Tuesday, December 19, 2023

பார்ட்னர் (2023) -தமிழ்- சினிமா விமர்சனம் (சயின்ஸ் ஃபிக்சன் , க்ரைம் காமெடி டிராமா ) @ அமேசான் பிரைம், ஆஹா தமிழ்

 


அண்டர்  ரேட்டட்  காமெடி  மூவி  ஆஃப்  2023  என  சொல்லலாம். பலரும்  இப்படத்தை  கழுவிக்கழுவி ஊற்றி  இருந்ததால்  தியேட்டர்களில்  ரிலீஸ் ஆன  டைமில்  அதாவது  ஆகஸ்ட் 25 . 2023ல்  பார்க்கவில்லை . இப்போது  அமேசான்  பிரைம்  ஓடிடி  யில்  பார்க்கும்போது  எனக்கு  நல்ல  காமெடிப்படமாகத்தான்  தோன்றியது . அறிமுக    இயக்குநர்  மனோஜ்  தாமோதரன்  இயக்கத்தில்  காமெடியன்கள்  பட்டாளத்துடன் நடித்துக்கொடுத்த  படம் . இரண்டு  மணி  நேரத்தில்  முடிந்து விடும்  என்பதால்  ஒரு  குயிக் வாட்ச்  ஆகவே  பார்த்து  விடலாம்


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனுக்கு  ரூ 25  லட்சம்  கடன்  இருக்கிறது , கடன்  கொடுத்தவன்  ஒரு  மாசம்  டைம்  கொடுக்கிறான். கடனை  அடை அல்லது  உன்  தங்கையைக்கட்டிக்கிறேன்  என்கிறான். உடனே  நாயகன்  பட்டணத்தில்  இருக்கும்  தன்  நண்பனைப்பார்க்க  வருகிறான்


நண்பன்  ஒரு  டுபாக்கூர்  திருடன். ஐ டி  கம்பெனியில்  வேலை  பார்ப்பதாக  பீலா  விட்டு  அவன்  செய்வதெல்லாம்  திருட்டு  வேலை  தான் 


வில்லன்   நெ1  ஒரு  அரசியல்வாதி . அவன்  ஒரு  பெண்ணிடம்  ஏடாகூடமாக  இருப்பதை  வீடியோ  எடுத்து  வைத்துக்கொண்டு ஒருவன்  மிரட்டுகிறான். அவனைப்பிடித்து  அந்த  வீடியோ  க்ளிப்பைக்  கைப்பற்றி  அழிக்க  வேண்டும்,  செய்தால்  50  லட்சம்  ரூபாய்  பணம்  தருவதாக  சொல்கிறான்


வில்லன்  நெ 2 ஒரு சயிண்ட்டிஸ்ட்  வைத்துள்ள  ஆராய்ச்சி  சிப்பைக்கைப்பற்ற  முயற்சிக்கிறான்


நாயகன்  தன்  நண்பனுடன்  அந்த  சயிண்ட்டிஸ்ட்டின்  லேப்க்குப்போகும்போது  எதிர்பாராத  விதமாக  நாயகனின் நண்பன்  அந்த  லேப்பில்  ஒரு  பெண்ணாக  மாறி  விடுகிறான்

  நாயகனின்  நண்பனுக்கு  ஊரில்  ஒரு  காதலி  உண்டு. நாயகனுக்கும்  இங்கே  ஒரு காதலி  உண்டு ., அவர்கள்  இருவரும்  இவர்கள்  இருவரையும்  பார்த்து  தவறாகப்புரிந்து  கொள்கிறார்கள் . இந்த  ஆள்  மாறாட்டக்குழப்பத்தால்  ஏற்படும்  காமெடி  கலாட்டாக்கள்  தான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  ஆதி.  காமெடி  திரைக்கதையில்  இவருக்கு  ஆக்சன், நடிப்புக்கு  அதிக  வேலை  இல்லை , ஆனாலும் சமாளித்து  இருக்கிறார். நண்பன்  ஆக  யோகி பாபு , வழக்கமாக  சிரிப்பே  வராத  மொக்கைக்காமெடி  செய்யும்  இவர்  ஒரு  ஷாக்  சர்ப்பரைசாக  ஒன்லைனர்  காமெடி  பஞ்ச்களால்  சிரிப்பூட்டுகிறார்


நாயகி  ஆக  பல்லக் லால்  வாணி  அழகிய முகம்,நடிக்க  அதிக  வாய்ப்பில்லை , சும்மா  அழகாக  வந்து  போகிறார்.


  ஹன்சிகா  மோத்வானி  இடைவேளைக்குப்பின்  வருகிறார், யோகிபாபு  பெண்ணாக  மாறியது  இவர்  உருவத்தில்  தான்  என்பதால்  ஆம்பளை  போல  உடல்  மொழி  காட்ட  வேண்டிய  கட்டாயத்தில்   அவரை  பெண்ணாக  ரசிக்க  முடியவில்லை 


 வில்லன்  நெ 1  ஆக ரவி  மரியா  காமெடி  நடிப்பில்  களை  கட்டுகிறார். பெட்டில்  மனைவி , துணைவி  இருவருடனும்  படுத்து  தூங்கும் காட்சி  கலகல 


 வில்லன்  நெ  2  ஆக  ஜான்  விஜய். வில்லத்தனமும்  எடுபட  வில்லை , காமெடியும்  ஒர்க்  அவுட்  ஆகவில்லை 


 ரோபோ  சங்கர் , பழைய  ஜோக்  தங்கதுரை  ஆங்காங்கே  டபுள்  மீனிங் டயலாஸ்  வைத்து  ஒப்பேற்றுகிறார்கள் 

முனீஷ்  காந்த் , மகாநதி  சங்கர் , லொள்ளு  சபா மனோகர் ,லொள்ளு  சபா  சுவாமிநாதன்  ஆகியோர்  ஒரு  சில  காட்சிகளே  வந்தாலும்  சிரிக்க  வைக்கிறார்கள் .


 ஆர்  பாண்டிய  ராஜன்  சயிண்ட்டிஸ்ட்  ஆக  வருகிறார்., கெட்டப்  சகிக்கவில்லை 


சந்தோஷ்  தயாநிதி  இசையில்  இரண்டு பாடல்கள்  ஹிட் , மூன்று  பாடல்கள்  சுமார்  ரகம்,  பிஜிஎம்  ஓக்கே  லெவல் 


ஒளிப்பதிவு  ஷபீர்  க்ளோசப்  காட்சிகளில் ஒரு  நாயகியை  மட்டும்  அழகாகக்காட்டி  இன்னொரு  நாயகியை  சுமாராகக்காட்டி  இருக்கிறார். 


பிரதீப்  ராகவ்  எடிட்டிங்கில்  ஷார்ப்  ஆஅ  2  மணி  நேரத்தில்  ட்ரிம்  செய்து  இருக்கிறார்..க்ளைமாக்ஸ்  ஃபைட்  சீனில்  சுந்தர்  சி  பாதிப்பு  தெரிந்தாலும்  இயக்குநர்    களவாணி  சற்குணத்தின்  அசிஸ்டெண்ட்


திரைக்கதை , வசனம்  எழுதி  இயக்கி  இருப்பவர் மனோஜ்  தாமோதரன் 


சபாஷ்  டைரக்டர் (மனோஜ்  தாமோதரன் )


1  நாயகன்  வில்லனின்  வீட்டு  பீரோவைத்திறக்கனும்  அதுக்கு  வில்லனின்  கை  ரேகை  வேண்டும்,  வில்லனின்  மனைவியின்  இடுப்பில்  பவுடர்  போட்டு  செலோ  டேப்  ஒட்டி  அந்த  கை  ரெகையை  எடுக்கும்  ஐடியா  செம 


2   ரோபோ  சங்க்ர்  அண்ட்  டீம்  செய்யும்  காமெடிகள்  எல்லாம்  அலப்பறை  ரகம்


3  லொள்ளூ  சபா  சுவாமிநாதன்  காமெடியும் சின்ன  காட்சி  தான்  என்றாலும்  ரசிக்க  வைத்தது


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  அட  எதுக்கு  உன்னைப்பார்த்தேன்னு  நினைக்க  வைக்கறியே?

2  ஆளான  வத்திக்குச்சி  ஆனாலும்  பத்திக்கிச்சு 


  ரசித்த  வசனங்கள் 


1  எனக்கு  மேரேஜ்  ஃபிக்ஸ்  ஆகிடுச்சுடா

 யாரு  பொண்ணு?

நம்ம  மேஸ்திரி பொண்ணுதான்

யாரு? அந்த  பஞ்சு  மெத்தையா?

டேய்


2   டேய் , என்னடா? ஐ டி  டிபார்ட்மெண்ட் ல  இத்தனை  பொண்ணுங்க ?


டாஸ்மாக்ல  கூடதான்  பொண்ணுங்க  இதே  அளவு இருப்பாங்க 


3  ஹாய் , ராஷிகா , சிகரெட்  பாக்கெட்  வெளில  தெரியுது  பார் , மறை


4  டி சி எஸ்  கம்ப்பெனி  ஐ டி  டிபார்ட்மெண்ட்னு  சொன்னே?


 அது  வந்து.. திருட்டு   கன்ஸ்ட்ரக்சன்  சர்வீஸ் =  டி சி எஸ்


5  திருட்டு  வேலை  செய்யற  நீ  கருத்து  எதுவும்  சொல்லக்கூடாது 


 அப்படிப்பார்த்தா  தமிழ்  நாட்டில்  யாருமே  கருத்து  சொல்ல  முடியாது 


6  மினிஸ்டர்  அக்னிக்குஞ்சு . பொம்பளைப்பொறுக்கியைப்பார்த்திருப்பீங்க, ஆனா  பொம்பளைனு  எழுதுன பேப்பரைக்கண்டாலே  பொறுக்கி  வாய்ல  போட்டுக்குவான்


7 அதெப்பிடிடா  உங்களுக்கெல்லாம்  ஹீரோயினைப்பார்த்த  ஃபர்ஸ்ட்  சீன்ல யே  லவ் வருது ?



8  திருடப்போறவன்  அயர்ன்  பண்ணிட்டு  நீட்டாவா  போவான் ? 


