Monday, April 10, 2023

PREMA DESAM ( 2023) - தெலுங்கு - சினிமா விமர்சனம் ( ரொமான்ஸ்) @ அமேசான் பிரைம்


 1996ல்  ரிலீஸ்  ஆன  கல்ட்  கிளாசிக்  படமான  பிரேம  தேசம்  படத்துக்கும் , இந்தப்படத்துக்கும்  எந்த  சம்பந்தமும்  இல்லை. அந்தப்படத்தின்  ரீமேக்கும்  இது  இல்லை ., இது  வேறு  கதை 


 ஸ்பாய்லர்  அலெர்ட்


இரு  வெவ்வேறு  காதல்  ஜோடிகளின்  வெவ்வேறு  இரு  கதைகள்  எப்படி  ஒரு  புள்ளியில்  இணைகின்றன  என்பதுதான்  கதை


முதல்  கதை -  நாயகன்  தன்  அம்மாவுடன்  வீட்டில்  வசித்து  வருகிறான். இவன்  கல்லூரியில்  படிப்பவன். நாயகன்  வீட்டுக்கு  எதிர்  வீட்டுக்கு  நாயகி  குடி  வருகிறாள் . நாயகனின் காலேஜில்  ஜூனியர். இருவரும்  வெவ்வேறு  வகுப்பு  இருவருக்கும்  அறிமுகம்  ஆகிறது . இருவரும்  ஒருவரை  ஒருவர்  உள்ளூர  விரும்புகிறார்கள் , ஆனால்  காதலை  வெளிக்காட்டிக்கொள்ளவில்லை . காதலர்  தினம் அன்று  காதலை  வெளிப்படுத்துவதாக  இருவரும்  தனித்தனியே  முடிவு  எடுக்கிறார்கள் . அன்றைய  தினம்  மிகப்பெரிய  விபத்தை  நாயகன்  சந்திக்கிறான்


இரண்டாம்  கதை -நாயகன் , நாயகி  இருவருக்கும்  திரும்ணம்  நடக்கிறது  நாயகிக்கு  மவுனராகம்  கார்த்திக்  போல  ஏற்கனவே  காலேஜில்  ஒரு  காதலன்  இருந்தான்.  இருவரும்  காதலித்து  திருமணம்  வரை  சென்றவர்கள்  தான் . சரியாக  திருமண முகூர்த்தத்துக்கு  2  மணி  நேரம்  முன்  ஒரு  கார்  விபத்தில்   காதலன்  பலி  ஆக  நாயகி  சோகத்தில்  மூழ்குகிறாள் அப்பாவின்  வற்புறுத்தலில் திருமணத்துக்கு  சம்மதித்தாலும்  நாயகி  மனம் காதலன்  நினைவாகவே  இருக்கிறது. பொறுத்துப்பொறுத்துப்பார்த்த  நாயகன்  தன்  மனைவியிடம்  நாம  டைவர்ஸ்  பண்ணிக்கலாமா? என  கேட்கும்போது  அதிர்ச்சியில்  நாயகி  ஒரு  விபத்தை  ஏற்படுத்தி  விடுகிறாள் , போலீஸ்  கேஸ்  ஆகிறது . முதல்  கதையில்  உண்டான  கார்  விபத்துதான்  இவர்  ஏற்படுத்திய  விபத்து 


 இதற்குப்பின்  இரு  காதல்  ஜோடிகளும்  என்ன  ஆனார்கள்  என்பது  க்ளைமாக்ஸ் 


 முதல்  காதல்  கதையில்  நாயகனாக  த்ரிகன், நாயகியாக  மேகா  ஆகாஷ். இவருக்கு  அழகு  பொம்மையாக  வரும், நடக்கும் கேரக்டர். அவ்வப்போது  சிரிப்பார். அவளோ  தான் வேலை  முடிஞ்சுது . சம்பளம்  20  லட்சம்  ரூபாய் . நாயகனுக்கு  அம்மாவாக  மதுபாலா . 500  ரூபா  சம்பளம்  வாங்கிக்கொண்டு  5  லட்சம்  ரூபாய்க்கு  நடிக்கும்  ஓவர்  ஆக்டிங்  ஓமனா  ஜோதிகாவுக்கே  அக்கா  மாதிரி  ஆகப்பார்க்கிறார், மதுபாலா. நாயகனின்  அம்மா வாக  இல்லாமல் நாயகனின்  தோழி  மாதிரி  அமைந்த  கேரக்டர். கொஞ்சம்  ஓவர்  டோஸ்  தான் 


 இரண்டாம்  கதையில் நாயகனாக  அஜய்  கத்ருவர், நாயகியாக  மாயா இருவரின்  நடிப்பும் கச்சிதம்  நாயகியின்  தங்கைகளாக  வரும்  இரு  பெண்களும்  அளவாக  நடித்திருக்கிறார்கள் 


 படத்தில்  வில்லன்  ரோல்  என  யாரும்  இல்லை . சஜாத்  காக்கு  தான் ஒளிப்பதிவு , அருமை . இரு  நாயகிகளையும்  கண்ணியமாக , அழகாகக்காட்டி  இருக்கிறார்கள் , இருவருக்குமான  காஸ்ட்யூம்  டிசைனிங்  குட்


கிரண்தம்பேரா  தான்  எடிட்டிங். கச்சிதமாக  ரெண்டே  கால்  மணி  நேரத்தில்  ட்ரிம் பண்ணி  இருக்கிறார்கள் 


மணிஷர்,மா  தான் இசை ., 2  பாடல்கள்  செம  ஹிட்டு . பிஜிஎம்  சராசரி .




சபாஷ்  டைரக்டர் ( ஸ்ரீகாந்த்  சித்தம் ) 


1  முதல்  பாதி  கதையை  எங்கேயும்  எப்போதும்  படத்தைப்போல  பின்  பாதி  படக்கதையை  மவுன ராகம்  போல  தந்தது 


2  இரு  நாயகிகள் , நாயகியின் இரு  தங்கைகள்  என  எல்லாருக்கும்  அடிக்கடி  க்ளோஷப்  ஷாட்ஸ்  வைத்தது 



  ரசித்த  வசனங்கள் 


1  உன் உடம்பில்  இருந்து  ரத்தம்  வருதுன்னா  அது  உன்  உயிர்  போகும்போது  வருவதாக  இருக்கக்கூடாது , மற்ற  உயிர்களைக்காப்பாற்றும்போது  வருவதா  இருக்கனும்


2  மிஸ்1  உங்க  பேருக்கு  பின்னால  ரொம்ப  நாளா  ஒரு  சர்  நேம்  அதாவது  உங்க  அப்பா  பேரு  இருக்கே? அது  ரொம்ப  போர்  அடிச்சா  வேணும்னா  என்  பேரை  பின்னால  சேர்த்துக்குங்க , நோ  அப்ஜெக்சன் 


3  காதலில்  ஈடுபடும்  ஒவ்வொரு  முட்டாளும்  ஷாஜகானே!


4 அந்த  வீணாப்போனவனுக்கெல்லாம்  செம  அழகா  ஒரு சம்சாரம்  இருக்கு , எனக்கு  என்ன  குறைச்சல் ? 


5  நீ  எப்பவோ  செத்துப்போனவனை  நினைச்சு  இப்போ  உயிரோட  இருக்கறவனை  தினமும்  சாகடிச்சுட்டு  இருக்கே!


6  அவரு  சந்தோசமா  இல்லைன்னாலும்  சந்தோஷமா  இருக்கற  மாதிரி  நடிக்கிறார். உனக்கு  அவரைப்பிடிக்கலைன்னாலும்  பிடிச்ச  மாதிரி  ஏன்  நடிக்கக்கூடாது ?



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  தன்  அம்மாவுடன்  வசிக்கும்  வீட்டின்  எதிர்  வீட்டில்  நாயகி 4  வருடங்களாக  இருக்கிறாள்.  ஆனால்  நாயகனின்  அம்மாதான்  இவர்  என  அவருக்குத்தெரியாது. ஆனால்  இருவரையும்  தனித்தனியே  பழக்கம், இது  எப்படி  ? சாத்தியமே  இல்லையே? 


2  நாயகனின்  அம்மா  மதுபாலா  ஒரு   கடைல கிடார்  பர்ச்சேஸ்  பண்ண  ரேட்  கேட்கறார். கடைக்காரன் 10,000  ரூபா  அப்டிங்கறான், 5000  ரூபாய்க்கு  தர  முடியுமா?னு  கேட்க  நோ  என்கிறான்.சரி   பேக்  பண்ணு  என  வாங்கிக்கொள்கிறார். பிறகு  ரவுடிப்பசங்க  கிராஸ்  பண்றப்ப  அதை  உடைச்சுடறாங்க அவங்க  கிட்டே  5000  ரூபா  வசூல் பண்றார். . ஆக்சுவலா  10,000  தானே  அதன்  ரேட்?


3    5000  கேட்ட  மதுபாலாவிடம்  ரவுடி 10000  ரூ   தருகிறான். எதுக்கு  5000  ரூபா  எக்ஸ்ட்ரா  என  கேட்கும்போது  இப்போ  உன்னை  இடிக்க  என  ரவுடி  சொல்கிறான். பிறகு  கடைக்காரனிடம்  இன்னொரு  கிடார்  கொண்டு  வா  என  சொன்ன  மதுபாலா  புது  கிடார்க்கு  பணமே  தர்லை 


4   ஸ்கூல்  டாப்பர்  ஆன  நாயகி  காலேஜ் எக்சாம்  செண்ட்டர்ல  எக்சாம்  எழுதத்தெரியாம  விழிப்பது  நம்பும்படி  இல்லை . அதே  போல  நாயகன்  ஒரு  பிட்டு  பேப்பரை  தர  அதைப்பார்த்து  எழுதும்  சீனும்  நம்பும்படி  இல்லை . இருவரும்  வெவ்வேறு  டிப்பார்ட்மெண்ட். என்ன  சப்ஜெக்ட்  என்ன  கேள்வி  எதுவும்  தெரியாம  எப்படி பிட்  பேப்பர்  ரெடி  பண்ண  முடியும் ?


