Skip to content

Saturday, February 06, 2016

விசாரணை- பிரபல பெண் ட்வீட்டரும் த ஹிந்து நாளிதழும்

விசாரணை.


கமல் ரஜினி ராம்கோபால் வர்மா போன்ற ஜாம்பவான்கள் பாராட்டிய படம், ஆடுகளம் படத்திற்கு பிறகு ஐந்து வருடம் கழித்து வெற்றிமாறன் படம், உலக திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற படம், என்று உச்ச எதிர்பார்போடு நான் சென்று பார்த்த முதல் படம் - 


இதுவரை திரைப்படங்கள் என்னுள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா என்றால் அதிகம் இல்லை என்பதே உண்மை,காதல் பருத்தி வீரனைப் போல எப்போதாவது.. பல படங்களைப போல இப்படத்தையும் எளிதாய் கடக்க ியலவில்லை காரணம் இப்படத்தின் தாக்கம்.. அப்டி என்ன தான் தாக்கம்??
அது எந்தளவிற்கென்றால் படம் முடிந்து வெளியேறிய பிறகும் என்னால் மீள முடியவில்ல படம் முடிஞ்சு வீட்டுக்கு வந்தது 9.45 மணிக்கு இப்போ இத எழுதிட்டு இருக்கறது 1.30 மணிக்கு.. பாத்துக்கோங்க ஒரு வித பயம் ஏன்னு தெரில இப்டியான மனிதர்களும் இருக்காங்களேனு வந்த பயமாக கூட இருக்கலாம்.. சுயநலவாதிகள் சந்தர்ப்ப வாதிகள் என... படத்திற்குள் போவோம் படம் ஆரம்பிச்சு பத்தாவது நிமிஷத்துல கதைக்குள் வந்துடாங்க எப்படியான படம்னு தெரிஞ்சிடுச்சி... படம் போக போக அந்த நாலு பேரோட நானும் அந்த லாக் அப்ல இருக்க மாதிரி ஓரு ஃபீல் .


... அதான் இயக்குனரின் அசாத்திய திறமை.. கரெக்டா 40 நிமிஷத்துக்கு அப்புறம் பேசாம கிளம்பி போயிடலாம்னு கூட நினைச்சேன் ஏன்னா அந்தளவுக்கு இருந்துச்சி அந்த கொடுமைகள்,,, பாக்க முடில.... அந்த போலீஸ்காரங்க அடிக்ற அடியெல்லாம் அவ்ளோ உண்மை... யாருக்கு தெரியும் உண்மையா கூட அடிச்சி இருக்கலாம். அதுலயும் ஒரு மொட்ட போலீஸ் பனைமட்டைய வச்சி தினேஷ அடிக்க வரப்போ கண்ண மூடிக்குட்டேன் :)))) அது எப்டி இருந்திருக்கும்னு என் அக்கா கொடுத்த ச்சை சவுன்ட் ரியாக்ஷன்ல தெரிஞ்சிடுச்சி....


என் அப்பாவும் கூட வந்திருந்தார் அவரோட பக்கத்து சீட்ல தான் உட்காந்து படம் பாத்தேன்.... ஏன் சொல்றனா அவரும் போலீஸ் தான் திரைல நடக்குறத பாத்துட்டு அவர பாக்குறேன் முகத்துல ஒரு ரியாக்சன் இல்லாம பாத்தட்டு இருக்கார்.... அப்பப்ப நா அவர கேவலமா பாக்கறப்ப ஒரு சின்ன ஸ்மைல் என் அப்பா... த்துஊ :)))))) இந்தப் படத்துல நடிகர்களோட நடிப்பை பாராட்ட வார்த்தையில்லை.. வாழ்ந்திருக்காங்க... இன்னும் சொல்லனும்னா ஒவ்வொருத்தங்க கைலயும் ஒரு அவார்ட் கொடுக்கனும்.


உயர் அதிகாரிகள் கொடுக்குற ப்ரஷரால கிஷோர அடிச்சுட்டு சமுத்தரகணி பாக்கற அந்த பயம் குற்றவுணர்ச்சி கலந்த பார்வை...


நாங்க எதுவும் கேக்கல சார் இப்ப தான் சார் வந்தோம்னு அப்பாவிதனமா தினேஷ் விளக்க முயற்சிக்கிற சீன்.. க்ளைமேக்ஸ்ல சமு.கனி கால புடிச்சு கெஞ்சுற சீன்.... எல்லாம் ரொம்ப பாதிச்ச சீன்ஸ்... அசாத்திய நடிப்பு.
படத்தோட வேகத்துல இசைய கவனிக்க மாட்டோம்... ஆனா அதான் ஜி.வியோட மிகப்பெறிய வெற்றியே... படத்தோடு பிண்ணிப்பினைந்த பிண்ணனி இசை.


இந்தப்படம் ஏதோ இதயம் பலவீனமானவர்கள் பாக்க முடியாது அப்டி இப்டி சொன்னாங்க... அதெல்லாம் கிடையாது இளகிய மனம் கொண்டவர்கள் சகித்துக் கொள்ள முடியாது அவ்ளோதான்.. ஏன் சொல்கிறேன் என்பது படம் பார்த்தால் புரியும். அவ்வளவு உண்மையாக காட்சியமைக்கப் பட்டுள்ளது. படம் முடிஞ்சு வீட்டுக்கு திரும்பும் போது அப்பாவ கேட்டேன்...இப்டியெல்லாம் இருப்பாங்களாப்பா போலீஸ்னு... ஹே லூசே இது வெறும் படம் அப்டியெல்லாம் இல்லனு சொன்னாரு.... ஆனா நா அதை ஏத்துக்க முடியல...


