Wednesday, March 07, 2012

என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் திரிபாதி பேட்டி



http://www.hindu.com/2006/04/11/images/2006041105010301.jpg 

இந்தியாவிலேயே முதன்முதலில் சர்வதேச காவல் சமூக விருதும் சிறந்த காவல் நிர்வாகத்துக்கான தங்கப் பதக்கமும் பெற்ற அதிகாரி என்ற பெருமை சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஜே.கே.திரிபாதிக்கு உண்டு. இளம் வயதிலேயே குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் இவர். நேர்மையானவர், கண்டிப்பானவர் என்றெல்லாம் கூறப்பட்டாலும் மனித உரிமைகளுக்குத் துளியும் மதிப்பு அளிக்காதவர் என்ற குற்றச்சாட்டும் உண்டு


 சி.பி - கொள்ளையர்களும், கொலையாளிகளும் மனுஷங்களே கிடையாது.. அவனுங்களை அவனுங்க பாஷைலயே போட்டுத்தள்ளனும்.. அதை விட்டுட்டு வாரா ராசா திருந்துடு.. என் செல்லம் இல்ல?ன்னு கொஞ்சிட்டு இருக்க முடியாது.. பெரும்பாலான குற்றங்கள் போலீஸ் பயம் காரணமாத்தான் நடக்காம இருக்கு..

 தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்தஎன்கவுன்டர் களில் இவருடைய பங்கு கணிசமானது. சென்னையில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்கள் ஐந்து பேர் என்கவுன்டரில் கொல்லப்பட்ட விவகாரம் தேசிய அளவில் விவாதங்களைக் கிளப்பியிருக்கும் நிலையில், திரிபாதி  பேட்டியில் இருந்து...  


''வேளச்சேரி என்கவுன்டருக்கு என்ன தேவை இருந்தது?''



''எல்லா என்கவுன்டர்களுக்கும் என்ன தேவையோ அதே தேவைதான்!''


சி.பி - ஓப்பனிங்க்ல ஃபர்ஸ்ட் பாலே சிக்சர்.. நிருபர் பாவம் ஹா ஹா 

 
''உங்கள் முதல் என்கவுன்டர் எது? இதுவரை எத்தனை என்கவுன்டர்கள் உங்கள் தலைமையில் நடந்திருக்கின்றன?''

சி.பி - அஃபீசியலா? எத்தனை? அன் அஃபீசியலா? எத்தனை?னு கூட கேட்பாங்க போல. எல்லா மேட்டரையும் ஓப்பனா சொல்லிட்டு இருக்க முடியுமா?


''ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். யாரைக் கொல்வதும் எங்கள் நோக்கம் இல்லை. அதற்கு எங்களுக்கு அதிகாரமும் இல்லை. நீங்கள் கேட்பதைப் பார்த்தால், இதையே நான் வேலையாக வைத்துக்கொண்டு அலைவதுபோல் அல்லவா இருக்கிறது? ஆபத்தான சூழலில், தவிர்க்கவே முடியாத சூழலில்தான் துப்பாக்கியை எடுக்கிறோம். ப்ளீஸ்... நம்புங்கள்!''

சி.பி - என்கவுண்ட்டர் டிபார்ட்மெண்ட்னு தனியா ஒண்ணு ஆரம்பிக்கலாம், தப்பே இல்லை 

http://www.hindu.com/2009/08/05/images/2009080560190401.jpg




''என்கவுன்டர்களுக்குச் செல்லும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?'

சி.பி - இன்னைக்கு எத்தனை ஆடு சிக்கப்போகுதோ.. இந்த பிரஸ்காரங்களுக்கு என்ன பதில் சொல்லி சமாளிக்கனுமோன்னு தான் வேறென்ன?

 


(சிரிக்கிறார்... பின் ஆழமான பார்வையோடு...) ''போகும்போது என்கவுன்டருக்காகச் செல் கிறோம் என்றே தெரியாதே?''


சி.பி - ஆனா எனக்கென்ன தோணுதுன்னா எல்லாம் ஆல்ரெடி பிலான் பண்ணி மேலிடத்துக்கு தகவல் சொல்லி அப்ரூவல் வாங்கித்தான் பண்றாங்க போல.. 