5  மாப்பிள்ளை  இறந்து  விட்டதால்  திருமணம்  தடை  படும்  நாயகியின்  அப்பா  உனக்குப்பின் ரெண்டு  தங்கச்சிங்க  இருக்காங்க  அவங்களுக்கு  மேரேஜ்  பண்ண வேணாமா? என  மேரேஜூக்கு  வற்புறுத்துகிறார். சரி  நாயகியின்  தங்கைக்கு  என்ன  வயசுனு  பார்த்தா  ஒரு  தங்கை 12  இன்னொண்ணு 15 . எப்படியும்  6  வருசம்  கேப்  இருக்கே? என்ன  அவசரம்? 

6  திருமண  முகூர்த்தத்துக்கு இன்னும்  ரெண்டு  மணி  நேரம்தான்  இருக்கு. ஏகப்பட்ட  சாங்கியம், புனஸ்காரம்  எல்லாம்  பெண்டிங்  இருக்கும்., மாப்ளை  லூஸ் மாதிரி  நாயகியை  ஒரு  கார்  ரைடு  போலாம்னு  கூப்பிடறார். அந்த  பேக்குக்கு  கார்  ஒழுங்கா  ஓட்ட  வராதுனு  அந்த  பேக்கே  சொல்லுது, பரவால்ல  நான்  கூட இருக்கேன்னு  இந்த  கேனம்  சொல்லி  மெயின்  ரோட்ல  கார்  ஓட்ட  வெச்சு  பாப்பா மாப்ளை  மர் கயா . திணிக்கப்பட்ட  இறப்பா  தெரியுதே  தவிர  இரக்கமோ  பரிதாபமோ  வர்லை 


7  மவுன  ராகம்  மோஹன் - ரேவதி  மாதிரி  பொசிசன்ல  இருக்கும்   பேசாத  நாயகி - நாயகன்  ஜோடி  இருக்கும்  வீட்டில்  நாயகியின்  தங்கைகள்  தன்  அக்கா - மாமா  ஜோடி  சேர  ஒரு  கேவலமான  திட்டம்  போடறாங்க , அதன்படி  நாயகி  டிரஸ்  சேஞ்ச்  பண்ணிட்டு  இருக்கும்  பாத்ரூம்  கதவை  நாயகன்  திறக்க  முற்படும்போது  எதுவும்  சொல்லலை . தடுக்கலை . நாயகி  உள்  பக்கம்  கதவை  தாழ்  போட  மாட்டாரா? 


8  உன்  கிட்டே  தனியா  பேசனும்னு  தாலி  கட்ன  சொந்த  சம்சாரம்  கிட்டே  சொல்லும் ஹீரோ  யாருமே  இல்லாத  அவங்க  வீட்ல  பேசாம  லூஸ்  மாதிரி  நாயகியை  ஒரு  இடத்துக்கு  கூட்டிட்டுப்போவது  ஏன்? போய்  பேச  வேண்டிய  விஷயத்தைப்பேசாம  கார்ல  போகும்போதே  மேட்டரை  ஓப்பன்  செய்வது  ஏன் ? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - எதுவும்  இல்லை ., க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   நாயகிகள்  இருவரின்  அழகுக்காக  பார்க்கலாம், ஒரே  டெம்ப்ளேட்டான  கதை  தான்  ரேட்டிங்  2.25 /5 

Sunday, April 09, 2023

பல்லு படாம பாத்துக்க (2023) - தமிழ் - சினிமா விமர்ச்னம் ( காமெடி டிராமா) @ அமெசான் பிரைம் 18+

 


டெம்பிள் மங்கீஸ்  என்ற யூ  ட்யூப்  சேனல்  மூலம்  பிரபலமானவர்   இயக்குநர் விஜய் வ்ரதராஜ், இவர்  மொக்கைக்காமெடி  ரசிகர்  போல. சி  செண்ட்டர்  அடியன்சுக்கான  அடல்ட் க்ண்ட்டெண்ட்  உள்ள  மொக்கைக்காமெடி  படத்தை  எடுத்து வைத்துள்ளார். கெடுத்து  வைத்துள்ளார்  என்றும்  சொல்லலாம், 2018 ஆம்  ஆண்டு  ஆரம்பிக்கப்ப்ட்ட  படம் 2023 ல்  தான்  ரிலீஸ்  ஆகி  உள்ளது, டி வி  ல  போட்டு  பார்ப்பவர்களுக்கு  தலா  ரூ  1000  பரிசு  என  அறிவித்தாலும்  பார்க்க  வேண்டாம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகியின்  தந்தை ஒரு  விஞ்ஞானி. சாகா  வரம்  போல  என்ன  நோய்  வந்தாலும்  அதை  சரி  செய்யும்  மருந்தை  கண்டு  பிடிக்கிறார், ஆனால்  அரசாங்கம் , ராணுவம்  எல்லாம்  அதை கொத்து  கொத்தாக  மனிதர்களை  சாகடிக்கும்  வைரசாக  மாற்றுகிறார்கள் . போர்  செய்ய  இது  புது  யுக்தியாக  உருவெடுக்கிறது . உண்மை  அறிந்த  இவர்களை  அழிக்க  முயற்சி  நடக்கிறது . இந்த  ஆராய்ச்சிக்கூடம்  இருக்கும்  இடத்தை மனிதர்கள்  யாரும்  அறியாதவாறு  ரகசியம்  காக்கிறார்கள் 


 வெவ்வேறு  காரணங்களுக்காக  வாழ்க்கையை  வெறுத்து  தற்கொலை  செய்து  கொள்ள  ஒரு  இடத்துக்கு  வரும் ஆறு  பேர்  ஜாம்பிகள்  இருக்கும்  ஒரு  காட்டுக்குள்  மாட்டுகிறார்கள் . அவர்களை  நாயகி  காப்பாற்றுகிறாள் 


ஆராய்ச்சியின்  சைடு  எஃபக்ட்  ஆக  அந்தக்கால  ஹிட்லர்  உயிர்த்தெழுகிறார். இதற்குப்பின்  நிகழும்  நம்ப  முடியாத  சம்பவங்களே  படம் 


நாயகனாக  அட்டக்கத்தி  தினேஷ், எப்படி  இருந்த  மனுசன்  இப்படி  ஆகிட்டாரே? என  கேட்கத்தோன்றுகிறது. நாயகியைத்துரத்தி  துரத்தி  லவ்வும்  கேரக்டர்  தான்,  எடுபடவில்லை 


நாயகியாக  சஞ்சிதா  ஷெட்டி டைட்  ஃபேண்ட் , டைட்  பனியன்  என  கிளாமர்  காஸ்ட்யூம்ஸ்  மட்டுமே  இவரது  பிளஸ்


காமெடியன் ஜெகன்  இதில்  திருநங்கை  மாதிரி  ஏதோ ஒரு  கேரக்டரில்  கேவலமாக  தோன்றி  உள்ளார். சென்சாரில்  எப்படி  இவரது  காட்சிகளை  அனுமதித்தார்களோ?


 2  மணி  நேரம்  ஓடும்  படத்தில்  பார்க்கும்படியாக  20  நிமிடக்காட்சிகள்  மட்டும்  இருக்கிறது 

சபாஷ்  டைரக்டர்

1  பலரின்  ஃபிளாஸ்பேக்  கதைகளில்  அந்த  ஒரே  ஒரு  பியார்ஸ்  சோப்பால்  ஒரு  குடும்பமே  அழிந்த  கதை  மிக  சுவராஸ்யம்


2  கட்டி  வைக்கப்பட்ட  காட்டெருமைகள்  எல்லாம்  புலம்பிக்கொண்டிருகும்போது  தப்பிக்க  ஒரு  வாய்ப்புக்கொடுக்கும்  கத்தியை  இருவர்  உபயோகிக்க  முயல  ஒரு  ஆள்  அதைத்தட்டி  விட்டு  தப்பிக்கக்கூடாது  , அது  தப்பு  என  அடிக்கடி  காமெடி  பண்ணும்  காட்சி 


3   மெயின்  கதையை  வைத்து  இரண்டு  மணி  நேரம்  இழுக்க  முடியாது  என்பதை  அறிந்து  ஆறு  பேருக்கும்  தனித்தனி  ஃபிளாஸ்பேக்  கதை  சொல்ல  வைத்து  சமாளித்தது 


4  ஏ  சர்ட்டிஃபிகேட்  வாங்க  வேண்டும்  என்பதற்காகவே  சம்பந்தமே  இல்லாமல்  பச்சை  வசனங்களை  ஆங்காங்கே  சேர்த்தது . பசுமை  பாரதம்  என்பதை  பச்சை  பாரதம்னு  புரிஞ்சுக்கிட்டாங்க  போல 


5  மாறுபட்ட  கேர்க்டர்களில்  தொடர்ந்து  நடித்து  வரும்  அட்டக்கத்தி  தினேஷை  இந்த  மாதிரி  டப்பாப்படத்தில்  நடிக்க  சம்மதிக்க   வைத்த  லாவகம் 




  ரசித்த  வசனங்கள் 


1  உங்கள்  அபிமான  கட்டு  விரியனும், கட்டில்  வெறியனும்


2 ஹனிமூன் க்கு  எங்கேம்மா  போறே?


 கன்யா  குமாரி 


 கடைசி  வரைக்கும்  நீ  அப்படியேதான்  இருக்கப்போறே!


3  இந்த  கம்பெனில  சேர்ந்து  12  வருசம்  ஆகிடுச்சு , வயசாகிடுச்சு. சோ  யூ ஆர் டிஸ்மிஸ்டு 


 வயசானா  கழிச்சுக்கட்ட  நான்  என்ன  ஐயிட்டமா?


