Monday, February 05, 2024

ரஜினி (2023) - மலையாளம் - அவள் பெயர் ரஜினி ( தமிழ் ) - சினிமா விமர்சனம் ( மர்டர் மிஸ்ட்ரி த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்

 


 இந்தப்படம்  மலையாளம், தமிழ்  ஆகிய  இரு  மொழிகளிலும் ஒரே  நேரத்தில்  படமாக்கப்பட்டு  ஒரே  சமயத்தில்  8 /12/23  ல்  திரை அரங்குகளில்  வெளியானாலும்  இப்போது ஓடி டி  யில்  மலையாளத்தில்  மட்டும்  தான்  ரிலீஸ்  ஆகி  இருக்கிறது . அது  ஏன்    எனத்தெரியவில்லை 


 விக்கி  பீடியாவில்  ஆக்சன்  த்ரில்லர்   எனவும்  டீசர்  டிரெயுலர்களில்  சூப்பர்  நேச்சுரல்  ஹாரர்  த்ரில்லர்  ஆகவும்  பிரமோஷன்  கொடுத்திருந்தாலும்  இது  ஒரு  ரிவஞ்ச்  த்ரில்லர்  தான் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின்  தங்கையும்  அவள்  கணவனும்  காரில்  இரவில்  வந்து  கொண்டிருக்கிறார்கள் , திடீர்  என  கார்  பெட்ரோல்  இல்லாமல்  நின்று  விடுகிறது. பெட்ரோல்  வாங்க  கிளம்பும்  கணவன்  மனைவி  கண்  முன்  கொடூரமாக  ஒரு  உருவத்தால்  தாக்கப்பட்டு  இறக்கிறார். அது   பெண்னா ? பேயா?  என்ற  குழப்பம்  எல்லோருக்கும்  இருக்கிறது


போலீஸ்  விசாரணையில்  இறங்க  நாயகன்  ஒரு  புறம்  தன்  தங்கையின்  கணவன்  கொலை  விசாரணையில்  இறங்குகிறான்.இதற்குப்பின்  நிகழும்  திருப்பங்கள்  தான்  மீதி  திரைக்கதை


  நாயகன்  ஆக காளிதாஸ்  ஜெயராமன்  படம்  முழுக்க  சிரிக்காமல்  நடித்திருக்கிறார். சம்பள  பாக்கியாக  இருக்கலாம் .தங்கையாக  நமீதா  பிரமோத்  நடித்திருக்கிறார். அழகான  முகத்தோற்றம், நடிகை  நமீதாவுக்கும் , இவருக்கும்  எந்த  சம்பந்தமும்  இல்லை 


தங்கையின்  கணவனாக சைஜூ  க்ரூப்  நடித்திருக்கிறார். அதிக  வாய்ப்பில்லை 


கொலையின்  முக்கிய  சாட்சியாக  ஆட்டோ டிரைவர்  ஆக  கருணாகரன்  காமெடி  கம்  குணச்சித்திரம்  காட்டி  இருக்கிறார்


ப்ரியங்கா  சாய்  வில்லியாகக்கலக்கி  இருக்கிறார். நாயகன், நாயகனின்  தங்கை  ரோல்களை  விட  இவரது  ரோல்தான் அழுத்தமாக  எழுதப்பட்ட  கதாபாத்திரம்


வில்லியின்  ஃபிளாஸ்பேக்  கதை  அழுத்தமாக , கவனம்  ஈர்க்கும்படி  இருக்கிறது 

டீப்பு ஜோசஃப்  எடிட்டிங்கில் படம்  2  மணி  நேரத்தில்  முடிகிறது . விஷ்ணு வின் ஒளிப்பதிவில்  லாங்க்  ஷட்கள்  கவனம் ஈர்க்கின்றன


வின்செண்ட்  வடக்கன்  உதவியுடன்  திரைக்கதை  அமைத்து  இயக்கி  இருக்கிறார்  வினில்  ஸ்கேரியன்  வர்கீஸ் 


சபாஷ்  டைரக்டர்


1      ஆட்டோ  டிரைவர்  முக்கிய  சாட்சியாக  மாறியதும்  அவர்  பார்வையில்  கதை  சம்பவங்கள்  காட்டப்படுவது  சுவராஸ்யமாக  இருந்தது


2  வில்லி ,  ஆட்டோ  டிரைவர்  கிருவருமே  ரஜினி  ரசிகர்கள்  என   காட்டியது  கச்சிதம் 


3   வில்லிக்குப்பதிலாக  ஆள்  மாறாட்டமாக  போலீஸ்  வேறு  ஒரு பெண்ணைப்பிடிப்பது  நல்ல  ட்விஸ்ட்


ரசித்த  வசனங்கள் 


1  நம்ம  ஊர்ல  பேயைப்பார்த்தேன்னு  சொன்னா  உடனே  நம்புவாங்க , ஆனா  கடவுளைப்பார்த்தேன்னு  சொன்னா  யாரும்  நம்ப  மாட்டாங்க 


2 நமக்கு  ரொம்பத்தெரிஞ்ச  ஆட்களே  சில  சமயம்  நமக்குத்தெரியாத  ஷாக்  சர்ப்பரைஸ்  மேட்டர்சை  நமக்கு  அளிப்பாங்க 


3  கொலை  செஞ்ச  பெண்ணை  நேர்ல  பார்த்திருக்கியே? வர்ணி. இவரு  வரைவாரு 


  அவளுக்கு  செம  இடுப்பு  சார்


  டேய் , முகத்தைப்பத்தி  சொல்லு


 அழகான  பெண்  முகத்தை  யார்  சார்  பார்ப்பாங்க . கிளி  மாதிரி  இருந்தா 


 கிழிச்சுப்போடுவேன்  உன்னை 


4   அந்த  நாய்  கிட்டே  கேட்டா  இது  எல்லாம் ஒரு  பேயோட  வேலைனு  சொல்றானே? அது  பத்தி  நீங்க  என்ன  நினைக்கறீங்க ?


 என்னைக்கேட்டா? அதை  அந்த  நாய்  கிட்டே தான்  கேட்கனும்


5   சில  விஷயங்களை  நாம  எவ்வளவு  தான்  மறக்கனும்னு  நினைச்சாலும்  காலம்  நமக்கு   அதை  ஞாபகபப்டுத்திட்டேதான் இருக்கும்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   முன்  தினம்  தான்  ரூ 2000  க்கு  பெட்ரோல்  போட்டேன்,  இப்போ  திடீர்னு  ட்ரை  ஆகிடுச்சே? எப்படி?  என தனக்குத்தானே  நாயகியின்  கணவன்  கேட்கிறான். காரை  ஸ்டார்ட்  பண்ணும்போதே   பெட்ரோல்  ஸ்டாக்  பொசிசன்  காட்டுமே? பார்க்க  மாட்டாரா? 


2  இரவு  நேரத்தில்  காரில்  போகும்போது  கார்  நின்று  விட்டால்  அருகில்  இருக்கும்  பெட்ரோல்  பங்க்கிற்கு  பெட்ரோல்  வாங்க  செல்பவர்  காரில்  பெண்ணை  தனியே  விட்டுச்செல்வார்களா?  கூட  அழைத்துச்செல்வார்களா? எது  சேஃப்டி?

3  வில்லி  ஒரு  ரஜினி  ரசிகை , அவளது  நண்பன்  ஆட்டோ  டிரைவர்  தன்  ஆட்டோவில்  ரஜினி  ஃபோட்டோ  ஒட்டி  இருக்கிறான், வில்லி  தன்  பெயரை  ஆட்டோ  டிரைவரிடம்  ஒவ்வொரு  டைமும்  ஒரு  ரஜினி  பட  நாயகியின்  பெயராக  சொன்னதாக  அவன்  கூறுகிறான். அப்போது  போலீஸ்  ஆஃபீசருக்கோ  நாயகனுக்கோ  இருவருக்குமான  பொதுவான  அமசமாக  ரஜினி  ரசிப்புத்தன்மை  இருப்பதை  ஏன்  உணர  முடியவில்லை ?  இது  படம்  போட்ட  40  நிமிடங்களிலிலேயே  நடக்கிறது


4  திட்டமிட்டு  கொலை  நடத்தும்  ஒரு  நபர்  ரெகுலராக  ஒரே  ஆட்டோவில்  பயணிப்பாரா? அவரிடம்  தன்  ஃபோன்  நெம்பர்  கொடுப்பாரா? 