9   அது  வெடிச்சுதுன்னா  ஸ்ருதிஹாசன் பரவிடும்


 அது  சிட்ரிக்  ஆசிட்


10   ஃபோன்  பண்ணினா  கட்  பண்றான் ? எனக்கு  என்னமோ  அவன்  வேணும்னே  தான்  கட்  பண்றான்னு  தோணுது 


 இல்லை , வேணாம்னு  தான்  கட்  பண்றான்


11   அவன்  இங்கே  தான்  வீட்டில்  எங்காவது  இருக்கனும், சர்ச்  பண்ணுங்க 


-----


 டேய்  என்னடா  பண்றே?


 கூகுள்  ல  சர்ச்  பண்றேன்


12  இவங்க  மேல  சந்தேகமா  இருக்கு , கீப்  ஏன்  ஐ  ஆன்  தெம்


 கீப்பா? அப்டின்னா?


அவங்க  மெல  ஒரு  கண்  வைங்கங்கறார்

 ஒரு  கண்  என்ன? ரெண்டு  கண்ணையும்  வைக்கறேன்


13   பாப்பா  யாரு ?


 கல்யாணோட  தங்கச்சி 


 என்னது ? தவக்களை  வாயனுக்கு  இப்படி  ஒரு  தரமான தங்கச்சியா?


14   அண்ணே, பாப்பா  பவளப்பாறை  மாதிரி  பள  பளனு இருக்குனு  சொன்னீங்க?


 ஆனா  ஆவ  ஆம்பளை  மாதிரி  தோல்  சொர  சொரனு  இருக்கு, குரல்  கரகரனு  இருக்கு. டவுட்டா  இருக்கே?


15    போதும்டா , நீ  என்னை  நல்லா  பண்ணிட்டே 


 நீ தான் அதுக்கு  வாய்ப்பே  தர்லியெ?


 என்னை  ஏமாத்திட்டேனு  சொல்ல  வந்தேன் 


16   எதா  இருந்தாலும்  வாயைத்திறக்காம  பேசுங்கடா , வாயைத்திறந்தா  சத்தம்  வரும். விழிச்சுக்குவாங்க  எல்லாரும் 


17  ஆளைப்பார்த்தா  ஆம்பளைங்களுக்கு  அளவு  ஜாக்கெட்  தைக்கற  மாதிரி  இருக்கான் , இவன்  சயிண்ட்டிஸ்ட்டா? 


18  ஆளைப்பார்த்தா  பாவமா  இருக்கு ?


 அதுவும்  இவரு  “: ஆண்  பாவம் “: 


19 சோழர்  காலத்து  சோட்டா  பீம்  மாதிரி  இருக்கான் 


20  இவனைப்பார்த்தா  குழந்தை  மாதிரி  இருக்கான் , உண்மையைச்சொல்லுனு  ஏன்  கொடுமைப்படுத்தனும் > சும்மா  கிச்சு  கிச்சு  மூட்டினாலே  எல்லாம் சொல்லிடுவான்  போல 


21  ஜானி  ஜானி  எஸ்  பாப்பா


சரக்கு  வேணுமா  நோ  பாப்பா 


22   ஏண்டா  டேய் , வழி  தான்  அங்கே  இருக்கில்ல? அது  ஏண்டா  சுவத்தை  உடைச்சுட்டு  வந்தே? க்ளைமாக்ஸ்  வந்தா  போதும்


23  என்னது ?  வான்  கோழிக்கு  வழுக்கை  விழுந்த  மாதிரி  இருக்கான் ?


24 இவனைப்பார்த்தா  கீழ்  திருப்பதில   மொட்டை  அடிச்சுட்டு  மேல்  திருப்பதில  லட்டு  வாங்கிறவன்  மாதிரி  இருக்கான் ?

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ரவிமரியா  ஒரு  வேலையை  முடிக்க  20 லட்சம்  தர்றேன்கறார். பின்  30  லட்சம்  பேரம்  பேசப்பட்டு  ஒத்து  வராம  பிராஜக்ட்  கேன்சல்  ஆகிடுது . யோகிபாபு  போய்  50 லட்சம்  கொடுத்தா  அந்த  வேலையை  முடிச்சுடறேன்கறார். உடனே  ஹாட்  கேசா  50  லட்சம்  ரூபா  தந்துடறார். பொதுவா  பாதிப்பணம்  அட்வான்ஸ்  , மீதிப்பணம்  வேலை  முடிஞ்ச  பின்  தானே  தருவாங்க ? 


2  மைக்ரோ  சிப்பைத்தேடி  லேப்  வந்த  நாயகன் , காமெடியன்  இருவரும்  லூஸ்க  மாதிரி  எங்கெங்கோ  தேடிட்டு  இருக்காங்களே? காமெடிக்கா? சகிக்கலை 


3  ரோபோ சங்கர்  அண்ட்  டீம்  ஜான்  விஜய்  சொன்ன  வேலையை  செய்ய  வந்தவர்கள், அதை  செய்ய  முடியவில்லை. அதற்குப்பின்  அவர்  அடியாட்கள்  போல  அவர்  கூடவே  சுத்திட்டு  இருப்பது  ஏன் ? 


4  ஜான்  விஜய்  50  லட்சம்  ரூபாய்  தந்தது  யோகி  பாபு  கிட்டே . ஆனா  பேக்கு  வில்லன்  நாயகன்  கிட்டே  போய்  அந்த  பணம்  என்ன  ஆச்சு?னு  கேட்டு  மிரட்டிட்டு  இருக்கார்? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  வசனங்களில்  டபுள்  மீனிங்  உண்டு , காட்சிகளில்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மொக்கைக்காமெடி  ரசிகர்கள்  அவசியம்  பார்க்க  வேண்டிய  கிரேசி  மோகன்  டைப் காமெடி  டிராமா . ரேட்டிங்  2.75 / 5


பங்குதாரர்
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்மனோஜ் தாமோதரன்
எழுதியவர்மனோஜ் தாமோதரன்
உற்பத்திகோலி சூர்ய பிரகாஷ்
நடிக்கிறார்கள்
ஒளிப்பதிவுஷபீர் அகமது
திருத்தியவர்பிரதீப் இ.ராகவ்
இசைசந்தோஷ் தயாநிதி
தயாரிப்பு
நிறுவனம்
ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ்
வெளிவரும் தேதி
  • 25 ஆகஸ்ட் 2023
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Monday, December 18, 2023

KANNUR SQUAD(2023)- கண்ணூர் ஸ்குவாட் - மலையாளம்/தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் ட்ராமா த்ரில்லர்) @டிஸ்னி +ஹாட் ஸ்டார்

 


மம்முட்டியின் சொந்தப்படமான  இது  பற்றி  சில  சுவராஸ்யமான  தகவல்கள்  உண்டு . கண்ணூர்  எஸ் பி  ஸ்ரீ ஜித்  ஐ பி எஸ்  வாழ்வில் நிகழ்ந்த  உண்மை  சம்பவம்  இது .30 கோடி  ரூபாய்  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்டு  100  கோடி  ரூபாய்  வசூல்  செய்த  படம். தீரன்  அதிகாரம்  ஒன்று  படத்தின்  திரைக்கதை  போலவே  இதிலும்  டீட்டெய்லிங்க்  பக்காவாக  இருக்கும். 


2019ல்  மம்முட்டி  நடிப்பில்  வெளியான  உண்டா , 2022ல்ஆசிஃப்  அலி நடிப்பில்  வெளியான  குட்டவும்  சிக்‌ஷாவும் ,  2017ல்    கார்த்தி  நடிப்பில்  ஹெச்  வினோத்  இயக்கத்தில்  உருவான  தீரன்  அதிகாரம்  ஒன்று  ஆகிய  மூன்று  படங்களின்  சாயலும்  இதில்  இருக்கும், ஆனாலும்  தரமான  படம்


2015  மற்றும்  2017  ஆகிய  இரு  வருடங்களில்   துப்பறியப்பட்ட   இரு  வேறு  கேஸ்  டீட்டெய்ல்ஸ்  தான்  படம். இதில்  முதல்  கேஸ்  30  நிமிடங்களில்  முடிகிறது . இது  வழக்கமாக  ஹீரோ  படங்களில்  ஓப்பனிங்  ஃபைட்  சீன்  போலவோ, ஓப்பனிங் டிடெக்டிவ்  ஸ்டோரியாகவோ  எடுத்துக்கொள்ளலாம், இரண்டாவது  கதை  தான்  மெயின்  கதை 


ஸ்பாய்லர்  அலெர்ட்


 கண்ணூரில்  இருக்கும் மிகப்பெரிய  கோடீஸ்வரர்  வீட்டில்   வில்லன்  ஒரு  வே;லையாகப்போகிறான். அப்போது  எதேச்சையாக  ஹாலில்  இருக்கும்  டி வி யில்  சிசிடிவி  க்ளிப்பிங்க்ஸ்  காட்சிகளைப்பார்க்கிறான். அதில்  அந்த  பங்களா  ஓனர் பெட்ரூமில்  ஒரு  சூட்கேசில்  கட்டுக்கட்டாக  பணத்தை  பீரோவில்  அடுக்கி  வைக்கும்  காட்சி 


வில்லனின்  நண்பர்கள்  இருவர்   ஒரு  பிஸ்னெஸ்  தொடங்க  வேண்டும், அதற்கு  ஏராளமான  பணம்  தேவைப்படுகிறது  என  சொல்லி  இருந்தது  நினைவு  வர  அவர்களிடம்  இந்த  மேட்டரை  வில்லன்  சொல்கிறான். உடனே  அவர்கள்  வட நாட்டில்  இருந்து  இரு  கிரிமினல்சை  வரவழைக்கிறார்கள் 


வில்லன், வில்லனின்  நண்பர்கள்  இருவர் , அவர்களின்  நணபர்கள்  இருவர்  ஆக  மொத்தம்  ஐந்து  பேரும்  சேர்ந்து  அந்த  பங்களாவை   ஒரு  இரவு  நேரத்தில்   ஆக்ரமித்து  பணம்  கொள்ளை  அடிக்க  திட்டம் . 


