Friday, February 03, 2023

ரன் பேபி ரன் (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்)

 


1998 ல் ரன் லோலா ரன்  எனும்  ஜெர்மானிய  த்ரில்லர்  படம்  ரிலீஸ்  ஆனது. வெறும் 2  மில்லியன்  டாலர்  செலவில்  எடுக்கப்பட்டு  23  மில்லியன்  டாலர்  வசூல் செய்த  சூப்பர்  ஹிட்  படம். டைட்டிலைப்பார்த்ததும்  இந்தப்படத்தின்  கதையாக  இருக்குமோ  என்ற  சந்தேகம்  வந்தது, ஆனால்  இரண்டும்  மாறுபட்ட  வெவ்வேறு  கதை. டைட்டிலில்  மட்டுமே  ஒற்றுமை .அதே  போல  2012 ஆம்  ஆண்டு  ஜோஷி  இயக்கத்தில்  இதே  டைட்டிலில்  ஒரு  மலையாளப்படம்  ரிலீஸ்  ஆகி  உள்ளது. அந்தக்கதையும்  வேறு 

ரேடியோ  ஜாக்கியாக  இருந்து  காமெடியனாக  மாறிய ஆர் ஜே  பாலாஜி  பின் பிரமோஷன் கிடைத்து  நாயகனாக மூக்குத்தி  அம்மன் , எல் கே ஜி  , வீட்ல  விசேஷம்    ஆகிய  படங்களில்  நடித்து  நல்ல  பெயர்  எடுத்தார். இந்தப்படத்தில்  முதன்  முதலாக  த்ரில்லர்  சப்ஜெக்டில்  நடித்துள்ளார். 2  மணி  நேரப்படத்தில்  ஒரு  இடத்தில்  கூட  அவரது  வழக்கமான  ஒன்  லைனர்  கமெண்ட்டோ  காமெடியோ  இல்லாத  மாறுபட்ட  கேரக்டர்  டிசைன் 

ஸ்பாய்லர் அலர்ட்

மர்மமான  முறையில்  ஒரு  பெண்  இறந்து  விடுகிறார். அந்த  இறப்பு  சம்பந்தமாக  போலீஸ்  இறந்து  போன  பெண்ணின்  தோழியைத்தேடி  வருகிறது. போலீசிடமிருந்து  தப்பிக்க  மறைந்து  , ஒளிந்து  ஓடும்  அந்தப்பெண்  நாயகனின்  உதவியை  நாடுகிறாள் . நாயகனுக்கு  அப்போதுதான்  திருமணம்  நிச்சயம்  ஆகி  இருக்கிறது. நிச்சயக்கப்பட்ட  பெண்ணுடன்  ஷாப்பிங்  வந்த  இடத்தில்  தான்  அந்தப்பெண்  நாயகன்  காரின்  பின்  சீட்டில்  ஒளிந்து  கொண்டு  உதவி  கேட்கிறாள் . நாயகன்  அந்தப்பெண்ணுக்கு  உதவ  முன்  வருகிறான். ஒரு  கட்டத்தில்  அந்தபெண்ணும்  மர்மமான  முறையில்  இறந்து கிடக்கிறாள்


இப்போது  சிக்கலில்  மாட்டிக்கொண்ட  நாயகன்  அதில்  இருந்து  எப்படி  தப்பிக்கிறார் ? உண்மையான  கொலையாளியை  எப்படிக்கண்டுபிடிக்கிறார்? இரண்டு  கொலைகளுக்கும்  காரணம்  என்ன? என்பதை  ஒரு  பொலிடிக்கல்  த்ரில்லராக  திரைக்கதை  விளக்குகிறது 


முதல்  பாதியில்  அந்தப்பிணத்தை  மறைக்க  , போலீசிடம்  இருந்து  தப்ப  நாயகன்  என்ன  செய்கிறார்  என்பது  விறுவிறுப்பாகவும்,  இடைவேளைக்குப்பின்  உண்மையான  கொலையாளியை  அவர்  எப்படிக்கண்டுபிடிக்கிறார்  என்பதை  கொஞ்சம்  விறுவிறுப்பு  குறைவாகவும்  சொல்லப்பட்டிருக்கு 


ஏழைகளாப்பிறந்தாலும்  நன்றாகப்படித்து  நல்ல  மதிப்பெண்களுடன்  கல்லூரியில்  உயர் கல்வி  பயிலும்  ஏழை  மாணவிகளை  அகற்றி  அங்கே  பண  பலத்தின்  மூலம்  பணக்காரர்கள்  எப்படி  ஆக்ரமிப்பு  செய்கிறார்கள்  எனற  கதைக்கருவைத்தான்  படைத்திருக்கிறார்கள் 


கதையின்  நாயகனாக  ஆர்  ஜே  பாலாஜி.  வழக்கமான  காமெடியனாக  இல்லாமல்  டாக்டர்  படத்தில்  சிவகார்த்திகேயன்  படம்  முழுக்க  உம்மென்று  வருவது  போல  சீரியஸ்  ரோலில்  நடித்திருக்கிறார். மாறுபட்ட  நடிப்பு 


 அவரிடம்  உதவி  கேட்கும்  பெண்னாக  ஐஸ்வர்யா  ராஜேஷ்  வருகிறார். சிறிது  நேரமே  வந்தாலும்  நல்ல  நடிப்பு . இஷா  தல்வார் வந்தவரை  ஓக்கே  தான். ராதிகா  சரத்குமார், ஸ்ம்ருதி  வெங்கட், பகவதி பெருமாள் , ஹரீஷ் பெராடி , விவேக்  பிரசன்னா   போன்றவர்கள்  கொடுத்த  பாத்திரத்தை  கச்சித்கமாக  செய்திருக்கிறார்கள் 


ஒரு  த்ரில்லர்  படத்துக்கு  முக்கியமான  தேவையான  பரபரப்பான  த்ரில்லர்  இசையை  சாம்  சிஎஸ்  வழங்கி  இருக்கிறார்.திரைக்கதை  இயக்கம்  ஜெயன்  கிருஷ்ணகுமார்


 முதல்  பாதி  திரைக்கதை  மிக  வேகமாக  விறுவிறுப்பாக  செல்கிறது.  ஏகப்பட்ட  கதாபாத்திரங்கள் . கொலையாளி  இவராக  இருக்குமோ  அவராக  இருக்குமோ  என  ஒவ்வொருவராக  சந்தேகப்பட  வைத்து  பின்  முடிச்சை  அவிழ்க்கும்  டெம்ப்ளேட்  கதைதான், ஆனால்  பின் பாதியில்  விறுவிறுப்பு    குறைவு 


ஆர்  ஜே  பாலாஜியின்  வித்தியாசமான  நடிப்பைப்பார்க்க  விரும்புபவர்கள்  பார்க்கலாம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1 நாயகி  நாயகனிடம்  தனக்கு  என்ன  பிரச்ச்னை  என்பதை  சொல்லாமல்  ஏன்  இழுத்தடிக்கிறார்? என்பதற்கு  தெளிவான  பதில்  இல்லை 


2  நாயகனுக்கும் , நாயகிக்கும்  எந்த  வித  தொடர்பும்  இல்லை , பின்  ஏன்  நாயகன்  தன் வருங்கால மனைவியிடம்  அந்த  விஷயத்தை  மறைக்க  நினைக்கிறார் ?


3   போலீசுக்கே  கிடைக்காத  தடயங்கள் , விபரங்கள்  நாயகனுக்கு  எப்படி  கிடைக்கின்றன ?


 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  த்ரில்லர்  ரசிகர்கள்  பார்க்கலாம் , ஆனந்த  விகடன் அளிக்க  இருக்கும்  மார்க்  ( என்  யூகம் - 41 .  ரேட்டிங் 2.5 / 5 



YOU PEOPLE (2023) - ஆங்கிலம் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி மெலோ டிராமா ) @ நெட் ஃபிளிக்ஸ்


காமெடி  கலக்கல்  மன்னன்  எடி  மர்ஃபி  நீண்ட  இடைவெளிக்குப்பின்  நடித்திருக்கும்  படம்  இது ஆனால்  இதில்  அவர்  நாயகன்  அல்ல , நாயகியின்  அப்பாவாக  குணச்சித்திரக்கேரக்டர் . இது  காமெடி  மெலோ  டிராமா  படம்  தான்  ஆனால்  வழக்கமாக  எடி  மர்ஃபி யின்  பிராண்டட்  காமெடி  இதில்  இருக்காது 

1980 களில்  பாரதிராஜா  உட்பட  பல இயக்குநர்களின்  படங்களில்  காதலும்  ஜாதி மத  வேறுபாடுகளும்  இருந்தன.  ஏகப்பட்ட  காதல்  படங்கள்  வெளியானது , ஹிட்  ஆனது , அதே  பாணியில் இந்த 2023  லும் இன  நிற  வேற்றுமைகளால்  ஏற்படும்  காதலர்களுக்கான  பிரச்சனைகளைப்பற்றி  பேசும்  படம்  இது 

  ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன் ஒரு  வெள்ளை  இனத்தவன் .  நாயகி  ஒரு  கறுப்பினப்பெண்.  இருவரும்  ஒரு  கார்  பயணத்தில்  சந்திக்கிறார்கள்  , பழகுகிறார்கள்  டேட்டிங்  போகிறார்கள்  , இரு  குடும்பத்து  பெரியவர்களும்  சந்திக்கிறார்கள் 