4  உலகத்துல  எந்த  ஒரு  நல்லதும்  கூடவே  ஒரு  சாபத்தையும்  கொண்டு  வரு,ம் 


5   சில  விஷயங்களை  ஜெயிக்க  முடியாது , தோற்றதா  ஒத்துக்கவும்  முடியாது


6 அமுக்க்ரான்  கிழங்கு  பொடி  அஞ்சு  ஸ்பூன்  சாப்பிட்டா  காய்ஞ்சு  போன  காவிரியும்  பாய்ஞ்சு  வரும்  பாலாறா  மாறும்


7  இது  அனிரூத்  அல்வா , ஆயகலைகள்69ம்  இதுல அடங்கும் , ட்ரை  பண்ணிப்பாருங்க 


8  சரக்கு  குடிக்கற  போட்டில  சரக்குக்குப்பதிலா  அவனுக்கு  மட்டும்  கூல்ட்ரிங்க்ஸ்  கொடுத்து  நம்மளை  ஏமாத்திட்டாங்க 


 நம்ம  ஊர்  சரக்கே  கூல்ட்ரிங்க்  மாதிரி தானே  இருக்கும் ?



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  அட்டக்கத்தி  தினேஷ்  நிற்கும்  இடத்தின்  பின்னால்  உள்ள  சுவர்  அல்லது  கதவு  வழியாக   ஜோம்பிகள் இரு  கைகளை துவாரவ்  வழியாக  செலுத்தி  தாக்க  வரும்போது  அவர்  ஏன்  அந்த  இடத்தை விட்டு  விலகாமல்  அங்கேயே  பத்து  நிமிடங்களாக  நிற்கிறார்? 


2  ஃபாரீன்  டிவிடி  யைப்பார்த்து  சுடும்  அட்லீ  பரம்பரைகள்  தயவு  செய்து  ஹோமோ  டைப்  கிளைக்கதைகளை  தவிர்க்கவும்,  நம் ஊருக்கு   அந்த  கதை  ஒட்டவே  இல்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - இது  18+  படம் . காட்சி  ரீதியாக  ஏதும்  இல்லை  என்றாலும்  வசனம்  கொடூரம். ஃபேமிலியுடன் போய்  மாட்டிக்கொள்ள  வேண்டாம்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  அமேசான்  பிரைம்  தளத்தில்  ஓரமாக  சத்தமே  இல்லாமல்  இருக்கும்  படம், அங்கே ஸ்ட்ரீமிங்  ஆகுது என  ப்ரமோ  பண்ண  அவங்களே  கூச்சப்பட்டுக்கொள்ளும்  படம்  போல . ரேட்டிங்  மைன்ஸ்  1 /5

Saturday, April 08, 2023

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் ஃபோன் சிம்ரனும் ( 2023)- தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி) @ அமேசான் பிரைம்


ஷங்கர்  இயக்கிய  எந்திரன்  படத்தின்  கதையை உல்டா  பண்ணி  லோ  பட்ஜெட்டில்  ரெடி  ஆக்கிய  திரைக்கதை  என்பதாலோ  என்னவோ  டைட்டிலில்  இயக்குநர்  ஷங்கருக்கு  க்ரெடிட்  கொடுத்திருக்காங்க . நான்கு  வெவ்வேறு  காதல்  கதைகளை  இணைத்து  காமெடி  பண்ண  முயற்சித்து  இருக்கிறார்கள் , அதில்  அவர்கள்  முழு  வெற்றி  அடைந்தார்களா? என  பார்ப்போம் 


 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  காலேஜ்  படிக்கும்போது  ஒரு  பெண்ணைக்காதலித்தான், அவளும்  தான், ஆனால்  நாயகனின்  நண்பனும்  அதே  பெண்ணைக்காதலித்ததால்;  நாயகன்  இன்சிடெண்ட்  தியாகி  ஆகி  காதலியை  நண்பனுக்கு  விட்டுக்கொடுத்து  அவர்களை  சேர்த்து  வைத்து  விட்டான். 


 நாயகனின்  அம்மா  சின்ன  வயதில்  இறந்து  விட்டதால்  நாயகனின்  அப்பா  தனியாகவே  இருக்கிறார். எதேச்சையாக  ஒரு  நாள் டெலிஃபோன்  மூலம்  முகம்  அறியாத  பெண்  நட்பு  உருவாகிறது . அந்தப்பெண்ணை  அவர் காதலிக்கிறார்


நாயகன்  இப்போது  ஃபுட்  டெலிவரி  பாய். டிக்  டாக் மற்றும்  இன்ஸ்டாவில்  பிரபலமான  ஒரு  பெண்ணை  ஒரு  தலையாக  காதலிக்கிறார்.அடாது அலட்சியம்  செய்தாலும் விடாது  துரத்திக்காதலிக்கும்  நாயகனின்  காதலை  நாயகி  ஏற்றாரா? 


ஒரு  சயிண்ட்டிஸ்ட்  கண்டுபிடித்த  ரோபோ  லேடி  உள்ள  செல்  ஃபோன்  எதேச்சையாக  நாயகன்  கையில்  சிக்குகிறது. அந்தப்பெண்  நாயகனை  பல  வழிகளில்  சந்தோஷப்படுத்துகிறாள் ., பணக்காரன்  ஆக்குகிறாள் , ஆனால்  அவள்  நாயகன்  தன்னைக்காதலிக்க  வேண்டும்  என  எதிர்பார்க்கிறாள். நாயகனோ  நீ  வெறும்  விர்ச்சிவல்  இ,மேஜ்  தான்  நாம்  சேர  முடியாது  என  மறுத்ததும்  கோபம்  ஆகி  நாயகனைப்பழி  வாங்க  மேலே  சொன்ன  மற்ற  மூன்று  கதைக்களில்  சில  கசமுசா  வேலைகள்  செய்கிறாள் . இறுதியில்  என்ன  ஆனது  என்பதை  திரையில்  காண்க


 நாயகனாக   மொக்கை  காமெடி  நாயகன்  சிவா. முகத்தில் உணர்ச்சியே    காட்டாத  ஹீரோக்களில்  முக்கியமானவர்.  இவர்  லேட்டஸ்ட்  அப்டேட்டட் காமெடிகளை  வழங்கினால்  தேவலை . மதுரை  முத்து , ஈரோடு  மகேஷ் , பழைய ஜோக்  தங்கதுரை  போல 1980களில்  பத்திரிக்கைகளில்  வந்த  பழைய  மொக்கை   ஜோக்ஸ்களை   ஒப்பிப்பது  கடுப்படிக்கிறது 


நாயகியாக அஞ்சு  குரியன்.அழகாகத்தான்  இருக்கிறார், ஆனால்  அதிக  வாய்ப்பில்லை 


 இன்னொரு  நாயகியாக  மேகா  ஆகாஷ் . இவர்  முதல்  பாதி  முழுக்க சர்க்கஸ்  லேடி  போல  குறவர்  இனப்பெண்கள்  போடுவது  போல  ஏதோ  ஒரு  ஜிகினா டிரஸ்  மாதிரி  போட்டு  வந்து  கடுப்படிக்கிறார்.இடைவேளைக்குப்பின்  மாடர்ன் டிரசில்  நீட்டாக  இருக்கிறார்


காலேஜ்  காதலியாக திவ்யா  கணேஷ்  மூன்று  நாயகிகளில்  இவர்தான்  குடும்பப்பாங்கான  அழகு , ஆனால் இவரது  கேரக்டர்  டிசைன்  கள்ளக்காதலி  போல  அமைத்து  இருக்கிறார்கள் ., இவருக்கு  நடிக்க  வாய்ப்பு  இருக்கிறது 


நாயகனின்  அப்பாவாக  பாடகர்  மனோ  ஆங்காங்கே  சிரிக்க  வைக்கிறார். வ்ல்லனாக  பகவதி  பெருமாள்  ஓக்கே  ரகம் .. போலீசாக  மொட்டை  ராஜேந்திரன்  கல கல 


லியோன்  ஜேம்சின்  இசையில்  மூன்று   பாடல்களுமே  கேட்கும்படி  இருக்கின்றன . ஆர்தர்  வில்சனின்  ஒளிப்பதிவில்  இது லோ  பட்ஜெட்  படம்  என்பது  தெளிவாகத்தெரிகிறது பூபதி  செல்வராஜ்  எடிட்டிங்கில்  ரெண்டே கால்  மணி  நேரம்  படம்  ஓடுகிறது., இன்னும்  ஷார்ட்டாக  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம். திரைக்கதை  வசனம்  இயக்கம்  எல்லாம்   பி என்  விக்னேஷ  ஷா.  முடிந்தவரை  சிரிக்க  வைக்க  முயற்சி  செய்திருக்கிறார்   


சபாஷ்  டைரக்டர்


1    நாயகனின்  காலேஜ்  காதலி -  நாயகன்   செல்  ஃபோன்  மெசேஜ்  குழப்படிகள்  நல்ல  காமெடி  முயற்சி. குறிப்பாக  காலேஜ்  காதலியின்  கணவன்  சந்தேகப்பட்டு  செய்யும்  அலப்பரைகள்  குட் 


2   நான்கு  காதல்  கதைகளையும் ஒரே  புள்ளியில்  இணைக்கும்  கடைசி  20  நிமிட  காட்சிகள்  குட் 

செம  ஹிட்  சாங்க்ஸ்

1   சோறுதான் முக்கிய்ம  பிகிலே

2  ஸ்மார்ட்  ஃபோன்  சென்ன ரீட்டா

3   சோடி  சேரலாம் 


ரசித்த  வசனங்கள் 


1  செத்த  நாயை  செருப்பால  அடிச்ச  மாதிரி  வாடிப்போய்  இருக்கியே? இன்னா  மேட்டரு ?


2  சாஃப்ட்வேர் கம்ப்பெனில  வேலை  செய்வேனு பார்த்தா சாப்பாட்டுக்கம்பெனில  வேலை  செய்யறியே?

3  என்னடா? வாராவாரம்  ஒரு  புத் ஆண்ட்டியைக்கூட்டிட்டு  வர்றே?