இது ஒரு உண்மை சம்பவம்னு படத்துலே சொல்லிருக்காங்களே.. அதான்.
ஓவரால் இந்தப் படத்த ஒரு முறை பாக்கலாம்.. இன்னொரு முறை சகிப்புத் தன்மை இருந்தா சாத்தியம் ஆனா என்னால முடியாது :)))


கண்டிப்பா எல்லோரும் பாக்க வேண்டிய மிக மிக அற்புதமானப் படம்.


சுருக்கமா இது ஒரு உலகத்தர படம்... நன்றி தனுஷ் வெற்றிமாறன்.
எழுத்துப்பிழை இருப்பின் தாந்தோன்றிச் செயல்படும் keyboardஐ மன்னிக்ும்.:))))


 நன்றி#JenniferBlessy



சமூக வலைதளங்களில் கவனிக்கத்தக்க சினிமா, எழுத்து ஆர்வலர்கள் 'விசாரணை' பற்றி எழுதும்போது, 'அதிகார வர்க்கம், விளிம்புநிலை, கோட்பாடு, கட்டவிழ்த்தல், குரூரத்தின் நிஜ முகம், பரிணாமம், செரிமானம், குரலற்றவர்களின் குரல், மனித உரிமை மீறல், அத்துமீறல், சாமானியனின் மரண ஓலம், அதிகாரத் துஷ்பிரயோகம், அவதானிப்பு, அவனண்டர்வார்ப்பு...' என்பன போன்ற டரியல் மொழிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தால் நல்லது. இதையெல்லாம் பார்த்துவிட்டு, "விடுங்கடா சாமி... இது நமக்கான படம் இல்லைடா"ன்னு பலரும் தெறிச்சி ஓடக் கூடும்.



அதேபோல், இந்தப் படத்தைப் பார்க்க தனி தைரியம் வேண்டும்; மன உறுதி வேண்டும்; இரும்பு நெஞ்சம் வேண்டும் என்றெல்லாம் அறிவுரை சொல்வதையும் நிறுத்துங்கப்பு. முக்கியமாக இந்தப் படத்தைப் பார்த்துட்டு நாலு நாள் தூங்கலை. பருத்திவீரன் கிளைமாக்ஸுக்கு அப்புறம் என்னை தூங்க விடாம பாதிச்ச படம் என்று போகிற போக்கில் உங்கள் சினிமா அறிவை வெளிப்படுத்த நினைக்காதீர்கள் நண்பர்களே!



தொண்டையில் வாய்வைத்துக்கு கடித்துக் குதறும் படக்காட்சிகளை டிவி பொட்டி முன்பு அமர்ந்து, நொறுக்குத் தீனையைக் கொறித்துக்கொண்டே குழந்தைகள் ரசிக்கும் வகையில் தமிழ் சினிமாவை வளர்த்துவிட்டிருக்கிறார்கள். செய்தித்தாள் தொடங்கி செய்தி சேனல் வரையில் அங்கிங்கெனாதபடி ரொம்ப ஈஸியா வன்முறைகளைக் கடந்து போகிற காலத்தில் இருக்கிறோம்.



சின்ன சின்ன செயல்களைக் கூட பேரன்பின் தரிசனம் என்று மிகைப்படுத்துவதும் வழக்கமாகிப் போய்விட்டது. உச்சபட்ச வன்முறை என்பது கழுத்தை நெறிப்பதும், குரல்வளையைக் கடிப்பதும், ரத்தம் சொட்டச் சொட்ட செத்த பிணத்தின் மீது தாக்குதல் நடத்துவதும் படத்தில் இமை கொட்டாமல் பார்ப்பது பழக்கமாகிப் போனது.


இந்த நிலையில், விசாரணை படத்தில், தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத வன்முறைக் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது போலவும், இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம் என்று சொல்வது நகைமுரண்!


நிஜத்தில் தாங்கிக்கொள்ளவே முடியாத வன்முறைகளை அப்படியே ர்ராவாக பதிவு செய்யாமல், ப்யூர் சினிமாவுக்கே உரியவகையில், வன்முறைகளின் பாதிப்புகளை மட்டும் ரசிகர்களை உணரவைக்கிறது விசாரணை. ரத்தம் தெறிக்கும் ஓர் இடத்தைக் கூட கறுப்பு - வெள்ளையில் காட்டியதே இதற்கு மிகச் சிறந்த உதாரணம். வன்முறைக் காட்சிகளை அப்படியே பதிவு செய்வது சாதாரண படைப்பாளிகளின் திறமையை காட்டும். ஆனால், அந்த வன்முறை தரும் வலியை மட்டும் உணரச் செய்யும் வகையில் காட்சிகளை அமைப்பதுதான் அசாத்திய படைப்பாளியின் வல்லமை. அப்படி ஓர் அபார சினிமா படைப்பாளியான வெற்றி மாறனை கொண்டிருப்பது நமக்குப் பெருமை.



