Thursday, February 23, 2023

ஃபைவ் ஸ்டார் (2002) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா )@ராஜ் டிவி


 ஆனந்த  விகடன்  பத்திரிக்கையில்  பணியாற்றும்போதே  பிரமாதமான  ஆர்ட்டிக்கிள்ஸ்  எழுதி  மக்கள்  மனம்  கவர்ந்த  சுசி கணேசன்  இயக்குநர்  மணிரத்னம்  அவர்களிடம்  அசிஸ்டெண்ட்  டைரக்டராக  பம்பாய் , இருவர் , உயிரே ( தில் ஸே )  ஆகிய  படங்களில் பணியாற்றினார். இவரது  முதல்  படமே  ஃபைவ்  ஸ்டார் தான் . இது  தமிழக  அரசின் சிறந்த  திரைக்கதைக்கான  விருது  பெற்றது .. சினேகா  அறிமுகம்  ஆன  விரும்புகிறேன் 2004 ஆம்  ஆண்டில்  தமிழக  அரசின்  சிறந்த  இயக்குநருக்கான  விருதை  பெற்றுத்தந்தது . 2003 ம்  ஆண்டில்  ரிலீஸ்  ஆன திருட்டுப்பயலே  தமிழக அரசின்  சிறந்த  படத்துக்கான  விருதைப்பெற்றதோடு  கமர்ஷியலாகவும்  சூப்பர்  டூப்பர்  ஹிட்  படமாக  அமைந்தது  . மிகப்பெரும்  எதிர்பார்ப்புடன்  ரிலீஸ்  ஆன  கந்தசாமி  அட்டர் ஃபிளாப்  படமாக  அமைந்ததால்  அதற்குப்பின்  இவருக்கு  எல்லாமே  சறுக்கல்  படங்களாக  அமைந்தன


ஸ்பாய்லர்  அலெர்ட்


காலேஜ்  நண்பர்கள்  ஐந்து  பேர், அதில்  மூன்று  ஆண்கள், இரு  பெண்கள் . இந்த   ஒன்லைனைக்கேட்டதும்  உங்கள்  கற்பனையில்  எழும்  கதையே  இதில்  இல்லை 


  ஐந்து  பேரும்  ஒரே  கம்பெனியில்  ஒன்றாக  வேலை  செய்ய  ஆசைப்படுகிறார்கள் . அதற்காக  சில வேலை  வாய்ப்பையும்  இழக்கிறார்கள் . அவர்கள்  ஆசைபப்படி  ஒரே  கம்பெனியில்  வேலை  கிடைக்கும்போது  அந்த  ஐவரில்  ஒருவனுக்கு  மட்டும்  கம்பெனியின்  மும்பை  பிராஞ்ச்சில்  போஸ்ட்  கேட்க  சென்னை  பிராஞ்ச்சில்  போஸ்ட்  கிடைத்த  மற்ற  நான்கு  பேரும் திடுக்கிடுகிறார்கள் 


 கிராமத்தில்  அப்பாவின்  வற்புறுத்தலால்  ஒரு  கிரமாத்துப்பெண்னை  திருமணம்  முடித்த  கையோடு  அவளை  அங்கேயே  விட்டு  விட்டு  இங்கே  வந்திருக்கும்  நண்பன்  அந்த  அவமானத்தை  மறைக்கத்தான்  இவர்களோடு  பணி  புரிய  ஆசைப்படவில்லை  என  தெரிகிறது


அந்த  ஐந்து  பேரில்  மற்ற   இரு  பெண்களுக்கும்  ஒரு  ஆணுக்கும்  வெவ்வேறு  இடத்தில்  திருமணம்  முடிகிறது


  சம்பவம்  நடந்து  இரு  வருடங்கள்  கழித்து நாயகன்  ரயிலில்  ஒரு  பெண்ணைப்பார்த்து  காதல்  கொள்கிறான். நாயகி  பணி புரியும்  இடத்திற்கு  அடிக்கடி  வந்து  பழக்கம்  வைத்துக்கொள்கிறான். நாயகியின்  வீட்டுக்கு  தன்  நண்பர்களுடன்  வந்து  பிரப்போஸ்  பண்ண  நினைக்கும்  தருணத்தில்  தான்  நாயகி  தங்கள்  ஓடிப்போன  நண்பனின்  மனைவி  என  தெரிகிறது


 அதிர்ச்சி  அடைந்த  அனைவரும்  ஓடிப்போன  நண்பனைக்கண்டு பிடித்து  நாயகியிடன்  சேர்த்து  வைக்க  முடிவெடுக்கிறார்கள் 


ஓடிப்போன  நண்பனை  வில்லன்  என  வைத்துக்கொள்வோம்,  நாயகி  மீது  ஆசைப்படும்   நண்பனை  நாயகன்  என  வைத்துக்கொள்வோம், இப்போது   நாயகன், நாயகி ,  வில்லன்  என  முக்கோண  சிக்கல்  கதை  தான்  மீதி  திரைக்கதை


நாயகனாக  பிரசன்னா  அருமையான  நடிப்பு . நாயகி  தன் நண்பனின்  மனைவி  என  தெரிந்து  அதிர்ச்சி  காட்டும்  இடம்  கச்சிதம் . ரயிலில்  பாடும்  காட்சியில் இவரது  நடன  அசைவுகள்  நளினம்

ஹாலிவுட்டின்  சிறந்த  உதட்டழகி  என  அஃபிஷியலாக  அறிவிக்கப்பட்ட  ஏஞ்சலீனா  ஜூலியின்  தங்கையோ  என  வியக்க  வைக்கும்  கோலிவுட்டின்  உதட்டழகி  கனிகாவின்  லிப்ஸ்  க்ளோசப்  ஷாட்ஸ்  கலக்கல்  ரகம், ஒளிப்பதிவாளர்  ரசனையோ ரசனை .  ரயிலில் நாயகனுடன்  காம்போ  காட்சிகள் , ஷாப்பிங்  காம்ப்ளெக்சில்  மேனேஜராகக்காட்டும்  கம்பீரம் , கிராமத்தில்  வாளுடன் கிராமத்தில்  காட்டும்  க்ளைமாக்ஸ்  வீரம்  என  படம்  முழுக்க  நாயகிக்கு  ஸ்கோப்  உள்ள  கதை ,  கனிகா  உணர்ந்து  நடித்திருக்கிறார்


வில்லனாக  கிருஷ்ணா  கனகச்சிதம், க்ளைமாக்சில்  அவரது  மாறுபட்ட  கெட்டப்   அடடே  போட  வைக்கிறது 


மற்ற    நண்பர்களாக  சந்தியா  பிரகாஷ் , மங்கை ,  கார்த்திக்  மூவரும்  ஓக்கே  ரகம்

 வில்லனின்  அப்பாவாக  உதிரிப்பூக்கள்விஜயன்  அருமையான  நடிப்பு, இவர்  குணச்சித்திரம் , வில்லத்தனம் , நாயகன்  என  எந்த  கேரக்டர்  கிடைத்தாலும்  அதில்  முத்திரை  பதிப்பவர் 


டிடிஆர்  ஆக  சிட்டி  பாபு  ஒரே  ஒரு  சீனில்  காமெடிக்கு /


ஸ்ரீராம்  பரசுராம், அனுராதா  ஸ்ரீராம்   இருவரும் தான்  இசை   எல்லாப்பாடல்களும்  செம  ஹிட்  , மணி  ரத்னம்  படம்  பார்ப்பது  போல்  இருக்கிறது  பிஜிஎம்  கச்சிதம் 


ரவிவர்மனின்  அற்புதமான  ஒளிப்பதிவில்  காட்சிகள் கலர் ஃபுல் 

வெளிநாட்டுக்காட்சிகள்  கண்ணுக்குக்குளுமை 


ஸ்ரீகர்  பிரசாத்தின்  எடிட்டிங்கில்   கடைசி  30  நிமிடங்கள்  தவிர்த்து  அனைத்தும்  கச்சிதம் இரண்டரை  மணி  நேரம்  படம்  ஓடுது , 




சபாஷ்  டைரக்டர்


1  தன்  விருப்பத்துக்கு  மாறாக  கிராமத்துப்பெண்ணை  அப்பாவின்  வற்புறுத்தலால்  திருமணம்  செய்யும்  நபர்  மண  மேடையில்  பெண்ணைப்பார்க்கும்போது  அங்கே  கல்யாணக்கோலத்தில்  கண்டிஷன்  ஆன  அப்பா  உட்கார்ந்திருப்பது  போல்  கற்பனை  செய்வது 


2   படம்  ஆரம்பித்த  முதல்  20  நிமிடங்களிலேயே  அடுத்தடுத்து  3 கொண்டாட்ட  பாடல்களுடன்  மணிரத்னம்  பாணியில்  ஜாலி வாலி பட்டாசு 


3  பிரசன்ன  கனிகாவை  ரயிலில்  பார்த்த  நிமிடமே  விருப்பப்பட்டு பின்  பழகிய  பின்  அவரை  நினைத்து  துள்ளாட்டத்துடன்  பாடும்  மெகா ஹிட்  மெலோடி  சாங்க்,,, அந்தக்காட்சியில்  கனிகாவுக்கான க்ளோசப்  ஷாட்கள் , பிரசன்னாவின்  நடிப்பு 


4   நாயகன்    ஒருதலையாய்  காதலித்த  பெண்  நண்பனின்  மனைவி  என்று  அறிந்ததும்  தான்  கொண்டு  வந்த  மியூசிக்  கிஃப்டை  தராமல்  மறைத்து  வைக்க  முற்படும்போது   அது  எதேச்சையாக  கீழே  விழுந்து  ”    ஈஸ்வரி  உன்னைக்கல்யாணம்  பண்ணிக்க  ஆசைப்படறேன்”  என  ஓப்பன்  ஆகி  பாட்டு  வரி  வரும்போது  நாயகியும் , அவள்  குடும்பத்தாரும்  அதிர்ச்சி  ஆவது , நண்பர்கள்  முகம் சுருங்கிப்போவது 


5  நாயகி  கிஃப்டாகத்தந்த  பேண்ட்  சர்ட்டை  ஹேங்கருடன்   அந்தரத்தில்  தொங்க  விட   கற்பனையில்  அந்த  டிரஸுக்குள்  இருந்து  நாயகி  சோளக்கொல்லை  பொம்மை  போல  முளைத்து  வந்து  டான்ஸ்  ஆடும்  காட்சி 


