Monday, March 18, 2024

AATTAM(2024) -மலையாளம் - சினிமா விமர்சனம் (சஸ்பென்ஸ் சேம்பர் டிராமா) அமேசான் பிரைம்

   


    லாஸ் ஏஞ்சலில்நடைபெற்ற  திரைப்பட  விழாவில்  விருது  பெற்ற  படம்  இது 2023லேயே  பல  திரைபட  விழாக்களில்  பங்கெடுத்தாலும்  தியேட்டர்களில்  5/1/2024 ல்  தான்  ரிலீஸ்  ஆனது .பாசிட்டிவ்  விமர்சனங்களைப்பெற்று  கமர்ஷியல்  ஆகவும்  ஹிட்  ஆனது


1957ல்  ரிலீஸ் ஆன  ஹாலிவுட்  படமான  12 ஆங்க்ரிமென்  என்ற படத்தின்  சாயலில் வந்திருக்கும் இப்படத்தின்  இயக்குநருக்கு  இது  முதல்  படம், ஆனால்  அறிமுக  இயக்குநர்  என்ற  தடுமாற்றமே  இல்லாமல் திரைக்கதை , கேரக்டர்  டிசைன் , க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  என  எல்லாவற்றையும்  பிரமாதமாக  அமைத்து  ஒரு  படத்துக்கு  ஹீரோ  முக்கியம்  இல்லை , திரைக்கதை  ஆசிரியர்  தான்  முக்கியம்  என்பதை  நிரூபித்திருக்கும்  இன்னும்  ஒரு  படம்  இது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு  நாடக  நடிகை . அந்த  நாடகக்குழுவில்  அவரோடு  சேர்த்து   12  பேர்  இருக்கிறார்கள் .நாயகி  அந்த  நாடகக்குழுவில்  உள்ள  ஒருவனைக்காதலிக்கிறாள் . இருவரும்  கடந்த  ஒரு  வருடமாக  லிவ்விங்  ரிலேசன்ஷிப்பில்  திருமணம்  ஆகாமல்  இணைந்து  வாழ்கிறார்கள் . இந்த  இருவரது  இந்த  உறவு  நாடகக்குழுவில்  இருக்கும்  மற்றவர்களுக்குத்தெரியாது 


நாடகத்தில்  நாயகி  படத்தின்  நாயகி  தான் . ஆனால்  அவருக்கு    ஜோடியாக  நாயகனாக  நாடகத்தில்  நடிப்பது படத்தின்  நாயகன்  அல்ல. படத்தின்  வில்லன். கொஞ்சம்  குழப்பமா  இருக்குதா? அதாவது நாயகியின்  காதலனுக்கு  நாடகத்தில்  நாயகன்  ஆக  நடிக்க  ஆசை , ஆனால்  அந்த  வாய்ப்பு  அவனுக்குக்கிடைக்கவில்லை . வேறு  ஒருவன்  தான்  நாடகத்தின்  நாயகன்


இப்படி  இருக்கும்போது  ஒரு  முறை  நாடகம் நடந்து  முடிந்த  பின்  ஒரு  ஃபாரீன்  ஜோடி  அந்த  நாடகக்குழுவுக்கு  பார்ட்டி  வைக்கிறார்கள் . ஒரு  இரவில்  பார்ட்டி . பார்ட்டி  முடிந்ததும்  எல்லோரும்  அங்கேயே  தங்கி  விட்டுக்காலையில்  அவரவர்  வீட்டுக்கு  செல்வதாக  பிளான்


நாயகி  அந்த  பார்ட்டியில் சரக்கு  அடிக்கிறாள் . குழுவினருடன்  ஜாலியாக  சிரித்துப்பேசுகிறாள் .அன்று  இரவு  நாயகிக்கு  ஒதுக்கப்பட்ட  அறையில்  படுத்து  உறங்குகிறாள் . அறைக்கதவு   மூடப்பட்டு  இருக்கிறது. ஜன்னல்  திறந்து  இருக்கிறது . யாரோ  ஒரு  நபர்  நாயகியின்    மார்பை  இரவு  2.30  மணிக்கு  அழுத்தி  விட்டு  ஓடி  விடுகிறான் . அது  படத்தின்  வில்லனும் நாடகத்தில்  நாயகனாக  நடிப்பவனும் ஆன  ஆள்  தான்  என  நாயகி  சந்தேகிக்கிறாள்  .  காரணம்  வில்லன்    ரெகுலராக  அடிக்கும்  செண்ட்  வாசம்  தான்  சாட்சி . நாயகி  நேருக்கு  நேர்  அந்த  ஆளைப்பார்க்கவில்லை 


    அடுத்த  நாள்  காலை  நாயகி யாரிடமும்  எதுவும்  சொல்லாமல் கிளம்பி  விடுகிறாள் . ஒரு  வாரம்  கழித்து  நாயகி  தன்  காதலனிடம் இந்த  விஷயத்தை  சொல்கிறாள்


நாயகியின்  காதலன்  நாடகக்குழுவிடம்  இந்த  விஷயத்தை  சொல்லுகிறான். எல்லோரும்  கூடி  ஒரு  முடிவு  எடுக்கிறார்கள் . நாடகத்தில்  நாயகன்  ஆக  நடிப்பவனை  குழுவை  விட்டு  தள்ளி  வைப்பது  என  முடிவு  ஆகிறது .இந்த  முடிவு  எடுக்கும்போது  வில்லன்  அங்கே  இல்லை .


திடீர்  என  நாடகத்தில்  நாயகனாக  நடிப்பவன்  நாடகக்குழு  தலைவர்  வீட்டுக்கு  வந்து  அந்த  பார்ட்டி  கொடுத்த  ஃபாரீன்  ஜோடி  ஸ்பான்சரில்  நம்  குழுவுக்கு  90  நாட்கள்  ஃபாரீன்  டூர்  மற்றும்  நாடக  ஷோ  நடத்த  வாய்ப்பு  என்று  சொல்கிறான்


அந்த  ஆஃபர்  மூலம்  குழுவில்  இருக்கும் அனைவருக்கும்  ஆளுக்கு  ரூ 12  லட்சம்  பணமும்  90  நாட்கள்  ஃபாரீன்  ட்ரிப்  யோகமும்  கிடைக்கும்


 இப்போது  குழுவின்  மனதில்  குழப்பம் , நாயகிக்கு  நடந்த  அக்கிரமத்துக்கு  தண்டனையாக  வில்லனை  நாடகக்குழுவை  விட்டு  விலக்குவதா? அல்லது  நாயகியிடம்  மன்னிப்புக்கேட்க  வைத்து   குழுவில்  அனைவரும்  ஃபாரீன்  போவதா? 


இதற்குப்பின்  நிகழும்  சம்பவங்கள்  தான்  மீதி திரைக்கதை 


நாயகி  ஆக ஜரீன்  சிஹாப் பிரமாதமாக  நடித்திருக்கிறார். தான்  தண்ணி  அடிப்பதை , கிளாமர்  ஆக  டிரஸ்  பண்ணுவதை  குழுவில்  இருப்பவர்களே  விமர்சிக்கும்போது  சீறி  எழுகையில்  புலி  மாதிரி  கர்ஜிக்கிறார். தன்  காதலனே  சுயநலமாக  நடந்து  கொள்வதைப்பார்த்து  மனம்  வெதும்பும்போது  கண்  கலங்க  வைக்கிறார். குழுவின்  மீட்டிங்கில்  ஆளாளுக்கு  கேட்கும் கேள்விகளை  லெஃப்ட்  ஹேண்டில்  டீல்  பண்ணும்  காட்சிகள் அபாரம் 


நாயகியின்  காதலன்  ஆக  படத்தின்  நாயகன்  ஆக  வினய்  ஃபோர்ட்   அனாயசமாக  நடித்திருக்கிரார்.  சில  இடங்களில்  அவர்  டென்சன்  ஆகும்போது  நமக்கும்  பி பி  ஏறுவது  அவரது  கேரக்டர்  டிசைனுக்குக்கிடைத்த  வெற்றி 


நாடகத்தின்  நாயகன்  ஆக  படத்தின்  வில்லன்  ஆக  கலாபவன்  ஷாஜன்  கலக்கி  இருக்கிறார்.மொத்தப்படத்தில்  அவர்  வரும்  காட்சிகள்  அரை  மணி  நேரம்  தான் , ஆனால்  அட்டகாசமான  நடிப்பு 


மீதி  அனைத்துக்கதாபாத்திரங்களும்  புது முகங்கள்  என்றாலும்  கச்சிதமான  நடிப்பு .

மகேஷ்  புவனேந்த்  தான்  எடிட்டிங்க்.139  நிமிடங்கள்  ஓடும்படி  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார். முதல்  18  நிமிடங்கள்  ஸ்லோவாகச்செல்லும்  திரைக்கதை  பிறகு  நெருப்பு  மாதிரி  பற்றிக்கொள்கிறது


அனுரூத்  அனீஸ்  தான்  ஒளிப்பதிவு. மொத்தப்படமும்  ஒரே  ஒரு  வீட்டின்  அறையில்  என்பதால்  சவாலான  வேலை .மாறுபட்ட  கோணங்களில்  ஒரே  வீட்டை  அதே  ஆட்களை  சலிப்பு  இல்லாமல்  காட்சிப்படுத்த  வேண்டும் .


