Wednesday, February 15, 2023

MONEY HEIST (2017-2020 )(ஸ்பானிஷ்)- வெப் சீரிஸ் விமர்சனம் ( க்ரைம் ட்ராமா த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ் 18 +


உலக  அளவில்  அதிக மக்களால்  பார்க்கப்பட்ட , ரசிக்கப்பட்ட  வெப்சீரிஸ்  எவை  என  ஒரு  பட்டியல்  எடுத்தால்  அதில்  நெ1  இடத்தில்  இருப்பது 2011ல்  வெளியான GOT   எனப்படும் GA,ME OF THRONES.  இரண்டாவது  இடம்  மணி ஹெயிஸ்ட் தான். பாங்க் ராபரி  த்ரில்லர்  வகையறாவைச்சேர்ந்த  இந்த  வெப்சீரிஸ்  பற்றிப்பார்ப்போம்

ஒரிஜினல்  வெர்சனில்  அதிக  எபிசோடுகள்  இருந்தாலும்   நெட்  ஃபிளிக்ஸ்  அதை  ட்ரிம்  பண்ணி  பாகம்  1  ல்  13  எபிசோடுகள் ஆகவும்  பாகம்  2 - 9  எபிசோடுகள் ஆகவும்  வெளியிட்டது. ஒவ்வொரு  எபிசோடும் 45  நிமிடங்கள்  டூ  50  நிமிடங்கள்  , ஆக  மொத்தம்  17  மணி  நேரங்கள் ஆகும்  முதல்  2  பாகங்களில்  வரும்  ஒரு  செட்  கதையைப்பார்க்க , ஆனால்  டி வி  சீரியல்  போல ஜவ்வு  இழுப்பு  இல்லாமல்  சுவராஸ்யமாகக்கொண்டு  போய்  இருப்பது  இதன்  பிளஸ்


நாயகனின்  அப்பா  ஒரு  வங்கியில்  கொள்ளை  அடிக்க  முயலும்போது  சுடப்பட்டு  இறந்து  விட்டார். தந்தையின்   கனவை  நனவாக்க  நாயகன் எடுக்கும்  முயற்சிகள்  தான்  கதை. பக்காவாக  திட்டம்  இடுகிறான். எட்டு பேர்  கொண்ட  குழுவை  ரெடி  செய்கிறான், அவர்களுக்கு  ஒரு  பங்களாவில் ஆறு  மாதங்கள்  பயிற்சி  அளிக்கிறான்


கொள்ளை  அடிக்க உள்ளே  நுழைந்ததும்  போலீஸ்  என்ன  என்ன  நடவடிக்கை  எடுக்கும்? அதற்கு  எதிர்  நடவடிக்கை  எப்படி  எடுக்க  வேண்டும் ?  பணயக்கைதிகளை  எப்படி  ஹேண்டில்  செய்வது? என  எல்லாவற்றையும்  திட்டமிட்டு  பயிற்சி  அளிக்கிறான்


 நம்ம  நாட்டில்  நாசிக்  எனும்  இடத்தில்  பணம்  அச்சிடப்படுவது  போல  ஸ்பெயினில் ராயல்  மிண்ட்  எனும்  இடத்தில்  பணம்  அச்சடிக்கப்படுகிறது.அங்கே  பொதுமக்கள்  வந்து  செல்லும் ஒரு  மியூசியமும்  உள்ளது  நாயகனின்  பிளான்  படி  கட்டிடத்துக்கு  உள்ளே  போய்  அங்கே  இருக்கும்  பணத்தை  எடுத்துக்கொண்டு  வாசல்  வரை  வர  வேண்டும் . பின்  பயந்து பின் வாங்குவது  போல நடித்து போலீசிடம்  இருந்து  தப்பிக்க  மீண்டும்  கட்டிடத்துக்கு  உள்ளேயே  போய்  அங்கே  சில  நாட்கள்  தங்க  வேண்டும். பணத்தை  புதுசாக  அச்சடிக்க வேண்டும்.பின்  எல்லாப்பணத்தையும்  கொள்ளை  அடிக்க   வேண்டும், இதுதான்  நாயகனின்  திட்டம் 


  இந்தக்கொள்ளையைத்தடுக்க   அமைக்கப்படும்  போலீஸ்  டீமில்  இருக்கும்  லேடி  இன்ஸ்பெக்டர்  தான்  நாயகி . வங்கிக்குள்  8  பேர்  இருப்பார்கள், ஆனால்  நாயகன்  மட்டும் வெளியே  இருப்பார். ஆனால்  போலீஸ்க்கு  அந்த  விஷயம்  தெரியாது . வெளியே  இருந்து  கொண்டே  போலீசின்  திட்டங்களை  அறிந்து  அதற்கு  ஏற்றபடி  உள்ளே  இருப்பவர்களை  இயக்குவது  நாயகனின்  மாஸ்டர்  ,மைண்ட். நாயகனின்  திட்டம்  வெற்றி  அடைந்ததா? என்பதுதான்  திரைக்கதை


அலெக்ஸ் பினா  தான்  இதன்  இயக்குநர். மிக  விறுவிறுப்பாக  ஒரு  சீன்  கூட  போர்  அடிக்காமல்  கொண்டு  செல்கிறார்.


நாயகனாக  ப்ரொஃபசர்  கேரக்டரில்   ஆல்வரோ  மார்ட்டே  பிரமாதப்படுத்தி  இருக்கிறார். நம்ம  ஊர்  ஏப்ரல்  மாதத்தில்  ஸ்ரீகாந்த்  சாயலில்  அவர்  தோற்றம்


நாயகியாக  போலீஸ்  இன்ஸ்பெக்டர்  ராக்கெல் ஆக   இட்சியார் இட்னோ  கம்பீரமாக  நடித்திருக்கிறார். தான்  நம்பிய  நாயகன்  தன்னை  மோசம்  செய்து  விட்டான்  என  கலங்கும் போதும்  உண்மை  கண்டறியும்   சோதனை  மிஷினில்  தன்னை  அவன்  நிஜமாக  காதலித்தானா? என  அறிய  முயல்வதும்  அருமையான  நடிப்பு


மேனி  சாண்டீஸ்டபன்  அட்டகாசமான  பின்னணி  இசையை  வழங்கியுள்ளார். ஒளிப்பதிவு  மைக்  அமோடோ  கண்  முன்  காட்சிகளை  நேரில்  பார்ப்பது  போல  ஒளிப்பதிவு  செய்திருக்கிறார்


பார்த்தே  தீர  வேண்டிய  விறுவிறுப்பான  த்ரில்லர்  இது , நெட் ஃபிளிக்சில்  காணக்கிடைக்கிறது 


சபாஷ்  டைரக்டர் 

1  பாங்க்  ராபரி  த்ரில்லர்களில் டமால்  டுமீல்  துப்பாக்கி  சத்தம்  கேட்டு  சலித்த  நம்  காதுகளை  இதில்  காப்பாற்றி  முற்றிலும்  புதிய  கோணத்தில் நாயகன் புரொஃபசர்- நாயகி ராக்கெல்   காதல் ,  டோக்கியோ -ரியோ காதல் , பெர்வின் - லேடி  காதல் , ஏஞ்சல் - நாயகி  ராக்கெல்  காதல் , ஆர்த்ரோ -மோனிகா காதல் ,  அலிசன்  பார்க்கர்- காதலன்  காதல் ,டென்வர் =லேடி  காதல் என  ஏகப்பட்ட  காதல்  கதைகளை  ரசிக்கும்  சம்பவங்களுடன்  மனதில்  தங்கும்படி  பதிய  வைத்தது


2  போலீசின்  ஒவ்வொரு  மூவ்  வ்ரும்போதும்  நான்  லினியர்  கட்டில்  நாயகன் இந்த மாதிரிதான்  போலீஸ் மூவ்  பண்ணும், அதற்கு  இந்த  மாதிரிதான்  ரீ ஆக்சன்  பண்ணனும்  என  பாடம்  நடத்தியதைக்காட்டுவது  சபாஷ் , பிரில்லியண்ட்  மூவ்


3  போலீஸ்  மூவ்மெண்ட்  தெரிந்து  கொள்ள  நாயகன்  நாயகியை  நெருங்கும்போது  வரும்  பிஜிஎம்  கலக்கல்  ரகம். அவரையும்  அறியாமல்  காதலில்  விழுவதும்  அருமை \


4  போலீஸ் டாக்டர்  மாதிரி  வேடம் போட்டு  உள்ளே வரும்போது  கண்ணாடி  ஃபிரேமில்  மைக்  ஒளித்து  வைக்கப்படுவது  அருமையான  ஐடியா 


5 நாயகன்  வெளியே தான்  இருக்கிறான், ஆனால்  போலீசிடம்  டிமாண்ட்  வைக்கும்போது  உள்ளே  இருப்பது  போல  இமேஜ்  கிரியேட்  செய்வதும்  போலீஸ்  நடாவடிக்கைகளை  மோப்பம்  பிடிப்பதும்  செம  ஐடியா 


6   கோமாவில்  இருக்கும்  போலீஸ்  ஏஞ்சல்  அட்டாக்  படலம்  எப்படி  இருக்கும்  என போலீஸ்  வலை  விரிக்க  நாயகன் ருத்ரா  பட்த்தில்  கே பாக்யராஜ்  கோமாளி  வேஷத்டில்  வருவது  போல  கூட்டத்தோடு  வருவதும் , கேமரா  கண்  கொண்ட  பொம்மை மூலம்  உள்ளே  இருப்பது  ஏஞ்சல்  அல்ல, வேறு  ஒரு  போலீஸ்  என்பதை  உணர்வதும்  கூஸ்  பம்ப்  சீன்ஸ்


7  பணயக்கைதிகள்  முரண்டு  பிடிக்கும்போது  அவர்களுக்கும்  கொள்ளையில்  பங்கு  தருவதாககூறி  கூட மாட  உதவி  செய்ய  வைக்கும் ஐடியா  செம 


8  டென்வர்  கேரக்டர்  டிசைன்  சைக்கோத்தனம்  என்றாலும்   கடைசியில்   தன்  உயிரைப்பணயம்  வைத்து  அனைவரையும் காப்பாற்றும்  சீன்  செம 


9  இனி  பெண்ணின்  ஆட்சி  ஆரம்பம், நான்  சார்ஜ்  எடுத்துக்கறேன்  என நைரோபி  பஞ்ச்  டயலாக்  பேசும்  சீன்  மாஸ் 


10  டோக்கியோவை  போலீசில்  சிக்க  வைக்கும்  காட்சியும்  அவரை  நாயகன் காப்பாற்றும்  காட்சியும் , போலீஸ்  யூனிஃபார்மில்  பைக்கில்  மீண்டும்  அவர்  உள்ளே  எண்ட்ரி  ஆகும்  சீனும்  செம 


11  நாயகியின்  முன்னாள்  கணவன்  காரில்  பயணிக்கும்  நாயகன் அவனை  வம்புக்கு இழுத்து   காரில்  இருக்கும்  தடயங்களை  அழிக்கும்  காட்சியும், நாயகியிடம்  டிராமா  போட்டு  சிம்பதி  ஏற்படுத்தும்  சீனும்  குட் 


12  தப்பிக்க  ஒரு  சுரங்கம் ,  போலீஸ்  கவனத்தை  திசை  திருப்ப  ஒரு சுரங்கம்  என  பிரமாதமான  ஐடியா  போடுவதும்   ஆப்சன்  பி  ல  பணத்தை  பலூனில்  கட்டி  பறக்க  விட்டு  ரோட்டில்  பண  மழை  பொழிய  வைத்தால்  மக்கள்  கூட்டம்  கூடும், பின்  தப்பலாம்  என்பதும்  பிரில்லியண்ட்  ஐடியாக்கள் 


13  கொள்ளையர்க்ள்  அணிந்திருக்கும் அதே  கலர்  உடை , அதே  டைப்  முகமூடியை  பிணையக்கைதிகளுக்கும்  தருவது  செம  ஐடியா  என்றால்  போலீஸ்  உள்ளே  வரும்போது  முகமூடி  மாடலை  மாற்றுவது  செம 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1 மொத்தக்கதையும்  டோக்கியோ  என்ற  பெண்  சொல்வது  போல  காட்டபடுகிறது , ஆனால்  அவர்  அங்கம்  வகிக்காத  காட்சிகள்  எப்படி  அதில்  வரும் ? 


