Skip to content

Wednesday, February 10, 2016

ஆரணி பூரணி பரணி

அன்பே! கால் விரலில் ஏறி

உயரம் பார்த்து..
எட்டி எனை நீ
விலகிப் போய் விட்டது என் கட்டை விரல்.
முத்தமிடுகையில்
நீ 95 கிலோ நான் 45 கிலோ


=============

2 தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம் பேரு
The Extraordinary Journey Of The Fakir # இது FAKE NEWS அல்ல


==========

3 சார், தெறி டீசர் 99.99%  நேத்து வந்துடும்னீங்களே? வர்ல?

 ஆங்க், அதுக்குத்தான் 0.01%  - க்கு வெச்சமில்ல?


==============

4  டியர்! அடுத்த ஜென்மத்துலயும் என்னை ட்விட்டர்ல/FB  ல ஃபாலோ பண்ணுவீங்களா?

 ஏம்மா, இந்த ஜென்மத்து டி எம் க்கே இன்னும் விடை வர்ல


=============


5 சார், ஆம்பளைங்க பொண்ணுங்க கிட்டே கிஸ்க்காக கெஞ்சறதா  சிலர் நக்கல் அடிக்கறாங்களே? அது நிஜமா?

ஆமா, காரியம் ஆகும் வரை கெஞ்சுவான்


===============



6 ஐஸ்வர்யா-டியர், ஹாலிவுட்  பட ஷூட்டிங்க் ஸ்பாட்க்கு நானும் வரட்டுமா?

தனுஷ் = சாரி, நீ வேடிக்கை பார்த்துட்டு இருக்கும்போது எனக்கு மூடுவராது


===============


வெற்றி பெற்றவன் உற்சாகத்துடன் அடுத்த வெற்றியை நோக்கி ஓடுவான், தோற்றவன் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற வைராக்யத்துடன் ஓடுவான்


=======================



8  நிஜ வாழ்க்கையில்  உன் எதிரியிடம் “ உன்னை வீழ்த்தப்போகிறேன்” என்று சவால் எல்லாம் விட்டுக்கொண்டிராதே!வீழ்த்திய பின் உணரட்டும்


================


உன்னைச்சரண் அடைந்தேன்  என இயக்குநர் சரண் உடைய மனைவி சொன்னால் சாலப்பொருத்தமாய் இருக்கும்


==================


10 மிஸ்! ஆண்கள் கிட்டே உங்களுக்குப்பிடிச்சது எது?

அவங்க என்ன சொன்னாலும் யோசிக்காம நம்பிடறோம்னு நம்பிட்டிருக்காங்க பாருங்க அந்த முட்டாள்தனம்


===================


11 சார், இன்னைக்கு புது பட டீசர் பத்தி  ஏதோ சொல்றேன்னீங்களே? சொல்லுங்க


 இன்னும் 3 நாளைக்கு எந்த அப்டேட்டும் இல்லைங்கறதுதான் அந்த அப்டேட்


=================


12   பழ கருப்பய்யா வெச்சுட்டாங்க ஆப்பய்யா


================


13 உடன் பிறப்பே! யார் எதற்காக எப்போது விரட்டினாலும் நம்மிடம் வரலாம், அதற்காகத்தான் கூட்டணிக்கதவை 24 மணி நேரமும் திறந்தே வைத்திருக்கிறேன்


===============


14 தனக்குப்பிடிக்கவில்லை என்றதும்  எதிராளியின்  ஊரை மட்டம் தட்டுவதும் ,அவர் தொழிலை  ஏளனப்படுத்துவதும் மனித இனத்தின் பலகீனங்கள்


=============


15 நோய் தான் உடலில் எதிர்ப்பு சக்தியைக்கொடுக்கும் என்பது போல் காயங்கள், வலிகள் தான் நம் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்


=====================

16  அனுதினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்திடு!
அரட்டையை தவிர்த்து தனித்திரு!
அன்ன ஆகாரம் ஏதும் உண்ணாமல் 4,கிமீ நடந்திடு!

===========

17 உற்றார்,உறவினர் ,மற்றோர் என்ன சொன்னாலும் பெற்றோர் சொல் கேட்டு நடப்பதை, அவர்களைப்பராமரிப்பதை விட்டு விடாதே!


==============

18 அரட்டை அடிப்பதை தவிர்ப்போம்னு கொள்கை முடிவு எடுத்திருந்தா அரட்டை கேர்ளோட அம்மா அப்பா அரட்டையை ஒரு நாளும் அடிச்சிருக்க மாட்டாங்க இல்ல?

=============

19 உலகில் உள்ள அனைத்து மகளிர் அணி யும் அணி வகுத்து நின்றாலும் ஆரணி யில் தாவணி அணிந்த பூரணி க்கு இணை ஆகுமா?

==============

20 பழக்கப்படுத்தி விட்டால் நம் மூளை போல் சிறந்த அலாரம் இவ்வுலகில் இல்லை


==============

Tuesday, February 09, 2016

ஸ்ருதி கமல் புது செல்ஃபி

டெய்லி காலைல 2 சப்பாத்தி மட்டும் சாப்டா ஒல்லி ஆகலாம்




DR, அப்போ இட்லி, தோசை, பணியாரம் இதெல்லாம் எவ்ளோவ் சாப்பிட? 2 சப்பாத்தி மட்டும் பத்தாது


================

2  எஙக ஏரியால கொடி ஏத்தறப்ப எதோ சண்டை.