ஆனால்  எதிர்பாராத  விதமாக  அந்த  பங்களா  ஓனரின்  மகள்  பாலியல்  பலாத்காரம்  செய்யப்படுகிறாள் . ஓனர்  கொடூரமாக  கொலை  செய்யப்படுகிறார்


இந்தக்கேசை  டீல்  செய்யும்  நாயகன்  அண்ட்  கோ  எப்படி  அந்த  கொலைகாரர்களை  பிடிக்கிறார்கள்  என்பதே  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  மம்முட்டி  அடக்கி  வாசித்து  இருக்கிறார். ஆனாலும்  மசாலா  சினிமாவின்  தலை  எழுத்தான  நம்ப  முடியாத  ஃபைட்  சீன்கள் , ஆக்சன்  சீக்வன்ஸ்  இதிலும்  உண்டு . சொந்தப்படம்  எடுத்து  அது  கூட  இல்லைன்னா  எப்படி ? 


ரோனி  டேவிட்  ராஜ் , அஜீஸ்  நெடுமங்காடு , சபரீஸ் வர்மா,   ஆகிய  மூவரும்  நாயகனின்  டீம்  ஆட்கள்  ஆக  வந்து  கச்சிதமான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்கள் ., இதில் ரோனி  டேவிட்  ராஜ்  திரைக்கதை  எழுதியவர்களில்  ஒருவர் 


இவர்களுக்கு  ஹையர்  ஆஃபிசர்  ஆக  கிஷோர்  பட்டையைக்கிளப்பும்  கம்பீர  நடிப்பை தந்திருக்கிறார்


161  நிமிடங்கள்  படம்  ஓடும்படி  ட்ரிம்  செய்திருக்கிறார்  எடிட்டர் பிரவீன்  பிரபாகர் .சுசின்  ஷாம்  இசையில்  த்ரில்லர்  படத்துக்கே  உரித்தான  உயிரோட்டமான  பிஜிஎம்  மை  தந்திருக்கிறார். முகமது  ரஹீல்  ஒளிப்பதிவில்  ரயில், பஸ் , காடு  மேடு  என  பயணப்பட்டு  காட்சிகளைப்பதிவு  செய்திருக்கிறார்


முகமக்த்  சஃபியின்  கதைக்கு முகமக்த்  சஃபி,ரோனி  டேவிட்  ராஜ்   ஆகிய  இருவரும்  திரைக்கதை  எழுத  ரோபி  வர்கீஸ்  ராஜ்  இயக்கி  இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர் (ரோபி  வர்கீஸ்  ராஜ் ) 


1   கேஸ்  விஷய்மாக  மும்பை  போன  நாயகன்  அண்ட்  டீம்க்கு  அங்கே  இருக்கும்  போலீஸ்  டிஃபன்  வாங்கித்தரும்போது   நம்ம  ஊர்  போலீஸ்  ஒரு  டீ  வாங்கித்தந்திருப்பாங்களா? என  ஒருவர்  அங்கலாய்க்க  மும்பை  போலீஸ்  சார்  பில்  450  ரூபா  என  வசூலிக்கும்  காட்சி 


2   நாயகனின்  டீமில்  ஒருவர்  வேறு  கேசில்  வேறு  ஒருவரிடம்  லஞ்சம்  வாங்கிய  வீடியோ  கிளிப்  வெளியாவதும் , அதனால்  இந்தக்கேசில்  ஏற்படும்  பிரச்சனைகளும்  சொல்லப்பட்ட  விதமும் ., டீமில்  அதனால்  நிகழும்  குழப்பங்களும்  யதார்த்தம்


3   கேசில்  சம்பந்தப்பட்ட   ஒரு  டிரைவரை  விசாரிக்கப்போன இடத்தில்  ஊர்  மக்கள்  ஒன்று  கூடி  தாக்குவதும்  , லாவகமாக  தப்பித்து  அந்த  டிரைவரை  அரெஸ்ட்  செய்யும்  காட்சியும்  திக்  திக்  திகிலோடு படமாக்கப்பட்ட  விதம் 


4  நாயகனின்  டீமில்  இருவர்  ரயிலில்  வர  நாயகன்   ஜீப்பில்  ஆர்டர்  தரத்தர  அதை  ஃபாலோ  செய்யும்  காட்சிகள்  பரபரப்பானவை 


  ரசித்த  வசனங்கள் 


1  யுத்தம்னு  ஒண்ணு  இருந்தா  அதில்  ராஜா , மந்திரி   எல்லாரும்  திட்டம்  போட்டு  வியூகம்  வகுப்பங்க, ஆனால்  படைத்தளபதிதான்  அதை  சக்சஸ்ஃபுல்லா  முடிப்பார் 


2  ஒரே  ஒரு  படைத்தளபதி  போதும்  ஒரு  போரை வெற்றிகரமாக  முடிக்க 

3   என்  20  வருட  சர்வீசில்   2  விதமான  போலீசை  நான்  பார்த்திருக்கிறேன். 

1 . அதில்  80%  பேர்  வாட்சைப்பார்த்து  டைம் படி  வேலை  செய்பவர்கள்  

2   மீதி  20%  பேர்  வாட்சைப்பார்க்காமல் , உணவு , உறக்கம்  பாராமல்  வேலையை  முடிக்கனும்னு  ஈடுபாட்டோடு  செய்பவர்கள். இவர்களால் தான்  நாட்டில்  இருக்கும்  போலீஸ்க்கு  மரியாதை  கிடைகிறது


4   போலீஸ்காரன்  கைதியின்  விலங்கை  இரண்டே  தருணங்களில்  தான்  கழட்டி  விடுவான்

1  கோர்ட்டில்  கேஸ்க்கு  ஆஜர்படுத்தும்போது

2  என்கவுண்ட்டர்ல  போட்டுத்தள்ளும்போது


5    எனக்குக்கிடைத்த  மேலிட  பிரசரை  நான்  உனக்குத்தரலை . அதுதான்  என்னோட  மரியாதை 


6   ஜண்டு லால்  அவன்  பேரு

 என்னது? ஜந்து லாலா?


7  நாங்க  எஸ் பி  ஆஃபீஸ்ல  இருந்து  வர்றோம்


 என்  ஃபிரண்ட்  கூட  எஸ்  ஐ தான். எஸ்  ஐ  என்பது  எஸ்பி  யை  விட  பெருசு  தானே? 


8  க்ரைம்  பண்றவன்  கம்மியான  டைம் ல தான்  ஃபோன்ல  பேசுவான் 


9  குற்றவாளி  புத்திசாலியா  இருந்தா  போலீஸ்  அவனை  விடப்பெரிய  புத்திசாலியா  இருக்கனும், அப்போதானே  அவனைப்பிடிக்க  முடியும் ? 


10  ஒரு  போலீஸ்  ஸ்டேஷன்ல  ஏகப்பட்ட  கேஸ்ங்க  டெய்லி  வரும், எல்லாத்தையும்  உடனே  முடிக்க  மேன்  பவர்  பத்தாது  


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ / ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ட்விஸ்ட்  எதுவும்  இல்லாத  ஆனால்  விறுவிறுப்பான  க்ரைம்  டிராமா  இது . அனைவரும்  அவசியம்  பார்க்க  வேண்டிய  படம் . ரேட்டிங்  3/ 5 


Kannur Squad
Theatrical release poster
Directed byRoby Varghese Raj
Screenplay by
Story byMuhammed Shafi
Produced byMammootty
Starring
CinematographyMuhammed Rahil
Edited byPraveen Prabhakar
Music bySushin Shyam
Production
company
Mammootty Kampany
Distributed by
Release date
  • 28 September 2023[1]
Running time
161 minutes[2]
CountryIndia
LanguageMalayalam
Budgetest. 30–32 crore[3]
Box officeest. 100 crore[4][5]

Sunday, December 17, 2023

ராஜ தந்திரம்; த பியானோ (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர் டிராமா )


  2013ல்  வெளி  வந்த  ஸ்பானிஸ்  படமான  கிராண்ட்  பியானோ  என்ற  த்ரில்லர்  படத்தை  அட்லீ  பாணியில்  பட்டி  டிங்கரிங்  செய்யப்பட்ட  படம்  இது . இது  ஒரு  மலேசியன்  தயாரிப்பு , அதனால்  நடிகர்  நடிகைகள்  பார்க்காத  முகங்களாக  இருப்பார்கள் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


ஒரு  கோடீஸ்வரருக்கு  அபூர்வமான  வைரம்  ஒன்று  கிடைக்கிறது . அந்த  வைரத்தை  ஒரு  மிகப்பெரிய  பியானோ  வில்  மறைத்து  வைக்கிறார். அதை  வெளியில்  எடுக்க   நான்கு  வெவ்வேறு  ட்யூன்கள்  வரிசையாக  இசை  அமைக்க  வேண்டும். அப்போதுதான்  அந்த  பாக்ஸ்  ஓப்பன்  ஆகி  வைரம்  கிடைக்கும். இப்படி  ரெடி  பண்ணி  விட்டு  அந்த  நான்கு  வெவ்வேறு ட்யூனை  தனது  நான்கு  வாரிசுகளுக்குக்கற்றுத்தருகிறார். ஆனால்  வாரிசுகளுக்கு  வைரம்  பற்றியும்  தெரியாது . அந்த  ட்யூன்  தான்  ஓப்பனிங்  கீ  ஆஃப்  த  டைமண்ட்  என்ற  விஷயமும்  தெரியாது .


