Wednesday, August 09, 2023

MINNALMURALI (2021) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( சூப்பர் ஹீரோ) @ நெட் ஃபிளிக்ஸ்

 


2021 ஆம்  ஆண்டில்  14  விருதுகளைக்குவித்த  படம். 20  கோடி  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்டு  டபுள்  மடங்கு  வசூலை  அள்ளிய  படம்  என  கம்ர்ஷியல்  ஆகவும்  இது  வெற்றிப்பட,ம். ஆனால்  தமிழில்  சூப்பர்  ஹீரோ  படங்கள்  ஓடியதில்லை . ஜீவா  நடித்து  மிஸ்கின்  இயக்கத்தில்  வந்த  முகமூடி  அட்டர்  ஃபிளாப் , சிவகார்த்திகேயன் நடித்த  ஹீரோ  ஃபிளாப் . ஆனால்  தமிழ்  சினி  ஃபீல்டால்  சாதிக்க  முடியாத  ஒன்றை  கேரள பட  உலகம்சாதித்தது  என்றால்  காரணம்  திரைக்கதை 

  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  டெய்லர்  , வில்லன்  மனநிலை  பாதிக்கப்பட்ட  ஒரு  ஏழை . இருவருமே  தனித்தனியாக  வெவ்வேறு  பெண்ணை  விரும்பியவர்கள் . ஆனால்  இருவருக்கும்  காதல்  கை  கூடவில்லை 


நாயகன்  காதலித்த  பெண்  வழக்கம்  போல  வசதியான  மாப்பிள்ளை  கிடைத்ததும்  நாயகனுக்கு  அல்வா  கொடுத்து  விடுகிறாள் . வில்லனின்  காதல்  கதையே  வித்தியாசமானது . ஸ்கூல்  படிக்கும்போதே காதலிக்குத்தெரியாமல்  மனசுக்குள்  பூட்டி  வைத்துத்தன்  காதலை  வளர்க்கிறான்


ஆனால்  வில்லனின்  காதலிக்கு  வேறு  ஒருவருடன்  திருமணம்  ஆகிறது. ஆனால்  அவன்  திருமணத்துக்குப்பின் மனைவியைக்கை  விட்டு  விட்டு  வேறு  பெண்ணுடன்  ஓடி  விட்டான்., இப்போது  வில்லனின்  காதலி அவளுக்குப்பிறந்த  ஒரு  பெண்  குழந்தையுடன்  அப்பா  வீட்டில்  வசித்து  வருகிறார்

ஒரு  நாள்  ஊரில் கடும்  மழை ,மின்னல் . அந்த  மின்னல்  நாயகன் ,வில்லன்  இருவரையும்  தாக்குகிறது . இருவருக்குள்ளும்   அபூர்வ  சக்தி  வருகிறது . இருவருமே  அவரவர்  பர்சனல்  வாழ்க்கையில்  அபூர்வ  சக்தியை  பயன்படுத்திக்கொள்கின்றனர் 


வில்லனின்  காதலியை  மணக்க  காதலியின்  அப்பா  குறுக்கே  நிற்க  ஆத்திரத்தில்  அவரைக்கொன்று  விடுகிறான்  வில்லன். ஒரு  கட்டத்தில்  தன்  காதலியைக்கொலை  செய்த  ஊர்  மக்களைப்பழி  வாங்கத்துடிக்கிறான்  வில்லன் . நாயகன்  வில்லனை எவ்வாறு  வீழ்த்தினான்  என்பதே  மீதிக்கதை


நாயகன்  ஆக  டொவினோ  தாமஸ்   சாமான்ய  இளைஞனாக  வரும்போதும்  சரி ,சூப்பர்  ஹீரோ  அகும்போதும்  சரி  மாறுபட்ட  நடிப்பைத்தந்திருக்கிறார். குறிப்பாக  சூப்பர்  ஹீரோ  யூனிஃபார்மில்  பாடி ஃபிட்டாக  தொப்பை  இல்லாமல்  கச்சிதமாக  இருக்கிறார்


வில்லன்  ஆக  குரு  சோமசுந்தரம்  ஆரம்பத்தில்  பரிதாபம்  ஏற்படுத்தும்  கேரக்டரில்  வந்து  விட்டு  வில்லனாக  மாறுவது  கச்சிதம் நாயகனுக்கு  இணையான  கேரக்டர்.  பொறுப்புணர்ந்து  நடித்திருக்கிறார்


வில்லனின்  காதலியாக  ஷெல்லி  வட்ட  முகம், நாவல்  பழ  கண்கள் . கச்சிதமான  நடிப்பு நாயகனின்  கேர்ள்  ஃபிரண்ட்  ஆக ட்ராவல்  ஏஜெண்ட்  ஆக  ஃபெமினா  ஜார்ஜ்  கவனிக்க  வைக்கிறார்

159 நிமிடங்கள்  ஓடும்படி  எடிட்டர்  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார். முதல்  பாதி  ரொம்ப  ஸ்லோ. இன்னும்  விறுவிறுப்பாக  எடுத்திருக்கலாம். பல  காட்சிகள்  கூஸ்பம்ப்  மொமெண்ட்ஸ்  கிளப்புகின்றன


பாடல்களுக்கான  இசையை ஷான்  ரஹ்மான் , அஜூ வ்ர்கீஸ்  இருவரும்  கவனிக்க  பின்னணி  இசையை  சுஷீன்  ஷியாம்  அமைத்திருக்கிறார். சூப்பர்  ஹீரோ  வரும்போது இன்னும் பிரமாதமான  பிஜிஎம்மை  தெறிக்க  விட்டிருக்கலாம் , மிஸ்டு 



சபாஷ்  டைரக்டர்

1  நாயகன் - நாயகி  காதல்  கை  கூடுமா? என்ற  எண்ணத்தை  விட  வில்லன் - பள்ளிட்தோழி  காதல்  கை  கூட  வேண்டுமே  என்ற  எண்ணத்தை ஆடியன்ஸ்  மனதிலே  விதைத்த  பாங்கு  அருமை 


2  நாயகன் - வில்லன் சம  அளவு  வாய்ப்பு  என்பதல்  நாயகனை  குஷிப்படுத்த  ஃபிளாஸ்பேக்   காட்சிகளில்  நாயகனின்  அப்பாவாக  இன்னொரு  ரோல்  கொடுத்து  எம் ஜி ஆர்  கால  டெக்னிக்  ஆன  டூயல்  ரோல் ஒரே  ஆள்  என  அமைத்தது  சிறப்பு 


3  நாயகன் , வில்லன்  இருவரும்  தங்கள்  சக்தியை  உபயோகப்படுத்தும்  காட்சிகளில்  சி ஜி  ஒர்க்  பக்கா . சிறுவர்களுக்கு  மிகவும்  பிடிக்கும் 


4  நாயகனை  உசுப்பேற்றி  விடும்  அந்த  சின்னப்பையன்  கேரக்டர்  டிசைனும், அவன் நடிப்பும்  குட்



  ரசித்த  வசனங்கள் 


1 உன்னை  மின்னல்  தாக்கிய  விஷயத்தை  என்  ஃபிரண்ட்ஸ்  எல்லார்  கிட்டேயும்  சொல்லிட்டேன்


 உன்னால  முடிஞ்ச  வரை   என்  பேரை  ரிப்பேர்  பண்ணப்பார்க்கறே


2   ஏண்டி , ஹாஸ்பிடல்  போகும்  முன்  ச்மையல்  வேலை  எல்லாம்  புடுங்கி  வெச்சுட்டுப்போன்னு தானே  சொன்னேன்?