இதில்  நாயகியின்  அப்பாவுக்கு  நாயகனைப்  பார்த்ததுமே  பிடிக்கவில்லை , அதனால்  கிடைக்கும்  எல்லா  சந்தர்ப்பங்களிலும்  அவனை  மட்டம்  தட்டுவது , கிண்டல்  செய்வது , கடுப்பேற்றுவது ,  அவர்கள்  இன  ஆட்களிடம்  வகையாக  மாட்டி  விடுவது  என  அவர்கள்  காதல்  பிரேக்கப்  ஆக  என்ன  என்ன  உள்ளடி  வேலைகள்  செய்ய  முடியுமோ  அவற்றை  எல்லாம்  செய்கிறார்


  நாயகனின்  அம்மாவுக்கு  நாயகியை  மிகவும்  பிடித்து  இருக்கிறது , ஆனால்  அவர்  எனக்கு  கறுப்பின  மருமகள்  என  பலரிடம்  பெருமையாக  சொல்கிறார்.  அது  நாயகிக்குப்பிடிக்கவில்லை  .  நார்மலாக  இல்லாமல்  அவர்  ஏதோ  தியாகம்  செய்வது  போல  தனக்கு  வாழ்க்கை  கொடுப்பது  போல  பேசுவது  பிடிக்கவில்லை . நாயகனின்  அம்மா  அதாவது  நாயகியின்  மாமியார்  தன்  மருமகளின்  அழகைப்புகழ்ந்தால்  கூட  நான்  ஒன்றும்  பொம்மை   இல்லை , என்னை  சக  மனுஷியாக  ட்ரீட்  பண்ணினா  போதும்  என்கிறாள் ‘


 பல  சந்திப்புகள்  பல  நிகழ்வுகள்  நடந்தபின்  நாயகன்  நாயகி  இருவரும் நமக்குள்  நம்ம  ஃபேமிலிக்கு  இது  ஒத்து  வராது  என  பிரேக்கப்  செய்கிறார்கள் 


 இதற்குப்பின்  இவர்கள்  வாழ்க்கையில்  நடந்தது  என்ன? என்பது  க்ளைமாக்ஸ் 

’நாயகனாக  ஜோனா  ஹில்  அடக்கி  வாசித்து  மனங்களைக்கொள்ளை  கொள்கிறார். பல  காட்சிகளில்  நடிக்க  நல்ல  வாய்ப்பு 


நாயகியாக   லாரன்  லண்டன்  சிறப்பான  பங்களிப்பு , அவரது பலவித  ஹேர்  ஸ்டைல்  கலக்கலாக  அமைந்திருக்கிறது 

  நாயகியின்  அப்பாவாக  கிட்டத்தட்ட  வில்லனாக  எடி  மர்ஃபி , வெறுப்பு  வருவது  போல்  நடந்து  கொள்வது  கச்சிதம் 


நாயகனின்  அம்மாவாக  வரும்  ஜூலியா  லூயிஸ்  மிக  இளமையாக  நாயகியின்  தங்கை  போல  இருப்பது  வியப்பு , இவரது  நடிப்பும்  சிறப்பு


 வசனங்கள்  பல  இடங்களில்  புருவங்களை  உயர்த்த  வைக்கிறது / அதிகபட்சம்   ஆறு பேர்கள் தான்  மொத்தப்படத்தையும்  ஆக்ரமிக்கிறார்கள்


அதிக  செலவில்லாமல்  மினிமம்  பட்ஜெட்டில் எடுக்கபப்ட்ட  நல்ல  ஃபேமிலி  மெலோ டிராமா   இது


 ஏ  சர்ட்டிஃபிகேட்  கொடுக்கப்பட்டிருந்தாலும்  அது  வசனத்துக்காகத்தான் ,  காட்சி  ரீதியாக  அடல்ட்  கண்ட்டெண்ட்  எதுவும் இல்லை 


கென்யா  பேரிஸ்  இயக்கம்  கனகச்சிதம் .,  க்ளைமாக்ஸ்  காட்சி  காதலுக்கு  மரியாதை  படத்தை  நினைவு  படுத்துகிறது .  2  மணி  நேரம்  ஓடும்  இந்தப்படம்  நெட்  ஃபிளிக்ஸ்  ஓ டி டி  யில்  வெளியாகி  உள்ளது


சபாஷ்  டைரக்டர்


1   நாயகியின்  மாமியார்  வெள்ளைக்காரர் , நாயகி  கறுப்பினத்தவர், இருவரும்  ஒரு  பியூட்டி  பார்லர்  க்கு  போறாங்க , அது  மாமியார்  ரெகுலராக  வரும்  இடம்  தான் , மருமகளுக்கு  ஹேர் கட்  பண்ண  அப்பாயிண்ட்மெண்ட்  வாங்க  வந்தவர்  ரிசப்ஷனிஸ்ட்  லேடி  ஃபோனில்  பேசிக்கொண்டே  வெயிட்  பண்ணுங்க  என  கை  காட்டியதால்  வெயிட்  செய்தவர்  அவர்களுக்குப்பின்  வந்த  ஒரு  வெள்ளைக்காரப்பெண்ணை  மட்டும்  உள்ளே  அலோ  பண்ணியதைப்பொறுக்க  மாட்டாமல் இது  ரேசிசம் ( வெள்ளை - கறுப்பின நிற  பாகுபாடு ) அவரிடம்  சண்டை  போடும்போது   அனுமதிக்கப்பட்ட  பெண்  அங்கே  பணி  புரியும்  சக    ரிசப்ஷனிஸ்ட்  என  அறிந்ததும் அசடு  வழியும்  இடம்   கலக்கல்   காமெடி 


2   நாயகியின்  தந்தை  ஒரு  முஸ்லீம். அவர்  தன்  தலையில்  அணிந்திருக்கும்  குல்லா வின்  மகிமை  பற்றி  பேசிக்கொண்டிருக்கும்போது  நாயகனின்  அம்மா  எதேச்சையாக  டைனிங்  டேபிள்  பக்கம்  வந்தவர்  மெழுகுவர்த்தியை  தட்டி  விட  அது  அவர்  தொப்பியை  எரிக்க  அதை  கீழே  போட்டு  மிதித்து  நெருப்பை  அணைக்கும்  நாயகன்  அப்பாடா  பிரச்சனை  முடிந்தது  என  சொல்லும்  சீனில்  நாயகியின்  முறைப்பு... செம  

3  நாயகன்  தன்  மாமனாருடன்  காரில்  டிரைவ்  போய்க்கிட்டு  இருக்கும்போது  ஒலிக்கும்  பாடலைப்பற்றி  வேண்டும்  என்றே  சிலாகித்து  பொய்யாய்  பாராட்ட    மாமனார்  இந்த  சாங்  பற்றி  சொல், டைட்டில் என்ன  ? என  மடக்குவதும்  நாயகன்  சொதப்புவதும்  காமெடி 


4  மருமகனை  மட்டம்  தட்ட  முடிவெடுத்த  மாமனார்    கறுப்பினத்தவர்  ஆடும்  பேஸ்கட்  பால்  கிரவுண்டில்  மருமகனை  கோர்த்து  விட  அவர்  தடுமாறும்  தருணங்களை  வீடியோ  எடுத்து  சந்தோஷப்படுபவர்  பிறகு  மருமகன்  பிரமாதமாக  ஆடும்போது  அதை  கேமராவில்  கேப்சர்  பண்ணாமல்  அதிர்ந்து  போய்  பார்க்கும்  காட்சி  கூஸ்பம்ப்  சீன்  என்றால்  அப்போது  நாயகன்  என்ன  மாமா? இப்போ  வீடியோ  எடுக்கலையா?  என  கேட்பது  செம 


5  எதிர்பார்க்காத  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  கச்சிதம் 




  ரசித்த  வசனங்கள் 


1  உனக்கு  கேர்ள்  ஃபிரண்ட்  இருக்காளா?


 இல்லை ‘


 அதை  ஏன்  இவ்ளோ  சோகமா  சொல்றே?


2  சமுதாயத்தில்  மிக  ஆபத்தானவன்   யார்  தெரியுமா? தன்  கிட்டே  இழக்க  எதுவுமே  இல்லாதவன்  தான்


3   அப்பாவோட  பர்மிஷன்  வாங்கி  எல்லாம்  நான் டேட்டிங்  போறதில்லை , ஏன்னா  நான்  வளர்ந்துட்டேன்


4  அவங்களுக்கு  பேஸ்கட்  பால்  பற்றி  எதுவுமே  தெரியாது , ஆனா  பார்க்கற  பெண்களை  எல்லாம்  கைக்குள்ளே  போட்டுக்கனும்னு  நினைப்பாங்க 


5   நீ  என்னை  கரெக்ட்  பண்ணப்பார்க்கறேனு  நினைக்கறேன்,  ரொம்ப  தைரியம்  தான் 


6  நீ  என்  செல்லப்பையன் , உனக்கான  அழகான  அற்புதமான  பெண்ணை    செலக்ட்  பண்ணி  இருக்கே? எனக்கு  ஏன்  நோ  சொல்லத்தோணும் ?  எனக்கு  ஓக்கே  தான் , ஆனா  நம்ம  இனமா  இருந்திருந்தா  இன்னும்  நல்லா  இருந்திருக்கும் 


7  நீங்க  பாரம்பரியத்தை  அடிமைத்தனத்தோட  கம்பேர்  பண்றீங்க 


8  எங்க  அம்மாவைப்பற்றி  குறை  சொல்லாத , அவங்க  சில  சமயம்  முட்டாள்  தனமா  பேசுவாங்க, ஆனா  நல்லவங்க 


9  உங்க  அப்பா வுக்கு  காமெடி  சென்சே  இல்லை ,  எப்பப்பாரு  கோபமாவே  முகத்தை  வெச்சிருக்காரு 


 இதை  எங்க  அப்பாவோட  தனிப்பட்ட  குணமா  சொல்றியா ,?  டோட்டலா  கறுப்பினத்தவரே  அப்படித்தான்னு  சொல்ல    வர்றியா? 