6  நிச்சயக்கப்பட்ட  திருமணங்களில்  இரு  தரப்பு  சம்மதமும்  பெற வேண்டும், அப்படி செய்யாமல்  நடக்கும்  திருமணங்கள்  ஆபத்தே  என்ற  கதைக்கருவை  கமர்ஷியலாக  சொன்ன விதம்  அருமை 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  சண்டே...   (  ஓப்பனிங்  சாங்  கொண்டாட்ட  பாடல் )


2   எங்களுக்கு  (  ஃபிரண்ட்ஸ்  எஞ்சாய்  மொமெண்ட்  சாங்)


3  ஃபைவ்  ஸ்டார்  ஃபைவ்  ஸ்டார்  ஹொரே  ஹுர்ரே  ( நண்பர்கள்  வேலை  கிடைத்த சந்தோஷப்பாடல் )


4 ரயிலே  ரயிலே  ஒரு  நிமிஷம்   (  ஹீரோ  ஹீரோயினை  நினைத்துப்பாடும்  மெலோடி)


5   ஈஸ்வரி  உன்னைக்கல்யாணம்  பண்ணிக்க  ஆசைப்படறேன், திரு  திருடா   திரு  திரு திருடா  தீஞ்சுவை  தானடா   (  லவ் ப்ரப்போஸ்  ட்ரீம்  சாங் ) 



6  எங்களுக்கு  நல்ல  காலம்  இது   ( இன்ஸ்ட்ரூமெண்ட்டல்  ம்யூசிக் சாங்)


7  எங்கிருந்து  வந்தாயடா  எனை  பாடுபடுத்த  எனைத்தேடி  எடுக்க 



  ரசித்த  வசனங்கள் 


1  ஆணும்  பெண்ணும்    சேர்ந்து  பழகுனா  அது  காதலாதான்  இருக்கனும்னு  அவசியம்  இல்லை 


2   இங்கே  பீச்சுக்கு  வர்றவங்க  பலர்  நண்பர்களா  வந்து  காதலர்களா  மாறிடறாங்க , அல்லது  காதலர்களா  வந்து  நண்பர்களா  பிரிஞ்சுடறாங்க 


3   சமையல்காரான்னா  அவ்ளோ  கேவலமா?  எல்லா  ஹோட்டல்களிலும்  ஆண்  தான்  சமையல், ஒரு ஹோட்டல்லயாவது  பொம்பளை  சமைச்சுப்பார்த்திருக்கீங்களா?


4  இத்தனை  பேரு  என்னைக்காதலிச்சப்ப  என்  கணவர்  உங்களுக்கு  மட்டும்  ஏன்  என்னைப்பிடிக்காம  போச்சு ? அப்டினு  கேட்கப்போறேன்


5  தொலைஞ்சு  போனவனைக்கண்டு பிடிக்கலாம், ஆனா  மறைஞ்சு  நிக்கறவனை  எப்படிக்கண்டுபிடிக்க ?

6  தொலைஞ்சு  போன  புருசனைக்கண்டு  பிடிக்கப்போறோம்கற  சந்தோஷத்தை விட  ஜாலியா  ஃபாரீன்  டூர்  சுத்திப்பார்க்கலாம்கற  சந்தோஷம்  தான்  அதிகம், இல்லையா?


சரி , நான்  வர்ல


7  அப்பன்  மகனுக்கு  செஞ்சதை  , அண்ணன்    தங்கைக்கு  செஞ்சதை  சொல்லிக்காட்டக்கூடாது 


8  கோபம்  வந்தா   கொட்டித்தீர்ப்பதுதான்  கிராமத்து  அப்பாக்களின்  பழக்கம் 


9  உலகத்துல  சந்தேகப்படாத  புருசன்  கிடைச்சுட்டா  அதை  விட  சந்தோஷம்    பெண்ணுக்கு  வேற  இல்லை 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  தனக்கு  கிராமத்துக்குப்போக  விருப்பம்  இல்லை  என்று  கூறும்  நண்பனை  வலுக்கட்டாயமாக  ரயில்  ஏற்றி  அனுப்பும்  நண்பர்கள்  அவன்  பாதி  வழியில்  இறங்கி  ரூட்  மாற  வாய்ப்புண்டு  என்பதை  ஏன்  மறந்தார்கள்:?  யாராவது ஒருவர்  அவர்  கூட போய்  விட்டு  வந்திருக்கலாமே? கதைப்படி  அவர்  பாதி  வழிலயே  இறங்கிடறார்

2  நாயகி  தான்  அந்த  ஷாப்பிங்  காம்ப்ளெக்ஸ்  மேனேஜர்  , அவரது  ஃபோட்டோ  வை  டெவலப்  பண்ண  ஹீரோ  அவரது  ஃபோட்டோஷாப்பிலேயே  கொடுக்கிறார். அதை  டெவலப்  பண்ணி  பிரிண்ட்  போட்ட  ஆள்  மேனேஜரிடம்  அதை  தெரிவிக்க  மாட்டாரா? அட்லீஸ்ட்  இது  மேனேஜர்  ஃபோட்டோ  ஆச்சே? என  வியக்க  மாட்டாரா? 


3   விஜயன்  தற்கொலை  செய்ய  முயற்சிக்கும்  காட்சி  உதிரிப்பூக்கள்  க்ளைமாக்ஸ்  காட்சியை  நினைவுபடுத்துகிறது. அதைத்தவிர்த்திருக்கலாம்.அந்த  தற்கொலையால்  மகன்  ஃபாரீனில்  இருந்து  சாவு  சடங்குக்கு  திரும்பி  வருவதாகக்காட்டி  இருந்தால்  கூட  ஏதாவது  பிரயோஜனமாக  இருந்திருக்கும், அதுவும்  இல்லை  என்பதால்  அந்தக்காட்சி  தண்டம்தான்’


4   படத்தின்   கடைசி  அரை  மணி  நேரம்  தேடுதல்  வேட்டை  என்பதால்  கொஞ்சம்  போர்  அடிக்கிறது, இதே போல்  திரைக்கதை  அம்சம்  கொண்ட  ஆறு  மெழுகுவர்த்திகள் ,  உட்பட  பல  படங்கள்  அந்த  ஸ்லோனெஸ்  காட்சிகள்  கொண்ட  படங்கள்  தான் 


5  நாயகியின்  கணவன்  கடைசி  வரை  தன்  தவறை  உணர்ந்ததாகவே  தெரியவில்லை . அவனுக்கு  ஒரு படிப்பினைக்காட்சி  வைத்திருக்கலாம் 


6  படம்  முழுக்க  தன்  கணவனைக்காண  ஆவலாக  இருந்த  நாயகி   கணவனின்  யோக்யதை  தெரிந்ததும் இனி  நான்  எதுக்காக  அவனுக்காக அழனும் என  ஒரே  வசனத்தில்  பல்டி  அடிப்பது  கொஞ்சம்  செயற்கை  தட்டும்  காட்சியாக  இருந்தது


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  க்ளீன்  ய்யூ சர்ர்டிஃபிகேட்  ஃபிலிம்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ரொமாண்ஸ் பட  ரசிகர்கள் , மணிரத்னம்  ரசிகர்கள் , கனிகா  ரசிகர்கள்  பார்க்கலாம், ஜாலியான  டைம்  பாஸ் லவ்  மூவி  , ரேட்டிங்  3.25 / 5 

நீ நான் நிழல் (2014) - தமிழ் - ASHA BLACK(2014) - (மலையாளம்) சினிமா விமர்சனம் ( சைபர் க்ரைம் த்ரில்லர் ) @ ஜெ மூவிஸ்


  2014 ஆம் ஆண்டு  மலையாளம், தமிழ்  ஆகிய  இரு  மொழிகளில் ஒரே  சமயத்தில்  எடுக்கப்பட்டஇந்தப்படம் இண்டர்நெட்  வசதி  பெருகிய  பின் நடக்கும்  ஆன் லைன்  சேட்டிங் , அதனால்  ஏற்படும்  குற்றங்கள்  பற்றி  பேசுகிறது


ஸ்பாய்லர்  அலெர்ட்


சம்பவம் 1 


நாயகன் ஒரு  போலீஸ்  ஆஃபீசர். நகரில்  அடுத்தடுத்து  ஐந்து  ஆண்கள்  கொலை  செய்யப்படுகிறார்கள் . பொது  வாழ்க்கையில்  அந்த  ஐந்து  பேருக்கும்  எந்த  விதமான  தொடர்பும்  இல்லை , அதனால்  பர்சனல்  வாழ்க்கையை அலசி  ஆராய்ந்ததில்  அவர்கள்  ஐந்து  பேரின்  ஃபேஸ்  புக்  அக்கவுண்ட்டிலும்  பொது  நண்பர்  ஒருவர்  இருக்கிறார்..அவரைப்பற்றி  விசாரணை  நடக்கின்றது


சம்பவம்  2 


நாயகி 17  வயது  நிரம்பிய  அழகி . அவள் தன் 12  வயது  முதல்  ஆன்  லைனில்  பலருடன்  சேட்டிங்கில்  இருக்கிறாள், அது  அவளுக்கு  ஒரு  டைம்  பாஸ்.அவளது  பெற்றோர்  அவளுக்கு  சரியான  அன்பு, பாசம், கவனிப்பு, நேரம்  எதையும்  ஒதுக்கவில்லை ,அதனால்  இப்படி  ஆகிறாள் ,மலேசியாவைச்சேர்ந்த  நாயகி  இந்தியாவில்  கோவையில்  ஒரு இளைஞனுடன்  சேட்டிங்  செய்கிறாள் , ஆரம்பத்தில்  சாதா  சேட்டிங்கில்  ஆரம்பித்த  அவர்கள்  நட்பு  பிறகு  ஆன்  லைன்  வீடியோ  கால்  நட்பாக  வளர்ந்து   நேரில்  சந்திக்க  முடிவெடுக்கும்  அளவுக்கு  நட்பு  இறுகுகிறது


இந்தியாவில்  இருந்து  மலேசியாவுக்கு  வந்த  அந்த  இளைஞன் குறிப்பிட்ட  இடத்தில்  காத்திருக்க  நாயகி  வரவில்லை . பிறகு  அலைந்து  திரிந்து  அவள்  வீட்டைக்கண்டு  பிடித்துப்போனால்  அங்கே  அவள்  தற்கொலை  செய்து  இறந்திருக்கிறாள் 


