Saturday, May 06, 2023

CHATHURAM ( 2022) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( எரோட்டிக் த்ரில்லர் ) @ ( யூ ட்யூப்)

 


 நாயகன் , நாயகி , வில்லன்  மூவரும்  சிறந்த  செஸ்  பிளேயர்கள்  என  காட்டிய  படங்கள்  எனக்குத்தெரிந்து ஒன்றுமே இதுவரை  வரவில்லை . டைட்டில் , போஸ்டர்  டிசைன்  முதற்கொண்டு  எதிர்பார்ப்பை  எகிற  வைத்தாலும்   கம்ப்ளீட்  மெடிக்கல் செக்கப்க்கு  5000  ரூபாய்  பணம்  கட்டி  ரிசல்ட்  வந்த  பின்  எந்தக்குறைகளும்  இல்லை   என  டாக்டர்  சொல்லும்போது  நமக்கு  நிம்மதிதான் வரவேண்டும், மாறாக  அடடா  வீணா  5000  ரூபா  தண்டம்  கட்டிட்டமே  என  எண்ணத்தோன்றும், பட  க்ளைமாக்ஸ்  அப்படித்தான்  எண்ண  வைத்தது 


   ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன் ஒரு  கிழ  போல்ட். இந்த  ஆளுக்கு  ஆல்ரெடி  மேரேஜ்  ஆகி  முதல்  மனைவியைப்பிரிந்து  வாழ்பவர்.ஏகப்பட்ட  சொத்துக்களுக்கு  அதிபதி , ஆனா  ஆள் ஒரு  சிடுமூஞ்சி , எல்லார்  கிட்டேயும்  எரிந்து  விழும்  கேரக்டர் . இந்த  ஆள்  வறுமைக்கோட்டுக்குக்கீழ்  வாழும்  நாயகியை  இரண்டாம்  தாரமாகக்கட்டிக்கொண்டு  தன்  இருப்பிடத்துக்கு  அழைத்து  வருகிறார்


டொமெஸ்டிக்  வயலென்ஸ்   என  சொல்லப்படும்  எல்லாக்கொடுமைகளையும்  நாயகிக்கு  இழைக்கிறார். அவர்  கூட்   செஸ்  விளையாடி  அதில்  நாயகி  ஜெயித்தால்  அதற்கு  ஒரு  பளார் .  பால்கனில  நின்னுட்டு  இருந்தா  அதற்கு  வெளி  ஆட்கள்  யாராவது  கமெண்ட்  அடிச்சா  கமெண்ட்  அடிச்சவங்களை  விட்டுட்டு  மனைவிக்கு  ஒரு  அடி ..


 இந்த  மாதிரி  கொடுமைகளை எல்லாம்  சகித்துக்கொண்டு    வாழும்  நாயகிக்கு  ஒரு  தங்க  தருணம்  வாய்க்கிறது . வில்லன், நாயகி  இருவரும்  ஒரு  மலை  உச்சியில்  நின்று  பேசிகொண்டிருக்கும்போது  பாறை  வழுக்கி  வில்லன்  கீழே  விழுந்து  பின்  மண்டையில்  அடிபட்டு பக்க  வாதத்தால்  பாதிக்கப்பட்டு  படுத்த  படுக்கை  ஆகிறான்


நாயகிக்கு  ஒரே  கொண்டாட்டம், என்னை எப்படி  எல்லாம்  கொடுமைப்படுத்தினே? உனக்கு  நல்லா  வேணும்  எனும்  தொனியில்  வில்லனை  ட்ரீட்  பண்ணுகிறாள் . வில்லனை  கவனித்துக்கொள்ள   ஒரு  ஆண்  நர்ஸ்  நியமிக்கப்படுகிறான். அவன்  தான்  நாயகன் 

  நாயகன் - நாயகி  இருவருக்கும்  நாளடைவில்  பழக்கம்  ஆகி  கொடுக்கல் - வாங்கல்  எல்லாம்  நடந்து  முடிகிறது 


நாம்  இருவரும்  நிம்மதியாக  வாழ  வில்லனை போட்டுத்தள்ளிவிடலாம்  என  நாயகி  ஐடியா  கொடுக்கிறாள் . ஆனால்  நாயகனுக்கு  கொலை  செய்ய   மனம்  வரவில்லை. நாயகனுக்கு  ஃபாரீன்  போய்  செட்டில்  ஆக  ஆசை, அவனுக்கு  வேறு  ஒரு  காதலி  உண்டு 