 நான் புடுங்கி  வெச்சுட்டுதானே  போனேன் ?


 என்னது ?


 சமையல்  பண்ணி  வெச்சுட்டுதான்  போனேன்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  வில்லன்  தன்  காதலியின்  அப்பாவைக்கொலை  செய்யும்  காட்சி  தேவையற்றது. ப்ரியமுடன்  படத்தில்  விஜய்  காதலியின்  அப்பாவைக்கொல்ல  காரணம்  இருந்தது . இதில்  இல்லை . காதலி  இப்போது  வாழாவெட்டி . ஒரு  பெண்  குழந்தையுடன்  இருக்கிறார். இப்போது  அப்பாவின்  சம்மதம்  அவ்வளவு  முக்கியம்  இல்லை . காதலி  டீன்  ஏஜ்  என்றால்  ஓக்கே 35  வயசு  அச்சு . இனிமேல்  அவர்  முடிவெடுத்தாலே  போதுமே? எதற்கு  தேவை  இல்லாமல் கொலை ? 


2  வில்லன்  பாங்க்கைக்கொள்ளை  அடித்து  ஒரு  லட்சம்  ரூபா  மட்டும்  எடுத்துக்கொண்டான்  என்பது  நம்பும்படி  இல்லை . அதே  போல்  அவளோ  பணம்  கிடைத்த  பின்பும்  அவன்  வாழ்வியல்  முறையில்  மாற்றம்  வரவில்லை . டீசண்ட்  டிரஸ்  கூட  இல்லை 

3  நாயகன்  சூப்பர்  மேன்  ஆனபின்  காதலி  மனம்  வருந்தி  அடடா, இவனையே  திருமணம்  செய்திருக்கலாமே? என  மனம்  வருந்தும்  காட்சி  வைக்கப்படவில்லை ., வைத்திருக்க  வேண்டும் 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   சிறுவர்கள்  மட்டுமல்ல  , அனைவரும்  காண  வேண்டிய  சுவராஸ்யமான  சூப்பர்  ஹீரோ  சப்ஜெக்ட். டோண்ட்  மிஸ்  இட்   ரேட்டிங் 3 / 5 


Minnal Murali
Official release poster
Directed byBasil Joseph
Written byArun Anirudhan
Justin Mathew
Produced bySophia Paul
Starring
CinematographySameer Thahir
Edited byLivingston Mathew
Music bySongs:
Shaan Rahman
Sushin Shyam
Background Score:
Sushin Shyam
Production
company
Distributed byNetflix
Release dates
Running time
159 minutes[1]
CountryIndia
LanguageMalayalam
Budget₹20 crore (US$2.5 million)

Tuesday, August 08, 2023

சத்ரு (2019) - தமிழ் -= சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர் ) @ முரசு டி வி

 


பரியேறும்  பெருமாள்   ஹிட்  ஆனதும்  அதன்  நாயகன்   கதிர்  ஒரு  மாஸ்  மசாலா  கமர்ஷியல்  போலீஸ்  சப்ஜெக்ட்டில்  நடிக்கலாம்  என  முடிவு  செய்து  புது முக  இயக்குநர்  கை  வண்ணத்தில்  சத்ரு  வில்  நடித்திருக்கிறார். போலீஸ்  யூனிஃபார்மில்  அவர்  பிரமாதமாக  ஜொலிக்கவில்லை  என்றாலும்  போலீஸ்  கதைகளுக்கே  உரிய  பர  பரப்பு  இதில்  இருக்கிறது 

 ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன்  ஒரு  போலீஸ்  இன்ஸ்பெக்டர் . நீதி  நேர்மை , நியாயம்  என  ரூல்ஸ்  பேசும் இவர்  தனது  உயர்  அதிகாரிகளை  எல்லாம்  மதிப்பதே  இல்லை . அதனால்  அடிக்கடி  மெமோ  வாங்குபவர்


 ஐந்தாறு  பேர்  கொண்ட  கும்பல்  ஒன்று  சிறுவனைக்கடத்தி  மிரட்டி  பணம்  பறிக்கும்  வேலையில்  ஈடுபட   நாயகன்  அந்த  பணக்கார  சிறுவனை  மீட்கிறார். அந்த  மீட்புப்பணியில்  கடத்தல்  கும்பலில்  ஒருவனை  போட்டுத்தள்ளி  விடுகிறார். இதனால்  உயர்  அதிகாரியின்  கோபத்திற்கு  ஆளாகி  மூன்று  மாதங்கள்  சஸ்பெண்ட்  ஆகிறார்


 வில்லன்  கும்பலில்  மீதி  இருக்கும்  ஐந்து  பேரும் எல்லா  வேலையையும்  விட்டு  விட்டு  தங்கள்  கூட்டாளியைப்போட்டுத்தள்ளிய  பாட்டாளியின் குடும்பம், அவருக்குப்பெண்  கொடுத்தோர்  என  சொந்த  பந்தம்  எல்லாரையும்  போட்டுத்தள்ள  சபதம்  எடுக்கின்றனர் .


 இதைக்கேள்விப்பட்ட  ரிட்டையர்டு  மிலிட்ரி  வீரரான  நாயகனின்  அப்பா  அதே  24  மணி  நேரக்கெடுவிற்குள்  வில்லன்  கும்பலை  ஒழிக்க  நாயகனிடம்  சத்தியம்  வாங்குகிறார்


 போலீஸ்  பணியில்  சஸ்பெண்ட்  ஆன  நாயகன்  ஒரே  நாளில்  வில்லன்  கும்பலை  எப்படி  அழித்தார்? அதற்கு  அவர  சந்தித்த  இழப்புகள்  என்ன ? என்பதை  பின்  பாதி  திரைக்கதை  விளக்குகிறது 


 நாயகன்  ஆக  கதிர். போலீஸ்  யூனிஃபார்மில்  அவருக்கு  கம்பீரம்  பெரிதாக  வரவில்லை , ஆனாலும்  போலீஸ்  மிடுக்கை  வரவழைத்து  சமாளிக்கிறார்

  நாயகி  ஆக  சிருஷ்டி  டாங்கே  அதிக   வேலை  இல்லை, சும்மா  தலையை  காட்டுகிறார். மெயின்   வில்லனாக  லகுபரன்  கச்சிதம் , அவரது  அடியாட்கள்  எல்லாரும்  அவரை  அண்ணன்  என  மரியாதையுடன்  அழைக்கின்றனர். ஆனால்  மெயின்  வில்லனை  விட  அடியாட்கள்  சித்தப்பா , பெரியப்பா  வயசில்  இருக்கிறார்கள் 


117  நிமிடங்கள்  ஓடும்படி  ஷார்ப்  ஆக  கட்செய்து  இருக்கிறார்கள் 

மகேஷ்  முத்துசாமியின்  ஒளிப்பதிவில்  சேஷிங்  காட்சிகள்  உயிரோட்டமாகப்படம்  ஆக்கப்பட்டுள்ளன 


 அம்ரீஷ்  கணேஷ் , சூர்ய  பிரசாத்  இசையில்  மூன்று  பாடல்கள்  ஓக்கே  ரகம்,  பிஜிமெ  இன்னும் விறுவிறுப்பாக  போட்டிருக்கலாம்


