Friday, October 27, 2023

இறைவன் (2023) -தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்

   


 ராட்சசன் , போர்  தொழில்  படங்களின்  பிரம்மாண்ட  வெற்றிக்குப்பின்  பெண்களைக்கொலை  செய்யும்  சீரியல்  கில்லர்  கதை  கோடம்பாக்கத்தில்  ஃபேமஸ்  ஆகி  விட்டது , ஆனால்  வலுவான  திரைக்கதை  இல்லாமல்  ஸ்டார்  வேல்யூ வை  மட்டுமே  நம்பும்  படங்கள்  உருப்படாது , உருப்படக்கூடாது  என்ற  ஃபார்முலா படி  ஓடாத  இந்தப்படத்தை  ஏன்  ஓடவில்லை  என  அலசி  ஆராய்வோம்


      ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  அசிஸ்டெண்ட்  கமிஷனர்  ஆஃப்  போலீஸ் .  அவரது  நண்பரும்  போலீஸ்  ஆஃபீசர் ., வில்லன்  ஒரு  சைக்கோ  கில்லர் , பெண்களைத்தொட்ர்ச்சியாகக்கொலை  செய்கிறான். அவனை  ஆரம்பத்திலேயே  பிடித்து  விடுகிறார்கள் , ஆனால்  அந்த  முயற்சியில்  நாயகனின்  நண்பன்  இறக்கிறான், இதனால் நாயகன்  போலீஸ்  வேலையை  ரிசைன்  செய்து  விட்டு  காஃபி  ஷாப்  வைக்கிறான்  ( லியோ , ஹிஸ்டரி  அஃப்  வயலன்ஸ்  ரெஃப்ரன்ஸ்) 


பிடிபட்ட  சைக்கோ  கில்லர்  ஆன  வில்லன்  தப்பி  விடுகிறான். அரசியல்  தலைவர்கள்  அவரவர்  மகன்களை  அடுத்த  கட்ட கட்சித்தலைவராக  ஆக்குவது  போல  சீரியல்  கில்லர்  அவனுக்கு  ஒரு    வாரிசை  , காபிகேட்  கில்லரை    உருவாக்குகிறான்


நாயகன்  மீது  ஒரு  தலைக்காதல்  கொண்டு இருக்கும்  நாயகனின்  நண்பனின்  தங்கை , நாயகனின்  நண்பனின்  மனைவி , அந்தக்குழந்தை  இந்த  மூவரையும்  வில்லனின்  பிடியில்  இருந்து  நாயகன்  காப்பாற்றினானா? என்பது  மீதிக்கதை 


நாயகன்  ஆக  ஜெயம்  ரவி . ரஃப்  அண்ட்    டஃப்  போலீஸ்  ஆஃபீசர்  கேரக்டருக்குபொருத்தமாக  விறைப்பாக  வந்து  போகிறார். 


நண்பன்  ஆக  நரேன்  கொஞ்ச  காட்சிகள்  வந்தாலும்  ஓக்கே  ரகம்’

 நாயகி  ஆக  லேடி சூப்பர் ஸ்டார்  நயன்  தாரா. அநியாயத்துக்கு  அவர்  கால்ஷீட்சை  வேஸ்ட்  பண்ணி  விட்டார்கள் 


சைக்கோ  கில்லர்  ஆக  வில்லன்  ஆக  ராகுல்  போஸ்  மிரட்டலான  நடிப்பு  , காபி கேட்  கில்லர்  ஆக  வினோத்  கிஷன்    ஆண்  ஜோதிகா  போல  ஓவர்  ஆக்டிங்  


நரேனின்  மனைவியாக  விஜயலட்சுமி  கவனிக்க  வைக்கும்  நடிப்பு 


யுவன்  சங்கர்  ராஜா  இசையில்  ஐந்து  பாடல்கள் . ஒரு  க்ரைம்  த்ரில்லர்  படத்துக்கு  ஏன்  இத்தனை  பாடல்கள் ?  ஆனால்  பிஜிஎம் மில்  விட்டதைப்பிடித்திருக்கிறார்

ஹரி  கே  வேதாந்தம்  ஒளிப்பதிவில்  இரவுக்காட்சிகளை  நுட்பமாகப்படம்  பிடித்திருக்கிறார்

ஜே  வி  மணிகண்ட  பாலாஜியின்  எடிட்டிங்கில்  இரண்டே  கால்  மணி  நேரம்  படம்  ஓடுகிறது .


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  ஐ  அகமது 




சபாஷ்  டைரக்டர் (ஐ  அகமது ) 


1  கடத்தப்பட்ட  பெண்  ஆப்பிள்  வாட்ச்  கட்டி  இருப்பதும், அவள்  ஃபோன்  மூலம்  லொக்கேஷன்  கண்டு  பிடிப்பதும்   பாராட்ட  வைக்கும்  பரபரப்பான  காட்சி 


2  காபி  கேட்  கில்லராக  நடித்தவரிடம்  நீ  தான்  அடுத்த  ரகுவரன் , பிரகாஷ்ராஜ் , எஸ்  ஜே  சூர்யா  என  உசுப்பி  விட்டு  ஓவர்  ஆக்டிங்  பண்ணச்சொன்னது 


3  லேடி  சூப்பர்  ஸ்டார்க்கு  அவ்ளவ்  சம்பளம்  கொடுத்தும்  அவரை  அதிகம்  யூஸ்  செய்யாதது (  டூயட்  இல்லை  எஸ் கேப் ) 



  ரசித்த  வசனங்கள் 


1 கிரிமினல்ஸ்  மிருகமா  மாறி  தப்புப்பண்ணும்போது  ஆண்டவன்  பார்த்துக்குவான்னு  விட்டுப்போக  எனக்குப்பொறுமை  இல்லை 


2  சாக ரெடியா  இருக்கறவனுக்கு  சாவு  வராது 


3 உனக்கு ஒரு  பிரச்ச்னைன்னா எனக்கு  அது  வருத்தம், நீ  சந்தோஷமா  இருந்தா  எனக்கும்  ச்ந்தோஷம், உன்  நிம்மதியா  நான்  இருக்கனும்னு  ஆசைப்பட்டேன்


4  உனக்கு  யார்  மீது  பயம்  இருக்கோ  அவன்  கூட  நேரா மோது



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஓப்பனிங்;ல  நரேன்  தான்  வில்லனைக்கைது  பண்றாரு. அதுல  பலத்த  காயம்  ஏற்பட்டு  உயிர்  இழக்கறாரு . நாயகன்  ஜெயம்  ரவி  ஜஸ்ட்  லைக்  தட்  அப்போதான் ஸ்பாட்டுக்கே  வர்றாரு. ஆனா  நியூஸ்ல  இருவரும்  தான் கொலைகாரனைக்கைது  செய்தார்கள்னு  சொல்றாங்க , அதை  வில்லன்  கோபமா  பார்த்துட்டு  இருக்கான், என்ன  சீன்  இது ? ஏம்ப்பா  அசிஸ்டெண்ட்  டைரக்டஸ்.. நோட்  திஸ்


2  12  கொலைகளை  செய்த  சைக்கோ  கில்லரை கை  விலங்கிடாமல்., போலீஸ்  பாதுகாப்பு  இல்லாமல்  டாக்டர்  பேட்டி  எடுத்துட்டு  இருக்காரு. அந்த  டாக்டரையே  கொலை  பண்ணிட்டதா  நியூஸ்ல  சொல்றாங்க . விஷூவலா  காட்டலை . அது  எப்படி  சாத்தியம் ? 