இப்போது  வில்லன்  மர்மமான  முறையில்  இறக்க  குடும்ப  வக்கீலுக்கு  நாயகி  மீது  சந்தேகம், உயிலில்  வில்லன்  எல்லா  சொத்துக்களையும்  நாயகி  பேரில்   எழுதி  வைத்திருந்தாலும்  சந்தேகத்துக்கு  உரிய  மரணம்  எனில்  சொத்து  நாயகிக்குப்போய்  சேராது  என  கண்டிஷன்  வேற  இருக்கு . இதைக்காரணம்  காட்டி  லாயர்  நாயகியை  தன்  ஆசைக்கு  இணங்க மிரட்டுகிறான்/ வில்லனின்  முன்னாள்  மனைவி  தன்  குடும்பத்துடன்  வருகிறாள் . போலீஸ்  நாயகி , நாயகன்  இருவரையும்  விசாரணைக்கு  ஆளாக்குகிறது 


 இதற்குபின்  இந்த  மரணத்தில்  துப்பு  துல்ங்கியதா? என்பது மீதி  திரைக்கதை


நாயகியாக  மொத்தப்படத்தையும்     தாங்கி  நிற்பவர் ஸ்வாஷிகா  விஜய் .கன்னங்கள்  இரண்டுக்கும்    இவ்வளவு  ரோஸ்  ஷேடு  கொடுத்து  மேக்கப்  போட்ட  முதல் நடிகை  இவராகத்தான்  இருக்கும் . ட்ரான்ஸ்ஃபர்மேசன்  சீன்களில்  கலக்குகிறார்


 நாயகன்  ஆக ரோஷன்  மேத்யூ  கச்சிதமான  நடிப்பு . இவரது  கேரக்டர்  டிசைன்  சரியாக  விளக்கப்படவில்லை , தன்  முதல்  காதலியிடமும்  நேர்மையாக  , நாணயமாகப்பேசுகிறார். தன்  கள்ளக்காதலியிடமும்  அதே  போல்  பழகுகிறார். உண்மையில்  இவர்  யாரை  உண்மையாகக்காதலிக்கிறார்  என்பது  குழப்பம் .( குழப்பமா  முக்கியம்  படத்தைப்பாருய்யா  மொஎண்ட் )


வில்லனாக  அலென்சியர்  லெ   கொஞ்சம் செயற்கைதட்டும்  நடிப்பு . படுக்கையில்  வீழ்ந்த  பின்  இவரால்   எந்த  பங்களிப்பையும்  சரி  வர  செய்ய  முடியவில்லை 


ஒரு  சாதாரண  கேரக்டரைக்கூட  தன்  அசாத்திய  திறமையால்  தூக்கி நிறுத்தும்  நடிகர்கள்   இருவர். 1  சித்திக்  2  ஜாஃபர்  இடுக்கி 


நாயகனின்  முதல்  காதலியாக  சாந்தி  பாலச்சந்திரன்  அழகிய  முகம், கச்சித  நடிப்பு 


போலீஸ்  ஆஃபீசராக  லியோனா லிசாய்  அதிக  வேலை  இல்லை ., வந்தவரை  ஓக்கே 


பிரதீஷ்  வர்மாவின்  ஒளிப்பதிவில்  நாயகியை  அடிக்கடி  க்ளோசப்பில்  அழகாகக்காட்ட  முயல்கிறார்.  பீத்து  ஜோசஃபின்  எடிட்டிங்கில்  கச்சிதமாக  2  மணி  நேரத்தில்  படத்தை  கட்  பண்ணி  ட்ரிம்  பண்ணி  இருந்தாலும்  3  மணி  நேரம்  ஓடுவது  போன்ற  பிரமையைத்தருகிறது . பிரசாந்த் பிள்ளையில்  இசையில்  இரு  பாடல்கள்  ஓக்கே  ரகம்,  பின்னணி  இசை  ஓக்கே  ரகம் 


சித்தார்த்  பரதன்  தான்  திரைக்கதை  இயக்கம் ,பெரிய  ட்விஸ்ட்  அண்ட்  டர்ன்ச்  எல்லாம்  எதுவும்  இல்லாமல்  ஸ்லோ  பர்ன்  த்ரில்லர்   ஆக  படத்தை  எடுத்திருக்கிறார்