20  வருடங்கள்  கழிகின்றன. அந்த  கோடீஸ்வரருக்கு அல்சைமர்  வியாதி  வந்து  எல்லாம்  மறந்து  போகிறது . பேரன், பேத்தி  எல்லாம்  எடுத்து  விட்டார் 


 வில்லனுக்கு  இந்த  வைரம்  விஷயம்  தெரிய  வருகிறது . அவன்  வைரத்தை  எடுக்க  போடும்  திட்டமும், அதை  எக்ஸ்க்யூட்  பண்ணிய  விதமும்  தான்  மீதிக்கதை 


கோடீஸ்வரரின்  பேத்தி  தான்  நாயகி. அவளது  காதலன்  தான்  நாயகன்


மூன்  நிலா  தான்  நாயகி, அழகிய  முகம், அளவான  நடிப்பு . கண்ணியமான  உடை  என  வலம்  வருகிறார் .. மூக்குத்தி  அவருக்கு  லாங்க்  ஷாட்டில்  அழகாகவும், க்ளோசப்  ஷாட்டில்  சுமாராகவும்  இருக்கிறது . மூன்  என்றாலும்  நிலா  என்றாலும்  ஒன்று  தானே? அது  என்ன  மூன்  நிலா? என  தெரியவில்லை 


 நாயகன்  ஆக  ஒரு  தாடிக்காரர்  வருகிறார்.அனேகமாக  இவர் தான்  ஃபைனான்ஸ்  பண்ணி இருக்க  வேண்டும்


 வில்லன்கள்  ஆக  இரண்டு  பேக்குகள்  வருகிறார்கள். 10 லட்ச  ரூபாய்  வட்டிக்கு  விட்ட  மலையாளத்துக்கார  சேட்  மாதிரி  ஒரு  பேக்கு  வருகிறார். பிக்  பாஸ்  நிகழ்ச்சியில்  கமல் வேட்டி  , நைட்டி  காம்பினேசனில்  கேவலமான   கெட்டப்பில்  வந்தாரே  அதே  போல்  காஸ்ட்யூம்  உடன்  வருகிறார். சகிக்க  வில்லை 


இன்னொரு  பேக்கு   வில்லன்  பற்றி  சொன்னால் சஸ்பென்ஸ்  போய்  விடும், எனவே   அதை  ஸ்கிப்  செய்து  விடலாம் 


 டிராமா    டிவி  சீரியல்  ஆர்ட்டிஸ்ட்கள்  மாதிரி  ஏராளமான  நபர்கள்  படத்தில்  உண்டு . ஓக்கே  ரகம் சில , அய்யோ  அம்மா  ரகம்  பல 


பாடலகள்  , இசை  சுமார்  ரகம். ஒளிப்பதிவு  குளுமை . 131  நிமிடங்கள்  ஓடும்படி  கச்சிதமாக  ட்ரிம்  செய்திருக்கிறார்  எடிட்டர்



சபாஷ்  டைரக்டர்


1   ராஜதந்திரம்  என்ற  டைட்டிலில்  ஏற்கனவே  படம்  ரிலீஸ்  ஆனதால் ஒரிஜினல்  படமான்  பியானோ  வை  டைட்டிலில்  சேர்த்த  சாமார்த்தியம்


2  ஒரே  பங்களாவில்  மொத்தப்படத்தையும்  முடித்த  லாவகம் 



  ரசித்த  வசனங்கள் 


1 கார்ல  தானே  போறேன்? எதுக்கு  ஹெல்மெட்  அணியனும்கறீங்க ?


 உனக்கு  இருக்கும்  மூளைக்கு  நாய்  வந்து  நக்கிட்டுப்போயிடக்கூடாது  பாரு 


2  பத்து  லட்சம்  கடன்   திருப்பித்தரனும், உடனே  முடியாது  கொஞ்சம்  டைம் கேளு 


அஜ்சு  வருசம்  டைம் கேட்கவா? சரி  அது  ஜாஸ்தி , அஞ்சு  மாசம் கேட்கறேன் 


3  முறைப்பையன்  தான், அதுக்காக்  இவ்ளோ  முறைக்கனுமா?


4  வாழ்க்கைல  அழகான  விஷயங்களை   பார்க்கவும்  முடியாது  தொடவும்  முடியாது 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   கோடீஸ்வரர்  இருக்கும்  பங்களாவே  கிராண்டா  தான்  இருக்கு . 10  கோடி  மதிப்பு  வரும், அவர்  ஏன்  பிசாத்து  10 லட்சம்  ரூபா  கடன்  வாங்கனும் ? அதுவும்  பேங்க்ல  வாங்காம  கந்து  வட்டிக்காரன்  கிட்டே  வாங்கனும் ?


2   கடனை  திருப்பிக்கேட்டு  வில்லன்  மிரட்டும்போது  பேங்க்ல  டேக்  ஓவர்  பண்ண  வெச்சு  ரிட்டர்ன்  பண்ணலாமே? 


3  அவ்வளவு   பெரிய  பங்களாவில்  கோடீஸ்வரரைப்பார்த்துக்க  ஒரு  ஆளை  ஃபிக்ஸ்  பண்ண  மாட்டாங்களா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   நாயகியின்  அழகுக்காக , பார்க்கலாம், மற்றபடி  படத்தில்  சரக்கு  அதிகம் இல்லை . ரேட்டிங்  1.75 ? 5 

Saturday, December 16, 2023

ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் காமெடி மசாலா) @ நெட் ஃபிளிக்ஸ்

 


ஆலை இல்லா  ஊருக்கு  இலுப்பைப்பூ  சர்க்கரை , நயன் தாராக்கு கல்யாணம்  ஆனதால  த்ரிஷாதான்  தமிழ்  சினிமாவின்  கனவுக்கன்னினு  இருக்கற  மாதிரி  தீபாவளிக்கு  ரிலீஸ்  ஆன  ஜப்பான்  டப்பா  ஆனதால்  இந்தப்படம்  பிக்கப்  ஆகிடுச்சுனு  தோணுது . கூடவே  எஸ்  ஜே  சூர்யாவின்  மெகா  ஹிட்  படமான மார்க் ஆண்ட்டனி  ரிலீஸ்க்குப்பின்  ரிலீஸ்  ஆகும்  படம்  என்பதால்  ஒரு  எதிர்பார்ப்பு. மற்றபடி  ஆன்லைன்  விமர்சனங்கள்  சிலாகித்த  அளவு  படம்  இல்லை  என்றாலும்  மோசம்  இல்லை 


கார்த்திக்  சுப்புராஜின்  ஜிகிர்தண்டா  முதல்  பாகம்  திகில், விறுவிறுப்பு  கலந்து  கட்டிய  படமாக  இருந்தது. இதன்  இரண்டாம்  பாகம்  தூக்கம்  வர  வைக்கும்  திரைக்கதை  அமைப்பு, நம்ப  முடியாத  காட்சி  அமைப்புகள் , வலிய  திணிக்கப்பட்ட  செண்ட்டிமெண்ட்  காட்சிகளுடன்  இருந்தது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன்  பயந்த  சுபாவம்  கொண்ட  போலீஸ்  ஆஃபீசர் . அவர்  செய்யாத  ஒரு குற்றத்துக்காக  ஜெயில்  தண்டனை  அனுபவிக்கிறார். ஜெயிலில்  இருக்கும்போது  அவருக்கு ஒரு  டாஸ்க்  கொடுக்கப்படுகிறது . ஒரு  ரவுடி  அரசியல்  பின்  புலம்  மிக்கவன், அவனைப்போட்டுத்தள்ளிட்டா   வில்லன்  ஜெயில்  தணடனையிலிருந்து  ரிலீஸூம்  ஆகிடலாம்,  போலீஸ்  வேலையும்  பழையபடி  பார்க்கலாம். வில்லன்  ஓக்கே  சொல்லிடறான்



அந்த  ரவுடி  தான்  நாயகன் .தமிழ்  சினிமாவின்  முதல்  கறுப்பு  ஹீரோ  ஆக  வேண்டும்  என்ற  லட்சியத்துடன் இருப்பவர். நாயகனின்  லட்சியத்தை  அறிந்த  வில்லன்  ஒரு  சினிமா  டைரக்டர்  போல  நடித்து  நாயகனிடம்  கால்ஷீட்  வாங்கி  ஷூட்டிங்  டைமில்  போட்டுத்தள்ளலாம்  என  திட்டம்  போடுகிறான். வில்லனின்  திட்டம்  நிறைவேறியதா? இல்லையா? என்பதுதான்  மீதி  திரைக்கதை 


  வில்லன்  ஆக  எஸ்  ஜே  சூர்யா . இவரது  கேரக்டர்  டிசைன்  ஓக்கே , ஆனால்  மார்க் ஆண்ட்டனி  அளவுக்கு  வலுவாக  இல்லை . போகப்போக  அவர்  ஒரு  எடுபுடி  போல  தான்  காட்டப்படுகிறார். அவரது  ரசிகர்களுக்கு  ஏமாற்றம் தான்


 நாயகன்  ஆக   ராகவா  லாரன்ஸ் . காஞ்சனா  மாதிரி  பேய்ப்படங்களை  கொடுப்பதில்  ஆர்வமாக  இருந்தவர்  இந்தப்படத்தில்  ரஜினி  ரெஃப்ரன்ஸ்  உடன்  பல  காட்சிகளில்  ரவுடி  ஆக  கச்சிதமாக  நடித்திருக்கிறார். பின்  பாதியில்  திடீர்  என  அவர்  நல்லவன்  ஆக  மாறுவது . ஒரு  இனத்தையே  காக்கும்  தலைவனாக  மாறுவது  எல்லாம்  நம்பும்படி  இல்லை 


நாயகி  ஆக  நிமிஷா சஞ்சயன். படம்  முழுக்க  நிறை மாத  கர்ப்பிணி ஆக  வருகிறார்.அவரது  கெட்டப்பும், நடிப்பும்  ஓக்கே  ரகம் . பிரபல  சினிமா  ஹீரோவாக  சைன்  டாம்  சாக்கோ  நன்றாக  நடித்திருக்கிறார். எம் ஜி  ஆரை  கிண்டல்  பண்ணுவது  போல  அவரது  கேரக்டர்  டிசைன்  வடிவமைக்கப்பட்டிருக்கிறது 


 முதல்வர்  ஜெ  போல  வடிவமைக்கப்ப்ட்ட  பெண்  கதாபாத்திரம்  தோற்றத்தில்  கம்பீரம்  இல்லை . அவரது  நடையில்  ஆணவம்  இல்லை . முகத்தில்  திமிர்  இல்லை . இருவர்  படத்தில்  ஐஸ்வர்யா  ராய்  நடிப்பை  விடவே  மிக குறைவான  அளவில்  தான்  இருக்கிறது 


நவீன் சந்திரா , இளவரசு  ஆகியோர்  வில்லத்தனமான  பாத்திரத்தில்  முத்திரை  பதிக்கிறார்கள் . சத்யன்  காமெடியன்  ரோல்  பண்ணி  இருக்கிறார். 


