Wednesday, October 04, 2023

DIRTY HARI (2020) - தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம் ( எரோட்டிக் க்ரைம் த்ரில்லர்) @ ஆஹா தமிழ்

 


2005 ஆம்  ஆண்டு  சைக்கலாஜிக்கல் த்ரில்லர்  படம்  ஆக  ஹாலிவுட்டில்  ரிலீஸ்  ஆன  மேட்ச்  பாயிண்ட்  என்ற  படத்தின்  கதையை, திரைக்கதையைத்தழுவி 2020 ஆம்  ஆண்டில்  இந்தத்தெலுங்குப்படம்  உருவானது . அதன்  தமிழ்  டப்பிங் இப்போது 2023ல்  ஆஹா  தமிழ்  ஓடிடி  யில்  வந்துள்ளது 


       ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு செஸ்  பிளேயர். வேலை  இல்லை . அதனால்  வேலை  தேடி  தனது  சொந்த  ஊரில்  இருந்து  பட்டணத்துக்கு  வருகிறான். செஸ்  கோச்சர்  ஆக  ஒரு  கிளப்பில்  தற்காலிகமாப்  பணி  புரிகிறான்.


அங்கே  ஆகாஷ்  என்னும்  செல்வந்தனின்  நட்பு  கிடைக்கிறது . ஆகாஷ்க்கு  ஒரு  லவ்வர்  உண்டு . லவ்வர்  ஒரு  சினிமா  நடிகை . இன்னும்  பிரபலம்  ஆகாத  அறிமுக  நடிகை, அவர் நடித்த  முதல்  படம்  ஷூட்டிங்  நடந்து  கொண்டிருக்கிறது .


 ஆனால்  ஆகாஷின்  குடும்பத்திற்கு  ஆகாஷின்  காதலியைப்பிடிக்க  வில்லை . இதனால்  ஆகாஷின்  காதல்  பிரேக்கப்  ஆகிறது 


நாயகனுக்கு  ஆகாஷின்  காதலி  மீது  ஒரு ஈர்ப்பு  உருவாகிறது .அது  போக  ஆகாஷின்  தங்கை யுடன்  திருமண  பந்தமும்  நிகழ்கிரது . நாயகனுக்கு  ஒரே  கல்லில்  மூன்று  மாங்காய் . 

நாயகன்  நினைத்தபடி  பெரிய  இடத்து  சம்பந்தம்  கிடைத்து  விட்டது . அந்தக்கம்பெனியின்  சீஈஓ  ஆகிறான். அந்தக்கம்பெனியின்  ஓனரின்  மகளை  திருமணம்  செய்து  கொள்கிறான்


எல்லாம்  நல்லாதான்  போய்க்கிட்டு  இருக்கு . ஆனால்  நாயகனின்  கள்ளக்காதல் ஒரு  பிரச்சனையை  உண்டு  பண்ணுகிற்து. கள்ளக்காதலி  கர்ப்பம்  ஆகிறார். மனைவியை  விட்டு  வந்து  விடு  என  காதலி  மிரட்டுகிறார். ஆனால்  செல்வச்சீமாட்டியான  மனைவியை  விட  நாயகனுக்கு  மனம்  இல்லை 


 இதனால்  கள்ளக்காதலியைக்கொலை  செய்ய  முடிவு  எடுக்கிறார். இதற்குப்பின்  நிக்ழும்  திருப்பங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


நாயகன் ஆக  சரவன் ரெட்டி  அனாயசமாக  நடித்திருக்கிறார். கண்ணா , ரெண்டு  லட்டு  தின்ன  ஆசையா?  கான்செப்ட்  படி  அவரது  நடிப்பில்  உற்சாகம்  தெரிகிறது 


கள்ளக்காதலி  ஆக  சிமரட்  கவுர்  கிளாமர்  ஆக  நடித்திருக்கிறார். புதுமைப்பெண், மாடர்ன்  மங்கை  எனக்காட்ட  இவர்  படம்  பூரா  தம், தண்ணி  கேசாக  வருகிறார். 

மனைவி  ஆக  ருஹானி  சர்மா  குடும்பப்பாங்காக  நடித்திருக்கிறார். க்ளைமாக்சில்  அவர்  எடுக்கும்  வில்லி  அவதாரம்  பலே


107  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது . எடிட்டிங்  ஓக்கே  லெவல் . மார்க்  கே  ராபின்  இசை  சொல்லிக்கொள்ளும்படி  இல்லை .,ஒளிப்பதிவு  சுமார்  ரகம் 


எம் எஸ்  ராஜூ  திரைக்கதை  எழுதி   இயக்கி  இருக்கிறார். திரைக்கதையில்  இவர்  செய்த  ஒரே  மாற்றம் ஒரிஜினல்  வெர்சனில்  நாயகன்  டென்னிஸ்  பிளேயர் . ரீமேக்  வெர்சனில்  செஸ்  பிளேயர் 


சபாஷ்  டைரக்டர் (எம் எஸ்  ராஜூ )


1 நம்ம  ஊர்லயே  ஏராளமான  கள்ளக்காதல்  கதைகள்  இருக்க  ஃபாரீன்  பட  ரீமேக்  செய்ய  துணிச்சலாக  இறங்கியது , அஃபிசியலாக  உரிமை  வாங்கியது . அட்லீ  மாதிரி  பட்டி டிங்கரிங்  பண்ணாமல்  ஒரிஜினலை  தழுவி  எடுத்தது 


2  நாயகி , வில்லி , சித்தி , தோழி  என  பெண்  ரோல்களுக்கு  அழகிகளை  தேர்வு  செய்தது 

ரசித்த  வசனங்கள் 

1   அங்கேயே  ஒரே  இடத்துல  இருந்திருந்தா  சோல்ஜராத்தான் இருந்திருப்பேன், நான் ராஜா ஆக  விரும்பறேன்


அதுக்கு  ஒரு ராணி  வரனுமே? 


2   எம் எஸ் சுப்புலட்சுமியோட  ரேர்  கலெக்சன்  இது


 இது  என்  சம்சாரம், இவ  கூட    ரேர்  கலெக்சன்   தான்


3  அவ  கண்  பார்வைல  படறதுதான்  என்  இலக்கு . லக்கும்  கூட


4  இப்போத்தான்  இண்ட்ரோ  ஆன  பெண்  கூட  இவ்ளோ க்ளோசா  பழகற்து  தப்புனு  உனக்குத்தோணலையா?


 த்ப்பு  பண்றதுல  ஒரு  இண்ட்ரஸ்ட்  இருக்குனு  உனக்குத்தெரியாதா?


5  உன்  கழுத்துல  இருக்கற  மச்சம்  ரொம்ப  அழகா இருக்கு 

தொட்டுப்பார்க்கனும்னு  தோணுதா?

 யா

என்  உடம்பு பூரா  ஏகப்பட்ட  மச்சம்  இருக்கு , அதுக்கு  என்ன  பண்ணப்போறே? 


6  ஆண்கள் எல்லோருமே  நாய்கள்  தான் 

7   இந்த  மாதிரி  கள்ள  உறவுகள் எல்லாமே  டிசாஸ்டர்ல  தான்  முடியும்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  தன் வருங்கால  மனைவியின்  லட்சியத்தைப்பற்றி  சித்தி  கிண்டல்  செய்கிறாள்.  காதலி  கோபித்துக்கொண்டு  செல்லும்போது  காதலன்  சமாதானப்படுத்த  பின்னாலயே  போவதுதானே  உலக  வழக்கம். ? இவன்  ஏன் மாடு  மாதிரி  நிற்கிறான். ? 


