Saturday, March 26, 2016

கலைஞர் முதல்வர், கேப்டன் துணை முதல்வர் 1, குஷ்பூ துணை முதல்வர் 2 - ஸ்டாலின் அதிர்ச்சி

1  அப்பாவின் ஆதரவில் முன்னுக்கு வந்தவர் என யாரையும் எள்ளல் செய்யாதீர், நாம் அனைவருமே அம்மா, அப்பா ஆதரவில் முன்னேறியவர்களே!


==============


2 அரசியல்வாதிகளும் , பணமும், வெற்றியும்
1 கருணா”நிதி”
2 “ஜெய”லலிதா
3 வி”ஜய”காந்த்
4 அன்பு”MONEY"



==============

3  ஒரு நல்ல புகைப்படக்கலைஞனுக்குண்டான முதல் தகுதி  தன் ஃபோட்டோவை எடுப்பதில் ஆர்வம் காட்டாது  இருத்தல்


================


4 ஒரு நல்ல தலைவனுக்குண்டான தகுதி தான் செய்த  மக்கள் சேவையை மக்களிடம் சொல்லிக்காட்டாமல் இருத்தலே # உதா - காமராஜர், எதிர் மறை உதா - கலைஞர் , ஜெ


=================


5 படிக்காத பாமர மக்களைக்கவர்ந்த எம் ஜி ஆர், ஜெ வை விட , படித்த மக்களைக்கவர்ந்த, அவர்களை  ஏமாற்றுகிற, ஏமாற்றிய கலைஞரே திறமை சாலி


===============

6  இலங்கயைச்சேர்ந்த பெண் என்பதை நீட்டி முழக்காமல் நெட் தமிழன் ஸ்த்ரீலங்கா-ங்கறான், சபாஷ் தமிழா!


================


7 நெட் தமிழன் அதிகாலையில் எப்பவாவது எந்திரிச்ட்டா கம்முனு இருக்கறதில்லை, ஃபாரீன் பொண்ணுங்க கிட்டே கடலை போட்டுட்டு இருக்கான்


=================

8  தோல்வியாளனை விட வெற்றியாளனுக்கு நிர்ப்பந்தம் அதிகம், அவன் தன் வெற்றியை அவ்வப்போது நிரூபித்துக்கொண்டே இருக்கவேண்டும், தொடர்ந்து வெல்லவேண்டும்


================

9 டியர்,என் முதிர்ச்சியை ஏற்றுக்கொள்ளும் புரிதல் உங்களிடம் இல்லை

 எல்லாருமே இளசு தான் வேணும்னு பிரியப்படுவாங்க, முதிர்ச்சி எதுக்கு?

==============


10 நெட் தமிழன் பயங்கர புத்திசாலி! கலைஞர், ஜெ இருவருமே ஒரே ஊழல் குட்டையில் ஊறிய மட்டைகள் தான்னு தெளிவா சொன்னாக்கூட  நீங்க அதிமுகவா?ங்கறான் ;-)


==============

11 கிணற்றுத்தவளையாய் இருக்காதே என கிராமத்தானை எள்ளல் செய்யும் நகரத்தானுக்கு கிணற்று நீச்சல் நிச்சயம் தெரிந்திருக்காது

============

12 10 பைசாவுக்கு வக்கில்லாத தொண்டனிடம் வன் முறை வெறி இந்த அளவு இருந்தால் கோடிக்கணக்கில் திருடிய தலைவனிடம் எந்த அளவு வன்முறை ஊறி இருக்கும்?

============

13 நெட் தமிழன் பயங்கர புத்திசாலி! கலைஞர், ஜெ இருவருமே ஒரே ஊழல் குட்டையில் ஊறிய மட்டைகள் தான்னு தெளிவா சொன்னாக்கூட நீங்க அதிமுகவா?ங்கறான் ;-)


============

14 உடன் பிறப்பே! இரும்பு இதயம் படைத்தவருடன் காந்தம் இழுத்துக்கொள்வதில் என்ன அறிவியல் விநோதம் நிகழ்ந்து விட்டது?# கலைஞர் + எழுச்சிக்கலைஞர்

================

15 பத்திரிக்கையில் பணி ஆற்றுபவர்கள் எப்படி கட்சி சார்பற்ற நடுநிலைவாதிகளாக இருக்கனுமோஅதேபோல் குறிப்பிட்ட நடிகரின்ரசிகராகஇல்லாதிருப்பதும் அவசியம்


==============


16 ஒரு நடிகரின் மகனை, ஒரு அரசியல் தலைவரின் மகனை கொண்டாடுவதும் , போற்றுவதும் அந்தந்த ரசிகர்/ தொண்டர் களின் தனிப்பட்ட உரிமை


===================


17 திமுக -காங்க்- தேமுதிக கூட்டணி ஜெயிச்சுட்டா சட்டபை கலர்ஃபுல்லா இருக்கும், கலைஞர் முதல்வர், கேப்டன் துணை முதல்வர் 1, குஷ்பூ துணை முதல்வர் 2


==================

18 தேர்தலுக்கு முன்பே வெளிவரப்போகும் 2 ஜி ஊழல் வழக்கு, ஜெ சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்புகள் பிஜேபி கட்சி கூட்டணி லிஸ்ட் பொறுத்து மாறுபடும்


===============


19 அரசனை நம்பி புருசனைக்கைவிட்ராதே என மகாராணியைப்பார்த்து யாரும் சொல்லி விட முடியாது, ஏன்னா புருசன் , அரசன் 2ம் அவருக்கு 1


