Monday, November 20, 2023

NEYMAR (2023) - நெய்மர் - மலையாளம் / தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா ) @ டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்

     


  டைட்டிலைப்பார்த்ததும்  இது  ஏதோ  ஃபுட்பால்  மேட்ச்  சம்பந்தப்பட்ட  படம்  என  யாரும்  மனப்பால்  அல்லது மன ஹார்லிக்ஸ்  குடிக்க  வேண்டாம், இது பெட்  லவ்வர்ஸ்க்கான  அல்லது  நாய்க்குட்டிப்பிரியர்களுக்கான  காமெடி  டிராமா  .


2019ல்  ரிலீஸ்  ஆன  செம  ஹிட்  படமான  தண்ணீர்  மாத்தன்  தினங்கள் 2022ல்  ரிலீஸ்  ஆன  ஜோ அண்ட்  ஜோ  ஆகிய  இரண்டு  படங்களின்  ராசியான  ஜோடி  ஃபிரண்ட்ஸ்  ஆன மேத்யூ  தாம்ஸ் , நாஸ்லன் கே  கபூர்  ஆகிய இருவரும்  இணைந்து  நடிக்கும்  மூன்றாவது  படம்

ஹீரோ  பின்னால்  பம்மும்  பழக்கம் இல்லாத  நம்ம  ஊர்  ராமநாராயணன்  ஒரு  காலகட்டத்தில் ஆடு , பாம்பு , நாய்  ஆகியவற்றை  முன்னணி  கதாபாத்திரங்கள்  ஆக்கி  மெகா  ஹிட்  படங்களைத்தந்தார் . அதே  போன்ற  ஒரு  முயற்சி  தான்  இதுவும் 


டைட்டிலுக்கும்  , படத்துக்கும்  என்ன  சம்பந்தம் ? நாய்க்குட்டியின்  பெயர்  தான்  அது . 


    ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  நாயகியை  ஒன் சைடாக  லவ்வுகிறான். நாயகி  ஒரு  ஃபாரீன்  நாய்க்குட்டி உடன்  உலா  வருகிறாள் . அவளை  கரெக்ட்  பண்ண  முதல்  கட்டமாக  நாமும்  ஒரு  நாய்  வாங்க  வேண்டும்  என  நாயகனுக்கு  நண்பன்  ஐடியா  தருகிறான்


அதன்படி  நாயகன்  ஒரு  நாயை  சொந்தம்  ஆக்குகிறான், எதிர்பார்த்தபடியே  நாயகன்  நாயகி  இருவரும்  அந்த  நாயால்  நெருக்கம்  ஆகிறார்கள் 


 கதை  இப்படியே  ஜாலியாகப்போகும்  என  எதிர்பார்த்தால்  அப்படியே  யூ  ட்ர்ன்  அடித்து  நாயகன் - நாயகி  இருவரையும்  அவுட்  ஆஃப்  ஃபோகஸ்  ஆக்கி  நாய்  முன்னிலை  ஆவது  போல  கதைக்களம்  மாறுகிறது 


 அந்த  நாயால்  நாயகனின்  அப்பாவுக்கும், அந்த  ஏரியா  ,மக்களுக்கும்  ரொம்பத்தொந்தரவு . ஒரு  கட்டத்தில்  நாயகனின்  அப்பா  அந்த  நாயை  பாண்டிச்சேரி  போகும்  ஒரு  வேனில்  ஏற்றி  விடுகிறார்

நாயைக்காணாமல்  தவிக்கும் நாயகன்   தன்  நண்பனுடன்  பாண்டிச்சேரி  போகிறான்

அங்கே  நாயை  வைத்து  டோர்ணெமண்ட்டுக்கான  ட்ரெய்னிங்  கொடுத்துக்கொண்டிருக்கிறான்  ஒரு  தாதா  . தாதாவிடம்  அடியாளாக  இருந்தவன்  தாதாவை  ஏமாற்றி  விட்டு  சுல்தான்  எனும் நாயை  அபேஸ்  செய்து  போட்டிகளில்  ஜெயிக்கிறான் , இப்போது  அந்த தாதா  நாயகனின்  நாயை  வைத்து  ஜெயிக்க  நினைக்கிறான் . என்ன  நடந்தது  ? என்பது  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  மேத்யூ  தாம்ஸ்  பக்கத்து  வீட்டுப்பையன்  போன்ற  தோற்றம். மாண்புமிகு  மாணவன் காலத்து  விஜய்  போல  சாயலில்  தெரிகிறார். நண்பன்  ஆக நாஸ்லன் கே  கபூர்  கிடைக்கும்  கேப்களில்  எல்லாம்  கிடா  வெட்டுகிறார். பொதுவாக  தமிழ்  சினிமாக்களில் நாயகியை  விட  நாயகியின்  தோழி  அழகாக  இருப்பார் , இதில்  உல்டா டிட்டோ  ஆக  நாயகனை  விட  நண்பன்  நல்ல  பர்சனாலிட்டி 


நாயகனின்  அப்பா, நண்பனின்  அப்பா , இருவருக்குமான  பொது  நண்பர்  ஒருவர்  என  மூவர்  அடிக்கும்  லூட்டிகள்  பின்  பாதி  திரைக்கதைக்கு  சுவராஸ்யம் . விஜயராகவன், ஜானி  ஆண்ட்டனி ,ஷம்மி  திலகன்  இவர்கள்  மூவ்ரும்  உயிரோட்டமான  நடிப்பை  வ்ழங்கி  இருக்கிறார்கள் . தாதாவாக  யோக்  ஜெபி  ஒரு  சாயலில்  நம்ம  ஊர்  ராஜ்கிரனின்  தம்பி  போல  உள்ளார் 


படத்தின்  கடைசி  ஒரு  மணி  நேரம்  நாய்கள்  கலந்து  கொள்ளும்  போட்டிகள்  என்பதால்  இது  சிறுவ்ர்கள் , குழந்தைகள்  மிகவும்  ரசிப்பார்கள்

ஷான்  ரஹ்மானின்  இசை  இதம் , பிஜிஎம்  கொண்டாட்டம் . 160  நிமிடங்கள்  படம்  ஓடும்படி  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்  எடிட்டர் . பின்  பாதியில்  அரை  மணி  நேரம்  கட்  பண்ணி  இருக்கலாம். அல்பியின்  ஒளிப்பதிவு  கச்சிதம் . நாய்க்கான  க்ளோசப்  ஷாட்கள்  அருமை 


ஆதர்ஷ்  சுகுமாரன்  பால்சன்  திரைக்கதைக்கு சுதி  மடிசன்  உயிர்  கொடுத்து  இயக்கி  இருக்கிறார்



சபாஷ்  டைரக்டர்


1 நாயகனின்  அம்மா  தன்  பின்னால்  சுற்றிய  ஒன்  சைடு  லவ்வர்  இப்போது  நாய்  ;பிஸ்னெஸ்  செய்பவர்  என்பதை  அறிந்து  மினி  அனுப்பியதாக  சொல், உனக்கு  நாய்  கிடைக்கும்  என  மகனை  அனுப்புவதும்  அதைத்தொட்ர்ந்து  வரும்  காட்சிகளும்  காமெடி  கலக்கல் 


