Friday, March 25, 2016

டாக்டர்.லைட்டை ஆப் பண்ண BEDடை விட்டு எந்திரிக்கும்போது....

1  எவ்வளவு வயதானாலும் வீட்டில்
எலி குறுக்கே நெடுக்கு ஓடினால் பயம் வருது :(

 மேடம், அதுதான் MOUSE சோட மவுசு

==============


டாக்டர்.லைட்டை ஆப் பண்ண BEDடை விட்டு எந்திரிக்கும்போது தூக்கம் கலைஞ்சிடுது


ஆப் த ரெகார்டா சொல்றேன்.பெட் ரூம் போகும்போதே ஆப் பண்ணிடுங்க



===========

3 தலைவரே! பிரதமராவேதே என் கனவுன்னு எந்த நம்பிக்கைல சொல்றீங்க?


அவநம்பிக்கைல தான்



============

4 நான் முதல்வர் ஆனால் கட்டுரை பிரமாதம்.ஆனா எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே?


டீச்சர். பாமக மாநாட்ல இருந்து சுட்டதுதான்


============


5 திருடுனவன் மோடியோட தீவிர ரசிகன்னு எப்டி யூகிக்கறீங்க?


பேங்க்ல 10 கோடி கொள்ளை அடிச்ட்டு 10% டாக்ஸ் கட்டிட்டுப்போய் இருக்கான்



===============


6 சார், பிரமாதமான படமான THE WALK படத்துக்கு ஏன் ஆஸ்கார் விருது தரலை?
சாரி, அது அஜித் நடிச்ச தமிழ்ப்படம்னு நினைச்ட்டோம்

=====================

7 டைரக்டர் சார், சாரி, நான் நகைக்கடை ஸ்ட்ரைக்குக்கு ஆதரவு தெரிவிச்சு 3 நாள் கவர்ச்சி காட்டமாட்டேன்.



ஓஹோ, அப்போ சம்பளத்தை அங்கேயே வாங்கிக்குங்க




============





8 தலைவரே! இந்த வயசான காலத்திலும் மக்களுக்கு சேவை ஆற்ற துடிப்பது ஏன்?ஓய்வு எடுக்கலாமில்ல?
என்னைத்தவிர யார் சம்பாதிச்சாலும் எனக்கு பிடிக்காது



================




9 சார் , ஜோக் சொல்லிட்டே எதுக்கு என் கன்னத்தில் பளார்னு ஒரு அறை விட்டீங்க?
கோபம் வர்ற மாதிரி காமெடின்னா இதான். நீங்க தானே கேட்டீங்க?




==============




10 தலைவரே! 60 வருசமா உங்க கூடவே உழைப்பவருக்கு ஒரு வாய்ப்பு தரலாமில்ல?



என் சொந்தப்பையனுக்கு என் பதவியை விட்டுத்தரவே மனசு வரமாட்டேங்குது




===============



11 என்ன சார்? உங்க பொண்ணுக்கு சப்ஸ்ட்ராக்சன் (-)யுக்தான்னு பேர் வெச்சிருக்கீங்க?
ஏற்கனவே ஒரு பொண்ணுக்கு சம்(SUM)யுக்தான்னு வெச்சுட்டனே?




===============



12 தலைவரே! FBல யாரோட பதிவையும் ஷேர் செய்ய மாட்டேங்கறீங்களே ,ஏன்?


எல்லா ஷேரும் எனக்கே.எல்லா பதவி CHAIRம் எனக்கே

=============

13

நம்ம ஜனநாயகம் குப்புற.விழுந்து கிடக்கு
எப்டி சொல்றீங்க?
ஜனநாயகத்தின் பிரதிநிதிகள் MLA,MP எல்லோரும் குப்புற விழுந்துதானே கிடக்காக?


===============

14 தலைவரே! வேற ஒரு கட்சியோட தேர்தல் அறிக்கையை காப்பி அடிக்கறீங்களாமே?

ஸ்கூல் ல எக்சாம் ஹால் ல காபி அடிக்காதோர் மட்டும் என் மீது கல் வீசவும்


============


15 தலைவரே! தொகுதி மக்களுக்கு ஒரு பிரச்சனைன்னா என்ன செய்வீங்க?