திரைக்கதை  , இயக்கம்  நவீன்  நஞ்சுண்டான்.. பரபர  விறு  விறு  திரைக்கதை  அமைக்க  வேண்டும்  என்ற  உத்வேகம்  தெரிகிறது , ஆனால்  பல  காட்சிகள்  பல்  ஹிட்  படங்களில்  ஏற்கனவே  பார்த்த  காட்சிகளே 


சபாஷ்  டைரக்டர்


1   போலீஸ்  ஆஃபீசருக்கு  போலீஸ்  ஹையர்  ஆஃபீசர்ஸ்  தான்  எதிரி  என  காட்டிய  விதம் 


2   நாயகன்  -  வில்லன்  கேங்  சேசிங்க்  தான்  முக்கால்வாசிப்படம்  என்பதால்  செம  ஸ்பீடு  ஸ்க்ரீன்ப்ளே 


3  மொக்கைக்காமெடி  டிராக் , லவ்  போர்சன் , டூயட்  இவற்றை  எல்லாம்  தைரியமாக   ஸ்கிப்  செய்தது  குட் 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  அச்சம்  நீக்கி \

2   காதலிக்க  இங்கு  நேரம்  இல்லை 

3  நேரம்  இந்த  நேரம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வில்லன்  கேங்கின்  நண்பரை  நாயகன்  போட்டுத்தள்ளி  விட்டதால்   டிட்  ஃபார்  டாட்  , அதாவது  பழிக்குப்பழி  வாங்க  வேண்டும்  எனில்  நாயகனின்  நண்பர்கள்  அல்லது  கொலீக்ஸைத்தானே  போட்டுத்தள்ள  வேண்டும் ? ஆனால்  வில்லன்  கேங்க்  நாயகனின்  ஃபேமிலி  மெம்பரசை  போடுவது  ஏன் |?


 2 நாயகன்  துன்பப்பட  அவரது   காதலி ./ மனைவி   அம்மா, அப்பா  என  நெருங்கிய  சொந்தங்களை  போட்டுத்தள்ள  முயற்சிப்பது  ஓக்கே , ஆனால்  சித்தப்பா , பெரியப்பா , மாமன்  மச்சான்   சகலை  என  குறி  பார்ப்பது காமேடி 


3   பணயத்தொகை  பணமாக  ஒரு  பேக்கில்  போலீஸ்  தந்தால்  வில்லன்  கேங்  அந்த  பேக்கை  பிரித்துப்பார்த்து  செக்  செய்யாதா?  ஜிபிஎஸ்  கருவி  இருக்கா?  இல்லையா?  என  பார்க்காதா? 


4   மூன்று  மாதங்கள்  சஸ்பெண்ட்  ஆன  போலீஸ்  இன்ஸ்பெக்டர்  கூட  எப்போதும்  3  போலீஸ்  இருப்பது  எப்ப்டி? 



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   போலீஸ்  கதைகளுக்கே  உரிய  த்ரில்லிங்  உண்டு , போர்  அடிக்காமல்  இருக்கிறது , பார்க்கலாம்  ரேட்டிங் 2.25 / 5 


Sathru
Poster
Directed byNaveen Nanjundan
Written byNaveen Nanjundan
Screenplay byNaveen Nanjundan
Produced byRaghukumar
Raja Ratnam
Sritharan
StarringKathir
Srushti Dange
CinematographyMahesh Muthuswami
Edited byPrasanna GK
Music byAmresh Ganesh
Surya Prasadh R
Production
company
RT Infinity Deal
Release date
  • 8 March 2019
Running time
117 minutes
CountryIndia
LanguageTamil

Monday, August 07, 2023

மழைக்கால மோகம் ஒன்று - குறும்பட விமர்சனம்

 ஹை  குவாலிட்டியில் வைத்துப்பாருங்கள்  என்று  கோரிக்கை  வைத்ததில்  இருந்தே  இதில்  ஒளிப்பதிவு  ஜாலவித்தை  புரிந்திருக்கு  என்று   புரிந்து  விட்டது  , வழக்கமாக  டேட்டா  சேவர்  மோடில்  பார்க்கும்  நான்  இதை  ஹை  குவாலிட்டியில்  பார்த்தேன் 


18  நிமிடக்குறும்படம்  என


  சொல்லப்பட்டாலும்  டைட்டில்  காட்சி  2  நிமிடங்கள்  போக  16  நிமிட  குறும்படம் தான்  இது 


நாயகன் , நாயகி  இருவர்  மட்டுமே  நடித்திருக்கும்  படம்  இது . நாயகன்  ஒரு  முற்போக்குவாதி  என  தன்னைத்தானே  நினைத்துக்கொள்பவன். திருமணத்துக்குப்பார்க்கும்  பெண்களிடம் தன்னைப்பற்றி  ஓப்பனாக  பிளஸ்  , மைனஸ்  எல்லாம்  சொல்லி  அவங்களே  அவனை  ரிஜெக்ட்  பண்ணும்  அளவுக்கு  ஃபிராங்க்காகப்பேசுபவன் . அவன்  பேசுவதைப்பார்த்து  மற்ற  பெண்கள் இவன்  நமக்கு  சரிப்பட்டு  வர  மாட்டான்  என  விலகிச்செல்கின்றனர் ஆனால்  நாயகி  அப்படி  அல்ல. நாயகனுக்கே  கவுண்ட்டர்  கொடுத்து  விட்டு  த  பால்  ஈஸ்  ஆன் யுவர் கோர்ட்  என  சொல்லி  விட்டுச்செல்கிறாள். நாயகன்  என்ன  முடிவு  எடுத்தான்  , எடுக்கப்போகிறான்  என்பதை  நம்  யூகத்துக்கே  விட்டு   படம்  முடிகிறது 


 நாயகன்  ஆக  நடித்தவர்  முகச்சாயலில்  சுந்தர்  சி  போலவும் , தாடி  வைத்திருக்கும்  ஸ்டைலில்  இயக்குநர்  போலவும்  (  ஆர்வாவின்  படங்களில்  நாயகன்  தாடி  வைத்திருப்பான் )   வசனம்  பேசும்  ஸ்டைலில்  சத்யராஜ் , சிபி  சத்யராஜ்  போலவும்   தெரிகிறார். அடிக்கடி  ஒரு  சிரிப்பை  செயற்கையாக  வெளிப்படுத்துவது  நன்றாகத்தெரிகிறது


 நாயகி கண்ணியமான  உடையில்  கச்சிதமான  முக  பாவனைகளில்  கே  பாலச்சந்தர்  பட  நாயகி  போல  கவுண்ட்டர்  கொடுக்கிறார். முக  வசீகரத்தில் நடிப்பில்   நாயகனை  ஓவர்  டேக்  செய்து  விட்டார்  என்றே  சொல்லலாம்

  ( நாம  எப்போ  நாயகனைப்பாராட்டி  இருக்கோம் ? )


ஒரு  பெண்  இயக்குநர் படங்களில்  தான்  ஆண்களை  நோஸ்கட்  கொடுக்கும்  காட்சியும், வசனங்களூம்  பெரும்பாலும்  வரும் . அதனால்  இயக்குநரின்  கேர்ள்  ஃபிரண்ட்ஸ்களில்  யாராவது  ஒருவர்  திரைக்கதை , வசனத்தில்  பங்காற்றி  இருக்கலாம்  என  தோன்றுகிறது 



ரசித்த  வசனங்கள் 


1  ஒரே  ஒரு  லைஃப்  பார்ட்னரால  ஒருவனால்  லைஃப்  பூரா  செக்சுவலா  சேட்டிஸ்ஃபேக்சனா  இருக்க முடியும்  என்பதில்  எனக்கு  நம்பிக்கை  இல்லை 


2    ஃப்ரீடம்  என்பது  நீங்க  எனக்குக்கொடுப்பதா? நான்  உங்க  கிட்டே  இருந்து  எடுத்துக்கொள்வதா?   அல்லது  ஆல்ரெடி  என் கிட்டே  இருப்பதா?