வன்முறைகளை முன்வைத்துப் பார்க்கும்போது, 15 வயதுக்கு மேற்பட்ட எவரும் தனியாக அரங்கில் பார்க்கக் கூடிய அளவில்தான் விசாரணை இருக்கிறது என்பது தெளிவு.



இப்படம் குறித்த அனுபவக் கருத்துகளைப் படிக்கிறபோது, இதுதான் காவல்துறையின் உண்மையான முகம் என்கிற ரீதியிலும் கருத்துகள் திணிக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. இதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. நம் காவல்துறையினரின் இருண்ட பக்கம் மட்டும்தான் விசாரணை. மனித உயிர்களைக் காக்கும் மருத்துவத் துறையில் உள்ள இருண்ட பக்கங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து எது பயங்கரம் என்று விவாதிக்கத் தொடங்கினால் முடிவு எட்டப்படுதல் கடினமே.



இப்படி எல்லா துறைகளிலும் இருண்ட பக்கங்கள் உள்ளன. எல்லா மனிதர்களிடத்திலும் ஓர் இருண்ட பகுதி இருக்கின்றது. ஒரு தனி மனிதனை எடுத்துக்கொள்ளுங்கள். தன் ரத்த பந்தங்களுக்கு மட்டுமே தெரியும், தன் உறவுகளுக்கு மட்டுமே தெரியும், தன் நண்பர்களுக்கு மட்டுமே, தன் சுற்றத்தாருக்கு மட்டுமே தெரியும் பக்கங்களுக்குடன் இருப்பார். அவருக்குள் உள்ள வக்கிரங்களும் இன்னபிற நெகட்டிவ்களும் அவரைத் தவிர மற்றவர்களுக்குத் தெரிய எளிதில் வாய்ப்பில்லை. இத்தகைய ஓர் இருண்ட பக்கத்தை மட்டுமே வைத்துக்கொண்டு ஒருவரை முழுமையாக இப்படித்தான் என்று தீர்மானிப்பது எந்த வகையில் சரி என்பது விவாதிக்கத்தக்கது.



இதுபோலவே, காவல்துறையின் இருண்ட பக்கம் ஒன்றை விசாரணை வெளிச்சப்படுத்தியது என்பதற்காக, ஒட்டுமொத்த காவல்துறையினரின் உண்மை முகம் இதுமட்டுமே என்று பொத்தாம் பொதுவாகச் சொல்வதும் சரியல்ல. ஏனென்றால், சென்னை போன்ற பெருநகரில் பெரிய அளவில் அச்சுறுத்தல் இல்லாமல் அன்றாட வாழ்க்கையில் போதுமான பாதுகாப்பு உணர்வுடன் பெரும்பாலான மக்கள் வாழ்வதற்கு காவல்துறையின் பங்களிப்பு என்பது மிகப் பெரியது என்று நம்புகிறேன்.



ஹரி, கவுதம் முதலானோர் படங்களில் வரும் போலீஸ் அதிகாரிகள்தான் காவல்துறையின் உண்மையான முகம் என்று 100 சதவீதம் நம்புவது எவ்வளவு அபத்தமோ, அதற்கு இணையானதுதான் விசாரணையில் காட்டப்பட்ட காவல்துறையினர்தான் காவல்துறையின் 100 சதவீத உண்மை முகம் என்பதும்.


அதேநேரத்தில், நாம் சம்பந்தப்பட்டிருப்பதால், நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய காவல்துறையின் இருண்ட பக்கத்தை நேர்மையாகவும் நேர்த்தியாகவும் காட்டிய வகையில் இங்கே விசாரணை முக்கியத்துவம் பெறுகிறது.
*
படப்பிடிப்பில் தொலைந்து போகும் என் படங்களை அடையாளம் காட்டும் படத்தொகுப்பாளர் கிஷோருக்கு இப்படம் சமர்ப்பணம் என்ற வாசகத்தை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் கரவொலி எழுப்பி வெற்றி மாறனின் நேர்மையை அங்கீகரித்தது முதல் காரணம்.


பெரிய ஜாம்பவான்கள் கூட இந்தப் படத்தின் தழுவல் என்பதை திரையில் சொல்ல மறுக்கின்றனர். இன்னும் சிலர் நன்றி கார்டுடன் சேர்த்து ரசிகர்கள் உள்வாங்காத 2-3 நொடிகளில் கிரெடிட் கொடுப்பதாக தகிடுதத்தம் செய்கின்றனர். ஆனால், வெற்றி மாறன் அந்த சின்னப்புள்ளத்தனத்தை செய்யவே இல்லை.



சந்திரகுமாரின் லாக்கப் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் என்று ரசிகர்கள் உள்வாங்கும் வரை சில நொடிகள் திரையில் தெரியவைத்தார். மூலக்கதை சந்திரகுமார் என்று கிரெடிட் கொடுத்தார். இதனாலேயே வெற்றி மாறன் மீதான மரியாதையை அதிகரிக்க ரசிகர்கள் கரவொலி எழுப்பினர். இது அடுத்த காரணம்.