சி ஜே  பசீலின்  பின்னணி  இசை  அருமை 


திரைக்கதை  அமைத்து  இயக்கி  இருப்பவர்  ஆனந்த்  ஏகர்ஷி   


சபாஷ்  டைரக்டர்


1  நாயகன்  வாய்ப்புக்காக  நாயகன்  தான்  வில்லன்  அணியும்  உடைகளை  அணிந்து  வில்லனின்  செண்ட்  போட்டு  வந்து அப்படி  செய்து  அவனுக்குக்கெட்ட  பேரை  உண்டாக்கி  குழுவை  விட்டு  அகற்ற  வைத்து   தான்  நாயகன்  ஆகி  விடலாம்  என  நினைக்கிறானோ  என  எண்ண  வைக்கும்  காட்சிகள்  அபாரம் 


2   அதே  போல்  நாயகி  தன்  காதலனுக்கு  நாயகன்  சான்ஸ்  வர  இப்படி  வில்லன் மீது பழி  போட்டு  டிராமா  பண்ணுகிறாளோ  என  எண்ண  வைத்ததும்  நல்ல  உத்தி 


3   வில்லன்  சொல்லும்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  உண்மை    யாரும்   எதிர்பாராதது 


4  இன்னொரு  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  ஆக  இயக்குநர்  வைத்திருக்க்கும்  காட்சி   சித்ரா  லட்சுமணனின்  சினிமாவுக்குள்  ஒரு  சினிமா  டைட்டிலையும்,  விண்னைத்தாண்டி  வருவாயா? க்ளைமாக்ஸ்  சீனையும்  நினைவு  படுத்தியது 


  ரசித்த  வசனங்கள் 


1  அசைவம்  சாப்பிடுபவர்களுக்கு  உடல்  வெப்பம்  அதிகமாக  இருக்கும், அதனால்  கொசுக்கள்  அவர்களை  அதிகமாகக்கடிக்கும் 


2  அஸ்கா  சர்க்கரையை  தவிர்த்தாலே  ரெண்டே  மாசத்துல  தொப்பை  குறையும் 


3 ஆண்களுக்கு  சமமா ஒரு  பெண்  அவங்க  கூட  சேர்ந்து  தண்ணி  அடிச்சா  அவன்  மனசில்  தப்பான  எண்ணம்  வரத்தானே  செய்யும் ?


 ஓஹோ, அப்போ  ஒரு  தப்பு  நடந்தா  அதுக்கு  பெண்  அணிந்திருக்கும்  உடையும்  அவ  சரக்கு  அடிப்பதும்  ஒரு  முக்கிய  காரணம் ? ஆண் செய்தது  தப்பில்லை ? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  க்ளைமாக்ஸ்  காட்சியில்  அவ்வளவு  சீரியசான  விஷயம்  பேசிக்கொண்டிருக்கும்போது  நாயகி வாய்  விட்டு  மீண்டும்  மீண்டும் சிரிப்பது  படு  செயற்கை .கே  பாலச்சந்தர்  படங்களிலும் , கமல்  படங்களிலும்  இந்த  மாதிரி  ஓவர்  ஆக்டிங்  இருக்கும்


2  ஒரு  நாடகக்குழுவில்  12  பேர்  ஒன்றாக  இருக்கும்போது  நாயகி  தன்  காதலனுடன்  அவ்வப்போது  நெருக்கமாக  இருந்தும் குழுவில்  இருக்கும்  யாருக்குமே  ஒரு  வருடமாக  விஷயம்  தெரியாது  என்பது  நம்பும்படி  இல்லை .ஒரு  சின்ன  பார்வை  போதும்  நம்ம  ஆளுங்க  கண்டு  பிடிச்சிடுவாங்க 


3    ஆல்ரெடி  மேரேஜ்  ஆகி  டைவர்ஸ்க்காக  காத்திருக்கும்  நாயகன்  டைவர்ஸ் கிடைக்கும்  முன்பே  இப்படி  ரகசிய  உறவில்  இருப்பது  சட்டப்படி  தவறு 


4   படத்தின்  வில்லன்  நாடகத்தில்  நாயகன் . நாயகி  கூட  நெருக்கமான  காதல்  காட்சிகளில்  நடிப்பவன், அவனுக்கு  நாயகியிடம்  அப்படி  மிஸ்பிகேவ்  பண்ண  தேவையே  இல்லை . அது  நம்பும்படி  இல்லை 

5  முக்கிய  திருப்பம்  ஆக  வரும்  ஒரு  காட்சியில்  ஒரு  ஆள்  தன்  மனைவியுடன்  வீடியோ  கால்  பேசியதாக  சொல்கிறான்.  பின்  எதற்காக  அந்த  ஸ்க்ரீன்  ஷாட்  எடுத்தான் ?மனைவியிடம்  காட்ட  என்கிறான். வீடியோ  காலிலெயே  பேக்  கிரவுண்ட்  பார்க்கலாமே? 


6 இந்தக்காலத்தில்  திருவிழாக்கூட்டங்களில்  ,பஸ்  நெரிசலான  இடத்தில்   பெண்களை  ஆண்கள் தவறாக  கையாள்வது  கண்கூடாகப்பார்க்கிறோம்  , அப்படி  இருக்கும்போது  மிட்  நைட்  2.30  மணிக்கு  வில்லன்  அப்படி  ஒரு  ரிஸ்க்  ஆன  செயலை  செய்ய  முயல்வது  தேவை  இல்லாதது . சிசிடிவி  கேமரா  காட்டிக்கொடுக்கும்  ரிஸ்க்  இருப்பதால்  யோசிப்பான் .  நாடக ரிகர்சல்  நடக்கும்போது  கூட  தெரியாமல்  அப்படி  செய்து  விட்டேன்  என  சமாளிக்க  வாய்ப்பு  இருக்கு . அதை  எல்லாம்  விட்டு  விட்டு  இப்படி  ஒரு  ரிஸ்க்  எடுப்பானா? என்பது  கேள்விக்குறி  தான் 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ.  ஆனா  லிப்  லாக்  காட்சிகள்  இரண்டு  முறை  வருகிறது .படத்தின்  மையக்கருவான  நாயகியிடம்  வில்லன்  மிஸ்பிகேவ்  செய்யும் காட்சி  வசனமாகத்தான்  சொல்லப்படுகிறது .   காட்சியாக  இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   மாறுபட்ட  திரைக்கதை  உள்ள  படம் , படம்  பூரா  பேசிட்டே  இருப்பாங்க ., சிலருக்கு  அது  பிடிக்காமல்  போகலாம் . மற்றபடி  பெண்களும்   ரசித்துப்பார்க்க  ஒரு  நல்ல  படம்  , ரேட்டிங்  3.5 / 5 


Aattam
First look poster
Directed byAnand Ekarshi
Written byAnand Ekarshi
Produced byDr. Ajith Joy
Starring
  • Zarin Shihab
  • Kalabhavan Shajohn
  • Vinay Forrt
  • Aji Thiruvamkulam
  • Jolly Antony
  • Madan Babu K
  • Nandhan Unni
  • Prasanth Madhavan
  • Sanosh Murali
  • Santhosh Piravom
  • Selvaraj Raghavan VR
  • Sijin Sijeesh
  • Sudheer Babu
CinematographyAnurudh Aneesh
Edited byMahesh Bhuvanend
Music byBasil C J
Production
company
Joy Movie Productions
Release date
  • 5 January 2024
Running time
139 minutes
CountryIndia
LanguageMalayalam

Sunday, March 17, 2024

மிஷன் சேப்ட்டர் 1 (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்

 


   2024  ஆம்  ஆண்டு  பொங்கல்  ரிலீஸ்  ரேசில்  ரசிகர்களால் பெரிதும்  எதிர்பார்க்கப்பட்டவை சிவகார்த்திகேயனின்  அயலான், தனுஷ்  நடித்த  கேப்டன்  மில்லர்  ஆகிய  இரு  படங்களும்  தான். ஆனால் இரண்டுமே  ரசிகர்களுக்கு  பெரிய  அளவில்  திருப்தி  தரவில்லை .சுமார்  ரகப்படங்களாகவே  அமைந்தன.ஆனால்  யாரும்  எதிர்  பார்க்காத  வகையில்  இந்தப்படம்  ஹிட்  ஆகி  விட்டது. குறைவான  தியேட்டர்கள்  மட்டுமே  கிடைத்திருந்தாலும்  ரிலீசுக்குப்பின்  ரசிகர்கள்  வரவேற்பைப்பார்த்து  அதிக  தியேட்டர்களில் திரையிடப்பட்டது .10கோடி  ரூ பட்ஜெட்டில்  உருவான  இப்படம்  23  கோடி  ரூ  வசூலித்தது

 இப்படத்துக்கு  முதலில்  வைக்கப்பட்ட  டைட்டில்  அச்சம்  என்பது  இல்லையே. பின்  தயாரிப்பு தரப்பு  மாறியதால்  டைட்டில்  மாறியது,மிஷன் சேப்ட்டர் 1  அச்சம்  என்பது  இல்லையே.  என்ற  டைட்டிலில்  வெளியானது


1995ல்  முறை  மாப்பிள்ளை  படத்தில்  அறிமுகம்  ஆனாலும்  1996ல் ப்ரியம்  படம்  தான்  அருண்  விஜய்க்கு  பேர்  வாங்கித்தந்த  படம்.2001 ல் ரிலீஸ்  ஆன  சேரனின்  பாண்டவர்  பூமி  மூலம்  நல்ல  நடிகர்  என  பெயர்  எடுத்தார் .2003ல்  ரிலீஸ் ஆன  ஜனநாதனின்  இயற்கை  ஒரு  ஃபீல்  குட்  மூவி  ஆக  அமைந்தது . 2006ல்  ரிலீஸ் ஆன  அழகாய்  இருக்கிறாய்  பயமாய் இருக்கிறது  கல்லூரி மாணவிகளிடையே  பலத்த  வரவேற்பைப்பெற்றது 2012ல்  ரிலீஸ்  ஆன  தடையறத்தாக்க  நல்ல   ஆக்சன்  மசாலாவாக  அமைந்தது .2013ல்  ரிலீஸ்  ஆன  என்னை  அறிந்தால்  படத்தில்  அஜித்குமாருக்கு  வில்லனாக  நடித்து கை  தட்டல் பெற்றார்.2017ல்  ரிலீஸ்  ஆன  குற்றம் 23  மாறுபட்ட  க்ரைம்  த்ரில்லர் .2019ல்  ரிலீஸ்  ஆன  தடம்  இரு வேட படங்களில்  மாறுபட்ட  ஆக்சன்  த்ரில்லர்  ஆக  பேர்  வாங்கியது


