Saturday, March 23, 2024

வித்தைக்காரன் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( பிளாக் காமெடி ரிவஞ்ச் டிராமா) @ அமேசான் பிரைம்

 


இயக்குநர்  வெங்கி  இயக்குநர்  லோகேஷ்  கனகராஜ்  இடம்  அசிஸ்டெண்ட்  ஆக  ஒர்க் பண்ணியவர் . காஞ்சுரிங்க்  கண்ணப்பன்  வெற்றிக்குப்பின்   சதீஷ்  ஹீரோவாக  நடித்து  வெளி  வரும்  படம் இது . 23/2/2024  அன்று  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆன  இந்தப்படம்  இப்போது 22/3/23  முத்ல்  அமேசான்  பிரைம்  ஓடிடி  யில்  காணக்கிடைக்கிறது . தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆன  போது  படம்  பெரிதாகப்போகவில்லை 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின்  அப்பா  ஒரு  சேட்டு  கிட்டே  கணக்குப்பிள்ளையா  வேலை  பார்த்தவர். அந்த  சேட்டு கிட்டே  அடியாட்களா இருந்த  3  ரவுடிகள்  சேட்டையே  போட்டுத்தள்ளிட்டு  கொலைப்பழியை  நாயகனின்  அப்பா  மேல்  போட்டு  மாட்டி  விட்டுட்டு  அவங்க  மூன்று  பேரும்  கடத்தல்  தொழிலை  செய்றாங்க . நாயகன்  அந்த  மூன்று  பேரையும்  எப்படிப்பழி  வாங்கினான்  என்பதுதான்  மீதிக்கதை 


நாயகன் ஆக  சதீஷ்.காமெடியன்கள்  நாயகன்  ஆக  வரும்போது  சந்திக்கும்   அதே  பிரச்சனை  சதீஷ்க்கும்  ஏற்பட்டிருக்கிறது. காமெடி  வரவில்லை , அல்லது  ஒர்க்  அவுட்  ஆகவில்லை 


நாயகி  ஆக சிம்ரன்  குப்தா  ஓபனிங்  எல்லாம்  செம  பில்டப்ப்பாக  வந்து  பின்  காணாமல் போகிறார்.  டூயட்  ஏதும்  இல்லை 


வில்லன்கள்  ஆக  ஆனந்த்ராஜ் , மது  சூதனன் , சுபரமணியம்  சிவா மூவரில்  முதலாமவர்  மட்டும்  பாஸ்  மார்க் வாங்குகிறார் 


விபிஆர்  இசையில் இரண்டு  பாடல்கள்  குட் . பிஜிஎம்   பரவாயில்லை  ரகம் .யுவா  கார்த்திக்  ஒளிப்பதிவு , ஓக்கே  ரகம் 

எடிட்டர்  படத்தை இரண்டு  மணி நேரம்  நான்கு  நிமிடங்கள்  வருமாறு  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார், ஆனால் படம்  மூன்று  மணி  நேரம்  ஓடுவது  போல  இழுக்கிறது 

சபாஷ்  டைரக்டர்


1  நாயகன்  வேனில்  வரும்  ஏ  டி எம்  கேஷ்  பாக்சை  கொள்ளை  அடிக்கும்  காட்சி  புத்திசாலித்தனமாக படமாக்கபப்டிருந்தது 


2   மூடிய  அறையில்   தற்கொலை  செய்து  கொண்டதாக கூறப்படும்  தம்பதியினர்  கொலை  செய்யப்ப்ட்டிருப்பார்கள் என  நாயகன்  விளக்கும்  விதம்  குட் 


3  நாயகன்   பிஜிஎம்  ஒலிக்க  ஸ்லோமோஷனில் நடந்து  வருவதைப்பார்த்த  ஆனந்த  ராஜ்  அந்த  ரெண்டையும்  கட்  பண்ணுண்ங்கடா  என  சொல்லி விட்டு  பின்  அடடா, பார்க்கவே  பாவமா  இருக்கு , போட்டு  விடுங்கடா  என  கலாய்க்கும்  காட்சி 


4  டான்ஸ்  சீக்வன்சில் வரும்  டான்ஸ்  மாஸ்டர்  ஆன  ஜப்பான்  குமார்  ஓவர்  ஆக்டிங்  என்றாலும்  ரசிக்க  முடிகிறது ,அதே   போல்  ஆனந்த  ராஜ்  காமெடியும் எடுபடுது


5  ஓப்பனிங்  சீனில்  நாயகி   மெட்ரோ  ட்ரெய்னில்  மர்ம  ஆசாமியைக்கண்டு  பிடிக்கும் காட்சி 


6    லை  டிடெக்டிங்  மிஷினை  வைத்து  ஆனந்த்ராஜ்  செய்யும் கலாட்டா  காமெடிகள்  குட் 

சாங்க்ஸ்


1  பட  பட 


2  முத்துக்கள்  வாங்கப்போனேன் , முற்றத்தில்  தயங்கி  நின்றேன்


  ரசித்த  வசனங்கள் 


1  மேஜிக்னா  ஏமாற்றுவது


2  உலகத்துலயே  நாம  ஏமாற்றப்படுகிறோம்  என்பது  தெரிந்தும்  அதுக்கும்  சிரித்துக்காசு  தருவது  மேஜிக்மேனுக்கு  மட்டும் தான் 


3  ஏமாறுவதுதான்  தப்பு , ஏமாற்றுவது  தப்பில்லை 


4  இந்தக்கடத்தல்  வேலையை  செஞ்சா  நமக்கு  இவ்ளோ  லாபம் கிடைக்கும், கிடைக்கும்  லாபத்துல  ஆளுக்கு  50; 50  ஓக்கே?


 இதுல உனக்கு  என்ன  லாபம்?


அவன்  தான்  ஃபிஃப்டி  ஃபிஃப்டி  லாபம்கறானே? அந்த  ஃபிஃப்டி தான்  லாபம் 


 அதில்லை , முழுசா  லாபத்தை  அவனே  எடுத்துக்காம நம்மை  ஏன்  கூட்டு  சேர்த்தறான் ? 


5  மேடம், ஆட்டோ  வேணுமா?


 ஃபோர்த்  ஃப்ளோர் தான்  , லிஃப்ட்லயே  போய்டுவேன் 


6  என்னை  எப்படிக்கண்டு  பிடிச்சீங்க?


 இந்த  உலகத்துல  நல்லவங்களைக்கண்டு  பிடிக்கறதுதான்  கஷ்டம், திருட்டுப்பசங்களைகக்ண்டு பிடிப்பது  ஈசி 


7  அவன்  வர  மாட்டான் 

  அப்போ  நான்  கிளம்பறேன் 


 ஐ  மீன் ,அவன்  வர  மாட்டான்   , வந்தா  வேலையை  முடிக்காம  போக  மாட்டான் 


8பிளான்  சி  யை நான்  சொல்றேன்


 சரி  சொல்லு 


பிளான்  சி  


8   இங்கே  இருக்கும்  யார்  பொண்டாட்டிகூடவாவது  டை அப்  வெச்சிருக்கீங்களா? 