 
''சரி, என்கவுன்டர் முடிந்து வரும்போது..?''


''ரொம்ப வருத்தமாகத்தான் இருக்கும். ஏனென்றால், செத்தவர்களுக்கும் - அவர்கள் எவ்வளவு பெரிய கொடியவர்களாக இருந்தாலும் - ஒரு குடும்பம், உறவினர்கள் எல்லோரும் இருப்பார்கள் இல்லையா?''

 சி.பி -திருடனோ,கொள்ளைக்காரனோ சம்பாதிக்கற பணத்தை வீட்டுக்கு தரும்போது அதை அனுபவிக்க எந்த அலவு அந்த குடும்பத்துக்கு உரிமை இருக்கோ அதே அளவு அவன் சுடப்பட்ட பிறகு அதுக்கான பின் விளைவுகளுக்கும் தயாரா இருக்கனும்..

''உங்களுக்குக் குடும்பம் இருக்கிறதா?''


''ம்... ஆனால், இந்தப் பேட்டி என் வேலை சார்ந்தது மட்டும்தான் இல்லையா? நான் இங்கு குடும்பத்தைப் பற்றிப் பேச விரும்பவில்லை!''

சி.பி - அதுவும் சரிதான்.. போலீஸ்காரங்க ஃபேமிலி மேட்டர் வெளீயே தெரிஞ்சா சினிமால வர்ற மாதிரி லாக் பண்ணி கார்னர் பண்ணுவாங்க 




''உங்களுக்குப் பாவ - புண்ணியங்களில் நம்பிக்கை உண்டா?''

சி.பி - கொள்ளைக்காரங்க, கொலைகாரங்க பண்றதெல்லாம் பாவம்.. அந்த மாதிரி சமூக விரோதிகளை போட்டுத்தள்ளறது புண்ணியம்..

 
''நான் ஒரு போலீஸ். வேலை என்று வந்துவிட்டால் சாதி, மதம், கடவுள்... இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் எனக்குக் கிடையாது!''

 http://liveindia.tv/wp-content/uploads/2011/06/images/17VBG_POLICE_660338f.jpg

''சரி, வேலைக்கு அப்பாற்பட்டு... ஒரு தனிப்பட்ட மனிதனாக?''


''அப்படிப் பார்த்தாலும், என் கையில் எதுவும் இல்லை. (மேலே கையைக் காட்டி) அவனுக்கு முன் நாமெல்லாம் யார்? அவன்தான் எல்லா வற்றையும் செய்கிறான் என்று நினைத்துக்கொள்வேன்!''


சி.பி - இவர் ஏ ஆர் ரஹ்மான், அல்லது ரஜினியின் ரசிகரா இருப்பார் போல.. ஆண்டவரை கை காட்டறாரு.. நாட்டை ஆள்பவரை பற்றி ஒண்ணூம் சொல்லலை. 

 
''போலி என்கவுன்டர்களை நடத்தும் போலீஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லி இருப்பதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?''


சி.பி - 10 என்கவுண்ட்டர் நடந்தா அதுல ஒண்ணுஅப்படி ஆகிடுதுன்னு சொல்றாங்க..  அவங்கவங்க தனிப்பட்ட விரோதிகளை தீர்த்துக்கட்ட இதை பயன் படுத்திக்கறதா பேசிக்கறாங்க..   




''யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அவ்வளவுதான். ஒரு என்கவுன்டர் நடந்தால் யாரையும் யாரும் சும்மா விட்டுவிடுவது இல்லையே? மனித உரிமை ஆணையம், விசாரணை எல்லாம் இருக்கிறது. தவறு செய்துஇருந்தால் தண்டனை கொடுங்கள். அவ்வளவு தான். நாம் பேட்டியை முடித்துக்கொள்ளலாம்!''

துக்ளக் சோ அவர்கள் மனைவி திருமதி சௌந்தரா. பேட்டி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4AiCDOCQ_dT6i50rl0h-YRWhyphenhyphenGnpU04A28B-jw5xwpMYOmRuYHy4JAM7wigW6Qxc1qfHwP0_KbAqIi8pN9lbJHIpBwCud19WTxrIK4BAe71Yj741yS8rb8qaS0Zhn5Jm9QZzBb8nmjpY/s400/jeyacho.bmp 

நான் துக்ளக் பத்திரிகையின் ரசிகை!'' என்கிறார் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் திரு. சோவின் மனைவி திருமதி சௌந்தரா.


