Showing posts with label BAANADARIYALLI (2023) -வான் நோக்கிய பாதை - கன்னடம் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label BAANADARIYALLI (2023) -வான் நோக்கிய பாதை - கன்னடம் - சினிமா விமர்சனம். Show all posts

Friday, November 17, 2023

BAANADARIYALLI (2023) -வான் நோக்கிய பாதை - கன்னடம் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா) @ அமேசான் பிரைம்

   


பெரும்பாலான  நல்ல  படங்கள்  முதல்  பாதி  நன்றாக  இருக்கும், இரண்டாம்  பாதி  சுமாராகத்தான்  இருக்கும். நம்  வாழ்க்கை கூட  ஸ்கூல்  லைஃப் , காலேஜ் லைஃப்  என  முதல்  பாதி  ஜாலியாகபோகும், வேலை, கல்யாணம், பொறுப்பு  என  பின்  பாதி இழுவையாக  இருக்கும். நல்ல  ஒரு  ஃபீல்  குட்  மெலோ டிராமாவாக  எடுக்க  நினைத்திருக்கிறார்கள், ஆனால்  பின்  பாதி  ஒர்க்  அவுட்  ஆகவில்லை     


   ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஒரு  இயற்கை  விரும்பி. அவர்  குழந்தையாக , சிறுமியாக  இருக்கும்போதே   ஆப்பிரிக்கா  வனப்பகுதிகளில்  டூர்  போய் பறவைகள் , விலங்குகள்  இவற்றுடன்  ஒரு டார்ஜான்  வாழ்க்கை  வாழவேண்டும்  என நினைப்பவர். அவர்  அப்பாவின்  செல்ல  மகள் , அப்பா  , மகள்  அன்னியோன்யம்  மிக ஆழமாக  சொல்லப்பட்டிருக்கும்


நாயகன் நாயகியை  முதல்  முறை  பார்த்தபோதே  மனதைப்பறிகொடுக்கிறார். பல  வழிகளில்  ப்ரப்போஸ்  செய்கிறார். நாயகியும்  ஓக்கே  சொல்லி  விடுகிறார். ஆனால்  அப்பாவின்  சம்மதம்  வேண்டும்   என்ற கண்டிஷனும்  போடுகிறார்.


முதல்  பாதி  முழுக்க  இவர்களது  ரொமான்ஸ்  போர்சன் , காமெடி  என  ஜாலியாகப்போகிறது . திருமண  ஏற்பாடுகள்  நடக்கும்போது  ஒரு  சாலை  விபத்தில்  நாயகி  இறந்து  விடுகிறார்.


நாயகியின்  அப்பாவுக்கு  மகள்  இறந்த  துக்கம்  ஒரு புறம் , மருமகன்  வர  இருந்த  நேரம்  சரி  இல்லை , இந்த  ராசி  இல்லாத  ராஜாவால்  தான் நாம்  நம்  ராணியை  இழந்தோம்  என  நினைக்கிறார்


நாயகன்  ஒரு  கட்டத்தில்  நாயகியின்  அப்பா  இருக்கும் வீட்டுக்கே  வருகிறார். அவரது  எதிர்ப்பையும்  மீறி  அவருடன்  தங்குகிறார், மன  மாறுதலுக்காக  இருவரும்  ஃபாரீன்  டூர்  போகிறார்கள் . மாப்பிள்ளை , மாமனார்  இருவரும்  டூர்  போனால்  ஆடியன்சுக்கு  போர்  அடிக்குமே? அதனால் சம்பந்தமே  இல்லாமல் ஒரு  புதுப்பெண்  இருவருக்கும்  அறிமுகம்  ஆகிறார்,இதற்குப்பின்  கதையில்  நிகழும்  திருப்பங்கள்  தான்  கதை 


நாயகன்  ஆக கணேஷ்    சுமாராக  நடித்திருக்கிறார். தாடி , தொப்பை  என  நாயகிக்கு  சித்தப்பா  மாதிரி  இருக்கிறார்