3  ஹார்ட்  அட்டாக்ல  ஐசியூ  ல  அட்மிட்  ஆன  போலீஸ்  ஆஃபீசருக்கு  டாகடர், நர்ஸ்  யாரும்  கூட  இருக்க  மாட்டாங்களா? கிரிட்டிக்கல்  கண்டிஷன்  தாண்டாம  உயிருக்குப்போராடும்  அவரை  எப்படி  கொலீக்ஸ்  கூட பேச  விடறாங்க ? 


4 கொலைகாரன் &  திவ்யா  லொக்கேஷன்  கிடைத்ததும்  நாயகன்  ஏன்  போலிஸ்க்கு  தகவல்  சொல்லலை? தனி  ஒருவன்  படத்தில்  நாயகனாக  நடித்ததால்  தனி  ஆளாகவே  போலாம்னு  முடிவு  பண்ணிட்டாரா? 


5  நாயகன்  கொலைகாரன்  ஸ்பாட்டைக்கண்டு பிடித்து  விட்டார்  என  போலீஸ்க்கு  தெரியும், நாயகனின்  செல்  ஃபோன்  நெம்பர்  லொக்கேஷனை  வைத்து  போலீஸ்  ஃபாலோ  பண்ணி  இருக்கலாமே? 

6  சீரியல்  கில்லருக்கு  மனநிலை  சரி  இல்லை  எனில்  ஜெயிலுக்கு  வந்து  மன  நல  மருத்துவர்  செக்  செய்வது  பாதுகாப்பா? லூஸ்  மாதிரி கில்லரை பாதுகாப்பே  இல்லாமல்  மன  நல  மருத்துவமனைக்கு  அனுப்புவது  பாதுகாப்பா? 


7  காபி கேட்  கில்லரை  நாயகன்  ஒரு  விரலை  முறிக்கிறார். அவன்  அய்யோ  என  கத்துகிறான். அடுத்த  காட்சியிலேயே  அவனுக்கு  கை  விரல்கள்  எல்லாம்  நார்மலா  இருக்கு , அது  எப்படி ? 


8 காபிகேட்  கில்லர்  க்ளைமாக்ஸில்  நாயகனை ஒரு  அறையில்  அடைத்து  விடுகிறான். அப்படியே  விட்டுப்போய்  இருக்கலாம், எதுக்கு  கிறுக்கன்  மாதிரி  கதவைத்திற்ந்து  விட்டு  ஃபைட்டு  ப்ண்ணலாம்  வா  என  கூப்பிடுகிறான் ? 


9  காபிகேட்  கில்லர்  ஆலரெடி  ஒரு  கேசுக்காக  நாயகனால்  அரெஸ்ட்  செய்யப்ப்ட்டவன், அதனால்  நாயகனை  டார்கெட்  செய்யவே  சார்லியின்  மகள்  திவ்யாவை  அவன்  கொன்றான்  என  நாயகன்  சொல்கிறான். நாயகனைத்தூண்ட , கோபப்படுத்தனும்னா  நாயகனின்  காதலி  நயன்  அல்லது  நண்பன்  நரேனின்  மனைவியைத்தானே  கொன்றிருக்கனும் ? அந்த  லாஜிக்  கூடவா  வில்லனுக்கு  &  டைரக்டருக்கு  தெரியல ?   


10  திரைக்தைக்கு  தேவையே  இல்லாமல்  கொடூரமான  காட்சிகள் , கொலை  செய்யும்  பேட்டர்ன்  எல்லாம்   ரணகளம் .பெண்கள் , சிறுவர்கள்  அந்தப்பக்கமே  போக  முடியாது    


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  பயங்கர  வன்முறை 18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   இந்தப்படத்தை  தெரியாம , விசாரிக்காம  பார்த்து  யாரும்  மாட்டிக்காதீங்க. யாம்  பெற்ற  துன்பம்  பெறக்கூடாது  இவ்வையகம் /. ரேட்டிங்  1.75 / 5  ( இந்த  மார்க்கும்  நாயகி  நயனுக்காக ) 


Iraivan
Theatrical release poster
Directed byI. Ahmed
Written byI. Ahmed
Produced byJerish Raja
Starring
CinematographyHari K. Vedantam
Edited byJ. V. Manikanda Balaji
Music byYuvan Shankar Raja
Production
company
Passion Studios
Distributed byRed Giant Movies
Think Studios
S Picture
Release date
  • 28 September 2023
Running time
152 minutes[1]
CountryIndia
LanguageTamil
Budget28 crore
Box office4.25 crore[2]

Wednesday, October 25, 2023

கருமேகங்கள் கலைகின்றன (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா)

 


    1990 ல்  ஒளிப்பதிவாளராக  சினிமாவில்  இறங்கிய  ஒளி  ஓவியர் தங்கர்பச்சான் 1997ல்  காலமெல்லாம்  காதல்  வாழ்க  படத்துக்கான  சிறந்த  ஒளிப்பதிவாளருக்கான  தமிழக  அரசின்  விருதைப்பெற்றார்,2002 ஆம்  ஆண்டு அழகி  மெகா ஹிட்  படம் இயக்கினார். அதே  ஆண்டில்  சொல்ல  மறந்த  கதை  ஹிட் 2004ல் வந்த  தென்றல்  சுமார்  ரகம்.2005ல்  அவரே  நாயகன்  ஆக  நடித்து  இயக்கிய சிதம்பரத்தில்  ஒரு  அப்பாசாமி  ஃபிளாப் 2007ல்  ரிலீஸ்  ஆன  பள்ளிக்கூடம்  சுமராக  ஓடியது . தமிழக  அரசின்  சிறந்த  இயக்குநருக்கான  விருதைப்பெற்றது 2007ல்  ரிலீஸ் ஆன  ஒன்பது  ரூபாய்  நோட்டு  சுமாராகப்போனாலும்  இந்த  நாவல்  1996லியே விருதுகளை  வென்ற  நாவல் .2012ல்  அம்மாவின்  கை பேசி  சுமார்  ரகம்.2023ல்  ரிலீஸ்  ஆன  இந்த  கருமேகங்கள்  கலைகின்றன  எப்படி  இருக்கிறது  என  பார்ப்போம்

    ஸ்பாய்லர்  அலெர்ட்


இரண்டு  வெவ்வேறு  சிறுகதைகளை  படம்  பிடித்து  இரண்டுக்கும்  ஒரு  தொடர்பு  ஏற்படுத்தி  வித்தியாசமான  ஹைப்பர்  லிங்க்  ஸ்ட்ரோயாக  தர  ,முயன்றிருக்க்கிறார்


முதல்  கதை 


 நாயகன்  ஓய்வு  பெற்ற  நீதிபதி. இவர்  நீதி , நேர்மை  தவறாதவர். நீதிபதியாகப்பணி  ஆற்றிய  போது  பல  வழக்குகளில்  நேர்மையான  தீர்ப்பை  வழங்கி  மக்களிடம்  நன்  மதிப்பைப்பெற்றவர். இவருக்கு  மூன்று  வாரிசுகள். இரு  மகன்கள் , ஒரு  மகள் , ஒரு  மகன், ஒரு  மகள்  இருவரும்  வெளிநாட்டில்  பணி. அவ்வப்போது  அலைபேசியில்  உரையாடுவதுடன்  சரி .இன்னொரு  மகன்  பிரபல  கிரிமினல்  லாயர் . நாயகன்  நீதிபதியாக  இருந்தபோது  எந்த  நபரை  குற்றவாளி  என  தீர்ப்பளித்தாரோ  அந்த  நபருக்கு  ஆதரவாக  பணத்துக்காக  வாதிடும்  வ்க்கீல் தான்   நாயகனின்  மகன்