சபாஷ்  டைரக்டர் (சித்தார்த்  பரதன்)

1    இந்த  மாதிரி  படங்களுக்கு  நாயகியின்  குளியல்  காட்சி மிக  முக்கியம்  என்பதை  உணர்ந்து  சமூகப்பொறுப்புடன்  கதைக்கு  தேவை  இருக்கோ  இல்லையோ  அட்டாச்  செய்தது 

2  படத்தில்  பங்கேற்றவர்கள் 70%  பேர்  பெண்களே! பெண்ணுக்கு  முக்கியத்துவம்  கொடுத்த  பாங்கு  அருமை 


ரசித்த  வசனங்கள் 


1 கணவனுக்கு  கை ராசி  என்பது  மனைவி  கால்  எடுத்து  புகுந்து  வீட்டுக்கு  வந்த  கால்  ராசி தான் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வில்லன்  மலை  உச்சியிலிருந்து  கீழே  விழுந்து  டொம்  என்ற  சத்தத்துடன்  பின்  மண்டையில்   அடிபடும்போது  அப்போதே  ஆள்  அவுட்  ஆகி  இருக்க  வேண்டும் . ஆனால்  சும்மா  காயம்  தான்  என  பூசி  மெழுகுவது 


2 நாயகன் - நாயகி  இருவருக்கும்  தொடர்பு  உண்டா? என  போலீஸ்  விசாரிக்கும்போது  உண்மை  அறிந்த  சம்ப்வத்தை  நேரில்  பார்த்த  பணிப்பெண்  அதை  ஏன்  போலீசிடம்  மறைக்கிறார் ? 


3  நாயகன்  வெளியூர் / வெளிநாடு  போய்  விடக்கூடாது  என  நாயகி  செய்யும்  சதித்திட்டம்  நாயகனுக்கு  க்டைசி  வரை  தெரியாமலே  இருப்பது 


4  நாயகனின்  முதல்  காதலி  நாயகனின்  கள்ளக்காதல்  பற்றி  பெரிதாக  அலட்டிக்கொள்ளாதது   உறுத்துகிறது 


5   வில்லனுக்கு  நாயகி  சயனைடு  வைத்துக்கொலை  செய்திருப்பாரோ? என  போலீஸ்  , வக்கீல்  என  எல்லோரும்  சந்தேகப்படுவது  மடத்தனம் .  தீவிர  சிகிச்சையில்  இருக்கும்  நோயாளிக்கு  சும்மா  ஆக்சிசன்  ட்யூப்பை  கட்  பண்ணி  விட்டாலே  போதுமே? சயனைடு  விஷம்  போஸ்ட்  மார்ட்டம்  ரிப்போர்டில்  காட்டிக்கொடுக்காதா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  ஏ  சர்ட்டிஃபிகெட்  ஃபிலிம் , லைட்டாக  கிளாம்ர்  இருக்கிறது  ( டார்க்கா  எதிர்ப்பார்க்க  வேண்டாம்) 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பர  பரப்பாக  ஆரம்பிக்கும்  படம்  ஸ்லோவாக  சென்று  ஏனோ  தானோ  என  முடிகிறது . பிரமாதம்  என  மெச்சவும்  முடியல , டப்பாப்படம்  என  தள்ளவும்  முடியலை , சுமார்  ரகம்  ., ரேட்டிங் 2.25  /5 

Friday, May 05, 2023

உன்னைப்போல் ஒருவன் (1965) - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) தெசிய விருது பெற்ற படம்

 


ஆனந்த  விகடன்  வார  இதழில்  தொடர்கதையாக  வந்தபோது  வாசகர்களின்  ஏகோபித்த  பாராட்டைப்பெற்றது. பின்  நாவலாகவும்  வெளி  வந்தது. ஜெயகாந்தன்  தானே  திரைக்கதை , இயக்கம் , தயாரிப்பு  ஆகிய  பொறுப்புக்களை ஏற்று  படமாக  எடுத்தார்.  இது  தேசிய  விருது  பெற்ற  படம் .  சேரி  மக்களின்  வாழ்க்கையைப்பதிவு  செய்த  படம் . பாடல்களே  இல்லாத  இந்தப்படம்  அந்தக்காலத்தில்  துணிச்சலான  முயற்சியாகப்பேசப்பட்டது 

    ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகிக்குத்திருமணம்  ஆன  பின்  கணவன்  அவள்  வயிற்றில்  ஒரு குழந்தையைக்கொடுத்து விட்டு குழந்தை  பிறக்கும்  முன்பே  ஓடி  விட்டான். நாயகி  தனி  ஒரு  ஆளாய்  சித்தாள்  வேலைக்குப்போய்  குழந்தையை  வளர்க்கிறாள் . மகனுக்கு  10  வயசு  ஆகும்போது  நாயகிக்கு  அந்த  ஊரில்  இருக்கும்  கிளி  ஜோசியக்காரனுடன்  பழக்கம்  ஏற்படுகிறது . அவன்  ஒரு  அனாதை 


 அவனைத்தன்  கூடவே  வந்து  தங்கிகொள்ளும்படி  நாயகி  அழைக்கிறாள் . அவனும்  அவள்  உடன்  வீட்டுக்கு  வந்து  தங்கிக்கொள்கிறான். இருவரும்  லிவ்விங்  டுகெதர்  வாழ்க்கை  வாழ்கிறார்கள் 


 இது  மகனுக்குப்பிடிக்கவில்ல அவன்  வீட்டை  விட்டு  வெளியேறுகிறான். ஒரு  மாதமாக  மகனின்  பிரிவால்  வாடும்  நாயகியைக்கண்ட  அந்த  ஜோசியக்காரன்   என்னால்  அம்மா - மகன்  இருவரும்  பிரிய  வேண்டாம்  என  அவன்  நாயகியை  விட்டு  விட்டு  கிளம்புகிறான் 


 கிளம்பும்  முன்  நாயகியின்  மகனை  சந்தித்து  தன்  நிலை  தெரிவித்து  விட்டு  செல்கிறான். இப்போது  அம்மா, மகன்  சேர்ந்து  விட்டாலும்  துணை இல்லை 


 இப்போது  அடுத்த  சிக்கல் , அம்மா  கர்ப்பமாக  இருக்கிறார். இதற்குப்பின்  திரைக்கதையில்  ஏற்படும்  திருப்பங்கள்  என்ன? என்பதை  திரையில் காண்க 


நாயகியாக  காந்திமதி  அற்புதமாக  நடித்திருக்கிறார். மண்  வாசனை  ஒச்சாயிக்கிழவி  கேரக்டர்  தான்  இவரது  உச்சம்  என்றாலும்  இதிலும்  பிரமாதமான  வாய்ப்பு  தான்.  மகன்  மீது  அன்பு , நாயகன்  மீது  காதல் , தன்  மீது  சுயபசாதாபம்  என  கலவையான  உண்ர்வுகளை  காட்டும்  விதம்  அருமை 


 நாயகனாக  பிரபாகரன் . பாந்தமான  நடிப்பு 


 பாட்டியாக  வருபவர்  த்மிழ்ப்படங்களில் பலவற்றில்  பாட்டி  ரோலுக்குப்பேர்  போனவர் .   சிட்டி  பாபுவாக  வரும்  அந்த  சிறுவன்  நடிப்பும்  கச்சிதம் 


 பாடல்கள் இல்லை ,  பின்னணி  இசை  சிட்டி  பாபு 



சபாஷ்  டைரக்டர்

1 ஓப்பனிங்  ஷாட்டில்  அந்த  பெர்யவர்  - சிறுவன்  காம்பினேஷன்  காட்சி  அருமை . வசனமும்  கச்சிதம்


2  க்ளைமாக்சுக்கு  கொஞ்சம்  முன்  நாயகி  தன்  மகனிடம்  உன்னைப்போல்  ரோஷம்  உள்ள  ஒருவன்  எனக்கு  அண்ணனாகப்பிறந்திருந்தால்  இன்று  என்  நிலைமை  இப்படி  இருந்திருக்காது  என  டைட்டிலுக்கு  நியாயம் கற்பிக்கும் காட்சி  டச்சிங் 


3  பல  இடங்களில்  வாய்ப்பிருந்தும்  பாடல்  காட்சிகளே  வைக்காதது அருமை 


4  க்ளைமாக்ஸ்  காட்சியில்  ஐஸ்  வண்டிக்காரனின்  அரை  அணா  ஒரு  அணா  பால்  ஐஸ்  என  குரல்  கேட்டு  அம்மா  நினைவு  வந்து  கதறும்  சிறுவனின்  நடிப்பு  உருக்கம் 


ரசித்த  வசனங்கள் 


1  திடீர்னு  சொல்லாம கொள்ளாம  ஊரை  விட்டுப்போய்டுவியா?