2   உளவாளி  கதைகளில்  நாடு  விட்டு  நாடு  போய்  வந்த  ஹீரோ  உடலில்  எங்காவது  மைக்  மறைத்து  வைக்கப்பட்டு இருக்கா? என  செக்  செய்வார்கள். அது  போல  உள்ளே  நுழைந்து  மீண்டும்  வெளியே  வரும்  போலீஸ்  ஆஃபீசர்களை  ஏன்  செக்  செய்யவில்லை ? அவர்கள்  உடலில்  ஒட்டுக்கேட்கும் கருவி  இருக்கலாம்  என  யூகிக்கவில்லையா?


3  காரை அழிக்க  1000  யூரோக்கள்  கொடுத்த  நாயகன்  அதை  அவன்  அழிக்கிறானா? என்பதை  கிராஸ்  செக்  ஏன் செய்யவில்லை ?


4  கார்  தடயங்களை   மறைக்க  நாயகன்  பிச்சைக்காரன்  போல்  வேடமிட்டு  வரும்போது  அவனை  பின்னால்  இருந்து  பார்க்கும்  நாயகியான  போலீஸ்க்கு அடையாளம்  தெரியாதா? 


5    ஹார்ட்  அட்டாக் ஏற்படுத்தும்  மருந்தை  நாயகியின்  அம்மாவின் காபியில்  கலக்கும்  நாயகன்  பின்  மனம்  மாறி  அதை  தட்டிவிடுவது கண்டு  அம்மா  ஏதும்  சொல்லவில்லை , அது  பற்றி  போலீசான  தன்   மகளிடமும்  அவள்  சொல்லவில்லை 


6   கோமாளி  வேடத்தில்  ஹாஸ்பிடல்  போகும் நாயகன்  பவுடர் மட்டும்  முகத்தில்  பூசினால்  அடையாளம்  மாறுமா? 


7  பணம் அச்சடிக்கும் இடம்  மிலிட்ரி  செக்யூரிட்டியுடன்  இருக்கனும்,   மியூசியம் அங்கே  வெச்சு  பொதுமக்கள்  வரும்  இடமாகவா  வைத்திருப்பார்கள்? 


8  டோக்கியோ பைக்கில்  போலீஸ்  பாதுக்காப்பை  மீறி  உள்ளே  செல்வது  பார்க்க  நன்றாக  இருந்தாலும்  நம்பும்படி இல்லை, அத்தனை  பேர்  ஷூட்  பண்றாங்க, ஒரு  குண்டு  கூட  மேலே  படலையே? 


ரசித்த  வசனங்கள் 


பாகம் 1 

 1  காதலையும், கடமையையும்  எப்பவும் மிக்ஸ் பண்ணிக்கக்கூடாது


2   சில  உறவுகள்  எவ்வளவு  வலுவாக  இருந்தாலும்  அதன்  ஆரம்பப்புள்ளி  நமக்கு  மறந்துடும்


3  அவன் சுறா  மீன்  மாதிரி  கூட  நீந்தி  வரலாம், ஆனா  ஜாக்கிரதையா  இருக்கனும்


4 ஒரு  விஷயத்தை  நாம  1000  தடவை  பிளான்  போட்டாலும்  எல்லாமே  நாம  நினைச்ச  மாதிரி  நடந்துடாது 


5  நான்  அனுபவசாலி  , அஞ்சு  தடவை  டைவர்ஸ்  பண்ணி இருக்கேன், அதுக்கு  என்ன  அர்த்தம்  தெரியுமா?


ம்ஹூம்


 அஞ்சு  தடவை  புதுசா  ஏமாந்து  இருக்கேன்


6   உன்னை  எதுக்கு  இதுல  லீடரா  போட்டாங்க ?


 ஏன்னா  என்னால  அடுத்தவங்க  கஷ்டத்தை  ஈசியா  புரிஞ்சுக்க  முடியும் 


7  நாம  பேசும்  மொழியை  விட நாம்  உடுத்தி இருக்கும்  உடைதான்  நம்மைப்பற்றி அதிகமா  சொல்லும் 


8   உன்  கிட்டே  பழகும்போது  நான்  ஒரு  முகமூடியோட    பழகிட்டு  இருந்திருக்கேன். இப்போ என்  முகமூடியை  பார்க்க  எனக்கே  \ பிடிக்கலை


9  எல்லாத்தையும்  நம்மால  காப்பாத்த  முடியும்னு  நினைக்கற  ஹீரோ  எல்லா  இடத்துலயும்  இருப்பான், இங்கேயும்  ஒருத்தன்  இருக்கான்


10   ஒரு  திருடனுக்கு  தன்னம்பிக்கை  எப்பவும்  ஜாஸ்தியா  தான்  இருக்கும் 


11  ஒரு  எலியால  மட்டும் தான்  ஒரே  இடத்துல  அடைஞ்சு  கிடக்க  முடியும் , மனிதர்களால்  முடியாது 


12  வாழ்க்கைல  சின்னச்சின்ன  விஷயங்களுக்கு  எல்லாம்  ஓவரா  கவலைப்பட்டுட்டே  இருப்போம், ஒரு காலகட்டத்துல அந்தக்கவலைகள்  எல்லாமே வீணானவைனு  தெரிய  வரும் 


13  முயற்சி  மட்டும் தான்  நாம  செய்ய முடியும் , ,மத்ததெல்லாம்  நம்ம  கைல  இல்லை

!4   ஒவ்வொரு  பெண்ணுக்கும்  ஒவ்வொரு  விஷயம்  செக்சியா  தோணும், தலைமுடி, உயரம், தோள் , இப்படி , எனக்கு  உன்  கிட்டே  பிடிச்சது  உன்  இண்ட்டலிஜென்ஸ்


15   கடந்த  காலத்தில் நாம்  எடுத்த  முடிவுகள்  நிகழ்காலத்தில்  நமக்கு  ரொம்பவே  உதவும்


16  நீ  ஒவ்வொரு  முறை  என்னைப்பார்க்கும்போதும்  ஒரு  தோத்துப்போனவனைப்பார்க்கற  மாதிரியே  பார்க்கற


17  நீ   அப்பா  கூட  போய்ட்டா  என்னை  அடிக்கடி  பார்க்க  முடியாம  போயிடும்.,\


பேபி= போலீஸ்  வேலைல  இருக்கறதால உன்னை  இப்பக்கூட  அடிக்கடி பார்க்க  முடியறதில்லையே  மம்மி, எப்பவாவதுதான்  பார்க்கறேன்


 சரி, அப்பா  நல்லவர்  இல்லை


 இல்லை  அவர்  நல்லவர்தான்


 எப்படி  சொல்றே?


 அப்பாவே  சொன்னார் 


18    இந்தக்கொள்ளை  கேஸ்  விஷயம்  உலகக்கோப்பை  கிரிக்கெட்  மேட்ச்  மாதிரி , ஜெயிச்சுட்டா  பிரச்சனை  இல்லை,  ஆனா  தோத்துட்டா  எல்லாத்தையும்  தோண்டி  எடுப்பாங்க 


19 மக்களுக்கு  பைத்தியக்காரனைத்தான்  பிடிக்கும், போராட்டம்  பண்றவங்களை பிடிக்கும்


20  என்னைப்பொறுத்தவரை  ஒரு  ஜோக்ல  உண்மை  கொஞ்சமாவது  இருக்கனும், அதுல  வலியும்  கலந்திருக்கனும்


21  பொண்ணுங்களுக்கு  அவங்க  திறமை  மேல  நம்பிக்கை  இல்லை , அவங்க  கவலை  எல்லாம்  மத்தவங்க  அவங்களைப்பற்றி    என்ன  சொல்வாங்களோ? என்பதில்தான்  இருக்கு 


22 பொண்ணுங்க  கட்டில்ல  சண்டை போட்டா  மட்டும் தான்  ரசிக்க  முடியும் 


23  எல்லாரும்  ஒரு நாள்  செத்துடுவோம், ஆனா  இப்போ  உயிரோட  இருக்கோம்  இல்லையா?  அதைக்கொண்டாடித்தீர்ப்போம்


24  வாழ்க்கைங்கறது  செஸ்  விளையாட்டு  மாதிரி,  ஆட்டத்துல  நாம  ஜெயிக்கனும்னா    சில  தியாகங்களைப்பண்ணித்தான்  ஆகனும்


25   எது  நடக்கக்கூடாதுனு நினைக்கறமோ  அது  நம்ம  வாழ்க்கைல  நடந்துடுமோ?னு  ஒரு  பயம் நம்ம  அடி மனசுல  வரும்ல?


26 நமக்கு என்ன  பண்றதுன்னே  தெரியாம  குழப்பமா  இருக்கும்போது  நமக்கு  அட்வைஸ்  பண்றதுக்குன்னே  ஒரு  கூட்டம்  வரும்  பாருங்க 


27   உங்க  பலவீனத்தை  முகம்  காட்டிக்கொடுக்கலைன்னாலும்  பயம்  காட்டிக்கொடுத்துடும் 


28 மனசு  சில  விஷயங்களை ஒத்துக்காத  போது  மாறு வேஷம்  தேவைப்படும் 


29  நான்  செஞ்சதுலயே  உருப்படியானது  உன்னைக்காதலிச்சதுதான்


30  எவ்ளோ  பெரிய  அறிவாளியா  இருந்தாலும்  அவனுக்கு  ரெண்டு  கண்கள்  தான், ஆனா  இப்போ  அவனோட  கண்கள்  அவ  மேல 


31  ஒரு  விபத்து  நடக்கும்போது  அதனால  ட்ராஃபிக்  ஜாம்  ஆகாது, அந்த  விபத்தை  வேடிக்கை  பார்க்கக்கூடும்  மக்களாலதான்  ட்ராஃபிக்  ஜாம்  ஆகும்


32  விட்டில்  பூச்சியை  நாம  பிடிக்க  நினைச்சா  அது  பறந்து  போய்டும், ஆனா  விளக்கை நோக்கி  அதுவாகவே  வந்து  மாட்டிக்கும் 


33  ஒரு  சந்தோசமான  தருணத்துல  நாம  வேற  எதைப்பற்றியுமே  நினைக்கறதில்லை , உலகம்  சுக்கு  நூறா  உடைஞ்சாலும்  நமக்குக்கவலை  இல்லை 


34  நான்  இதுவரை  பார்த்த  ஆண்களிலேயே  நீங்க தான்  பெஸ்ட், இந்த திட்டம்  எவ்ளோ  பெரிய  புத்திசாலித்தனத்தை  உள்ளடக்கி  இருக்கு ?


35 யாரோட  பணத்தையும் திருடாம  தனக்குத்தேவையான  பணத்தைத்தானே  அச்சடிச்சிருக்கான்  அந்த  ஹீரோ. அது  எப்படி  திருட்டு  ஆகும்?


36  நம்ம  கனவை  எல்லாம்  நனவு  ஆக்கிக்க  யாரையும்  ஹர்ட்  பண்ணனும்னு  அவசியம்  இல்லை 


37  நம்பிக்கை  ரொம்ப  முக்கியம், நம்பிக்கைங்கற  காட்டில்  சின்ன  தீப்பொறி  பத்திக்கிட்டா    மொத்தக்காடும்  அழிஞ்சிடும்

38  அன்பு , பாசம்னு  என்னதான்  நாம  எல்லாரும்  முக  மூடி  போட்டுக்கிட்டாலும்  நம்ம  எல்லாரையும் இணைக்கும்  ஒரு  விசயம்  எது  தெரியுமா?  பணம் தான் 


39  எவ்ளோ  நேரம்  கூட இருந்தோம்கறது  முக்கியம்  இல்லை, என்ன  பண்ணோம்? என்பதுதான்  முக்கியம் 



===============

பாகம் 2 

1   அளவுக்கு  அதிகமான  தன்னம்பிக்கை  எப்பவும்  ஆபத்துதான்


2   கிரிக்கெட்டா இருந்தாலும், ஃபுட் பாலா  இருந்தாலும்  மக்கள்  எப்பவுமே  ஒரு  வீக்  டீமைத்தான்  சப்போர்ட்  பண்ணுவாங்க, அந்த  சைக்காலஜியை  கவனிச்சீங்களா?