சி.பி - அடடா.. நான் பெண் வாசகிகளை மதிப்பதும் இல்லை, அவர்களை கண்டு கொள்வதும் இல்லைன்னு சோ சொன்னாரே.. அது உங்களைவெச்சுத்தானா?

 
 ''அவர் அஷ்டாவதானிபோல் பல தொழில்களில் ஈடுபட்டு இருந்தாலும், எனக்கு என்னமோ பத்திரிகை ஆசிரியரா அவர் ஈடுபட்டு இருப்பதுதான் நிறைவைத் தருகிறது. அதிலும் அவர் ஆளும் கட்சியை நாசூக்காகக் குத்திக்காட்டி எழுதும் பணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது!'' 



சி.பி - என்னங்க இப்படி சொல்லீட்டீங்க? எனக்கென்னவோ அவர் நாடக் ஆசிரியரா, காமெடி வசனம் எழுதறவரா இருக்கறதுல தான் அதிக திறமை வெளிப்படுத்துன்னு தோணுது..  பத்திரிக்கைல என்ன பண்றார்? கலைஞரை, காங்கிரசை திட்டி ஜெவை, பி ஜே பியை ஆதரிக்கறார்.. அது ஈசி வேலை ஆச்சே.? 



''துக்ளக் பத்திரிகை வந்தவுடன், முதலில் எதைப் படிக்க ஆவலாக இருப்பீர்கள்?''


''அட்டைப் பட கார்ட்டூனை ரசித்துவிட்டு, நான் பரபரப்புடன் பக்கங்களைத் தள்ளிப் பார்ப்பது கேள்வி-பதில் பகுதியைத்தான். நான் மிகவும் ரசித்துப் படிக்கும் பகுதி அது.''


 சி.பி - அதானே? சமையல் குறிப்புத்தான் வர்றதில்லையே? அடுத்தவங்க என்ன பேசிக்கறாங்க அப்படின்னு ஒட்டுக்கேட்கறதுலதான் பெண்களுக்கு எவ்வ்வள்வு ஆர்வம்? துக்ளக் சத்யாவின் கார்ட்டூன் கிண்டல்கள் தான் பெரும்பாலான வாசகர்களின் முதல் சாய்ஸ்


'' 'என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்நாடகத்தைப் பார்த்தீர்களா?'' என்று கேள்வி கேட்ட உடனேயே, ''! நான்கூட சுதந்திய தாகம் டாமா பாத்தேன்...'' என்று மழலை மொழியைச் சிந்தியபடி நடந்து வருகிறாள் சோவின் மகள் சிந்துஜா.


''டிராமாவிலே அப்பா எப்படி வர்றார்?''


''உம்... உம்... கையில பூ கட்டிண்டிருக்கா. மேக்-அப் போட்டுப்பா... டாமாவிலே உள்ளே போவா... வெளியே வருவா...'' என்று அவள் சொல்லச் சொல்ல, திருமதி சோ தன் மகளைப் பெருமையுடன் அணைத்துக்கொள்கிறார்.


''இவள் அப்பா மாதிரியே... இன்டெலிஜென்ட்... சுறுசுறுப்பு எல்லாமே. சிந்துஜா, அப்பா மாதிரி 'துக்ளக்நடை நடந்து காட்டு'' என்று அவர் சொல்லி முடிக்கும் முன்னரே, ''அப்பா இப்படித்தான் நடப்பா...'' என்று குதித்து நடந்து காண்பிக்கிறாள்.


