Wednesday, November 15, 2023

பஹீரா (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( சைக்கோ க்ரைம் த்ரில்லர் ) @ கே டி வி

   


மார்க்  ஆண்ட்டனி  என்ற  மெகா  ஹிட்  கமர்ஷியல்  சக்சஸ்  கொடுத்த  இயக்குநரின்  முதல்  படமும் ஹிட்  தான் . த்ரிஷா  அல்லது நயன்  தாரா. ஆனால்  சிம்புவை  வைத்து  எடுத்த  அன்பானவன் அசராதவன் அடங்காதவன்  அட்டர்  ஃபிளாப் . .இவரோட  இயக்கத்தில்  பிரபுதேவா  நடிப்பில்  வெளியான  பஹீரா  மட்டும்  தான்  நான்  பார்க்காமல்  மிச்சம்  வைத்த  படம், அந்த டப்பாவையும்  பார்த்துத்தொலைப்போம்  என்றுதான்  பார்த்தேன்.    


   ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகனின்    பால்ய  சினேகிதன் ஒரு  பெண்ணிடம் காதல்  வசப்படுகிறான்.ஆனால்  அந்தப்பெண்  பணத்துக்காகத்தான்  அவனிடம்  பழகுகிறாள். வேறு  ஒருவனையும்  பார்ட்  டைம்  ஜாப்  ஆக  காதலிக்கிறாள் . அது  தெரிய  வந்த  நண்பன்  மனம்  உடைந்து  தற்கொலை  செய்து  கொள்கிறான். நாயகனின்  நண்பனின்  மரணத்துக்குக்காரணமான  காதலியை  நாயகன்  கொலை  செய்வதோடு  மட்டுமல்லாமல்  அதே  மாதிரி  ஆண்களை  ஏமாற்றும்  பெண்களை  தொடர்ந்து  கொலை  செய்யும்  சீரியல்  கில்லராக  நாயகன்  மாறுகிறான், அவன்  போலீசில்  பிடிபட்டானா  என்பது  மீதிக்கதை 


நாயகன்  ஆக  பிரபுதேவா. அட்டகாசமான  டான்சர்  ஆன  இவர்  காதலன்  படம்  மூலம்  செம  ஹிட்  ஆனார் . ஆனால்  ராசய்யா  படத்தில்  ஒரு  கோடி  சம்பளம்  வாங்கும் நிலை  வந்த  போது இவர்  பேசிய  பஞ்ச்  டயலாக் . நான்  இப்போ  வாங்கற  சம்பளம்  ஒரு  கோடி , ஆனா  நாளை  எவ்ளோ  வாங்குவேன்  என்பது  எனக்கே  தெரியாது   என  படத்தில்  பந்தா  பஞ்ச்  டயலாக்  பேசினார் , படம்  அட்டர்  ஃபிளாப் 


இந்தப்படத்தில்  இவர்  நடிகர்  விக்ரம்  போல  பல  கெட்டப்களில்  வருவது  சகிக்கவில்லை.. குறிப்பாக  அவர்  மொட்டைத்தலையுடன்  வரும்  கெட்டப் , மீசை  இல்லாமல்   பேசும் படம்  கமல்  போல்  நினைத்து  செய்த  கெட்ட்ப  எல்லாம்  மகா  மட்டம். அட்லீஸ்ட்  ஷீட்டிங்  நடக்கும்  இடத்தில்  யாரையாவது  கேட்டிருந்தாலே  இது  தேறாது  என  சொல்லி  இருப்பார்கள் 


 அது  போக  இவர்  செய்யும்  சேஷ்டைகள்  எல்லாம்  மகா  எரிச்சல் . டான்ஸ்  மூவ்மெண்ட்ஸ்களில்  இவர்  செய்யும்  குறும்புகள்  ரசிக்க  வைத்தாலும்  இவர்  தன்னை  ஒரு  ரஜினி யாக ,  கமல்  ஆக , விக்ரம்  ஆக  இவராக  நினைத்துக்கொண்டு  செய்யும்  அலம்பல்கள்  , அலப்பரைகள் ஓவர்  டோஸ் 


 மின்சாரக்கண்னா  படத்தில்  வெண்ணிலவே  பாடலில்  இவரது  நடிப்பு டான்ஸ்  இரண்டும்  கிளாசிக்காக  இருக்கும். எல்லாம்  இப்போது  மிஸ்சிங்


நண்பராக  ஸ்ரீகாந்த்  கண்ணியம்  ஆன  தோற்றம், ஆனால்  அதிக  காட்சிகள்  இல்லை 


ரம்யா  நம்பீசன் , ஜனனி  அய்யர் , சஞ்சிதா  ஷெட்டி  என  வீணடிக்கப்பட்ட  நடிகைகள்  பட்டியல்  எக்கச்சக்கம் . எல்லாருக்குமே  அதிக  காட்சிகள்  எல்லாம்  இல்லை 

 எஸ்  கணேசன்  தான்  இசை , ரொம்ப  சுமார்  ரகம், பிஜிஎம்  எரிச்சல்  சத்தம் .160  நிமிடங்கள்  படம்  ஓடும்படி  எடிட்  செய்திருக்கிறார் ரூபன் 

செல்வக்குமார் , அபிநந்தன்  ராமானுஜம்  இருவரும்  ஒளிப்பதிவு .  சுமார்  தான் . க்ளோசப்  காட்சிகளில்  மீசை  இல்லாத  மொட்டைத்தலை  நாயகனைக்காட்டும்போது  அகோரமாக  இருக்கிறது


ஆர்  வி  பரதன்  தான்  தயாரிப்பாளர்  பாவமாக  இருக்கிறது . திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  ஆதிக்  ரவிச்சந்திரன் 