 மேலே  கூறிய  இரண்டு  சம்பவங்களும்  எந்தப்புள்ளியில்  இணைகிறது  என்பதுதான்  திரைக்கதை 


  போலீஸ்  ஆஃபீசராக  சரத்குமார்  கம்பீர  நடிப்பு , ஆனால்  அந்த  ஒட்டுத்தாடியை  தவிர்த்திருக்கலாம், அவர்  கூடவே  இருக்கும்  இரு  ஆஃபீசர்கள்  சும்மா  வந்துட்டுப்போறாங்க 


 நாயகியாக   இஷிதா  கண்களைக்கொள்ளை  கொள்ளும்  அழகு. 17  வயதுப்பெண்ணாக  கச்சிதமாக  வந்து  போகிறார்


 அவரது  காதலனாக அர்ஜூன்  லால்  நிறைவான  நடிப்பு , வசதி மிக்க  நபரான  அவர்  கொஞ்சம்  கொஞ்சமாக  ஆன்  லைன்  சேட்டிங்க்கு  அடிமை  ஆவது கச்சிதமாக  காட்டப்படுகிறது. நடிப்பும்  கனகச்சிதம் 


டாக்சி  டிரைவராக மனோஜ்  கே  ஜெயன் , நாயகியின்  தந்தை  ஆக  ராஜன்  பி  தேவ், காதலனின்  அம்மாவாக  ஃபாத்திமா  பாபு  அனைவரும்  கொடுத்த  கேரக்டரை  கச்சிதமாக  உள் வாங்கி  நடித்திருக்கிறார்கள் 


நிகில்  வேணுவின்  எடிட்டிங்கில்  கச்சிதமாக  2  மணி  நேரத்தில்  படத்தை  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்


 கதை  திரைக்கதை  வசனம்  எழுதி  இயக்கி இருப்பவர்  ஜான்  ராபின்சன்


 க்ரைம்  த்ரில்லர்    மாதிரி  ஆரம்பித்து  ஃபிளாஸ்பேக்கில்  ரொமாண்டிக்  ஸ்டோரி  ஆக  டோன்  ஆப்  ஆகும்  கதை  மீண்டும்  த்ரில்லர்  ஜோனுக்குள்  வரும்போது  ஆடியன்சுக்கு  சரியாக  கனெக்ட்  ஆகவில்லை 


இதை  ரொமாண்டிக்  த்ரில்லராக  எடுக்கலாமா? க்ரைம்  த்ரில்லராக  எடுக்கலாமா? என  இயக்குநர்  கொஞ்சம்  குழம்பி  இருக்கிறார் என்பது  தெரிகிறது 


 ஜெசின்   ஜார்ஜ்ஜின்  இசையில்  பாடல்கள் சுமார்  ரகம், பிஜிஎம்  அதை  விட  சுமார்  ரகம் . ஒளிப்பதிவு  குட் 


சபாஷ்  டைரக்டர்

1  நாயகியின்  ஃபேஸ் புக்  ஐடியின் பாஸ்வோர்டை  அவளது  காதலன்  கண்டுபிடிக்கப்பயன்படுத்தும்  யுக்தி  குட் 


2  நாயகியின்  ஃபிளாஸ்பேக் கதையை  கார்ட்டூன்  வடிவில்  கவிதை  போல  தந்த  விதம் , வெரிகுட்  பிரசண்ட்டேஷன்


3   இந்தக்கால  இளைஞர்கள்  மனம்  கவர்ந்த  விதத்தில்  ஆன்  லைன்  சேட்டிங்கை  படம்  ஆக்கிய  விதம்


4  மெயின்  கதையோடு  டாக்சி  டிரைவர்  மனைவி  கதை , போலீஸ்  ஆஃபீசரின்  13  வயது  மகள்  கதையை  சாமார்த்தியமாக  இணைத்தவிதம்


5   க்ளைமாக்ஸ்  காட்சி  சட்டத்துக்கு  உட்படாததாக  இருந்தாலும்  அப்ளாஸ்  அள்ளும்  காட்சி 

  ரசித்த  வசனங்கள் 


1  வீட்டு  வாடகை  எப்போதான்  தர்றதா  உத்தேசம் ? 


டோண்ட்  ஒர்ரி, காந்தி  ஜெயந்தி  அன்னைக்கு  தந்துடறேன்


 எப்படி ? அவனை  மிரட்டி  பணம்  தர  ஒத்துக்க  வெச்சுட்டேன் பார்த்தியா?


 ஆனா இப்போதைக்கு  நீங்க  அவன்  கிட்டே  இருந்து  பணம்  வசூலிக்கவே  முடியாது

ஏன்?


ஏன்னா இன்னைக்கு  தேதி அக்டோபர்  3 , இனி  இன்னும்  ஒரு  வருசம்  நீங்க  காத்திருக்கனும் 


2-டெய்லி  நேரில்  சந்தித்துப்பழகும்  பெண்களையே  இப்பவெல்லாம்  நம்ப  முடியறதில்லை , ஆனா  இண்ட்டெர்நெட்டில்  பழகிய  பெண்ணை  நம்ப  முடியுமா?


3   இசை , கலை  இரண்டிலும் அதிர்ஷ்டம்தான்  துணை  நிற்கனும், எப்போ  ஜெயிப்போம்னு  சொல்ல  முடியாது



4   டேய்.. உன்  ஆளை  அடுத்த  சேட்டிங்ல  ஆறு  ஃபோட்டோஸ்  அப்லோடு  பண்ணச்சொல்லு 


எதுக்கு  ஆறு?


 ஒண்ணு  உனக்கு , மீதி  அஞ்சு  எங்க  அஞ்சு பேருக்கும்  தலா  1 


5




 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 



1  தற்கொலை  செய்த  பெண்ணின்  லேப்  டாப்பை  போலீஸ்  ஏன்  கைப்பற்றவில்லை ?  காதலியின்  லேப் டாப்  காதலன்  கைக்கு  எப்படி  வந்து  சேர்கிறது ?


2  காதலன்  ஃபேஸ்புக்  அக்கவுண்ட்டில்  நுழைய  முயற்சிக்கும்போது  பாஸ்வோர்டு  தெரியாமல்  குத்து  மதிப்பாக  ஒவ்வொன்றாக  போட்டு  வரும்போது குறிப்பிட்ட  முயற்சிக்கு  மேல் செல்  ஃபோன்  நெம்பர்க்கு  பாஸ்வோர்டு  ரி   செட்டப்  ஆப்சன்  வருமே?  அப்படி  வராதது  ஏன் ?


3  சீரியசான  கதையில் எம் எஸ்  பாஸ்கரின்  மொக்கை  காமெடி  டிராக்  எரிச்சல் .




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- கதைக்களம்  எசகு பிசகானது  என்றாலும்   காட்சிகள்  கண்ணியம், வாய்ப்பிருந்தும்  கிளாமர்  காட்சிகளை  இயக்குநர்  தவிர்த்திருக்கிறார், குட்  



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஆன்  லைன்  சேட்டிங் , லவ்வர் , மர்டர்  என  கதை  செல்வதால்   2 கே  கிட்ஸ்க்கு  எண்ட்டர்டெயின்மெண்ட்  படமாகவும், நைண்ட்டீஸ்  கிட்ஸ்க்கு அவரவர்  மகள்களுக்கான  விழிப்புணர்வுப்படமாகவும்  எடுத்துக்கொள்ளலாம்.  பார்க்கத்தகுந்த  இந்தப்படம்  யூ  ட்யூப்பில்  கிடைக்கிறது , நான்  ஜெ  மூவிசில்  பார்த்தேன் , ரேட்டிங் 2.25 /5 







Asha Black / Nee Naan Nizhal
Asha Black.jpg
Malayalam poster
Directed byJohn Robinson
Written byJohn Robinson
Screenplay byJohn Robinson, Santhosh Laxman
Story byJohn Robinson
Produced byBindhu John Varghese
StarringIshitha Chauhan
Arjun Lal
R. Sarathkumar
Krishnabhaskar Mangalasserri
CinematographyAlby
Edited byNikil Venu
Music byJecin George
Production
company
Nimita Productions
Release date
  • 10 October 2014
CountryIndia
LanguagesMalayalam
Tamil

Tuesday, February 21, 2023

விடுதலை (1986) -தமிழ் - QURBANI (1980) ஹிந்தி - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா) @முரசு டி வி

 


வினோத் கண்ணா , ஜீனத் அமன், அம்ஜத்கான், ஃபெரோஸ்  கான்  காம்பினேஷனில்  ஹிந்தியில்  ஃபெரோஸ்கான்  இயக்கிய  குர்பாணி  என்ற  ஹிந்திப்படம் 1980ல்  ரிலீஸ்  ஆகி  மியூசிக்கல்  ஹிட்  ஆனது,டைட்டிலுக்கு  அர்த்தம் தியாகம்.  அதை  தமிழில்  ரீமேக்கும்போது  அந்தக்காலத்தில்  ஒரு  மல்ட்டி  ஸ்டாரர்  படமாக  தமிழ் , கன்னடம் ஆகிய  இரு  மொழிகளில்  ரிலீஸ்  பண்ண  தமிழக  சூப்பர்  ஸ்டார் rரஜினி  , கன்னட  சூப்பர்  ஸ்டார்  விஷ்ணு வர்தன் ,நடிகர் திலகம்  சிவாஜி  கணேசன்  காம்பினேஷனில்  மிகப்பெரும்  எதிர்பார்ப்பில்  ரிலீஸ்  ஆகி எதிர்பார்த்த  அளவு  மாபெரும்  ஹிட்  ஆகாமல்  மீடியம்  ஹிட்  ஆன  படம் 


ஆனால்  ஹிந்தியில்  இது  ஒன்றரைக்கோடி  பட்ஜெட்டில்  தயார்  ஆகி   12  கோடி  பாக்ஸ்  ஆஃபீசில்  வசூலைக்குவித்த  படம்.தமிழில் இதற்கு  ரிலீஸ்  டைமில்  பிரம்மாண்டமான  விளம்பரங்கள்  எல்லாம்  தந்தும்  ஏன்  படம்  மெகா  ஹிட்  அடிக்கவில்லை  என  தெரியவில்லை 