3  நம்ம  பலவீனத்தை  நாம்   வெளில  காட்டிட்டா , நாம  தோற்கப்போறோம்னு  இந்த  உலகம்  உணர்ந்தா  மொத்த  உலகமும்  நம்மைதான்  சப்போர்ட்  பண்ணும் 


4 எதுவுமே  மூன்றாவது  முறைதான்  முழுமை  அடையும்னு  சொல்வாங்க 


5  ரொம்ப  நாள்  தூங்காதவன்  கிட்டே  நாம  எதிர்பார்க்காத எதிர்பார்க்கக்கூடாத  ஒரே  விஷயம்  பொறுமை 


6  மனசுக்கு  ரொம்ப  நெருக்கமானவங்க  நம்ம  அருகில்  இல்லைன்னா  மனசுக்கு  கஷ்டம்தான்


7  உனக்கு  போலி  பாஸ்போர்ட்  ரெடி  பண்ணனும், பிடிச்ச  பேரு  சொல்லு , அகதா? ஓக்கே?


  அது  போர்ன்  ஸ்டார்  பேரு  மாதிரி  இருக்கு 

 எங்க  ஊர்ல  அழகான  பொண்ணுங்களுக்கு  எல்லாம்  அகதானுதான்  பேர்  வைப்பாங்க 


8   சில  டைம்  மற்றவர்களுக்கு  உதவறோம்னு  நாமா  வலிய  போய்  பிரச்சனைல  மாட்டிக்குவோம்


9   நீ  தண்ணீர்  மேல  மிதந்துட்டே  போக  நினைக்கறவன், அடில  இருக்கற  பாறைகளைப்பற்றி  உனக்குக்கவலை  இல்லை 


10  நீ  சாகப்போறியே?  அதான்  யோசிக்கிறேன்

  விதவைக்கோலத்துல  கூட  நீ  அழகாகத்தான்  இருப்பே


11  சில  நேரங்களில்  நம்ம  கவலை  இன்னும்  உயரே  போக  முடியாட்டிப்பரவால்லை, இன்னும்  கீழே  போகாம  இருந்தா  போதும்னு  நினைப்போம்


12   லிக்விடிட்டி இஞ்செக்சன்


13   என்னை  மட்டம்  தட்டினதைப்பற்றிக்கூட  நான்  கவலைபப்டலை, ஆனா  நான்  அடிக்கிற  ஜோக்சைப்பற்றி  மட்டம்  தட்டுனதைத்தான்  தாங்கிக்கவே  முடியலை


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  பார்த்தே  தீர  வேண்டிய  பிரமாதமான  ராபரி  த்ரில்லர்  இது  அடல்ட்  கண்ட்டெண்ட்  இருப்பதால்  கவனம் . 

 ரேட்டிங் 4 / 5 



Money Heist
Casadepapelwordmark.svg
SpanishLa casa de papel
Genre
Created byÁlex Pina
Starring
Theme music composerManel Santisteban
Opening theme"My Life Is Going On" by Cecilia Krull
Composers
  • Manel Santisteban
  • Iván Martínez Lacámara
Country of originSpain
Original languageSpanish
No. of seasons3 (5 parts)[a]
No. of episodes41 (list of episodes)
Production
Executive producers
  • Álex Pina
  • Sonia Martínez
  • Jesús Colmenar
  • Esther Martínez Lobato
  • Nacho Manubens
Production locations
  • Spain
  • Italy
  • Thailand
  • Panama
  • Denmark
  • Portugal
CinematographyMigue Amoedo
Editors
  • David Pelegrín
  • Luis Miguel González Bedmar
  • Verónica Callón
  • Raúl Mora
  • Regino Hernández
  • Raquel Marraco
  • Patricia Rubio
Camera setupSingle-camera
Running time67–77 minutes (Antena 3)
42–76 minutes (Netflix)
Production companies
Distributor
Release
Original network
Picture format
1080p (16:9 HDTV)
Audio formatDolby Atmos
Original release2 May 2017 –
3 December 2021
Chronology
RelatedMoney Heist: Korea – Joint Economic Area

Tuesday, February 14, 2023

GURTHUNDA SEETHAKALAM (2022) தெலுங்கு - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்

 


குளிர்  காலம்  உனக்கு  நினைவிருக்கிறதா? இது தான்  ( குர்துண்டா  சீதாக்கால,ம்) பட  டைட்டிலுக்கு  அர்த்தம் . இது 2020  ஜனவரி யில்  ரிலீஸ்  ஆன  கன்னடப்படமான  LOVE MOCKTAIL -ன் அஃபிஷியல்  ரீமேக். 2020லியே  ஷூட்டிங்  போய் விட்டார்கள் , ஆனால்  சில  , பல  தடைகளின் காரணமாக  தாமதம்  ஆகி  2022  டிசம்பர் 9ல் தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆகி  இப்போது  அமேசான்  பிரைம்  ஓ டி  டி  யில்  ரிலீஸ்  ஆகி  உள்ளது 

நாயகன்  மங்களூரை  நோக்கிய  பயணத்தில்  முன்  பின்  அறிமுகம்  இல்லாத  ஒரு  பெண்ணுடன் பிரயாணம்  செய்கிறார். அப்போது  அவர்  தன்  வாழ்க்கையில்  நிகழ்ந்த  மூன்று  வெவ்வேறு  காதல்  சம்பவங்களைப்பற்றி  பகிர்கிறார்

 முதல்  காதல்  அவர்  ஸ்கூலில்  படிக்கும்போது  நிகழ்ந்தது . இது  ஜாலியான  மொமெண்ட்ஸ் உடன்  கமர்ஷியலாக  சொல்லப்படுகிறது


இரண்டாவது  காதல்  கொஞ்சம்  வித்தியாசம். நாயகன்  லோயர்  மிடில்  கிளாஸ், ஆனால்  நாயகி  கோடீஸ்வரப்பெண். அழகி . ஆனால்  பல  ஆண்களை  விட்டு  விட்டு  இவர்  ஏன்  நாயகனை  காதல்ராக  ஏற்றுக்கொண்டார்  என்பதற்கு  வலுவான  காரணம்  சொல்லாமலேயே  காதலிக்கிறார்


கொஞ்ச  நாட்களில்  நாயகன்  சம்பளம்  மாதம்  ரூ 22000  மட்டுமே  என்பதை  நாயகி  குத்திக்காட்டி  தன்  ஒரு  நாள்  ஷாப்பிங்  செலவே  ரூ  ஒரு  லட்சம்  என   நையாண்டி  செய்கிறார். 


 இது  போன்ற  மட்டம்  தட்டும்  சம்பவங்கள்  தொடரவே   அந்தக்காதல்  பிரேக்கப்  ஆகிறது 


 நாயகன்  மிக  சோகமான  மன  நிலையில்  இருக்கும்போது  நாயகனின்  நண்பனும், நண்பனின்  காதலியும்  இன்னொரு  பெண்ணை  நாயகனுக்கு  அறிமுகம்  செய்கிறார்கள் . நாயகனின்  பழைய  காதல்  வாழ்க்கை  தெரிந்தும்    புதிய  தோழி  நாயகனை  ஏற்றுக்கொள்ள  சம்மதிக்கிறார்


இவர்கள்  காதல்  திருமணம்  வரை  போகும்  சமயத்தில்  பிரேக்கப்  செய்த  கோடீஸ்வரக்காதலி  மீண்டும்  தொடர்பு  எல்லைக்கு  வருகிறார்.  நாயகன்  இப்போது  என்ன  முடிவு  எடுத்தார்?  இந்த  கல்யாண  வாழ்க்கை   யாருடன்  எப்படி  போகின்றது  என்பதுதான்  பின்  பாதி  திரைக்கதை 

நாயகனாக  சத்ய  தேவ். இவர்  நம்ம  ஊர்  விஜய்  சேதுபதி  போல. நாயகனாக  மட்டும்  தான்  நடிப்பேன் என  அடம்  பிடிக்காமல்  கேரக்டர்  ரோல் , மெயின்  ரோல்  எதுவாக  இருந்தாலும்  ஏற்று  நடிப்பவர். ராமர்  பாலம்  படத்தில்  நடித்திருக்கிறார். இந்தப்படத்தில்  ஜாலி  மொமெண்ட்ஸ்களில்  ஸ்கோர்  பண்ணிய  அளவுக்கு  பின்  பாதியில்  சோகக்காட்சிகளில்  சோபிக்க  வில்லையோ  என  தோன்றுகிறது 


ஆரம்பத்தில்  உடன்  பயணிக்கும்  பயணியாக  மேகா  ஆகாஷ்   அதிக  வாய்ப்பில்லை , வந்தவரை  ஓக்கே  ரகம் 


கோடீஸ்வரக்காதலியாக  வரும்  காவ்யா  செட்டி  அவரளவில்  நடிப்பில் பாஸ்  மார்க்  என்றாலும்  கதையில்  அவரது  கேரக்டர்  டிசைன்  சரியாக  வடிவமைக்கப்படவில்லை . கோடீஸ்வரியான  அவருக்கு  சாதா ஆள்  மீது  காதல்  வரக்காரணம்  சொல்லபபடவில்லை , அதனாலேயே  இவர்கள்  காதல்  நம்  மனதில்  ஒன்ற வில்லை 

 பிரேக்கப்  செய்தவர்  மீண்டும்  ஏன்  தேடி  வருகிறார்? என்பதற்கும்  அவராகக்காரண்ம்  சொல்லவில்லை  நாயகனும்  கேட்கவில்லை . இது  மிகப்பெரிய  மைன்ஸ்  பாயின்ட்


மூன்றாவது  காதலியாக  வரும்  தமனா  தான்  கதையில்  கல்  தூண். கச்சிதமாக  நடித்திருக்கிறார். இவர்  நாயகன்  மீது  காட்டும்  அன்பும்  , பரிவும்  கனக்ச்சிதம் . இருவருக்குமான  கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆகி  இருக்கிறது 


 ஆனால்  பின்  பாதியில்  காட்சிகள்  கொஞ்சம்  இழுவை  , படத்தை  எப்போப்பா  முடிப்பீங்க  ?  என  கேட்க  வைக்கும்  மிக  மெதுவான  திரைக்கதை  அமைப்பு 


சத்யா  ஹெக்டே  வின்  ஒளிப்பதிவு  படத்துக்கு  மிகப்பெரிய  பலம்  கர்நாடகா  முழுக்க  பயணித்து  ஒரு  விஷூவல்  ட்ரீட்  படைத்து  இருக்கிறார்,   கால  பைரவா  வின்  இசையில்  பாடல்கள்  சுமார்  ரகம்  தான்,  பிஜிஎம்  ஓரளவு    தேவலை . கோட்டகிரி  வெங்கடேஸ்வரராவ்  எடிட்டிங்கில்  இரண்டரை  மணி  நேரத்தில்  ட்ரிம்  செய்திருந்தாலும்  பின்  பாதி  இழுவை . நாகசேகர்  இயக்கத்தில்  , திரைக்கதையில்  இன்னும்  கவனம்  செலுத்தி  இருக்கலாம் , ஒரிஜினல்  கன்னடப்படம்  போல்  இம்ப்பேக்ட்  தரவில்லை 


மொத்தத்தில் படம் முதல்  பாதி  ஜோர்  , பின்  பாதி  போர் . 


ரசித்த  வசனங்கள் 


1   என்னடா? சர்வசாதாரணமா  அவ  உன்  கிட்டே  பி எஃப்  பற்றி  பேசறா?