என்ன சண்டை?
அன்னக்கொடி ,மலர்க்கொடி ,பூங்கொடி 3 பேருமே நான் தான் கொடி ஏத்துவேன்னு அடம்

==============

3 மிஸ் சங்கீதா! உங்களைப்பத்தின புல் டீட்டெய்ல்சும் இப்பவே எனக்கு தெரிஞ்சாகனும்


எதுக்கு?
சங்கீத ஞானமே இல்லாதவன்னு ஊர் தப்பா பேசுது



==============

4 இண்ட்டர்வ்யூ ல எந்தக்கேள்வி கேட்ட்டாலும் பதிலே சொல்லாம இருக்கீங்களே மிஸ்?

இந்த உலக்த்துலயே  சிறந்த மொழி மவுனம் தான்,சிறந்த பதில் மவுனம் அப்டினு பெரியவங்க சொல்லி இருக்காங்களே?


===================


5 மிஸ் சந்திரவதனா! திடீர்னு உங்க பேரை வதனான்னு மாத்தீட்டீங்களே? ஏன்?

 அமாவாசை அன்னைக்கு சந்திரன் மறைஞ்சிடுமில்ல?


================


6   ஜட்ஜ் = பொண்ணுங்களை அவங்க அனுமதி இல்லாம வரைஞ்சியா?

 யுவர் ஆனர், +2 ல பாட்டனி ரெகார்டு நோட்லயே  எனக்கு ஒழுங்கா வரையத்தெரியாது

===============

7 ஜட்ஜ் = பொண்ணுங்களை  நிர்வாணமா ஓவியம் வரைஞ்சியா?

 கைதி = இல்லீங்களே? ஓவியம் வரையும் போது பைஜாமா போட்டிருந்தனே?


=================


8   ஜட்ஜ் =  நிர்வாண ஓவியம் வரைய  எப்படி பொண்ணு ஒத்துக்குச்சு?

 கைதி = டைட்டானிக் படத்துல வர்ற மாதிரி வரைஞ்சா அதே போல் அமர காதலர்கள் ஆகிடலாம்னுசொன்னேன், தத்தி ஏமாந்து ஓக்கே சொல்லிடுச்சு


==================

9  உன்னை FBல  ஃபாலோ பண்ண எல்லாப்பொண்ணுங்களையும்  ஏமாத்துனியா?

 கைதி =இல்லீங்க, யார் யார்  எல்லாம் ஏமாந்தாங்களோ அவங்களை மட்டும்தான்


================


10  சார், உங்க  ட்வீட் எனக்கு புரியலையே?

 ஏம்ப்பா, விஷூவலா படத்துல சொன்னாலே புரியாது ஜனங்களுக்கு, என் ட்வீட் மட்டும் புரிஞ்சிடுமா?


======================

11  காலங்காத்தால எதுக்கு டாஸ்மாக் போறே?

 வெறும் வயிற்றில் தண்ணி குடிச்சா நல்லதுன்னு டாக்டரே சொன்னாரு

===================


12 நீரிழிவு நோயாளிக்கு மிகவும் சிறந்த ஆவாரம்பூ குடிநீர் 


DR, ஆ”வாரம்” பூ வாரா வாரம் ஒரு டைம் தான் பூக்குமா? அப்போ சுகர் பேஷண்ட்டுக்கு சிரமம்


===============

13  மேடம்.எல்லா பொண்ணுங்களும் ஃபேஸ்புக் டிபில ஹார்ட் சிம்பல் தானே வைப்பாக? இதென்ன முக்கோண சிம்பல்?

எங்க குடும்பம் கட்டுப்பாடான குடும்பம்.கு.க சிம்பல்


=============


14 100 சென்ட் நிலம் ஏலத்துக்கு வந்தது.எல்லாத்தையும் தலைவரே வாங்கிட்டாரு.

இதுலயாவது ”செண்ட்”டம் அடிச்ட்டாரே?

===============



15 எங்க அப்பா ட்விட்டர் வந்துட்டாரு.ரொம்ப ஹேப்பி
செல்பி எல்லாம் பாத்து சென்சார் பண்ணி போடுங்க மேடம்

=============

16 எடிட்டர் சார்.நாவலுக்கான சன்மானம் 2000 ரூபா இன்னும் வர்ல.
சார்.விருதையே வேணாம்னுட்டீங்க.இந்த சன்மானத்தை மட்டும் ஏன் வாங்கறீங்க?

================

17 அப்பா! ஒரே மேடையில் விவாதிக்கத்தயாரா?ன்னு கூப்பிடறாங்க.இப்போ என்ன செய்ய?
நைசா அழகிரியை அனுப்பி.விட்ருவோமா?


============

18 மன்னா! பத்மவிபூஷன் பட்டத்தை ஏன் திருப்பிக்கொடுத்துட்டீங்க?

யார் அந்த பத்மா? என மகாராணிக்கு சந்தேகம் வந்தால்?


====================


19   கமல் ஹாசனும் , ஸ்ருதி கமலும் ட்விட்டர்ல பேசிக்கிட்டாங்களாமே?