தன் படைப்புக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்கிறார் வெற்றி மாறன். அதனால்தான் படம் முடிந்த பிறகும் எழுத்தாளரின் குரலை பதிவு செய்திருக்கிறார்.
''கோட்டாவுல வந்தவன் சிஸ்டம் புரியாம தொல்லை பண்றான்''


''அப்ஸ்ல-னா அல்கொய்தாவா? ஐஎஸ்ஐஎஸ்-ஆ?''
''தமிழ்னா எல்டிடியா?''
வசனங்கள் மூலம் மற்றவர்களின் பொதுப்புத்தி அடிப்படையிலான சந்தேகப் பார்வையைப் புரிய வைக்கிறார்.
ரஜினிமுருகன் போன்ற கமர்ஷியல் படங்களில் நடித்த டம்மி வில்லன் சமுத்திரக்கனி நடிகனாக ஆக்கிரமிக்கிறார். தினேஷ், கிஷோர், முருகதாஸ் போன்ற நடிகர்களின் ஆளுமையை உணரமுடிகிறது.
இப்படி பல காரணங்களை பட்டியலிடுவதை விட படம் பார்த்து நீங்கள் தமிழ் சினிமாவின் வலிமையை உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதே இந்த எளியவனின் வேண்டுகோள்.
இன்னொரு முக்கிய கோரிக்கை: பாலு மகேந்திராவின் ஆன்மா வெற்றி மாறனை வழிநடத்துகிறது. நல்ல சினிமாவை பாலு மகேந்திரா வெற்றி மாறன் மனதில் விதைத்துச் சென்றிருக்கிறார் என்றெல்லாம் ஆராதிப்பது வெற்றி மாறனின் தொழில் பக்தியை கூறு போடுவதுதான். படைப்பாளியை எந்த ஒப்பீடும் இல்லாமல் கொண்டாடுவதே அவருக்கும், படத்துக்கும் செய்யும் உண்மையான மரியாதையாக இருக்கும்.
*
மொத்தத்தில், விசாரணை... குறியீடுகள் குதறித்தள்ளத்தக்க வகையிலான எந்த பேரறிவும் அவசியம் இன்றி எடுக்கப்பட்ட தமிழின் பெருமித சினிமா.
இப்படிப்பட்ட எளிமையானதும் உருப்படியானதுமான படத்தைப் பற்றி டரியல் மொழிகளிலும் எழுதுவதும், இது விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட படைப்பு என்பதால் ஸ்டாரும் மார்க்கும் தரமாட்டேன் என்று அடம்பிடிப்பதும், உலகத் தரம் என்ற சொல்லுக்கு புது புது அர்த்தங்கள் புகுத்தி 'ஃபெஸ்டிவல் சினிமா' என்று முத்திரைக் குத்துவது முதலான மேதமை அணுகுமுறைகள், இந்தப் படத்தை சாதாரண மனிதர்களிடம் இருந்து விலகவைத்துவிடும் என்பதே நான் கொண்டிருக்கும் டரியல்.
உண்மையில், சாதாரண மனிதர்களைப் பற்றிய சாதாரண மனிதர்களுக்காகவும் எடுக்கப்பட்ட அசாதாரண படைப்புதான் இந்த விசாரணை!

த இந்து

மிஸ்! ஃபேஸ்புக்ல ஆக்டிவா இருக்கற நீங்க ஏன் ட்விட்டர்ல ஆக்டிவ்வா இல்ல?

மிஸ் ஆரோக்ய மேரி.ஐ லவ் யூ.


ஓ.என் கிட்டே எது உங்களைக்கவர்ந்தது ?
எதும் இல்ல.யாராவது கேட்டா ஆரோக்யத்துடன் வாழறேன்னு சொல்லலாமே?



===========

2 சிம்ப்ளிசிட்டி சினிமா ஹீரோ =,சார்.பாஸ்போர்ட் ஆபிசா? எனக்கு பாஸ்போர்ட் எடுக்கனும்.வீட்டுக்கு ஆபீசர்சை அனுப்ப முடியுமா?நான் வந்தா கூட்டம் கூடிடும்.

=============

3 ஜட்ஜ் = எதுக்காக சம்சாரத்தை தீர்த்துக்கட்டினீங்க?


சசி தரூர்.( கைதி)= பிடித்தவர்களை கொண்டாடி "தீர்ப்பதில் "தான் வாழ்க்கையின் ஒட்டு மொத்த மகிழ்ச்சி



=============


4 ஹால் ல சாப்பிடற நீங்க சரக்கு அடிக்கும்போது மட்டும் ஏன் பெட் ரூம் போய்டறீங்க?


ஆல்ஹ"ஹால்" சாப்பிடக்கூடாதுன்னாங்க#SAY NO TO ALCO"HALL"


===========

5 எரும்பு ,எறுமை ன்னு தப்பு தப்பாஎழுதி இருக்கியே?


டீச்சர்
எறும்பு சின்னது.அப்போ சின்ன ரு தானே வரனும்? எருமை பெருசு.அப்போ பெரிய.று தானே?



=============

6 டியர்! உன் சமையல் அறையில் நான் உப்பா?,சர்க்கரையா?


க்ளீனர்.& ஹெல்ப்பர்



================

7 டியர்.உங்க சம்பளம் குறுந்தொகை யா இருக்குன்னு அப்பா சொல்றாரு.