5  வில்லி  அசுர  பலம்  மிக்கவர் , ஓப்பனிங்  ஷாட்டில்  கணவரைக்கொன்ற போதே  மனைவியையும்  ஈசியாகக்கொன்றிருக்கலாம், அப்போ  விட்டுட்டு  க்ளைமாக்சில்  ஏன்  கொல்ல  முயற்சிக்கிறார்?


6  க்ளைமாக்சில்  வில்லி  ஒரே  நபராக  போலீஸ்  ஆஃபீசர் , கான்ஸ்டபிள்ஸ்  மூவர் , நாயகன்  என   ஐந்து  பேரை  அடித்து  வீழ்த்துவது  நம்பும்படி  இல்லை 


7  க்ளைமாக்சில்  நாயகி , வில்லி  இருவருக்கும்  ஒரே  நிற  காஸ்ட்யூம்  எதற்கு ? ஆடியன்சைக்குழப்பவா? 


8  இந்த  கேசில்  போலீஸ்  ஆஃபிசரை  டம்மி  ஆக்கி  நாயகன்  தான்  எல்லாம்  கண்டறிவதாகக்காட்டுவது  ஏற்கும்படி  இல்லை 


9  பொதுவாக  திருநங்கைகள்  ஆண்களைத்தான்  புகழ்வார்கள் . இதில்  நாயகியைப்புகழ்வதாகக்காட்சி  வருகிறது 


10  நாயகி  காரில்  வரும்போது  வில்லி  அவளை  வர்ணிக்கிறார். அப்போது  நாயகி  ஜஸ்ட்  கார்  கண்ணாடியை  ஏற்றி  விட்டிருக்கலாம்.  பிரச்சனையே  இல்லை . வெளியே  வந்து  ரகளை  எல்லாம்  செய்தது  செயற்கை 




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்    யூ / ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  போர்  அடிக்காமல்  போகும்  சராசரி  க்ரைம்  த்ரில்லர். ரேட்டிங்  2.75 / 5 


Rajni
Theatrical release poster
Directed byVinil Scariah Varghese
Written by
  • Vinil Scariah Varghese
  • Vincent Vadakkan
Produced by
  • Sreejith K. S.
  • Blessy Sreejith
Starring
CinematographyR. R. Vishnu
Edited byDeepu Joseph
Music by4 Musics
Production
company
Navarasa Films
Distributed byGoodwill Entertainments
Release date
  • 8 December 2023
CountryIndia
Languages
  • Malayalam
  • Tamil

Sunday, February 04, 2024

ரசிக்கும் சீமானே (2010) - தமிழ் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்) @ கே டி வி


இந்தப்படத்துக்கு  முதலில்  எட்டப்பன்  என்றுதான்  டைட்டில்  வைக்கப்பட்டது . மற்றவர்களை  ஏமாற்றி , மிரட்டி  பிழைக்கும்  நாயகனின்  கதை  என்பதால்  டைட்டில்  அப்படி  வைத்தார்கள், ஆனால்  நிஜமான  எட்டப்பன்  பரம்பரை  வாரிசுகள்  டைட்டிலை  எதிர்த்ததால்  அது  பின்  மாற்றப்பட்டது . சிவாஜி  நடித்த  பராசக்தி  படத்தில்  ஓ  ரசிக்கும்  சீமானே  என்ற  ஹிட்  பாட்டு  உண்டு . அதை  ரீமேக்  பண்ணி  ஒரு  பாட்டாக  சேர்த்திருக்கிறார்கள் , படத்தின்  டைட்டிலையும்  பாடலின்  முதல்  வரியிலிருந்து  உருவி  இருக்கிறார்கள் 


இந்தப்படம்  ரிலீஸ்  ஆனபோது  கமர்ஷியல்  ஆக  போகவில்லை . ஃபிளாப்  படம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன், நாயகி,  தோழன்  மூவரும்  சின்ன  வயதில்    இருந்தே  ஒரே  ஸ்கூல், ஒரே  க்ளாசில்  படித்தவர்கள் . இருவருமே  நாயகி  மீது  ஆசை  வைக்க  நாயகி  யார்  பெரிய  ஆள்  ஆகி  டாக்டர்  ஆகிறீர்களோ  அவர்களையே  திருமணம்  செய்து  கொள்வதாக  சொல்கிறாள். ஏழாம்  வகுப்புப்படிக்கும்போது  நாயகியின்  அப்பாவுக்கு  ட்ரான்ஸ்ஃபர்  ஆகி  விட  நாயகி  ஊரை  விட்டுப்போகிறார்


பல  வருடங்கள்  கழித்து  நாயகனின்  நண்பன்  நிஜமாகவே  டாக்டர்  ஆகி  விடுகிறான், நாய்கியைப்பார்த்து  ப்ரப்போஸ்  செய்து  திருமணத்துக்கும்  ஓக்கே  வாங்கி  விடுகிறான். ஆனால்  நாயகன்  வளர்ப்பு  சரி  இல்லாததால்  பிளாக்மெய்லர்  ஆகி  விடுகிறான்


 அதாவது  ஆட்கள்  எசகுபிசகாக  பெண்ணிடம் இருக்கும்போது  அதை  ஃபோட்டோ  எடுத்து  அதைக்காட்டி  மிரட்டி பணம்  பறிக்கும்  தொழிலில்  இருப்பவன் 


 நாயகனின்  நண்பன்  ஒரு  முறை  எதிர்பாராத  விதமாக  ஒரு  கொலைக்கேசில்  மாட்டிக்கொள்கிறான். ஆனால்  உண்மையான  கொலைகாரன்  யார் ? என்று  நாயகனுக்குத்தெரியும். நாயகனின்  தோழனை  கொலைக்கேசில்  இருந்து  விடுவிக்க  வேண்டும்  எனில்  நாயகி  தன்னைத்திருமணம்  செய்து  கொள்ள  வேண்டும்  என  கண்டிசன்  போடுகிறான் . இதற்குப்பின்  நிகழும்  திருப்பங்கள் தான்  மீதி  திரைக்கதை 


 நாயகன்  ஆக  ஸ்ரீ  காந்த்  ஃபங்க்  வைத்த  ஹேர்  ஸ்டைல்  உடன்  வில்லன்  ரோல்  செய்து  இருக்கிறார். ஆண்ட்டி  ஹீரோ .  அவருக்கு  பெரிய  அளவில்  செட்  ஆகவில்லை .  நாயக்னின்  தோழன்  ஆக  அர்விந்த்  ஆகாஷ்  நடித்திருக்கிறார், சுமாரான  நடிப்பு   .  நாயகி  ஆக  நவ்யா  நாயல் அ ழகாக  வந்து  போகிறார்


 சத்யன்  காமெடி  ரோல்.,காதல்  தண்டபாணி , போஸ்  வெங்கட்  , நீலிமா  ராணி  அனைவரும்  வந்த  வரை  ஓக்கே  ரகம் 


விஜய்  ஆண்ட்டனி  இசையில்  ஐந்து  பாடல்கள்  அவற்றில்  மூன்று  செம  ஹிட் . பன்னீர்  செல்வம்  ஒளிப்பதிவு  கண்ணுக்குக்குளுமை . நாயகியை  கிலாமராகக்காட்டுவதில்  ஸ்லீவ்லெஸ்  டிரெசில்  கவர்  பண்ணுவதில்  வெற்றி   பெற்றிருக்கிறார்


சுரேஷ்  கோட்டியின்  எடிட்டிங்கில்  இரண்டே  கால்  மணி  நேரம்  படம்  ஓடுகிறது


 ஆர்  கே  வித்யாதரன்  திரைக்கதை  எழுதி இயக்கி  இருக்கிறார். பின்  பாதி  திரைக்கதையில்  தடுமாற்றம்   



சபாஷ்  டைரக்டர்


1    நவ்யா  நாயரின்  அழகு, இளமை  படத்துக்குப்பெரிய  பிளஸ் 


2   விஜய்  ஆண்ட்டனியின்  இசையில்  பாடல்கள்  ஹிட்  ஆனது   பிளஸ்


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  பூவே  பூவே  சொல்லிடு இது காதல் தானா?  (டைட்டில்  சாங்)


2   நச்சிலோ  நச்சிலோ (  ஓப்பனிங்  சாங் ) 


3   நான்  உன்னைப்பார்க்கும்  நேரம்  நீ  விண்ணைப்பார்ப்பது  ஏனோ? (  ட்ரீம் டூயட்)


4   ஓ  ரசிக்கும்  சீமானே  ஜொலிக்கும்  உடை  அணிந்து  ( குத்தாட்டப்பாட்டு )