 அடேய் , பி எஸ்  அப்படின்னா  பிரேக்  ஃபாஸ்ட்   அப்டினு  அர்த்தம்டா


2   உன்னை  எனக்கு  பல  வருசமா  தெரியும், ஆனா  உனக்கு  இவ்ளோ  இங்க்லீஷ்  தெரியும்னு  எனக்கு  இப்போதான்  தெரியும் 


நீயும்  ஒரு  பொண்ணை  லவ்  பண்ணிப்பாரு , உனக்கும்  இங்க்லீஷ்  வரும் 


3 ` காலெஜ்  டேஸ் ல  என்ன  ஒரு சவுகரியம்னா  பணம்  சம்பாதிக்க  தேவை  இல்லை ., யாருக்கும்  பதில்  சொல்ல  வேண்டிய  அவசியம்  இல்லை 


4   இண்ட்டர்வியூவில்-  உனக்கு  ஜாவா  பற்றித்தெரியுமா?


  ஜாவா  பைக்  பற்றித்தானே  கேட்கறீங்க ? 


5  இவனைப்போய்  ஏன்  இண்ட்டர்வ்யூல  செல்க்ட்  பண்ணுனீங்க ?  

‘ ஃபால்ஸ்  ஆன்சர்  தந்தாலும்  அவன்  கிட்டே  ஒரு  ஹானெஸ்ட்  தெரியுது , ஒரு  சான்ஸ்  கொடுத்துத்தான்  பார்ப்போமே?


6   நம்ம  லைஃப்  எப்படி  இருக்கனும்னு  நம்ம  சம்பளம் தான் தீர்மானிக்கும் 


7  கோபமாக  இருக்கும்போது எடுக்கப்படும்  முடிவுகள்  முட்டாள் தனமா  தான்  இருக்கும் 


8   லவ்ல  பிராப்ளம்னா  பேசி சரி  பண்ணிடலாம், ஆனா  லவ்வரே  பிராப்ளம்னா? 


9  அந்தக்காதலுக்கும்  இந்தக்காதலுக்கும்  வித்தியாசம்  தெரியுதா?  உன்  வாழ்க்கைல  நீ  செய்யாத  தப்புக்கெல்லா,ம்  சாரி  சாரி  அப்படினு  கெஞ்சுனே, இப்போ  சின்னச்சின்ன  விஷயத்துக்கு  எல்லாம்  அவ  உன்  கிட்டே  சாரி  கேட்கறா , அது  உனக்கு  புதிய  அனுபவம் 


10  காதல்  என்பது  நம்ம  பக்கத்துல  இருக்கும் ஒருவரை  சந்தோசமா  வெச்சுக்கறது 



சி  பி  எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  ஒரு  சராசரி  லவ்  சப்ஜெக்ட்  பார்த்த  ஃபீலிங்  தான்  இருக்கு , கன்னட்த்தில்  செம  ஹிட்  ஆன  ஒரு  ரீமேக்  படம்  என்ற  எதிர்பார்ப்பில்லாமல்  பார்க்கனும். ரேட்டிங்  2 / 5 


Gurthunda Seethakalam
Gurthunda Seethakalam.jpg
Theatrical release poster
Directed byNagasekhar
Based onLove Mocktail
by Krishna
Produced byBhavana Ravi
Nagasekhar
Ramarao Chintapalli
StarringSatyadev
Tamannaah
CinematographySatya Hegde
Edited byKotagiri Venkateswara Rao
Music byKaala Bhairava
Production
companies
Nagashekar Movies
Manikanta Entertainments
Sri Vedaakshara Movies
Release date
  • 9 December 2022
CountryIndia
LanguageTelugu

Monday, February 13, 2023

புதையல் (1957) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் த்ரில்லர்) @ யூ ட்யூப்

  தீவிரமான  எம் ஜி  ஆர்  ரசிகராக  இருந்தும்  என்  அப்பா  அடிக்கடி  முணுமுணுக்கும்  பாடல்  வரி   விண்ணோடும்  முகிலோடும்  விளையாடும்  வெண்ணிலவே...  இதைப்பற்றி  விசாரித்தபோது  பட  விபரம்   அறிந்தேன். சரி கலைஞர்  கதை    வசனம், கிருஷ்ணன்  பஞ்சு  இயக்கம்  என்பதால்  பார்த்து  விடுவோம்  என   முடிவு  எடுத்து  யூ  ட்யூப்ல  பார்த்து  விட்டேன்  

ஸ்பாய்லர்  அலெர்ட்


இலங்கையில்  கதை  நிகழ்கிறது . நாயகனின்  அப்பா  நாயகனின்  அம்மாவைக்கொன்றதாக  கொலைக்குற்றம்  சாட்டப்பட்டு  சிறையில்  அடைக்கப்படுகிறார். ஆனால்  குற்றவாளி அவரல்ல . நாயகனின்  அம்மாவை  கெடுக்க  வந்த  ஆளை  எதிர்க்கும்  அம்மா  ஆயுதத்தால்  தாக்க  முற்பட  அதை பிடுங்கி  அவளைக்கொன்று  விட்டு  அந்த  ஆள்  தப்புகிறான்.   தப்பி  போலீசிடம்  போய்  தவறான  தகவல்  சொல்கிறான். அதன்படி  போலீஸ்  கொலை  நடந்த  ஸ்பாட்டுக்கு  வ்ரும்போது  அப்பா  மாட்டிக்கொள்கிறார்


அப்பா  சிறைக்குப்போகிறார். அப்போது  நாயகனுக்கு  10  வயது , கூட  நாயகனின்  தங்கை  தங்கம். அம்மா , அப்பா  இல்லாமல்  அண்ணன் , த்ங்கை  இருவரும்  இலங்கையிலிருந்து  தமிழகம்  வருகிறார்கள் . இங்கே  ஒரு  கட்டத்தில்  தங்கை  இறந்து  விடுகிறார்


 நாயகன்  இப்போது  தபால்  ஊழியர் . நாயகிக்கு  அடிக்கடி   துக்காராம்  என்ற  ஒருவர்  காதல்  கடிதம்  அனுப்புகிறார். அதை  தினமும்  டெலிவரி  செய்யும்  நாயகன்  ஒரு  கட்டத்தில்  அந்த  கடிதத்தில் உள்ள  காதல்  கவிதையைப்படிக்கிறார்


சொந்தமா யோசிச்சு  ஜோக்  எழுதும் எழுத்தாளனுக்கு  100 ரூபாய்  சன்மானம், ஆனால்  அதே  ஜோக்சை  மனப்பாடம்  பண்ணி  தன்னுடைய  சொந்த  வாழ்வில்  நிகழ்ந்த  சம்பவம்  போல  தொகுத்து  வழங்கும்  ஸ்டேண்ட்  அப்  காமெடியன்கள்  மதுரை  முத்து , ஈரோடு  மகேஷ்  போன்றவர்களுக்கு  பேரும்  புகழும்  கிடைத்தது  போல  கவிதை  எழுதி  மெனக்கெட்டு  அனுப்பிய  துக்காராமை    விட்டு  விட்டு  அதை  படித்துக்காட்டிய  நாயகன்  மேல்  நாயகி  காதல்  கொள்கிறார்


  நாயகன்  தன்  சொந்தக்கதை  சோகக்கதையை  ஒரு  நாள்  நாயகியிட  சொல்லிக்கொண்டு  இருக்கிறார். அப்போது  தன்  தங்கை  தங்கம்  புதைக்கப்பட்ட  இடம்  இதுதான் என  சொல்லிக்கொண்டிருக்கும்போது  வில்லன்  எண்ட்ரி 


 வில்லன் ஒரு  புதையலை  தேடிக்கொண்டு  இருக்கிறான் , தான்  தேடி  வந்த  புதையல்  இந்த  காதல்  ஜோடிக்குத்தெரியும்  என  நினைக்கிறான். இதற்குப்பின்  நிகழும்  குழப்படிகள்  தான்  மீதி  திரைக்கதை 


 நாயகனாக  சிவாஜி  கணேசன்   உணர்ச்சிப்பிழம்பாய்  நடித்திருக்கிறார். காதல்  காட்சிகளில்  அவர்  ,முகம்  நவரசம்  சொட்டுகிறது . க்ளைமாக்ஸ் காட்சியில்  வில்லுப்பாட்டில்  பல  கெட்டப்களுடன்  வருகிறார், ரசிக்க  வைக்கும்  நடிப்பு 


நாயகியாக  பத்மினி . நாயகனுடனான  கெமிஸ்ட்ரி  நல்லா  ஒர்க்  அவுட்  ஆகி  இருக்கிறது . ஒரு  சாதரண  பாட்டு  , சாதா  பாடல்  வரிகளுக்குக்கூட  பரத  நாட்டிய  அபிநயம்  புரிகிறார். ஆண்  வேடத்தில்  சில  காட்சிகள் 


  வில்லனாக  டி எஸ்  பாலையா . குரல்  தான்  இவரது  பெரிய  பிளஸ்,இவருக்கு மனைவியாக  எம் என்  ராஜம். இவரும் வில்லனுக்கு  எதிராக  வில்லி  வேலை  எல்லாம்  செய்கிறார்


  காமெடிக்கு  சந்திர  பாபு . நாயகனுக்கே  படத்தில்  ஒரே  ஒரு  டூயட்  தான், ஆனால் இவருக்கு  ஒரு  சோலோ  சாங் , ஒரு  டூயட் . கலக்கல்  டான்ஸ் 


மூன்று  மணி  நேரம்  படம்  ஓடுகிறது .  இன்னும் ட்ரிம்  பண்ணி  இருக்கலாம், ஆனால்  அந்தக்காலத்தில்  மூன்று  மணி நேரத்துக்குக்குறைவாக  படம்  பண்ணினால்  சின்னப்படம்  என  சொல்லி  விடுவார்கள் 


 அப்போதெல்லாம்  18  ரீல்  படங்கள்  தான்  அதிகம் , 1980 களில்  14  ரீல்  படங்கள்  வந்தன 

சபாஷ்  டைரக்டர் (கிருஷ்ணன்  பஞ்சு ) 

1  நாயகன் - நாயகி  முதல்  சந்திப்புக்காட்சியில்  நாயகிக்கு  வந்த  காதல்  கடிதத்தை  தபால்காரரான  நாயகன்  படித்துக்காட்டும்  காட்சி கலைஞரின்  கைங்கரியத்தில் எதுகை  மோனை தமிழ்  துள்ளி  விளையாடும்  காட்சி 

2   புதையல்  ரகசியம்  பற்றிய  முதல்  வரியே  எழுவான்  சூரியன்  தான்,,, உதய  சூரியன்  பற்றி  அப்போதே  உள்  குத்து டயலாக் 


3  நாயகனின்  தங்கை  பெயர்  தங்கம், அவள்  புதைக்கப்பட்ட  இடம்  என  நாயகன்  நாயகியிடம்  காட்டும்போது  ஒரு  க்ரூப்  தங்கம்  புதைக்கப்பட்ட  இடம்  என  புரிந்து  கொள்ளும்  சிச்சுவேஷன்  குட் 


3  சந்திரபாபு  பத்மினியின்  ஃபோட்டோவுக்கு  பாவ்லாவாக  ஊட்ட  அதை  ஃபோட்டோவின்  பின்பக்கம்  இருந்து    வேறு  ஒரு ஆள்  சாப்பிடும்  காமெடி  டிராக்  குட் 


4  நாயகி  பத்மினி  வில்லனிடம்  தன்  காதலன்  என  காமெடியனை  மாட்டி  விடுவது  நல்ல  ஐடியா. பெண்கள்  தன்னைக்காப்பாற்றிக்கொள்ள யாரை  வேண்டுமானாலும்  மாட்டி  வைத்து  விடுவார்கள்  என்ற  நிதர்சனத்தை  உணர்த்திய  காட்சி 


5  வில்லனின்  ஆட்கள்  சந்திரபாபுவைத்தேடி  கொலை  செய்ய  வர , அவரை  எச்சரித்த  பத்மினியை  அறையில்  அடைக்கும்  சந்திரபாபு   செம்   சஸ்பென்ஸ் மொமெண்ட்


6  காமெடியனை  நாயகி  பிடில்  வாசிக்கச்சொல்ல  பிஜிஎம்மில்  கழுதை  கனைக்கும்  ஒலியை  ஒலிக்க  வைப்பது 


7  சந்திரபாபு வின்  கேரக்டர்  டிசைன்  அருமை .   ஒருதலையாய்க்காதல்  கொண்ட பெண்ணின்  காதலுக்கு  உதவுவது  செம