3   எனக்கு  ஃப்ரீடம்  கொடுக்க  நீங்க  யார் ? நான்  உங்க  கிட்டே  அடிமையா  இருந்தாத்தான் நீங்க  எனக்கு  ஃப்ரீடம் கொடுக்க  முடியும் ?


4  ஆக்சுவலா  பெரியார்  சொன்னதை  வெச்சு  ஸ்டேட்மெண்ட்  சொல்றது  இங்கே  ஃபேஷன்  ஆகிடுச்சு 


5  பெரியார்னு இல்லை , யாரையும்  ஒழுங்காகப்படிக்காத  வரை  எல்லாரும்  சிறியார் தான் 


 சபாஷ்  டைரக்டர் 


1  பின்னணியில்  மழை  வருவது  போல்  காட்சி  வைத்து  ஒரு  ரொமாண்டிக்  மூடு  செட்  பண்ணியது  அருமை


2   குறும்படத்தில்  எந்த  அளவு  கூட்டம்  இல்லாமல்  இருக்கிறதோ  அந்த  அளவு  திரைக்கதை  ஆடியன்சின்  மனதில்  நன்கு  பதியும்  என்று  சொல்வார்கள் , அதை  மெய்ப்பித்து  இருக்கிறார்


 திரைக்கதையில்  சில  ஆலோசனைகள் 


1  நாயகன்  தன்  தரப்பு   நியாயத்தைச்சொல்ல  தனக்குப்பிடித்த  படங்களாக  ஆட்டோகிராஃப் , அழகி  ஆகிய  படங்களைப்பற்றிச்சொல்லும்போது  நாயகி  கொடுக்கும்  இரண்டு  கவுண்ட்டர்களும்  பிரமாதம் , ஆனால்  இன்னும் ஒரே ஒரு  விஷயம்  சேர்த்திருக்கலாம் .  சொல்லாமலே  சசி  இயக்கிய  பூ  படம்  ஒரு  பெண்ணின்  திருமணத்துக்கு  முந்தின  காதல்.   பற்றி ந் ந்சொல்லும் பிரமாதமான  கவிதைப்படம், ஆனால்  கமர்ஷியலாக  ஓடவில்லை ,. அதை  உதாரணமாக  நாயகி  காட்டி  இருக்கலாம்.  மக்களால்  ஒரு  ஆணின்  ஆட்டோகிராஃபை  ரசிக்க  முடிந்த  அளவு  ஒரு  பெண்ணின்  ஒரே  ஒரு  காதலைக்கூட  ஏற்றுக்கொள்ள  முடியவில்லை  என்பதை  சொல்லி  எனக்குப்பிடித்த படம்  பூ  என்று  நாயகி  சொல்வது  போல  அமைத்து  இருக்கலாம். அதே  போல்  நாயகிக்கு  பல  காதல்கள்  இருக்கும்  ஜூன்  என்னும்  மலையாளப்படத்தையும்  அவருக்குப்பிடித்த  படமாக  சொல்லலாம். ஆனால்  ஜூன்  ஹிட்  படம். அதை  அங்கே  மக்கள்  ஏற்ற்க்கொண்டார்கள் . அதனால்  அதை  சொல்வதை  விட  வெற்றி  பெறாத  பூ    படத்தை  உதராணமாக  சொல்லி  இருந்தால் சரியான  பூமாரங்  அட்டாக்  ஆக இருந்திருக்கும்


2   க்ளைமாக்சில்  நாயகி  கவுண்ட்டர்  பக்கா . ஆனால்  ஃபினிஷிங்  இல்லை . நாயகன்  என்ன  முடிவு  எடுத்தான் ?   ஆனால்  அவனால்  முடிவே  எடுக்க  முடியவில்லை  என்பதை  அவன்  வாயாலேயே  சொல்ல  வைத்திருந்தால்  இன்னும்  பிரமாதமாக  இருந்திருக்கும்  (  நாயகி  பூடகமாக  டிரஸ்  போடலையா? எனக்கேட்கும்போதே  அவனை  நிர்வாணப்படுத்தி  சொல்லால்  தாக்கி  இருக்கிறார்  என்பதை  உணர  வைத்திருந்தாலும்  அது  ஏ செண்ட்டர்  ஆடியன்சுக்கு  மட்டுமே  புரியும் ) 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்ஸ்  -  வழக்கமாக  ஆர்வாவின்  படங்கள்   ஆண்களைத்தான்  அதிகம்  கவரும், இந்த  முறை  பெண்களை  டார்கெட்  செய்து  கோல்  அடித்திருக்கிறார்.  ரேட்டிங் 3 / 5   யூ  ட்யூப்பில்  கிடைக்கிறது . லிங்க்  முதல்  கமெண்ட்டில் 


யானை முகத்தான் (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஃபேண்ட்டசி காமெடி மெலோ டிராமா)

 


 மலையாளபட  இயக்குநர்  ஆன ரெஜிஷ்  மிதிலா  இதுவரை  மூன்று  மலையாளப்படங்களை  இயக்கி  இருக்கிறார். லால் பகதூர்  சாஸ்திரி , லாரிக்குழியிலே கொலைபாதகம், இன்னு  முதல்  ஆகிய  மூன்று படங்களுமே  பேசப்பட்டவை. மூன்றாவதாக  அவர்  இயக்கிய  இன்னு  முதல்  படத்தின்  தமிழ்  ரீமேக்  தான்  யானை  முகத்தான். அந்த  வகையில்  தமிழில்  இவருக்கு  இது முதல்; படம். இப்படத்தின்  கதைக்கரு   அறை  எண்  305 ல் கடவுள்  படத்தின்  சாயல்  கொண்டது 


 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  ஆட்டோ  ட்ரைவர். இவருக்கு  ஏகப்பட்ட  கடன்  இருக்கிறது .  குடி  இருக்கும்  வீட்டுக்குக்கூட  6  வருடங்களாக  வாடகை  பாக்கி . வாய்க்கு  வந்தபடி  பொய்  பேசி  சமாளித்து  வருபவர்.இவருக்கு  ஆதரவாக  இருப்பவர்கள்  இருவர்  மட்டுமே . நண்பன் மட்டும்  ஹவுஸ்  ஓனர்  அக்கா


நாயகன்  பொய்ப்புளுகன்  ஆக  இருந்தாலும்  தீவிர  வினாயக  பக்தன்.ஒரு  நாள்   திடீர்  என  நாயகன்  வீட்டில்  இருக்கும்  காலண்டரில்  வினாயகர்  உருவம்  மட்டும்  காணவில்லை , அதுமட்டுமல்ல , நாயகன்  கண்ணுக்கு  எந்த  இடத்திலும்  வினாயகர்  ம்ட்டும்  தெரிவதில்லை . இத்னால் நாயகன்  குழப்பம்  அடைகிறார்