8 மாசம் சேர்த்து வெச்சிருந்தா எட்டுத்தொகை யா பெருகிடும்னு சொல்லிப்பாரு



================

8 டியர்! பொண்ணுங்களை  டி போட்டு கூப்பிட்டா தப்பில்லையா?

 அடியே! டீ போட்டு கூப்பிடலாம், சரக்குப்போட்டுட்டுதான் கூப்பிடக்கூடாது


===================



9  விஜய் ரசிகை = அப்பா, இந்த மாப்ளை வேணாம், ரொம்ப சாத்வீகமா இருக்கார்

ஏம்மா! ”ஆத்வீக்”மா இருந்தாத்தானே உனக்குப்பிடிக்காது?


=================


10  எங்க அம்மா பக்கத்து ரூம்ல இருந்துட்டே, எனக்கு கால் பண்ணி காமடி பண்ணிட்டு இருக்காங்க
அது காமெடி இல்லை. உங்க ஃபோன் எங்கேஜ்டா?னு செக்கிங்


===================


11 எனக்கு தலைவலி வந்தா அவர் தான் அமுக்கி விடுவார்,பேன் இருந்தாலும் எடுத்து விடுவார்

ஓஹோ, பெய்ன் கில்லரும் அவர்தான், பேன் கில்லரும் அவர்தான்


===================


12 மாமா! உங்க பொண்ணு டெய்லி கோபத்துல "கதகளி" ஆடறா


மாப்ளை.அவ விஷால் ரசிகை."திமிரு" பிடிச்சவன்னு அப்பவே சொன்னேனே?

=============


13 மிஸ்!ஒரு லட்சம் ரூபா கடன் வேணும்


சாரி.இல்ல
.பொய்.பேர்லயே லட்சம் ரூபா இருக்கு.அப்போ அக்கவுன்ட்ல இருக்காதா? ("LAKSH"MI)


===========
14  நான் யார் கிட்டேயும் வாய் கொடுத்து மாட்டிக்க மாட்டேன்


ஓஹோ, அப்போ லவ்வருக்குக்கூட லிப் கிஸ் லேதா?


===================


15 டியர்!சண்டைப் போட்டு  பேசாம இருப்பது தப்பு.கௌரவமே பார்க்காம முதல்ல பேசுறது தான்  அன்பு


 அய்யய்யோ, நேத்துதான் கே டிவில கவுரம் பார்த்தேன்
====================



16 மிஸ்! ஏதாவது சமையல் டிப்ஸ் ப்ளீஸ்!

 ஒரு டிப்ஸுக்கு 100 ரூபா சார்ஜ் ஆகும்

 ஏம்மா மின்னல்? 50 ரூபா இருந்தா ஹோட்டல்ல போயே சாப்ட்டுக்குவனே?



=================


17 டியர்! என் பிள்ளைத்தமிழ்  எப்டி?


நீயே ஒரு வரிக்கு 10 ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் பண்ணுவே, உன் பிள்ளை எப்ப்டி இருப்பான்?அவன் தமிழ் எப்டி இருக்கும்?


===============



18  டாக்டர்! ஸ்வீட்ஸ் சாப்பிடற மாதிரி  டெய்லி கனவு வருது.

ஓஹோ, ஃபேஸ்புக்ல எவனாவது ஸ்வீட் ட்ரீம்ஸ் -னு சொல்லி இருப்பான், அவனை அன்ஃபாலோ பண்ணவும்


==================

19  மிஸ்! ஃபேஸ்புக்ல ஆக்டிவா இருக்கற நீங்க ஏன் ட்விட்டர்ல ஆக்டிவ்வா இல்ல?

 இருக்கறது ஒரே ஒரு ஆக்டிவா. எல்லா இடத்துக்கும் ஒரே நேரத்துல?


===================


20 தலைவரே! உங்க பையன் சரக்கு அடிச்சா அதுக்கு துணை போவீங்களா?
 நோ
தமிழக மக்களை என் குழந்தைகளாகக்கருதுகிறேன்னு சொல்லிட்டு டாஸ்மாக் திறந்தது ஏன்?


===========================


===================

தேவ”தைப்பூச” ஸ்பெஷலிஸ்ட் யார் யார்?

பொண்ணுங்க அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி உள்ளே என்ட்ரி ஆகும்போதே நெட் தமிழன் பாய்ஞ்சு போய் ஐ லவ் யூ சொல்றான்.ரொம்ப காய்ஞ்சு கிடப்பானோ?


==============




2 பசியெடுக்குது,காலையில 3 இட்லி தான் சாப்ட்டேன்😥😿"



இட்லி ல. 3 தான் சாப்ட்டீங்க ஓக்கே.தோசை ல பணியாரத்துல எல்லாம் எவ்ளோவ் சாப்ட்டீங்க?



============

3 நெட் தமிழன் ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா ஆஃபீஸ் வேலை செய்ய உக்காந்தாக்கூட டார்லிங்க் எங்கே போய்ட்டே?னு மென்சன் போட்டு கூப்ட்டுக்குது

==============

4 அவனோட அடிக்கடி சண்டை போடனும் னு தோணுது என்னவா இருக்கும்

ஒரு வேளை டைவர்ஸ் ஆசை வந்துடுச்சோ என்னவோ? மேரேஜுக்கு முன்னமே?