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  சின்னச்சின்ன இழை  பின்னிபின்னி  வரும்  சித்திரைக்கைத்தறி  சேலையடி

( ஹீரோயின்   ஓப்பனிங்  சாங் நெசவாளி  பெருமை  பேசும்  பாடல்) 


2  உனக்காக  எல்லாம்  உனக்காக  , இந்த  உடலும்  , உயிரும்  ஒட்டி  இருப்பது  உனக்காக  ( சந்திரபாபு  ஓப்பனிங்  சாங் ) 

3  தங்க  மோகனத்தாமரையே ,, நீ  செங்கதிர்  கண்டு  சிரிப்பதினாலே  இளம்  மங்கையர்  வதனமும்  வாடுது (  ஹீரோயின்  வெய்ட்டிங் சோலோ சாங்க்)


4   விண்ணோடும்  முகிலோடும்  விளையாடும்  வெண்ணிலவே  (  டூயட்)


5  ஆசைக்காதலை  மறந்து  போ.. .. ஆடும்  அலை  போலே  வாடும்  எந்தன்  மனமே ...   (  ஹீரோயின்  சோக  பாட்டு ) 


6   ஹலோ  மைடியர்  ராமி எங்கம்மா  உனக்கு  மாமி   (  காமெடியன்  டூயட்)


7   சீர்  கொண்டு  கண்டி  ராஜா  (  வில்லுப்பாட்டு ) 


8  நல்ல  காலம்  வருகுது 


  ரசித்த  வசனங்கள்  (கலைஞர்) 

1  மனுசனுக்கு  பணம், பதவி , பட்டம், மரியாதை, அந்தஸ்து , மானம் , மரியாதை  இதெல்லாம்  வேணும்னா  எந்தக்காரியத்தை  வேணா  செய்யத்தயாரா  இருப்பான்


2  களவு  செய்வது  தப்பில்லை, ஆனா  கண்ணக்கோல்  மட்டும்  நம்ம கைல  இருக்கக்கூடாது 


3  கதை  சொல்வதாக  அழைத்து  கவிதை இயற்றுவது  ஏனோ? 


என்  கதை  கேட்டால்  உன்  கண்கள் நீர்  வீழ்ச்சியாக  மாறும் 


4  செருப்பா  இருந்தாலும்  ஜோடியைப்பிரிக்கக்கூடாது


5  மோகினிப்பிசாசாவது  பெண்ணை  இவ்வளவு  தூரம்  தூக்கிட்டு  வர்றதாவது...


 பெண்ணாக  இருந்தால்  முன்னூறு  மைல்  கூட  தூக்கிட்டு  வருவாங்க , சீதையை ராவணன் தூக்கிட்டு  வர்ல?


6  இப்படித்தான்  நான்  உனக்கு  காதல்  கடிதம்  எழுதுனேனா?

 நீங்க  எழுதி  இருந்தாலும்  எனக்குப்படிக்கத்தெரியாதே?


7  இங்கு  சகல  வித     “மான  சாமான்களும்”  ரிப்பேர்  செய்யப்படும்..  மான  சாமான்கள்? அப்டின்னா?


  நல்லாப்பாருங்க, அது  இப்டி  படிக்கனும்  இங்கு  சகல  விதமான  சாமான்களும்  ரிப்பேர்  செய்யப்படும்.


8  தங்கம்  எங்கே  இருக்கிற்து ?


 தங்கம்  கோலாறு  தங்க  வயலில்  இருக்கிறது . கோலாறு  கர்நாடகாவில்  இருக்கிறது 


9  சட்டத்தின் சன்னிதானத்தில்  தந்தை  - மகன்  பேதத்திற்கு  இடம் இல்லை 


10 இவரைப்பார்த்தா  சாமியாராத்தெரியலையே?


 மாறுவேஷத்துல  இருக்காரு ‘


11  அமெரிக்காவின்  சுதந்திர  தேவி  சிலை  மாதிரி   ஏன்  தீப்பந்தம்  வெச்சுட்டு  இருக்கே?  நீ  மதுரை  கண்ணகி  மாதிரி  இந்த  இடத்தை  எரிச்சுட்டா  நான்  நீரோ  மன்னன்  மாதிரி  பிடில்  வாசிக்கிறேன் 


12  மாணிக்கத்தால்  தொட்டிலும், மரகதத்தால்   பாலாடையும்  செய்து  கொடுக்கிறேன்,  ஒரு  குழந்தை பெற்றுக்கொடு  என  மலடியைக்கேட்டானாம்  ஒருவன்  அது  போல்  தான்  இருக்கிறது  நீங்கள்  என்னிடம்  புதையல்  ரகசியத்தைக்கேட்பதும். தெரியாது  தெரியாது 


 ஏன்  தெரியாது ?


 அதுவும்  தெரியாது 



13  சந்தன  வில்லை  சகதியில்  கிடக்கலாமா?


 அதற்காக  சாக்கடையில்  இருக்கும்  சந்தனத்தை  எடுத்து  மார்பில்  பூசிக்கொள்ளவா  முடியும் ? 


14  உன்னை  கைலாசத்துக்கு  அனுப்பப்போகிறேன்

  ஓஹோ, நீதான்  கைலாசத்துக்கு  கைகாட்டியா?



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகனின்  அம்மாவைக்கொலை  செய்த  கொலைகாரனின் ஆயுதம்  அரிவாள்  மனை  என  தெரிந்தும்  நாயகனின்  அப்பா  அதே  அரிவாள் மனையை  எடுத்துக்கொண்டு  வில்லனைப்ப்ழி  வாங்கக்கிளம்புகிறாரே?  வேறு  அயுதம்  கிடைக்கலையா? அதில்  கொலைகாரனின்  ஃபிங்கர்  பிரிண்ட்ஸ்  இருக்கும்,  தன் கை  பட்டு  மறையும்  எனத்தெரியாதா? 


2    வயல்  காட்டில்  உள்ள  சர்க்கரை  வள்ளிக்கிழங்குகளை  முதல்  தேதி  வெட்ட  வேண்டும்  என  டைரி  மாதிரி  பாக்கெட்  நோட்டில்  குறிப்பு  எழுதுவதற்குப்பதிலாக  வள்ளியை  வெட்ட  வேண்டும்  என  சுருக்கமாக  அவர்  எழுதி  அது  ஆதாரமாக  மாறி  மாட்டிக்கொள்வது  நம்பும்படி  இல்லை (நாயகனின்  அம்மா  பெயர்  வள்ளி) 


3  சுறா  மீன்  கடலின்  ந்டுப்பகுதியில்  அல்லது  ஆழமான  பகுதியில்தான்  வரும்  கரையில்  அலை  வரும்  இடத்தில்  வருவது  எல்லாம்  ஓவரோ  ஒவர் 


4  கதை  நடந்த  கால  கட்டமான  1957 ஆம்  ஆண்டு  ஒரு  கன்னிப்பெண்  இரவில்  வீட்டுக்கு  வராமல்  காலையில்  வந்ததும்  வீடே  அமளி  துமளி ஆகி  இருக்க   வேண்டாமா? என்னமோ  சீரியலில் ஹீரோயின் நலம்  விசாரிப்பது  போல  அம்மா  நைட்  எங்கேம்மா  போனே? என  அமைதியாக  விசாரிக்கிறார்


5  துக்காராம்  எனும்  சந்திரபாபு  588  நாட்களாக  தினசரி  ஒரு  கடிதம்  வீதம்  நாயகிக்கு  காதல்  கடிதம்  எழுதி  அனுப்புகிறார். அதை  படிக்காமலேயே  கிழித்து  வீட்டு  வாசலில்  போட்டு  விடுவது  நாயகியின்  வழக்கம்,  நாயகனின்  அறிமுகம்  வந்த  பின்  584  வது  கடிதம்  வரும்போது  கிழித்துப்போடும்போது  மட்டும்  அப்பா  அதைக்கைப்பற்றி  காதல்  கடிதம்  பற்றி  விசாரிக்கிறாரே? அப்போ 583  நாட்களாக அவர்  வீட்டுக்கே  வரவில்லையா? 


6 நாயகியின் காதலனுக்கு  தங்கம்  இருக்கும்  இடம்  தெரியும்  என  வில்லன்  நினைக்கிறான். அப்போ  நாயகி  காதலனை  சந்திக்க  அதே  இடத்துக்கு  மீண்டும்  வரும்  வரை காத்திருந்தா  போதாதா? அதுதான்  தினசரி  அல்லது  அடிக்கடி  சந்திக்கிறாங்களே? ஆட்களை   அனுப்பி  நாயகியைக்கடத்தி  காதலன்  யார்? என  உண்மையை  சொல்லச்சொல்லி  கேட்டு  எதுக்கு  அவ்ளோ  ஃபர்னிச்சரை  உடைக்கனும்? அவங்களா  சந்திக்கும் போது  கோழி அமுக்கற  மாதிரி  பிடித்திருக்கலாமே?


7   ராமாயணம், கிஷ்கிந்தா  காண்டம், அனுமார் , குரங்கு  என  சான்ஸ்  கிடைக்கும்போதெல்லாம்  இந்து மக்களின்  மனம்  புண்படும்படி  ஆங்காங்கே  வசனங்கள்  அள்ளித்தெளிக்கப்பட்டு  இருக்கின்றன


8  நாயகனின்  கேரக்டர்  ஸ்கெட்ச் படி  அவர்  அரசாங்க  தபால்  ஊழியர் , ஆனால்  ஒரு  கட்டத்தில்  வில்லனின்  அடியாட்கள்  20  பேரை  தெலுங்குப்பட   ஹீரோ  மாதிரி  பந்தாடுவதை  எல்லாம்  நம்ப  முடியலை 


9  தனது  காதலி   முகத்தில்  பென்சிலால்  மீசை  வரைந்தால்  நாயகனுக்கு  அது  அடையாளம்  தெரியாதா? குறி  சொல்பவர்  போல  நாயகி  எல்லோரையும்  ஏமாற்றுகிறார். ஆண்  குரலில்   பேசாமல்  பெண்  குரலில்  பேசுகிறார் , ஆனால்  ஆண் கெட்டப்பில்.,  ஆனால்  யாருமே சந்தேகப்படலை . நாயகன்  கூட  



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் =  பாடல்  காட்சிகள் , சிவாஜி  - பத்மினி  கெமிஸ்ட்ரி ,  சந்திரபாபு  காமெடிக்காக  பார்க்கலாம் . ரேட்டிங்  2.75 / 5  . இது கமர்ஷியலாக  சுமாராகத்தான்  போனதாக  விக்கி  பீடியா  கூறுகிறது 


புதையல்
புதையல் 1956 விளம்பரம்
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புகமல் பிரதர்ஸ்
கதைமு. கருணாநிதி
இசைவிஸ்வநாதன்-ராமமூர்த்தி
நடிப்புசிவாஜி கணேசன்
பத்மினி
எம். கே. ராதா
டி. எஸ். பாலையா
சந்திரபாபு
எம். என். ராஜம்
ஒளிப்பதிவுஜி. விட்டல் ராஜூ
படத்தொகுப்புஎஸ். பஞ்சாபி
கலையகம்கமல் பிரதர்ஸ் லிமிடட்
விநியோகம்கமல் பிரதர்ஸ் லிமிடட்
வெளியீடு10 மே 1957
நாடுஇந்தியா
மொழிதமிழ்


எண்.பாடல்பாடியவர்(கள்)வரிகள்நீளம்
1"விண்ணோடும் முகிலோடும்"சி. எஸ். ஜெயராமன்பி. சுசீலாஎம். கே. ஆத்மநாதன்03:18
2"தங்க மோகனத் தாமரையே"பி. சுசீலா03:54
3"உனக்காக எல்லாம் உனக்காக"ஜே. பி. சந்திரபாபுபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்03:38
4"சின்னச் சின்ன இழை"பி. சுசீலா05:05
5"ஹலோ, மை டியர் ராமி"ஜே. பி. சந்திரபாபு, ஏ. எல். ராகவன்03:34
6"ஆசை காதலை"பி. சுசீலாஅ. மருதகாசி03:07
7"சீர் கொண்டு...கண்டி ராஜா"டி. எம். சௌந்தரராஜன், எம். கே. புனிதம், எஸ். ஜே. காந்தாதஞ்சை இராமையாதாஸ்03:40
8"நல்லகாலம் வருகுது"டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலாசுப்பிரமணிய பாரதியார்03:25a