அப்போது  வினாயகர்  மனித  ரூபத்தில்  நாயகனுக்குக்காட்சி  அளித்து  ஒரு  நாள்  முழுக்க  பொய்  பேசாமல்  யாரையும்  ஏமாற்றாமல்  இருந்தால்  தன்  விசுவரூப  தோற்றத்தைக்காட்டுகிறேன்  என்கிறார். அதன்படி  நாயகன்  நடந்து  கொண்டாரா?  க்ளைமாக்சில்  என்ன  ஆனது  ? என்பதைப்படம்  பார்த்துத்தெரிந்து  கொள்க 


நாயகன்  ஆக  ரமேஷ்  திலக்  கச்சிதமாக  நடித்திருக்கிறார். வினாயகர்  ஆக யோகி  பாபு  யதார்த்தத்தமிழ்  பேசி  ஆச்சரியப்படுத்துகிறார்.ஹவுஸ்  ஓனர்  அக்காவாக  ஊர்வசி  அசத்தல்  ஆன நடிப்பு . நண்பன்  ஆக  கருணாகரன்  அதிக  வாய்ப்பில்லை 


முஸ்லீம்  பெரியவர்  ஆக  உதய்  சந்திரா  உருக்கமான  நடிப்பு 


பரத் சங்கரின்  இசையில்  ஒரு  பாடல்  சுமார்  ரகம். பின்னணி  இசை  பரவாயில்லை 

 2  மணி  நேரம்  ஓடும்  அளவு  எடிட்டிங்கில்  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்கள் 


மலையாளப்பட  இயக்குநர்  என்றால்  கொஞ்சம்  ஸ்லோவாகத்தான்  திரைக்கதை  நகரும், அதற்காக  இவ்ளோ  ஸ்லோவாகவா? முதல்  ஒரு  மணி  நேரம்  கழித்துத்தான்  கதையே  ஆரம்பிக்கிறது . அதற்குப்பின்  படம்  ஸ்லோவாக[ப்போகிறது . அது  வரை  டெட்  ஸ்லோ . ரொம்பப்பொறுமை  வேண்டும்  

ரசித்த  வசனங்கள் 


1  கஷ்ட காலத்துல  கூட  இல்லைன்னா  அது  என்ன  கடவுள்?


2 அன்பான  மனிதத்துவம், கடவுள்  ரூபத்தில் ,மனிதன்  இவங்களை  எல்லாம்  ஹாஸ்பிடலில்தான்  பார்க்க முடியும் 


3  நான்  நேர்மையான  ஆளா  ஒரு  முழு  நாள்  நடந்துக்கிட்டா  கடவுளின்  உண்மையான  உருவமான  பத்து  தலையுடன்  தரிசனம்  தர  முஜ்டியுமா? 


 பத்து  தலை  பார்க்கனும்னா  சிம்பு  படம்தான்  பார்க்கனும்


4  மனிதனுக்குள்  கலந்த  விஷம்  சுயநலம



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஒரு  மணி  நேரப்படமாக  எடுத்திருக்க  வேண்டியது  ரொம்ப  இழுத்து  விட்டார்கள் . சுமார்  ரகம் . ரேட்டிங்  2.25 / 5 


Yaanai Mugathaan
Theatrical release poster
Directed byRejishh Midhila
Written byRejishh Midhila
Produced by
  • Rejishh Midhila
  • Lijo James
Starring
CinematographyKarthik S Nair
Edited bySyalo Sathyan
Music byBharath Sankar
Production
company
The Great Indian Cinemas
Distributed byUFO Moviez India Limited
Release date
  • 21 April 2023
CountryIndia
LanguageTamil

Sunday, August 06, 2023

நீ (1965) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி மெலோ டிராமா) @ யூ ட்யூப்

 


யார்  நீ   என்ற  படம்  வேறு , இது  வேறு , குழப்பிக்கொள்ள  வேண்டாம். அது  திகில்  படம், மெகா  ஹிட்  மூவி ,  இது  ஹிட்  படம் .முதல்  பாதி  ஃபேமிலி  மெலோ  டிராமா  போலவும் , பின்  பாதி  த்ரில்லர்  மூவி  போலவும்  பயணிக்கும் . இரு  மெகா  ஹிட்  பாடல்கள்  இதில்  உண்டு . எம் எஸ்  விஸ்வநாதன்  முதன்  முதலாக  தனியே  இசை  அமைத்த  படம், அதனால்  தன்  திறமையை  நிரூபித்தே  ஆக  வேண்டிய  கட்டாயத்தில்  இருந்தார் . பிஜிஎம் மிலும்  கலக்கி இருப்பார் 

  ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன்  பெரிய  கோடீஸ்வர  குடும்பத்துப்பையன்.  காலேஜ்  படித்துக்கொண்டு  இருக்கிறான். நாயகி  மிகவும்  ஏழை . பாட்டி  உடன்  வசித்து  வருகிறார். அம்மா, அப்பா  இல்லை . ஒரு  முறை  உடல்  நலம்  சரி  இல்லாத  பாட்டிக்கு  மருந்து  வாங்கிக்கொண்டு  வரும்போது  சில  ரவுடிகள்  குறுக்கிட்டு  நாயகியை  கிண்டல்  செய்து  தகறாரு  செய்கிறார்கள் . அப்போது  நாயகன்  எண்ட்ரி  ஆகி  ஒரு  ஃபைட்  போட்டு  அந்த  வெட்டிப்பசங்களை  விரட்டி  அடித்து  விட்டு  நாயகியிடம்  பேசிக்கொண்டு  இருக்கிறார்


 அப்போதே  இன்சிடெண்ட்  லவ்   வந்து  விடுகிறது .தான்  ஒரு  ஏழைப்பெண்ணைக்காதலிப்பதாகவும்  அவளையே  திருமணம்  செய்து  கொள்வதாகவும்  ஊரில்  இருக்கும்  அண்ணன், அண்ணிக்கு  கடிதம்  எழுதுகிறான்.  வீட்டில்  கடும்  எதிர்ப்பு . அதனால்  நாயகன்  நண்பர்கள்  முன்னிலையில்  கோயிலில்  நாயகியைத்திருமணம்  செய்து  கொள்கிறான்


 டிகிரி  படிப்பு   கேன்சல் , வேலைக்குப்போகலாம்  என  முடிவு  செய்து  வேலை  தேடுகிறான், அண்ணன் , அண்ணி  சமாதனம்  ஆகி  வீட்டுக்கு  அழைக்கிறார்கள். நாயகன்  தன்  மனைவியை  அழைத்துக்கொண்டு  வீட்டுக்குப்போகிறான்


 அங்கே  ஒரு பெரிய  அதிர்ச்சி  காத்துக்கொண்டிருக்கிறது . நாயகனின்   வீட்டில்  உள்ள  மருமகன்  ஒருவர்  நீதிபதி ,அவர்  நாயகியைப்பார்த்து  அதிர்ச்சி  அடைகிறார். நாயகி  ஒரு  முறை  கோர்ட்டில்  அவரால்  தண்டனை  பெற்ற  பெண். ஹோட்டலில்  சில  ஆண்களுடன்  நடத்தை  கெட்டவராக  இருந்தார்  என்பது  வழக்கு 


 நாயகன்  வேலை  தேடி  வெளியூர்  போகிறார். அங்கே  வேலையில்  சேர்ந்து  வீடு    ரெடி  பண்ணி  விட்டு  பின்  நாயகியை  அழைத்துச்செல்லத்திட்டம் . ஆனால்  நாயகன்  ஊரில்  இல்லாத  போது  நாயகியை  நாயகன்  வீட்டு  ஆட்கள்  கண்டபடி  பேசி  வீட்டை  விட்டு  அனுப்பி  விடுகிறார்கள் 