 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு  திருடன். கார்  திருடுவது ,  பூட்டிய  வீட்டை  சாவி  இல்லாமல் , பூட்டை  உடைக்காமல்  திருடுவது  ஆகியவற்றில்  எக்ஸ்பர்ட். இவனுக்கு  ஒரு  காதலி  உண்டு ., காதலி கிளப்ல  டான்ஸ்  ஆடுபவர். சில  திருட்டுக்கேசில்  நாயகன்  கைது  ஆகி  ஒன்றரை  வருடங்கள்  ஜெயில்  தண்டனை  பெற்று  உள்ளே  போகும்போதுதான்  காதலிக்கு  தன்  காதலன்  ஒரு  திருடன்  என்பதே  தெரியும் 


வில்லன்  ஒரு  பெரிய  கடத்தல்காரன், அவனிடம் பணி புரியும்  நாயகன்  நெ 2  ஒரு கட்டத்தில்  கடத்தல்  தொழிலை  விட்டு  விலக நினைக்கும்  அடியாளை  வில்லன்  போட்டுத்தள்ளுவதைப்பார்த்து  வில்லனுடனான  கூட்டணியை  முறித்துக்கொள்கிறான், நாயகன்  நெ  2  திருமணம்  ஆகி  மனைவியை  இழந்து  ஒரு மகளுக்கு  தந்தை . நாயகன்  நெ 2 , அவன்  குழந்தை  இருவரும்  நாயகியிடம்  நெருக்கமாகப்பழகுகிறார்கள் .நாயகன்   நெ2 விற்கு  நாயகியின்  காதல்  பற்றி  தெரியாது , ஒருதலையாய்  நாயகியைக்காதலிக்கிறான். நாயகிக்கு  நாயகன்  நெ 2 வின்  காதல்  பற்றி  தெரியாது 


 நாயகன்  ஜெயிலில்  இருந்து  தண்டனைக்காலம்  முடிந்து  ரிலீஸ்  ஆகிறான். நாயகனை  ஜெயிலில்  அடைத்த  போலீஸ்  ஆஃபீசர்  வேறு  வேலை  எதுவும்  இல்லாமல்  நாயகன்  பின்னாலேயே  சுற்றிக்கொண்டிருக்கிறார். அவன்  அடுத்து  பண்ணப்போகும்  திருட்டை  தடுக்கவாம்


  வில்லனுக்கு  நாயகன்  உதவி  தேவைப்படுகிறது 


 இதற்குப்பின்  நாயகன்  நெ1 , நாயகன்  நெ2 , நாயகி , போலீஸ்  ஆஃபீசர் . வில்லன்  ஆகியோர்  வாழ்க்கையில்  என்ன  நடந்தது ? என்பதுதான்  திரைக்கதை 


நாயகன்  நெ 1  ஆக   சூப்பர்  ஸ்டார்  ரஜினி , எனர்ஜெடிக்கான  பர்ஃபார்மென்ஸ் ,  சிகரெட்  தூக்கிப்போடுவது முதல்  அவரது  அக்மார்க்  ஸ்டைல்கள்  பல  இதில்  உண்டு 


நாயகன்  நெ 2  ஆக  கன்னட  சூப்பர் ஸ்டார்  விஷ்ணுவர்தன்.. அழகிய  முகம், மோகன் , சுரேஷ்  போல  லவ்  சப்ஜெக்ட்டில்  நடிக்க   ஏற்ற  முகம், ஆக்சன்  காட்சிகளிலும்  நல்லா  பண்ணி  இருக்கார் ‘


 நாயகி  மாதவி , படத்தின்  அனைத்துப்பாடல்களும்  இவருக்கே , 2  கிளப்  டான்ஸ் ,  2  டூயட் ,  ஒரு  மெலோடி  , ஒரு  டப்பாங்குத்து  என  பாடல்  காட்சிகளுக்கே  தனி சம்பளம்  தந்திருப்பாங்க  போல .  டூ பீஸ்  டிரஸ்  காட்சிகளும்  உண்டு 


தமிழ்  சினிமா  உலகில்   டூ பீஸ்  டிரசில்  அழகாக  வந்து  போன  நாயகிகளில்  மாதவி  முக்கியமான  நபர் 


நடிகர்  திலகம்  சிவாஜி  கணேசன்  போலீஸ்  ஆஃபீசராக  வருகிறார். போலீஸ்  யூனிஃபார்மில்  கம்பீரமாக  இருந்தாலும்   தொப்பையுடன்  அவர்  நாயகனுடன்  போடும்  ஃபைட்ஸ்  எல்லாம்  காமெடி 


ரஜினி - விஷ்ணுவர்தன்  இருவர்  இடையே  ஏற்படும்  நெருக்கமான  நட்பு  சரியாக  கனெக்ட்  ஆகவில்லை , ரொம்ப  செயற்கையாகத்தான்  அவர்களது  நட்பு  இருக்கிறது, உயிரைக்கொடுத்து  காப்பாற்றும்  அளவு  என்ன  இருக்கு  என  சொல்லப்படவில்லை 


ஒய்  ஜி  மகேந்திரன்  காமெடி  என்ற  பெயரில்  வழக்கம்  போல  லூஸ்தனமாக  என்னென்னமோ  செய்கிறார், எரிச்சல். 


சந்திரபோசின்   இசையில்  பாடல்கள்  எல்லாமே  சூப்பர்  ஹிட்.  தீம்  இசையாக  படம்  முழுக்க  வரும்  அந்த  இசையில்  மட்டும்  ஹிந்தி  வாசனை . பின்னணி  இசை  படம்  முழுக்க   பிரயாணம்  செய்திருக்கிறது 


டி வாசுவின்  எடிட்டிங்கில்  141  நிமிடங்கள் தான்  ஓடுது , ஆனால்  படம்  ரொம்ப  நேரம்  ஓடுவது  போல  தோன்றுகிறது  


திவாரி  , சுரேஷ்  சந்திரமேனன்  ஆகியோரின்  ஒளிப்பதிவில்  காட்சிகள்  பிரமாண்டமாக  கண்  முன்  விரிகின்றன 



சபாஷ்  டைரக்டர்


1   இரு நாயகர்கள்  , ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  மூவருக்கும் சரி  சமமாக  காட்சிகள்  இருக்க  வேண்டும் என  வரிந்து  கட்டிக்கொண்டு  திரைக்கதை  எழுதி  இருப்பது  நன்றாகத்தெரிகிறது 



செம  ஹிட்  சாங்க்ஸ்


1  ராகம்  நானே  தான்  (  ஹீரோயின்  ஓப்பனிங் சாங் கிளப்  டான்ஸ் 1 )

2   நீலக்குயில்கள்  இரண்டு   பாடித்திரியும்  இன்று  ( ஹீரோ நெ 2  ட்ரீம்  டூயட்  சாங்- செம  ஹிட்  மெலோடி )

3  ராஜாவே  ராஜா  நான்  தானே  ராதா  (  ஹீரோயின்  கிளப்  டான்ஸ் 2)

4  தங்கமணி  ரங்கமணி  வாம்மா  நீ  வெள்ளிமணி  வைரமணி  பூமேனி  ) நாயகன்  நாயகி  முதல்  டூயட் ) 

5  நாட்டுக்குள்ளே  நம்மைப்பற்றிக்கேட்டுப்பாருங்க , அம்மம்மா  இவர்தான்  சூப்பர்  ஸ்டாருங்க 


  ரசித்த  வசனங்கள் 


1   ஏழைங்க  வயிற்றில்  அடிச்சே  ஆண்டவன்  ஏதோ  ஒரு  ரூபத்தில்  உங்களை  அழிச்சிடுவான்


2   ஏது  புது  கார்?


எனக்கு  புது  டிரஸ்  மாத்தற  மாதிரி  கார்   மாத்தற  ஆள் 


3   ஜூஜூ பி  , இதெல்லாம்  ஒரு  பூட்டா?


4  மேலே  இருந்து  கீழே  விழுந்துட்டேன்னு  பார்த்தீங்களா? எத்தனை ரவுண்ட்  ஆகும் உருண்டு  வரனு  செக்  பண்ணினேன்


5  இதுல  3  தோட்டா  இருக்கு , சாப்பிடறியா?


 எனக்கு  பசிக்கல, நீங்களே  சாப்பிடுங்க 


6  சிலருக்கு  எதிரிகளால்  ஆபத்து ,சிலருக்கு  நண்பர்களால்  ஆபத்து, 


7  ஒரு  பெண்ணோட  உண்மையான  அன்பை  விட  உயர்ந்தது  இந்த  உலகத்தில்  வேற  எதுவும்  இல்லை , அந்த  விஷயத்தில் நான்  கொடுத்து  வைக்காதவன் 


8   ரோடு முன்னால  இருக்கு 


 ஆனா  நீ  பின்னால  இருக்கியே? 





 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  கடலில்  குளித்து  விட்டுக்கரையில்  ஹீரோ  அருகில்  அமரும்  நாயகி  ரொம்பக்குளிருது  என்கிறார்,   ஏம்மா  மின்னல்  துண்டு  எடுத்து  துவட்டாம  ஈரத்தலை  ஈர  உடம்போட  இந்த  டயலாக்கை  ஏன்  சொல்றே? துவட்டலாமில்ல  என  கேட்கத்தோணுது 


2  சிவாஜி  கணேசன் நல்ல நடிகர் தான் , அவருக்கு  முக்கியத்துவம்  கொடுப்பதற்காக  சம்பந்தமே  இல்லாமல்  பல  காட்சிகளில் அவரை  உலா  வர  விட்டது  மேட்சே  ஆகலை .  குறிப்பாக  ராஜாவே  ராஜா  பாடல்  காட்சியில்  அவர்  டிரம்ஸ்  வாசிப்பவராக  மாறு  வேடம்  அணிந்து தேவை  இல்லாமல்  எதுக்கு  ஃபர்னிச்சரை  உடைக்கிறார்?