4   நான்  மட்டும்  கரெக்ட்  டைம்க்கு  வந்து  காப்பாத்தலைன்னா...


 வேற  யாராவது  வந்து  காப்பாத்தி  இருப்பாங்க 


5  உன்னை  சந்தோஷமா  வெச்சுக்க  நான்  என்ன  செய்யட்டும்  சொல்லு ?


 என்னாலயே  என்னை  சந்தோஷமா  வெச்சுக்க  முடியல, நீ என்ன  பண்ணபோறே?


6   காசு சம்பாதிப்பது  ஈசி , பேர்  சம்பாதிப்பதுதான்   கஷ்டம்

7    வாங்க  மிஸ்,  என் கூட  உக்கார்ந்து  சாப்பிடுங்க , கும்பலா  உக்காந்து  சாப்பிட்டாதான்  சீக்கிரம்  டைஜெஸ்ட் ஆகும்


8  வாழ்ற  அளவுக்கு  காசு  இருந்தா போதும் , வாரி  எடுத்துட்டுப்போற  அளவுக்கு தேவை  இல்லை


9  நம்ம  ரெண்டு  பேருக்கும்  கல்யாணம்  ஆனதும் முத  வேலையா  என்  அப்பாவை  டைவர்ஸ்  பண்ணிடறேன்


10  எவரிதிங்க்  ஹேப்பன்ஸ்  ஃபார்  எ  ரீசன் 


11  என்னடா  புது  பொம்மைக்காரு.,?


  அம்மா  ஹேப்பி  யா  இருந்தாங்க  அதான்  வாங்கிகொடுத்தாங்க 


 என்னைக்கல்யாணம்  பண்ணின  நாளில்  இருந்தே  அம்மா  ஹேப்பிதானே?


 அதெல்லாம்  இல்லை , ரெண்டு  அங்கிள்ஸ்  வீட்டுக்கு  வந்தாங்க ,அ தனால  அம்மா  ஹேப்பி 


12   அப்பா , இத்தனை  நாளா   உனக்கு ஒரு  பொண்ணு   பார்க்கெறேன்னு  சொன்னிங்களே, அது  எனக்குன்னு  நினைச்சேன்ம் ஆனா  உங்களுக்கா>  


13   தனியா  போய்  திருடுனாதான்  மாட்டிக்கறோம், சேர்ந்து  போய்  திருடுனா?


 ஆமா  ஒன்று  பட்டால் குண்டு  பல்பு


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  இங்கே  மழை  வருதுனு  சொல்லிட்டு  பைக்கை  எடுத்துட்டு  நாயகி  வீட்டுக்கு  வர்றார், ஆனா  அவர்  கொஞ்சம்  கூட  நனையவே  இல்லை 


2  பூஸ்ட் ? ஹார்லிக்ஸ்? எது  வேணும்னு  அனிதா  கேட்கும்போது   தண்ணி  மட்டும்  போதும்னு  சிவா  சொல்றார். டூ மினிட்ஸ்  வெயிட்  பண்ணுங்குது. தண்ணி  கொண்டு  வர  எதுக்கு  2  மினிட்ஸ்? 


3  வில்லன்  கிட்டே  வட்டிக்கு  கடன்  வாங்கும்  ஹீரோ  அவ்ளோ  பணத்தையும்  பணத்தை  அள்ளிட்டு  வர்றார்? ஒரு  பேக்  கொண்டு  போக  மாட்டார்??


4   மனோ  பேங்க்  லோனை  அடைக்கும்போது  அவர்  நினைத்திருந்தால்  அந்த  டெலிஃபோன்  காதலி  ஃபோட்டோவைப்பார்த்திருக்கலாமே? 


5  செல் ஃபோன்  சிம்ரன்  தனக்கு துரோகம்  செய்வதாக  சிவா  சந்தேகப்படும்போது  அவரது  பெங்க்  அக்கவுண்ட்  டீட்டெய்ல்ஸ்  உள்ள  அல்லது  ஓ டி பி  வரும்  ஃபோன்  நெம்பர்  உள்ள  சிம்  கார்டை  வேறு  ஒரு  ஃபோனில்  மாற்றி  வைத்திருந்தால்  அவரது  பணம்  சேஃப்டியாக  இருந்திருக்குமே/ ?

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யு



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -    சமூக  வலைத்தளங்களில்  கலாய்த்த  அளவு ஓவர்  மொக்கை  எல்லாம்  இல்லை . ஓரளவு  காமெடியாகத்தான்  இருக்கிறது . 

 ரேட்டிங்  2.25  / 5 


Single Shankarum Smartphone Simranum
Single Shankarum Smartphone Simranum.jpg
Theatrical release poster
Directed byVignesh Sha P. N
Written byVignesh Sha P. N
Screenplay byVignesh Sha P. N
Boopathi Selvaraj
Produced byK. Kumar
Starring
CinematographyArthur A Wilson
Edited byBoopathi Selvaraj
S.N. Fazil
Music byLeon James
Production
company
Lark Studios
Distributed by11:11 Production
Release date
  • 24 February 2023
CountryIndia
LanguageTamil

Friday, April 07, 2023

குமரிக்கோட்டம் (1971) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா)

 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகியின்  அம்மா லவ்  மேரேஜ். அதனால  நாயகியின்  தாத்தா நாயகியின்  அம்மாவை  வீட்டை  விட்டு  விரட்டி  விடுகிறார். குழந்தை  பிறந்ததும் நாயகியின்  அம்மா  இறந்து  விடுகிறார். சில  வருடங்கள்  கழித்து  நாயகியின்  தாத்தா  மரணப்படுக்கையில்  இருக்கும்போது  தன்  பேத்தியைப்பார்க்க  ஆசைப்படுகிறார், ஆனால்  முடியவில்லை , இறந்து  விடுகிறார்.உடனே  வீட்டில்  இருக்கும்  சொந்தக்காரன்  ஆன  வில்லன்  சொத்தை  அபகரிக்க  நினைக்கிறான், ஆனால்  வக்கீல்  சொத்து  பூரா  பேத்தியான  நாயகிக்குதான்  என்கிறார்


 நாயகி  வரவழைக்கப்படுகிறார். இதெல்லாம்  நாயகி 8  வயதாக  இருக்கும்போது  நடந்த  சம்பவங்கள் . இப்போது  நாயகிக்கு  18 வயது 



நாயகியின்  அப்பாவும், நாயகனின்  அப்பாவும் நண்பர்கள் . இருவரும்   ஆரம்பத்தில்  சம்பந்தி  ஆவதாக  வாய்மொழியாக  பேசிக்கொண்டவர்கள் , ஆனால் இப்போது  நாயகி  செல்வச்சீமாட்டி , நாயகன்  ஏழை 


 பணக்காரத்திமிரில்  இருக்கும்  நாயகிக்கு  பாடம்  கற்றுக்கொடுக்க  நாயகன்  நினைக்கிறார். . பெண்  கொடுப்பதாக  வாக்களித்த நாயகியின்  அப்பா மனம்  மாறி  தன்  அப்பாவை  அவமானப்படுத்தியதற்கு  பழி  வாங்கத்துடிக்கிறார் நாயகன் அவர்  எண்ணம்  நிறைவேறியதா? என்பதுதான்  திரைக்கதை 


நாயகனாக  எம் ஜி ஆர். இந்தப்படத்தில்  ஏழையாக  டிசைன்  செய்யப்பட்டிருந்தாலும்  நாயகன்  அணிந்து  வரும்  உடைகள்  எல்லாம்   மல்ட்டி  மில்லியனர்  போலவே  இருக்கும் . , வழக்கமான  அரசியல்  உள்  குத்து  வசனங்கள்  ஆங்காங்கே  உண்டு , ஒஈஸ்ட்மென்  கலரில்  எம் ஜி ஆர்  ஸ்டைலிஷ்  ஆகவே  படம்  முழுக்க  வருகிறார்


 நாயகியாக  ஜெ.  பணத்திமிர்  காட்டும்  காட்சியில்  கச்சிதம்.  காதல்  பிறக்கும்  காட்சியில்  செயற்கை  தட்டுகிறது   ரெக்கார்டு  டான்சராக  இன்னொரு  ரோலில்  அவர்  காட்டும்  நடிப்பு  லோக்கல்  பாஷையில்  உடல்  மொழி  மாற்றத்துடன்  கச்சிதமான  நடிப்பு 


 குடிகார  பணக்காரராக  அசோகன்  நல்ல  நடிப்பு, அவரது  மகளாக  வரும்  லட்சுமி  நாயகனுக்கு  உடன்  பிறவாத்தங்கை  ஆவது  நல்ல  காமெடி 


காமெடிக்கு  சோ.  இன்னொரு  சின்ன  வில்லனாக  மனோகர் 


 நாயகியின்  அப்பாவாக  வி கே  ராமசாமி  கணீர்  குரலில்  அமர்க்களப்படுத்தி  இருக்கிறார்


திரைக்கதை  எழுதி  இருப்பவர்  சொர்ணம், கதையை  இழுக்க   வழி  தெரியாமல்  மெயின்  கதைக்கு  சம்பந்தமே  இல்லாமல்  ஆள்  மாறாட்டக்கதை  , டபுள்  ரோல்  என  பின்  பாதி  திரைக்கதையை  சொதப்பி  விட்டார் ,  கதை  குகநாதன் , இயக்கம்  நீலகண்டன்


அமிர்தம்  தான்  ஒளிப்பதிவு . அனைவரையும் அழகாகக்காட்டி  இருக்கிறார்


எம் எஸ்  விஸ்வநாதன்  தான்  இசை . 6  பாட்டு  ஹிட்டு 


சபாஷ்  டைரக்டர்


1  படத்தின்  டைட்டிலாக  குமரிக்கோட்டம்  என  வைத்து  விட்டு  அதற்கு  நியாயம்  கற்பிக்க  நாயகிக்கு  குமரி  என  பெயர்  வைத்த  புத்திசாலித்தனம்  அருமை 


2   நாயகனின்  அப்பா  கேரக்டர்  படத்தின்  ஆரம்பத்தில்  ஒரு  சீனில்  வந்ததோடு  சரி . அதற்குப்பின்  அவரை  ஆளையே  கண்ல  காட்டாம  மறைத்த  சாமார்த்தியம்




செம  ஹிட்  சாங்க்ஸ்


1  அடி  மத்தளம்  கொட்டி மேளத்தைத்தட்டி  வித்தையைக்காட்டடி  பெண்ணே  பெண்ணே  அடி  கண்ணே! (  ஹீரோயின்  ஓப்பனிங்  சாங்)


2  ஆடுவது  உடலுக்கு  விளையாட்டு  பாடுவது  மனதுக்கு  விளையாட்டு இரண்டும்  இருந்தால்  ... ( நாயகி  காலேஜ்  கலாட்டா சாங்) 


3  வந்தானய்யா  வந்தானய்யா  ராஜாங்கக்கோமாளி  (  ஹீரோ  மாறுவேடங்களில்  தோன்றும்  சாங் ) 


4   எங்கே  அவள்?   என்றே மனம்  தேடுதே  ஆவலால்..   (  டூயட்  சாங்)


5  நாம்  ஒருவரை  ஒருவர்  சந்திப்போம்  என  காதல்  தேவதை  சொன்னாள்  (    டூய்ட்  சாங்)


6  என்னம்மா  ராணி , பொன்னான  மேனி  ( லந்து  சாங்)


  ரசித்த  வசனங்கள் 


1    ஒருத்தன்  சாவில்  வரும்  சொத்து  எனக்குத்தேவை  இல்லை 


2    பயிருக்கு  வேலி , பெண்ணுக்கு  தாலி 


3 சோம்பேறித்தனம்  தான்  மனிதனின்  முதல்  எதிரி 


4   எனக்கு  துணிச்சல் காரன்  என  பெயர்  உண்டு  தெரியுமா? 


5  பெண்  குத்து  விளக்கு  மாதிரி அமைதியா   எரியனும்


6  உன்னால  இந்த  ஆளை  அசைக்கவே  முடியாது 


 என்னை  மட்டும்  இல்லைம்மா , கடமையைச்செய்யற  யாரையும்  யாராலும்  எதுவும்  செய்ய  முடியாது


7   மாணவப்பருவத்தில்  எத்தனையோ  சண்டை  போட்டாலும் பிரிந்து  செல்லும்போது  நண்பர்களாகத்தான்  பிரிவோம்


8  ஜெ -  அவர்  பிறந்ததே  எனக்காகத்தான்  ( உள்  குத்து  வசனம் ) 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  முதல்  பாட்டுக்கும்  இரண்டாவது  பாட்டுக்கும்  உண்டான  கேப்  2  நிமிசம்  தான் , 2  பாடல்களுமே  நாயகி  சோலோ சாங். எம் ஜி ஆர்  படங்களில்  இது  மிக  அரிது . 


2  ஊரில்  இருந்து  வீட்டுக்கு ஹீரோ  வந்ததும்  அவர்  எதுவும்  வாங்கி  வந்த  மாதிரி  தெரியலை. வீட்டில்  ஏற்கனவே  வைக்கப்பட்டிருக்கும்  வாழைப்பழத்தாரை அப்பாவிடம்  கொடுத்து  சாப்பிடு  அப்பா  என்கிறார்


3  வீட்டு  வாடகை  100  ரூபாய்  கூடத்  தர  முடியாத  ஏழையாக  வரும்  ஹீரோ  அணிந்திருக்கும்  பேண்ட்  சர்ட்  எல்லாம் 5000  ரூபாய்  மதிப்புள்ள  பிராண்டட்  சர்ட்


4  ஹீரோ  நல்லவர்னு  காட்ட  வேண்டியதுதான் , அதுக்காக  முன் பின்  அறிமுகம்  இல்லாத  வழிப்போக்கனை இரவில்  வீட்டுக்குள்  தங்க  வைப்பதும்  அவன்  பணத்தை  அபேஸ்  பண்ணுவதும்  அநியாயத்துக்கு  அவரை  நல்லவர்  ஆக்கக்காட்டும்  முயற்சி 


5  திருடு  போன  வீட்டு  வாடகைப்பணத்துக்காக  மாறுவேடத்தில்  நடனம் ஆடும்  ஹீரோ  பிறகு  அப்பாவின்  பசியைப்போக்கத்தான்  இப்படி  செய்தேன்கறார். ஏன் மாற்றி  மாற்றி  பேசனும் ?  வாடகையா? பசியா? 


6  அசோகனை  சிரிக்க  வைத்தால்  100  ரூபாய்  பரிசு  தருவதா  ஒரு  அடியாள்  சொல்றான்,  சிரிக்க  வைத்த  பின்  ஹீரோ  அவனிடம்  100  ரூபாய்  வாங்காமல்  அசோகனிடம்  கேட்டு  வாங்குகிறார். ஏன்  அவன்  தர  மாட்டானா? 


7  குடிகார  அப்பாவான  அசோகனை  பத்திரமாக  வீடு  கொண்டு  வந்து  சேர்த்ததற்காக  ஹீரோவுக்கு  நன்றி  சொல்லும்  லட்சுமி  அப்பாவிடம்  அவரது பணம்  அனைத்தும்  பத்திரமாக  இருப்பது கண்டு மகிழ்கிறார்.  , ஹீரோவிடம்  சிலாகிக்கிறார். மற்றவர்கள்  ரெகுலரா  அப்பா  பாக்கெட்டில்  இருக்கும்  பணத்தை  அபேஸ்  பண்ணிடுவாங்க, நீங்க  செய்யலை  என்கிறார். இதுவரை  எல்லாம்  சரி , பிறகு  ஹீரோவுக்கு  சர்வீஸ்  சார்ஜ்  ஆக  20  ரூபாய்  தருகிறார். இது  எதுக்கு ? அவருக்கு  பணம்  தான்  வேண்டும்  என்றால்  அப்பா  பாக்கெட்  மணியையே  ஆட்டையைப்போட்டிருப்பாரே?   


8  நாயகன் - நாயகி  இருவரும்  காலேஜ்  மேட்ஸ். ஆனால்  இருவருக்கும் ஆகாது . எப்போதும் சண்டை. ஒரு  ஏலம் நடக்கும்  இடத்தில்  போட்டி  போட்டுக்கொண்டு  இருவரும்  ஒரு    நிலத்துக்கு  ஏலம்  கூறும்  போது    நாயகன்  நாயகியிடம்  யூ  ஆர்  ஸோ  பியூட்டிஃபுல்  என்கிறார். உடனே நாயகிக்கு  லவ்  வந்து  விடுகிறது. டூயட். அழகான  பெண்ணைப்பார்த்தால்  1000  ஆண்கள்  அதே  டயலாக்கைதான்  சொல்வார்கள். இதுக்காக  ஒரு  பெண்  லவ்வில்  விழுமா? என்ன ? 


9  நாயகன்  பரம  ஏழை  என்று  நாயகிக்கு  ஆல்ரெடி  தெரியும், நாயகன்  பணக்காரன்  போல்  நடிக்கும்போது   இவருக்கு  எப்படி  இவ்வளவு  பணம்  வந்தது ? என  அவர்  சந்தேகிக்கவே  இல்லையே?


10   நாயகன்  நாயகியைக்கடுப்பேற்ற  அவரது  கேர்ள்  ஃபிரண்ட்  யாரையாவது  ஜோடி  மாதிரி  காட்டி  இருக்கலாம், ஆனால்  அவர்  தன்  உடன்  பிறவாத்தங்கையை  காதலி  மாதிரி  ஜோடி மாதிரி  நாயகியிடம்   காட்டிக்கொள்வது   எப்படி ? 


11   விலை  உயர்ந்த உலோகம்  கிடைக்கும்  என்ற  பொய்யான  தகவலில்  வி  கே  ராமசாமி  11  லட்சம்  ரூபாய்க்கு  ஒரு  டம்மி  நிலத்தை  வாங்குகிறார், ஓக்கே , ஆனால்  அந்த  நிலத்தைத்தோண்டிப்பார்க்க  மட்டும்  20  லட்சம்  ரூபாய்  செலவு  செய்வதெல்லாம்  ஓவர் 


12   ஜெ  ஒரு  சீனில்  மாடி  மீது  நிற்கிறார். அவர்  நிற்கும்  தூரத்துக்கும்  படிக்கட்டு  ஆரம்பிக்கும்  இடத்துக்கும் 10  அடி  தூரம்  இருக்கும், அப்;போது  ஹீரோ  சொன்ன  அதிர்ச்சித்தகவலால்  ஜெ தலை  சுற்றி  10  அடி  தூரம்  ஜம்ப்  பண்ணி மாடிப்படிக்கட்டில்  உருண்டு  விழுகிறார்


13   உண்மையான   கோபால்  நான்  தான்  என  வில்லன்  மனோகரும், நாயகன்  எம்  ஜி ஆரும்  மாறி  மாறி  சொல்லும்போது  அந்த நாட்டாமை  ஆள்  அதற்கான  ஆதாரம் காட்ட  சொல்லலை , அல்லது  சாட்சியாக  யாரையாவது  அழைத்து  வாருங்கள்னு  சொல்லலை, மாறாக  இரண்டு பேரும் சண்டை  போடுங்க , யார்  ஜெயிக்கறாங்களோ  அவங்கதான்  உண்மையான  கோபால்  என்கிறார், என்ன  கொடுமை  சார்  இது ? 


14   ஜெ  ஆள்மாறாட்டம்  நிகழும்  முதல்  சீனில்  அவரது  பாஷையே  தர  லோக்கல் ஆக  இருக்கிறது ,  நாயகனுக்கு  ஏன்  சந்தேகம்  வரவில்லை ?


15  ஜெ  ஆள்  மாறாட்டம்  நிகமும்போது  வயலட்  கலர்  சேலை  வயலெட்  கலர்  பிளவுஸ்  தான்  போட்டுட்டு  வருவார்  என்பது  மனோகருக்கு  எப்படி  தெரியும் > எப்படி  இன்னொரு  ஜெ  வை  அதே  டிரசில்  ரெடி  பண்றார்? 


16  சாப்பாடு  சாப்பிடுவது  டைனிங்  ஹாலில்  அல்லது ஹாலில்  தான்  சாப்பிடுவார்கள். நாயகன்  பைத்தியம்  ஆக  மாறி  விட்ட  நாயகிக்கு  சாப்பாட்டை  அவரது  பெட்ரூமில்  வந்து  ஊட்டுகிறார்

17  வில்லன்  திட்டப்படி  ஆள்  மாறாட்ட  டான்சர்    நாயகன்  தூங்கும்போது  அவரைக்கொலை  செய்ய  முயற்சிப்பதுதானே  சேஃப்டி , அப்படி  செய்யாமல்  அவர்  விழித்திருக்கும்போதே  கையில்  கத்தியுடன்  சுத்திட்டு  இருக்காங்க 

18  படத்தில்  வரும்  அனைத்துக்கேரக்டர்களும்  நார்மலான  டிரஸ்  போட்டுட்டு  வரும்போது  வில்லன்  மனோகர்  மட்டும்  பேக்கு  மாதிரி  ரெயின்  கோட்  அதற்குள்  கோட்  என  ஓவர்  லோடட்  டிரஸ்கோடுடன்  வருவது  ஏன்?  உப்புசமா  இருக்காது ?

19   குடிகாரன்  ஆன  அசோகனை  திருத்துவதற்காக  நாயகன்  அசோகனின்  மகளான  லட்சுமியை  ரேப்  செய்ய  முயற்சிப்பது  போல்  நடிப்பதெல்லாம்  ஓவரோ  ஒவர் 



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  எதுவும்  இல்லை , யூ படம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சூப்பர்  ஹிட்  பாட்டுக்காகவும், எம் ஜி ஆர்  - ஜெ  ஜோடி  கெமிஸ்ட்ரிக்காகவும்  பார்க்கலாம். கதை  ரொம்ப  சுமார்  ரகம்  தான் , ரேட்டிங் 2.5 / 5 



நன்றி - ஆனந்த  விகடன்  மை  விகடன்  ஆன் லைன்  இதழ்

பதிவேற்றம் கண்ட  நாள்  31/3.2023



Kumari Kottam
Kumari Kottam poster.jpg
Theatrical release poster
Directed byP. Neelakantan
Screenplay bySornam
Story byV. C. Guhanathan
Produced byKovai Chezhiyan
StarringM. G. Ramachandran
Jayalalithaa
CinematographyAmirtham[1]
Edited byG. Kalyanasundaram[1]
Music byM. S. Viswanathan
Production
company
Kay Cee Films
Release date
  • 26 January 1971
CountryIndia
LanguageTamil

Thursday, April 06, 2023

MURDER MISTERY 2 ( 2023) - ஆங்கிலம் -சினிமா விமர்சனம் ( ஆக்சன் காமெடி மிஸ்ட்ரி த்ரில்லர்) - @ நெட் ஃபிளிக்ஸ்


  2019ல்  ரிலீஸான  சூப்பர்ஹிட்  படமான  மர்டர்  மிஸ்டரி  படத்தின் இரண்டாம்  பாகம்  தான்  இது . முதல்  பாகம்  பார்க்கவில்லை என்றாலும்  இது  புரியும், இது  தனிக்கதை முதல்  பகம், இரண்டாம்  பாகம்  இரண்டுமே  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆகாமல்  நேரடியாக  ஓடிடி  த்ளத்தில்  வெளியானவை. நெட்  ஃபிளிக்ஸ்  சொந்தத்தயாரிப்பு 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் - நாயகி  இருவரும்  தம்பதியினர் ,  முன்னர்  பார்த்து  வந்த  பணியை  உதறி  விட்டு  சொந்தமாக  பரத் - சுசீலா , நரேன் - வைஜ்  போல  பிரைவேட்  டிடெக்டிவ்  ஏஜன்சி  நடத்தி  வருகின்றனர் , பெரிய  அளவில்  வருமானம்  இல்லை . இந்த  மாதிரி  சமயத்தில்  அவர்களுக்கு  ஒரு  மிகப்பெரிய  செல்வந்தரின்  திருமண  அழைப்பு  கிடைக்கிறது . அந்த  திருமண  விழாவிற்கு  வர  அப் அண்ட்  டவுன்  சார்ஜ்  அது  போக  ஏகப்பட்ட  பரிசுகள்  என  ஆடம்பரமான  அழைப்பு  அது 


இருவரும்  குறிப்பிட்ட  தீவுக்கு  செல்கின்றனர் . பிரமாண்டமான  விழா  ஏற்பாடுகளையும்  ஆடம்பரமான  அலங்காரங்களையும்  கண்டு  வியக்கின்றனர். மகாராஜா  என்பவருக்குத்தான்  திருமணம் . அங்கே  மண்டபத்தில்  மணப்பெண் , மாப்பிள்ளையின்  முன்னாள்  காதலி ,  மாப்பிள்ளையின்  தங்கை , ஒரு  செக்யூரிட்டி  ஆஃபீசர்  போன்றவர்  இருக்கிறார்கள்


திடீர்  என  கல்யாண  மாப்பிள்ளை  கடத்தப்படுகிறான். பிணயத்தொகையாக  பெரிய  தொகை  கேட்கிறான். நாயகன்  மண்டபத்தில்  இருக்கும்  யாரோ  ஒருவர்  தான்  இந்த  சதித்திட்டத்தின்  பின்னால்  இருக்கிறார்கள்  என  நினைகிறான்


அப்போது  அந்தத்தீவுக்கு  இன்னொரு  டிடெக்டிவ்  வருகிறான் . இவன்  ஒரு  க்ரைம்  நாவல்  ஆசிரியர் இவன்  நாயகன், நாயகி  இருவரையும்  சந்தேகிக்கிறான்


 இந்தக்குழப்பங்களையெல்லாம்  தீர்த்து  நாயகனும், நாயகியும்  மாப்பிள்ளையை  எப்படி  மீட்டார்கள்  என்பதை   ஒன்றரை  மணி  நேரம்  காமெடியாகவும்  பிரம்மாண்டமாகவும்சொல்லி  இருக்கிறார்கள் 


நாயகன்    முன்னாள்  நியூயார்க்  சிட்டி  போலீஸ்  ஆஃபீசர்  கம்  டிடெக்டிவ்  ஆக   ஆதம்  சாண்ட்லர்   காமெடி  ஆக்சன்  என  கலந்து கட்டி  நடித்திருக்கிறார். மனைவியை  பல  இடங்களில்  கலாய்க்கும்போது  ரசிக்கும்படி  இருக்கிறது .  எந்த  ஒரு  ஆண்  தன்  மனைவியைக்கலாய்த்தாலும்  ஆண்களுக்குப்பிடிக்கும்  போல 


 நாயகியாக  ஜெனிஃபர்  ஆனீஸ்டோன்  நாயகனுக்கு  இணையான  காமெடி  ரோல் , கச்சிதமாக  செய்து  இருக்கிறார் 


வில்லனாக  மார்க்  ஸ்ட்ராங்க்  நடித்திருக்கிறார். அதிக  வலு  இல்லாத  வில்லன்  ரோல் 


நீக்ரோ  அழகிகள்  இருவர்  செய்யும்  சாக்சங்கள்  அருமை .,   மாப்பிள்ளையின்  தங்கையாக  வருபவர்  கதைக்கு  சம்பந்தமே  இல்லாமல்  கிளாமர்  டிரசில்  வருவது  ஏனோ ? 


ரூபர்ட்  கிராக்சன்  வில்லியம்சின்  இசையில்  படம்  முழுக்க  எங்கேஜிங்  ஃபேக்டர்ஸ்  உடன்  நகர்கிறது , சில  பிஜிஎம்  கள்  மாஸ் 


போஜன்  பஜ்பிளி  யின்  ஒளிப்பதிவு  திரும்ண  மண்டபத்தின்  பிரம்மாண்டத்தை  தீவின்  இய்ற்கை  அழ்கை  பிரமாதமாகப்படம்  பிடித்து  இருக்கிறது 


டாம்    காஸ்டெய்ன்  அண்ட்  பிரெயின் ராபின்சன்  இருவரும்  எடிட்டிங் . 89  நிமிட  படமாக  கச்சிதமாக  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்கள் 


ஜேம்ஸ்  வேண்டர்பில்லின்  திரைக்கதைக்கு  ஜெரேமி  கெர்லிக்  உயிர்  ஊட்டி  இயக்கி  இருக்கிறார். விறுவிறுப்பான  இயக்கம் 





சபாஷ்  டைரக்டர்


1   நாயகி தன்னிடம் ஜொள்  விட்ட  நபரை  நீ  உள்ளே  போய்  ஒளிஞ்சுக்கோ  என்  ஒரு  கப் போர்டுக்குள்  அனுப்ப  முயலும்போது  நீயும்  வா  என   கையைப்பிடித்து  இழுக்கும் காட்சி  கலக்கல்  காமெடி 


2  கிட்நாப்பர்ஸ்  இருக்கும்  வேனுக்குள்  நடக்கும்  ஆக்ச்ன்  சீக்வன்ஸ்  அதகள  காமெடிகள் 


3   70  மிலியன் டாலர்  இருக்கும்  சூட்கேசை  மொட்டையன்  அபேஸ்  பண்ணிட்டுப்போகும்போது அவன்  இருந்த  வேன்  பாம் வெடித்து  எரிவது , எரியும்  வேனில் அசால்ட்டாக  ஒருவன்  உள்ளே  வந்து  எடுப்பது, அவனும்  கொலை  செய்ய்ப்ப்டுவது  என  தொடர்   ஆக்சிடெண்ட்ஸ்  ட்விஸ்ட்


4   நீக்ரோ லேடீஸ்  இருவ்ரும் டிடெக்டிவ்ஜோடியை கன்  பாய்ண்ட்டில்  மிரட்டும்  போது  நிகழும்  ஆக்சன்  சீக்வன்ஸ்

5   புகழ்  பெற்ற    மணி  ஹெய்ஸ்ட்  ல  ஆர்த்த்ரோ  கேரக்டரில்  நடித்தவரை  அதே  ஜொள்  பார்ட்டி  கேரக்ட்ரில்  நடிக்க  வைத்ததும்  நாயகியிடம்  , அழகிகளிடம்  அவர்  வழிவதும்  கலக்கல்  காமெடி


  ரசித்த  வசனங்கள் 

1  எந்த  ஒரு  தம்பதியும்  ஒரே  பிஸ்னெஸ்ல  இத்தனை  வருசம்  ஒன்றாக  இருந்ததில்லை 


2  போதும்  போதும், நீங்க  யார்னே  தெரியலை, விட்டா  ஒவ்வொரு  விரல்லயும்  கிஸ்  கொடுப்பீங்க போல  இருக்கே> 


இதுவரை 10,000  பெண்களுடன்  பழகி  இருப்பேன், ஆனா  ஒருவர்  கூட  உங்க  அளவு  அழகில்லை 


3  நான்  கல்யாணம்  பண்ணின  ஒரே  பொண்ணும்  இவதான், நான்  செஞ்ச  ஒரே  தப்பும்  அந்த  கல்யாணம் தான்


4   இங்கே  இருந்த  சீஸ்   எங்கே?


 அது  போயே  போச்


 எங்கே?

 என்  வயிற்றுக்குள்ளே


5  நீங்க  ரொம்ப  ஃபேமஸ்  ஆன  கப்பிள்


தாங்க்ஸ்’’


அதாவது  எடுத்துக்கிட்ட  கேசை  எல்லாம்  சொதப்புனதுல 


4   இதுக்கு முன்னால  நீ  ஹாஸ்டேஜை  நெகோஷிஏட் பண்ணி  இருக்கியா?


 இவளைக்கல்யாணம்  செஞ்ச  பின்  வாழ்க்கையே  நெகோஷியேசன்லதான்  போய்க்கிட்டு இருக்கு 


5 ஏற்கனவே ஒரு  கிட்னாப்பரைகொலை  பண்ணிட்டேன்,இன்னொருத்தனைக்கொலை  பண்ண  விரும்பலை, நான் மாஸ் மர்டரரா  ஆக  விரும்பலை 


 கோடாலியால  அவனைக்கொலை  பண்ணிட்டே, நீ  மாஸ் மர்டரர்  இல்லை ஆக்ஸ்  மர்டரர்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  கல்யாண  மாப்பிள்ளை  நாயகனுக்கு  பரிசாக  ஹாட்  கேஷாக  கோடிக்கணக்கான  ரூபாயை  ஒரு லெதர்  பேக்கில்  போட்டுத்தருகிறான்.  இது  பிளாக்  மணி  இல்லையே? பேங்க்  அக்கவுண்ட்டில்  டைரக்ட்    க்ரெடிட்  செய்திருந்தால்  ஆபத்தில்  இருந்து  இருவரும்  தப்பி  இருப்பார்களே? 


2   திருமணத்துக்கு  வந்த  விருந்தினர்களுக்கே  கோடிக்கணக்கில்  செலவு  செய்யும்  வசதியான  மாப்பிள்ளை  தன்  சொந்த  பாதுகாப்புக்கு தம்மாத்தூண்டு  ஆளை  செக்யூரிட்டியாக  வைப்பது  ஏன்? 


3   நாயகி , நீக்ரோ  அழகிகள்  இருவர் , கல்யாணப்பெண்  அனைவரும்  டீசண்ட்டாக  டிரஸ்  பண்ணிட்டு  வரும்போது  மாப்பிள்ளையின்  தங்கை  ஏன்  கீளாமராக  வருகிறார்?  மேட்ச்  ஆகவே  இல்லையே? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - நெட்  ஃபிளிக்சில்  காணக்கிடைக்கிறது காமெடி  ரசிகர்கள் ,ஆக்சன்  பிரியர்கள்  பார்க்கலாம், அடல்ட்  கண்ட்டெண்ட்  எதுவும்  இல்லை 





Murder Mystery 2
Murder Mystery 2 poster.png
Official release poster
Directed byJeremy Garelick
Written byJames Vanderbilt
Produced by
Starring
CinematographyBojan Bazelli
Edited by
  • Tom Costain
  • Brian Robinson
Music byRupert Gregson-Williams
Production
companies
Distributed byNetflix
Release date
  • March 31, 2023
Running time
89 minutes
CountryUnited States
LanguageEnglish

Wednesday, April 05, 2023

AMIGOS (2023) -தெலுங்கு - சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்


அமிகோஸ்  என்ற  சொல்லுக்கு  நண்பர்கள்  என  அர்த்தம். 10/2/2023  அன்று  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆன  இந்தப்படம்  கலவையான  விமர்சனங்களைப்பெற்றது . குறைந்த  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்ட  இந்தப்படம்  பாக்ஸ்  ஆஃபீசில் 12  கோடி  வசூலித்தது  2022  ஆகஸ்ட்டில் பூஜை  போடப்பட்ட  இந்தப்படம்  ஒரு  குறுகிய  கால  தயாரிப்பு .,ஹைதராபாத் , பெங்களூரு , கொல்கத்தா , கோவா  ஆகிய  இடங்களில்  ஷூட்டிங்  நடந்தது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


இந்த  உலகத்தில்  ஒரே  மாதிரி  உருவத்தோற்றத்தில் 7  பேர்  இருப்பார்கள்  என்று  காலம்  காலமாக    சொல்லப்படுகிறது , டாப்பிள்  கேங்கர்ஸ்  என்னும்  ஒரே  சாயல்  கொண்ட  நபர்களை  ஒரு வரை  ஒருவர்  அறிந்து  கொள்ள  டாப்பிள்  டாட்  காம்  என்னும்  வெப்சைட்  இருக்கிறது . நாயகன்  அந்த  வெப்சைட்  மூலம்  தன்னைப்போலவே முக  சாயல் உள்ள  இருவர்  இருப்பதை  அறிந்து  கொள்கிறான்.  இருவரையும்  சந்திக்க  விரும்புகிறான். அவர்கள்  திட்டப்படி  கோவாவில்  மூவரும்  சந்திக்கிறார்கள் 


நாயகன் நாயகியை  திருமணம்  செய்ய  மீதி  இருவரும்  உதவுகிறார்கள் . ஆள் மாறாட்டக்காமெடி ,  கலாட்டா , காதல்  என  முதல்  பாதி  ஜாலியாக  நகர்கிறது 


இப்போதுதான்  ஒரு  ட்விஸ்ட் , நாயகனின்  முகச்சாயலில்  இருக்கும் இருவரில்  ஒருவன்  போலீசால்  தேடப்ப்டும்   கேங்க்ஸ்டர்  கம்  ட்ரக்  டீலர்  கம்   டெரரிஸ்ட். இவன்  தான்  வில்லன் 


 இப்போ  கதை  யு  டர்ன்  அடிக்கிறது. வில்லன்  தன்  முகச்சாயலில்  இருக்கும்  இருவரில்  ஒருவரை  தான்  தான்  என  போலீசை  நம்ப வைத்து   போலீசிடம்  மாட்ட  வைத்து  தான்  தப்பிக்க  நினைக்கிறான் . இந்த  கேட்  அண்ட்  மவுச்  கெமில்  யார்  ஜெயித்தார்கள் என்பது  க்ளைமாக்ஸ் 


நாயகன் சித்தார்த் , மஞ்சுநாத் , மைக்கேல் என்னும்  பிபின்  ராய்  என்ற  மூன்று  மாறுபட்ட  கேரக்டர்களில் நந்தாமுரி  கல்யாண்  ஒரு  ஆக்சன்  ஹீரோவுக்கே  உரிய  பில்டப்களுடன்  வருகிறார். 


 முதல்  பாதி  முழுக்க  காதல், கலாட்டா , காமெடி  என  முடிவானதால்  நாயகன்  சித்தார்த்  ரோல்  தான்  முன்னிலைபடுத்தப்படுகிறது . . அப்பாவியாக  வரும்  மஞ்சுநாத்  கேரக்டருக்கு  அதிக  வேலை  இல்லை . 


 வில்லனாக  வரும்  மைக்கேல்  எனும்  பிபின்  ராய்  கேரக்டர் தான்  பவர்  ஃபுல்லாக  டிசைன்  செய்யப்பட்டிருக்கிறது . கலக்கலான  , மிரட்டலான நடிப்பு.சில  இடங்களில்  வாலி  வில்லன்  அஜித்  கேரக்டர்  நினைவு  வருகிறது 


நாயகியாக  ஆஷிகா  ரங்கநாத்  அழகாக  வந்து  போகிறார். முதல்  பாதியில்  மட்டுமே  இவருக்கு  வாய்ப்பு , வில்லன்  ரோல்  டேக்  ஆஃப்  ஆன  பிறகு  நாயகன், நாயகி  யாருக்கும்  வேலை  இல்லை 


நாயகனின்  அப்பாவக  ஜெயப்பிரகாஷ்  நமக்குத்தெரிந்த  முகம், ஆனால்  அதிக  வாய்ப்பில்லை 


ஜிப்ரானின்  இசையில்  இரண்டு  பாடல்கள்  ஓக்கே  ரகம் . பின்னணி  இசையில்  மிரட்டுகிறார். குறிப்பாக  வில்லனுக்கான  தீம்  மியூசிக்  கலக்கல்  ரகம் 


சவுந்தர்  ராஜனின்  ஒளிப்பதிவில் ஹைதராபாத் , பெங்களூரு , கொல்கத்தா , கோவா  ஆகிய  நகரங்களின்  அழகை  அள்ளிக்கொண்டு  வருகிறார். தம்மிராஜூவின்  எடிட்டிங்கில் 137  நிமிடங்களில்  ஷார்ப்பாக  கட்  பண்ணி  இருக்கிறார்கள் . 