இயக்குநர்  ஏ எல் விஜய்க்கு  2007ல் ரிலீஸ்  ஆன  கிரீடம்  தான்  முதல்  படம்  என்றாலும்  2008ல்  ரிலீஸ்  ஆன  பொய்  சொல்லப்போறோம், 2010ல்  வந்த  மதராசப்பட்டினம் இரண்டும்  நல்ல  பேர்  வாங்கித்தந்தது.2011 ல்  வந்த  தெய்வத்திருமகள்  தமிழக  அரசின் விருதைப்பெற்றது


ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன்  ஒரு  தீவிரவாதி.  சிறை  தண்டனை  பெற்று  லண்டன்  சிறையில்  இருக்கும்  அவனது  கூட்டாளிகள்  மூவரை  ஜெயிலில்  இருந்து  தப்பிக்க  வைக்க  திட்டம்  போடுகிறான். அவன்  பிளான்  படி  மொத்த  ஜெயில்  கைதிகள்  அனைவரையுமே தப்பிக்க  வைத்து  விட்டால்  இவன்  பேர்  வெளியே  வராது  எதேச்சையாக  நடந்தது  என  காட்டி விடலாம்  என  நினைக்கிறான்


நாயகனுக்கு  ஒரு  மகள்  இருக்கிறாள். அவளுக்கு  லண்டனில்  ஒரு  ஆபரேஷன்  நடக்க  இருக்கிறது . சிகிச்சைக்காக  லண்டன்  வந்த  அவர்  ஒரு  சின்ன  தகறாரில்  சிறை  செல்ல   நேரிடுகிறது.சிறையில் நாயகன்  இருக்கும்போது  தான்  வில்லனின்  ஜெயில் கைதிகளை  தப்புவிக்கும்  ஆபரேஷன்  நடக்கிறது 


நாயகன்  வில்லனின் திட்டத்தை  எப்படி  முறீயடித்தார்  என்பதே  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  அருண்  விஜய்  அசால்ட் பண்ணி  இருக்கிறார். தமிழ்  சினிமாவில்  சரத்  குமார் , அர்ஜூன் வரிசையில்  நல்ல  ஜிம்  பாடி . அசாதாரணமான  பைசெப்ஸ்  கொண்ட  ஹீரோக்களில்  இவரும்  ஒருவர். ஆக்சன்  காட்சிகளில்  கலக்கிய  அளவு  சோக  காட்சிகளில்  அவரால்  சோபிக்க  முடியவில்லை .ஆனாலும்  சமாளிக்கிறார்


லண்டன்  சிறை  ஜெயிலர்  ஆக   எமி  ஜாக்சன்.மதராசப்பட்டிணம்  பார்த்து  அவரது அழகுக்கு  ரசிகர்கள்  ஆனவர்கள்  இப்படத்தைத்தவிர்க்கவும். முக  முதிர்ச்சி  பார்த்து  ஹார்ட்  அட்டாக்  வரலாம், அவரும்  ஆக்சன்  காட்சிகளில் அசத்தி  இருக்கிறார்


 ஹாஸ்பிடலில் நர்ஸ்  ஆக  நிமிஷா  சஜயன்  திறம்பட  நடித்திருக்கிறார்.உம்மணாம் முகமாக  எப்போதும்  காட்சி  அளிக்கும் இவர்  இதில்  சிரித்த  முகமாக  இருப்பது  ஆற்தல் 

நாயகனின்  மகளாக  இயல்  நன்கு  நடித்திருக்கிறார். நாயகனின்  சிறைத்தோழனாக  அபிஹாசன்  நடித்திருக்கிறார்

வில்லன்  ஆக  பாரத்  போபனா  நடித்திருக்கிறார்.  எப்போப்பாரு  ஃபோனிலேயே  மிரட்டிக்கொண்டிருக்கிறார்

ஜி வி  பிரகாஷ்  குமாரின்  இசையில் பாடல்கள் ஓக்கே  ரகம் . பின்னணி  இசை நல்ல  விறுவிறுப்பு 

அந்தோணியின்  எடிட்டிங்கில்  படம்  இரண்டரை  மணி  நேரம்  ஓடுகிறது சந்தீப்  கே  விஜயின்  ஒளிப்பதிவு  குட் 


ஏ  மகாதேவ்  கதை , திரைக்கதை  எழுத  இயக்கி  இருப்பவர்  அமலா  பாலின்  முன்னாள்  கணவர்  ஏ எல்  விஜய் 


சபாஷ்  டைரக்டர்

1 பாலிதீன்  கவர்களால்  தங்கள்  முகத்தைக்கவர்  பண்ணி  விட்டு  கைதிகள்  முகத்தில்  மிளகாய்ப்பொடி  தூவும்  ஐடியா  குட் 

2  மேக்னெட்டை  ஒயரில்  கட்டி  மெஷின்  கன்னை  இழுத்து  பிடிக்கும்  காட்சியும்  அப்ளாஸ்  பெறும்  காட்சி 

3  வில்லன்  ஜெயிலரைப்பார்த்து  ஃபோனில்  பேசும்போது  அதுக்கு  ரீ  ஆக்சன்  கொடுக்கும்  எமி  ஜாக்சன்  பிறகு  வில்லன்  பேசுவது  நாயகன்  அருண்  விஜய்  உடன்  என்பதை  அறிந்து  அதிர்ச்சி  ஆகும்  சீன்  மாஸ்  சீன் 

4  சிறைக்கைதியாக இருக்கும்  நாயகன்  எதற்காக  திடீர்  என  ஜெயில்  கைதிகள்  தப்பிக்கும்போது  எதிர்க்கிறார்  என்ற  சஸ்பென்ஸ்  ஓப்பன்  ஆகும்  இடம்  செம .  ரஜினி  நடித்த  நிஜமான  ஜெயிலர்  படத்தில்  கூட  இப்படி  ஒரு காட்சி  இல்லை 

5  நாயகன்  நாயகி இடம்  ஜெயிலின்  ப்ளூ  பிரிண்ட்  கேட்கும்போது  டக்  என  கிராஃபிக்சில்  நாயகன்  நிற்கும்  இடத்தில்  ப்ளூ  பிரிண்ட்  உதயம்  ஆவது  அருமை 

6  ஜெயில்  கைதிகள் தப்பும்போது  நாயகன்  போடும்  திட்டங்கள் ஒவ்வொன்றும்  குட்  

  ரசித்த  வசனங்கள் 


1  அம்மாவின்  அருகாமை  அல்லது  அம்மாவின்  அன்பு கிடைக்காதவங்க  தான்  இந்த  உலகத்துலயே  பரம  ஏழை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  ஆஸ்பிடலில் அட்மிட்  ஆகிட்ரீட்மெண்ட்டில்  இருக்கும்  குற்றவாளி  தப்பிக்க  நினைப்பது  ஓக்கே, ஆனா  ஏன்  கிறுக்கன்  மாதிர்  கழுத்தில்  சுளுக்குக்காக  போடப்பட்ட  சாதனத்தை  கழட்டி  எறியனும்?

2   வில்லன்  ஜெயிலில்  இருக்கும்  கைதிகளுக்கு  ஒரு  கேனத்தனமான  ஆர்டர்  போடறான்,கிச்சன்  ரூம்ல  சில  ஆளுங்க  இருக்காங்க , அவங்களைக்கொன்னுடுங்க , அங்கே சிசிடிவி  கேமரா  இல்லாததால்  எந்த  ஆதாரமும்  இருக்காது  என்கிறான்.ஆனா  அவன்  பேசுவது  லைவாக  நாயகன்  உட்பட  5  ஆஃபீசர்கள்  கேட்டுக்கொண்டு  இருக்கிறார்கள்  என்பது  வில்லனுக்குத்தெரியும்  அதுவே  ஒரு  சாட்சி  தானே? 

3  இரும்புச்சங்கிலி போட்டு  தாழ்  போட்ட  கிச்சன்  கதவுகளை  உடைப்பது  எல்லாம்  நம்பவே  முடியலை. அது   இரும்பா?  கரும்பா? 

4  எத்தனையோ  என்கவுண்ட்டர்களில்  பலரைப்போட்டுத்தள்றாங்க .பயங்கரவாதிகள் மூவரை  ஜெயிலில்  இருந்து  தப்ப  விடக்கூடாது  என  அவர்களைப்படாத  பாடு பட்டு  காப்பாற்றுவதற்குப்பதில்  அவங்க  மூன்று பேரையும்  ஆன்  த  ஸ்பாட்  போட்டுத்தள்ளி  இருந்தால்  வில்லன்  செய்வது  அறியாமல்  திகைத்து  நிற்பானே? ஆனா  படம்  ஒரு  மணி  நேரத்தில்  முடிஞ்சிடும் 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ

சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   தரமான  ஆக்சன்  த்ரில்லர் . குடும்பத்துடன்  பார்க்கலாம்  விஸ்வாசம் போல  அப்பா மகள்  செண்ட்டிமெண்ட்  காட்சிகள்  இருப்பதால்  பெண்களையும்  கவரும், ரேட்டிங்  3 / 5 


பணி: அத்தியாயம் 1
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்ஏ.எல்.விஜய்
எழுதியவர்ஏ. மகாதேவ்
உற்பத்தி
நடிக்கிறார்கள்
ஒளிப்பதிவுசந்தீப் கே. விஜய்
திருத்தியவர்அந்தோணி
இசைஜி.வி.பிரகாஷ் குமார்
உற்பத்தி
நிறுவனங்கள்
வெளிவரும் தேதி
  • 12 ஜனவரி 2024
நேரம் இயங்கும்
144 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பட்ஜெட் 10 கோடி
திரைப்பட நுழைவு சீீட்டு விற்பனையகம் 23 கோடி [1]