5   கோடிக்கோடி  மின்னல்கள் (  மப்புப்பாட்டு )  

  ரசித்த  வசனங்கள் 

1  வெளில  தான்  நான்  GUN காமு, ஆனா  நிஜத்தில் நான் காமுகன்


2 தான்  லவ்  பண்ற  பொண்ணு  எங்கே  இருந்தாலும்  நல்லா  இருக்கனும்னு  நினைக்கறவன்  தான்  உண்மையான  லவ்வர் 


3   பணம்  இந்த  உலகத்துல  என்ன  வேணா  சாதிக்கும்


4  இந்த  உலகத்துல  ஒவ்வொரு  மனுசன்  கிட்டேயும்  ஒரு  ரகசியம்  இருக்கு


5  உனக்கு  லைஃப்ல  எல்லாமே  ஈசியா  கிடைச்சிடுச்சு, ஆனா  எனக்கு  எதுவுமே  கிடைக்கலை 


6 ஒரு  பெண்ணை  அழகுக்காக  லவ்  பண்ணினா  அவ  அழகு  போனதும்  லவ்வும்  போயிடும், பணத்துக்காக  லவ் பண்ணினா  பணம்  போனதும்  லவ்வும்  போயிடும் , எதுக்காக  லவ்  பண்றோம்னே  தெரியாம  லவ்  பண்ணினா  அது  தான்  பிளைண்ட்  லவ் , கடைசி  வரை  இருக்கும் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகி  வீட்டுக்குத்தெரியாமல்  நாயகனுக்கு  ஃபோன்  பண்ணி  என்னைப்பெண்  பார்க்க  வரும்  மாப்பிள்ளை  வீட்டாரைத்துரத்த  ஐடியா  பண்ணு  என  சொல்கிறாள். பாத்ரூமில்  குளித்துக்கொண்டிருக்கும்போது  ஏன்  ஃபோன்  செய்கிறாள்? பாத்ரூமில்  உள்ளே  தாழ்  போட்டு  ஷவரை  ஓப்பன்  பண்ணி  விட்டு  தண்ணீர்  சத்தம்  வெளியே  கேட்கும்போது  டக்னு  ஃபோன்  பண்ணி  இருக்கலாமே? 


2  நாயகன்  தன்  தோழியிடம்  முதன்  முதலாக  லவ்  ப்ரப்போஸ்  பண்ண  வரும்போது  கறுப்புக்கலர்  சர்ட்  அணிந்து  வருகிறார். இந்துக்களுக்கு அது  அமங்கலமான  நிறம்  ஆச்சே? இழவு  வீட்டுக்கு  துக்கம்  விசாரிக்கப்போகும்போதுதானே  அந்தக்கலர்  டிரஸ்  போட்டு  போவாங்க ?


3  கைதியை  அரெஸ்ட்  பண்ணி  ஜீப்பில் போகும்  போலீஸ்  அவனை  கை விலங்கிட்டு  ஜீப்பில்  லாக்  பண்ணி  வைக்க  மாட்டார்களா? வழியில்  ஒரு  கலவரத்தை  டீல்  பண்ண  எல்லா  போலீசும்  களம்  இறங்க  கைதி  ஈசியாக  தப்பிக்கிறான். அட்லீஸ்ட்  ஜீப்பை  விட்டு  இறங்கும்போதாவது  போலீஸ்  கை  விலங்கிட்டு  லாக்  பண்ணி  இருக்கலாமே? 



4  நாயகன்  ஒரு  கிரிமினல், நாயகியை  அடைய  பிளான்  போடறான். நாயகியின்  காதலனை    சிக்கலில்  மாட்ட  வைத்து  நாயகியை  அடைய  முயற்சிக்கும்போது  நாயகி  “ உடமபை  வேணா  ஒருவன்  பலவந்தமா  அடையலாம், ஆனா  மனசை  அடைய  முடியாது  என  டயலாக்  பேசிய்தும்  திருந்துகிறானாம்,  இதெல்லாம்  நம்பற  மாதிரியா  இருக்கு >?


5  வில்லன்  போல்  நடக்கும்  நாயகன்  கூட  நாயகிக்கு  நான்கு  டூயட், ஆனா  நாயகி  காதலிக்கும்  காதலன்  கூட  ஒருன்  டூயட்  கூட  இல்லை , அப்றம்  எப்படி  ரசிகன்  மனதில்  நாயகி  தன்  காதலன்  கூட  சேரனும்னு  நினைப்பான் ?


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்   யூ/ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   சுமாரான  படம்  தான் . பாட்டுக்காகவும் , நாயகிக்காகவும்  ஆண்கள்  பார்க்கலாம்  . ரேட்டிங்  2/ 5 


Rasikkum Seemane
Poster
Directed byR. K. Vidhyadaran
Produced byThirumalai
Starring
CinematographyM. V. Panneerselvam
Edited bySuresh M. Koti
Music byVijay Antony
Production
company
Trans India
Release date
  • 12 February 2010
CountryIndia
LanguageTamil

Saturday, February 03, 2024

தூண்டில் (2008)-தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா ) @ கே டி வி

 


  மனோரமா  தன்  மகன்  பூபதியை  நாயகன்  ஆக்கி  எடுத்த  சொந்தப்படமான தூரத்து  சொந்தம்(1992) தான்  இயக்குநர்  கே எஸ்  அதியமான்  இயக்கிய  முதல்  படம். அட்டர் ஃபிளாப் . அடுத்து புதிய  முகம் (1993) பாசமலர்கள் (1994)  ஆகிய  இரு  படங்களுக்கு  வசனம்  எழுதினார் . தொட்டாசிணுங்கி (1995)  ஓரளவு  ஹிட்  ஆகி  அவருக்குப்பெயர்  பெற்றுத்தந்தது ஆனந்த  விகடன்  இதழில்  தொடர்  ஆக  வெளி வந்து  படமான  சொர்ணமுகி (1998)  மெகா  ஹிட்  ஆனது . ஹம் துமாரா  ஹேங்  சனம் (2002) சுமார்  ஹிட் , பிரிய  சகி (2005) ஹிட், சாதி  கர்கே  பாஸ்  கயே யார்  (2006) சுமார்  ரகம் .அமளி  துமளி  (2014)  ஷூட்டிங் பாதியில்  நிற்கும்  படம் 


இந்த  தூண்டில்  படமும்  கமர்ஷியலாகத்தோல்வி தான். ஆனால்  காமெடி  டிராக்  செம  ஹிட்  ஆனது . ஒளிப்பதிவு   பிரமாதமாக  இருக்கும் நல்ல  கதாசிரியர்  ஆன  கே  எஸ்  அதியமான்  ஏன்  இப்படி  சொதப்பலாக  திரைக்கதை  அமைத்தார்  என  இந்த  விமர்சனத்தில்  பார்ப்போம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன், நாயகி  இருவரும்  தம்பதியினர். ஆனால்  நாயகிக்கு  குழந்தை  பெறுவதில்  சிக்கல் . ட்ரீட்மெண்ட்டில்  இருக்கிறார். வாடகைத்தாய்  முறையில்  வேறு  ஒருவரின்  கரு  முட்டையை  தன்  வயிற்றில்  வாங்கி  கருத்தரித்து  குழந்தை  பெறுகிறார். குழந்தை   அம்மாவுடன்  ஒட்டுதலாக  இருக்கும்போது  ஒரு  பிரச்சனை  வருகிறது


  நாயகனின்  முன்னாள்  காதலியின்  கரு  முட்டை  தான்  அது . திருமணம்  செய்யாமல்  ஏமாற்றிய  நாயகனைப்பழி  வாங்க   வில்லி  தான்  திட்டமிட்டு  இப்படி  செய்து  குழந்தையை  பறித்து  செல்கிறார்.கோர்ட்டில்  கேஸ்  நடக்கிறது . இதற்குப்பின்  நடக்கும்  திருப்பங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


 நாயகன்  ஆக   ஷ்யாம் . கச்சிதமாக  நடித்திருக்கிறார். மனைவியாக   காதல்  சந்தியா  செண்ட்டிமெண்ட்  காட்சிகளில்  மிளிர்கிறார். திவ்யா  ஸ்பந்தனா  தான்  முன்னாள்  காதலி  கம்  வில்லி . காதலியாக  வரும்  காட்சிகளில்  இளமைக்கொண்டாட்டம் . ஆனால்  வில்லியாக  எடுபடவில்லை 