ஓஹோ! ஏன்? வீட்ல பேசிக்க மாட்டாங்களா?


=====================


20 மிஸ்! டைட்டானிக் படத்துல  வர்ற மாதிரி  உங்களை ஒரு ஓவியம் வரையவா?


 ஓஹோ! அதுல ஓவியம் வரைஞ்ச ஹீரோ செத்துடுவாரே? உனக்கு ஓக்கேவா?


====================

விசாரணை-திரை விமர்சனம்:

ஆந்திரப்பிரதேசம், குண்டூரில் சில் லறை வேலைகள் செய்து பிழைக் கிறார்கள் தமிழ் இளைஞர்களான பாண்டியும் (தினேஷ்) அவனது மூன்று நண்பர்களும். வாடகை வீடு எடுத்துத் தங்கும் அளவுக்கு வருமானம் இல்லாத அவர்கள், ஊரின் பொதுப் பூங்காவில் தங்கியிருக்கிறார்கள். அவர்களைக் கைதுசெய்து லாக்அப்பில் அடைக்கும் உள்ளூர் போலீஸ், அவர்கள் செய்யாத குற்றத்தைச் சுமத்தி அதை ஏற்றுக்கொள்ளச் சித்திரவதைகள் மூலம் நிர்ப்பந்திக்கிறது.



இறுதியாக நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படும் அவர்களுக்குத் தப்பிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதே நீதிமன்றத் தில் சரணடைய வரும் பிரபல அரசியல் தரகரான கே.கே-வை (கிஷோர்) கைது செய்ய வரும் தமிழகக் காவல் அதிகாரியான முத்துவேல் (சமுத்திரக்கனி) உதவியுடன் விடுதலையாகிறார்கள். தங்கள் நன்றியைக் காட்ட அவருக்கு உதவப்போய் வாழ்வா, சாவா என்ற பொறியில் மாட்டிக்கொள்கிறார்கள். மாட்டிக்கொண்டவர்கள் என்ன ஆனார்கள்? சமுத்திரக்கனிக்கும் கிஷோருக்கும் என்ன ஆயிற்று என்பதுதான் ‘விசாரணை’யின் பதைபதைக்க வைக்கும் கதை.



மு.சந்திரகுமார் எழுதிய ‘லாக்கப்’ என்னும் நாவலின் அடிப்படையில் உருவாக் கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் கசப்பான சில உண்மைகளை அப்பட்டமாகப் பேசுகிறது. காவல் துறை விசாரணையின் நிஜ முகத்தின் குரூரத்தைக் காட்டுகிறது. காவலர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்பதையும் அவர்களால் எப்படி அதைச் செய்ய முடிகிறது என்பதையும் இயல்பாக வெளிப்படுத்துகிறது. அப்பாவிகள் மீது கொடுமைகளைக் கட்டவிழ்த்துவிடும் இவர்கள், வேறொரு தளத்தில் இதே அமைப்பின் பலிகடாக்களாக மாறும் முரண்பாட்டையும் சித்தரிக்கிறது.

வெற்றி மாறன் முன்னிறுத்தும் யதார்த்தம் முகத்தில் அறையும் நடைமுறை யதார்த்தம். நம்மை முழுமையாக உள்ளே இழுத்துக் கொள்ளும் சித்தரிப்புத் திறனுடன் இந்த யதார்த்தம் முன்வைக்கப்படும்போது அது நமக்கு நெருக்கமான அனுபவமாக மாறி விடுகிறது. இந்தச் சூழலில் யாருக்குமே நிஜமான பாதுகாப்பு இல்லை என்பதைப் பார்வையாளர்களுக்கு உணர்த்திவிடுவது தான் இந்தப் படத்தின் பெரிய வெற்றி.



திருப்பங்கள் எதையும் திணிக்காம லேயே விறுவிறுப்பைக் கூட்ட முடியும் என்பதை வெற்றி மாறன் காட்டியிருக்கிறார். பார்ப்பவர்கள் முகத்தில் ரத்தம் தெறிப்பதுபோல் உணரவைக்கும் மிகை வன்முறை, இரைச்சலிடும் பின்னணி இசை, மிகையான உணர்ச்சிகள் போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு, நேரடி சாட்சிபோல விரியும் காட்சிகள் படத்துக்குள் நம்மை இழுத்துக்கொள்கின்றன.



வெளி மாநிலத்தில் உதிரிகளாக வாழும் தமிழ் இளைஞர்களின் வாழ்வைச் சிக்கன மான காட்சிகளின் மூலம் முழுமையாகப் புரியவைத்துவிடுகிறார். செய்யாத குற் றத்தை ஒப்புக்கொள்ளக் கூடாது என்னும் அவர்களது உறுதியைத் தகர்க்கும் தந்திரங் களைக் காட்சிப்படுத்திய விதம், காவல் துறைச் செயல்பாடுகளின் வெவ்வேறு பரிமாணங்களையும் உணர்த்துவதாக உள்ளது.


ஏழைகள், அப்பாவி மனிதர்களுக்குப் பாதுகாப்பைத் தர வேண்டிய காவல் நிலையங்கள், அவர்கள்மீது மிக எளிதாக மனித உரிமை மீறல்களைக் கட்டவிழ்த்து விடுவதை நம்பகத்தன்மையுடன் காட்டி யிருக்கிறது படம்.