==================


20 நெட் தமிழன் ஒரு பொண்ணோட ட்வீட் நல்லாருக்குன்னு சொல்லிட்டு இலவச இணைப்பா சம்பந்தமே இல்லாம ஒரு லவ் ஜோடி ஃபோட்டோவை அதே பொண்ணுக்கு அட்டாச்சிங்


==================

KALI (மலையாளம் ) - சினிமா விமர்சனம்

Kali Malayalam Movie First Look Poster.jpg

ஹீரோ ஒரு முன் கோபி, நம்ம  ஊர் கேப்டன் மாதிரி அவருக்கு பொசுக்  பொசுக்னு கோபம்  வந்துடும். ஹீரோயின்  அவரோட காலேஜ் மேட். லவ் மேரேஜ் பண்ணிக்கறாங்க. சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் ஹீரோவுக்கு செம கோபம் வந்துடுது. பிரேமலதா போல் ஹீரோயின்  பொறுமையா அவரை ஹேண்டில்  பண்றாங்க.

ஹீரோவோட ஆஃபீஸ்ல  கொலீக் ஒருவர்  அடிக்கடி  ஹீரோ  முதுகில் அடிச்சுப்  பேசுபவர். ஒரு டைம் பார்ட்டில ஹீரோ தம்பதி சகிதமா போனப்போ அதே கொலீக்  அவரை அடிச்சுப்பேச செம டென்சன் ஆன ஹீரோ பளார்னு ஒரு அறை கொடுத்துட்றார். ஹீரோயினுக்கு  செம அவமானமா போய்டுது

 ஒரு டைம்  ஏதோ  ஒரு கோபத்தில் இருக்கும்போது  ஹீரோயின் அம்மா, அப்பா கிட்டே இருந்து  ஃபோன் வந்தப்போ யார்னே பார்க்காம  ஹீரோ திட்டிடறார்.

இதை வெச்சே இடைவேளை வரை  ஓட்டிடறாங்க.

 அதுக்குப்பின் பெரிய  ட்விஸ்ட். ஹீரோ ஹீரோயின் கார்ல  போகும்போது நைட் டைம்ல ஒதுக்குப்புறமான ஒரு  பாடாவதி ஹோட்டல்ல சாப்பிடப்போறாங்க. சாப்ட்டதும் பர்ஸ்ல காசு இல்லை. அருகில் ஏ டி எம் இல்லை, ஃபோனில் நெட் ஒர்க் இல்லை.

 பணத்தைக்கொடுத்துட்டு ஒயிஃபை கூட்டிட்டுப்போங்கன்னு  ஹோட்டல் ஓனர் சொல்லிடறார்.நம்புனா நம்புங்க அதுக்கு  ஹீரோ என்ன பண்றார் ? என்பதே  மிச்ச மீதிக்கதை

மிக பலவீனமான கதை. ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்ஸ்



 ஹீரோவா மம்முட்டியின் மகன் துல்கர் . செம ஆக்டிங்.  சிடு சிடு என அவர் வருவது அவரது ரசிகைகளுக்குப்பிடிக்காமல்  போகக்கூடும், ஏன்னா சார்லி ,  ஓகே கண்மணி ல சிரிப்பு அழகனா பார்த்துட்டு இப்டி பார்க்க எப்டி பிடிக்கும்? ஆனாலும் அவரது டிரசிங்க் சென்ஸ் , ஹேர் ஸ்டைல் இதெல்லாம்  கலக்கல். ஹீரோயினுடனான ரொமான்ஸ்  செம கில்மா


ஹீரோயினா சாய் பல்லவி  கன்னக்கதுப்புச்சிவப்பழகி. முகத்தில் பரு கூட அழகாக அமைந்தது அப்சரஸ் இவரிடம் தான் . தோராயமா எண்ணிப்பார்த்தா  அவரது இடது புற கன்னத்தில் தான் வலது புற கன்ன பருக்களை விட அதிகமா இருக்கு . இவர் சிரிக்கும்போது கொள்ளை அழகு. இவரோட முக அழகை முழுவதும் ரசிக்க முடியா,ம  இவர் அடிக்கடி ஸ்லீவ்லெஸ் ஜாக் , சர்ட்டில் வருவது அநியாயம். டைட் டி சர்ட் வேற அப்பப்போ, ஒரு தமிழன் என்ன தான் செய்வான்?


வில்லனா ( லாரி டிரைவர்) டார்விண்ட பரிணாமம் பட வில்லன். இவரது ஆக்டிங்  குட், லேடீஸ் எல்லாம் செம திட்டு திட்டறாங்க

 ரெண்டே பாட்டு . ரெண்டும் நல்லாருக்கு, ஒளிப்பதிவு  செம . பின் பாதியில்  முழுக்க முழுக்க இருட்டான ஹோட்டல்  ஏரியாவில் கதை நடப்பதால் கேமராமேனுக்கு சவால்

 ஆக்சன் காட்சிகள்  அனல் பறக்குது




சபாஷ்  மீனா


1   போஸ்டர்   டிசைன்  , ஸ்டில்ஸ்  எல்லாம் மணி ரத்னம் பட பாணியி;ல்  அமைந்தது. நல்ல  ஓப்பனிங்கை வர வைக்கும் ட்ரெய்லர் கட்டிங்க்ஸ்


2  சாய் பல்லவியின்  ரொமாண்டிக் காட்சிகள் , அவரது கிளாமர் டிரஸஸ்






 லாஜிக் மிஸ்டேக்ஸ்


1  ஹீரோவோட ஆஃபீஸ் ல அந்த  ஜொள் பார்ட்டி லேடி  ஹீரோவுக்கு  ரூட் விடுவது , காமெடியன்  அதை கண்டு நக்கல் அடிப்பது   இதெல்லாம்  கதைக்கு சம்பந்தம் இல்லாதவை. பார்ட்டியில்  ஹீரோயின் கண் முன்னாலயே ஹீரோவை அந்த லேடி தொட்டு தொட்டு பேசியும்  ஹீரொயின் கண்டுக்காம  இருப்பதும் நம்பக்த்தன்மை இல்லை.பொண்டாட்டிங்க இப்டியா சாந்த சொரூபியா இருப்பாங்க?


2   என்ன தான் கோபமாக ஒரு ஆள்  இருந்தாலும்  ஃபோனில் ஸ்க்ரீனில்   யார் நெம்பர் என பார்க்காமலோ அல்லது எதிர் முனை குரலை கேட்காமலோ ஒருவர் கத்துவாங்களா?


3  ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறமான ஏரியாவில்  உள்ள ஹோட்டலில்  புது மனைவியுடன் யாராவது   அன் டைமில்  சாப்பிடப்போவாங்களா?

4  சாப்பிட்ட பில்  மீறி மீறிப்போனா 100  ரூபா இருக்கும். அதுக்கு பிணையமாக மனைவியை விட்டுட்டுப்போ என ஓனர் சொல்வது ஓவர் . அப்பவே கைல இருக்கும் வாட்சை கழட்டிக்குடுக்கும்போது அதை வாங்க மறுக்கும்  ஓனருடன் ஏன் ஹீரோ வலியுறுத்தவில்லை?


5  தனியாக காரில்  போகும்  ஹீரோயினை  லாரி டிரைவரான வில்லன் லாரியில்  ஃபாலோ பண்றான். ஹீரோயின் ஏன் ஜன நடமாட்டம் உள்ள ஏரியாவுக்கு விரைவாக போக வில்லை? மீண்டும் மீண்டும் இண்ட்டீரியராக ஏன் போகனும்?


6   ஹீரோ ஹீரோயின்  இருவர் செல்லிலும் டவர் இல்லை. ஹோட்டல்  ஓனர் ஃபோன் தர்றார் அதில்  தன் பெற்றோருக்கோ நண்பருக்கோ  ஃபோன் செய்து  சம்பவ இடத்தை லேண்ட் மார்க்கை சொல்லி வர வெச்சிருக்கலாமே?

7  கடையில் 15 வயசு பொடிப்பையன்  வேலை செய்யறான். அவனை எங்களோடு காரில் அனுப்புங்க , பணத்தை கொடுத்து அவனை ஆட்டோவில் ஏத்தி விட்டுடறோம் என சொல்லி  இருக்கலாமே? அவன் ஏத்துக்கறான் ஏத்துக்கலை  ஹீரோ எந்த பாசிட்டிவ் வழியையும்  யோசிக்க வே மாட்டாரா?


8  வில்லன்  ஹீரோயினை  மெயின்  ரோட்டில் காரில் ரேப் பண்ண ட்ரை பண்ணுவானா? ஓங்கி  ஒரு அறை விட்டு மயக்கம் ஆக்கி  தூக்கிட்டு இண்ட்டீரியரா போய் இருக்கலாமே? சோப்ளாங்கி  வில்லனா?





தியேட்டரிக்கல் ட்விட்டர் அப்டேட்ஸ்



துல்கர் + சாய் பல்லவி கலி (மலையாளம் ) @ ஆட்டிங்கல் கங்கா.11,30 AM ஷோ

2 சாய் பல்லவியோட வலது கன்னத்தை விட இடது கன்னத்தில் தான் பரு அதிகம் # பொழுது போகாத பொம்மு

3 சாரி னு உதட்டால சொன்னா போதாதா?ஹீரோ ஹீரோயின் முதுகை 5 நிமிசமா தடவிட்டு இருக்காரு

வாண்டுக ஆளுமா டோலுமா பாட்டுக்கு டான்சிங் # அஜித் ரெப்ரன்ஸ @் KALI


5 முன் கோபம் அதிகம் உள்ள கணவனால் பாதிக்கப்படும் இல்லற வாழ்வே முன் பாதி கதை




நச் டயலாக்ஸ்


1 யோவ்.யார்யா அந்தாளு.நாம ஜோடியா படம் பார்க்கும்போது தியேட்டர்ல பின் சீட்ல இருந்து நம்மை தொந்தரவு பண்ணாரே?

அய்யோ.அவர் என் அப்பா.

நீ மனப்பூர்வமா கோபிக்கலைனு எனக்கு இதயப்பூர்வமா தெரியும்


எது நல்லது?னு எடுத்துச்சொல்ல /வழி காட்ட ஆணின் அருகில் எப்போதும் ஒரு பெண் இருக்கனும்.அதுவும் அன்புக்குரியவராய்!


சாப்பிட என்ன இருக்கு?

உங்களுக்கு என்ன வேணும்?
தோசை? இல்லை.
என்னதான் இருக்கு?
சப்பாத்தி இல்லை
புரோட்டா மட்டும்.