 நாயகி  ஆக ருக்மினி  வசந்த்  அபாரமாக  துள்ளலான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்.ஒல்லி  கில்லி  ஆக  இவர் உடல் வாகு  அழகு, ஆனால்  நாயகன் பாடி  மெயிண்ட்டெனென்ஸ்  இல்லாமல்    ஃபிட்  இல்லாமல்  ஏனோதானோ  என  இருப்பதால்  கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆகவில்லை 


 பின்  பாதி யில் இன்னொரு   நாயகி  ஆக ரீஷ்மா  நடித்திருக்கிறார். இவரது  கேரக்டர்  மெயின்  திரைக்கதைக்கு  சம்பந்தம்  இல்லாத  வலுக்கட்டாய  திணிப்பாக  இருப்பதால்  எடுபடவில்லை 


நாயகியின்  அப்பாவாக  ரங்கயனா  ரகு  அருமையாக  நடித்திருக்கிறார். இவரும்  நாயகனைப்போலவே  குடி , தம் , தொப்பை   என  இருந்தாலும்  இவருக்கு  ஜோடி  இல்லாததால்  பெரிய  குறையாகத்தெரியவில்லை 


அபிலாஷ்  களத்தியின்  ஒளிப்பதிவில்  பின்  பாதி  லொகேஷன்கள்  பிரமாதம். நாமே  டூர்  போனது  போல  ஒரு  உணர்வு 

அர்ஜூன்  ஜன்யா  வின்  இசையில்  நான்கு  பாடல்கள்  சுமார்  ரகம், பிஜிஎம்  ஒக்கே  ரகம் 

தீபு  எஸ்  குமாரின்  எடிட்டிங்கில்  படம்  ரெண்ட்ரை  மணி  நேரம்  இழுக்கிறது 


ப்ரீத்தா  ஜெயராமனின்  கதைக்கு  ப்ரீத்தம்  கப்பி  திரைக்க்தை  எழுதி  இயக்கி  இருக்கிறார் 


சபாஷ்  டைரக்டர்  ( ப்ரீத்தம்  கப்பி ) 


1  ஓசி  டூர்  ஆக  கென்யா ,  ஆஃப்ரிக்கா  போக  ஆசைப்பட்டு  தயாரிப்பாளரை  ஏமாற்றி  கதை  சொல்லி  டூர்  போய்ட்டு  வந்த  லாவகம்


2  முதல்  பாதியில்  ஒரு  நாயகி  அவுட்  என்பதால் பின் பாதி  ரசிகனை ஏமாற்றக்கூடாது  என  இன்னொரு  நாயகியை  உலவ விட்ட  ஐடியா 


ரசித்த  வசனங்கள் 


1  நான்  அடிக்கும்போது  என்னை  ஏன்  அடிக்கறே?னு  திருப்பிக்கேள்வி  கேட்க  முடியாததை  வெச்சே  நீ  தப்பு  பண்ணி  இருக்கேனு  உனக்கே  தெரியுதுனு  எடுத்துக்கலாமா?


2  அரசியல்ல  விளையாடலாம், ஆனா  விளையாட்டுல  ஸ்போர்ட்ஸ்ல  அரசியல்  நுழையக்கூடாது 


3   உங்க  வீட்டுக்கு  நான்  வரனும்னா  ஒரு  கண்டிஷன்


 நீங்க  இருக்கற  இந்த  கண்டிஷன்ல  எனக்கு  கண்டிஷன்  போடறீங்களா?


4 வீட்ல வைஃபி  இருக்கா?


 எனக்கு  இன்னும் மேரேஜ்  ஆகலைங்க, பேச்சிலர் 


 யோவ். ஒயிஃப்  இருக்கா?னு  கேட்கலை , வைஃபை  இருக்கா?னு  கேட்டேன், நெட், இண்ட்டர்நெட்


5   சார் , உங்க  ரெண்டு  பேருக்கும்  ஜோடிப்பொருத்தம்  ஐஸ்க்ரீமும்  செர்ரியும்  போல, பிரியாணியும்  உப்பும்  போல  இருக்கு, ஆனா  ஏதோ  ஒண்ணு  மிஸ்  ஆகுது 

 என்ன  அது ?