இந்த உரிமை மீறல்களின் நிஜமான சூத்திரதாரிகள் காவலர்களோ, காவல் அதிகாரிகளோ அல்ல; அவர்களை பொம்மைகளாக ஆட்டுவிக்கும், அதிகார வர்க்கம் என்பதைத் தோலுரித்துக் காட்டும் இரண்டாம் பகுதி, படத்தை விரிவான தளத்துக்குக் கொண்டுசெல்கிறது. காவல் துறை உள்ளிட்ட நமது குற்றவியல் நடைமுறை அமைப்பு சீரமைக்கப்பட வேண்டியிருக்கிறது என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.


பல காட்சிகள் மனதில் நிற்கின்றன. கோயில் பிரசாதத்தைக் கொடுக்கும் காவல் துறை அதிகாரி மீது கைதிகளுக்குப் பிறக்கும் நம்பிக்கை உடையும் இடம், பல் உடைந்த பிறகு, “எனக்கு பல்லுதான் அழகுன்னு எங்கம்மா சொல்லும்” என்று முருகதாஸ் வருத்தப்படும் இடம், கடைசிக் காட்சிகளில் கிஷோரின் பரிதவிப்பு, விசாரணைக் கைதியின் மரணத்துக்குப் பின் காவலர்கள் போடும் திட்டம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.



காவல் துறை அதிகாரிக்கு இந்த இளைஞர்கள் மீது சந்தேகமும் பயமும் வருவதற்கான காட்சியில் போதிய அழுத்தம் இல்லை என்பதைப் படத்தின் குறையாகச் சொல்லலாம்.


தினேஷ், ‘ஆடுகளம்’ முருகதாஸ், சமுத்திரக்கனி, கிஷோர் ஆகியோர் தாங்கள் ஏற்ற கதாபாத்திரங்களுக்கு நம்பகத்தன்மையும் இயல்பும் கூடிய நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். தன்னால் அந்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட அபாயத்தைக் கண்டு கண் கலங்கும் இடத்தில் சமுத்திரக்கனி மனதைத் தொடுகிறார். காவல் துறை விசா ரணையைத் தன் தொழிலுக்கே உரிய கெத்துடன் எதிர்கொள்ளும் கிஷோர், காவலர்களின் ‘கவனிப்பு’க்குப் பிறகு மண்டியிட்டுத் தவழ்ந்து பம்மும் காட்சியில் அசரவைக்கிறார்.



காவலர்களின் பேச்சிலும், கைதி களின் பேச்சிலும் யதார்த்தம் தெறிக் கிறது. சமுத்திரக்கனி, கிஷோரின் உரையாடலில் அதிகார மொழியின் நுட்பம் வெளிப்படுகிறது.



பாடல்களே இல்லாத இந்தப் படத்தில் பின்னணி இசையில் ஜி.வி.பிரகாஷ் கவனிக்க வைக்கிறார். கிஷோரின் எடிட்டிங் படத்துக்கு கச்சிதத் தன்மையை வழங்குகிறது. ராமலிங்கத்தின் ஒளிப் பதிவு படத்தின் யதார்த்தத்தைக் காட்சிப் படுத்துவதில் துல்லியமாகச் செயல் படுகிறது.


அதிகார பீடத்தில் இருப்பவர்கள் தங் களைத் தற்காத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் சென்று மனித உயிர்களை எடுக்கவும் தயங்காத ஜனநாயக பயங்கர வாதிகளாக மாறியிருப்பதை, விளிம்பு நிலை இளைஞர்களைக் கொண்டு சொன்ன விதத்தில் வலுவான அரசியல் படமாகவும் மாறியிருக்கிறது விசாரணை.


நன்றி - த ஹிந்து

பெங்களூர் நாட்கள் -திரை விமர்சனம்

ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா மூவரும் பள்ளி நாட்களில் இருந்து ஒன்றா கவே வளரும் உறவுக்காரர்கள். ஆர்யா பள்ளிப் படிப்போடு நிறுத் திக்கொண்டு பைக் ரேஸில் ஆர்வம் ஏற்பட்டு ஹைதராபாத் சென்றுவிடுகிறார். பிறகு ரேஸை விட்டுவிட்டு பெங்களூரில் தங்கி விடுகிறார். சாஃப்ட்வேர் இன்ஜினீ யரான சிம்ஹாவுக்கு பெங்களூரில் வேலை கிடைக்கிறது. எம்பிஏ படிப்பைத் தொடர வேண்டும் என்பது ஸ்ரீதிவ்யாவின் கனவு. அவரது பெற்றோரோ பெங்களூரில் வேலை பார்க்கும் ராணாவை ஸ்ரீதிவ்யாவுக்குத் திருமணம் செய்துவைக்கிறார்கள்.



பெங்களூரில் ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா ஆகிய நால்வருக்கும் ஒவ்வொரு விதமான சிக்கல் நிகழ, அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என் பதை மகிழ்ச்சியும் நெகிழ்ச்சி யுமாகச் சொல்லியிருக்கிறார் இயக் குநர் ‘பொம்மரில்லு’ பாஸ்கர்.