காதலர்கள் , துல்கர் , சாய் பல்லவி ரசிகர்கள்: மட்டும் பார்க்கலாம். சாதா ஜனங்க , பொது ஜனங்க நல்ல சினிமா ரசிகர்கள் பார்த்தா கடுப்பாகிடுவாங்க


ரசிகர் ஷோவிலேயெ முதல் 4 சீன் வரை கை தட்டி படம் பார்த்த ரசிகர்கள் பின் திரைக்கதை பலவீனம் உணர்ந்து அமைதி ஆகிட்டாங்க்



  KALI (மலையாளம் ) - அழுத்தம் இல்லாத கதை.லாஜிக் சொதப்பல்களுடன் திரைக்கதை.துல்கர் க்கு இது ஒரு சறுக்கல் படம்.ரேட்டிங் =2.5 / 5



Directed bySameer Thahir
Produced byAshiq Usman
Shyju Khalid
Sameer Thahir
Written byRajesh Gopinadhan
StarringDulquer Salmaan
Sai Pallavi
Music byGopi Sundar
CinematographyGireesh Gangadharan
Edited byVivek Harshan
Production
company
Hand Made Films
Distributed byCentral Pictures
Release dates
  • 26 March 2016
CountryIndia
LanguageMalayalam

பாமக தான் ஜெயிக்கும்னு திமுக அன்பழகன் சொன்னது ஏன்?

வீடு தோறும் எல்லோருக்கும் இணைய வசதி -,ஜெ # கூட்டணிக்கட்சிங்க கூட இணைய.வசதி பார்க்கும் கட்சிகளுக்கு அசதி தரும் அறிவிப்பு


===========

2 அடுத்த ஆட்சியில் செயல்படுத்த புதிய யோசனைகளை கட்சியினர் வழங்க வேண்டும்: ஸ்டாலின் # வழக்கமா நாம பாமக விடம் தானே பிட் அடிப்போம்?


============

3 12/5/1970 குளித்தலை -்
இத்த 67 வயதிலும் காமரஜருக்குCM பதவி மீது ஆசை
- கருணாநிதி #96 ஆகியும் ஓய்வெடுக்காத் நமக்கு பதவி வெறி தவிர.வேற என்ன?

===========

4 கருணாநிதி மாஜி குமாஸ்தா நான் நிறைய தகவல்களை லீக் செய்வேன் - வைகோ # எதிரிக்கு எதிர்காலம் உண்டு.துரோகிக்கு நிகழ்காலமே இல்லை


===========


5 அடிப்படை கொள்கை ஒத்துப்போவதால் காங்கிரசுடன் கூட்டணி: கனிமொழி # ஏற்கனவே கூடா நட்பு கூட்டணிக்கு மரண அடி விழுந்ததே மறக்கலை மக்கள்


============

6 59சீட்டுகள் நிபந்தனையுடன் உறுதியானது திமுக தேமுதிக கூட்டணி.
# உடன் பிறப்பே! தேர்தல் முடியும் வரை கேப்டனை யாரும் திட்டவேண்டாம்.கச்சேரிபிறகு

===========

7 தமிழகத்தில் மீண்டும் அறிவிக்கப்படாத மின் வெட்டு வந்தாச்சு..!# மின் மிகை மாநிலம்னு சில அடிமைகள் கூவிக்கிட்டு இருந்ததே?


=============

8 சட்டசபை தேர்தலில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் நாம் தமிழர் போட்டி: சீமான் #,இரட்டை நாக்கு க்கு மேட்சுக்கு மேட்ச்


============

9 திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி அமைத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை..-வைகோ # உலகத்துக்கு ஒரே மாரி தான்.தமிழகத்துக்கு மட்டும் கேப்மாரி மொள்ளமாரி


===============

10 பச்சை குத்திய விவகாரம், ஓபிஎஸ் உட்பட 5 அமைச்சர் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் # பச்சைத்தமிழன்னு அடையாளம் காட்னோம்னு சமாளிப்பாங்களோ?


==============


11 தேர்தல் தேதி அறிவித்த பின் எந்த திட்டமும் அறிவிக்கக்கூடாது - தேர்தல் கமிஷன் # அப்டியே யாரும் யாரையும் திட்டக்கூடாதுன்னும் சொல்லிடுங்க


===============


12 கட்சித்தலைமை வாய்ப்புகொடுத்தால் தேர்தலில் போட்டி-குஷ்பு # உங்களுக்கு தர்லைன்னா எப்டி? காங் ஒரு சீட்டாவதுதமிழகத்தில் ஜெயிச்சாஅது நீங்கதான்

==============

13 கால்நடைத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா டிஸ்மிஸ் - ஜெ. அதிரடி # டெய்லி வாக்கிங்க் போகாம டபாய்ச்சுட்டாரா?


===============

14 2ஜி ஊழல் வழக்கில் குற்றவாளிகள் தண்டனை பெறுவது உறுதி-அருண் ஜேட்லி # தேர்தலுக்கு முன்பே தண்டனை கிடைச்சா நாட்டுக்கு நல்லது


==============


15 ஃபேர் & லவ்லி கிரீம் போல கருப்பு பணத்தை வெள்ளையாக்க மோடி அரசு திட்டம் : ராகுல் கிண்டல் # நல்ல வாய்ப்பு, சோனியாவிடம் சொல்லி வெள்ளை ஆக்கவும்


===================


16 கால்நடைத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா டிஸ்மிஸ் - ஜெ. அதிரடி # மேடம், எதுக்காக என்னை டிஸ்மிஸ்டு?
என்ன தைரியம் இருந்தா இனிஷியல்ல DMK?



