பல் 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  அசோக்  செல்வன்  ரசிகைகள் , ஐஸ்வர்யா லட்சுமி  ரசிகர்கள் மட்டும்  பார்க்கலாம்.  காதல்  தேசம்  பார்க்காதவர்கள்  பார்க்கலாம்  .   ரேட்டிங்  2/ 5 



Pon Ondru Kanden
Poster
Directed byV. Priya
Written byV. Priya
Screenplay byV. Priya
Reema Ravichander
Produced byJyoti Deshpande
Yuvan Shankar Raja
StarringAshok Selvan
Aishwarya Lekshmi
Vasanth Ravi
CinematographyAT Bagath
Edited bySathish Suriya
Music byYuvan Shankar Raja
Production
companies
Jio Studios
YSR Films
Distributed byJioCinema
Release date
  • 14 April 2024
CountryIndia
LanguageTamil

Thursday, April 18, 2024

DEAR (2024) - டியர் - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி டிராமா)

            


ஒரு  அசிஸ்டெண்ட்  டைரக்டர் இரு  வேறு  டைரக்டர்களிடம் ஒரே  கதையின்  ஒன் லைனை  கொஞ்சம்  மாற்றிச்சொல்லி  இருப்பார்  போல , இரு இயக்குநர்களுக்கும் தாங்கள்  எடுப்பது  ஒரே  கதை  தான்  என்பது  தெரியாமல்  இருந்திருக்கலாம். ஒரு இயக்குநரின்  படம்  முதலில்  ரிலீஸ்  ஆகி  முந்திக்கொண்டதால்  இரண்டாவது  டைரக்டருக்கு அதிர்ச்சி . பாதிப்படம்  எடுத்தாகி  விட்டது . டிராப்  பண்ணவும்  முடியாது . அதனால்  அவசர  அவசரமாக பின்  பாதி  திரைக்கதையில் மாற்றம்  செய்து  இரு  வேறு  கிளைக்கதைகளை  புகுத்தி  ஒப்பேற்றி  இருக்கிறார்கள் 


இது  தமிழ்  சினிமாவுக்குப்புதுசில்லை . சார்லி  சாப்ளின் நடித்து  1931 ல்  ரிலீஸ்  ஆன  சிட்டி  லைட்ஸ்  என்ற  படத்தின்  கதையை  பட்டி  டிங்கரிங்  பண்ணி  அட்லீ  ஒர்க்  செய்யப்பட்ட  கதைகள்  தான்  29/1/1999 ல்  ரிலீஸ்  ஆன  துள்ளாத  மனமும்  துள்ளும் , 30,4,1999 ல்  ரிலீஸ் ஆன  நிலவே  முகம்  காட்டு . முந்திக்கொண்ட  படம்  மெகா  ஹிட் , லேட்டா  வந்த  படம்  சுமார்  ஹிட் 


14//1/1998  ல்  ரிலீஸ்  ஆன  நாம் இருவர் நமக்கு இருவர்,  14/4/1998 ல்  ரிலீஸ்  ஆன  காதலா  காதலா  ஆகிய  இரு  படங்களுமே  ஒரே  டிவிடியைப்பார்த்து  சுட்டு  எடுத்த  படங்களே!. இதில்  காமெடி  என்ன  என்றால்  இரண்டிலுமே  பிரபுதேவா  இருக்கிறார். . இதில்  முந்திக்கொண்ட  படம்  அட்டர்  ஃபிளாப் . லேட்டாக  வந்த  படம்  ஹிட். இரண்டுமே  ஆள்  மாறாட்டக்காமெடி  தான். முதல்  படத்தில்  பிரபுதேவாவே    டபுள்  ரோலையும்  செய்திருப்பார். இன்னொன்றில்  கமல் +  பிரபு தேவா . வசனம்  இதில்  கிரேசி  மோகன். அதில்  ரைட்டர்  சுபா 



ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன்  டி வி  சேனலில்  செய்தி  வாசிப்பவர். இவர்  தன்  பணியில்  புகழ்  பெற  வேண்டும், சாதிக்க  வேண்டும்  என்ற  எண்ணம்  கொண்டவர் . நாயகி க்கு  ஒரு  குறைபாடு  உண்டு . தனக்கு  வரப்போகும்  மாப்பிள்ளையிடம்  தன்னிடம்  இருக்கும்  குறை  பற்றி  முன் கூட்டியே  சொல்கிறார். எல்லாருமே  துண்டைக்காணோம், துணியைக்காணோம்  என  ஓடி  விடுகிறார்கள் 


  இதனால்  நாயகியின்  பெற்றோர்  இந்த  முறை  நாயகன்  பெண்  பார்க்க  வரும்போது  நாயகியை  அடக்கி  வாசிக்கச்சொல்கிறார்கள் . திருமணம்  நடக்கிறது 


நாயகியின்  குறை  நாயகனுக்குத்தெரிய  வருகிறது . ஆரம்பத்தில்   அதைப்பெரிதாக  எடுத்துக்கொள்ளாத  நாயகன்  அந்தப்பிரச்சனையால்  தன்  வேலையே  போகும்போது  தன்   எதிர்கால  நன்மை  கருதி  நாயகியை  டைவர்ஸ்  செய்ய  முன்  வருகிறார். இதற்குப்பின்  திரைக்கதையில்  ஏற்படும்  திருப்பங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  ஜி வி பிரகாஷ் . தாடி  கெட்டப்  சகிக்கவில்லை .  சிகை  அலங்காரம்  பஞ்சப்பரதேசி  போல்  இருக்கிறது . இந்த  மாதிரி  தகர  டப்பா  தலையரை  எந்த  நியூஸ்  சேனலில்  வேலைக்கு  எடுப்பார்கள்  என  தெரியவில்லை. ஆனால்  அவர்  நடிப்பு  கனகச்சிதம்


நாயகி  ஆக  ஐஸ்வர்யா  ராஜேஸ்.  சிரிப்பு  இவருக்கு  பிளஸ்  பாயிண்ட்  தான். ஆனால்  கீழ்  பல்  ஒன்று  விழுந்ததால்  ஒரு  கேப்  தெரிகிறது .  கேமரா  கோணம்  வைக்கும்போது  அது  தெரியாமல்  காட்ட  வெண்டும்.


 நாயகனை  விட  நாயகி  உயரம் ,  வயது  இரண்டுமே  அதிகம்    என்பதால்  ஜோடி  மாதிரி  தெரியவில்லை . அக்கா  - தம்பி  போல்  காட்சி  அளிக்கின்றனர். இது போதாது  என  படம்  முழுக்க  நாயகி  நாயகனி  டேய்  என்று  தான்  அழைக்கிறார்


நாயகனின்  அம்மாவாக  ரோஹினி  ரகுவரன்  பாந்தமான  நடிப்பு . அப்பாவாக  தலை  வாசல்  விஜய்   சில  இடங்களில்  ஓவர்  ஆக்டிங்


நாயகியின்  அப்பாவாக  இளவரசு  யதார்த்தமான  நடிப்பு   நாயகியின்  அம்மாவாக  வரும்  கீதா  கைலாசம்  குட்  ஆக்டிங் . நாயகனின்  அண்ணனாக  வரும்  காளி  வெங்கட்  பிரமாதமான  நடிப்பு .  ஆனால்  ஒரே  ஒரு  இடத்தில்  ஓவர்  ஆக்டிங் 


ஜெகதீஷ்  சுந்தர  மூர்த்தியின்  ஒளிப்பதிவு  தரம், ஆனால்  நாயகிக்கு  க்ளோசப்ஷாட்கள்  இல்லை . ஜி  பிரகாஷ்  இசையில்  பாடல்கள்  ஓக்கே  ரகம் 


 இரண்டேகால்  மணி  நேரம்  படம்  ஓடும்படி  ட்ரிம்  செய்திருக்கிறார்  எடிட்டர் 




சபாஷ்  டைரக்டர்


 12  இடைவேளை  வரை  எடுத்த  பின்  அதே  கதையில்  இன்னொரு  படம்  ரிலீஸ்  ஆனதால்  சாமார்த்தியமாக  நாயகனின்  அம்மா, அப்பா  ஃபிளாஸ்பேக்  கதையை  உள்ளே  புகுத்தியது  அருமையான  ஐடியா