 எனக்குன்னு ஒரு  டேஸ்ட்  இருக்கு 


9 அண்ணே , பசங்களை  ரெடியா  இருக்கச்சொல்லட்டுமா?


 எதுக்கு ?


 ஏர்போர்ட்ல சமோசா  நல்லாருக்கும் 


10  வில்லன்கனுங்க  கை  தட்றது  1980லயே  காலாவதி  ஆகிடுச்சு , நீ இன்னும்  அதைப்பண்ணிட்டு  இருக்கே? 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயக்னுக்கு  தலைல  அடிபட்டிருக்கு , பழசெல்லாம் மறந்தாச்சுனு  சொல்ராங்க, ஆனா  நாயகன்  கழுத்துல தான்   கட்டுப்போட்டிருக்கார் .நாயகனே  எனக்கு  தலைல  அடிபட்டுதுனு  சொல்லும்போதும்  கழுத்துக்கடைத்தான்  தொட்டுக்காட்றார் 


2  ஏர்போர்ட்  ஆஃபீசருக்கு  அங்கே ஸ்வீப்பர்  ஆக  ஒர்க்  பண்றவரைத்தெரியாதா? ஆள்மாறாட்டத்தைக்கண்டு பிடிக்கவில்லையே?


3 ஏர்போர்ட்டில் க்ளைமாக்ஸ்  சீனில்  நாயகி  நடிப்பு  ஓவர்  ஆக்டிங் 


4  நாயகன்  ஒரு  மேஜிக்  மேன்  என  சொல்றாங்க, ஆனா  ஒரு  சீன்ல  கூட  அப்படி  ஒரு  சீனே  இல்லை ( க்ளைமாக்ஸ்  ல  போனாப்போகுதுனு  ஒரு  சீன் 


 5  காமெடியன்  ஆன  சதீஷ்  ப்டம்  முழுக்க  ஒரு  சீன்  கூட  காம்டி  பண்ணவில்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மொக்கைக்காமெடி  ரசிகர்கள்  டி வி யில்  போட்டால்  பாதி  பார்க்கலாம், ரேட்டிங்  1.75 / 5

Friday, March 22, 2024

AE WATAN MERE WATAN (2024) -ஹிந்தி //தமிழ் - சினிமா விமர்சனம் ( ஹிஸ்டாரிக்கல் பயோகிராஃபிக்கல் மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்

   

21/3/2024  அன்று  அமேசான்  பிரைம்  ஓடிடி  யில் நேரடியாக  ரிலீஸ்  ஆன  படம் , இந்திய  சுதந்திரப்போராட்ட  வரலாற்றில் இடம் பெற்ற  தைரியமான  பெண்ணான  உஷா  மேத்தா  வின்  வாழ்க்கை  வரலாறு  தான்  இப்படம்     


டைட்டிலுக்கான  உச்சரிப்பு  ஏ  வதன்  மேரே  வதன்  என்பதுதான்  , ஆனால்  பல  மீடியாக்களிலே   ஏ வாடன்  மேரே  வாடன்  என்றே  தவறாக  உச்சரிக்கிறார்கள் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


1930  ஆம்  ஆண்டு . நாயகி  ஒரு  நீதிபதியின்  மகள் . வசதியான  குடும்பம். நாயகி  10  வயது  சிறுமி  ஆக  இருந்தபோதே  காந்தியின்  கொள்கைகளால்  ஈர்க்கப்பட்டு  போராளி  ஆகிறாள் , இது  அவரது  அப்பாவுக்குப்பிடிக்கவில்லை , ஏன்  எனில் பிரிட்டிஷ்  அரசாங்கத்திடம்  சம்பளம்  வாங்கும்  அரசு  ஊழியர்  அவர் , ஆனால்  அவரையும்  மீறித்தான்   நாயகி  போராட்டத்தில்  ஈடுபடுகிறார்


 1942  ஆம்  ஆண்டு  காந்தி அடிகள்  முன்னிலையில்  பிரம்மச்சரிய  விரதம்  பூண்டுவதாக  உறுதி  எடுக்கிறார்.ஆரம்பத்தில்  தயங்கிய  அவரது  காதலனும்  பின்  அதே  வழிக்கு  வருகிறார். ஒரு  கட்டத்தில் ஆங்கில  அரசாங்கம்  போராட்டத்தில்  ஈடுபட்ட  காந்தி  அடிகள்  உட்பட்ட  பெரிய  தலைவர்களை  சிறைக்கு  அனுப்புகிறது 


 அப்போது  தொண்டர்கள் சோர்ந்து  விடக்கூடாது  என காங்கிரஸ்  ரேடியோ  என்பதை நாயகி  உருவாக்குகிறார்.அதற்கு  ரேடியோ  ஸ்டேஷன்  விலைக்கு  வாங்க   ஒரு  கிலோ  தங்கம்  தேவைப்படுகிறது .நாயகியின்  பாட்டி  தன்  நகைகளைக்கொடுத்து  உதவுகிறார். தன்  சேமிப்பும்  போட்டு  ரேடியோ ஆரம்பிக்கிறார்  நாயகி 

தினசரி  இரவு  எட்டரை  மணிக்கு  அந்த  ரேடியோவில்  காந்தி  உட்பட  பல  தலைவர்களின்  உரை  ஒலிபரப்பாகும், மக்கள்  அதைக்கேட்டு  வீரம்  கொண்டார்கள் .ஆங்கிலேயர்கள்  அந்த  ரேடியோவை  எப்படி  தடை  செய்தார்கள்  ?  அதற்கு  எதிராக  நாயகி  எவ்வாறெல்லாம்  செயல்பட்டார்  என்பது மீதி  திரைக்கதை 


நாயகி  ஆக சாரா  அலி கான்  நேர்த்தியாக  நடித்துள்ளார் .கில்லர்  முபாரக்  படத்தில்  கிளாமராக  வந்தவர்  இதில் தியாகி  ஆக  வருவது  புதுமை .செய்  அல்லது  செத்து  மடி  என்ற  கோஷம்  போடும்போது வீரப்பெண்ணாக மிளிர்கிறார் 


 மற்ற  அனைவர்  நடிப்பும்  கச்சிதம் . ஆனால்  முதல்  பாதியில்  சுமார்  ஒரு  மணி  நேரமாக  மிக  மெதுவாகச்செல்லும்  திரைக்கதை  பொறுமையை  சோதிக்கிறது


சங்கீத்   வர்கீஸ்  எடிட்டிங்கில்  133  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது மூன்று  பேர்  இணைந்து  இசை  அமைத்திருக்கிறார்கள் .மூன்று பாடகள். பின்னணி  இசை  சுமார்  தான் அமலேந்து  சவுத்ரி  ஒளிப்பதிவு  குட  ஆர்ட்   டைரக்சன்  கடுமையான ,சவாலான பணி