 நம்மால  மத்தவங்களுக்கு  ஒரு  கஷ்டம்  வர  நான்  காரணமா  இருக்க  மாட்டேன் 


2  உன்னை வெறும்  பெண்  என்று  மட்டும் தான்  நான்  பார்த்தேன் , ஒரு குழந்தைக்கு  அம்மா  என்பதை  மறந்துட்டேன்


3   ஆமா, ஏன்  இந்த  ஏரியா  பக்கமே  வர்லை ?  உன்க்கு  என்  கிட்டேயுமா  சண்டை?


 இல்லை  சார் , எனக்கு  என்  கூடதான்  சண்டை 


 யார்  கிட்டே  சண்டை போட்டாலும்  தாய் கிட்டே  சண்டை போடக்கூடாது , தாய்  கிட்டே  சண்டை போட்டாலும்  தன் கிட்டேயே  ஒருத்தன்   சண்டை போடக்கூடாது , ஏன்னா  தன்னைத்தானே  வெறுக்க  ஆரம்பிச்ட்டா  மனசு  அழுகிடும்   

4   உன்  அம்மாவை  வேஷக்காரினு  சொன்னியாமே? ஒரு  அம்மா  தன்  குழந்தையை  அடிப்பதும்  திட்டுவதும் கொல்றேனு  மிரட்டுவதும்  வேஷம்  தான். 


5   என்  மேல  கோபப்படவோ , என்னை  வெறுக்கவோ யாருமே  இல்லைங்கற  வருத்தம்தான்  எனக்கு 


6  உன்  கோபம் , ரோஷம்  எதையும்  விட்டுடாத, நம்ம  மாதிரி  மனுசாளுக்கு  அதுதான்  சொத்து 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  தன்  மகனை  என்னதான்  குழந்தைதானே  என  நாயகி  சொல்லிக்கொண்டாலும்  தான் ஒரு  புதிய  ஆண்  துணையுடன்  ஒரே  வீட்டில்  வாழப்போகிறோம்  என்ற  தகவலையும், அந்த  ஆள்  பற்றி  ஒரு  இண்ட்ரோவையும்  மகனுக்கு  முறைப்படி  முன்  கூட்டியோ  தந்திருக்க  வெண்டாமா? திடீர்   என  வீட்டில்  புது  ஆளைப்பார்த்ததும்  அவன்  மிரள்வான்  என  யூகிக்க  வேண்டாமா? 


2  பாட்டியிடம்  நாயகி  தன்  குழந்தை / பையன்   எப்படி  அந்த ஆளை  எதிர்கொள்வானோ  என  அங்கலாய்க்கிறாள் . அப்போ  பாட்டியை  விட்டே  தன்  மகனிடம்  விளக்க  வைத்திருக்கலாமே? சில  விஷயங்களை  நாம்  நேரடியாக  சொல்வதை  விட  இன்னொருவர்  மூலம்  சொல்ல வைத்தால்  நல்லதுதான்  


3  ஆடை  வ்டிவமைப்பில்  இயக்குநர்  கோடடை  விட்டு  விட்டார் . நாயகி , ஜோசியக்காரன் பாட்டி  எல்லோரும்  குடிசை  வாழ்  மக்கள்  போல  விளிம்புநிலை  ஆட்களீன்  உடைகளை  அணிந்திருக்க  அந்தப்பையன்  மட்டும்  பணக்கார  வீட்டுப்பையன்  போல்  ஷோக்கா  டி  சர்ட்  அணிஃந்திருக்கிறான் 


4  அந்த  சின்னப்பையன்  உட்பட  படத்தில்  வரும் அனைத்து  ஆண்  கேரக்டர்களும்  எப்போப்பாரு  பீடி  அல்லது  சிகரெட்  உடன்  ஊதிக்கொண்டே  இருப்பது  கடுப்படிக்கிறது.  விளிம்புநிலை  மனிதர்களில்  எல்லோருமே  தம்  பார்ட்டிகள்  தானா? நூத்துக்கு  ஒரு  ஆள்  கூட  டீ டோட்டலர்  ஆக  இருக்க  மாட்டானா? 