3  விஜயகுமாரும்  , விஷ்ணுவர்தனும்  ஒரு  சீனில்  மோதிக்கொள்வது  சம்பந்தமே  இல்லாத  சீன், அதுல  ஒரு  ஃபைட்  வேற . இரு  ஹீரோக்களுக்கும்  சமமான  அளவில்  காட்சிகள்  வைக்க  வேண்டும் தான், ஆனால்  அது  திரைக்கதைக்கு  சம்பந்தம்  உள்ளதாக  இருக்க வேண்டும், வலியத்திணித்து  இருக்கக்கூடாது 


4  பிந்து கோஷ்  காமெடி  காட்சிகள்  எல்லாமே  பாடி  ஷேமிங்  கேட்டகிரியில்  வருவதுதான் அந்தக்காலத்தில்  மாதர்  சங்கங்கள்  ஆக்டிவாக  இல்லாததால்  தப்பி  விட்டார்கள்  படக்குழுவினர் 


5  பேபி  ஷாலினி  துறுதுறுப்பான  சிறந்த  குழந்தை  நட்சத்திரம்தான்  , ஆனால்  பல  கட்டங்களில்  அதன்  ஓவர்  ஆக்டிங் , அதிகப்பிரசிங்கித்தனம்   இதை  எல்லாம்  சகித்துக்கொள்ள  வேண்டியதாக  இருக்கிறது , குறிப்பாக டூ பீஸ்  டிரஸ்ல  ஒய்யாரமாக  நடந்து  வருவதெல்லாம்  கொடுமை 


6  ரஜினி  ஜெயிலில்  இருந்து  ரிலீஸ்  ஆகி  வெளியே  வரும்போது  அவரை  சந்திக்க  வரும்  மாதவி  இனிமே  நீங்க  திருடக்கூடாது  என்றோ  அது  பற்றியோ  எதுவுமே  பேசவில்லை , இன்னொரு  சந்தர்ப்பத்தில்  சம்பந்தமே  இல்லாம  திருட்டுத்தொழிலை  விடனும்  என்கிறார்


7 நாயகி  சிறந்த  டான்சர், ஆனால்  கிளப்  டான்ஸ்  காட்சிகளில்  அவருக்கு  கிரவுண்ட்  எக்சசைஸ்  போல  ஸ்டெப்ஸ்  கொடுத்தது  கொடுமை  யார்  அந்த  கொரியோகிராஃபர்  என  கேட்கத்தோணுது


8  நாயகன்  நெ1  நாயகன் நெ2  நாயகி  மூவரும்  சந்திக்கும்  முதல்  காட்சியிலேயே  யாராவது முறையாக  அறிமுகம்  செய்திருக்கலாம், வாய்ப்பிருந்தும்  அது  நடக்கவில்லை 

9  விஜயகுமார், விஷ்ணுவர்தன்  இருவருக்கும்  நடக்கும்  முதல்  ஃபைட்டே  நம்பவே  முடியாத  காரணம்னு  சொன்னேன், ஆனா அந்த  சப்பைக்காரணத்துக்காக  அவரைக்கட்டி  வைத்து  ஆள்  வைத்து  அடித்து  கொலை  வரை  போவது  எல்லாம்  லாஜிக்கே  இல்லை 


10  விஷ்ணுவர்தன்க்கு  எப்போது  யாரால்  ஆபத்து  வந்தாலும்  ரஜினி  கச்சிதமாக  அங்கே  வருவதும்  காப்பாற்றுவதும்  நம்பவே  முடியாதது 

11  கவிழ்ந்து  கிடக்கும்  போலீஸ்  ஜீப்பை  நிமிர்த்தி  விட்டு  சிவாஜி  மாதவி  முன்  ஒரு  டான்ஸ்  மாதிரி    ஏதோ  பண்ணுவது  காமெடியா?  அவரது  இமேஜையே  கேலி பண்ணுவது  போல  இருக்கிறது 


12  அனுராதா  வில்லனை  ஷூட்  பண்ண  வரும்போது  வில்லன்  பார்த்துக்கிட்டே  நிக்கறான். இத்தனைக்கும்  ஒரு  பஞ்ச் டயலாக்  வேற  பாப்பா  சொல்லுது , என்  அண்ணனோட  திமிரை  நீ  பார்த்திருக்கே , உன்னோட  திமிரை  நான்  பார்த்திருக்கேன் என்னோட  திமிரை  நீ  பார்த்ததில்லையே , இப்போ  பாரு  இத்தனையும் பேசற  வரை  பே-னு பார்த்துட்டே  இருக்கான்


13   ரஜினி  தன்னைக்கொலை  கேசில்  மாட்ட  வைக்க  விஷ்ணுவர்தன்  பிளான்  போடுகிறார்  என சந்தேகிக்க  எந்த  வித  முகாந்திரமும் இல்லை , சும்மா  இருவருக்கும்  ஒரு  ஃபைட்  சீன்  வைக்க  வேண்டுமே  என  வலியப்புகுத்திய  காட்சி  ஒட்டவில்லை


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  மாதவி  டூ  பீஸ்  டிரசில்  ஸ்லோமோஷனில்  வரும் ஒரு  காட்சி  தவிர  வேறு  18+  காட்சிகள்  ஏதும் இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ரஜினி  ரசிகர்கள்  பார்க்கலாம்,  பொது  ரசிகர்கள்    சூப்பர்  ஹிட்  பாட்டுக்காக  பார்க்கலாம்  ரேட்டிங் 2.5 / 5 


Viduthalai
Viduthalai 1986 poster.jpg
Theatrical release poster
Directed byK. Vijayan
Written byAaroor Dass (dialogues)
Story byK. K. Shukla
Produced bySuresh Balaje
StarringSivaji Ganesan
Rajinikanth
Vishnuvardhan
CinematographyTiwari
Suresh Chandra Menon (second unit)
Edited byD. Vasu
Music byChandrabose
Production
company
Sujatha Cine Arts
Release date
  • 11 April 1986
Running time
141 minutes
CountryIndia
LanguageTamil

நான் ஏன் பிறந்தேன் (1972) -தமிழ் - BRATUKU TERUVU=1953 (தெலுங்கு ) சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா) @ முரசு டி வி


 அக்கினேனி  நாகேஸ்வரராவ்- சாவித்திரி  நடிப்பில் 1953ல்  ரிலீஸ்  ஆன  தெலுங்குப்படமான  BRATUKU TERUVU  ஆந்திராவில்  செம  ஹிட்  ஆனது. மூன்று  வருடங்கள் கழித்து அது  தமிழில் பலே ராமன்  என்ற  பெயரில்  டப்  செய்யப்பட்டு 1956ல்  ரிலீஸ்  ஆனது. பிறகு  அது ஹிந்தியில்  ஜீன்  கி  ராஹ்  என்ற  பெயரில்  ஹிந்தியில்  ரீமேக்  ஆகி  1969ல்  ரிலீஸ்  ஆனது. பிறகு  மூன்று  வருடங்கள்  கழித்து  தமிழில்  ரீ மேக்  ஆகி நான்  ஏன்  பிறந்தேன் என்ற  பெயரில்  ரிலீஸ்  ஆனது 


 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனுக்கு  திருமணம்  ஆகி  விட்டது , ஒரு  குழந்தை  இருக்கிறது. இவர்  படிக்கும்போதே  திருமணம்  செய்து  கொண்டார். படிப்பை  முடித்து  விட்டு  ஊருக்கு  வரும்போதுதான்  தன்  குடும்ப  உறுப்பினர்கள்   எல்லோரும்  வேலைக்குப்போய்  சிரமபடுவதை  அறிந்து  கொள்கிறார். இனி  வேலைக்குப்போய்  தன்  குடும்பத்தைக்காப்பாற்ற  வேண்டும், ஆனால்  வேலை  எங்கும்  காலி இல்லை   


நாயகனின்  அப்பாவுக்கு  இரண்டு  தாரங்கள் , அதனால்  அவரது  இரண்டாவது  தாரத்துக்குப்பிறந்த  குழந்தைகளையும்  இவர்தான்  பார்த்துக்கொள்ள  வேண்டும் 


படிப்பு  முடிந்ததும்  சென்னை  வந்து  வேலை  தேடும்போது  அவரது  ஊர்க்காரர்    சிபாரிசு  மூலம்  ஒரு  பக்கம்  வேலை  கிடைக்கிறது. ஆனால்  அங்கே  திருமணம்  ஆகாதவருக்குத்தான்  வேலை  என்ற  கண்டிஷன்  இருப்பதால்  நாயகன்  தனக்கு  திருமணம்  ஆனதை  மறைத்து  விடுகிறான்


ஓனருக்கு  ஒரு  மகள் , அம்மா  இறந்த  அதிர்ச்சி  தாளாமல்  மன   ரீதியாக  உடல்  ரீதியாக  பாதிப்பு  அடைந்த  நாயகி  நாயகனின்  வருகைக்குப்பின்  உற்சாகம்  அடைகிறாள்  ஒருதலையாக  நாயகனை  விரும்புகிறாள் 


 சென்னை  போன  நாயகனைத்தேடி  அவனது  மனைவி , குழந்தை , அம்மா  அனைவரும்  வந்து  விடுகின்றனர் ., நாயகன்  ஒரு  பக்கம்  தன்  குடும்பம் , இன்னொரு  பக்கம்  தன்  மீது  ஆசைப்படும்  ஓனரின்  மகளான  நாயகி  இருவரையும்  எப்படி  பேலன்ஸ்  செய்கிறார்  என்பது  மீதி  திரைக்கதை 


 நாயகனாக  எம் ஜி ஆர் . உற்சாகமான  தோற்றம் , கண்ணியமான  உடைகள்  என  படம்  பூராவும்  தன்னம்பிக்கை  ஊட்டும்  விதத்தில்  கச்சிதமாக  நடித்திருக்கிறார்.