2  போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில்  நாயகி நாயகனின்  பெயரை வலது  மார்பில்  பச்சை  குத்தி  இருப்பதாக  போலீஸ்  ஆஃபீசர்  சொல்கிறார். டாட்டு  குத்தியது  நாயகனுக்கு  எப்படி  தெரியாமல்  போனது ? பகலில் , வெளிச்சத்தில்  பல  முறை  இருவரும்  உறவு  கொள்கிறார்களே? அப்போது  பார்க்கவில்லையா? 


3  பொதுவாக  துப்பாக்கியால்  கொலை  செய்வது  கேங்க்ஸ்டர்கள் தான். மனைவி , காதலியைக்கொலை  செய்ய  பெரும்பாலும்  துப்பாக்கி  யாரும்  யூஸ்  செய்வதில்லை . எதுக்கு  மெனக்கெட்டு  துப்பாக்கி  எல்லாம்  வாங்கி  அல்லாடுகிறார்  நாயகன்? 


4  நாயகனுக்கு  கொலை  செய்யப்பட்ட  நாயகி  பல  முறை  கால்  செய்திருக்கிறார். அந்த  கால்  ஹிஸ்டரியை  போலீஸ்  ட்ரேஸ்  அவுட்  பண்ணவே  இல்லையே?


5  கொலை  செய்யப்பட்ட  நாயகியின்  அம்மா  வை  நம்  வீட்டிலேயே  வைத்துப்பராமரிப்பதுதான்  கொலைகாரனுக்கு  அவன்  மனைவி  அளிக்கும்  தண்டனையாம், ஹய்யோ  ராமா. 


6  கொலை செய்யப்பட்ட  நாயகி  கர்ப்பமாக  இருக்கிறார். டி என்  ஏ  டெஸ்ட்  எடுத்தாலே  குழ்ந்தைக்கு  அப்பா  நாயகன்  தான்  என்பது  நிரூபணம்  ஆகி  விடுமே? போலீஸ்  அந்த  முயற்சியை  ஏன்  எடுக்கலை ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -18+  காட்சிகள்  உண்டு



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  எந்த வித்  திருப்பங்களும்  இல்லாத  சுமாரான  படம் .  பொழுது  போகாத  ஆண்கள்  மட்டும்  பார்க்கலாம் . ரேட்டிங் 1.5 / 5 


Dirty Hari
Promotional poster
Directed byM. S. Raju
Written byM. S. Raju
Produced byGuduru Sateesh Babu
Guduru Sai Puneeth
StarringShravan Reddy
Ruhani Sharma
Simrat Kaur
CinematographyM. N. Balreddy
Edited byJunaid Siddiqui
Music byMark K. Robin
Production
companies
SPJ Creations
HYLIFE Entertainment
Distributed byFriday Movies
Release date
  • 18 December 2020 (India)
Running time
107 minutes
CountryIndia
LanguageTelugu

Tuesday, October 03, 2023

வஞ்சகர் உலகம் (2018)- தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் + கேங்க்ஸ்ட்டர் டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்


  •      அன்பே சிவம், குணா, ஹே  ராம்  போன்ற  படங்கள்  எல்லாம்  ரிலீஸ்  ஆன  டைமில்  ரசிகர்களால்  சரியாகக்கொண்டாடப்படாமல்  இப்போது  பல  வருடங்கள்  கழித்து  பாராட்டு  மழையில்  நனைவது  போல 2018ல்  ரிலீஸ்  ஆன  ஒரு  படம்  சில  வருடங்கள்  கழித்துக்கொண்டாடித்தீர்க்கும்  படமாக  இருக்கும்  என  கணிக்கிறேன். எதேச்சையாக  இதைப்பற்றிக்கேள்விப்பட்டுப்பார்த்தேன்.  இது  உலக  சினிமா  தரத்தில்  இருக்கிறது

  •     ஸ்பாய்லர்  அலெர்ட்

  • சம்பவம்  1 - போலீஸ் ஒரு  கேங்க்ஸ்டர்  லீடரை  தேடுகிறது . அவனது  வலது  கை  , இடது  கை  என  அழைக்கப்படும்  இருவரை  கண்காணிக்கிறது . இந்த  இருவரில்  யாராவது  ஒருவரை  மடக்கி  விசாரித்தால்  அந்த  லீடரைப்பற்றிய  துப்பு  கிடைக்கும்  என  நினைக்கிறது. அந்த  இருவருக்குள்ளும்  ஈகோ  கிளாஸ்  ஆல்ரெடி  இருக்கிறது. போலீஸ்  , அந்த  வலது  கை , இடது  கை  மூன்று  தரப்புக்கும்  இடையே  நிகழும் ஆடு புலி  ஆட்டத்தில்  கேங்க்ஸ்டர்  லீடர்  யார்  எனத்தெரிய  வரும்போது  எல்லோருக்கும்  ஒரு  அதிர்ச்சி

சம்பவம் 2  - திருமணம்  ஆன  இளம்பெண்  கொலை  செய்யப்படுகிறாள் . அவளது  முன்னாள்  காதலன் , எதிர்  வீட்டில்  குடி  இருக்கும்  இந்நாள்  காதலன், கணவன்   இந்த  மூன்று  பேரும்  சந்தேக  வளையத்துக்குள்  இருக்கிறார்கள்  போலீஸ்  விசாரிக்கிறது. கொலை  செய்யப்பட்ட  பெண்ணின்  கணவன்  சம்பவம்  1ல்  குறிப்பிடப்பட்ட  கேங்க்ஸ்டர்  லீடரின்  வலது  கை  நபரின்  நெருங்கிய  நண்பன். அதனால்  அந்த  கேங்க்ஸ்டர்  லீடருக்கும், அல்லது  கேங்க்ஸ்டர்  குழுவிற்கும்  இந்தப்பெண்ணின்  கொலைக்கும்  சம்பந்தம்  இருக்கலாம்  என போலீஸ் சந்தேகிக்கிறது



இந்த  இன்வெஸ்ட்டிகேஷன்  பிராசஸ் , கேங்க்ஸ்டர்  குழுவிற்குள்  நிகழும்  அடிதடிகள்  தான்  மீதிக்கதை 


நாயகன்  ஆக  கேங்க்ஸ்டர் குழுத்தலைவனின்  வலது  கையாக  குரு  சோமசுந்தரம்  அசாதாரண  நடிப்பை  வெளிப்படுத்தி  இருக்கிறார். நான்  சைக்கோவா  மேடம்  என  டாக்டரிடமே  கேட்கும்  இடங்கள் , போலீஸ்  ஆஃபிசரை  டீல்  செய்யும்  இடம்  என  பல  இடங்களில்  அட்டகாசமான  நடிப்பு. பல  இடங்களில்  அண்டர்ப்ளே  ஆக்டிங் , சில  இடங்களில்  ரகுவரன் , பிரகாஷ்ராஜ்  போல  சைக்கோ  நடிப்பு  என  பின்னி  இருக்கிறார் 


நாயகி  ஆக  சாந்தினி துணிச்சல்  மிக்க  நடிகை  என்பதை  இந்த கேரக்டரை  ஏற்று  நடித்ததன்  மூலம்  நிரூபித்து  இருக்கிறார். மேலோட்டமாக  முதலில்  பார்க்கும்போது    வழி  தவறிய  பெண்  என்பது  போல  தோன்றினாலும்  அதற்கான  காரணம்  தெரிய  வரும்போது  மதிப்பு  மிக்கவர்  ஆகி  விடுகிறார். அவரது கண்களும் , சிரிப்பும்  பெரிய  பிளஸ்  பாயிண்ட் 

வில்லன்  ஆக  கேங்க்ஸ்டர் லீடரின்  இடது  கையாக  ஜான்  விஜய் . தெனாவெட்டான  நடிப்பு . ஆனால்  இதே  போல்  பல  படங்களில்  நடித்து  விட்டார் . அவர்  பாணியை  மாற்றிக்கொள்வது  நல்லது 


அழகம்  பெருமாள்  முக்கிய  வேடத்தில்  வருகிறார். போலீஸ்  ஆஃபீசர்  ஆக  எம் ஆர்  வாசு  கச்சிதமாக  நடித்திருக்கிறார். 