மலையாளத்தில் வெளியான ‘பெங்களூர் டேஸ்’ படத்தைச் சின்னச் சின்ன மாற்றங்களுடன் மறுஆக்கம் செய்திருக்கிறார் இயக்குநர். ஆர்யா, திவ்யா, பாபி சிம்ஹாவின் ரகளைகள் படத் துக்கு இளமைப் பொலிவைத் தருகின்றன. ஆர்யா, பாபியின் குணத்தில் இருக்கும் வேறுபாடு அவர்களது நட்பை சுவாரஸ்ய மாக்குகிறது. பாபியின் பெற்றோர், ஆர்யாவின் பெற்றோர், திவ்யா ராணா மண வாழ்வு, ராணாவின் கடந்த காலம், ஆர்யாவின் காதல், அதில் முளைக்கும் பிரச்சினை எனத் திரைக்கதை பல்வேறு விஷ யங்களைக் கொண்டிருந்தாலும் சிக்கலில்லாமல் சுவாரஸ்யமாகப் பயணிக்கிறது. எனினும், ஒரே மாதிரியான காட்சிகளைத் திரும் பத் திரும்பப் பார்க்கும் அலுப்பு ஆங்காங்கே ஏற்படுகிறது.


ஆர்யா பார்வதி மேனன் காதல் கவித்துவமாகக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது. ஆனால், பாபி சிம்ஹாவின் காதலைச் சித்தரித்த விதம் சிறுபிள்ளைத்தனமாக இருக் கிறது. ராணாவுக்கும் திவ்யா வுக்கும் இடையே நெருக்கம் உருவாவதற்கான காட்சிகள் மனதைத் தொடுகின்றன. பாபி யின் அப்பா எம்.எஸ்.பாஸ்கர் வீட்டை விட்டுப் போவதும் அம்மா சரண்யா பாபியின் வீட்டுக்கே வந்து வாழ்க்கையைக் கொண்டாடு வதும் சுவாரஸ்யமான திருப்பங் கள். பாஸ்கர் ஏன் வீட்டை விட்டுப் போனார் என்பதைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ள புதிர் சுவையானது.



‘‘காரை நிறுத்தச் சொல்லு. படம் பார்த்துட்டு வந்து கதை சொல்றோம்’’ என்று ஆர்யாவும், பாபியும் காரைவிட்டு இறங்கி செல்லும்போதும், ‘இனிமேல் இதுதான் என் ரூம்’ என்று தான் உபயோகப்படுத்தும் பொருட் களை எல்லாம் அள்ளிக்கொண்டு போய் கணவன் ராணாவின் அறை யில் ஸ்ரீதிவ்யா போடும் இடமும் கலகலப்பு. அதே கலவையைப் பல காட்சிகளில் நீட்டியிருக்கலாம்.


நிறைய கதாபாத்திரங்களைக் கூட்டாமல், அதிகம் பேசாமல், நுட்பமான உணர்வுகளால் உறவின் வலிமையைச் சொல்கிறது படம். பார்வையாளர்களிடையே நல்லுணர்வை எழுப்ப விரும்பும் படங்களுக்கு உள்ள பிரச்சினை இந்தப் படத்துக்கும் இருக்கிறது. அதீதமான நல்லவர்களை ஒன் றாகப் பார்க்கும்போது திகட்டு கிறது. வாழ்வின் சிக்கல்களை எளிமைப்படுத்தும் போக்கு ஏமாற்றமளிக்கிறது. திருப்பங்கள் எதிர்பார்த்த விதத்திலேயே இருக்கின்றன. மிதமாக நகரும் திரைக்கதையும் படத்துடன் முழுமையாக ஒன்றவிடாமல் செய்கிறது.



திருமண வாழ்வில் ஒட்டாமல் இருந்தாலும், நண்பர்களுடன் சேர்ந்து வாழ்க்கையைக் கொண் டாடும் பாத்திரத்தில் ஸ்ரீதிவ்யா தன்னை நன்கு பொருத்திக் கொள்கிறார். ராணாவின் பின்கதை தெரிந்த பிறகு அவர் நடந்து கொள்ளும் விதத்தில் நடிப்பில் பக்குவம் தெரிகிறது. ஆர்ஜேவாக வரும் பார்வதி மேனன் தன் பொலிவான தோற்றத்தாலும் நுட்பமான நடிப்பாலும் பார்வை யாளர்களைக் கொள்ளை கொள் கிறார்.



ராணா, சமந்தா காதல் கதை மனதை நனைக்கிறது. காதல் வலியைச் சுமந்துகொண்டு பரபரப்பான வாழ்க்கையில் ஓடும் இளைஞனின் உணர்வுகளைச் சில இடங்களில் சிறப்பாக வெளிப் படுத்தியிருக்கிறார் ராணா. மகளை இழந்த சோகத்தை வெளிப்படுத்தும் காட்சியிலும் கடைசியில் மனம் மாறும் காட்சியிலும் பிரகாஷ்ராஜ் நெகிழவைக்கிறார். பளிச்சிடும் மின்னலாகத் தோன்றி மறைகிறார் சமந்தா.