நாயகியாக  காஞ்சனா . பணக்காரக்களை  கச்சிதம்


 மனைவியாக  கே  ஆர்  விஜயா  எளிமையின்  சிகரமாக  வந்து  பெண்களின்  உள்ளங்களைக்கவரும்  கேரக்டர் 


காமெடிக்கு  நாகேஷ் . ஓனராக  மேஜர்  சுந்தர் ராஜன்  வழக்கம்  போல 


வில்லனாக  நம்பியார், சைடு  வில்லனாக  தேங்காய்  சீனிவாசன் , அதிக  வாய்ப்பில்லை 


சபாஷ்  டைரக்டர்


1  பொதுவாக  ஆக்சன்  ஹீரோக்கள்  ஓப்பனிங்  சீனாக  ஃபைட்  சீன்  வைப்பதைத்தான்  விரும்புவார்கள் , எம் ஜி ஆர்  ஃபார்முலா  படி  ஓப்பனிங்  சீன்ல பெண்களுக்கு  , குழந்தைகளுக்கு  உதவுவது  போல  சீன்  வைத்து பில்டப்  வசனம்  கச்சிதமாக  பிளேஸ்  செய்த  விதம்


2பாடல் காட்சிகளைப்படமாக்கிய  விதம் , நாயகி ,  மனைவிக்கான  உடைகளில்  கண்ணியம், பெண்களைக்கவரும்  செண்ட்டிமெண்ட்  காட்சிகள்  எல்லாம்  கனகச்சிதமான  கதம்ப  மாலையாக  தொகுக்கப்பட்ட  திரைக்கதை 




செம  ஹிட்  சாங்க்ஸ்


1 நான்  ஏன்  பிறந்தேன்?நாட்டுக்கு  நலன்  என்ன  புரிந்தேன்? என  நாளும்  பொழுதும் வாழும்  வரையில் நினைத்திடு  என்  தோழா ( ஹீரோ  ஓப்பனிங்  சாங் ) 


2  தம்பிக்கு  ஒரு  பாட்டு , அன்புத்தங்கைக்கு  ஒரு  பாட்டு , வாழ்வில் நம்பிக்கை  வளர்வதற்கு  நான்  சொல்லும்  கதைப்பாட்டு  ( சந்தோஷ நிலையில் ஹீரோ  தத்துவப்பாட்டு ) 

3  நான்  பாடும்  பாடல்  நலம்  ஆக  வேண்டும் , இசை  வெள்ளம்  நதியாக  ஓடும், அதில்  இளநெஞ்சம்  படகாக  ஆகும் ( ஹீரோவின்  மைண்ட்  டைவர்ட்  சாங் ) 

4  என்னம்மா  சின்னப்பொண்ணு   (  நாயகியின் இமேஜினேஷனில்  நாயகனுடன்  டூயட் ) 0 எம் ஜி  ஆர்  ஃபார்முலா  படி ஒன்றுக்கு  மேற்பட்ட  ஜோடி  எனில்  அந்த  டூயட்  சாங்கை  கனவு  காண்பது  நாயகனாக  இருக்க  மாட்டார், நாயகிதான்  கனவு  காண்பார் ) 


5  தம்பிக்கு  ஒரு  பாட்டு , அன்புத்தங்கைக்கு  ஒரு  பாட்டு , வாழ்வில் நம்பிக்கை  வளர்வதற்கு  ( சோகப்பாட்டு , ரிப்பீட்டு ); 

6  எனது  விழியில்  உனது  பார்வை  உலகைக்காண்பது  (  மனைவியுடன்  டூயட்) 


7  தலைவாழை  இலை  போட்டு  விருந்து  வைத்தேன்  (  மனைவி  பக்திப்பாட்டு )


8  சித்திரைச்சோலைகளே  ( இது  எப்போ  வருதுனு  தெரில, கட்) 


  ரசித்த  வசனங்கள் 

1  கணவனோட  புகழுக்குப்பின்னால  மனைவியோட  அன்பு  இருக்கும்னு  ஒரு  ஆங்கிலக்கவிதைல  படிச்சிருக்கேன்

2  உங்க  குல  தெய்வம்  யாரு ?


 என்னைப்பெத்த  எங்க  அம்மா  தான் 


3  மனிதர்களுக்கு செல்வத்தைக்குடுத்த  கடவுள்  கூடவே  கவலையையும்  ஏன்  கொடுத்தான்?


 அப்பதான்  அவன்  கடவுளை   மறக்காம  நினைச்சுட்டு  இருப்பான் 


4  இவன்  நிச்சயம்  நம்ம  ரெண்டு  பேருக்கும்  வேட்டு  வைக்கப்போறான்

 என்ன  வேட்டு ?


 ம், டைனமேட்டு 


5   அவன்  ஒத்தை  ஆள்  தான், ஆனா  பத்துப்பேரை  அடிப்பான்  ஜாக்கிரதை 


6  மற்றவர்களைக்கெடுக்கற  வேலை  தவிர  வேற   எந்த  வேலையும்  யாரும்  செய்யலாம், 


7  ரொட்டில  தடவற  வெண்ணெயை  எப்படி  மீண்டும்  வழித்து  எடுக்க  முடியாதோ  அதே  மாதிரி  தான்  நான் உன்  மீது  வைத்திருக்கும் அன்பும், யாரும் அதை  திருப்பி  எடுக்க  முடியாது  ( டேய்  அசிஸ்டெண்ட்  டைரக்டர்ஸ்      நோட்  பண்ணுங்க டா  மொமெண்ட் ) 


8  விட்டுக்கொடுக்கும்  குணம்தான்  பெண்ணின்  பெருமை 


9 வல்லவன்  என  பேர்  எடுப்பதை  விட  எல்லாருக்கும்  நல்லவன்  என  பேர்  எடுக்கத்தான்  நான்  ஆசைப்படறேன்  (  சம்பந்தமில்லாத  டயலாக்_11111

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  படித்தவர். ஆனால்  தன்  வீட்டுப்பத்திரத்தை  அடமானமாக  வைத்து  கடன்  வாங்கும்போது  பொதுத்துறை  வங்கியில்  முயற்சி  செய்தால் குறைந்த  வட்டிக்குப்பணம்  கிடைத்திருக்குமே? ஏன்  தனியாரிடன்  அநியாய  வட்டிக்கு  வாங்குகிறார்? படிக்காத  ஆள்  அல்லது பத்திரத்தில்  ஏதாவது  வில்லங்கம்  இருந்தால்தான்   அப்படி  செய்வாங்க 


2  நாயகன்  நேர்மையானவர், ஆனால்   மணிஆர்டர்  அனுப்பாமல்  கவரில்  500  ரூபாய்  வைத்து  அனுப்புவது  ஏன் ? கவரில்  பணம்  வைத்து  அனுப்பக்கூடாதே?


3  நாயகனுக்கு  திருமணம்  ஆகி  மனைவி , குழந்தை  எல்லாம்   இருக்கிறது  என்பது  கே எஸ்  கோபால  கிருஷ்ணனுக்கு  தெரியும், ஆனால்  மேஜர்  சுந்தர் ராஜனிடம் வேலைக்காக  சிபாரிசு  பண்ணும்போது  மேரேஜ்  ஆன  தகவலை  ஏன்  சொல்லவில்லை ?  பிரம்மச்சாரியைத்தான்  வேலைக்கு  வைத்துக்கொள்வேன்  என  அவர்  தெளிவாக  இருக்கிறாரே?


4  நாயகனின்  குடும்பம்  மிகவும் வறுமையில்  இருக்கிறது.  வீடு  கடனில் இருக்கிறது , சாப்பாட்டுக்கே  கஷ்டம், ஆனால்  நாயகன்  உடுத்தும்  உடைகள்  எல்லாம்  கோடீஸ்வரன்  ரேஞ்சுக்கு  இருக்கே?  கோட்  சூட்  என  கலக்கலாக  இருக்கிறார்


5  நாயகன்  வீட்டுக்குப்பணம்  அனுப்புகிறான், அதை  போஸ்ட்  மேன்  வீட்டு  அட்ரசில்  டெலிவரி  செய்யாமல் ஆத்துல  துவைச்சுக்கிட்டு  இருக்கும்  நாகேஷிடம்  ஏன்  தருகிறார்? ஒரு  முறை  நாயகனின்  தங்கையிடம்  தருகிறார், ஆனால்  ஒரு  முறை  கூட  நாயகனின்  மனைவி  கையில்  தரவில்லையே? 


6  நாயகன்  கடிதம்  அனுப்பும்போது  அதில்  அனுப்புனர்  முகவரி  இருக்குமே? நாயகனின்  மனைவி  ஏன்  அவரது  தங்கை  பணம்  தராமல்  ஏமாற்றுவதை  தகவல்  தெரிவிக்கவில்லை ?



7 நாயகனைத்தேடி  பட்டணம்  வரும்  அவரது  குடும்பத்தார்  நாயகனிடம்  தாங்கள்  வரும்  தகவலை  ஏன்   தெரிவிக்காமல்  குத்து  மதிப்பாக  வருகிறார்கள் . பிராப்பர்  அட்ரஸ்  தெரியாமல்  யாராவது  அப்படி  வருவார்களா? 


8 மனைவிக்கு  படிப்பறிவு  இல்லை ,   நகரத்தில்  ஹோட்டலில்  இருக்கும்போது  டாய்லெட்டைக்காட்டி  அங்கே  போய்விட்டு  வருவதாக  கூறும்போது  அவளுக்குப்புரியவில்லை, உடனே  நாயகன்  அவள்  காதில்  ரகசியமாகக்கிசுகிசுக்க  அவள்  ஏதோ  ஜோக்  கேட்டது  போல  வெட்கப்பட்டு  சிரிக்கிறாள் , பாத்ரூம்  போய்ட்டு  வர்றேன்னு  சொல்றதுல  என்ன  தயக்கம் > அதுல  என்ன  காமெடி ?   


9  தனக்கு  மேரேஜ்  ஆனதை  மறைத்துத்தான்  நாயகன்  வேலையில்  இருக்கிறார். அப்படி  இருக்கும்போது  நகரத்துக்கு  வந்த  அமனைவியை  நாலு  பேர்  பார்க்கும்படி  ஹோட்டலுக்கு  அழைத்துச்சென்று  அங்கே  நடக்கும்  தகறாறில்  ஃபைட்  எல்லாம்  போடுகிறார். இது  அபாயம்  என  அறியாதவரா? 

10  நாயகனின்  மனைவி  நகரத்துக்குக்கிளம்பியது  ஓக்கே , ஆனால்  அவரது  தங்கையும் , கணவரும்  ஏன்  நகரத்துக்கு  வர்றாங்க > அப்போ நாயகன்  அனுப்பப்போகும்  பணத்தை  ரிசீவ்  பண்ண  அங்கே  ஆள்  இருக்க  மாட்டாங்களே? எதுக்காக  அவங்க  அங்கே  வரனும் ? காமெடி  டிராக்  கண்ட்டிநியூ  ஆகவா?