தாராப்  பரூக்  உடன்  இணைந்து  திரைக்கதை  எழுதி  இயக்கி இருப்பவர்   கண்ணன்  அய்யர் 


சபாஷ்  டைரக்டர்


1  மனோகர்  லோகியா , ராம் மனோகர்  லோகியா   ஆகிய  இரு  சகோதரர்கள் , உஷா  மேத்தா  போன்ற  நாம்  அறியாத  பல  சுதந்திரப்போராட்ட  வீரர்களை  அறிமுகப்படுத்த  வேண்டும்  என்று  எண்ணி  திரைக்கதை  அமைத்தது 


2  மிக  மெதுவாகப்போகும்   முதல்  ஒரு  மணி  நேர  திரைக்கதைக்குப்பின்  ரேடியோ எஞ்சினியரைத்தேடி  ஆங்கிலேயர்கள்  அவர் வீட்டுக்கு வருவதும் அவர்  அங்கிருந்து  தப்பிப்பதும்  பரபரப்பான  முதல்  காட்சி 


3   நாயகி  தன்  காதலனிடம்  காதலா? நாடா?என  உரையாடும்  காட்சி  மனதைத்தொட்டது 


4 ட்ரையேங்குலேஷன்  மெத்தாடில்  ஆங்கிலேயர்கள்   ரேடியோ  இருக்கும்  இடத்தை கண்டு பிடிப்பதும்  அதை  முறியடிக்க  ட்ரான்ஸ்மிட்டரை  இரண்டு  இடங்களில்  வைக்க  முயற்சிப்பதும்  நல்ல  ஐடியா 


5 சுதந்திரப்போரில்  இந்த  ரேடியோ  மிகப்பெரும்  பங்கு  ஆற்றியதை  நமக்கு  உணர்த்திய  விதம் 

6  இருவரில்  யார்  உயிர் தியாகம் செய்வது  என்று  போட்டி  வைத்துக்கொள்ளும்  காட்சி 


ரசித்த  வசனங்கள் 

1  பயத்தால மக்கள்  எல்லாப்பொறுப்புகளையும் மறந்துடறாங்க 


2    பெரிய  பெரிய  புரட்சிகள்  கூட  சின்ன  சின்ன  விஷயங்களில் இருந்துதான்  ஆரம்பிக்கின்றன 


3  கண்மூடித்தனமான  சீடராக  இருக்கக்கூடாது  என்று  சொல்பவருக்கே  நீ  கண்மூடித்தனமான  சீடரா  இருக்கே



4  நீங்க  என்  மேல  வெச்சிருக்கும்  அன்பு  நிஜமான  அன்பில்லை  , அது  என்னை  கட்டிப்போடும்  விலங்கு 


5  எல்லாமே  நல்லாப்போகும்போது  நீ  என் கூட  இருந்தே, ஆனா  தியாகம்  செய்யனும்  எனும்   நிலை  வரும்போது  நீ பின்  வாங்கிட்டே


6 பணம்  இல்லாம  புரட்சி கூட  பண்ண  முடியாது 


7 எத்தனை  தீக்குச்சிகள் அணைந்தாலும்  நமக்குள்ளே  இருக்கும்  நெருப்பு  அணையாது 


8 நம்ம  பொண்ணு  உயிரோட  இருந்தா  போராளி ,  இறந்துட்டா  தியாகி


9  நீ  எனக்காக  இதை  எல்லாம்  செய்யறியா?  நாட்டுக்காகவா?


 அப்போ  உனக்கும் எனக்கும் இடையே  எதுவும்  இல்லையா? 


 இருக்கு , ஆனா  அது  சின்ன  உண்மை , நாட்டுக்காக  செய்வதுதான்  பெரிய  உண்மை 


10  சுதந்திரப்பாதைல  என்னோடு  சேர்ந்து  உன்னால  நடக்க  முடியலைன்னா  என்  கூட  வராத. எனக்கு  தடையா  இருக்காதே


11  பிரிட்டிஷ் காரங்க  புத்திசாலிகளா? தெரியாது , ஆனா  வஞ்சகமானவங்க 


12  மற்றவர்கள்  வழி  காட்டுதலுக்காக  காத்திருக்காதீர்கள்  


13  நான்  ஒரு  பெண் , நான்  வீட்டை  விட்டு  வெளியே  வந்ததே  ஒரு  போராட்டம்  தான் 


14  சிலருக்கு  புரட்சி  தான்  காதல் , சிலருக்கு  காதல்  தான்  புரட்சி 


15  முகம்   தெரியாத  நாயகர்கள்  எல்லாரையும்  விட  உயர்ந்தவர்கள் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகியின்  அப்பா  ஒரு  ஜட்ஜ் .நாயகியிடம்  காங்கிரசில்  சேர  வேண்டாம்  என  சொல்லி  விடுகிறார்.அதற்குப்பின்னும்  நாயகி  தினசரி  இரவு  லேட்டாக  வீடு  திரும்புகிறார். ஏதோ  பொய்  சொல்லி  தப்பிக்கிறார். ஒரு   தடவை  எனில்  ஓக்கே . ஒவ்வொரு  தடவையும் ஒரு  ஜட்ஜை  அப்படி  ஏமாற்ற  முடியுமா?


2   காந்தி திருமணம்  ஆனவர்.ஆனால்  போராட்டத்தில்  குதிப்பவர்கள்  பிரம்மச்சரிய  விரதம் பூண்டு  வர  ஏன்  விரும்புகிறார்  என்பது  புரியவில்லை (  பிரபாகரன் , வீரப்பன்  உட்பட  பலர்  இப்படித்தான் )


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  க்ளீன்  யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  நாம்  அறியாத  ஆனால்  அறிந்து  கொள்ள  வேண்டிய  சுதந்திரப்போராட்டத்தின்  ஒரு பகுதி  இது .பார்க்கலாம் . ரேட்டிங்  2.75 / 5 

Ae Watan Mere Watan
Official release poster
Directed byKannan Iyer
Written byDarab Farooqui
Kannan Iyer
Produced by
StarringSara Ali Khan
CinematographyAmalendu Chaudhary
Edited bySangeeth Varghese
Music by
  • Mukund Suryawanshi
  • Akashdeep Sengupta
  • Shashi Suman
Production
company
Distributed byAmazon Prime Video
Release date
  • 21 March 2024
Running time
133 minutes[1]
CountryIndia
LanguageHindi

Thursday, March 21, 2024

THUNDU (2024) -துண்டு - மலையாளம் / தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்


     சின்னக்கவுண்டர்  படத்தில்  கேப்டன்  ஒரு  பஞ்ச்  டயலாக்  பேசுவார். நான்  துண்டை  எடுத்து  அப்டி  வெச்சேன்னா  பட்டையைக்கிளப்பப்போறேன்னு    அர்த்தம்  என்று  முடியும்  அந்த  வசனம் . அதில்  வருவது  போல  தோளில்  இருக்கும்  துண்டு  அல்ல . டைட்டில்  உணர்த்துவது  பிட்  அடிக்கிறோமே  அந்தத்துண்டு   