ச்ந்தோஷ்  நாராயணன்  இசையில்  மூன்று  பாடல்கள்  பிரமாதமாக  இருக்கின்றன. கொண்டாட்டப்பாடல்களாக  அமைந்தது  செம. பிஜிஎம்  கூட   நல்ல  விறுவிறுப்பு 


ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு கானக  அழகைக்கண்  முன்  கொண்டு  வருகிறார். வீரப்பன்  , யானை  சம்பந்தப்பட்ட  காட்சிகள்  எல்லாம்  செம 


ஆர்ட்  டைரக்சன் , எடிட்டிங்  போன்ற  தொழில்  நுட்பங்கள்  கச்சிதம்.  பின்  பாதி  காட்சிகள்  இழுவை .172  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது. இன்னும்  ஷார்ப்  ஆக  கட்  செய்து  இருக்கலாம்


சபாஷ்  டைரக்டர் (கார்த்திக்  சுப்புராஜ்) 


1    எஸ்  ஜே  சூர்யாவின்  ஓப்பனிங்  சீன் , கொலைக்கேசில்  அவர்  மாட்டுவது  போன்ற  காட்சிகளில்  த்ரில்லர்  படத்துக்கே  உரிய  சுவராஸ்யம்

2  படத்தில்  ரஜினி  ரெஃப்ரன்ஸ் , எம்ஜிஆர் , ஜெ  ரெஃப்ரன்ஸ்  எங்கெல்லாம்  தேவையோ  அங்கெல்லாம் சாமார்த்தியமாகப்புகுத்திய  விதம்

3  நாயகனுக்கு  கதைசொல்ல  இயக்குநர்கள்  லைன்  கட்டி  நிற்கும்  காட்சியும், வில்லன்  கதை  சொல்லி  ஓக்கே  வாங்கும்  இடமும்  நல்ல  காமெடி 



செம  ஹிட்  சாங்க்ஸ்


1  தீக்குச்சிப்பட்டாசா

2 மாமதுரை  அன்னக்கொடி 

3 ஒய்யாரம் ஒய்யாரம் பொண்ணுங்க  எல்லாம் 


  ரசித்த  வசனங்கள் 


1  கலையை  நீ  துரத்த  முடியாது , கலை தான்  உன்னை  துரத்தும் 


2  கட் , ஒன் மோர்  ஆக்சன் ,  நாலு  பேரு  தலைல  குட்டனும், ஓக்கே , டைரக்சன்  கத்துக்கிட்டேன் 


3  ஒரு  நல்ல  படம்  தன்னைத்தானே  உயிர்ப்பித்துக்க்கொள்ளும்னு  சத்யஜித்ரே  சொல்லி  இருக்காரு


4   நல்லவங்களைப்பற்றிப்படம்  எடுத்தா  யாரும்  பார்க்க  வர  மாட்டேங்கறாங்க 


5 எதிரியை  பொசுக்குனு  சுட்டுக்கொல்வது  வீரம்  இல்லை , அவனுக்கும்  ஒரு  வாய்ப்பு  கொடுத்து  நேருக்கு  நேரா வீரமா  கொல்லனும்


6  காட்  ஃபாதர் =  தெய்வத்தகப்பன் . ஆஸ்கார்  வாங்கி  இருக்கு 


7   வில்லனுக்கு  வில்லன்  வில்லாதி  வில்லனா  இருப்பான், இருக்கான் 


8   அவங்க  நினைச்சபடி  காரியம்  நடக்கும், ஆனா  அவங்க  நினைச்ச  மாதிரி  நடக்காது 


9  யானை  இல்லா  காடும் , காடு  இல்லா  ஊரும்  விளங்காது 


10 எவனும்  எதையும்  புதுசா  எழுதிட  முடியாது . பேனாவை  கெட்டியாப்பிடிச்சாபோதும், எழுதப்படவேண்டியது  எழுதப்படும் 


11 போர்ல  ஜெயிச்சவங்கனு  யாரும் இல்லை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  ஒரு  பொறுக்கி , ரவுடி , குடிகாரன். ஆனால்  பின்  பாதியில்  திடீர்  என  அநியாயத்துக்கு  நல்லவன்  ஆவது  நம்பும்படி  இல்லை 

2  நிறைமாத  கர்ப்பிணி  ஆன  தன்  மனைவியை  நாயகன்  கை  நீட்டி  அடிக்கிறான்.  அந்த  பேக்கு  அதற்குப்பின்பும்  நாயக்னை  சீராட்டி  பாராட்டி  சோறு  போட்டுட்டு  இருக்கு (  இந்தக்காலத்துல  பொண்டாட்டிங்க பேச்சை  நாம  கேட்கலைன்னாலே  அம்மா  வீட்டுக்கு  போய்டறாங்க . அடிச்சா  போலீஸ்  ஸ்டேஷன்  தான்  நாம  போகனும் ) 

3   நாயகன்  மிக்ப்பெரிய  சினிமா  ஆர்வலன், ரசிகன் , ஆனால்  வில்லன்  ஒரு  டுபாக்கூர்  டைரக்டர்  என்பதை  அவரால்  கண்டு  பிடிக்க  முடியவில்லை 


4  ஜெயல்லிதாதான்  வீரப்பனை  வளர்த்து  விட்டவர்  என்பது  எல்லாம்  ஓவரோ  ஓவர்


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ / ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  காதில்  பூ  சுற்றும்  சுவராஸ்யமான  கதை  தான், தூக்கம்  வராதவர்கள்  பார்க்கலாம். ரேட்டிங்  2.25 / 5



Jigarthanda DoubleX
Theatrical release poster
Directed byKarthik Subbaraj
Written byKarthik Subbaraj
Produced byKarthik Subbaraj
Kaarthekeyen Santhanam
S. Kathiresan
Alankar Pandian
Starring
CinematographyTirru
Edited byShafique Mohamed Ali
Music bySanthosh Narayanan
Production
companies
Stone Bench Films
Five Star Creations
Invenio Origin
Distributed byRed Giant Movies
Release date
  • 10 November 2023
Running time
172 minutes
CountryIndia
LanguageTamil

Friday, December 15, 2023

THE ANGEL MAKER (2023) - ஆங்கிலம்/தமிழ் - சினிமா விமர்சனம் ( சைக்கோ க்ரைம் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்

 


பெண்களைக்குறி  வைத்துத்தாக்கும்  சீரியல்  கில்லர்  சம்பந்தப்பட்ட  படங்கள்  தொடர்ந்து  ஹிட்  ஆகி  வருகின்றன. ராட்சசன் , போர்த்தொழில்  வரிசையில்  ஹாலிவுட்டிலிருந்து  இன்னும்  ஒரு  சைக்கோ  கிரைம்  த்ரில்லர்  படம். 90  நிமிடங்கள்  மட்டுமே  ஓடும்  படம்  என்பதால்  இதை  ஒரு  குயிக்  வாட்ச்  மூவி  ஆக வே  பார்த்து  முடித்து  விடலாம்


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு  டிடெக்டிவ்.  சைபர்  க்ரைம்  டிபார்மெண்ட்டில்  பணி  புரிபவர் . இவர்  உடல்  நிலை  சரி  இல்லாத  காரணத்தால்  மெடிக்கல்  லீவில்  இருக்கிறார்.இவருக்கு  ஒரு  கணவர்  உண்டு . ஒரு  குழந்தை  பிறக்கும்  தருணத்தில்  அபார்ஷன்  ஆகி  அதனால்  மெண்ட்டல்  டிப்ரஷனில்  இருப்பவர் . 


நாயகன் ஒரு  போலீஸ்  ஆஃபீசர் . இவருக்குத்திருமணம்  ஆகி  மனைவியுடன்  வசித்து  வருகிறார், மனைவி  இப்போது  கர்ப்பம்  ஆக  இருக்கிறார்


நகரில்  ஒரு  பெண்  கொலை  செய்யப்பட்டு  கிடக்கிறாள் . அவள்   உடலில்  ஒரு  மெமரி  கார்டு  கொலைகாரனால்  வைக்கப்பட்டு  இருக்கிறது. அந்த  மெமரி  கார்டை  ரன்  பண்ண  விடுப்பில்  இருக்கும்  நாயகி  அழைத்து  வரப்படுகிறாள் .அப்படியே  இந்த  கொலைக்கேசில்  நாயகனுடன்  இணைந்து  பணியாற்ற அவருக்கு  அறிவுறுத்தப்படுகிறது 


கொலை  செய்யப்பட்ட  பெண்ணின்  வீட்டைக்கண்டு  பிடித்து  அவள்  ரூமை  செக்  செய்தால்  சில  அதிர்ச்சித்தடயங்கள்  சிக்குகின்றன. நம்ம  ஊரில்  ட்விட்டர் , ஃபேஸ் புக்  போல  அங்கே  இருக்கும்  ஒரு  சமூக  ஊடகத்தில்  அவள்  ஏராளமான  ஃபாலோயர்ஸ்  வைத்திருக்கிறாள் .  ஒரு  செலிபிரிட்டி  ஆக  வலம்  வர  அவள்  சில  சட்ட  விரோத   காரியங்களை  செய்திருக்கிறாள் 


இவளைப்பற்றி  விசாரித்துக்கொண்டு  இருக்கும்போதே  நகரில்  அடுத்தடுத்து  இரண்டு  கொலைகள்  நடக்கின்றன.  கொலை நடந்ததும்  கொலைகாரன்  ஒரு  லைவ்  ஃபுட்டேஜ்  விட்டுச்செல்கிறான், அதில்  அவன்  கொலை செய்த  விதம்  குறித்து  டீட்டெய்ல்டு  வீடியோ  க்ளிப் இருக்கிறது 


மேலே  சொன்ன  மூன்று  கொலைகளுக்கும்  பொதுவான  ஒற்றுமைகள் 

 1  மூன்றும் பெண்கள்  2   இள்ம்பெண்கள் . திருமணம்  ஆகும்  முன்னே  காதலனுடன்  அல்லது  பாய்  ஃபிரண்டுடன்  நெருக்கமாக  இருந்ததால்  கர்ப்பம்  ஆகி  அபார்சன்  செய்தவர்கள் 


இந்த  கேசை  டீல்  செய்யும்  நாயகியும்  அபார்சன்  ஆனவர்  தான்.  இதனால்  ஒரு  பரபரப்பு  தொற்றிக்கொள்கிறது . நாயகனும், நாயகியும்  இணைந்து  சைக்கோ  கில்லரை  எப்படி  கைது  செய்கிறார்கள்  என்பது  மீதி  திரைக்கதை


நாயகன்  ஆக  ரோலண்ட்  மெல்லர்  அடக்கி  வாசித்து  இருக்கிறார். ஆக்சன்  காட்சிகள்  அதிகம்  இல்லை  என்றாலும்  ஹீரோயிசம்  அதிகம்  காட்டாத  ஒரு  ஹீரோ  ரோல்


 நாயகி  ஆக ஜூ;லி  ஆர்  ஒலகார்ட்   நாயகனை  விட  அதிக  காட்சிகள்  இவருக்கு . ஹேக்  பண்ணுவதில்  நிபுணி  என  கேரக்டர்  டிசைன்  செய்யப்பட்டிருப்பதால்   இவருக்கு  அதிக  காட்சிகள் . 