''ஆபட்ஸ்பரியில் நடந்த துக்ளக் கருத்தரங்குக்கு வந்திருந்தீர்களா?''

http://www.vinavu.com/wp-content/uploads/2012/02/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8B.jpg


''ஓ... வந்தேனே. ஆனா, கடைசியிலதான் என்னால வர முடிஞ்சது. கருத்தரங்குக்கு வந்திருந்தவங்களைப் பார்த்துப் பிரமிச்சுட்டேன். இந்தச் சின்ன வயசுல அவருக்கு இவ்வளவு பெரிய அளவில் மக்களின் அன்பு இருக்கிறதைப் பார்த்துதான் பூரிச்சுப்போயிட்டேன். பெருமையும்படறேன். ஆனால் அதே சமயத்திலே, ''இனிமே இவர் இன்னும் இது மாதிரி கருத்தரங்குகள் நடத்தணும்... நிறையக் கூட்டம் வரணும்... யார் கண் திருஷ்டியும் படாம இருக்கணும்னு உடனே ஆண்டவனை வேண்டிக்கிட்டேன். இன்னமும் வேண்டறேன்.


துக்ளக் இன்னும் நல்லா... தமாஷா இருக்கணும். லேடீஸைப் பொறுத்தவரை இது எல்லாருக்கும் பிடிச்சிருக்கு... இங்கிலீஷ்ல வெளி வந்தாக்கூட நல்லதுதான். மொத்தத்துல இது ஒரு அகில உலகப் பத்திரிகை ஆகணும்னு எனக்கு ரொம்ப ஆசை.''


சி.பி - அதுக்கு சோ ஆல் ஓவர் வோர்ல்டு பெருந்தலைகளை திட்டனும். அவருக்கு கலைஞரை திட்டவே டைம் பத்த மாட்டேங்குது. 

''துக்ளக் பறிமுதலைப் பற்றி...''


''என்னவோ பண்ணப்போறாங்கனு இரண்டு நாளைக்கு முன்னாடியே வதந்திகள் நிறைய வந்தன. பறிமுதல் செய்த அன்னிக்கு இவர் விடியற்காலையிலேயே எழுந்து போயிட்டார். இவர் தீர்மானிச்சு செய்ற எந்தக் காரியமும் நல்ல படியா முடியும்கிற நம்பிக்கை எங்க எல்லாருக்கும் உண்டு. அதனால நாங்க கொஞ்சம்கூடப்  பயப் படலை!'' என்று கணவர் மேல் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார் திருமதி சோ.


''நிறைய டெலிபோன் கால்கள் வந்துஇருக்குமே?''


''லட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்ட பத்திரிகை ஆசிரியராயிற்றே... வராமலா இருக்கும்? ஒரு நிமிஷத்துக்கு ஒரு போன் கால் வந்துட்டே இருக்குது. அதிலும் குறிப்பா நிறைய லேடீஸ்தான் போன் பண்றாங்க. அவங்க என்னைக் கூப்பிட்டுச் சொல்றதெல்லாம், 'இதுக்கு சரியான 'ஆக்ஷன்எடுக்கணும்’, 'இது ரொம்ப அநியாயம்...’ எல்லாரும் தவறாம சொல்ற ஒரு வார்த்தை: 'உங்க கணவரை ஜாக்கிரதையாப் பார்த்துக்குங்க!’ அவர்களுடைய அன்பை நினைத்துக் கண் கலங்கினேன்...'' என்று தழுதழுத்த குரலில் கூறுகிறார் திருமதி சோ.




''மொத்தத்திலே துக்ளக்கைப் பறிமுதல் செய்ததால, அவருடைய பத்திரிகைக்கு நிறைய பப்ளிசிட்டி கிடைச்சிருக்கு. தமிழ்நாடு மட்டும்அல்ல, வட நாட்டிலே உள்ள எல்லாப் பத்திரிகையிலேயும் இதைப் பற்றி வந்திருக்கு. இப்போ அவர் அகில இந்தியாவுக்கும் தெரியற 'பிக் பெர்சனாலிட்டிஆயிட்டாரு. இந்தச் சமயத்துல இன்னும் இரண்டு மூன்று புதிய பகுதிகளைச் சேர்த்து, துக்ளக் பக்கங்களை அதிகமாக்கிக் கொண்டுவரலாம்!'' என்று சொல்லிக்கொண்டே எழுந்திருக்கிறார்.