டெல்லிக்கு கடிதம் எழுதுவேன்


உங்க மகள் ஊழல் வழக்கில் சிக்கினா?

உடனே டெல்லி போய்டுவேன்

=============


16 தலைவரே!வெட்கமே இல்லாம என்னை கூட்டணிக்கு கூப்பிடறாங்கன்னு சொன்னவர் கூட ஏன் கூட்டணி வெச்சுக்கிட்டீங்க?

தேர்தல் முடியட்டும்.துரத்திடறோம்


=============

17 தலைவரே! ஸ்மிருதி இரானிக்கு எதிர்ப்பு தெரிவிச்சீங்களாமே?

ஆமா ! ராணி க்கு 3,சுழி ண.தான் வரனும்.கடும் கண்டனங்கள்

============

18 உங்க கட்சி ஆளுங்க எல்லாம் எதுக்கு இப்டி பச்சை குத்திக்கறாங்க?
அவங்க தான் பச்சைத்தமிழர்கள். பசுமைத்தமிழகம் அமையப்பாடுபடுவோம்னேனே?


==============

19 தலைவரே! தேர்தல் கமிஷனுக்கு என்ன மனு குடுக்கறீங்க?
நாங்கள் இலவசத்திட்டம் அறிவித்த பின்பு எங்களை கலந்தாலோசித்த பின்பே தேர்தல் தேதி சொல்லனும்


=============

20 தலைவரே! கேப்டன் கூட நாம கூட்டணி வைக்கறமே , ஆளுங்கட்சிக்கு டஃப் ஃபைட் குடுப்பமா?
அவரு நம்ம கட்சி ஆளுங்களோட ஃபைட் போடாம இருந்தா சரி

==============

Thursday, March 24, 2016

திரைக்கதை வசனம் பிரமாதம்

1  சாதாரண மனிதர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் வரும் - மோடி # திரைக்கதை வசனம் பிரமாதம்.க்ளைமாக்ஸ்.ட்விஸ்ட் எப்போ வரும்?


===========



2 கணக்கில் காட்டாத வருமானத்துக்கு 45 சதவீத வரி # அதான் கணக்குலயே காட்டலையே.எப்டி வசூலிப்பீங்க?




============



3 இதுவரை தாக்கல் ஆனதில் சிறந்த பட்ஜெட் அத்வானி பாராட்டு # நல்ல நாள்லயே நலம்தானா வாசிக்கமாட்டாரு.இப்போ எதுக்கு ஜிங் ஜக் அடிக்கறாரு?



============



4 இதுவரைதாக்கல்ஆனதில் சிறந்தபட்ஜெட் -அத்வானி பாராட்டு # நல்ல நாள்லயே நலம் தானா வாசிக்காதவரு சுனாமி வர்றப்போ சுட்டும் விழிச்சுடரே வாசிக்கறாரே?



=============



5 நான் நடிக்க வேண்டிய படங்களில் பாட வேண்டிய அவசியமில்லை -ஸ்ருதிஹாசன் # பாடியும் காட்ட வேணாம் ,BODYயும் காட்டவேணாம்




=============



6 திமுக இல்லை என்றால் மெட்ரோ ரயிலே இல்லை- கருணாநிதி # ஊழல் இல்லைனு சொன்னா மேட்சிங்கா இருந்திருக்கும்



=============

7
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டார்கள் மு.க.ஸ்டாலின் அறிக்கை.# வாத்தியார் கலைஞரா?



============




8 மது விலக்கு கொண்டுவருவேன்

-ஸ்டாலின் # தேர்தல் கிட்டெ வந்தா எல்லாரும் உத்தம வில்லன் ஆகிடறாங்க.கதை வசனம் -ராம்தாஸ்.இயக்கம் -கலைஞர்

===========



9 எவருக்கும் வாக்களியுங்கள்!ஆனால்
கவருக்கு மட்டும் வாக்களிக்காதீர்-சகாயம்IAS # தவறு செய்”தவரு”க்கும் வாக்களிக்காதீர்!அதுதான் ஜனநாயகத்தின் பவரு


===================


10 ஜல்லிக்கட்டால் தமிழகத்தில்BJP வெற்றிக்கு பாதிப்பு இல்லை- இல.கணேசன் # எப்படியும் ஃபெயிலாகப்போறம், பிள்ளையார் சுழி போட்டா என்ன?போடலைன்னா என்ன?