5  அம்மாவும் , ம்கனும்  சேர்ந்திருக்க  வேண்டும்  என்பதற்காக  நாயகியைப்பிரிந்து  வாழும்  நல்ல  எண்ணம்  கொண்ட  நாயகன் அவர்கள்  இருவரும்  சேர்ந்து  வாழ்கிறார்களா? என்பதை  கிராஸ்  செக்  செய்ய  மாட்டாரா?  அட்லீஸ்ட்  யாரிடமாவது  விசாரிக்க  மாட்டாரா? 


6  பாதுகாப்பில்லாத  உறவில்  ஈடுபடும்  நாயகன், நாயகி  இருவருக்கும்  கர்ப்பம்  ஆகப்போகும் நிலை  பற்றிய  புரிதல்  இருக்காதா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   தொடர்கதையை, நாவலைப்படித்தவர்கள்  , ப்டிக்கதவர்கள்  அனைவரும்  பார்க்கலாம்.  இதில்  கமர்சியல்  எலிமெண்ட்ஸ்  எதுவும்  இல்லை.  பெண்களுக்கு  மிகவும்  பிடிக்கும்  ரேட்டிங் 3 / 5 


உன்னைப்போல் ஒருவன்
இயக்கம்ஜெயகாந்தன்
தயாரிப்புஜெயகாந்தன்
ஆசிய ஜோதி பிலிம்ஸ்
இசைசிட்டிபாபு
நடிப்புபிரபாகரன்
காந்திமதி
வெளியீடுபெப்ரவரி 271965
நீளம்3362 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Thursday, May 04, 2023

OH MY DARLING (2023) =மலையாளம் - சினிமா விமர்சனம் ( சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்

 


   OH MY DARLING (2023) =மலையாளம் - சினிமா விமர்சனம் ( சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்

இந்தப்பட்ம் கேரளாவில் ரிலீஸ் ஆனபோது பலரும் இடைவேளை முடிந்ததும் கிளம்பி விட்டார்கள் . காரணம் வழக்கமான லவ் ஸ்டோரியாக ஸ்லோவாக படம் போனதுதான். அது போக ப்ரமோஷனில் இது ஒரு ரொமாண்டிக் காமெடி மெலோ டிராமா என விளம்பரப்படுத்தினார்கள் . ஆனால் இடைவேளைக்குப்பின் தான் திரைக்கதையில் திருப்பமே வருகிறது. எனவே ஓ டி டி யில் படம் பார்ப்பவர்கள் பொறுமையாகப்பார்க்க வேண்டும்



ஸ்பாய்லர் அலெர்ட்



நாயகன் வழக்கம் போல வேலை வெட்டி இல்லாத இளைஞன்.அம்மா, அப்பா , தங்கை என ஒரு நார்மல் ஃபேமிலி பேக் கிரவுண்ட் உள்ளவர் அதே போல தான் நாயகியும் , இருவரும் ஓப்பனிங் சீன்லயே காதலர்களாகத்தான் காட்டப்படுகிறார்கள் . அதனால இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த தருணம், அறிமுகப்படலம் இதெல்லாம் இல்லை



நாயகியோட பிறந்த நாளுக்கு நாயகன் அவள் வீட்டுக்கே போய் கிஃப்ட் தந்து சர்ப்பரைஸ் தருவது , அதே போல நாயகனின் பிறந்த நாளுக்கு நாயகி டிட்டோ வேலையை செய்வது . நண்பர்களுடன் பார்ட்டி , சரக்கு அடிப்பது என முதல் 40 நிமிடங்கள் பார்த்துப்பழகிய டெம்ப்ளேட்டான காதல் கதை தான்



திருமணத்துக்கு முன்பே நாயகி தான் கர்ப்பம் என்ற தகவலை நாயகனிடம் சொல்லி விரைவில் திருமணம் செய்து கொள் என கட்டாயப்படுத்துகிறாள் , ஆனால் நாயகனுக்கு நிரந்தர வேலை கிடைக்காமல் திரு,மணம் செய்வதில் இஷ்டம் இல்லை