அவரிடம் விடைபெற்று வருகிறோம். வழியில் ஒரு விதமான கலக்கத்துடன் சோவின் தாய் திருமதி ராஜம்மாவைச் சந்திக்கிறோம்.

http://savetnfishermen.files.wordpress.com/2011/06/cho-kalaignar.jpg?w=300


''எல்லோரும் சேர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக வீட்டைக் கட்டியிருக்கான். ஆனால், அவனே காலையில போனா ராத்திரி நேரம் கழிச்சுதான் வரான். அவன் வந்து சேர்ற வரை மனசு 'திக்திக்குனு அடிச்சுக்கறது. அவனோட டிராமா, சினிமாவெல்லாம்கூட நான் பார்த்தது இல்லை. ஊரிலே அவனைப் பத்தி எல்லாரும் பெருமையா பேசிக்கறானு சொல்றா. ஜெயமிருக்கும் வரை பயமில்லை - அவன் நன்னாயிருக்கணும்!'' என்கிறார் ஒரு துணிவு மிக்க பத்திரிகையாசிரியரை நமக்குத் தந்த திருமதி ராஜம்மா.

சி.பி - விகடன் பொக்கிஷம் பகுதில பல வருடங்களுக்கு முன்பு வந்த பேட்டி இது

கள்ளக்காதலர்களின் கார்னர் சீட் இன் தியேட்டர்ஸ்

http://www.cinesouth.com/images/new/kushboo-8.jpg

1.திருமணம் ஆனவர்களும் சரி, ஆகாதவர்களும் சரி அந்நியோன்யமான தம்பதிகளை ஏக்கத்துடனோ, பொறாமையுடனோ பார்க்கிறார்கள் # அவதானிப்பு

-----------------------------

2. சினிமா தியேட்டரில் பால்கனியில் கீழிருந்து மேலான கடைசி வரிசை சீட்களில் கள்ளக்காதலர்களோ, நல்ல காதலர்களோ சீட் பிடித்து விடுகிறார்கள்

------------------------------

3. காரணம் இல்லாம குடிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணிட்டு இப்போ ஏன் குடிச்சீங்க? 

சரக்கடிக்க எந்த காரணமும் சிக்கலையேங்கற கவலைல தான் குடிச்சேன்

----------------------------

4. உயரமாக இருக்கும் ஃபிகர்கள் கூட ஃபேஷன் காரணமாகவோ, ஊரோடு ஒத்து வாழ் என்பதனாலோ ஹை ஹீல்ஸ் அணிகிறார்கள்

------------------------------

5. ஆஃபீசில் களைத்த ஆண்களுக்கு புத்துணர்வு ஊட்ட,மனதை புதுப்பிக்க அமர்த்தப்படும்,அல்லது நிற்கவைக்கப்படும் ஏஞ்சல்கள் ரிசப்ஷனிஸ்ட்

----------------------------

6. கவுண்டர் இனப்பெண்கள் இடது கட்டை விரலின் கீழ் டைமண்ட் ஷேப்பில் டாட்டூ குத்திக்கொள்கிறார்கள் - மைக்ரோ நோட்டாலஜி இன் லேடீஸாலஜி 

----------------------------
7. ரோஜாவை கூந்தலில் சூடும் மென்மையான மனம் கொண்ட பெண்கள் அதன் இலைகளை கிள்ளி எறிய மனம் இல்லாமல் அப்படியே அணிகிறார்கள்

------------------------


8. தண்டிக்க தாமதிக்கலாம், மன்னிக்க தாமதிக்கலாமா? # தூக்கு தண்டனை கைதிகள்

-------------------------

9. நான் பார்த்த பிரதமர்களிலேயே பலவீனமானவர் மன்மோகன் -அத்வானி # நான் பழகிய பிரதர்களிலேயே அழகானவர் சிம்பு - நயன் தாரா

-------------------------

10. 18+ படங்களை நான் பார்க்க ஆரம்பிக்கலை,இது நயன் தாராவின் உண்மையான காதல் மேல் சத்தியம்

----------------------------


http://www.extramirchi.com/wp-content/uploads/2007/10/kushboo_main.jpg

11. உலகம் 2012இல் அழியப்போகிறதாம், வா, அன்பே! அவசரமாய் வாழ்ந்து விடலாம்


------------------------------


12. உன் உடலில் எனக்குப்பிடிக்காத பாகம் உன் இமைகள் தான், உன் அன்புப் பார்வைகளை சந்திக்க நொடிக்கு ஒரு முறை தடா போடுதே?