===============


11 உலக பணக்காரர்கள் பட்டியல்: பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடம்; 36ஆவது இடத்தில் முகேஷ் அம்பானி # நம்ம தானைத்தலைவருக்கு தன்னடக்கம் ஜாஸ்தி


==================


12 மோடிக்கு கருணாநிதி பாராட்டு
காங்., கோஷ்டிகளுக்கு 'ஷாக்' # இந்த மாசம் விசாரணைக்கு வருது கனிமொழி 2ஜி ஊழல் கேஸ், அதுக்குத்தான் மோடிக்கு ஐஸ்



=================


13 கலாம் பெயரில் கட்சி துவக்கம்:தடை கோரி ஜனாதிபதிக்கு மனு # உடனடியாக ஜனாதிபதி அக்கட்சிக்கு தடை விதிக்”கலாம்”


=================

14 பல நோய்களுக்கும், ஒரே இடத்தில் சிறப்பு மருத்துவம் பார்க்கும் , பாலி கிளினிக்தான், திமுக-ஆ ராசா# ஆனா ஜனங்க அது ஒரு போலி கிளினிக்னு சொல்றாக


==================


15 எனக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிடவிருப்பம்இல்லை. - ஆ.ராசா # பாலுக்கு ஆசைப்படாத பூனையும், பதவிக்கு ஆசைப்படாத அரசியல்வாதியும் உலகில் இல்லை


==================



16 96 வயதிலும் ஆட்சிக்கு வரத்துடிப்பது ஏன்?
-வைகோ கேள்வி! # அரசாங்க பணி எனில் 58 வரை, அரசியல் பதவி எனில் பதவி வெறி தீரும்வரை



==================

17 Fridge,Washing machine இலவசம் DMK தேர்தல் அறிக்கை -செய்தி # கண் துடைப்புக்கு ஆங்கிலத்தில் ஐ வாஷிங்க்



=================

18 திமுக இல்லையென்றால் இன்று மெட்ரோ ரயிலே இல்லை - கலைஞர் # விட்டா மெட்ரோ ரயிலைக்கண்டுபிடிச்சதே கழகம்தான்னு சொல்வாரோ?


================


19 சுவிட்சர்லாந்து உட்பட 14 நாடுகளில் சொத்துக்கள் குவித்துள்ளதாக கார்த்தி சிதம்பரம் மீது புகார் # ஏகப்பட்ட “புகார்”த்தி சிதம்பரம் ஆகிட்டாரே?


==================


20 கன்னையாகுமார் பேசியதை நானும் பேசுவேன், என் மீது வழக்கு போடுங்கள் - வை கோ # ஏய் எல்லாரும்பார்த்துக்குங்க, நானும் ரவுடிதான்,ஜெயிலுக்குப்போறேன்

==============

காளி அம்மனுக்குப்பிடித்த பூ காளிபிளவர்?

தனி மனிதராக நல்ல பெயர் எடுத்திருந்தாலும் உங்க்ள் மேல் விழுந்து விட்ட ஒரு எதிர்மறை இமேஜ் உங்களை முன்னேற விடாது #,உதா =வை கோ,அன்புமணி


============



2 லீப் வருசத்தில் பிப்ரவரி 29ல் பிறந்த ஃபிகரை லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டா 4 வருசத்துக்கு ஒரு வாட்டிதான் பர்த்டே கிஃப்ட் செலவு.எப்பூடி?




================

3 நீங்க சைவமா இருந்து உங்க சொந்த சம்சாரம் அசைவமா இருந்தா சண்டே மாமியார் வீட்டுக்கு அனுப்பிடலாம், செலவும் மிச்சம், சல்லை இல்லை, கல் 1 மாங்கா 2




===============




4 திமுக சார்பில் ் ஸ்டாலின்


தேமுதிக சார்பில் ் பிரேமலதா
முன்னிலைப்படுத்தப்பட்டால் அந்தந்த கட்சியின் வாக்கு சதவீதம் 5% உயரும்்