 இதனால்  இருவருக்கும்  கருத்து  மோதல்  ஏற்படுகிறது . ஒரே  வீட்டில்  இருந்தாலும்  இருவரும்  10  வ்ருடங்களாகப்பேசிக்கொள்வதில்லை இப்படி  இருக்கின்ற தருணத்தில்  நாயகனுக்கு  75  வது  பிறந்த  நாள்  விழா  நடக்கிறது . அப்போது  நாயகன்  கையில்  ஒரு  கடிதம்  கிடைக்கிறது . 13  வருடங்களுக்கு  முன் அவருக்கு  வந்த  கடிதம்  தாமதமாக  இப்போது  தான்  கிடைக்கிறது. நாயகன்  வக்கீலாக  இருந்தபோது ஒரு  பெண்ணுடன்  தொடர்பு  ஏற்பட்டு  அவள்  கர்ப்பம்  ஆகிறாள். ஆனால்  அப்போது  இருந்த  சூழலில்  நாயகனால்  அவரை  வெளிப்படையாக  மனைவியாக  ஏற்றுக்கொள்ள  முடியவில்லை 


இப்போது  அந்த  முன்னாள்  காதலி  எழுதிய  கடிதத்தில்  நமக்குப்பிறந்த  மகள் இப்போது  ஜெயிலில்  இருக்கிறாள் , நீங்கள்  தான்  அவ்ரைப்பார்த்துக்கொள்ள  வேண்டும் , நீங்கள்  தான்  அப்பா  என  தெரியப்படுத்தக்கூடாது  என  கடிதத்தில்  இருக்கிறது . நாயகன்  அந்த  மகளைத்தேடிச்செல்கிறார். அந்த  மகள்  அவரை  ஏற்றுக்கொண்டாரா? அவரது  முன்னாள்  காதலி  என்ன  ஆனார்  என்பது  மீதி  திரைக்கதை 


இரண்டாம்  கதை 


 நாயகன்  ஹோட்டலில்  புரோட்டா  மாஸ்டர் . அவர்  வேலை  செய்யும்  ஹோட்டலுக்கு  எதிரே ஒரு  பெண்  அபலையாக  வருகிறாள். அவளுக்கு  அடைக்கலம்  தருகிறார்.அந்தப்பெண்  ஆல்ரெடி  கர்ப்பம். வீட்டை  விட்டு  ஓடி  வந்துதிருமணம்  செய்து  கொண்ட  காதலன்  சொத்துக்கு  ஆசைப்பட்டு இவளைக்கைவிட்டதால்  மனம்  நொந்த  பெண்ணுக்கு  நாயகன்  அடைக்கலம்  கொடுத்து  இருக்கிறார்


 அந்தப்பெண்ணுக்கு  குழந்தை  பிறக்கிறது . அந்தக்குழந்தை  வளர்ந்து 6  வயது  ஆகும்  வரை  நாயகனைத்தான்  அப்பா  என  அழைக்கிறது . நாயகனின்  வளர்ப்பு  மகளாக  இருக்கும்  சிறுமியின்  அம்மாவுக்கும் , நாயகனுக்கும்  எந்த  ஒரு  பிசிக்கல்  ரிலேஷன் ஷிப்பும்  இல்லை 


 அந்தப்பெண்ணின்  கணவன்  திடீர்  என  திருந்தி  வந்து  அந்தப்பெண்ணை  தன்னுடன்  அழைத்துச்செல்கிறான். ஆனால்  குழந்தை  நாயகனைத்தான்  அப்பா  என  அழைக்கிறது . ஒரிஜினல்  அப்பாவை  ஏற்றுக்கொள்ளவில்லை 


இதற்குப்பின்  இவர்கள்  வாழ்க்கையில்  ஏற்படும்  திருப்பங்கள்  தான்  மீதி  திரைக்கதை  


முதல்  கதையின்  நாயகன்  ஆக  இயக்குநர்  பாரதிராஜா  நடித்திருக்கிறார். அவரது  வயது  முதிர்ந்த  பருவம்  மிகப்பெரிய  பிளஸ் . த்ள்ளாமை , இயலாமை  இரண்டுமே  அவருக்கு  அனுதாப  வாக்குகளைப்பெறச்செய்கிறது. பல  இடங்களில்  சிறப்பாக  நடித்திருந்தாலும்  சில  இடங்களில்  ஓவர்  ஆக்டிங்  அல்லது  செயற்கையான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்


அவரது  மகன் கிரிமினல்  லாயர்  ஆக  இயக்குநர்  கவுதம்  வசுதேவ்  மேனன் அந்த  கேரக்டருக்கு  சரியாக  ஃபிட்  ஆகவில்லை . வழக்கமாக  போலீஸ்  ஆஃபீசராக  கலக்கல்  நடிப்பை  வெளிப்படுத்தும் இவர்  இந்த  லாயர்  கேரக்டரில்  ஏனோ  தடுமாறுகிறார்


நாயகனின்  மகளாக  கண்மணி  கேரக்டரில்  வரும்  அருவி  புகழ்  அதிதி  பாலன்  சிறப்பான  நடிப்பை  வெளிப்படுத்தி  இருந்தாலும் அவரது  அதீத  ஒப்பனை  லேசாக  உறுத்துகிறது


இரண்டாவது  கதையின்  நாயகன்  ஆக  யோகிபாபு  வழக்கமான  தன்  மொக்கக்காமெடி டிராக்கை  விட்டு  விலகி  சிறப்பான  குணச்சித்திர  நடிப்பை  வழங்கி  இருக்கிறார். ஆனால்  ஆங்காங்கே   டிரேட்  மார்க்  காமெடி  பண்றேன்  பேர்வழி  என  மொக்கை  போடுவது  எரிச்சல் , அவரது  வளர்ப்பு  மகளாக  வரும்  சிறுமி நடிப்பு  அருமை .சிறுமியின்  அம்மாக  வருபவர் கூட கச்சிதமாக  நடித்திருக்கிறார்


ஜி  வி  பிர்காஷ்  இசையில்  செவ்வந்திப்பூவே  செமஹிட்  மெலோடி , மற்ற  பாடல்களும்  ஓக்கே  ரகம், பிஜிஎம்   அருமை பி  லெனின்  எடிட்டிங்கில்  படம்  இரண்டரை  மணி  நேரம்  ஓடுகிறது என்  கே  ஏகாம்பரம்  ஒளிப்பதிவில்  கலைநயம்  சொட்டுகிறது . 


சபாஷ்  டைரக்டர் (தங்கர்பச்சான்) 

1  படத்தின்  முதல்  பிளஸ்  பாயிண்ட்டே  ஒளிப்பதிவு  தான் . பிரமாதமாக  காட்சிகள்  கண்  முன்  விரிகின்றன. குறிப்பாக  பாடல்  காட்சிகளில்  லாங்க்  ஷாட்கள் , தாமரைக்குளம் , கடல்  காட்சிகள்  கண்ணில்  ஒத்திக்கொள்ளலாம்  போல  இருந்தது 


2  பாரதி ராஜா   ,யோகிபாபு இருவரின்  நடிப்பும்  படத்துக்கு பக்க  பலம


3  பாரதிராஜாவின்  முன்னாள்  காதலி  யார்  என்பதைக்காட்டாமலேயே  கதை  சொன்ன  விதம்  அசத்தல்


செம  ஹிட்  சாங்க்


 செவ்வந்திப்பூவே   செவ்வந்திப்பூவே 



  ரசித்த  வசனங்கள் 


1  இது ஏன்  இவ்ளோ  அழகா  இருக்கு ?