சபாஷ்  டைரக்டர்  (ஆதிக்  ரவிச்சந்திரன் )


1    இந்தக்கேவலமான  கதையைப்படம்  ஆக்க  தயாரிப்பாளரை  ஒப்புக்கொள்ள  வைத்த  சாமார்த்தியம் 


2   நீங்க  தான்  அடுத்த  கமல் , அடுத்த  விக்ரம்  என  ஆசை  காட்டி  நாயகனிடம்  கால்ஷீட்  வாங்கிய  சாணக்கியத்தனம் 


3    நல்ல  நல்ல  நாயகிகளை   எல்லாம்  ஆசை  வார்த்தை  சொல்லி  க்ரூப்  டான்சர்  ரேஞ்சுக்கு  டம்மி  ஆக்கிய  வில்லத்தனம் 


  ரசித்த  வசனங்கள் 


1   என்னைக்கரெக்ட்  பண்றது  எவ்ளோ  சிரமம்  தெரியுமா? ஆனா  நீ  எப்படியோ  ஈசியா கரெக்ட்  பண்ணிட்டே


2 ஒரு  பெண்ணுக்கு  மேரேஜ்  ஃபிக்ஸ்  ஆனா ஆளாளுக்கு  ரூமர்  கிளப்பத்தான்  செய்வாங்க 


3   கொலை  நடந்த  இடத்தில்  ஃபர்ஸ்ட்  இன்ஃபர்மேஷன்  ஈஸ்  பெஸ்ட்  இன்ஃபர்மேஷன் 


4   உன்  கடைசி  ஆசை  என்ன?


 முதல்  ஆசை என்னன்னே  உனக்குத்தெரியாது 


5   கடைசி  வரை  உன்னை  வெச்சுக்காப்பாத்தனும்  இல்லையா? அதான்  கடைசி  ஆசை  என்ன?னு  கேட்டேன் 


6  ஒரு  பெண்ணுக்குப்பிரச்சனைன்னா  இன்னொரு  பெண் வர  மாட்டா, ஆனா  ஒரு  பையனுக்குப்பிரச்சனைன்னா  இன்னொரு  பையன்  கண்டிப்பா  வருவான்


7   உன்னை  மாதிரி  பைத்தியக்காரன்  கிட்டே  என்னை  மாதிரி  பொண்ணுங்க  மாட்டிக்கறாங்களே?


 உன்னை  மாதிரி  பொண்ணுங்க  கிட்டே  என்னை  மாதிரி பைத்தியக்காரப்பசங்க  மாட்டிக்கறாங்களே? 


8  பொண்ணுங்க  அழுதா  மாதர்  சங்கம்  வரும், பசங்க  அழுதா  யார்  வருவாங்க ?


 9  சிக்கு புக்கு  சிக்கு புக்கு  ரயிலு   உன்னை  சிக்க  வெச்சு  கொல்றேனடி  மயிலு   


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  துள்ளாத  மனமும்  துள்ளும், நீ  வருவாய்  என , நிலவே  முகம்  காட்டு  உட்பட பல  தமிழ்ப்படங்களில்  வந்த  அதே  தவறு தான்  இதிலும்,  ஒருவருக்கு  கண்  தானம்  பெறப்படுகிறது  எனில்  இரு  வெவ்வேறு நபர்களின்  வெவ்வேறு  கண்கள்  தான்  வைக்கப்படும், ஒரே  நபரின்  இரு  கண்கள்  வைக்கப்படாது 


2  நாயகன்  கிரிக்கெட்  மேட்ச்  பார்க்கப்பிடிக்காது . அது  தெரியாமல்  இரு  பெண்கள்  அதைப்பார்க்கிறார்கள் , அப்போ  நாயகன் அந்த  டிவி  யை  உடைக்கிறார்.  சிம்ப்பிளா ரிமோட்டை  உடைச்சா  போதாதா?  அல்ல்து  டிவியை  ஆஃப்  பண்ணி  ஒரு  சவுண்ட்  விட்டாப்போதாதா?  தேவை  இல்லாம  புரொடியூசர்  காசை   ஏன்  வேஸ்ட்  பண்ணனும்?  


3  இரண்டரை  மணி நேரம்  ஓடும்  படத்தில்  ஒரு  சீன்  கூட  சபாஷ்  என  சொல்லும்  அளவு  இல்லை , எல்லாமே  கேவலமான  காட்சிகளாகத்தான்  படம்  ஆக்கி  இருக்கிறார்கள் . 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - வலியத்திணிக்கப்பட்ட  கவர்ச்சிக்காட்சிகள்  உண்டு .அப்டியாவது  படம்  2  நாட்கள்  ஓடட்டும்  என  நினைத்திருக்கலாம்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கைல  ஒரு  லட்சம்  ரூபா  கொடுத்து  இந்தப்படத்தைப்பாருங்கனு  யாராவது  சொன்னாக்கூட  தயவு  செய்து  இதை  யாரும்  பார்த்து  விடாதீர்கள் , இது  ஒரு  எச்சரிக்கைப்பதிவு , பெண்களை  மட்டம்  தட்டும்  மகா  மட்டமான  ஒரு  கேவலமான  படம்,  ரேட்டிங்  மைனஸ்  1 / 5 


Bagheera
Theatrical release poster
Directed byAdhik Ravichandran
Written byAdhik Ravichandran
Produced byR. V. Bharathan
Starring
Cinematography
Edited byRuben
Music byGanesan S.
Production
company
Bharathan Pictures
Release date
  • 3 March 2023[1]
Running time
160 minutes
CountryIndia
LanguageTamil

0 comments: