Wednesday, April 26, 2023

OTTU (2022)-மலையாளம் - ரெண்டகம் ( தமிழ்) - (DOUBLE CROSS)- சினிமா விமர்சனம் ( ஆக்சன் கேங்ஸ்டர் த்ரில்லர்) @ அமேசான் பிரைம், ஆஹா ஓடிடி

   


 1997ல்  அர்விந்த்சாமி  நடிப்பில்  தேவராகம்  எனும்  மலையாளப்படம்  ரிலீஸ்  ஆனது, மிக  நீண்ட  இடைவெளிக்குப்பின்  கேரள  தேசத்துக்கு  அர்விந்த்சாமியின்  கம்  பேக்  படமாக  இது  அமைகிறது . மலையாள  நடிகர்  குஞ்சக்கா  போபன்  நடிப்பில்  வெளியாகும்  முதல்  தமிழ்ப்படம்  இது. அதாவது  மலையாளம்,  தமிழ்  என  இரு  மொழிகளில்  தயாரான  படம்  உண்ட  வீட்டுக்கு  ரெண்டகம்  செய்பவனின்  கதைதான்  இது . ஒரு  வித்தியாசமான  முயற்சியாக  சேப்டர் 2  தான்  இப்போது  ரிலீஸ்  ஆகி  இருக்கிறது. சேப்டர் 1  சேபடர் 3  இனிமேல்  தான்  ரிலீஸ்  ஆகும். 2  வது  பாகத்தை  தனியாகப்பார்த்தாலும்  புரியும்படிதான்  திரைக்கதை  அமைக்கப்பட்டிருக்கிறது

.மலையாளத்தில்  சுமாராகப்போன  படம்  தமிழில்  படு  சுமாராகத்தான்  ஓடியது  தெலுங்கு  நடிகையான  ஈஷா  ரேபா  தான்  படத்தின் நாயகி , ஹிந்தி  நாயகனான  ஜாக்கி  ஷெராப் தான் வில்லன். தமிழ் , தெலுங்கு , மலையாளம், ஹிந்தி  என  பான்  இந்தியா  மூவியாக  எடுக்க  திட்டம்  இட்டிருக்கிறார்கள்  போல , நடிகர்  ஆர்யா  வின்  சொந்தப்படம்  இது 


2022  செப்டம்பர் 8  அன்று   கேரளாவிலும், 2022  செபடம்பர் 22  தமிழகத்திலும்  ரிலீஸ்  ஆனது இப்போது  அமேசான்  பிரைம்  ஓடிடி யில்  காணக்கிடைக்கிறது 

 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஃபாரீன்  போக  ஆசைப்படுபவன், அதற்கு 25  லட்ச  ருபாய்  பணம்  தெவைப்படுகிறது , நாயகனின்  மாமா  ஒரு  கும்பலிடம்  கோர்த்து  விடுகிறார். அந்த  கும்பல்  நாயகனுக்கு  ஒரு  அசைன்மெண்ட்  தருகிறது . அதை  செய்து  முடித்தால்  அவர்  விரும்பிய   பணம்  கிடைக்கும்


அந்த  கும்பல்  சொல்லும்  ஃபிளாஸ்பேக்  இது -மும்பை  கேங்க்ஸ்டர்  ஒருவனின்  வலதுகரமாக  செயல்பட்டவன்  அசைனர்  என்ற  தாதா   இந்த  அசைனர்க்கு  வலது  கரமாக    கம் கார்  டிரைவராக  செயல்பட்டவன் தாவூத்  என்பவன் . 30 கோடி  ரூபாய்  மதிப்புள்ள  தங்கத்தை  கடத்தி  வரும்போது  ஒரு  விபத்து  நடந்தது  , அதில்   அசைனர்  இறந்து  விடுகிறான். பலத்த  காயங்களுடன்  உயிர்  பிழைத்த  தாவூத்  இப்போது  பழைய  நினைவுகளை  இழந்து  ஒரு  நடைப்பிணமாக  வாழ்கிறான்


 நாயகனுக்குக்கொடுக்கப்பட்ட  அசைன்மெண்ட்  நாயகன்  அந்த  தாவூத்  உடன்  பழக  வேண்டும், அவனுக்கு  பழைய  நினைவுகளைக்கொண்டு  வர  வேண்டும், அந்த  தங்கம்  இருக்கும்  இடம்   அறிய  வேண்டும் 


நாயகன்  ஒத்துக்கொள்கிறான், நாயகனுக்கு  ஒரு  காதலி  உண்டு . அவள்  சொல்லை  மீறி  இந்த  அசைன்மெண்ட்டில்  நாயகன்  இறங்குகிறான். அந்த  தாவூத்  இப்போது  ஒரு  தியேட்டர்  கேண்ட்டீனில்  வேலை  பார்க்கிறான் 


 அவனுடன்  சினேகமாகி  கொடுக்கப்பட்ட  அசைன்மெண்ட்டை  நிறைவேற்றினாரா? என்பது  மீதிக்கதை 


நாயகன்  ஆக  குஞ்சாக்கா  போபன். மிக  இயல்பான  நடிப்பு . மிக  நல்லவராக  முதல்  பாதியில்  வருபவர்  பின்  பாதியில்  ஆக்சன்  காட்சிகளில்  தூள்  கிளப்புகிறார்


 இன்னொரு  நாயகனாக  அர்விந்த்சாமி .  பாட்ஷா  படத்தில்  மாணிக்கம்  கேரக்டர்  போல  அமைதியாக  முதல்  பாதியில்  வருபவர்  பின்  பாதியில்  கேங்க்ஸ்டர்  நினைவு  வந்ததும்  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  காட்சியில்  கலக்குகிறார்


நாயகனுக்கு  ஜோடியாக  , காதலியாக  ஈஷா  ரேபா . அதிக  வாய்ப்பில்லை , ஆனால்  லட்சணமான  முகம், கண்ணியமான்  உடைகள் 


 வில்லனாக  ஜாக்கி ஷெராப்  க்ளைமாக்சில்  10  நிமிடங்கள்  மட்டுமே  வருகிறார். மிரட்டல்  நடிப்பு 

நாயகனின்   மாமாவாக  ஆடுகளம் நரேன்  சில  காட்சிகள்  வந்தாலும்  மனதில்  தங்குகிறார்


க்வுதம்  ஷங்கரின்  ஒளிப்பதிவு  வெளிப்புறக்காட்சிகளை  குளிர்ச்சியாக  படம்  ஆக்கி  இருக்கிறது  அருள்  ராக்   கென்னடியின்  இசையில்  ஆறு  பாடல்கள் . 2  பாட்டு  செம  ஹிட்டு .  பிஜிஎம்  சில  காட்சிகளில்  மிரட்டுகிறது 


கேங்க்ஸ்டர்  ஆக்சன்  மசாலா  படங்களில்  இது  தனித்துத்தெரிகிறது. ரோடு  சைடு  ட்ராவல்  படமாக  முதல்  பாதியும் , ஆக்சன்  த்ரில்லராக  பின்  பாதியும்  டேக்  ஆஃப்  ஆகிறது 

இரண்டு  மணி  நேரம்  ஓடும்  படமாக  ட்ரிம்  செய்யப்பட்ட  இந்தப்படம்  அமேசான்  பிரைம் ல  கிடைக்கிறது 


சபாஷ்  டைரக்டர்  (  பெல்லினி ) 


1  வெற்றி  விழா  படத்தில்  கமல்  ஒரு  டயலாக்  சொல்வார். எனக்கு  கார்  ஓட்டத்தெரியுமா?  தெரியாதா? என்பதே  எனகு  தெரியலை.. இது  செம  ஹிட்  ஆன  டயலாக். அதே  போல்  காட்சியமைப்பை  சாமார்த்தியமாக  அமைத்த  விதம் 

2     பின்  பாதியில்  வரும்  அட்டகாசமான , யாராலும்  யூகிக்க  முடியாத  இரண்டு  திருப்பங்கள் 


3    அர்விந்த்சாமி    அந்த  ரெஸ்டாரண்ட்டில்  போடும்  அதகளமான  அந்த  ஃபைட்  சீக்வன்ஸ் 


4   க்ளைமாக்ஸ்  காட்சியில்  நாயகன்  குஞ்சக்கா  போபன்  ட்ரான்ஸ்ஃபர் மேஷன்  சீனில்  நிகழ்த்தும்  ஆக்சன்  அதிரடி

  ரசித்த  வசனங்கள் 


1  கஷ்டமோ , பயமோ  தரும்  எந்த  ஒரு  விஷயமும்  அவன்  மனசுல  நிக்காது 


2  படம் படு  மொக்கை ,ஆனா  நம்மூர்  படங்களுக்கு  இது  தேவலை 


 எல்லாத்தையும்  இண்டர்வெல்  வரை  பார்த்துட்டு  கருத்து  சொல்றது 


3  யாருமே  எப்பவுமெ  நாம  நினைச்ச  மாதிரி  இல்லை 


4  எவ்வளவு  விபரங்கள்  தெரியாம  இருக்கோ  அவ்வளவு  நல்லது 


5இதெல்லாம்  தப்பான  ரூட்டா? தப்பெல்லாம்  நடக்கற  ரூட்டா?


6  குடிச்சுட்டு  கடலுக்குப்போகாதே 

 சரி , அப்போ நான்  கடலுக்குப்போய்  குடிக்கறேன்


7 ஒரு  மனுசன்  எதை  மறந்தாலும்  ஒண்ணை  மட்டும்  மறக்க  முடியாது , உயிரா  பழகியவன்  செஞ்ச  நம்பிக்கை  துரோகம்  , உண்ட  வீட்டுக்கு  பண்ணின  ரெண்டகம் 


8  ஒருத்தன்  கண்ணைப்பார்த்துக்கொல்றதுலதான்  தில்  இருக்கு 

9  உயிரா  வளர்த்த  உன்னை  விட்டுட்டு  எபோ  என்னைத்தேடி  இவன்   வந்தானோ  அப்பவே  நான்  ஜெயிச்சுட்டேன்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   க்ளைமாக்சில்  நாயகர்கள்  இருவரும்  வில்லனின்  பங்களாவில்  நுழைந்து  பண்ணும்  அதகள  ஆக்சன்  காட்சிகள்  நம்ப  முடியாதவை . நூற்றுக்கணக்கான  பேர்களை  அசால்ட்டாக  போட்டுத்தள்ளுவது  ஓவர் 


2   தனியாக  மாட்டிகொண்ட  வில்லன்  பதட்டமே  படாமல்  நாயகர்கள்  இருவரையும்  உபசரிக்கும்  காட்சி  நம்ப  முடியாத  காட்சி 


3  க்ளைமாக்சில்  திடிர்  என  அர்விந்த் சாமி  ஆள்  அட்ரசையே  காணவில்லை .  நாயகன்  குஞ்சக்கா  போபன்  சோலோ  பர்ஃபார்மென்ஸ்  நடத்திக்கொண்டு  இருக்கிறார்


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18 +  காட்சிகள்  இல்லை , வன்முறை  இருக்கிறது 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  எதிர்பாராத  அந்த  இரண்டு  செம  ட்விஸ்ட்  சீன்களுக்காகவே  படம்  பார்க்கலாம் . ரேட்டிங் 2.75 / 5 


Ottu
Ottu (film).jpeg
Theatrical release poster
Directed byFellini T. P.
Written byS. Sanjeev
Produced byArya
Shaji Nadesan
Starring
CinematographyGautham Sankar
Music byArulRaj Kennady
Production
companies
Release dates
  • 8 September 2022 (Malayalam)[1]
  • 23 September 2022 (Tamil)[2]
CountryIndia
LanguagesMalayalam
Tamil

Tuesday, April 25, 2023

மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ( 1978) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா)

 


எம் ஜி ஆர்  நடித்த  கடைசிப்படம், எம் ஜி ஆர்  ஆட்சிக்கு  வந்த   பின்  பெண்டிங்  இருந்த  காட்சிகளை  நீதிமன்றத்தின்  சிறப்பு  அனுமதி  பெற்று நடித்து  முடித்துக்கொடுத்த  படம்,.என்று  சிலர்  சொல்கிறார்கள் . சட்டசபை  தேர்தலில்  வெற்றி  பெற்று  ஆட்சிப்பொறுப்பை  ஏற்கும்  முன்  பதவி   ஏற்பை 10  நாட்கள்  தள்ளி  வைத்து  அவசர அவசரமாக  இரவு பகலாக  ஷூட்டிங்  நடத்தி  படத்தை  முடித்தார்கள்  எனவும்  சொல்கிறார்கள் இந்தப்படத்துக்காக  நடிகை  லதாவுக்கு  சிறந்த நடிகைக்கான  தமிழக  அரசு  விருது  கிடைத்தது ( இவரே  முதல்வர் , இவர் கை காட்டியவருக்கு  விருது  என்ற  சர்ச்சை  எழுந்தது .) முதல்வர் ஆக  இருப்பவர்  சினிமாவில்  நடிக்கலாமா? என்ற எதிர்க்கட்சிகள்  வினா  எழுப்ப சட்டப்படி  அதை  அணுகி  ஏற்கனவே  பாதி  முடிந்த  படம்  என  விளக்கம் கொடுத்து  முடித்த  படம் 

எழுத்தாளர்  அகிலன்  எழுதிய  தொடர்கதையான  கயல்விழி  என்னும்  படைப்பைத்தழுவி  திரைக்கதை  எழுதப்பட்டது . பி ஆர்  பந்துலு  இயக்கிய  இந்தப்படம்  பாதியில்  இருக்கும்போது  இயக்குநர்  இறக்க  மீதியை  எம் ஜி ஆரே  இயக்கினார், ஆனால்  டைட்டிலில்  டைரக்சன்  எம் ஜி ஆர்  என  போட்டுக்கொண்டார் . முறைப்படி  பி ஆர்  பந்துலு  பெயரும்  இடம்  பெற்றிருக்க  வேண்டும். ஆனால்  நன்றி - பி ஆர்  பந்துலு  என  சுருக்கமாக  முடித்துக்கொண்டார்கள் 


இதே  ஆண்டு  வெளியான  16  வயதினிலெ  படத்துக்காக  நடிகை ஸ்ரீ  தேவிக்கோ ,  சில  நேரங்களில்  சில  மனிதர்கள்படத்தில்  நாயகியாக  கலக்கி  இருந்த  நடிகை  லட்சுமிக்கோ  விருது  கிடைக்கும்  என  எல்லோரும்  எதிர்பார்த்திருக்க  சம்பந்தமே  இல்லாமல் லதாவுக்கு  விருது  கிடைத்தது  பலருக்கு  அதிர்ச்சி 

ஸ்பாய்லர்  அலெர்ட்


பாண்டிய நாடு  சோழப்பேரரசின்  அடிமை  நாடாக  விளங்கி வந்த  காலம். சோழப்பேரரசுக்கு  கப்பம்  கட்டி  வந்தது . அதாவது  பேருக்கு   பாண்டிய  நாட்டில்  மன்னர்  இருந்தார் . ஆனால்  சோழப்பேரரசின்  கட்டுப்பாட்டில்  அவர்கள்  சொன்னபடி  ஆட்சி  செய்து  வந்தார் 


 பாண்டிய  நாட்டின்  இளவரசன்  தான்  நாயகன் . சோழ  நாட்டின்  இளவரசன்  தான்  வில்லன்  சோழ  நாட்டில்  இளவரசனான  வில்லன்  பாண்டிய  நாட்டுக்கு  வரும்போது  அங்கே  இருக்கும்  கயல்  விழி  என்னும் அழகியின்  நாட்டியத்தைக்கண்டு  அவள்  மேல்  மையல்  கொள்கிறான்  வில்லன் 


அவளை  அடைய  பலவந்தமாக  முயற்சிக்கும்போது பாண்டிய  நாட்டின்  இளவரசனான  நாயகன்  அதை  எதிர்க்கிறார். எங்கள்  ராஜ்ஜியத்தின்  அடிமை  நாடு  எங்களை  எதிர்ப்பதா? என  வெகுண்டு  எழுந்து  சோழ  நாடு  பாண்டிய  நாட்டின்  மீது  போர்  தொடுக்கிறது 


பாண்டிய  இளவரசன்  போர்க்களத்தில்  இருந்து  தப்பி  புரட்சிப்புலவராக  நாட்டில்  மாறு  வேடத்தில்  உலா  வருகிறார். நாட்டு  மக்களிடையே  சுதந்திர  வேட்கையைத்தூண்டி  படைகளை  திரட்டுகிறார். கோசலை  நாட்டு  இளவரசிக்கு  நாயகன்  மீது  காதல் 


நாயகனை  நாயகி  காதலித்தாலும்  கோசலை  நாடும், பாண்டிய  நாடும்  சம்பந்தம்  வைத்துகொண்டால்  சோழப்பேரரசை  வீழ்த்தி  விடலாம்  என  கயல்  விழி  தன்  காதலை  தியாகம்  செய்கிறாள் 


 இதற்குப்பின்  நாயகன்  பாண்டிய  நாட்டை  சோழ  நாட்டிடம் இருந்து  எப்படி  மீட்கிறார்  என்பதே  மீதிக்கதை 


நாயகனாக  எம் ஜி ஆர்.. ஒரு  படத்துக்கு  நாயகனின்  கேரக்டர்  டிசைன்  எப்படி  இருக்க  வேண்டும்  என்று  எம் ஜி ஆர்  போல்  தொலை  நோக்கு  சிந்தனையில்  சிந்தித்தவர்  இதற்கு  முன்  எவரும்  இல்லை . வசனம் , பாடல்  வரிகள் , செல்ஃப்  பிரமோஷன்  எல்லாவற்றிலும்  தனக்கு  என  ஒரு  தனி  பாணியை  ஏற்படுத்தி வந்தவர்


இதில்  ஏனோ  விக்  சரியாக  அமையவில்லை . அவருக்கு  மட்டுமல்ல , படத்தில்  பலருக்கும்  பெரிய  தலை போல்  விக்  ஏன்  என  தெரியவில்லை 

எம் ஜி ஆர்  வாள்  சண்டையில்  ஒரு  சீனில்  கலக்கி  இருப்பார் வழக்கமான  எம் ஜி ஆர்  படங்களில்  ஹை  லைட்டாக  இருக்கும்  தத்துவப்பாடல் இதில்  மிஸ்சிங் , அதற்குப்பதிலாக  புரட்சிப்பாடல்கள்  இருந்தன 


 நாயகியாக  கயல்  விழியாக  லதா .. சில  இடங்களில்  ஓவர்  ஆக்டிங் /.. கோபமாக  இருக்கும்போதும்  கிளாமர்  காட்டக்கூடிய  நடிகை  என  பெயர்  எடுத்தவர் 


இன்னொரு  நாயகியாக  , இளவரசியாக  பத்மப்பிரியா . அர்ண்மனை  தர்பாரிலேயே  லோ  ஹிப்  சேலையில்  உலா  வரும்  காட்சிகள்  இருக்கும்


 வில்லனாக  நம்பியார் , பி எஸ்  வீரப்பா  இருவரும்  கலக்கலான  நடிப்பு , ஆனால்  அட்டகாசமான  வாள்  ஃபைட்  வீரப்பாவுக்குத்தான் 


காமெடிக்கு  தேங்காய் சீனிவாசன் , ஆனால்  அவர்  காமெடி செய்வதை  விட  எம் ஜி ஆர்  புகழ் தான்  அதிகம்  பாடுகிறார் 


 பாடல்கள்   3  முத்துலிங்கம்  எழுத  2  புலவர்  புலமைப்பித்தன்  எழுதுனார் , இசை எம் எஸ்  விஸ்வநாதன் .  அருமையான  இசை . ஆனால்  பாடல்கள்  ஐந்தில்  இரண்டு  மட்டுமே  சூப்பர்  ஹிட் . வழக்கமாக  எம் ஜி ஆர்  படங்களில் 90%  செம  ஹிட்  ஆகும்



சபாஷ்  டைரக்டர்  ( பி ஆர்  பந்துலு  + எம் ஜி ஆர்) 


1   ஒரு  படத்துக்கு    ஃபைட்  சீன்  வருவதற்கான லீடு  எப்படி  இருக்க  வேண்டும் என  உதாரணம்  சொன்ன  படம்,   எம் ஜி ஆர்   , பிஎஸ்  வீரப்பா  இருவருக்குமான  வாக்குவாதம்  சபையில்  நடக்க  வாட் சண்டையாக  அது  மாறுவதும் . அரண்மனை  முழுக்க  இருவரும்  போடும்  ஃபைட்டும்  கலக்கல்  ரகம், தியேட்டரில்  விசில்  சத்தம்  பிளந்தது 


2  எம் ஜி ஆர் - லதா  இருவரும்  காதலர்கள் . டூயட்  பாட்டு  இருக்கு . ஆனால்  இன்னொரு  நாயகியுடன்  டூயட்  பாடும்போது  எம் ஜி ஆர்  ஃபார்முலா  படி  நாயகியின்  கனவில்  அந்த  டூயட்  வருவதாக  அமைத்தது 


3   படத்தில்  வரும்  பெரும்பாலான  கேரக்டர்கள்  நாயகி நெ 1 , நாயகி நெ 1  ,  வில்லன்   நெம்பர் 1  ,வில்லன்   நெம்பர் 2  , காமெடியன்கள்  இருவர், இரு  தேச  மன்னர்கள் , உட்பட  படத்தில்  மொத்தம்  34  பேர்  ஹீரோ  புகழ்  பாடும்  வசனம்  பேசுகிறார்கள் , இது  ஒரு  ரெக்கார்டு . எந்தப்படத்திலும்  இப்படி  அமையவில்லை 

4  படத்தில்  வரும்  வசனங்கள்   அரசியல்  ரீதியாக  எம்  ஜி ஆர்  முதல்வர்  ஆக  பேசுவது  போலவே  உள்  குத்து  வசனமாக  அமைத்தது   அருமை 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  வீரமகன்  போராட  வெற்றி  மகள்  பூச்சூட 


2 தாயகத்தின்  சுதந்திரமே  எங்கள்  கொள்கை 


3  அமுதத்தமிழில் எழுதும்  கவிதை  புதுமைப்புலவன்  நீ 


4 தென்றலில்  ஆடும்  கூந்தலில்  கண்டேன்  மழை  கொண்ட  மேகம்


5  மாங்கல்யம் 


  ரசித்த  வசனங்கள் 


1   இதைக்கொள்ளை  என்று  கூறுவார்கள்  கோழைகள் , இல்லை , இது  வெற்றி  அடைந்தவரின்  உரிமை 


2  போராடி  வாழ்வதுதான்  வீரம் 


3  நீ  தலைமை  ஏற்பது  தர்மமே  தலைமை  தாங்குவது  போல  இருக்கிறது 


4  ஆயிரக்கணக்கான  ரத்தத்தின்  ரத்தமான  உடன்  பிறப்புகளைக்கொன்றவனை  பழி  வாங்காமல்  விட  மாட்டேன் 


5  பொண்ணோடப்பேரைக்கேட்டா  பெரியவங்க  என்ற  மரியாதை  இல்லாமல்  போங்கடி  என்கிறாளே?

 அய்யோ, அவ  பேரே  பூங்கொடி.. 


6 போருக்கு  முதல்  தேவை  ஆயுதம்  அல்ல. முயற்சி , எழுச்சி , பயிர்சி 


7 இந்தநாட்டிற்காகவும், நாட்டின்  மக்களுக்காகவும்  என்னையே  அர்ப்பணித்துக்கொண்டவன்  நான்  ( செல்ஃப்  பிரமோஷன்  செண்பகராஜன்  ராக்ஸ் )


8  செல்வத்தை  தானமாக  ஏற்றுக்கொள்வது  இயல்பு, ஆனால்  சிம்மாசனத்தை தானமாக  ஏற்றுக்கொள்வது  இழிவு


9  சோழ  மன்னனின்  அழைப்பில்  ஏதோ சூழ்ச்சி  இருக்கிறது 


அரசியலில்  நான்  சந்திக்காத  சூழ்ச்சியா?


10  இளவரசி , அரச  குடும்பத்தினர்  உற்சவ  மூர்த்தி  போல ,எப்போதாவது  ஒரு  முறைதான்  உலா  வர  வேண்டும் 


11   வாழ்க்கையில்  பெருமை  வந்து  விட்டால்  பின்னாலேயே  சிறுமையும்  வரக்காத்திருக்கும்  என்பது  எனக்கு  நன்றாகத்தெரியும் 

12  அரசியல்;  ஆபத்துக்க்ளைப்பற்றி  நான்  என்றும்  கவலைப்பட்டதே  இல்லை 

13  எல்லையைத்தாண்டப்போகிறீர்களா?

 இதுவரை  நான்  எந்த  எல்லையையும்  தாண்டியது  கிடையாது 


15 இவர்  முகத்தைப்பார்த்தாலே  இவரால  யாருக்கும், நாட்டுக்கும்  எந்த  வித  ஆபத்தும்   ஏற்படாது  என்பது  தெரியாதா? 


16  குடிசையில் கிடைக்கும்  கூழும், மாட  மாளிகையில்  கிடைக்கும்  விருந்தும்  எனக்கு  ஒன்றுதான், பசி  அடங்கினால்  எல்லாமே  ஒன்றுதான்


17  ஒருவருக்கு  ஒரு  தாய்தான்  இருக்க  முடியும், ஆனால்  உங்களுக்கு  நாடு  முழுவதும்  கோடிக்கணக்கான  தாய்மார்கள்  இருக்கிறார்களே? 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகனுக்கும், வில்லனுக்கும்  இடையே  நிகழும்  வாட்போரில்  வில்லன்  நாயகன்  கையில்  காயத்தை  ஏற்படுத்துகிறான், பின்  போய்  விடுகிறான், அப்போது  நாயகன்  இடுப்பில் ஒரு  துண்டு  மாதிரி  ஒரு  துணியை  ஸ்டைலாக  கட்டி  இருக்கிறார். நாயகி  தன்  சேலையைக்கிழித்து நாயகன்  காயத்துக்குகட்டுப்போடும்போது  தன்  இடுப்பில்  உள்ள  துண்டைக்காட்டி  இதே போதும்மா,  உன்  மானம்  தான்  முக்கியம்னு  நாயகன்  ஏன்  சொல்லலை ? 

2   நாயகன்  போர்க்களத்தில்  இருந்து  தப்பி  மாறு வேடத்தில்  கிளம்புகிறார். நாயகி  ஊருக்குள்  வில்லன்  ஆட்களிடம்  மாட்டிக்கொள்கிறார். நாட்டின்  எல்லையில்  போர்க்களத்தில்  இருக்கும்  நாயக்ன்  எப்படி  அங்கே  வந்தார் ? 


3  இங்கே  ஏன்  வந்தீர்கள்? என  நாயகன்  நாயகியிடம்  கேட்கும்போது  வில்லன்  துரத்துகிறான், தற்கொலை  செய்து  கொள்ளலாம்  என  இங்கே  வந்தேன்  என்கிறார். நாய்கியின்  அப்பாவைக்கொலை  செய்யும்போது  வீட்டில்  தான்  நாயகி  இருக்கிறார். வீட்டின்  பின்  ஒரு  கிணறு  இருக்கிறது ., அங்கேயே  விழுந்து  அப்போதே  தற்கொலை  செய்து இருக்கலாமே?


4  ஓப்பனிங்  சீனில்  நாயகன்  என்ன  கெட்டப்பில்  நாயகியைக்காப்பாற்றினாரோ அதே  கெட்டப்பில்  தான்  இரண்டாம்  முறையும்  நாயகியைக்காப்பாற்றுகிறார், ஆனால்  நாயகிக்கு  அடையாளம்  தெரியவில்லை . நீங்கள்  யார்? எனக்கேட்கிறார்.  குரல்  கூடவா  தெரியவில்லை 


5  நாயகன்  துக்ளியூண்டு  தாடி  வைத்ததும்  நாயகனை ( இளவரசை)  மன்னனுக்கு (அண்ணனுக்கு) அடையாளம்  தெரியாதா? பேசும்போது  குரல்  காட்டிக்கொடுக்காதா?   (  தம்பி   தாடி  வெச்சிருந்தா  அண்ணனுக்கு  அடையாளம்  தெரியாதா?) 


6  நாயகனைக்கொல்பவர்களுக்கு  பரிசு  என  அறிவித்த  வில்லன்  நாயகன்  ஆள்  மாறாட்டம்  செய்ததை  அறியவில்லை. நாயகனைக்கொன்று  விட்டதாக வீரர்கள்  பொய்யாக  நம்பி   வில்லனிடம்  பரிசுப்பணம்  வாங்கிக்கொள்கின்றனர் , அடுத்த  ஷாட்டில்  வில்லன்  நாயகனை  சந்திக்கிறார். அப்போது  அவர்  ஜெர்க்  ஆகி  நீ இன்னுமா  உயிரோடு  இருக்கிறாய்? என  கேட்கவே  இல்லையே? 


7  வில்லன்  ஓப்பனிங்  சீன்லயே  நாயகனை  எதிர்த்து  வாட்  சண்டை  புரிந்திருக்கிறான், ஆனால்  ஒரே  ஒரு  கட்டை  மீசை  கெட்ட்ப்ல  நாயகன்  வில்லன்  எதிரேநின்று  வசனம்  பேசும்போது  கூட  வில்லனுக்கு  அடையாளம்  தெரியல, இதுல  நாட்டின்  இளவரச்ர்  வேற 


8  இளவரசி  யானை மேல் பவனி  வரும்போது  யானைக்கு மதம்  பிடித்து  விடுகிறது, அனைவரும்  ஓடுகிறார்கள் , வில்லன்  நம்பியார்  வீரர்களே, யானையை  அடக்குங்கள்  என்கிறார். யானைப்பாகன்  எங்கே? யானை  கூட  எப்போதும்  யானைப்பாகன்  இருப்பானே? அவனை  யாரும்  தேடலை ? அவனால்  மட்டும்  தானே  அடக்க  முடியும் ?