16/2/2024  அன்று  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆன  இந்தப்படம்  வெற்றி  பெற வில்லை .  15/3/2024  முதல்  நெட்  ஃபிளிக்ஸ்  ஓடிடி  யில்  தமிழ்  டப்பிங்கில்  வெளியாகி  உள்ளது 

அக்னி  நட்சத்திரம்  (1988) , டிரைவிங் லைசென்ஸ் (2019),அய்யப்பனும் கோஷியும்(2020)   ஆகிய  படங்களில்  இரு  நாயகர்களின்  ஈகோ கிளாஸ்  மூலம் நடக்கும்  சம்பவங்களை  சுவராஸ்யமாக  , சீரியசாக  சொல்லி  இருப்பார்கள் .ஆனால்  இதில் காமெடியாக  சொல்லி  இருக்கிறார்கள் , அவ்வளவு  தான்  வித்தியாசம்

 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் , வில்லன்  இருவரும் ஒரே  போலீஸ்  ஸ்டெஷனில்  கான்ஸ்டபிள் ஆக  பணி  புரிகிறார்கள் . இருவருக்கும்  ஆரம்பத்தில்  இருந்தே  ஆகாது . எலியும்  , பூனையுமாக  இருக்கிறார்கள் . ஒரு  கட்டத்தில்  போலீஸ்    ஹெட்  கான்ஸ்டபிளுக்கான  எக்சாம்  எழுதி  விட்டால்  தான்  கெத்து காட்டி  விடலாம்   என்று  நாயகன்  நினைக்கிறார் 


  அப்படி  எக்சாம்  ஹாலில் பிட்  அடிக்கும்போது  நாயகன்  மாட்டிக்கொள்கிறார்.அதற்குப்பின்  நடக்கும்  நிகழ்வுகள்  தான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக பிஜூ  மேனன்  சிறப்பாக  நடித்திருக்கிறார்.  மகனிடம்    க்ளைமேக்சுக்கு  கொஞ்சம்  முன்  பேசும்  காட்சி  டச்சிங்கான  சீன்.   அவரது  மனைவி  ஆக  வரும்  உன்னி  மாயா  பிரசாத்  நான்கே    காட்சிகளில்  வந்தாலும் நச்  நடிப்பு 


 வில்லன்  ஆக ஷைன்  டாம்  சாக்கோ  நடித்திருக்கிறார். இவரது  கேரக்டர்  டிசைன் ,  இவருக்கான  போர்சன்  எல்லாம்  குறைவுதான்  , அதனால்  பெரிதாக  சொல்ல  ஏதும்  இல்லை 


நாயகனின்  மகனின்  எக்சாம்  ஹாலி  எக்சாம்  டீச்சர்  ஆக  வரும்  அந்த  நடிகை  நல்ல அ ழகு 


நபு  உஸ்மான்  எடிட்டிங்கில்  135  நிமிடங்கள்படம்  ஓடுகிறது/ஜிம்சி  காலித்  தான்  ஒளிப்பதிவு , சிறப்பு பாபி  சுந்தர்   இசையில்  இரு  பாட்லக்ள்  சுமார்  ரகம் .பின்னணி  இசை  அருமை   


கண்ணப்பன்  என்பவருடன்  இணைந்து  திரைக்கதை  எழுதி  படத்தை  இயக்கி  இருப்பவர்  ரியாஸ்  ஷெரீஃப் 


சபாஷ்  டைரக்டர்


1  ஓப்பனிங்  சீனில்  மாணவர்கள்  பிட் அடிக்கும்  காட்சி  அட்டகாசமாகப்படம்  ஆக்கப்பட்டுள்ளது.  எடிட்டிங் , ஒளிப்பதிவு  , பின்னணி  இசை  மூன்றும்  போட்டி  போட்டுக்கொண்டு  கலக்கிய  காட்சி .அற்புதமாகப்படம்  ஆக்கிய  இயக்குநருக்கு  ஒரு  சபாஷ் . இக்காட்சி  2017ல்  ரிலீஸ்  ஆன  க்ரைம்  த்ரில்லர்  படமான  பேட்  ஜீனியஸ் என்ற படத்தில்  இருந்து  அட்லீ  ஒர்க் செய்யப்பட்டது  என்றாலும்  “சுட்டாலும்”  மேன்  மக்கள்  மேன்  மக்களே  என்ற  பழமொழிக்கு  ஏற்ப தரமாக  காட்சிப்படுத்தி  இருக்கிறார்  இயக்குநர்


2  சாதா  கான்ஸ்டபிள்  வீட்டு  நாய்  டிஎஸ் பி  வளர்க்கும்  நாயை   கசமுசா  பண்ணி விட  அதனால் போலிஸ்  ஸ்டேசனில்பலரது  வேலையும்  போகும்  அபாயம்  இருப்பதாக  பதறும்  காட்சி  செம  காமெடி 


3  அந்த  நாய்  மேட்ட்ர்  வேறு  எந்த  நாய்க்கும்  தெரிந்து  விடக்கூடாது  என  எச்சரித்தும்  நாயகனின்  நண்பன்  தூக்கக்கலக்கத்தில்  உளறி  மாட்டி  விடும்  காட்சி  காமெடி 


  ரசித்த  வசனங்கள் 


1  காக்கிச்சச்ட்டை  போட்டுக்கிட்டு  சல்யூட் வாங்க  எல்லாம்  ஒரு  யோகம்  வேணும் 


2  உனக்கு  எல்லாம்  ஓக்கே  தானே?


 ஓக்கே  தான் , ஏன்  டாடி ?


  உன்  வயசுல  நான்  ஓக்கே  இல்லை 


3  நான்  கொண்டு  வந்த  நாயை  வளர்த்த  எங்க  அம்மா  விடலை , துரத்தி  விட்டுட்டாங்க , காரணம்  கேட்டதுக்கு  ரெண்டு  நாய்க்கு  சோறு  போட  முடியாதுனு  சொன்னாங்க . புரிஞ்சுதா?