 வில்லன்  ஆக  ஆர்  கே . அவர்  கொண்டை  போட்ட  கெட்டப்பே  காமெடியாக  இருக்கிறது . அவரைப்பார்த்தால்  சிரிப்புதான்  வருகிறது . பயம்  வரவில்லை 


ரேவதி  டாக்டர்  ஆக  வருகிறார், விழலுக்கு  இரைத்த  நீர் 


  காமெடி  ட் ராக்கில்  விவேக்  கலக்கி  இருக்கிறார்


 காமெடியன்  ஒரு  ஃபாரீன்  பெண்ணைப்பார்க்கிறார். மனதை  பறி  கொடுக்கிறார்.  காமெடியனின்  அப்பாவை  அவளுக்கு  அறிமுகப்படுத்த  வற்புறுத்தியதால்  காமெடியனே  அப்பாவாக  மாறுவேடம் போட்டு   ரஜினி  மாதிரி  கலக்க  அந்த  ஃபாரீன்  பெண்  மகனை  விட்டு விட்டு  அப்பாவைக்காதலிக்கிறாள் . தாத்தா  கெட்டப்பில்  நாட்டாமை  சரத் ,விஜயகுமார்   மாதிரி  வந்து  வசனம்  பேசி  காதலியை  கரெக்ட்  செய்து  மணமுடிக்கும்  கதை  மெயின்  கதையை  விட  ரசிக்கும்படி  இருந்தது 


ஒளிப்பதிவு  கவியரசு .  ஃபாரீன்  லொக்கேஷன்  என்பதால்  கலர்ஃபுல்லாக  படம்  ஆக்கி  இக்ருக்கிறார். உதயசங்கர்  எடிட்டிங்கில்  இரண்டரை  மணி  நேரம்  ஓடும்படி  இழுத்து  இருக்கிறார். இன்னும்  ஷார்ப்  ஆக  2  மணி  நேரத்தில்  முடித்திருக்கலாம். அபிஷேக்  ராய்  இசையில்  பாடல்கள்  சுமார்  ரகம், பின்னணி  இசை  பரவாயில்லை  ரகம் 


கதை, திரைக்கதை , வசனம், இயக்கம் கே  எஸ்  அதியமான். சொர்ணமுகி , தொட்டாசிணுங்கி  ஆகிய  படங்களில்  வசனம்  மிகப்பெரும் பலமாக  அமைந்தது, ஆனாக்  இப்படத்தில்  அது  மிஸ்சிங்


சபாஷ்  டைரக்டர்


1    விவேக்கின்  காமெடி  டிராக்  படத்தின்  மாபெரும்  பிளஸ். எல்லா  காமெடி  சேனல்களிலும்  இது  அடிக்கடி  ஒளிபரப்பாகி  இப்படத்தைப்பார்க்க  வைத்தது 


2   டாரீன்  லொக்கேஷன்  செலக்சன்


ரசித்த  வசனங்கள் 


1  முட்டை  நிறைய சாப்பிட்டா  குழந்தை ஆரோக்கியமா  பிறக்கும்னு  டாக்டர்  சொன்னாரே? நிஜமா? 


கோழிக்குஞ்சு  வேணா  பிறக்கும்


2   அவளுக்குத்தமிழ்  தெரியும்னு  என் கிட்டே  ஏன் சொல்லாம  விட்டே?


  நீ  எங்கே  என்னை  சொல்ல  விட்டே? 


3  சார் , என்ன  பிஸ்னெஸ்  பண்ணிட்டு  இருக்காரு ?


 தட்  ஈஸ்  நன்  ஆஃப்  யுவர்  பிஸ்னெஸ் 


 ஓ  அப்படி  ஒரு  பிஸ்னெஸா?


4   அதிகமா  லேடி  பின்னால  போன  ஆம்பளையும், அதிகமா  பாடி  காட்டின  பொம்பளையும்  நல்லா  வாழ்ந்ததா  சரித்திரம், பூகோளம்  கிடையாது 


5  ஹாய்  வெள்ளைக்குட்டி  , ஸீ  யூ  அட்  வாடிப்பட்டி 


6  காதலிக்கிறவங்க  லட்சியம்  நிறைவேறனும்  என்பதற்காக  காதலை  விட்டுக்கொடுத்தல்  ஒரு  தியாகம்  தான்


7  இவங்க  என்  பாடி  கார்ட்ஸ் 


 இந்த  பாடிக்கு  எவ்ளோ  கார்ட்ஸ்?


8  வாட்  ஈஸ்  திஸ்  பெயிண்ட்  ?


 சந்தனம். காட்டெருமைக்கு  கொம்பும்,  நாட்டாமைக்கு  சொம்பும்  தவிர்க்க  முஜ்டியாதவை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  தன்  காதலியை  அம்போ  என  விட்டுச்செல்வதற்கு  சொல்லும் காரணம்  அல்லது  சால்ஜாப்  அபத்தமாக  இருந்தது 

2  வில்லன்  நாயகனுக்கு  ஃபோன்  பண்ணி  உன்  காதலிக்கு  ஒரு  ஜாப்  ஆப்புர்ச்சுனிட்டி  இருக்கு , நீ  உன்  காதலை  தியாகம்  பண்ணி  அவளை  விட்டுட்டுப்போய்ட்டா   அவளுக்கு  50  கோடி  கிடைக்கும்னு  சொன்னதும்  நாயகன்  நாயகியை  அட்லீஸ்ட்  வீட்டில்  டிராப்  பண்ணிட்டாவது  போய்  இருக்கலாம், அப்படியே  தீவில்  தனிமையில்  இரவில்  விட்டு  விட்டா  போவார்கள் ?  அபத்தம் 

3  நாயகன்  யோக்கியன்  ஆக  இருந்தால்  ஐந்து  வருடங்கள்  கழித்து  தன்  காதலியின்   நிலை  என்ன?  என  செக்  செய்து  விட்டு  அவள்  லட்சியத்தை  அடைந்து  விட்டாளா?  என  செக்  செய்து  மேரேஜ்  பண்ணிக்க  இப்போ  முடியுமா?  என  யோசித்து  இருக்கலாம், காதலியைக்கண்டுக்கவே  இல்லை 


4   வாடகைத்தாய்  விஷயம் , கரு முட்டை  தானம்  செய்யும் விஷயம்  இதெல்லாம்  பெற்றோருக்குத்தெரியாமல்  பார்த்துக்கொள்ளும்  ரூல்ஸ்  அண்ட்  ரெகுலேசனை  டாக்டர்  ரேவதி  ஃபாலோ  பண்ணவே  இல்லை 


5  அந்த  பேக்கு  வில்லன்   திவ்யா  வை  அடைய  50  கோடி  செலவு  செய்தும்  அவரை  ஒன்றும்  செய்யவில்லை  என்பது  காதில்  பூ 


6  வில்லனைப்பற்றி  டி வி யில்  ஃபிளாஸ்  நியூஸ்  காட்டுகிறார்கள் , கைது  எனவும் சொல்கிறார்கள் , அடுத்த  ஷாட்டில்  திவ்யா  வில்லனிடம்  நீ  இவ்ளவ்  மோசமானவனா?  என  கேட்கிறார். அது  எப்படி? அவன்  ஜெயிலில்  தானே  இருப்பான் ? 


7   திவ்யா  வில்லி  ஆக  மாறுவதும்  நம்பும்படி  இல்லை , க்ளைமாக்சில்  தியாகி  ஆகி  குழந்தையை  தருவதும்  நம்பும்படி  இல்லை மனதில்  ஒட்டவில்லை 



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   இது  ஒரு டப்பாப்படம் . காமெடி  டிராக்  நல்லாருக்கே? படமும்  நல்லாருக்கும்  என  நினைத்து  நான்  சிக்கியது  போல  யாரும்  சிக்கிக்கொள்ள   வேண்டாம் . ரேட்டிங்  1 . 5 


இயக்கம்கே. எஸ். அதியமான்
தயாரிப்புஎம். ராஜ்குமார்
எஸ். எஸ். ஆர். தில்லைநாதன்
பி. காந்தீபன்
கதைகே. எஸ். அதியமான் (வசனம்)
திரைக்கதைகே. எஸ். அதியமான்
இசைஅபிசேக் ராய்
நடிப்புசாம்
சந்தியா
திவ்யா ஸ்பந்தனா
விவேக்
ரேவதி
ஆர்கே
ஒளிப்பதிவுடி. கவியரசு
படத்தொகுப்புவி. எம். உதயசங்கர்
வெளியீடுபெப்ரவரி 22, 2008
நாடு இந்தியா
மொழிதமிழ்