2   நாயகனின் அண்ணன் -  அண்ணி  இருவருக்குமிடையேயான  உறவுச்சிக்கலை  சொல்லி  வீட்டுக்கு  வீடு  வாசப்படி  என்ற  கருத்தை  சொன்ன  விதம் 


3  வசனகர்த்தா  பல  இடங்களில்  கவனம்  ஈர்க்கிறார்


  ரசித்த  வசனங்கள் 


1   ஒருவருடைய  கேரக்டர்  டிசைன்  அவர்  இருக்கும்  ஊரின்  க்ளைமேட்டுக்கு  ஏற்றாற் போல  மாறிக்கொண்டு  இருக்கும்


2  நீங்க  லைட்  ஸ்லீப்பரா?  சவுண்ட்  ஸ்லீப்பரா?  (  ஆழந்த  உறக்கம் )


  அது  வந்து... சவுண்ட்  ஸ்லீப்  தான்  ( குறட்டை  விடுவேன் ) 


3   அண்ணே !  நேத்து  நைட்  ரூம்ல  இருந்து  ஏதாவது  சத்தம்  கேட்டுதா? 


4   இந்த  ஹோட்டல்  ரூம்ல  ஏதாவது  சத்தம்  போட்டா  வெளில  கேட்குமா?


5   என்ன  சாதாரணமா  உங்க  லவ்  ஸ்டோரியை  முடிச்சுட்டீங்க ? ஸ்பைஸ்  கலந்து  சொல்லுங்க 


 ஸ்பைஸ்  எல்லாம்  லவ்  பண்ற  வரை  தான் . மேரேஜ்  ஆன  பின்  குறைகள்  தான்  தெரியும் 


6   நாம  ரொம்ப  நேசிச்சவங்களை  வெறுக்க  வேண்டி  வருவது  கொடுமை +


7   வாழ்க்கைல  இரண்டாவது  வாய்ப்பைத்தவற  விட்டவர்கள்  வாழ்க்கையையே  இழக்கிறார்கள் 


8   எனக்கு  இருக்கும்  ஒரு  குறைக்காக  என்னை  டைவர்ஸ்  பண்ற  நீ  அதே  குறை  நம்ம  குழந்தைக்கும்  இருந்தா  என்ன  செய்வே? 


9   நோ படி  100%  பர்ஃபெர்க்ட்  இன்  த  வோர்ல்டு 


10  ஒருவரோட  குறையை  ஏத்துக்கிட்டு  சகிச்சுக்கிட்டு  வாழ்வதுதான்  தாம்பத்யம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


 1  கொஞ்ச  நாள்  இடைவெளிக்குப்பின்  மகனைப்பார்க்கும்  அம்மா  ரோகினி  என்னடா  தாடி எல்லாம்  வளர்த்தி  இப்படி  இருக்கே?  என்கிறார். ஆனால்  படம்  போட்டதில்  இருந்து  கடைசி  காட்சி  வரை  நாயகன்  ஆன  மகன்  பஞ்சப்பரதேசி  போல  தான்  இருக்கிறார்


2    தனது  கணவர்  என்ன  காரணத்துக்காக  தன்னை  விட்டுப்போனார்?  இப்போது  எப்படி  இத்தனை  வருசம்  கழிச்சு  வந்தார்  என  காரணம்  கேட்க  மாட்டாரா? 