நாயகன்  வேலை  எல்லாம்  செட்  ஆகி  ஊருக்குத்திரும்பி வந்து  மனைவி  எங்கே  எனக்கேட்கும்போது  பதில்  இல்லை . அப்போது  நாயகனின்  உறவினர்  ஒருவர்  நாயகி  பெங்களூரில்  ஒரு  ஹோட்டலில்  டான்சராக  பார்த்தேன்  , உடனே  கிளம்பி  வா  என்கிறார்


நாயகனுக்குக்குழப்பம்.  பத்தினியான  தன்  மனைவி  எப்படி  ஹோட்டலில்  கிளாமர்  டான்ஸ்  ஆட  முடியும் ? உண்மையை  அறிய  பெங்களூர்  போகிறார். அங்கே  நாயகியை  டான்சர்  ஆகப்பார்க்கிறார் 


 இதற்குப்பின்  நாயகன்  என்ன  முடிவு  எடுத்தார் ? நாயகன்  நாயகியை  ஏற்றுக்கொண்டாரா?  நாயகி  தான்  கற்புள்ளவர்  என்பதை  நிரூபித்தாரா?   என்பதை  பின்  பாதி  திரைக்கதை  பதில்  சொல்லும் 


நாயகன்  ஆக  ஜெய்சங்கர் , முகத்தில்  பணக்காரக்களை  நன்கு  தெரிகிறது. பல  காட்சிகளில்  நடிக்க  நல்ல  வாய்ப்பு 


நாயகி  ஆக  ஜெ . ஏழைப்பெண்ணாக  வருகையில்  குடும்பக்குத்து  விளக்கு  மாதிரி  காட்சி  அளிப்பவர்   ஹோட்டல்  டான்சராக  காட்டபப்டும்போது  மாடர்ன்  கேர்ள்  ஆக  மாறுபட்ட  பரிமாணத்தில்  வருகிறார். இரு  வேறு  குணாதிசயத்தை  நன்றாக  வெளிப்படுத்துகிறார்


பண்டாரிபாய்  சிறந்த  குணச்சித்திர  நடிப்பை  வழங்கி  உள்ளார் . நாகேஷ்  காமெடி  டிராக்  படத்தின்  மெயின்  கதையுடன்  ஒட்டாமல்  தனியே  பயணிக்கிறது , ஆனாலும்  சிரிக்க  வைக்கிறது 


 எம் எஸ்  விஸ்வநாதன்  இசையில்  5பாடல்கள் , அவற்றில்  இரு  பாடல்கள்  மெகா  ஹிட் 

எம் எஸ்  மணியின்  எடிட்டிங்கில்  123  நிமிடங்கள்  ஷார்ப்  ஆக  கட்  செய்து  இருக்கிறார்கள் . காமெடி  டிராக்  25  நிமிடங்கள்,   ஐந்து  பாடல்கள்  15  நிமிடங்கள்   போக  ஆக  மொத்தம் 80  நிமிடங்கள்  தான்  மெயின்  கதை 


எம் ஏ  ரஹ்மான்  ஒளிப்பதிவில்  ஜெ  வின்  அழகு  இளமை  கொப்புளிக்க  படம்  ஆக்க்கப்பட்டுள்ளது 


கனக சண்முகம்  தான்  இயக்கம், ஆனால்  டைரக்சன்  மேற்பார்வை  டி ஆர்  ராமண்னா 




சபாஷ்  டைரக்டர்  ( கனக சண்முகம்)


1    நாயகி  நல்லவரா?  கெட்டவரா? என்பதுதான்  மெயின்  கதைக்கரு, அதை  சாமார்த்தியமாக  முக்கால்  வாசிப்படம்  வரை சஸ்பென்ஸ்  ஆகவே  மெயிண்ட்டெயின்  பண்ணி  இருக்கிறார்


2   நாயகி  அழுது  வடியும் போதெல்லாம்  சாமார்த்தியமாக  நாகேஷ்  காமெடி  நம்மைக்காப்பாற்றுகிறது 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  வெள்ளிக்கிழமை  விடியும்  வேளை  வாசலில்  கோலம் இட்டேன் 


2    அடடா  என்ன  அழகு ? அருகே  வந்து  பழகு 


3   சொன்னாலும்  சொன்னானடி 


4  வந்தாலென்ன? எனக்கு  வந்தாலென்ன? 


5  ஒன்  டே  ஒன்  வே 


 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   பாட்டி  சாகும்  தருவாயில்  இருக்காங்க , அவருக்கு  மருந்து  வாங்கிட்டுப்போறேன்  என  நாயகி  சொல்கிறார். ரவுடிகள்  வழி  மறித்து  தகறாரு  பண்றாங்க, நாயகியை  நாயகன்  காப்பாற்றுகிறார். ரவுடிகளுடன்  ஃபைட்  போடுகிறார். ஃபைட்  நடக்கும்  அந்த  20  நிமிசமும்  நாயகி  வேடிக்கை  பார்த்துக்கொண்டிருக்கிறார். ஓடிப்போய்  மருந்தை  பாட்டியிடம்  கொடுத்திருந்தால்  அவராவது  உயிர்  பிழைத்திருப்பார். ஃபைட்  எல்லாம்  முடிஞ்சு  சாவகாசமா  இருவரும்  கடலை  போட்டு  விட்டு  வீட்டுக்குப்போவதற்குள்  பாட்டி  அவுட்  


2   நாயகி  திருமணத்துக்கு  அவசரப்படுத்தவில்லை . நாயகிக்கு  சொந்தம்  யாரும்  இல்லை ,  ஆனால்  நாயகன்  ஏன்  திருமணத்துக்கு  அவசரப்படுகிறார் ? படிப்பு  முடித்து  விட்டு  மேரேஜ்  பண்ணலாமே? 


3   டான்சரான  நாயகி  போலீசால்  கைது  செய்யப்படுகிறார் ,  அவரது  கணவரை  விசாரிக்க  போலீஸ்  அவர்கள்  இருக்கும்  இடத்துக்குத்தானே  வர  வைப்பார்கள்? ஆனால்  போலீஸ்  டான்சரைக்கூட்டிக்கொண்டு  நாயகனின்  இருப்பிடத்துக்கு  ஏன்  வர வெண்டும் ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ  படம்  தான்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   படம்  கொஞ்சம்  ஸ்லோ  தான் .  பார்க்கலாம்,   2  பாட்டுக்காகவும் , ஜெ  வின்  அழகான  தோற்றத்தை  ரசிக்கவும் .  ரேட்டிங் 2.25 / 5 


Nee!
Theatrical release poster
Directed byT. R. Ramanna
Kanagashanmugam
Written bySakthi T. K. Krishnasamy
Produced byT. K. Ramaraj
StarringJaishankar
Jayalalithaa
CinematographyM. A. Rahman
Edited byM. S. Mani
Music byM. S. Viswanathan
Production
company
Sri Vinayaga Pictures
Release date
  • 21 August 1965
Running time
123 minutes
CountryIndia
LanguageTamil

Saturday, August 05, 2023

தொட்டால் பூ மலரும் (2007) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா) @ முரசு டி வி

   