 அது  நான்  தான்,  ஐஸ்க்ரீம்ல  இருக்க ற  செர்ரி , பிரியாணில  இருக்கும்  உப்பு  எல்லாம்  நான்  தான் , எனக்கும்  அந்தப்பொண்ணுக்கும்  தான்  பொருத்தம் 


6  லீலா  ஒரு  குட் கோச்.. 


 என்னைப்பொருத்தவரை  குட்  மேட்ச்  குட்  கேட்ச் 


7  எல்லாப்பழக்கங்களும்  நமக்கு  இருக்கனும், ஆனா  எதுக்கும்  அடிமை  ஆகக்கூடாது 


8  ஒவ்வொரு  மைலுக்கும்  ஒரு  மைல்  கல்  இருக்கற   மாதிரி  எல்லா  விஷயங்களையும்  உங்க  அப்பா கிட்டே  ஷேர்  பண்ணிடுவீங்களா?


9  தோட்ட  வேலை  செய்வது  உங்களுக்கு டைம்  பாஸா?


 கார்டனிங்க்ல டைம்  ஸ்பெண்ட்  பண்ணனும், டைம்  பாஸ்  பண்ணக்கூடாது 


10  உன்  அப்பாவை  அளவுக்கதிகமா  விரும்பும்  நீ  உன்  குழந்தைகளின்  அப்பாவையும் அதே  அள்வு  நேசிப்பேனு  தோணுது 


11   அங்க்கிள், அவன்  ஏன்  எப்போப்பாரு  இரிட்டேட்  ஆன  மாதிரியே  இருக்கான் ?


 அவனைப்பற்றி  என் கிட்டே  கேள்வி  கேட்டா  எனக்கு  இரிட்டேட்  ஆகும்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  முதல்  பாதி   இண்டர்வல்  பிளாக்  சீனில்  நாயகி  இறந்ததுமே  திரைக்கதை  ஐஆர்சிடிசி  ஷேர்  போல  படுத்து  விடுகிறது . எதுக்காக  நாயகியை  அநியாயமா  சாகடிக்கனும் ?


2  பின்  பாதி  கதையை  ஒப்பேற்ற  இன்னொரு  நாயகியை  புக்  செய்தது  மோனோ பாலி  ஸ்டாக்  என  பில்டப்  கொடுத்து  ஐஈஎக்ஸ்  ஷேரை  முட்டுக்கொடுத்து  எப்படியாவது  மேலே  ஏற்ற  ட்ரை  பண்ணுவது  போல  படாத  பாடு  பட்டிருப்பது  நன்றாகத்தெரிகிறது 


3  மாமனார் , மருமகன்  இருவரும்  ஒன்று  சேர்ந்தால்  என்ன? சேராட்டி  என்ன? என்ற  மனோபாவம்  ஆடியன்சுக்கு  வந்து  விடுவதால் பின்  பாதியில்  பெரிய  சுவராஸ்யங்கள்  இல்லை .ஐடிஎஃப்சி  பேங்க்  ஷேரும்,  ஐடிஎஃப்சி  ஃபர்ஸ்ட்  பேங்க்  ஷேரும்  மெர்ஜ்  ஆகப்போகுது  என்ற  நியூசால்   அந்த  ஷேர்  வைத்திருப்பவர்களுக்கு  எந்த  ஒரு  ஃபீலிங்கும்  வராதது  போல  இவங்க  ரெண்டு  பேரும்  சேர்ந்தா  என்ன? சேராட்டி  என்ன? என  நினைக்கத்தோன்றுவது  பின்னடைவு 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூசி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஆண்கள்  முதல்  பாதியை  ரசிப்பார்கள் , பெண்கள்  பின்  பாதியை  ரசிப்பார்கள் , ஓவர்  ஆல்  சுமார்  ரக  படம் . ரேட்டிங் 2.25 /5 Baanadariyalli
Directed byPreetham Gubbi
Screenplay byPreetham Gubbi
Story byPreetha Jayaraman
Produced bySri Vaare Talkies
StarringGanesh
Rukmini Vasanth Reeshma Nanaiah
CinematographyAbhilash Kalathi
Edited byDeepu S. Kumar
Music byArjun Janya
Production
company
Sri Vaare Talkies
Distributed byKRG Studios
Release date
  • 28 September 2023
Running time
149 minutes [1]
CountryIndia
LanguageKannada