=============

5 அரசியல் வாழ்விலும் , அந்தரங்க வாழ்விலும் பலவீனமாக இருப்பவர்கள் கூட்டணி/துணை தேடுகிறார்கள்,மனோபலத்துடன் இருப்பவர்கள் தனியாக சாதிக்கிறார்கள்

=============


6 விழிப்புணர்வு என்பது அதிகாலை விழிப்புணர்வு என்னும் பிள்ளையார் சுழியுடன் துவங்குகிறது


===============

7 காலை உணவை தவிர்த்து பட்டினி யாக இருந்தால் உடலை மெலிய வைக்கலாம் என்பது தவறான கோட்பாடு.உடல் நலம் கெட்ட பின் போடாதே கூப்பாடு



=============



8 மேலாளருடன் தினம் பேசுவது ஆயாசத்தை தருகிறது"

FEMALEலாளருடன் எப்போது என்ன பேசினாலும் பாயாசத்தைத்தருகிறது


==========


9 காளி அம்மனுக்குப்பிடித்த பூ காளிபிளவர் என நினைப்பதும் அறியாமையே!


=============



10 தினம் தினம் பார்க்கும்போதும் கன்னிப்பெண் போலவே கண்ணுக்குத்தெரிபவர் தான் நித்ய கன்னி





================



11 எந்தவிதமான பின்னணியும் இல்லாம சினிமால பெரிய ஆளுங்க ஆனவங்க இருக்கலாம்.ஆனா பின்னணி.இசை இல்லாம மாஸ் ஹீரோ ஆனவங்க யாரும் இல்லை



============

12 மோடி யும் லேடியும 1,நமக்கு எந்த வகையிலாவது செலவு வெச்சிடுவாங்க #,பட்ஜெட்


==========

13 எந்தத்தொகுதியில் சசிகலா போட்டியிட்டாலும் படு தோல்வி அடையச்செய்வீர்.சசிகலா ஜெயிப்பது கட்சிக்கு ஆட்சிக்கு கேடு

=============

14 டார்கெட்டை முன் கூட்டியே அடைந்து விட்டால் அடுத்த மாதம் அதீத இலக்கு நிர்ணயிக்கப்படும் என்பதால் உன் திறமையை அடக்கி வை # ஆபீஸ் ரூல்


============

15 இன்சென்ட்டிவ் ஸ்லாப் என்பது அடைய முடியாத இலக்கைத்தாண்டி அமைக்கப்படும் #,ஆபீஸ் ரூல்

=============

16 பொண்ணுங்க எல்லாம் அவங்களுக்குள்ளே டார்லூ மோர்லூ-ன்னு கொஞ்சிக்கறாங்க, நாம தயிர்சாதம் சாப்ட்டுட்டு டிஃபன் பாக்சை கழுவி வைக்கவேண்டியதுதான்


=============

17 வேலைக்குப்போகலாமா? சொந்தத்தொழில் செய்யலாமா? என குழப்பம் வந்தால் முதலில் வேலைக்குப்போய்க்கொண்டே பகுதி நேர சொந்தத்தொழில் செய்!# முன்னோட்டம்


===============


18 வாசகிகளை கரெக்ட் செய்வதில் டாப் 2 எழுத்தாளர்கள்
1 சாரு நிவேதிதா ( வாசகர்களையும் )
2 பாலகுமாரன் ( வயசான பின்பும் )


============

19 உன் உயர் அதிகாரியை விட நீ அதிக இன்சென்ட்டிவ் வாங்கினால் அதை அவரிடம் சொல்லாதே! அடுத்த மாசம் சம்பளமே வாங்க மாட்டாய்! # ஆஃபீஸ் ரூல்

==============


20 சிபாரிசு செய்யும் அதிகாரம் உனக்கு இருக்கும் பட்சத்தில் எந்த ஒரு பெண்ணுக்கும் சிபாரிசு செய்து உன் ஆஃபீசில் வேலை வாங்கித்தராதே!பலபாதிப்பு

===================

Wednesday, March 23, 2016

Ithu Thanda Police (2016)- சினிமா விமர்சனம் ( மலையாளம்) - காமெடி

ஆசியாவிலேயே  முதல் மகளிர் காவல் நிலையம் கோழிக்கோடு ( கேரளா)ல  1973ல்  தொடங்கப்பட்டது. இதை இன்ஸ்பிரேசனா வெச்சு எடுத்த  படம் தான் இது. சரி கதை என்ன?