3   நாயகி  தன்  மீது  குறையை  வைத்துக்கொண்டு  நாயகனை  சைக்கலாஜிக்கல்  ட்ரீட்மெண்ட்  எடுத்துக்கொள்ளச்சொல்வது  ஏற்றுக்கொள்ளூம்படி  இல்லை 


4   நாயகன்  திடீர்  என  மனம்  மாறுவது , நாயகனின்  அப்பா  மனம்  மாறுவது ,  நாயகனின்  அண்ணன்  திடீர்  என  மனம் மாறி  அழுவது  எல்லாம்  டி  வி  சீரியல்   காட்சி  போல  இருக்கு . ஒரு  போல  பெண்களைக்கவர  அப்படி  சீன்  வெச்சுட்டாங்க  போல 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  காட்சி   ரீதியாக  யூ . வசன  ரீதியாக  இரண்டு  காட்சிகளில்  டபுள்  மீனிங்  டயலாக் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   2023 ல்  ரிலீஸ்  ஆன  குட்  நைட்  படம்  பார்க்காதவர்கள்  இதைப்பார்க்கலாம் ,  பார்த்தவர்கள்  பின்  பாதியை  மட்டும்  பார்க்கலாம்   ரேட்டிங்  2.25 / 5 . விரைவில்  நெட்  ஃபிளிக்ஸ் ரிலீஸ் 

Wednesday, April 17, 2024

J BABY (2024) - ஜெ பேபி - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி டிராமா) @ அமேசான் பிரைம்

           


தமிழ்  சினிமாவில்  குடும்பப்பாங்கான  படங்களை  எல்லாம்  இப்போது  பார்க்க  முடிவதில்லை . ஒரு  காலத்தில்  விசு  ,  வி  சேகர்  போன்ற  இயக்குநர்கள்  தரமான  குடும்பப்படங்களை  இயக்கினார்கள் , மாஸ்  மசாலா  ஆக்சன்  ஹீரோக்கள்  தங்கள்  சம்பளத்தை  உயர்த்த  ஆக்சன்  குப்பைகளில்  நடித்தால்  தான்  நல்லது  என்ற  பொது நல  நோக்கில்  வன்முறை  மசாலாக்களில்  கலந்து  விட்டதால்  அத்தி  பூத்தாற் போல  குடும்பப்படங்கள்  எப்போதாவதுதான்  வருகின்றன. 


  ஊர்வசி , லொள்ளு  சபா  மாறன் ,  அட்டக்கத்தி  தினேஷ்  ஆகிய  திறமைசாலிகளின்   மாறுபட்ட  நடிப்பைக்காண  இப்படத்தை  அவசியம்  பார்க்கலாம் ,  8/3/2024  அன்று  திரை அரங்குகளில்  வெளியான  இப்படம்  இப்போது 8/4/24  முதல்  அமேசான்  பிரைம்  ஓடிடி யில்  காணக்கிடைக்கிறது 


இது  உண்மையில்  நடந்த  சம்பவம் என்பது  ஒரு  சிறப்பம்சம்.  இந்த  சம்பவத்தில்  வெளீயூரில்  அம்மாவைக்கண்டு  பிடிக்க  வரும்    மகன்களுக்கு  அடைக்கலம்  கொடுத்த   ஓய்வு  பெற்ற  ராணுவ  வீரரை   அதே  கேரக்டரில்  நடிக்க  வைத்து  ரீ  கிரியேட்  செய்தது  ஒரு  சிறப்பு  நிகழ்வு 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகிக்கு 3  மகன்கள் , இரு  மகள்கள் . முதல்  மகனுக்கு  திருமணம்  நிச்சயம்  ஆகிறது . திருமணத்துக்கு  முந்தின  நாள் மணப்பெண்  வேறு  ஒருவனுடன்  ஓடி  விடுவதால்  திருமணம்  நிற்கிறது . மாப்பிள்ளை  வீட்டார் , பெண்  வீட்டார்  இரு  தரப்புக்கும்  தகறாரு .  ஓடிப்போன பெண்ணுக்கு  ஒரு  தங்கை  உண்டு .