Friday, February 02, 2024

கேப்டன் மில்லர் (2024 ) - தமிழ் = சினிமா விமர்சனம் ( ஆக்சன் டிராமா )

 


இயக்குநர்  அருண்  மாதேஸ்வரன் டயலாக்  ரைட்டராக 2016ல் ரிலீஸ்  ஆன  இறுதி சுற்று படத்தில்  மனம்  கவர்ந்தார். 2021ல் ரிலீஸ்  ஆன  ராக்கி , 2022ல்  ரிலீஸ்  ஆன  சாணிக்காயிதம்  இரண்டு  படங்களுமே  அவரை  இயக்குநராக  அடையாளம்  காட்டிய  முதல்  இரண்டு  படங்கள் . இரண்டிலுமே  வன்முறை  தூக்கலாக  இருந்தது . இந்தப்படத்தில்  வன்முறை  குறைவாக  இருந்தாலும்  ஆக்சன்  டிராமா  தான். தனுஷ் , அருண்  இருவருக்குமே  இது  ஒரு  வெற்றிப்படம்

2018ஆம்  ஆண்டிலேயே  இப்படத்திற்கான  திரைக்கதை  எழுதப்பட்டு  சத்யஜோதி  ஃபிலிம்ஸ்  தயாரிப்பதாக  இருந்தது. சில  காரணங்களால்  தள்ளிப்போடப்பட்டது. இப்போது  இப்படத்தின்  வெற்றியால் இதன்  முந்தைய  பாகம், பிந்தைய  பாகம்  உருவாக  இருக்கிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


கோயிலுக்கு  உள்ளே  செல்ல  அனுமதி  மறுக்கப்படும்  பழங்குடி  மக்களுக்காகப்போராடும்  ஒரு  வீரனின்  முயற்சி  தான்  மெயின்  கதை . அதை  எப்படி  எல்லாமோ  சுற்றி  வளைத்துக்கதை  சொல்லி  இருக்கிறார்கள் 


நாயகன்  பழங்குடி  இனத்தைச்சேர்ந்தவர்.கதை  நடக்கும்  கால கட்டம்  1947 க்கு  முன். ஜமீன் தாரர்கள் ,நிலக்கிழார்கள்  போன்ற  நம்  நாட்டு  செல்வந்தர்கள்  பழங்குடியினரை  கோயிலுக்குள்  அனுமதிப்பதில்லை . அதனால்  அவர்கள்  மீது  கடுப்பாக  இருக்கும்  நாயகன்  நமக்கான  மரியாதை  கிடைக்க  வேண்டும்  எனில்  மிலிட்ரியில்  சேர வேண்டும்  என  நினைக்கிறார். அதன்படி  மிலிட்ரியில்  சேர்ந்து  ராணுவ  வீரர்  ஆக  பணி  ஆற்றுகிறார். ஒரு  கட்டத்தில்  போராட்டத்தில்  ஈடுபட்ட  நம்  நாட்டு  மக்களையே  சுட  வேண்டி  வருகிறது. அதை  சகிக்காத  நாயகன்  உயர்  அதிகாரியைக்கொன்று  விட்டு  அங்கிருந்து  கிளம்பி  ஒரு  கலகக்காரக்கும்பலுடன்  சேர்கிறார்


ஆங்கிலேயர்களுக்கு  எதிரான  வேலைகளை  செய்கிறார்.ஒரு தலையாக  தான்  காதலித்த  பெண்ணின்  கணவரின்  மரணத்துக்கும், தனது  சகோதரனின்  மரணத்துக்கும்  காரணமாக  இருந்த  ஆங்கிலேய  அரசாங்கத்துக்கு  சிம்ம  சொப்பனமாக  விளங்கி  அவர்களுக்கு  தண்ணி  காட்டுகிறார். அவரது  ஆக்சன்  அதகளம்  தான் மீதி  திரைக்கதை 


 நாயகன்  ஆக  தனுஷ்  கலக்கி  இருக்கிறார். மூன்று  விதமான  கெட்டப்களில்  வருகிறார். எல்லா  கெட்டப்களும்  குட் .


நாயகனின்  அண்ணன்  ஆக  கன்னட  நாயகன்  சிவராஜ்  குமார்  பின்னிப்பெடல்  எடுத்து  இருக்கிறார். ஜெயிலர்  படத்துக்குப்பின்  இனி  அடிகக்டி  தமிழ்ப்படங்களில்  தலை  காட்டுவார்  போல 


நண்பராக  தெலுங்கு  நாயகன்  சந்தீப்  கிஷன்  கச்சிதம் .  வழக்கமாக  குணச்சித்திரக்கதாபாத்திரத்தில்  கலக்கும்  காளி  வெங்கட்  இதில்  துரோகி  குமாஸ்தாவாக  நடித்து  வில்லத்தனம்  காட்டுகிறார்


அபியும்  நானும்  பட  புகழ்  +  பொன்னியின்  செல்வன்  திரைக்கதை ஆசிரியர்  குமாரவேல்  போராளி  ஆக  வீரம்  காட்டி  இருக்கிறார். 


மன்னர்  பரம்பரை  வில்லன்களாக  ஜெயப்பிரகாஷ் , ஜான்  கொக்கன்  இருவரும்  ஆர்ப்பாட்டமான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்கள் 


ப்ரியங்கா  அருள்  மோகன், அதிதி  பாலன்  என  இரு  நாயகிகள்  இருந்தாலும்  இருவருமே  நாயகனுக்கு  ஜோடி  இல்லை  என்பதால்  ரொமாண்டிக்  காட்சிகள்  இல்லை 


157  நிமிடம்  டைம்  ட்யூரேஷன்  வரும்படி  படத்தை  எடிட்  செய்து  இருக்கிறார்  நாகூரான்  ராமச்சந்திரன் 

சித்தார்த்த  நுனி  யின்  ஒளிப்பதிவில்  ஆங்கிலப்படங்களுக்கு  இணையான  பிரம்மாண்ட  காட்சிகள்  இடம் பெற்றிருப்பது  சிறப்பு 

ஜி வி  பிரகாஷ்  குமார்  இசையில்    இரு  பாடல்கள்  ஹிட்  ஆகி  உள்ளன, பின்னணி  இசை  அருமை 

மதன்  கார்க்கியுடன்  இணைந்து  திரைக்கதை  எழுதி  இயக்கி  இக்ருக்கிறார்  அருண்  மாதேஸ்வரன்



சபாஷ்  டைரக்டர் ( அருண்  மாதேஸ்வரன்) 


1  பெண்கள்  என்றால்  இன்ன  வேலைகள்  தான்  செய்ய  வேண்டும்  என்ற  நியதியை  உடைத்து  ஒரு  காட்சியில்  நாயகன்  பாத்திரம்  கழுவுவது  போலவும், நாயகி  துப்பாக்கியைதுடைப்பது  போலவும்  மாறுபட்ட    காட்சியை  வைத்த  விதம் 

2     அந்தக்கால  கட்ட  ஆடை  வடிவமைப்புகள்  அரங்க  அமைப்புகள்  என  ஆர்ட்  டைரக்சன்  அட்டகாசம், அதே  போல்  ஜி வி  பிரகாஷின்  பின்னணி  இசை  வேற  லெவல் 


  ரசித்த  வசனங்கள் 


1  பெண்கள்  சொல்வதை  ஆண்கள்  கேட்கனும்னா  பெண்கள்  அதிகாரத்தில்  இருக்கனும் 


2  அவங்க  கொடுக்கும்  மரியாதை  தான் எனக்கான  சுதந்திரம் 


3  வாழ்க்கைல  நாம்  எடுக்கும்  முடிவுகள்  தப்பானா  அதை  விதினு  சொல்லி  கடவுள்  மேலே  பழியைப்போட்டுடுவோம், ஆனா  அது  கடவுளோட  முடிவா? நம்மோட  முடிவா?


4  எப்படிப்பட்ட  வீரனும்  தன்னோட  முதல்  போரில்  பயப்படுவான், ஆனா  அந்த  பயத்தையும்  மீறி  சண்டை  போட்டு  ஜெயிப்பதுதான்  வீரனுக்கு  அழகு 


5  கடுதாசி  எழுத  நமக்குன்னு  ஒரு  ஆள்  இருப்பதற்குக்கூட  ஒரு  குடுப்பினை  வேண்டும் 


6  ஒரு  நல்ல  பட்டாளத்தான்  கமாண்டர்  சொல்படி  கேட்பான்

ஆனா  ஒரு  நல்ல  வீரன்  அவன்  மனசாட்சி  சொல்படி  கேட்பான்


7  ஒரு  கெட்டவனைக்கொன்னிருக்கே? அப்போ  நல்லவனாத்தானே  இருப்பே? 