9   ஆண்  வேடம்  போட்டு  நாயகி  லதா  நாயகனுடன்  ஊரெல்லாம்  சுற்றுகிறார், சுற்றட்டும், ஆனால்  அவர்  முந்தானை போல  ஒரு  துண்டை  மாராப்பாக  போட்டு  வருகிறார். டவுட்  வராதா? அதே  போல  பலர்  முன்  பேசும்போது  பெண்  குரலில்  தான்  பேசுகிறார். உதட்டின்  மேல்  லேசாக  மீசை  இருந்தால் ஆண்  என  நம்பி  விடுவார்களா? 

10  வெறும்  கையை  வீசிக்கொண்டு  தான்  நாயகனும், ஆண்  வேடம்  இட்ட  நாயகியும் அரண்மனைக்கு  வருகிறார்கள் , எதிர்பாராத  விதமாக  அரண்மனை  விருந்தினராக  அங்கேயே  தங்க  நேர்கிறது . ஆனால்  நாயகி  கலர்  கலர்  தாவணி , சேலை , ஜாக்கெட்  எல்லாம்  அணிந்து  உலா  வருகிறாரே?அவர் சைஸ்  ஜாக்கெட்  அவருக்கு  எப்படி  அரண்மனையில்  கிடைத்தது ? 


11   நாயகனிடம்  இளவரசி  உங்களை  சிறை  வைத்து  விட்டார்கள் , நான்  உங்களைக்காப்பாற்றவா?  எனக்கேட்டபோதே  நாயகன்  ஓக்கே  சொல்லி  ஈசியாக  தப்பி  இருக்கலாம், அப்போது கெத்தாக  வேண்டாம்  நான்  பார்த்துகொள்கிறேன்  என  டயலாக்  பேசி  விட்டு  அன்று  இரவே  தப்ப  ரொம்ப  சிரமப்படுகிறார்


12  நாயகன்  கைதியாக  அரண்மனையில்  அடைக்கப்பட  அன்று  இரவுதான்  தப்பி  நாயகன்  வெளியே  போகிறார், அப்போது  பொதுஜனம் “ நீங்கள்  பாதுகாப்புக்கைதியாக  வைக்கப்பட்டீர்களாமே?  என்ன  அநியாயம் ? இளவரசியைக்காப்பாற்றியதற்கு  இதுதான்  பரிசா? என  கேட்கிறார்கள் . அது  எப்படி  அவர்களுக்குத்தெரிந்தது ? அப்போதான்  தப்பி  வருகிறார்


13   நாயகி  லதா  கோசலை  நாட்டு  மன்னனிடம் போர்க்களத்தில்  விவாதம்  செய்யும்போது  ரொம்ப  உணர்ச்சி  வசப்பட்டு  டயலாக்  எல்லாம்  பேசி  சேலை  முந்தானை எல்லம்  கீழே  விழும் அளவுக்கு  ஓவர்  ஆக்சன்  பண்ணி  இருக்கிறார்


14  இளவரசி  இருக்கும்  அந்தப்புரத்தில்  அந்நிய  ஆண்களுக்கு  அனுமதி இல்லை , ஆனால்  ஆண்  வேட  தரித்த  நாயகி  லதா  எப்படி  சந்திக்கிறார்?



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - இல்லை , யூ  படம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   எம்  ஜி ஆர்  ரசிகர்கள்  மட்டும்  பார்க்கலாம்,  பொது  ரசிகர்கள்  ரசிக்கும்  அளவு  படம்  சூப்பர்  எல்லாம்  இல்லை , அதெ  சமயம்  மோசமும்  இல்லை , சராசரி  மசாலா  படம் . ரேட்டிங்  2. 5 / 5 



சிறப்புத்தகவல் - 1  தாயகத்தின்  சுதந்திரமே  எங்கள்  கொள்கை   என்ற  பாடல்  இலங்கையில்  தடை  செய்யப்பட்டது. மக்களை  புரட்சி  செய்யத்தூண்டுவதாக  தடை  செய்யப்பட்டது . இலங்கை  வானொலியிலும்  தடை  செய்யப்பட்டது  (  நன்றி - தகவல் சங்கர்) 


2  பிரம்மாண்டமான  போர்க்காட்சிகள் , க்ளைமாக்ஸ்  காட்சிகள்  ஜெய்ப்பூரில்  பட,ம்  ஆக்கப்பட்டது அந்தக்காலத்திலேயே  9  காமராக்கள் கொண்டு  படமாக்கப்பட்டது    


3  எம்ஜி ஆர்  ஆட்சிப்பொறுப்புக்கு  வந்து  ஆறு  மாதங்கள்  கழித்து  1978  பொங்கல்  ரிலீஸ்  ஆக  வந்த  படம்  100  நாட்கள்  ஓடிய  வெற்றிப்படம்  என்றாலும்  வழக்கமான  எம் ஜி ஆர்  படங்களுக்கு  உண்டான  பிரம்மாண்ட  வெற்றி இல்லை . எம் ஜி ஆர்  டைரக்சனில்  ரிலீஸ்  ஆன  நாடோடி   மன்னன்,  உலகம்  சுற்றும்  வாலிபன்  எல்லாம்  அதிரி  புதிரி  வெற்றி 


4  இந்தப்படம்  ஆரம்பிக்கப்பட்டது  1974ல் . இயக்குநரும் , தயாரிப்பாளருமான  பி ஆர்  பந்துலு  மரணம்  அடைய   டிலே  ஆனது   1978ல் தான்  ரிலீஸ்  ஆனது 


5  தென்னகத்து  ஹேமமாலினி  என  அழைக்கப்பட்ட  பத்மபிரியா  கன்னட  ந்டிகையாக  இருந்தாலும்  தமிழில்  பல  வெற்றிப்படங்களில்  நடித்தவர் , சிவாஜியுடன்  இரு  ஹிட்  படங்களில்  நடித்தவர் , 80  படங்களில் நடித்த  இவர்  1997ல்  கிட்னி  ஃபெய்லியர்  ஆகி  மரணம்  அடைந்தார் 