 த்ரிஷா  இல்லைன்னா  நயன் தாரா  ஃபார்முலா  படி அக்கா  தானே ஓடிப்போச்சு  தங்கையையாவது  கட்டி  வைங்க  எனக்கேட்டதில்  தகறாரு. இந்த  சம்பவம்  நடந்து  சில மாதங்களுக்குப்பின்  அண்ணனுக்கு  வேறு  ஒரு  பெண்ணுடன்  திருமணம்  ஆகி  விடுகிறது . அண்ணன்   மேரேஜில்  ஓடிப்போன  மணப்பெண்ணின்  தங்கையை    நாயகியின்  இரண்டாவது மகன் காதல்  திருமண்ம்  பண்ணி  வீட்டுக்குக்கூட்டி வர  மீண்டும்  தகறாரு .   இப்போது  அண்ணன்  -  தம்பி  இருவரும் பேசிக்கொள்வதில்லை 


இதனால்  மனம்  உடைந்த  நாயகிக்கு  மன  நல  பாதிப்பு  உருவாகிறது . 5  வாரிசுகள்  இருந்தும்  அவருக்கு  மன  நிம்மதி  இல்லை . அம்மாவை  மகன்கள்  ஒரு  மன நல  மருத்துவமனையில்  சேர்க்கிறார்கள் 


மேலே  சொன்னவை  எல்லாம் ஃபிளாஸ்பேக்

அங்கிருந்து  அவர்  தப்பி  1700  கிமீ  அப்பால்  கல்கத்தாவுக்கு  ரயிலில்  சென்று  விடுகிறார். கல்கத்தா  போலீஸ்  தகவல்  கொடுத்து  இரு  மக்னகளை  அங்கே  வரவழைக்கின்றனர். இரு  மக்னகளின்  பயணம் ,  அம்மா,  மகன்கள்  சந்திப்பு  தான்  மீதி  திரைக்கதை 


 நாயகி  ஆக  ஊர்வசி  கலக்கி  இருக்கிறார். இவர்  நடித்த  படங்களில் நடிப்பில்  உச்சம்  தொட்ட  படங்கள்  முந்தானை  முடிச்சு , மகளிர் மட்டும் ,  மைக்கேல்  மதனகாமராஜன். வரிசையில்  நான்காவதாக  இதை  சேர்க்கலாம்,.


மனநிலை  பாதிக்கப்பட்டவராக  நடிக்கும்போதும்  சரி , தனது  மகனகளை  விட்டுக்கொடுக்காமல்  கோர்ட்டில்  ஜட்ஜையே  திட்டும்போதும்  சரி   அட்டகாசமான  நடிப்பை  வெளிப்படுத்தி  இருக்கிறார்


 லொள்ளு  சபா  மாறன்  வழக்கமாக  காமெடி  ரோல்களில்  வருபவர்  இதில்  குணச்சித்திர  நடிப்பில்  மிளிர்கிறார். அந்தக்கால   வாகை சந்திரசேகர்  பாணியில்  இவரது  நடிப்பு  மனம்  கவர்கிறது. இவ்வளவு  அழுத்தமான , சோகமான  ரோலில்  கூட  அவரது  அக்மார்க்  பிராண்ட்  ஆன  காமெடி  ஒன்  லைன் கவுண்ட்டர்களை  அவர்  விடவில்லை 


  அட்டக்கத்தி  தினேஷ்க்கும்  அழுத்தமான  கதாபாத்திரம்  தான் . ஆனால்  ஆள்  அவ்ளோ  ஸ்மார்ட்  ஆக  முதலில்  இருந்தவர்  இப்போது  ஓவர்  வெயிட்  போட்டு  விட்டார் . பல  இடங்களில்  கண்  கலங்க  வைக்கும்  நடிப்பு 


  மிலிட்ரி  வீரர்  ஆக  வருபவர்  யதார்த்தமான  நடிப்பு . மற்றும்  படத்தில்  பங்கேற்ற  அனைவருமே  சிரப்பான  நடிப்பை  வெளிப்படுத்தி  இருக்கிறார்கள் 


 டோனி  பிரிட்டோவின்  இசையில்  ஐந்து  பாடல்கள் , அவற்றில்  இரு  பாடல்கள்  மனம்  உருக வைக்கின்றன, பின்னணி  இசை  ஓக்கே  ரகம் 


ஜெயந்த்  சேது  மாதவன்  ஒளிப்பதிவு  தரம்  சண்முகம்  வேலுசாமி  எடிட்டிங்கில்  படம்  ரெண்டேகால்  மணி  நேரம்  ஓடுகிறது 

 திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார் அறிமுக  இயக்குநர்  சுரேஷ்  மாரி . உண்மை  சம்பவத்தை  தழுவி  திரைக்கதை  எழுதியதால்  மனதுக்கு  நெருக்கமாக  அமைகிறது  


சபாஷ்  டைரக்டர்


1   ஒரு  கட்டத்தில்  மகனான  தினேஷ்  அம்மாவான  ஊர்வசியை  பலர்  முன்னிலையில் அடிப்பதும்  பின்  அதை  நெஇனைத்து  கதறி  அழுவதும்   உருக்கமான  காட்சி 


2  அடி  வாங்கிய  ஊர்வசி அடுத்த  காட்சியிலேயே  தினேஷ்  வீட்டுக்கு  வந்து  பசிக்குது , சோறு  போடு  எனக்கேட்டு  சாப்பிடும்போது-+ மகனுக்கு  ஊட்டி  விடுவதும்  குற்ற  உணர்ச்சியில்  தினேஷ்  வெடித்து  அழுவதும்  கல்  நெஞ்சையும்  கரைக்கும்  காட்சி 


3  லொள்ளு  சபா  மாறன்  குடி  போதையில்  இரவில்  உளறுவது  ஒரு  குடிகாரனையே  நேரில்  பார்ப்பது  போல  அவ்ளோ  யதார்த்தம் 


4   மிலிட்ரி  வீரரின்  கேரக்டர்  டிசைன் , அவரது  நடிப்பு  அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1   இந்த  ரயிலுக்கு  அவுரா  என  பேரு  வெச்சதுக்குப்பதிலா  நகர்றா ( நவுர்றா)   என  பேரு  வெச்சிருக்கலாம்,  எவ்ளோ  கூட்டம் ? 


2  நமக்கு  ஒண்ணு  கிடைக்காம  போனா  அதை  விட  நல்லதா  நமக்குக்கிடைக்கப்போகுதுனு  எடுத்துக்கனும் 


3  வெல்லம்  விற்கப்போனா  மழை  பெய்யுது , பொரி  விற்கப்போனா  காத்து  அடிக்குது , என்ன  செய்ய ?


 ஏன் ? ரெண்டையும்  கலநது  பொரி  உருண்டை  விற்கப்போவதுதானே? 


4  அண்டா  பிரியாணின்னா  அண்டாவில்  செஞ்ச  பிரியாணினு  நினைச்சேன், அண்டா-ன்னா  ஹிந்தில  முட்டையாம் 


5  ஹலோ , சார் ,  நீங்க  சொன்ன்படி  நாங்க  ரயில்வே  ஸ்டேஷன்  வந்துட்டோம் \\


 சரி  அப்படியே  திரும்பிப்போங்க 


 என்ன  சார்? 1700  கிமீ  ட்ராவல் பண்ணி  வந்திருக்கோம் , திரும்பிப்போகச்சொல்றீங்க ?\

\


 அட. ஊருக்கு  திரும்பிப்போகச்சொல்லலை . ஸ்டேஷனுக்குப்பின்னால  போங்கன்னேன் 


6  என்னது  ? பெரக்பூரா?  பான் பராக்  மாதிரி  இருக்கு 


7  இது  லேடீஸ்  ஹாஸ்டல். ஆண்கள்  அனுமதி  இல்லை 


 அப்போ  செக்யூரிட்டிஸ்  எல்லாம் ஆம்பளைங்க  இல்லையா? 


8  சிக்கன்  பிரியாணி ?


  ஆலு  பிரியாணி  (  உருளைக்கிழங்கு  பிரியாணி) 

  ஆமா, நாங்க  ரெண்டு  பேர் , ஆளுக்கு  ஒரு  பிரியாணி


9  அண்ணன்  தம்பி  உறவு  கிடைக்காது , கிடைச்சா  நல்லா  வாழ்ந்துடனும் . எனக்கெல்லாம்  கிடைச்சும்  ஒண்ணா  வாழ  முடியலை.  நீங்க  ஒண்ணா  இருந்தும்  பிரிஞ்சு  வாழ்றீங்க ? 