வில்லன்  ஆக  சைக்கோ  கில்லர்  ஆக   மார்க்   ஹார்ப்சோ  மிரட்டி  இருக்கிறார்

. படம்  முழுக்க  மாஸ்க்  போட்டு  முகத்தை  மூடி  இருக்கும்  வரை  பயபப்டுத்துபவர்  முகத்தை  காட்டியதும்  பெரிய  அளவில்  பயமுறுத்த  வில்லை 


 வில்லனை  விட  வில்லனின்  அம்மா  செம  ஹைட்.  மிரட்டல்  ஆன  நடிப்பு , க்ளைமாக்சில்  கடைசி  10  நிமிடங்கள்  அவர்  செய்யும்  ஆக்ச்ன்  சீக்வன்ஸ்  மெயின்  கதைக்கு  சம்பந்தம் இல்லை  என்றாலும்  ரசிக்க  வைத்தது 


ஜூ;லி  ஆர்  ஒலகார்ட்  எஸ்பன்  டான்சன்  இருவரும்  இணைந்து  இயக்கி  இருக்கிறார்கள் . தயாரிப்பு ஜூ;லி  ஆர்  ஒலகார்ட்

சபாஷ்  டைரக்டர்


1   வில்லன்   மூன்று  கொலைகளையும்  ஒரே  பேட்டர்னில்  பிளாஸ்டிக்  கவரால்  முகத்தை  அடைத்துத்தான்  கொல்கிறான்  என்றாலும்  மூன்று  கொலைகளையும்  மாறுபடுத்திக்காட்டிய  விதம்  குட் 


2  தயாரிப்பாளர் , இயக்குநர் , நாயகி  என  மூன்று  பொறுப்புகளில்  இருப்பதால்  நானே  ராணி  நானே  மந்திரி   கான்செப்ட்டில்  நாயகி  பணி  புரிந்திருப்பது  சிறப்பு 


3   நாயகி மன  பிரமையில்  மனக்கண்  முன்  தோன்றும்  சில  காட்சிகள்  பேய்ப்படங்களில்  வரும்  ஜம்ப்ஸ்கேர்  காட்சிகளுக்கு  நிகரான  ஜெர்க்கைத்தந்தன 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   கொலை  செய்யும்  காட்சிகள்  மிக  கொடூரமாகப்படம்  ஆக்கபப்ட்டுள்ளன . அட்டென்சன்  சிக்கிங்க்கிற்காக  இப்படி  வன்முறைப்படங்கள்  வருவது  ஆபத்து 


2   மூன்று  கொடூரமான  கொலைகளை  செய்த  வில்லனை  வில்லனின்  அம்மா  அவன்  இருக்கும்  இடம்  சொல்றேன் , அவனைக்காப்பாத்துவீங்களா? என  அப்பாவியாகக்கேட்பது  எப்படி ? 


3  ஒவ்வொரு  கொலைக்கேசிலும்  போலீஸ்  தவறான  பாதையில்  சென்று  மீண்டும் சரியான  பாதைக்கு  வருவது  வழக்கம்  தான்  என்றாலும்  முதல்  கொலை  ஆனதும்  அந்தப்பெண்ணின்   சோசியல்  மீடியா  ஃபாலோயரை   போலீஸ்  மிரட்டும்  காட்சிகள்  தேவை  இல்லாதது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - ஓவர்  வயலன்ஸ் , 18+  காட்சிகள்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஒரு சராசரி  ஆன  சைக்கோ  க்ரைம்  த்ரில்லர் தான். சூப்பர்  என  கொண்டாடவும்  முடியவில்லை , குப்பை  என  ஒதுக்கவும்  முடியவில்லை , ஆவரேஜ்  வாட்ச் . ரேட்டிங்  2.25 /. 5 

Thursday, December 14, 2023

பார்க்கிங் (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர் டிராமா) @டிஸ்னி+ஹாட்ஸ்டார் , ஸ்டார் விஜய்

 


  1988ல்  ரிலீஸ்  ஆன அக்னிநட்சத்திரம்  படம்  போஸ்டர்  டிசைனிலேயே  கலக்கியது . இரு  நாயகர்களும்  மோதிக்கொள்ளும்  காட்சியில்  இருவருக்கும்  இடையே  பூகம்பம்  ஏற்பட்டது  போல  விரிசல்  விழுந்திருக்கும்  பூமியோடு  அந்தக்காட்சி அதகளப்படுத்தியது . அதே  போல்  படம்  பார்க்கும்போதும் கார்த்திக் , பிரபு  இருவரும் ஒவ்வொரு முறை   நேருக்கு  நேர்  சந்திக்கும்போதும் பிஜிஎம்  மில்  இளையராஜா ட்டுடும் ட்டுடும்  என  இசையில்  கலக்கி  இருப்பார். தியேட்டரில்  கைதட்டல்கள் பறக்கும் .

35  வருடங்கள்  கழித்து  தமிழ்  சினிமாவில்  அப்படி   காம்பினேஷன்  ஷாட்களில்  எல்லாம்  பொறி  பறக்கும்  ஒரு  திரைக்கதையை  உருவாக்கி  பிரமாதப்படுத்தி  இருக்கிறார்  அறிமுக  இயக்குநர் ராம் குமார்  பாலகிருஷ்ணன். எட்டு  தோட்டாக்கள்  படத்தில்  தேசிய  விருது வாங்கி  இருக்க  வேண்டிய  எம் எஸ்  பாஸ்கர்  இதில்  நிச்சயம்  வாங்கி  விடும் அளவுக்கு  நடிப்புத்திறனின்  உச்சியைத்தொட்டு  இருக்கிறார்


2019ல்  ரிலீஸ் ஆன பிருத்விராஜ்+ சுராஜ் வெஞ்சாரமூட்  காம்ப்போ  படம்  ஆன  டிரைவிங்  லைசென்ஸ்   என்ற  மலையாளப்படம் , 2020 ல்   ரிலீஸ்  ஆன  பிருத்விராஜ் - பிஜூ மேனன்  காம்போ  படம்  ஆன  அய்யப்பனும்  கோஷியும்  ஆகிய  இரு  படங்களுக்குமே  ஒரே  திரைக்கதை  ஆசிரியர்  தான். இரு  நபர்களுக்கு  இடையே  ஏற்படும்  ஈகோ  மோதல்களால்  என்ன  விளைவுகள்  ஏற்படுகிறது  என்பதுதான்  கதையின்  ஒன் லைன். ஆனால்  திரைக்கதையில்  இரு  படங்களுமே  மாறுபட்டு  இருந்தன.அதே  போன்ற  ஒரு  கதை  தான் இதுவும், ஆனால்  இந்த  இரண்டிலிருந்து  முற்றிலும்  வேறுபட்டு  வேறு  ஒரு கோணத்தில்  சொல்லப்பட்டிருக்கும்  திரைக்கதை  இது 


வெறும்  இரண்டு  கோடி  பட்ஜெட்டில்  உருவான  இப்படம் 1/12/2023  அன்று  திரை  அரங்குகளில்  வெளியாகி  ரசிகர்களின்  ஏகோபித்த  வரவேற்பைப்பெற்ற  இப்படம்  1/1/2024  முதல்  டிஸ்னி+ஹாட்ஸ்டார் , 14/1/2024  முதல் ஸ்டார் விஜய்   ஒளிபரப்ப  இருக்கின்றன 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  ஐ  டி  கம்ப்பெனியில்  பணி புரிபவர் . காதல்  மனைவியுடன்  வசித்து  வருகிறார். இருவரும்  லவ்  மேரேஜ்  என்பதால் இரு  தரப்பு  வீட்டிலும்  எதிர்ப்பு . அவர்களுடன்  போக்குவரத்து  இல்லை . நாயகி  8  மாதம்  கர்ப்பிணியாக  இருக்கிறார்


 வில்லன்  தன்  மனைவி , மகள்  உடன்  வாடகை  வீட்டில்  வசித்து  வரும்  அரசாங்க  ஊழியர்


வில்லன்  கீழ்  வீடு , நாயகன்  மேல்  மாடி  வீடு. வில்லன் பைக்கை  வீட்டின்  முன்  நிறுத்தி  இருக்கிறார். நாயகன்  கார்  நிறுத்தி  இருக்கிறார். ஒரு  நாள்  பைக்கை  நிறுத்தும்போது   நாயகனின்  காரில்  கீறல்  போட்டு  விடுகிறார்  வில்லன் .  நாயகனுக்கும் , வில்லனுக்கும்  வாக்குவாதம். ஒரு  கட்டத்தில்  இது  ஈகோ  பிரச்சனை  ஆக  மாறுகிறது


 ஹவுஸ்  ஓனரிடம்  பஞ்சாயத்து  நடக்கும்போது  பைக்கை  வைத்திருப்பவர்  தான்  அட்ஜஸ்  பண்ணிப்போகவேண்டும்  என  சொல்ல   வில்லனுக்கு  இது  ஈகோவை  பண்ணி  விடுகிறது . வீம்புக்காக  வில்லன்  புதுக்காரே  வாங்குகிறார்


இதற்குப்பின்  நடக்கும்  மோத்ல்கள்  தான்  மீதி  திரைக்கதை. என்னடா  இது  ஒன்லைன்  ரொம்ப  சிம்ப்பிளாக  இருக்கிறதே? இதை  வைத்து  எப்படி  ஒரு  முழுப்படம்  எடுக்க  முடியும் ? குறும்படம்  வேண்டுமானால்  எடுக்கலாம்  என  யாரும்  நினைக்க  வேண்டாம். விறுவிறுப்பான  ஒரு  க்ரைம்  த்ரில்லருக்கு  நிகரான  படத்தைத்தந்திருக்கிறார்  இயக்குநர் 


நாயகன்  ஆக  ஹரீஷ்  கல்யாண்  அருமையாக  நடித்திருக்கிறார். அவர்  இதுவரை  நடித்த  படங்களில்  நடிப்புக்கு  அதிக  முக்கியத்துவம்  தரப்பட்ட  ரோல்  அவருக்கு 


 வில்லன்  ஆக  எம்  எஸ்  பாஸ்கர்   அசத்தி  இருக்கிறார்/.ஒரே  ஒரு  பார்வை  மூலமே  உலகின்  மொத்த  வெறுப்பையும்  கண்களில்  காட்டி விட  முடியும்  என்று  உணர்த்தி  இருக்கிறார்.