 பழசுன்னாலே  தனி  அழகு தான் 


2 உன்  பேரென்ன?


 நமஸ்காரம்


இனிமே  உன்  பேரு  வணக்கம் 


3   ஓனர்  இருக்காரா?


 ஒனர்  இல்லாததால்தான்  அவன்  அந்த  சீட்ல  உக்காந்திருக்கான்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வளர்ப்பு அப்பாவான  யோகி பாபு  ஒரு  காட்சியில்  மகளுக்கு  திருட  சொல்லிக்கொடுக்கிறார். அதை  ஊக்குவிக்கிறார். பாடல்  காட்சியில்  காமெடிக்காக  வைக்கப்பட்டாலும்  அது  மோசமான  முன்னுதாரணம் 

2 புரோட்டா  மாஸ்டர்  ஆன  யோகிபாபு  ஒரு  காட்சியில்  இட்லிகளைநாய்க்குப்போடுவது  போல்  தூர  வீசி  பரிமாறுகிறார். காமெடி  என  நினைத்து  எரிச்சல்  ஊட்டி  இருக்கிறார்கள் 

3   ஒரு  ஜட்ஜின்    காதலி  தனக்குப்பிறந்த  மகள்  ஒரு  கேசில்  சிக்கி இருக்கிறார்  என்றதும்  உடனடியாக  ஜட்ஜை  தொடர்பு  கொண்டு  உதவி  கேட்காதது  ஏன் ?

4  கண்மணியாக  வரும்  அதிதி  பாலன்  செய்யும்  என்கவுண்ட்டர்  காட்சி  சினிமாத்தனம் . தெளிவாக , யதார்த்தமாக  செல்லும்  திரைக்கதையில்  சொதப்பல்  சீன்

5  ஜட்ஜ்  ஆக  வரும்  பாரதி  ராஜா  தான்  செய்யாத  தப்புக்காக  அனைவரிடமும்  மன்னிப்புக்கேட்கும்  காட்சி  நெருடல் . அதே  போல்  தான்  செய்த  தப்புக்காக  தன்  மகளிடம்  மன்னிப்புக்கேட்க  காலில்  விடும்  காட்சியும்  ஓவர்  டோஸ் 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பிரமாதமாக  வந்திருக்க  வேண்டிய  ஒரு  நல்ல  கதை இயக்குநரின்  கவனக்குறைவால்  சராசரி   ஆன  படம்  ஆக  வ்ந்திருக்கிறது .  ரேட்டிங்  3/ 5 


Karumegangal Kalaigindrana
Directed byThangar Bachan
Starring
CinematographyN. K. Ekambaram
Edited byB. Lenin
Music byG. V. Prakash Kumar
Production
company
Riota Media
Release date
  • 1 September 2023
CountryIndia
LanguageTamil

Tuesday, October 24, 2023

DREAM GIRL 2 (2023)- ஹிந்தி- சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்

       


 நாயகன்  படம்  முழுக்க  பெண்  வேடத்தில்  வந்தது  தமிழ்  சினிமாவில்  முக்கியமான  முதல்  படம்  பிரசாந்த்  நடித்த  ஆணழகன்   தான் (1995). சிவகார்த்திகேயன்  நடிப்பில்  வெளி  வந்த  ரெமோ (2016)  அடுத்த  இடம். கமல்  நடிப்பில்  வெளி வந்த அவ்வை சண்முகி (1996)  இந்தப்பட்டியலில்  இடம்  பிடிக்காது . ஏன்  எனில்  அது பாட்டி  வேடம். இவை  போக  விவேக் , சந்தானம்  போன்றவர்கள்  காமெடி  டிராக்கில்  பெண்  வேடத்தில்  கலக்கினார்கள் 


மேலே  குறிப்பிட்டவர்கள்  போக  முன்னணி  ஹீரோக்கள்  பலரும்  பெண்  வேடத்தில்  ஒரு  சில  காட்சிகளில்  தோன்றினாலும்  அது  சும்மா  பேருக்குத்தான்


தான்  நடிக்கும்  ஒவ்வொரு  படத்திலும்  திரைக்கதை , கேரக்டர்  டிசைன்  ஆகியவற்றில்  வித்தியாசம்  காட்டும்   ஆயுஷ்மான்  குரானா  நடித்த  ஃப்ரீம்  கேர்ள்  படத்தின்  இரண்டாம்  பாகம்  தான்  இது . இது  தனிக்கதை , அதனால்  முதல்  பாகம்  பார்க்காவிட்டாலும்  புரியும் 


35  கோடி  ரூபாய்  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்டு  145  கோடி  வசூல்  செய்த  பாக்ஸ்  ஆஃபீஸ்  ஹிட்  படம்  இது 


   ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன்   தன்  அப்பாவுடன்  வசித்து  வருகிறார். அப்பாவுக்கு  ஏகப்பட்ட   கடன். அதை  அடைக்கவே  நேரம்  சரியாக  இருக்கிறது . நாயகனுக்கு  பெண்  குரலில்  பேசும்  திறமை  இருக்கிறது , அதை  வைத்து  கடன்காரனை  சமாளிக்கிறார்


பிரபல  வார  இதழ்களில்  பணி  ஆற்றும்  பலரும்  ஆண்  படைப்பாளிகளைக்கண்டு கொள்ளாமல்  பெண்  படைப்பாளிகள்  ஃபேஸ்  புக்  மெசேஞ்சரில்  போய்  வழிந்து  மேடம்  உங்க  படைப்புகள்  எல்லாம்  அபாரம், எனக்கு  மெயில்  பண்ணுங்க , பத்திரிக்கையில்  பிரசுரிக்கிறேன்  என  ஜொள்ளு  விடுவது  போல  இந்த  கடன்காரன்கள்  எல்லாம்  ஆண்களிடம்   எரிந்து  விழுந்து  பெண்கள்  என்றால்  பம்முகிறார்கள்  என்பதால்  நாயகன்  பெண்  வேடத்தில்  உருவத்தில் , குரலில்  ஏமாற்ற  முடிவு  செய்கிறார்


நாயகன் ஒரு  வசதியான  பணக்கார  வீட்டுப்பெண்ணைக்காதலிக்கிறார். ஆனால்  பெண்ணின்  தந்தை  நாயகன் வங்கிக்கணக்கில் 30  லட்சம்  ரூபாய்  இருந்தால்  தான்  திருமணம்  என்கிறார்


 நாயகன்  பெண்  வேடத்தில்  ஒரு  நைட்  கிளப்பில்  டான்சராக  மாறி  பணம்  சம்பாதிக்கிறார்


 நாயகனின்  நண்பன்  ஒரு  பெண்ணைக்காதலிக்கிறார். அந்தப்பெண்ணின்  அண்ணன் ஒரு  ரிசர்வ்  டைப். யாரிடமும்  பேசாமல்  இருப்பவர். அவருக்குத்திருமணம்  ஆனால்  தான்  இவருக்குத்திருமணம்  என்று  சொல்லி  விடுவதால்  நாயகன்  பெண்  வேடத்தில்  அந்த  வீட்டில்  மருமகளாக  செல்கிறார். 