2  வாக்கிங்  போகும்  சாக்கில்  நாய்க்குட்டியை  ஜம்பம்  ஆக  அழைத்துச்செல்லும்  பணக்காரப்பெண்களை கலாய்த்திருக்கும்  இயக்குநரின்  உத்தி  அழகு 


3  நாயகன் , நண்பன்  இருவரின்  அப்பாக்களும்  நண்பர்களாக  இருப்பது  அவ்ர்களது  சண்டை , செல்லசண்டைகள்  அழகு 


9  ஃபைனல்  போட்டியில்  ஜெயிக்கும்  தருணத்தில் நாய்க்குட்டி  சேற்றில்  சிக்கிய  இன்னொரு  நாயைக்காப்பாற்றும் காட்சி  செம  செண்ட்டிமெண்ட் 


  ரசித்த  வசனங்கள் 


1  இவங்க  ரெண்டு  பேரும்  எப்பவும்  சண்டை  போட்டுட்டே  இருக்காங்களே?  என்ன  பிரச்சனை ?


 பிரச்சனை  எதுவும்  இல்லைனு  தான்  சண்டை  போடறாங்க 


2  ஒருத்தருக்குப்பதிலா  இன்னொருத்தரை  மாத்துவதாக இருந்தால்  எப்பவோ  உன்னை  நான்  மாற்றி  இருப்பேன் 


3   அடேய் . நாய்க்குப்பிறந்த  நாயே 


4  இது  என்ன  பேங்க்  லாக்கரா? நாய்  வயிற்றில்  இத்தனை  பொருடகள்  இருக்கு ?


5 இது  உங்க  நாயா?


 இல்லை , இவன்  என் பையன் 


6  என்னடா? உன்  ஆளு  புதுசா  வாக்கிங்  எல்லாம்  போறா 


 புதுசா  நாய்  வாங்கி  இருக்கால்ல?  சீன்  போடறா 


7  இவனுங்க  ரெண்டு பேரும்  ஏன்  எப்போப்பாரு  காத்துலயே  கணக்கு  போட்டுட்டு  இருக்கானுங்க , புதுசா  கல்யாணம்  ஆனவங்க  மாதிரி 


ஏன்? இந்த  வயசுல  நீ  இப்படி  செஞ்சதே  இல்லையா? 


8  உங்க  அப்பா  ஆரோக்கியமாத்தானே  இருக்காரு ? இல்லை  எனக்கு  ஒரு  வாய்ப்பு  கிடைக்குமோனு..... 


 அதெல்லாம்  இல்லை , அப்பா  நல்லாத்தான்  இருக்கார் 


9  இங்கே  நாய்  பாபு  என்பது  நீங்கதானா? சாரி  மிஸ்டர்  பாபு  என்பது  நீங்க  தானே? 


10   உன்  அம்மா  மினி  இப்போ  எப்படி  இருக்கா ?


 தெரில , இப்போ நான்  இங்கே  தானே  இருக்கேன் ? 


 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


இது  சின்னக்குழந்தைகள்  பார்க்க  வேண்டிய  படம். நாமும்  குழந்தையா  மாறி  படம்  பார்க்கனும், இங்கேயும்  லென்ஸ்  வெச்சுக்கிட்டு  குறை  கண்டு பிடிக்கக்கூடாது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஜாலியான , கலகலப்பான,  ஃபேமிலியுடன்  பார்க்க  வேண்டிய  நல்ல  படம்  ., ரேட்டிங்  3 / 5 



Neymar
Theatrical release poster
Directed bySudhi Maddison
Screenplay byAdarsh Sukumaran
Paulson
Produced byPadma Uday
Starring
CinematographyAlby
Edited byNoufal Abdullah
Music byShaan Rahman
Production
company
V Cinemas International
Release date
  • 12 May 2023
Running time
160 minutes
CountryIndia
LanguageMalayalam
Box officeest. 10 crore (US$1.3 million)[1]

Saturday, November 18, 2023

குட்நைட் (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி டிராமா )

 


ஒரு  மனிதனுக்கு  உடல்  ஆரோக்கியமாக  இருக்க  முக்கியத்தேவை  ஆழ்ந்த  உறக்கம். அது  மிட்  நைட் 12  டூ 3  தூங்கும்போதுதான்  கிடைக்கும். அப்படி  கிடைக்க  நாம்  நைட்  9  டூ  10  தூங்க  ஆரம்பிக்க  வேண்டும், ஆனால்  இப்போது  அனைவரும்  மிட்  நைட்  12  டூ 1  வரை  சோசியல்  மீடியாவில்  உலாத்தி  விட்டு  அதுக்குப்பின்  உணவு  அருந்தி  அது  ஜீரணம்  ஆகும்  முன்  படுக்கைக்குப்போனால்  எப்படி  தூக்கம்  வரும்.? 


 டீப்  ஸ்லீப்  அல்லது சவுண்ட்  ஸ்லீப்  வர  என்ன  செய்ய  வேண்டும் ? குறட்டை  விட்டால்  அதுதான்  ச்வுண்ட்  ஸ்லீப்  என  அரதப்பழசான  மொக்கை  ஜோக்  உண்டு . அந்த  கான்செப்ட்டைத்தான்  படத்தின்  ஒன் லைன்  ஆக  எடுத்திருக்கிறார்  இயக்குநர் வினாயக்  சந்திர  சேகரன்.


 பொதுவாக  ஹீரோவை  நம்பாமல்  திரைக்கதையை  நம்பும்  படங்களை நாம்  ஆதரிப்பது  வியப்பில்லை . மிகக்குறைந்த  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்டு  அபரிதமான  லாபத்தையும், நல்ல  பெயரையும்  சம்பாதித்துக்கொடுத்த  படம்  இது. கே  பாக்யராஜ் , வி  சேகர்  போன்ற  இயக்குநர்கள்  பாணியில் குடும்பத்துடன்  பார்க்கக்கூடிய  கண்ணியமான  படத்தைத்தந்த  இயக்குநருக்கு  வாழ்த்துகள் 


         ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  அம்மா, அப்பாவை  இழந்த  அனாதைப்பெண் . ஒரு  போர்ஷனில்  தனியாகக்குடி  இருக்கிறார். வேலைக்கு  செல்பவர் . அவரது  ஹவுஸ்  ஓனர்  ஆன  வயதான  தம்பதி  தான்  நாயகிக்கு  கார்டியன்  போல . 