6  ஆனந்த  விகடன்  மார்க்  50. எம் ஜி யார்  படங்களில்  அதிக  மார்க் வாங்கிய  படம்  இதுதான், மீனவ நண்பன் 47   (  தகவல் - திருமாளம்  பழனிவேல்)




மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்.jpg
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்எம்.ஜி.ராமச்சந்திரன்
மூலம் திரைக்கதைபி.நீலகண்டன்
அடிப்படையில்
அகிலனின் கயல்விழி _
உற்பத்திசொக்கையா
சுப்ரமணி ஐயர்
நடித்துள்ளார்
ஒளிப்பதிவு
திருத்தியவர்சுந்தரம்
இசைஎம்.எஸ்.விஸ்வநாதன்
தயாரிப்பு
நிறுவனம்
சோலஸ்வர் கம்பைன்ஸ்
வெளிவரும் தேதி
  • 14 ஜனவரி 1978
நாடுஇந்தியா
மொழிதமிழ்






Monday, April 24, 2023

VELLARI PATTANAM ( 2023) - மலையாளம் -சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்


இது  அரசியல்  நையாண்டி  நகைச்சுவை சித்திரம். இதற்கு  முதலில்  வெள்ளரிக்கா  ப்ட்டணம்  என டைட்டில்  வைக்கப்பட்டது. ஏற்கனவே  அதே  டைட்டிலில்  ஒரு  படம்  ரிலீசுக்கு  தயாராக  இருப்பதால் டைட்டிலில்  ஒரு  சின்ன  கரெக்சன். வெள்ளரி  பட்டணம்  ஆனது. நம்ம  ஊரில்  வடிவேலு  நடித்த  நாய்  சேகர்  ரிட்டர்ன்ஸ் ,  சதீஷ் நடித்த நாய்  சேகர்  டைட்டில்  குழப்பம்  போல ..இது 2023  மார்ச்  24  ம்  தேதி  திரை  அரங்குகளில்  வெளியானது. ஏப்ரல் 21  அமேசான்  பிரைம்ல  ரிலீஸ்  ஆகி  இருக்கிறது 

  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் , நாயகி  இருவரும்  உடன்  பிறந்தவர்கள்  அம்மா  இல்லை , அப்பா  மட்டுமே . இருவருமே  அரசியலில்  ஒரே  கட்சியில்  இருப்பவர்கள். தேர்தல்  நெருங்கும்போது  வார்டு  மெம்பர்  ஆகி  கவுன்சிலர்  ஆகி  விட    வேண்டும்  எனும்  கனவில்  இருவரும் இருக்கும்போது   ஒரு  குடும்பத்தில்  ஒருவருக்கு  மட்டுமே  பதவி  என்று  கட்சி  தன்  கொள்கை  முடிவில்  உறுதியாக  இருக்கவே வேறு  வழி  இல்லாமல்  நாயகன்  வேறு  கட்சியில்  சேர்கிறான்


அக்கா , தம்பி  இருவரும்  பதவிக்காக  என்ன  எல்லாம்  மெனக்கெடுகிறார்கள் , எத்தனை  பிரச்சனைகளை  சந்திக்கிறார்கள் , இறுதியில்  அவர்கள்  கனவு  நிறைவேறியதா? என்பது  மீதி  திரைக்கதை 


 நாயகியாக  மொத்தப்படத்தையும்  தாங்கி  நிற்பவர்   மஞ்சு  வாரியர் . எப்பேர்ப்பட்ட   சூழலிலும்  சிரித்த  முகமாக  பிரச்சனைகளை  லெஃப்ட்  ஹேண்டில்  அவர்  டீல் பண்ணும்  விதம்  அடடா!  அவரது  உடல்  மொழி , டயலாக்  டெலிவரி  எல்லாம்   மிக  மிக  யதார்த்தம், நடிப்பு  போலவே  தெரியவில்லை 


 நாயகனாக  சவுபின்  சாஹிர்  யதார்த்தமான  நடிப்பு . இள வீலா  பூஞ்சிரா வில்    கொலைகாரனாக  நடித்தவர் , கும்பாளிங்கி  நைட்ஸ் படத்தில்  குணச்சித்திர  வேடத்தில்  நம்  மனம்  கவர்ந்தவர்  இதில்  காமெடி  கலந்த  ரோலில்  அசால்ட்  பண்ணி  இருக்கிறார்


இயக்குநருக்கு  அரசியல்வாதிகள்  மீது  என்ன  கோபமோ  தெரியவில்லை , அனைத்துக்கட்சிகளையும்  வாரி  இருக்கிறார். 


சரத்  கிருஷ்ணாவுடன் இணைந்து  திரைக்கதை  எழுதிய  மகேஷ்  வெட்டியார்  படத்தை  இயக்கி  உள்ளார். 


படம்  முழுக்க  அரசியல்  அரசியல்  அரசியல்  தான், கிளைக்கதைகளில் நாயகனான  தம்பிக்கு  ஒரு காதலி  , நாயகியான  அக்காவுக்கு ஒரு  காதலர்  என  இருந்தாலும்   மெயின்   ஃபோக்கஸ்  அரசியல்  தான்  என்பதால்  ரொமாண்டிக்  போர்ஷனில்  கத்திரி  வைத்தது  நன்கு  தெரிகிறது 


சபாஷ்  டைரக்டர்


1  நம்ம  கட்சியின்  இந்திரா  காந்திதான்  இந்த  லேடி  என  நாயகியை  ஓவரா  புகழும்  அந்த  ஆளின்  ஜால்ரா  போர்சன்  முடிந்ததும்  கட்  பண்ணி அடுத்த  ஷாட்டிலெயே  நாயகி  இந்திராகாந்தி  கெட்டப்பில்  இருப்பதாக  காட்டும்  காட்சி  காமெடி 


2  கடவுள்  நம்பிக்கை  உள்ள  ஒரு  ஆள்  சாமி  ஃபோட்டோ  மீது  கவர்  பண்ணி  புரட்சி  வீரர்  ஃபோட்டோ  வைத்திருப்பதும்  ஆள் நடமாட்டம்  இல்லாதப்ப  பம்மிக்கொண்டே  சாமி  கும்பிடும்  காட்சியும்  திராவிடன்  ஸ்டாக்ஸ்  ரெஃப்ரன்ஸ் 