===============


5  பெரும்பாலான மக்கள் விரும்பும்படி ஒரு படைப்பைப்படைக்க நினைக்கும்போது படைப்பாளியின் சுயம் மடிகிறது


=================


விருப்பமான ஹீரோ/தலைவர் உடன் ஒரு ஃபோட்டோ எடுக்க , ஒரு பதில் வாங்க எல்லை மீறிக்கெஞ்சி உங்கள் பெற்றோர் அளித்த சுயமரியாதையை இழந்து விடாதீர்!


==================

யாரிடமாவது எதற்காகவாவது கை நீட்டிப்பணம் வாங்கி விட்டால் நீ அவருக்கு அடிமை, வாங்கா விட்டால் நீ எஜமான்! உன் நிலையை நீயே தீர்மானி!


================


பொண்ணுங்க அவங்களோட தாய் மாமன் சித்தி மாமன், முறை மாமன் ஃபோட்டோ போட்டு வெறுப்பேத்தறாங்க, ஏம்மா தில் இருந்தா உங்க தங்கை ஃபோட்டோ தோழி ஃபோட்டோ  போடுங்களேன்


==================


9  தேவதை மாதிரி பொண்ணுங்க மஞ்சள் பூசி குளிச்சு சேலை அணிந்து வந்தா அவங்களை தேவ”தைப்பூச” ஸ்பெஷலிஸ்ட்னு சொல்லிக்கலாம்


================

10 எவ்வித நிபந்தனையும் இன்றி எல்லா ஃபிகர்களையும் நேசிக்கவும் கடலை போடவும் தயாராக இருக்கிறோம்,ஆனால் அது அவர்களுக்குப்புரிவதே இல்லை-தியாகிதிருமல


================


11 பொண்ணுங்க சொந்த டிபியா அவங்க கண்ணை வெச்சுட்டாப்போதும், நெட் தமிழன் ஓடி வந்து உன் கண்ல பவர் இருக்கே?ங்கறான், பவர் ஸ்டாரினினு தான் கூப்பிடலை


=================


12 ஃபேஸ்புக்கில் வந்து தோழி  ஃபிரண்ட்ஷிப் பிடிக்க முடியாதவன்  ஃபோன் நெம்பர் வாங்கி வாட்சப்ல வாகா கடலை வறுக்கறேன்னானாம் # நகரத்து சொலவடை


=================


13  ஊரே அமளி துமளி ஆகிட்டு இருந்தாக்கூட இந்தப்பொண்ணுங்க வீட்ல உட்கார்ந்து ரமணி VS  ரமணி சீரியல் பார்த்துட்டு இருக்காங்க


===================


14  அபிமான ஹீரோ கிட்டே நான்லாம் நேர்லயே கேள்வி கேட்டுட்டேன்டா.
 நீங்க கேட்டீங்க, சரி, அவரு எதுனா பதில் சொன்னாரா? ட்விஸ்ட்டே அங்க தானே இருக்கு?



================

15  பிரபலங்களிடம் கேள்வி கேட்டு பதில் வரவில்லை என  ஏமாறாதீர்கள்! அவர்களைப்ப்புறந்தள்ளி கண்டுக்காம விட்டா  அவர்கள் கெத்து குறையும்


===================

16  தங்கள் பட ரிலீஸ் டைமில் பட ப்ரமோவுக்காக ஹீரோக்கள் உங்களை பகடைக்காயாக பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்காதீர்கள்.


===================


17  யார் என்ன ஜோக் சொன்னாலும் இதெல்லாம் ஒரு ஜோக்கா?ன்னு சொல்லும் பொண்ணுங்க வீட்டுக்குப்போய் இப்போ இம்மீடியட்டா 10 ஜோக்ஸ் சொல்லுங்கனு சொல்லனும்


=====================


18  வெற்றிக்கனி உன் மடியில் வந்து விழ வேண்டும் எனில் முதல் கட்டமாய் நீ தினம் அதிகாலை 5 மணிக்குள் எழ வேண்டும்


===================


19 பெரியோர் சொல் கேட்டு நடத்தலில் ஈகோ பார்க்கத்தேவை இல்லை, 70 ஆண்டு கால அனுபவப்பாடம் இலவசமாய் நம் கைகளில் கிடைப்பதே ஒரு பாக்கியம் தான்


===================


20  ஒரு சினிமா ஹீரோவிடமோ, அரசியல் தலைவரிடமோ அபிமானம் வைப்பது தவறில்லை, ஆனால் நாளடைவில்  நீ அவருக்கு அடிமை ஆகாமல் பார்த்துக்கொள்


========================

Friday, February 05, 2016

பெங்களூர் நாட்கள் - சினிமா விமர்சனம்

மலையாளத்தில் ஹிட்டடித்த 'பெங்களூர் டேஸ்' படத்தின் தமிழ் ரீமேக், ஆர்யா, ஸ்ரீதிவ்யா, சமந்தா, ராணா, சிம்ஹா ஆகியோர் நடிப்பில் உருவாகும் படம், தெலுங்கில் 'பொம்மரில்லு' படத்தை இயக்கிய பாஸ்கர் இயக்கத்தில் உருவாகும் முதல் தமிழ்ப் படம் என்ற இந்த காரணங்களே 'பெங்களூர் நாட்கள்' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.