Saturday, March 16, 2024

TWO SOULS (2023) - இரண்டு ஆத்மாக்கள் - தெலுங்கு / தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா) @ அமேசான் பிரைம்

 


வித்தியாசமான  திரைக்கதை  உள்ள  படங்கள்  3  வகைப்படும். வெகு  ஜன  மக்களால்  ஏற்றுக்கொள்ளப்பட்டு  கமர்ஷியல்  ஹிட்  அடித்த  படங்கள்   உதா- புது  வசந்தம், அமைதிப்படை மக்களால்  ஏற்றுக்கொள்ளப்படாத  ஃபெய்லியர்  படங்கள்  உதா - விடுகதை , என் உயிர்த்தோழன் .மக்களால்  ரிலீஸ்  டைமில்  கவனிக்கப்படாமல்  காலம்  கடந்து  புகழப்படும் படங்கள்  - உதா - குணா , அன்பே  சிவம் இந்தப்படம்  ஒரு  வித்தியாசமான  படம்  தான் . இது  எந்த கேட்டகிரியில்  வரும்  என்பதை  உங்கள்  யூகத்துக்கே  விடுகிறேன் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


தனது  காதலி  தன்னை  ஏமாற்றி  விட்டு  வேறு  ஒருவருடன்  போய்  விட்டாள்  என்ற  விரக்தியில்    தற்கொலை  செய்து  கொள்ளும்  முடிவில்  வேகமாக  காரை  ஓட்டி  விபத்தை  உண்டாக்கி  கோமா  ஸ்டேஜில்  இருக்கும்  நாயகன், அதே  போல  வேறு  ஒரு  காரணத்துக்காக  விபத்துக்கு  உள்ளாகும்  நாயகி  இருவரும்  மயக்க  நிலையில்  ஒரே  ஹாஸ்பிடலில் அட்மிட்  ஆகி  சிகிச்சையில்  இருக்கிறார்கள் . இருவருக்குமே  இது  சீரியஸ்  கண்டிஷன்


 இருவரது  உடல்களும்  ஹாஸ்பிடலில்  இருக்கின்றன. இருவரது  ஆன்மாக்களும்  உடலை  விட்டு  வெளியேறி சந்தித்து  உரையாடுகின்றன. இருவரும் அவரவ்ர்  கதையை  பகிர்ந்து  கொள்கிறார்கள் . இருவருக்கும்  உள்ளத்தால்  நெருக்கம்  ஏற்படுகிறது. இதற்குப்பின்  ஏற்படும்  திருப்பங்கள் , சம்பவங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


இரண்டே கதா பாத்திரங்களை  வைத்து  ஒரு  இரண்டு  மணி  நேரப்படத்தை  உருவாக்குவது  ஒரு  சவாலான  விஷயம்  தான். அந்த  சவாலில்  இயக்குநர்  வெற்றி  பெற்று  இருக்கிறார்

நாயகன்  ஆக  த்ரிநாத்  வர்மா  தன்மையாக  நடித்திருக்கிறார். அறிமுகம்  ஆகாத  புதுமுகங்கள்  ஆடியன்ஸ்  மனம்  கவர  நன்கு  உழைக்க  வேண்டும், அந்த  உழைப்பு  இவரிடம்  இருக்கிறது . பரிதாபத்தை ஏற்படுத்தும்  கேரக்டர்  டிசைன் 


நாயகி  ஆக பாவனா  சாகி அடக்கமான  அழகுடன்  நடித்திருக்கிறார். இவர்  ஆன்மா  ஆக  வரும்போது  மிக இயல்பாக  பிரமாதமாக  நடித்தவர்  ரியல்  லைஃப்  கேரக்டரில்  நடிக்கும்போது  கொஞ்சம்  செயற்கையாக  நடித்து  இருக்கிறார். அவரது  தவறா? இயக்குநரின்  கவனக்குறைவா? தெரியவில்லை 


மவுனிகா  ரெட்டி  ஒரு  சின்ன  கேரக்டரில்  வருகிறார். ஓக்கே  ரகம் 

ஆனந்த்  நம்பியார்  இசசி  அமைத்திரு க்கிறார்.பாடல்கள்  சுமார்  ரகம், பின்னணி  இசை  குட் 


சசாங்க்  ஸ்ரீராம்  ஒளிப்பதிவில்  முத்திரை  பதிக்கிறார்.படம்  முழுக்கே  இரண்டே  கேரக்டர்கள்  என்பதால்  ஒளிப்பதிவாளருக்கு  சவாலான  வேலை  தான். 


கதை , திரைக்கதை   எழுதி  எடிட்  செய்து  இருக்கிறார் . இயக்குநர்  ஸ்ரவன் . இரண்டு  மணி  நேரம்  படம்  ஓடுகிறது 


சபாஷ்  டைரக்டர்


1    இரண்டே  கேரக்டர்கள்  மட்டுமே  வைத்து  ஒரு  திரைக்கதையை  போர்  அடிக்காமல்   சொல்வது  ஒரு  சவாலான  விஷயம், அதை  கச்சிதமாக  செய்திருக்கிறார்


2   நாயகனின்  காதல்  கதையை  ஃபிளாஸ்பேக்கில்  சொல்லி  விட்டு  நாயகி  கதையை  சொல்லாமல்  இழுத்தடிக்கும்போதே  அதில்  ஏதோ  ட்விஸ்ட்  இருக்கும்  என்று  எண்ண  வைத்து  யாரும்  எதிர்பார்க்காத  அந்த  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டை  ப்ளேஸ்  செய்த  விதம்  அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1 வரச்சொன்னா  யாரும்  வருவாங்களே  தவிர  போகச்சொன்னா  யாரும்  போக  மாட்டாங்க 


2 நாம  எங்கே  இக்ருக்கோம்  என்பது  சுத்திப்பார்த்தா  தெரியாது , திரும்பிப்பார்த்தாதான்  தெரியும் 


3   டெய்லி  புதுப்புது  பிரச்சனைகளா  வருதுன்னா  லைஃப்  பூரா  புதுசு  தானே?


4  உனக்குப்பிடிச்சவங்க  உன்  பக்கத்துல இருக்கும்போது   அட்லீஸ்ட்  உன்னை  சிரிக்க வைக்க   முயற்சி  பண்ணும்  சந்தோஷம்  போதுமே?


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

சமீபத்திய  சர்வே  ஒன்றில்  மாடர்ன்  பெண்கள்  ஒரு  லட்சம்  பேருக்கு  மூன்று  பேர்தான்  சமையல் நன்கு  கற்றவர்களாக  இருக்கிறார்ளாம். அந்த  சமையலை  ஏதாவது  குறை  சொன்னால்  அந்த  அபூர்வங்களும்  சமைப்பதில்  சலிப்பு  காட்டி  எதிர்காலத்தில்   சமைக்கும்  பெண்  இனமே  அருகி  விடும்  அபாயம்  உண்டு .  இப்போது  வரும்  பெரும்பான்மையான  படங்கள்  சரக்கு , குடி , அடிதடி , கிளாமர்  என்று  சீர்கேடான  காட்சிகளைக்கொண்டு  படமாக்கப்பட்டு  வருகையில்  வெகு  அபூர்வமாக  இது  போன்ற  நல்ல  படங்கள்  வருகின்றன. அதிலும்  நாம்  ஏதாவது  குறை  கண்டு பிடித்து  நொட்டை  சொல்லிக்கொண்டிருந்தால்  நல்ல  கதை  சொல்லிகளும்  மற்றவர்கள்  போல  டப்பா  படம்  எடுக்க  ஆரம்பிக்கும்  அபாயம்  உண்டு 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மாறுபட்ட படங்களை  ரசிப்பவர்கள்  பார்க்கலாம் . பொறுமை  மிக  அவசியம், பெண்களுக்கு  அதிகம்  பிடிக்கும் . ரேட்டிங்  2.5 / 5 

Thursday, March 14, 2024

டெவில் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( இல்லீகல் க்ரைம் த்ரில்லர் ) @ சிம்ப்ளி சவுத்


        இந்தப்படத்தைப்பற்றிய  விபரங்களை  விக்கிபீடியாவில்  தேடிய  போது  இது  ஒரு  ஹாரர்  த்ரில்லர்  என  கதை  விட்டிருக்கிறார்கள் . இது  ஒரு  கள்ளக்காதல் கதை. முதல்  பாதி  பூரா  தெளிவா  இருந்திட்டு  பின்  பாதியில்  சைக்காலஜிக்கல்  த்ரில்லர் , ஹாரர்  த்ரில்லர்  என  இயக்குநர்  குழப்பி  அடித்திருக்கிறார்.