================

17 மும்பையில் பெண்கள் நடனத்துடன் கூடிய மதுபான பார்களில் சிசிடிவிகேமராக்களுக்கு தடை # ஆமா, அந்தந்த பொண்ணுங்களோட நிகழ்கால வருங்கால ஜோடி பார்த்தா?


=============

18 சோலார் பேனல் மோசடி: உம்மன் சாண்டியை விசாரிக்க கோரி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடருவேன்- சரிதா நாயர் # ஏம்மா, அந்த வீடியோ என்னாச்சு?


=================

19 அமைச்சர் பதவியில் இருந்து டி.கே.எம்.சின்னையா நீக்கம்: மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும் விடுவிப்பு # SINனைய்யா பேர்லயே குற்றம்இருக்கே?


===============


20 மக்கள் மனதில் மாற்றம்:தி.மு.கஆட்சிக்குவரும் அன்பழகன் பேச்சு # குழப்பாதீங்க, மாற்றம் முன்னேற்றம்னா பாமக வரும்னு தானே அர்த்தம்?


====================

Friday, March 25, 2016

ஜீரோ - சினிமா விமர்சனம்

தமிழ் சினிமாவில் த்ரில்லர் வகையறா, சைக்கோ த்ரில்லர் , கோஸ்ட் த்ரில்லர் ,லவ் த்ரில்லர் , ரேப் த்ரில்லர் (!!!??) என பல வகைப்பட்ட த்ரில்லர் பார்த்து ரசித்த ரசிக மகா ஜனங்களுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தைத்தரக்காத்திருக்கும் படம் தான் ஜீரோ


படத்தோட கதைக்கும், விமர்சனத்துக்கும் போவதற்கு முன் ஹீரோயின் கேரக்டரான க்ளப்டோமேனியா பற்றி ஒரு பேரா பார்ப்போம்.

ஏகப்பட்ட வாரிசுகள் உள்ள தலைவர்கள் தான் கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கறாங்கன்னா வாரிசே இல்லாத தலைவிகள் கூட தன் தோழிக்காக நாட்டு மக்களின் செல்வத்தை தெரிஞ்சே கொள்ளை அடிக்கறாங்க.இதே ஒரு செல்வச்சீமாட்டி தன்னையும் அறியாம அடுத்தவங்க பொருளை திருடி வெச்சுக்கிடற வியாதிக்குப்பேரு கிளப்டோமேனியா ( இதுதான் சாக்குன்னு கர்நாடகா கோர்ட்ல போய் எனக்கு வித்தியாசமான கிளப்டோமேனியா வியாதி இருக்கு, அதனாலதான் நாட்டு மக்கள் பணத்தை திருடுனேன்னு வாதிட முடியாது.)

சுருக்கமாச்சொல்லனும்னா தெரிஞ்சே திருடுனா அது சொத்துக்குவிப்பு, தெரியாம திருடுனா கிளப்டோ மேனியா


ஹீரோ ஒரு சமூக சேவகர் . அப்போ சாப்பாட்டுக்கு என்ன பண்றார்?னு குறுக்குக்கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது. ஹீரோவோட அப்பா பெரிய பணக்காரர். ஹீரோ ஒரு பெண்ணை லவ்வறார். அது அப்பாவுக்குப்பிடிக்கலை. அதனால ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு தனி பங்களாவில் தம்பதி வசிச்சு வர்றாங்க


ஷாப்பிங் போகும்போது அந்த காம்ப்ளெக்ஸ்ல ஹீரோயின் ஒரு வீணாப்போன லிப்ஸ்டிக்கை திருடுது. மாட்டிக்குது. என்னையா திருடின்னு சொன்னே?னு பல்லைக்கடிக்குது. அவரோட திடீர் மாற்றத்துக்குக்காரணம் என்ன?

ஹீரோயினோட அம்மா மாசமா இருக்கும்போது மனநிலை பிறழ்ந்ததால ஹீரோயினோட அப்பா அம்மாவை விட்டுட்டு ஓடிடறார் ( இந்தக்காலத்துல நல்ல சம்சாரத்தை வெச்சே காலம் தள்ள முடியலை . லூஸை வெச்சு குப்பை கொட்ட முடியுமா?)


ஹீரோயினுக்கு அடிக்கடி செத்துப்போன தன் அம்மா தன்னை அவங்க உலகத்துக்கு கூப்பிடுவது போல் இருக்கு.ஆஹா ,மாயா படக்கதை போல என நினைச்சா அந்த நினைப்பில் மண். தேவதை , இரண்டாம் உலகம் படம் போல இருக்குமோ?

ஒரு நாள் ஹீரோயின் தனியா இருக்கும்போது ஹீரோ வர்றாரு. அவர் கூட பேசிட்டு இருக்கும்போது ஹீரோ கிட்டே இருந்து ஃபோன். சிலீர்னு இருக்கா? அப்போ இந்த ஆள் யார்? ( இந்திரன் ஒரு முனிவரின் சம்சாரத்தைக் கரெக்ட் பண்ண அந்த முனிவர் வேடத்தில் போய் கில்மா முடிச்ட்டு வர்ற மாதிரி )

இது ஹீரோயின் பிரமையா-னு யோசிச்சுட்டு இருக்கும்போது நிஜமான ஹீரோ அங்கே வர்றார். என்னை தொட முடியாதுன்னு கத்திட்டே ஹீரோயின் கத்தியால ஹீரோ நெஞ்சுல குத்திடுது ( கத்தி - விஜய் ரெஃப்ரன்ஸ்)