ஒரு ஊர்ல ஒரு மகளிர் காவல்  நிலையம் இருக்கு. அந்த ஸ்டேஷன்ல போலீஸ்  ஜீப் க்கு டிரைவர் இல்லை, ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் தான் மெயின் ஹீரோயின்.

 அதே  ஊர்ல முன்னாள் எம் எல் ஏவோட பையன்  யாரோ  ஒரு பொண்ணை தொட்டுட்டதால அது மாசம் ஆகிடுது. போலீஸ் ஸ்டேஷனுக்கு கேஸ் வருது. வி ஐபின்னு பார்க்காம அந்தப்பொண்ணையே  கண்ணாலம் கட்டிக்க வெச்சுடறார்  ஹீரோயின்.

 இதனால செம காண்ட் ஆன  வில்லன் அந்த இன்ஸ்பெக்டர்க்கு  ஏதாவது  தொந்தரவு  கொடுத்துட்டே  இருப்பேனு  சீமான் மாதிரி வெட்டிச்சவடால் விடறார்



நிற்க ( எந்திரிச்சு நிக்க வேணாம்)


இப்போ தான்  ஹீரோ எண்ட்ரி. போலீஸ்  ஜீப் டிரைவரா  ஹீரோ அப்பாயிண்ட் ஆகறார்.


அந்த மகளிர்  காவல்  நிலையத்துல  இருக்கற கான்ஸ்டபிள்ஸ் , செகண்ட்ஸ் , ஆண்ட்டீஸ்  எல்லாம்  ஹீரோக்கு  ரூட் விடுதுங்க /. ( போனா லேடீஸ் ஹாஸ்டல் வாட்ச்மேனாவோ, லேடி போலீஸ் ஸ்டேஷன் செக்யூரிட்டியாவோ  போகனும்)


அந்த  ஸ்டேஷன்ல நடக்கும்  காமெடிக்கூத்துகள்  தான் கதை




இதுல  முக்கியமான  விஷயம்  ஹீரோ ஹீரோயினை கரெக்ட் பண்ணலை. ஹீரோயின் ரிலேட்டிவ்  பொண்ணை லவ்வறார்.இதுல டூயட்  இல்லை. பஞ்ச் டயலாக் இல்லை

 ஒரு காமெடிப்படம்  கொடுக்கலாம்னு முயற்சி செஞ்ச டைரக்டர்  கொஞ்சம் சொதப்பி  ஒப்பேற்றி இருக்கார்னு  சொல்லலாம்





 ஹீரோவா அசிஃப் அலி  இவர் நம்ம  ஊரு பிரசன்னா  மாதிரி  முகச்சாயல். நல்லா  பண்ணி  இருக்கார். இவர்  லேடி போலீஸ் கான்ஸ்டபிள்சோட அடிக்கும் லூட்டிகள்  பொறாமையை வர வைக்குது. மொத்தம்  11 பேர் அடேங்கப்பா


ஹீரோயினா  போலீஸ் இன்ஸ்பெக்டரா நம்ம  ஊரு விருமாண்டி அபிராமி. போலீஸ் யுனிஃபார்மில்  செம  கெத்து. டைட் சர்ட்டில்  , டி சர்ட்டில்   எடுப்பாக  காட்ட கேமரா மேன் ரொம்ப  சிரமப்பட்டு நம்மை மகிழ்ச்சிப்படுத்தி  இருக்கார் ( க்ளோசப் ஷாட்ஸ் ம்ம்ம்)

 இன்னொரு  ஹீரோயினா  ஹீரோவுக்கு  ஜோடியா  ஜனனி அய்யர். இவர்  ஒரு நல்ல  ஃபிகர், ஆனா ஏன் லிப்ஸ்டிக் பூசத்தெரியாம  ஓவர் கோட்டிங்  அடிச்சிருக்குன்னு  தெரியலை. இவருக்கு  அதிக  வாய்ப்பில்லை. படத்தின்  திரைக்கதை  பூரா ஸ்டேஷன்லயே நடப்பதால்   இவருக்கு வலியனா 4 சீன் தான் இணைச்சிருக்காங்க ( சீன் = சாதா சீன் )


ஜொள்  பார்ட்டி  கான்ஸ்டபிளா  வரும்  ஃபிகர் பேரு  தெரியல. சரி நமக்கு பேரா முக்கியம்?