பாரதிராஜா, கே  பாக்யராஜ், மணிவண்ணன்  , ஆர்  பாண்டியராஜன்  போன்ற  புகழ்  பெற்ற  இயக்குநர்கள்  பல  நடிகர், நடிகைகளை  அறிமுகப்படுத்தி வெற்றிகரமான  நாயக, நாயகிகளாக  உலா  வரச்செய்தாலும்  அவரவர்  சொந்த  வாரிசுகளை  பிரகாசிக்க  வைக்க  முடியவில்லை .மனோஜ் பாரதிராஜா  நடித்த  தாஜ்மகால் , சாந்தனு  பாக்யராஜ்  நடித்த  வேட்டியை  மடிச்சுக்கட்டு , சித்து  பிளஸ் 2 , எல்லாமே  அட்டர்  ஃபிளாப்கள் தான். அந்த  வரிசையில்  சின்னத்தம்பி , சந்திரமுகி  மெகா  ஹிட்களைக்கொடுத்த  பி  வாசு  தன்  வாரிசு சக்தி வாசுவை  நாயகனாக  அறிமுகப்படுத்திய  படம்  இது , ஆனால்  ஃபிளாப்  எல்லாம்  ஆகவில்லை, மீடியமாக  ஓடியது 


என்னெத்த  கன்னையா  இப்படத்தில்  பேசிய  வரும்  ஆனா  வராது  என்ற  டயலாக்  செம  ஹிட்  ஆனது .சிவகார்த்திகேயன்  நடித்த  அட்டர்  ஃபிளாப்  படமான  சீமராஜா  வில்  வரும்  ஆனா  வராது  என்ற  பாடல்  வரியே  இடம்  பெற்றது சந்தானத்தின்  ஒன் லைன்கள் , சூப்பர்  ஹிட்  பாடல்கள் , வடிவேலு  காமெடி  டிராக்  இவற்றை  நம்பி  எடுக்கப்பட்ட  படம் 



ஸ்பாய்லர்  அலெர்ட்

  நாயகன்  ஏழைக்குடும்பத்தில்  பிறந்தவர் , நாயகி  கோடீஸ்வரக்குடும்ப குத்து  விளக்கு ., இருவரும்  ஒரே  காலேஜில்  படிக்க  இருவருக்கும்  காதல்  வருகிறது, இவர்கள்  இருவருக்கும்  காதல்  மலர்வதை  விறு விறுப்பாக  வித்தியாசமாக  சொல்லி  இருக்கிறார்கள் , பல  காதலர்களுக்கு  சில  ஐடியாக்கள்  கிடைக்கலாம் 


 நாயகியின்  அம்மா  தான்  வில்லி . மும்பையில்  இருக்கும்  தன்  அண்ணன்  பாசக்காரர்  கம்  தாதா. அவர்  மகனுக்கு  தன்  மகளை  நிச்சயம்  செய்து  ஒரு  சேஃப்டிக்கு  மகளை  அங்கே  அனுப்பி  விடுகிறார்  வில்லி


 நாயகன்  மும்பை போய்  நாயகியை  எப்படிக்கரம்  பிடிக்கிறார்  என்பதே  மீதிக்கதை 


 இதுவரை  இது  மாதிரி  ஏழை - பணக்காரன்  காதல்  கதை   ஒரு  லட்சம்  வந்திருக்கும். இந்தபப்டம் லட்சத்தி  ஒன்று 


 நாயகன்  ஆக  வாசு வின்  வாரிசு ஷக்தி  பி  வாசு  இளமை  கொப்பளீக்கும்  முகம் , சுறு சுறுப்பு  என  கலந்து  கட்டி ஜமாய்க்கிறார்


 நாயகி  ஆக  புது  முகம்   கவுரி  முன்  ஜால்  ரொம்ப  சுமாரான  முகம்,  சராசரி  அழகு . நாயகனுக்கு  பொருத்தம்  குறைவு 


 நாயகியின்  அம்மாவாக  சுகன்யா . வில்லித்தனம்  பெரிதாக  எடுபடவில்லை .  இவரது  அண்ணனாக  ராஜ்கிரண்  நடிப்பு  ஓக்கே  ரகம் 


  வடிவேலு  பல  கெட்டப்களில்   வந்து  காமெடி செய்கிறார், சந்தானம்  வழக்கம் போல்  நாயகன்  கூடவே  வருகிறார்


 ஆகாஷ்  அசோக்  குமார்  ஒளிப்பதிவில்  அப்பா  அசோக்  குமார்  டச்சிங்  தெரிகிறது . யுவன்  சங்கர்   ராஜாவின்  இசையில்  அப்பா  இளையராஜா  சாயல்  வருகிரது . 




சபாஷ்  டைரக்டர்


1  வடிவேலு -  என்னெத்த  கன்னையா  காம்போ காமெடி  டிராக்  , வடிவேலு -  - மகாநதி  சங்கர்  தீவிரவாதி  காமெடி கலக்கல்  ரகம் 

2    நாயகி  நாயகனிடம் தன்  பெயர் , ஃபோன்  நெம்பர்  கண்டுபிடிக்க க்ளூ  குடுத்து  சவால்  விடும்  காட்சியும் , நாயகன்  கண்டு  பிடிப்பதும் ஸ்மார்ட் ஒர்க்




செம  ஹிட்  சாங்க்ஸ்


1 உனது  முகத்தை  எப்போதும்  மூடி  வைக்காதே , எனது  நெஞ்சத்தில்  முள்ளைத்தைக்காதே (  ஹீரோ  ஓப்பனிங்  சாங்  பஸ்  கலாட்டா) 

2   வளையல்காரங்களை 


3 என்னைப்பிடித்த  காதல்  பேய் 


4   விட்டால்  சூரியனை \\

5   வாடி  வம்புப்பெண்ணே

6   கடத்தறேன்  நான்  உன்னை 


  ரசித்த  வசனங்கள் 


1  சத்தம்  போட்டுப்பேசக்கூடாதுனு தான்  லைப்ரரில  எழுதி  வெச்சிருக்காங்க , சத்தம்  போட்டுப்பாடக்கூடாதுனு  எழுதி  வைக்கலையே? 


2  இதை  எல்லாம்  வெளில  வெச்சுக்க , லைப்ரரில  வேணாம் 

 யாரை  வெச்சுக்கச்சொல்றாரு ? 


3  நான் அடிச்சு  நீ  பார்த்ததில்லையே?


 இல்ல, இப்போ  அடி ,  பார்ப்போம் 


4  வரும் , ஆனா  வராது 

5   தம்பி , நீங்க   எம் ஜி ஆர்  மாதிரி  தக தகனு   மின்றீங்க 


 யாரு ? நானு ?  நீ  பார்த்த ?