 நாயகியின்  எதிர்  வீட்டுக்காதலர்  ஆக  வரும்  சிபி புவணாசந்திரன்  கச்சிதம்

 122  நிமிடங்கள்  ஓடும்படி  எடிட்டர்  ஷார்ப்  ஆக  கட்  பண்ணி  இருந்தாலும்  நான்  லீனியர்  கட்  ஸ்க்ரீன்ப்ளே  நம்மை  சில  இடங்களில்  சலிப்புத்தட்ட  வைக்கிறது , மூன்று  மணி  நேரம்  படம்  ஓடுவது  போல  இழுக்கிறது 

 சாம்  சி எஸ்  பின்னணி  இசையில்  கலக்கி  இருக்கிறார். கேங்க்ஸ்டர்  தீம்  மியூசிக் , த்ரில்லர்   தீம்  இசை  என  கலந்து  கட்டி  இசை  அமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு  டார்க்  ஷேடில்  தரமாக  இருக்கிறது 

 திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  மனோஜ்  பீதா . இவருக்கு  இது  முதல் படமாம், நம்ப  முடியவில்லை 
  • சபாஷ்  டைரக்டர் (  மனோஜ்  பீதா)
1   வடிவேலு  ஒரு  படத்தில்  போலீசாக  வருவார். அப்போது  ஒரு  காதல்  ஜோடி  அவரிடம்  அடைக்கலம்  வருவார்கள்   அந்தப்பெண்ணின்  முதல்  கணவன், இரண்டாவது  காதலன், மூன்றாவது  கள்ளக்காதலன்  என  வரிசையாக  வருவார்கள் , அந்த  காமெடி  டிராக் கை  பட்டி  டிங்கரிங்  பண்ணி  நாயகியின்  கேரக்டர்  டிசைன்  வடிவமைக்கப்பட்டது  போலத்தோன்றினாலும்  நாயகியின்  குணத்துக்கு  நியாயம்  சேர்த்த  விதம்  அருமை 


2   யார்  கொலை  செய்திருப்பார்கள்  என்ற சந்தேக  வித்தை  நான்கு  பேர்  மீது  தூவி  சரியாக  காட்சிகளை  அடுக்கிய  விதம் 


3    குரு  சோம சுந்தரத்தின் கேரக்டர்  டிசைன் , அவரது  நடிப்பு



  •   ரசித்த  வசனங்கள் 

  • 1  ஏதாவது  கெட்டது  நடந்தா  அது  நாய்க்கும் , பெண்ணுக்கும்  தான்  முதல்ல  தெரியுமாம், மோப்ப  சக்தி  ஜாஸ்தி 

  • 2  போலீஸ்  நாங்க  நல்லவிதமா, நம்பற  மாதிரி  பேசறவங்களையே  நம்ப  மாட்டோம், நீ  என்னடான்னா  பொய்  பேசிட்டு  நம்பச்சொல்றே? 

  • 3  இவரு  பெரிய  துப்பறியும்  சிம்பு 

  •  சார்,  அது சாம்பு  சார் 

  • 4   அது  எப்படிய்யா  வேலை  வெட்டியே  இல்லாம  டெய்லி  மூணு  வேளை  முழு முழு  குவாட்டரா  முழுங்கிட்டு  இருக்கே? குடல்  எல்லாம்  வெந்திருக்குமே? 

  • 5 போலீஸ்  காரனுக்கு சில  விஷயம்  தான்  தெரியும், பத்திரிக்கைக்காரனுக்குப்பல  விஷயம்  தெரியும்

  • 6  உன்னைக்கொல்வதுதான் உனக்கான  மன்னிப்பு
  •  லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1    எதிர்  வீட்டில்  குடி  இருப்பது  நாயகி தான், அவர்  தான்  நம்  ஹவுஸ்  ஓனர்  என்பது  காதலனுக்குத்தெரியாமல்  இருப்பது  எப்படி ?


2  நாயகி  திருமணம்  ஆனவர்  என்பது  தெரியாது  என்கிறார்  காதலன், நாயகி  வீட்டுக்கு  அடிக்கடி  செல்பவர்  அங்கே  வீட்டில்    ஹாலில்  தம்பதி  ஃபோட்டோ  இருப்பதைப்பார்க்க  மாட்டாரா? 


3  ஒரு  காட்சியில்  நாயகியின்  கணவன்  நாயகியின்  காதலனிடம்  நான்  தான் உங்க  வீட்டு  ஹவுஸ்  ஓனர்  என  அறிமுகப்படுத்திக்கொள்கிறார். ஹவுஸ்  ஓனரையும்  தெரியாது  , ஹவுஸ்  ஓனரின்  சம்சாரத்தையும்  தெரியாது  எனும்போது  அவர்  யாரிடம்  வீட்டு  வாடகை  கொடுப்பார் ?  அட்வான்ஸ்  யாரிடம்  கொடுத்தார் ? 

4   நாயகியின்  முன்னாள்  காதலன் , இந்நாள்  கணவன்  இந்த  இரண்டு  ரோலுக்கும்  புகழ்  பெற்ற  நமக்கு  அறிமுகம்  ஆன  நடிகர்களை  நியமித்து  இருக்கலாம் 


5   படம்  முழுக்க  போலீஸ்  ஆஃபிசருக்கு  யாராவது  அட்வைஸ்  பண்ணிக்கொண்டே  இருக்கிறார்கள் 

6  டம்மி  கேரக்டர்  ஆக  வரும் பிரஸ்  ரிப்போர்ட்டர்  போலீஸ்  ஆஃபீசர்  ரேஞ்சுக்கு  எல்லா  வேலைகளையும்  செய்வது  ஓவர் 


  • அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  போதைபொருட்களை  யூஸ்  செய்வது   , தம், தண்ணி  காட்சிகள்  அதிகம் 


  • சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   உலக  சினிமா  ரசிகர்கள்  பார்க்கலாம்  பொறுமை  தேவை . மாறுபட்ட  க்ரைம்  த்ரில்லர் , ரேட்டிங்  3 / 5 

Vanjagar Ulagam
Poster
Directed byManoj Beedha
Written byManoj Beedha
Vinayak
Screenplay byManoj Beedha
Produced byManjula Beedha
Prasanna JK
StarringGuru Somasundaram
Ciby Bhuvana Chandran
Vishagan Vanangamudi
Anisha Ambrose
CinematographyRodrigo Del Rio Herrara
Saravanan Ramasamy
Edited byAnthony
Music bySam C. S.
Production
company
Labyrinth Films
Release date
  • 7 September 2018
[1]
Running time
122 minutes
CountryIndia
LanguageTamil