சபாஷ்  டைரக்டர் 


1   போலீஸ் ஸ்டேசனை மையப்படுத்தி  இப்போதான் ரிலீஸ் ஆன ஆக்சன் ஹீரோ பிஜூ படம் போல் இல்லாமல் அதன் சாயல் இல்லாமல் காமெடி  டிராக்கில் படம் எடுத்தது


2   போலீஸ் இன்ஸ்பெக்டரா  வரும்  அபிராமியை  லூஸ் போல் காட்டாமல்  கெத்தா காட்டியது


3  டூயட்  சீன்,  சோகப்பாட்டு, ஃபைட்  சீன்  எல்லாம் மெனக்கெட்டு வைக்காம காமெடி யாக படத்தைக்கொண்டு சென்றது

4  படத்தில்  3 பாட்டு  ஓக்கே ரகம், ஒளிப்பதிவு , எடிட்டிங் , பிஜிஎம்  எல்லாம்  நார்மல் குவாலிட்டி




  லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1   ஜனனி ஐயரை ஹாஸ்பிடல்  கூட்டிட்டுப்போகாம அவரோட தோழி பர்த்டே பார்ட்டிக்கு  கூட்டிட்டுப்போன  ஹீரோவை அபிராமி பளார் கொடுக்குது. தப்பு  அவர் மேல இல்லைன்னு தெரிஞ்ச பின் ஒரு சாரி  கூட கேட்கலையே ஏன்?



2  வில்லன்  சரியான  சோப்ளாங்கி  வில்லனா இருக்கான். ஒரு வில்லனா  எந்த வேலையும் அவன் ஒழுங்கா செய்யலையே? ஆரம்ப சீனில் சவால்  விட்டதோட சரி


3  இது  முழுக்க  முழுக்க  மொக்கை காமெடி;ப்படமும்  இல்லை ஆக்சன் ஃபிலிமும் இல்லை. ஏன் ரெண்டுங்கெட்டானா  எடுத்து வெச்சிருக்கீங்க?



 டைம் பாஸ்க்கு வேற  படம் எதும் சிக்கலைனா  பார்க்கலாம்


திருவனந்த புரம்  நியூ தியேட்டர் ஸ்க்ரீன் 1 ல படம்  பார்த்தேன், செம தியேட்டர்



ரேட்டிங் = 2.5 / 5

Ithu Thaanda Police (2016) - Poster.jpg
Theatrical poster
Directed byManoj Palodan
Produced byElu Films
Written byManoj-Renjith
StarringAsif Ali
Janani Iyer
Abhirami
Sruthi Lakshmi
Sunil Sukhada
Sudheer Karamana
Music bySumesh Parameswaran
CinematographyHari Nair ISC
Edited bySamjith
Distributed byElu Films
Release dates
  • March 18, 2016
CountryIndia
LanguageMalayalam

எம் ஜி ஆர் -ன் எங்க வீட்டுப்பிள்ளை ரீமேக்கில் விஜய் - அழகிய தமிழ் மகன் பரதன்

1  கன்னட தயாரிப்பாளரை காதலிக்கும் பாவனா -செய்தி # மேடம், அவர் என்ன புரொடியூஸ் பண்ணினாரு?
இதோ இந்தக்குழந்தையைத்தான்

===============

2 திராவிட கூட்டணிக்கு மாற்று ஏற்படுத்தவே பாஜக கூட்டணியில் இணைகிறோம்- சரத் குமார் # 2 திராவிடக்கட்சிகளும் என்னை சேர்த்துக்கலை என பொருள் கொள்க


===============

3 விவசாயிகள் வருமானத்திற்கு வருமானவரி செலுத்தவேண்டும்-மத்தியஅரசு # கோடிக்கணக்கில் ஏமாற்றிய விஜய் மல்லய்யா, அம்பானியை விட்ருங்க, இவங்களை அடிங்க


================

4  எம்.ஜி.ஆர். பட ரீமேக்கில் விஜய் -மாலைமலர் செய்தி # கறுப்பு எம்ஜிஆர் விஜய்காந்த், மாநிற எம்ஜிஆர் நம்ம விஜய்


================


5  எம்ஜிஆர் -ன் எங்க வீட்டுப்பிள்ளை ரீமேக்கில் பரதன் இயக்கத்தில் விஜய் -செய்தி # டைட்டில் அழகிய ரீமேக் மகன்?