நாயகன்  அம்மா, தங்கை , அக்கா, அக்காவின்  கணவர்  என்று  கூட்டுக்குடித்தனத்தில்  வசிக்கும்  பேச்சிலர். இவர்  ஐ டி  கம்பெனியில்  வேலை  செய்கிறார். இவர்  ஆஃபீசில்  பணிபுரியும்  சக  கொலீகிடம் லவ்  பிரப்போஸ்  செய்கிறார் ஆனால்  அவர்  அதை  ஏற்றுக்கொள்ளவில்லை 


இதற்குப்பின்  நாயகியை  எதேச்சையாக  சந்திக்கிறார். காதல்  வயப்படுகிறார். அவரும்  ஓக்கே  சொல்ல  திருமணம்  நடக்கிறது 


 வில்லனே  இல்லாத  கதையில்  நாயகன் - நாயகி  திருமண  வாழ்க்கையில்  என்ன  பிரச்சனை  ஏற்பட்டது ? அதை  எப்படி சரி  செய்தார்கள்  என்பது  மீதி  திரைக்கதை 


 நாயகன்  ஆக  மணிகண்டன், கச்சிதமான  நடிப்பி , அளவான  பேச்சு , உடல்  மொழி  எல்லாம்  அருமை 


நாயகி  ஆக மீத்தா  ரகுநாத்  அட்டகாசமான  தேர்வு . ஒப்பனையே  இல்லாத  இயல்  அழகி . இவரது  யதார்த்தமான  நடிப்பு , சிரிப்பு  மிகப்பெரிய  பிளஸ்


 நாயகனின்  அக்காவாக ரைச்சல்  ரெபேக்கா  பிரமாதமான  நடிப்பு .  , சின்னச்சின்ன  முக பாவனைகளை  அசால்ட்  ஆக  வெளிப்படுத்துகிறார்


கோடிகளில்  சம்பளம்  வாங்கும்   இன்றைய  முன்னணி  நடிகைகள்  இவர்கள்  இருவரையும்  ஃபாலோ  செய்தால்  நல்லது 

நாயகனின் அக்கா  கணவர்  ஆக  ரமேஷ்  திலக்  நல்ல  குணச்சித்திர  நடிப்பு . ஆஃபீஸ்  ஹையர்  ஆஃபீசர்  ஆக  பகவதி  பெருமாள்  வில்லத்தனம்  மிக்க  நடிப்பு


அது  போக  ஒரு  நாய்க்குட்டி  மிக  யதார்த்தமாக   படம்  முழுக்க  பயணிக்கிறது , பெட் லவ்வர்ஸ்க்கு  ஜாக்பாட் 


சீன்  ரோல்டன்  இசையில்  நான்  காலி  என்ற  பாடல்  அதிரி  புதிரி  ஹிட்  மெலோடி , மற்ற  பாடல்களும்  ஓக்கே  ரகம்  தான் . பிஜிஎம்   பக்கா 


ஜெயந்த் சேது , மாதவன்  இருவரும்  ஒளிப்பதிவு. காட்சிகளை  கண்  முன்  காண்பது  போல  நேர்த்தியான  படப்பிடிப்பு 


 கே  பாக்யராஜ்  பாணியில்  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  வினாயக்  சந்திர  சேகரன்.


சபாஷ்  டைரக்டர் (வினாயக்  சந்திர  சேகரன்.) 


1   நாயகன் , அக்கா  கணவர்  இருவருக்குமான  பாண்டிங்   , அவர்கள்  இருவருக்குமான  காட்சிகள்  எல்லாம்  அருமை. மச்சினந் மாமா  என்றால்  இப்படி  அல்லவா  இருக்க  வேண்டும் ? என  நினைக்க  வைக்கும்  நடிப்பு 


2   மெய்ன்  கதைக்கு  சம்ப்ந்தம்  இல்லை  என்றாலும்  அந்த  நாய்க்குட்டி - நாயகி  இருவருக்குமிடையேயான  நட்பு  அழகான  கவிதை 


3 கணவன் - மனைவி  பிரிவுக்கு  இதுவரை  தமிழ்  சினிமாவில்  யாரும்  சொல்லாத  ஒரு  காரணம், அதை  அனைவரும்  ஏற்றுக்கொள்ளும்  விதத்தில்  சொன்ன  விதம் 


4  பிரிவுக்குப்பின்  தூக்கம்  வராமல்  தவிக்கும்  நாயகி  நாயகனின்  குறட்டை  சத்தத்தை  டேப்பில்  ஓட  விட்டு  அந்த  சத்தத்தில்  தூங்கும்  காட்சி 

செம  ஹிட்  சாங்க்ஸ்


  1  நான்  காலி 

2  சில் மக்கா 


  ரசித்த  வசனங்கள் 


1 நீங்க  யார்?னு  இந்த  உலகம்  உங்களைக்கேட்கும்போது  உங்களுக்கு பதில்  சொல்லத்தெரியலைன்னா  உலகமே  உங்களுக்கு  ஒரு  பேரு  வைக்கும்  , அப்படி  எனக்கு  இந்த  உலகம்  வெச்ச  பேரு  தான்  அம்மா, அப்பாவை  விழுங்கினவ, அன் லக்கி 

2  ஒரே  நாள்ல நம்ம  வாழ்க்கைல  எல்லா  பிரச்சனைகளும்  தீர்ந்தா  எப்படி  இருக்கும் ?


3 வாழ்க்கைல பெரிய  பெரிய  பிரச்சனைகளுக்கு  சின்னச்சின்ன  விஷயங்களே  தீர்வாக  இருக்கின்றன, நாம்  தான்  அதைப்புரிந்து  கொள்ளாமல்  இருக்கிறோம்


4  வாழ்க்கைல  எல்லாருக்கும்  ஏதோ  ஒரு  குறை  இருக்கும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  உணவுப்பொருட்களை  வீண்  ஆக்குதல்  அல்லது  அவமதித்தல்  இது  இயக்குநரின்  மூலம்   பல  முறை  பார்வையாளர்களுக்கு  கடத்தப்படுது . ஓப்பனிங்  சீன்ல  முள்ளங்கி  சாம்பாரை  மட்டம்  தட்டி  நாயகன்  பேசும்  வசனமும், மிளகு  கலந்த  பால்  டம்ளரை  தட்டி  விடுவதும்  உதா. இதை  எல்லாம்  தவிர்க்கலாம், அன்னலட்சுமியைப்பழிக்கக்கூடாது


2  நாயகன்  சரக்கு  அடிக்கிறான், தம்  அடிக்கிறான். அவை  இரண்டும்  நாயகிக்கு  பிரச்சனையாகத்தெரியவில்லை . சிகரெட்  நாற்றம், சரக்கு நாற்றம்  பற்றி  மூச்சு  விடவில்லை , ஆனால்  குறட்டை  மட்டும்  தான்  பெரிய  பிரச்சனை  ஆக  சொல்கிறார்


3  நாயகனின்  குறட்டைப்பிரச்சனையால்  இருவ்ரும்  தனித்தனி  ரூமில்  படுபப்தும்  அதனால் இருவருக்கும்  தாம்பதய  உறவே  நடக்க  வில்லை  எனவும்  அதனால்  குழந்தை  பாக்கியம்  இல்லை  எனவும்  சித்தரித்து  இருப்பது  நகைப்பான  விஷயம் ,  தினசரி  தாம்பதய  உறவை  முடித்து  விட்டு  பின் தனித்தனி  ஆறையில்  தூங்கசெல்லலாமே? தனிக்குடித்தனம்  தானே? 