நாயகியின் பெற்றோரை சந்தித்து பேச முன் வருகிறான். தங்கள் மகளுக்கு ஒரு காதலன் இருக்கிறான், மகள் திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாக இருக்கிறாள் என்ற இரு அதிர்ச்சிக்ரமான விஷயங்களை எப்படி அவர்கள் ஜீரணித்துக்கொள்வார்கள் என்ற தயக்கத்துடன் நாயகன் அவர்களிடம் விஷயத்தை சொல்ல அவர்கள் அதை எல்லாம் பெரியதாக அலட்டிக்கொள்ளாமல் அவ்ர்கள் பங்குக்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை சொல்கின்றனர் . நாயகன் மட்டுமில்லாமல் படம் பார்க்கும் ஆடியன்சுக்கும் அது பெரிய அதிர்ச்சி



அந்த எதிர்பாராத திருப்பம் என்ன? இதற்குப்பின் இவர்கள் திருமணம் நடந்ததா? என்பதை திரையில் காண்க



நாயகனாக மெல்வின் ஜி பாபு டெம்ப்ளேட்டான மலையாள தாடிக்கார இளைஞன் கேரக்டர். கச்சிதமாக நடித்திருக்கிறார். ரொமாண்டிக் போர்சன், அப்பா , தாத்தா செண்ட்டிமெண்ட் போர்சன், அம்மா உடனான பாண்டிங் , காதலியுடன் ஊடல் என பல இடங்களில் நடிக்க நல்ல வாய்ப்பு



நாயகியாக அனிகா சுரேந்திரன் மாறுபட்ட க்தாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால் லைட்டான லவ் போர்சன் , செண்ட்டிமெண்ட் சீன்களில் சைன் பண்ணிய அளவு அந்த ட்ரான்ஸ்ஃபர்மேஷன் சீனில் கலக்கவில்லை. அதற்கு முக்கியக்காரணம் அவரது பால் வடியும் முகம்



பச்சைக்கிளி முத்துச்சரம் ஜோதிகா மாதிரி வில்லித்தனம் , படையப்பா நீலாம்பரி மாதிரி நெக்டிவ் ஷேடு உள்ள கதாபாத்திரத்தை இன்னும் பிரமாதமாக நடித்திருக்க வேண்டும் , குருவி தலையில் பனங்காய் கதைதான்



நாயகன் ,நாயகி இருவரது பெற்றோரும் கச்சிதமாக தங்கள் பங்களிப்பை செய்திருக்கிறார்கள் .



அன்சார் ஷாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்ணுக்கு இதம் , நாயகியின் படுக்கை அறை டெக்ரேஷனில் ஆர்ட் டைரக்டர் உள்ளேன் ஐயா என்கிறார்



ஷான் ரஹ்மானின் இசையில் இரு பாடல்கள் ஓக்கே ரகம், பின்னணி இசை இன்னும் மிரட்டி இருக்கலாம் குறிப்பாக கடைசி அரை மணி நேரத்தில் கலக்கலான இசையை தந்திருக்கலாம்



லிஜோ பாலின் எடிட்டிங்கில் 2 மணி நேரப்படமாக ட்ரிம் பண்ணி இருக்கிறார்கள்


சபாஷ் டைரக்டர்

1 நாயகனின் அம்மா யூ ட்யூப் ல புரோகிராம் செய்பவர் எனக்காட்டி கதைக்கு தேவையான சுவராஸ்யங்களை அந்த கேரக்டர் வழி புகுத்திய சாமார்த்தியம்

2 ஹாஸ்பிடல் ல அப்பா சீரியசாக இருக்க வெளியே நாயகனும், அம்மாவும் பேசிக்கொள்ளும் செண்ட்டிமெண்ட் காட்சி ச்பாஷ் ரகம்

3 நாயகனின் தாத்தா நாயகனின் அப்பா வின் லவ் மேரேஜ்க்குப்பின் காண்டாக்ட் இல்லாமல் இருப்பது குடும்பத்தை நாயகன் சேர்த்து வைப்பது எல்லாம் லேடிசை கவரும் அருமையான செண்ட்டிமெண்ட் காட்சிகள்



4 திரைக்கதைக்கு மிக முக்கியமே நாயகியின் ட்விஸ்ட் மேட்டரும் , அதைத்தொடர்ந்து வரும் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் பிரச்சனையும் தான், அந்தகாட்சிகளை குறைவாகக்காட்டி விட்டு முதல் பாதியை ஜவ்வாக இழுத்திருக்க வேண்டாம், இருந்தாலும் பின் பாதி திருப்பம் அட்டகாசம்



ரசித்த வசனங்கள்



1 ஃபிரண்ட்ஸ் அண்ட் பெனிஃபிட் கான்செப்ட் தான் நல்லது



கமிட்மெண்ட் இல்லாத உறவில் என்ன சுவராஸ்யம் இருக்கும் ?