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  காப்பி  அடித்து  எக்சாம்  ஹாலில் ஹையர்  ஆஃபீசரிடம்  மாட்டுவது  ஓக்கே , ஆனால்  மீடியாக்கள்  அதே  எக்சாம்  ஹாலுக்கு  ஆன்  த  ஸ்பாட்  வருவது  எப்படி ?அதற்கு  அனுமதி  இல்லையே?  வெளியே  ஜீப்பில்  அவரை  ஏற்றும்போது  படம்  பிடிப்பது  ஓக்கே 

2  அக்னி  நட்சத்திரம்  (1988) , டிரைவிங் லைசென்ஸ் (2019),அய்யப்பனும் கோஷியும்(2020)   ஆகிய  படங்களில்  வருவது  போல்  இரு  நாயக்ர்களுக்கும்  சம  வாய்ப்பு இல்லை . அது  ஒரு  மைனஸ். நாயகன்  அளவு  வில்லனுக்கு  சீன்  கம்மி 


3  மங்காத்தா  , சதுரங்க  வேட்டை , முகுந்தன்  உன்னி  அசோசியேட்ஸ்  மாதிரி  நெகடிவ்  ஷேடு  உள்ள  படங்களில்   அநியாயம் ஜெயிக்கும், ஜெயிக்க  வேண்டும்  என்று  மக்கள் மனதில்  ஒரு தவறான  கருத்து  பதிய  வைக்கப்படுவது  போல  இதிலும்  ந்டப்பது  பின்னடைவு 


4   வில்லன்  நாயகனின்  வீழ்ச்சியைக்கண்டு  சந்தோஷப்படுகிறான், ஆனால்  நாயகனைக்கெடுக்க  பெரிதாக எதுவும்  செய்ய  வில்லை , அதனால்  வில்லன்  மேல்  கிளைமாக்சில்  நமக்குக்கோபம்  வரவில்லை   பரிதாபம்  தான்  வருகிறது . இது  திரைக்கதைக்குப்பின்னடைவு .வில்லன்  சதித்திட்டம்  தீட்டுவது  போல  காட்சி  வைத்து  அதை  நாயகன் வெல்லுவது  போல்  காட்டி  இருக்க  வேண்டும் . எதேச்சையான  ஒரு  கவர்மெண்ட்  ஆரடர்  மூலம்  க்ளைமாக்சை  அமைத்திருப்பது  ஒரு  கூஸ்பம்ப் மொமெண்ட்டை  தரவில்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பிரமாதமான  படம்  எல்லாம்  இல்லை .ஆனால்  ஜாலியாகப்பார்க்கலாம் . ரேட்டிங்  2.5 / 5 

Wednesday, March 20, 2024

தூக்குதுரை (2024) -தமிழ் - சினிமா விமர்சனம் (ஹெய்ஸ்ட் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்

     


  போஸ்டர்களில் , படத்தின்  பிரமோக்களில்  யோகி பாபு  ஹீரோவாக  நடித்த  படம்  மாதிரி ஒரு  பிரமையை  ஏற்படுத்தி  பப்ளிசிட்டி   செய்யப்பட்டிருந்தாலும்  இதில்  யோகிபாபு  நாயகன்  கிடையாது . கெஸ்ட்  ரோல்  தான் .இதை  காமெடிப்படமாக  எடுக்கலாமா? ஹெய்ஸ்ட்  த்ரில்லராக  எடுக்கலாமா?ஹாரர் த்ரில்லராக  எடுக்கலாமா?  என  இயக்குநர்  குழம்பி  இருப்பது  நன்கு  தெரிகிறது. எல்லாம்  கலந்த கலவையாக  இருக்கிறது


26//1/2024  அன்று  திரை  அரங்குகளில் வெளியான  இப்படம்  சுமாராகத்தான்  ஓடியது , அமேசான்  பிரைம் ஓடிடி  யில்  கிடைக்கிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


உலகத்துலயே பெரிய திருடன்  அரசியல்  வாதிதான். அவனை  விடப்பெரிய  திருடனாக  இருக்கும்  ஒருவனிடம்  ட்ரெய்னிங்  எடுத்து   திருடலாம்  என  மூன்று  வெட்டிப்பசங்க  சேர்கிறார்கள் . அவர்களுக்கு  நல்ல  பயிற்சி  கொடுத்து  திருடர்கள்  ஆக  ஆக்கும்  அந்த  பாஸ்  திருடன்  இந்த  உலகமே  வியந்து  பார்க்கும்  அளவு  ஒரு  திருட்டை  நீங்க  செய்யனும்  என  ஆசீர்வதித்து  அனுப்புகிறான் 


ஒரு  கிராமத்தில்;  அந்த  ஊர்  பஞ்சாயத்து  தலைவர்  வீட்டில் பழங்கால  பொக்கிஷமாக  ஒரு  ராஜா காலத்து  கிரீடம்  இருக்கிறது. அந்த  கிரீடத்தை  ஆட்டையப்போட  அந்த  மூன்று  திருடர்களும்  முடிவெடுக்கிறார்கள் . அந்த  கிராமத்தில்  நான்கு  வருடங்களுக்கு  ஒரு  முறை  நடக்கும்  ஒரு  திருவிழாவை  ஷூட்  செய்து  யூ  ட்யூப்  தளத்தில்  பதிவேற்ற  இருப்பதாகக்கூறி  அந்த  கிராமத்தில்  தங்குகிறார்கள் . அவர்கள்  நோக்கம்  நிறைவேறியதா? என்பது  மெயின்  கதை 


  அந்த  ஊர்  பஞ்சாயத்துத்தலைவரின்  மகள்  20  வருடங்களுக்கு  முன்  ஒரு  இளைஞனை  காதலித்து  ஊரை  விட்டு  ஓட  நினைக்கையில்  அந்தக்காதலனை  ஒரு  கிணற்றில்  தள்ளி  பெட்ரோல்  ஊற்றி  எரித்து  விடுகிறார்கள் . அந்தகாதலன்  பேய்  ஆக  மாறி  அந்த  கிணற்றிலெயே  வாடகை  தராத  நான் -  பேயிங்  கெஸ்ட்  பேய்  ஆக  வாழ்ந்து  வருகிறான்.கிரீடம்  அந்த  கிணற்றில்  தான்  இருக்கிறது இது  ஃபிளாஸ்  பேக்  கதை 


கிரீடத்துக்கான  ஃபிளாஸ்பேக்  கதை .பல  ஆண்டுகளுக்கு  முன்  மழையே இல்லாத  காலகட்டத்தில்  ஒரு  மன்னன்  கடும்  தவம்  இருந்து கடவுளை  தரிசிக்கிறான்.கடவுள்  அவன்  கண்  முன்  தோன்றியதும்  தன்  தலையை  தானே  வாளால் வெட்டிக்கொண்டு   உயிர்  காணிக்கை  தந்து இதற்குப்பரிகாரமாக  நாட்டு  மக்களுக்கு  மழை  கோருகிறான். அந்த  கிரீடம்  தான் இப்போது  கிணற்றில்  இருக்கிறது 


  மெயின்  கதையை  விட  கிளைக்கதைகள்  இரண்டும்  சுவராஸ்யமாக  இருக்கின்றன். ஆனால்  கிளைக்கதைகள்  20  நிமிடங்களில்  முடிந்து  விடுகின்றன