4  காமெடிக்காக எடுத்திருந்தாலும்  க்ளைமாக்ஸ்  காட்சி  அபத்தம்.  டேக்  ரிவர்ஸ்    என  பத்து  நிமிடங்களுக்கு  ஒரு  முறை  சொல்லும்  காட்சி  திகட்டி விடுகிறது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- க்ளீன் யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   நல்ல  திரைக்கதை  ஆர்வலர்கள்  அவசியம்  காண வேண்டிய  திரைப்படம் .  குடும்பத்துடன்  பார்க்கலாம், ரேட்டிங் 3.25 .5 


Good Night
Release poster
Directed byVinayak Chandrasekaran
Written byVinayak Chandrasekaran
Produced by
  • Yuvaraj Ganesan
  • Magesh Raj Pasilian
  • Nazerath Pasilian
Starring
CinematographyJayanth Sethu Mathavan
Edited byBarath Vikraman
Music bySean Roldan
Production
companies
Million Dollar Studios
MRP Entertainment
Distributed byShakthi Film Factory
Release date
  • 12 May 2023
CountryIndia
LanguageTamil

Friday, November 17, 2023

BAANADARIYALLI (2023) -வான் நோக்கிய பாதை - கன்னடம் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா) @ அமேசான் பிரைம்

   


பெரும்பாலான  நல்ல  படங்கள்  முதல்  பாதி  நன்றாக  இருக்கும், இரண்டாம்  பாதி  சுமாராகத்தான்  இருக்கும். நம்  வாழ்க்கை கூட  ஸ்கூல்  லைஃப் , காலேஜ் லைஃப்  என  முதல்  பாதி  ஜாலியாகபோகும், வேலை, கல்யாணம், பொறுப்பு  என  பின்  பாதி இழுவையாக  இருக்கும். நல்ல  ஒரு  ஃபீல்  குட்  மெலோ டிராமாவாக  எடுக்க  நினைத்திருக்கிறார்கள், ஆனால்  பின்  பாதி  ஒர்க்  அவுட்  ஆகவில்லை     


   ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஒரு  இயற்கை  விரும்பி. அவர்  குழந்தையாக , சிறுமியாக  இருக்கும்போதே   ஆப்பிரிக்கா  வனப்பகுதிகளில்  டூர்  போய் பறவைகள் , விலங்குகள்  இவற்றுடன்  ஒரு டார்ஜான்  வாழ்க்கை  வாழவேண்டும்  என நினைப்பவர். அவர்  அப்பாவின்  செல்ல  மகள் , அப்பா  , மகள்  அன்னியோன்யம்  மிக ஆழமாக  சொல்லப்பட்டிருக்கும்


நாயகன் நாயகியை  முதல்  முறை  பார்த்தபோதே  மனதைப்பறிகொடுக்கிறார். பல  வழிகளில்  ப்ரப்போஸ்  செய்கிறார். நாயகியும்  ஓக்கே  சொல்லி  விடுகிறார். ஆனால்  அப்பாவின்  சம்மதம்  வேண்டும்   என்ற கண்டிஷனும்  போடுகிறார்.


முதல்  பாதி  முழுக்க  இவர்களது  ரொமான்ஸ்  போர்சன் , காமெடி  என  ஜாலியாகப்போகிறது . திருமண  ஏற்பாடுகள்  நடக்கும்போது  ஒரு  சாலை  விபத்தில்  நாயகி  இறந்து  விடுகிறார்.


நாயகியின்  அப்பாவுக்கு  மகள்  இறந்த  துக்கம்  ஒரு புறம் , மருமகன்  வர  இருந்த  நேரம்  சரி  இல்லை , இந்த  ராசி  இல்லாத  ராஜாவால்  தான் நாம்  நம்  ராணியை  இழந்தோம்  என  நினைக்கிறார்


நாயகன்  ஒரு  கட்டத்தில்  நாயகியின்  அப்பா  இருக்கும் வீட்டுக்கே  வருகிறார். அவரது  எதிர்ப்பையும்  மீறி  அவருடன்  தங்குகிறார், மன  மாறுதலுக்காக  இருவரும்  ஃபாரீன்  டூர்  போகிறார்கள் . மாப்பிள்ளை , மாமனார்  இருவரும்  டூர்  போனால்  ஆடியன்சுக்கு  போர்  அடிக்குமே? அதனால் சம்பந்தமே  இல்லாமல் ஒரு  புதுப்பெண்  இருவருக்கும்  அறிமுகம்  ஆகிறார்,இதற்குப்பின்  கதையில்  நிகழும்  திருப்பங்கள்  தான்  கதை 


நாயகன்  ஆக கணேஷ்    சுமாராக  நடித்திருக்கிறார். தாடி , தொப்பை  என  நாயகிக்கு  சித்தப்பா  மாதிரி  இருக்கிறார்


 நாயகி  ஆக ருக்மினி  வசந்த்  அபாரமாக  துள்ளலான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்.ஒல்லி  கில்லி  ஆக  இவர் உடல் வாகு  அழகு, ஆனால்  நாயகன் பாடி  மெயிண்ட்டெனென்ஸ்  இல்லாமல்    ஃபிட்  இல்லாமல்  ஏனோதானோ  என  இருப்பதால்  கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆகவில்லை 


 பின்  பாதி யில் இன்னொரு   நாயகி  ஆக ரீஷ்மா  நடித்திருக்கிறார். இவரது  கேரக்டர்  மெயின்  திரைக்கதைக்கு  சம்பந்தம்  இல்லாத  வலுக்கட்டாய  திணிப்பாக  இருப்பதால்  எடுபடவில்லை 


நாயகியின்  அப்பாவாக  ரங்கயனா  ரகு  அருமையாக  நடித்திருக்கிறார். இவரும்  நாயகனைப்போலவே  குடி , தம் , தொப்பை   என  இருந்தாலும்  இவருக்கு  ஜோடி  இல்லாததால்  பெரிய  குறையாகத்தெரியவில்லை 


அபிலாஷ்  களத்தியின்  ஒளிப்பதிவில்  பின்  பாதி  லொகேஷன்கள்  பிரமாதம். நாமே  டூர்  போனது  போல  ஒரு  உணர்வு 

அர்ஜூன்  ஜன்யா  வின்  இசையில்  நான்கு  பாடல்கள்  சுமார்  ரகம், பிஜிஎம்  ஒக்கே  ரகம் 

தீபு  எஸ்  குமாரின்  எடிட்டிங்கில்  படம்  ரெண்ட்ரை  மணி  நேரம்  இழுக்கிறது 


ப்ரீத்தா  ஜெயராமனின்  கதைக்கு  ப்ரீத்தம்  கப்பி  திரைக்க்தை  எழுதி  இயக்கி  இருக்கிறார் 