பெங்களூரில் சாஃப்ட்வேர் பொறியாளராக வேலைபார்த்தா லும் ஊர் மணம் மாறாமல் இருக்கும் பாத்திரத்தில் பாபி சிம்ஹா சரிவரப் பொருந்தவில்லை. கிராமத்தில் இருந்தாலும் நகர கலாச்சாரத்துக்கு விரும்பி மாறும் சரண்யா பொன்வண்ணனின் நடிப்பு அசத்தல்.




மலையாள மூலப் படத்தில் பாத்திரங்களிடம் தென்பட்ட சீரான இயல்புத்தனம் தமிழ்ப் படத்தின் பாத்திரங்களில் முழுமையாக வெளிப்படவில்லை. அதோடு மலையாளத்துக்கே உரிய மிக நுணுக்கமான நகைச்சுவையை தமிழுக்கு ஏற்றபடி மாற்றுவதில் இயக்குநருக்கு ஆங்காங்கே சறுக்கல் தெரிகிறது.


இருந்தாலும் இந்த பெங் களூர் நாட்களும் ஓரளவு குளுகுளுதான்.

நன்றி - த இந்து

ஸ்டாலின் ,கனிமொழி ,அழகிரி மூவரும் விவசாய குடும்பமா? ஜெ அதிர்ச்சி

ச(மத்துவ) ம(க்கள்) க(ட்சி) தொண்டர்களுடன்ஆலோசித்து கூட்டணிபற்றி முடிவு-சரத்# ச ம க தொண்டர்கள் = சரத் ,மகள் வரலட்சுமி ,கலைச்செல்வி ராதிகா?



===============




2 ரஜினிக்கு, பத்ம விபூஷன் விருது தாமதமாக கொடுக்கப்பட்டுள்ளது- இளங்கோவன் # ரஜினி ஸ்பீடுக்கு விருதுக்குழுவும் இருக்க முடியுமா?




================



எல்லோரையும் விரட்டிவிட்டு இளங்கோவன்–குஷ்பு மட்டும்தான் காங்கிரசில் இருப்பார்கள்- விஜயதாரணி #  நக்மாவும் இருப்பாங்க மேடம், போட்டி க்கு




===================




4  ஹாலிவுட் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுக்கிறது: தனுஷ் # நாம தமிழ்ப்படத்துலயே 18 கிஸ் சீன் வெச்சோம், ஹாலிவுட்ல ம்ம்




====================



5   தேர்தலில் யாருடன் கூட்டணி?: காஞ்சிபுரம் மாநாட்டில் விஜயகாந்த் முடிவை அறிவிக்கிறார்# மாநாட்டில் மஞ்சள் துண்டு போட்டு இடத்தைப்பிடிச்சிடனும்




================



6  SVS மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்துள்ளது-ஜெ

# ஏன் இப்படி?உங்க ஆணைப்படிதானே எல்லாம் நடக்கும்?எங்கேயும் எப்போதும்?


============

7 கேப்டன் 234 தொகுதியில் எங்கு வேணாலும் நிற்பார் - பிரேமலதா # எங்கே நின்னாலும் ஸ்டெடியா நிப்பாரா?னு எதிர்க்கட்சிக்காரங்க கேட்பாங்க

=============

8 ஓட்டுக்கு பணம் தருவது தடுக்கப்படவேண்டும்: கலைஞர் - பிள்ளையார் சுழி போட்டவங்களே நாம தானே தலைவரே?

============


9 நானும் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன், அதனால் விவசாயிகளுக்கு நன்மை செய்வேன்:கலைஞர் -எப்டி? ஸ்டாலின் ,கனிமொழி ,அழகிரி போன்ற விவசாயிகளுக்கா?


==============

10 யாரும் ஓட்டுக்கு பணம் தராமல் தடுக்க வேண்டும்: கலைஞர் - நம்மைத்தவிர வேற யாரும் னு தெளிவா சொல்லுங்க.உடன் பிறப்புகள் குழம்பிடுவாங்க இல்ல?


=================


11 தனித்துப் போட்டியிடவும் தயார்- சரத்குமார்# தாரை தப்பட்டை கிழியப்போகுது.தனி ஆவர்த்தனமா?ரைட்டு

===============


12 மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைந்தால் ஊழல்வாதி சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்-வைகோ# இவருக்கு கலைஞர் மேல ரொம்ப.நாளா ஒரு கண்ணு

==============

13 என்னுடன் விவாதிக்க மு.க.ஸ்டாலின் தயாரா? அன்புமணி ராமதாஸ் மீண்டும் சவால் # எங்க அப்பா கூட வாதிட உங்க அப்பா தயாரா?னு கேட்டு சமாளிங்க தலை


==============

14 DMKஆட்சிக்கு வந்தால்தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த பிரச்சினைகளை தீர்க்க முடியும்;- கலைஞர் # தமிழகத்தோட ஒட்டுமொத்த பிரச்னையே திமுக அதிமுகதான்


=============

15 தெறி படம் அருமையாக வந்துள்ளது - அட்லி
# வந்துடுச்சா?ஏப்ரல் 14 தான் வரும்னாங்க?


==============

16 சரத்குமார் கட்சியை உடைத்தது பாஜக.பொன். ராதா முன்னிலையில் பாஜகவில் இணைந்த 7 நிர்வாகிகள் # தனியா போட்டியிடத்தயார்னு சரத் சொன்னது இதனாலதானா?