உயிர்  பலி  ஆகும்   காதலன்  ஆக  யோகி  பாபு  சுமார்  20  நிமிடங்களில்  வந்து  செல்கிறார். ஒன்  லைனர்  காமெடி என்ற  பெயரில் மொக்கைக்காமெடி  போடுகிறார்.வழக்கமாக  உருவ  கேலி  காமெடியில்  கவுண்டமணி , விவேக் , சந்தானம்  போன்றவர்கள்  ஈடுபடும்போது  அவர்கள் மீது  வராத  கோபம்  யோகி பாபு  உருவ கேலியில்  இறங்கும்போது  நமக்கு  அவர்  மேல்  கோபம்  வருகிறது , காரணம் அவர்கள்  மூவரும்  பர்சனாலிட்டியாக  இருந்தார்கள் . இவர்  அந்த  அளவு  பர்சனாலிட்டி  இல்லை .  என்பதும்  காரணமாக  இருக்கலாம் 


பாஸ்  டிருடன்  ஆக  மொட்டை  ராஜேந்திரன்  காமெடி  செய்யும்  காட்சிகள்  ரசிக்க  வைக்கின்றன. இவர்  பொதுவாக  அடுத்தவர்களை  உருவ  கேலி செய்வதில்லை . வடிவேலு  பாணியில்  தன்னைத்தானே  கலாய்ப்பதால்  ரசிக்க  வைக்கிறார் 


  அவரிடம்  பயிற்சி  பெறும் மூன்று  திருடர்களாக  சென்றாயன் , பால  சரவணன் , மகேஷ்  சுப்ரமணியம்  ஆகிய  மூவரும்  நடித்திருக்கிறார்கள் குட் 


ஊர்  தலைவராக  அமரர்  மாரிமுத்து  சிறப்பாக நடித்திருக்கிறார், அவரது  மகளாக  இனியா  குறைவான  நேரமே  வந்தாலும் நிறைவான  நடிப்பு 


கே  எஸ்  மனோஜின்  இசையில்  ஐந்து  பாடல்கள் , சுமார்  ரகம்,பின்னணி  இசையும்  சராசரி  தரம் , தீபக்கின்  எடிட்டிங்கில்   இரண்டரை  மணி  நேரம்  படம் ஓடுகிறது. ரவிவர்மாவின்  ஒளிப்பதிவும்  சுமார்  தான். 


 திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்   டெனிஸ்  மார் 


சபாஷ்  டைரக்டர்


1   மெயின்  கதையை  முதலில் சொல்லாமல் யோகிபாபு வின்  ஃபிளாஸ்பேக்  போர்சனை  ஒப்பனிங்கில்  சொல்லி  ஆடியன்சை  கதைக்கு  உள்ளே  இழுத்த  விதம் 


2  மொட்டை  ராஜேந்திரனின்  காமெடி   டைமிங்சென்ஸ்


3 அமரர்  ஜி மாரிமுத்துவின்  இயல்பான  நடிப்பு   


  ரசித்த  வசனங்கள் 


1  பத்து  ரூபா  தீபாவளி துப்பாக்கியைக்காட்டுனாலே  அந்த  பேங்க்  மேனேஜர்  10  லட்சம்  ரூபாயைத்தூக்கிக்கொடுத்துடுவானே?


2  முடியாதுனு  நினைச்சா  முட்டியைக்கூட  நகர்த்த  முடியாது , முடியும்னு  நினைச்சா  மூன் ல  கூட  கால்  வைக்கலாம் 


3  அழுக்குத்துணி  ஆத்துல  போச்சாம், ஆஃபாயில்  வாய்ல  போச்சாம் 


4  ஃபோன்ல   பேய்டா

நான்  பேய்ப்படம்  டவுன்லோடு  பண்ணவே  இல்லையே? 


5  சீக்கிரம்  வாடா, ஒண்ணுக்குப்போறியா?  ஊருக்குப்போறியா? இவ்ளோ  லேட்  பண்றே?


6 இந்த  கிணத்துல  இறங்கிதான்  கிரீடத்தை எடுக்கனும் எப்படி?காலில்  கயிறு  கட்டி  இறங்கறீங்களா?இடுப்பில் கயிறு  கட்டி  இறங்கறீங்களா?


  ஏன்?கழுத்துல  கயிறைக்கட்டி  இறக்கிடுங்களே? ஒரேயடியா  போய்ச்சேர்ந்துடறோம்


7  இந்தக்கிணறோட  பாட்டம்  இவ்ளோ ஹாண்ட்டிங்கா  இருக்கே? 


அதை  ஏண்டா  இவ்ளோ  ஹாண்டிங்கா  சொல்றே?


  ரெண்டு  பேரும்  ஆண்ட்டி  ஆண்ட்டினு  பேசிட்டு  இருக்கீங்களே? யாரு  அது ? 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  கிராமத்தில்  வசிக்கும்  ஒரு  பணக்கார  வீட்டுப்பெண்  ஊரை  விட்டு  காதலனுடன்  ஓடனும்  எனில்  நைட்  டைமிலா  ஓடும்?பகலில்  முதலில்  பேக்கில்  டிரஸ்  எல்லாம்  பேக்  பண்ணி  ஒரு  பக்கம்  வைத்து விட்டு  இன்னொரு நாள்  கேசுவலாகப்போய்  பேக்  எடுத்துட்டு எஸ்  ஆவதுதானே  சேஃப்?  (நான்  ஊரை  விட்டு  ஓடிப்போனதில்லை ) 


2  கிரீடத்தை  திருட  வரும்  திருடர்கள் மஞ்ச  மாக்கான்களா  இருக்கானுங்க . அந்த  கிரிடம்  ஒரு  தங்கப்பெட்டில  இருக்கு . அந்தப்பெட்டியே  150 பவுன்  தேறும்  போல , போட்டியோட  திருடாம கிரீடத்தை  மட்டும் திருடறாங்க . இவனுங்க  எல்லாம்  வாழ்க்கைல என்னைக்கு  முன்னேறப்போறானுங்க ?

3 தண்ணி இல்லாத  கிணத்துல  அவனைப்போட்டு  எரிச்சிடுங்கனு  சொல்ற  மாதிரி  வசனம் வருது  ஆனா  கிணத்தைக்காட்டும்போது  தண்ணி  இருக்கு 

4  பேய்  ஆக  யோகிபாபு  வரும்போது  யாருக்கும்  எந்த  பயமும்  வரவில்லை , சிரிப்பும்  வரவில்லை . இது  அந்த  கேரக்டர்  டிசைனுக்குக்கிடைத்த  தோல்வி 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பொழுது  போகாதவர்கள்  இந்தப்படத்தை  டிவி யில்  போட்டால் அரைகுறையாகப்பார்க்கலாம் . ரேட்டிங்  1.75 / 5 


Thookudurai
Thumb image
Theatrical release poster
Directed byDennis Manjunath
Written byDennis Manjunath
Produced byAravind Vellaipandian
Anburasu Ganesan
Vinothkumar Thangaraju
Starring
CinematographyRavi Varma K
Edited byDeepak
Music byK. S. Manoj
Production
company
Open Gate Pictures
Distributed byUthraa Productions
Release date
  • 25 January 2024
CountryIndia
LanguageTamil