--------------


13. ஆயிரம் ஜெயலலிதா வந்தாலும் என்னை அழிக்க முடியாது - கலைஞர் #  ஒரே ஒரு கலைஞரால் கூட என்னை அழிக்க முடியாது - ஜெ

----------------------------------

14. பிரபுதேவாவை விட்டு பிரிய மாட்டேன்! நயன்தாரா பரபரப்பு பேட்டி!! # திராவிடக்கட்சிகளுடன் இனி சேர மாட்டேன் - ஒரு சொல் ஒரு நாக்கு DR ராம்தாஸ்

------------------------------

15. 16. ஹீரோவாக நடிக்க வருகிறார் குறளரசன் # பஞ்ச் டயலாக்கா திருக்குறள் சொல்வாரோ? டவுட்டு

-------------------

16.பெரும்பாலான வீடுகளில் வாங்கப்படும் வார இதழ்களில் பெண்ணின் முகத்தில் மீசை வரைந்து பார்க்கும் குறும்புத்தனம் தமிழனின் தாத்பர்யம்

------------------------

17. உன் உதட்டில் இருந்து ஒரு மி மீ புன்னகை வரவைக்க ஒரு கி மீ தூரத்துக்கு கவிதை எழுத வேண்டி இருக்கிறது # சிரிச்சுத்தொலையேண்டி சனியனே!

-------------------------------------

18. பெண் என்றால் தளுக் என்றதும் நாணம் வர வேண்டும், ஆனால் உனக்கு முணுக் என்பதற்குள் கோபம் வந்துவிடுகிறது # உன் சொந்த ஊரு ஈரோடு மாவட்டம் கோபி?

---------------------------------

19. நடிகை குஷ்பூவின் செல் ஃபோன் தொலைந்தது # அடடா.. குஷ்பூ தொலையலையா? - சுந்தர் சி வருத்தம் @ இமேஜினேஷன்

--------------------------------

20. சாகும் தருவாயில் உள்ளவனிடம் இன்னும் வாழ்வு இருக்கு என  நம்பிக்கை அளிப்பது போல் என்னைவிட்டுப்பிரிகையில் ஒரு புன்னகை வீசி சென்றாய்

--------------------------------



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguKX818DNmLeDaqhI6gMHQ8reOtF_PPwSHHN4JydIKVqdphh3e1aQoMdd-QqBXKD8AlZq1xo0jx99onw_kiePjY68za_j4gtlS6TLHzqo6jx0lkP51W1yhqz5z9sedAmKVhvqjzFEgv2Iu/s1600/kushboo-press-meet.jpg

Tuesday, March 06, 2012

-கொண்டான் கொடுத்தான் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1JNo697sdICGve3SZtEmbaUSdXc7MMKJj0AhkANzsrBrm5I5Sin14cmKW3mJHzIQnWikHK-2FECsWCLaasx3qpT0F_ABv_oHUvTxTyrvxEdROLIHMxnbnn_I8sqoJmTzsOXFIHzdnr2s/s1600/Kondaan+Koduthan+%25282012%2529.jpgஇந்தக்கால இளைய தலைமுறைக்கு அதிகம் பழக்கம் இல்லாத ஒரு சொலவடை தான் டைட்டில்..  ஒரு காலத்தில் பல குடும்பங்களில்  இருந்து வந்த பழக்கம் தான்.. அதாவது ஒரே குடும்பத்துல பொண்ணு குடுத்து பொண்ணு கட்டறது.., நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தால் பிறக்கும் குழந்தையின் ஆரோக்யம் பாதிக்கும் என்று இன்றைய விஞ்ஞானம் சொல்வதாலும், காதல் திருமணங்கள் பெருகி விட்டதாலும் இப்போதெல்லாம் முறைப்பெண்ணை கட்டும் பழக்கம் வழக்கொழிந்து வருது.. அந்த வழக்கத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் நடக்கும் கதைதான் கொண்டான் கொடுத்தான்.