 இதற்குப்பின்  நிகழும்  காமெடி  களேபரங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  ஆயுஸ்மான்  குரானா  பெண்  வேடத்தில்  அதகளம்  பண்ணி  இருக்கிறார்  என்றாலும்  தமிழில்  நம்ம  ஆட்கள்  செய்த  பர்ஃபார்மென்சுடன்  ஒப்பீடு  செய்தால்  ஒரு  மாற்றுக்குறைவு  தான்


நாயகி  ஆக   அனன்யா  பாண்டே சைஸ்  ஜீரோ  அழகியாக  வலம்  வருகிறார், அதிக  வாய்ப்பில்லை 


 படத்தில்  வில்லன்  என  யாரும்  இல்லை , மற்ற  அனைவரின்  நடிப்பும்   கச்சிதம் 


134  நிமிடங்கள்  ஓடும்படி  படத்தை  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்  எடிட்டர் 


ஒளிப்பதிவு  கலர்2 ஃபுல்லாக  இருக்கிறது 




சபாஷ்  டைரக்டர்  (  ராஜ்  சாண்டியா)


1   நாயகனை  ஒருதலைக்காதலாக   லவ்வும்  அநத ஆண்ட்டியை  நாயகனின்  அப்பா  கரெக்ட்  பண்ண  துடிப்பது  காமெடி  கலாட்டா 


2   நாயகன்  லேடி  டான்சராக  பணி  ஆற்றும்  நைட் கிளப்  ஓனர்  நாயகனை  பெண்  என  நினைத்துக்காதலிக்கும்  காமெடி  டிராக்கும்  அசத்தல் 


3  நாயகனின்  நண்பன் காதலிக்கும்  பெண்ணின்  அண்ணன்  கே  டைப்  என்பதும்  அவன்  நாயகனிடம்  உங்க  கிட்டே  பழகும்போது  என்  காதலன்  நினைவு  வந்தது  என  உருகுவதும்  வெடிச்சிரிப்பு 



  ரசித்த  வசனங்கள் 


1  பயந்துட்டீங்களா? சும்மா  காமெடி  பண்ணேன்


 இனி ஜோக்  சொல்லும்போது  இதுஜோக்னு  ஒரு  முன்னறிவிப்பு கொடும்மா, நாங்க  ரெடி  ஆகிக்கறோம்


2  மிடில்  கிளாஸ்  பசங்க  கிட்டே  இருக்கும்  குணம்  என்ன  தெரியுமா? சொந்தக்காலில்  நிற்கனும்


3 உங்க  காதலுக்கு  நான்  குறுக்கே  நிற்கலை, ஆனா  ஷாரூக்கிற்கு  மேரேஜ்  ஆகாம  இவளுக்கு  மேரேஜ்  பண்ண  முடியாது 


 ஷாரூக்? அவருக்கு  ஆல்ரெடி  மேரேஜ்  ஆகி 3  குழந்தைகள்  இருக்கே?


 அய்யோ, ஷாரூக்கான்  அல்ல ,  உன்  காதலியோட  அண்ணன்  ஷாரூக் 


4 ஒரு  இந்தியப்பெண்  தானே?  நீ?  அரை மணி  நேரம்  லேட்டா  வர்றதுதானே  இந்திய  கலாச்சாரம்? நீ  முன்  கூட்டியே  வந்து  என்னை  டென்ஷன்  பண்ணிட்டே!


5   எதுக்காக  அவனை  அடிக்கறீங்க ?


சன்னி லியோன்  படம்னு  பொய்  சொல்லி  சன்னி  தியோல்  நடிச்ச  படத்துக்குக்கூட்டிட்டுப்போய்ட்டான்


6  ஒரு  பெண்ணாக  இருப்பது  எவ்வளவு  கஷ்டமோ  அதை  விட  கஷ்டம்  ஒரு  பெண்ணாக நடிப்பது 


7  டியர்  பூஜா , என்னைத்தெரியலையா? நான்  தான்  உன்  டைகர் 


 யார்றா  நீ? பல்லி  மாதிரி  இருந்துட்டு டைகர்னு  பீலா  விடறே? 


8  உங்க  பசங்களுக்கு  டான்சும்  வர்லை , இங்க்லீஷூம்  வர்லை 

 அன் பாசிபிள்


என்னது ? உங்களுக்கும் இங்க்லீஷ்  வர்லையே?  இம்ப்பாசிபிள்  தானே  சொல்லனும்?


9  ஏய்  மிஸ்டர், எனக்கு  இது  வரை    3  தடவை  கல்யாணம்  ஆகியும்  சரியான  ஜோடி  இன்னும்கிடைக்கலை 


ஓஹோ  , முயற்சி  உடையார்  இகழ்ச்சி  அடையார்னு  தொடர்ந்து  ட்ரை  பண்ணிட்டே  இருக்கீங்களா?  வெரிகுட் 


10  இங்கே  பாரம்மா  மின்னல் , நம்ம  வீட்ல  எத்தனை  ரூம்ஸ்  இருக்கோ  அதை விட  அதிக  எண்ணிக்கைல  உனக்கு  மேரேஜ்  ஆகி  இருக்கு, நிறுத்தனும், எல்லாத்தையும்  நிறுத்தனும்


11 என்  மூன்றாவது  கல்யாணத்தப்போ  நான்  என்ன  சொன்னேன்னு  நினைவிருக்கா? எப்போ  என்னை  விட  கம்மியான  வயசுள்ள  ஆணைக்கல்யாணம்  பண்றேனோ  அன்னைக்குதான்  என்  கடைசி  கல்யாணம்னு,,  அது  இப்போ  நிறைவேறப்போகுது 


12    என்னை  இந்த  ஆள்  கல்யாணம்  பண்ணி  என்  3  வருச  இள்மையை  வேஸ்ட்  பண்ணிட்டான்


 என்னது ? இளமையா? ஏம்மா  கிழ  போல்ட்டு  நமக்கு  மேரேஜ்  ஆகும்போது  உன் வயசு  45


13  என்னது ? இது  சவுரியா? தனியா  வந்துடுச்சு?


 அது  வ்ந்து  முடி  கொட்டிடுச்சு?


 இவ்ளோ  பல்க்காவா  கொட்டும் ? 


14 சாரி  சார், உங்க  புரொபோசலை  நான்  ஏத்துக்க  முடியாது , ஆல்ரெடி  ஒரு  பையன்  என்னை  லவ்  பண்றான்

 பையன்  என்ன  பண்றான் ?


 அதான்  சொன்னேனே? என்னை  லவ்  பண்றான்


 அய்யோ  ராமா, பர்சனலா  என்ன  பண்றான்னு கேட்கலை , புரொஃபஷனலா  என்ன  பன்றான்? 

சிபிஐ


 வாட்?

 செண்ட்ரல்  பேங்க்  ஆஃப்  இண்டியா  ல  கேஷிய்ர் 


15  அய்யய்யோ  ஜாக்கெட்க்குள்ளே  வெச்சிருந்த  பால்ஸ் ல  ஒரு  பால்  கீழே  விழுந்துடுச்சே? சரி , ஒரு  ஆரஞ்சுப்பழம்  ஆர்டர்பண்ணுவோம், சமாளிப்போம்


 மேடம், ஆரஞ்ச்  ஆர்டர்  பண்ணீங்களே?