10  நாம  வாழ்க்கைல  எப்படி  முன்னேறிப்போகறோம்?னு  தான்  யோசிக்கனும், அப்போதான்  நம்ம  ஆரம்பமே  அசத்தலா  வரும் 


11   எனக்கு  இப்போ  என்னவோ  போல்  இருக்கு,  பீரியட்ஸ்  வேற  மோசமா  இருக்கு ‘


  டியர், எனக்கு  35  வயசாகுது , இதுவரை  பீரியட்ஸ்  எனக்கு  வந்ததே  இல்லை , ஏதாவது  டாக்டரைப்பார்க்கனுமா?



12    நீ  நினைச்சபடி  நட,  உன்  கனவை  ஃபாலோ  பண்ணு  அப்டினு  உங்க  பொண்ணு  அடிக்கடி  சொல்லுவா


 சரி , நீ  உன்  கனவை  ஃபாலோ  பண்ணினா  என்  பொண்ணுக்கு  எப்படி  எப்போ  சாப்பாடு  போடுவே? 


13    நீ  ஏதோ  ஒரு  பார்க்  பற்றி  அடிக்கடி  சொல்வியே? அடிக்கடி  அங்கே  போவே அப்டினு  அந்த  பார்க்  பற்றி  என்  சொந்தக்காரங்க  கிட்டே  கேட்டேன், யாருக்குமே  அது  பற்றி  தெரில , கூகுள்ல  கூட  சர்ச்  பண்ணி  பார்த்துட்டேன், காணோம்


 அது  அது  வந்து   ரொம்ப  அபூர்வமான  பார்க் ,  அதான்  கூகுளில்  கிடைக்கலைனு  நினைக்கறேன் 


14  கறுப்பு  இனத்தவரைப்பொறுத்தவரை  ஒயிட்  இனத்தவர்  எல்லாரும்  சீட்டர்ஸ் (  ஏமாற்றுக்காரர்கள் )  இதை  நீங்க  கடந்து  வரனும் 


15   உனக்குத்தெரிஞ்சவங்க , பழக்கமானவங்க  எல்லாரும்  கொக்கெய்ன்  அடிப்பாங்க , ஆனா  நீ  மட்டும்  அடிக்க  மாட்டே?  சரிதானே? 


16   என்  ஆள்  எப்படி  இருக்கான் ?


 பார்க்கறதுக்கு    அடி  வாங்க  செஞ்சு  வெச்சவன்  மாதிரியே  இருக்கான் அளவா  அழகா


17  இந்த  மாதிரி  ஒரு  வெட்டிங்  பார்ட்டியை  நான் பார்த்ததே  இல்லை இத்தனைக்கும்  நான்  3  தடவை  கல்யாணம்  பண்ணி  இருக்கேன், அதுல  2  கல்யாணம்  கோர்ட்டுக்குள்ளே  நடந்தது 


18  இந்த  ஸ்டோரியோட  மாரல்  என்னான்னா  உங்க  ஓயிஃபை  மதிக்காத  பெண்  கூட  டேட்டிங்  போகாதீங்க 


19  இரு  வேறு  இடத்துல  இருந்து  வர்றவங்க  சேர்ந்து  வாழும்போது ஒருவருக்கொருவர்  தியாகம்  செய்து  வாழ  வேண்டி  இருக்கும் 


20   நீங்க  ஒரு  விஷயத்தை  நேசித்தால்  அதை  எல்லார்  கிட்டேயும்  ஷேர்  செய்வதை  விட  அதை  உங்களுக்குள்ளேயே  வைத்துக்கொள்வது  மிகவும்  நல்லது 


21  ஒரு  வீட்டை  உருவாக்குவது  என்பது  வெறும்  செங்கல்லை  வெச்சு  மட்டும் அல்ல ,   இரு  இதயங்களை  வைத்து 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -   காதலர்களுக்குப்பிடிக்கும். லவ்  அண்ட்  அரேஞ்ச்டு  மேரேஜ்  செய்பவர்கள்   அவசியம்  காண  வேண்டிய  ஃபேமிலி  மெலோ டிராமா  . ரேட்டிங் 2.75 / 5  




You People
You People Film Poster.jpg
Film poster
Directed byKenya Barris
Written by
Produced by
Starring
CinematographyMark Doering-Powell
Edited byJamie Nelsen
Music byBekon
Production
companies
Distributed byNetflix
Release dates
  • January 20, 2023 (Limited)
  • January 27, 2023 (Netflix)
Running time
118 minutes
CountryUnited States
LanguageEnglis

Thursday, February 02, 2023

ராங்கி (2022) தமிழ் - சினிமா விமர்சனம் ( லவ் ஆக்சன் த்ரில்லர் ) @ நெட் ஃபிளிக்ஸ்


2011ல்  மாபெரும்  வெற்றிப்படமாக அமைந்த  எங்கேயும்  எப்போதும்  படத்தின்  இயக்குநர்  எம்  சரவணன்  2015ல்  வலியவன்  எனும்  சுமார்  ரகப்படம்  தந்தார் . விக்ரம்  பிரபு  வாழ்க்கையில்   திருப்பு  முனையை  ஏற்படுத்திய   இவன்  வேற  மாதிரி   எனும்  படத்தை  2013ல்  தந்தார். ஆனாலும்  9  வருட  இடைவெளி. இப்போது   ஒரு  வித்தியாசமான  கதை  அம்சத்துடன்  ஒரு  படம்  தந்திருக்கிறார் 


1996ல்  அகத்தியன்  இயக்கிய  காதல்  கோட்டை ,1998ல்  மணி ரத்னம்  இயக்கிய தில்சே (உயிரே)  , 2018ல்  Timur Bekmambetov இயக்கிய ப்ரொஃபைல்   என்ற  படம்  இந்த  மூன்று  படத்தையும்  பட்டி  டிங்கரிங்  மன்னன்  அட்லீ இடம்  கொடுத்து  ஒரு  படம்  எடுக்கச்சொன்னால்  எப்படி  இருக்கும் ? அப்படித்தான்  இந்தப்படம்  இருக்கிறது


முறைப்படி  மூலக்கதை = : In the Skin of a Jihadist; by Anna Erelle  என்று தான்  டைட்டிலில்  வர  வேண்டும், ஆனால்  டைட்டிலில்  கதை - முருகதாஸ்  என  போடுகிறார்கள், அது  ஏன்  என  தெரியவில்லை 

spoler  alert

லிபியா  என்ற  நாட்டில்  எண்ணெய்  வளம்  அதிகம்  இருக்கிறது. அந்நாட்டு  அதிபர்  எண்ணெய்  விற்கும்போது  தங்கத்துக்கு  மட்டும்  தான்  விற்பேன்  என  கறாராக  இருக்கிறார், இதனால்  அமெரிக்காவுக்கு  அந்த  நாட்டின்  அதிபர்  மீது  கோபம். உள்ளூரில்  கலவரக்காரர்களைத்தூண்டி  நாட்டில்  குழப்பத்தை  உண்டு  பண்ணுக்கிறது அமெரிக்கா, பின்  பஞ்சாயத்து  பண்ணுகிறேன் என்ற  போர்வையில்  நாட்டிற்கு  தன்  குழுவை  அனுப்பி  நாட்டை  தன்  வசம்  ஆக்க  முனைகிறது . புரட்சிகர  இளைஞர்கள்  அவர்களை  எதிர்த்து  இயக்கம்  ஆரம்பிக்கிறார்கள். அவர்களை  தீவிரவாதிகள்  என  அறிவித்து  அமெரிக்கா  அவர்களை  பிடிக்க  முயல்கிறது


 அந்த  தீவிரவாதிகளில்  ஒருவன்  17  வயதான  நாயகன். இவன்   போராட்டங்களில்  , சண்டையில்  ஈடுபட்ட  நேரம்  போக  ஃபேஸ் புக்கில்  ஒரு  பெண்ணுடன்  சேட்  செய்கிறான், அந்தப்பெண்ணுடன்  காதலில்  விழுகிறான்.இந்த  தூண்டிலை  வைத்து  அமெரிக்க  போலீஸ்  அந்த  தீவிரவாதியைப்பிடிக்க நாயகனின்  காதலியை  ;புழுவாகப்பயன்படுத்த நினைக்கிறது 