டி  ராஜேந்தர்  பூக்கள் விடும்  தூது  என்ற  வெளியார்  படத்துக்கு  இசை  அமைத்த  போது  அவர்  பாட்டுக்கு  சிவனே  என  அவர்  வேலையைப்பார்த்தார். ஆனால்  இந்தப்படத்தில்  பாடல்கள்  எழுதி இசை  அமைத்த   இயக்குநர்  மிஷ்கின் க்கு  சம்பளம்  தருவதற்குப்பதில்  அவரைப்பற்றிய  ப்ரமோக்களை  படம்  முழுக்க  அள்ளித்தெளித்திருக்கிறார்கள் , ஓவர்  டோஸ் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி காரில்  பயணம்  செய்து  கொண்டு  இருக்கும்போது  எதிர்பாராத  விதமாக  நாயகன்  ஓட்டிச்செல்லும்  பைக்  மீது  இடித்து  விடுகிறார். நாயகனுக்கு  இடது  கையில்  சரியான  அடி.   ஹாஸ்பிடலில்  அவரை  சேர்த்து  சிகிச்சை  அளித்து  மன்னிப்பும்  கேட்கிறார்.  நாயகன்  , நாயகி  சந்திப்பு  தொடர்கிறது.இவர்  வீட்டுக்கு  அவர்  வருவதும்  அவர்  வீட்டுக்கு  இவர்  போவதும்  ஒரே  ரொமான்ஸ்  தான்


முதல்  அரை  மணி  நேரம்  ஜாலியான  ரொமாண்டிக்  டிராமாவாக  படம்  கவிதையாகபோய்க்கொண்டிருந்தபோது  தான்  ஒரு  திருப்பம். நாயகி  நைட்  லேட்டாக  வீட்டுக்கு  வரும்போது  அங்கே  நாயகியின்  கணவன்  ஐ  ஆம்  வெயிட்டிங்  என்பது  போல்  அமர்ந்திருக்கிறார்


  அங்கே  கட்  பண்ணி  ஒரு  ஃபிளாஸ்பேக்


 நாயகியைப்பெண்  பார்க்க  வருபவருடன்  ஓக்கே  ஆகி  திருமணம்  ஆகிறது . ஆனால்  நாயகியின்  கணவன்  அவரது  அலுவலகத்தில்  பணி  புரியும் செகரட்டரி கூட  சீக்ரெட்டரியாக  ஒரு  ரிலேசன்  ஷிப்பில்  இருக்கிறார். மனைவியை  தவிர்க்கிறார். ஒரு  கட்டத்துல  நாயகிக்கு  தன்  கணவனின்  சுய  ரூபம்  தெரிகிறது .  கணவனின்  ஆஃபிஸ்  போனபோது  அங்கே  நேரில்  கணவன் - செகரட்டரி  லீலையைப்பார்த்து  விடுகிறார். அந்த  அதிர்ச்சியான  சம்பவத்துக்குப்பின்  ஏதோ  யோசனையில்  காரில்  வந்தபோது  தான்  முதல்  பேராவில்  நிகழ்ந்த  சம்பவங்கள் 


இப்போ  நாயகியின்  கள்ளக்காதலன்  நாயகியின்  வீட்டுக்கே  வருகிறான்.  நாயகன்  , கணவன்  இருவரும்  மோதிக்கொள்கிறார்கள் .  இதற்குப்பின்  நிகழ்ந்தது  என்ன ? என்பது  தான்  மீதி  திரைக்கதை 


நாயகி  ஆக  பூரணா பரிபூரணமான  அழகு, அமைதி , குடும்பப்பாங்கான  பெண்ணாக  அடக்க  ஒழுக்கமாக  வந்து  போகிறார். படம்  முழுக்க  இவருக்குத்தான்  அதிக  ஸ்கோப் , நாயகன், வில்லன்  இருவரை  விட  இவருக்கே  அதிக    காட்சிகள் . 


நாயகியின்  கணவன்  ஆக  விதார்த் . இவரது  கேரக்டர்  டிசைனில்  ஏகப்பட்ட  குழப்பங்கள் . அவற்றை  எல்லாம்  லிஸ்ட்  போட்டு  லாஜிக்  மிஸ்டேக்ஸ்  கேட்டகிரியில்  ரோஸ்ட்  போடுவோம்


 நாயகியின்  கள்ளக்காதலன்  ஆக  நாயகன்  ஆக திர்க்குன்  நடித்திருக்கிறார். சுமார்  நடிப்பு மோசமில்லை இவரது  கேரக்டர்  டிசைனிலும்  குழப்பங்கள் 


நாயகியின்  கணவனின்  கள்ளக்காதலி  ஆக   சுபா  ஸ்ரீ. தெலுங்கு  டப்பிங்க்  படங்களில்  ஒரு  குத்து  சாங்குக்கு  மட்டும்  ஆடிப்போகிறவர்  போல  ஒரு  கண்ணியமான  தோற்றம். முடியலை  ஷப்ப்பா 


எஸ்  இளையராஜா  வின்  எடிட்டிங்கில்  படம்  இரண்டு  மணி  நேரம்  ஓடுகிறது .  ரொம்ப  நேரம்  இழுப்பது  போல  ஒரு  சலிப்பு  ஏற்படுகிறது 


இசை  மிஷ்கின்  அவரது  இசையைக்கூட  தாங்கிக்கொள்ளலாம். படம்  முழுக்க  அவரது  வீரப்பிரதாபங்களை  படத்தின்  கேரக்டர்கள்  சிலாகிப்பது  எல்லாம்  ஓவர் 


திரைக்கதை  எழுதி  நம்மைக்குழப்பி  இருப்ப வர்  ஆதித்யா . இவரே  இயக்கம் 


சபாஷ்  டைரக்டர்


1  நான்கே  கேரக்டர்களை  வைத்து  ஒரு  கதை  பண்ணி , படமாக  எடுத்தது  சாமார்த்தியம்  தான்


2  மிஷ்கினிடம்  ஓசியில் இசை , பாடல்கள்  எல்லாம்  வாங்கி  விட்டு  படம்  பூரா  அவரைப்புகழ்ந்து  தள்ளியே  சம்பளத்தை  கழித்த  டெக்னிக்  அபாரம் 


  ரசித்த  வசனங்கள் 

1  உங்க  அம்மா  மேல்  இருந்த  அன்பை நீங்க  என்  கிட்டே  காட்டினீங்க


2  நான்  ஒரு  கடல்  மீன், கரைக்கு  வர  ஆசைப்படக்கூடாது , மீண்டும்  கடலுக்கே  போயிடறேன்


3   உன்  பொண்டாட்டி  என்ன  பொருளா?  ஃபிரிட்ஜில்  வைக்க ?



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பொதுவா  நம்ம  ஃபோன்  மிஸ்  ஆனா  முதல்ல அந்த  நெம்பர்க்கு  கால்  பண்ணிப்பார்ப்போம், நாயகன்  நாயகி  வீட்ல  ஃபோனை  வெச்சுட்டு வந்துடறான். நாயகி  கொண்டு  வந்து  தரும்போது  லூஸ்  மாதிரி  அடடா, உங்க  வீட்ல  வெச்ட்டு  வந்துட்டேனா?  வீட்டில்  தேடிட்டே  இருந்தேன்கறான்


2  ஷாப்பிங்  காம்ப்ளெக்ஸ்  ல  மேகி 20 பாக்கெட்  100 கிராம்  20க்கும்மேல  வாங்கி  வருவது  போல  ஒரு  சீன். அதுக்குப்பதிலா 2  கிலோ  பாக்கெட்டா  வாங்கினா  ஹோல்  சேல்  ரேட்டில் 15%  குறையுமே? 


3  நாயகனைப்பார்க்க  நாயகி  வீட்டுக்கு  வரும்போது  நாயகன்  ரூமில்  கதவை  சாத்திட்டு  தம்  அடிச்சுட்டு  இருக்கான். அவ்ளோ  பெரிய  பங்களா.  ஹால்லயோ, வெளீல  ஓப்பன்  பிளேஸ்ல  தானே  தம்  அடிப்பாங்க?


4   நாயகி  கூட  நாயகன்  செஸ்  விளையாடும்போது  கேன்சர்  பார்ட்டி  மாதிரி  தம்  அடிச்சுட்டே  இருக்கான், ஒரு  பெண்ணை  இம்ப்ரஸ்  பண்ண  ஐடியா  பண்றவன்  இப்படித்தான்  எதிராளி  முகத்துலயே  புகை  விடுவாங்களா? 


5  நாயகியைபெண்  பார்க்க  வரும்  விதார்த்  பெண்ணைப்பார்க்காமல் செல்  ஃபோனைப்பார்த்துக்கிட்டு  இருக்காரு. பொதுவா  பெண் பார்க்க  வரும்போது  பட்டிக்காட்டான்  பஞ்சு  மிட்டாயைப்பார்ப்பது  போல    மணப்பெண்ணை  வெறித்துப்பார்ப்பதுதானே  உலக  வழக்கம்.  விதார்த்  என்னடான்னா  ஒரு  தக்ர  டப்பா பார்ட்டியை  ஃபோன்ல  பார்த்துட்டு  இருக்காரு , கஷ்டம்


6  திருமண  வைபவத்தின் போது  கூட  நாயகி  தான்  விதார்த்தை  ஆசையாப்பார்க்கிறார். விதார்த்  கண்டுக்கவே  இல்லை , மாப்பிள்ளை  மீது  அப்போதே  யாருக்கும்  டவுட்  வர்லையா? 


7  முதல்  இரவு  அறைக்குப்போகும்  மாப்பிள்ளை  செல்  ஃபோனில்  சைலண்ட்  மோடு  ஆன்  பண்ண  மாட்டாரா?  நைட்  9  மணிக்கு  கள்ளக்காதலி  அழைத்ததும்  மனைவியை  அம்போன்னு  விட்டுட்டு  ஓடிடறாரு 


8  விதார்த்  நைட் பெட்ல  படுக்கும்போது  கூட  பேண்ட்  சர்ட்  டக்  இன்  பண்ணிட்டே  தான்  நீட்டா  படுத்துத்தூங்கறார். லுங்கி , வேட்டி  எல்லாம்  யூஸ்  பண்ணாத  ஏ  செண்ட்டர்  ஆடியன்சோ? 


9  ஆஃபீசில்  விதார்த்தின் கள்ளக்காதலி  வந்து  கிஸ்  அடிக்கும்போது  என் மனைவி  வந்திருக்கானு  சொல்ல  மாட்டாரா?  சும்மா  பே பே  அப்டின்னுட்டு  இக்ருக்காரு மாட்றாரு 


10   துரோகம்  செய்த  கணவன்  மனைவியிடம்  மன்னிப்புக்கேட்டதும்  மனைவி  டக்னு  10  கிஸ்  கொடுக்கறா. எந்த  ஊர்ல  அப்டி  நடக்குது ?