Tuesday, March 19, 2024

MURDER MUBARAK ( 2024)-மர்டர் முபாரக் -ஹிந்தி /தமிழ் - சினிமா விமர்சனம் ( மர்டர் மிஸ்ட்ரி பிளாக் ஹ்யூமர் காமெடி த்ரில்லர்) @நெட் ஃபிளிக்ஸ்

   


    டைட்டிலுக்கான  அர்த்தம்  முபாரக்கின்  கொலை  என்பது  அல்ல . முபாரக்  என்பது  பெயர்ச்சொல் அல்ல .ஹிந்தியில்  முபாரக்  என்றால்  வாழ்த்து  என்று  பொருள் கொலைக்கான  வாழ்த்து  என்று  பொருள் .2021 ஆம்  ஆண்டு அனுஜா  சவுஹான்  எழுதிய  க்ளப்   யூ  டூ  டெத்  என்ற  நாவலைத்தழுவி  எடுக்கப்பட்டது . ரைட்டர்  அகதா  கிறிஸ்டியின்  பாத்திரப்படைப்பான ஹெர்குலிஸ்  பாய்ரோட்டின்  தழுவல்  தான்  இந்தப்பட  நாயகன்  ஆன  போலீஸ்  ஆஃபீசரின்   கேரக்டர்  டிசைன் 


திரை  அரங்குகளில்  வெளியாகாமல்  நேரடியாக  நெட்  ஃபிளிக்ஸில்  15/3/2024  முதல்  காணக்கிடைக்கிற்து .க்ளைமாக்சில்  வரும்  அபாரமான  திருப்பங்களை  30  நிமிடங்களில்  சொன்ன  டீம் அதைக்காண 2  ம்ணி  நேரம்  நம்  பொறுமையை  சோதிக்க  வைக்கும் ஸ்லோ  பர்ன் த்ரில்லராக  உருவாக்கி  இருக்கிறது


2019ல்  ரிலீஸ்  ஆன  ஹாலிவுட்  படமான  நைவ்ஸ்  அவுட்  படத்தின்  பாணியில்  திரைக்கதை அமைக்கப்பட்ட  படம்  இது


ஸ்பாய்லர்  அலெர்ட்


ராயல்  டெல்லி  கிளப்  என்ற  பெயர் உடைய  எலைட்  க்ளப்பில்  இருக்கும்  ஜிம்மில்  பணி  புரியும்  ஜிம்  மாஸ்டர்  கம்  ட்ரெய்னர்   மர்மமான  முறையில்  கொலை  செய்யப்பட்டுக்கிடக்கிறார்.அந்தக்கொலையை  விசாரிக்க  வரும்  போலீஸ்  ஆஃபீசர்  கிளப்புக்கு  ரெகுலராக  வருகை  தருபவர்களை  ஒவ்வொருவராக  விசாரிக்க  ஆரம்பிக்கிறார்.அப்போது  திடுக்கிடும்    பல  தகவல்கள் கிடைக்கின்றன.அதுவரை  வெளி  வராத  சில  கொலைகள் பற்றிய  விபரங்களும்  கிடைக்கின்றன


ஜிம்  மாஸ்டர்  ஆக  இருந்த  அந்த  ஆள் கிளப்புக்கு  வரும்  பெரிய  செல்வந்தர்களின்  ரகசியங்களை  படம்  பிடித்து  வைத்துக்கொண்டு  பணம்  கேட்டு  மிரட்டி  இருக்கிறான். அவனால்  பாதிக்கப்பட்ட  ஒருவர்  தான்  இந்தக்கொலையை செய்திருக்கக்கூடும் என்று  நாயகன்  நினைத்து  கேசைக்கொண்டு  போகிறார்.ஆனால்  அது  வேறு  ஒரு  திசைக்கு  அவரை அழைத்துச்செல்கிறது .இதில்  அவர்  சந்தித்த திருப்பங்கள்  என்ன  ?என்பதுதான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  அசிஸ்டெண்ட்  கமிஷனர்  ஆஃப்  போலீஸ்  ஆக  பங்கஜ்  த்ரிப்பாதி  அட்டகாசம்  பண்ணி  இருக்கிறார்.இவரது  கேரக்டர்  டிசைன்  காமெடி  கலந்த  நிதனாமான  அணுகுமுறை  ஆக  சித்தரிக்கப்பட்டுள்ளது  புதுமையாக  இருந்தது 


சாரா  அலி  கான்  விதவை  ஆக  வருகிறார். இவரது  அழகும்  நடிப்பும்  குட் .விஜய்  வர்மா  வக்கீலாக  வருகிறார். துறுதுறுப்பான  நடிப்பு கரிஷ்மா  கபூர் , டிம்ப்பிள்  கபாடியா போன்ற  நட்சத்திரப்பட்டாளமே  நடித்திருக்கின்றன. விக்ரம்  படத்தில்   மீண்டும் மீண்டும் வா  பாடலில் ரசித்த டிம்ப்பிள்  கபாடியா வை  நினைத்து  இதில்  பார்த்தால்  ரசிகர்கள்  இதயம்  நொறுங்குவது  உறுதி . காலம்  செய்த  கோலம் 


சச்சின்  ஜிகார்  தான்  இசை .இரண்டு  பாடல்கள்  ஓக்கே  ரகம் ,  பின்னணி  இசையில்  மிகுந்த  கவனம்  செலுத்தி  இருக்கிறார்.நாயகன், நாயகி , வில்லன் , வில்லி  என  ஒவ்வொருவருக்கும்  ஒரு  தனி  தீம்  மியூசிக்  போட்டு  அசத்தி  இருக்கிறார்  


அக்சரா பிரபாகர்  தான்  எடிட்டிங் . 142   நிமிடங்கள் படம்  ஓடும்படி  கட்  செய்து  இருக்கிறார்.  கடைசி  அரை  மணி    நேர  எடிட்டிங்  அட்டகாசம்.மிக  ஷார்ப்  ஆக  கட் செய்து  இருக்கிறார். ஆனால்  படம்  ஆரம்பித்து  ஒன்றரை  மணி  நேரம்  டெட்  ஸ்லோவாகத்தான்    படம்  நகரும் 


லினேஷ்  தேசாய்  தான்   ஒளிப்பதிவு .நாயகி , வில்லி  ஆகியோரின்  க்ளோசப்  காட்சிகள்   அழகுணர்ச்சியுடன்  படமாக்கப்பட்டு  இருக்கிறது . ஈஸ்ட்மென்  கலர்  படங்களில்  வருவது  போல  ஒரு  வித  ரெட்டிஷ்  டோனில்   ஃபோட்டோகிராஃபி  அமைந்திருப்பது  ரசிக்க  வைத்தது 


 காஜல்  தாலிவால் , சுப்ரோட்டின்  சென்குப்தா  ஆகிய   இருவரும்  திரைக்கதை  அமைக்க   ஹோமி  அடஜோனியா  இயக்கி  இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்


1    இயக்குநர்  ஒரு  வித்தியாசமான  பாணியிலான  காட்சி  அமைப்பை  பயன் படுத்தி  இருக்கிறார்.அதாவது  நாயகன்  ஒரு  ஆளை  விசாரனை  செய்யும்போது  அந்தக்காட்சியை  அங்கேயே  கட்  செய்து  ஃபிளாஸ்பேக்கில் என்ன  நடந்தது  என்பதை  ஆடியன்சுக்கு  புரியும்படியாக  காட்சியாக  விவரித்த   விதம்  செம 


2   விஜய்வர்மா - சாரா  அலிகான்  இருவருக்குமான  கெமிஸ்ட்ரி  குட் .