Sunday, February 12, 2023

AA AMMAYI KURINCHI MEEKU CHEPALI (2022) தெலுங்கு - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்


 நான்  அந்தப்பெண்ணைப்பற்றி  சொல்கிறேன் - இது தான்  டைட்டிலுக்கான  அர்த்தம் இயக்குநர்  மோகன  கிருஷ்ண இந்திராகாந்தி  உடன்  , நாயகன்  சுதீர்  பாபு  காம்பினேஷனில்  வரும்  மூன்றாவது  படம்  இது . 20 கோடி  ரூபாய்  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்ட  இந்தப்படம்  பாக்ஸ்  ஆஃபீசில்  வசூலை  அள்ளியது இவர்கள்  காம்போவில்  வந்த  முதல்  படமான சம்மோஹனம் (SAMMOHANAM) 2018ஆம்  ஆண்டு  ரிலீஸ்  ஆகி  17  கோடிவசூலித்தது.  10  கோடி  பட்ஜெட்டில்  உருவான  ரொமாண்டிக்  ஃபிலிம்  இது . இரண்டாவது  படம்  வி  என்னும்  க்ரைம்  த்ரில்லர் 


Spoiler alert


நாயகன்  ஒரு பிரபல  சினிமாப்பட  இயக்குநர்.. தொடர்ந்து  ஆறு  வெள்ளி விழாப்படங்கள்  கொடுத்தவர் .அவர்  எடுக்க  இருக்கும்  புதிய  படத்துக்காக  புதுமுக நாயகியின்  தேடுதல்  வேட்டையில்  இருக்கிறார். அவர்  கண்களுக்கு  ஒரு   விளம்பரப்படம்  படுகிறது. அதில்  ஒரே  ஒரு  காட்சியில்  தோன்றிய  அழகுப்பெண்ணைப்பார்த்ததுமே  பிடித்து  விடுகிறது , ஆனால்  அந்தப்பெண்ணைப்பற்றிய  தகவல்  கிடைக்கவில்லை 


 நாயகன்  அந்தப்பெண்ணைத்தேடி  அலைகிறார். ஒரு  கட்டத்தில்  அந்தப்பெண்  கிடைத்து  விடுகிறாள் . அந்தப்பெண்  ஒரு  கண்  டாக்டர் . நாயகி  மீது  காதல்  வசப்படுகிறார். நாயகிக்கு  அவர்  மேல்  எந்த  அன்பும்  இல்லை 


நாயகியை  சினிமாவில்  நடிக்க  நாயகன்  சொல்லும்போது  நாயகி  மறுத்து  விடுகிறார். ஒரு  திருப்பம்  நிறைந்த  தகவலையும்  சொல்கிறார். நாயகன்  திரையில்  கண்ட  பெண்  நாயகி  அல்ல, நாயகியின்  ட்வின்ஸ்  சிஸ்டர், அவர்  இப்போது  உயிருடன்  இல்லை . ஆறு  வருடங்களுக்கு  முன்  நடந்த  கதையை  சொல்கிறார்


நாயகியின்  அக்கா  சினிமாவில்  நடிக்க  ஆர்வம்  உள்ளவராக  இருந்தார் , ஆனால்  வீட்டில்  அம்மா, அப்பா  சம்மதிக்கவில்லை . சினிமா  இயக்குநர்  ஆக  வேண்டும்  என்ற  கனவுடன்  இருக்கும் ஒரு  இளைஞன் மீது  காதல்  வசப்படுகிறார். 


 வீட்டின்  எதிர்ப்பையும்  மீறி  அவனை  திருமணம்  செய்து  கொள்கிறார். தன்  மனைவியைக்கதாநாயகி  ஆக்கி  ஒரு  படம்  இயக்க  வாய்ப்புக்கிடைக்கிறது, ஆனால்  எதிர்பாராத  விதமாக  அந்தப்பட,ம்  கைவிடப்படுகிறது . இதனால்   மன  உளைச்சலுக்கு  ஆளான  அவள்  கணவன்  தற்கொலை  செய்து  கொள்கிறான்.  இதனால்  மனம்  நொந்து  நாயகியின்  அக்காவும்  தற்கொலை  செய்து  கொள்கிறாள் 


 இதனால்தான்  நாயகியின்  பெற்றோருக்கு  சினிமா இண்டஸ்ட்ரி  என்றாலே  அலர்ஜி . இதற்குப்பின்  நாயகன்  ஆன இயக்குநர்  என்ன  செய்தார்?  நாயகியை  சம்மதிக்க  வைத்து  படம்  எடுத்தாரா? நாயகியின்  அக்காவின்  நிஜக்கதையையே  படக்கதையாக  எடுக்க  நாயகியின்  பெற்றோர்  சம்மதித்தார்களா? படம்  ஹிட்  ஆனதா? என்பது  தான்  மீதி  திரைக்கதை 


நாயகனாக  பிரபல  இயக்குநராக  சுதீர்பாபு   கச்சிதமான  நடிப்பு, முதல்  20 நிமிட  கதை  பார்த்ததும் இது  வழக்கமான  நாயகன்  நாய்கியைத்துரத்திக்காதலிக்கும்  மாமூல்  கதை  மாதிரி  தோன்றினாலும்  நாயகியின்  அக்கா    கேரக்டர்  எண்ட்ரி  ஆனதும்  கதை  சூடு  பிடிக்கிறது 


 நாயகியாக , அக்காவாக  டூயல்  ரோலில்  கீர்த்தி  ஷெட்டி . மாறுபட்ட  இரு  தோற்றத்தை  நாயகன்  ஏற்று  நடிப்பது  சுலபம். தாடி  வைத்து  ஒரு ஆள், தாடி  இல்லாமல்  ஒரு  ஆள்  என  சுலபமாக  வேறுபாடு  காட்டி  விடலாம், ஆனால் நாயகி  விஷயத்தில்  அது  கடினம், கடினமான , சவாலான  பணியை  கீர்த்தி  கச்சிதமாய்  செய்திருக்கிறார். இவரது  நடிப்பு  முழுக்கதையையும்  தாங்கிப்பிடிக்கிறது


பி ஜி  விண்டா  வின்  ஒளிப்பதிவில் காட்சிகள்  கண்ணுக்குக்குளுமை , நாயகியின்  க்ளோசப்  ஷாட்டுகள் எல்லாம்  அழகியல். விவேக்  சாகர்  இசையில்  2  பாடல்கள்  ஹிட் , பிஜிஎம்  கச்சிதம் .   இரண்டரை  மணி  நேரப்படத்தை  கச்சிதமாக  எடிட்  செய்து  இருக்கிறார்  மார்த்தாண்ட்   கே  வெங்கடேஷ் 


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  மோகன  கிருஷ்ண  இந்திரா  காந்தி . கமர்ஷியல்  அம்சங்கள்  சேர்த்து  பொழுது  போக்குப்படமாக  ஜாலியாக  எடுத்திருக்கிறார். இது  அமேசான்  பிரைம்  ஓ டி டி  யில்  காணக்கிடைக்கிறது 

ரேட்டிங்  2.5 /.5



Aa Ammayi Gurinchi Meeku Cheppali
Aa Ammayi Gurinchi Meeku Cheppali.jpg
Theatrical release poster
Directed byMohana Krishna Indraganti
Written byMohana Krishna Indraganti
Produced by
  • B. Mahendra Babu
  • Kiran Ballapalli
Starring
CinematographyP. G. Vinda
Edited byMarthand K. Venkatesh
Music byVivek Sagar
Production
companies
Benchmark Studios
Mythri Movie Makers
Release date
  • 16 September 2022
Running time
145 minutes
CountryIndia
LanguageTelugu
Budget20 crore[1]

Saturday, February 11, 2023

ENNALUM ENTE ALIYA (2023) மலையாளம் - சினிமா விமர்சனம் ( காமெடி மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்


2015ல்  ரிலீஸ்  ஆன   லுகா  சுப்பி (LUKKA CHUPPI)  எனும்  மலையாளப்படம்  செம ஹிட்  ஆனது . காமெடி மெலோ டிராமா, டைட்டிலுக்கு அர்த்தம் - ஒளிந்து  விளையாடு .  நம்ம  ஊரில்  ரிலீஸ்  ஆன  பறவைகள்  பலவிதம், 96   படங்கள்  போல ஸ்கூல்  ரீ யூனியன்  மீட்டப்பில்  நடக்கும்  கதை. அந்தப்படத்தின்  இயக்குநர்  பாஸ் மொகமது  இயக்கிய  படம்  தான்  இது, இதற்கு  முதலில்  வைக்கப்ப்ட்ட  டைட்டில்  லவ்  ஜிகாத் ,  பின் சென்சாரில்  பிரச்சனை  வரும்  என  அறிவுறுத்தப்பட்டதால் டைட்டிலை  மாற்றி  விட்டார்கள் 

என்னதான் இருந்தாலும்  அவன் என்  மச்சான்  -இதுதான்  டைட்டிலுக்கு  அர்த்தம். நாயகன்  தன்  மனைவியின்  தம்பியால்  படும்  இன்னல்கள்  தான்  காமெடியாக  சொல்லப்பட்டிருக்கும்  கதை 


  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  துபாயில்  வசிக்கும்  ஒரு  இன்சூரன்ஸ்  ஏஜெண்ட். இவர்  ஒரு  அபார்ட்மெண்ட்டில்  தன்  மனைவியுடன்  வசித்து  வருகிறார். திருமணம்  ஆகி  எட்டு  ஆண்டுகள்  ஆகியும்  குழந்தை   இல்லாத  இந்த  தம்பதிக்கு  இப்போதுதான்  நல்ல  செய்தி  கிடைத்தது.  மனைவி  கர்ப்பமாக  இருப்பதை  உறுதி  செய்த  டாக்டர்  ஒரு  மூன்று  நாட்கள்  இரண்டாவது  தேன்  நிலவு  போல  வெளில  எங்காவது  போய்ட்டு  வாங்க , ரிலாக்ஸா  இருக்கும்  என  சொல்கிறார்


 நாயகனுக்கு  அடிக்கடி  ஃபோன்  கால்ஸ்  வந்து  கொண்டே  இருக்கும். ஒர்க்  பிரஷர் . இதனால்  தனக்கு  நேரம்  ஒதுக்காமல்  எப்போது  பார்த்தாலும்  ஃபோனிலேயே  பேசிக்கொண்டிருக்கும்  கணவன்  மேல்  மனைவிக்கு  கோபம். திடீர்  என  மனைவியின்  தம்பி  அவர்கள் இருக்கும்  அபார்ட்மெண்ட்க்கு  வருகிறான். சில  நாட்கள்  அங்கே  தங்கி  இருக்க  திட்டம்.அவனுக்கு  வேலை  வெட்டி  எதுவும்  கிடையாது


அதே  அபார்ட்மெண்ட்டில்  ஒரு  முஸ்லீம்  பெற்றோர்  இருக்கிறார்கள். அவர்  ஒரு  பில்டிங்  காண்ட்ராக்டர். அவர்களூக்கு  வயது  வந்த  மகள்  இருக்கிறாள். அவள்  எப்போதும்  ஃபோனும்  கையுமாகவே  இருப்பாள் , சில  நாட்களாக  அவள்  யாரோ  ஒரு  இளைஞன்  கூட  அதிக  நெருக்கம்  காட்டி  பழகுவதாக  அம்மாவுக்கு  சந்தேகம். அடிக்கடி  மெசேஜ்  வருவது , மிஸ்டு  கால்ஸ்  வருவது  கண்டு  டவுட் 


 நாயகனின் மச்சினன்  மேல்  தான்  சந்தேகம். இதைப்பற்றி  விசாரிக்க  அந்த  முஸ்லீம்  தம்பதி  நாயகனின்  வீட்டுக்கு  வருகிறார்கள் . விசாரிக்கிறார்கள் . இரு  குடும்பத்துக்கும்  இடையே  நடக்கும்  காமெடி  கலாட்டாக்கள்  தான்   கதை 

1998ல்  சூர்யா  நடிப்பில்  காதலே  நிம்மதி  என்ற  படம்  வந்தது. அதில்  காதலிக்காத  ஒரு  ஜோடி  மீது  சந்தேகம்  வரும் . காதலிக்காமலேயே  இப்படி  ஒரு  கெட்ட  பெயர் , இனி  காதலிப்போம்  என  க்ளைமாக்சில்  முடிவெடுப்பார்கள்  . அது  போல  இந்தக்கதையிலும்  சாதாரண  நண்பர்களான  இருவரை  இரு  குடும்பத்தாரும்  சந்தேகப்படுகிறார்கள் . இருவருக்கும்  இடையே  காதல்  இல்லை , நட்பு  மட்டும்  தான் ஆனால்  காதலே  நிம்மதி  பட  க்ளைமாக்ஸ்  போல  இதில்  இல்லை , வேறு  ஒரு  திருப்பம்  இருக்கிறது 


 நாயகனாக  சுராஜ்  வெஞ்சாரமூட். பாத்திரத்தை  உணர்ந்து  நடித்திருக்கிறார். மனைவியுடன்  காட்டும்  நெருக்கம் , மச்சினன்  மேல்  காட்டும்  கோபம் , பக்கத்து  வீட்டுக்காரரிடம்  எரிந்து  விழும்  குணம் , ஒரு  இக்கட்டான  சூழலிலும்  இன்சூரன்ஸ்க்கு  ஆள்  பிடிக்கும்  சாமார்த்தியம்  என   இவர்  கேரக்டர்  டிசைன்  பிரமாதமாக  வடிவமைக்கப்ப்ட்டிருக்கு. 