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -    சூப்பர்  ஹிட்  பாடல்கள் , சந்தானம்  ஒன்  லைனர்கள் , வடிவேலு  அக்மார்க்  அடியாள்  காமெடி  இவை  மட்டும்  போதும்  என்பவர்கள்  பார்க்கலாம்,  டைம்  பாஸ்  மூவி  ரேட்டிங்  2.5 / 5 


Thottal Poo Malarum
Directed byP. Vasu
Written byP. Vasu
Produced byP. Vasu
StarringSakthi Vasu
Gowri Munjal
Rajkiran
Sukanya
Vadivelu
Nassar
Santhanam
CinematographyAkash Ashokkumar
Edited byKMK. Palanivel
Music byYuvan Shankar Raja
Production
company
Sapphire Media & Infrastructure
Release date
  • 3 August 2007
Running time
146 minutes
CountryIndia
LanguageTamil

Friday, August 04, 2023

தண்டட்டி ( 2023) -தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் ட்ராமா) @ அமேசான் பிரைம்


டைட்டில், போஸ்டர்  டிசைன்  பார்த்து  படம் சுமாராகத்தான்  இருக்கும்  என  நான்  தவறாகக்கணித்த  இன்னொரு  பட்ம், காமெடி  மெலோ  டிராமா  மாதிரி  ஆரம்பித்து  க்ரைம் இன்வெஸ்டிகேஷன் மாதிரி  திரைக்கதை பயணித்து  பொயட்டிக் ரொமாண்டிக்  மெலோ  டிராமாவாக  பிரமோஷன்  ஆகும்  திரைக்கதை  இது. க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  அபாரம். காதலர்கள்  அனைவரும் காண  வேண்டிய  கவிதை . புது  முக  இயக்குநர்  ராம்  சங்கய்யா  மாஸ்  ஹீரோவை  நம்பாமல்  திரைக்கதையை  நம்பியதால்  ஜெயித்திருக்கிறார். 2023  ஜூன் 23  அன்று  திரை  அரங்குகளில்  வெளியான  இப்படம்  இப்போது ஜூலை 14  முதல்  அமேசான்  பிரைம்  ஓ டி டி  தளத்தில்  காணக்கிடைக்கிறது

ஸ்பாய்லர்  அலெர்ட்


60  வயதான பாட்டிதான்  நாயகி.வயதான  காலத்தில்  அவளது மகள்கள்  அனைவரும்  அடிக்கடி  வீட்டுக்கு  வந்து வீட்டில்  இருக்கும்   பசு , செல்வம்  என  கிடைத்ததை  சுருட்டிக்கொண்டு  போவதில் குறியாக  இருக்கின்றனர் . அம்மா  மீது  உண்மையான  பாசம்  காட்ட  யாரும்  இல்லை . இப்போது  நாயகியிடம்  இருக்கும்  ஒரே  சொத்து காதுகளில் அணிந்திருக்கும்  தண்டட்டி  மட்டுமே. அதையும்  ஆட்டையைப்போட  வாரிசுகள்  திட்டம்  போட்டும்  நாயகியிடம்  அது  மட்டும்  பலிக்கவில்லை


அதற்கு  கவிதையான  ஃபிளாஸ்பேக்  உண்டு . நாயகி  சின்ன  வயதில் காதலித்த  காதலனிடம்  ஆசையாய்க்கேட்டு  வாங்கி  அணிந்த  தண்டட்டி அது . காதல்  கை  கூடாவிட்டாலும்  அந்தக்காதலன்  நினைவாய்  கடைசி  வரை  தண்டட்டியுடன்  உயிர்  வாழ  நினைக்கிறார்


திடீர்  என  நாயகி  இறந்து  விடுகிறார்.   அன்று  இரவு  தண்டட்டி  களவு  போகிறது . அதை  திருடியது  யார்? என்பதைக்கண்டு  பிடிக்க  போலீஸ்காரர்  ஆன  நாயகன்  முயற்சிக்கிறார். இதற்குப்பின்  நிக்ழும்  சுவராஸ்யங்களே  பின்  பாதி  திரைக்கதை 


 நாயகி  பாட்டியாக  ரோகினி. அருமையான  நடிப்பு ,  மகளிர்  மட்டும்  படத்தில்  பிணமாக  வாழ்ந்து  காட்டிய  நாகேஷ் காட்டிய  வழியில்  இவரும்  அற்புதமாக  ந்டித்திருக்கிறார்


நாயகன்  போலீஸ்  காரராக  பசுபதி .தூள் (2003) படத்தில்  வில்லனாக  ரசிக்க வைத்து   வெயில் (2006) படத்தில்  நாயகனாக  ரசிக்க வைத்து ,மும்பை  எக்ஸ்பிர்ஸ்(2005)  காமெடியனாகக்கலக்கி , சார்பட்டா  பர20ம்பரை ( 2021) யில் குண்ச்சித்திர  வேடத்திலும்  முத்திரை  பதித்தவர் . இதில்  முதல்  பாதி  முழுக்க  காமெடி  ரோல். பின்னி  எடுத்து  விட்டார். பின்  பாதியில்  உருக்கமான  நடிப்பு 


நாயகியின்  குடிகார  மகனாக  விவேக்  பிரசன்னா  ஷோ  பாண்டியாக  ஷோ  காட்டுகிறார். மகள்களாக தீபா  சங்கர் ,பூவிதா , ஜானகி, செம்மலர்  அன்னம்  ஆகிய  நால்வரும்  ஓவர்  ஆக்டிங். காமெடிக்காக  வைக்கப்ப்ட்ட  காட்சிக்ள்  என்றாலும்  நாடகத்தனம்  தூக்கல் 


கே எஸ்  சுந்தர  மூர்த்தியின்   இசையில்  ஒரு  பாடல் சிறப்பு , க்ளைமாக்ஸ்  நெருங்கும்போது  வரும்  மெலோடி  பிஜிஎம்   கலக்கல்  ரகம்.  2  மணி  நேரம்  எட்டு  நிமிடங்கள்  ஓடும்  அளவு  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்  எடிட்டர் 


சபாஷ்  டைரக்டர்


1 நாயகனின்  கேரக்டர்  டிசைன்  ஓப்பனிங்  ஷாட்டிலேயே  தெளிவாக  விளக்கப்பட்டு அதை  வைத்துப்பின்னப்பட்டிருக்கும்  காமெடி  டிராக்  அசத்தல் .போலீசையே  உள்ளே  அனுமதிக்காத  கிராமத்தில்  ஒரு  முன்  கோபக்கார  போலீஸ்  நுழைந்தால்  என்ன  ஆகும்  என்ற  ஒன்  லைன்  தான்  அந்த  டிராக் .நன்றாக  ஒர்க்  அவுட்  ஆகி  இருக்கிறது 


2  கரிநாக்கு  உள்ள  சாபம் விட்டால்  பலிக்கும்  பவர்  உள்ள  தவளை  வாயன்  கேரக்டர் , ஊர்  வம்பை  பேசும்  கோளாறு  பாட்டி  இருவரது  கேரக்டர்  டிசைன்களும்  அருமை 


3 க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டை  யாருமே  யூகிக்க்  முடியாத  அளவில்  அவிழ்க்கும்  சாமார்த்தியம் 


ரசித்த  வசனங்கள் 


1   என்னடா இது ? முழிச்சிட்டு  இருக்கும்போதே  முழியைத்தோண்டுன  கதையா  இருக்கு ? 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்   அந்தப்பையன்  டூ வீலரில்  அமர்ந்து  கிராமத்துக்கு  செல்லும்  தூரத்தைப்பார்த்தால்  15  கிமீ  இருக்கும்  போல ., அந்த  போலீஸ்  ஸ்டேஷன்  எல்லையையே  தாண்டி  இருப்பது  போல  தெரிகிறது 


2  நாயகியின்  காதலனை  குற்றுயிர்  ஆக்கி  விட்டு  கட்டாயத்திருமணம்  செய்து  வைக்கிறார்கள் . அதற்குக்கொஞ்சமாவது  கால  அவகாசம்  எடுத்துக்கொள்ள  மாட்டார்களா? அடுத்த  நாளே  திருமணம்  நடக்குமா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   மனதைக்கனக்க  வைக்கும்  பின்  பாதி  படத்துக்காக  பொறுமையாக  இருந்து  காண  வேண்டிய  நல்ல  படம், ரேட்டிங் 3  5 


நன்றி - அனிச்சம்  மின்னிதழ்  ஆகஸ்ட் 1, 2023