பொதுவாக ரீமேக் படங்கள் என்றாலே பிளஸ், மைனஸ் இரண்டும் இருக்கும். 'பெங்களூர் நாட்கள்' எப்படி இருக்கும்? என்பதை அறியும் ஆர்வத்துடன் தியேட்டருக்குள் நுழைந்தோம்.


கதை: ஸ்ரீதிவ்யா எம்பிஏ படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். எதிர்பாராவிதமாக அவருக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. ஸ்ரீதிவ்யாவின் உறவினர்களான சிம்ஹாவும், ஆர்யாவும் அதைக் கொண்டாடுகிறார்கள். அதற்குப் பிறகு இவர்கள் நட்பு என்ன ஆனது, கள்ளம் கடபடமில்லாத வாழ்வு சாத்தியமானதா, ஸ்ரீதிவ்யாவின் கனவு நிறைவேறியதா, ஆர்யா, சிம்ஹா என்ன ஆகிறார்கள் என்பது மீதிக்கதை.


தெலுங்கில் சித்தார்த், ஜெனிலியா நடிப்பில் பாஸ்கர் இயக்கிய 'பொம்மரில்லு' வசூலிலும் பட்டையைக் கிளப்பியது. அதற்குப் பிறகு அந்தப் படம் தமிழில் 'சந்தோஷ் சுப்பிரமணியம்' என ரீமேக் ஆனது. தமிழிலும் இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.


மலையாளத்தில் ஹிட்டடித்த ஒரு படத்தை பாஸ்கர் தமிழில் ரீமேக் செய்திருக்கிறார். நல்ல படத்தை தமிழ் ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்த பாஸ்கரின் முயற்சிக்கு வாழ்த்துகள். ஆனால், அந்த முயற்சி முழுமை பெறவில்லை என்பதையும் சொல்லியே ஆக வேண்டும்.



படத்தின் தலைப்பில் கூட எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே தமிழ்ப்படுத்தி இருக்கிறீர்களே? ஏன் பாஸ்?


கதாபாத்திரத்தின் மொத்த கனத்தையும் தன் தோளில் சுமக்க வேண்டிய பொறுப்பு ஸ்ரீதிவ்யாவுக்குதான். ஆனால், அந்த கனத்தை தாங்க முடியாமல் திணறுகிறார். தடுமாறுகிறார். புரிதல் - பிரிதல் - இணைதலில் ஸ்ரீதிவ்யாவின் நடிப்பில் எந்த முதிர்ச்சியும் இல்லை.



கம்பீரம், கண்டிப்பு மிக்க கதாபாத்திரத்தில் ராணா சரியாகப் பொருந்துகிறார். அவரது உடல் மொழியும் கவனிக்க வைக்கிறது.


ஆர்யா ஓரளவு கதாபாத்திரத்துக்கான நடிப்பை நியாயமாக தர முயற்சித்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் நடிப்பில் கவனம் செலுத்துங்கள் பாஸ்!



பாபி சிம்ஹா ஏன் அவ்வளவு வலிந்து கஷ்டப்பட்டு தமிழ் பேசுகிறார் என்று தெரியவில்லை. அவரின் நடிப்பும் ஒட்டாமலேயே இருக்கிறது. பார்வதியின் நடிப்பு கச்சிதம். ராய் லட்சுமி பொருத்தமில்லாத கதாபாத்திரத்தில் வந்து போயிருக்கிறார்.



பிரகாஷ்ராஜின் நடிப்பும் ஜஸ்ட் லைக் தட் கடந்து போய் விடுகிறது. டெம்ப்ளேட் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரண்யா பொன்வண்ணன் இதில் பின்னி இருக்கிறார். அவரின் ஒவ்வொரு நவீன மாற்றத்துக்கும் தியேட்டர் குலுங்குகிறது.


குகன் பெங்களூர் நகரத்தை அழகாக தன் கேமராவுக்குள் கடத்தி இருக்கிறார். மலையாளப் படத்துக்கு இசையமைத்த கோபி சுந்தர் தமிழ் மறு ஆக்கத்துக்கும் இசையமைத்துள்ளார். பின்னணி இசை படத்தை தூக்கி நிறுத்துகிறது.பாடல்கள் பரவாயில்லை ரகம் தான். மார்த்தாண்டன் கே.வெங்கடேஷ் இரண்டாம் பாதியில் மட்டும் சில இடங்களில் கத்தரி போட்டிருக்கலாம்.


''என்ன நடக்குது இங்கே?''


''கார் நடக்குது!''


''ஏழு மணிக்கு படம்''


''இன்னைக்கு ஏழு மணிக்குன்னு சொல்லுடா! ''என்ற வசனங்களில் வெடித்துச் சிரிக்கிறது தியேட்டர்.



ஒரு படத்தை இன்னொரு மொழியில் ரீமேக் செய்யும்போது கதாபாத்திரத் தேர்வு, வசன உச்சரிப்பு போன்றவை தீராத இடியாப்ப சிக்கலாக தொடரும். ஆனால், அது பெங்களூர் நாட்கள் படத்தில் பெரிதாகவே இருப்பதுதான் குறையாகத் தெரிகிறது.