 நாயகி  ஒரு  மீடியா  ரிப்போர்ட்டர்.  ஆக்சுவலாக  நாயகனுடன்  சேட்  செய்வது  நாயகி தான்.  ஆனால்  தன்  அண்ணன்  மகள்  ஃபோட்டோ வை  வைத்து  ஃபேக்  ஐடி யில்  தான்  சேட்  செய்கிறார். அவருக்கு  காதல்  எல்லாம்  இல்லை அவருக்கு  பரபரப்பான  நியூஸ்  கிடைக்க  வேண்டும்  என்பதற்காக  இதை  செய்கிறார். நாயகியின்  அண்ணன்  மகளுக்கு  நாயகன்  யார்  என்றே  தெரியாது , இன்னும்  தெளிவாகச்சொல்ல  வேண்டும்  என்றால் நாயகன்  காணும்  ஃபோட்டோவில்  இருக்கும்  நபர்  வேறு ,  நாயகனுடன்  சேட்  செய்யும்  நபர்  வேறு , இருவருக்கும்  நாயகன்  மீது  காதல்  கிடையாது 


  ஒரு  கட்டத்தில்  நாயகனை  போலீஸ்  சுட்டுக்கொல்ல  பிளான்  போடும்போது   நாயகி  என்ன  முடிவு  எடுக்கிறார்  என்பதே  க்ளைமாக்ஸ்   


நாயகியாக   த்ரிஷா  பிரமாத,மாக  நடித்திருக்கிறார்.  ஓப்பனிங்  சீனில்  தன்னிடம்  வாலாட்டும்  போலீஸ்  ஆஃபீசருக்கு  பாடம்  கற்பிக்கும்  இடத்தில்  ஃபோர்  அடிக்கிறார்  எனில்  தன்  அண்ணன்  மகளிடம்  சேட்  செய்த  18  ஆண்களை  ஹோட்டல்  ரூம்க்கு  வரச்சொல்லி  நோஸ்  கட்  கொடுக்கும்  இடத்தில்  சிக்சர்  அடிக்கிறார் 


நாயகியின்  அண்ணன்  மகளாக  அனஸ்வரா   ராஜன்  அழகாக  வந்து  போகிறார். நாயகியின்  அண்ணியாக  லிசி  ஒரு  செண்ட்டிமெண்ட்  வசனம்  பேசுவதில்  கவனம்  பெறுகிறார்


சத்யாவின்  பிஜிஎம்  பரபரப்பாக  படத்தைக்கொண்டு  செல்கிறது  லைவ்  லொக்கேஷன்களில்  படத்தைப்பதிவு  செய்த  வகையில்  சக்திவேலு வின் ஒளிப்பதிவு  அருமை . 2  மணி  நேரத்தில்  கனகச்சிதமாக  ட்ரிம்  பண்ணிய  எடிட்டர்  சுபாரக்  பாராட்டுப்பெறுகிறார்


 எம்  சரவணனின்  வசனங்கள்  படத்துக்குப்பெரிய  பிளஸ், ஆனால்  திரைக்கதையை  இன்னும்  வலுவாக  எழுதி  இருந்தால்  மாறுபட்ட  படமாக  மலர்ந்திருக்கும்.


சாதாரண  மீடியா  ரிப்போர்ட்டரான  நாயகி  லேடி  ஜேம்ஸ்பாண்ட்  போல  பறந்து  பறந்து  சண்டை  சாகசம்  செய்வது  , போலீஸ்  - தீவிரவாதி  துப்பாக்கி  சண்டையில்  அத்தனை  பேர்  இறக்க  நாயகிக்கும்  நாயகியின்  அண்ணன்  மகளுக்கும்  ஒரு  கீறல்  கூட  விழாதது   என   விடை  இல்லாக் கேள்விகள்  நிறைய உண்டு 




 ரசித்த  வசனங்கள்: 


1   நம்ம  ஊர்  அரசியல்வாதிகள்  மக்கள்  நலனுக்காகவா  பாடுபடப்போறாங்க ? ஃபாரீன்  போய்  இங்கே  எங்க  நாட்டு  மக்கள்  உங்களுக்கு  அடிமையா  வேலை  செய்யத்தயாரா  இருக்காங்க, வந்து  நீங்க  ஓனரா  இருங்கனு  கேட்கப்போறாங்க.. வேற  என்னத்தைப்பேசிடப்போறானுக ?


2   ஆபத்தே  இல்லாத  விஷயத்தைப்பற்றி  எழுதி  நானும்  ரிப்போர்ட்டர்தான்  காட்டிக்குவோம் 


3  ஏம்மா, ஒரு  ரிப்போர்ட்டருக்கு  இந்நேரத்துல  இங்கே  என்ன  வேலை ?


 சார் போலீஸ்க்கு  இங்கே  என்ன  வேலை ?


 க்ரைம்  நடக்காம  பார்த்துக்கறோம்’’.. நீ?


க்ரைம்  நடந்தா  ரிப்போர்ட்  எழுதுவோம்’’

 பார்த்தும்மா, க்ரைம்  நடக்க  நீயே  ஒரு  காரணம்  ஆகிடாத 


4  மத்தவங்களுக்கு ஏதாவது  நடந்தா  அதை  நியூஸ்  ஆக்கி  ஹாட்  நியூஸ்னு  போட்டுடறோம், ஆனா  நமக்கே  ஒரு  சம்பவம்  நடந்தா  என்ன  பண்றதுன்னே  தெரியாம  பரிதவிச்சு  நிக்கறோம்


5   கோயிலுக்கோ  சர்ச்சுக்கோ  வர்ற  பொண்ணுங்களையே  விடாதவனுங்க  இவனுங்க, ஃபேஸ்  புக்  வந்த  பொண்ணுங்களை  விடுவானுங்களா?


6  நல்லவங்க  என்பதற்கு  சாமி  கும்பிடுவது   ஒரு  தகுதி  கிடையாது 


7  சாமி  கும்பிடற  பலரும்  அடுத்தவங்க  காசுல  உக்காந்து  சாப்பிடறவங்க தான் 



8   எல்லா  நாட்டுலயும்  ஆண்களுக்கு  பெண்களை  லவ்  பண்ண  நல்லா  தெரிஞ்சிருக்கு , ஆனா  தொடர்ந்து  அதே  பெண்ணை  லவ்  பண்ணதான்  தெரிய  மாட்டேங்குது 


9  தீவிரமாக  பணம்  சம்பாதிப்பவன்  கோடீஸ்வரன், தீவிரமாக  அரசியல்  பேசுபவன் அரசியல்வாதி , ஆனால்  தீவிரமாக  நியாயம்  கேட்பவன்  மட்டும்  நியாயவாதி  அல்ல  தீவிரவாதி  அல்லது  பயங்கரவாதி 

10   ஸ்கூலுக்கு  லீவ்  கேட்டு  லீவ்  லெட்டர்  எழுதும்போது  தாழ்மையுடன்  கேட்டுக்கொள்கிறேன்  அப்டிம்போம், ஜாதிச்சான்றிதழ்  வேணும்னா  தாழ்மையுடன்  கேட்டுக்கொள்கிறேன்  அப்டிம்போம்,, வருமானச்சான்றிதழ்  வேணும்னா  தாழ்மையுடன்  கேட்டுக்கொள்கிறேன்  அப்டிம்போம்,  எல்லாமே  தாழ்மையுடன்  கேட்கிறோம்னா  நாம்  எப்படி  எல்லாரும்  இந்நாட்டு  மன்னர்கள்  ஆவோம் ?


11  எங்களுக்கான  உரிமைகளை  நாங்களே  எடுத்துக்குவோம், உங்களை  மாதிரி  அடி  பணிந்து  தாழ்மையுடன்  கேட்டுக்கொண்டிருக்க  எங்களால்  முடியாது 


12 இவ்வளவு  கிரிட்டிகலான  சூழ்நிலைலயும்  தனக்குப்பிடிச்ச  பொண்ணுக்கு  எந்த  ஆபத்தும்  வந்துடக்கூடாதுனு  பசங்க  நினைக்கறாங்க  பாருங்க, இதுலதான்  பொண்ணுங்க  விழுந்துடறாங்க 


13   நாம  ஜெயிச்சா தான்  போராளி , தோற்றா  தீவிரவாதி   அப்டினு  சொல்லிடுவாங்க 

14  போலீஸ்  உன்னை  எதுக்காக  அரெஸ்ட்  பண்ணினாங்க ?