11  கணவனின்  ஃபோட்டோ  ஃப்ரேமில்  தூசி  படிந்தால்  அழுக்குத்துணி  அல்லது டஸ்டர்  கொண்டு  துடைப்பாங்க . நாயகி  பட்டுப்புடவை  முந்தானையால்  துடைக்கிறார். இந்தக்காலத்துப்பெண்கள்  கணவன்  ஃபோட்டோவை  க்ளீன்  பண்ணுவதே  அபூர்வம், அதுவும்  தன்  பட்டுப்புடவையை  நாஸ்தி  செய்வார்களா?  ஓவர்  செண்ட்டிமெண்ட்  சீன்


12     நாயகன்  விதார்த்தை  தாக்கும்  சுத்தியல்  தீபாவளிக்கு  கொள்ளுப்பட்டாசு  வெடிக்கும்  சுத்தியல்  மாதிரி  இருக்கு , அதனால்  ஆளைக்கொலை  செய்யும்  அளவுக்கு  ஒரே  அடியில்  செய்ய  முடியுமா? 


13  விஜய்  படமோ   அஜித் படமோ  முதல்  நாள்  முதல்  காட்சி  FDFS ஷோ  பார்க்கும்போது  யாராவது  கால்  பண்ணி  பக்கத்துல  வீரா சாமினு  டப்பாப்படம்  ஓடுது  வரயா?னு  கேட்டா  எந்த  மாங்கா  மடையனாவது  போவானா?    விதார்த்  தன்  முதல்  இரவு  அன்று  கள்ளக்காதலி  ஃபோன் பண்ணி  அழைத்ததும்  போய்  விடுகிறார்.  பல  முறை  அவரை  ருசி  பார்த்தவர்


14  விதார்த்தின்  கள்ளக்காதலிக்கு  இன்னொரு  கள்ளக்காதலன்  இருக்கான்.  ஜிம்  ட்ரெய்னர். அவன்  கூட  எசகு  பிசகா  இருக்கனும்னா  புது  இடம்  போகலாம்  அவன்  வீட்டுக்கு  போகலாம். அதை  விட்டுட்டு  அந்த  பேக்கு  விதார்த்  வருவான்  என  தெரிந்துமே  அதே  வீட்டில் சரசம்  பண்ணி  மாட்டுகிறார்


15  விதார்த்தின்  கள்ளக்காதலி  பெட்ரூம்  கதவு  பாத்ரூம்  கதவு  வாசல்  கதவு  மெயின்  கேட்  எல்லாவற்றையும்  பெப்பரப்பே  என  திறந்து  போட்டுட்டா  கள்ளக்காதலனுடன்  இருப்பாள்< விதார்த்  வரும்போது  மாட்டுகிறாள் 



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   சிம்ப்ளி  சவுத்  ரிலீஸ்  படம்  சிம்ப்ளி  வேஸ்ட்  , டப்பாப்படம் , ரேட்டிங்  மைனஸ்  1 / 5 


Devil
Theatrical release poster
Directed byAathityaa
Written byAathityaa
Produced byRadhakrishnan
Hari
Starring
CinematographyKarthik Muthukumar
Edited byS. Elayaraja
Music byMysskin
Production
companies
Maruti Films
H Pictures
Release date
  • 2 February 2024
[citation needed]
CountryIndia
LanguageTamil

Wednesday, March 13, 2024

வடக்குப்பட்டி ராமசாமி (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா )

  


    2021 ல்  டிக்கிலோனா  என்ற  சயின்ஸ்  ஃபிக்சன்   காமெடி டிராமா  படம்  எடுத்த  இயக்குநர்   கார்த்திக்  யோகி  எடுத்த  அடுத்த  காமெடிப்படம்  தான்  இது.


 சந்தானம்  ஒரு  கால கட்டத்தில்  காமெடி  டிராக்கில்  கலக்கி  ஒரு  நாள்  சம்பளம்  ரூ  10  லட்சம்  என  பட்டையைக்கிளப்பிக்கொண்டு  இருந்தார் .அவர்  மனசுக்குள்  ஹீரோ ஆசை  வந்ததுமே  அவரது  காமெடி  முத்திரை  காணாமல்  போய்  விட்டது . அவர்  நாயகனாக  நடித்த  பல  படங்கள்  சுமார்  ரகம் ,  வெகு  சுமார்  ரகம்  தான்/  ஹிட்    ஆன  படங்கள்  பட்டியல்  பார்த்தால்  தில்லுக்கு  துட்டு  பாகம்  1  பாகம்  2   ஆகிய  இரு  படங்கள்  தான்.


  இந்தப்படத்தில்  முதல்  பாதி  மொக்கைக்காமெடி  ஆகவும்  பின்  பாதியில்  கடைசி  அரை  மணி  நேரம்  கலக்கலான  காமெடிப்படம்  ஆகவும்  வந்திருக்கிரது . 12  கோடி  ரூபாய்  பட்ஜெட்டில்  உருவான  இப்படம்  கமர்ஷியல்  ஆக  ஹிட்  தான் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


கதை  நடக்கும்  கால  கட்டம்  1974 .கதைக்களம்  வட  தமிழகத்தில்  உள்ள  ஒரு  கிராமம்- வடக்குப்பட்டி 

 நாயகன்  கடவுள்  நம்பிக்கை  இல்லாதவர் .அவரது  நிலத்தில்  கோயில்கட்டி  மக்களின்  மூட  நம்பிக்கையைப்பயன்படுத்தி  சம்பாதித்து  வருபவர் .  ஊருக்கு  ;புதுசாக  வரும்  தாசில்  தாரர்  கோயில் நிலத்தை  வாடகைக்கு  விட்டு  சம்பாதிக்கலாம்  என  ஐடியா  கொடுக்கிறார். அதில்  தனக்கு  கமிஷனும்  வேண்டும்  என்கிறார். இதற்கு  நாயகன்  உடன் படாததால்  தாசில்  தார்  சதித்திட்டம்  போட்டு  கோயிலை  மூட  வைக்கிறார்


  நாயகன்  நகரில்  மெட்ராஸ்  ஐ  என்னும்  வியாதி  பரவுவதைக்கண்டு  கோயில்  பூசாரியை  நகரத்துக்கு  அழைத்துப்போய்  மெட்ராஸ்  ஐ நோயை  அவருக்கு  ஒட்ட  வைத்து  அவரை  கிராமத்துக்கு  அழைத்து  வந்து  ஊர்  மக்களுக்கு  பரப்புகிறார். அப்பாவி  ஜனங்கள்  அதை  கண்ணாத்தாவின்  கோபம்  என  நினைத்து  கோயிலைத்திறக்க  முன்  வருகின்றனர் , இதற்குப்பின்  நிகழும்  காமெடி  களேபரங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  சந்தானம்.காமெடியனாக  நடிக்கும்போது  அவர்  முகத்தில்  எகத்தாளம்  தாண்டவம்  ஆடும். ஆனால்  ஹீரோ  ஆன  பின்  தன்னை  அறிவு  ஜீவியாக , பர்சனாலிட்டி  உள்ளவராகக்காட்டிக்கொள்ள  அவர்  படாத  பாடு  படுவதால்  வழக்கமான  தமிழ்  சினிமா  ஹீரோ  மாதிரி  பத்தோடு  பதினொன்று  ஆகிறார். சில  இடங்களில்  அவரது  ஒன்  லைனர்கள்  ஒர்க்  அவுட்  ஆகின்றன 


க்ளைமாக்சில்  வந்தாலும்  மொட்டை  ராஜேந்திரன்  கலக்கல்  காமெடி . கண்ணி  வெடி  காமெடி  யில்  பின்னி  எடுத்து  விட்டார் . சிறிது  நேரமே  வந்தாலும்  படம்  ம்ழுக்க  வரும்  ஹீரோவை  ஈசியாக  ஓவர்  டேக்  செய்கிறார்


லொள்ளு  சபா  மாறன்  மிக்த்திறமையான   ரைட்டர். அவர்  திறமைக்கு  அடைந்திருக்க  வேண்டிய  உயரம்  அதிகம், ஆனால் அடைந்த  உயரம்  கு\றைவுதான்.இதில்  அவரது  ரசிகர்களை  கை தட்ட  வைக்கிறார்


ஜான்  விஜய்  , ரவி  மரியா  இருவரின்  காம்பினேஷன்  காட்சிகள்  மொக்கைக்காமெடி  ரகம்  என்றாலும்  ரசிக்க  முடிகிறது. இவர்களின்  வாரிசுகள் காதலர்கள்  என்பதும்  அதை  வைத்து  கிளைக்காமெடி  டிராக்  ஓட்டுவதும்  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாதவை 


மன  நிலை  பாதிக்கப்பட்ட  ராணுவ  மேஜர்  ஆக  நிழல்கள்  ரவி   எதிர்பாராத  இன்ப  அதிர்ச்சி . அந்தக்காமெடி  நன்றாக  ஒர்க்  அவுட்  ஆகி  இருக்கிறது 


இவர்கள்  போக  லொள்ளு  சபா  சேஷூ  , எம் எஸ்  பாஸ்கர்  உட்பட  ஏராளமான  நட்சத்திரப்பட்டாளங்கள் உண்டு. எல்லோரும்  அவரவ்ர்  வேலையை  சிறப்பாக  செய்து  இருக்கிறார்கள் 


  நாயகி  ஆக  மேகா  ஆகாஷ்  சும்மா  வந்து  போகிறார். அதிக  வாய்ப்பில்லை 


சிவாநந்தீஸ்வரரின்  எடிட்டிங்கில் படம்  140  நிமிடங்கள்  ஓடுகின்றன . கடைசி  30  நிமிடங்கள்  அசத்தல்  காமெடி 


தீபக்கின்  ஒளிப்பதிவு  கச்சிதம் விக்னேஷ்  பாபு , விக்னேஷ்  வேணுகோபால்  இருவரும்  திரைக்கதை  எழுதி  இருக்கிறார்கள் 


சீன்  ரோல்டன்  இசை  அமைத்து  இருக்கிறார்.பாடல்கள்  சுமார்  ரகம்,  பின்னணி  இசை  குட் 


சபாஷ்  டைரக்டர்


1    மதர்லேண்ட்  பிக்சர்ஸ்  வழங்கும்  கோவைத்தம்பியின்  உதயகீதம்  (1985)  படத்தில்  வரும் கவுண்டமணி  காமெடி  டிராக்கில்  உள்ள  சின்ன  கான்செப்ட்டை  வைத்து  டெவலப்  செய்து  திரைக்கதை  எழுதிய  விதம்  அருமை 


2   கடைசி  30  நிமிடங்கள்  காமெடி  சரவெடி 


3  மொட்டை  ராஜேந்திரனின்  கண்ணி  வெடிக்காமெடி  கலக்கல்  ரகம் 

 ரசித்த  வசனங்கள் 

1  சாமி  விஷயத்துல  காசு  கணக்குப்பார்க்கக்கூடாது 


 காசு இருந்தாதான்  சாமியையே  பக்கத்துல  போய்  பார்க்க  முடியும் 


2  காலாகாலத்துல  அவனுக்கு  ஒரு  கால்  கட்டு  போடனும்

அவனைக்கட்டிக்கப்போறவளுக்கு  நாடிக்கட்டு  நீ  போடுவியா? 