சபாஷ்  டைரக்டர்  ( ப்ரீத்தம்  கப்பி ) 


1  ஓசி  டூர்  ஆக  கென்யா ,  ஆஃப்ரிக்கா  போக  ஆசைப்பட்டு  தயாரிப்பாளரை  ஏமாற்றி  கதை  சொல்லி  டூர்  போய்ட்டு  வந்த  லாவகம்


2  முதல்  பாதியில்  ஒரு  நாயகி  அவுட்  என்பதால் பின் பாதி  ரசிகனை ஏமாற்றக்கூடாது  என  இன்னொரு  நாயகியை  உலவ விட்ட  ஐடியா 


ரசித்த  வசனங்கள் 


1  நான்  அடிக்கும்போது  என்னை  ஏன்  அடிக்கறே?னு  திருப்பிக்கேள்வி  கேட்க  முடியாததை  வெச்சே  நீ  தப்பு  பண்ணி  இருக்கேனு  உனக்கே  தெரியுதுனு  எடுத்துக்கலாமா?


2  அரசியல்ல  விளையாடலாம், ஆனா  விளையாட்டுல  ஸ்போர்ட்ஸ்ல  அரசியல்  நுழையக்கூடாது 


3   உங்க  வீட்டுக்கு  நான்  வரனும்னா  ஒரு  கண்டிஷன்


 நீங்க  இருக்கற  இந்த  கண்டிஷன்ல  எனக்கு  கண்டிஷன்  போடறீங்களா?


4 வீட்ல வைஃபி  இருக்கா?


 எனக்கு  இன்னும் மேரேஜ்  ஆகலைங்க, பேச்சிலர் 


 யோவ். ஒயிஃப்  இருக்கா?னு  கேட்கலை , வைஃபை  இருக்கா?னு  கேட்டேன், நெட், இண்ட்டர்நெட்


5   சார் , உங்க  ரெண்டு  பேருக்கும்  ஜோடிப்பொருத்தம்  ஐஸ்க்ரீமும்  செர்ரியும்  போல, பிரியாணியும்  உப்பும்  போல  இருக்கு, ஆனா  ஏதோ  ஒண்ணு  மிஸ்  ஆகுது 

 என்ன  அது ?


 அது  நான்  தான்,  ஐஸ்க்ரீம்ல  இருக்க ற  செர்ரி , பிரியாணில  இருக்கும்  உப்பு  எல்லாம்  நான்  தான் , எனக்கும்  அந்தப்பொண்ணுக்கும்  தான்  பொருத்தம் 


6  லீலா  ஒரு  குட் கோச்.. 


 என்னைப்பொருத்தவரை  குட்  மேட்ச்  குட்  கேட்ச் 


7  எல்லாப்பழக்கங்களும்  நமக்கு  இருக்கனும், ஆனா  எதுக்கும்  அடிமை  ஆகக்கூடாது 


8  ஒவ்வொரு  மைலுக்கும்  ஒரு  மைல்  கல்  இருக்கற   மாதிரி  எல்லா  விஷயங்களையும்  உங்க  அப்பா கிட்டே  ஷேர்  பண்ணிடுவீங்களா?


9  தோட்ட  வேலை  செய்வது  உங்களுக்கு டைம்  பாஸா?


 கார்டனிங்க்ல டைம்  ஸ்பெண்ட்  பண்ணனும், டைம்  பாஸ்  பண்ணக்கூடாது 


10  உன்  அப்பாவை  அளவுக்கதிகமா  விரும்பும்  நீ  உன்  குழந்தைகளின்  அப்பாவையும் அதே  அள்வு  நேசிப்பேனு  தோணுது 


11   அங்க்கிள், அவன்  ஏன்  எப்போப்பாரு  இரிட்டேட்  ஆன  மாதிரியே  இருக்கான் ?


 அவனைப்பற்றி  என் கிட்டே  கேள்வி  கேட்டா  எனக்கு  இரிட்டேட்  ஆகும்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  முதல்  பாதி   இண்டர்வல்  பிளாக்  சீனில்  நாயகி  இறந்ததுமே  திரைக்கதை  ஐஆர்சிடிசி  ஷேர்  போல  படுத்து  விடுகிறது . எதுக்காக  நாயகியை  அநியாயமா  சாகடிக்கனும் ?


2  பின்  பாதி  கதையை  ஒப்பேற்ற  இன்னொரு  நாயகியை  புக்  செய்தது  மோனோ பாலி  ஸ்டாக்  என  பில்டப்  கொடுத்து  ஐஈஎக்ஸ்  ஷேரை  முட்டுக்கொடுத்து  எப்படியாவது  மேலே  ஏற்ற  ட்ரை  பண்ணுவது  போல  படாத  பாடு  பட்டிருப்பது  நன்றாகத்தெரிகிறது 


3  மாமனார் , மருமகன்  இருவரும்  ஒன்று  சேர்ந்தால்  என்ன? சேராட்டி  என்ன? என்ற  மனோபாவம்  ஆடியன்சுக்கு  வந்து  விடுவதால் பின்  பாதியில்  பெரிய  சுவராஸ்யங்கள்  இல்லை .ஐடிஎஃப்சி  பேங்க்  ஷேரும்,  ஐடிஎஃப்சி  ஃபர்ஸ்ட்  பேங்க்  ஷேரும்  மெர்ஜ்  ஆகப்போகுது  என்ற  நியூசால்   அந்த  ஷேர்  வைத்திருப்பவர்களுக்கு  எந்த  ஒரு  ஃபீலிங்கும்  வராதது  போல  இவங்க  ரெண்டு  பேரும்  சேர்ந்தா  என்ன? சேராட்டி  என்ன? என  நினைக்கத்தோன்றுவது  பின்னடைவு 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஆண்கள்  முதல்  பாதியை  ரசிப்பார்கள் , பெண்கள்  பின்  பாதியை  ரசிப்பார்கள் , ஓவர்  ஆல்  சுமார்  ரக  படம் . ரேட்டிங் 2.25 /5 



Baanadariyalli
Directed byPreetham Gubbi
Screenplay byPreetham Gubbi
Story byPreetha Jayaraman
Produced bySri Vaare Talkies
StarringGanesh
Rukmini Vasanth Reeshma Nanaiah
CinematographyAbhilash Kalathi
Edited byDeepu S. Kumar
Music byArjun Janya
Production
company
Sri Vaare Talkies
Distributed byKRG Studios
Release date
  • 28 September 2023
Running time
149 minutes [1]
CountryIndia
LanguageKannada

Wednesday, November 15, 2023

பஹீரா (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( சைக்கோ க்ரைம் த்ரில்லர் ) @ கே டி வி

   


மார்க்  ஆண்ட்டனி  என்ற  மெகா  ஹிட்  கமர்ஷியல்  சக்சஸ்  கொடுத்த  இயக்குநரின்  முதல்  படமும் ஹிட்  தான் . த்ரிஷா  அல்லது நயன்  தாரா. ஆனால்  சிம்புவை  வைத்து  எடுத்த  அன்பானவன் அசராதவன் அடங்காதவன்  அட்டர்  ஃபிளாப் . .இவரோட  இயக்கத்தில்  பிரபுதேவா  நடிப்பில்  வெளியான  பஹீரா  மட்டும்  தான்  நான்  பார்க்காமல்  மிச்சம்  வைத்த  படம், அந்த டப்பாவையும்  பார்த்துத்தொலைப்போம்  என்றுதான்  பார்த்தேன்.    


   ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகனின்    பால்ய  சினேகிதன் ஒரு  பெண்ணிடம் காதல்  வசப்படுகிறான்.ஆனால்  அந்தப்பெண்  பணத்துக்காகத்தான்  அவனிடம்  பழகுகிறாள். வேறு  ஒருவனையும்  பார்ட்  டைம்  ஜாப்  ஆக  காதலிக்கிறாள் . அது  தெரிய  வந்த  நண்பன்  மனம்  உடைந்து  தற்கொலை  செய்து  கொள்கிறான். நாயகனின்  நண்பனின்  மரணத்துக்குக்காரணமான  காதலியை  நாயகன்  கொலை  செய்வதோடு  மட்டுமல்லாமல்  அதே  மாதிரி  ஆண்களை  ஏமாற்றும்  பெண்களை  தொடர்ந்து  கொலை  செய்யும்  சீரியல்  கில்லராக  நாயகன்  மாறுகிறான், அவன்  போலீசில்  பிடிபட்டானா  என்பது  மீதிக்கதை 


நாயகன்  ஆக  பிரபுதேவா. அட்டகாசமான  டான்சர்  ஆன  இவர்  காதலன்  படம்  மூலம்  செம  ஹிட்  ஆனார் . ஆனால்  ராசய்யா  படத்தில்  ஒரு  கோடி  சம்பளம்  வாங்கும் நிலை  வந்த  போது இவர்  பேசிய  பஞ்ச்  டயலாக் . நான்  இப்போ  வாங்கற  சம்பளம்  ஒரு  கோடி , ஆனா  நாளை  எவ்ளோ  வாங்குவேன்  என்பது  எனக்கே  தெரியாது   என  படத்தில்  பந்தா  பஞ்ச்  டயலாக்  பேசினார் , படம்  அட்டர்  ஃபிளாப் 


இந்தப்படத்தில்  இவர்  நடிகர்  விக்ரம்  போல  பல  கெட்டப்களில்  வருவது  சகிக்கவில்லை.. குறிப்பாக  அவர்  மொட்டைத்தலையுடன்  வரும்  கெட்டப் , மீசை  இல்லாமல்   பேசும் படம்  கமல்  போல்  நினைத்து  செய்த  கெட்ட்ப  எல்லாம்  மகா  மட்டம். அட்லீஸ்ட்  ஷீட்டிங்  நடக்கும்  இடத்தில்  யாரையாவது  கேட்டிருந்தாலே  இது  தேறாது  என  சொல்லி  இருப்பார்கள் 


 அது  போக  இவர்  செய்யும்  சேஷ்டைகள்  எல்லாம்  மகா  எரிச்சல் . டான்ஸ்  மூவ்மெண்ட்ஸ்களில்  இவர்  செய்யும்  குறும்புகள்  ரசிக்க  வைத்தாலும்  இவர்  தன்னை  ஒரு  ரஜினி யாக ,  கமல்  ஆக , விக்ரம்  ஆக  இவராக  நினைத்துக்கொண்டு  செய்யும்  அலம்பல்கள்  , அலப்பரைகள் ஓவர்  டோஸ் 


 மின்சாரக்கண்னா  படத்தில்  வெண்ணிலவே  பாடலில்  இவரது  நடிப்பு டான்ஸ்  இரண்டும்  கிளாசிக்காக  இருக்கும். எல்லாம்  இப்போது  மிஸ்சிங்


நண்பராக  ஸ்ரீகாந்த்  கண்ணியம்  ஆன  தோற்றம், ஆனால்  அதிக  காட்சிகள்  இல்லை 


ரம்யா  நம்பீசன் , ஜனனி  அய்யர் , சஞ்சிதா  ஷெட்டி  என  வீணடிக்கப்பட்ட  நடிகைகள்  பட்டியல்  எக்கச்சக்கம் . எல்லாருக்குமே  அதிக  காட்சிகள்  எல்லாம்  இல்லை 

 எஸ்  கணேசன்  தான்  இசை , ரொம்ப  சுமார்  ரகம், பிஜிஎம்  எரிச்சல்  சத்தம் .160  நிமிடங்கள்  படம்  ஓடும்படி  எடிட்  செய்திருக்கிறார் ரூபன் 

செல்வக்குமார் , அபிநந்தன்  ராமானுஜம்  இருவரும்  ஒளிப்பதிவு .  சுமார்  தான் . க்ளோசப்  காட்சிகளில்  மீசை  இல்லாத  மொட்டைத்தலை  நாயகனைக்காட்டும்போது  அகோரமாக  இருக்கிறது


ஆர்  வி  பரதன்  தான்  தயாரிப்பாளர்  பாவமாக  இருக்கிறது . திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  ஆதிக்  ரவிச்சந்திரன் 



சபாஷ்  டைரக்டர்  (ஆதிக்  ரவிச்சந்திரன் )


1    இந்தக்கேவலமான  கதையைப்படம்  ஆக்க  தயாரிப்பாளரை  ஒப்புக்கொள்ள  வைத்த  சாமார்த்தியம் 


2   நீங்க  தான்  அடுத்த  கமல் , அடுத்த  விக்ரம்  என  ஆசை  காட்டி  நாயகனிடம்  கால்ஷீட்  வாங்கிய  சாணக்கியத்தனம் 


3    நல்ல  நல்ல  நாயகிகளை   எல்லாம்  ஆசை  வார்த்தை  சொல்லி  க்ரூப்  டான்சர்  ரேஞ்சுக்கு  டம்மி  ஆக்கிய  வில்லத்தனம் 


  ரசித்த  வசனங்கள் 


1   என்னைக்கரெக்ட்  பண்றது  எவ்ளோ  சிரமம்  தெரியுமா? ஆனா  நீ  எப்படியோ  ஈசியா கரெக்ட்  பண்ணிட்டே


2 ஒரு  பெண்ணுக்கு  மேரேஜ்  ஃபிக்ஸ்  ஆனா ஆளாளுக்கு  ரூமர்  கிளப்பத்தான்  செய்வாங்க 


3   கொலை  நடந்த  இடத்தில்  ஃபர்ஸ்ட்  இன்ஃபர்மேஷன்  ஈஸ்  பெஸ்ட்  இன்ஃபர்மேஷன் 


4   உன்  கடைசி  ஆசை  என்ன?