நாயகி  ஆக  இந்துஜா வுக்கு  நடிக்க  அதிக  வாய்ப்பில்லை  என்றாலும்  வந்தவரை  சிறப்பு . ஹவுஸ்  ஓனராக  இளவரசு  கச்சிதம் 


சாம் சி எஸ்  தான்  இசை , பின்னணி  இசையால்  எந்த  அளவு  டெம்ப்போ  கூட்ட  முடியுமோ  அந்த  அளவு  சிறப்பாக  செய்திருக்கிறார், ஒரே  ஒரு மேல்  வீடு , கீழ்  வீடு  மொத்த  லொக்கேஷனும்  இவ்வளவு தான்  என்பதால்  ஒளிப்பதிவாளர் ஜிஜூ  சன்னிக்கு  சவாலான  வேலை  தான்.  கனகச்சிதமாக  தன்  பணியை  செய்திருக்கிறார்

.

பிலோமின்  ராஜ்  தான்  எடிட்டிங். இரண்டு  மணி  நேரம்  ஓடும்படி  கச்சிதமாக  ட்ரிம்  செய்திருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்  ( ராம் குமார்  பாலகிருஷ்ணன்.)


1   ஒரு  சாதாரண  மோதலை  பெரிய  சண்டை  ஆகும்  வண்ணம்  வில்லன்  நாயகன்  மேல் போலீஸ்  புகார்  அளிக்கப்போடும்  திட்டமும்  அதைத்தொடர்ந்து  வரும்  காட்சிகளும்


2  போலீஸ்  ஸ்டேஷனில்  அவமானம்  அடைந்த  நாயகன்  வில்லனைப்பழி  வாங்க  போடும்  திட்டமும்  அதன்  எக்ஸ்க்யூசனும்  அபாரம். அந்த  ரெய்ட்  சீன்  செம  டெம்ப்போ 


3   வில்லன்  நாயகனின்  காரை  டேமேஜ்  பண்ண  காரின்  அருகே  இரவில்  பதுங்கி இருப்பதும்  அப்போது  போலீஸ்  ரோந்து  வரும்  காட்சியும்


4   நாயகன்  வில்லனைக்கொல்லப்போடும்  திட்டம்  அபாரம். 



  ரசித்த  வசனங்கள் 


1    கடன்  வாங்கியாவது அவன் பொண்டாட்டியை  சந்தோஷமா  வெச்சிருகானே?


 கடன்  வாங்குனா  பொண்டாட்டி  சந்தோஷமா  இருப்பா , சரி , ட்யூ  கட்றது  புருசன்  தானே? 


2   ந்மக்கு  யூஸ்  ஆகாத  சேவிங்க்ஸ்  எதுக்கு  சார் ?


 நீங்க  ஆர்வத்துல   பேசறீங்க , நான்  அனுபவத்துல  பேசறேன்


3   புதுக்காரை  ஜாக்கிரதையாத்தான்  ஹேண்டில்  பண்ணனும்,  என்  கார்ல  யாரோ  ஏ பிசிடி  எழுதி வெச்சுட்டாங்க 


 இது  தேவலை , என்  கார்ல  ஐ ல யூ   எழுதி  வெச்சிட்டானுங்க 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   வில்லன்  அந்த  500  ரூபாய்  நோட்டுக்களை  சீரியல் ஃபேன்  இறக்கை  மேலே  வைத்த  ஐடியா  ஓக்கே , ஆனால்  உதிரியாகவா  வைப்பார்கள் ? லேசாக  காற்றடித்தாலே  பறந்து  காட்டிக்கொடுக்குமே? ஆஃபீசில்  ரப்பர்பேண்டுக்கா  பஞ்சம் ? ஒரு  கட்டுப்போட்டு  அந்தப்பணக்கட்டை  வைத்திருக்கலாமே? 


2  நிறை மாத  கர்ப்பிணியாக  இருக்கும்  நாயகியை  கவனிக்க  ஒரு  நர்ஸ்  அல்லது  ஒரு  பணிப்பெண்ணை  ஏற்பாடு  பண்ணி  வைக்க  மாட்டாரா? நாயகன் ? அவ்ளோ  வசதி  வேற 


3    போலீசில்  கேஸ்  கொடுத்தது  வில்லன்  தான் , ஆனால்  கேசை  வாபஸ்  வாங்குவது  வில்லனின்  மகள் , இது  எப்படி ? செல்லாதே?


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இந்த  வருடத்தின்  மிக  முக்கியமான  படம், மாறுபட்ட  திரைக்கதை  அவசியம்  குடும்பத்தோடு  பார்க்க  வேண்டிய  படம். ரேட்டிங் 3.5 / 5 


வாகன நிறுத்துமிடம்
பார்க்கிங் 2023 படத்தின் திரையரங்கு வெளியீட்டு போஸ்டர்
இயக்கம்ராம்குமார் பாலகிருஷ்ணன்
எழுதியவர்ராம்குமார் பாலகிருஷ்ணன்
உற்பத்திசுதன் சுந்தரம்
கே.எஸ்.சினிஷ்
நடித்துள்ளார்
ஒளிப்பதிவுஜிஜு சன்னி
திருத்தியவர்பிலோமின் ராஜ்
இசைசாம் சிஎஸ்
உற்பத்தி
நிறுவனங்கள்
பேஷன் ஸ்டுடியோஸ்
சிப்பாய்கள் தொழிற்சாலை
வெளிவரும் தேதி
1 டிசம்பர் 2023
நாடுஇந்தியா
மொழிதமிழ்
திரைப்பட நுழைவு சீீட்டு விற்பனையகம் 1.92 கோடி [1]

Wednesday, December 13, 2023

MAST MEIN RAHNE KA ( 2023) - ஹிந்தி /தமிழ் -மஸ்த் மே ரஹனே கா - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா ) @ அமேசான் பிரைம்

 


 ஜாலியா  இருக்கனும்  என்பதுதான்  டைட்டிலுக்கான  தமிழ்  அர்த்தம்.இந்தக்கதையில்  இரு செட்  காதல் ஜோடிகளைப்பற்றி  சொல்லப்பட்டிருக்கிறது. 25  வயது  நாயகன்  - நாயகி  கதை , பிறகு  60+  வயது  நாயகன்  நாயகி  காதல்  கதை . பெரிய  திருப்பங்கள்  இல்லாத  மென்மையான  காதல்  கதைகள்  இரண்டுமே.  ரசிக்க  வைத்த படம்  ,மஸ்த் மே  ரஹனே  கா 

ஸ்பாய்லர்  அலெர்ட்

 சம்பவம் 1 - நாயகன்  ஒரு  டெய்லர்.  நல்ல  தொழில்  தெரிந்த  திறமை சாலி,  மும்பையில்  ஒரு  டெய்லர்  கடையில்  டெய்லர்  ஆகப்பணி  புரிபவன். கடைக்கு வந்த  லேடி  கஸ்டமர்  தன்  ஜாக்கெட்  ஃபிட்டிங்  சரி  இல்லை  என  புகார்  சொல்ல  அதற்கு  நாயகன்  அளித்த  யதார்த்தமான  விளக்கத்த்தை  தவறாகப்புரிந்துகொண்டு  அந்த  கஸ்டம்ர்  சண்டை  போடுகிறாள் . ஃபேஸ்புக்கில்  கடை பற்றி  எழுதி  மானத்தை  வாங்குவேன், கஸ்டமரே  வர  விடாமல்  செய்வேன்  என்கிறாள். இதனால்  காண்டான  ஓனர்  நாயகனை  துரத்தி  விடுகிறார்


நாயகன்  தனியாக  கடை  போட்டு  ஆர்டர்  பிடிக்கிறான். ஆனால்  கடைக்கு  அட்வான்ஸ் கொடுக்க  கை வசம்  இருந்த  பணம் போதவில்லை . அதனால்  பார்ட்  டைம் ஜாப்  ஆக  திருடுகிறான். அக்கம்  பக்கம்  இருக்கும் தனிமையான  முதியவர்  வீடுதான்  டார்கெட்..ஃபுல்  டைம்  ஜாப்  ஆக  மக்கள்  பணத்தைத்திருடும்  அரசியல்வாதிகள்  மாட்டிக்கொள்வதில்லை , ஆனால்  இவன்  மாட்டிக்கொள்கிறான்


சிரமப்பட்டு  முன்னேறும்போது  பழைய  கடை  ஓனர்  தனது  கஸ்டமரகளை  கவர்  பண்றதாக  குற்றம்  சாட்டி  கடையை காலி  செய்ய  வைக்கிறான். 


நாயகி  டிராஃபிக்  சிக்னல்களில்  நின்று  பிச்சை  எடுப்பவர். அவர்  மீது  நாயகனுக்குக்காதல். இருவருக்கும்  பழக்கம்  உண்டாகிறது ஒரு  க்ட்டத்தில்  நாயகி “ தொழிலில்”  இறங்குகிறாள்.இது  நாயகனுக்குப்பிடிக்கவில்லை . ஊடல் , சண்டை


 நாயகன் - நாயகி  இணைந்தார்களா? நாயகன்  தொழிலில்  முன்னேறினானா? என்பது  மீதி திரைக்கதை 


 சம்பவம்  2 


 முதல்  சம்பவத்தில்  நாயகன்  திருடிய  இரு  வெவ்வேறு  வீடுகளில் இருந்த  வேவ்வேறு  நபர்கள்  தான்  இந்தக்கதையின்  நாயகன்  நாயகி


இந்தக்கதை  நாயகன் 60  வயதானவர். மனைவி  இறந்ததால்  இவருக்கு  வாழ்க்கை  வெறுத்து  விடுகிறது . தற்கொலை  செய்யும்  முடிவில்  கூட  தோற்கிறார். ஏதோ  கடமைக்கு  வாழ்ந்து  கொண்டிருக்கிறார்


  நாயகி   திருமணம்  ஆகி  விதவையானவர். மகன்  கனடாவில்  இருக்கிறான் . மருமகளுடன்  ஒத்துப்போகவில்லை . அதனால்  தனிமையில்  வசிக்கிறார்


 நாயகன் - நாயகி  இருவருக்கும்  பழக்கம்  ஏற்படுகிறது. ஒரு  கட்டத்தில்  நாயகியின்  மகன்  வந்து  தன்  அம்மாவை  கனடாவுக்கு  அழைத்துச்சென்று  விடுகிறான். இதற்குப்பின்  நாயகன் - நாயகி  இணைந்தார்களா? என்பது  மீதி  திரைக்கதை  

முதல்  கதையின்  நாயகன் - நாயகி  ஆக  அபிஷேக் சவ்ஹான் -மோனிகா பன்வர்  அருமையாக  நடித்திருக்கிறார்கள் . அப்பாவியாக  வரும்  நாயகன்  தன்  வெள்ளந்தியான  சிரிப்பு , அப்பாவித்தனமான  பேச்சுக்களால்  அனைவர்  மனதையும்  கொள்ளை  அடிக்கிறார்


 நாயகியின்  கேரக்டர்  டிசைன்  பொதுவாக  நமக்கு  அசூயை  அல்லது  வெறுப்பு  தான்  ஏற்படுத்தி  இருக்க  வேண்டும், ஆனால்  தன்  அபாரமான  ந்டிப்பினால்  இரக்கத்தை  சம்பாதித்து  மனம்  கவர்கிறார்


 இருவரது  காதல்  காட்சிகளிலும்  ஒரு  கண்ணியம் , கவிதைத்தனம்  நிரம்பி  வழிகிறது .