இடை வேளை

ஹீரோயின் சைக்கோவா? ஹீரோ சைக்கோவா? படம் பார்க்கும் ஆடியன்ஸ் சைக்கோவா?ன்னு நம்ம எல்லா குழப்பங்களுக்கும் பின் பாதியில் மாறுபட்ட பூர்வ ஜென்ம பேய்க்கதை வருது, அதை சொன்னா சுவராஸ்யம் போய்டும் . மீதி வெண் திரையில் காண்க


ஹீரோவா அஸ்வின். அற்புதமான நடிப்பு, ஓப்பனிங்கில் ஹீரோயினிடம் ரொமான்ஸ் , அப்பாவுடன் பாசம் , பேயைக்கண்டு மிரள்வது , சைக்கோ குழப்பங்களில் மிரட்சி என சிக்சர் ஆக்டிங்


ஹீரோயின் ஷிவ்தா. இவங்களும் செம ஆக்டிங் தான் . ஆனா ஹீரோவை விட அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டும் இன்னும் பிரமாதப்படுத்தி இருக்க வேண்டிய கேரக்டரை நழுவ விட்டுடுச்சு.


ஹீரோயின் அம்மாவா வரும் நடிகை நல்ல தேர்வு. அவங்க முகம் மாறுவது , மிரட்டல் நடிப்பு

சைக்கோ தெரஃபிஸ்ட்டா வரும் சக்ரவர்த்தி சிகப்பு ரோஜாக்கள் கமல் சாயலில் வர்றார். ( இந்தப்படத்துக்கும் சிகப்புரோஜாக்கள் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை )


ஹீரோவின் அப்பா கேரக்டர் அமைதியான நடிப்பு சபாஷ் .


இசை அற்புதம் . ஆனால் பின்னணி இசையில் இன்னும் கலக்கி இருக்கலாம். ரொம்பவே அடக்கி வாசித்தது போல் தோணுது/.
ஒளிப்பதிவு , எடிட்டிங்க் எல்லாம் வேற லெவல்


சபாஷ் மீனா

1 முன் பாதி சைக்கோ த்ரில்லர் பின் பாதி ரொமாண்டிக் த்ரில்லர் + முன் ஜென்மக்காதல் என வித்தியாசமான விறுவிறுப்பான திரைக்கதை அமைத்த விதம்

2 போஸ்டர் டிசைன் , டைட்டில் அட்ராக்சன் , ட்ரெய்லர் வெளியீடு என கவனம் ஈர்த்த வகை அருமை

3 க்ளைமாக்ஸில் பாகம் 2 வருவதற்கான முகாந்திரம் சொன்னது’


4 க்ளைமாக்ஸுக்கு 15 நிமிசம் முன் டைட்டிலில் படம் இன்னும் 15 நிமிசம் இருக்கு என எழுத்துக்களை ஓட விட்டது


லாஜிக் மிஸ்டேக்ஸ்

1 சக்ரவர்த்தி ஏன் கூலிங்க் கிளாஸ் போட்டே நைட்டைமிலும் வர்றார்?


2 கார் அப்பளம் போல் நொறுங்கிடுச்சு என ஹீரோவின் அப்பா டயலாக் சொல்றார். ஆனா விஷூவலா காட்டும் போது கார் லாரியில் அடிபட்டு முன் பக்கம் மட்டும் சேதம் ஆகி இருக்கு அவ்ளோவ் தான்

3 பின் பாதியில் அந்த செக்யூரிட்டி “ உங்க சம்சாரம் நீங்க இல்லாதப்ப அடிக்கடி இந்த் ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ் வந்து பொருட்களை திருடிட்டு போகுது ” என சொல்வது முரண். 2வது டைமே உஷார் ஆகி கடைக்கு உள்ளேயே விடாம துரத்தி விட்டிருக்கலாமே?

4 ஹீரோயினால் கர்ப்பம் ஆக முடியாது கர்ப்பப்பை வீக் என்ற மேட்டர் அந்த தீய சக்திக்கு எப்படி தெரியாம போச்சு?




தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


1 ஹீரோயின் புரியாத புதிர் ரகுவரன் போல் சைக்கோ கேரக்டர்.குட் ஓப்பனிங் #0 

2 } 2 காலேஜ் பசங்க 4 பொண்ணுங்களைத்தள்ளிட்டு தியேட்டர் வந்திருக்கானுங்க.யாரோட ஜோடி யார்னு கண்டு பிடிக்க பிஹெச்டி முடிச்சிருக்கனும் போல

3 }த்ரில்லர் மூவிக்கு பிஜிஎம் போடறவங்க முன்னோடி த்ரில்லர்கள் 4 மொழிகளில் தலா 1 பெஸ்ட் த்ரில்லர் பார்க்கனும்

4 வித்தியாசமான ரொமாண்டிக் த்ரில்லர் “ஜீரோ” மாலை 4.30 PM ஷோ @ திருவனந்தபுரம் ஏரீஸ் பிளக்ஸ் ஸ்க்ரீன் 2

5 முன் பாதி 70 நிமிடங்கள் விறுவிறுப்பான சைக்கோ த்ரில்லர்.வெல்டன் டைரக்டர். # ஜீரோ இடை வேளை


சி பி கமெண்ட் - ஜீரோ - முற்றிலும் புதிய திரைக்கதை.யூகிக்க முடியாத திருப்பங்கள். க்ளப்டோமேனியா சைக்கோயிச கோஸ்ட் த்ரில்லர்.விகடன்=43 ,ரேட்டிங் = 3 / 5