ஒப்பீட்டளவில் பார்க்கக்கூடாது என்று கண்ணோட்டத்தை மாற்றினாலும், கதாபாத்திரத் தேர்வு நிறைவை அளிக்கவில்லை. அதுவே படத்தின் மிகப்பெரிய பலவீனம்.



கதாபாத்திரத் தேர்வை ஒதுக்கிவைத்து விட்டு பார்த்தால், 'பெங்களூர் நாட்கள்' பெரிய திருப்தியையோ, நல்ல அனுபவத்தையோ தரவில்லை. அந்த விதத்தில் இந்தப் படம் சுவையிழந்த அனுபவம்தான்!

நன்றி - த ஹிந்து

உங்க கனவில் சிம்ம வாகனி வந்தால்

என் ஆளு  என்னைப்பார்த்தாலே  எனக்கு ஏற்பட்ட வலி எல்லாம் மறைஞ்சுபோகும்


 ஏம்மா, அப்போ உங்க ஆள் பேரு பெயின் கில்லரா?


================

2  எதுனா  ஒரு மோக்கை ஜோக் போட்டுட்டு ட்வீட் லைக் சிபி-ன்னு பொண்ணுங்க போட்டா எனக்கு கோபம் வராது. என் கண்ணுக்கு “லைக் சிபி” மட்டும் தெரியுது


=================


3  ஃபேஸ்புக்ல /ட்விட்டர்ல  ஃபாலோயர்சை அன்ஃபாலோ பண்றதைக்கூட பொண்ணுங்க “ இன்னைக்கு 5 பேரை கழட்டி விட்டுட்டேன்”னு பெருமையா சொல்லிக்கறாங்க



==================



என் பற்றிய கணிப்புகளில் உங்கள் அறிவை நம்பாதிர்கள்

 இல்லைங்க, எனக்கு அறிவு இருக்குங்கறதையே  வீட்ல நம்பறதில்ல, நான் எப்டி என் அறிவை நம்புவேன்


==============


திருமண முகூர்த்தம் எல்லோருக்கும் ஒரு நாள் தான் ( பெரும்பாலும்) வரும், ஆனால் தினசரி விடியல் முகூர்த்த நேரம் அதிகாலை 5 மணிக்கு தினம் வரும்



======================


6  மலை உச்சியை அடைவதற்கான பயணம் மலை அடிவாரத்திலிருந்து துவங்குவது போல் எல்லா நற்குணங்களுக்கும் அடிப்படை பெரியோரிடத்தில் பணிவு


==========

9 WIFI அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.WIFE அமைவது மாமியார் கொடுத்த வரம்


============



10 ரொம்ப சந்தோஷமா இருக்கு. ட்விட்டர்ல ஹன் சிகா வே எனக்கு ரிப்ளை பண்ணிட்டாங்க



ஜாக்கிரதையாவும் இருந்துக்குங்க மிஸ்.அது ஹன் சிகாவின் மேனேஜராக்கூட இருக்கலாம்

==============

11 பழைய புக் கடைல எதுக்கு பொம்மை சினிமா மாத இதழ் 2 கிலோ வாங்கிட்டுப்போறீங்க?


குழந்தைக்கு பொம்மை வாங்கிட்டு வான்னு சம்சாரம் சொல்லுச்சு


==============


12 அனு தினமும் கண்கலங்கிக்கொண்டே இருந்தால் அனுவோட முக்கியமான ஒர்க் சமையல்கட்டில் வெங்காயம் அரிவதாய்க்கூட இருக்கலாம்


==================


13 நெட் தமிழன் ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா ஆஃபீஸ் வேலை செய்ய உக்காந்தாக்கூட டார்லிங்க் எங்கே போய்ட்டே?னு மென்சன் போட்டு கூப்ட்டுக்குது


=================


14 உன் வாழ்வில் நான் வந்தது விதியானால்
என் வாழ்வில் நீ வந்தது தலை விதி் அன்றோ?

==========



15 ஓடுகிற குதிரையின்மேல் பணம் கட்டாதே,
ஏன்னா குதிரையை துரத்திப்போக உன்னால் முடியாது.குதிரையும் போய்டும் பணமும் போய்டும்

=
============

16 என் விழியில் காட்டுகிறாய் உன் வழியை

உங்க விழி என்ன மைல் கல்லா? மயில் கண்ணா?

===============

17 வாட்ஸப் க்ரூப் ல இருந்து ரைட் ப்ரியா கோவிச்ட்டு போய்டுச்சுன்னா ரைட் ப்ரியா லெப்ட் னு காட்டும்.இது தான் உலகம்


===============


18 தனுசு ராசி அன்பர்களே!,இனிநீங்க இங்க்லீஷ் நல்லா பேசுவீங்க.எப்டின்னா தனுஷே இங்க்லீஷ் படத்துல இங்க்லீஷ் பேசி நடிக்கும்போது நீங்க பேசமாட்டீகளா?

===============
19 உங்க கனவில் சிம்ம வாகனி வந்தால் அதை சிம்ம சொப்பனம்னு சொல்ல முடியாது.ஆனா அவங்க கனவில் நீங்க போனா(வந்தா) சிம்ம சொப்பனம்னு சொல்லலாம்

===============

20 24 படத்தில் சூர்யா வின் வில்லன் கெட்டப் தெறி க்குது.செம மாஸ்


===============