இளவரசுக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. அவரோட தங்கச்சிக்கும் அதே போல் ஒரு பையன், ஒரு பொண்ணு. பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்கலாம்னு நினைக்கறப்ப ஒரு சிக்கல்.. இளவரசோட பையன்க்கு நடந்த மேரேஜ் அன்னைக்கு பொண்ணு ஓடிப்போயிடுச்சு.. உடனே இளவரசோட பையன் தற்கொலை பண்ணிக்கறான்.. அதனால குடும்பத்துக்குள்ள பகை.. இளவரசோட பொண்ணை தன் தங்கை பையனுக்கு கட்டித்தர மாட்டேன்னு அடம் பிடிக்கறார்.. 

 எல்லா படங்கள்லயும் வர்ற மாதிரி இந்தப்படத்துலயும் ஒரு வில்லன்.. அவன் பையனுக்கு கட்டித்தர்றதா பேச்சு.. எல்லாத்தடையையும் தாண்டி அந்த லவ் ஜோடி கம் முறைப்பையன் ,முறைப்பொண்ணு எப்படி ஒண்ணு சேர்றாங்க அப்டிங்கறதுதான் கதை.

 ஏ , மற்றும் பி செண்ட்டர்களில் எடுபட வாய்ப்பில்லாத கிராமத்துக்கதை.. நாடகம் பார்க்கறது மாதிரி காட்சி அமைப்புகள்  எல்லாவற்றையும் தாண்டி இளவரசுவின் நடிப்பு அற்புதம்.. ஆனால் ஒரு நடிகரின் நல்ல நடிப்பு ஒரு சுமார் ரக படத்தை காப்பாற்றி விடுமா?

வெளுத்துக்கட்டு பட ஹீரோ  கதிர்தான் ஹீரோன்னாலும் அவரது மாமாவாக வரும் ஒளிப்பதிவாளர் இளவரசு தான் ஒரு பண்பட்ட குணச்சித்திர நடிகர் என்பதை பல இடங்களில் நிரூபிக்கிறார்.. பூர்ணம் விஸ்வநாதனுக்குப்பிறகு இவர் பல படங்களில் பாராட்டத்தக்க நடிப்பை வழங்கி வருகிறார். 

http://g.ahan.in/tamil/Kondaan%20Koduthan%20%20stills/Kondaan%20Koduthan%20(1).jpg

கதிர் அதிக அனுபவம் இல்லாத ஹீரோவாக இருந்தாலும் எதார்த்தமான நடிப்பு.. இயல்பான முகபாவங்கள் என கவர்கிறார்,

ஹீரோயின் அத்வைதா ( அழகர் சாமியின் குதிரை) கிராமத்துப்பெண்ணுக்கு இவ்ளவ் மேக்கப் எதுக்கு என்று கேட்க வைத்தாலும் உறுத்தல் இல்லாத நடிப்பு.. 

அது போக படத்தில் குறிப்பிட பெரிய நட்சத்திரப்பட்டாளமே  இருந்தாலும் குறிப்பிடத்தக்கவர்கள் வில்லனாக வரும் டைரக்டர் ராஜ்கபூர் , அவரது எடுபுடியாக வரும் டைரக்டர் மனோபாலா.. இருவரும் நல்ல காம்பினேஷன்.. 

 கஞ்சா கறுப்பு சில இடங்களில் கிச்சு கிச்சு மூட்டுகிறார்.. 

http://atozactress.com/wp-content/uploads/2011/10/Advaitha-In-Kondan-Koduthan-7.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. தனது மகன் இறந்த செய்தி கேட்டு ஓடி வந்து மகன் டெட்பாடியில் புரண்டு அழும் இளவரசுவின் நடிப்பு இன்னும் கண்ணுக்குள்ளே.. அதே மாதிரி மகன் இறந்து 30 நாட்கள் கூட ஆகாத நிலையில் தன் தங்கை மகள் விருந்து வைத்தது கண்டு பொங்கி எழுந்து விசேச வீட்டில் போய் செய்யும் ரகளை அச்சு அசல் கிராமத்து கோபத்தை காட்டும் இடங்கள். சபாஷ்.. 

2. இளவரசுவின் தங்கையாக , கதிர்-ன் அம்மாவாக வரும் பாலாமணியின் நடிப்பும் இளவரசுவுக்கு ஈடு கொடுக்கும் அளவு,.. 