2 ஒரு பையன் ஒரு பெண்ணை விரும்பிட்டா அவ வீட்ல இருக்கறவங்களோட ஒவ்வொரு அசைவையும் தெரிஞ்சு வெச்சுக்குவான், அதுதான் ஆண்கள்



3 அப்பா , அது வந்து இது புது விதமான எக்சசைஸ்



நீ எல்லாம் எக்சசைஸ் பண்ண ஆரம்பிச்சதே புது விஷயம் தான்



4 சாரி ஆக்சிடெண்டலா கை பட்டு அப்படி ஆகிடுச்சு



அது எப்படி? வெறும் கை மட்டும் பட்டா பிரெக்னெண்ட் ஆவாளா?



5 நேரம் கிடைக்கும்போதெல்லாம் உன் குடும்பத்தோட டைம் ஸ்பெண்ட் பண்ணு



6சாரி மம்மி நான் அப்படி உங்க கிட்டே பேசி இருக்கக்கூடாது



விடுடா , குடும்பம்னா சண்டை வரத்தான் செய்யும், அப்றம் சமாதானம் ஆகிக்கலாம், நீ அப்பா கிட்டே சண்டை எல்லாம் போட்டுக்கோ , ஆனா பேசாம இருக்காத



7 இந்தக்கால பசங்களுக்கு அன்பை வெளீல காட்டத்தெரியாது



8 அங்க்கிளுக்கு என்னை ரொம்பப்பிடிக்கும், ஆனா நான் எனக்கு ஏதாவது பிரசனை வரும்போதுமட்டும் தான் அங்கே போய் இருக்கேன், ஆனா ஒரு தடவை கூட அவருக்கு ஏதாவ்து பிரச்சனை இருக்கா?னு கேட்டதில்லை

லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்



1 கர்ப்பமா இருக்கும் நாயகியிடம் நாயகன் வைட்டமின் மாத்திரைனு பொய் சொல்லி அபார்ஷன் மாத்திரை தர்றான். காலேஜ்படிக்கும் பெண் அதைப்படிச்சுப்ப்பார்க்க மாட்டாளா> தனி மாத்திரையா இருந்தா பரவால்லை . அட்டையுடன் பெயரும் இருக்கே?



2 நாயகன், நாயகி இருவரும் அடிக்கடி நாயகி வீட்டு மாடியில் சந்திக்கிறார்கள் , கீழே பெற்றோர் , ஒரு முறை கூட மாட்டவே இல்லை



3 நாயகியின் பிறந்த நாள் அன்று நாயகியின் வீட்டுக்கு வரும் நாயகனை மேலே மாடிக்கு வரவைக்க எணியை இறக்கும் நாயகி அடுத்த நாள் காலை வரை அந்த ஏணியை எடுத்து வைக்க மறக்கிறாள் , ஆனால் வீட்டில் யாரும் பார்க்கவில்லை



4 தன் காதலி கர்ப்பம் ஆனதும் அதற்கு பாவமன்னிப்புக்கேட்க சர்ச் போகும் நாயகன் தங்கள் குடும்ப நண்பர் பாதிரியார் இருக்கும் சர்ச்க்கே போய் மாட்டிக்குவாரா? வேற சர்ச்சா இல்லை

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -க்ளீன் யூ


சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - முதல் பாதி செம போர் . பின் பாதி செண்ட்டிமெண்ட் காட்சிகள் அருமை , கடைசி அரை மணி நேரம் கலக்கல் வேகம்,அமேசான் பிரைமில் காணக்கிடைக்கிறது , ரேட்டிங் 2.5 /.



Oh My Darling
Oh My Darling (2023 film).jpg
Theatrical release poster
Directed byAlfred D Samuel
Written byJineesh K Joy
Produced byManoj Sreekanta
Starring
CinematographyAnsar Shah
Edited byLijo Paul
Music byShaan Rahman
Production
company
Ashtree Ventures
Release date
  • 24 February 2023
CountryIndia
LanguageMalayalam