11  நாகேஷ்  அண்ட்  கோ  பீச்சில்  வடை  சுட்டு  விற்கும்போது  ஒரு  டயலாக்  வருது. நாலு வடையாவது  விற்றாதான்  அடுத்த  வேளைக்கஞ்சிக்கே  வழி... அவ்ளோ  வறுமையில்  ஊரிலிருந்து  சென்னை  வந்த  அந்த  ஜோடிக்கு பிரமாதமான  வசதியுடன்  வீடு  வாடகைக்கு  எப்படிக்கிடைத்தது? அட்வான்ஸ்  எப்படிக்கொடுத்தாங்க ? வீட்டில்  டைனிங்  டேபிள் , டி வி  எல்லாம்  ஆடம்பரமா  இருக்கே? 


12  நாயகன்  வீடு  என  தெரியாமல்   நாயகி  வீட்டுக்கு  வருகிறாள், ஆனால்  அங்கே  வீட்டில்  நாயகன்  திருமண  ஃபோட்டோ  எதுவும்  இல்லையே?  அவர்  வருவார்  என்பது  நாயகனுக்கு  முன்  கூட்டியே  தெரியாது. எப்படி  மறைத்தார் ?


13   பீச்சில்  வடை  சுட்டு  விற்கும்    நாகேஷூம், மனைவியும்  இன்னொரு  காட்சியில்  கட்டிட  வேலை  செய்யும்  சித்தாளாக  காட்றாங்க. ஆனா  வீடு மட்டும்  மொசைக்  தரை  வீடு 


14  டைனிங்  டேபிள் , அட்டகாசமான  கிச்சன்  கிட்ஸ் உடன்  வாழும்  தங்கை  ஒரு    சீனில்  ஒரே  ஒரு  துணி  மூட்டையுடன்  அண்ணன்  வீட்டுக்கு  ஷிஃப்ட்  ஆகிறார். ஆல்ரெடி  காட்டப்பட்ட அந்த  பொருட்களை  எல்லாம்  சேல்ஸ்  பண்ணிட்டாரா?


15   மங்குலி  நோன்பு  அன்று வீட்டுக்கு  வந்தே  ஆகனும், சுமங்கலி  பூஜை  செய்யனும்  என  மனைவி  சொல்கிறார். நாயகி  அதே  நாள்  அன்று  தனக்கு  பிறந்த  நாள் , அன்று  ஒரு  பார்ட்டி  என்கிறார். உடனே  நாயகன்  எங்கே  போவது  என  தடுமாறுகிறார். காலையில்  பர்த்டே  பார்ட்டி  மாலையில்  நோன்பு  கும்பிடுதல்  என  ஈசியாக  சமாளிக்கலாமே? 


16   கணவனின்  ஆஃபீஸ்  லேண்ட்  லைன்  ஃபோன்  நெம்பர்  மனைவி  வாங்கி  வைத்துக்கொள்ள  மாட்டாரா?   மங்குலி நோம்பிக்கு  இன்னும் வர்லையே?னு பார்த்துட்டே  இருக்கார்.. 

17  மங்குலி  நோம்பிக்கு  மனைவி  சாமி  கும்பிடும்போது  பூஜை  அறைக்குள்  நாயகன்  பூட்ஸ்  காலுடன்  வருகிறார். அதுக்கு  க்ளோசப்  ஷாட்  வேற


18   நாயகன்  நாயகியின்  பர்த்டே  அன்னைக்கு  பூ  பொக்கே  கிஃப்ட்  ஆக  தரும்போது  நாயகி  அதிலிருந்து  ஒரு ரோஜாவை  எடுத்து  நாயகனின்  கோட்டில்  நேருவிற்கு  அணிவிப்பது போல  அணிவிக்கிறார், ஆனால்  அதே  ரோஜாவை  தன்  தலையில்  சூடிக்கொண்டிருந்தால்  இன்னும்  கேட்சிங்காக , மேட்சிங்காக  இருந்திருக்கும்


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - பல்லாண்டு  வாழ்க  படம்  தவிர்த்து  எம் ஜி ஆரின்  அனைத்துப்படங்களுமே   கண்ணியமான  காட்சிகள்  கொண்ட  ;படம் தான் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   எம் ஜி ஆர்  ரசிகர்கள்  மட்டுமல்ல , பொது  ரசிகர்களும்  கண்டு  களிக்கும்படி  ஜாலியான  ஃபேமிலி  டிராமாவாகத்தான்  போகுது . பார்க்கலாம், ரேட்டிங் 2. 5 / 5 






எண்பாடல்பாடகர்(கள்)பாடலாசிரியர்நீளம் (நி:வி)
1சித்திரை சோலைகளேடி. எம். சௌந்தரராஜன்பாரதிதாசன்03:19
2நான் பாடும் பாடல்டி. எம். சௌந்தரராஜன்வாலி03:29
3நான் ஏன் பிறந்தேன்டி. எம். சௌந்தரராஜன்04:09
4தலை வாழைஜிக்கிஜானகி04:01
5தம்பிக்கு (மகிழ்ச்சி)டி. எம். சௌந்தரராஜன்அவினாசி மணி03:38
6தம்பிக்கு (சோகம்)எம். எஸ். ராஜேஸ்வரி,03:40
7உனது விழியில்டி. எம். சௌந்தரராஜன்பி. சுசீலாபுலமைப்பித்தன்03:54
8என்னம்மாடி. எம். சௌந்தரராஜன், கௌசல்யாa





a

நான் ஏன் பிறந்தேன்
இயக்கம்எம். கிருஷ்ணன்
தயாரிப்புஜி. என். வேலுமணி
(காமாட்சி ஏஜென்சீஸ்)
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஎம். ஜி. ஆர்
கே. ஆர். விஜயா
வெளியீடுசூன் 91972
நீளம்4295 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
a



Naan Yen Pirandhen
Naan Yen Pirandhen.jpg
Poster
Directed byM. Krishnan
Screenplay byM. Krishnan
Story bySamudrala Sr.
Produced byAshok Brothers
StarringM. G. Ramachandran
K. R. Vijaya
Kanchana
CinematographyP. Bhaskar Rao
Edited byK. Narayanan
Music byShankar–Ganesh
Production
company
Sri Kamakshi Agencies
Release date
  • 9 June 1972
Running time
160 minutes
CountryIndia
LanguageTamil

கண்ணாடி பூக்கள் (2005) - தமிழ் - ENTE VEEDU APPUVINTEYUM (2003) மலையாளம் - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி மெலோ டிராமா) @ ஜெ மூவிஸ் & யூ ட்யூப்


 மலையாள  நடிகர் ஜெயராமின்  மகன்  காளி  தாஸ்  ஜெயராம்  குழந்தை  நட்சத்திரமாக  அறிமுகமாகி  2003 ஆம்  ஆண்டின்  சிறந்த  குழந்தை  நட்சத்திரத்துக்கான தேசிய  விருது  பெற்ற ENTE VEEDU APPUVINTEYUM  என்ற  மலையாளப்படத்தின்  அஃபிஷியல்  ரீ  மேக்  தான்  இந்த கண்ணாடி பூக்கள்

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகனுக்கு  ஏற்கனவே  மணம்  ஆகி  ஒரு  குழந்தை  உண்டு, மனைவி  இறந்து  விட்டதால்  நாயகியை  இரண்டாம்  தாரமாக  மணம்  முடிக்கிறார்.  நாயகி  சித்தி  முறை  ஆனாலும்  நாயகனின்  குழந்தையை  தன்  குழந்தையாக  பார்த்துக்கொள்கிறார். மகனுக்கும்  நம்  அம்மா இவர்  அல்ல , சித்தி  முறைதான்  என்பது  தெரியும்


 இப்படி  இருக்கும்போது  நாயகி  கர்ப்பம்  ஆகி  ஒரு குழந்தைக்கு  தாய்  ஆகிறார். இதற்குப்பின்  நாயகன், நாயகி இருவரும்  புதுக்குழந்தை  மேல்  தான்  அதிக  பாசமாக  இருக்கிறார்கள் , நம்மைக்கவனிப்பதே  இல்லை , நம் மேல்  பாசம் இல்லை  என  தவறாக  நினைக்கிறான். இதுவும்  ஒருவகை  பொசசிவ்னெஸ் தான்


ஒரு  நாள்  ஸ்கூலுக்குக்கிளம்பும்போது  ஸ்கூல்  வேன்  வாசலில்  நிற்கிறது. பையன்  இன்னும்  ரெடி  ஆகவில்லை . அவனுக்கு  தலை  சீவி விட  அம்மா  வராமல்  புதிய  குழந்தை  பசியில்;   அழுது  என  பால்  காய்ச்சிக்கொண்டிருக்கிறாள்.இதனால்  குழந்தை  மீது  கோபம்  கொண்ட  9  வயது  சிறுவன்  ஒரு  சூழ்நிலையில்  பூச்சிக்கொல்லி  மருந்து  அடிக்கும்  பம்ப்  எடுத்து குழந்தையை  அடித்து  விடுகிறான் , இதனால்  குழந்தை  இறந்து  விடுகிறது


 நாயகனுக்கும், நாயகிக்கும்  இந்த  விஷயம்  தெரியாது ,ஆனால்  நாயகியின்  அப்பா  போஸ்ட்  மார்ட்டம்  ரிப்போர்ட்  வேண்டும்  என  அதற்கான  ஏற்பாடு  செய்ய   போஸ்ட்  மார்ட்டம்  ரிப்போர்ட்டில்  அது  இயற்கை  மரணம்  அல்ல  என  தெரிகிறது , போலீஸ்  விசாரணையில்   9  வயது  சிறுவன்  தான் குழந்தை  மரணத்துக்குக்காரணம்  என  தெரிகிறது 


 இதற்குப்பின்  கேஸ்  கோர்ட்டில்  நடக்கிறது . இந்த  கேசில்  அந்த  சிறுவன்  தப்பினானா? தண்டனை  பெற்றானா? என்பது  மீதி  திரைக்கதை


நாயகனாக  இரா  பார்த்திபன்  பொறுப்பான  அப்பாவாக  கச்சிதமாக  நடித்திருக்கிறார், வழக்கமாக  அவர்  பேசும்  நையாண்டி  வசனங்களோ , அதிகபிரசிங்கித்தனமோ  இல்லாமல்  எளிமையான  மனிதனாக  வருவதே  பெரிய  ஆறுதல் . இந்த  மாதிரி  கேரக்டரில்  நடிக்க  ஒத்துக்கொண்டதே  பெரிய  விஷயம்  தான் 


 நாயகியாக  காவேரி . இப்படி  எல்லாம்  ஒரு  சித்தி  இருப்பாரா? என  முந்தானை  முடிச்சு கே  பாக்யராஜே  வியக்கும்  வண்ணம்  மாற்றாந்தாய்  மகன்  மாதிரி  அளவு  கடந்த  பாசம்  வைத்திருக்கிறார், இவரது  கேரக்டர்  டிசைன் தான்  படத்தின்  பலமும், பலவீனமும். 