திருவனந்த புரம் ஏரீஸ்பிளக்ஸ் ஸ்க்ரீன் 2 வில் படம் பார்த்தேன்

தோழா - சினிமா விமர்சனம்


ஹீரோ பரோல்ல வந்திருக்கும் கைதி.  ஆ ராசா  மாதிரியோ , விஜய் மல்லைய்யா மாதிரியோ பெரிய திருடன் எல்லாம் இல்ல . சும்மா சுமாரான பொறுக்கி.  அவர் செஞ்ச தப்புக்கு  கோர்ட் கொடுத்த 2 வருச தண்டனைல இருந்து  விலக்கு வாங்கிக்க  ஒரு வாய்ப்பு வக்கீல் மூலமா கிடைக்குது.அதாவது 4 மாசம் பரோல்ல வந்து நல்ல காரியங்கள் எதுனா செய்யனும்


 அதனால  ஹீரோவை  அநாதை ஆசிரமத்தில் வேலைக்கு சேர்க்கப்பார்க்கறாங்க. சரி வர்லை. அப்புறம் ஒரு பணக்காரர்  வீட்ல வேலைக்கு சேர்க்கறாங்க. வீல் சேரில் எப்போதும்  இருக்கும் கை கால் விளங்காதவரை பார்த்துக்கும்  வேலை


அந்த  கோடீஸ்வரருக்கு காதல் கோட்டை டைப்ல ஒரு பேனா நட்பு  அவர் கூட  காதல் மாதிரி ஒரு டிராக்


 கோடீஸ்வரரோட பி  ஏ தான்  ஹீரோயின் அவர் கூட ஹீரோவின் காதல்  இன்னொரு  டிராக்

ஹீரோவோட தங்கச்சிக்கு  லவ் மேரேஜ்  ஹீரோ உதவியோட நடக்குது. எதுக்குமே லாயக்கில்லாதவன்னு ஹீரோவை அம்மாவே ஒதுக்கிய பின் ( அதாவது சரத்குமாரை ஜெ ஒதுக்கினது போல்) இப்டி ஒரு வாய்ப்பு கிடைச்சு தன்னை நிரூபிக்கும் ஹீரோ    அந்த  கோடீஸ்வரர் இவங்களை சுத்தி நடக்கும்   மிச்ச மீதி சம்பவங்கள் தான்  திரைக்கதை


 ஹீரோவா கார்த்தி  , சில பல சறுக்கல்களுக்குப்பின் ஒரு நல்ல வாய்ப்பு . தமனாவைப்பார்த்து  ஜொள் விடும் காட்சிகள் இயற்கை. ( இதுக்கு சிவகுமார் என்ன  சொல்லப்போறாரோ?)  நக்கல் அடிக்கும் காட்சிகள்   முக பாவனைகளாலே நையாண்டி இவருக்கு கை வந்த கலை.



ஹீரோயினா தமனா. ஓவர் லிப்ஸ்டிக். ஓவர் பவுடர் . மாநிறமா இருக்கும் நாம தான் பவுடர்  போடறோம், நேச்சுரலாவே லெமனா இருக்கும் தமனா எதுக்கு பவுடர் போடுதோ?  


நாகார்ஜூன்  க்கு நல்ல கேரக்டர். வீல் சேரிலேயே அமர்ந்திருக்கும் கேரக்டர் . குட் . இது  போல் கேர்க்டர்கள்  சிவாஜி கணேசன் அமிதாப் பச்சன்  தான் செய்திருக்கிறார்கள் சபாஷ்








நச் டயலாக்ஸ்


நீ இன்னும் மாறவே இல்ல


எல்லாம் உங்க கிட்டே கத்துக்கிட்டதுதான் #,தோழா




2 இந்த மாதிரி அழகான பொண்ணுங்க எங்க தான் இருப்பாளுகளோ.ரோட்ல நான் பார்த்ததே இல்லையே #,தோழா

3 இப்ப வரைக்கும் நீ அடுத்தவங்க தயவுல தான் வாழ்ந்துட்டு இருக்கியா?
எஸ் சார்.நானும் உங்களை மாதிரி தான்



4  என் மேல இரக்கம் காட்றவங்க எனக்குத்தேவை இல்லை


பொறந்தா பணக்காரன் வீட்ல பொறக்கனும், அப்பத்தான் சொந்த பந்தம் எல்லாம்  தேடி வரும் #தோழா


 பணம்கறது எப்போ வேணா யார் வேணா சம்பாதிக்கலாம், அனா குணம்? அது பொறப்புலயே இருக்கனும்,, ரத்தத்தில் கலந்து இருக்கனும் #தோழா

ப்ரேயர்ல சைலண்ட் ஓக்கே பார்ட்டில என்ன சார்  சைலண்ட்? கலாட்டா தானே பார்ட்டி?#தோழா


8  பணக்காரங்க எப்பவும் டாக்டர் சொல்றதையோ, சாமியார் சொல்றதையோ கேட்க வேண்டிய சூழல்ல தான் இருப்பாங்க #தோழா

பழசை மறந்துடனும்னு ஒவ்வொரு டைமும் நாம் முயற்சிக்கும்போதுதான் அது மீண்டும் மீண்டும் நம் நினைவில் வந்து தாக்கும் $ தோழா