அடுத்த  காதல்  ஜோடி  ஜாக்கி  ஷெராப் - நீனா  குப்தா /. இதில்  ஜாக்கி  செராப் இயக்குநர்  சொன்னபடி  சில  இடங்களில்  அடக்கி  வாசிக்கிறார்,, பல  இடங்களில்  கலக்கலான  நடிப்பை  வெளிப்படுத்தி இருக்கிறார்

  நாயகி  நீனா  குப்தா  நல்ல  நடிகை  தான் . ஆனால்  இந்தப்படத்தில்  ஜோதிகாவுக்கே  அக்கா  போல்  பல  காட்சிகள்  ஓவர்  ஆக்டிங். இயக்குநர்  கவனித்தாரா? இல்லையா? தெரியவில்லை . ஒருவேளை  சீனியர்  ஆர்ட்டிஸ்ட்  என்பதால்  சொல்லத்தயங்கி  இருக்கலாம்


127  நிமிடங்கள்  டைம்  ட்யூரேஷன்  வரும்படி  ஷார்ப்  ஆக  கட்  செய்து  இருக்கிறார்  எடிட்டர்  அண்ட்ரா லஹரி 


பாடல்களுக்கான  இசையை  மூவர்  செய்திருக்கிறார்கள் , பின்னணி  இசையை  வேறு  ஒருவர் கவனித்திருக்கிறார்.  குட்  ஒன் 


நாகராஜ் ரத்தினம்  ஒளிப்பதிவில்  தன்  முத்திரையைப்பதிக்கிறார். நாயகி யின்  க்ளோசப்  காட்சிகள்  கொள்ளை  அழகு 


பயால்  அரோரா  உடன்  இணைந்து  திரைக்கதை  எழுதிய  விஜய்  மவுர்யா  படத்தை  இயக்கி  இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்


1   டெய்லர்  ஆன  நாயகன் , பிச்சைக்காரி  ஆன  நாயகி  இருவருக்குமிடையேயான  அறிமுகம், பழக்கம் , காதல்   போன்ற  தங்க  தருணங்களை  சுவராஸ்யமான  காட்சிகளால்  படம்  பிடித்த  விதம் 


2   கொஞ்ச  நேரம்  இளமைக்காதல் , அடுத்த  காட்சிகள்  முதுமைக்காதல்  என  மாற்றி  மாற்றிக்காட்டி  அனைத்துத்தரப்பு  ரசிகர்களையும்  கவர்  செய்த  விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1  மும்பை  ஒரு  பெரிய  மார்க்கெட் . இங்கே  எல்லாமே  ஃபிரெஷா  இருக்கனும், ஃபிரெஷா  வாழனும், ஃபிரெஷா  சாப்பிடனும், ஃபிரெஷா  இல்லைன்னா  போணி  ஆகாது 


2  வாழ்க்கைல  முன்னேறனும்னா  சொந்தமா  தொழில்  செய்யனும்


3   வணக்கம்  மேடம்..


 அடடே,  நீயா? உனக்கு  நினைவிருக்கா?  எருமை  மாடு  மாதிரி  கன்னங்கரேல்னு  ஒருத்தன்  என்னை  சுத்தி  சுத்தி  வந்தானே? அவன் தான்  என்  புருசன் இப்போ 


4   மருந்து  நல்ல  மருந்தா? கெட்டுப்போனதா?னு  செக்  பண்ற  குவாலிட்டி  கண்ட்ரோலர்  ஆஃபீசரா  இருந்தேன்


 எப்படி? மருந்தை  சாப்பிட்டுப்பார்த்து  சொல்வீங்களா?


5   என்  பேரு  குப்தா  , ஆனா  எல்லாரும்  என்னை  நன்னி  நன்னினு  தான்  கூப்டுவாங்க 


 டபுள்  ஆக்டா?


 இல்லை  ஒரு  நன்னி  தான் 


6  இந்த  உலகத்தில்  எல்லாருக்கும்  ஏதோ  ஒரு  டைம்ல  ஸ்க்ரூ  லூஸ்  ஆகத்தான்  செய்யும், ஆனா  எனக்கு  இப்படியே  இருக்கத்தான்  பிடிச்சிருக்கு 


7  ஒரு  பெண்  கிட்டே  பேசியே  10  வருசம்  ஆகுது . இந்த  ஆம்பளைங்க  கெட்ட  வார்த்தை  பேச, புகார்  செய்யத்தான்  வாயையே  திறக்கறாங்க 


8  அவன்  ஒரு  மொள்ளமாரியா  இருந்தாலும்  கவிதை  நல்லா  சொல்லுவான், வானமோ  நீலம், நீ தான்  என் பாலம்  அப்டினு  சொல்லியே  என்னை  க்ரெக்ட்  பண்ணிட்டான். இந்த  கவிதை  எழுதறவனுங்க  பூரா  கேப்மாரியாதான்  இருக்கானுங்க 


9  இந்த  வாழ்க்கை  எப்பவும்  நமக்கு  ரெண்டு  சான்ஸ்  கொடுக்கும்.  முதலாவது  நமக்கு    அமைந்த   ரெகுலர்  வாழ்க்கை . ரெண்டாவது  அதான்  இப்போ  நமக்கு  கிடைச்சிருக்கு 


10  லேடீசோட  சில  விஷயங்களை  நீங்க  அப்சர்வ்  பண்ணக்கூடாது , குண்டா  இருக்கா , அப்டி  இப்டி இருக்கா , இதெல்லாம்  சொல்லக்கூடாது. நாங்க  சுமாரா இருந்தாலும்  அழகா  இருக்கறதாத்தான்  சொல்லனும்


11   லைஃப்  நமக்கு  இன்னொரு  சான்ஸ்   தரும்போது  அந்த  சான்சை  மிஸ்  பண்ற   சான்சை  தராம  பார்த்துக்குங்க 

12  ஒவ்வொரு மனுசனுக்கு உள்ளேயும்  ஒரு  மிருகம்  இருக்குமாம்,    தூங்கிட்டு  இருக்கும் அது  விழிச்சுக்கிட்டா  பாவம்  பண்ண  ஆரம்பிச்சிடுவோமாம்


13  வாழ்க்கைல  சில  விஷயங்கள்  ஒண்ணு  சீக்கிரமாவே  நடக்குது , அல்லது  லேட்டா  நடக்குது , யாருக்குமே  கரெக்ட்  டைம்க்கு  எதுவும்  நடக்கறதில்லை 


14  யார்  மேல  அட்டாச்மெண்ட்டா  இருந்தாலும்  நமக்கு பாதிப்புதான்  ஏற்படும்


15     நாயகி = என் உடம்புக்கு  நான்  தான்  ஓனர்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    நாயகன்  ஒரு  தடவை  தையல்  மிஷின்  வாங்க  ஷோரூம்  போகிறான். டாப்  மட்டும்  வாங்கி  வருகிறான். மீதி  பார்ட்ஸ்  இல்லாமல்  எப்படித்தைக்க  முடியும் ?  பணத்தைக்கடையில்  தந்தால்  அவர்களே  டோர்  டெலிவரி  செய்து  விடுவார்களே? 


2    சீப்பான  பாரத்  இண்ட்டர்நேஷனல்  ஃபிளைட்ல  பயணம்  செய்யப்போறானாம்னு  ஒரு  டயலாக்  வருது , இதை  எப்படி  சென்சார்ல  விட்டாங்க? 


3  மகன்  ஊரில்  இருந்து  வந்திருக்கிறான்.,  அதனால்  ஃபோன்  பண்ண  வேண்டாம்  என  நீனா  குப்தா  ஜாக்கி  ஷெராபிடம்  சொல்லி  இருக்கலாமே? அல்லது மெசேஜ்  செய்திருக்கலாமே? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  காட்சி  ரீதியாக  18+ இல்லை , ஆனால்  வசனத்தில்  ஆங்காங்கே  பச்சை  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பட  பிரமோஷன்களில்  காமெடி  டிராமா  என  விளம்பரம்  செய்தாலும்  இதில் காமெடி  பெரிய  அளவில்  இல்லை , ஆனால்  ரசிக்க  வைக்கும்  ரொமான்ஸ்  உண்டு . காதலர்கள்  பார்க்கலாம். பெண்களுக்கு  மிகவும்  பிடிக்கும் , ஆம்பளைங்களுக்குத்தான்  பொறுமை  கிடையாதே?  ரேட்டிங்  2.75 / 5 


Mast Mein Rehne Ka
Official release poster
Directed byVijay Maurya
Written byVijay Maurya
Payal Arora
Produced by
  • Payal Arora
  • Vijay Maurya
Starring
CinematographyNagaraj Rathinam
Edited byAntara Lahiri
Music byScore:
Arabinda Neog
Songs:
Anurag Saikia
Shailendra Barve
Kaam Bhaari
Production
company
Made in Maurya
Distributed byAmazon Prime Video
Release date
  • 8 December 2023
Running time
127 minutes
CountryIndia
LanguageHindi