 நாயகியாக காயத்ரி  அருண்  கச்சிதமான  நடிப்பு 


முஸ்லீம்  தம்பதிகளாக  வரும்  சித்திக் - லீனா  ஜோடியின்  நடிப்பு  தான்  படத்தின்  ஹை  லைட்ஸ் . சதி  லீலாவதி  படத்தில்  வரும்  கோவை  சரளா  - கமல்  ஜோடி   போல  படம்  பூரா  இவர்கள்  செய்யும்  காமெடி  கலக்கல்  செம  ரகளை . கணவன்  - மனைவிக்கு  இடையே  ஆன  பாண்டிங்  ஆகட்டும், மகள்  மீது  சந்தேகம்  கொள்ளும்  அம்மா, அலட்டிக்கொள்ளாத  அப்பா  என  அட்டகாசம்  பண்ணி  இருக்கிறார்கள் 


 

சபாஷ்  டைரக்டர்


 1  ஊடலில்  இருக்கும்  மனைவியை  சமாதானப்படுத்த  நாயகன்  லிஃப்டில்  வரும்போது  செய்யும்  ரொமாண்டிக்  முயற்சிகளை  எதேச்சையாக  கண்ட  பக்கத்து  வீட்டு  தம்பதிகள்  பாருய்யா , அந்த  ஆளைப்பார்த்துக்கத்துக்கோ  என  சொல்லும்  சீன்  


2  பட்ஜெட்  ரேலியில்  ஷேர்  மார்க்கெட்  காளையின்  ஆதிக்கத்தில்  மேலே  உயரும்  என  எதிர்பார்த்த  பொது  அதானி  ஷேர்களின்  வீழ்ச்சி  கரடியின்  பிடியில்  கொண்டு  போனது  மாதிரி   தம்பதிகள்  ஹனிமூன்  ட்ரிப்  பிளான்  பண்ணி  இருக்கையில்  சிவபூஜையில் கரடி  மாதிரி  மச்சினன் வர  நாயகன்  நாயகியை  முறைக்கும்  தருணம் 


3   கோபமாகப்பேசும்  சித்திக்    சரக்கு  அடித்து  விட்டு  செய்யும்  அலப்பறைகள் 


4  சித்திக்  - லீனா தம்பதிகளுக்கு  இடையேயான  புருசந்  பொண்டாட்டி  சண்டை  அதகளம்.    மனைவி  சொல்வதெற்கெல்லாம்  ஆமாம்  சாமி  போடும்  கேரக்டர்  ஃபோனில்    மட்டும்  எதிராளியிடம் கெத்து  காட்டுவது  செம  காமெடி 


 5   இத்தனை  களேபரங்கள்  நடந்த  பின்பி  இவர்கள்  நினைத்தது  போல இவர்கள்  காதலர்கள்  இல்லை  , நண்பர்கள்  தான்  என  தெரிந்த  பின்  விடும்  பெரும்  மூச்சு  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டில்  காணாமல்  போவது   ரகளை

ரசித்த  வசனங்கள் 

1     உன்  கை  எங்கேம்மா  போச்சு?


 முறிச்சுட்டேன் 


 வாட்?


 ஸ்லீவ்லெஸ்  ஜாக்கெட்  ஆக்கிட்டேன்மா


2  ஆஃபீஸ்ல ஒரு  திடீர் மீட்டிங். ஒரு  ஸ்பீச்  கொடுக்கனும், போய்ட்டு  வந்துடறேன்


என்ன  டாப்பிக்?

தாம்பத்ய  வாழ்க்கையை  இனிமையாக  கழிப்பது  எப்படி ?

 சூப்பர், ஆனா  அது  நம்ம  வீட்ல  ஒர்க்  அவுட்  ஆகறது  இல்லையே? 


3  உன்  வீட்டு  சொந்தத்தில்  மட்டும்  நம்ம  பொண்ணுக்கு  மாப்ளை  வேண்டாம்


 ஏன்  அப்படி?


  எனக்கு  ஆன  சம்பவம்  என்  பொண்ணுக்கும்  ஆகனுமா?


4  இப்போ  எல்லாரும்  எழுந்து  நில்லுங்க ,  ஒரு  30  நொடி  அவங்கவங்க  மனைவியை  கட்டிப்பிடிச்ச படி   இருங்க் \


\  ஏம்ப்பா , அவனவன்  சொந்த  சம்சாரத்தைக்கட்டிப்பிடிக்கவா  காசு  கொடுத்து  இந்த  கோர்ஸ்ல  சேர்ந்தோம் ? அட  போப்பா  . இது  ஆகறது  இல்ல 


5  பெண்ணின்  மனசு  அவளுக்கும், அவளைப்படைத்த  கடவுளுக்கு  மட்டும் தான்  தெரியும் 


6 ஆமா, சாம்பார்ல  தயிர்;கலந்திருக்கியா?


 யாராவது  சாம்பார்ல  தயிர்   சேர்ப்பாங்களா?


பின்னே? சாம்பர்  ஜில்லுனு  இருக்கே ?

 பத்து  பதினைஞ்சு  நாட்கள்  ஃபிரிட்ஜ்ல  இருந்தா  எப்பேர்ப்ப்ட்ட  குழம்பும்  ஜ்ல்னுதான்  இருக்கும் 



7   அந்த  ஆண்டவனாப்பார்த்துதான்  நமக்காக  அந்த  லிஃப்ட்டை  ரிப்பெர்  ஆக்கி  இருக்கான்


 பார்த்தியா, கொஞ்சம்  விட்டா  இந்த  லேடீஸ்  ஆண்டவனைக்கூட  அவங்க  வீட்டு  வேலைக்காரன்  ஆக்கிடறாங்க 


8    உங்களுக்கு  அவங்களைக்கண்டா  பயமா?

 எனக்கா? பயமா? கட்டின  பொண்டாட்டியைத்தவிர  வேற  யாரைக்கண்டும்  எனக்கு  பயம்  இல்லை 

9  முழங்கால்  மூட்டு  மாற்று  அறூவை  சிகிச்சை  இருக்கு , டொனேஷன்  குடுங்க 


 எவ்ளோ  மொத்த  செலவு 


 ஒண்ணே  முக்கால்  கோடி 

‘ தங்கத்துலயா  கால்  நடறீங்க ?உங்களுக்கு  டவுட்டா  இருந்தா  உங்க  ரெண்டு  காலில்  ஒரு  கால்  முட்டியை  மாத்தி  ஆபரேஷ்ன்  செஞ்சு  பாருங்க 


10  இப்போ  இந்த  நிமிசமே  அவனுக்கு  ஃபோன்  பண்ணி  இங்கே  வரச்சொல்


 அவன்  ஃபோன்  ஸ்விட்ச்  ஆஃப்

‘ அவன்  ஃபோனை  இங்கே  கொண்டு  வா, நான்  ஆன்  பண்ணித்தர்றேன்


11   அய்யய்ய்யொ , உங்க சம்சாரம்  மயக்கம்  போட்டு  விழுந்துட்டாங்க , தண்ணீர்  தெளிச்சு  தெளிவிக்கனும்


 கொஞ்ச  நேரம்  அவ    வாயை  மூடித்தான்  இருக்கட்டுமே? இம்சை 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  மெடிட்டேஷன் ,  பிராணயாமம்  எனும்  மூச்சுப்பயிற்சி  எல்லாம்  தரையில்  அமர்ந்துதானே  செய்வார்கள் ? நாயகன்  ஸ்டூல்    மேல்  அமர்ந்து  கொண்டு  செய்கிறார்


2   மேரேஜ்  ஃபங்க்சனுக்குபோன முஸ்லீம்  ஜோடி  அங்கே  இருந்து  தன்  மகளுக்கு  ஃபோன்  போட்ட  போது  நெம்பர்  பிசி  என  சில  டைமும், ஸ்விட்ச்  ஆஃப்  என  சில  டைமும்  வருவதால்   மகள்  வீட்டை  விட்டு  ஓடிப்போய்  இருப்பாளோ  என  சந்தேகப்பட்டு  வீட்டுக்கு  ரிட்டர்ன்  வருவது  அபத்தம். பக்கத்து வீட்டுக்காரர்  ஃபோனுக்கு  தொட்ர்பு  கொள்ளலாம், செக்யூரிட்டிக்கு  ஃபோன்  போட்டு  விசாரிக்கலாம் 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  அப்படி  எதுவும்  இல்லை , க்ளீன்  யூ  சர்ட்டிஃபிகேட்  படம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  வழக்க்கமான  மசாலா  படம்  பார்ப்பவர்கள் , ஃபைட்  சீன்ஸ் , டுயட்  சீன்ஸ் , மொக்கை  காமெடி  டிராக்  என  பார்ப்பவர்கள்  இந்தப்படத்தை  தவிர்க்கவும். இது  மாறுபட்ட  ஃபேமிலி  காமெடி  மெலோ  டிராமா.,  ஆறே  ஆறு  கேரக்டர்களை  வைத்து   அதகள  காமெடி  பண்ணும்   ஃபீல்  குட்  மூவி  ரகம்,  ரேட்டிங்  3 /.5 

Friday, February 10, 2023

MUKHACIHTRAM (2022)தெலுங்கு - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்) @ அமேசான் பிரைம்)


 1991ல்  ஜெயராம்  நடித்த  மலையாளப்படமான  முகசித்ரம்  படத்துக்கும்  இதற்கும்  சம்பந்தம்  இல்லை , 1993ல்  சுரேஷ்மேனன் - ரேவதி  நடித்த  புதிய  முகம்  படத்துக்கும்  இதற்கும்  சம்பந்தம் இல்லை . 2022  டிசம்பர்  9ல்  ரிலீஸ்  ஆன  இப்படம்  இப்போது  அமேசான்  பிரைம்  ஓடிடி  யில்  ரிலீஸ்  ஆகி  உள்ளது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  பிளாஸ்டிக் சர்ஜரி  செய்யும்  டாக்டர். . அவரது  அம்மா  இளமைப்பருவத்தில்  ஒரு  கார்  ஆக்சிடெண்ட்டில்   ஏற்பட்ட  முக  காயத்தினால்  ,மனம்  உடைந்து  இறந்து  விடுவதால்  இது  போல  மற்றவர்களுக்கு  நேரக்கூடாது  என  முடிவு  எடுத்ததாக  சொல்கிறார்


நாயகனுக்கு திருமணத்துக்கு  பெண்  பார்க்கிறார்கள். ஒரு  பெண்ணின்  ஜாதகம்  ஒத்துப்போகிறது. அந்தப்பெண்ணின்  ஃபோட்டோவை  தன்  நண்பர்களுக்கு  காட்டும்போதுதான்  அவர்களில்  ஒருவர்  முன்னாள்  பள்ளித்தோழி   நாயகனை  காதலிப்பதாக  சொல்கிறார்

 

ஆனால்  நாயகன்  அதெல்லாம்  இன்ஃபேக்சுவேஷன், நாம  ஸ்கூல் படிக்கும்போது  அப்படி பழகியது  உண்மைதான்  , இப்போ  எனக்கு  அந்த  மாதிரி  எண்ணம்  இல்லை  என்கிறார். ஆனால்  தோழியால்  அதைத்தாங்கிக்கொள்ள  முடியவில்லை 


ஆனாலும் திட்டமிட்டபடி  மேரேஜ்  நடக்கிறது. இதற்குப்பின்  சில  மாதங்கள்  கழிகின்றன. நாயகனின்  தோழி  ஒரு  சாலை  விபத்தில்  மாட்டிக்கொள்கிறார். அதில்,  அவரது  முகம்  முழுவதுமாக  சிதைந்து  விடுகிறது


அதே  நாளில்  நாயகனின்  ,மனைவியும்  ஆக்சிடெண்ட்டலாக  வீட்டின்  மாடியில்  இருந்து  மயங்கி  விழுந்து  இறக்கிறார். 