3. படத்தின் முற்பாதியில் பொண்ணு ஓடிப்போய்ட்டா என்பதற்காக எந்த மாப்பிள்ளையாவது தற்கொலை செய்வானா? என்று ஆடியன்ஸின் சந்தேகத்தை களையும் விதமாய் மாப்பிள்ளைக்கு எய்ட்ஸ்.. அதை வெளியில் சொல்ல முடியாமல், ஒரு பெண்ணின் வாழ்வை கெடுக்க விரும்பாமல் தான் தற்கொலை செய்தார் என்று ஏற்கத்தக்க அளவில் சஸ்பென்ஸ் ட்விஸ்ட் வைத்த விதம்.. 

4. முறை மாமன், முறைப்பெண் என பெண் கொடுத்து பெண் எடுக்கும் வழக்கத்தை கிராமத்து மண் வாசம் வீச பதிவு செய்த விதம்.. 

5. எப்போதும் முறைத்துக்கொண்டு வரும் ராஜ்கபூர்.. எதற்கெடுத்தாலும் காமெடி பண்ணும் மனோபாலா இருவரை காமெடி ஜோடி ஆக்கி காட்சிகள் அமைத்த விதம்.. 

6.  ஓப்பனிங்க்கில் வரும் தஞ்சாவூர் கோபுரம் அழகு பாட்டு கூட்டுக்குடும்ப அழகை காட்டும் இயல்பான பாட்டு .. பாவாடை போட்ட தட்டாம்பூச்சியே உதடும் உதடும் சண்டை போடட்டும் வாயேண்டி  லந்துப்பாட்டு,தில்லானா பாட்டுக்காரி என்ற டப்பாங்குத்து பாட்டு என கேட்க வைக்கும் 3 பாடல்களை எடுத்த விதம்


http://123tamilforum.com/imgcache2/2011/10/XSVy8-1.jpg

 இயக்குநர் லாஜிக் மிஸ்டேக்ஸ்


1.  இன்ஸ்பெக்டரா வர்றவர் கிராமத்துல  இருக்கறவரை யோவ்னு மரியாதை இல்லாம கூப்பிடறார்.. எந்த தப்பும் பண்ணாத ஆளை அப்படி கூப்பிட அந்த மாதிரி ஒரு கிராமத்து ஜனங்க விட்டுடுவாங்களா?

2. எய்ட்ஸ் நோய் வந்தா 100% சாவுதான் அப்டினு சொல்லாம சொல்ற மாதிரியும், எய்ட்ஸ் வந்தா  தற்கொலை செஞ்சுக்கனும்கற நெகடிவ் சிந்தனையும் மைனஸ்.. எத்தனையோ எய்ட்ஸ் நோயாளிகள் 15 வருடங்கள் தாண்டியும் உயிர் வாழ்ந்திருக்காங்க.. இந்த படத்துல வர்ற ஒரு கேரக்டர் எய்ட்ஸ் வந்ததால் ரயில் முன் பாய்ந்து சாகற மாதிரி சீன் வருது

3.  இளவரசுவின் மகனாக  வரும் கேரக்டரிடம் தாலி குடுத்து கட்ட சொல்லும்போது அவர் ஏன் கட்டனும்? எய்ட்ஸ் இருப்பதை சொல்ல வேணாம்.. அவர் பாட்டுக்கு ஊரை விட்டு ஓடிப்போய் இருக்கலாமே? ஏன் உலகத்தை விட்டே போகனும்?

4. ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த பாடி போஸ்ட்மார்ட்டத்துக்கு போன போது மெடிக்கல் சர்ட்டிஃபிகேட்டில் எய்ட்ஸ் இருப்பதை சொல்லி இருப்பாங்களே.. அது எப்படி இளவரசுக்கு தெரியாமல் போச்சு?

5. க்ளைமாக்ஸ் கபடி போட்டி, அதில் வெல்பவர்க்குத்தான் ஹீரோயின் என்பதெல்லாம் அரதப்பழசான காட்சிகள்.. 


http://www4.pictures.zimbio.com/mp/krUMHKhHGkDm.jpg

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 38

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்

 சி.பி கமெண்ட் - கிராமத்து ரசிகர்களுக்கு மட்டும். ஈரோடு ஆனூரில் பார்த்தேன்