  யோவ், நான்  ஆரஞ்ச்  ஜூசா  கேட்டேன்? ஆரஞ்சுப்பழம்


 சாரி  அது  ஸ்டாக்  இல்லை ,  முலாம்பழம்  தரவா?


 அதுல  சின்ன  சைஸ்  இருக்கா?


 சின்னதுன்னா  திராட்சை ஓக்கே  வா?


 அது   ரொம்ப  சின்னதா  இருக்குமே? 


16  நான்  டாய்லெட்  போக  வேண்டிய  டைம்  நெருங்கிடுச்சு 

‘ டைம்  டேபிள்  போட்டு  டாய்லெட்  போவியா? 


 அங்கே  போனாத்தானே  டிரஸ் சேஞ்ச்  பண்ணி நான்  சேஞ்ச்  ஆக  முடியும் ? 


17 பூஜா செத்துட்டா  என்பதை  எங்களால   நம்ப  முடியாது 


 ஏன்  இன்ஸ்பெக்டர்?


 பூஜாவோட  செல்  ஃபோன்  ஆக்டிவாத்தானே  இருக்கு?


18  ரிலெஷன்ஷிப்க்குள்ளே  ஏதாவது  டவுட்  இருந்தா  ஃபேஸ்  டூ   ஃபேஸ்  கேட்டு  க்ளியர் பண்ணிக்கனும்


19  தன்  காதலி  வேற  ஒருத்தனைக்கல்யாணம்  பண்ணிக்கிட்டு  தன்னைக்கைவிடும்  முதல்  ஆள்  நான்    மட்டும் இல்லையே?  இதுக்கு  முன்னால  எத்தனையோ  சம்பவம்  நடந்திருக்கு 


20  காதலிக்கற  ஒரே  ஒரு  காரணத்துக்காக  எங்களை  குறைச்சு  எடை  போட்டுடடாதீங்க . நேரம்  வரும்போது   நாங்களும்  சாதிப்போம் 


21  மிடில் கிளாஸ்  ஆட்கள்  ஆறு  மாசத்தில்  30  லட்ச  ரூபாயை  செலவு  கூட  பண்ண  முடியாது , எப்படி  அவ்வளவு  சம்பாதிக்க  முடியும்?’


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 நாயகன்  பெண்  வேடத்தில்  வரும் ஓப்பனிங்  ஷாட்டில்  வரும்  தீம்  மியூசிக்  பூவே  உனக்காக   படத்தில்  வரும்  ஆனந்தம்  ஆனந்தம்  பாடும்  மனம்  ஆசையில்  ஊஞ்சலில்  ஆடும்   பாட்டு  இசை 


2  மொள்ளமாறித்தனம்  பண்ணி  பணம்  சம்பாதிக்கும்  அரசியல்வாதிகள்  அதை  சாணக்கியத்தனம்  என  சொல்லிக்கொள்வது  போல  நாயகன்  பண்ணுனதே  ஃபிராடுத்தனம் . அவர்  ஏமாற்றிய  எல்லோரையும்  க்ளைமாக்சில்  வரிசையாக  நிற்க  வைத்து  அவர்கள்  மீதே  குற்ரம்  சொல்வதும்  அவர்கள்  பம்முவதும்  சரியான  நாடகத்தனம் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  காட்சி  ரீதியாக  18+  இல்லை  , ஆனால்  வசனத்தில் உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஜாலியான  படம்  பார்க்க  நினைப்பவர்கள்  பார்க்கலாம், ரேட்டிங்  2.75 / 5 


Dream Girl 2
Theatrical release poster
Directed byRaaj Shaandilyaa
Written by
Produced by
Starring
Cinematography
Edited byHemal Kothari
Music byScore:
Hitesh Sonik
Songs:
Meet Bros
Tanishk Bagchi
Arko
Production
company
Distributed byPen Marudhar Entertainment
Release date
  • 25 August 2023
Running time
134 minutes[1]
CountryIndia
LanguageHindi
Budget₹35 crore[2]
Box office₹140.26 crore[3]

Monday, October 23, 2023

KERALA CRIME FILES (2023) - மலையாளம் கேரளா க்ரைம் ஃபைல்ஸ் - தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம்( க்ரைம் ட்ராமா) @ டிஸ்னி + ஹாட் ஸ்டார்

 


2019 ஆம்  ஆண்டு  ரிலீஸ்  ஆன  ஜூன்  என்ற  சூப்பர்  டூப்பர் ஹிட்  படம் தான்  இயக்குநர்  அஹ்மத்  கபீரின்  முதல்  படம் . 2020 ஆம் ஆண்டு  இன்ஷா  அல்லா  என்ற  பட்ம்  2021 ஆ ஆண்டு  மதுரம்  என்ற  ரொமாண்டிக்  மூவி  என  இவர்  இயக்கிய  மூன்று  படங்களும்  விமர்சன  ரீதியாக பாராட்டுக்களைக் குவித்தவை 


இந்த  இயக்குநர்  வெப்  சீரிசாக  இயக்கும்  முதல்   டி வி சீரியல்  இது 


  மொத்தம் ஆறு  எபிசோடுகள், ஒவ்வொன்றும்  27 நிமிடங்கள்  டூ 30 நிமிடங்கள்  கொண்டவை , ஆக  மொத்தம்  2  மணி  நேரம் 50  நிமிடங்கள்  இருந்தால்  ஒரே  சிட்டிங்கில்  பார்த்து  விடலாம். மிக  மிக  சுவராஸ்யமான  வழக்கு  இது ,சினிமாத்தனங்கள் , ஹீரோ  பில்டப் , மொக்கை  காமெடி  டிராக் , நம்ப  முடியாத  ஃபைட்  சீன்ஸ்  எதுவும்  இல்லாத  நேர்மையான  படம் 


       ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் , அவருக்குக்கீழ்  சில  போலீஸ்  காரர்கள் . ஒரு  கொலைக்கேஸ். ஒரு  லாட்ஜில்   விலைமாது   கொலை செய்யப்பட்டு  இருக்கிறார். அவர்  கூட  வந்தவன் யார்  என்ற  விசாரணை  நடக்கிறது 


 அந்த  விசாரணையில்  ஒரு  ஆள்  எதேச்சையாக  சிக்குகிறான். ஆனால்  அவன்  கொலைகாரன்  இல்லை . தொழிற்சங்கத்தில்  தொடர்பு  உள்ளவன். அரசியல்  செல்வாக்கும்  உள்ளவன். இவன்  ஒரு  பெண்ணை துன்புறூத்தி  இருக்கிறான். சாமார்த்தியமாக  அந்த  கேசில்  அவனை  மாட்ட  வைத்தாயிற்று.