Monday, October 02, 2023

அந்தமான் காதலி (1978) - தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @ யூ ட்யூப்

 


   முக்தா  சீனிவாசன்  இயக்கத்தில்  சிவாஜி  நடித்த  படம் . மெகா  ஹிட்  பாட்டுக்கள்  இரண்டு  இதில்  உண்டு , பாட்டுக்காகவே  படம்  பார்த்தேன்.இது  தெலுங்கில் அந்தமான்  அம்மயி  என்ற  பெயரில்  ரீமேக்கும்  செய்யபப்ட்டது. 1977  நவம்பர்  10  தீபாவளி  அண்றே  படம்  ரிலீஸ்  ஆக  வேண்டியது , ஆனால்  அதே  நாளில்  சிவாஜியின்  இன்னொரு படம்  ஆன  அண்ணன்  ஒரு  கோயில்  ரிலீஸ்  ஆனதால் 1978 குடியரசு  தினத்தன்று இது  ரிலீஸ்  ஆகி  வெற்றி பெற்றது 


     ஸ்பாய்லர்  அலெர்ட்


சம்பவம் 1 -  நாயகன்  நாயகியைக்காதலித்து  காந்தர்வ  முறைப்படி  மணம்  புரிந்து  நாயகி  கர்ப்பம்  ஆக  இருக்கிறார். நாயகி  உடல்  நலம்  குறைவாக  இருந்ததால்  டாக்டரை  அழைத்து  வர  டாக்டர்  வீட்டுக்கே  சென்று  அவரை  அழைக்க  அப்போது  நடந்த  ஒரு  விவாதத்தில்  டாக்டரை  அடிக்க  அவர்  மயக்கம்  ஆகிறார். ஆனால்  தான்  அவரை  கொலை  செய்து  விட்டதாக  அஞ்சி  நாயகன்  அந்த  இடத்தை  விட்டே  ஓடி  விடுகிறார். அந்தமான்  தீவை  விட்டு  வெளியேறி  மிக  சிரமம்  ஆன  வாழ்க்கை  வாழ்கிறார்


சம்பவம் 2 - ஒரு  கோடீஸ்வரர்  நாயகனைக்கண்டு  இரக்கப்பட்டு  தத்து  எடுத்து  அவரை  வளர்க்கிறார். அவரது  கம்பெனிக்கு  நாயகனை   எம் டி  ஆக்குகிறார். அவரது  ஒரே  மகளை  நாயகன்  பொறுப்பில்  வளர்க்க  விட்டு  விட்டு  அவர்  இறந்து  விடுகிறார்


சம்பவ,ம்  3  நாயகனின் கார்டியன்  கம்  தொழில்  அதிபர் மறைவுக்குப்பின்  அவரது  மகளை  கண்ணும்  கருத்துமாக  வளர்த்து  வருகிறார். அந்த  மகள்  கலையில்  ஆர்வம்  உள்ளவர். அரிதான  சிலை  ஒன்று  ஏலத்துக்கு  வருவதை  அறிந்து  அந்த  சிலை  தனக்கு  வேண்டும்  என  அடம்  பிடிக்கிறார். ஆனால்  எலம்  நடக்க  இருப்பது  அந்த மான்  தீவில் . 25  வருடங்களுக்குப்பின்  அங்கே  செல்லும்  நாயகன்  தன்  மனைவியைத்தேடுகிறார்


சம்பவ,ம்4  -  தன்   எஜமானின்  மகள்  அந்த  சிலை  வடிவமைத்த  சிற்பக்கலைஞனைக்காதலிக்கிறாள், அவனையே  மணம்  முடிக்க  விரும்புகிறார். அந்தக்கலைஞனின்  லட்சியமோ  தன்  அம்மாவை  ஏமாற்றி  விட்டு  ஓடிப்போன  தன்  அப்பாவைக்கண்டுபிடித்த  பின்  தான்  திருமணம்  என  இருக்கிறார். அதே  போல்  சிற்பக்கலைஞனின்  தாய்  மாமாவும்  பழி  வாங்கும்  உணர்வுடன்  காத்திருக்கிறார்


சம்பவம்,5  -  நாயகன்  தன்  மனைவியை  சந்திக்கிறார்/  ஆனால்  மனைவியோ  தன்  மகனுக்கு  இவர்  தான்  அப்பா  என்பதை  உலகத்துக்கு  சொல்ல  மாட்டேன்  என்கிறார். சொன்னால்  தன்  அண்ணன்  தன்  கணவனைக்கொன்று  விடுவார்  என  பயபப்டுகிறார் \


 இதற்குப்பின்  நாயகன்  எடுக்கும்  முடிவு  தான்  க்ளைமாக்ஸ்


 நாயகன்  ஆக  சிவாஜி  கம்பீரமாக  நடித்திருக்கிறார்.  சில  இடங்களில்  ஓவர்  ஆக்டிங் . குறிப்பாக  க்ளைமாக்ஸ்  காட்சி . 


 நாயகி  ஆக  சுஜாதா  பாந்தமாக  நடித்திருக்கிறார். . மகனாக  சந்திர  மோகன்  சுமார்  ரகம் .  தொழில்  அதிபரின்  மகளாக  கவிதா  ஓக்கே  ரகம் 

 டாக்டர்  ஆக  தேங்காய்  சீனிவாசன் , அவர்  மனைவியாக  மனோரமா  காமெடி  டிராக்  சுமார் தான்


நாயகியின்  அண்ணனாக  செந்தாமரை  மாறுவேடப்போட்டிக்காரர்  மாதிரி  ஒரு  கொடூர  மேக்கப் 


திரைக்கதை  எழுதி  இருப்பது  ஏஸ் பிரகாசம். பின்  பாதி  இழுவை ., க்ளைமாக்ஸ்   சொதப்பல் 

எம் எஸ்  விஸ்வநாதன்  இஒசையில்  பாடல்கள்  கலக்கல்  ரகம் 



சபாஷ்  டைரக்டர்  (      முக்தா  சீனிவாசன் ) 


1    இடைவேளையோடு  முடிந்து  விட்ட  கதையை  ஜவ்வாக  இழுத்து  க்ளைமாக்ஸ்  வரை  ஆடியன்சை  கட்டிப்போட்ட  சாமார்த்தியம் 


2   காலத்தால்  அழிக்க  முடியாத  பாடல்களை  கம்போஸ்  செய்தது 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1   அந்தமானைப்பாருங்கள்  அழகு 

2  நினைவாலே  சிலை  செய்து  உனக்காக  வைத்தேன் 

3  பணம்  என்னடா\

4   அடி  லீலா 


  ரசித்த  வசனங்கள் 


1 பணச்சந்தைல  ரொம்ப  மலிவா  விலை  போவதே  இந்தக்காதல் தான் 

2   ட்ரீட்மெண்ட்  கொடுக்கும்  வரை  டாக்டர்  தெய்வம் , பில்  பார்க்கும்போது பணப்பேய்


3  ஏழைங்க  வீட்டில்  கோழிக்கறின்னா   ஒண்ணு  ஏழைக்குக்காய்ச்சலா  இருக்கும், அல்லது  கோழி  செத்திருக்கும் 