 முதல்  ஆசை என்னன்னே  உனக்குத்தெரியாது 


5   கடைசி  வரை  உன்னை  வெச்சுக்காப்பாத்தனும்  இல்லையா? அதான்  கடைசி  ஆசை  என்ன?னு  கேட்டேன் 


6  ஒரு  பெண்ணுக்குப்பிரச்சனைன்னா  இன்னொரு  பெண் வர  மாட்டா, ஆனா  ஒரு  பையனுக்குப்பிரச்சனைன்னா  இன்னொரு  பையன்  கண்டிப்பா  வருவான்


7   உன்னை  மாதிரி  பைத்தியக்காரன்  கிட்டே  என்னை  மாதிரி  பொண்ணுங்க  மாட்டிக்கறாங்களே?


 உன்னை  மாதிரி  பொண்ணுங்க  கிட்டே  என்னை  மாதிரி பைத்தியக்காரப்பசங்க  மாட்டிக்கறாங்களே? 


8  பொண்ணுங்க  அழுதா  மாதர்  சங்கம்  வரும், பசங்க  அழுதா  யார்  வருவாங்க ?


 9  சிக்கு புக்கு  சிக்கு புக்கு  ரயிலு   உன்னை  சிக்க  வெச்சு  கொல்றேனடி  மயிலு   


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  துள்ளாத  மனமும்  துள்ளும், நீ  வருவாய்  என , நிலவே  முகம்  காட்டு  உட்பட பல  தமிழ்ப்படங்களில்  வந்த  அதே  தவறு தான்  இதிலும்,  ஒருவருக்கு  கண்  தானம்  பெறப்படுகிறது  எனில்  இரு  வெவ்வேறு நபர்களின்  வெவ்வேறு  கண்கள்  தான்  வைக்கப்படும், ஒரே  நபரின்  இரு  கண்கள்  வைக்கப்படாது 


2  நாயகன்  கிரிக்கெட்  மேட்ச்  பார்க்கப்பிடிக்காது . அது  தெரியாமல்  இரு  பெண்கள்  அதைப்பார்க்கிறார்கள் , அப்போ  நாயகன் அந்த  டிவி  யை  உடைக்கிறார்.  சிம்ப்பிளா ரிமோட்டை  உடைச்சா  போதாதா?  அல்ல்து  டிவியை  ஆஃப்  பண்ணி  ஒரு  சவுண்ட்  விட்டாப்போதாதா?  தேவை  இல்லாம  புரொடியூசர்  காசை   ஏன்  வேஸ்ட்  பண்ணனும்?  


3  இரண்டரை  மணி நேரம்  ஓடும்  படத்தில்  ஒரு  சீன்  கூட  சபாஷ்  என  சொல்லும்  அளவு  இல்லை , எல்லாமே  கேவலமான  காட்சிகளாகத்தான்  படம்  ஆக்கி  இருக்கிறார்கள் . 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - வலியத்திணிக்கப்பட்ட  கவர்ச்சிக்காட்சிகள்  உண்டு .அப்டியாவது  படம்  2  நாட்கள்  ஓடட்டும்  என  நினைத்திருக்கலாம்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கைல  ஒரு  லட்சம்  ரூபா  கொடுத்து  இந்தப்படத்தைப்பாருங்கனு  யாராவது  சொன்னாக்கூட  தயவு  செய்து  இதை  யாரும்  பார்த்து  விடாதீர்கள் , இது  ஒரு  எச்சரிக்கைப்பதிவு , பெண்களை  மட்டம்  தட்டும்  மகா  மட்டமான  ஒரு  கேவலமான  படம்,  ரேட்டிங்  மைனஸ்  1 / 5 


Bagheera
Theatrical release poster
Directed byAdhik Ravichandran
Written byAdhik Ravichandran
Produced byR. V. Bharathan
Starring
Cinematography
Edited byRuben
Music byGanesan S.
Production
company
Bharathan Pictures
Release date
  • 3 March 2023[1]
Running time
160 minutes
CountryIndia
LanguageTamil

Monday, November 13, 2023

ST MARY'SILE ORU KOLAPADHAKAM (2015) ஸ்டைன்மேரீசில் ஒரு கொலை பாதகம் - மலையாளம் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) @ யூ ட்யூப்

     


      ஸ்டார் வேல்யூ  இல்லாததால்  பல  நல்ல  கதைகள்  கூட  அதிகம்  கவனத்தில்  வராமல்  போய் விடுகிறது. ஒரு  மோகன் லாலோ , மம்முட்டியோ  இதில்  போலீஸ்  ஆஃபீசர்  ஆக  நடித்திருந்தால்  அல்லது  ஜீத்து  ஜோசப்  இயக்கி  இருந்தால்  இந்தப்படத்தின்  ரீச்  வேற  லெவலில்  இருந்திருக்கும்


 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி , வில்லி  இருவரும்  நெருங்கிய  தோழிகள் . ஒரு  பிரபல  டெக்ஸ்டைல்  ஷாப்பில்  சேல்ஸ்  கேர்ள்  ஆக  பணி  புரிகிறார்கள் , இருவரும் லேடீஸ்    ஹாஸ்டலில்  தங்கி  இருக்கிறார்கள் . இருவரும்  மணம்  ஆனவர்கள் 


இதில்  நாயகிக்கு  எந்த  ஒரு வில்லங்கமும்  கிடையாது, இவருக்கு  யாரும்  எதிரிகள்  இல்லை .ஆனால்  வில்லிக்கு  ஒரு  கள்ளக்காதலன்  உண்டு . பிரபல  நகைக்கடை  ஓனரின்  மகன் தான்  அவன் . இவனை  வில்லன்  என  வைத்துக்கொள்வோம், (  வில்லிக்கு  ஜோடி  வில்லன்  தானே? ) இப்போது  திடீர்  என  ஒரு  நாள்  நாயகியைக்காணவில்லை . பிறகுதான்  அவர்  கொலை செய்யப்பட்டுக்கிடக்கிறார்  என்பது  தெரிய  வருகிறது . நாயகியின்  கணவனுக்கு  தகவல்  போகிறது 


 இதில்  கவனிக்க  வேண்டிய  முக்கிய  அம்சங்கள் நாயகியின்  கணவனுக்கும்  நாயகிக்கும்  எந்த  ஒரு  சண்டையும்  கிடையாது  இருவருக்கும்  கள்ளக்காதல்  எதுவும்  இல்லை . வில்லன்  இதுவரை  நாயகியை  நேரில்  பார்த்தது  கூட  இல்லை , வில்லிக்கும்  , நாயகிக்கும்  எந்த  ஒரு  விரோதமும்  கிடையாது .