திரைக்கதை  , இயக்கம்  ராஜேந்திர  ரெட்டி .ஒரு  கமர்ஷியல்  மசாலா  த்ரில்லரை  எப்படி  கொண்டு  போக வேண்டுமோ  அப்படிக்கொண்டு  போய்  இருக்கிறார்


முதல்  பாதி  காதல், காமெடி  என  ஜாலியாகப்போகும்  படம்  பின்  பாதியில்;  ஆக்சன்  , ட்விஸ்ட்  என  விறுவிறுப்பாக செல்கிறது .


 பார்க்கத்தகுந்த  இந்தப்படம்  நெட்  ஃபிளிக்சில்  காணக்கிடைக்கிறது  

சபாஷ்  டைரக்டர்


1  ரஜினி - கவுதமி  நடிப்பில் 1991ல்  ரிலீஸ்  ஆன  தர்ம துரை  படத்தில்  இருந்த  இளையராஜா  இசையில்  உருவான  பாடலான  மாசி  மாசம் ஆளான  பொண்ணு  மாமன்  எனக்குத்தானே  பாட்டின்  மெட்டை  ஒரு இம்மி  அளவு  கூட  மாற்றாமல்  அட்லீ  ஒர்க்  செய்த  ஜிப்ரானைக்கண்டு  கொள்ளாமல்  விட்டது 


2  அஜித் - ஜோதிகா- சிம்ரன்  நடிப்பில்  எஸ்  ஜே  சூர்யா  இயக்கத்தில்  1999ல் உருவான  வாலி  படத்தில் வில்லன்  அஜித்  நாயகி  சிம்ரனை  தம்பி  மனைவி  என்றும்  பாராமல்  அடைய  முயற்சிக்கும் காட்சிகளை  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லை  என்றாலும்  கமர்ஷியலுக்காக  வலுக்கட்டாயமாக  புகுத்தியது 


3  டூயல்  ரோலில்  எடுத்தாலே  போதுமாணா  இந்தக்கதையை  2005 ல்  ரிலீஸ்  ஆன அந்நியன்  டைப்பில்  3  கெட்டப்  ரோல் ஆக  மாற்றி  இழுத்தது ( அப்பாவி  அம்பி - ரெமோ, அந்நியன்) 


4   1991 ல்  ரிலீஸ்  ஆன  கேப்டன்  பிரபாகரன்  படத்தில்  பின்  பாதியில்  தேடுதல்  வேட்டையில்  ஈடுபடும்  ஃபாரஸ்ட்  ஆஃபீசர்ஸ்  அனைவரும்  தலையில்;  டார்ச்  லைட்டை  நெற்றியில்  கட்டிகொண்டு  தேடும்  சீனை  சாமார்த்தியமாக  அட்லீ  ஒர்க்  செய்தது 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1   Enno Ratrulosthayi"  (  மாசி  மாசம்  உல்டா  சாங் ) 

Yeka Yeka"


  ரசித்த  வசனங்கள் 

       

1   எநத  ரத்த  சம்பந்தமும்  இல்லாத , டி என்  ஏ  டெஸ்ட்  வைத்தாலும்  சேராத  ஒரே  உருவத்தோற்றம்  கொண்டவர்கள்  எட்டு  லட்சம் பேர்  இதுவரை  அவரவர்  அதே  சாயல்  ஆளை  கண்டறிந்திருகிறார்கள் 


2   மிஸ்!  எந்த  மாதிரி  ஆள்  உங்களுக்கு  வேண்டும் ?


எனக்கு  வரப்போற  ஆள்  மூன்று  தகுதிகள்  கொண்டவனா  இருக்கனும்


1  எனர்ஜி  லெவல் ல  டாப்பா  இருக்கனும், காலை 9  டூ  நைட் 7  ஒர்க்  பண்ணினாலும்  ஆஃபீசில்  இருந்து  வீட்டுக்கு  வரும்போது  டயர்ட்  ஆகாமல்  இருக்கனும் 


2  மல்ட்டி டாஸ்க்கிங்கில்  வல்லவனா  இருக்கனும் ,  ஆஃபீஸ்  வேலை  பார்த்துக்கிட்டே  நான்  சொல்ற  வேலையையும்  முடிக்கனும், என்  கூட  பேசனும் 


3   ஸ்பீட்.. நான்  ஏதாவது  ஆபத்தில்  மாட்டிக்கிட்டா  எங்கே  இருந்தாலும்  ஓடி  வந்து  காப்பாத்தனும்  (  அதுக்கு  எம் ஜி ஆர்  தான்  பிறந்து  வரனும் ) 



3  என்னைத்தேடறது  உன்  இறப்பைத்தேடுவது  போல 


4  என்னை  நீ  மிரட்றியா? 


அது  எனக்கு  பழக்கமே  இல்லை ., கொல்றது  மட்டும் தான்  என்  வேலை 


5 பணத்துக்காக  உன்  சொந்த  நாட்டையே அழிக்க  தயார்  ஆகிட்டியா?


 வேற்றுக்கிரக  வாசிகள்  வந்து  டிமாண்ட்  பண்ணினா  இந்த  உலகத்தையே  அழிக்க  தயாரா  இருக்கேன்   (  அதுக்குப்பின்  இவரு  எங்கே  வசிப்பாரு ?}


6   உன்க்கு  எதிரான  எல்லா  எவிடென்சையும்  உன்  கிட்டே  ஒப்படைக்கிறேன், என்னைக்கொன்னுடாதே


 நீயே  ஒரு  எவிடென்ஸ்  தான்


7   என்னை  எதுவும்   செஞ்சுடாத , நான்  உன்  ஃபிரண்ட்


 ஆனா  நீ  எனக்கு  எதிரான  எவிடென்ஸ் 


8   ஹிஸ்  டெத்  ஈஸ்  மை  பிரேக் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 தீவிரவாதியைத்தேட  வரும்  போலீஸ்  கைல  துப்பாக்கியோட  தானே  வருவாங்க? வில்லன்  லைட்ஸ்  எல்லாம்  ஆஃப்  பண்ணிடுவான்னு  முன்  கூட்டியே  யூகித்து டார்ச்  லைட்  , செயின் ,  எல்லாம்  பக்காவா  ரெடி  பண்ணிக்கொண்டு  வருவது  எப்படி ? 


2  நாயகியை  சந்திக்க  குறிப்பிட்ட  இடத்துக்கு  போவதாக  இருந்த  நாயகன்  திடீர்  என  திட்டத்தை  மாற்றி  லொக்கேஷனை  மாற்றுகிறான், அந்த  விபாத்தை  மீதி  இரண்டு  சக  நாயகர்களிடம்  ஏன்  சொல்லவில்லை ? ஒரே  சாயலில்  மூவர்  அங்கே  வந்தால்  குழப்ப,ம்  வரும்  என  தெரியாதா?


3  நாயகி,   வீட்டில்  இருப்பவர்கள் யாரும்   டி வி  நியூஸ்  பார்த்து  நாயகனைப்போலவே  உருவ  ஒற்றுமையில்  ஒரு  தீவிரவாதி  இருக்கிறான்  என்பதை அறிய  மாட்டார்களா? 


4  ஹாஸ்பிடலில்  ஆக்சிசன்  மாஸ்க்  உடன்  இருக்கும்   நாயகன்  திடீர்  என  எதுவும்  இல்லாமல்   பாத்ரூமில்  ரகசியமாக  ஃபோன்  பேசுவது  எப்படி ?


5   பொதுவா  வில்லன்  கனவு  காணும்போது  நாயகியை  ரேப்  பண்ற  மாதிரி  தானே  கனவு  காண  வேண்டும்? அவன்  என்னடான்னா  நாயகி  கூட  டூயட்  பாடற  மாதிரி  கனவு  காண்கிறான் .வில்லனின்  கேரக்டர்  டிசைனுக்கு  சுத்தமாக  இந்த  ட்ரீம்  சாங்  செட்  ஆகவே  இல்லை , அதை  ரேப்  சாங்  ராப்  சாங்காக  மாற்றி  இருக்கலாம் 


6   நாயகியை  ஹைதராபாத்  அனுப்பிட்டேன்  என  நாயகன்  ஏன்  வாலண்ட்ரியாக  சொல்கிறான்? அதை  ரகசியமாக  வைத்திருக்கலாமே?


7  நாயகனின்  அப்பா  சில  ரகசிய  வேலைகள்  செய்ய  வேண்டி  இருக்கிறது ,  செல்  ஃபோனில்  மெசேஜ்  அனுப்ப  வேண்டி  இருக்கிறது , அவர்  ஏன்  வில்லனுடன்  அருகில்  கார்  முன்  சீட்டில்  அமரனும் ?> பின்  சீட்டில்  அமர்ந்தால்  ஈசியாக  அதை  செய்திருக்கலாமே? பயந்து  பயந்து  செய்து  ஏன்  மாட்டிக்கொள்ள  வேண்டும் ? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  இது  ஏ  படம்  தான், ஆனால்  18+  காட்சிகள்  ஏதும்  இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கமர்ஷியல்  மசாலாப்படத்தை கிண்டல்  பண்ணி  ஜாலியாக  ரசிப்பவர்கள்  பார்க்கலாம் . ரேட்டிங்  2. 5 / 5 


Amigos
Amigos Telugu film poster.jpg
Theatrical release poster
Directed byRajendra Reddy
Written byRajendra Reddy
Produced byY. Ravi Shankar
Naveen Yerneni
StarringNandamuri Kalyan Ram
Ashika Ranganath
CinematographySoundararajan
Edited byTammiraju
Music byGhibran
Production
company
Release date
  • 10 February 2023
Running time
137 minutes[1]
CountryIndia
LanguageTelugu
Box officeest. ₹11.70 crore[2]