4 வாழ்க்கைல  மறக்க  முடியாதது  , மறுக்க  முடியாதது  காதல்  மட்டும்தான்


5  இல்லைங்கறதை  ரகசியமாத்தான்  சொல்லனும், இருக்குங்கறதை  பட்டவர்த்தனமாய்  சொல்லலாம் 


6  அதிக  சந்தோஷம்  ஆபத்துனு  சொல்வாங்க \\


7 பிரிந்த  உறவுகள்  ஒன்று  சேர்வது  துக்க  வீட்லயும், கல்யாண  வீட்லயும் தான் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஒரு  தபால் காரர்  25  வருசமா  ஒரே  ஊரில்  ஒரே  ஏரியாவில்  ட்ரான்ஸ்ஃபர், பிரமோஷன்  எதுவும்  இல்லாமல்  வேலை பார்ப்பதை  உலக  அளவில்  இப்போதுதான்  பார்க்கிறேன்


2  நாயகி  ஆன  சுஜாதா  பூஜை  ரூமில்  வெறும்  காலுடன் இருக்க  நாயகன்  ஆன  சிவாஜி  செருப்புக்கால்களுடன் , ஷூ கால்களுடன்  இருக்கிறாரே? டைரக்டர்  தான்  கவனிக்கலை. உலகம்  போற்றூம்  நடிகர்  திலகமுமா  கவனிக்கலை ?


3   டைனிங்  டேபிள்  மேனர்ஸ்  தெரியாத  ஆளாக  நாயகன்  இருக்காரே? வாஷ் பேஷனில்  போய்  கை  கழுவாமல்  டேபிள் லயே  ஒரு  பாத்திரத்தில்  கை  கழுவறார்


4   தன்  குழந்தையின்  பேரைச்சொல்ல  நாயகி  மறுக்கிறார். சொன்னால்  தன்  அண்ணன்  கண்டு பிடித்து  பழி  வாங்குவாராம். அப்போ  ஸ்கூலில்  சேர்க்கும்போது  குழந்தைக்கு   என்ன  இனிஷியல் ? எக்ஸ் ? 


5    நாயகியின்  அண்ணன்  செந்தாமரை  25  வருசமா  வேலைக்கும்போகாம  வெட்டிக்கும்  போகாம  தண்டமா  சுத்திட்டு  இருக்கார் , பூவாவுக்கு  என்ன  பண்றார் ?

6  நாயகன்  டாக்டரை  அடித்தவுடன்  இறந்ததாக  நினைக்கிறார். ஒரே  அடியில்  ஆள்  இறக்க  அவர்  என்ன  கடோத்கஜனா? 


7  நாயகன்  பயந்து  போய்  ஓடியது  சரி . பண பலம்  வந்த  பின்  ஆள்  விட்டு  நாயகியை  தேடி  இருக்கலாமே?  நாயகி  ஃபோட்டோவை  பத்திரிக்கையில்  வெளியிட்டு  தேடி  இருக்கலாமே? 

8   நாயகனும், நாயகியும் 25  வருடங்களுக்குப்பின்  முதல்  முறையாக  சந்திக்கிறார்கள் .  பார்த்ததும்  அட்;லீஸ்ட்  கட்டிக்கூடப்பிடிக்கவில்லை ,  டைனிங்  டேபிளில்  உட்கார்ந்து  சாப்பிடுகிறார். சாப்பாட்டு  ராமன்  கூட  அப்படிப்பண்ண  மாட்டான் . பெட்ரூம்  தான்  போவான் 

9   நாயகனும், நாயகியும்  சந்தித்த  உடன்  படம்  முடிந்து  விடுகிறது ., அதுக்குப்பின்  ஜவ்வாக  இழுத்து  விட்டார்கள் 


10  க்ளைமாக்ஸ்  காட்சி  எல்லாம்  மடத்தனமான   கற்பனை . வெடி  விழும் இடத்துக்குப்போவாராம் , முகம்  எல்லாம்  ரத்தக்காயம்  ஆகுமாம், அடுத்த  சீன்லயே  மழு  மழு  கன்னத்துடன்  சிரிப்பாராம். தழும்பு  ஆறவே  மறையவே  12  வருசம்  ஆகுமே? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பாடல்களுக்காக  பார்க்கலாம்,  க்ளைமாக்ஸ்  சொதப்பல்களைக்கண்டு  மனம்  விட்டு  சிரிக்கலாம். ரேட்டிங் 2.25 / 5 


Andaman Kadhali
Poster
Directed byMuktha Srinivasan
Written byA. S. Prakasam
Produced byMuktha Ramaswamy
StarringSivaji Ganesan
Sujatha
CinematographyR. Sampath
Edited byV. P. Krishnan
Music byM. S. Viswanathan
Production
company
Muktha Films
Release date
  • 26 January 1978
CountryIndia
LanguageTamil

Sunday, October 01, 2023

டைனோசர்ஸ் (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( கேங்ஸ்டர் ஆக்சன் டிராமா)@ அமேசான் பிரைம்

 


  எங்கேயும் எப்போதும்  என்ற  மெகா  ஹிட்  படத்தைத்தந்த  இயக்குநர்  எம்  சரவணனின்  சிஷ்யரான எம் ஆர்  மாதவன் இயக்குநர்   இரா  பார்த்திபனின்  அதி  தீவிர  ரசிகர்  போல, புதிய  பாதை  காலத்து  பார்த்திபனிடம்  இருந்த  நக்கல் , நையாண்டி  உடன் கலக்கலான  வசனங்களுடன் , கூஸ் பம்ப்  காட்சிகளுடன்  பிரமாதமான  ஒரு  கேங்க்ஸ்டர்  ப்டத்தைத்தந்துள்ளார். 2023ஆம்  ஆண்டின்   அண்டர்  ரேட்டட்  மூவி  என  இதை  சொல்லலாம். 

    ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்,  அவன்  அண்ணன்  இருவருக்கும்  பொதுவான  ஒரு  நண்பன்  இருக்கிறான். இவன்  ஒரு  கேங்க்ஸ்டரிடம்  அடியாளாக  முதலில்  இருந்தவன். இப்போது  திருமணம் ஆகி  விட்டதால்  அந்த  வேலையை  விட்டு  விட்டு  மனம்  திருந்தி  வாழ்ந்து  வருபவன்


 ஆனால்  அந்த  நண்பன்  அடியாளாக  இருந்த  போது  நிகழ்த்திய  ஒரு  கொலைக்கேசுக்காக  கோர்ட்டில்  சரண்டர்  ஆக வேண்டிய  தேவை  ஏற்பட்டபோது  நாயகனின்   அண்ணன்  நண்பனுக்குப்பதிலாக  தான்  ஜெயிலுக்குப்போகிறான்

ஆனால்  இந்த  ஆள்  மாறாட்டம்  தெரிந்த  வில்லன்  நண்பனைப்போட்டுத்தள்ள  அதற்குப்பின்  நாயகன்  எடுக்கும்  முடிவு  தான்  மீதி  திரைக்கதை  


வழக்கமான  கேங்க்ஸ்டர்  கதை  தானா? என  சலித்துக்கொள்ளத்தேவை  இல்லை , திரைக்கதை  விறுவிறுப்பு , வசனத்தில்  நகாசு  வேலை  மூலம் இயக்குநர்  தரமான  ஒரு  படத்தை  தந்திருக்கிறார் 

  நாயகன்  ஆக உதய்  கார்த்திக்  ஆர்  பார்த்திபன் போலவே  நக்கல்  நையாண்டி  உடன்  நடித்திருக்கிறார். பல  காட்சிகளில்  கை  தட்டல்  வாங்குகிறார்.