 ஏன்? ஒரு  கெட்டவன்  இன்னொரு  கெட்டவனைக்கொல்லக்கூடாதா? 


8  கோயில்  சிலையை  வெள்ளைக்காரன்  திருடிட்டான், இது  நம்ம  மானப்பிரச்சனை , அதை  நாம்  மீட்கனும், உன்  உதவி  வேணும்


 திட்டம்  போட்டு  சொல்லி  அனுப்பறேன், அதுவரை  மானம்  இல்லாம  இருங்க 


9 பசியோடு சுத்திட்டு  இருக்கும்  சிங்கத்தை  கழுதைப்புலி  ஏமாற்றி  இரையைத்தூக்கிட்டுப்போலாம்னு  நினைக்கும்போது  ஒரு  ஓநாய்  ரெண்டையும் ஏமாற்றி  இரையைத்தூக்கிட்டா  என்ன ஆகும்? 


ஓநாய்க்கு  ஆபத்து?


 இல்லை , ஒரு  ஓநாய்க்காக  அந்த  ஓநாய்க்கூட்டமே  உயிர்  இழக்க  வேண்டி இருக்கும் 

10  போக  வேண்டாம்னு  சொல்லலை , முதல்  ஆளா  போக  வேணாம்கறேன்


11  நாம  எல்லாம் சாமி  இருக்கும்  கருவறைக்குள்ளே  போகலாமா?


 போகக்கூடாதுனு  எந்த  சாமியும்  சொல்லலையே? 


12  ”, ‘நீ யாரு... உனக்கு என்ன வேணும்ங்குறத பொறுத்து, நான் யாருங்குறது மாறும்’

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  மிலிட்ரியில்  சேரும்  நாயகனுக்கு  ட்யூட்டியில்  மக்களைக்கொல்ல  நேரிடும்  என்பது  தெரியாது  என்று  காட்டுவது  அருக்காணி  ஹோட்டலில்  அசைவம் தானா? என  அதிர்ச்சி  ஆவதுக்கு  சமமான  லாஜிக்  சொதப்பல்


2  தன்  சொந்த  மக்கள்  பலி  ஆவதை  விரும்பாத  நாயகன்  அண்ட்  டீம்  குறி  தவறி  கையிலோ , காலிலோ  சுடலாமே? ஏன்  நெஞ்சுக்குக்குறி  வைத்துக்கொல்ல  வேண்டும்? குற்ற  உணர்ச்சியில்  துடிக்க  வேண்டும் ?


3  மிலிட்ரி  வீரர்  ஆக  நாயகன்  இரண்டு  அல்லது  மூன்று  முறை  சுடுவதாகத்தான்  காட்டுகிறார்கள் , ஆனால்  நீ  மட்டுமே  300  பேரைக்கொன்றிருப்பே  என  நாயகி  பேசுவது  அபத்தம். அதுக்கு  மிஷின் கன் இருந்தாதான்  சாத்தியம் 


4  ஹீரோவுக்கான  பிஜிஎம்,ல் பில்டப்  இசை  இவை  எல்லாம்  ஆங்காங்கே  இருந்தால்  தான்  மாஸ்  ஆக  இருக்கும், ஓப்பனிங்  சீனில்  இருந்து  க்ளைமாக்ஸ்  வரை  டொம்  டொம்  என  பிஜிஎம்  போட்டு  காது  வலி  வந்ததுதான்  மிச்சம் 


5  இந்தக்கதையை  எல்லா  செண்ட்டர்  ரசிகர்களுக்கும்  புரியும்படி   நேரடியான  கதையாகவே  சொல்லி  இருக்கலாம்,  சும்மா  மாற்றி  மாற்றி  ஃபிளாஸ்பேக் , தற்காலம்  என  குழப்பி  அடித்து  இருக்கத்தேவை  இல்லை 


6  ஆங்கிலேயர்களிடம்  மிஷின்  கன்  மாதிரி  நவீன  ரக  துப்பாக்கிகள்  இருக்கின்றன  , படை  பலமும்  அதிகம், வெறும்  30  பேரை  வைத்துக்கொண்டு  நாயகன்  அவர்களுக்கு  தண்ணி  காட்டுவது  நம்பும்படி  இல்லை , குறிப்பாக  அந்த  கோயில்  சொத்தைக்கொள்ளை  அடிக்கும்  காட்சி  காதில்  பூ 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்= வன்முறை  மட்டும்  தான் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  தனுஷ்  ரசிகர்களுக்கு  கொண்டாட்டமான  படம் , பொது  ரசிகர்களுக்கு  ஒரு  சராசரியான  ஆக்சன்  படம் , ரேட்டிங்  2.75 / 5 


Captain Miller
Theatrical release poster
Directed byArun Matheswaran
Screenplay byArun Matheswaran
Madhan Karky
Story byArun Matheswaran
Produced by
  • Sendhil Thyagarajan
  • Arjun Thyagarajan
Starring
CinematographySiddhartha Nuni
Edited byNagooran Ramachandran
Music byG. V. Prakash Kumar
Production
company
Distributed bysee below
Release date
  • 12 January 2024
Running time
157 minutes[1]
CountryIndia
LanguageTamil
Budget50 crore[2]
Box office23 crore

Thursday, February 01, 2024

அயலான் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( சயின்ஸ் ஃபிக்சன் ஆக்சன் டிராமா)

 


2015ல்  ரிலீஸ்  ஆன  இன்று  நேற்று  நாளை  தமிழ்  சினிமாவின்  முதல்  சயின்ஸ் ஃபிக்சன்  டைம்  டிராவல்  காமெடி  டிராமா  என்ற  அந்தஸ்துடன்  ரிலீஸ்  ஆகி  ரசிகர்களின்  ஏகோபித்த  வரவேற்பைப்பெற்றது . அதன்  இயக்குநர்  ரவிக்குமார்  8  வருட  இடைவெளிக்குப்பிறகு  ஐந்து  ஆண்டு  கால  உழைப்பில்  உருவாக்கிய  இப்படம் தமிழ்  சினிமாவின்  முதல்  ஏலியன் ஃபிலிம்  என்ற  அந்தஸ்தைப்பெறுகிறது 

பிரின்ஸ்  படத்தின்  தோல்வியால்  துவண்டு  கிடந்த  சிவகார்த்திகேயன்  மார்க்கெட்  மாவீரன்  படத்தால்  நிமிர்ந்தது . சமீபத்தில்  டி இமான்  சர்ச்சைக்குப்பின்  இறங்கு  முகத்தில்  இருக்கும்  அவரது  இமேஜால்  படத்தின்  வெற்றி  வாய்ப்பு  பாதிக்குமா? என்ற  சந்தேகங்களுக்கு  இடையே  ரிலீஸ்  ஆகி  இருக்கும்  படம்  குழந்தைகள் , சிறுவர்களைக்கவரும்  விதமான  ஃபேமிலி  ஆடியன்ஸ்க்கான  படம்  என்ற  பெருமையைப்பெறுகிறது 


1984 ல்  ரிலீஸ்  ஆன  மை டியர் குட்டிச்சாத்தான் பட்டி  தொட்டி   எல்லாம்  கலக்கியது . இந்தியாவின்  முதல்  3 டி  படம்  என்ற  அந்தஸ்துடன்  வந்த  அப்படம்  குழந்தைகளைக்கவரும்  படமாக  அமைந்தது . 1987ல்  ரிலீஸ்  ஆன  ஹிந்திப்படமான  மிஸ்டர்  இண்டியா  தமிழில்  கே  பாக்யராஜ்  நடிக்க 1989ல்  என்  ரத்தத்தின்  ரத்தமே  என்ற   டைட்டிலில்  ரீமேக்  ஆகி   ரிலீஸ்  ஆகி தோல்வியை  சந்தித்தது . அதில்  வரும்  அரூபக்காட்சிகள் , சாட்டை  அந்தரத்தில்  உயர்ந்து  அடிப்பது  போன்ற  காட்சிகள்  எடுபடவில்லை . 