=================

17  அதிமுக, திமுகவை தேர்தலில் தோற்கடிப்போம்: மதுரை மாநாட்டில் வைகோ சபதம்# 234 தொகுதி ல எந்தத்தொகுதில தோற்கடிப்பீங்க?ன்னு கரெக்டா சொல்லுங்க 


===================


18  கூட்டணி பற்றி திமுகதலைமை முடிவு எடுக்கவில்லை-அன்பழகன் # கேப்டன் சைடில் இருந்து இன்னும் சிக்னல் கிடைக்கலைன்னு ஓப்பனா சொல்லுங்க, என்ன கூச்சம்?



=====================


19  அதிமுக அரசு மீது பெண்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது-கனிமொழி # ஆமா, தயாளு அம்மாள், ராசாத்தி, கனிமொழி, துர்காஸ்டாலின், காந்திஅழகிரி இவங்கதானே



==================


20  பிரதமர் மோடியின்  கோவை வருகை திருப்புமுனையை ஏற்படுத்தும்: தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை # மோடி இந்தியா வந்ததே பெரிய டர்னிங்க் பாயிண்ட்தான்


========================

Monday, February 08, 2016

ACTION HERO BIJU ( மலையாளம்)- சினிமா விமர்சனம்

என்  கதையை திருடிட்டாங்கன்னு ஒரு பயலும் இந்தப்படம் மேல  கேஸ் போட முடியாது, ஏன்னா இந்தப்படத்தில் கதையே கிடையாது/ ஷாக் ஆகாதீங்க. சின்னச்சின்ன சம்பவங்களின் தொகுப்பு தான் படம், இதில்   மெயின் வில்லன் கிடையாது, டூயட் கிடையாது , பஞ்ச் டயலாக் கிடையாது.,அவ்வளவு  ஏன்? போர் அடிக்கும் காட்சியே  கிடையாது


எல்லா சினிமா ஹீரோக்களும் போலீஸ் கேரக்டர்ல நடிக்க ஏன் ஆசைப்படறாங்க? யூனிஃபார்ம் போட்டாலே கெத்து வந்துடும் . ஆக்சன் ஹீரோ  இமேஜ் கிடைக்கும், சம்பளமும் எகிறும். அதனால தான் பிரேமம் ஹிட்டுக்குப்பின்  ஆக்சன் ஹீரோ அவதாரம் எடுத்திருக்காரு


சிவாஜிக்கு ஒரு தங்கப்பதக்கம், எம் ஜி ஆர் க்கு ரகசியப்போலீஸ் 115 , ரஜினிக்கு  மூன்று முகம், கமலுக்கு காக்கிசட்டை , குருதிப்புனல். விஜய்காந்துக்கு புலன் விசாரணை உட்பட பல படங்கள் ( அதிகமான போலீஸ்  கேரக்டர் நடித்த ஒரே தமிழ் ஹீரோ)சத்யராஜ்க்கு  வால்டர் வெற்றிவேல் , கடமை கண்ணியம் கட்டுப்பாடு, டாக்டர்  ராஜசேகருக்கு இதுதாண்டா போலீஸ் , விஜயசாந்திக்கு வைஜெயந்தி ஐபிஎஸ் , விக்ரம் க்கு சாமி , தில் ,அஜித் க்கு மங்காத்தா , விஜய் க்கு போக்கிரி ( யூனிஃபார்ம் போடாமயே சமாளிச்சாரில்ல) . சூர்யாவுக்கு சிங்கம் 1 சிங்கம் 2 காக்க காக்க என  நீளும் பட்டியல்கள்.


மேலே சொன்ன படங்கள்  எல்லாம் மெகா ஹிட் ஆன போலீஸ் சப்ஜெக்ட் ப்டங்கள். இந்தப்படங்களின் சாயல் ஏதும் இல்லாமல்  ஒரு படம்  தான் இந்த ஆக்சன் ஹீரோ பிஜூ

 ஒரு போலீஸ் ஆஃபீசர்  போலீஸ் ஸ்டேஷன் ல  என்ன செய்வார்? அவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? தினமும் எந்த மாதிரி கேஸ் எல்லாம் வருது, அவர் எப்படி  டீல் பண்றார் என்பதே திரைக்கதை . கொஞ்சம் அசந்தாலும்  டிராமா மாதிரி இருக்கு என ஒதுக்கி விடக்கூடிய அபாயகரமான  கதை , ஆனா  சீன்  பை சீன்  ரசிச்சு பண்ணி இருக்கார் டைரக்டர்


 ஹீரோவா  நிவின் பாலி. பிரேமம் மெகா ஹிட்டுக்குப்பின் வரும் படம் என்பதால் ஏக எதிர்பார்ப்பு. பல சீன்களில் சாமி விக்ரம் போல் சாயல். ஹெல் மெட் போட்டு பைக்கில் வரும்  சீனில் சத்யராஜ் சாயல்  என பல போலீஸ்  ஹீரோக்களை நினைவு படுத்தறார், சந்தேகமே இல்லாம அவருக்கு இது ஒரு ஹிட் ஃபிலிம் தான் . க்ளைமாக்ஸில் போடும்  ரியலிஸ்டிக் ஃபைட், ஹீரோயினுடனான காதல் , ஸ்டேசனில் கைதிகளை  டீல்  செய்வது என நடிப்பில் ஸ்கோர்  பண்ண ஏகப்பட்ட வாய்ப்பு. கலக்கிட்டார் மனுஷன்