விஜய்க்கு  திருப்பு  முனை  படமாக  அமைந்த  திருமலை  படத்தின்  இயக்குநர்  ரமணா  ஒரு  கெஸ்ட்  ரோல்  செய்திருக்கிறார். ஓப்பனிங்  சீனிலும், க்ளைமாக்ஸ்  சீனிலும்  வருகிறார்.  எதற்கு  என்று  தெரியவில்லை , மெயின்  கதைக்கும், இவருக்கும்  சம்பந்தம்  இல்லை 


நாயகனின்  நண்பனாக மாறா  துடிப்பான  நடிப்பு, அண்ணனாக  ரிஷி ரித்விக் குணச்சித்திர  நடிப்பு 


நாயகி  ஆக  சாய்  ப்ரியா  தேவா கொழுக்  மொழுக்  உடல்  அமைப்பு , கச்சித  நடிப்பு.  இரு  தாதாக்களாக  ஜெய்  பாபு  , மனோக்‌ஷா இருவரும்  நல்ல  வில்லத்தன  நடிப்பு 


நாயகனின் அம்மவாக  வருபவர்  க்ளைமாக்ஸ்  காட்சியில்  பட்டாசாக  நடித்திருக்கிறார்


போபோசசியின்  இசையில்  பிஜிஎம்  தெறிக்கிறது. ஜோஸ்வி  ஆனந்த்  ஒளிப்பதிவில் காட்சிகளை  உயிரோட்டமாக  கண்  முன்  நிறுத்துகிறார்


திரைக்கதை  எழுதி  இயக்கிய  எம் ஆர்  மாதவன்  மட்டும்  முதல்  பாதி  போல  பின்  பாதியையும்  கொண்டு  போய்  இருந்தால்  இது  வேற  லெவல்  படம்  ஆகி  இருக்கும். கொஞ்சம்  தடுமாறி  இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர் ( எம் ஆர்  மாதவன்)


1  வில்லனின்  வீட்டிலேயே   மாட்டிய  நாயகனின்  நண்பன் வில்லன்  சந்தேகித்த  ஆளோ? வில்லனின்  தங்கையின்  கணவனைக்கொன்றவனோ என்ற  டவுட்டில்  பேர்  சொல்லி  சிக்க  வைக்கும்  கேமில்  சிக்காமல்  இருக்க அவர்கள்  கையாளும்  தந்திரமான அவர்கள்  ஆட்களை  பேர்  சொல்லி  இண்ட்ரோ  கொடுக்கும்போது  நாயகனின்  நண்பன்  பெயரை  மாற்றிச்சொல்வது   செம  அப்ளாஸ்  வாங்கும்  இடம்,  டெம்ப்போ  ஏறி அவனவன்  பிபி  எகிற  உட்கார்ந்த  காட்சி , வெல்டன்  டைரக்டர். 


2  அந்த  சீனில்  செம  ட்விஸ்ட்டாக  நாயகன்  திடீர்  என  அந்த  இடத்துக்கு  வந்து  நண்பன்  பெயரை  சொல்லி  அழைத்து  டிக்கெட்  வேணுமா???   என  கேட்க  வில்லன்  அவனுக்கு  டிக்கெட்    கன்ஃபர்ம்  என  கெக்கலிக்கும்  காட்சி  அடிபொலி  ஆக்சன்  சீக்வன்சுக்கான  லீடு 


3  நாயகனின்  அண்ணனை   ஜெயிலில்  சந்திக்க  வரும்  ஒரு  வில்லன்  தன்  கை  வாட்ச்  மூலம்  ஸ்பீக்கர்  ஃபோனில்  வில்லன்  நெ 2   ஒட்டுக்கேட்பதை  உணர்ந்து  அண்ணன்  பேசும்  வசனம்  செம 


4  காதல்  பிரேக்கப்  ஆன பிறகு  நாயகி  தன்  புதிய  காதலருடன் நாயகனைப்பார்க்க  வரும்போது   நாயகி  பணத்துக்கு  விலை  போய்  விட்டார்  என்பதை  சிம்பாலிக்காக  உணர்த்தும்  வகையில்  ஏலம் விடும்  காட்சி  கே  பாலச்சந்தர்  டச்


  ரசித்த  வசனங்கள் 

1 எல்லாரும்  செத்தாதான்  ஆறடி, நாங்க  வாழ்றதே  ஆறடி ல தான்


2  போலீஸ்  நான்  அடிச்சா  என்ன  வரும்னு  தெரியுமில்ல?


முதல்ல   100 க்கு  ஃபோன்  அடிச்சா  நீங்க  வாங்க  சார் 


3   இவன்  ஏன்  உஷார்  ஆன  பெண்ணையே  மீண்டும்  மீண்டும்  உஷார்  பண்ணிக்கிட்டு  இருக்கான்? 


4 ஒரு  பொண்ணைப்பிடிச்சிருந்தா  போய்  முதல்ல  அவ கிட்டே சொல்லுங்க , இப்படிப்பச்சைக்குழந்தை  பலூனைப்பார்க்கற  மாதிரி  பார்த்துட்டு  இருக்காதீங்க 


5  உனக்கு  கிஃப்ட்  வாங்கித்தர்றேன், உனக்கு  சர்ட்  பிடிக்குமா டி  சர்ட்  பிடிக்குமா  


 டி  சர்ட்போட்டு  அதுக்கு  ,மேல சர்ட்  போடப்பிடிக்கும்  


அடப்பாவி


6  நீ  தாறுமாறான  ஃபிகரு , என்  லைஃப்ல  வந்த  சுகரு , என்  அத்தை  பெத்தெடுத்த  ஃபிகரு , எப்படி  கவிதை  


7  ஹோட்டலுக்கே  ஓனர்  ஆகியும்  டிப்ஸ்க்கு  அலையுது பாரு 


 ஹலோ, டிப்ஸ்  வாங்கி  வாங்கித்தான்  ஓனரே  ஆனேன்


8  உங்க  ஊர்ல  அஸ்ட்ராலஜி  மாதிரி  எங்க  ஊர்ல  கிஸ்ட்ராலஜி  ஒண்ணு  இருக்கு . ஒரு  ஆண்  ஒரு  பெண்ணை  முதன்  முதலா  கிஸ்  பண்ணும்போது  அவன்  ரெண்டு  கையையும்  எங்கே  வெச்சிருக்கான்னு பார்த்தே  அவன்  லவ்  ஒரிஜினலா?னு  கண்டு பிடிச்சிடலாம்,  டவுட்னா  கூகுள்  பண்ணிப்பாரு 


9   ஏண்டா , அது  வாயா? வாட்டர்  பாட்டிலா?இந்த உறி  உறியறே? 


10  விட்ரு  விட்ருனு  சொன்னவனையே  வெட்ற  ஆள்  நான், உன்  மச்சான்  வெட்டிருவியா? வெட்டிருவியா?னு  கேட்டா  எப்படி  சும்மா  விட  முடியும் ? 

11  நான்  சாமி  கும்பிட  கோயிலுக்கும்  போனதில்லை , சம்பவம்  பண்ணிட்டு ஜெயிலுக்கும்  போனதில்லை 

12  நான்  எந்தத்தப்பும்  பண்ணாம  உள்ளே  வந்தவன் , வெளியே  போய்  அந்தத்தப்பை  நான்  பண்ணிக்கறேன் 

13 இன்னாபா? குடிச்சிருக்கியா? 