நாயகன்  தோழிக்கு  பிளாஸ்டி  சர்ஜரி  செய்து   தன் மனைவியின்  முக  அமைப்பைப்போல்  மாற்றுகிறார்


 தோழிக்கு  தான்  நினைத்தபடி  தன்  காதலன்  கணவனாகக்கிடைத்த  சந்தோஷம், ஆனால்  நாயகியின்  செல்  ஃபோனில்  சில  மர்மமான  விஷயங்கள்  அவருக்கு  கிடைக்கின்றன. நாயகன்  தான்  திட்டமிட்டு  மனைவியைக்கொலை  செய்தான்  என  கண்டுபிடிக்கிறார்


 இதற்குப்பின்  கதையில்  நடந்த  திருப்பங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  டாக்டர்  ராஜ்குமார்  ஆக   விகாஷ்  வ்சிஷ்டா  முதல்  பாதியில்  நல்ல  கணவனாகவும்  பின் பாதியில்  சைக்கோ  கேரக்டராகவும்  மாறுபட்ட  நடிப்பைத்தந்திருக்கிறார்


நாயகி  மகதியாக  நாயகனின்  மனைவியாக  ப்ரியா  வத்லிமணி  கச்சிதமாக  நடித்திருக்கிறார்.  ஹோம்லி  கேர்ள்  ஆக  முதல்  பாதியிலும்  , பின்  பாதியில்  தோழியின்  உடலில்  தன்  முகம்   பொருத்தபட  ஆக்ட்டிவிட்டிகள்  முற்றிலும்  மாறுவதை அனாயசமாக  கையாண்டிருக்கிறார்


தோழ்  மாயாவாக  ஆயிஷா  கான்  அர்ப்பாட்டமாக  நடித்துள்ளார் 


ஸ்ரீனிவாஸ்-ன்  ஒளிப்பதிவு  நாயகிகள்  இருவரின்  க்ளோசப்  ஷாட்டுகளில்   அழகியல் .   கால  பைரவாவின்    இசையில்  ஒரு  பாடல்  நன்றாக  இருக்கிறது , பிஜிஎம்  சுமார்தான் , இன்னும்  கவனம்  செலுத்தி  இருக்கலாம்



 சந்தீப்ராஜின்  கதை ,திரைக்கதைக்கு  கங்காதர் டைரக்சன்  பொறுப்பேற்று  இருக்கிறார்., இன்னும் திரைக்கதையில்  கவனம்  செலுத்தி    இருக்கலாம் 


  இரண்டு  மணி  நேரம்  தான்  மொத்தப்படமும், ஆனால்  நீண்ட  நேரமாக  ஓடுவது  போல  அலுப்பு ஏற்படுகிற்து



  ரசித்த  வசனங்கள் 


1  இப்பவெல்லாம்  மக்கள்  முட்டாள்தனமான  காரணங்களுக்காக  டைவர்ஸ்  வாங்கிக்கறாங்க 


2  பிறப்பால்  நமக்கு  என்ன  கிடைச்சிருக்கோ  அதை  நாம  கொண்டாடுவதில்  அர்த்தம்  இல்லை, நாம்  இந்த  உலகத்தில்  வாழ்ந்த  பின்  சொல்லிக்கொள்வது  போல், கொண்டாடுவது  போல்  ஏதாவது  சாதிச்சிருக்கோமா? அதுதான்  முக்கியம் 


3    அஞ்சு வருசமா  தண்ணி  அடிச்சுட்டு  இருக்கேன், எனக்கு  நீ  அட்வைஸ்  பண்னாதே



 ஓகே  மிஸ், ஆனா  நான்  30  வருசமா  அட்வைஸ்  பண்ணிட்டு  இருக்கேன் 


4  ஒரு  பெண்ணின்  மிகப்பெரிய  எதிரி  இன்னொரு பெண்ணாகத்தான்  இருக்க  முடியும் 


5    லவ்  ஃபெய்லியர்  ஆனா  ஆண்கள்  சரக்கு  அடிப்பாங்க, தம்  அடிப்பாங்க , சோகத்தை  மறக்க.. ஆனா  நான்  ஒரு  லேடி  ரைட்டர். ஒரு  மாறுதலா  இருக்கட்டும்னு  தண்ணி  அடிக்கற  பழக்கத்தை  லவ்  ஃபெய்லியரால  நிறுத்தப்போறேன்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  கர்ப்பமா  இருக்கும்போது  ரத்த  தானம்  செய்யக்கூடாது , உடல்  மிக  பலவீனம்  ஆகிடும்னு  நர்ஸ்  சொல்லிட்டு  நீங்க  கர்ப்பமா?  என  கேட்கும்போது  நாயகி  இல்லைனு  பொய்  சொல்லி  ரத்த்  தானம்  தர்றார்.அவ்ளோ  ஆபத்தை  வெச்சுட்டு  பிளட்  டொனேஷன்  தர  அவங்க  ரிலீட்டிவும்  இல்லை ,  ஃபிரண்டும்  இல்லை . எதுக்கு  நாயகி  ரிஸ்க்  எடுக்கனும் ? ( அதுக்கு  சால்ஜாப்பா  ஃபிளாஸ்பேக்ல  ஒரு  சமாதான  ட்விஸ்ட்  வெச்சிருக்காங்க,  ஒட்டலை )

2   தான்  கர்ப்பமா  இருப்பதை  கணவனிடம்  நாயகி  ஏன்  சொல்லவில்லை? முதல்  டைம் சொல்ல  முயலும்போது  தோழியின்  ஆக்சிடெண்ட்  நியூஸ்  வருது, ஓக்கே, அதுக்குப்பின்  ஏன்   சொல்லலை?


3  நாயகி  சீரியசா  ஹாஸ்பிடலில்  அட்மிட்  ஆகி  இருக்கும்போது  கூட  வந்த  அப்பாவை  நான்  பார்த்துக்கறேன்  நீங்க  கிளம்புங்கனு  நாயகன்  சொன்னதும்  நாயகியோட  அப்பா  கிளம்புவது  எப்படி ? எந்த  அப்பாவாவது  மகள்  சீரியசா  ஹாஸ்பிடல்ல  இருக்கும்போது  கிளம்புவாரா? ( அவர் கிளம்பினாத்தான்  ஆள்  மாறாட்ட  பிராசஸ்  நடக்கும்  என்ற  திரைகக்தை சவுகர்யத்துக்காக   இருந்தாலும் )


4  நாயகி  ஆபரேஷனுக்குப்பின் டிஸ்சார்ஜ்  ஆகி  வீட்டுக்கு  வந்ததும்  அவரைக்காண  வரும்  அம்மா, அப்பா  விடம்  நாயகன்  அவர்  ரெஸ்ட்  எடுக்கனும்னு  சொன்னதும் உடனே  சரி  என  கிளம்பிடறாங்க . . மக  சரியாகும்   வரை  கூட  இருக்க  மாட்டாங்களா?

5  நாயகி  நாயகனைப்பற்றிய  ஒரு  விஷயத்தைப்புகாராக  வாட்சப்  வாய்ஸ்  மெசேஜ்  ஆக  அம்மாவுக்கு  அனுப்பி  இருக்கிறார். அதைக்கேட்ட  அம்மா  வுக்கு   அப்போது  போலீசில் புகார்  கொடுக்க  வில்லை , சரி , மகள்  விபத்தை சந்தித்ததும்  சந்தேகம்  வரவில்லையா?


6  நாயகி  நாயகனின்  நண்பனின்  வாக்குமூலத்தை  செல்ஃபோன்  வீடியோவில் பதிவு  செய்து  விட்டு  அவரை  ரிலீஸ்  செய்கிறார், ஒரு  எச்சரிக்கையோடு , எனக்கு  ஏதாவது  ஆபத்து  நடந்தால்  இந்த  வீடியோ   வைரல்  ப்ண்ணி  விட்டுடுவேன்  என்கிறார். அவர்  ஒரி பெண், அப்போதே  அவரைத்தாக்கி  செல் ஃபோனை  பிடுங்கி  இருக்கலாமே? நண்பன்  ஏன்  அதை  செய்யவில்லை ?


7 வீட்டுக்குள்  சி சி டி வி  கேமரா  இருப்பது  தெரிந்தும்  நாயகன்  எப்படி  நாயகியிடம்  ஒப்புதல்  வாக்குமூலம்  தருகிறான்? அது  ரெக்கார்டு  ஆகும்  என  தெரியாதா?


8  நாயகி  இப்போது  ஒரு  கன்னிப்பெண். ஆனால்  பிளாஸ்டிக்  சர்ஜரி   செய்து  மேரேஜ்  ஆன  பெண்ணின்  முகம்  பெற்று  இருக்கிறார். நாயகன்  மேல்  தரும்  புகாரின்  படி  அவரை  செக்கப்  செய்தால்  கர்ப்பம்  இல்லை , கன்னிப்பெண்  என்பது  தெரிந்து  விடுமே?


9  நாயகனின் தோழி  இடது  கைப்பழக்கம்  உள்ளவர் , பிளாஸ்டிக்  ச்ர்ஜரிக்குப்பின்  முகம்  மாறும், சரி , இடது  கைப்பழக்கமும்  மாறுமா? 


10  கோர்ட்டில்  வக்கீல்  வாதிட்டதும்  அவரின்  உதவியாளர்  கோர்ட்  வளாகத்திலேயே  கை  தட்டுகிறார். ஜட்ஜ்  ஒண்ணும்  சொல்லலை.   இதுக்கு  எல்லாம்  அனுமதி  கிடையாதே?


11  வழக்கமா  ஜட்ஜ்  தான் ஆர்டர்  ஆர்டர்  என்பார்,  இதில்  வக்கீல்  தன்  வாதத்துக்கு  ஆடியன்ஸ்  தரப்பில்  எகத்தாளமான  சிரிப்பு  வந்ததும்  ஆர்டர்  ஆர்டர்  என்கிறார்


12   க்ளைமாக்சில்  வரும்  அந்த  கோர்ட்  ரூம் சீனே  தேவை  இல்லாதது. நாயகியிடம்  இருக்கும்  ட்ரம்ப்  கார்டான  நண்பனின்  ஒப்புதல்  வாக்குமூலமே  போதும், ஆனால்  அதை  யூஸ் பண்ணவே  இல்லை 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  ஏ  சர்ட்டிகேட்  கொடுத்திருப்பது  கண்ட்டெண்டுக்காக,  காட்சி  ரீதியாக  கிளாமரோ  வன்முறையோ  இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  க்ரைம்  த்ரில்லர்  ரசிகர்கள்  பார்க்கலாம் , சுமார்  ரகம்  தான்  , ரேட்டிங்  2.25 / 5