 இந்த  போலீஸ்க்கு  காரணம்  எல்லாம்  தேவை  இல்லை , பிடிச்சாலும்  அரெஸ்ட்  பண்ணுவாங்க , பிடிக்கலைன்னாலும்  அரெஸ்ட்  பண்ணுவாங்க 



 சபாஷ்  டைரக்டர்


1  டைட்டிலைப்பார்த்து , போஸ்டர்  டிசைனைப்பார்த்து  இது  ஒரு  அடிதடி  ஆக்சன்  படம்  என்று  வந்தால்  ஏமாந்து  போவோம். எதிர்பார்க்காத  ஒரு  சர்வதேச  அரசியலை  லவ்   ஆக்சன்  ஃபிலிம்  ஆக்கித்தந்த  விதம் 


2    மொத்தப்படமான  2  மணி  நேரக்காட்சிகளில்  முதல்  25  நிமிடக்காட்சிகள்  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லை  என்றாலும்  சுவராஸ்யமாகத்தந்து  அதை  மெயின்   கதையோடு  கனெக்ட்  பண்ணிய  விதம்  அருமை 


3  நாயகன்  நாயகியைப்பார்த்தது  இல்லை , நாயகிக்கு  நாயகன்  யார்  என்றே  தெரியாது . இருவரையும்  அறிந்த   த்ரிஷா வுக்கு  நாயகன்  மீது  பரிதாபம்  மட்டுமே  காதல்  இல்லை  என்ற  சுவராஸ்யமான  முடிச்சு  கச்சிதம் 

 


  லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


 1  தன்  அழகுக்கு  அங்கீகாரம்  கிடைக்கலைன்னா  ஒரு  பொண்ணு  ஃபேக்  ஐடில  அழகான  பெண்ணா  காட்டிக்கொள்ள  முயற்சிப்பது  சரிதான் , ஆனால்  அந்த  ஃபேக்  முகமா  தன்  நெருங்கிய  தோழி  முகத்தை  வைப்பது  அபாயம், மாட்டிக்குவாங்க .  எப்படி  அந்தப்பொண்ணு  அந்த   ரிஸ்க்  எடுக்குது ?


2  சேட்  செய்யும்  பெண்ணிடம்   தீவிரவாதி  நீ  எந்த  நாடு  எந்த  ஊர்  என  கேட்கிறான். ஐ பி  அட்ரசை  வைத்து  ஈசியாக  அவனே  கண்டு பிடித்து  விடலாமே?


3  தன்  அண்ணன்  மகளுக்கு  ஆபத்து  என  தெரிந்தும்  நாயகி  த்ரிஷா  எப்படி  அந்த  அட்ரசை  ஓப்பனாக  தீவிரவாதிக்குத்தருகிறார் ?


 சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -  குறைகள்  சில  இருந்தாலும்  பார்த்து  ரசிக்க  வேண்டிய  படம்  தான்  இது , இப்போது  நெட்  ஃபிளிக்சில்  ரிலீஸ்  ஆகி  உள்ளது   ரேட்டிங்  2.75 / 5 


Raangi
Raangi poster.jpg
Poster
Directed byM. Saravanan
Written byM. Saravanan
AR Murugadoss
Produced byAllirajah Subaskaran
StarringTrisha
CinematographyK. A. Sakthivel
Edited byM Subarak
Music byC. Sathya
Production
company
Distributed byLyca Productions
Release date
30 December 2022
Running time
121 min
CountryIndia
LanguageTamil

Wednesday, February 01, 2023

AN ACTION HERO (2022) (ஹிந்தி) - சினிமா விமர்சனம் ( க்ரைம் ஆக்சன் த்ரில்லர் ) @ நெட் ஃபிளிக்ஸ்

 spoiler  alert




நாயகன் சினிமாப்பட  உலகின்  சூப்பர்  ஸ்டார் கம்  ஆக்சன்  ஹீரோ.உலகம்  முழுக்க  இவருக்கு ரசிகர்கள்  இருக்கிறார்கள் . இவரிடம்  ஆடோகிராஃப்  வாங்க  , செல்ஃபி  எடுக்க  ஒரு  கூட்டம்  எப்போதும்  அவர்  பின்னால்  சுற்றிக்கொண்டே  இருக்கிறது.இது  வழக்கமாக  சினி  ஃபீல்டில்  நாம்  பார்க்கும்  விஷயம் தான் , புது  விஷயம்  என்ன  எனில் வில்லன் ஒரு  அரசியல்வாதி  கம் கேங்க்ஸ்டர். வில்லனின்  தம்பி நாயகனின்  ரசிகன். நாயகனுடன்  ஒரு  செல்ஃபி  எடுக்க  ஷூட்டிங்  ஸ்பாட்டுக்கு  காலை  முதல்  மாலை  வரை  காத்திருக்கிறான், ஆனால் நாயகனை  சந்திக்கவே  முடியவில்லை ,

இதனால்  கோபமடைந்த  வில்லனின்  தம்பி  நாயகனை  மாலையில்  ஃபாலோ  செய்து அவர்  காரை  ஓவர்  டேக்  செய்து  வாக்குவாதம்  செய்கிறான். இருவருக்கும்  ஒரு  தள்ளுமுள்ளு  நடக்கிறது. இதில்  நாயகன்  வில்லனின்  தம்பியை  ஒரு  கட்டத்தில்  பிடித்து  கீழே  தள்ளிவிடுகிறான்.  தரையில்  கிடந்த  கல்லில்  அவன்  தலை   பட்டு  ஆள்  ஸ்பாட்  அவுட். இது ஒரு  ஆக்சிடெண்ட்டல்  டெத். திட்டமிட்ட  கொலை  கிடையாது 


 ஆனால்  நாயகன்  பயந்து  விடுகிறான். சட்டப்படி  கேஸ்  நடந்தால்  அதிகபட்சம் 2 ஆண்டுகள்  மட்டுமே   தண்டனை  கிடைக்கும், ஆனாலும்  நாயகன்  ஒரு  பயத்தில்  அங்கே  இருந்து  எஸ்கேப்  ஆகிறான். லண்டன்  போய்  விடுகிறான். அங்கே நாயகனுக்கு  ஒரு  வீடு  சொந்தமாக  இருக்கிறது . அங்கே  வருகிறான். அங்கே  இருந்தே  தன்  வக்கீலுடன்  ஆலோசனை  செய்து  பேசி  வருகிறான்


வில்லனின்  தம்பி யின்  பிணம்    வில்லனின்  வீட்டில்  கிடத்தப்பட்டு  இருக்கிறது. வில்லன்  தன்  தம்பியைக்கொன்றவனைப்பழி  வாங்க  லண்டன்  கிளம்புகிறான்


இதற்குப்பின்  நடக்கும்  ஆக்சன்  அதகளம் தான்  மீதி  திரைக்கதை 

இது  போக  படத்தில்  ஒரு  எதிர்பாராத  திருப்பம்  க்ளைமாக்சில்  இருக்கிறது


நாயகனாக  ஆயுஸ்மான்  குரானா அசால்ட்டாக  ஆக்சன்  சீக்வன்சில்  அதகளம்  பண்ணி  இருக்கிறார், ஜாக்கிசான்  நடித்த  மிராக்கிள்ஸ்  படத்தில்  வரும்  சில ஆக்சன்  காட்சிகளை  முயற்சி  செய்து பிரமாதமாக  ஒர்க்  அவுட்  செய்திருக்கிறார். படத்தில்  அவருக்கு  ஜோடி  இல்லாத  கவலை  அவர்  முகத்தில் ஆங்காங்கே  தெரிகிறது 


வில்லனாக ஜெய்தீப்  இறுக்கமான  பாறை  முகத்துடன்  வருகிறார். வில்லனின்  கேரக்டர்  டிசைன்  இன்னும்  வலுவாக  வடிவமைக்கப்பட்டு  இருக்கலாம், மிஸ்  ஆகி  விட்டது 


லண்டனில்  வில்லன் செய்யும்  கொலைகள்  எல்லாம்  நாயகன்  மீது  பழி  விழுவது  நம்பும்படி  படமாக்கப்படவில்லை 


உலகம்  பூரா  பரவலாக  பேசப்படும்  சர்வதேச  தீவிரவாதி  ஒருவன்  நாயகனுடன்    செல்ஃபி  எடுத்து  அதை  வைரல்  ஆக்கும்  காட்சி  நம்பும்படி  இல்லை 


ஒரு  சாதாரண  கேஸை  சட்டப்படி  சந்திக்காமல்  நாயகன்  ஓவர்  ரிஸ்க்  எடுத்து ஏன்  பிரச்சனைகளில்  போய் இப்படி  மாட்டிக்கொள்கிறார்  என்ற  கேள்வி  அடிக்கடி  நம்  மனதில்  எழுகிறது 


ஒரு  அரசியல்வாதியும் , மீடியாக்களும்  நினைத்தால்  ஒரு  புகழ்  பெற்ற  ஹீரோவின்  பெயரை  மிக  சுலபமாகக்கெடுக்க  முடியும்  என்பதை  தெளிவாக  சொல்லி  இருக்கிறார்கள் 


 க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டை  பெரிதாக  நம்பி  இருக்கிறார்கள் , அது  மக்கள்  மனதில்  போதிய  அளவில்  இம்ப்பாக்ட்  கொடுக்க வில்லை


கவுசால் ஷாவின்  ஒளிப்பதிவு  லண்டனின்  பிரமாண்டமான  காட்சிகளைப்படம்  ஆக்கி  கண்  முன்  நிறுத்துகிறது , பராக் சப்ராவின்  பரபரப்பான  பின்னணி  இசை  திரைக்கதை  வேகமாக  பயணிக்க  உதவுகிறது , நினத்  கனோல்கரின்  எடிட்டிங்கில்  கனகச்சிதமாக 130  நிமிடங்களில்  ஷார்ட்  அண்ட்  ஸ்வீட்டாக  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்


படத்தில்  டூயட்டோ, பாடலோ  இல்லையே  என்று  ரசிகர்கள்  கேட்டுவிடக்கூடாதே  என்பதற்காக  க்ளைமாக்ஸில்  ஒரு  பாட்டு  சேர்த்திருக்கிறார்கள் 


 ஆக்சன்  த்ரில்லர்  ரசிகர்கள்  , ஆயுஷ்மான்  ரசிகர்கள்  பார்க்கலாம். 2022  டிசம்பர்  மாதம்  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆன  இந்தப்படம்  இப்போது  நெட்  ஃபிளிக்ஸ்  ஓ டி  டி  யில்  காணக்கிடைக்கிற்து



ரசித்த  வசனங்கள் 


1  சார், என்  பையன் ஃபிளைட்ல  ஜன்னல்  சீட்  ஆசைப்படறான், வெளில  வேடிக்கை  பார்க்கனுமாம், நீங்க  உங்க  சீட்டை  அவனுக்கு  விட்டுத்தர  முடியுமா?