 இல்லையே? முழுங்கிட்டேன்

14   ஆயிரம்  கிமீ  தாண்டி  கோயிலுக்கு  வந்தாலும்  மாலையை  சாமி  கழுத்துல  நாமா  போடறோம்? அய்யர் கைல  கொடுத்து  அவரைத்தானே  போடச்சொல்றோம்? 


15  அந்தப்பக்கம்  போகாதடி  அங்கே  ஒரு  ஆள்  எல்லாருக்கும்  முத்தம்  கொடுத்துட்டு  இருக்கான் 


 யாரு? விஜய்  சேதுபதியா>


 அந்தத்தம்பி  ஆம்பளைங்களூக்குதான்  கொடுக்கும், இவன்  பொம்பளைங்களுக்குக்கொடுக்கறான்


16  நம்ம  எதிரி  பெருசா  இருந்தாதான்  நம்ம  எதிர்காலம்  பெருசா  இருக்கும்


17  பிறக்கும்போது ஈயாவோ  எறும்பாவோ கூட  பிறந்துடலாம், ஆனா  சாகும்போது  டைனசரா  சாகனும், அப்போதான்  தூக்கறதுக்கு  1000 பேராவது  வருவாங்க 


18   வெள்ளைப்பேப்பருக்கு  எதுக்கு  ஜெராக்ஸ் ? எனக்கு எல்லாம்  எதுக்கு  புள்ளை  குட்டிங்க 


19  மாமா, என்னை  நம்பி  வந்த  நாயே  இப்போ சொறி  நாயா  கிடக்கு, என்னை நம்பி  பொண்ணுக்குடுக்கறேங்கறே?> 


20 நாம  இப்படியே  வாய்ல  வடை  சுட்டுட்டு  இருக்கறதால  ஹிந்திக்காரன்  இங்கே  வந்து இட்லி  சுட  ஆரம்பிச்ட்டான்


21  இந்த  மனுசப்பயலுகளூக்கு சக  மனுசன்  தோத்தா  எவ்ளோ  சந்தோஷம் ? 


22  அந்த  ஆளு  ஏன்  என்னை  அடிக்காம  அங்கே  நின்னு  ஓ பி  அடிச்சுட்டு  இருக்கான் ? 


23  யாரு  வேணா  யாரை  வேணா  கொலை  பண்ணலாம், ஒருவனை  வாழ  வைக்கனும், அதுதான் கெத்து 


24  நம்ம  ஏரியாவில்  இருந்து  சிரியா  வரைக்கும்   அதிகாரம்தான்  பிரச்சனையாடா? 


25   ஒரு  வேலை  வந்திருக்கு , ஆர்டர்  என்னுது , பார்டர்  உன்னுது 


26   இன்னைக்கு  நைட்டுக்குள்ள  நான்  அவனை  முடிக்கலைன்னு  வை, அவ தான்  இங்கே  வெயிட்டு 


27  அது  என்னடா  உதவி  செய்யறவன்  எல்லாம்  மறைமுகமாவே  செய்யறீங்க ? யாருக்குமே  தெரியாம  அவனுங்க  பண்ற  உதவி  இவனுங்களுக்கு  மட்டும்  எப்படித்தெரியுது ?


28  நாங்க  எல்லாம்  சுனாமிலயே  ஸ்விம்மிங்க்  போட்டவங்க 


 டேய், நீ  மதுரை  தானே? மதுரைல  எங்கடா கடல்   இருக்கு ? எங்கெடா  சுனாமி  வந்துச்சு ? 


29  ஏரோப்ளேன்  நிழல்  தான்  நம்ம  ஏரியா  மேல  விழுது , நாம  ஏரோப்ளேன்ல  பறக்கனும் 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகனின்  நண்பனின்  இழவு  வீட்டுக்காட்சி  ரொம்பவே  நீளம், அதில்  நாயகன்  செய்யும்  அலப்பறைகள்  ஆர்  பார்த்திபன்  தனமாய்  ரசிக்க  வைத்தாலும்  ஓவர்  டோஸ் . இன்னும்  ஷார்ப் ஆக  ட்ரிம்    பண்ணி  இருக்கலாம் 

2  படத்திலேயே  செம  கூஸ்பம்ப்  சீன்  வில்லனின்  வீட்டில்  பணம்  கவுண்ட்  பண்ணும்  சீன்  தான். அதில்  நாயகனின்  நண்பன் ரகசியக்குரலில்  அடியாளிடம்  பேசுவது  ஒரு  அடி  தூரத்தில்  அருகிலேயே  அமர்ந்திருக்கும்  வில்லனுக்குக்கேட்காதா? 

3  மாறுபட்ட  திரைக்கதை  உள்ள  படத்தில்  நாயகன் - நாயகி  காதல்  காட்சி  மட்டும்  மாமூல்   மசாலா படங்கள்  போல்  இருப்பது  ஏனோ? சர்க்கஸ்  வித்தை  காட்டி  நாயகியை  வீழ்த்துவது  எல்லாம்  சிரஞ்சீவி  படத்துக்கு  ஓக்கே 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ / ஏ


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பரபரப்பான  சில  கூஸ்பம்ப்  காட்சிகளுக்காகவே  பார்க்கலா,ம், டோண்ட்  மிஸ்  இட் . ரேட்டிங்  3 / 5 



Saturday, September 30, 2023

மால் (2023) -தமிழ் - சினிமா விமர்சனம்( ஹைப்பர் லிங்க்டு ஆக்சன் டிராமா) @ ஆஹா தமிழ்

 


    பெரிய  ஹீரோ  மட்டுமல்ல, அறிமுகம்  ஆகி  தெரிந்த  முகங்களே  இல்லாமல்  ரசிக்க  வைக்கும்படி  ஒரு  லோ பட்ஜெட்  படம்  கொடுக்க  முடியும்  என  நிரூபித்து  உள்ளார்கள் .  ஸ்க்ரிப்ட்  தான்  முக்கியம்  என்பதை  மீண்டும்  உணர்த்தும்  படம்  இது 

    ஸ்பாய்லர்  அலெர்ட்


100  கோடி  ரூபாய்  மதிப்புள்ள  ராஜராஜ  சோழன்  நிலையை  கடத்திய  கும்பல்  ஒன்று  அதை  உரிய  பார்ட்டியிடம்  கை  மாற்றி  விட  முனையும் போது  ஏற்படும்  சிக்கல்களும், நிகழ்வுகளும்  தான்  கதையின்  ஒன் லைன்

சம்பவம் 1  -  செயின் பறிப்பு  மாதிரி  சாதாரண  திருட்டு  நடத்தி  வாழ்க்கையை  ஓட்டும் இரு  இளைஞர்கள்  கை  வசம்  ஒரு  லட்ச  ரூபாய்  மதிப்புள்ள  பைக்  ஒன்று செகன்ட்ஸ்  சேல்சில்  கிடைக்கிறது. ஒரு  நாளில்  பணம்  புரட்ட  வேண்டும். அதனால்  போலீஸ்  ஆஃபீசர்  வீட்டில்  கை  வைக்கலா  என  திட்டம்  போடுகிறார்கள் . ஆனால்  அவர்கள்  கன்னம்  வைக்கப்போன  இடத்தில்  கொலை  செய்யப்பட்ட  போலீஸ்  ரத்த  வெள்ளத்தில்  இருக்கிறார் 