3   இவனா  மாப்ளை ? ஊர்ல  பாதிக்கிழவிங்க  ஜாக்கெட்  போடக்காரணமே  இவன்  தான் , ஐ  மீன்  அவங்களுக்கு  ஜாக்கெட்  பிட்  எடுத்துத்தந்தவன்னு  சொல்ல  வந்தேன் 

4 பொண்ணு  நீ  குடுத்த  பூவை  தூக்கி  எறிஞ்சுட்டுப்போகுது ? நீ  சிரிக்கறே? 

 இதுக்கு  முன்னால   இதே  பொண்ணு  செருப்பு  , துடைப்பக்கட்டை  எல்லாம்  தூக்கிப்போட்டிருக்கு , அப்பவே  இவன்  சிரிச்சுட்டுதான்  இருந்தான் 

5 இவனாவது  இந்த  ஜென்மத்துல  தான்  பைத்தியமா  இருக்கான், அவன்  போன  ஜென்மத்துலயே  பைத்தியம்  தான்

6  பீடி  குடிச்சா  உதடு  கறுக்கும்,  ஓவரா சரக்கு  அடிச்சா  கண்  சிவக்கும் 

7  அவன்  பாலிடாயில்  குடிச்சுட்டான் 

மெட்ராஸ்  ஐன்னு  சொன்னியே?

அதுக்கு  பயந்து  இதைக்குடிச்சுட்டான் 

8   இப்படி  நாறுதே? பசுவோடதா?

  பசுபதியோடது 

9    இந்த  க்ளோப்  ல  ( உலக  உருண்டை)   இந்தியாவைக்காணோமே?

 அடேய்  , அது  பேப்பர்  வெயிட்டுடா

10   அடிச்சுப்போட்ட  மாதிரி  தூங்கறியே?

என்னைக்கு  சரக்கு  அடிச்சே?

11 ஆத்தா  , என் ஊனக்கண்ணை  மூடின  பின்  ஞானக்கண்ணை திறந்துட்டேன் 

12  மாசுபட்ட  இந்த  உலகத்தை  காசுபோட்ட   ஆள்  தான்  காப்பாத்தனும் 

13   ஒரு  ரூபாய்க்கே  இவ்ளோ  நடிக்கறியே? ஐம்பது  பைசா  தந்திருந்தா?

14   பாம்பும் , கீரியும்  மாதிரி  அடிச்சுக்கிட்டு  இருந்தவங்க  இப்போ  பூரியும்  ,கிழங்கும்  மாதிரி ..... 

 ஓக்கே இதுல  பூரி  யாரு  ? கிழங்கு  யாரு  ?

15   நான்  சொன்ன  அவன்  இவன்  இல்லை 

ஆமா,  இவன்  தான்  அவன்னு  நினைச்சுட்டோம் 

நீங்க  சொன்ன  அவனை  விட  நாங்க  காரியத்தைக்கச்சிதமா  முடிச்சுடுவோம்

 ஓ, என்ன  காரியம் ?

 அது  தெரியாது 

16   எவன் ஒருத்தன்  தன்னைப்பற்றிப்பெருமையாப்பேசிக்கறானோ  அவன்  வேலைக்கு ஆக மாட்டான் 

17   சரக்கு  தேன்  மாதிரி  இருக்கே?

தேன்  கூட்டில்  இருந்து  எடுத்தது 

18  உன்  கண்ல  பயம்  தெரியலையே?

கண்  பார்வையே  தெரியல , இதுல  பயம்  எப்படித்தெரியும் ?

19  காமெடி  பண்றதுக்கே  கடப்பால  இருந்து  வந்தவன்  மாதிரி  ஒரு  மூஞ்சி 

20   அந்த  ஆட்டம்  ?

பித்தலாட்டம்  தான் 

21  கிரானைட்  இருக்கா?

சயனைட்  வேணா  இருக்கு , சாப்புட்டு  செத்துப்போயிடறியா? 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகன்  ஏன்  நாத்திகவாதி  என்பதற்கான  காரணங்கள்  அழுத்தமாக  இல்லை 


2   நிழல்கள்  ரவி  ஏன்  அந்த  கிராமத்திற்கு  வருகிறார்  என்ற  விளக்கம்  இல்லை 


3    ஜான்  விஜய் - ரவி  மரியா  வாரிசுகள்  லவ்  போர்சன்  மெயின்  கதைக்கு  தேவை  இல்லாதவை 

4  ஒரு  கிராமத்தில்  எல்லோருமே  முட்டாள்களாக  இருப்பார்களா?  வெளியூர்  அல்லது  நகரம்  போய்  வந்தவர்  யாரும்  இல்லையா? மெட்ராஸ்  ஐ  பற்றி  யாருக்குமே  தெரியாமல்  போகுமா? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   கடைசி  அரை மணி  நேரக்காமெடிக்காட்சிகளுக்காக  அவசியம்  பார்க்கலாம் , ரேட்டிங்  - 2.75 / 5


Vadakkupatti Ramasamy
Theatrical release poster
Directed byKarthik Yogi
Written byKarthik Yogi
Screenplay byVignesh Babu
Vignesh Venugopal (Additional Screenplay)
Produced byT. G. Vishwa Prasad
Vivek Kuchibotla
StarringSanthanam
Megha Akash
CinematographyDeepak
Edited byT. Shivanandeeswaran
Music bySean Roldan
Production
company
People Media Factory
Distributed byRed Giant Movies
Trident Arts
Romeo Pictures
Release date
  • 2 February 2024
Running time
140 minutes
CountryIndia
LanguageTamil
Budget₹12 crore

Tuesday, March 12, 2024

ANWESHIPPIN KANDETHUM (2024) - மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்

  


     1990ல்  அனுராதா ரமணன்  எழுதிய  இரு  வெவ்வேறு  கதைகளை   கே  பாலச்சந்தர்  ஒரு  வீடு  இரு  வாசல்  என ஒரே  படத்தில்  தந்தார். இடைவேளை  வரை  ஒரு  கதை ,இடைவேளைக்குப்பின்  ஒரு  கதை .க்ளைமேக்சில்  இரு கதைகளையும்  இணைப்பார்கள் . அது  போல  மலையாளத்தில்  க்ரைம்  இன்வெஸ்டிகேசன்  த்ரில்லர்  ஆக  இரு  வேறு  கதைகள்  ஒரே  படத்தில்  சொல்லபப்ட்டிருக்கின்றன


தேடினால்  கண்டுபிடிக்கலாம்  என்பதுதான்  டைட்டிலுக்கான  அர்த்தம். 8  கோடி  ரூபாய்  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்டு  40  கோடி  ரூபாய்  வசூல்  செய்த  மெகா  ஹிட்  படம் .  கமர்ஷியலாகப்போனது  மட்டுமில்லாமல்  மீடியாக்களின்  விமர்சனங்களிலும்  ஆஹா  ஓஹோ  அபாரம்  பரிமளா  ரேஞ்சுக்குக்கொண்டாடப்பட்ட  படம் 


மலையாள  டைட்டிலுக்கான  தமிழ்  உச்சரிப்பு  அன்வேசிப்பின்  கண்டெத்தும்  என்பதுதான் , ஆனால்  முன்னணிப்பத்திரிக்கைகள் கூட  அன்பேசிப்பின் கண்டேதும்  என்றே  டைட்டிலை  உச்சரித்து இருக்கிறார்கள் 




ஸ்பாய்லர்  அலெர்ட்


முதல்  கதை  (  முதல்  கேஸ்) 


 1990  களில் கதை  நடக்கிறது .கேரளாவில் ஒரு  கிராமத்தில்  ஒரு  பெற்றோருக்கு  இரு  மகள்கள் .அதில்  ஒரு பெண்  வீட்டில்  தான்  இருக்கிறாள் . இரண்டாவது  பெண்  காலேஜில்  படிக்கிறாள் . எக்சாம்  ஹால்  டிக்கெட்  வாங்கப்போனவர்  வீடு  திரும்ப  வில்லை . இதுதான்  கேஸ் 


 போலீஸ்  விசாரிக்கிறது . காணாமல்  போன  பெண்ணை  வழிமறித்து  கிண்டல் செய்த  இரு  இளைஞர்களை  முதலில்    விசாரிக்கிறது . அவர்களுக்கும்  இந்த  கேசுக்கும்  சம்பந்தம்  இல்லை  எனத்தெரிய  வருகிறது .