ஸ்பாய்லர்  அலெர்ட்


பூமிக்கு  அடியில்  மிக  ஆழத்தில்  இருக்கும்  வாயுவை  எடுக்கும்  முயற்சியில்  வில்லன்  இருக்கிறான். அப்படி  அவன்  செய்தால்  அது  பூமியை பாதிக்கும், தங்கள்  கிரகத்தையும்  எதிர்  காலத்தில்  பாதிக்கும்  என்று  கருதிய  வேற்றுக்கிரக  வாசிகள்  தங்களின்  பிரதிநிதியை   பூமிக்கு  அனுப்புகின்றன


 வேற்றுக்கிரகவாசியின்  விண்கலத்தின்  ஒரு  ஸ்பார்க்  வில்லன்  கையில்  சிக்கிக்கொள்கிறது . அதை  வைத்து   வில்லன் தன்  திட்டத்தை  டெவலப்  செய்ய  ஆரம்பிக்கிறான்


நாயகன்  ஒரு இயற்கை  விவசாயி . பிழைப்பு  தேடி  பட்டணம்  வருகிறான். வேற்றுக்கிரக  வாசி  நாயகனுடன்  நட்புக்கொள்கிறது . வில்லனிடம்  இருந்து  நாயகனைக்காப்பாற்றும்  முயற்சியில்  அந்த  வேற்றுக்கிரகவாசி  வில்லனிடம்  மாட்டிக்கொள்கிறது . நாயகன்  அதை  எப்படிக்காப்பாற்றினான்  என்பதே  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  சிவகார்த்திகேயன்  கலகலப்பாக  படத்தைக்கொண்டு  போகிறார். சின்னக்குழந்தைகளுக்குப்பிடித்தமான  அவர்  இப்படத்தில்  மேலும்  ஒரு  படி  ஏறி   வாண்டுகளின்  மோஸ்ட்  வாண்ட்டட்  ஹீரோ  ஆகிறார். மாவீரன்  பாதிப்பில்  சில  சூப்பர்  பவர்  காட்சிகளும்  உண்டு 


நாயகி  ஆக  ரகுல் ப்ரீத்தி  சிங் , அதிகம்  வேலை  இல்லை , மாமூல்  தமிழ்  சினிமாவின்  அக்மார்க்  நாயகி  வேடம் . இஷா  கோபிகர் ஒரு  முக்கிய  ரோலில்  வருகிறார் ஆனால்  ஏமாற்றமே 


 வேற்றுக்கிரக  வாசியாக  வெங்கட்  செங்குட்டுவன்  நடிக்க  குரல்  கொடுத்து  இருப்பவர்  சித்தார்த் 


நாயகனின்  அம்மாவாக  பானுப்ரியா . அழகன்  படத்தில்  கோழி  கூவும்  நேரம்  ஆச்சு  பாட்டில்  அவரை  ரசித்து  விட்டு  இப்போது  அம்மா  ரோலில் பார்க்க  சங்கடமாக  இருக்கிறது 


பால  சரவணன், கருணாகரன் , யோகிபாபு  ஆகியோர்  காமெடிக்கு , பெரிய  அளவில்  ஒர்க்  அவுட்  ஆகவில்லை  என்றாலும்  மோசம்  இல்லை 


வில்லன்  யாரோ  பாம்பேக்காரர்  போல  எடுபடவில்லை 


155  நிமிடங்கள்  படம் ஓடும்படி  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்  எடிட்டர் ரூபன் . பின்  பாதிக்காட்சிகள்  இழுவை 


ஏ ஆர்  ரஹ்மானின்  இசையில்  பாடல்கள்  சுமார்  ரகம்  தான், பின்னணி  இசை  ஓக்கே  ரகம் 


நீரவ்  ஷாவின்  ஒளிப்பதிவு  படத்துக்குப்பெரிய பலம்,  ஆங்கிலப்படம்  பார்க்கும்  பிரமிப்பைத்தருகிறது . விஎஃப் எக்ஸ்  ஒர்க் , விஷூவல்  எஃபக்ட்ஸ்  பிரமாதம் 


கே  மணிகண்டன்  உதவி  வசனகர்த்தாவாக  இருக்க  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார்    ரவிக்குமார் 


சபாஷ்  டைரக்டர்


1    வேற்றுக்கிரகவாசிகள்  பூமிக்கு  வருவதே  பூமியை  அழிக்கத்தான்  என்ற  கான்செப்ட்டிலேயே  ஹாலிவுட்  படங்கள்  பார்த்த  நமக்கு  நன்மை  செய்யும்  ஏலியன்  புதுசு . பாசிட்டிவ்  வைப்ரேஷன்


2  நமக்கு  அறிமுகம்  ஆன  நாயகன், நாயகியை  விட  அறிமுகமே  இல்லாத  ஏலியன்  கேரக்டர்  டிசைன் கச்சிதமாக  நம்  மனதில்  தங்கும்படி , மனதைக்கவரும்படி  இயக்குநர்  உருவாக்கிய  விதம் 


3  நாயகி  மேல்  மாடியிலிருந்து  பூந்தொட்டி  விழ  இருக்க  அதை  பூக்குவியலாகக்கொட்ட  வைத்து  ரொமாண்டிக்  சீன்  ஆக  மாற்றிய  லாவகம் அழகு 


  ரசித்த  வசனங்கள் 

1 தோற்றுப்போகும்  எல்லாமே  நம்ம  தப்பால  நடக்கறதில்லை , நம்மைச்சுற்றி  இருப்பவர்கள் செய்யும்  தப்பால  நடக்குது 


2  ஐ டி  கார்டுல . ஆதார்  கார்டுல  நம்ம  முகம்  எல்லாம்  ஏலியன்  மாதிரி  இருக்கும், ஆனா  ஏலியன்  முகம்  ஐடி  கார்டில்  எப்படி  இருக்கும் ? 


3  சாரி,  நீ  என்னை  லவ்  பண்றதா  நினைச்சு  திட்டிட்டேன்  சாரி 


‘’ பரவால்லைங்க   , லவ்வர்  கோபத்துல  திட்டுவது சகஜம்  தான் 


4   ஹாய்  ஏலியன் , பல  லட்ச்சம்  கிமீ  தாண்டியா   பூமி  வந்தே? டோல்கேட்  சார்ஜ்  கட்டியே  ஏழை  ஆகி  இருப்பியே? 


5  விவசாயம்  பற்றிப்பேசுனா  வேடிக்கை பார்க்கக்கூட  ஆட்கள்  இருப்பதில்லை

6   அதோ  அங்கே  நட்சத்திரம்  தெரியுதா?


 மிஸ்  !  நிலாவே  தெரியுது


7   ஒண்ணு  அழிஞ்சாதான்  ஒண்ணு  வாழும்.


 அப்போ  நீ  அழியறியா? நாங்க  வாழ்ந்துக்கறோம்


8  நல்லா  விளைச்சல்  வந்தா  மட்டும் போதாது , நல்லதா  விளைக்கனும்


9   என்னது ? ஏற்பாடு  பண்ற  ஆளுங்களா? நம்மை  மாமாங்கறான் 


10   வழக்கமா  ஏலியன்கள்  அமெரிக்காவை  அழிக்கத்தானே  வரும் ?

 ஏன்  எங்க  ஊரை  அழிக்க  வந்திருக்கீங்க ?


 உங்க  ஊரை  நீங்களே அழிச்சுக்கறீங்களே? நாங்க  எதுக்கு  தனியா  அதை  அழிக்கனும் ?  


11  நான்  வந்த  வாகனத்தை  இழந்துட்டேன் ‘ 


சைடு  லாக்  போடலையா? 


சைடுல  மறைவா  நிறுத்தி  வெச்சிருந்தேன்


12   பூம்பாறைல  பார்த்த  பூ  அந்தப்பொண்ணு , நான்  வெறும்  பாறை 


13  ஃபேஸ்புக்  பார்த்தீங்களா?


 இல்லைங்க  , நான்  இன்னும் ரீசார்ஜ்  பண்ணலை 


14  இவன்  உடம்பு  நல்லாதானே  இருக்கு ? ஏன்  ஸ்கேன்  எடுக்கறாங்க ?


15  பார்க்கறதுக்கு  நான்  ஏலியன்  மாதிரி  இருந்தாலும்  நானும்  மனுசன் தான் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  டாட்டூ  என்னும்  ஏலியன்  இங்கே  பூமியில்  சிக்கியதும்  அதைக்காப்பாற்ற  ஏலியன் க்ரூப்  எந்த  நடவடிக்கைலயும்  ஈடுபடாதது  ஏன் ?


 2  மனிதர்களிடம்  மாட்டிக்கொண்டால்  உன்னை  நீயே  அழித்துக்கொள்  என  கட்டளை  இடப்பட்டும்  ஏலியன்  அதை  ஃபாலோ  பண்ணாதது  என்?