பொதுவாக  சித்தியின்  கொடுமை பற்றியே  பார்த்துப்பழகிய  நமக்கு  இந்த  நம்ப  முடியாத  கேரக்டர்  டிசைன்   செட்  ஆகவில்லை 


 குழந்தை  நட்சத்திரம்  ஆக  வரும்  மாஸ்டர்  அஸ்வின்  படம்  முழுக்க  வருகிறான். உருக்க  வைக்கும்  நடிப்பு , ஆனால்  பல  காட்சிகளில்  கனெக்ட்  ஆகவில்லை 


சரத்பாபு , ஆனந்த்ராஜ் , பொன்னம்பலம், ராஜ்குமார்   என  சப்போர்ட்டிங்  ஆக்டர்ஸ்  அனைவரும்  கச்சிதமாக  நடித்திருக்கிறார்கள் 


எஸ்  ஏ  ராஜ்குமாரின்  இசையில் பாடல்கள்  சுமார்  ரகம்  தான். பிஜிஎம்  மில்  ஆந்த  பழைய  லல்லல்லா  லால்லா  வை  விடவே  மாட்டார்  போல 


புன்னகை  தேசம்  எனும்  படத்தை  இயக்கிய  ஷாஜகான்  தான்  இந்தப்படத்தையும்  இயக்கி  இருக்கிறார்

சபாஷ்  டைரக்டர்


1 குழந்தை நட்சத்திரத்துக்கு  அதிக  வாய்ப்புள்ள  படத்தில்  ஸ்டார்  வேல்யூ    இருக்க  வேண்டும்  என்பதற்காக இரா  பார்த்திபனை  புக்  பண்ணியதும்   அவருக்கு  அதிக  முக்கியத்துவம்  இல்லை என்பது  தெரிந்தும்  அவரை  ஒத்துக்கொள்ள  வைத்தது 


ரசித்த  வசனங்கள் 


1   இந்த காலத்துல  யூ  சர்ட்டிஃபிகேட்  படம்னா யூஸ்லெஸ் படம்னு  பேசிக்கறாங்க, ஏ சர்ட்டிஃபிகேட் படம்னாதான்  ஏ ஒன்  படம்னு  சொல்றாங்க , அதனால  தயவு  செஞ்சு  என் படத்துக்கு  ஏ  சர்ட்டிகேட்  கொடுங்க 


2  வாழ்க்கைல  எனக்கு  ரெண்டு  ஆசை , முதல் ஆசை  உன்  கிட்டே  ஏகப்பட்ட  முத்தங்கள்  வாங்கனும், ரெண்டாவது  ஆசை  உன்  கிட்டே  வாங்குன  முத்தங்களை  உன்  அம்மாவுக்கு கொடுத்துடனும், ஃபிக்சட்  டெபாசிட்  மாதிரி , அப்றம்  வட்டி  போட்டு  திருப்பி  வாங்கிக்கலாம்


3  கம்சனோட  டிராமா  வசனத்தை  சொல்லி  முடிச்சுட்டு  கடைசில  மூணு  ஹ  அப்டினு  சொல்றியே? புரியல 


 அப்டிதான்  ஸ்க்ரிப்ட்ல  போட்டிருந்தது 

இரு  பார்க்கறேன், டேய்.. அது  மூணு  ஹா இல்லை , ஹா ஹா  ஹா  , சிரிக்கும்  சிச்சுவேஷன்


4  பெற்றதால  மட்டும்  ஒருத்தி  தாய்  ஆகிடவும்  முடியாது ,  பெறாததாலயே  ஒருத்தி  தாய்  இல்லைனும்  ஆகிடாது


5  குற்றவாளி  வேற  யாராவதா  இருந்தா  போலீஸ்  தன் கடமையைச்செய்யனும்னு  எதிர்பார்க்கும்  ஆட்கள்  அதே  குற்றத்தை  செய்தது  தனக்கு  வேண்டிய  ஆள்  எனில்  வேற  மாதிரி  நினைப்பது  ஏனோ ?


6  நான்  மனோதத்துவ  டாக்டர், ஒரு  குழந்தை  கூட  இந்த  உலகத்துல  வீணாப்போயிடக்கூடாதுனு  நினைக்கிறவன்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகன்  , நாயகி  இருவரும்  மகனை  தூங்க  வைத்து  விட்டு  ( அவன்  தூங்கியதாக  நினைத்து )  அவன்  அருகிலேயே  ஒரு  செண்ட்டிமெண்ட்  டயலாக்  பேசறாங்க. அது  அவனுக்கு  தெரியக்கூடாதுன்னா  வாசல்ல  வந்தோ  மொட்டை  மாடிலயோ  தனிமையில்  இருக்கும்போதே  பேசி  இருக்கலாமே?


2 அம்மா  மாசமாக  இருக்கும்போதே  பிறக்கப்போகும்  குழந்தைக்கு  டிரஸ்  எடுக்க  சின்னப்பையன் ஜவுளிக்கடைக்குப்போகிறான். அவனுக்குத்தான்  விபரம்  தெரியாது , கடைக்காரருக்குக்கூடவா  தெரியாது ? நியூ பார்ன்  பேபிஸ்  கிஃப்ட்  பேக்கிங்  என  ஒரு  அயிட்டம்  இருக்கே? அதைத்தராம  வேற  என்ன  என்னவோ  எடுத்துக்காட்டிட்டு  இருக்காரு ( பிறக்கப்போவது  மகனா? மகளா?  அந்த  டயலாக்  எல்லாம்  தேவையே  இல்லை )


3   கொலை  நடந்த  பின்  விசாரிக்க  வரும்  போலீஸ்  ஆஃபீசர் பூச்சிக்கொல்லி  மருந்து  மூலம்தான்  இறப்பு  என  போஸ்ட்  மார்ட்டம்  ரிப்போர்ட்  சொல்லுது, அதனால தோட்டத்தில்  பூச்சிக்கொல்லி  மருந்து  அடிக்கும்  தோட்டக்காரனைத்தான்  முதலில்  சந்தேகப்படறேன்  என  சொல்வது  மடத்தனம்..., அப்போ  பால்ல  விஷம்  கலந்திருந்தா  பால்காரனை  சந்தேகப்படுவாரா? 


4  பூச்சிக்கொல்லி  மருந்து  அடிக்கும்  பம்ப்பில்  கை  ரேகை  இருக்கும், அதை  பார்த்த  பின்  போலீஸ்  அடுத்த  நடவடிக்கை  எடுக்கலாமே?  ஏன்  அவசரப்பட்டு  அப்படி  ஒரு  முடிவு  எடுக்க  வேண்டும் ?


5  சின்னச்சின்ன  விஷயத்துக்கு  எல்லாம்  தன்    மகன்  மேல்  கோபப்படும்  பெற்றோர்  தங்கள்  குழந்தையைக்கொலை  செய்தது    மகன் )அல்லது  குழந்தையின்  சாவுக்குக்காரணம்  அவன் தான்  என  தெரிந்தும் ) ஒரு  சதவீதம்  கூட  கோபமே  படாமல்  அவனைக்காப்பாற்ற  நினைப்பது  நம்பவே  முடியலை 


6  தங்கள்   மகனை  விசாரிக்கும்  போலீஸ்  ஆஃபீசரிடம்  நாயகன்  “ இப்போ நீங்க  வீட்டை  விட்டு  வெளில  போகலைன்னா  நடப்பதே  வேற  “ என   மிரட்டும்  தொனியில்  பேசுவது  ஓவர்


7  ஒரிஜினல் மலையாளப்படத்தில்  நடித்த  அதே  சிறுவனை  நடிக்க  வைத்திருக்கலாம். இந்தப்படத்தில்  மாஸ்டர்  அஸ்வின்  மலையாளம்  கலந்த  தமிழில்  பேசுவது  ஒட்டவில்லை . பெற்றோர்  தமிழர்கள், மகன்  மட்டும்  மலையாள  வாடை 


8  பெண்  வேடத்தில்  நாயகன்  ஒரு  குத்துப்பாட்டுக்கு  டான்ஸ்  ஆடி  இருப்பது  ஒட்டவே  இல்லை , மெயின்  கதைக்கு  சம்பந்தமே  இல்லாதது


9  படம்  பார்க்கும்  ஆடியன்சுக்கு  அந்த  சிறுவன்  மேல்  பரிதாபமே  வரவில்லை , மாறாக  அவனுக்கு  உரிய  தண்டனை  கிடைக்கவில்லை  என்ற  எண்ணம்தான்  தோன்றுகிறது, அதுதான்  படத்தின் பலவீனம், அல்லது  கேரக்டர்  டிசைனில்  நிகழ்ந்த  குழப்பம் 


10  சிறுவர்  சீர்  திருத்தப்பள்ளியில்  திரைக்கதையின்  பின்  பாதி  நகரும்போது  போர்  அடிக்கிறது , சுவராஸ்யம்  இல்லை , சீக்கிரம்  படத்தை  முடிங்கப்பா  என  சொல்லத்தோன்றுகிறது 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இரண்டு  குழந்தைகள்  உள்ள  வீட்டில்  பெற்றோர்  கவனத்துடன்  குழந்தைகளை  வளர்க்க  வேண்டும்  என்ற  நல்ல  கதைக்கருதான், ஆனால்  அதை  மக்களுக்கு  சரியாகப்போய்ச்சேரும்  விதத்தில்  சொல்லவில்லை , ரேட்டிங் 2 / 5 






Kannadi Pookal
Directed byK. Shajahan
Story byBobby-Sanjay
Based onEnte Veedu Appuvinteyum (Malayalam)
Produced byHowly P.,
Joy C.,
Joy N.
StarringParthiban
Kaveri
Sarath Babu
Anand Raj
Nizhalgal Ravi
CinematographyArthur Wilson
Edited byV. Jaishankar
Music byS. A. Rajkumar
Production
company
Teamwork Productions
Release date
28 January 2005
CountryIndia
LanguageTamil