=================

6 காங்.–தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைய வாய்ப்பு: -வசந்த்&கோ வசந்தகுமார் # கறுப்பு எம்ஜிஆர் +கலைஞர்+ காங்கிரஸ் ஆஹா!ககக போ


================

திமுக 200 இடங்களில்

போட்டியிடவேண்டும்
-சுப.வீரபாண்டியன்
வீசுவோம் வந்தா மாங்கா போனா கல்


===========




8 ரஜினிகாந்த் வழியே என் வழி:- நடிகை ராதிகா # எதுனா பேசி தேர்தல் டைம்ல மக்களை குழப்பப்போறீங்களா?


==============

9 ஆட்சியை மாற்றும் சக்தி பெண்களிடம் தான் உள்ளது: கனிமொழி எம்.பி. # 2016 தேர்தலில் ஆட்சி அமைக்கும் யோகம் ஒரு பெண்ணிடம் தான் உள்ளது மேடம்

=============


10 பா.ஜனதா–தே.மு.தி.க. கூட்டணி பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான சூழல் உருவாகி உள்ளது: இல.கணேசன் # புலி வருது புலி வருது கதைதான்


==============

11 இந்த தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்: கனிமொழி # புத்திசாலித்தனமான முடிவு.தேர்தலுக்குப்பின் தோல்விக்கு பொறுப்பேற்கத்தேவை இல்லை



-==================




12 அமைச்சர்கள் முன்னிலையிலேயே கதறி அழுத சிறுமிக்கு பச்சை குத்திய கொடுமை!#,அதிமுக அமைச்சர்கள் உடல் பூரா பச்சை குத்தும் தண்டனை தரப்படவேண்டும்





----===============



13 விவசாயிகள்நலனில் ஜெ அரசுக்கு அக்கறை இல்லை -ஸ்டாலின் # ஆட்சியை ஆளுங்கட்சியிடம் இருந்து மீட்பேன் என்கிறீர்!ஆனால் மக்கள் மீத்தேன்? என்கிறார்கள்




===============



14 திமுக கூட்டணிக்கு தேமுதிக தேவையில்ல -சுப.வீரபாண்டியன் # தானைத்தலைவரே கேப்டன் வேணும்னு பம்மறார்.சேனைத்தலைவர் ஏன் கும்மறார்?்



==============



15 மோடியை விட நான் மிகப்பெரிய தேச பக்தன்: கெஜ்ரிவால் ஆவேசம் # ஒரு தேசபக்தன் /தியாகி அதை எல்லோரிடமும் சொல்லிக்காட்டத்தேவை இல்லை



=============



16 என்னை யாரும் மாண்புமிகு முதலமைச்சர் என்று அழைக்க வேண்டாம் - அன்புமணி

# அரசியல்வாதிங்க,பொண்ணுங்க 2ம்1 , வேணாம்னு சொன்னா வேணும்னு அர்த்தம்

===============

17 எல்லா கட்சியும் தனித்து போட்டியிட்டு பிறகு கூட்டணி அமைக்கலாம் - சரத்.# வீக்னெஸ் லீக் ஆகிடுமே?



================

18 திமுகவை இல்லாமல் ஆக்கும் சக்தி என்னிடம் உள்ளது - வைகோ.!# திமுக விடம் 35% க்கும் மேல் வாக்கு வங்கி இருக்கு.நம்ம கிட்ட 3.5% கூட இல்லையே?



===========


19 சட்டசபை தேர்தலில் சசிகலா போட்டி? ஆன்மீகா சுற்றுலா அதிகமாவதன் மர்மம்! #,சசி கலா எம் எல் ஏ வா?,சகிக்கல


=============

20 மதுகுடித்துவிட்டு பள்ளி சீருடையில் சாலையில் கிடந்த பிளஸ்-1 மாணவர்கள் # நன்றி டூ அம்மா டாஸ்மாக் மலிவு விலை மது


===============