3    இரு  கட்சிகளும்  எதிர் எதிரே  மேடை  போட்டு  கட்சி  ஆட்களை  அங்கே  இருந்து  இங்கே  இழுக்கும்  படலத்தில்  ஒரு  ஆள் மதில்  மேல்பூனையாக  இரு  புறமும்  பார்த்திருக்க  இரு  கட்சி  ஆட்களும்  ஏலம்  விடும் காட்சி    அல்ட்டிமேட் காமெடி 


4  நம்ம  கட்சி  ஆட்கள்  பச்சைக்கலர்  அண்டர் டிராயர்  தான்  போடனும்  என  கம்யூனிஸ்ட்  லீடர்  க்ளாஸ்  எடுக்க  , பின்  நாயகனை  செக்  பண்ணும்போது  அவர்   காக்கி  டிராயர்  அணிந்திருபதும், அவரது  சகா டிராயரே  போடலை  இன்னைக்கு  என்பதும்  நேச்சுரல்  காமெடி 


5  அவசர  செலவுக்கு பணம்  வேண்டும்  எனும்  நிலைமையில்  சீட்டுப்பணம்  தனக்கு  வேண்டும்  என  சொல்லும்  நாயகி  குலுக்கல்  சீட்டில்  வேறு  ஒரு  லேடி  பெயர்  வந்தும்  அந்த  லேடி  நாயகிக்காக  விட்டுக்கொடுக்கும்   காட்சி   டச்சிங்  சீன்


6  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்

  ரசித்த  வசனங்கள் 


1  இவ்வளவு  ரகசியமா  அவரு  எதுக்காக  சாகனும்? நான் ஒரு  வார்டு   மெம்பர், எனக்குக்கூட  விஷயம்  தெரியல , அட்லீஸ்ட்  சாகும்போது  எனக்கு  ஒரு  கால்  பண்ணி  தகவல்  சொல்லிட்டு  செத்திருக்கலாமில்ல? 


2  ஆகஸ்ட்  15    அன்னைக்குத்தானே  காந்தி  ஜெயந்தி ? என்னை  யாரும்  ஏமாற்ற  முடியாது 


3   சேச்சி , ஒரு  ஐநூறு  ரூபா  கிடைக்குமா?


 சரியா  கேட்கல., என்ன  சொன்னீங்க ?

  1000  ரூபா  பணம்  வேணும்

 ஐநூறு  தானே  முத்ல்ல  கேட்டீங்க?


4  தார்  ரோடு  போடும்  ரோடு  ரோலர்  வண்டி  ல  லிஃப்ட்  கேட்ட  முதல் அ அள்  நீ தான் 


5    தெரு  விளக்கே  இல்லாத  ஊருல  சிசிடிவி   கேமரா  எதுக்கு ?

6  இப்போ  எதுக்கு  வெளிநடப்பு  பண்றிங்க ?


 டீ , பன்  சாப்பிடத்தான் , ஸ்னாக்ஸ்  டைம்


7 இப்போ  கட்சி  மாற  காலடி  எடுத்து  வைக்கிறோம், அதனால  வலது  கால்  வேணாம், இடது  காலை  எடுத்து  வைப்போம்


8  ஃபுல்  கை  சட்டை  முழங்கை  வரை  மடிச்சு  விட்டுக்கனும், மடிப்புல  பீடியோ    தீப்பெட்டியோ  வெச்சுக்கலாம் 


9 தோழரே!  நீங்க  சரக்கு  அடிப்பீங்களா>

  கம்யூனிசம்  சரக்குக்கு  எதிரானதல்ல, எனக்கு 50  மிலி  ஊத்து . தண்ணி  மட்டும்  வேண்டாம், தண்ணீர்  மிக்ஸ்  செய்வது  கம்யூனிசத்துக்கு  எதிரானது 


10  கட்சில  ஒரு  ஆள்மட்டும்  செஞ்சா  அது  ஊழல், எல்லாருமே  செஞ்சா  அது  ஃபேஷன் 


11  அரசியலில்  நிரந்தர  பிரச்சனைனு  ஒண்ணு  இல்லை  புதிய  பிர்ச்சனை  எழும்போது  மக்கள்  பழைய  பிரச்சனையை  மறந்துடுவாங்க 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   தன்  வீட்டின்  முன்  எதிர்க்கட்சி  பேனர்  கட்டப்பட்டு  இருப்பதைப்பார்த்து  அதைக்கழட்டி  தரையில்  போட்டு  தீக்குச்சியால்  பற்ற  வைக்கிறார். பெட்ரோல்  ஊற்றப்பட்ட  பேனர்  போல்  குப்பென்று  பற்றுகிறது. 


2  நாயகி  தன்  வார்டை  சாராத  ஒரு  பெண்ணுக்கு  பண  உதவி  செய்வதாக  வாக்கு  கொடுக்கிறார். ஆனால்ல்  அந்த[பெண்ணின்  குழந்தை  இறந்து  விடுகிறது. மாற்றுகட்சியினர்  இவரை  வில்லியாக  சித்தரிக்கின்றனர்.இவர் அவர்களை  எதிர்த்து  ஒரு  வார்த்தை  கூட  பேசவில்லை , ஏன் ? நீங்கள்  உதவி  இருக்கலாமே? நானா  வேணாம்னேன்  என  சொல்லி  இருக்கலாமே?





 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   குடும்பப்பாங்கான  படம்  தான் , ஆனால்  அரசியல்  சட்டையர்  காமெடி  அதிகம்  இருப்பதால்  பெண்களுக்குப்பிடிப்பது  சிரமம், மற்றபடி  கண்ணியமான    காமெடி  மெலோ டிராமா . ரேட்டிங்  2.75 / 5 



Vellaripattanam
Vellaripattanam.jpg
Theatrical release poster
Directed byMahesh Vettiyaar
Written bySarath Krishna
Mahesh Vettiyaar
Starring
Production
company
Fullon Studios
Release date
  • 24 March 2023
CountryIndia
LanguageMalayalam