 ஹீரோயினா  அனு எம்மானுவல். மூக்குத்தி அழகி. சிதம்பரம் அருகே உள்ள வைத்தீஸ்வரன்  கோவில் போனா அங்கே  ஒரு குளம் இருக்கும், பச்சைப்பசேல்னு அட்டகாசமான  சூழல். அந்த குளத்தைப்பார்க்கறதா? அதில் வரும் மீன் களை  ரசிப்பதா? குளிக்க வரும் பெண்களை ரசிப்பதா? என ஒரு குழப்பம் வரும் ,அது போல்  ஃபிகர்  மூக்குத்தி அழகை ரசிப்பதா? மூக்கை ரசிப்பதா? கண்ணை ரசிப்பதா?என பல குழப்பங்கள்.  நல்ல அழகு


திரைக்கதை  , வசனம் எல்லாம் கன கச்சிதம்

 எடிட்டிங்க் பக்கா , ஒளிப்பதிவு  ஓக்கே ரகம் , இசை  சராசரிக்கும் மேல. பின்னணி இசை  குட்




மனதைக் கவர்ந்த  வசனங்கள்

1  பாவப்பட்ட ஏழை மக்களுக்கு  சுப்ரீம் கோர்ட், ஹை கோர்ட், பஞ்சாயத்து  எல்லாம் இந்த போலீஸ் ஸ்டேஷன் தான்  HERO BIJU


டேய், உன் ஃபோன் நெம்பர் கேட்டா  எதுக்கு அவ ஃபோன் நெம்பரை தர்றே?

அவ நெம்பர் தான் என் மனசு பூரா இருக்குங்க  HERO BIJU


வாழ்க்கைல பிரச்சனை எப்பவும்  சொல்லிட்டு வராது, திடீர்னுதான் வரும், எப்பவும் நாம தான் தயாரா இருக்கனும்  HERO BIJU


எப்போ வேணா சஸ்பென்ட் ஆர்டர்  கிடைக்கலாம்கற அபாயகரமான துறைகள் ல  போலீஸ் துறைக்குதான் முதலிடம்  HERO BIJU


டேய், நீ 2 தப்பு பண்ணி இருக்கே
 1 }  46 வயசுல  லவ் பண்ணது  
2 இந்த கேவலமான இத்துப்போன மூஞ்சியை லவ் பண்ணது  HERO BIJU







இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  சரக்கு அடிச்ட்டு மப்பில்  லுங்கி அவிழ்வது கூட தெரியாமல் ரகளை செய்த சரக்கு பார்ட்டிக்கு தரும் வித்தியாசமான தண்டனை  கல கல.  பின் அதே  நபரை  பாட்டுப்பாடச்சொல்லி ரசிப்பது , அதை லேடீஸ் கான்ஸ்டபிள்கள் வெட்கச்சிரிப்புடன்  ரசிக்கும்  சீன்  கவிதை



2 ஒரு  சொர்ணாக்கா பார்ட்டியை லவ்வும் 46 வயசு ஆளை  டீல்  செய்யும் காட்சி  அதகளம்.அந்தப்பெண்ணின்  முக பாவனைகள்  அருமை


3  ஹீரோயினுடனான காட்சிகள்  கவிதை.டூயட்  வைக்காமல்  இருவரும்  நடந்து செல்லும் காட்சிகளையே பயன் படுத்தி  பாட்டு வைத்தது நல்ல ரசனை

4  க்ளைமேக்ஸ்  ஸ்டண்ட்  காட்சி அபாரம் . ஆனால் அந்த ஃபைட்டைக்கூட  தவிர்த்திருக்கலாம். எதார்த்தமான  போலீஸ்  கதை ஆகி  இருக்கும்.



இயக்குநரிடம்  சில கேள்விகள்


1  போலீஸ்  கான்ஸ்டபிள்   தவற  விட்ட  வாக்கி டாக்கிக்காக  ஸ்டேசன் இன்ஸ்பெக்டரை  தண்டிக்க சட்டத்தில்  இடம்  இருக்கா?

2  வாக்கி  டாக்கி திருடனை  கமிஷனர்  வந்து அறைவது எல்லாம் சினிமாத்தனம். கமிஷனுருக்கு  ஏகப்ப்ட்ட டென்சன், கேஸ்கள் இருக்கும்


3 க்ளைமாக்சில்  கையில்  கன் இருந்தும்  அவர் ஏன்  ரிஸ்க் எடுத்து  ஃபைட்  போடனும்?



சி  பி  கமெண்ட்-ACTION HERO BIJU ( மலையாளம்)- தனி கதையாக இல்லாமல் சிறு சிறு சம்பவங்களின் தொகுப்பாக வித்தியாசமான போலீஸ் ஸ்டோரி,ஏ சென்ட்டர் ஹிட்,ரேட்டிங்- 3/5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 43



குமுதம்  ரேங்க் ( கணிப்பு)= நன்று



 ரேட்டிங்


3/5

கேரளா  திருவனந்தபுரம் - ஆட்டிங்கல்  ட்ரீம்ஸ் தியேட்டரில் படம் பார்த்தேன்