3  கடைசி  அரை  மணி  நேர  திருப்பங்கள்  கொண்ட  திரைக்கதை , எடிட்டிங்  அட்டகாசம் 


  ரசித்த  வசனங்கள் 

1  இந்த  உலகத்தில்  புதிரான  விஷய்ம்  தான்  காதல் 


2  ஒருவன்  வாழ்வில் எவ்வளவு தான்  மோசமான  நிலைமைக்குப்போனாலும் அவன்  வாழ்வில்  காதல்  என்று  ஒன்று  வந்து  விட்டால்  அது  தரும் உத்வேகம்  ஆனது  அவனை  வாழ்வின்  உச்சத்துக்கு  அழைத்துச்செல்லும்  வல்லமை  கொண்டது 


3  ஹய்யோ  ராமா , அது  க்ளோபல் வார்னிங்  இல்லைங்க  மேடம், க்ளோபல்  வார்மிங் 


 ம்ம் ஒருவகைல  அது  வார்னிங்  தானே?


4  வாய்  விட்டுப்பேசுனாத்தான்  வாழ்வில் மறுமலர்ச்சி  கிடைக்கும் 


5   ஏண்டா  டேய்   உனக்கு  கண்  பின்னாலயா  இருக்கு?

 அப்படி  பின்னால  இருந்திருந்தா  கரெக்டா  ரிவர்ஸ்  எடுத்திருப்பனே? 


6  சாரி  சார் , எங்க  க்ளப்;ல  மர்டர்  அலோடு  இல்ல 


7  கவிஞனுக்கும் , துப்பறிவாளனுக்கும்  ஒற்றுமை  இருக்கு ., கவிஞன்  புதிரா  எழுதுவான் ,  துப்பறீவாளன் புதிரான  விஷயங்களை  அவிழ்ப்பான்


8   ஏழைகள்  தான்  இளம்   வயதில்  இறக்கிறார்கள் 


9   உனக்கு  எப்படி  இவ்ளோ  பெரிய  மனசு  வந்த்து ?


 நீ தான்  அடிக்கடி  என்  மனசை  சுக்கு  நூறா  நொறுக்கிடறியே. எல்லாத்தையும்  சேர்த்த்  வைக்கும்போது  பெருசாகிடுச்சு 


10  இந்த  கிளப்;ல  இருக்கறவங்க  ரெண்டே  விஷயத்துக்குத்தான்  பயப்படுவாங்க  1  டிரக்ஸ்  2  லாயர்ஸ் 


11   நீ  திருடும்  பொருளை  எனக்குத்திருப்பித்தர்லைன்னா  என்  பாதி  லைஃப்  காலி 


12  அவரு  ஆள்  பார்க்கத்தான்  அப்படி , ஆனா  படுக்கை  ல  குதிரை 


13  ஆண்களோட  வீரத்தை  இந்த  உலகம்  அதிகமா  தோளில்  சுமந்து  இருக்கு , அபூர்வமான  பெண்கள்  வீரத்தை  கண்டுக்கலை 


14  ஆண்களோட போட்டி  போட்டு  ஜெயிக்க  வேண்டிய  நிலை  இருக்கு 


15  ஏழை , பணக்காரன்  இருவர்க்கும்  இடையே  எப்பவும்  ஒரே  டீலிங்  தான் 


16  முதல்  தடவை  கொலை  பண்றப்ப  பயமாத்தான்  இருக்கும், ஆனா  ஒரு  தடவை  ஒரு  கொலையைப்பண்ணிட்டா    நாம்  வாழ்வில் அதுக்குப்பின்  எந்தப்பிரச்சனை  வந்தாலும்  அதுக்குத்தீர்வு  கொலை  தான்  என  முடிவுக்கு  வந்துடுவோம் 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஏ  செண்ட்டர்  ஆடியன்சின்  மனம்  கவர்ந்த  கமல்  ஹாசன்  சிங்கார  வேலன்  படத்தில் சொன்னபடி  கேளு  மக்கர்  பண்ணாதே   பாடலில்  சி  செண்ட்டர்  ரசிகர்களும்  முகம்  சுளிக்கும்  சில  சேஷ்டைகளை  செய்வார் . அந்த  மாதிரி  படத்தின்  நாயகன்  படம்  முழுக்கவே  சில  செய்கைகளை  செய்கிறார். கஷ்டகாலம் . என்னதான்  காமெடிக்கு  என்றாலும்  ரசிக்கும்  விதமாய்  இருக்க  வேண்டாமா?


 2  ஒருத்தன்  அல்லது  ஒருத்தி  அவசரத்துக்கு  ஒரு  கொலை  பண்ணி  அவங்க  வீட்டு  தோட்டத்துலயே  டெட்  பாடியை  புதைப்பது  ஓக்கே. அஞ்சு  வருசமா   அந்த  எலும்புக்கூடு  அங்கேயே  இருந்தா  என்னைக்காவது  அது  அபாயம்  தான்  என  தெரியாதா?அதை  இடம்  மாற்ற  மாட்டார்களா? 


3    பொதுவாக  கொலை  செய்பவர்கள்  டெட்  பாடியை  புதைக்க  மினிமம்  6  அடி  ஆவது  ஆழம்  தோண்டுவார்கள் .இப்படி  3  அடி  எல்லாம்  தோண்டி  புதைப்பது  ஆபத்து . பெரிய   மழை  வந்தாலே  காட்டிக்கொடுத்து  விடும் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  18+ காட்சிகள்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பொறுமைசாலிகள் மட்டும்  முழுப்படம்  பார்க்க  முடியும் கடைசி  அரை  மணி  நேரம்  கலக்கலாக  இருக்கும், ஆனால்  அதை  ரசிக்க  ஆரம்பம்  முதல்  பார்க்க  வேண்டும்  . ரேட்டிங்  2.75 / 5 


Murder Mubarak
Official release poster
Directed byHomi Adajania
Written by
Based onClub You To Death by Anuja Chauhan
Produced byDinesh Vijan
Starring
CinematographyLinesh Desai
Edited byAkshara Prabhakar
Music bySachin–Jigar
Production
company
Distributed byNetflix
Release date
  • 15 March 2024
Running time
142 minutes[1]
CountryIndia
LanguageHindi