 ஆனால்  இப்போது  கொலைகாரனைப்பிடிக்க  வேண்டும் . அவன்  மாறு  கண் குறைபாடு  உள்ளவன்  என்பது  மட்டும்  தெரியும், அவனிடம்  செல்  ஃபோன்  இல்லை ,  அதனால்  ஆளை  ட்ரேஸ்  பண்ணவே  முடியவில்லை . அவன்  செல்லும்  இடம்  எல்லாம்  போலியான  முகவரி  தான்  தந்து  வைத்திருக்கிறான். அவனை  எப்படிப்பிடித்தார்கள்  என்பதே  இந்த  வெப்  சீரிசின்  மீதி  திரைக்கதை


நாயகன்  ஆக அஜூ  வர்கீஸ் . இவர்  வ்ழக்கமாக  காமெடி  ரோல்  செய்பவர் . சீரியசான  அடக்கி  வாசிக்கும்  நாயகன்  ரோல்., பொறுப்பை  உணர்ந்து  அண்டர்ப்ளே  ஆக்டிங்  செய்து  இருக்கிறார்


அவரது  ஹையர்  ஆஃபீசர்  ஆக   லால்.  தெனாவெட்டான  பாத்திர  வடிவமைப்பு  இவருடையது . உடல்  மொழி  அபாரம் 


கொலையாளி  ஆக  சைஜூ  கேரக்டரில்  ஸ்ரீஜித்  மகாதேவன்  3  மணி  நேரப்படத்தில்  3  நிமிடக்காட்சிகள்  தான்  வருகிறார்  என்றாலும்  படம்  முழுக்க  அவரைத்தேடும்  பணி  தான்  என்பதால்  முக்கிய  கதாபாத்திரம்  ஆகிறார் 


ஹெசாம்  அப்துல்  வகாப்  தான்  இசை ., பின்னணி இசையில்  பட்டையைக்கிளப்பி  இருக்கிறார்.  விறுவிறுப்பான  மூட்  க்ரியேட்  செய்கிறது 


ஜிதுவின்  ஒளிப்பதிவு  அருமை .  லாங்க்  ஷாட் , க்ளோசப்  ஷாட்  அனைத்தும்  க்ரிஸ்டல்  கிளியராகப்பதிவு  செய்திருக்கிறார்


மகேசின்  எடிட்டிங்  கனகச்சிதம் ., ஒரு   காட்சி  கூட  போர்  அடிக்கவில்லை . தேவை  இல்லாத  காட்சி  என  எதுவும்  இல்லை , இதுதான்  ஒரு  எடிட்டரின்  வெற்றி


சபாஷ்  டைரக்டர் (அஹ்மத்  கபீர்) 


1  ஹையர்  ஆஃபீசர்  தன்  மகளுடன்  அடிக்கடி  பேசுவது . திருமணம்  ஆன  ஒரே  வாரத்தில்  ட்யூட்டிக்கு  வந்த  நாயகன்  அடிக்கடி  தன்  மனைவியுடன்  கொஞ்சுவது . நிறைமாத  கர்ப்பிணியை  விட்டு  ட்யூட்டிக்கு  வந்த  கான்ஸ்டபிள்  மனைவியுடன்  உரையாடுவது இந்த   மூன்று போர்சன்களும்  மெயின்  கதைக்கு  சம்ப்ந்தம்  இல்லை  என்றாலும்  ரசிக்கும்படி  இருக்கிறது . விறுவிறுப்பாக  டென்சன்  ஆக  செல்லும்  திரைக்கதையில்  ஒரு  ரிலாக்சேசன்  ஆக  அமைகிறது 


2   கொலையாளி  என  நாயகன்  சந்தேகப்பட்ட  ஆள்  உண்மையில்  கொலைகாரன்   இல்லை  என்றதும்  அதில்  இருந்து  தப்பிக்க  அவன்  மேல்  ஏதாவது  ஒரு  கேசைப்போடாமல்  நிஜமாகவே  அவன்  செய்த  தப்பின்  அடிப்படை  முகாந்திரம்  ஆராய்ந்து  கேஸ்  போட்டு  மாட்ட  வைப்பது   அபாரமான  காட்சி 


3  வில்லனின்  காதலி  ஆன  சிசிலி  என்ற  கேரக்டர்  டிசைன்  அவரது  நடிப்பு  அனைத்தும்  அருமை 


4  விலைமாதுவாக  வரும்  பெண்  வில்லனை டென்சன்  ஆகும்படி  பிரியாணி  வங்கிட்டு  வா, பீர்  வாங்கிட்டு  வா  என  வேலைக்காரன்  போல்  அலைய  விடும்  காட்சியும் வில்லனின்  காதலியை  எகத்தாளம்  பேசப்போய்  கொலை  ஆக  நேர்வதும்  கச்சிதமான  திரைக்கதை  அமைப்பு 


 ரசித்த  வசனங்கள் 



1 ரொம்ப  நேரமா  அவ  ஹேண்ட்  பேக்கைப்பார்த்துட்டு  இருக்கியே? அவ  ஜாதகம்  ஏதாவது  அங்கே  இருக்கா?

 

2  சார், வீட்டுக்குப்போய்  என்ன பண்ணப்போறீங்க ? இங்கே தான்  சாப்பாடு, தீனி  எல்லாம்  இருக்கே?

 

 அது  உனக்கு கல்யாணம்  ஆன  பின்  தெரியும்

 

3  திருடங்க  மட்டும்  இல்லை , போலீஸ்காரங்க  கூட  அப்பப்ப  பொய்  பேச  வேண்டீருக்குல்ல?

 

4  போலீஸ்  வண்டில  ஏறுனா  அப்புறம்  எனக்குப்பொண்ணுக்கிடைக்காது  சார்

 

நான்  கூட  டெய்லி  இதே  வண்டில  தான் எர்றேன், எனக்கு  பொண்ணு  கிடைக்காதா?

 

நீங்க  போலீஸ்

 

5  இந்தக்கொலைக்கேஸ்  முடிய  ரொம்ப  லேட்  ஆகுமோ?

 

 ஆமா,  செத்தது சினிமா  நடிகையோ, அரசியல்வாதியோ  இல்லையே>

 

6 பொண்டாட்டி கர்ப்பமா  இருக்கும்போதுதானே? ஆண்கள்  வேட்டைல  இறங்குவாங்க ?


7 கல்யாணத்துக்குப்பிறகு  நம்ம  விஷயத்தை  தீர்மானிக்கறது  நாமாத்தான்  இருக்கனும், வர்றவன், போறவன்  எல்லாம்  அட்வைஸ்  பண்ணுவான்


8  என்  தம்பி  என்ன  தப்பு  பண்ணான்னு  தெரியலை, ஆனா  ஒண்ணு  மட்டும்  உறுதி , கொலையே  பண்ணி  இருந்தாலும்  அவன்  பயந்து  ஓட  மாட்டான் ஒளிய  மாட்டான், அங்கே  தான்  இருப்பான் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வில்லன்  எல்லா  இடங்களிலும்  போலியான  முகவரி தான்  தருகிறான் . அபப்டி  இருக்க  தன்னைப்பற்றி உண்மையான  முகவரி  அறிந்த  இடம்  , ஆள்   இவற்றைக்கண்டு  கொள்ளாமல்  இருப்பது  ஏன் ? அங்கே  வந்து  ஆதாரத்தை  அழிக்காதது  ஏன் ? 