10  இந்தப்பணம் , ஈகோ   இதுக்கெல்லாம்  உறவை  இழந்துடக்கூடாது 


11  ஒரே  ஒரு  வாழ்க்கை . இந்த  மனுஷங்க  குணம்  எந்த  அளவுக்கு  மோசமானதோ  அந்த  அளவுக்கு  நல்லதும்  செய்யும் 


12  குடும்பத்தலைவிக்கு  ஒரு  பிரச்சனை  வந்தா  யாராவது  ஒருவர்  குடும்பப்பொறுப்பை  ஏத்துக்கனும்


13    சர்க்கரை  , வியாதி ,  இரத்த  அழுத்தம்  மாதிரி  தான்  மன  நிலை  பாதிக்கப்படுவதும் ஒரு  வியாதி 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   பீடி  குடிக்கும்  பழக்கம்  உள்ள  மாறன்  36  மணி  நேரப்பயணமாக  ரயிலில்  போகும்போது  10  கட்டு  பீடி  வாங்கி  ஸ்டாக்  வைத்துக்கொள்ள  மாட்டாரா?  ஓடும்  ரயிலில்  பீடி  கிடைக்குமா?  என  ஏன்  அலையனும் ? 

2  மன  நிலை  பாதஇக்கபப்ட்ட  ஊர்வசி  ஹாஸ்பிடலில்  கழிக்கும்  நாட்களில்  ஒரு  நாடகத்தன்மை.  ஆரோரோ  ஆரிராரோ , மனசுக்குள்  மத்தாப்பூ  ஆகிய படங்களை  இயக்குநர்  ரெஃப்ரென்சாக  எடுத்து  இன்னும்  காட்சிகளில்  மெருகேற்றி  இருக்கலாம். குறிப்பாக  .  ஆரோரோ  ஆரிராரோ   தமிழ்  சினிமாவில்  மனநிலை  பாதிக்கப்பட்டவர்களை  வைத்து  கெரெ பாக்யராஜ்  பிரமாதமாக  திரைகக்தை  எழுதிய  படம் 


3  மனநிலை  பாதிக்கப்பட்டவர்  என்ற  ஒரே  காரணத்துக்காக  ஊர்வசி  கோர்ட்டில்  ஜட்ஜ் , போலீஸ்  அஃபீசர்  என  எல்லோரையும்  கண்டபடி  பேசுவது   டியாலிட்டி  இல்லை 


4  திரைக்கதையில்  நான்  லீனியர்  கட்  எனப்படும்  ஃபிளாஸ்பேக்  காட்சிகளை  ஆங்காங்கே  தெளிப்பது  ஃபேமிலி  டிராமாக்களில்  தேவை  இல்லை .  க்ரைம்  த்ரில்லர்  கதைகளுக்கு  தான்  செட்  ஆகும். ஒரு  அம்மாவைத்தேடி  மகன்கள்  கிளம்பும்போது  அவர்களுக்கு  இடையேயான  பாண்டிங்  நமக்குத்தெரிந்திருக்க  வேண்டும்




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  அம்மா , அப்பா  வை   அவர்கள்  இருக்கும்  காலத்தில் கவனிக்காமல்  அவர்கள்  இறந்த  பின்  வருத்தப்படும்  அனைவரையும்  இப்படம்  கவரும் . குறிப்பாக  பெண்களைக்கரைய  வைக்கும். அருமையான  குடும்பப்படம் . ரேட்டிங்க் 3.5 / 5


J Baby
Theatrical release poster
Directed bySuresh Mari
Written bySuresh Mari
Produced byPa. Ranjith
Abhayanand Singh
Piiyush Singh
Sourabh Gupta
Aditi Anand
Ashwini Chaudhari
StarringUrvashi
Attakathi Dinesh
Lollu Sabha Maaran
CinematographyJayanth Sethu Mathavan
Edited byShanmugam Velusamy
Music byTony Britto
Production
companies
Vistas Media
Neelam Productions
Neelam Studios
Distributed bySakthi Film Factory
Release date
  • 8 March 2024
CountryIndia
LanguageTami