10   மனுசன்  போகும் இடத்துக்கெல்லாம் அவன் மனசும் போய்டாது # தோழா

11  அன்பு  இருக்கும் இடத்தில் பயம் இருக்கும், உண்மையில் பயம் இருக்கும் இடத்தில் காதல் இருக்கும் # தோழா


12  அழகை ஆராதிக்கனும், இல்லைன்னா அதுவே ஒரு பாவம் தான் #தோழா





13  உன்னைப்பார்த்து  ஒரு பொண்ணு சிரிச்ட்டாலே பாதி மேட்டர்  ஓவர் #தோழா

14 கண்ணீரைத்துடைக்கும் விரல் தேவை இல்லை.கண்ணீரே வராம பார்த்துக்கும் ஆள் தான் தேவை

15 நம்ம கிட்டே அன்பு காட்டும் ஒருத்தர் இருந்தா போதும்.காசு பணம் எதுவும் தேவை இல்லை.அவங்க அருகாமை போதும் # தோழா ,த ராஜு முருகன் டயலாக்


16 உண்மையான காதல் என்பது நாம எங்கே இருந்தாலும் காதலி நல்லாருக்கனும்னு நினைப்பது.அவளுக்கு எதுனா நல்லது செய்வதே



ட்விட்டர் தியேட்டரிக்கல் அப்டேட்ஸ் 


1 ராஜூ முருகன் ன் வசனத்தில் பருத்தி வீரன் கார்த்தியின் தோழா @ திருவனந்தபுரம் அஜந்தா.11 15am


2 THE INTOUCHABLES படத்தின் அதிகாரப்பூர்வமான தழுவல் தோழா



 சபாஷ் மீனா /மீனம்மா  ( எல்லாரும் தெறி மீனா வோட பேபியை சிலாகிக்கும்போது நாம  மீனாவோட அம்மாவை சிலாகிக்கனும் அது )

1  ஒரு மாடர்ன் ஆர்ட் ஓவியத்தை 5 லட்சம் கொடுத்து  கோடீஸ்வரர் வாங்கியதும் அதே போல் ஒரு  ஓவியத்தை  ஹீரோ எட்க்குதப்பாக  வரைவது

2  பிர்காஷ் ராஜ்  அந்த  கேவலமான  ஓவியத்தை  சிலாகிப்பது  2 லட்சத்துக்கு வாங்குவது  பின் ஒரு சந்தர்ப்பத்தில்  ஹீரோ தான் வரைந்த  ஓவியம்தான் என உண்மையை சொன்னதும்  அதிர்வது


3  ஹீரோவின் தங்கைக்கு நிகழும்  மேரேஜ் செண்ட்டிமெண்ட்  சீன்


4  பாரீஸ்  டூர் போனபோது மிடி போட்ட தமனா வை  லோ ஆங்கிளில் தரையில் படுத்து  ஈபிள் டவரை  ஹீரோ  ஃபோட்டோ எடுக்க முற்படும்போது தமனா  பதறும்  சீன்

5  குக்கூ இயக்குநர்   ராஜூ முருகனின் வசனங்கள் நச் . ஷார்ப்

6   பாரீசில்  வரும் அந்த அனிரூத் தனுஷ் டைப் கே லவ் ஸ்டோரி செம காமெடி






பல்பு பகவதி


1  கோடீஸ்வரரான நாகார்ஜூன் அவரை கவனிச்சுக்க ஒரு நர்சையோ அல்லது டாக்டரையோதானே அருகில் எப்பவும் வெச்சுக்கனும்? அடிக்கடி ப்ரீத்திங் ட்ரபுள் வேற. ஒவ்வொரு டைமும்  ஹீரோ ஹாஸ்பிடல்க்கு  கூட்டிட்டுப்போறதுக்கு டாக்டர்  டீமே அவர்  பங்களாவில் இருந்தா  என்ன?



2  நாகார்ஜூன் க்கு ப்ரீத்திங் ட்ரபுள் வரும்போது ஆடியன்சுக்கு ஒரு பதட்டமே வர்லை. தமிழ் இனத்தின் தன்னிகரற்ற தலைவர் டாக்டர் கலைஞர் உண்ணாவிரதம் அறிவிச்சா எப்படியும்   4  ம்ணி  நேரத்தில்  வாபஸ்  வாங்கிட்டு சாப்ட்டுருவார்னு ஒரு அசால்ட் வருமே அது போல் எப்டியும் அவர் தப்பிடுவார்னு பதட்டமே வர்லை  அது திரைக்கதையில்  மைனஸ்


3  பின் பாதியில்  கதை பாரீசுக்குப்போனதும் திரைக்கதை படுத்துக்குது.  தமிழ் சினிமாவின் பெரும்பாலான படங்கள்  ஃபாரீனில்  சம்பவம் / கதை நடந்தால் அது போர் அடிக்க ஆரம்பிச்சிடும்




 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு யூக மதிப்பெண் = 41


த தமிழ் ஹிந்து  யூக ரேட்டிங் =  2. 75 / 5 


குமுதம்  யூக ரேட்டிங் =  ஓக்கே 


 பி சி  செண்ட்டர்களில்  சுமாரா தான்  போகும்.  ஏ செண்ட்டர்கள்ல கொஞ்சம் நல்லாப்போகும்


சி  பி கமெண்ட் - தோழா - ஏ செண்ட்டர் ரசிகர்களுக்கான  ஃபீல் குட் மூவி . ஃபேமிலி எண்ட்டர்டெய்னர் - விகடன் மார்க் 41 ( யூகம் )  ரேட்டிங் = 2.75  / 5