 சம்பவம்  2 -  ஒரு  காதல்  ஜோடி . இன்னும்  பரஸ்பரம்  தங்கள்  காதலை  வெளிப்படுத்திக்கொள்ளவில்லை. தக்க  தருணம்  பார்த்துக்காத்திருக்கிறார்கள் .பெண்ணுக்கு  ஒரு  தங்க  சங்கிலி பரிசாக  அளிக்கிறார்  அந்த  ஆண் . அப்போது  சம்பவம்  1ல்  வந்த  திருடர்கள்  அந்த  செயினை  பறித்துச்செல்கின்றனர். அந்த  காதல்    ஜோடி  அவர்களையும்  அறியாமல்  சிலை  கடத்தல் கும்பலை  கிராஸ்  செய்கிறார்கள் 


 சம்பவம்  3  -  100  கோடி  ரூபாய்  மதிப்புள்ள  ராஜ  ராஜன்  சிலையை  கை  மாற்றி  விட  வேண்டும் . இதற்காகவே   இருக்கும்  இரு  கேங்க்  களில்  ஒரு  கேங்கை   கடத்தல் காரர்கள்  தேர்ந்தெடுக்க  மீதி  இருக்கும்  இன்னொரு  கேங்க்  இதைத்தடுக்க  நினைக்கிறது . இந்த  இரு  கேங்க்  ஆட்கள்  கண்ணில்  மண்ணைத்தூவி ஒரு  போலீஸ்  இன்ஸ்பெக்டர்  அந்த  சிலையை  ஆட்டையைப்போட  நினைக்கிறார் 


 மேலே  சொன்ன  மூன்று  சம்பவங்களும்  ஒரு  புள்ளியில்  இணைவது  எப்படி  அதற்குப்பின்  நிக்ழும்  திருப்பங்கள்  தான்  மீதிக்கதை 


இந்தப்படத்தில்  நாயகன் , நாயகி , வில்லன்  என்று  யாரையும்  சொல்ல  முடியாது . திரைக்கதை  தான்  நாயகன் 


 அனைவரும்  கொடுத்த  பாத்திரத்தை  ஏற்று  கச்சிதமாக  நடித்திருக்கிறார்கள். போலீஸ்  இன்ஸ்பெக்டர்  ஆக  வருபவர்  மட்டுமே  நமக்குத்தெரிந்த  முகம்


எடிட்டிங்  100  நிமிடங்களில்  ஷார்ட்  ஆக  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்கள் . ஒளிப்பதிவு ., ஆர்ட்  டைரக்சன் , பின்னணி  இசை  எல்லாமே  இது  ஒரு  லோ பட்ஜெட்  படம்  என  பறை  சாற்றுகிறது 

சபாஷ்  டைரக்டர்   (  தினேஷ்  குமரன்) 


1  டிராஃபிக்  கில்  பைக்கில்  வரும்  ஆட்களை  செக்  செய்யும்  போலீஸ் இருவரிடம்  சினிமாக்கு  போய்ட்டு  வர்றீங்களா?  வட  சென்னை  படமா? ஒரு  டயலாக்  சொல்லுங்க  என்றதும்  கெட்ட    வார்த்தை  சொல்லி  விட்டு   பட  டயலாக்  என  கலாய்க்கும்  காட்சி 

2   செயின்  ஸ்னாட்ச்  இளைஞர்களாக  வருபவர்களில் ஒரு  டீன்  ஏஜ்  பையன்  காமெடி  டயலாக்  டெலிவரியில்  மனம்  கவர்கிறார். சினிமாத்தனம்  இல்லாத  நடிப்பு 

3   மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லை  என்றாலும் சிலை கடத்தல்    சம்பவத்தில்  முக்கிய  ஆள் ஒருவர்  தனது  வெட்டிங்  டே  வைக்கொண்டாட  தன்  மனைவியுடன்  நெருக்கமாக  இருக்கும்  காட்சியை  ஸ்ணீக்  பினீக்  கில்  வெளியிட்டு  பரபரப்பை  கிளப்பிய  லாவகம்


4  அந்த  தம்பதி யைத்தேடி  நான்கு  பேர்  வருவதும்  ஃபோனை  கணவனுக்கு  டயல்  பண்ணி  ஸ்பீக்கரை  ஆன்  பண்ணி  அவர்கள்  பேசுவதை  மனைவி  கணவன்  கேட்கச்செய்யும்  காட்சி  பரபரப்பு 


  ரசித்த  வசனங்கள் 


1  பெரிய  ஆளு யாரு?ன்னு  பெரிய் ஆளுங்க  கிட்டே கேட்டுட்டுதானே  வந்திருப்பீங்க?

2   சிலையோட  மதிப்பு  30  கோடி. கடத்திட்டு  வந்து  கை  மாத்தி  விட்டா  5%  உங்களுக்கு


10 %  வேணும்


ஓக்கே  10%


 அந்த  5%  போதும், ஆனா  சிலையோட  ஒரிஜினல்  விலைல 


 அது  வந்து  சிலை  மதிப்பு  100 கோடி


3   கூட  வந்தவனுக்கே  துரோகமா?


 இங்கே  எல்லாருமே  மாறி  மாறி  துரோகம்  பண்ணிட்டு  தான்  இருக்காங்க , யார்  முதல்ல  துரோகம்  பண்றாங்களோ  அவன்  மேலே  வர்றான், நான்  மேலே  வரனும்னு  நினைக்கறேன் 


4  நாமெல்லாம்  தேள்  மாதிரி  , திருடனாப்பார்த்துக்கொட்டனும்

 புரியல 


 திருடன்  வீட்டில்  போய்  திருடப்போறோம்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    நூறு  கோடி  மதிப்புள்ள  சிலையை  காட்டும்போது  ஒரு  பில்டப்  வேண்டாமா? பேக்கிங்  பக்காவாக  இருக்க  வேண்டாமா?  ஏனோ  தானோ  என  சிலை  இருக்கிறது 


2 ஒரு  காதலன்  தன்  காதலிக்கு  செயின்  கிஃப்ட்  பண்ணி  ப்ரப்போஸ்  பண்ணுவது  ஒரு  தனிமையான  இடத்தில்  தானே  இருக்க  வேண்டும் ? இப்படியா  நடு  ரோட்டில்  ராத்திரி  நேரத்தில்  செயின்  தருவார்கள் ?


3  அந்த  செயின்   3  பவுன்  இருக்கும்,  கிட்டட்தட்ட  ஒன்றரை  லட்ச  ரூபாய் , திருடர்கள்  அதை  பறித்து  சென்றதும்  அந்த  இளைஞனுக்கு  பதட்டமே  வரவில்லை , அவர்களை  துரத்தவும்  முனையவில்லை 


4  போலீஸ்  ஆஃபீசரை  ரவுடி  டீல்  பண்ணுவது  என்னமோ  அவன்  வீட்டு  வேலைக்காரனை  டீல்  செய்வது  போல  இருக்கிறது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  லோ  பட்ஜெட்  படம்  என்பதால்  ஆதரவு  அளிக்கலாம் . இது  போன்ற  கதைக்கு  முக்கியத்துவம்  கொண்ட  படங்கள்  ஓடினால்தான்  ஹீரோ  டாமினேஷன்  குறையும்.   ரேட்டிங் 2.5 / 5