அடுத்த  கட்டமாக  அந்தப்பெண்ணை  ஒரு  தலையாகக்காதலித்த  தறுதலைகள்  யாராவது  இருக்கிறார்களா? அல்லது  அந்தப்பெண்ணுக்குக்காதலன்  யாராவது  உண்டா? என  விசாரிக்கிறது 


அந்தெப்ப்ண்ணுக்குக்காதலன்  யாரும்  இல்லை . பாலியல்  வன்கொடுமைக்கு  ஆளாகவில்லை .அவருக்கு  யாரும்  பகையும்  இல்லை 


 இந்த  தலைவலிக்கேசை  நாயகன்  எப்படிக்கண்டுபிடிக்கிறான்  என்பதே  மீதி  திரைக்கதை 


இரண்டாவது  கதை  ( இரண்டாவது  கேஸ்) 


 ஆறூ  வருடங்களுக்கு  முன்  நடந்த  ஒரு  கொலை . இதுவரை  கொலைகாரனைக்கண்டு  பிடிக்க முடியவில்லை . போலீசால்  கண்டு பிடிக்க  முடியாமல்  சிபிஐக்கு மாற்றப்பட்ட கேஸ்  . அவர்களாலும்  கண்டு  பிடிக்க  முடியாமல்  இப்போது  நாயகனிடம்  வந்திருக்கும்  கேஸ்  இது 


 இதிலும்  கொலை  செய்யப்பட்டது  ஒரு  பெண்  தான் இவள்  மூன்று  மாத  கர்ப்பிணியாக  இருக்கிறார்  என்பது  போஸ்ட்  மார்ட்டம்  ரிப்போர்ட் .அவளது  காதலன்  வட  மாநிலத்தில்  வேலை  செய்கிறான். அப்போது  செல்ஃபொன்கள்  புழக்கத்தில்  இல்லாத  காலகட்டம்  ( 1984-1990) 


கடிதப்போக்குவரத்து  மூலமாக  அந்தப்பெண்  தன்  காதலனிடம்  அவ்வப்போது  தொடர்பு  கொண்டது  சில  கடிதங்கள்  வாயிலாகத்தெரிய  வந்துள்ளது


கொலை  செய்யப்படுவதற்கு  முந்தைய  நாள்  அந்தப்பெண்  தன்  காதலனுடன் ஓடிப்போக திட்டம்  போட்டிருக்கிறாள். அவளை  அவளின்  காதலன்  கொல்ல  வில்லை ., வேறு  யாராலும்  பாலியல்  வன்கொடுமைக்கும்  ஆளாக்கப்படவில்லை 


இந்தக்கேசில்  அந்த  ஊரில்  உள்ள  பாதிரியார்  வீட்டில்  சில  துப்புகள்  கிடைக்கலாம்  என  நாயகன்  நினைக்கிறான். ஆனால்  அவர்  வீட்டில்  சோதனை  இட  ஊர்  மக்கள்  எதிர்க்கிறார்கள் . இதற்குப்பின்  நாயகன்  என்ன  செய்தான்  எப்படி  கேசை  டீல்  செய்தான்  என்பது  மீதி  திரைக்கதை 

 நாயகன்  ஆக  டோவினோ  தாமஸ்  நடித்திருக்கிறார். கேரளாவில்  இளைஞிகளின்  ஏகோபித்த  ஆதரவைப்பெற்ற  ஹீரோ . படம்  முழுக்க  இறுக்கமான  முகத்துடன்  இதுதாண்டா  போலீஸ்  டாக்டர்  ராஜசேகர்  மாதிரி  கடுப்பு  காட்டும்  முகத்துடன்  பிரமாதமாக நடித்துள்ளார் . 


  இதற்கு முந்தைய  பல  படங்களில்  இவர்  செயின்  ஸ்மோக்கர்  ஆக  எப்போப்பாரு  தம்  அடிப்பது , தண்ணி  அடிப்பது  என  எரிச்சலூட்டும்  வகையில்   பல  காட்சிகளில்  வந்தாலும்  இந்தப்படத்தில்  தம்  அடிக்கும்  காட்சி  இல்லாதது  ஒரு  ஆறுதல் 


சிபிஐ  ஆஃபீசர்  ஆக  இந்திரன்ஸ்  , ஐபிஎஸ்  ஆஃபீசர்  ஆக  சித்திக்  தங்கள்  கேரக்டருக்கு  பெருமை  சேர்த்து  இருக்கிறார்கள் 


145  நிமிடங்கள் படம்  ஓடும்படி  எடிட்  செய்து  இருக்கிறார்  சைஜூ  ஸ்ரீதரன் . கவுதம்  சங்கரின்  ஒளிப்பதிவு சந்தோஷ் நாராயனன்  இசை  அபாரம் . பின்னை  இசை  பல  இடங்களில்  விறுவிறுப்பு 


ஜினு ஆப்ரஹாமின்  கதையை  இயக்கி  தயாரித்து  இருக்கிறார் டார்வின்  குர்லக்கோஸ் 


சபாஷ்  டைரக்டர்


1  பாதிரியார்  வீட்டில்  சோதனை  செய்ய  வேண்டும், ஆனால்  ஊர் மக்கள்  விடவில்லை . அதற்கு  நாயகன்  போடும்  பிளான்  அபாரம் .  போலீசே  செட்டப்  செய்து  ஒரு  திருடனை  அனுப்பி  டம்மியாக  எதையோ  திருடுவது  போல்  திருடி  மாட்டி  பின் போலீஸ்  கை  ரேகைகளை  எடுக்க   என  சால்சாப்  சொல்லி  சோதனை  இட்டு  உண்மையான  கேசின்  டீட்டெய்ல்சை  கலெக்ட்  செய்வது  அட்டகாசம் 


2  இரு  கதைகளிலும்  இரு  கொலைகளும்  இரு  வேறு  பெண்கள்  தான்  என்றாலும்  பாலியல்  வன்கொடுமை  அல்லது  கிளாமர்  காட்சிகள்  எதையும்  திணிக்காமல்  குடும்பத்துடன்  காணத்தக்க  க்ரைம்  கதையை  எழுதிய்த


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஒரு  பெண்  தன்  கள்ளக்காதலன்  வீட்டில்  உல்லாசமாக  இருந்தால்  மீண்டும்  அந்த  வீட்டை  விட்டு  வெளியே  வரும்போது  முதலில்  காதலனை  அனுப்பி  வாசலில்  யாராவது  இருக்கிறார்களா?என  நோட்டம்  பார்த்து  அவன்  வந்து  சொன்ன  பின்  இவள்  தனியாக  டக்  என்று  வீட்டை  விட்டு  வெளியேறுவதுதான்  உலக  கள்ளக்காதலர்கள் வழக்கம் (  எனக்கு  அனுபவம்  இல்லை , படங்கள்  பார்த்துப்பிறந்த  ஞானம்  )  ஆனால்  இதில்  ஒரு பெண்  தன்  கள்ளக்காதலனுடன்  ஜோடியாக  கை  கோர்த்துக்கொண்டே  வெளியேறி  மாட்டிக்கொள்கிறாள் . பெண்கள் அவ்வளவு அசால்ட்  ஆகவா  மாட்டுவார்கள் ?


2   பாதிரியாரைப்பார்க்க  வேண்டும்  எனில்  சர்ச்க்குப்போவார்கள்  . ஒரு  பெண்  ஏன் மதிய  நேரத்தில்  பாதிரியார்  வீட்டுக்குத்தனியாகப்போகவேண்டும் ?  அப்பாவைக்கூட  கூட்டிக்கொண்டு  செல்லலாம் 


3  தற்கொலை  செய்யும்  ஒரு  ஆண்  உயரமான  மரத்தில்  எப்படி  தற்கொலை  செய்ய  முடியும் ? ஃபேன்  எனில்  கீழே  சேர்  போட்டு  ஏறி  கயிறு  மாட்டலாம். உயரமான  மரம்  எனில்  ஏணி  வேண்டுமே? அருகில்  அப்படி  எதையும்  காணோமே? 


1  பஞ்சாயத்துத்தலைவர்  போலீசிட ம்  சில  ஃபைல்களைத்தர  மாட்டேன்  என  சொல்கிறார். போலீஸ்  அதை  எடுக்காமல்  இருக்க  குறிப்பிட்ட  அந்த  ஒரு  ஃபைலை  மட்டும்  தன்  வீட்டுக்குக்கொண்டு  வந்தால்  போதாதா? மெனக்கெட்டு  எல்லா  ஃபைல்களையும்  தண்டமாகக்கொண்டு  வருவது  ஏன் ? 

4  நாயகன்  கூட  மூவர்  உதவிக்கு  வருகிறார்கள் . ஒரு  ஆள்  சமையல்  வேலையைப்பார்த்துக்கொள்கிறான் . மீதி  இருவர்  கூடவே  இருக்கிறார்களே  ஒழிய  எந்த  உதவியும் நாயகனுக்குச்செய்த  மாதிரி  தெரியவில்லை 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பிரமாதமான  கதை  என  சொல்ல  முடியாவிட்டாலும்  சராசரி  தரத்துக்கும்  மேலே ஒரு  படி  இருக்கும்  நல்ல  படம்  தான்  இது . ரேட்டிங்  3 / 5 


Anweshippin Kandethum
Directed byDarwin Kuriakose
Written byJinu V Abraham
Produced by
  • Darwin Kuriakose
  • Dolwin Kuriakose
  • Jinu V Abraham
  • Vikram Mehra
  • Siddarth Anand Kumar
Starring
CinematographyGautham Sankar
Edited bySaiju Sreedharan
Music bySanthosh Narayanan
Production
companies
Yoodlee Films
Theatre of Dreams
Release date
  • 9 February 2024 (India)
Running time
145 minutes
CountryIndia
LanguageMalayalam
Budget₹8 crores[1][2]
Box office₹40cr[3]