 அப்படியே  ஜன்னல்  வழியா  வெளீல  தள்ளி  விட்டா   நல்லா  வேடிக்கை  பார்க்கலாம் செய்யவா?


2   நீ  புத்திசாலியா  இருந்தா  நான்  முட்டாளா  நடிப்பேன் 


3  பொதுவா  வயசுல  சின்னவங்க  தப்பு  பண்ணுவாங்க , வயசுல  பெரியவங்க  எப்படி  நடந்துக்கனும்னு  முன்னுதாரணமா  இருப்பாங்க 


4   ஒருத்தரை  ஃபாலோ  பண்ண  ரெண்டே  காரணங்கள்தான்  இருக்க  முடியும் , 1  காதல்  2  பழிக்குப்பழி


சபாஷ்  டைரக்டர் 


1  ஆக்சன்  ஹீரோ  டூப்  எல்லாம்  போடுவார்  என்றாலும்  இதில்  ஹீரோ  ஒரிஜினலாக  ரிஸ்க்  எடுத்து  ஃபைட்  போடுவதாக  காட்டி  இருப்பது  நம்பும்படி  இருக்கிறது , பல  காட்சிகள்  லாங்க்  ஷாட்டில்  ஒரிஜினலாக  ஹீரோவே  ரிஸ்க்  எடுத்து  ஃபைட்  சீன்களில்  நடித்திருக்கிறார் 


2 கமல்  நடித்த  விக்ரம்  பாகம் 1  படத்தில்  வருவது  போல  ஓடுவது , குதிப்பது , தாவுவது  என  பல ஜிம்மிக்ஸ்  வித்தைகளை  ஹீரோ  அசால்ட்டாக  செய்திருக்கிறார். பல  காட்சிகள்   ஜாக்கிசானை  இன்ஸ்பிரேசனாக  வைத்து  முயன்றிருப்பது  தெரிகிறது 


3  விறுவிறுப்பான  ஆக்சன்  த்ரில்லரில்  மொக்கை  காமெடி , ஹீரோயின் , டூயட்  என  ஸ்பீடு  பிரேக்கர்கள்  எதையும்  சேர்த்தாமல்  விட்டது  புத்திசாலித்தனம் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1   சிசிடிவி  இல்லாத  வனாந்திரப்பிரதேசத்தில்  தான்  அந்த  சம்பவம்  நடக்கிறது. ஹீரோவுக்கு  எதிராக  இருக்கும்  ஒரே  சாட்சி  காரின்  சைடு  மிரர்  உடைந்து  ஸ்பாட்டில்  விழுந்ததுதான் , ஹீரோ  அதை  எடுத்து விட்டு  கிளம்பி  இருந்தால்   ஈசியாக  தப்பி  இருக்கலாம் , அல்லது  போலீசுக்கே  தகவல்  சொல்லி  நிலைமையை  சொன்னாலே  போதும் 


2  ஹீரோவை  லண்டன்  போலீஸ்  , வில்லன்    வில்லனின்  அடியாட்கள்  எல்லாரும்  சுடுகிறார்கள் , அவை  எதுவுமே  ஹீரோ  மேல்  படுவதே  இல்லை 


3  வில்லன்  ஹீரோ  வீட்டில்  இருக்கும்  லண்டன்  போலீஸ்கள்  இருவரைக்கொலை  செய்கிறான், ஆனால்  ஹீரோவை  சந்திக்கும்போது  டக்னு  ஷூட்  பண்ணி  வேலையை  முடிக்காமல்  தண்டமா  டயலாக்  பேசிட்டு  இருக்கான்  


4  ஹீரோ  வில்லனை  காரின் பானட்டில்  அடைத்து  வைக்கும்போது  வில்லனின்  பாக்கெட்டை  செக்  செய்து  ஆயுதம் , செல் ஃபோன்  இவற்றை  அகற்ற  மாட்டானா?


5 ஹீரோ  யாரோ  ஒருவரின்  காரை அபகரித்து  லண்டன்  சாலையில்  10  கிமீ  போய்க்கிட்டே  இருக்கான்,  வில்லன்  அதே  போல்  ஒரு  அப்பாவியின்   காரை  அபேஸ்  செய்து  அவன்  பாட்டுக்கு  போய்க்கிட்டு  இருக்கான் . வண்டி  நெம்பரை  வைத்து  போலீஸ்  டிரேஸ்  பண்னாதா? செக்  போஸ்ட் , டோல்கேட்  எதுவும்  லண்டனில்  இருக்காதா?


6   ஹீரோவுக்குப்பின்னால்  வில்லன்  துப்பாக்கியில் ஷூட்  செய்ய  தயாராக  இருக்கிறான், அருகில்  ஒரு  தீவிரவாதி   இருக்கிறான்  ஹீரோ திரும்பியே  பார்க்காமல்  ஒரு  அசம்ப்சனில்  ஒரு  டர்ன்  பேக்  கிக்  கொடுக்க  வில்லனின்  துப்பாக்கி  அந்த  தீவிரவாதியை  ஷூட்  பண்ணுவது  எல்லாம்  காதில்  10  முழப்பூ  சுற்றிய  அனுபவம்  , 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ஆக்சன்  மசாலா  ப்ரியர்கள்  ரசிக்கலாம். ஜாலியா  போகுது  , ரேட்டிங் 2.25 / 5 



An Action Hero
An Action Hero film poster.jpg
Theatrical release poster
Directed byAnirudh Iyer
Written byNeeraj Yadav
Story byAnirudh Iyer
Produced byBhushan Kumar
Krishan Kumar
Aanand L. Rai
Starring
CinematographyKaushal Shah
Edited byNinad Khanolkar
Music byParag Chhabra
Production
companies
Distributed byAA Films
Release date
  • 2 December 2022
Running time
130 minutes[1]
CountryIndia
LanguageHindi
Box officeest. ₹15.8 crore[2]

Tuesday, January 31, 2023

நண்பகல் நேரத்து மயக்கம் (2023) - மலையாளம்-/ தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்


இயக்குநர்  லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி  கேரளாவில்  கொடி  கட்டிப்பறக்கும்  மாறுபட்ட  இயக்குநர். 2019ம் ஆண்டு  இவர்  இயக்கிய  ஜல்லிக்கட்டு எனும்  மலையாளப்படம்  ஆஸ்கார்  விருது  போட்டிக்கு   அனுப்பப்பட்டது. ஒளிப்பதிவில்  ஜால வித்தை  செய்த  படம் . 2017ல்  இவர்  இயக்கிய  அங்கமாலி டைரீஸ்  யதார்த்தமான  கதையை  பதிவு  செய்த  படம் . 2021ல்  ரிலீஸ்  ஆன  சுருளி  இவருக்கு  ஏராளமான  ரசிகர்களை  ஓ டி டி  மூலம்  பெற்றுத்தந்தது. வழக்கமாக  சின்ன  நடிகர்களை  வைத்து  படம்  எடுக்கும் இவர்  முதன்  முதலாக  மெகா  ஸ்டார்  மம்முட்டியை  வைத்து  படம்  தந்திருக்கிறார். இது  மம்முட்டியின்  சொந்தப்படம்  என்பதால்  எதிர்பார்ப்பு  எக்கச்சக்கமாக  எகிறியது 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  கேரளாவில்  இருந்து  தமிழ்  நாட்டுக்கு  டூர்  வருகிறார். வேளாங்கண்ணி  போய்  விட்டு  தன்  குடும்பம், உறவினர்களுடன்  கேரளா  ரிட்டர்ன்  போய்க்கொண்டிருக்கும்  சமயம்  வேனை  ஒரு  இடத்தில்  நிறுத்தச்சொல்கிறார். வேனில்  இருக்கும்  மற்றவர்கள்  எல்லாம்  உறங்கிக்கொண்டிருக்க  இவர்  மட்டும்  தனியாக  வேனை  விட்டு  இறங்கி  நடந்து  போய்  அருகில்  இருக்கும்  கிராமத்திற்கு  செல்கிறார்

அந்த  கிராமத்தில்  இருக்கும்  ஒரு  வீட்டில்  புகுந்து  அங்கே  லுங்கி  , சட்டை  மாற்றிக்கொண்டு  ஒரு மொபட்டை எடுத்துக்கொண்டு  ஊரை  சுற்றிப்பார்க்கக்கிளம்புகிறார். அந்த  ஊர்  மக்கள்  ஆரம்பத்தில்  அவரை    திருடன்  என  நினைக்கின்றனர்