2  வில்லனின்  காதலியை  தப்பாகப்பேசிய  ஹோட்டல்  ஓனரை  அடிக்கடி  ஃபோனில்  மிரட்டும்  வில்லன்  அதன்  மூலம்  தான்  மாட்டிக்கொள்வோம் என்பதை  ஏன்  உணரவில்லை ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  18 +  காட்சிகள்  இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   சினிமாத்தனம்  எதுவும்  இல்லாத  ஒரு  க்ரைம்  கேஸ்  எப்படி  துப்பறிகிறார்கள்  என்பதை  அருமையாக  விளக்கும்  படம் .    ஸ்லோ  பர்ன்  த்ரில்லர்  ரசிகர்கள்  அவசியம்  பார்க்க  வேண்டிய  படம்  ரேட்டிங் 3.25 / 5 


Kerala Crime Files
GenreCrime drama
Police procedural
Written byAshiq Aimar
Directed byAhammed Khabeer
StarringAju Varghese
Lal
Music byHesham Abdul Wahab
Country of originIndia
Original languageMalayalam
No. of seasons1
No. of episodes6
Production
ProducerRahul Riji Nair
CinematographyJithin Stanislaus
EditorMahesh Bhuvanend
Release
Original networkDisney+ Hotstar
Original release23 June 2023

Sunday, October 22, 2023

SASIYUM SAKUNTHALAYUM(2023) - சசியும் , சகுந்தலையும் - மலையாளம் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்

    


ஒரு  புத்தகத்தோட  அட்டையை  வெச்சு  அந்த  புத்தகத்தை  எடை  போடக்கூடாது  என்பார்கள் , அதே  மாதிரி  தான்  படத்தின்  டைட்டிலையும், போஸ்டர்  டிசைனையும்  வைத்து  அந்தப்படத்தின்  தரத்தை  நாமாக  ஒரு  முடிவு  எடுக்கக்கூடாது

ஸ்பாய்லர்  அலெர்ட்


1980 களில்  கதை  நடக்கிறது 


ஒரு  கிராமம். அங்கே டுட்டோரியல் காலேஜில்  ஆங்கில  ஆசிரியர்  ஆக  நாயகனும், கணக்கு  டீச்சர்  ஆக  நாயகியும்  பணி  புரிகிறார்கள் . நாயகிக்கு  நாயகன்  மீது  காதல்  அதை  வெளிப்படுத்தும்போது  நாயகன்  தான்  பிற்படுத்தபப்ட்ட  வகுப்பை  சேர்ந்தவன்  என சொல்லி  ஆரம்பத்தில்  மறுக்கிறான், பிறகு  ஏற்றுக்கொள்கிறான்


இந்தக்கதைல  இரண்டு  வில்லன்கள் . முதல்  வில்லன்  டுட்டோரியல்  காலேஜ்  ஓனர். அவன்  நாயகிக்கு  ரூட்  விடுகிறான். இரண்டாவது  வில்லன்  அந்த  ஊரில்  பணம்  படைத்தவன், வட்டிக்குப்பணம்  கொடுத்து  சம்பாதிப்பவன்


இரண்டு  வில்லன்களும்  சேர்ந்து  நாயகனை  அவமானப்படுத்துகிறார்கள் . இவங்க  சங்காத்தமே  வேண்டாம்  என  நாயகன்  வேறு ஊருக்குப்போய்  செட்டில்  ஆகிறான். பணம்  சம்பாதித்து  மீண்டும்  அதே  ஊருக்கு வருகிறான். புதியதாக   டுட்டோரியல்  காலேஜ்  ஆரம்பிக்கிறான்


 வில்லன்    நெ 1 -னை  வில்லன்  நெ2  ஜெயிலுக்கு  அனுப்புகிறான். இதற்குப்பின்  நாயகன், நாயகி  சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை  மன தைரியம்  உள்ளவர்கள்  முழுப்படத்தையும்  பார்த்துத்தெரிந்து  கொள்க 


நாயகன்  ஆக , நாயகி  ஆக  நடித்தவர்கள்  நாடகத்தனமான  நடிப்பை வழங்கி  இருக்கிறார்கள் , டயலாக்  டெலிவரியும்  மோசம் 


 வில்லனின்  கேரக்டர்  டிசைன்  வடிவமைக்கும்போது ஆடியன்சுக்கு  வில்லன்  மீது  வெறுப்பு  வர  வேண்டும், அருவெறுப்பு  வருவது  போல  இயக்குநர்  வடிவமைத்திருக்கிறார். வில்லன்  வாயை  ஒரு  மாதிரி  வைத்துக்கொண்டு  எப்போப்பாரு  எச்சில்  துப்புவது  போல  காட்சிகள் , குமட்டுகிறது


134  நிமிடங்கள்  படம்  ஓடும்படி  எடிட்  செய்து  இருக்கிறார்கள் . ஆர்ட்  டைரக்சன், இசை , ஒளிப்பதிவு  எல்லாம்  சுமார்  ரகம்  தான் 


சபாஷ்  டைரக்டர் (ஆர் எஸ்  விமல் )\

 1  இந்த  டப்பாபடத்தைக்கூட  ஒரு  ரேட்  கொடுத்து  அமேசான் பிரைம், சிம்ப்ளி சவுத்  ஓடிடி  தளங்களை  வாங்க  வைத்த  சாமார்த்தியம்


2  திரைக்கதையில்  எந்த  ஒரு  சுவராஸ்யமோ , நம்பகத்தன்மையோ  இல்லாமல்  மனம்  போனபடி  ஷூட்டிங்க்கு  போன  திறமை 


  ரசித்த  வசனங்கள் 


1  நண்பனின்  எதிரி  நமக்கும்  எதிரி , எதிரியின்  எதிரி  நமக்கு  நண்பன் 


(  இது  காலண்டரில்  இருந்து  சுட்டிருக்கிறார்கள் )


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 டுட்டோரியல்  காலேஜ்  ல  மொத்த  மாணவர்களே 30  பேர்  தான்  இருப்பாங்க ,அ துக்கு  6  பேர்  டீச்சர்ஸ்   சம்பளம்  கொடுத்து  கட்டுபடி  ஆகுமா? 


2   நாலஞ்சு  தேங்கா ய்  இருக்கு  சந்தைல  கொண்டு  போய்  வித்துட்டு  வர்றேன்னு  நாயகியின்  அம்மா  கிளம்பும்போது பைல  ரெண்டு  தேங்காய்  தான்  கொண்டு  போறாங்க . சந்தைக்குப்போகும்  நடைக்கூலிக்குக்கூட கட்டாதே?


3  இடை வேளை  ட்விஸ்ட்டுக்காக  நாயகன்  ஒரு மாணவியின்  பொய்யான  குற்றசாட்டுக்கு ஆளாகி  ஊர்  மக்களிடம்  கெட்ட  பேர்  வாங்கும்  சீன்  நம்ப  முடியாத  நாடகத்தனம 


4  நாயகன்  நாயகிக்கு  கடிதம்  எழுதும்போது  நாயகி  வீட்டு  அட்ரஸ்க்கு  அனுப்பாம  டுட்டோரியல்  காலேஜ்  அட்ரஸ்க்கு  அனுப்பறான், அப்போதானே  வில்லன்  கைல  அது சிக்கும் ? 


5  இருக்கற  இரண்டு  வில்லன்கள்  போதாது  என  மூன்றாவதா  ஒரு  வில்லனை  நாயகியின்  அப்பா ஜெயிலில்  இருந்து  ரிலீஸ்  ஆகி  வருவதாகக்காட்டுகிறார்கள். நம்ப  முடியாத  வில்லத்தனம் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - இந்தப்படத்தில்  கண்ட்டெண்ட்டே  இல்லை , அடல்ட்  கண்ட்டெண்ட்  மட்டும்  எங்கே  இருக்கப்போகுது ? யூ  தான் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பட்த்தின்  இயக்குநர்  வெற்றிப்படம்  எல்லாம்  கொடுத்திருக்காராம், ஆனால்  படு  குப்பையான  படத்தை  எப்படி  இயக்கினார்  என  தெரியவில்லை .  ரொம்ப  நாடகத்தனமான டப்பா  படம் . ரேட்டிங் மைனஸ்  0.75 / 5