1990ல் அனுராதா ரமணன் எழுதிய இரு வெவ்வேறு கதைகளை கே பாலச்சந்தர் ஒரு வீடு இரு வாசல் என ஒரே படத்தில் தந்தார். இடைவேளை வரை ஒரு கதை ,இடைவேளைக்குப்பின் ஒரு கதை .க்ளைமேக்சில் இரு கதைகளையும் இணைப்பார்கள் . அது போல மலையாளத்தில் க்ரைம் இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் ஆக இரு வேறு கதைகள் ஒரே படத்தில் சொல்லபப்ட்டிருக்கின்றன
தேடினால் கண்டுபிடிக்கலாம் என்பதுதான் டைட்டிலுக்கான அர்த்தம். 8 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 40 கோடி ரூபாய் வசூல் செய்த மெகா ஹிட் படம் . கமர்ஷியலாகப்போனது மட்டுமில்லாமல் மீடியாக்களின் விமர்சனங்களிலும் ஆஹா ஓஹோ அபாரம் பரிமளா ரேஞ்சுக்குக்கொண்டாடப்பட்ட படம்
மலையாள டைட்டிலுக்கான தமிழ் உச்சரிப்பு அன்வேசிப்பின் கண்டெத்தும் என்பதுதான் , ஆனால் முன்னணிப்பத்திரிக்கைகள் கூட அன்பேசிப்பின் கண்டேதும் என்றே டைட்டிலை உச்சரித்து இருக்கிறார்கள்
ஸ்பாய்லர் அலெர்ட்
முதல் கதை ( முதல் கேஸ்)
1990 களில் கதை நடக்கிறது .கேரளாவில் ஒரு கிராமத்தில் ஒரு பெற்றோருக்கு இரு மகள்கள் .அதில் ஒரு பெண் வீட்டில் தான் இருக்கிறாள் . இரண்டாவது பெண் காலேஜில் படிக்கிறாள் . எக்சாம் ஹால் டிக்கெட் வாங்கப்போனவர் வீடு திரும்ப வில்லை . இதுதான் கேஸ்
போலீஸ் விசாரிக்கிறது . காணாமல் போன பெண்ணை வழிமறித்து கிண்டல் செய்த இரு இளைஞர்களை முதலில் விசாரிக்கிறது . அவர்களுக்கும் இந்த கேசுக்கும் சம்பந்தம் இல்லை எனத்தெரிய வருகிறது .
அடுத்த கட்டமாக அந்தப்பெண்ணை ஒரு தலையாகக்காதலித்த தறுதலைகள் யாராவது இருக்கிறார்களா? அல்லது அந்தப்பெண்ணுக்குக்காதலன் யாராவது உண்டா? என விசாரிக்கிறது
அந்தெப்ப்ண்ணுக்குக்காதலன் யாரும் இல்லை . பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை .அவருக்கு யாரும் பகையும் இல்லை
இந்த தலைவலிக்கேசை நாயகன் எப்படிக்கண்டுபிடிக்கிறான் என்பதே மீதி திரைக்கதை
இரண்டாவது கதை ( இரண்டாவது கேஸ்)
ஆறூ வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொலை . இதுவரை கொலைகாரனைக்கண்டு பிடிக்க முடியவில்லை . போலீசால் கண்டு பிடிக்க முடியாமல் சிபிஐக்கு மாற்றப்பட்ட கேஸ் . அவர்களாலும் கண்டு பிடிக்க முடியாமல் இப்போது நாயகனிடம் வந்திருக்கும் கேஸ் இது
இதிலும் கொலை செய்யப்பட்டது ஒரு பெண் தான் இவள் மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கிறார் என்பது போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் .அவளது காதலன் வட மாநிலத்தில் வேலை செய்கிறான். அப்போது செல்ஃபொன்கள் புழக்கத்தில் இல்லாத காலகட்டம் ( 1984-1990)
கடிதப்போக்குவரத்து மூலமாக அந்தப்பெண் தன் காதலனிடம் அவ்வப்போது தொடர்பு கொண்டது சில கடிதங்கள் வாயிலாகத்தெரிய வந்துள்ளது
கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் அந்தப்பெண் தன் காதலனுடன் ஓடிப்போக திட்டம் போட்டிருக்கிறாள். அவளை அவளின் காதலன் கொல்ல வில்லை ., வேறு யாராலும் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கப்படவில்லை
இந்தக்கேசில் அந்த ஊரில் உள்ள பாதிரியார் வீட்டில் சில துப்புகள் கிடைக்கலாம் என நாயகன் நினைக்கிறான். ஆனால் அவர் வீட்டில் சோதனை இட ஊர் மக்கள் எதிர்க்கிறார்கள் . இதற்குப்பின் நாயகன் என்ன செய்தான் எப்படி கேசை டீல் செய்தான் என்பது மீதி திரைக்கதை
நாயகன் ஆக டோவினோ தாமஸ் நடித்திருக்கிறார். கேரளாவில் இளைஞிகளின் ஏகோபித்த ஆதரவைப்பெற்ற ஹீரோ . படம் முழுக்க இறுக்கமான முகத்துடன் இதுதாண்டா போலீஸ் டாக்டர் ராஜசேகர் மாதிரி கடுப்பு காட்டும் முகத்துடன் பிரமாதமாக நடித்துள்ளார் .