 இதற்குள்  வேனில்  இருந்த  நாயகனின்  குடும்பத்தினர்  விழித்து  அவரைத்தேடி  கிராமத்துக்கு  வருகின்றனர் . ஆனால்  நாயகன்  அவர்களுடன்  வரத்தயார்  இல்லை . நீங்கள் எல்லாம்  யார்? என  அவர்களையே  கேள்வி  கேட்கிறார். குடும்பத்தினருக்கு  பயங்கர  அதிர்ச்சி 


அந்த  கிராமத்தில்  உள்ள  மனிதர்களின்  பெயரை  எல்லாம்  சரியாகச்சொல்லி  தனக்கு  அந்த  ஊரில்  நெடு நாள்  பந்தம்  உள்ளவர்  போல்  நடந்து  கொள்கிறார்


 இவருக்கு  முன்  ஜென்ம  நினைவு  வந்து  விட்டதா?  ஸ்பிலிட்  பர்சனாலிட்டியா?   என்பதை  பின்  பாதி  திரைக்கதை  விளக்குகிறது   


நாயகனாக  மம்மூட்டி, இரு மாறுபட்ட  பாத்திரங்களில்  அட்டகசமாக  அண்டர்  ப்ளே  ஆக்டிங்  செய்திருக்கிறார். ஓப்பனிங்  பில்டப்போ  , ஹீரோ டாமினேஷனோ  இல்லாமல்  கதையின்  நாயகனாக  வாழ்ந்திருக்கிறார்


படத்தின்  மிகப்பெரிய  பிளஸ்  மம்முட்டியின்  கேரக்டர்  டிசைன்.  பக்காவாக அவர்  பாத்திரம்  வடிவமைக்கப்பட்டு  இருக்கிறது. படத்தின்  மைனஸ்  அவரது  கேரக்டர்  தவிர  மற்ற  எல்லா  கேரக்டர்களுமே  ஏனோ  தானோ  என்று  தான்  டிசைன்  செய்து  இருக்கிறார்கள் 


ரம்யா  பாண்டியன்  சில  காட்சிகளில்  கண்களாலேயே  நடித்திருக்கிறார். இவருக்கு  கொஞ்சம்  வசனங்களும்,  சிறிது  ஸ்க்ரீன்  ஸ்பேசும்  தந்திருக்கலாம்


  கதை பெரும்பாலும்  தமிழக  எல்லையிலேயே  நடப்பதால்  உரையாடல்கள்  தமிழில்   அதிகம்  உள்ளது . ஒரு  தமிழ்ப்படம்  பார்ப்பது  போல்  தான்  உள்ளது 


படத்தில்  பின்னணி  இசை  என்று  தனியாக  எதுவும்  இல்லை . ஏற்கனவே  வெளி  வந்த  படங்களின்  பாடல்களை  , வசனங்களை  காட்சிக்கு  ஏற்றபடி    ரேடியோ , டி வி  மூலமாக பொருத்தி  இருக்கிறார்கள். சில  இடங்களில்  இந்த  உத்தி  ரசிக்க  வைக்கிறது, பல  இடங்களில்  போர்  அடிக்கிறது 


கவுரவம்  படத்தில்  இரு  மாறுபட்ட  சிவாஜி  ரோல்களில்  மம்முட்டி  நடித்து  காட்டும்  காட்சி  ஒரு  கிளாசிக்கான  காட்சி 


எஸ்  ஹரீசின்  திரைக்கதை  அமைப்பு மிக  மெதுவாக  நகர்கிறது.  தேனி  ஈஸ்வரின்  ஒளிப்பதிவில்  கிராமத்தைக்கண்  முன்  கொண்டு  வந்திருக்கும்  அழகிய  காட்சிகள் . 105  நிமிடங்கள்  மட்டுமே  ஓடும்  அளவு  எடிட்டர்  தீப்பு  எஸ்  ஜோசஃப்  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார் 

 இது  வழக்கமான  மசாலா  படம்  இல்லை  என்பதால்  பொறுமையாக  படம்  பார்க்கும்  ரசிகர்களுக்கு  மட்டும் தான்  படம்  பிடிக்கும்

சபாஷ்  டைரக்டர் (லியோ ஜோஸ்  பெள்ளிசேரி)


1  கமல்  நடித்த  பேசும்  படத்தில்  படம்  முழுக்க  வசனங்கள்  இல்லை, இந்தக்குறை  தெரியாமல்  இருக்க  இயக்குநர்  சிங்கீதம்  சீனிவாச்ராவ்  ஒரு  உத்தியைக்கையாண்டார். பின்னணியில்  ரேடியோ  பாட்டு ,  வசனம்  அவ்வப்போது  சுவரஸ்யமாய்  வருமாறு  பார்த்துக்கொண்டார், அது  நல்லா  ஒர்க்  ஆவுட்  ஆனது, அதே  டெக்னிக்கை  இந்த  இயக்குநர்  பின்பற்றி  இருக்கிறார்


2   சில்லுக்கருப்பட்டி  இயக்குநர்  எடுத்த  ஏலே  படத்தில்  வரும்  கிராமத்தில்  பல  காட்சிகளைப்படம்  பிடித்தது. அந்த்பப்டத்தின்  காட்சிகளை  அட்லீ  வேலை  செய்ததாக  அந்த  இயக்குநர்  குற்றம்  சாட்டினாலும்  ரசிக்கும்  விதத்தில் தான்  உள்ளது 


3      வீடு  வரை  உறவு , வீதி  வரை  மனைவி  காடு  வரை  பிள்ளை  கடைசி  வரை  யாரோ பாடலையும்   இருக்கும்  இடத்தை விட்டு  இல்லாத  இடம்  தேடி  பாட்லையும்  ப்ளேஸ்  செய்த  விதம் 


4  தேனி  ஈஸ்வரின்  ஒளிப்பதிவும்   லாங்க்  ஷாட்டில்  அவரது  மெனக்கெடல்களும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ்  , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1    ஒன்றே  முக்கால்  மணி  நேரம்  மட்டுமே  ஓடும்  அளவு கச்சிதமாக  ட்ரிம்  செய்யப்ப்ட்ட  படத்தில்  கதைக்கு  வர  முதல் 30  நிமிடங்கள்  எடுத்துக்கொண்டது   ஓவர் 


2   நாயகன்  ஊரில்  உள்ள  எல்லோரையும்  பேரை  சொல்லிக்கூப்பிடுகிறார், சில  சம்பவங்களை  நினைவு  கூர்கிறார், ஆனால்  சொந்த    மகளிடம்  ஒரு  வார்த்தை  கூட  ஃபேஸ்  டூ  ஃபேஸ்  பேசவில்லை , சொந்த  மனைவியிடம்  அன்பாக  பேசவில்லை . முக்கியமாக  இந்த  இருவர்  தானே  அவரை  அடையாளம்  காண  வேண்டும் ?


3   நாயகன்  ஜேம்ஸ் சுந்தரமாக  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  ஆகும்போது  அந்த  ஊர்  மக்கள்  அனைவரும்  அட  அவனை  மாதிரியே நடந்துக்கறானே  என  வியக்கின்றனர் , ஆனா  நமக்கு  சுந்தரம்  கேரக்டர்  காட்டப்படவே  இல்லை , அவரை  காட்டி  இருந்தால்தானே  நமக்கு  அது  புரியும் ? அது  இல்லாமல்  நாயகன்  எப்படி  நட்ந்து  கொண்டாலும்  அட  சுந்தரம்  மாதிரியே  இருக்கே  என  அவங்களே  சிலாகித்துக்கொள்ள  வேண்டியதுதான்


4  சுந்தரம்  காணாமல்  போய்  2  வருடங்கள்  ஆகின்றன  என  டயலாக்  வருது .  அவன் பால்  சப்ளை  செய்தவன் , இப்போது  நாயகன்  பால்  சப்ளை  செய்யப்போகும்போது  ஊர்  மக்கள்  வேண்டாம், வேறு  ஆள்  பால்  ஊற்றுகிறான்  என்கிறார்கள் , அப்போ  பசுவை  மட்டும்  வைத்து  அந்த  குடும்பம்  என்ன  பண்ணுது ? அந்த  வீட்டில்  சுந்தரத்தின்  அப்பா, மனைவி மகள்  என  3  கேரக்டர்கள்  யாராவது  பால் சப்ளை  செய்து  இருக்கலாமே? 


5  காணாமல்  போன  சுந்தரத்தின்  லுங்கி   சட்டையை  எதற்கு  கொடியில்  காய  வைத்திருக்கிறார்கள்? 


6  நாயகன்  சுந்தரத்தின்  மனைவியோடு  ஒரு  வார்த்தை  கூட  பேசவில்லை , ஆனால்  மனைவி  நாயகனை  சுந்தரம்  போலவே  ந்டந்து  கொள்வதாக  சிலாகிக்கிறார். அது  எப்படி ? 


சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட்  - இது அனைத்துத்தரப்புக்கான  படம்  அல்ல, மாறுபட்ட  கதை  அம்சம்  கொண்ட    படங்களை  ரசிப்பவர்களுக்கு  மட்டுமே , பொறுமையை  ரொம்ப  சோதிக்கும்  படம் ,  ஆனால்  பார்க்கலாம்  ரேட்டிங் 3 / 5 

Nanpakal Nerathu Mayakkam
Nanpakal Nerathu Mayakkam Title.jpeg
Theatrical release poster
Directed byLijo Jose Pellissery
Screenplay byS. Hareesh
Story byLijo Jose Pellissery
Produced byMammootty
Lijo Jose Pellissery
StarringMammootty
Ramya Pandian
Ashokan
CinematographyTheni Eswar
Edited byDeepu S. Joseph
Production
companies
Mammootty Kampany
Amen Movie Monastery
Distributed byWayfarer Films
Release dates
12 December 2022 (IFFK)
19 January 2023
CountryIndia
LanguagesMalayalam
Tamil[1]
Box office₹13cr[2]

பிகினிங் (2023) -தமிழ் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்)

 


ஒரு  பிரபலமான  நாளிதழ்  சண்டேன்னா  ரெண்டு  என  விளம்பரப்படுத்தி அதைப்புகழ்  பெற்ற  வாசகம்  ஆக்கியது . இப்போது  செல்ஃபோன்  உபயோகிப்பவர்கள்  பெரும்பாலும்  டூயல்  சிம்  ஃபோன்களைத்தான்  உபயோகிக்கிறார்கள் . தமிழ்  சினிமா  ஹீரோக்கள்  தங்கள்  வாழ்நாளில்  குறைந்த  பட்சம் ஒரே  ஒரு  டபுள்  ஹீரோ  சப்ஜெக்ட்  படத்திலாவது  நடித்து  விட  வேண்டும் என  கங்கணம்  கட்டிக்கொண்டு  இருக்கிறார்கள் . தமிழ்  சினிமாவில்  இரா  பார்த்திபன் , கமல் ஹாசன்  இருவர்  மட்டும் தான்  புதுமை  விரும்பிகளாக  இருக்க  வேண்டுமா?  இதோ நானும்  களத்தில்  இறங்குகிறேன்  என  ஒரு  புதிய  முயற்சியில்  பலரது  புருவங்களை  உயர  வைத்திருப்பவர்தான் இயக்குநர்  கம்  தயாரிப்பாளர்  ஜெகன்  விஜயா

ஆசியா  கண்டத்திலேயே  முதல்  முறையாக  வெளியாகும்  ஸ்பிளிட்  ஸ்க்ரீன் சினிமா  என்ற  அறிமுக  லேபிளுடன்  வரும்  படம்  இது. அது  என்ன  ஸ்பிளிட்  சினிமா? திரை  அரங்கில்  இருக்கும்  வெண்  திரை  இரண்டாகப்பிரிக்கப்பட்டு  இடது  புறம்  ஒரு  கதைக்கான  காட்சி  ஓடும் , வலது  புறம்  வேறு  ஒரு  கதைக்களம்  காட்சி  ஓடும் , பின்  ஒரு  சமயம்  இரண்டும்  இணைந்து  ஒரே  காட்சியாக  உருவாகும் . இதுதான்   ஸ்பிளிட்  ஸ்க்ரீன்  சினிமா . ஒரே  நேரத்தில்  இரு  காட்சிகள்  ஓடினால்  குழப்பமாக  இருக்காதா? வசனம்  கசமுசா என  ஓடுமே? என  கேள்வி  வரும், சாமார்த்தியமாக  அதை    டீல்  செய்திருக்கிறார்கள் . இடது   புறம்  ஓடும்  கதையில்  வசனம்  இருக்கும், வலது  புறம்  ஓடும்  கதையில்  காட்சிகள்  மட்டும்  நகரும், பேலன்சாக  படம்  போகும் 


சரி , படத்தின்  கதை  என்ன?  நாயகன்  மனவளர்ச்சி  குன்றியவர். திக்குவாய்  குறைபாடு  உள்ளவர். இவருக்குத்தேவையான  உணவை  தயார்  செய்து  விட்டு  இவரது  அம்மா  இவரை  வீட்டில்  ஒரு  அறையில்  வைத்து  பூட்டி  விட்டு  வேலைக்கு  சென்று  விடுவார். அம்மா  வேலைக்கு  சென்ற  பின்  இவர்  பாத்திரங்களை  எல்லாம்  கழுவி  விட்டு  டி வி  பார்ப்பார் . இதுதான்  இவரது  தினசரி  பழக்கம். இந்த  காட்சிகள்  இடது  புற  திரையில்  ஒரு  பக்கம்  ஓடுகிறது 


 நாயகி யை  சிலர்  ஒரு  சூட்கேஸ்க்குள்  வைத்து  கடத்தி  ஒரு  வீட்டின்  அறையில்  அடைத்து  விடுகின்றனர், பின்  நாயகியின்  காதலனையும்  கடத்துகின்றனர். நாயகி  அடைத்து  வைக்கபப்ட்ட  அறையில்  ஒரு    பழைய  அலைபேசி  கிடைக்கிறது , அதில்  சில  பட்டன்கள்  இல்லை , எனவே  போலீசுக்கு  ஃபோன்  போட  முடியவில்லை , அதனால்  கைக்கு  வந்த  ஏதோ  ஒரு  எண்ணுக்கு  கால்  பண்ணும்போது   அந்த  மனநலக்குறைபாடு  உள்ள  நாயகன்  செல் ஃபோனுக்கு  கால்  போகிறது 


 நாயகி  மிக  சிரமப்பட்டு  தன்  நிலையை  நாயகனுக்கு  விளக்குகிறார்.  அடைபட்ட  அறையில்  கிடக்கும்  நாயகியை  இன்னொரு  இடத்தில் அடைபட்டுக்கிடக்கும்  நாயகன்  எப்படி  காப்பாற்றினார்  என்பதே  மீதி  திரைக்கதை 


நாயகனாக  வினோத்  கிஷன் அற்புதமாக  நடித்திருக்கிறார். நந்தா  படத்தில்  சின்ன  வயது  சூர்யாவாக  வந்தவர்  இவர். அப்போதே  பர பரப்பாக  பேசப்பட்டார். கார்த்தி  நடித்த நான்   மகான்  அல்ல  படத்திலும்  நடித்திருக்கிறார். இவரது  முக  பாவனைகள்  , உடல்  மொழி  எல்லாம்  பிரமாதம்  , பாத்திரத்தின்  தன்மை  உணர்ந்து  நடித்திருக்கிறார்


நாயகியாக கவுரி ஜி  கிஷன்  கச்சிதமாக  நடித்திருக்கிறார். விஜய்  சேதுபதி  நடித்த  96  காதல்  காவியத்தில்  த்ரிஷாவின்  இளவயது  கதாபாத்திரமாக  ஸ்கூல்  மாணவியாக  வந்து  நம்  உள்ளங்களைக்கொள்ளை  கொண்டவர் தான்  இவர் . இவரது  பதட்டமான  முகமே  பாதி  நடிப்பை  பூர்த்தி  செய்து  விடுகிறது , தமிழ்  சினிமா  உலகில்  பய  முகம்  காட்டுவதில்  விற்பன்னர்கள்  யார்? , நூறாவது நாள்  புகழ்  நளினி யும்,  ஹலோ  யார்  பேசறது  புகழ்  ஜீவிதாவும் , அவர்களுக்கு  இணையான  பய  முகம்  இவருக்கு 


நாயகனின்  அம்மாவாக  ரோகினி  பொருத்தமான  தேர்வு 


நாயகியைக்கடத்தும்  வில்லனாக சச்சின்  எனும்  லகுபரன். இவர்  சைக்கோ  சிரிப்பு சிரிக்கும்போது  நமக்குக்கோபம்  வருவது  இவரது  கேரக்டர்  டிசைனுக்குக்கிடைத்த  வெற்றி 


படம்  முழுக்க  இரண்டே  இரண்டு  அறைகளில்  நடப்பதால்  ஒளிப்பதிவாளருக்கு  சவாலான  வேலை  தான் , வீரக்குமார்  கச்சிதமாக  அந்த  சவாலை  எதிர்கொள்கிறார். 111  நிமிடங்கள்  ஓடும்  அளவுக்கு  கச்சிதமாக  எடிட்டிங்கில்  படத்தை  ட்ரிம்  செய்திருக்கிறார்  எடிட்டர்  பிரேம்  குமார் .  இது  போன்ற  த்ரில்லர்  மூவிக்கு  எந்த  மாதிரி  பிஜிஎம்  பொருத்தமாக  இருக்கும்  என  சுந்தரமூர்த்திக்கு  நன்றாகவே  தெரிந்திருக்கிறது   


பாடல்கள்  இல்லாதது  படத்துக்கு  ஒரு  பிளஸ்


திரைக்கதை , இயக்கம்  ஆகிய  பொறுப்புகளோடு  தயாரிப்பிலும்  பங்கெடுத்திருக்கும்  ஜெகன்  விஜயா  தயாரிப்பு  நிறுவன  பெயர்  திருப்பதி  என  இருப்பதாலோ  என்னவோ  மூன்று  நாமம்  குறிக்கும்  111  என்பதையே  பட  டியூரேஷனாக  வைத்திருப்பது  சிறப்பு. மாறுபட்ட  ஒரு  அழகிய  முயற்சி   



Beginning
Directed byJagan Vijaya
Produced byVijaya Muthusamy
Jagan Vijaya
Starring
CinematographyVeerakumar
Edited byC. S. Premkumar
Music byK. S. Sundaramurthy
Production
company
Lefty Manual Creations
Distributed byThirrupathi Brothers
Release date
  • 26 January 2023
Running time
111 mins
CountryIndia
LanguageTamil