Wednesday, December 03, 2025

ரிவால்வர் ரீட்டா (2025)-தமிழ் -- சினிமா விமர்சனம்(பிளாக் ஹ்யூமர் காமெடி க்ரைம் ட்ராமா)@நெட் பிளிக்ஸ்

 

             

         2024ல் ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய படம்.லேட்டாக இப்போது வந்திருக்கிறது.28/11/2025 முதல் திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் விரைவில் நெட் பிளிக்ஸ் ஓ டி டி யில் வெளி வர இருக்கிறது    


ஸ்பாய்லர்  அலெர்ட்

சம்பவம் 1 பிளாஸ்பேக் 1


நாயகிக்கு 5 வயது இருக்கும்போது அவரது அப்பா ஒரு பெரிய தாதாவிடம் 30 லட்ச ரூபாய் பணத்தை ஏமாந்து விடுகிறார்.நிலம் வாங்கித்தருவதாக சொல்லி ஏமாற்றப்பட்டதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கிறார்.நாயகிக்கு ஒரு அக்கா,ஒரு தங்கை ,அம்மா 


சம்பவம் 2

ஒரு தாதா தொழில் போட்டி காரணமாக இன்னொரு தாதாவைப்போட்டுத்தள்ளி விடுகிறான்.உடனே கொலையான தாதாவின் மகன்  அப்பாவின் மரணத்துக்குக்காரணமான தாதாவைப்போட்டுத்தள்ளினால்  5 கோடி பரிசு என அறிவிக்கிறான்.

உடனே ஒரு க்ரூப் அந்த தாதாவுக்கு ஸ்கெட்ச் போடுகிறது.ஒரு கில்மா லேடியின் வீட்டுக்கு தாதாவை வர வைத்து அங்கே தீர்த்துக்கட்ட பிளான்

கதை நடப்பது இப்போது.

தாதா கில்மா லேடியின் வீட்டுக்குப்போவதற்குப்பதிலாக தவறுதலாக நாயகியின் வீட்டுக்கு வந்து விடுகிறான்.

25 வயதான நாயகியைப்பார்த்துத்தவறுதலாக கில்மா லேடி என நினைக்கிறான்.கடுப்பான நாயகி தாதா தலையில் ஒரே போடு.ஆள் அவுட்


நாயகி அண்ட் கோ அந்தப்பிணத்தை அப்புறப்படுத்த என்னென்ன எல்லாம் செய்தார்கள்? அந்தப்பிணத்தைக்கைப்பற்ற யார் யார் எல்லாம் முயற்சித்தார்கள்?இறுதியில் என்ன நடந்தது ? என்பதுதான் மொத்தக்கதையுமே.


நாயகி ஆக கீர்த்தி சுரேஷ் நன்றாக நடித்திருக்கிறார்.ஆனால் அவரது இளமைத்துடிப்பு மிஸ்சிங்க்.கண்களில் இன்னமும் அதே கவிதை மிச்சம் இருக்கிறது


நாயகியின் அம்மாவாக ராதிகா ஓவர் ஆக்டிஙக் என்றாலும் பெண்கள் ரசிக்கிறார்கள்.சித்தி சீரியல் எபெக்ட்.


கொலை ஆகும் தாதாவாக சூப்பர் சுப்பராயன் கச்சிதம்.அவரது மகன் ஆக வரும் ரெடின் கிங்க்ஸ்லீ ஆங்காஙகே சிரிக்க வைக்கிறார்.

போலீஸ் ஆபீசர் ஆக வரும் ஜான் விஜய் வழக்கம் போல் ஓவர் ஆக்டிஙக்.


சென்றாயன் ,சுனில்  போன்றோர் கொடுத்த பாத்திரத்தைத்திறம்பட ஏற்று நடித்திருக்கிறார்கள்.


சீன் ரோல்டன் இசையில் 3 பாடல்கள் சுமார் ரகம்.பின்னணி இசை தேவலை ரகம்.ஒளிப்பதிவு தினேஷ் பி கிருஷ்ணன்.நாயகி,அவரது சகோதரிகளை அழகாகக்காட்டி இருக்கிறார்.பிரவீனின் எடிட்டிஙகில் படம்  140 நிமிடஙகள் ஓடுகிறது.

திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் ஜே கே சந்துரு



சபாஷ்  டைரக்டர்


1. கில்மா லேடியின் வீட்டைக்கண்டுபிடிக்க அட்ரஸ் விசாரிக்கும்போது இது பேமிலி இருக்கும் வீடு என ஒருவர் சொல்ல அந்த ஏரியாவில் ஒவ்வொரு வீட்டையுமே இது பேமிலி ,முகத்தைப்பார்த்தாத்தெரியல? என ரெடிங்க்ஸ்டன் முந்திக்கொண்டு உளறுவது கலக்கல் காமெடி

2 போலீஸ் ஸ்டேசனில் மாட்டிக்கொண்ட 3 ரவுடிகளும் படும் பாடுகள் நல்ல காமெடி

3. சாதாரண மனிதர்கள் அசாதாரண சூழல் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்ற ஒன் லைனில் ஓரளவு சிரிக்க வைக்கும் திரைக்கதை எழுதிய  விதம்


  ரசித்த  வசனங்கள் 

1 ஒரு நல்லவனோட 30 வருச உழைப்பை ஒரு கெட்டவனால ஒரே நாளில் அடிச்சுட முடியுது


2 டாடி,வயாக்ராவோ நயாகராவோ அதை எடுத்துட்டுப்போஙக


டேய்,கீப் கொயட்


நான் கீப்க்குப்பிறந்தவன் தான் ,அதுக்காக...?


3 அம்மா ,அப்பா செத்து 18 வருடங்கள் ஆகுது,இப்போப்போய் அவருக்கு மோட்டிவேஷனல் க்ளாஸ் எடுத்துட்டு இருக்கே?

4 டெட்பாடியை பிரிட்ஜ்ல வெச்சுட்டா அப்புறம் மாவு பாக்கெட்டை நான் எங்கே வைப்பேன்!?


5 பாஸ்,அவன் நம்ம ஆளு,அவனையே போடப்போறோமா?இது நம்பிக்கைத்துரோகம் ஆகாதா?


ஆமா.ஒருத்தர் மேல நம்பிக்கை போன பின் நம்பிக்கைத்துரோகம் ஆகாது

6 முதல்ல உன் பேரைச்சொல்லு

மிஸ்டர் எக்ஸ்னு வெச்சுக்கோ


வெரிகுட்.உன் பேரு மிஸ்டர் எக்சா? 


7 துப்பட்டா போடுங்கள் தோழி,ஒயின் ஷாப்ல சரக்கு வாங்க வரும்போது ஹெல்மெட் போடுங்க தோழி

ஏய்,நானே கடுப்புல இருக்கேன்,மொக்கை போடாதே

8 ஊரே அந்த தாதாவைப்போடக்காத்திருக்கு,அவரை பிகர் போடப்போய்ட்டாரா?

9 பொண்ணுங்க இந்தக்காலத்தில் சமைக்கறாஙகளோ இல்லையோ ரீல்ஸ் போடறாஙக


10 ஏம்மா.இந்த வயசுல நீ மல்லிப்பூ வெச்சா என்ன? அல்லிப்பூ வெச்சா என்ன?

11 நெஞ்சுவலின்னா அப்போலோ ஹாஸ்பிடல் தானே கூட்டிட்டுப்போகனும்,எதுக்கு மெண்ட்டல் ஹாஸ்பிடல் வந்திருக்கோம்?


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகியின் வீட்டில் இருக்கும் டானின் டெட் பாடியை வில்லன் அப்போதே போய் எடுத்திருக்கலாம்.கதை அங்கேயே முடிந்திருக்கும்

ஏன் டிலே பண்றான் என்பதற்கு சரியான காரணம் சொல்லவில்லை

2. பல சீட்டிங்க் பேர்வழிகளைத்தன் வாழ்நாளில் பார்த்திருக்கும் போலீஸ் ஆபீசர் ஒரு பெண்ணிடம் அப்படி ஏமாறுவாரா?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  லாஜிக் பார்க்க மாட்டேன்.சிரிச்சா சரி என நினைப்பவர்கள் பார்க்கலாம்.விகடன் மார்க் யூகம் 41  குமுதம்  ரேங்க்கிங்க் ஓக்கே .ரேட்டிங்க் 2.5 / 5


Revolver Rita
Theatrical release poster
Directed byJK. Chandru
Written byJK. Chandru
Produced bySudhan Sundaram
Jagadish Palanisamy
StarringKeerthy Suresh
CinematographyDinesh B. Krishnan
Edited byPraveen K. L.
Music bySean Roldan
Production
companies
Passion Studios
The Route
Release date
  • 28 November 2025
Running time
140 minutes[1]
CountryIndia
LanguageTamil