இதற்கு முந்தைய பல படங்களில் இவர் செயின் ஸ்மோக்கர் ஆக எப்போப்பாரு தம் அடிப்பது , தண்ணி அடிப்பது என எரிச்சலூட்டும் வகையில் பல காட்சிகளில் வந்தாலும் இந்தப்படத்தில் தம் அடிக்கும் காட்சி இல்லாதது ஒரு ஆறுதல்
சிபிஐ ஆஃபீசர் ஆக இந்திரன்ஸ் , ஐபிஎஸ் ஆஃபீசர் ஆக சித்திக் தங்கள் கேரக்டருக்கு பெருமை சேர்த்து இருக்கிறார்கள்
145 நிமிடங்கள் படம் ஓடும்படி எடிட் செய்து இருக்கிறார் சைஜூ ஸ்ரீதரன் . கவுதம் சங்கரின் ஒளிப்பதிவு சந்தோஷ் நாராயனன் இசை அபாரம் . பின்னை இசை பல இடங்களில் விறுவிறுப்பு
ஜினு ஆப்ரஹாமின் கதையை இயக்கி தயாரித்து இருக்கிறார் டார்வின் குர்லக்கோஸ்
சபாஷ் டைரக்டர்
1 பாதிரியார் வீட்டில் சோதனை செய்ய வேண்டும், ஆனால் ஊர் மக்கள் விடவில்லை . அதற்கு நாயகன் போடும் பிளான் அபாரம் . போலீசே செட்டப் செய்து ஒரு திருடனை அனுப்பி டம்மியாக எதையோ திருடுவது போல் திருடி மாட்டி பின் போலீஸ் கை ரேகைகளை எடுக்க என சால்சாப் சொல்லி சோதனை இட்டு உண்மையான கேசின் டீட்டெய்ல்சை கலெக்ட் செய்வது அட்டகாசம்
2 இரு கதைகளிலும் இரு கொலைகளும் இரு வேறு பெண்கள் தான் என்றாலும் பாலியல் வன்கொடுமை அல்லது கிளாமர் காட்சிகள் எதையும் திணிக்காமல் குடும்பத்துடன் காணத்தக்க க்ரைம் கதையை எழுதிய்த
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஒரு பெண் தன் கள்ளக்காதலன் வீட்டில் உல்லாசமாக இருந்தால் மீண்டும் அந்த வீட்டை விட்டு வெளியே வரும்போது முதலில் காதலனை அனுப்பி வாசலில் யாராவது இருக்கிறார்களா?என நோட்டம் பார்த்து அவன் வந்து சொன்ன பின் இவள் தனியாக டக் என்று வீட்டை விட்டு வெளியேறுவதுதான் உலக கள்ளக்காதலர்கள் வழக்கம் ( எனக்கு அனுபவம் இல்லை , படங்கள் பார்த்துப்பிறந்த ஞானம் ) ஆனால் இதில் ஒரு பெண் தன் கள்ளக்காதலனுடன் ஜோடியாக கை கோர்த்துக்கொண்டே வெளியேறி மாட்டிக்கொள்கிறாள் . பெண்கள் அவ்வளவு அசால்ட் ஆகவா மாட்டுவார்கள் ?
2 பாதிரியாரைப்பார்க்க வேண்டும் எனில் சர்ச்க்குப்போவார்கள் . ஒரு பெண் ஏன் மதிய நேரத்தில் பாதிரியார் வீட்டுக்குத்தனியாகப்போகவேண்டும் ? அப்பாவைக்கூட கூட்டிக்கொண்டு செல்லலாம்
3 தற்கொலை செய்யும் ஒரு ஆண் உயரமான மரத்தில் எப்படி தற்கொலை செய்ய முடியும் ? ஃபேன் எனில் கீழே சேர் போட்டு ஏறி கயிறு மாட்டலாம். உயரமான மரம் எனில் ஏணி வேண்டுமே? அருகில் அப்படி எதையும் காணோமே?
1 பஞ்சாயத்துத்தலைவர் போலீசிட ம் சில ஃபைல்களைத்தர மாட்டேன் என சொல்கிறார். போலீஸ் அதை எடுக்காமல் இருக்க குறிப்பிட்ட அந்த ஒரு ஃபைலை மட்டும் தன் வீட்டுக்குக்கொண்டு வந்தால் போதாதா? மெனக்கெட்டு எல்லா ஃபைல்களையும் தண்டமாகக்கொண்டு வருவது ஏன் ?
4 நாயகன் கூட மூவர் உதவிக்கு வருகிறார்கள் . ஒரு ஆள் சமையல் வேலையைப்பார்த்துக்கொள்கிறான் . மீதி இருவர் கூடவே இருக்கிறார்களே ஒழிய எந்த உதவியும் நாயகனுக்குச்செய்த மாதிரி தெரியவில்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பிரமாதமான கதை என சொல்ல முடியாவிட்டாலும் சராசரி தரத்துக்கும் மேலே ஒரு படி இருக்கும் நல்ல படம் தான் இது . ரேட்டிங் 3 / 5
| Anweshippin Kandethum | |
|---|---|
| Directed by | Darwin Kuriakose |
| Written by | Jinu V Abraham |
| Produced by |
|
| Starring | |
| Cinematography | Gautham Sankar |
| Edited by | Saiju Sreedharan |
| Music by | Santhosh Narayanan |
Production companies | Yoodlee Films Theatre of Dreams |
Release date |
|
Running time | 145 minutes |
| Country | India |
| Language | Malayalam |
| Budget | ₹8 crores[1][2] |
| Box office | ₹40cr[3] |
.jpg)