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சின்னக்குழந்தைகள் , சிறுவர்   சிறுமியர் பார்க்க  வேண்டிய  ஜாலியான  படம்   ரேட்டிங் 2.75 / 5 


நன்றி - அனிச்சம்  மின்னிதழ்  ஃபிப்ரவரி 1  இதழ்





Ayalaan
Theatrical release poster
Directed byR. Ravikumar
Written by
Produced byKotapadi J. Rajesh
Starring
CinematographyNirav Shah
Edited byRuben
Music byA. R. Rahman
Production
companies
  • KJR Studios
  • Phantom FX Studios
  • Aadhi Brahma Productions
Distributed byKJR Studios
Release date
  • 12 January 2024
Running time
155 minutes[1]
CountryIndia
LanguageTamil

Wednesday, January 31, 2024

THE TRIAL (2023) -தெலுங்கு - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம் & டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்

   


24/11/2023 ல் தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆன  இப்படம்  இப்போதுஅமேசான்  பிரைம்    &  டிஸ்னி பிளஸ்  ஹாட்  ஸ்டார்  ஓடிடி யில்  காணக்கிடைக்கிறது .நாயகி , கணவன் , போலீஸ்  ஆஃபிசர்  என  மூன்றே  முக்கியக்கேரக்டர்களை  வைத்து  லோ பட்ஜெட்டில்  இது  போன்ற  தரமான  க்ரைம்  த்ரில்லர்  படத்தைக்கொடுத்ததற்காக  இயக்குநரை  பாராட்டலாம்


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகிக்குத்திருமணம்  ஆகி  இப்போதுதான்  முதலாம்  ஆண்டு  வெட்டிங்  அனிவர்சரி  கொண்டாட்டம்  நடக்கிறது. கணவன்  நாயகிக்கு  ஃபோன்  பண்ணி  ஒரு  குறிப்பிட்ட  இடத்துக்கு  வரச்சொல்லி  அங்கே  ஒரு  ஷாக்  சர்பப்ரைஸ்  இருக்கிறது  என  அழைக்கிறான், நாயகியும் அங்கே  போகிறாள் . அது  ஒரு  மொட்டை  மாடி. இருவரும்  தண்ணி  அடித்து  விட்டு  பேசிக்கொண்டு  இருக்கிறார்கள் . திடீர்  என  கணவன்  கீழே  விழுந்து  இறக்கிறான். அது  ஒரு  ஆக்சிடெண்ட்டல்  டெத்  என  கேஸ்  ஃபைல்  ஆகிறது 


 கணவன்  கால்  தவறிக்கீழே  விழுந்தானா?  தற்கொலை  செய்து  கொண்டானா? கொலையா? என்பதை  அப்போது  நமக்குக்காட்டவில்லை .  சில  நாட்கள்  கழித்து  போலீஸ்க்கு  ஒரு  பெட்டிசன்  வருகிறது . அந்த  சம்பவத்தில்  ஒரு  மர்மம்  இருக்கிறது , மீண்டும் கேசை  ரீ ஓப்பன்  செய்ய  வேண்டும்  என உத்தரவு  வருகிறது


நாயகி  வரவழைக்கப்படுகிறார்.. ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  இண்ட்ராகேஷன்  செய்கிறார். போலீஸ்  ஆஃபீ.சர்  கேட்கும்  கேள்விகளுக்கு  நாயகி  பதில்  சொல்கிறார். இறுதியில்  மர்மம்  விலகியதா? என்பதை சஸ்பென்சாக  சொல்லி  இருக்கிறார்கள் 


 நாயகி  ஆக  ஸ்பந்தனா  பள்ளி  பிரமாதமாக  நடித்திருக்கிறார். ஓப்பனிங்  ஷாட்டில்  சேலையில்  கிளாமராக  வரும்போதும்  சரி ,  அவர்  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  என்ற  ட்விஸ்ட்  தெரிந்த  பின்  போலீஸ்  யூனிஃபார்மில்  வரும்போதும்  சரி  கலக்குகிறார்


விசாரணை  செய்யும் போலீஸ்  ஆஃபீசர்  ஆக   வம்சி  கோடி  நன்றாக  நடித்திருந்தாலும்  நாயகி  ஈசியாக  அவரை  ஓவர்  டேக்  செய்து  விடுகிறார்


  நாயகியின்  சைக்கோக்கணவனாக   யுகராம்  சுமாராக  நடித்திருக்கிறார். புரியாத  புதிர்  ரகுவரன்  போல , கல்கி  பிரகாஷ் ராஜ்  போல  அவருக்கு  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  காட்சி  வைத்திருந்தால்  அந்த  கேரக்டர்  இன்னும்  வலுவாக  இருந்திருக்கும் 


ந்சரவண  வாசுதேவன்  இசையில்  இரண்டு  பாடல்கள்  நன்றாக  இருக்கின்றன , பின்னணி  இசை  படத்துக்குப்பெரிய  பலம் .  குறிப்பாக  அந்த  தீம்  மியூசிக்  அட்டகாசம் 


எடிட்டர்  ஸ்ரீகாந்த்    97  நிமிடங்கள்  படம்  ஓடும்படி  ஷார்ப்  ஆக ட்ரிம்  செய்து  இருக்கிறார்


ராம் கண்ணி  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்


1   நாயகியை  ஓப்பனிங்கில்  அழகுபதுமையாகக்காட்டி , பின்  விசாரணையின் போது  அவர்  தான்  வில்லியோ  என  எண்ண  வைத்து  , பின்  பாதியில்  அப்பாவிக்கணவன்  ஒரு  சைக்கோ  என  ட்விஸ்ட்  வைப்பதில்  வெற்றி  பெற்று  இருக்கிறார். இவை போக  படத்தின்  க்ளைமாக்சில்  இரண்டு  ட்விஸ்ட்  இருக்கின்றன. ஒன்று  நாம்  எதிர்பார்த்தது . இன்னொன்று  எதிர்பாராத  அபாரமான  ட்விஸ்ட் 


2    நாயகியைப்பற்றி  தவறாக , அபாணடமாக    டைரியில் எழுதி  வைத்து  நாயகியை  போலீசில்  மாட்ட  வைக்கும்  வில்லனின்  ஐடியா  சூப்பர் 


3    பிஜி எம்  தெறிக்கிறது . தீம் மியூசிக்  பெரிய  பலம் 


4   இது  போன்ற  கதையில்  நாயகனுக்கோ , நாயகிக்கோ  ஒரு  கள்ளக்காதல்  இருப்பதாகக்காட்டுவார்கள் . அது  இல்லாமலேயே  முடித்தது  சிறப்பு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    நான்  சாகப்போகிறேன்  என  மிரட்டுபவர்கள்  விஷமோ  ,  பூச்சிக்கொல்லி  மருந்தோ   குடிப்பது  போல்  காட்டுவது  ஓக்கே , ஆனா  உயரமான  இடத்தில்  இருந்து  குதிப்பதாக  பாவ்லா  காட்டுவது  ஆபத்து . அதை  எப்படி  போலீஸ்  நம்புகிறது ?


2   சாதா  பெண்களே  தனக்கு  வரப்போகும் கணவனைப்பற்றி  சொந்த பந்தத்தில்  விசாரிக்கிறார்கள் . ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  ஆக இருக்கும்  நாயகி  தனக்கு  வரப்போகும்  கணவன்  மனநலன்  பாதிக்கப்பட்டவன்  என்பதை  அறியாமல்  இருப்பது  எபப்டி ? 


3  ஒரு  சாதா சராசரிப்பெண்ணை  சிக்கலில்  மாட்டி  விடவே  கணவன்  கிரிமினல்  ஆக  யோசிக்க  வெண்டும்,  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  ஆன  மனைவியை  மாட்டி  விட   அல்லது  ஏமாற்ற  கணவன்  எவ்ளோ  புத்திசாலி  ஆக  யோசிக்க  வேண்டும் ? இதில்  டம்மியாக  இருக்கிறான் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  யூ / ஏ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -    க்ரைம் த்ரில்லர்  ரசிகர்கள்  அவசியம்  பார்க்க  வேண்டிய  படம்  . ரேட்டிங்  2.75 / 5 


The Trial
Theatrical release poster
Directed byRaam Ganni
Written byRaam Ganni
Produced bySmriti Sagi
Srinivas K Naidu
StarringSpandana Palli
Yug Ram
Vamsi Kotu
CinematographyShrie Saikumaar Daara
Edited bySrikanth Patnaik
Music bySaravana Vasudevan
Release date
  • 24 November 2023
CountryIndia
LanguageTelugu