 நாயகி  பாலியல்  பலாத்காரம்  செய்யப்படவில்லை ,  நகை  எதுவும்  களவு  போகவில்லை . அப்போ  நாயகியைக்கொன்றது யார்? அதை  விட  முக்கியக்கேள்வி   என்ன  காரணம் ? இந்த  சந்தேகங்களுக்கு  எல்லாம்  விடை  அளிப்பது  தான் மீதி  திரைகக்தை  


நாயகி  ஆக  அஞ்சு  ராஜ் க்கு  அதிக  வேலை  இல்லை . மொத்தமே 10  நிமிடங்கள்  தான்  திரையில்  வருகிறார்.  வில்லி  ஆக அபர்ணா  நாயர்  அசால்ட்  ஆக  நடித்திருக்கிறார்.  அவரது  உயரம்  பெரிய  பிளஸ். வில்லன்  ஆக  ஸ்ரீஜித்  விஜய்  முகத்தில் வில்லத்தனமே  இல்லை .  பிஞ்சு  மூஞ்சி.  நீ  எல்லாம்  அதுக்கு  சரிப்பட்டு  வர  மாட்டே  தம்பி   ரகம்  தான் 


போலீஸ்  ஆஃபீசர்  ஆக சுதீர்  கர்மானா  போலீசுக்கான  கம்பீரம்  மிஸ்சிங். நடிக நடிகை  தேர்வில் கவனம்  செலுத்தி  இருக்கலாம். ஹாஸ்டல் வாட்ச்மேன்  ஆக  இந்திரன்ஸ், டம்மி  கேரக்டர். ஒரு  அபாரமான  நடிகரை  வீணடித்திருக்கிறார்கள் 


விஜி  ஆப்ரஹாம்  எடிட்டிங்கில்  படம் ஒன்றே  முக்கால்  மணி நேரம்  ஓடுகிறது

அணில்  நாராயணன் ஒளிப்பதிவில்  காட்சிகள்  கச்சிதமாகப்படம்  ஆக்கப்பட்டுள்ளது . இசை  பின்னணி  இசை  இரண்டும்  சுமார்  ரகம்  தான் . 

திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  ஹெச் என்  ஷிஜோய்


சபாஷ்  டைரக்டர் (ஹெச் என்  ஷிஜோய்)


1  ஒரு  குறும்படத்துக்கான  கதைக்கரு  தான். நான்  லீனியர்  கட்டில்  சாமார்த்தியமாக ஒன்றே  முக்கால்  மணி  நேரப்படமாக  இழுத்த  விதம்  அருமை 


2  செலவே  இல்லாமல்  ஒரே  ஹாஸ்டலில்  மொத்தமே 8  பேரை  வைத்து  ஒரு  படத்தை  மிக  லோ  பட்ஜெட்டில்  எடுத்த  விதம்


ரசித்த  வசனங்கள் 


கண்ணுக்கு  எட்டின  தூரம்  வரை  சாரி  காதுக்கு  எட்டின  தூரம்  வரை  அபப்டி ஒரு  டயலாக்கும்  இல்லை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   ஆட்டோவில்  ஏறியதும்  இரண்டு  பெண்களும்  ஆட்டோ  ட்ரைவரிடம்  ஹாஸ்டல்  போங்கனு  தான்  சொல்றாங்க . ஹாஸ்டல்  பெயரோ, ஏரியாவோ  சொல்லலை , 

2  வில்லன் 12  ஜூவல்லரி  கடைகளின்  ஓனரின்  மகன், ஆனால் சாதா  பைக்கில்  பஜாஜ்  டிஸ்கவர் ல வருகிறான்

3  வில்லன்  வில்லியைக்கொலை  செய்ய  வரும்போது  கரண்ட்  போயிடுது . ஆள் மாறாட்டமா  நாயகியைக்கொலை  செய்கிறான்.  கன்ஃபர்ம்  பண்ணாமயா  கொல்வாங்க ?

4  கொலை  நடந்த  மூன்று  நாட்களுக்குப்பின்  டெட்  பாடியை  காட்டும்போது  டீகம்ப்போஸ்  ஆகி  இருக்காதா? ஃப்ரெஷ்ஷா  இருக்கு  டெட்  பாடி 

5  ஒரு லேடீஸ்  ஹாஸ்டலில்  கொலை  நடந்திருக்கு . ஹாஸ்டல்  ஓனருக்கு  இன்ஃபர்மேஷன்  போகலை  , அவரை  வரவழைக்கவே  இல்லை 

6  கொலை  நடந்தது  அல்லது  ஒரு  லேடி  மிஸ்சிங்  என்றதும்  போலீஸ்  கேஸ்  ஃபைல்  பண்ணனும், ஃபாரன்சிக்  ரிப்போர்ட்டர்ஸ / ஆஃபீசர்ஸ்  வரனும், நாயகன்   அவர்  பாட்டுக்கு  என்கொயரியை  ஸ்டார்ட்  பண்ணிட்டார்


7  போலீஸ்  ஸ்டேஷனில்  நாயகன்  கேஸ்  பற்றி  விளக்கும்போது  போலீஸ்  ஆஃபீசர்   டேய் விளக்கெண்ணெய், நாங்க  எதுக்குடா  இருக்கோம்?  எங்களுக்கு, இன்ஃபார்ம்  பண்ணாம  உன்  இஷ்டத்துக்கு  எல்லாம்  செஞ்சிருக்கே?னு  திட்டனும், அவர்  என்னடான்னா  கை  குலுக்கி  நன்றி  சொல்றாரு. எங்களுக்கு  வேலையே  இல்லாம  பண்ணீட்டீங்க  தாங்க்ஸ்ங்கறாரு 


8  ஒரு  லேடீஸ்  ஹாஸ்டலுக்குள்  டெட்  பாடி  3  நாட்களா  கேட்பாரற்றுக்கிடக்குது , பேடு  ஸ்மெல்  வராதா?  யாருக்கும்  மூக்கு  வேர்க்கலை ? 


9   டெக்ஸ்டைலில்  சேல்ஸ் கேர்ள்க்கு  ஒர்க்கிங்  டைம்  தமிழ்  நாட்டில்  காலை  8 டூ நைட்  8, ஆனால்  கேரளாவில்  காலை 10 டூ மாலை  7 , ஆனால்  படத்தில்   மாலை  5.30 க்கே  ட்யூட்டி   முடிவதாகக்காட்டுகிறார்கள் . அதற்குப்பின்  கடைக்கு  வரும்  கஸ்டமர்களை  யார்  கவனிப்பார்? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஸ்டார்  வேல்யூ  இல்லை , ஸ்டார்  கேஸ்டிங்  சரி  இல்லை . ஆனால்  கதைக்கரு  ஓக்கே , இது  உங்களுக்கு  ஓக்கே  எனில்  படம்  பார்க்கலாம் , சின்ன்ப்படம்  என்பதால்  குயிக்  வாட்ச்  ஆக  பார்க்கலாம், ரேட்டிங் 2 / 5 


St Mary'sile Kolapathakam
Directed byH.N. Shijoy
Written byH.N. Shijoy
Produced byK.P. Rajendran
CinematographyAnil Narayanan
Edited byViji Abraham
Production
company
Krishnanjali Films
Distributed byMahadeva Films
Running time
Malayalam
CountryIndia